Friday, April 20, 2007

புதுஜெர்சியில் பதிவர்கள் ஆடப்போகும் கிரிக்கெட்!

இன்று அட்சய திருதியையாமே? இந்த நாளில் எது செய்தாலும், இரு மடங்காகத் திரும்பி வருமாமே! ஒரு பவுன் தங்கம் வாங்கினா, இரண்டு பவுன் வருமா?

* வரும் டா, வரும்! இப்ப எனக்கு நல்லா வருது!
அட, இதெல்லாம் சுத்த டுபாக்கூர்-பா; நகைக்கடை முதலாளிகள் எல்லாம் ஒண்ணா உக்காந்து யோசிச்சு, அடிச்சு ஆடும் கும்மிப்பா, கும்மி!

அட, அப்ப எது தான்பா சரி?
அட்சய திருதியை அன்று என்ன தான் செய்யணும்? நீயே சொல்லேன்!

* ஆங், இது கேட்டியே, நியாயமான கேள்வி. இதைப் பதிவர்கள் கிட்ட போய்க் கேள்! அவங்க தான் கரெக்டா சொல்லுவாங்க!

அதாச்சும், இந்த விசேடமான நாளில்,
நாம எவ்வளக்களவு மத்த பதிவுகளில் பின்னூட்டம் போடுறமோ,
அதை விட இரண்டு மடங்காய்,
நமக்குப் பின்னூட்டங்கள் கொட்டிக்கிட்டு வரும்!

புரியுதா? இது தான் அட்சய திருதியையின் மகிமை! :-)
அதுனால, சும்மா காலங்காத்தால நகைக்கடை முன்னாடி போய் நிக்காம,
ஒழுங்கா எல்லாப் பதிவுக்கும் போயிட்டு வா! இன்னா...புரிஞ்சுதா?

* ஆ..மெய்யாலும் தான் சொல்லுறியாப்பா?
ஆமாம்பா, கருட புராணத்தில் சொல்லியிருக்கு; தெரியுமா?
வேணும்னா, அம்பி கிட்ட கேட்டுக்குறியா? பதிவர் அம்பி இல்லப்பா....நம்ம அந்நியன் அம்பி!

* அட, அப்படியே, இதெல்லாம் செய்தாக் கூட பெருசா என்ன பிரயோஜனம், பிரதர்?
அதான் நாப்பது பின்னூட்டம் மேல அலவுட் இல்லை என்று ஆண்டவன் விதி எழுதிட்டானே! :-) பாவம்...எத்தனை பதிவர்கள் இது பற்றி நொந்து போய், இன்னும் பதிவு போட்டுக்கினு இருக்காங்க தெரியுமா?
அட்சய திருதியை அன்று நான் இருவது பின்னூட்டம் தான் போடுவேன்;
அது டபுள் ஆகி நாப்பது வந்தாப் போதும்! :-)


என்னடா இது இம்மாம் பில்டப்பு என்று பாக்கறீங்களா?
அதான், நாள் நெருங்குதுல!

கொற்றவன் கொத்தனார் தலைமையில், புது ஜெர்சியில்,
பதிவர்கள் எல்லாம் ஒன்று கூடி, மட்டையடி அடிக்கப் போறாங்களாமே!
அதுக்குத் தான் இந்த வெள்ளோட்டப் பதிவு!
(நன்றி: mid-day.com ponnappa cartons)


ஏற்கனவே, எல்லாரும்,
தமிழ்மணத்தில் நீங்க எதிர்பார்ப்பது என்ன?
என்கிற பதிவு பார்த்திருப்பீங்க! பலப்பலக் கருத்துக்களை விவாதம் செஞ்சிருப்பீங்க! அது எல்லாத்தையும் எங்கே வந்து சொல்லி அசத்தணும்-னு தெரிய வாணாமா?

அதாகப்பட்டது,
2007, ஏப்ரல் மாதம், சனிக்கிழமை, 28 ஆம் நாள்,
("சர்வே"-ஜித் வருடம், சித்திரை மாசம், 15ஆம் தேதி)
ஆஸ்திரேலியாவும், இலங்கையும்
சம்பந்தி மரியாதை செய்து கொள்ளப் போகும் நன்னாளில்,


பிற்பகல் 2:00 மணியில் இருந்து, எல்லார் தெம்பும் தீரும் வரை
ஆட்டம் நடைபெறப் போகுதுங்க!

ஃபோர், சிக்ஸர் என்று வீரர்கள் சக்கையடி அடிக்கப் போறாங்க என்று காத்துவாக்கில் ஒரு செய்தி பரவுகிறது!
பதிவர்கள் மட்டுமல்லாது, பதிவைப் படிப்பவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள் - இவர்களும் வரப் போறாங்க!

தமிழ் கூறும் நல்லுலகம் என்பதால்,
மாநாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக தெலுங்கில் நடைபெறாது என்று
வெட்டிப்பயல் அவர்களின் பரிபூரண சம்மதத்துடன் உத்தரவாதம் இச்சானு! :-)

மைதானம்:
510 Thornall Street
Edison NJ 08837
மைதானத்தின் படத்துக்கும், செவிக்கு உணவுக்கும்(:-0)
இங்கு க்ளிக்கவும்!


தொடர்புக்கு:
elavasam@gmail.com
shravan.ravi@gmail.com
மின்னஞ்சல் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். செல்பேசி எண்ணும் பகிர்ந்து கொள்ளலாம்.


//அதுசரி
ஆடியோ ரிகார்டிங் (open/secret),
போட்டா கிராப்பி (flash/secret),
விடியோகிராப்பி (handycam/spycam) எல்லாம் உண்டா... இல்லை,
வெறும் போண்டா டீயுடன் நடக்கும் கற்கால மீட்டிங்கா?//

முதல் மூன்று கிடையாது என்று "வழக்கம் போல" சொல்லிட வேண்டியது!
கடைசிக் கேள்விக்கு, வடை....
சாரி விடை,
பட்டாணி சுண்டலுடன் பொற்கால மீட்டிங்!

யார் எல்லாம் வருகிறார்கள்? (துளசி டீச்சர் - ஹெல்ப் ப்ளீஸ், அட்டண்டன்ஸ்)
பத்மா அர்விந்த்
தமிழ் சசி
பாஸ்டன் பாலா
சங்கர் குமார் (VSK)
ஷைலஜா
Vishytheking
வெட்டிப்பயல்
தென்றல்-இவர் வசந்தமும் கூட!
கோபிநாத்
CSRK
எடிசன் ரங்கா
இலவசக் கொத்தனார்
கண்ணபிரான் ரவி
.
.
.
என்று பட்டியல் வளர்கிறது!

Floralia 2007 - பூக்கள் உற்சவம் என்பதாலும்,
தலைவர் இலவசம் என்பதாலும்
எல்லாருக்கும் "இலவசமாகப்" "பூ" சுத்தப்படும்! :-)


வருக! வருக!!
வருக! வருக!!

34 comments:

  1. அச்சச்சோ என் வரவை உறுதியே செய்துட்டீங்களா அப்டீன்னா டபாய்க்கவே முடியாதா?:) சரிசரி மைசூர்பாகு செஞ்சிட்டு வரேன்!
    ஷைலஜா

    ReplyDelete
  2. //அதுனால, சும்மா காலங்காத்தால நகைக்கடை முன்னாடி போய் நிக்காம,
    ஒழுங்கா எல்லாப் பதிவுக்கும் போயிட்டு வா! இன்னா...புரிஞ்சுதா? //

    முதல்ல உங்க பதிவுக்கு வந்தாச்சு ....

    சந்திப்பு மிக இனிமையாக நிகழ நல்வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  3. //ஷைலஜா said...
    அப்டீன்னா டபாய்க்கவே முடியாதா?:)//

    முடியவே முடியாது! :-))

    //சரிசரி மைசூர்பாகு செஞ்சிட்டு வரேன்!//

    வெட்டி.....மைசூர்பாக்கு ஒச்சிந்தே! :-))

    வாங்க ஷைலஜா! நல்வரவு!!

    ReplyDelete
  4. ஹ்ம்ம்!!
    என் பேரைப் போடாததாலே
    என் ஃப்ளைட் டிக்கெட்
    கான்சல் செய்துட்டேன்.

    நல்ல 6,7 ஐட்டம் செய்து கொண்டு வந்திருப்பேன்.
    என்ன பண்றது.:-)

    ReplyDelete
  5. என்ன இது வம்பாப் போச்சு. நீங்க சொன்ன வேலை எல்லாம் செஞ்சுக்கிட்டுதானே இருக்கேன், அப்புறம் ஏன் நம்ம தலையில் மை வைக்கறீங்க.

    நீர் போட்டு இருக்கும் லிஸ்டைப் பாருங்கப்பா. எம்மாம் பெரிய ஜாம்பவானெல்லாம் இருக்காங்க. நாம எல்லாம் அடியார்க்கும் அடியார்.

    ReplyDelete
  6. 5-6 ஐட்டமா? ரவி, பேசாம வல்லி சிம்ஹன் தலைமையில் அப்படின்னு போஸ்டரை மாத்தி அடிச்சு ஒட்டுங்கப்பா.

    ReplyDelete
  7. முதல்ல உங்க பதிவுக்கு வந்தாச்சு ....

    சந்திப்பு மிக இனிமையாக நிகழ நல்வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  8. தொலைதூரத்து வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஐந்து,
    ஆறு சாப்பாட்டு ஐட்டம்

    பதிர்பேணி,
    சிரொட்டி,
    பாதுஷா,

    கதம்ப சாதம்,
    நெய்ப்புலாவ்,

    அழகர் கோவில் தோசை.

    பானரில் என் பெயர்போட்டு
    மணம்,நிறம்,சுவை கூடும் பதிவுப் பந்தி.....சமையல் பை ...
    அப்படின்னும் போடணும்.

    ReplyDelete
  10. //ஜெயஸ்ரீ said...
    முதல்ல உங்க பதிவுக்கு வந்தாச்சு ....
    சந்திப்பு மிக இனிமையாக நிகழ நல்வாழ்த்துக்கள் !! //

    நன்றி ஜெயஸ்ரீ.
    You will be missed again.
    அடுத்த முறை நிச்சயம் வாங்க!

    ReplyDelete
  11. //வல்லிசிம்ஹன் said...
    ஹ்ம்ம்!!
    என் பேரைப் போடாததாலே
    என் ஃப்ளைட் டிக்கெட்
    கான்சல் செய்துட்டேன்.
    //நல்ல 6,7 ஐட்டம் செய்து கொண்டு வந்திருப்பேன்.
    என்ன பண்றது.:-) //

    ஆகா....ஓவர் டு சிகாகோ!
    6, 7 ஐட்டமா? வல்லியம்மா....நீங்க டிக்கட் கான்சல் செய்தாலும் பரவாஅயில்லை! நாங்க புது டிக்கட் எடுத்து அங்கு வந்திடறோம்! சாப்பட்டுக்கு மட்டும்! :-)

    ReplyDelete
  12. //இலவசக்கொத்தனார் said...
    அப்புறம் ஏன் நம்ம தலையில் மை வைக்கறீங்க//

    தலையில மையா?
    என்ன தலைவா, ஒங்க சீக்ரெட்டை இப்படி போட்டூ ஒடைக்கறீங்க!
    இளந் தலைவர். இளைய தளபதி, கொத்தனார் வாழ்க வாழ்க!!

    //நீர் போட்டு இருக்கும் லிஸ்டைப் பாருங்கப்பா. எம்மாம் பெரிய ஜாம்பவானெல்லாம் இருக்காங்க. நாம எல்லாம் அடியார்க்கும் அடியார்//

    ஜாம்பவான்-னு நீங்க யாரைக் கிண்டல் ஓட்டறீங்கன்னு சொன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்! :-)

    ReplyDelete
  13. //இலவசக்கொத்தனார் said...
    5-6 ஐட்டமா? ரவி, பேசாம வல்லி சிம்ஹன் தலைமையில் அப்படின்னு போஸ்டரை மாத்தி அடிச்சு ஒட்டுங்கப்பா//

    பதிவில் மட்டும் தான் ஒங்க பேரு தலைவா.
    போஸ்டர் எல்லாம் முன்னாடியே அடிச்சாச்சு. அதில் ஒன்றில் கூட ஒங்க பேர் கிடையாது! :-)
    நீங்க தான் அடியார் ஆச்சே!
    அதான் போஸ்டரில் ஒங்க பேர் "அடியார்"! (அடிக்க மாட்டார்கள்)

    ReplyDelete
  14. he he he, I am also cancelled my ticket to the flight. mmm, I prepared so many things for the meeting and will eat all by my self. Thank You.

    ReplyDelete
  15. சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் கண்ணபிரான்.சந்திப்பு முடிந்தபின் விரிவான பதிவை இடுங்கள்.படிக்க ஆவலுடன் இருக்கிறேன்

    ReplyDelete
  16. இந்த 'மைசூர் பா(க்)கு விஷயம் தெரியாமப்போச்சே(-:

    சரி.இங்கே ஒரு நாலைஞ்சு மை.பா. பார்ஸேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.

    உங்க கிரிக்கெட்டுலேயாவது ஒழுங்கா ஆடி 'ரன்'கள் குவியட்டும்.

    வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  17. //சிவமுருகன் said...
    முதல்ல உங்க பதிவுக்கு வந்தாச்சு ....
    சந்திப்பு மிக இனிமையாக நிகழ நல்வாழ்த்துக்கள் !!//

    நன்றி சிவா...
    அடுத்து நம்ம சந்திப்பு தான்! :-)

    ReplyDelete
  18. //தருமி said...
    தொலைதூரத்து வாழ்த்துக்கள்//

    நன்றி தருமி சார்.

    ReplyDelete
  19. //வல்லிசிம்ஹன் said...
    பதிர்பேணி,
    சிரொட்டி,
    பாதுஷா//

    ஆகா

    //கதம்ப சாதம்,
    நெய்ப்புலாவ//

    ஓகோ

    //பானரில் என் பெயர்போட்டு
    மணம்,நிறம்,சுவை கூடும் பதிவுப் பந்தி.....சமையல் பை ...
    அப்படின்னும் போடணும்.//

    அப்படியே போட்டுறோம் வல்லியம்மா.
    தங்கள் சித்தம் எங்கள் பட்சணம் :-)

    ReplyDelete
  20. இந்த செவிக்குணவு மேட்டர் எல்லாம் இருக்கட்டும், அது இல்லாத போது அய்யன் சொன்ன மேட்டர் எங்க, அதையும் சொல்லுங்க.

    ReplyDelete
  21. //கீதா சாம்பசிவம் said...
    he he he, I am also cancelled my ticket to the flight. mmm, I prepared so many things for the meeting and will eat all by my self.//

    கீதாம்மா, டிக்கட் கான்சல் செய்து விட்டீர்களா? அச்சச்சோ,...சரி பரவாயில்லை!

    ஆனா அதுக்காக, எல்லாம் நீங்களே சாப்பிட்டா எப்படி? கிரிக்கெட் வீரர்கள் கதி என்னாவதாம்?
    கொஞ்சம் பார்சல் பொட்டலம் கட்டி அனுப்புங்க! அப்ப தான் உங்க நாட்டுப் பற்று வெளியாகும்! :-)

    ReplyDelete
  22. 'ப்ளோரேலியா 2007'-னு கொத்ஸ் சொன்னாரு.. அது எங்க..? எப்போ..?
    இல்ல... கிரிக்கெட், "மாநாடு" அப்புறம் சாப்பாடுதானா..?

    விளக்காம சொல்லுங்க, ரவி...

    பி.கு: 'யாரையும் பார்த்ததில்ல. (இரண்டு குழந்தைகளை வைச்சிகிட்டு) 4 மணி நேரம் டிரைவ் பண்ணி போகணுமா? '-னு என் மனைவி கேக்குறாங்க... எப்படி 'சாமளிக்கிறது' னு சொல்லுங்க, மக்களே?!

    ReplyDelete
  23. பூ ஒன்று மட்டையானது!

    ஃப்ளோராலியா 2007 இப்ப கிரிக்கெட் மாநாடு ஆயிடுச்சு!

    இன்னும் 5 நாள் இருக்கும்.

    என்னவாவெல்லாம் மாறப்போகுதோ!

    தேவுடா! தேவுடா!!

    சரி, இப்ப நன் எங்கே டிக்கெட் புக் பண்ணணும்?
    சிகாகோவா, மெம்ஃபிஸா, இல்லை நியூஆர்க்கா?
    :))
    இல்லை, அப்படியே ஒரு ரவுண்ட் ட்ரிப் புக் பண்ணிரட்டுமா?
    :))

    ReplyDelete
  24. //என் மனைவி கேக்குறாங்க... எப்படி 'சாமளிக்கிறது' னு சொல்லுங்க, மக்களே?! //


    இப்படி ஒரு நிலைமை எனக்கும் வந்தது, தென்றல்!

    டக்குன்னு "நாங்க ராஜமன்னார் சார்" மாதிரி, ட்ரைவிங்கை கேன்ஸல் பண்ணிட்டு, பறக்கறதுக்கு முடிவு பண்ணிட்டேன்.... தனியா!!
    :)))

    ReplyDelete
  25. //செல்வன் said...
    சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் கண்ணபிரான்.சந்திப்பு முடிந்தபின் விரிவான பதிவை இடுங்கள்.படிக்க ஆவலுடன் இருக்கிறேன்//

    செல்வன், நீங்களும் வந்தா நல்லா இருக்குமே! SK ஐயாவுடன் கிளம்பி வரலாமே!
    சந்திப்பு முடிந்தபின் விரிவான பதிவைப் பாபா இடுவார் என நினைக்கிறேன்!

    ReplyDelete
  26. //துளசி கோபால் said...
    இந்த 'மைசூர் பா(க்)கு விஷயம் தெரியாமப்போச்சே(-://

    மைசூர் பாக்கா, பாகா?
    அப்பறம் யாராச்சும் மைசூரில் விளைஞ்ச பாக்கும் வெத்தலையும் கொண்டு வந்துடப் போறாங்க!:-)

    //உங்க கிரிக்கெட்டுலேயாவது ஒழுங்கா ஆடி 'ரன்'கள் குவியட்டும்.
    வாழ்த்து(க்)கள்.//

    நன்றி, டீச்சர்!
    சென்ற முறை பாஸ்டன் மீட் போது கோபால் இங்கு இருந்தார்.

    ReplyDelete
  27. //Anonymous said...
    இந்த செவிக்குணவு மேட்டர் எல்லாம் இருக்கட்டும், அது இல்லாத போது அய்யன் சொன்ன மேட்டர் எங்க, அதையும் சொல்லுங்க.//

    அனானி, இப்படி சஸ்பென்ஸ் உடைக்க வைக்கறீங்களே!
    அப்பா கடம்பா, கார்த்திகேயா, சரவணா, சண்முகா, முருகா!

    ReplyDelete
  28. //தென்றல் said...
    'ப்ளோரேலியா 2007'-னு கொத்ஸ் சொன்னாரு.. அது எங்க..? எப்போ..?
    இல்ல... கிரிக்கெட், "மாநாடு" அப்புறம் சாப்பாடுதானா..?//

    அட என்னங்க தென்றல்
    கிரிக்கெட் என்பது ஒரு குறிப்பு மொழி தாங்க - சங்கேத பாஷை - ஆரஞ்சு பழத்துக்கு பதினாலு மாடி, எல்.ஐ.சியை உரிச்சுத் தான் சாப்பிடணும் என்று சொல்லுவார்களே அது போல!
    மாநாடு, மாநாடு, சாப்பாடு, மாநாடு!
    அம்புடு தேன்! :-)

    //பி.கு: 'யாரையும் பார்த்ததில்ல//

    அச்சோ, பயப்படாதீங்க தென்றல்.
    நானும் யாரையும் பார்த்ததில்ல. அதுவும் வெட்டின்னாலே எனக்கு ஒரு பயம்:-)
    அப்படிப்பட்ட நானே தெகிரியமா வாரேன்!


    //(இரண்டு குழந்தைகளை வைச்சிகிட்டு) 4 மணி நேரம் டிரைவ் பண்ணி போகணுமா? '-னு என் மனைவி கேக்குறாங்க...//

    அச்சச்சோ, அப்படியா கேட்டாங்க மேலிடத்தில்! இதுக்கு என்ன பதில் சொல்லலாம்! சொக்கா....
    தமிழ்த் தொண்டு-ன்னு சொல்லலாமா? அடிகிடி விழுவாதே! :-)

    கொத்ஸ், ஹெல்ப் ப்ளீஸ்!

    ReplyDelete
  29. //இப்படி ஒரு நிலைமை எனக்கும் வந்தது, தென்றல்!

    டக்குன்னு "நாங்க ராஜமன்னார் சார்" மாதிரி, ட்ரைவிங்கை கேன்ஸல் பண்ணிட்டு, பறக்கறதுக்கு முடிவு பண்ணிட்டேன்.... தனியா!!
    :))) //
    ஆ !என்ன இது பறக்கபோறீங்களா விஎஸ்கே? சொல்லவே இல்ல?:)அப்போ கார்சவாரிக்கனவுக்கண்ட காரிகையின் நிலமை என்ன? மைசூர்பாக்கின் கதி என்ன என்ன என்ன?:)
    ரவி எல்லாரையும் அழச்சிட்டு தலைநகருக்கு வந்திடுங்கபா..

    ReplyDelete
  30. //VSK said...
    என்னவாவெல்லாம் மாறப்போகுதோ!
    தேவுடா! தேவுடா!!//

    SK ஐயா.
    கடவுளே கடவுளே-ன்னு சொல்லுங்க.
    அதை விட்டுட்டு நீங்களே இப்படி வெட்டிப்பயலுக்குத் தேவுடா! தேவுடா-ன்னு தெலுங்கு எடுத்துக் கொடுத்தா எப்படி? :-)

    //சரி, இப்ப நன் எங்கே டிக்கெட் புக் பண்ணணும்?
    சிகாகோவா, மெம்ஃபிஸா, இல்லை நியூஆர்க்கா?//

    ஒன் அண்ட் ஒன்லி நியூயார்க்!
    பட்சணம் எல்லாம் தனியா வரிசை வச்சிக் கொடுக்கறதா இருக்காங்க நம்ம தலைவி கீதாம்மா மற்றும் வல்லியம்மா! அதனாலே அலைச்சல் நம்க்குக் கம்மி! :-)

    ReplyDelete
  31. //தமிழ் கூறும் நல்லுலகம் என்பதால்,
    மாநாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக தெலுங்கில் நடைபெறாது என்று
    வெட்டிப்பயல் அவர்களின் பரிபூரண சம்மதத்துடன் உத்தரவாதம் இச்சானு! :-)//

    இதுக்கு என்கிட்டே எதுவும் கருத்து இல்லப்பா:)))

    ஹி ஹி

    ReplyDelete
  32. //ஷைலஜா said...
    மைசூர்பாக்கின் கதி என்ன என்ன என்ன?:)
    //

    என்னப்பா
    மைசூர்பாகு வருமா வருமா வருமா என்று ஒரே சஸ்பென்ஸ் ஆக உள்ளதே! மைசூரில் இருந்து பாக்கு வந்தாக் கூட போதும் பா! :-)))

    ReplyDelete
  33. //இராம் said...
    //தமிழ் கூறும் நல்லுலகம் என்பதால்,
    மாநாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக தெலுங்கில் நடைபெறாது என்று
    வெட்டிப்பயல் அவர்களின் பரிபூரண சம்மதத்துடன் உத்தரவாதம் இச்சானு! :-)//

    இதுக்கு என்கிட்டே எதுவும் கருத்து இல்லப்பா:)))
    ஹி ஹி//

    என்னப்பா, இது
    ராயல் நல்ல ராயல் கருத்தா சொல்ல வேணாமா?
    வெட்டியைத் தட்டிக் கேட்கும் உரிமை உள்ள ஒரே ஆள் - யார்? யார்? யார்?
    :-)

    ReplyDelete
  34. நான் இப்படி இந்தியா வந்திருக்கும் சமயம் பார்த்தா சந்திப்ப வைப்பீங்க?? க்ர்ர்ர்ர்ர்...... சரி... உங்க சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள் :((((

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP