Sunday, October 15, 2006

புதிரா? புனிதமா??

தலைப்பைப் பாத்துட்டு டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் தொடர்புடைய ஏதோ ஒரு வலைப்பூன்னு, யாரும் வலையில் வந்து விழுந்துடாதீங்க சொல்லிட்டேன் :-)

தமிழ்மணத்தில் ஒரே புதிர் போட்டிகளும், "படம் பாத்துக் கதை சொல்" போட்டிகளுமா இருக்கே, நாமளும் ஜோதியில் ஐக்கியம் ஆகிடலாமே என்ற எண்ணத்தில்...இதோ ஒரு போட்டி!!!

துளசி டீச்சரும் கிளாசுக்கு அஞ்சு நாள்(?) வரமாட்டாங்களாம். இதான் சமயம்ன்னு நாமளே கேள்வித்தாள் செட் பண்ணி, நாமளே மார்க் போட்டுக்கலாமே! நம்ம மக்கள்ஸ் நிறைய பேரை பாஸாக்கி, டிஷ்டிங்கஷனும் போட்டுக் கொள்ள இதை விட வேறு சான்ஸ் கிடைக்குமா? :-))

இதோ கேள்விகள்; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரே சரியான விடை மட்டுமே. ஆன்மீக வினாடி வினா என்பதால், அனைவருக்கும் இலவசமாக மார்க்-பிரசாதம் உண்டு!
சரியான விடைகள் நாளை இரவு 10:00 மணிக்கு (நியுயார்க நேரப்படி) அறிவிக்கப்படும்!

அதற்குள் கலந்து பேசலாம்; பிட் அடிக்கலாம்; செல்பேசியில் SMS அனுப்பிக்கூட பதில்கள் வாங்கலாம். ஆக மொத்தம் Break the Rules!
டீச்சர் வருவதற்குள் வகுப்பைத் தலைகீழாக மாற்றக் கணேசா, நீ தான்பா அருள் புரியணும்!! :-)



1

கண்ணன் வெண்ணெய்த் திருடன் என்பது எல்லாருக்கும் தெரியும்; ஆனால் இந்தக் கோவிலில் பிள்ளையாரும் ஒரு கள்வராகவே வணங்கப்படுகிறார். எந்தத் தலம்?

1

அ) பிள்ளையார்பட்டி

ஆ)திருக்கடையூர்

இ)மதுரை

ஈ)காணிப்பாக்கம்

2

எந்தத் தலத்தில் முருகப்பெருமானுக்கு மலை மீதும் ஒரு கோவில்; மலை கீழும் ஒரு கோவில்! கீழே உள்ள கோவில் காலத்தால் மிக முந்தியது; ஆனால் இக்காலத்தில் பலர் அறிவதில்லை! போவதில்லை!!

2

அ)பழனி

ஆ)திருச்செங்கோடு

இ)திருத்தணி

ஈ)குன்றக்குடி

3

சிவபெருமான் துயில் கொண்ட நிலையில் உள்ள தலம் எது?

3

அ)சிதம்பரம்

ஆ)சீர்காழி

இ)ராமேச்வரம்

ஈ)சுருட்டப்பள்ளி

4

ஆதிசங்கரர் அன்னை பார்வதிக்குக் காதணி அளித்து அவள் கோபத்தைத் தணித்த தலம் எது?

4

அ)சமயபுரம்

ஆ)படவேடு

இ)திருவானைக்கா

ஈ)கொல்லூர் மூகாம்பிகை

5

பெருமாளும், சிவனாரும் (லிங்கமாக) ஒரே கருவறையில் காணக்கூடிய கோவில் எது?

5

அ)திருவனந்தபுரம்

ஆ)சங்கரநாராயணன் கோவில்

இ)காஞ்சிபுரம்

ஈ)கேதார்நாத்

6

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றில் மட்டும், படியேறிச் செல்லும் போது, அந்தப் 60 படிகளுக்கும், ஒவ்வொரு தமிழ் ஆண்டின் பெயர் உண்டு? எத்தலம்??

6 (இதற்கு No multiple choice)

7

விவேகானந்தர் சென்னையில் இத்தலம் சென்று வழிபட்டார்; பின்னர் அத்தலம் குறித்துக் கட்டுரையும் எழுதினார்? எந்தத் தலம்??

7

அ)மயிலாப்பூர்

ஆ)தங்கசாலை காளிகாம்பாள்

இ)திருவல்லிக்கேணி

ஈ)ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பசுவாமி ஆலயம்

8

இந்து-முஸ்லிம் நல்லிணக்கமாக, எந்தத் தலத்தில் இறைவனுக்கு “லுங்கி”யை ஆடையாக அணிவித்து, “சப்பாத்தி/ரொட்டி” நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது?

8

அ)சபரிமலை

ஆ)நாகப்பட்டினம்

இ)ராமேஸ்வரம்

ஈ)ஸ்ரீரங்கம்

9

முருகப்பெருமானுக்கு மயில் தான் பிரதான வாகனம். இருப்பினும் சில கோவில்களில் இதுவும் வாகனமாக உள்ளது? எது?

9

அ)குதிரை

ஆ)சிங்கம்

இ)யானை

ஈ)காளை

10

கடைசியாக ஒரு இலந்தைப்பழம் கேள்வி!எத்தலத்தில் இறைவன் இலந்தைப்பழ மரத்தின் கீழ் வீற்று இருக்கிறார்?

10

அ)துவாரகை

ஆ)கேதார்நாத்

இ)பத்ரிநாத்

ஈ)காசி



--------------------------------------------------------------------------------------------
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
ஏற்கனவே பின்னூட்டமிட்ட நண்பர்கள் இந்த வசதி அவர்களுக்குத் தரப்படவில்லையேன்னு கோவிச்சிக்க வேணாம் ! :-) எங்க வீட்டு ட்யூப்லைட் (நான் தானுங்கோ) இப்ப தான் ஒளி சிந்தியது!!

(The table was removed after the results were published...)
--------------------------------------------------------------------------------------------




நியுயார்க் தமிழோசை.
உள்ளாட்சித் தேர்தல்களின் இறுதி முடிவுகள் இதோ! :-))
முடிவு நிலவரம் சீக்கிரமே தெரிந்து விட்டதால், அறிவித்த நேரத்துக்கு முன்னராகவே Publish செய்யப்படுகிறது! (4:50pm EDT)


1

கண்ணன் வெண்ணெய்த் திருடன் என்பது எல்லாருக்கும் தெரியும்; ஆனால் இந்தக் கோவிலில் பிள்ளையாரும் ஒரு கள்வராகவே வணங்கப்படுகிறார். எந்தத் தலம்?

ஆ)திருக்கடையூர்

அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன் கோவில் இது. இங்கே கணேசருக்கு கள்ள வாரணப் பிள்ளையார் (எ) சோர (சோர்) கணபதி என்கிற திருநாமம்.

பாற்கடல் கடையும் போது, விநாயகரை முதல் வணங்கி ஆரம்பிக்க தேவர், அசுரர் இருவருமே மறந்து போயினர். பல விக்கினங்கள் தோன்றின. பின்னர் வந்த அமுத கலசத்தையும், ஞான வெளியில் சிறிது நாழிகைக் காலம் , கணபதியான் மறைக்கப் பின்னர் நாரத மகரிஷியின் அறிவுரைப்படி அமரர் விநாயகனைத் துதித்தனர். கலசம் புறக்கண்களுக்குப் புலப்பட்டது! கலசத்தைக் கவர்ந்ததால் கள்ள வாரணர் ஆனார் இந்தக் கணபதி!

2

எந்தத் தலத்தில் முருகப்பெருமானுக்கு மலை மீதும் ஒரு கோவில்; மலை கீழும் ஒரு கோவில்! கீழே உள்ள கோவில் காலத்தால் மிக முந்தியது; ஆனால் இக்காலத்தில் பலர் அறிவதில்லை! போவதில்லை!!

அ)பழனி

கீழே உள்ள ஆலயமே திருவாவினன்குடி என்று போற்றப்பெறும் மூன்றாம் படைவீடு. நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் இதே தலத்தைத் தான் குறிக்கிறார்.

3

சிவபெருமான் துயில் கொண்ட நிலையில் உள்ள தலம் எது?

ஈ)சுருட்டப்பள்ளி

சென்னை-திருப்பதி செல்லும் வழியில் புத்தூர் அருகில் உள்ளது. ஆலகாலம் உண்ட பின் அண்ணல் அசதியால், சிறிது நேரம் அன்னை உமையவள் மடியில் தலை வைத்து உறங்குகிறான். இக்காட்சி அப்படியே சிலை வடிவில் உள்ள தலம். (மறைந்த)காஞ்சி பரமாச்சாரியார் மிகவும் உகந்த தலங்களில் ஒன்று.

4

ஆதிசங்கரர் அன்னை பார்வதிக்குக் காதணி அளித்து அவள் கோபத்தைத் தணித்த தலம் எது?

இ)திருவானைக்கா

அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமம் . இவள் முன்னொரு காலத்தில், காபாலிகள் உபாசனையால், மிகவும் உக்கிரமாக இருக்க, மக்கள் அருகில் செல்லவே அஞ்சினர். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரங்களுடன் கூடிய தாடங்கம் என்ற காதணியைச் செய்வித்து, அன்னைக்கு அணிவிக்க அவள் சினம் தணிந்தது. அன்னையின் அருகில் அவள் இரு மகன்களையும் பிரதிட்டை செய்து, என்றும் சாந்த சொருபீயாக இருக்க வழிவகை செய்தார்.

5

பெருமாளும், சிவனாரும் (லிங்கமாக) ஒரே கருவறையில் காணக்கூடிய கோவில் எது?

அ)திருவனந்தபுரம்

மூவாசல் படிகளில் பத்மநாப சுவாமி தரிசனம். சுவாமி கிடந்த கோலத்தில், தன் வலக்கரத்தை சிவலிங்கம் மீது வைத்து அணைத்தவாறு சயனித்துள்ளார்.

ஆ)சங்கரநாராயணன் கோவில் - பலர் இந்த விடை தநதுள்ளார்கள். இந்த option சற்று குழப்பவே தரப்பட்டு இருந்தது! சங்கரநாராயணன் கோவிலில் சிவவிஷ்ணு ரூபமாய் பாதி சிவன், பாதி விஷ்ணுவாக இருப்பார் மூலவர். ஆனால் லிங்க ரூபமாக ஒரே கருவறையில் இருப்பது காண்பதற்கு அரியது!

காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நிலாத் திங்கள் துண்டம் சந்நிதி பெருமாளுக்கு உண்டு; ஆனால் ஒரே கருவறையில் இல்லை!!

6

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றில் மட்டும், படியேறிச் செல்லும் போது, அந்தப் 60 படிகளுக்கும், ஒவ்வொரு தமிழ் ஆண்டின் பெயர் உண்டு? எத்தலம்??

6 (இதற்கு No multiple choice) - சுவாமி மலை (திருவேரகம்)

மிகச் சரியான் விடை; பலர் தந்துள்ளனர். கொள்ளை அழகு சுவாமி நாத சுவாமி!

7

விவேகானந்தர் சென்னையில் இத்தலம் சென்று வழிபட்டார்; பின்னர் அத்தலம் குறித்துக் கட்டுரையும் எழுதினார்? எந்தத் தலம்??

இ)திருவல்லிக்கேணி

ஆழ்வார்கள் பரவிப் போற்றிய அல்லிக்கேணி; சுவாமி விவேகானந்தர் வருகை குறித்த கல்வெட்டும் கோவில் கோபுர வாயிலில் உள்ளது. கோவிலுக்கு சற்று தள்ளி கடற்கறைச் சாலையில் விவேகானந்தர் இல்லம் என்ற அவர் தங்கிய இடமும் உள்ளது!

8

இந்து-முஸ்லிம் நல்லிணக்கமாக, எந்தத் தலத்தில் இறைவனுக்கு “லுங்கி”யை ஆடையாக அணிவித்து, “சப்பாத்தி/ரொட்டி” நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது?

ஈ)ஸ்ரீரங்கம்

துலுக்கா நாச்சியார் (தில்லி பாதுஷாவின் மகள்) அரங்கனைக் கண்ட பின்னர், அவன் திருக்கண் அழகில் மயங்கி, மூர்ச்சையுற்று, பின்னர் அவன் திருவடி சேர்ந்தாள்! கண்ட மாத்திரத்தில் காதலாகி, கண்ணீர் மல்கி அவன் அடி சேர்ந்ததால் அவள் நினைவாகவே இந்த ஆடையும், நிவேதனமும்.

9

முருகப்பெருமானுக்கு மயில் தான் பிரதான வாகனம். இருப்பினும் சில கோவில்களில் இதுவும் வாகனமாக உள்ளது? எது?

இ)யானை

சுவாமிமலையில் காணலாம்! சில ஆலயங்களில், ஆடு (கிடா) அவனுக்கு ஒரு வாகனம். இராமநாதன் பின்னூட்டத்தில் இருந்து இதோ:

//இப்போதான் வாரியாரோட கந்தபுராண தத்துவம் போட்டேன். எதேச்சையா யானை, ஆடும் கூட வாகனமாகும்னுட்டு சொன்னாரு. மயில், யானை, ஆடு - ஆணவம், கண்மம், மாயை என மும்மலங்களை குறிக்கிறதாம்//

10

கடைசியாக ஒரு இலந்தைப்பழம் கேள்வி!எத்தலத்தில் இறைவன் இலந்தைப்பழ மரத்தின் கீழ் வீற்று இருக்கிறார்?

இ)பத்ரிநாத்

வதரி, பத்ரி என்பது வடமொழியில் இலந்தைப்பழத்தைக் குறிக்கும். கண்ணுக்குப் புலப்படாத இம்மரத்தில் ம்காலக்ஷ்மி வாசம் செய்து யோகத்தில் இருக்கும் பத்ரிநாராயணனைக் காப்பதாக ஐதீகம்.




திராச ஐயா ஏகோபித்த வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளார்!
(all but one)
அவருக்கு வெகு அருகில்,
குமரன், ஜெயஸ்ரீ
(all but two)
இவர்களுக்கு மிக அருகில்
இராமநாதன்!
(all but three)
ஹும்...வெற்றிக் கனி பெற்றவர்க்கு என்ன பரிசு தரலாம் என்பதை டீச்சர் முடிவு செய்து, அவரே பரிசையும் வழங்கி விடுவதாக இசைந்துள்ளார்
.......
என்று கனவு கண்டேன் :-)

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நம்ம மக்கள்ஸ் நிறைய பேரை பாஸாக்கி, டிஷ்டிங்கஷனும் போட்டுக் கொண்டோம்!
எல்லாப் புகழும் டீச்சருக்கே!!



40 comments:

  1. 4.படவேடு
    5.சங்கரநாராயணன் கோவில்
    8.ஸ்ரீரங்கம்
    9.குதிரை

    ReplyDelete
  2. ரவிசங்கர். ஏதோ முயன்றுள்ளேன். சரியா பாருங்கள்.

    1. ஈ
    2. அ
    3. ஈ
    4. இ
    5.ஆ
    6. சுவாமிமலை
    7. இ
    8. ஈ
    9. இ
    10. இ

    ReplyDelete
  3. ஹூம்........ கொஞ்சம் இப்படி அப்படிப்போயிரக்கூடாது.

    மாணவமணிகள் ஒலிக்க ஆரம்பிச்சுருவாங்க.

    நடக்கட்ட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    எஞ்சாய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  4. நிதானமா படிச்சு கேள்விகளுக்குப் பதில் சொல்லறேன். ஆனா என்னப்பன் முருகன் பத்தின ரெண்டு கேள்விகளுக்கும் இதோ விடை!!

    2) பழனி

    6) சுவாமிமலை

    ReplyDelete
  5. 1. திருக்கடையூர் - கள்ளவாரணப்பிள்ளையார்
    4. திருவானைக்கா
    5. சங்கரநாராயணர் கோயில்
    6. சுவாமிமலை
    8. திருவரங்கம்
    10. பத்ரிநாத்

    ReplyDelete
  6. 3. சுருட்டப்பள்ளி

    ReplyDelete
  7. இபோதைக்கு,

    2. பழனி
    3. சுருட்டப்பள்ளி
    4. திருவானைக்கா?
    5.
    6. சுவாமிமலை
    7. திருவல்லிக்கேணி
    8. ஸ்ரீரங்கம்?
    9. பார்த்ததேஇல்லை :(


    மிச்சதுக்கு பிட் அடிச்ச்ட்டு வரேன்.

    பதில்களை எல்லாத்திஅயும் ரிலீஸ் பண்ணீடாதீங்க. சரியா தவறான்னு மட்டும் கமெந்த்ல போடுங்க. அபோதான் சுவாரசியம் குறையாம இருக்கும்.

    ReplyDelete
  8. இபோதைக்கு,

    2. பழனி
    3. சுருட்டப்பள்ளி
    4. திருவானைக்கா?
    5.
    6. சுவாமிமலை
    7. திருவல்லிக்கேணி
    8. ஸ்ரீரங்கம்?
    9. பார்த்ததேஇல்லை :(


    மிச்சதுக்கு பிட் அடிச்ச்ட்டு வரேன்.

    பதில்களை எல்லாத்திஅயும் ரிலீஸ் பண்ணீடாதீங்க. சரியா தவறான்னு மட்டும் கமெண்ட் ல போடுங்க. அபோதான் சுவாரசியம் குறையாம இருக்கும்.

    ReplyDelete
  9. //துளசி கோபால் said...
    ஹூம்........ கொஞ்சம் இப்படி அப்படிப்போயிரக்கூடாது//

    ஆகா, டீச்சர்.
    நீங்க ஊருக்குப் போனாலும் இங்கே நடக்கிறத எப்படி கரெக்டாக் கண்டுபிடிச்சீங்க? யாருப்பா அதுக்குள்ள போட்டுக் கொடுத்தது???

    நான் ஒண்ணும் பண்ணலை; என்னை ஏதும் பண்ணிடாதீங்க! நீங்க இல்லாத நேரத்தல ஏதோ நம்மளால முடிஞ்ச "ஆன்மிகப் பணி" செய்யலாமேன்னு தான்!

    எல்லா வேலையும் முடிச்சிட்டு, மெள்ளவே வாங்க டீச்சர்; நாங்க எல்லாரும் சமத்தா தான் இருக்கோம்! வகுப்பு இன்டர்னல் மார்க் மட்டும் எல்லாருக்கும் 80-100 randomஆ போட்டுக்கிட்டோம்! நீங்க ஒருத்தரே எம்புட்டு வேலை தான் பாப்பீங்க? அதான் :-))

    ReplyDelete
  10. செல்வன் - எட்டாம் கேள்விக்குச் சரியான பதில் தந்துள்ளார்!

    கொத்ஸ் - 2nd & 6th - கரெக்ட்

    ஜெயஸ்ரீ - 1,3,4,6,8,10 - சூப்பரா சொல்லி இருக்காக!

    ReplyDelete
  11. //தலைப்பைப் பாத்துட்டு டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் தொடர்புடைய ஏதோ ஒரு வலைப்பூன்னு, யாரும் வலையில் வந்து விழுந்துடாதீங்க சொல்லிட்டேன் :-)//

    கண்ணபிரான்...!
    இப்படியெல்லாம் தலைப்பு வைத்தால் இதுபோல் பதிவுகளை படிக்கவருவார்கள் என்று முடிவே செய்துவிட்டீர்களா ?
    :))

    கேள்விகள் நன்றாக உள்ளது !
    பதில் தெரியவில்லை ! ஞான் ஞான சூனியமாக்கும் !
    :)

    ReplyDelete
  12. எல்லாமே Guess workதான் ;)

    1 ஆ)திருக்கடையூர
    2 அ)பழனி
    3 ஈ)சுருட்டப்பள்ளி
    4 இ)திருவானைக்கா
    5 ஆ)சங்கரநாராயணன் கோவில்
    6 சுவாமிமலை
    7 ஆ)தங்கசாலை காளிகாம்பாள்
    8 ஆ)நாகப்பட்டினம்
    9 அ)குதிரை
    10 ஈ)காசி

    அடுத்து ராமாயணம், மகாபாரத்தில வைங்க... நான் முயற்சி செய்றேன் :-)

    ReplyDelete
  13. குமரன் 1&5 தவிர எல்லாமே கரெக்ட்!
    போட்டியில் equal opportunity rules-இன் படி அ.உ.ஆ.சூ எல்லாம் கலந்துக்கக்கூடாதுன்னு பசங்க ரூல்ஸ் போடலாம்ன்னு இருந்தாங்க:-) நான் தான் "கற்பக விருட்சம்பா அவர்; Bit அடிக்க ய்ஸ்ஃபுல்லா இருப்பார்" என்று சொல்லி அவர்களை அடக்கி விட்டேன் :-))

    இராமநாதன் வாங்க!
    2,3,4,6,7,8 - சிறப்பா சொல்லி இருக்கீக!
    "பிட்டிங்" is legal! அடிங்க பிட்டை!!
    குமரன் பாருங்க பிச்சி உதற்ரார்! இதுக்க மேல நாம ஐடியா கொடுத்தா, டீச்சர் என்னை டின்னு கட்டிடுவாங்க! :-))

    ReplyDelete
  14. பாலாஜி வாங்க!(வெட்டிப்பயல்)
    1 to 4 கரீட்டா சொன்னீங்க
    6-உம் சரியே!

    குமரன் இருக்க, கண்மணிகளுக்குப் பயமேன்? மீதிக் கேள்விகளுக்கு, அவரப் புடிங்கப்பா! :-)

    ReplyDelete
  15. // கோவி.கண்ணன் [GK] said...
    கண்ணபிரான்...!
    இப்படியெல்லாம் தலைப்பு வைத்தால் இதுபோல் பதிவுகளை படிக்கவருவார்கள் என்று முடிவே செய்துவிட்டீர்களா ?
    :))//

    GK, அய்யோ, அப்படி எல்லாம் இல்லீங்க! நீங்க வேற! டீச்சர் ஊர்ல இல்ல! அதான் நம்ம கழகக் கண்மணிகளுக்கு...ச்சே க்ளாஸ் கண்மணிகளுக்கு ஒரு குஷி வந்து விட்டது!! ச்ச்ச்ச்ச்ச்சும்மா!

    //கேள்விகள் நன்றாக உள்ளது !
    பதில் தெரியவில்லை ! ஞான் ஞான சூனியமாக்கும் !//

    சிங்கையில் உதித்த பின் தான் "ஞான" சூரியன் இங்கெல்லாம் உதிக்குது...அப்பேர்பட்ட நீங்க...இப்படிச் சொல்லலாமா? :-)

    ReplyDelete
  16. ஜெயஸ்ரீ திரும்பவும் வந்து - 2,9 - கரெக்டா சொல்லிப் பின்னி எடுத்து இருக்காங்க!

    ReplyDelete
  17. 9. யானை

    இப்போதான் வாரியாரோட கந்தபுராண தத்துவம் போட்டேன். எதேச்சையா யானையும் ஆடும் கூட வாகனமாகும்னுட்டு சொன்னாரு.

    மயில், யானை, ஆடு - ஆணவம், கண்மம், மாயை என மும்மலங்களை குறிக்கிறதாம்.

    ReplyDelete
  18. இராமநாதன் மீண்டும் வந்து 9ஆம் கேள்விக்குச் சரியான விடை கொடுத்து இருக்காரு!. போனஸ் விஷயமா ஒரு அருமையான கருத்தையும் சொல்லி இருக்காரு! இதோ:

    //இப்போதான் வாரியாரோட கந்தபுராண தத்துவம் போட்டேன். எதேச்சையா ---ஆடும் கூட வாகனமாகும்னுட்டு சொன்னாரு.//

    மயில், --- , ஆடு
    - ஆணவம், கண்மம், மாயை என மும்மலங்களை குறிக்கிறதாம்.//

    ReplyDelete
  19. இதுவரை...
    குமரன் மற்றும் ஜெயஸ்ரீ முன்னணியில் உள்ளார்கள்!

    அனைவரின் பின்னூட்டங்களையும், பதில்களையும் நாளை மாலையே பதிந்து விடுகிறேன்; இப்ப ஒரே கண்ணைக் கட்டுது! இன்று மல்டிபிள் ஸ்கிலாரஸிஸ் fund raising பைக் டூர் வேறு சைக்கிள் மிதித்த வலி! So good night!

    ReplyDelete
  20. 1)காணிப்பாக்கம்
    2)பழனி
    3)சுருட்டப்பள்ளி
    4))திருவானைக்கா
    5)கேதார்நாத்
    6)swamimalai
    7)தங்கசாலை காளிகாம்பாள்
    8)ஸ்ரீரங்கம்
    9)யானை
    10)பத்ரிநாத்

    ReplyDelete
  21. திராச ஐயா அவர்கள் வந்து கலக்கியிருக்காரு!
    ஐயா - உங்கள் 1,5,7 தவிர அனைத்து விடைகளுமே சரி!

    கை துடிக்கிறது விடைகளை publish பண்ணி விட! ஆனால் இராமநாதன் சொல்லியிருக்காரு,
    //பதில்களை எல்லாத்திஅயும் ரிலீஸ் பண்ணீடாதீங்க. சரியா தவறான்னு மட்டும் கமெண்ட் ல போடுங்க. அபோதான் சுவாரசியம் குறையாம இருக்கும்//

    ReplyDelete
  22. 1).திருக்கடையூர்
    5)காஞ்சிபுரம்
    7)திருவல்லிக்கேணி

    ReplyDelete
  23. 1)திருக்கடையூர்
    5)காஞ்சிபுரம்
    7)திருவல்லிக்கேணி

    ReplyDelete
  24. திராச ஐயா மீண்டும் வந்து 5ஆம் கேள்வி தவிர அனைத்துக்கும் சரியான விடையிறுத்து....ஏகோபித்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்!!!

    கலக்கிட்டீங்க ஐயா!

    ReplyDelete
  25. 1 அ) பிள்ளையார்பட்டி
    2 அ)பழனி
    3 ஈ)சுருட்டப்பள்ளி
    4 ஈ)கொல்லூர் மூகாம்பிகை
    5 ஈ)கேதார்நாத்
    6. திருத்தணி
    7 அ மயிலாப்பூர்
    8 அ சபரிமலை
    9 குதிரை
    10 அ துவாரகை

    ReplyDelete
  26. தமிழ்மண விண்மீன் சிவா சார் அவர்களே வருக! நீமோ எப்படி உள்ளது??
    உங்கள் 2,3 விடைகள் மிகவும் சரி!

    ReplyDelete
  27. //ஜெயஸ்ரீ said:
    5. kanchipuram ??//

    ஜெயஸ்ரீ, வாங்க! ஆட்டத்தின் eleventh hour வந்து விட்டோம்! பேசாம பதிப்பித்து விடட்டுமா? Runner-Up என்ற முறையில் நீங்களோ, குமரனோ சொன்னால் OK தான்!

    திராச ஐயாவும், காஞ்சி என்று தான் சொன்னார். காஞ்சியில் நிலாத் திங்கள் துண்டம் சந்நிதி உண்டு; ஆனால் ஒரே கருவறையில் இல்லை!!

    ReplyDelete
  28. ரவி. விடைகளைப் போடுங்கள். போதுமான நேரம் தந்தாயிற்று.

    சைவச் செம்மலுக்காகவா காத்திருக்கிறீர்கள்? அவர் கனவில் அவரோட வாத்தியார்கள் (வாரியார், அருணகிரியார், வேலவர்) கூட பேசிக்கிட்டு இருப்பார்.

    ReplyDelete
  29. 5. திருவனந்தபுரம் தான் மிச்சம் உள்ள ஒரே பதில்

    ReplyDelete
  30. //குமரன் (Kumaran) said:
    சைவச் செம்மலுக்காகவா காத்திருக்கிறீர்கள்? //

    குமரன், அட, எப்பிடி கரெக்டா கண்டுபுடிச்சீங்க!...
    ஜிரா நீவிர் மயிலார் இருந்தும் வர இவ்வளவு தாமதம் ஏனோ?
    சரி, ஞானப்பழம் அப்பன் கணேசனுக்கே! :-))

    ReplyDelete
  31. சன் நியூஸ் உள்ளாட்சித் தேர்தல்களின் இறுதிக் கட்ட நிலவரம்!

    திராச ஐயா ஏகோபித்த வாக்குகள் பெற்று அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்!

    அவருக்கு வெகு அருகில்,
    குமரன், ஜெயஸ்ரீ
    இவர்களுக்கு மிக அருகில்
    இராமநாதன்!

    யாருப்பா அது! ஓட்டுப் பெட்டியைக் கடத்திக் கொண்டு போவது? புடிங்கப்பா அவரை :-)

    ReplyDelete
  32. இறுதி முடிவுகள்
    ----------------

    திராச ஐயா ஏகோபித்த வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளார்!
    அவருக்கு வெகு அருகில்,
    குமரன், ஜெயஸ்ரீ
    இவர்களுக்கு மிக அருகில்
    இராமநாதன்!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    நம்ம மக்கள்ஸ் நிறைய பேரை பாஸாக்கி, டிஷ்டிங்கஷனும் போட்டுக் கொண்டோம்!
    எல்லாப் புகழும் டீச்சருக்கே!!

    ReplyDelete
  33. 1. திருக்கடையூர்பிள்ளையார்
    2.திருத்தணி தவிர மற்றக் கோவில் பார்க்கவில்லை என்பதால் சரியான விடை தெரியவில்லை.
    3.சுருட்டப்பள்ளி
    4.திருவானைக்கா
    5.சங்கரநாராயணன் கோவில், வழக்கத்தில் சங்கரன் கோவில் என்பார்கள்.
    6.திருத்தணி
    7.திருவல்லிக்கேணி.
    8.சபரிமலையா, இதுவும் சந்தேகம்தான்
    9.யானை
    10.பத்ரிநாத்

    இன்னிக்குத் தான் குமரன் பதிவில் இருந்து தெரிந்து கொண்டேன். 2 நாளாகக் கணினி வேலை செய்யாத காரணத்தால் பார்க்க முடியவில்லை. இனிமேல் முதலில் சொல்லுங்கள். நானும் கலந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  34. தவற விட்டேனே இப்பதிவை?
    பரிசையும் தவறத்தான் விட்டிருப்பேன்!
    8 தான் சரியாக இருந்தது!!

    நல்ல புதிர்!

    ReplyDelete
  35. //கீதா சாம்பசிவம் said:
    இன்னிக்குத் தான் குமரன் பதிவில் இருந்து தெரிந்து கொண்டேன்....இனிமேல் முதலில் சொல்லுங்கள். நானும் கலந்து கொள்கிறேன்.//

    வாங்க கீதா அவர்களே! (கீதா மேடம்ன்னு கூப்பிடலாமா?)
    6 சரியான பதில்கள்!(முடிவுகள் அறிவித்த பின்னும், பிட் அடிக்காமல் சொல்லி உள்ளீர்கள், வாழ்த்துக்கள் :-)
    இனி அவசியம் சொல்கிறேன். உங்கள் மின்மடல் முகவரியை எனக்குத் தட்டி விடுங்களேன், என் profile-இல் இருந்து!
    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  36. //SK said...
    தவற விட்டேனே இப்பதிவை?
    பரிசையும் தவறத்தான் விட்டிருப்பேன்!
    8 தான் சரியாக இருந்தது!!
    நல்ல புதிர்! //

    SK வாங்க! பரிசைக் கண்டிப்பாத் தவற விட்டிருக்க மாட்டீங்க. ஏன்னா பிட்டிங் இங்கே லீகலாக இருந்தது :-)
    அடுத்த முறை மின்மடலில் தெரிவிக்கிறேன்!

    ReplyDelete
  37. // kannabiran, RAVI SHANKAR (KRS) said:

    //குமரன் (Kumaran) said:
    சைவச் செம்மலுக்காகவா காத்திருக்கிறீர்கள்? //

    குமரன், அட, எப்பிடி கரெக்டா கண்டுபுடிச்சீங்க!...
    ஜிரா நீவிர் மயிலார் இருந்தும் வர இவ்வளவு தாமதம் ஏனோ?
    சரி, ஞானப்பழம் அப்பன் கணேசனுக்கே! :-)) //

    இந்தப் பதிவை நேற்றே கண்டேன். தெரிந்த விடைகள் சிலவே. அவைகளை ஏற்கனவே பலர் சொல்லியிருந்தனர். ஆகையால் அமைதி காத்தேன்.

    முருகனைப் பற்றி முந்நூறு கேட்டால் சொல்வேன். என்னப்பனை அன்றி வேறெந்தப் பனையும் ஏறியறியேன். ஆகையால் தெரிந்து கொள்ளும் மாணவனாக மட்டும் வந்தேன். சென்றேன்.

    சங்கரங்கோயிலில் இருவரும் ஓருருவாக இருப்பர். திருவனந்தபுரம் என்பது சரியாக இருக்கலாம். திருவனந்தபுரத்தின் பழைய தமிழ்ப் பெயர் சேடகமாடகம். சிலப்பதிகாரம் சொல்லும் பெயர் அது. சேரன் செங்குட்டுவன் சைவன். ஆகையால் போருக்குப் போகையில் விரிசடையன் மாலையைச் சிரசில் சூடிக் கொள்கிறான். சேடகமாடகத்து மாலை வருகிறது. அதை நம்பும் வழக்கம் அவனுக்கு இல்லை. ஆயினும் வந்தவர் மாலையைத் தந்தவர் மனம் புண்படக் கூடாதென்று வாங்கி ஒற்றைத் தோளில் போட்டுக் கொள்கிறான். இது தகவலுக்கு.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP