Tuesday, April 29, 2008

பெங்களூர் பதிவர்களா? சென்னைப் பதிவர்களா? - Part 1

வணக்கம் மக்களே!
தாயகப் பயணம் முடிஞ்சி வந்தாப் பிறகு கண்டிப்பா ஒரு பதிவு போடணுமாம்-ல! இந்தப் பதிவின் தலைப்பைப் பாத்துப்போட்டு ஏதோ பட்டிமன்றம்-னு நெனச்சி வந்தீங்கன்னா...
நீங்க நெனச்சி வந்தது சரி தான்! பட்டிமன்றம் தான் இங்கன நடக்கப் போவுது! ஆனா நடுவரா யாரைப் போடலாம்-னு தான் ஒரு சின்னக் கன்பூசன்!

இது மாதிரிச் சூடு பறந்து ஆவியாகிப் பாவியாகிப் போற பட்டிமன்றத்துக்கு எல்லாம் நம்ம கைப்புள்ள தான் எப்பமே நிரந்தர நடுவரு!
ஆனா இப்போ அவரு பெங்களூரு மனைக்கு ஹோகிட்டாரா! அதுனால அவரு தகுதி நீக்கம் செய்யப்பட்டுட்டாரு!
என்ன தான் இருந்தாலும், நடுவர்-ன்னா நடுவுல இருக்கணும்-ல! பெங்களுருக்கும் சென்னைக்கும் நடுவுல இருக்குற ஊரு ஜோலார்பேட்டை தானே? ஜோலார்பேட்டைக் காரவுங்க யாருப்பா? அவிங்களையே நடுவராப் போட்டுறலாம்! என்னா சொல்றீங்க? :-)


சரி...நானு மேட்டருக்கு பர்த்தேனே! ஏப்ரல்-5, 2008...சென்னை காமராசர் உள்நாட்டு வானூர்தி நிலையம்...நம்ம ஆன்மீகப் பதிவரு கேஆரெஸ் தெருப்பாவை பாடிக்கிட்டே கருடா ஏர்பஸ் புடிக்க வராரு! அது என்ன தெருப்பாவை?
சிச்சம் சிறு காலே பெண்களூர் விமானம் ஏறி
மிச்சம் மீதி உள்ள கடலைக்குப் பொருள் கேளாய்!
சொச்சமும் ஜொள்ளி உண்ணும் ப்ளைட்டில் ஏறி நீ
அச்சமும் ஆசையும் கொள்ளாமல் போகாது!


யாகீ கேஆரெஸ்ஸை கிங் பிஷ்ஷர் ப்ளைட்டுலே ஹோகாலிக்க ஹெள்ளிதே?
ஓ அதுவா? கிங் பிஷ்ஷர்-ல தான் நல்ல குயின் பிஷ்ஷர்கள் எல்லாம் இருக்காங்களாம்! சிவப்புக் கலர் தாவணியில சும்மாச் சிலுசிலுக்கறாங்களாம்! அஷ்டே! :-)

நான் வேற 12B-இல் (அட, சீட்டு நம்பர்-ங்க) ஏறி உக்காந்தேனா...நேரம் போவதே தெரியலை! 12B-ன்னாலே ஒரு ராசி தான் இல்ல?
பயணிகள் கவனிக்கவும்: ஓடுபாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் பத்து நிமிடம் தாமதமாகப் புறப்படும்!

கேஆரெஸ்ஸின் கோணத்தில் - இது என்னா? கோயிலு கொடிமரம்?? :-)

அட, பத்து நிமிசம் தானே பரவாயில்லை! இத்தனை கிங்பிஷ்ஷர் அக்காக்கள் இருக்கும் போது, அங்கிட்டு ப்ளாக் யுனியன் டிடி அக்கா காத்துக்கிட்டு இருந்தா ஒன்னும் கொறைஞ்சிற மாட்டாங்க! :-)
பயணிகள் கவனிக்கவும்: ஓடுபாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மேலும் முப்பது நிமிடம் தாமதமாகப் புறப்படும்!

அடப் பாவிங்களா! ஒக்க ரன்வேயில் என்னய்யா ஒக்கனேக்கல் பிரச்சனை? யாராச்சும் தண்டவாளத்தில் தலை கொடுக்கும் போராட்டம், ரன்வேயில் ரயில் மறியல் போராட்டம் நடத்துறாங்களா என்ன?
பெங்களூர் போகாதே-ன்னு கோவி அண்ணா அப்பவே சொன்னாரு! டிபிசிடி வேற என்னைய வட்டாள் நாகராஜ் கிட்ட பாசமாப் போட்டுக் கொடுக்கச் சொன்னதெல்லாம் இப்ப பார்த்து ஞாபகம் வருது! ஆதாரம்+தரவு: இதோ!
தானைத் தலைவி டிடி அக்காவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிச்சிட்டு, நான் உண்டு என் கடமை உண்டு-ன்னு "சிவனே"-ன்னு (சைட்டிக்கிட்டு) இருந்தேன்!

ஒரு வழியா ஒக்க ரன்வே பிரச்சனை முடிஞ்சி விமானம் கெளம்பியது!
ஆனா அப்ப யாருக்குத் தான் தெரியும், ஒக்க ரன்வே பிரச்சனை மட்டும் இல்ல, ஒக்க-னேக்கல் பிரச்சனையே தீரப் போகுது-ன்னு? எல்லாம் கேஆரெஸ் பெங்களூருவில் கால் வைக்கும் நேரம்! சாந்தி நிலவுது! சரோஜாவும் நிலவுது! :-)
வெஜ்ஜி சான்ட்விச் வித் மெட்ராஸ் காபி சாப்பிட்டு முடிக்கக்குள்ளாற ஊரு வந்துருச்சி! சிகப்பு ரோஜாக்களுக்குப் பிரியா விடை கொடுத்திட்டு வெளிய வந்தாக்கா..........நம்ம டிடி யக்கா........யக்காஆஆஆ...தம்பீஈஈஈஈ...

"எப்படித் தம்பி இருக்க?"

"எப்பிடிக்கா இருக்கீக? சாரி ப்ளைட் லேட்டு!"

"அலோ இதான் கோட் வோர்டா? நீ தான் கேஆரெஸ்-ன்னு எப்படி நம்புறது? பெங்களூரில் போலிப் பிரச்சனை ஜாஸ்தி...தெரியுமா?"

"யக்கா...இதுக்காக என்னை ஏர்போர்ட் புல் தரையில சாய்ஞ்சி படுத்துக் காட்டச் சொல்லப் போறீங்களா என்ன? வேணாம்க்கா இந்த தண்டனை!"

"அதுக்குத் தான் கடவுச் சொல் கேக்கறேன்...ஒழுங்காச் சொல்லு"

"சர்வேசன்=a+b!"

"கரெக்ட்! இதோ என் கோட் வோர்ட்...வவ்வால்=a+b+c! என்னா சரியா?"

"மார்வலஸ்! அசத்திட்டீங்க அக்கோவ்"

"வாங்க கேஆரெஸ்! பெங்களுருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக! நேத்து வரை பெய்ஞ்சுகிட்டு இருந்த மழை நீங்க வந்ததும் நின்னுருச்சு பாருங்க! வண்டியில் உக்காருங்க! வூட்டுக்குப் போகலாம்!"


வழியில் கொரமங்கலா கடந்தவுடன் என் பழைய பெங்களூரு வாசம் எல்லாம் சுவாசம் வீச...பல விசயங்களைக் கதைத்துக் கொண்டே ஆர்.டி நகர் போய்ச் சேர்ந்தோம். வீட்டில் புதிய சோனி இல்லத் திரையரங்கு! அதில் இன்னிசை ஒலிக்க...அங்கே ப்ளாக் யூனியனின் சுமதி அக்காவும் சேர்ந்து வரவேற்க...
அடடா என்ன பாச மழை! இந்த மழைக்குத் தான் அந்த மழை நின்னுருச்சு போல! சுமதி யக்கா மட்டும் றேடியோல வேலைக்குச் சேர்ந்தாங்கன்னு வைங்க...அந்த நான் ஸ்டாப் எஃப்.எம்-ல நான் ஸ்டாப் ஆயிடுவேன்! :-)

ஷைலஜாவின் அட்சய மைசூர் பாத்திரம்

ஷைலஜா மைசூர்பாக்கு கொடுப்பாங்களோ மாட்டாங்களோ-ங்கிற (அவ)நம்பிக்கையில், சுமதியே ஆன்மீக அல்வா கிண்டிக்கிட்டு வந்தாங்க! சூப்பரோ சூப்பர்! டிடி அக்கா வீட்டிலேயே மதியச் சாப்பாடு ஒரு வெட்டு வெட்டிட்டு...திரும்பிப் பார்த்தா...
மிஸஸ் Congeniality & மிஸ்டர் அம்பி! கூடவே அவர் தம்பி கணேசன்! அட்ரா சக்கை! இனிய முகமன்கள்!
மாவு அரைச்ச கையோட வெள்ளையும் சொள்ளையுமா வந்திருந்தாரு அம்பி! நமக்கு இந்தப் பதிவர் அம்பியைக் கண்டாலே உள்ளூர ஒரு பயம் தான்!

மாவுக்குப் பதம் கேட்டே நம்மள பதம் பார்த்துடுவாரு! ஜிரா வேற என் சம்பந்தமா ஏதோ இவருக்கு ஏதோ அசைன்மென்ட் கொடுத்திருந்தாரு! ஆனா அது எல்லாமே மாயக் கண்ணன் முன் நிக்குமா என்ன? மாயமா மறைஞ்சு போச்சு! திருமதி& திரு அம்பி மிக அழகான பொம்மை ஒன்றைப் பரிசாகக் கொடுக்க...முருகா முருகான்னு சொல்லிக்கிட்டே பொட்டியைத் தொறந்து பார்த்தா அதுல கண்ணன் சிரிக்கிறான் :-))

ஒரு வழியா எல்லாரும் கும்மிக்கு செட்டில் ஆக... கும்மியடி கர்-நாடகா முழுதும் குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி-ன்னு பாடிக்கிட்டே வந்தாரு நம்ம பாசமிகு மெளலி அண்ணா என்னும் மதுரையம்பதி! அதான் சென்னை உண்ணாவெரதத்துல சத்யராஜ் குலுங்கினது போதாதா? இனி நாங்க வேற என்னாத்த கும்மியில் குலுங்கறது? :-)

குலுங்கி அடித்த கும்மீஸ் இதோ:
* பதிவுகளில் மாற்றுக் கருத்துக்கள் எழுந்தா பின்னூட்டம் இடறதா வேணாமா? யார் பதிவுகளில், எப்படிப்பட்ட பதிவுகளில் மாற்றுப் பின்னூட்டத்தைத் தைரியமாக இடலாம்? அதுவும் பெண் பதிவர்களின் விவாத எல்லை எது வரை இருக்கும்னு நினைக்கறீங்க?
* ஆன்மீகப் பதிவுகளில் நகைச்சுவை செய்தால் பிடிக்குதா? பலரையும் அடையும் பொருட்டு அடர்த்தி குறைப்பது ஓக்கே தானா?
* நாகரீக மாற்றங்களுக்கான விடைகள் நம்ம கிட்டயே இருக்கு! நமது கலாச்சாரம் பண்பாட்டுக் கதைகளை current day context-இல் எப்படிக் கொடுக்கலாம்?

- இப்படிப் போன விவாதம்...அப்படியே லால் பாக்குக்குத் தாவியது! மெளலி அண்ணா வண்டியில் கும்மிகள் தொடர....அண்ணா...சேப்புக் கலர் Maruti Swift நல்லாக் கீதுங்கோ!


ஜீவ்ஸ் அண்ணாச்சி பதிவுல கொடுக்கன்னே வளர்க்கும் ஸ்பெசல் செடி! :-)

லால் பாக்கில் உரக்கத் தமிழ் பேச முடியுமா? பதிவர்கள் மாறு வேசம் கட்டிக்கிட்டு தான் மீட் போடணுமா? பேசாம எல்லாரும் அனானியா கலந்துக்கிட்டா என்ன? கன்னட மணம்-னு சொல்லிக்கலாமா? இப்படி ஒரு வித மனப் பிராந்தி, ஜின்னு, ரம்மு-ன்னு லால் பாக் கண்ணாடி இல்லத்தில் அனைவரும் கூட...அங்கே...

* பெங்களூரிலும் ஒரு காமிராக் கவிஞர்! Digital SLR ராயல் ராமு!
* கங்கைக் கரை காமிராக் காட்சி நிபுணர்! எங்கள் சங்கத் தமிழ், சங்கத் தல, சங்க நிதி, அண்ணன் கைப்புள்ள
* மஞ்சள் பட்டு உடுத்தி, மஞ்சள் மைசூர் பாக் வந்திருக்குன்னு குறிப்பாலேயே உணர்த்திய கவிக்குயில் ஷைலஜா
* PIT-இன் founding father...வெண்பாவிற் ஜீவ்ஸேந்தி...அண்ணியார் மற்றும் மழலைப் பதிவருடன்,
* நம்ம நாட்டு நடப்பு அரவிந்தன்
* மெளலி அண்ணாவின் தொலைபேசியில் கொஞ்ச நேரம் கூடல் குமரன்

ராயலின் கோணத்தில் லால் பாக் கண்ணாடி அறை

கேஆரெஸ்ஸின் செல்பேசி சிணுங்கியது...
"அலோ...நான் சிங்கையில் இருந்து குசும்பன் கல்யாணத்துக்காகச் சென்னை வந்திருக்கேன்! நீங்க வந்ததும் வராததுமா சென்னைப் பதிவர்களைக் கூடப் பார்க்காம அப்பிடி என்ன பெங்களூரூக்கு ஓட்டம்? உங்க பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது!
தமிழுக்கும் தமிழ்ப் பதிவருக்கும் துரோகம் செய்து விட்டு கன்னட வீட்டில் கைகுலுக்கவும் விருந்து சாப்பிடவும் போனீங்களா?"

"ஏங்க...அப்பிடி எல்லாம் ஒன்னும் இல்லீங்க! நான் மறத் தமிழ் பதிவனுங்கோ! இங்கன இருக்குற எல்லாரும் தமிழ்ப் பதிவரு தானுங்கோ! நாங்களே பயந்து பயந்து லால் பாக்குல மைசூர் பாக்கு சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்! நீங்க வேற!"

"மறுபடியும் பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது!
ஏன் தமிழ்நாட்டுல பாக்கு வெளயலையா? பாக்குக்கு கமுகு-ன்னே ஒரு தூய தமிழ்ப் பேரு இருக்கு தெரியுமா? மைசூர் பாக்காம் மைசூர் பாக்கு! ஏன் ஒரு மைலாடுதுறைப் பாக்கு, மதுரைப் பாக்கு-ன்னு சாப்புடறது?"

"ஆகா..."

"என்ன ஓகோ? ஒங்க மேல ஒங்க நண்பர்களே கோவமா இருக்காங்க! லக்கி அண்ணாச்சி, தேசிகன், தேவ் அண்ணாத்த, சிபி, சந்தோஷ், இம்சை அரசி, JK, G3-ன்னு இவிங்க கோபத்துக்கு எல்லாம் அளவே இல்ல!
நீங்க சென்னைக்கு எப்படித் திரும்பி வரீங்கன்னு பார்த்துடலாம்! அப்படியே அங்க இருந்தே பிளைட்டு புடிச்சி நியூயார்க் போய்ச் சேருங்க!"

"அலோ...இவ்ளோ நல்லவரா இருக்கீங்களே! யாருங்க நீங்க?"

"அது எதுக்கு உங்களுக்கு? அனானி பவர் தெரியும்-ல?
சரி சரி....அங்க உங்க கூட யாரெல்லாம் இருக்கா? கொஞ்சம் விலகுங்க! யாரும் தெரிய மாட்டங்கிறாங்க! - ம.த.செ.வி"

"ஆகா...ம.த.செ.வி-யா? இது என்னப்பா புதுசா?"

"நான் தான் கோவி கண்ணன் பேசறேன்!"
(தொடரும்...)

40 comments:

  1. //"யக்கா...இதுக்காக என்னை ஏர்போர்ட் புல் தரையில சாய்வா படுத்துக் காட்டச் சொல்லப் போறீங்களா என்ன? வேணாம்க்கா!"
    //

    :)))))

    ReplyDelete
  2. // சுமதி யக்கா மட்டும் றேடியோல வேலைக்குச் சேர்ந்தாங்கன்னு வைங்க...அந்த நான் ஸ்டாப் எஃப்.எம்-ல நான் ஸ்டாப் ஆயிடுவேன்! :-) //

    சூப்பரு..... :)

    ReplyDelete
  3. //கேஆரெஸ்ஸின் கோணத்தில் - இது என்னா? கோயிலு கொடிமரம்?? //

    அதானே! ஆனா ஒரு சின்ன திருத்தம்: பெருமாள் கோயிலு கொடிமரம் இருந்து இருக்கனும். :)))

    என்ன பாத்து உங்களுக்கு பயமா? சொல்ல போனா அன்னிக்கு நான் கொறச்சு தான் உங்களை ஓட்டினேன். :p

    ReplyDelete
  4. ஆமாம், அண்ணன் ஜீவ்ஸ் வளர்க்கும் அல்வா செடி பற்றி மிச்ச தகவல்கள் அடுத்த பதிவுல சொல்வீங்களா?. :)

    ReplyDelete
  5. //சுமதி யக்கா மட்டும் றேடியோல வேலைக்குச் சேர்ந்தாங்கன்னு வைங்க...அந்த நான் ஸ்டாப் எஃப்.எம்-ல நான் ஸ்டாப் ஆயிடுவேன்!//

    ROTFL :)) நான் இதை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  6. இந்த பதிவு எழுதினது கேயாரெஸின் போலியா?, இல்லை பெங்களுர் வந்தது கேயாரெஸின் போலியான்னு தெரியலையே?...என் கார் கலர் அதுக்குள்ள மாறிப்போச்சு....:))

    ReplyDelete
  7. ஆன்னா, போன்ன்னா ஒரு அண்ணா, அடாடா, அடாடா...என்னா பணிவு, என்னா அடக்கம்...யோவ், நேர்ல பார்க்கறச்சேயும், போன்லயுந்தான் இப்படின்னா, பதிவுலயுமா....ஏன்?, ஏன்?.. :)

    ReplyDelete
  8. //* பதிவுகளில் மாற்றுக் கருத்துக்கள் எழுந்தா பின்னூட்டம் இடறதா வேணாமா? யார் பதிவுகளில், எப்படிப்பட்ட பதிவுகளில் மாற்றுப் பின்னூட்டத்தைத் தைரியமாக இடலாம்? அதுவும் பெண் பதிவர்களின் விவாத எல்லை எது வரை இருக்கும்னு நினைக்கறீங்க?
    * ஆன்மீகப் பதிவுகளில் நகைச்சுவை செய்தால் பிடிக்குதா? பலரையும் அடையும் பொருட்டு அடர்த்தி குறைப்பது ஓக்கே தானா?
    * நாகரீக மாற்றங்களுக்கான விடைகள் நம்ம கிட்டயே இருக்கு! நமது கலாச்சாரம் பண்பாட்டுக் கதைகளை current day context-இல் எப்படிக் கொடுக்கலாம்?//

    இதெல்லாம் எதுவும் எனக்கு நினைவில்லையே?...

    ராம், ஜீவ்ஸ், கைப்பு, உங்களுக்கு நினைவிருக்கா?, நாம இந்த டாப்பிக் எல்லாம் பேசினோமா? :)

    ReplyDelete
  9. ஆமாம், இந்த கலாய்த்தல் திணைக்காரர் என்னிடந்தான் பேசவேயில்லை.... :(

    ReplyDelete
  10. ஆமாம், சைக்கிள் கேப்புல தேசிகனை சென்னை லிஸ்ட்-ல சேர்த்துட்டீங்க...இதெல்லாம் சரியில்ல ஆமாம் :)

    ReplyDelete
  11. @மௌலி, பணிவோ பணிவு அப்படியொரு பணிவு.
    இத்தனை நகைச்சுவையையும் இவர்தான் எழுதறாரான்னே சந்தேகம் வந்துடுத்துன்னால் பாருங்களேன்.

    ரவி , சௌக்கியமா வந்து சேர்ந்தாச்சா.
    சரியான கூட்டம் போலிருக்கே:)

    ReplyDelete
  12. //"நான் தான் கோவி கண்ணன் பேசறேன்!"//

    இதான் சென்னையின் கடவுசொல்...

    ReplyDelete
  13. //"ஆகா...ம.த.செ.வி-யா? இது என்னப்பா புதுசா?"

    "நான் தான் கோவி கண்ணன் பேசறேன்!"//

    அடப்பாவிகளா, பதிவுக்குத்தான் போலி பதிவு ஆரம்பிக்கிறானுங்கன்னு பார்த்தால், ஒரு ஆசாமிக்கே போலியா ? அந்த மைனர் குஞ்சு யாருங்கோ ? என்ன தண்டனை கொடுக்கலாம் !
    :)

    ReplyDelete
  14. ஹாய் கேஆரெஸ்,

    //ஆனா இப்போ அவரு பெங்களூரு மனைக்கு ஹோகிட்டாரா! //

    அதெல்லாம் செல்லாது செல்லாதூ...

    ReplyDelete
  15. ஹாய்.

    //சுமதி யக்கா மட்டும் றேடியோல வேலைக்குச் சேர்ந்தாங்கன்னு வைங்க...அந்த நான் ஸ்டாப் எஃப்.எம்-ல நான் ஸ்டாப் ஆயிடுவேன்! :-//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...பேசினா எஃப்ங்கறீங்க, பேசலைனா என்ன சோகம் கறீங்க, என்ன தான் பண்றது?

    ReplyDelete
  16. ஹாய்.

    //இப்படிப் போன விவாதம்...அப்படியே லால் பாக்குக்குத் தாவியது! //

    அப்படியா? மெளலின்னா ஒருவேலை நமக்கு தெரியாம வேற ஒரு மீட்டிங்கு போச்சோ?

    ReplyDelete
  17. ஹாய்,

    //"ஆகா...ம.த.செ.வி-யா? இது என்னப்பா புதுசா?"//

    மறைக்காதே தயவு செய்து விலகவும் தானே.....ஹா ஹா ஹா...

    ReplyDelete
  18. மதுரையம்பதி said...
    // சுமதி யக்கா மட்டும் றேடியோல வேலைக்குச் சேர்ந்தாங்கன்னு வைங்க...அந்த நான் ஸ்டாப் எஃப்.எம்-ல நான் ஸ்டாப் ஆயிடுவேன்! :-) //

    சூப்பரு..... :)

    ஓஹோ அப்படியா, இருக்கட்டும், டெய்லி சாட்டிங்குல வருவீங்கல்ல அப்ப பேசிக்கறேன்...

    ReplyDelete
  19. அட, எனக்கு எத்தனை தரம் வந்திருக்கு கோவி. கண்ணன் பேசறேன்னு தொலைபேசி அழைப்பு, இதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்ல???? :P யாருனு தெரியாமயா போயிடும்?????

    ReplyDelete
  20. தல

    கலக்கியிருக்கிங்க போல!!

    அடுத்த சந்திப்பை சீக்கிரம் போடுங்க...;)

    ReplyDelete
  21. //* பதிவுகளில் மாற்றுக் கருத்துக்கள் எழுந்தா பின்னூட்டம் இடறதா வேணாமா? யார் பதிவுகளில், எப்படிப்பட்ட பதிவுகளில் மாற்றுப் பின்னூட்டத்தைத் தைரியமாக இடலாம்? அதுவும் பெண் பதிவர்களின் விவாத எல்லை எது வரை இருக்கும்னு நினைக்கறீங்க?
    * ஆன்மீகப் பதிவுகளில் நகைச்சுவை செய்தால் பிடிக்குதா? பலரையும் அடையும் பொருட்டு அடர்த்தி குறைப்பது ஓக்கே தானா?
    * நாகரீக மாற்றங்களுக்கான விடைகள் நம்ம கிட்டயே இருக்கு! நமது கலாச்சாரம் பண்பாட்டுக் கதைகளை current day context-இல் எப்படிக் கொடுக்கலாம்?//

    இம்புட்டு எல்லாம் பேசினோமோ???

    ReplyDelete
  22. பத்திரமா போய் சேந்தீங்களா? ஜெட்டு சிட்டுகளைப் பத்தி எழுதுறேன்னு ப்ரசல்ஸ்லருந்து சொன்னீங்களே? மறக்காம எழுதவும் :)

    ReplyDelete
  23. @ராமு...
    இம்புட்டு எல்லாம் டிடி யக்கா வூட்லயே பேசிட்டோம் :-))
    நீரு நிக்கான் வச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தீரா? ஒன்னும் கவனிக்கலை போல!

    @மாப்பி கோபி
    அடுத்த பாகத்துல இன்னும் ஜூடா போட்டுறலாம்

    @கீதாம்மா
    கோவி கண்ணன் கால் எல்லாம் ஓக்கே தான்! அடுத்த பாகத்தில் நம்ம வவ்வால் வருவாரு பாருங்க! :-))


    @சுமதி யக்கா
    //"ஆகா...ம.த.செ.வி-யா? இது என்னப்பா புதுசா?"//
    மறைக்காதே தயவு செய்து விலகவும்

    எப்படிக்கா? எப்பிடி? :-))

    ReplyDelete
  24. @சுமதி யக்கா
    சாட்டிங்-ல என்னைய பேட்டிங் பண்ணிறாதீங்க அக்கோவ்!
    நான் ஸ்டாப் எஃப்.எம்-ன்னா சும்மாவா? எவ்ளோ பேரு, புகழு? :-)

    @கோவி
    வாங்கண்ணா வாங்க!
    நீங்க போட்ட ஒரு ஃபோன் காலால...பாருங்க இம்புட்டு பிரச்சனை! ஒழுங்கா கண்ணனைப் போல நல்ல பையனா இருக்க முடியாதா ஒங்களால? எல்லாம் அந்தப் புதசெவி செய்யற வேலை! :-)

    @JK
    ஐ லைக் இட்!
    கடவுச் சொல்லை நிரந்தரமா அரசியல் சட்டத்தில் ஏத்திருவமா? :-)

    @வல்லியம்மா
    பத்திரமா வந்து சேர்ந்தாச்சு வல்லியம்மா! ஜெட் லாக் ஜெட்டாத லாக் எல்லாம் முடிஞ்சி மீண்டும் பதிவு பக்கம் வந்து உங்களை எல்லாம் படுத்திக்கிட்டு இருக்கேன்! :-)

    ReplyDelete
  25. @தஞ்சாவூரான்...
    அதான் லோக்கல் கிங் பிஷ்ஷர் குயின் பிஷ்ஷர்களைப் பத்தி எழுதி இருக்கேனே! போதாதா அண்ணாச்சி ஒங்களுக்கு? :-)

    கடலைத் தாண்டியும் கடலையா?

    ReplyDelete
  26. @ஆயில்யன்
    :-))

    @அம்பி
    //அதானே! ஆனா ஒரு சின்ன திருத்தம்: பெருமாள் கோயிலு கொடிமரம் இருந்து இருக்கனும். :)))//

    அடப்பாவி...வந்துட்டியா...அதுல நல்லாப் பாரு! மயில் உக்காந்து கிட்டு இருக்கு! :-)

    //என்ன பாத்து உங்களுக்கு பயமா?//
    அப்பிடிச் சொல்லிப்போம்-ல?

    //சொல்ல போனா அன்னிக்கு நான் கொறச்சு தான் உங்களை ஓட்டினேன்//
    அதிகமா ஓட்டியிருந்தா அப்பீட் ஆயிருப்ப நீ...
    வீட்டுல எல்லாரும் நம்ம கட்சி..கேட்டுப் பாரு! :-))

    ReplyDelete
  27. @மதுரையம்பதி
    சுமதி யக்காவுக்கே அல்வா கொடுக்கறீங்களா? இருங்க இருங்க!

    ஜீவ்ஸ் அண்ணாச்சி அல்வாச் செடி வளர்க்கறாரா? அப்போ அது அல்வா மரம் இல்லியா?

    உங்க கார் கலர் சேப்பு இல்லீங்கோ...
    ஆனா அடுத்த நாள் நமக்கு முன்னும் பின்னும் சேப்பு swift எஸ்கார்ட் வண்டியாச்சும் வந்துச்சு-ல! அத பில்ட்-அப் பண்ணனும்-ல?

    //ஆன்னா, போன்ன்னா ஒரு அண்ணா, அடாடா, அடாடா...என்னா பணிவு, என்னா அடக்கம்...//

    பணிவா? எனக்கா??
    அட...நம்ம பொழைப்பை இந்த உலகம் இன்னும் நம்பிக்கிட்டு இருக்குடா சாமீ...:-)

    ReplyDelete
  28. //இதெல்லாம் எதுவும் எனக்கு நினைவில்லையே?...//

    அட...டிடி யக்காவைக் கேளூங்க!

    //ஆமாம், இந்த கலாய்த்தல் திணைக்காரர் என்னிடந்தான் பேசவேயில்லை.... :(//

    யாரு? கோவி கண்ணனா?
    கோவி...பாருங்க மெளலி ரொம்ப ஃபீல் பண்ணறாரு! ஒடனே ஒரு ஃபோனைப் போடுங்க! வடைமொழி இட்லி மொழில பேசுங்க! :-))

    //சைக்கிள் கேப்புல தேசிகனை சென்னை லிஸ்ட்-ல சேர்த்துட்டீங்க...இதெல்லாம் சரியில்ல ஆமாம் :)//

    தேசிகன் தமிழகத் தங்கம்! கோலார் தங்கம் அல்ல என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! :-)

    ReplyDelete
  29. :)))

    என்சாய் மாடி!! :))

    ReplyDelete
  30. //அடப்பாவிகளா, பதிவுக்குத்தான் போலி பதிவு ஆரம்பிக்கிறானுங்கன்னு பார்த்தால், ஒரு "ஆசாமிக்கே" போலியா ?//

    அப்போ கோவி ஒரு "ஆசாமி"_னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்காரு! ஓஓஓஓஓஓஓ! :-)

    ReplyDelete
  31. //கப்பி பய said...
    :)))
    என்சாய் மாடி!! :))//

    என்சாயா? இருங்க...காஞ்சிபுரமும் வரும்! :-))

    ReplyDelete
  32. சரி, அப்புறம், ஆகட்டும்...

    ReplyDelete
  33. பயங்கரக் கூத்தடிச்சதாக் காற்றுவாக்கில் சேதி வந்துச்சு.

    ஆஹா......

    மை.பா. நல்லா இருக்கு பார்க்க:-))))

    ReplyDelete
  34. ஊருக்குப் போயிட்டு வந்து முதல் பதிவே அல்வாவா!

    ம்ம்ம்... நடத்துங்க சாமி!

    ஸ்டில் வெயிட்டிங்!
    :))

    ReplyDelete
  35. பயங்கரக் கூத்தடிச்சதாக் காற்றுவாக்கில் சேதி வந்துச்சு.

    ஆஹா......//
    துளசி துளசி எனக்கு மட்டும் மெயில் போடுங்கப்பா. என்ன கூத்துன்னு:)

    ReplyDelete
  36. கேஆர் எஸ் முதல்ல(சென்னைவாசிகளே கவனிங்க முதல்ல என்பதை அழுத்திப்படிங்க:)) எங்க ஊரு வந்ததுக்கு நன்றி சொல்லணும்...
    ச்சும்மா ரஜனிகாந்த்துக்கு இருக்கறமாதிரி ரவிக்கு ரசிகரசிகைகள் போட்டிபோட்டி வரவேற்றோம்!! பதிவுல பள்ளிகொண்ட போஸ்ல இருக்கறாப்ல லால்பாக் சந்திப்பிலும் போஸ் கொடுத்தார்! மைசூர்பாக் சாப்பிட்ட களைப்போ என்னவோ?:) எங்க வீடுவந்து அருமையா ஒருபாட்டு பாடினார் பாருங்க ஆஹா! குழல் இனிது யாழ் இனிது என்பர்கண்ணபிரான் ரவியின் குரலினிமை கேட்காதவர்!

    ReplyDelete
  37. @இளா - அப்பறம்...வவ்வால் வந்தாரு! :-)

    @டீச்சர் - பயங்கரக் கூத்தா? ஐ ஆம் ஒன் அப்பாவிச் சிறுவன்! :-)
    மை.பா பார்க்க மட்டும் இல்ல, சாப்பிடவும் ஓகோஓஓஓஓஓஓஓ!

    @SK - அல்வா ஜீவ்ஸ் வளர்க்குறாரு!
    நம்ம எப்பமே மைசூர் பாக்கு தானே? :-)

    @வல்லியம்மா - நீங்களுமா? டீச்சர் சும்மானாங்காட்டியும் நிஜமாச் சொல்லுறாங்க! :-)

    ReplyDelete
  38. //* பதிவுகளில் மாற்றுக் கருத்துக்கள் எழுந்தா பின்னூட்டம் இடறதா வேணாமா? யார் பதிவுகளில், எப்படிப்பட்ட பதிவுகளில் மாற்றுப் பின்னூட்டத்தைத் தைரியமாக இடலாம்? அதுவும் பெண் பதிவர்களின் விவாத எல்லை எது வரை இருக்கும்னு நினைக்கறீங்க?
    * ஆன்மீகப் பதிவுகளில் நகைச்சுவை செய்தால் பிடிக்குதா? பலரையும் அடையும் பொருட்டு அடர்த்தி குறைப்பது ஓக்கே தானா?
    * நாகரீக மாற்றங்களுக்கான விடைகள் நம்ம கிட்டயே இருக்கு! நமது கலாச்சாரம் பண்பாட்டுக் கதைகளை current day context-இல் எப்படிக் கொடுக்கலாம்?//

    இம்புட்டு எல்லாம் பேசினோமோ???

    ReplyDelete
  39. //ஷைலஜா said...
    (சென்னைவாசிகளே கவனிங்க முதல்ல என்பதை அழுத்திப்படிங்க:)) எங்க ஊரு வந்ததுக்கு நன்றி சொல்லணும்...//

    இன்னொரு தபா சென்னைக்கு போக முடியாத படி போட்டுக் கொடுக்கறீங்க! உம்...நடத்துங்க, நடத்துங்க!

    //ச்சும்மா ரஜனிகாந்த்துக்கு இருக்கறமாதிரி ரவிக்கு ரசிக ரசிகைகள் போட்டிபோட்டி வரவேற்றோம்!!//

    ரஜினியா? பின்னாடி ஒரு சத்யராஜ் ஆம்ஸ்டர்டாம்-ல இருந்து வரப்போறாரு பாருங்க! :-)

    //மைசூர்பாக் சாப்பிட்ட களைப்போ என்னவோ?:)//

    இல்லையில்லை! மை.பா-வைப் பார்சல் பண்ணிக்க மறந்துட்டேன்!

    //எங்க வீடுவந்து அருமையா ஒருபாட்டு பாடினார் பாருங்க ஆஹா! குழல் இனிது யாழ் இனிது என்பர்கண்ணபிரான் ரவியின் குரலினிமை கேட்காதவர்!//

    போட்டுக் கொடுத்தாச்சா? திருப்தியா ஷைலுக்கா?
    இது அடுத்த பதிவில் வரும்! :-)

    ReplyDelete
  40. வாங்க ஜீவ்ஸேந்தி!
    //இம்புட்டு எல்லாம் பேசினோமோ???//

    அலோ நம்ம இன்னும் பேசவே ஆரம்பிக்கலை! இப்ப தான் லால் பாக்கில் கட்டம் கட்டி இருக்கோம்!

    இதெல்லாம் டிடி அக்கா வூட்ல பேசியது!
    யக்கா வந்து சொல்லுங்க!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP