Thursday, November 09, 2006

புதிரா? புனிதமா?? - பாகம் 2

----------------------------------------------------------------------------------------------
விடைகள் பதிப்பிக்கப்பட்டன! (அப்பாடா, நியுயார்க் போக்குவரத்து நெரிசலில் தப்பித்து, இதோ வீடு வந்து சேர்ந்து, நேரே தமிழ்மணம்!)
சரியான விடைகளைக் காணப் பதிவின் இறுதிக்கு scroll செய்யவும்!
முடிவுகள் இதோ!

10/10
குமரன், ஜெயஸ்ரீ

9/10
வெட்டிபையல் (பாலாஜி)

7/10
இராமநாதன், சிவமுருகன், கீதாம்மா

வெற்றிக் கனி பெற்றவர்க்குப் பரிசை இரவு, மின்-மடல் வழியாக அனுப்பி வைக்கிறேன்.......
பங்கேற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வென்றவர்க்குச் சிறப்பு வாழ்த்துக்கள்!!

இது போல் அடுத்தது தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றித் தொடரலாமா?
நீங்க என்ன நினைக்கிறீங்க?
----------------------------------------------------------------------------------------------

இந்த முறை, தலைப்பைப் பாத்துட்டு, யாரும் வலையில் வந்து விழ மாட்டார்கள் என்ற நம்பிக்கை! என்ன சொல்றீங்க :-)

இதோ இராமாயணக் கேள்விகள்;
வெட்டிப்பையலாரின் இட்(ஷ்)டப்படி!!
ஒவ்வொரு கேள்விக்கும் ஒரே சரியான விடை மட்டுமே.

கலந்து பேசலாம்; பிட் அடிக்கலாம்;
ஆனா கூகுளாண்டாவரை மட்டும் வேண்டக் கூடாது!
....என்று சொல்லலாம் என்று இருந்தேன்!
ஆனா இதெல்லாம் நடக்கற விஷயமா?
"பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்திருக்கும் கூகுள் ஆனந்தமே", ன்னு பெரியவங்களே பாடியிருக்காங்களே! :-)
சரியான விடைகள் நாளை மாலை 07:00 மணிக்கு (நியுயார்க் நேரப்படி) அறிவிக்கப்படும்!

//வாங்க வடூவூர் குமார் சார்,
ஆஆஆம், உங்க பின்னூட்டம் பாத்தப்புறம் ஒரு ஐடியா!
பரிசாக:
முதல் மூவருக்கு,
வடூவூர் ராமனின் அழகுத் திருமுகம், படமாக!
ஓகே-வா?
//



1இராம காவியம் என்ற நூலை இயற்றிய முருகன் அடியவர் யார்?

1

அ) அருணகிரி
ஆ) நக்கீரர்
இ) வாரியார்
ஈ) பாம்பன் சுவாமிகள்

2

இராவணன் சேனையின் கொடி எது?

2

அ) சிம்மம்
ஆ) சூர்ய சந்திரன்
இ) வீணை
ஈ) பனை மரம்

3

ஆஞ்சநேயர், யோக நிலையில் அமர்ந்து, ராமனுக்கு இன்றி, இன்னொரு அவதார மூர்த்திக்குப் பணி புரியும் தலம் எது?

3

அ) ராமேச்வரம்
ஆ) சோளிங்கபுரம்
இ) காசி
ஈ) துவாரகை

4

கம்ப ராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது?

4

அ) திருப்பதி
ஆ)தஞ்சை
இ) திருவரங்கம்
ஈ) தேரழுந்தூர்
(கம்பன் பிறந்த ஊர்)

5

"கெளசல்யா சுப்ரஜா ராமா", என்று ராமனைப் பாட்டு பாடித் துயில் எழுப்பியவர் யார்?

5

அ) கோசலை
ஆ) கைகேயி
இ) வசிட்டர்
ஈ) விசுவாமித்திரர்

6போரில் தோற்று விடுவோம் என்று எண்ணி, இந்திரசித்து கடைசி நேரத்தில் செய்த யாகத்தின் பெயர் என்ன?6

அ) அஸ்வமேதம்
ஆ) நிகும்பலை
இ) சத்ரு சங்காரம்
ஈ) பிராயச்சித்தம்

7

இராமன் முறித்த சிவ துனுசின் பெயர் என்ன?

7

அ) கோதண்டம்
ஆ) சாரங்கம்
இ) பினாகம்
ஈ) தனுர்தரம்

8

இலங்கைப் பாலத்தைக் கட்டும் பணியை இராமன் யாருக்கு அளித்தான்?

8

அ) விஸ்வகர்மா-வருணன்
ஆ) அனுமன்-அங்கதன்
இ) அனுமன்-ஜாம்பவான்
ஈ) நளன்-நீலன்

9

இலக்குவனைப் பிழைக்க வைத்த சஞ்சீவினி மூலிகையைப் பறித்தவர் யார்?

9

அ) ஜாம்பவான்
ஆ) அனுமன்
இ) சுசேணன்
ஈ) விபீஷணன்

10

பொதுவாக, இராமனைக் குடும்ப சகிதமாக, நின்ற நிலையில் உள்ள உருவமாகத் தான் ஆலயங்களில் காண முடிகிறது.

இலக்குவன் அருகில் நிற்க, இராமனும், சீதையும் அமர்ந்த நிலையில் உள்ள ஆலயம் எது?

10

அ) மதுராந்தகம்
ஆ)அயோத்தி
இ) பத்ராசலம்
ஈ) திருப்புல்லணை (திருப்புலாணி)




இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!




1 அ) அருணகிரி ஆ) நக்கீரர் இ) வாரியார் ஈ) பாம்பன் சுவாமிகள்

2 அ) சிம்மம் ஆ) சூர்ய சந்திரன் இ) வீணை ஈ) பனை மரம்

3 அ) ராமேச்வரம் ஆ) சோளிங்கபுரம் இ) காசி ஈ) துவாரகை

4 அ) திருப்பதி ஆ)தஞ்சை இ) திருவரங்கம் ஈ) தேரழுந்தூர் (கம்பன் பிறந்த ஊர்)

5 அ) கோசலை ஆ) கைகேயி இ) வசிட்டர் ஈ) விசுவாமித்திரர்

6 அ) அஸ்வமேதம் ஆ) நிகும்பலை இ) சத்ரு சங்காரம் ஈ) பிராயச்சித்தம்

7 அ) கோதண்டம் ஆ) சாரங்கம் இ) பினாகம் ஈ) தனுர்தரம்

8 அ) விஸ்வகர்மா-வருணன் ஆ) அனுமன்-அங்கதன் இ) அனுமன்-ஜாம்பவான் ஈ) நளன்-நீலன்

9 அ) ஜாம்பவான் ஆ) அனுமன் இ) சுசேணன் ஈ) விபீஷணன்

10 அ) மதுராந்தகம் ஆ)அயோத்தி இ) பத்ராசலம் ஈ) திருப்புல்லணை (திருப்புலாணி)




----------------------------------------------------------------------------------------------

இதோ விடைகள்:



1இராம காவியம் என்ற நூலை இயற்றிய முருகன் அடியவர் யார்?

1 இ) வாரியார் சுவாமிகள்

எளிய உரைநடையில், குறிப்பாக இளைஞர்கள் ராமாயண நுட்பங்களை அறிய உதவும் நூல்

2

இராவணன் சேனையின் கொடி எது?

2 இ) வீணை

"வீணைக் கொடியுடைய வேந்தனே" பாட்டு நினைவுக்கு வருதுங்களா? இராவணன் சிறந்த வீணை இசைக் கலைஞன்; சாம கானம் இசைத்து சிவனாரை மகிழ்வித்தவன்; அவன் கொடியிலும் வீணை தான்!

3

ஆஞ்சநேயர், யோக நிலையில் அமர்ந்து, ராமனுக்கு இன்றி, இன்னொரு அவதார மூர்த்திக்குப் பணி புரியும் தலம் எது?

3 ஆ) சோளிங்கபுரம்

அரக்கோணம் அடுத்துள்ள சோளிங்கபுரம்; 108 திவ்ய தேசங்களில் ஒன்று; இங்கு தான் ஆஞ்சநேயர் சிறிய மலையில், யோக நிலையில் அமர்ந்துள்ளார்; அவர் கையில் சங்கு சக்கரங்கள்! பெரிய மலையில் உள்ள நரசிம்மரைப் பார்த்தவாறு அவர் பணி செய்து வீற்றிருக்கிறார்.

4

கம்ப ராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது?

4 இ) திருவரங்கம்

அரங்கத்தான் கோவிலில், சிரக்கம்பம் செய்த நரசிம்மர் சந்நிதியின் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மூல நூலில் கூறாத பிரகலாதன் கதையைக் கம்பர் இதில் கூறுவதால் ஆட்சேபம் எழுந்தது. ஆனால் இறைவன் அருளால், நரசிம்மர் சிரக் கம்பம் செய்து இதற்கு ஒப்புதல் அளித்தார். அரங்கேற்றம் தடையின்றி நிறைவேறியது!

5

"கெளசல்யா சுப்ரஜா ராமா", என்று ராமனைப் பாட்டு பாடித் துயில் எழுப்பியவர் யார்?

5 ஈ) விசுவாமித்திரர்

யாகம் காக்க சென்ற இடத்தில் தான், விசுவாமித்திரர் இவ்வாறு பாடித் துயில் எழுப்பினார். இன்று பெரும்பாலும், பல ஊர்களின் பெருமாள் குறித்து பாடப்படும் சுப்ரபாதங்களும், இந்த வரிகளைத் தான் முதல் அடியாக இட்டுத் தொடங்குகின்றன.

6போரில் தோற்று விடுவோம் என்று எண்ணி, இந்திரசித்து கடைசி நேரத்தில் செய்த யாகத்தின் பெயர் என்ன?

6 ஆ) நிகும்பலை

நிகும்பலா தேவியின் மேல் செய்த யாகத்தைத் தான் பாதியில் நிறுத்தி, ஹனுமன் சொல்ல, இலக்குவன் போரிலே இந்திரசித்தைக் கொன்றான்.

7

இராமன் முறித்த சிவ துனுசின் பெயர் என்ன?

7 இ) பினாகம்

சிவானாரின் வில்லுக்கு "பினாகம்" என்பதே பெயர். பினாகபாணி = சிவன்; கோதண்டபாணி = இராமன்; சாரங்கபாணி = பெருமாள்

8

இலங்கைப் பாலத்தைக் கட்டும் பணியை இராமன் யாருக்கு அளித்தான்?

8 ஈ) நளன்-நீலன்

இவர்கள் பெற்ற சாபத்தால் தான், நீரில் போட்டது எல்லாம் மிதக்க, இவர்களையே பாலத்தின் பணிக்கு இராமன் பெரிதும் பயன்படுத்தினான்; மற்ற வானரப்படைகளும், அணிலும் கூட உதவி செய்தன.

9

இலக்குவனைப் பிழைக்க வைத்த சஞ்சீவினி மூலிகையைப் பறித்தவர் யார்?

9 இ) சுசேணன்

சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தது என்னவோ அனுமன் தான்; ஆனால் எது அந்த மூலிகை என்று தெரியாததால் தானே அவ்வாறு செய்தான்! சுசேணன் வானரப் படையின் மருத்துவன்; அவன் தான் மலையில் உள்ள மூலிகையைப் பறித்து, இலக்குவனை எழுப்பியது!

10

பொதுவாக, இராமனைக் குடும்ப சகிதமாக, நின்ற நிலையில் உள்ள உருவமாகத் தான் ஆலயங்களில் காண முடிகிறது.

இலக்குவன் அருகில் நிற்க, இராமனும், சீதையும் அமர்ந்த நிலையில் உள்ள ஆலயம் எது?

10 இ) பத்ராசலம்

ஆந்திராவில் உள்ள தலம்; இங்கு தான் சீதா ராம கல்யாணம் மிகப் பிரபலம். இங்கு தான் இராமன், சீதையை அணைத்தவாறு, தம் மடியில் இருத்தி, அமர்ந்த நிலையில் உள்ளான்

147 comments:

  1. 1 - இ
    2-இ
    3 அ
    4 ஆ
    5 அ
    6 இ
    7 அ
    8 அ
    9 இ
    10 இ

    ReplyDelete
  2. 1. இ) கிருபானந்த வாரியார்
    2. ஆ) சூர்ய சந்திரன்
    3. ஆ) சோளிங்கபுரம் (நரசிம்ம மூர்த்தியை தியானம் செய்கிறார்)
    4. இ) திருவரங்கம்
    5. ஈ) விசுவாமித்திரர்
    6. ஆ) நிகும்பலை
    7. ஈ) தனுர்தரம் (Guess)
    8. ஈ) நளன்-நீலன் (its bcos of a curse they got from sanyasis that whatever they throw in water will float)
    9. இ) சுசேணன் (he is also a vanaram, if i am not wrong)
    10.இ) பத்ராசலம் (guess)

    ReplyDelete
  3. கால்கரி சிவாண்ணா தான் முதல் போணி!
    1,2,9,10 க்ரெக்டான விடைகள் குடுத்து கலக்கியிருக்காரு!

    ஆட்டத்துல பங்கு கொண்டமைக்கு நன்றி சிவாண்ணா!

    ReplyDelete
  4. கோதண்டம் ராமர் கையிலிருப்பது...
    சாரங்கம் நாராயணன் கையிலிருப்பது :-)

    மீதி ரெண்டுல ஒண்ணு :-)

    ReplyDelete
  5. அட, யார் இந்தப் போட்டியை விரும்பினார்களோ, அந்தப் பையலார், பிச்சு உதற்றார் போங்க!

    பாலாஜி, உங்க 1,3,4,5,6,8,9,10 ரொம்ப கரெக்டுங்கோ!
    7 ஆம் கேள்விக்கு, நீங்க என்னையே "இரண்டுல ஏதாச்சும் ஒரு நல்ல பதிலா எடுத்துக்க ஜக்கம்மா", ன்னு சொல்லியிருக்கீங்க; பாப்போம்!

    ReplyDelete
  6. கூகுளான்டவரை வேண்டாமல் யோசித்தால்,எலியை வைத்துதான் தேர்தெடுக்கமுடியும் போல.எல்லாம் சின்ன வயதில் கேட்டது.சுத்தமாக மறந்து போய்விட்டது.

    ReplyDelete
  7. 2 தப்பா???

    அப்ப வீணையா??? வீணை கொடியோன்னு எங்கயோ படிச்ச மாதிரி ஞாபகம்...

    வீணை வாசிக்கறதுல்ல அவர் பெரிய தில்லாலங்கடினு தெரியும்... இருந்தாலும் நம்ம அஞ்சனையின் புதல்வன் மாதிரி வருமானு தெரியல

    ReplyDelete
  8. வெட்டிபையலார், அடிச்சாரு பாருங்க guessஐ!
    இராவணன் கொடிக்கு நீங்கள் இப்ப சொன்னது சரியே!
    ஜூட்

    ReplyDelete
  9. வாங்க வடூவூர் குமார் சார்,
    மறந்து போய்விட்டதை மீள் கொணரத் தானே இந்தப் போட்டி! :-))
    ஆஆஆம், உங்க பின்னூட்டம் பாத்தப்புறம் ஒரு ஐடியா!

    பரிசாக:
    முதல் மூவருக்கு,
    வடூவூர் ராமனின் அழகுத் திருமுகம், படமாக!


    ஓகே-வா?

    ReplyDelete
  10. 1 Dont know


    2 வீணை


    3 theriyathu


    4 இ) திருவரங்கம் is my choice.

    தேரழுந்தூர்?? (ha..ha...good trap)


    5 விசுவாமித்திரர்


    6 நிகும்பலை (JJ too did this in 2001)


    7 தனுர்தரம்


    8 நளன்-நீலன்


    9 அனுமன் (He got the sanjeevi hills.Atleast give me 50% marks:-))

    10 அ) மதுராந்தகம்

    ReplyDelete
  11. 1இராம காவியம் என்ற நூலை இயற்றிய முருகன் அடியவர் யார்? அருணகிரி
    2இராவணன் சேனையின் கொடி எது? வீணை
    3ஆஞ்சநேயர், யோக நிலையில் அமர்ந்து, ராமனுக்கு இன்றி, இன்னொரு அவதார மூர்த்திக்குப் பணி புரியும் தலம் எது?சோளிங்கபுரம்
    4கம்ப ராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது?திருவரங்கம்
    5"கெளசல்யா சுப்ரஜா ராமா", என்று ராமனைப் பாட்டு பாடித் துயில் எழுப்பியவர் யார் கைகேயி
    6போரில் தோற்று விடுவோம் என்று எண்ணி, இந்திரசித்து கடைசி நேரத்தில் செய்த யாகத்தின் பெயர் என்ன? நிகும்பலை
    7இராமன் முறித்த சிவ துனுசின் பெயர் என்ன?கோதண்டம்
    8இலங்கைப் பாலத்தைக் கட்டும் பணியை இராமன் யாருக்கு அளித்தான்?நளன்-நீலன்
    9இலக்குவனைப் பிழைக்க வைத்த சஞ்சீவினி மூலிகையைப் பறித்தவர் யார்?ஜாம்பவான்
    10பொதுவாக, இராமனைக் குடும்ப சகிதமாக, நின்ற நிலையில் உள்ள உருவமாகத் தான் ஆலயங்களில் காண முடிகிறது.

    இலக்குவன் அருகில் நிற்க, இராமனும், சீதையும் அமர்ந்த நிலையில் உள்ள ஆலயம் எது?

    மதுராந்தகம்

    ReplyDelete
  12. $elvan
    வாங்க,
    என்ன, அதே யாகத்தை 2001இல் ஜெ. கூடச் செய்தார் ன்னு ஒரு கொசுறுத் தகவல் கொடுத்திருக்கீங்க போல! :-)

    (He got the sanjeevi hills.Atleast give me 50% marks:-))
    நான் கூட பள்ளி விடைத் தாள்-ல இப்படி எல்லாம் எழுதி இருக்கேங்க! :-)) பாவம் அந்தப் பேப்பரைத் திருத்தின வாத்தியார்!

    உங்க 2,4,5,6,8 கரெக்டுங்க!

    ReplyDelete
  13. வாங்க Akil S Poonkundran
    பதிவுக்கு முதல் வருகை; நல்வரவு!

    கலக்கியிருக்கீங்க!
    2,3,4,6,8 கரெக்டுங்க!

    ReplyDelete
  14. jayalalitha pannathu chathrusamhara yaagam :-)

    malaiya thookitu vanthathu namma anjanai mainthannu ellarukum theriyume ;)

    ReplyDelete
  15. 1 இ) வாரியார்

    2 இ) வீணை

    3 ஆ) சோளிங்கபுரம் ??

    4 இ) திருவரங்கம் (கம்பரோட மண்டபமே இருக்கே)

    5 ஈ) விசுவாமித்திரர்


    6 சத்ரு சங்காரம்??


    7 இ) பினாகம்


    8 ஈ) நளன்-நீலன் (நள-நீலனோட கல்லுன்னு இராமேஸ்வரத்துல ஒரு கோயில்ல பாத்தேன். பெரிய porous ஆன வெள்ளைக்கல் கடல்நுரை மாதிரியிருந்தது)


    9 அ) ஜாம்பவான் (கேள்வி குழப்பமா இருக்காப்போல இருக்கே.. சஞ்சீவியக் கொண்டு வந்தது ஆஞ்சநேயர். ஆனா உபாயம் சொன்ன ஜாம்பவான் தான் இலையப் பறிச்சிருக்கணும். சரியா?)

    10 ஆ)அயோத்தி?? (திருப்புலாணி)யா இருக்க வாய்ப்பில்லை. அங்க படுத்திருக்கிற இராமரில்ல?

    நல்ல கேள்விகள் கே. ஆர். எஸ். தொடருங்க இந்த கேள்விபதில்களை.

    நன்றி

    ReplyDelete
  16. 1. இ) வாரியார்
    2. இ) வீணை
    3. ஆ) சோளிங்கபுரம்
    4. இ) திருவரங்கம்
    5. ஈ) விசுவாமித்திரர்
    6. ஆ) நிகும்பலை
    7. இ) பினாகம்
    8. ஈ) நளன்-நீலன்
    9. இ) சுசேணன்
    10. இ) பத்ராசலம்

    எத்தனை விடைகள் தவறு என்று விரைவில் சொல்லுங்கள் ரவி.

    ReplyDelete
  17. வாங்க இராமநாதன் சார்!
    6,9,10 தவிர மீதி அனைத்துமே சரியாச் சொல்லி, அசத்தி இருக்கீங்க!!

    //9 கேள்வி குழப்பமா இருக்காப்போல இருக்கே.. //
    ஹிஹி....அதுக்குத் தாங்க கேட்டது :-))

    //சஞ்சீவியக் கொண்டு வந்தது ஆஞ்சநேயர். ஆனா உபாயம் சொன்ன ஜாம்பவான் தான் இலையப் பறிச்சிருக்கணும். சரியா?)//

    மூச்! :-)

    //நல்ல கேள்விகள் கே. ஆர். எஸ். தொடருங்க இந்த கேள்விபதில்களை//

    நன்றி மருத்துவரே! நிச்சயம் தொடர்கிறேன்! ஏன்னா...எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் :-))

    ReplyDelete
  18. வாங்க குமரன்!
    //
    எத்தனை விடைகள் தவறு என்று விரைவில் சொல்லுங்கள் ரவி.
    //

    அடியேன்;
    தங்கள் உத்தரவு! :-))
    எவ்வளவு விரைவில் குமரன்? :-))
    தவறா? குமரன் பதிலிலா?
    யார் அங்கே???

    ReplyDelete
  19. குமரன் வந்து அடிச்சாருங்க ஜாக்பாட்!

    10/10
    பின்னிட்டீங்க குமரன்! வாழ்த்துக்கள்!
    அ.உ.ஆ.சூ.சா வாழ்க!

    மக்கள் மத்த இரண்டு இடங்களைப் (2nd & 3rd) பிடிக்கும் வரை கொஞ்சம் வெயிட் பண்ணலாம், குமரன் - OK வா?

    ஹலோ; யாருப்பா அது குமரனுக்கு ஃபோன் போடறது? :-)

    ReplyDelete
  20. 1-ஈ) பாம்பன் சுவாமிகள்
    2-ஈ) பனை மரம்
    4-இ) திருவரங்கம்
    6-ஆ) நிகும்பலை
    7-அ) கோதண்டம்
    8-ஈ) நளன்-நீலன்
    9-ஆ) அனுமன்
    10-ஈ) திருப்புல்லணை (திருப்புலாணி)

    ReplyDelete
  21. 1 இ) வாரியார்

    2 இ) வீணை

    3 ஆ) சோளிங்கபுரம்

    4 இ) திருவரங்கம்

    5 இ) வசிட்டர்

    6 இ) சத்ரு சங்காரம்

    7 இ) பினாகம்

    8 ஈ) நளன்-நீலன்

    9 இ) சுசேணன்

    10 ஈ) திருப்புல்லணை (திருப்புலாணி)

    ReplyDelete
  22. வாங்க சுதர்சன்.கோபால்
    4,6,8 கரெக்டு-ங்க!

    ReplyDelete
  23. சிவமுருகன் வாங்க
    5,6,10 தவிர மீதி அனைத்தும் கரெக்டா சொல்லிக் கலக்கியிருக்கீங்க!
    வாழ்துக்கள்!

    ReplyDelete
  24. 1 இ) வாரியார்

    2 இ) வீணை - வீணைக் கொடியுடைய வேந்தனே.....மறக்க முடியுமா இந்தப் பாடலை

    3 ஈ) துவாரகை.......அவதார புருஷன்னு கேள்வியிலேயே குறிப்பிருக்கே


    4 ஈ) தேரழுந்தூர் (கம்பன் பிறந்த ஊர்)...திருவரங்கத்தில் அரங்கேற்றந்தான்


    5 இ) வசிட்டர்.....கோசலையே பாடியிருந்தா மம சுப்ரஜா ராம பூர்வான்னு பாடியிருக்க மாட்டாங்களா?

    6 ஆ) நிகும்பலை - நிகும்பலாதேவிக்கு யாகம் செய்தான். ஆனால் இராமயணம் அவளைப் பேய் என்கிறது. இது மிகவும் தவறான கருத்து.

    7 இ) பினாகம் - பினாகபாணி என்ற பெயர் மறக்குமா?

    8 ஈ) நளன்-நீலன்

    9 இ) சுசேணன் - இவரு குரங்கு ஸ்பெஷலிஸ்ட்டுன்னு நெனைக்கிறேன்

    10 அ) மதுராந்தகம் ...ஏரி காத்த ராமரு கோயில்னு ஒன்னு இருக்கே! அதா?

    ReplyDelete
  25. 1.அருணகிரிநாதர்
    2.வீணை
    3.சோளிங்கபுரம்
    4.திருவரங்கம்
    5.விஸ்வாமித்ரர்
    6.நிகும்பலை
    7.சிவதனுசு., பினாகம்
    8.நளந்நீலன்
    9.அனுமன்
    10. அயோத்தி, பத்ராசலம், மதுராந்தகம் பார்க்கவில்லை. திருப்புல்லாணியில் அப்படி இல்லை. அது மட்டும் தெரியும்.வழக்கம் போல லேட்டுனு நினைக்கிறேன். விடையை அதனாலே சரி பார்க்கலை. அப்படியே போடறேன். எல்லாம் Head Letter :D

    ReplyDelete
  26. கீதாம்மா வாங்க
    1,9,10 தவிர எல்லாமே சரியாச் சொல்லி கலக்கியிருக்கீங்க!
    சூப்பர்!!

    ReplyDelete
  27. ஜிரா,
    வருக, வருக!
    "எந்தை வருக, ரகுநாயக வருக" என்று அருணகிரியார் ராமனைப் பாடியது போல்,
    நீங்க ராமன் கேள்வி-பதிலுக்கு வந்திருக்கீங்க!

    3,4,5,10 தவிர மற்ற எல்லாமே சரியான விடைகள் கொடுத்திருக்கீங்க!
    "மம சுப்ரஜா" என்ற வடமொழி சொல்லாராய்ச்சி வேற பண்ணியிருக்கீங்க! சூப்பர்! குமரன் மிகவும் மகிழ்வார்ன்னு நினைக்கிறேன் :-))

    ReplyDelete
  28. ராவணனின் கொடி வீணை ;இதைத்தவிர எதுவும் தெரியவில்லை.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  29. யோகன் அண்ணா,

    நீங்க சொல்லியிருக்கும் பதில் மிகவும் சரியே!

    ReplyDelete
  30. 1. கிருபானந்த வாரியார்
    2. வீணை
    3. சோளிங்கர்
    4. திருவரங்கம்
    5. விஸ்வாமித்ரர்
    6. நிகும்பலை
    7. பினாகம் அல்லது கோதண்டம்
    8. நளன் - நீலன்
    9. அனுமன்
    10. பத்ராசலம்

    ReplyDelete
  31. chinna vayasula padichuthathunga ellam. vara varam intha mathiri oru pathivu kodunga. enga ammavukku print eduthu anuppuren. parkkalam evlo score pannurangannu..

    ReplyDelete
  32. ஜெயஸ்ரீ

    9ஆம் பதில் தவிர எல்லாமே சரியாச் சொல்லிக் கலக்கியிருகீங்க!
    அந்தக் கேள்வியில் கொஞ்சமா ஒரு விஷமம் ஒளிந்துள்ளது! :-)

    "பறித்தது" யார்?

    ReplyDelete
  33. ஜெயஸ்ரீ-யும் பின்னாடியே வந்து அடிச்சாங்க ஜாக்பாட்!
    10/10
    வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ!

    இராமன் முறித்த சிவ துனுசின் பெயர் - நீங்கள் முதலில் சொன்னதே சரி; நான் அதையே எடுத்துக் கொள்கிறேன்! :-))

    ReplyDelete
  34. 1)பாம்பன் சுவாமிகள்
    2) வீணை
    3)சோளிங்கபுரம்
    4)தஞ்சை
    5)தஞ்சை
    6)நிகும்பலை
    7)none
    8) நளன்-நீலன்அனுமன்மதுராந்தகம்


    9)அனுமன்

    10)மதுராந்தகம்

    ReplyDelete
  35. திராச ஐயா, வாங்க!
    உங்களுக்குத் தான் வெயிட்டிங் :-)
    2,3,6,8 சரியாச் சொல்லி இருக்கீங்க!

    ReplyDelete
  36. 9சுசேணன்
    )replace this for mu earlier answer

    ReplyDelete
  37. திராச,
    9 ஆம் கேள்விக்கு நீங்க இப்ப சொன்ன பதிலும் சரியே!

    @
    திராச, குமரன்,ஜெயஸ்ரீ, பாலாஜி
    - விடைகளைப் பதிப்பித்து விடலாமா? என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  38. //சரியான விடைகள் நாளை மாலை 07:00 மணிக்கு (நியுயார்க் நேரப்படி) அறிவிக்கப்படும்!//

    வாக்கு மாற வேண்டாமே ;)

    ReplyDelete
  39. நீங்கள் யார் யாரை எதிர்பார்த்தீர்களோ அவர்கள் எல்லாம் வந்துவிட்டார்களா? அப்படியென்றால் விடைகளைச் சொல்லிவிடலாம்.

    //வாக்கு மாற வேண்டாமே ;)//

    வெட்டிப்பயலாரே. என்ன இது சிறுபிள்ளைத்தனமா? இராமசந்திர பிரபுவைப் பற்றிய பதிவு என்றால் இராமசந்திரனைப் போலவே இருக்கணுமா? :-)

    ReplyDelete
  40. //இராமசந்திர பிரபுவைப் பற்றிய பதிவு என்றால் இராமசந்திரனைப் போலவே இருக்கணுமா? :-)//

    அடடா,
    நினைவுபடுத்தியமைக்கு நன்றி குமரன்!:-) சொன்னபடி 07:00 மணிக்கே பதிப்பித்துவிடலாம்;

    வெட்டிப்பையலாரின் இட்டப்பதிவு என்பதால், பாலாஜி, எல்லாம் தங்கள் சித்தம்! :-))))

    ReplyDelete
  41. //வெட்டிப்பையலாரின் இட்டப்பதிவு என்பதால், பாலாஜி, எல்லாம் தங்கள் சித்தம்! :-))))//

    இந்த பதிவை படித்து நாளை சாயந்திரம் தானே.. அதற்குள் பதிலளிக்கலாம் என்று யாராவதி நினைத்திருந்தால்...

    அதனால்தான் சொன்னேன் :-)

    //குமரன் (Kumaran) said...

    நீங்கள் யார் யாரை எதிர்பார்த்தீர்களோ அவர்கள் எல்லாம் வந்துவிட்டார்களா? அப்படியென்றால் விடைகளைச் சொல்லிவிடலாம். //
    எதிர்பார்த்தவர்கள் வந்து பதிலளிப்பதைவிட எதிர்பாராமல் யாராவது வந்து சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்குமே குமரன் :-)

    அப்பறம் 10/10 வாங்கிய தங்களுக்கு விடைகள் தெரிய வேண்டுமா என்ன?
    அதெல்லாம் எங்களுக்குத்தான்...

    அப்பறம் வெறும் பதில்கள் எங்களுக்கு பத்தாது.. கூடவே நல்ல விளக்கங்களும் வேண்டும் ;)

    ReplyDelete
  42. //அப்பறம் வெறும் பதில்கள் எங்களுக்கு பத்தாது.. கூடவே நல்ல விளக்கங்களும் வேண்டும் ;)//

    வழிமொழிகிறேன். எல்லோரும் அப்படி செய்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  43. விடைகள் பதிப்பிக்கப்பட்டன! (அப்பாடா, நியுயார்க் போக்குவரத்து நெரிசலில் தப்பித்து, இதோ வீடு வந்து சேர்ந்து, நேரே தமிழ்மணம்!)
    சரியான விடைகளைக் காணப் பதிவின் இறுதிக்கு scroll செய்யவும்!
    முடிவுகள் இதோ!


    10/10
    குமரன், ஜெயஸ்ரீ

    9/10
    வெட்டிபையல் (பாலாஜி)

    8/10
    இராமநாதன், சிவமுருகன், கீதாம்மா


    வெற்றிக் கனி பெற்றவர்க்குப் பரிசை இரவு, மின்-மடல் வழியாக அனுப்பி வைக்கிறேன்.......
    பங்கேற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    வென்றவர்க்குச் சிறப்பு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  44. இது போல் அடுத்தது தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றித் தொடரலாமா?
    நீங்க என்ன நினைக்கிறீங்க?

    ReplyDelete
  45. பாலாஜி. நீங்கள் சொன்னது போல் இராவனின் மம சுப்ரஜா ராம புன்னகையை வரவழைத்தது. மகிழ்ச்சி. :-)

    அடுத்தப் பதிவு முருகனுக்கா? இராகவன் 10/10. இப்போதே போட்டுக் கொள்ளுங்கள். :-)

    ReplyDelete
  46. //குமரன் (Kumaran) said...
    பாலாஜி. நீங்கள் சொன்னது போல் இராவனின் மம சுப்ரஜா ராம புன்னகையை வரவழைத்தது. மகிழ்ச்சி. :-)//

    குமரன்,
    அச்சச்சோ, பாவம் பாலாஜியை ஏன் வம்புல மாட்டி வுடறீங்க:-)))
    அவ்வாறு சொன்னது அடியேன் தான்!
    ஜிரா, நீங்க அடிக்கறதா இருந்தா என்னைய அடிக்காதீங்க சாமீ :-))

    ReplyDelete
  47. //Akil S Poonkundran said...
    chinna vayasula padichuthathunga ellam. vara varam intha mathiri oru pathivu kodunga. enga ammavukku print eduthu anuppuren. parkkalam evlo score pannurangannu.. //

    வார வாரமா? வேண்டாங்க!
    அப்புறம் ஏதோ நேர்காணல்-ன்னு நினைச்சிக்கப் போறாங்க! :-)
    மாதம் ஒரு முறை பதியறேன்! உங்க மின்மடல் முகவரி கொடுத்தீங்கனா, தனி மடல் அனுப்பி நினைவூட்டுகிறேன்!

    என்னது அம்மாவையே நீங்க டெஸ்ட் பண்ணப் பண்ணறீங்களா? அவங்க எல்லாம் நம்மள மாதிரியா? பாருங்க பின்னி எடுத்துடுவாங்க!

    ReplyDelete
  48. // G.Ragavan said...
    நிகும்பலை - நிகும்பலாதேவிக்கு யாகம் செய்தான். ஆனால் இராமயணம் அவளைப் பேய் என்கிறது. இது மிகவும் தவறான கருத்து//

    அச்சச்சோ! நிகும்பலா தேவி, பிரத்யங்கரா தேவி, அவள் அம்சம் என்று சொல்லுவோரும் உண்டு!

    கம்பனும், வால்மீகியும் இவ்வாறு சொல்லவில்லை என்று தான் நினைக்கிறேன் ஜிரா! அந்த வேள்வியையும் அது தரும் சக்தியையும் உயர்த்தியே சொல்லி உள்ளனர்;

    மேலும் நிகும்பலை என்ற ஒரு இடத்தில் (சோலையில்), அஷ்டமி நள்ளிரவில், வேள்வி செய்யப் போனான் என்று தான் சொல்கிறார்களே தவிர, நேரிடையாக அம்மையைத் தொடர்பு படுத்தி குறிப்புகள் வருவது போல் தெரியவில்லை!

    ஞானம் ஐயாவைக் கேட்டால், தெளிவாக உரைப்பார் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  49. கே.ஆர்.எஸ்,
    பக்தி மணம் பரப்பும் தங்கள் பதிவுகள் வாழ்க !

    இணையத்தில் மட்டுமின்றி, தாங்கள் வசிக்குமிடத்தின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கும் இதே போன்று ராமாயண, பாரத, புராணக் கதைகளைச் சொல்லு போட்டி வைத்து, இந்து சமய, கலாசார உணர்வை வளர்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,

    நன்றி.

    ReplyDelete
  50. இரவி என்று சொல்ல நினைத்து பாலாஜி என்று சொல்லிவிட்டேன். மன்னிக்கவும். அதே போல் இராகவனை இராவன என்றாக்கிவிட்டேன். மன்னிக்கவும்.

    ReplyDelete
  51. ரவி, எனக்கு 4 கேள்விகளுக்கே விடை தெரிந்திருந்தது. சில புதிய செய்திகளை அறிந்து கொண்டேன். நன்றி
    ஜெயஸ்ரீ சரியான விடையை சொல்வார் என்ற என் என்ணமும் சரியே:)

    ReplyDelete
  52. //8/10
    இராமநாதன், சிவமுருகன், கீதாம்மா//

    கீதாம்மா தனி மடலில், தான் ஏழு கேள்விகளுக்கே சரியான விடை சொல்லியதாகவும், குறிப்பிட்டு இருந்தார்கள்.

    உண்மை தான் கீதாம்மா, இது 7/10 என்று இருந்திருக்க வேண்டும்;
    கவனக் குறைவுக்கு என்னை மன்னியுங்கள்!

    இருப்பினும் இராமநாதன் சார், சிவமுருகன் என்ற மற்ற இருவர் கூட அதே மாதிரி 7 பதில்கள் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்; எனவே உங்களுக்குப் பரிசு என்பது உறுதியாகி விட்டது! :-))

    கணக்கில் தவறு! பரிசில் சரி! :-))
    நன்றி கீதாம்மா, தக்க சமயத்தில் சுட்டிக் காட்டியமைக்கு; பதிவில் திருத்தி விடுகிறேன்!

    ReplyDelete
  53. // ஜடாயு said...
    தாங்கள் வசிக்குமிடத்தின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கும் இதே போன்று ராமாயண, பாரத, புராணக் கதைகளைச் சொல்லு போட்டி வைத்து, இந்து சமய, கலாசார உணர்வை வளர்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்//

    வாங்க ஜடாயு சார்,
    தங்கள் எண்ணம் மிகவும் உயர்ந்தது!
    நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க! இதைச் சிறார்களுக்கு கொஞ்சம் வித்தியாசமா மாத்தி, அடுத்த விழாவில், செய்ய முயற்சிக்கிறேன் சார்!

    ReplyDelete
  54. //பத்மா அர்விந்த் said...
    ரவி, எனக்கு 4 கேள்விகளுக்கே விடை தெரிந்திருந்தது. சில புதிய செய்திகளை அறிந்து கொண்டேன். நன்றி

    வாங்க பத்மா ஜி.
    தங்களுக்குப் பயன்படுமாயின் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. ஜடாயு சார், சிறு குழந்தைகளுக்கு இதை adapt செய்வது பற்றி நல்ல ஐடியா கொடுத்திருக்கார். பாத்தீங்களா?

    //ஜெயஸ்ரீ சரியான விடையை சொல்வார் என்ற என் என்ணமும் சரியே:)//
    :-))
    அவங்க எப்பவுமே கலக்கிடுவாங்களே!

    ReplyDelete
  55. // 4 ஈ) தேரழுந்தூர் (கம்பன் பிறந்த ஊர்)...திருவரங்கத்தில் அரங்கேற்றந்தான் //

    ரவி.....உங்கள் கேள்வியினை இராமகாதை எழுதிய ஊர் என்று தவறாக எண்ணிக் கொண்டேன். ஆனால் அப்படித்தான் பார்த்த நினைவு. ஆகையால்தால் அரங்கேற்றம் செய்தது திருவரங்கம்னு விடையிலயும் சொல்லியிருக்கேனே. கேள்வியப் பின்னால் மாற்றவில்லையே?! ;-)

    // குமரன் (Kumaran) said...
    பாலாஜி. நீங்கள் சொன்னது போல் இராவனின் மம சுப்ரஜா ராம புன்னகையை வரவழைத்தது. மகிழ்ச்சி. :-) //

    எதனால் என்றும் விளக்கமாகச் சொல்லுங்கள் குமரன். :-)

    // அடுத்தப் பதிவு முருகனுக்கா? இராகவன் 10/10. இப்போதே போட்டுக் கொள்ளுங்கள். :-) //

    ஆகா வம்புக்கு இழுக்கின்றீர்களே குமரன். முருகனை முழுதுணர நான் அருணகிரியா? வாரியாரா? என்னால் முடிந்ததைச் செய்து முடிவை முருகனிடம் விட்டு விடுகிறேன். முருகன் பதிவென்றால் குமரந்தானே வெல்லவது!

    ReplyDelete
  56. சொன்ன சொல் மாறாத மாண்பு மிக்கவரிடம் என்ன கேள்வி கேட்டீர்கள் இராகவன்? இது அடுக்குமா? 'நானே தான் ஆயிடுக' என்று அவரும் நீங்கள் செய்த தவறை தன் மேல் ஏற்றிக் கொள்வார். ஆனால் மற்ற எல்லாருமே திருவரங்கம் என்றே சொல்லியிருக்கிறோம் பாருங்கள். நான் படிக்கும் போது தெளிவாக 'அரங்கேற்றிய' என்றே இருந்தது.

    சுப்ரஜா என்றால் மகன் என்பதையும் மம என்றால் என்னுடைய என்பதையும் இராகவனும் அறிந்திருக்கிறார் என்பதும் கோசலை மட்டுமில்லை கைகேயியும் மம சுப்ரஜா ராம என்றே சொல்லியிருப்பார் என்பதும் புன்னகையை வரவழைத்தது இராகவன்.

    ReplyDelete
  57. // G.Ragavan said...
    ரவி.....உங்கள் கேள்வியினை இராமகாதை எழுதிய ஊர் என்று தவறாக எண்ணிக் கொண்டேன்...

    //ஆகையால்தால் அரங்கேற்றம் செய்தது திருவரங்கம்னு விடையிலயும் சொல்லியிருக்கேனே//

    ஆகா, ஜிரா

    நான் பகுதியை மட்டும் தான் பாத்தேன்;
    உங்கள் விகுதியைப் பாக்கலையே :-)
    "தேரழுந்தூர்" ன்னு பாத்தவுடன் உடனே ஸ்கோர் செய்த அடியேனை மன்னியுங்கள்!

    இப்ப நீங்க சொன்னப்பறம் பாத்தா தான் தெரியுது! விகுதியில் விடையைக் கொடுத்திருக்கீங்க!
    அப்படின்னா, 7/10 இல் உங்களையும் சேர்க்கத் தான் வேண்டும்!

    ஸ்ரீராமன் தரிசனத்தில் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டை மிகவும் மெச்சுகிறேன்:-) பாருங்க போட்டி முடிஞ்சப்பறம் கூட ராமரே உங்களைத் தேடி ஒடி வர்றார்! :-)

    பரிசைத் தனி மடலில் இதோ அனுப்பி விடுகிறேன்!

    ReplyDelete
  58. //குமரன் (Kumaran) said...
    சொன்ன சொல் மாறாத மாண்பு மிக்கவரிடம் என்ன கேள்வி கேட்டீர்கள் இராகவன்? இது அடுக்குமா? 'நானே தான் ஆயிடுக' என்று அவரும் நீங்கள் செய்த தவறை தன் மேல் ஏற்றிக் கொள்வார்//

    இதோ 'நானே தான் ஆயிடுக' - ஏற்றுக் கொண்டேன் குமரன் :-))
    தேரழுந்தூர் option குழப்புவதற்கே என்றே கொடுக்கப்பட்டது! குழப்பத்துக்கே குழப்பமா? :-))

    "ராகவன்", ஜி.ராகவனிடம் போய்ச் சேர வேண்டும் என்று இருக்கிறது பாத்தீங்களா, குமரன்? :-)

    ஜிரா, பரிசு கிடைத்ததா?

    ReplyDelete
  59. கே.ஆர்.எஸ்.,

    சிரக் கம்பம் என்றால் என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்.

    ரெண்டு மூணு விடைதான் தெரியும். அதான அமைதியாய் குமரன் ஜிரா, ஜெயஸ்ரீ எல்லாம் சொல்லும் வரை அமைதி காத்தேன்.

    அடுத்தது முருகனா? சரி, ஜிராவுக்கு பக்கத்து சீட்டில் என்னை உட்கார அனுமதியுங்கள். நானும் செண்டம்தான். :-D

    ReplyDelete
  60. //இலவசக்கொத்தனார் said...
    கே.ஆர்.எஸ்.,
    சிரக் கம்பம் என்றால் என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்.//

    விக்கியின் செல்வரே, கொத்ஸ், வாங்க! நல்ல கேள்வி கேட்டீங்க!

    சிரக்கம்பம்= சிரம்+கம்பம்=தலை+அசைவு
    சிரக்கம்பம் (Affirmatively nodding the head), கரக்கம்பம் (கை அசைவு) செய்து தன் மகிழ்வை/ஒப்புதலை நரசிம்மர் வெளிப்படுத்தியதாகச் சொல்வதுண்டு! அதனால் அப்படிச் சொன்னேன்; எல்லாரும் சிரக்கம்பம்ன்னு சொல்லிச்சொல்லி இந்தச் சொல் அதிகம் புழங்கி விட்டதோ என்று நினைத்து தான் அப்படியே பயன்படுத்தி விட்டேன்!

    கம்ப வாதம் என்று கிராமத்தில் சொல்வார்கள்; அசைவு எல்லாம் போய் வாத நோயில் படுத்து விட்டான் என்ற பொருள்ல அப்படிச் சொல்லுவாங்க! இப்ப பொருத்திப் பாத்தீங்கன்னா இன்னும் நல்லா பொருள் விளங்கும்ன்னு நினைக்கிறேன்!

    //அடுத்தது முருகனா? சரி, ஜிராவுக்கு பக்கத்து சீட்டில் என்னை உட்கார அனுமதியுங்கள். நானும் செண்டம்தான்//

    அட, இதை நீங்க ஜிராவிடம் தான் கேக்கணும்:-) எனக்கு என்னமோ பாதிப் பேர் ஜிராவிடமும், மீதிப்பேர் விக்கிப்பையனான உங்களிடம் தான் பிட் அடிப்பார்கள் என்பது எண்ணம்; அப்படி அடித்தால் எல்லாரும் செண்டம் தான்...சந்தேகமே இல்லை!!!!

    ReplyDelete
  61. இரவி. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இராமபிரானை எல்லோருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டேன். பார்த்தீர்களா? :-)

    ReplyDelete
  62. 1. இராம காவியம் என்ற நூலை இயற்றிய முருகன் அடியவர் யார்?

    அருணகிரியார் இராமனைப் பல பாடல்களில் குறிப்பிட்டிருந்தாலும் அவை எல்லாம் முருகன் திருப்புகழாகவே இருந்தனவே அன்றி இராம காவியம் என்று இராமனைப் பற்றியதாகவே இருந்ததில்லை.

    ஆற்றுப்படை எழுதிய நக்கீரரோ காவியம் என்ற சொல்லை நூற்பெயராகக் கொண்டு இயற்றியிருக்க முடியாது.

    பாம்பன் சுவாமிகளும் பெரும் முருக பக்தர்.

    வாரியார் சுவாமிகள் மட்டுமே இராமனைப் பற்றியும் சொற்பொழிவாற்றியவர். சிறுவயதில் இராமாயணம் கற்றது இவர் பேசித் தான். அதனால் இவரே இராம காவியத்தையும் இயற்றியிருப்பார் என்றெண்ணினேன்.

    ReplyDelete
  63. 2. இராவணன் சேனையின் கொடி எது?

    இராவணன் கொடி எது என்றால் உடனே வீணைக்கொடி உடைய வேந்தனே நினைவில் வந்து வீணை என்று சொல்லியிருப்பேன். ஆனால் சேனையின் கொடி என்றதால் ஒரு நொடி தயக்கம் இருந்தது. பின்னர் தலைவனின் கொடி தானே சேனையின் கொடியாகவும் இருக்கும் என்று வீணையைச் சொன்னேன்.

    ReplyDelete
  64. 3. ஆஞ்சநேயர், யோக நிலையில் அமர்ந்து, ராமனுக்கு இன்றி, இன்னொரு அவதார மூர்த்திக்குப் பணி புரியும் தலம் எது?

    இது ஒரு நல்ல கேள்வி. இராமனுடனும் அனுமனுடன் தொடர்புடையதால் இராமேச்வரமோ என்று தோன்றும். காசிக்கும் அனுமனுக்கும் கூட தொடர்பு உண்டு. துளசிதாசர் இராமாயணத்தை காசியில் தானே அனுமனின் முன்னிலையில் அரங்கேற்றினார். அவதார மூர்த்தி என்றதால் கண்ணனோ என்று எண்ணி துவாரகை என்றும் சொல்லத் தோன்றும். ஆனால் யோக நிலையில் அவதார மூர்த்தியான நரசிம்மரின் எதிரில் அனுமன் அமர்ந்திருப்பது சோளிங்கர் என்று தற்போது வழங்கும் சோளிங்கபுரமாம் சோளசிங்கபுரமே.

    ReplyDelete
  65. //குமரன் (Kumaran) said:
    இரவி. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இராமபிரானை எல்லோருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டேன். பார்த்தீர்களா? :-)//

    கண்டேன் குமரனின் கைவண்ணம்:-)
    தன் பரிசைத், தரணிக்கு அளித்த குமரனவர் வாழ்க!
    புதிரா புனிதமா, வடுவூர் ராமன் பரிசை, புவிக்களித்த, குமரனவர் வாழ்க!

    ராமனே பரிசானது எவ்வளவு சிறப்பு என்று வெட்டிப்பையல் பாலாஜியும் குறிப்பிட்டார், தனி அரட்டையில்!

    பரிசைப் பாசுரத்துள் சுற்றிக் கொடுத்த குமரனுக்கு நன்றி!

    ReplyDelete
  66. 4. கம்ப ராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது?


    தஞ்சையும் திருப்பதியும் குழப்பவில்லை. தேரழுந்தூர் கம்பன் பிறந்த ஊர் என்ற குறிப்புடன் கொடுக்கப் பட்டதால் கொஞ்சம் குழப்பும். ஆனால் திருவரங்கம் சென்றவர் பலருக்கும் தெரிந்திருக்கும் கம்பரின் இராமாவதாரம் அரங்கேற்றப்பட்டது திருவரங்கத்தில் தாயார் திருமுன்னரும் மேட்டழகிய சிங்கர் திருமுன்னரும் என்று. அங்கே ஒரு நாற்கால் மண்டபமும் இருக்கிறது. சோழன் அரசவையிலும் தில்லையம்பதியிலும் அரங்கேற்ற முடியாமல் இறுதியில் திருவரங்கன் ஆணையின் பேரில் நம்மாழ்வார் மேல் சடகோபர் திருவந்தாதி பாடியபின்னர் கம்பரால் திருவரங்கத்தில் தன் காவியத்தை அரங்கேற்ற முடிந்தது.

    தனது காவியத்தை கம்பர் பாடிக்கொண்டே வர ஒரு இடத்தில் நரசிம்மாவதாரத்தைப் பாடிய போது அங்கிருந்தவர்கள் மூலத்தில் நரசிம்மாவதாரத்தைக் கூறும் இடத்தில் இப்படிக் கூறவில்லையே என்று மறுக்க மேட்டழகிய சிங்கர் தன் அர்ச்சா மௌனத்தைக் கலைத்து கையாலும் சிரத்தாலும் அப்படியே நடந்தது என்று உறுதியளித்ததாக மரபு. இப்போதும் சிரக்கம்பம் கரக்கம்பம் செய்த மேட்டழகிய சிங்கரைத் திருவரங்கத்தில் தரிசிக்கலாம்.

    ReplyDelete
  67. 5. "கெளசல்யா சுப்ரஜா ராமா", என்று ராமனைப் பாட்டு பாடித் துயில் எழுப்பியவர் யார்?

    இராகவன் சொன்னது போல் கோசலையும் கைகேயியும் எழுப்புவதாய் இருந்தால் மம சுப்ரஜா ராமா என்றே எழுப்பியிருப்பர். ஆகையால் வசிட்டரோ விசுவாமித்திரரோ தான் இப்படி எழுப்பியிருக்க வேண்டும். உடனே நினைவிற்கு வருபவர் வசிட்டராய் தான் இருக்கும். அவர் தானே இரகு குல குரு. ஆனால் உண்மையில் இப்படி எழுப்பியவர் விசுவாமித்திரர். இராகவனையும் இராமனுஜனையும் தன் வேள்வி காக்க அழைத்து சென்ற போது ஓரிடத்தில் ஓரிரவு தங்க அதிகாலையில் இருவரையும் எழுப்பும் போது கௌசல்யா சுப்ரஜா ராம என்று எழுப்பியதாக வால்மீகி கூறுகிறார். இந்தத் தொடரைக் கொண்டே வெங்கடேஸ்வர சுப்ரபாதமும் தொடங்குகிறது.

    ReplyDelete
  68. 6. போரில் தோற்று விடுவோம் என்று எண்ணி, இந்திரசித்து கடைசி நேரத்தில் செய்த யாகத்தின் பெயர் என்ன?

    அஸ்வமேதம் சக்ரவர்த்தி என்று தன்னை நிலை நாட்டிக் கொள்ளச் செய்வது. பிராயச்சித்தமும் செய்த தவறுகளுக்குப் பரிகாரமாய் செய்வது. சத்ரு சங்காரம் சரியெனத் தோன்றும். ஆனால் அதுவுமில்லை இராவணன் மகன் செய்தது. நிகும்பலாவனத்தில் சென்று அவன் செய்தது நிகும்பலை யாகம். இரவிசங்கர் சொன்னது போல் நிகும்பலை ப்ரத்யங்கரா தேவி என்ற கருத்தும் உண்டு.

    ReplyDelete
  69. 7. இராமன் முறித்த சிவ துனுசின் பெயர் என்ன?

    இராமன் பரசுராமனிடம் இருந்து பெற்ற வில்லின் பெயர் கோதண்டம். அதனையே அன்று முதல் தாங்கினான் கோதண்டராமன். சாரங்கம் சார்ங்கபாணியாம் பெருமாளின் வில். தனுர்தரம் என்றால் வில்லைத் தாங்கியவன் என்று பொருள். அந்தப் பெயரில் ஒரு வில் இருந்ததா என்று தெரியவில்லை. பினாகபாணியாம் சிவபெருமானின் வில் பினாகம்.

    ReplyDelete
  70. 8. இலங்கைப் பாலத்தைக் கட்டும் பணியை இராமன் யாருக்கு அளித்தான்?

    பாலம் கட்டுவதற்கு வருணனின் உதவியை இராமன் வேண்டி நோன்பிருந்தான். விஸ்வகர்மாவோ தேவர்களின் தச்சன். அதனால் இந்த இருவரோ என்று தோன்றும். அனுமனும் வாலிமகன் அங்கதனும் வானர படையின் முக்கியமானவர்கள். அதனால் இந்த இருவரோ என்றும் தோன்றும். அதே போல் ஜாம்பவானும் வானர படைகளுடன் வந்த கரடிகளின் படைகளுக்கு அதிபதி. அதனால் அந்த இருவரோ என்று தோன்றும். ஆனால் நளனும் நீலனுமே வானர படையின் இஞ்சினியர்கள் என்று படித்த நினைவு இருந்தது.

    ReplyDelete
  71. 9. இலக்குவனைப் பிழைக்க வைத்த சஞ்சீவினி மூலிகையைப் பறித்தவர் யார்?

    அனுமனால் சஞ்சீவி மூலிகை எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதனாலேயே சஞ்சீவி பர்வதத்தையே எடுத்துக் கொண்டு வந்தார். ஜாம்பவானும் விபீஷணனும் முக்கியஸ்தர்கள். ஆனால் அவர்கள் பறித்ததாகத் தோன்றவில்லை. அதனால் சுசேணன் என்று தோன்றியது.

    ReplyDelete
  72. 10. பொதுவாக, இராமனைக் குடும்ப சகிதமாக, நின்ற நிலையில் உள்ள உருவமாகத் தான் ஆலயங்களில் காண முடிகிறது.

    இலக்குவன் அருகில் நிற்க, இராமனும், சீதையும் அமர்ந்த நிலையில் உள்ள ஆலயம் எது?

    பத்ராசல இராமனை மட்டுமே அப்படிப் பார்த்த நினைவு. மற்ற இடங்களில் எல்லாம் மூவரும் நிற்பர். இல்லை இராமபிரான் சயனித்திருப்பார். அதனால் இதற்குப் பதில் சொல்ல வெகு நேரம் ஆகவில்லை.

    ReplyDelete
  73. அடடா, குமரன் என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
    ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக, செம்மையாக ஆய்ந்து அறிந்து விளக்கம் கொடுத்திருக்கீங்க! சூப்பர்! மிக்க நன்றி!

    பாலாஜி - பாத்தீங்களா? படிச்சீங்களா??

    ஒவ்வொரு optionஐயும் அலசி ஆராய்ந்து, எதை எடுப்பது, எதை விடுப்பது.....மெய்யாலுமே கலக்கல் குமரன் ஜி! GRE/GMAT புத்தகம் நீங்க போட்டீங்கனா, தூள் கிளப்பிடலாம்! :-)

    ReplyDelete
  74. குமரன் அசத்திட்டீங்க...

    ஒரு சில கேள்விகளுக்கு நானும் நீங்க சொன்ன மாதிரிதான் கெஸ் செய்தேன். ஒரு சிலது சின்ன வயசுல படிச்சது ஞாபகம் இருந்துச்சு...

    பினாகம் மட்டும் தெரியல :-(

    ReplyDelete
  75. டீச்சரா ஒரு ஓரமா உக்காந்து இங்கே நடக்கறதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

    குமரன் அசத்திப்புட்டார்!!!!

    எல்லாரும் அமோகமா இருங்கப்பா.

    ReplyDelete
  76. //ஆனால் திருவரங்கம் சென்றவர் பலருக்கும் தெரிந்திருக்கும் கம்பரின் இராமாவதாரம் அரங்கேற்றப்பட்டது திருவரங்கத்தில் தாயார் திருமுன்னரும் மேட்டழகிய சிங்கர் திருமுன்னரும் என்று. அங்கே ஒரு நாற்கால் மண்டபமும் இருக்கிறது. சோழன் அரசவையிலும் தில்லையம்பதியிலும் அரங்கேற்ற முடியாமல் இறுதியில் திருவரங்கன் ஆணையின் பேரில் நம்மாழ்வார் மேல் சடகோபர் திருவந்தாதி பாடியபின்னர் கம்பரால் திருவரங்கத்தில் தன் காவியத்தை அரங்கேற்ற முடிந்தது.

    தனது காவியத்தை கம்பர் பாடிக்கொண்டே வர ஒரு இடத்தில் நரசிம்மாவதாரத்தைப் பாடிய போது அங்கிருந்தவர்கள் மூலத்தில் நரசிம்மாவதாரத்தைக் கூறும் இடத்தில் இப்படிக் கூறவில்லையே என்று மறுக்க மேட்டழகிய சிங்கர் தன் அர்ச்சா மௌனத்தைக் கலைத்து கையாலும் சிரத்தாலும் அப்படியே நடந்தது என்று உறுதியளித்ததாக மரபு. இப்போதும் சிரக்கம்பம் கரக்கம்பம் செய்த மேட்டழகிய சிங்கரைத் திருவரங்கத்தில் தரிசிக்கலாம். //

    3:52 PM, November 12, 2006

    குமரன்! நீங்கள் சொல்வது உண்மை! அரங்க மண்ணில் பிறந்து வளர்ந்த எனக்கு இந்தக்கதை நன்கு தெரியும். பள்ளிக்குப் போகும்போதெல்லாம் மண்டபத்தை சுற்றிவர ஒருநாளும் தவறியதில்லை.அந்த நாலுகால் கல் மண்டபமும், அதற்கு அருகேயே இருபது படிக்கட்டுகள் மேலே ஏறினால் மேட்டழகிய சிங்கர் கோயிலும், அவரது ஒருகரம் தூக்கி ஆசிர்வதிக்கும் நிலையில் சிரித்த முகமும்....காணக் கண் கோடி வேண்டும்.! இந்த இழையில் நான் தாமதமாய் பங்கு பெற வேண்டியதாகிவிட்டது காரணம் இழையின் தலைப்பாயிருக்கலாம். இனி வருவேன் அடிக்கடி!
    ஷைலஜா

    ReplyDelete
  77. //துளசி கோபால் said...
    டீச்சரா ஒரு ஓரமா உக்காந்து இங்கே நடக்கறதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தேன்//

    ஆகா, டீச்சர் மறைந்திருந்து பாக்கும் மர்மம் என்ன? :-)

    //குமரன் அசத்திப்புட்டார்!!!!
    எல்லாரும் அமோகமா இருங்கப்பா//

    மிக்க நன்றி டீச்சர்!

    ReplyDelete
  78. சைலஜா. இனிமேல் தலைப்பைக் கண்டு மருண்டு படிக்காமல் சென்று விடாதீர்கள். இரவிசங்கர் கண்ணபிரான் என்ற பெயரைக் கண்டவுடன் உள்ளே வாருங்கள். பதிவுகள் உங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும். :-)

    ReplyDelete
  79. மிக்க நன்றி பாலாஜி & துளசி அக்கா.

    ReplyDelete
  80. கண்டிப்பாக வருவேன் குமரன்! கண்ணபிரான் ரவிசங்கரும் நீங்களும் எழுதும் பதிவுகள் மெய்யாலுமே அருமை எனில் அது மிகை இல்லை
    ஷைலஜா

    ReplyDelete
  81. //ஷைலஜா said...

    அரங்க மண்ணில் பிறந்து வளர்ந்த எனக்கு இந்தக்கதை நன்கு தெரியும். ......
    அதற்கு அருகேயே இருபது படிக்கட்டுகள் மேலே ஏறினால் மேட்டழகிய சிங்கர் கோயிலும்//

    வாங்க ஷைலஜா; நல்வரவு!
    படிக்கட்டுகள் கூட 20 என்று எண்ணி வைத்திருக்கும் நீங்கள், "அவனையும்" எண்ணி எண்ணியே வைத்திருப்பீர்கள்!:-)

    அரங்கத்தான் ஊர் என்று சொல்லி விட்டீர்கள்! இனி என் அரங்கன் நலமா என்று உங்களையே கேட்டுக் கொள்கிறேன்!

    //இந்த இழையில் நான் தாமதமாய் பங்கு பெற வேண்டியதாகிவிட்டது காரணம் இழையின் தலைப்பாயிருக்கலாம்//

    அடடா, சும்மா வேடிக்கைக்கு வச்ச தலைப்புங்க! புனிதப் புதிர் போட்டி அல்லவா, அதான்! :-)
    இப்பல்லாம், எங்கள மாதிரி இள வட்டங்க இப்படி எல்லாம் நயமாச் சொன்னா, நிச்சயம் ஆன்மிகப் பணிக்கு வந்துடறாங்க!
    எவ்ளோ நல்லப் பிள்ளைகள் பாருங்க நாங்க எல்லாரும்:-)

    //இனி வருவேன் அடிக்கடி!
    ஷைலஜா//
    மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி ஷைலஜா!

    ReplyDelete
  82. //வாங்க ஷைலஜா; நல்வரவு!
    படிக்கட்டுகள் கூட 20 என்று எண்ணி வைத்திருக்கும் நீங்கள், "அவனையும்" எண்ணி எண்ணியே வைத்திருப்பீர்கள்!:-
    )இனி என் அரங்கன் நலமா என்று உங்களையே கேட்டுக் கொள்கிறேன்!//

    //
    எண்ணிவைத்தப் படிக்கட்டுகளின் எண்ணிக்கையில் தவறு இருக்கலாம்
    நண்ணி அவன் பெயரையே நாடும்
    புண்ணியம் செய்த மனதுக்கு
    அண்ணலவன் நலம்கூற ஆனந்தமே!


    கண்ணபிரானே...ஆன்மீகப்பணிக்கு இளவட்டங்கள் சேர்ந்து கதம்ப மாலை கட்டுவதுசிறப்பானது! பூவிலேநாராக நானும் பங்குபெறுவேன் இனி!
    ஷைலஜா

    ReplyDelete
  83. // குமரன் (Kumaran) said...
    இரவி என்று சொல்ல நினைத்து பாலாஜி என்று சொல்லிவிட்டேன். மன்னிக்கவும். அதே போல் இராகவனை இராவன என்றாக்கிவிட்டேன். மன்னிக்கவும். //

    நான் மன்னிக்க வேண்டியதில்லை குமரன். எனக்குப் பிடித்த சிவனடியவன் பெயரைத்தானே சொல்லியிருக்கின்றீர்கள். :-)

    // குமரன் (Kumaran) said...
    சொன்ன சொல் மாறாத மாண்பு மிக்கவரிடம் என்ன கேள்வி கேட்டீர்கள் இராகவன்? இது அடுக்குமா? 'நானே தான் ஆயிடுக' என்று அவரும் நீங்கள் செய்த தவறை தன் மேல் ஏற்றிக் கொள்வார். ஆனால் மற்ற எல்லாருமே திருவரங்கம் என்றே சொல்லியிருக்கிறோம் பாருங்கள். நான் படிக்கும் போது தெளிவாக 'அரங்கேற்றிய' என்றே இருந்தது. //

    :-) குமரன் நான் ரவியைக் குற்றமுரைக்கவில்லை. கிண்டல் கேள்விதானே அது. என் கண்ணில் ஏனப்படி விழுந்தது என்று தெரியவில்லை. இறையருள் அப்படிப் போல இருக்கிறது. இராகவனைப் பிடித்தவர்களுக்கு அது சரியாக விழுந்திருக்கிறது. குமரனைப் பிடித்தவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவ்வளவுதான்.

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இதோ 'நானே தான் ஆயிடுக' - ஏற்றுக் கொண்டேன் குமரன் :-))
    தேரழுந்தூர் option குழப்புவதற்கே என்றே கொடுக்கப்பட்டது! குழப்பத்துக்கே குழப்பமா? :-))

    "ராகவன்", ஜி.ராகவனிடம் போய்ச் சேர வேண்டும் என்று இருக்கிறது பாத்தீங்களா, குமரன்? :-)

    ஜிரா, பரிசு கிடைத்ததா? //

    தேரெழுந்தூரைக் குழப்பக் கொடுத்தாலும் நான் கேள்வியையே சரியாகப் பார்க்கவில்லை போலும். எல்லாரும் சரியாயச் செய்திருக்க நான் தவறினேன் என்பதுதானே மெய்.

    பரிசு கிடைத்தது. அன்போடு கொடுத்ததைப் பெற்றுக் கொள்வதே மாண்பு. பெற்றுக் கொண்டேன்.

    அடுத்த பதிவு எங்கே? எங்கே? காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  84. //நான் மன்னிக்க வேண்டியதில்லை குமரன். எனக்குப் பிடித்த சிவனடியவன் பெயரைத்தானே சொல்லியிருக்கின்றீர்கள். :-)//
    பிடித்த சிவனடியாரா?
    அடுத்தவன் மனைவிய தூக்கிட்டு வர அவருக்கு சிவன் குடியிருந்த மனசுல எப்படிங்க இடம் வந்துச்சு? உண்மையான பக்தினா எங்க அனுமன், பிரகலாதனை பாருங்க ஜி.ரா. :-)

    பத்து தலைகளை கொய்து இறைவனை வணங்கி வரம் வாங்கி வருவதைவிட எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறை சேவை செய்வதுதான் உயர்ந்தது என்பது தாங்கள் அறியாததா?

    //இராகவனைப் பிடித்தவர்களுக்கு அது சரியாக விழுந்திருக்கிறது. குமரனைப் பிடித்தவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.//
    குமரனே ராகவன் பக்தன் போலிருக்கே... 10/10 வாங்கிட்டாரே.. அதை வெச்சி சொன்னேன் ;)
    அப்படி பார்க்கும் போது உங்களுக்கும் இராகவனுடைய அருள் கிடைக்கும். அனுமனை வணங்குபவர்களுக்கு இராமன் அருள் கிடைப்பதை போல :-)

    அதனால்தான் நீங்க தப்பா பதில் சொல்லியும் உங்களுக்கு பரிசு கிடைச்சிருக்கு...

    அப்பறம் இராகவன் என்ற பேருக்கு என்ன அர்த்தம் என்று குமரனும், இரவியும், இராகவனும் சொன்னால் இந்த எளியவன் மிகவும் மகிழ்வேன்...

    மூணு பேருமே சொன்னா நல்லா இருக்கும் :-)

    ReplyDelete
  85. // வெட்டிப்பயல் said...
    //நான் மன்னிக்க வேண்டியதில்லை குமரன். எனக்குப் பிடித்த சிவனடியவன் பெயரைத்தானே சொல்லியிருக்கின்றீர்கள். :-)//
    பிடித்த சிவனடியாரா?
    அடுத்தவன் மனைவிய தூக்கிட்டு வர அவருக்கு சிவன் குடியிருந்த மனசுல எப்படிங்க இடம் வந்துச்சு? உண்மையான பக்தினா எங்க அனுமன், பிரகலாதனை பாருங்க ஜி.ரா. :-) //

    பிரகலாதனா! குலம் கெடுத்த கோடாரிக் காம்பல்லவா அது ;-) அனுமந்தானே....ம்ம்ம்....சூரியனைப் பழமென நினைத்த அறியாக் குழந்தை. அவர்களோடா இராவணனை ஒப்பிடுவது. சங்கராபரணம் என்னும் புதிய இராகத்தையே உருவாக்கிய இராக-வன் அவன். :-) ஏதோ...அவன் தம்பி சரியில்லை. பாவம் வீழ்ந்து பட்டான்.

    // பத்து தலைகளை கொய்து இறைவனை வணங்கி வரம் வாங்கி வருவதைவிட எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இறை சேவை செய்வதுதான் உயர்ந்தது என்பது தாங்கள் அறியாததா? //

    தலைகளைக் கொய்தாலும் பாதகமில்லை...ஆண்டவனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தானே. அவன் பெருமை பெரிதல்லவா! தந்தையைக் கொன்றா அவன் பக்தன் பட்டம் பெற வேண்டும்! அப்படிப்பட்ட பட்டம் வேண்டியதில்லைதான்.

    // //இராகவனைப் பிடித்தவர்களுக்கு அது சரியாக விழுந்திருக்கிறது. குமரனைப் பிடித்தவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.//
    குமரனே ராகவன் பக்தன் போலிருக்கே... 10/10 வாங்கிட்டாரே.. அதை வெச்சி சொன்னேன் ;)
    அப்படி பார்க்கும் போது உங்களுக்கும் இராகவனுடைய அருள் கிடைக்கும். அனுமனை வணங்குபவர்களுக்கு இராமன் அருள் கிடைப்பதை போல :-)

    அதனால்தான் நீங்க தப்பா பதில் சொல்லியும் உங்களுக்கு பரிசு கிடைச்சிருக்கு... //

    இராகவனுக்கே இராகவன் அருளா! கந்தரநுபூதி வேண்டுகிறவன் வேறெதிலும் அறிவைச் செலுத்துவரோ! :-) ரவி அன்போடு கொடுத்த பரிசை ஏற்றுக்கொள்வதுதான் முறை என்று நல்ல முறை பார்க்கும் பண்பை எனக்கும் முருகன் வழங்கியிருக்கிறான். அதைப் பணிவு என்று நினைத்தால் துணிவுதான் உமக்கு!

    // அப்பறம் இராகவன் என்ற பேருக்கு என்ன அர்த்தம் என்று குமரனும், இரவியும், இராகவனும் சொன்னால் இந்த எளியவன் மிகவும் மகிழ்வேன்...

    மூணு பேருமே சொன்னா நல்லா இருக்கும் :-) //

    இராகத்தில் வன்மையானவன் இராகவன் என்பது நான் சொல்லும் பொருள். மற்றவரும் பொருளுரைக்கட்டும்.

    ReplyDelete
  86. // G.Ragavan said...
    இராகவனைப் பிடித்தவர்களுக்கு அது சரியாக விழுந்திருக்கிறது. குமரனைப் பிடித்தவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவ்வளவுதான்//

    ஜிரா, இதுக்கு என்ன சொல்லறீங்கன்னு பாக்கலாம் :-))
    இராகவனைப் பிடித்து, குமரனையும் பிடித்து,
    குமரனின் சிரிப்பில் குழந்தைக் கண்ணனைக் காண்போரின் நிலை என்னவோ? :-)))

    ReplyDelete
  87. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    // G.Ragavan said...
    இராகவனைப் பிடித்தவர்களுக்கு அது சரியாக விழுந்திருக்கிறது. குமரனைப் பிடித்தவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவ்வளவுதான்//

    ஜிரா, இதுக்கு என்ன சொல்லறீங்கன்னு பாக்கலாம் :-))
    இராகவனைப் பிடித்து, குமரனையும் பிடித்து,
    குமரனின் சிரிப்பில் குழந்தைக் கண்ணனைக் காண்போரின் நிலை என்னவோ? :-))) //

    நல்ல கேள்வி ரவி. ஆனால் குழந்தைகளை விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டாமே. குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதே சிறப்பு. ;-)

    ReplyDelete
  88. பாலாஜி. இரகு குலத்தவன் இராகவன். அதனால் தசரதன், இளைய பெருமாள், பரத நம்பி, சத்ருக்னன் எல்லாருமே இராகவர்கள் தான். :-)

    ReplyDelete
  89. //G.Ragavan said...
    சங்கராபரணம் என்னும் புதிய இராகத்தையே உருவாக்கிய இராக-வன் அவன். :-) //

    அட, இது என்ன புது "இராக-வன்" ராகம்? நல்லா இருக்கே:-)
    இருங்க புது ராகத்தைப் பாடிப் பாத்துட்டு வரேன்! :-))

    ReplyDelete
  90. //பிரகலாதனா! குலம் கெடுத்த கோடாரிக் காம்பல்லவா அது ;-) //
    குலம் கெடுத்த கோடாரி காம்பா? பிரகலாதனா? ஐயா, அசுரர் குலத்தில் பிறந்த தெய்வக்குழந்தை அல்லவா அவன். பரம்பொருளிடம் சரணடந்தவனை மானிட பந்தங்களால் கட்டுப்படுத்த முடியாது ஜி.ரா.

    தந்தையே ஆனாலும் தவறு செய்வதை சுட்டிக்காட்டியவன்... அவன் மனம் பரம்பொருளை தவிர வேறு எதிலும் நிலைக்கவில்லை.

    //அனுமந்தானே....ம்ம்ம்....சூரியனைப் பழமென நினைத்த அறியாக் குழந்தை.//
    ஆமாம் ஞானத்தில் சூரியனை போன்றவன் (சூரியனிடம் பாடம் பயின்றவன்)... சக்தியில் வாயுவை ஒத்தவன். பக்தியில் ஈடு இணையற்றவன்.

    //
    அவர்களோடா இராவணனை ஒப்பிடுவது. சங்கராபரணம் என்னும் புதிய இராகத்தையே உருவாக்கிய இராக-வன் அவன். :-) ஏதோ...அவன் தம்பி சரியில்லை. பாவம் வீழ்ந்து பட்டான்.//
    ஐயய்யோ ஜி,ரா, கனவிலும் நினைக்க வேண்டாம், அடுத்தவன் மனைவியை சண்டாள நினைத்தவனுடன் பக்தியின் இலக்கணங்களாக திகழ்பவர்களை ஒப்பிடுவேன் என்று?

    தம்பி சரியில்லைதான்... அதனால்தான் எடுத்து சொல்லாமல் உயிரைவிட்டான். கும்பகர்ணனைத்தானே சொல்கிறீர்கள். விபீஷ்ணன் எடுத்து சொல்லியே கேக்காதவன் கும்பகர்ணன் சொல்லி கேட்டிருப்பானா?

    பெண்ணாசை பிடித்தவனுக்கு யார் சொன்னாலும் எதுவும் கேட்காது ஜி.ரா?

    ReplyDelete
  91. //G.Ragavan said...
    இராகத்தில் வன்மையானவன் இராகவன் என்பது நான் சொல்லும் பொருள். மற்றவரும் பொருளுரைக்கட்டும்//

    அப்போ இராகவேந்திரன்?
    இராகத்தில் வன்மையானவர் எல்லாருக்கும் இந்திரன்-ஆ :-))

    அடடா, ஜிரா
    மென்மையே உருவான தாங்களா வன்மையான ராகத்துக்கு அதிபதி? நம்ப முடியவில்லையே! பாலாஜி நீங்க நம்பறீங்களா? :-)

    ReplyDelete
  92. //இராகவனுக்கே இராகவன் அருளா! கந்தரநுபூதி வேண்டுகிறவன் வேறெதிலும் அறிவைச் செலுத்துவரோ! :-) ரவி அன்போடு கொடுத்த பரிசை ஏற்றுக்கொள்வதுதான் முறை என்று நல்ல முறை பார்க்கும் பண்பை எனக்கும் முருகன் வழங்கியிருக்கிறான். அதைப் பணிவு என்று நினைத்தால் துணிவுதான் உமக்கு!//

    ஒருவனுக்கு வளரும் போது துணிவும் வளர்ந்த பின் பணிவும் வேண்டும் என்று எங்கோ கேட்ட ஞாபகம்.

    ஆகவே உமக்கு பணிவும் எமக்கு துணிவும் சரிதான் என்று நினைக்கிறேன் :-)

    ReplyDelete
  93. //நல்ல கேள்வி ரவி. ஆனால் குழந்தைகளை விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டாமே. குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதே சிறப்பு. ;-)//

    வயசுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று எனக்கு சொல்லிய ஜி.ராவா இங்கு இதை சொல்வது?

    குழந்தைகளும் வளர வேண்டாமா ஜி.ரா?

    ReplyDelete
  94. //குமரன் (Kumaran) said...

    பாலாஜி. இரகு குலத்தவன் இராகவன். அதனால் தசரதன், இளைய பெருமாள், பரத நம்பி, சத்ருக்னன் எல்லாருமே இராகவர்கள் தான். :-) //

    குமரன் சொல்வதை இராகவன் ஏற்பாரா?

    ReplyDelete
  95. ஒரு சின்ன கதை.. அதுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை...

    எங்க ப்ராஜக்ட்ல ஒரு பையன் தெலுகு, ஒருத்தவன் ஹிந்தி...

    நாங்க மூணு பேரும் ஒரு தடவை ஒரு ஏரிக்கு போனோம்.

    அத பார்த்துட்டு நான் தண்ணினு சொல்ல, அந்த தெலுகு பையன் நீலுனு சொல்ல, அந்த ஹிந்தி பையன் விழுந்து விழுந்து சிரிச்சான்... பாணிய போய் நாங்க ரெண்டு பேரும் தப்பு தப்பா சொல்றொம்னு அவன் நினைச்சான்...

    கடைசி வரைக்கும் நாங்க யாரும் மாத்திக்கவே இல்லை :-)

    ReplyDelete
  96. //வெட்டிப்பயல் said...
    //குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதே சிறப்பு. ;-)//
    வயசுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று எனக்கு சொல்லிய ஜி.ராவா இங்கு இதை சொல்வது?
    குழந்தைகளும் வளர வேண்டாமா ஜி.ரா?//

    பாலாஜி...இது!
    புடிச்சீங்களே பாயிண்டை!!
    முருகக் குழந்தை, தகப்பனிடமே பிரணவ விளையாட்டு விளையாட வில்லையா?:-))

    ReplyDelete
  97. //அடடா, ஜிரா
    மென்மையே உருவான தாங்களா வன்மையான ராகத்துக்கு அதிபதி? நம்ப முடியவில்லையே! பாலாஜி நீங்க நம்பறீங்களா? :-)//

    KRS,
    என்னதிது? இன்னைக்கு என் ஃபிரெண்ட் மேற்குல தான் சூரியன் உதிக்குதுனு சொன்னான். நான் அதையே நம்பிட்டேன். இதை நம்பமாட்டேனா? :-)

    ReplyDelete
  98. 99ன்னு பார்த்ததும் ச்சும்மா இருக்க முடியலை. இந்தாங்க 100.

    வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  99. பாருங்க... அடிச்சு ஆடி கொண்டு வந்தவுடனே டீச்சர் வந்து 100 போட்டுட்டாங்க...

    சரி... இந்த பதிவுக்கு நம்ம காணிக்கை 101 :-)

    ReplyDelete
  100. //பிரகலாதனா! குலம் கெடுத்த கோடாரிக் காம்பல்லவா அது ;-) அனுமந்தானே....ம்ம்ம்....சூரியனைப் பழமென நினைத்த அறியாக் குழந்தை. அவர்களோடா இராவணனை ஒப்பிடுவது. சங்கராபரணம் என்னும் புதிய இராகத்தையே உருவாக்கிய இராக-வன் அவன். :-) ஏதோ...அவன் தம்பி சரியில்லை. பாவம் வீழ்ந்து பட்டான்.//

    ராகவன்,

    அடுத்தவரை கெடுக்கும் அசுர குலத்தை கெடுத்த கோடரிக்காம்பாக பிரகலாதன் இருந்ததில் தப்பில்லை. "நானே கடவுள்" எனும் ஆணவத்தில் ஹரி பக்தர்களை வதைத்தவன் இரணியன். தப்பு செய்வது கடவுளே ஆனாலும் கண்டிக்க வேண்டியது நம் கடமை. தந்தை என்பதற்காக விட்டு விட முடியுமா?

    இராவணன் நல்லவன் தான். ஆனால் அடுத்தவன் மனைவியை கவர்ந்தபோதே அவனது நல்ல குணங்கள் அனைத்தும் அடிபட்டுப்போகின்றன.

    //தலைகளைக் கொய்தாலும் பாதகமில்லை...ஆண்டவனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தானே. அவன் பெருமை பெரிதல்லவா! தந்தையைக் கொன்றா அவன் பக்தன் பட்டம் பெற வேண்டும்! அப்படிப்பட்ட பட்டம் வேண்டியதில்லைதான்.//

    தப்பு செய்வது தாய், தந்தை என்றாலும் அவர்களை ஆதரிக்க வேண்டியதில்லை ராகவன். நீதியின் பக்கம் தான் நாம் நிற்கவேண்டும். நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்?தவறு செய்தவர்கள் யார் என பாராமல் தண்டனை வழங்கவேண்டும் என்பதால்.

    ReplyDelete
  101. 100க்கு வாழ்த்துக்கள் கண்ணபிரான். இனி விரைவில் 200, 300 தொட்டுவிடணும்

    ReplyDelete
  102. // செல்வன் said...
    100க்கு வாழ்த்துக்கள் கண்ணபிரான். இனி விரைவில் 200, 300 தொட்டுவிடணும்//

    நன்றி, 'உலகின் புதிய கடவுளே'!
    எல்லாம் அவன்(பாலாஜி) செயல் :-))

    ReplyDelete
  103. //துளசி கோபால் said...
    99ன்னு பார்த்ததும் ச்சும்மா இருக்க முடியலை. இந்தாங்க 100.
    வாழ்த்து(க்)கள்.
    //

    டீச்சர் கையால 100 வாங்க எவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும்;
    நன்றி டீச்சர்!!

    ReplyDelete
  104. // வெட்டிப்பயல் said...
    பாருங்க... அடிச்சு ஆடி கொண்டு வந்தவுடனே டீச்சர் வந்து 100 போட்டுட்டாங்க...
    சரி... இந்த பதிவுக்கு நம்ம காணிக்கை 101 :-)//

    எல்லாம் அவன் (பாலாஜி) செயல் :-)

    ReplyDelete
  105. // வெட்டிப்பயல் said...
    அத பார்த்துட்டு நான் தண்ணினு சொல்ல, அந்த தெலுகு பையன் நீலுனு சொல்ல, அந்த ஹிந்தி பையன் பாணிய போய்....//

    அட, இதே கதைய ஜிரா, "தேனை" வைத்துச் சொன்னாரு ஒரு முறை!
    நீங்க தண்ணிய வச்சு சொல்றீங்க! கலக்குங்க!
    ஆக மொத்தம் H2O என்னமோ H2O வாகவே தான் இருக்கு!! :-)))))

    ReplyDelete
  106. மிக்க நன்றி ரவி.

    //ஜெயஸ்ரீ சரியான விடையை சொல்வார் என்ற என் என்ணமும் சரியே //

    ரொம்ப நன்றி பத்மா.
    எனக்கு 7 வது விடையில் கொஞ்சம் doubt தான்.
    சிவனை எதுக்கு பினாகபாணின்னு சொல்றாங்க ? பினாகம்(வில்) தான் உடஞ்சு போச்சே? ))

    ReplyDelete
  107. கடைசியாக, சில தகவல்கள்:
    1. சங்கராபரணம் இராவணனுக்கும் முன்பே இருந்த ராகம்! அவன் இயற்றிய ராகமில்லை அது!

    இறைவனை அதிகாரத்தால் தரிசிக்க முடியாது; அன்பினால் மட்டுமே முடியும் என்பது ஒருவாறு உணர்ந்த ராவணன், "சிவ தாண்டவ தோத்திரம்" என்ற நூலை, அந்த ராகத்தில் பாடி, வீணை மீட்டி, ஈசன் மனதைக் குளிர்வித்தான்.

    தன் விருப்பத்துக்கோ, பக்திக்கோ உடன் வரவில்லை என்றால், ஈசனே ஆயினும் ஒரு கை பார்த்து விடுவது என்ற பெரும் கர்வம் (ஒரு தலை மட்டும் அல்ல; பத்து தலைக்கேறிய கர்வம்) தான் இராவணனின் மற்ற எல்லா குணநலன்களையும் கிரகணம் போல் பீடித்து அழித்து விட்டது!

    செல்வன் சொன்னது போல்:
    சரி என்றாலும், தவறு என்றாலும் அதற்கேற்றவாறு பாடம் கற்றுக் கொள்ளாது, பாட்டைத் தப்பா எழுதிவிட்டோம்; அதை எப்படியும் சரி என்று சாதிப்போம் என்ற கர்வம் தான்; பாவம், ஒரு தவறைச் சரிக்கட்ட இன்னொரு தவறு என்று அடுக்கடுக்காய் அவன் மிடுக்கை ஒடித்து விட்டது.

    "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்", என்ற ஐயன் குறள் பொய்க்குமோ?

    "அடக்கம் உடைமை" இல்லாமையால் உடைந்த கலம் (கப்பல்),
    "பிறனில் விழையாமை" இல்லாமை என்னும், குருவி உட்கார்ந்து, மொத்தமாய் மூ்ழ்கிப் போனது!

    ------------------------------------

    2. பிரகலாதன்!
    ஜிரா சொன்னது போல், குலம் விளங்க வந்த கொழு கொம்பு தான்! ஏன் என்றால்,
    அ. தந்தை சாபம் நீத்து, தந்தையின் ஆழ் மனத்து ஆசையான வைகுந்த வாயில் பதவியை மீண்டும் தந்தைக்கு வாங்கித் தந்தான்!

    ஆ. எந்த அவதாரத்திலும் இல்லாத ஒரு நிகழ்வாக, அனைத்து தெய்வங்களையும், சிவனார் உட்பட, தன் வீட்டுக்கு வரச் செய்து குலத்துக்கே புண்ணியம் சேர்த்தான்.

    இ. தனக்கும் தன் தந்தைக்கும் மட்டும் இல்லாது, தன் எதிர்கால சந்ததிக்கும் பெரும் வழி செய்து வைத்தான். அந்தப் புண்ணியங்கள் தான் பேரன் மகாபலி வரை நீடித்து அவர்களைக் காப்பாற்றியது!

    குழந்தையாய் இதுந்தாலும், குலத்துக்கே பெருமையும் பாதுகாப்பும் சேர்த்து வைத்தான்,குட்டிப் பிரகலாதன்!
    ------------------------------------
    விவாதத்தில் என் கருத்துகள் வரவில்லையே என்று பாலாஜி கேட்டுக் கொண்டார்; இன்று உலக அதிசயமாய் அலுவலகத்தில் பணி மிகுதி! அதான் வீட்டுக்கு வந்த பின் பதிக்கிறேன்!
    என்னே "பாலாஜி"யின் லீலை :-))

    ReplyDelete
  108. //// வெட்டிப்பயல் said...
    //பிரகலாதனா! குலம் கெடுத்த கோடாரிக் காம்பல்லவா அது ;-) //
    குலம் கெடுத்த கோடாரி காம்பா? பிரகலாதனா? ஐயா, அசுரர் குலத்தில் பிறந்த தெய்வக்குழந்தை அல்லவா அவன். பரம்பொருளிடம் சரணடந்தவனை மானிட பந்தங்களால் கட்டுப்படுத்த முடியாது ஜி.ரா.

    தந்தையே ஆனாலும் தவறு செய்வதை சுட்டிக்காட்டியவன்... அவன் மனம் பரம்பொருளை தவிர வேறு எதிலும் நிலைக்கவில்லை. //

    இதென்ன கொடுமை. அசுரர் குலம் தெய்வத்தன்மையற்றது என்கின்றீரா? தெய்வங்களில் உயர்வு தாழ்வு பாரா நீர், மனிதர்களில் குலத்தால் வருவதே குணம் என்கிறீரா? மிகத் தவறு. மிகத் தவறு. உண்மையிலேயே பிரகலாதன் கதை எப்படியிருந்திருக்கும்? தங்கப்பதக்கம் கதை போல. ஆனால் தங்கப் பதக்கத்தில் அப்பன் ஜெயித்தான். இங்கு மகன். வென்றவன் எழுதும் வரலாறில் தோற்றவன் கெட்டவந்தானே.

    //// ஆமாம் ஞானத்தில் சூரியனை போன்றவன் (சூரியனிடம் பாடம் பயின்றவன்)... சக்தியில் வாயுவை ஒத்தவன். பக்தியில் ஈடு இணையற்றவன். //
    அவர்களோடா இராவணனை ஒப்பிடுவது. சங்கராபரணம் என்னும் புதிய இராகத்தையே உருவாக்கிய இராக-வன் அவன். :-) ஏதோ...அவன் தம்பி சரியில்லை. பாவம் வீழ்ந்து பட்டான்.//
    ஐயய்யோ ஜி,ரா, கனவிலும் நினைக்க வேண்டாம், அடுத்தவன் மனைவியை சண்டாள நினைத்தவனுடன் பக்தியின் இலக்கணங்களாக திகழ்பவர்களை ஒப்பிடுவேன் என்று? //

    நாடி வந்த பெண்ணை மூக்கறுப்பது மட்டும் நல்ல செயலா? அடுத்தவன் மனைவியைக் கவர்ந்தான். மறுக்கவில்லை. ஆநிரை கவர்தலுக்கு ஒப்பானது அது. ஆனால் அவள் கடைசி வரை சீதையாகத்தான் இருந்தாள். உடனே சாபக் கதையைக் கொண்டு வராதீர்கள். காமா துரா ந பய ந லஜ்ஜா. காமம் பொங்கி வழிகையில் எல்லா அச்சமும் நாணமும் போகும். ஆனாலும் அவனைத் தடுத்து நின்றது பண்பு.

    இன்னொன்றும் சொல்கிறேன். எல்லாரும் இராமாயணத்தை வைத்துத்தான் பேசுகிறீர்கள். ஆனால் இராவணனைப் பற்றிய பல செய்திகள் மறைந்து விட்டனவோ என்று எனக்கு ஐயமுண்டு. பல சிவன் கோயில்களில் இராவணனுக்குச் சிறப்பான இடமுண்டு. எல்லோராவில் இருக்கும் கைலாசநாதர் கோயில். இது தென்னிந்தயக் கட்டடக்கலையின் படி எழுந்த கோயில். பார்த்ததுமே கண்டுபிடித்து விடலாம். அந்தக் கோயிலின் பழமையை நான் சொல்ல வேண்டியதில்லை. அங்கு இராவணனைச் சிறப்பித்திருக்கிறார்கள். மதுரையில். திருவானைக்காவலில். இன்னும் பலப்பலச் சிவன் கோயில்களில்.

    //// தம்பி சரியில்லைதான்... அதனால்தான் எடுத்து சொல்லாமல் உயிரைவிட்டான். கும்பகர்ணனைத்தானே சொல்கிறீர்கள். விபீஷ்ணன் எடுத்து சொல்லியே கேக்காதவன் கும்பகர்ணன் சொல்லி கேட்டிருப்பானா?

    பெண்ணாசை பிடித்தவனுக்கு யார் சொன்னாலும் எதுவும் கேட்காது ஜி.ரா? //

    கும்பகர்ணனையா சரியில்லை என்பது!!!! அவனும் அண்ணனுக்குப் புத்தி சொன்னவந்தான். ஆனாலும் போரிட்டான். ஏன் தெரியுமா? செஞ்சோற்றுக்கடன். உயிர் போகும் என்று தெரிந்தே போரிட்டானாம். அத்தனை உத்தமனாக வீடணன் இருந்திருந்தால் ஒதுங்கியிருந்திருக்க வேண்டியதுதானே. ஏன் போய் அங்கு சரணடைய வேண்டும். அவனை இராவணன் நாகரீகமாகத்தானே ஒதுக்கி வைத்தான். அண்ணன் எப்பொழுது சாவான் என்று காத்துக் கொண்டிருந்தான் போல.

    ReplyDelete
  109. //// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //G.Ragavan said...
    இராகத்தில் வன்மையானவன் இராகவன் என்பது நான் சொல்லும் பொருள். மற்றவரும் பொருளுரைக்கட்டும்//

    அப்போ இராகவேந்திரன்?
    இராகத்தில் வன்மையானவர் எல்லாருக்கும் இந்திரன்-ஆ :-)) //

    நான் சொல்வது Ragavanக்கு. நீங்கள் சொல்வது Raghavanக்கு. இரண்டு வெவ்வேறுதானே?

    // மென்மையே உருவான தாங்களா வன்மையான ராகத்துக்கு அதிபதி? நம்ப முடியவில்லையே! பாலாஜி நீங்க நம்பறீங்களா? :-) //

    வன்மையான இராகமல்ல. இராகத்தில் வன்மையானவன். வன்மையானவன் என்றால் சிறந்தவன் என்று பொருள்.

    // வயசுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்று எனக்கு சொல்லிய ஜி.ராவா இங்கு இதை சொல்வது?

    குழந்தைகளும் வளர வேண்டாமா ஜி.ரா? //

    எல்லாக் குழந்தையும் குழந்தையல்ல சான்றோர்க்கு
    உய்தார் குழந்தையே குழந்தை

    ReplyDelete
  110. பினாகபாணி என்றால் சடையன் (சடைமுடியைத் தரித்தவன்) என்ற பொருளும் படித்திருக்கிறேன் ஜெயஸ்ரீ.

    ReplyDelete
  111. //இதென்ன கொடுமை. அசுரர் குலம் தெய்வத்தன்மையற்றது என்கின்றீரா? தெய்வங்களில் உயர்வு தாழ்வு பாரா நீர், மனிதர்களில் குலத்தால் வருவதே குணம் என்கிறீரா? மிகத் தவறு. மிகத் தவறு. உண்மையிலேயே பிரகலாதன் கதை எப்படியிருந்திருக்கும்? தங்கப்பதக்கம் கதை போல. ஆனால் தங்கப் பதக்கத்தில் அப்பன் ஜெயித்தான். இங்கு மகன். வென்றவன் எழுதும் வரலாறில் தோற்றவன் கெட்டவந்தானே.//

    ஜி.ரா,
    பிரகலாதன் கதை தெரியலைனா கேளுங்க... புதுசா எதையும் உருவாக்க வேண்டாம்...

    மனிதர்களை, தேவர்களை, ரிஷிகளை அனைவரையும் கொடுமைப்படுத்தி தன்னை வணங்க வைத்தவன் இரணியகசிபு. இதுதான் கதை. யாருமே கொல்லாத மாதிரி புத்திசாலித்தனமா அவன் வாங்கின வரமும் தங்களுக்கு தெரிந்திருக்கும்.

    எல்லாமே கதைதான். நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.

    நீங்க இரண்யகசிபுவை கும்பிட்டாலும் அது தங்கள் விருப்பம்தான்.

    உங்களுக்கு ஹரியை துவேஷம் செய்வதே தொழிலென்றால் அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது.

    ஹரி சிவன் காலில் விழுவதாக நீங்கள் சொல்வதால் அது உண்மையாகிவிடாது. யாரும் யார் காலிலும் விழ வேண்டிய அவசியமில்லை.

    இராமன் ஆரியன் என்று நீங்கள் நினைத்தால் ஆரிய-திராவிட சண்டையில் எனக்கு இறங்க ஞானமில்லை, தேவையுமில்லை.

    தோத்தவன் மனைவியை கொண்டு வந்தானு வால்மீகிக்கு, கம்பருக்கு தெரியாத புது கதையை நீங்கள் சொன்னால், இறுதியில் பாரதத்தில் துரியோதனனும், துச்சாதனனும் செய்தது சரி என்று சொல்வீர்கள்.

    எனக்கு எல்லா கடவுள் ஒன்று என்று சொல்லிக்கோண்டால் மட்டும் போதாது ஜி.ரா.

    இங்க கடைசியா கேக்கறன் சொல்லுங்க...

    1. ஹரியும் சிவனும் ஒன்றா? (சிவன் வேறு ஈசன் வேறுனு ஜல்லி அடிக்க வேண்டாம்)
    2. இராமன் ஹரியும் அவதாரமா?
    3. அப்படியென்றால் இராமனும் ஈசனும் ஒன்றா?

    உங்க கருத்தமட்டும் சொல்லுங்க ஜி.ரா. திருப்புகழுக்கோ, சைவப்பெரியவர்கள் கருத்துக்களுக்கோ எடுத்துக்காட்டு கொடுத்து தப்பிக்க வேண்டாம்.

    KRS,
    I really feel sorry for using ur blog for these kind of debate...

    ReplyDelete
  112. Balaji,

    I am not offended. Just wanted to say my opinion. Please take this discussion to your blog or emails. That would be appropriate. If you just want to know Ragavan's (not Raghavan's :-) ) opinion, please send these questions in an email. That would be the best thing possible. I know the final outcome - you both will agree to disagree - and emails will make it easier on everyone - both of you and others.

    ReplyDelete
  113. //வெட்டிப்பயல் said...
    KRS,
    I really feel sorry for using ur blog for these kind of debate...
    //

    Balaji; You dont have to feel sorry! If we are going to have a meaningful discussion, then we should not stop or hesitate to bring forth our views.
    and....the question whether the discussion is going to be meaningful will be known not at the start, but ONLY at the middle of the discussion :-)
    ஆகவே ஆரம்பிக்கத் தயங்கவே கூடாது! உங்கள் கேள்விகள், நல்ல கேள்விகளே!

    என்ன, நாம் சொற்களை வைத்து ஆய்வு செய்யும் அதே கணம், அதனால் நாம் அடைய விரும்பும் பொருளை நடுவில் மறக்காமல் இருக்க வேண்டும்; உங்களால் என் பதிவுக்குச் சிறப்பு தான்! Nothing to worry! :-)

    ReplyDelete
  114. பாலாஜி
    உங்களால் தான் நாங்கள் ஜிரா அவர்கள் வடமொழியிலும் வித்தகர் என்று அறிந்து கொண்டோம்; பாருங்கள் அவர் மேற்கோளை "காமா துரா ந பய ந லஜ்ஜா"! அடடா...ஜிரா இத்தனை நாள் எங்கே ஒளித்து வைத்து இருந்தீர்கள்? இனி என் ஐயங்களை, ஐயனிடம் கேட்கலாம் அல்லவா? :-))

    ஜிராவும் பாலாஜியும் எழுப்பிய சிந்தனைச் சிதறல்களை வைத்து நூறு பதிவுகள் போடலாம்;
    அதுவும் வீடணப் படலம், இராமனின் சேனையிலேயே படு பயங்கரமாக விவாதிக்கப்பட்டது! இராமனும் இலக்குவனுமே அப்படி விவாதித்தார்கள்; எல்லா அண்ணன் தம்பிகளும் உன்னையும் என்னையும் பரதனைப் போலவுமா என்று கேட்டே விட்டான் இராமன்.
    ஆக...
    இதுக்கு ஒரு நாள் தனிப்பதிவு வேண்டுமானால் இடுகிறேன்! :-)

    ReplyDelete
  115. //இதென்ன கொடுமை. அசுரர் குலம் தெய்வத்தன்மையற்றது என்கின்றீரா? தெய்வங்களில் உயர்வு தாழ்வு பாரா நீர், மனிதர்களில் குலத்தால் வருவதே குணம் என்கிறீரா? மிகத் தவறு. மிகத் தவறு. உண்மையிலேயே பிரகலாதன் கதை எப்படியிருந்திருக்கும்? தங்கப்பதக்கம் கதை போல. ஆனால் தங்கப் பதக்கத்தில் அப்பன் ஜெயித்தான். இங்கு மகன். வென்றவன் எழுதும் வரலாறில் தோற்றவன் கெட்டவந்தானே.//

    ஜி.ரா,

    அசுரர் என்பவர்கள் மனிதர்கள் அல்ல. கந்தவர்கள், அசுரர்கள், கின்னரர்கள், தேவர்கள் என்பவர்களெல்லாம் புராணப்படியும், இதிகாசப்படியும் மனிதர்கள் அல்லர். (இவர்கள் எல்லாரும் திராவிடர்கள் என்ற கீமாயண கதையை தூக்கிக்கொண்டு சிலம்பம் ஆட யாராவது வந்தால் நான் அப்ஸ்காண்ட்:-)

    அசுரர் குலத்திலும் மகாபலி, பிரஹலாதன், வீடணன்,மாரிசன் என நல்லவர்கள் உண்டு. திரேதாயுகத்தின் முடிவில் அனைத்து அசுரர்களும் அடியோடு அழிக்கப்பட்டு பூவுலகில் மனிதர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

    பிரஹலாதன் தவறு செய்தவர் தன் தந்தை என்பதற்காக விட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?ஏற்கனவே சொன்னதுபோல் நீதிக்கு அம்மா, அப்பா, மகன் என்ற உறவெல்லாம் தெரியாது.

    //நாடி வந்த பெண்ணை மூக்கறுப்பது மட்டும் நல்ல செயலா? அடுத்தவன் மனைவியைக் கவர்ந்தான். மறுக்கவில்லை. ஆநிரை கவர்தலுக்கு ஒப்பானது அது. ஆனால் அவள் கடைசி வரை சீதையாகத்தான் இருந்தாள். உடனே சாபக் கதையைக் கொண்டு வராதீர்கள். காமா துரா ந பய ந லஜ்ஜா. காமம் பொங்கி வழிகையில் எல்லா அச்சமும் நாணமும் போகும். ஆனாலும் அவனைத் தடுத்து நின்றது பண்பு//

    அவள் நாடி வந்த பெண் அல்ல.சீதையை கொல்ல முயன்றவள்.அதற்கு மூக்கறுப்பது சரியான தண்டனையா என கேட்டால் அதை நாம் இன்னமும் சற்று விளக்கமாக புரிந்துகொள்ள வேண்டும்.

    சூர்ப்பணகை பல முனிவர்களை இதற்குமுன் கொன்று உண்டவள்.அவள் முன்வினைகளுக்கு தக்க சிட்சையை தான் ஆண்டவன் அளித்தான்.

    ராவணன் குபேரனின் மனைவியை கற்பழித்தவன்.அதனாலேயே சாபமும் பெற்றவனதனால்தான் சீதையை அவன் தொடவில்லை.

    //இன்னொன்றும் சொல்கிறேன். எல்லாரும் இராமாயணத்தை வைத்துத்தான் பேசுகிறீர்கள். ஆனால் இராவணனைப் பற்றிய பல செய்திகள் மறைந்து விட்டனவோ என்று எனக்கு ஐயமுண்டு. பல சிவன் கோயில்களில் இராவணனுக்குச் சிறப்பான இடமுண்டு. எல்லோராவில் இருக்கும் கைலாசநாதர் கோயில். இது தென்னிந்தயக் கட்டடக்கலையின் படி எழுந்த கோயில். பார்த்ததுமே கண்டுபிடித்து விடலாம். அந்தக் கோயிலின் பழமையை நான் சொல்ல வேண்டியதில்லை. அங்கு இராவணனைச் சிறப்பித்திருக்கிறார்கள். மதுரையில். திருவானைக்காவலில். இன்னும் பலப்பலச் சிவன் கோயில்களில்.//

    ராவணன் ஓரளவு சிவபக்தன் தான்.ஆனால் அடியாரல்ல.ஆணவத்தையும், மலத்தையும் அறுத்தவர் தான் உண்மையான சிவபக்தர்.ராவணன் ஆசையின் பிடியில் வீழ்ந்தவன்.ஆஷாடபூதி என்றுவேண்டுமானால் சொல்லலாம்.

    //கும்பகர்ணனையா சரியில்லை என்பது!!!! அவனும் அண்ணனுக்குப் புத்தி சொன்னவந்தான். ஆனாலும் போரிட்டான். ஏன் தெரியுமா? செஞ்சோற்றுக்கடன். உயிர் போகும் என்று தெரிந்தே போரிட்டானாம். அத்தனை உத்தமனாக வீடணன் இருந்திருந்தால் ஒதுங்கியிருந்திருக்க வேண்டியதுதானே. ஏன் போய் அங்கு சரணடைய வேண்டும். அவனை இராவணன் நாகரீகமாகத்தானே ஒதுக்கி வைத்தான். அண்ணன் எப்பொழுது சாவான் என்று காத்துக் கொண்டிருந்தான் போல.//

    செஞ்சோற்றுக்கடன் என்பதற்காக அண்ணனுடன் சேர்ந்து கொலை செய்தால் நீதிமன்றங்களில் விட்டுவிடுவார்களா?:))

    பாசம் கண்ணை மறைக்கும் என்பதால் தான் நீதிதேவதைக்கு கண்ணை கட்டியிருக்கிறது:))))

    ReplyDelete
  116. //குமரன் (Kumaran) said...

    Balaji,

    I am not offended. Just wanted to say my opinion. Please take this discussion to your blog or emails. That would be appropriate. If you just want to know Ragavan's (not Raghavan's :-) ) opinion, please send these questions in an email. That would be the best thing possible. I know the final outcome - you both will agree to disagree - and emails will make it easier on everyone - both of you and others. //

    குமரன்,
    எந்த இடத்தில் அவர் ஹரி பக்தர்களை விட அசுரர்கள் சிறந்தவர்கள் என்று சொல்கிறாரோ அதே இடத்தில் அவர் கருத்தை கேட்க விரும்பியதாலே இங்கே கேட்க வேண்டியதாயிற்று...

    ராமரும் ஈசனை வணங்கி சென்றுதான் போர் புரிகிறார்.

    ஈசனை வணங்குவதால் மட்டுமே ஒருவர் உயந்தவராகிவிட முடியாது என்பதை உணர்த்தவே இந்த கேள்விகள்...

    தவறிருந்தால் மன்னிக்கவும்.

    தவறு செய்பவன் ஹரியை வணங்கினாலும் சரி ஹரனை வணங்கினாலும் சரி... அவன் செயலுக்கு பழியை ஏற்றே ஆக வேண்டும்.

    அனுமனையும், பிரகலாதனையும் அவர் சொன்னதை தாங்கள் ஏற்று கொள்வீரா?

    ReplyDelete
  117. ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும்
    பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்.

    நமக்கெல்லாம் வடமொழியில் பேசினால் தான் 'புரியும்' என்று நினைத்துவிட்டார் போலும் முத்தமிழ் வித்தகர் சைவச் செம்மல் இராகவன் (Ragavan). :-)

    இராகவன். வடமொழி படிக்கிறீங்களா என்ன?

    ReplyDelete
  118. பாலாஜி. நான் ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் முக்கியமில்லை. ஆனால் அவரவர் கருத்து அவரவர்களுக்கு. I plan on agreement; if it is not possible I plan on agree to disagree. Final goal is to agree on certail level. Even if someone calls me புனித பிம்பம் / சர்வ சமாதான வாதி. :-)

    ReplyDelete
  119. //பிரஹலாதன் தவறு செய்தவர் தன் தந்தை என்பதற்காக விட்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?//

    சண்டேச நாயனார் கதை நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
  120. செல்வன் வந்து கருத்தாழம் கொடுத்தார்; நன்றி செல்வன்!!
    முத்தாய்ப்பாக, My 2 cents!

    அ.அசுரர் குலம் தெய்வத் தன்மையற்றது என்று சொல்லவே கூடாது; முடியாது! பிரகலாதனும் அசுரன் தானே! நவகிரகங்களில் அசுரரும் உள்ளனரே! அதே போல் தேவரிலும் கெட்டவர்கள் இருந்தனர்; என்ன இறுதியில் அடங்கித் திருத்திக் கொண்டனர்/கொள்வதாக உறுதி அளித்தனர்.

    குலத்துக்கும், குணத்துக்கும் தொடர்பு இல்லை! இதில் ஜிராவின் கருத்தே என் கருத்தும்! பாலாஜியும் அப்படி நினைக்கவில்லை; வார்த்தைகள் அப்படி வந்து விட்டன; அதனால் இதைத் தள்ளி விடலாம் ஜிரா! நீங்கள் உடன்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும்! :-)

    ReplyDelete
  121. //வென்றவன் எழுதும் வரலாறில் தோற்றவன் கெட்டவந்தானே//

    அப்பிடிப் போடுங்க! வென்றவன் கதையில் வாலி வதை மற்றும் சில பல embarrasmentகளை மறைத்து விட்டுருக்கலாமே! :-))

    //நாடி வந்த பெண்ணை மூக்கறுப்பது மட்டும் நல்ல செயலா?//

    எடுத்தவுடன் அறுத்து விடவில்லை;
    சீதையைக் கொல்லப் பாய்ந்ததால் வந்தது வினை! இலக்குவனால் வேறேதும் அந்நேரத்தில் செய்ய இயலவில்லை! நாம் பேசுகிறோமே தவிர அங்கு இருந்து பார்த்தால் தான் விபரீதம் புரியும்;

    //அடுத்தவன் மனைவியைக் கவர்ந்தான். மறுக்கவில்லை. ஆநிரை கவர்தலுக்கு ஒப்பானது அது//

    ஆநிரை கவரப் போரும் வீரமுமல்லவா தேவை!
    மாய மான், துறவி வேடம் தேவை இல்லையே! :-))

    ReplyDelete
  122. //குலத்துக்கும், குணத்துக்கும் தொடர்பு இல்லை! இதில் ஜிராவின் கருத்தே என் கருத்தும்! பாலாஜியும் அப்படி நினைக்கவில்லை; வார்த்தைகள் அப்படி வந்து விட்டன; அதனால் இதைத் தள்ளி விடலாம் ஜிரா! நீங்கள் உடன்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும்! :-)//

    நான் எந்த குலத்தை பற்றியும் பேசவில்லை. நான் சொன்னது இராவணனையும், இரணியகசிபையும் தான்.

    என்னை பொருத்தவரை நேற்று இருந்த பாலாஜி இன்று இருக்கிறானா என்றால் நான் இல்லை என்றுதான் சொல்வேன். ஒரு மனிதனுக்கே ஒரு குணத்தை குறிப்பிட்டு சொல்ல முடியாத போது ஒரு குலத்துக்கோ இனத்துக்கோ இதுதான் குணம் என்று நான் என்றும் சொல்ல மாட்டேன்.

    அனுமனை ஈசனின் அவதாரம் என்று சொல்வதும் உண்டு...

    அவரை நக்கல் அடிப்பதுதான் சைவ செம்மலுக்கு அழகா?

    ReplyDelete
  123. //குமரன் (Kumaran) said...

    பாலாஜி. நான் ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் முக்கியமில்லை. ஆனால் அவரவர் கருத்து அவரவர்களுக்கு. I plan on agreement; if it is not possible I plan on agree to disagree. Final goal is to agree on certail level. Even if someone calls me புனித பிம்பம் / சர்வ சமாதான வாதி. :-) //

    குமரன்,
    நான் சின்ன பையன் இல்லையா? உங்களோட பக்குவத்தை நீங்க என்னிடம் எதிர்பார்க்க முடியாது ;)

    அதனால கொஞ்ச நாள் இப்படித்தான் விளையாடியாகனும்...

    எனக்கும் சமாதானம்தான் பிடிக்கும். நான் ஒன்னும் வைணவம் பெரிதுனு சொல்லலையே. இரண்டும் ஒன்று தான் என்று சொல்கிறேன்.

    அதை ஒற்று கொள்ள சைவ செம்மலுக்கு மனம் ஒப்பவில்லையோ?

    ReplyDelete
  124. ஜெயஸ்ரீ has left a new comment on your post "புதிரா? புனிதமா?? - பாகம் 2":

    குமரன்
    Raghavan என்பதே சரி என நினைக்கிறேன். வடமொழியில் நாலாவது க தான் ரகு(raghu) என்பதற்கும் ராகவன் என்பதற்கும் .

    ReplyDelete
  125. வெட்டிப்பயல் என்று நினைத்தேன். சின்னப்பயலுமா?

    பாரதி சின்னப் பயல்ன்னு பாரதியார் ஒரு வெண்பா எழுதுன கதையைக் கேள்விப்பட்டிருக்கீங்களா? பாரதி படத்துலயும் வரும்.

    ReplyDelete
  126. ஆமாம் ஜெயஸ்ரீ. Raghavan என்பதே சரி. நீங்கள் மேலே நம்ம சைவச் செம்மலின் பின்னூட்டத்தைப் படிக்கலைன்னு நினைக்கிறேன். அங்கே அவர் Ragavan Vs. Raghavan பற்றி பேசினார். அதைத் தான் சிரிப்பானுடன் குறிப்பிட்டேன். :-)

    ReplyDelete
  127. குமரன்,

    அட ஆமாம் நான் அதைப் பார்க்கவேயில்லை.

    ReplyDelete
  128. //பினாகபாணி என்றால் சடையன் (சடைமுடியைத் தரித்தவன்) என்ற பொருளும் படித்திருக்கிறேன் ஜெயஸ்ரீ. //

    குமரன் ஒரு ஐயம்
    பாணி என்றால் கரம் . பினாக பாணி பினாகத்தைக் கையில் ஏந்தியவர்.(தரித்தவர் என்றும் பொருள் கொள்ள முடியுமா?)
    சாரங்கபாணி - சாரங்கத்தை ஏந்தியவர்
    கோதண்டபாணி - கோதண்டத்தை ஏந்தியவர்

    சடைமுடியைத் தரித்தவர் என்ற பொருளைக் கொள்வது எப்படி?

    ReplyDelete
  129. //குமரன் (Kumaran) said...

    வெட்டிப்பயல் என்று நினைத்தேன். சின்னப்பயலுமா?

    பாரதி சின்னப் பயல்ன்னு பாரதியார் ஒரு வெண்பா எழுதுன கதையைக் கேள்விப்பட்டிருக்கீங்களா? பாரதி படத்துலயும் வரும். //

    பார்த்திருக்கிறேன் ;)

    வயசுல நான் உங்க எல்லாரையும் விட சின்ன பையன் தானே ;) அதைத்தான் சொன்னேன்... (வலைப்பூவிற்கும் நான் சிறியவந்தான்)

    நான் பிரகலாதனையும், அனுமனையும் சொன்ன போது அவர் அவர்களை போலவே இராவணனும் உயர்ந்தவன்தான் என்று சொல்லியிருக்கலாம்.

    அதுதான் பெரியவர்கள் செய்யும் செயல். அதைவிட்டு அடியவர்களை இழிவு படுத்தும் வார்த்தையை பேசுவது பெரியவர்களுக்கு அழகல்ல...

    சமயச்சண்டை வேண்டேன் என்று எழுதியவருக்கு நான் சொல்லித்தர வேண்டுமா?


    இராவணன் நல்லவன் என்றால் என் சக்தியை தவிற வேறு எந்த சக்தியாலும் உனக்கு மரணமில்லை என்று ஈசன் வரம் கொடுத்த சூரபத்மனும் நல்லவனா?

    முதலில் நல்லவன் பிறகு கெட்டவனானான் என்று சொன்னால் இராவணன் கடைசி வரையில் நல்லவனாகவே இருந்தானா?

    ReplyDelete
  130. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  131. //எல்லாரும் இராமாயணத்தை வைத்துத்தான் பேசுகிறீர்கள். ஆனால் இராவணனைப் பற்றிய பல செய்திகள் மறைந்து விட்டனவோ என்று எனக்கு ஐயமுண்டு. பல சிவன் கோயில்களில் இராவணனுக்குச் சிறப்பான இடமுண்டு.....தென்னிந்தயக் கட்டடக்கலையின் படி எழுந்த கோயில்....மதுரையில். திருவானைக்காவலில்.//

    உங்க ஆதங்கம் புரிகிறது ஜிரா!
    எனக்கும் இராவணனைப் பல விடயங்களில் பிடிக்கும்; கம்பருக்கும், வால்மீகிக்கும் அப்படியே! அவனை இழித்துப் பேச அவ்வளவாக மனமும் வராது! கம்பரும் பல அடைமொழிகளை அவனுக்குக் கொடுத்து சிறப்பிப்பார், ராமன் வாயிலாக! லங்கா நகரின் அழகைப் பாத்து சொல்லின் செல்வன் உருகிப் போவான். ஒரு முறைக்கு இரு முறை தூதும் அதனால் தான்! நான் முன்பே சொன்னது போல், "ஈசனோடு ஆயினும் கர்வம்" என்ற அடங்காக் குணமே அவனுக்குப் பாவம் கிரகணமாய் பீடித்து விட்டது!

    சைவ/வைணவக் கோவில்களிலும் சிற்பங்களில் அவனைக் காணலாம்;
    மேலும் நீங்கள் சொன்னது போல், சிவாலயங்களில் அவன் சிவனுக்கு ஒரு வாகனமாய்த் தான் உள்ளான்;
    மற்றபடி அவனுக்குப் பூசைகளோ மற்ற எதுவுமோ இல்லை; அதுவும் "ராவண கர்வ பங்கம்" என்ற வாகனம் தான்! அவன் கர்வத்தை ஓரளவு அடக்கிய ஈசனின் விளையாட்டை நினைவு கூரவே இந்த வாகனம்!
    "ராவண தர்ப்ப விநாசன லிங்கம்" என்று தான் சைவ நூல்களும் மொழிகின்றன. அருணகிரியாரும் "பத்துத் தலை ஒற்றைக் கணை தொடு" என்று தான் பாடுகிறார்!

    ராவணனுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதோ என்று நீங்கள் சங்கடப்பட வேண்டாம்; வருந்தற்க! இன்று அவன் நல்ல நிலையில் ஜய விஜயனாய், பெருமாளுக்கே பாதுகாப்பா இருக்கான்! அவன் நற்பேறை நினைத்து மகிழுங்கள்!

    ஜிரா,
    அனுமனை/அடியவரை நீங்கள் நக்கல் அடிப்பதாக பாலாஜி/செல்வன் பார்வைக்குப் படுகிறது. அதனால் தான் விவாதம் நீண்டு விட்டது போலும்!

    தங்கள் நோக்கம் அதுவன்று என்பது எனக்குத் தெரியும்! மறுபக்க நியாயங்களை எடுத்துரைக்கும் போது, வார்த்தைகள் நமக்கு ஒரளவே கைகொடுக்கின்றன! சொல்லும் பொருள் போய், சொல்லும் சொல் நின்று விடுகிறது!
    தாங்கள் வந்து தமிழால் விளக்கி விட்டால், இனி எல்லாம் சுபமே!
    தங்கள் வருகைக்குக் காத்துள்ளேன்.

    புதிரா? புனிதமா?? வில் புனிதம் நிறையவும், புதிர் குறையவும் இருப்பது தானே அழகு! என்ன சொல்றீங்க பாலாஜி, செல்வன், ஜிரா, குமரன்? :-)!


    எந்த்ரோ மகானுபாவுலு!
    அந்தரிகி வந்தனமுலு!! :-) (இந்தச் சிரிப்பான் எதற்கு என்று உங்களுக்குத் தெரியாதா என்ன?)

    ReplyDelete
  132. இராகவன் சொன்னவற்றிற்காக வருந்த வேண்டாம். இராகவன் ( ) வள்ளியின் நிலையில் இருப்பவர். மாமனிடமும் (சிவபெருமானிடம்) அத்தையிடமும் (அம்மையிடமும்) மரியாதையாக நடந்து கொள்வார். (அமிர்தவல்லி, சுந்தரவல்லியை நினைத்துக் கொள்ளுங்கள்) தாய்வீட்டு மனிதர்களைப் பற்றிப் பேசும் போது கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு பேசுகிறார். அவ்வளவு தான். கோழி மிதித்து குஞ்சுக்கு அடிபடுவதில்லை. இங்கே குஞ்சு கொஞ்சம் கோழியை மிதித்துப் பார்க்கிறது. அவ்வளவு தான். :)

    ReplyDelete
  133. நண்பர்களே, முதலில் விவாதம் விளையாட்டாய்ச் செல்கிறது என்று நினைத்தே பிரகலாதனையும் அனுமனையும் பற்றிக் கிண்டல் தொனியில் (கிண்டலாக அல்ல) சொன்னேன். எல்லாரும் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் குமரனும் அப்படி எடுத்துக்கொள்ளவில்லை என்பதிலிருந்து தவறு என் மீதே என்று புரிகிறது. கருத்து வேறுபாடுகள் எத்தனை இருந்தாலும் நாகரீகமாகப் பேச வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் விளையாட்டுக்குக் கூட அப்படியில்லாமல் இருக்கக் கூடாது என்று இப்பொழுதுதான் புரிகிறது. அதுவும் கடவுள் நம்பிக்கை தொடர்பாக. யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிக்க.

    சூரனைப் பற்றி வெட்டி கேட்ட கேள்விக்கு மட்டும் விடை சொல்லி நான் முடித்துக் கொள்கிறேன்.

    வெட்டி, சூரன் நல்லவனே. இல்லையென்றால் வேண்டித் தவமிருந்த அவனுக்கு அத்தனை வரங்களும் வசதிகளும் ஈசன் வழங்கியிருப்பாரா? அவனிடம் இருந்த ஒரே குற்றம் நன்றி மறந்தது. தேவர்களைச் சிறையிட்டதைக் கூட தவறு என்று கந்தபுராணம் சொல்லவில்லை. ஏனென்றால் அது தேவர்களுக்கான தண்டனை என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் விடுவிக்கச் சொல்லிக் கட்டளை வந்த பின்னும் விடுவிக்காத ஆணவ மலந்தான் கெடுதி. அதையும் போக்குகிறார் முருகன். அதனால்தான் முருகனைக் கும்பிடுகிற அத்தனை பேரும் சூரனைச் சேவலும் மயிலுமாய் வணங்குகிறார்கள். மூவிரு முகங்கள் போற்றி என்று தொடங்குகின்ற கச்சியப்பரும் சேவலும் மயிலும் போற்றி என்றுதான் தொடர்கிறார்.

    ReplyDelete
  134. அடடா. நானும் புரிந்து கொள்ளவில்லை என்றா நினைக்கிறீர்கள் இராகவன்? நான் புரிந்து கொண்டேன். இந்த கிண்டல் தொனி விவாதத்தையும் மின்னஞ்சல்களில் செய்யுங்கள் என்றே சொன்னேன். இந்த கிண்டல் தொனி விவாதம் திசைதிரும்பும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால். அடியேன் உங்களைப் பற்றி எழுதியுள்ளவற்றை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். உங்கள் கிண்டல் தொனியை நன்கு புரிந்து கொண்டு அதே தொனியில் தான் நானும் எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  135. அன்புடையீர்,
    தமிழ்மணத்தில் எல்லாத் தலைப்புகளிலும் அடிதடி.
    ஆன்மிகத்திலுமா?
    வேண்டாம் ஐயா! வேண்டாம்!!
    கதையின் மூலம் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. கதையில் வரும் பாத்திரங்களின் குணநலன்கள் வெவ்வேறு இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதன் தத்துவம் என்ன? என அறிதல் அழகு.
    அரியும் அரனும் ஒன்றே!
    அரி முகுளம்.
    அரன் சீவனாகிய உயிர்.
    ஒன்றிருந்து ஒன்றில்லாவிடில் உடலுக்குப் பயன் இல்லை.
    அதனால்தான் அரியும் அரனும் ஒன்று; அறியாதவன் மண்ணு(க்கு); என்றனர் ஆன்றோர்.
    வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து அமைதியான முறையில் உரையாடலாமே!

    ReplyDelete
  136. //ஞானவெட்டியான் said...
    அன்புடையீர்,
    தமிழ்மணத்தில் எல்லாத் தலைப்புகளிலும் அடிதடி.
    ஆன்மிகத்திலுமா?
    வேண்டாம் ஐயா! வேண்டாம்!!//

    கொஞ்சம் வெப்பம் அதிகமாகி விட்டது போலும் ஞானம் ஐயா!
    நீங்கள் வந்து அழகாச் சொல்லி குளிர்வித்தீர்கள்! மிக்க நன்றி!

    //கதையின் மூலம் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. கதையில் வரும் பாத்திரங்களின் குணநலன்கள் வெவ்வேறு இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதன் தத்துவம் என்ன? என அறிதல் அழகு//

    மிகவும் அழகாச் சொன்னீங்க ஞானம் ஐயா! தத்துவம் அறிகையில் தர்க்கம் போய் வீடும் அல்லவா?

    ReplyDelete
  137. // G.Ragavan said...
    நண்பர்களே, முதலில் விவாதம் விளையாட்டாய்ச் செல்கிறது என்று நினைத்தே பிரகலாதனையும் அனுமனையும் பற்றிக் கிண்டல் தொனியில் (கிண்டலாக அல்ல) சொன்னேன். எல்லாரும் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் குமரனும் அப்படி எடுத்துக்கொள்ளவில்லை என்பதிலிருந்து தவறு என் மீதே என்று புரிகிறது......அதுவும் கடவுள் நம்பிக்கை தொடர்பாக. யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிக்க//

    ஜிரா
    நான் இது வரை உங்களை, ஏன் இங்குள்ள யாரையுமே நேரில் சந்தித்தது இல்லை! ஆனால் உங்கள் எழுத்து மூலமாக உங்களுடன் பேசுவது போலவே தானே உணர்வு!
    அதனால் தான் தங்கள் மனம் எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

    மாலவனை முதல் அடியிலும், வேலவனை ஈற்றடியிலும் வைத்துப் பாடும் அருணகிரியாரின் அநுபூதி உரைப்பவர்க்கு அப்படித் தோன்றவும் தான் முடியுமோ!

    செல்லமான சீண்டல்களைச் செவ்வனே முடித்து வைத்த உங்களுக்கு என் நன்றிகள்!

    அழகுத் தமிழில் கருத்துகளை எடுத்து வைத்த பாலாஜி, செல்வன், குமரன் மற்றும் கருத்துப் பரிமாறிய அனைவருக்கும் என் நன்றி!

    ReplyDelete
  138. ஞானவெட்டியான் ஐயா...விளையாட்டு வினையானது. இனிமேல் நா காக்கிறேன். சமயத்தில் இடித்துரைத்தமைக்கு நன்றி.

    ரவி, குமரன், உங்கள் புரிதலுக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

    ரவி....இருக்குறதெல்லாம் இருக்கட்டும். அடுத்த புதிரா புனிதமா எங்க?

    ReplyDelete
  139. //ரவி....இருக்குறதெல்லாம் இருக்கட்டும். அடுத்த புதிரா புனிதமா எங்க?//

    இடைவெளி வேண்டும். முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையில் மட்டுமில்லை. புதிரா புனிதமா பதிவுகளில் கூட என்று நினைப்பவர் இரவி. இல்லையா இரவி? அதனால் நீங்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் இராகவன். :-)

    ReplyDelete
  140. //ரவி....இருக்குறதெல்லாம் இருக்கட்டும். அடுத்த புதிரா புனிதமா எங்க?//

    ஹிஹி..."தாலாட்டு" பாடிக் கொஞ்ச நேரம் தூங்கலாம்னா ஜிரா விட மாட்டேன் என்கிறாரே:-))
    ஜிரா, நான் "பிள்ளைத்தமிழ்" பக்கம் போய்விட்டேன்!
    (தனி வலைப்பூ கண்டீர்களா? இன்னும் தமிழ்மணத்தில் approval ஆகவில்லை! தேன் கூட்டில் தெரிகிறது)
    http://pillaitamil.blogspot.com
    பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!!

    சுப்ரபாதம் வலைப்பூ நவ.17 (கார்த்திகை 1) அன்று!
    http://verygoodmorning.blogspot.com

    அழகன் முருகனைக் குறித்த புனிதமான புதிர் போட்டி இன்னும் 2-3 வாரங்களில் தருகிறேன்! மாதம் ஒரு புதிர் என்று வைத்துக் கொள்ளலாமா?

    ReplyDelete
  141. //குமரன் (Kumaran) said...
    இடைவெளி வேண்டும். முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையில் மட்டுமில்லை. புதிரா புனிதமா பதிவுகளில் கூட//

    ஹா ஹா ஹா;
    குமரன், தொலைக்காட்சியில் வந்த ஒரிஜினல் "புதிரா புனிதமா" தலைப்புக்கு நீங்க அழகா justice செய்து விட்டீர்கள் :-))

    ReplyDelete
  142. //பிரகலாதனையும் அனுமனையும் பற்றிக் கிண்டல் தொனியில் (கிண்டலாக அல்ல) சொன்னேன்.//

    ஜி.ரா,
    தவறாக புரிந்து கொண்டது நான் தான்.
    அதற்கு முக்கிய காரணம் பல இடங்களில் உங்களிடம் நான் ஹரியும் சிவனும் ஒன்று என்பது தங்கள் கருத்தா என்று கேட்டதற்கு நீங்கள் விடையளிக்கவில்லை. (இப்போழுது கூட).

    //பிரகலாதனா! குலம் கெடுத்த கோடாரிக் காம்பல்லவா அது//
    இந்த வார்த்தைகள்தான் என்னை தவறாக அர்த்தம் கொள்ள செய்தன. (நீங்கள் போட்ட ஸ்மைலியின் அர்த்ததை தவறாக புரிந்து கொண்டேன்).

    குமரன் பல காலமாக உங்களுடன் பழகி வருகிறார். அவருக்கு நீங்கள் சொல்லும் விளக்கங்களும் மற்றவருக்கு சொல்லும் விளக்கங்களும் ஒன்று போல் இருத்தல் தகுமா?

    அடியவனின் வேண்டுகோள், கிருஷ்ணனையோ இராமனையோ தவறாக பேசினாலும் அடியவர்களான விதுணனையோ, அனுமனையோ விளையாட்டிற்கும் தவறாக பேச வேண்டாம்...

    தங்கள் மனம் வருந்தும்படி செய்திருந்தால் மன்னிக்கவும்.

    நாராயணா...
    எல்லாம் உன் செயல்

    ReplyDelete
  143. வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
    வல்லீர்கள் நீங்களே 'நானே தான் ஆயிடுக'

    என்று எல்லோரும் ஒரு சுற்று இதன் படி வந்தாயிற்று. :-)

    ReplyDelete
  144. ஐயா,

    தங்கள் பதிவை பின்னொரு பதிவில் தங்கள் பின்னூட்டம் கண்டு இன்று இங்கு வந்தேன். இதற்கு முன் தங்கள் பதிவை ஏதோ பெயரை பார்த்து தவிர்த்திருக்கிறேன், போலும்...

    இன்று படித்து மிகவும் மகிழ்ந்தேன். பதிவும் பதிவு பெற்ற பின்னூட்டங்களும் அருமை. ஒவ்வொன்றாக கவனமாக படித்தேன். குமரனின் விளக்கங்கள் அரிய பொக்கிழங்கள். தங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

    ReplyDelete
  145. //ஜயராமன் said:
    இதற்கு முன் தங்கள் பதிவை ஏதோ பெயரை பார்த்து தவிர்த்திருக்கிறேன், போலும்...//

    அடடா...நீங்கள் இரண்டாமவர், இப்படிச் சொல்வது!
    இனி தலைப்புகளில் கொஞ்சம் விளையாட்டைக் குறைத்துக் கொள்கிறேன் ஐயா! சீரியசா தலைப்பு வேண்டாம் என்று நினைத்துத் தான்....இப்படி விளையாட்டா வைத்தேன்//

    //இன்று படித்து மிகவும் மகிழ்ந்தேன். பதிவும் பதிவு பெற்ற பின்னூட்டங்களும் அருமை. தங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.//

    தங்கள் வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ஜயராமன் சார்!

    ReplyDelete
  146. பதிவுகளை விட விவாதங்களில் பல செய்திகளை அறிய முடிகிறது.. உங்கள் மொழியில் நாவலோ ..! நாவல்! (அங்கிட்டு கீச்ச எப்ப வருவீக)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP