Thursday, August 14, 2008

Aug 15 - தேசிய கீதமா? வி-தேசிய கீதமா??

அனைவருக்கும் இனிய சுதந்திர தின (விடுதலை நாள்) வாழ்த்துக்கள்!
அறுபத்தோரு ஆண்டுகளைக் கொண்டாடும் இந்தியா, இன்னுமா அந்நியரைப் போற்றும் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுள்ளது? - என்று ஒரு சர்ச்சை அவ்வப்போது சில இடங்களில் எழும்! பின்பு அடங்கி விடும்! அது என்ன என்று பார்க்கலாம் வாங்க! அப்படியே நம் தேசிய கீதமும், அதன் பொருளும் அறிந்து கொள்ளலாம் வாங்க!

அதற்கு முன், தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நேர்காணலை Rediff.com இல் படித்து விட்டீர்களா? சுருக்கமாக இங்கே!

1.Where we achieved:
The Indian economy is in an ascent phase. Particularly, our economy is growing at 8% to 9% per annum for the last four years
Where we failed:
220 million people living below the poverty line shows the failure of our system
சாதனை: இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8-9%; சக்கரத்தின் மேல் புறச் சுழற்சியில் உள்ளோம்!
வேதனை: 22 கோடி மக்கள் இன்னும் வறுமைக்கோட்டின் கீழே வாழ்வது, நம் அமைப்பின் தோல்வி!

2.The need for a National Campaign to Eradicate Terrorism
தீவிரவாதம் களையெடுக்க நாடு தழுவிய முயற்சி

3.The skill deficit among our youth is the most important issue.
இளைஞர் ஆற்றல் பற்றாக்குறை என்பது முக்கியமான பிரச்சனை!

4.Always elect people who will work for development politics.
வளர்ச்சி அரசியல் செய்பவர்களுக்கு மட்டுமே வாக்கு அளியுங்கள்!

5.It is essential that economic prosperity reaches 700 million people in rural areas.
நகர்ப்புறம் அல்லாத எழுபது கோடி மக்களை, பொருளாதார வளர்ச்சி சென்று தாக்குமா/அடையுமா?

6.The youth is restless. They want to contribute to make India great.
The time has come to launch a youth movement for national development.
இந்திய இளைஞர் இயக்கம் ஒன்றைத் தொடங்கும் வேளை வந்து விட்டது!


பதிவுக்கு மீண்டும் வருவோம்...

தாகூர் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களுக்குச் சொந்தக்காரர்!
உலகில் வேறு எவர்க்கும் இந்தப் பெருமை உள்ளதா என்று தெரியவில்லை!
ஒன்று, நம் இந்தியாவின் தேசிய கீதம் - ஜன கன மன
இரண்டு, பங்க்ளாதேஷ் எனும் வங்காள தேசத்தின் கீதம் - அமர் ஷோனார் பாங்க்ளா

யாருக்கும் ரவீந்தரநாத தாகூரின் கவித்துவத்தின் மீதோ, தேச பக்தியின் மீதோ ஐயம் கிடையாது!
ஜாலியன் வாலா பாக் படுகொலையைக் கண்டித்து, தமக்குக் கொடுக்கப்பட்ட சர் பட்டத்தை உதறி எறிந்தவர் தான் தாகூர்.
தாகூரின் சாந்தி நிகேதன் பலகலைக் கழகத்துக்கு, அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட்டது தான் ஆங்கிலேய அரசு!
பின் ஏன் இந்த சர்ச்சை? இந்தப் பாடல் எழுதப்பட்ட நேரம் அப்படி!

Dec 1911-இல் இது எழுதப்பட்டது! இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட பாடல் ஜன கன மன!
அந்த நேரம் தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவும் கூட! அந்தக் காலக்கட்டத்தில் இருந்த காங்கிரசின் நிலை வேறு! பூர்ண சுதந்திரம் எல்லாம் அப்போது கிடையாது! அப்போது தான் வங்காளப் பிரிவினையை (Partition of Bengal), காங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் வாங்கயிருந்த நேரம்!

அப்போது கல்கத்தாவில் (கொல்கத்தாவில்) காங்கிரசின் மாநாடு நடந்தது! Dec 27, 1911 அன்று இரண்டாம் நாள் கூட்டத்தில் இந்த ஜன கன மன பாடல் துவக்க வணக்கமாகப் பாடப்பட்டது.
அந்த நாளில், ஜார்ஜ் மன்னரையும் அரசியையும் வரவேற்று, வரவேற்புப் பத்திரம் வாசித்தார்கள்! வங்காளப் பிரிவினையின் வாபசுக்கு நன்றி தெரிவித்தார்கள்! கூடவே ராம்புஜ் சவுத்தரி என்பவர் மன்னரை வரவேற்றுப் பாடிய ஹிந்திப் பாடலையும் பாடினார்கள். போதாதா?
பனை மரத்தின் கீழே நின்று பாலையே குடித்தாலும்...கள் என்று சொல்வார்களே...அந்தக் கதை ஆகி விட்டது!

அன்றைய ஆங்கில அரசுப் பத்திரிகைகள் ஸ்டேட்ஸ்மேன், இங்க்லீஷ் மேன் போன்றவை, இந்த நிகழ்ச்சியைக் கவர் செய்யும் போது, ஏதோ மன்னர் ஜார்ஜை வரவேற்க, பிரத்யேகமாக எழுதிப் பாடப்பட்ட பாடல் என்று நினைத்து எழுதி விட்டன. வங்காள மொழி என்று கூடத் தெரியாமல், சில பத்திரிகைகள் இதை ஹிந்திப் பாடல் என்று கூட எழுதின. இதை அறிந்து தாகூரே அப்போது வருத்தப்பட்டார்.



ஒரு பாடலைப் பற்றிப் பலர் விமர்சிக்கலாம்.
ஆனால் அதன் அடி நாதத்தில், யாரை வைத்து அது பாடப்பட்டது என்பது, ஆக்கிய கவிஞனின் மனசாட்சிக்குத் தான் முதலில் தெரியும். எனவே தாகூரின் மனநிலை என்ன என்பதையும் நாம் முதலில் படிக்க வேண்டும்!

ஜன கன மன, அதி நாயக = மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்யும் நாயக...அவர்கள் வாழ்வையும் விதியையும் நிர்ணயிக்கும் பாக்ய விதாதா....என்று மக்கள் மனங்களில் ஆட்சி செய்வதாக, எந்த ஒரு மானிட அரசனையும் பாடியதாக இல்லை.

மேலும் அரசனையும் அரசியையும் சேர்த்தே தான் எல்லா இடத்திலும் வரவேற்றார்கள். ஆனால் இங்கோ பாடலில் அரசியைப் பற்றிய குறிப்பே இல்லை! நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்தி தான். மொத்தம் ஐந்து பத்திகள் தாகூர் எழுதினார்! மூன்றாம் செய்யுளில் இறைவனை நேரிடையாகவே சொற்களால் குறிக்கிறார் தாகூர்! கடவுளைச் சாரதியாகக் கொண்டு, காலங்காலமாக ஓடும் நாடு என்னும் தேர் - அதன் வீழ்ச்சியும் எழுச்சியும் பற்றிப் பேசுகிறார்.

ஆங்கிலக் கவிஞர் யீட்ஸ் (Yeats) பின்னாளில் தன் பெண் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜன கன மன ஆக்கப்பட்டதின் சில தகவல்களைச் சொல்லியுள்ளார். இது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழிலும் வெளிவந்தது!
"அன்று அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட தாகூர், அருமையான பாடல் ஒன்றை இயற்றினார். இறைவனை நோக்கி எழுதப்பட்ட பாடல் இது. காங்கிரசாரிடம் கொடுங்கள். மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று தாகூர் சொன்னார்".
இதைக் கேட்ட நண்பர் ஒருவர், யீட்ஸ்-இடம் இந்தத் தகவலைச் சொல்லிப் பின்னர் பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார்கள்!
ஆனால், குற்றக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கி விட்ட பின், மனதுக்குச் சமாதானம் ஆவது? ஒன்றாவது!

கேட்வே ஆப் இந்தியா (Gateway of India) என்ற இந்தியாவின் நுழைவாயில், மும்பையில் உள்ளது.
இது ஜார்ஜ் மன்னரையும், மேரி அரசியையும் வரவேற்கக் கட்டப்பட்டது தான்! அந்த வாயிலில் அவ்வாறே எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு இருக்கும்!
"Erected to commemorate the landing in India of their Imperial Majesties King George V and Queen Mary on the Second of December MCMXI"
இதைப் போய், எப்படி "இந்தியாவின் நுழைவாயில்" என்று சொல்லலாம்? என்று பேசிக் கொண்டா இருக்கிறோம்?

1911-இல் பாடப்பட்டாலும், இதற்கு இசை அமைக்கப்பட்டது என்னவோ 1918-இல் தான்!
தாகூரும், ஆந்திரா-மதனப்பள்ளியில் உள்ள தியோசாபிகல் கல்லூரி தம்பதிகள் - ஜேம்ஸ் எச் கசின் (James H Cousin) இருவரும், சேர்ந்து தான் பாடலுக்குப் பண் அமைத்தார்கள் (Notation)! அதற்குப் பின்னர் தான் பாடல் பெரும் ஹிட் ஆனது!
சுருக்கமான அதே சமயம் கம்பீரமான இசை கொண்ட பாடல் என்பதால் மேலும் பிரபலமானது. ஜெயஹே ஜெயஹே என்பது இன்னும் தூக்கிக் கொடுத்தது.

நேதாஜியின் இந்திய தேசியப் படை (INA), இதைத் தனது கீதமாகக் கொண்டது!
1946-இல் காந்தியடிகளும் ஜன கன மன பாடல், துதிப்பாடல்களைப் போல தேசியத்துடன் இணைந்த பாடலாக ஆகி விட்டது என்று கூறி மகிழ்ந்தார்.


Capt Ram Singh Thakur playing the National Anthem
in the presence of Mahatma Gandhi.




அதே நேரம், பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் எழுதிய வந்தே மாதரம் பாடலும் நல்ல ஹிட்! தாகூரே இந்தப் பாடலை வரவேற்று பல இடங்களில் பேசியுள்ளார்.
ஆனால் அதில் மதம் குறித்த சில வெளிப்படையான சொற்கள் இருப்பதால், தேசிய கீதமாக அதை ஆக்கக் கூடாது என்று சில தேசியவாதிகள் பிரச்சனை எழுப்பினார்கள்.
இதனால் வலதுசாரி தேசபக்தர்கள் சிலரும், எதையோ எதிர்க்கப் போய், தாகூரின் கீதத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது தான் பரிதாபம்!

மேலும் Band வாத்தியத்தில் வந்தே மாதரம் இசைப்பது சற்றே கடினம்.
Band இசை என்பது ராணுவத்துக்கு மிகவும் தேவையான ஒன்று! நாட்டின் கீதத்தை உள்நாடு, வெளிநாடு என்று பல இடங்களில், Band-இல் வாசிப்பது இன்றியமையாத வழக்கம்!

கவிஞர் இக்பாலின் சாரே ஜஹான் ஸே அச்சா என்ற அருமையான பாடலும் போட்டியில் இருந்தது. அது சற்றுப் பெரிய பாடல். ஆனால் இசையோ அமர்க்களம்!

சுதந்திரம் பெற்ற பின், இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு நிர்ணய சபை (Constituent Assembly), தேசிய கீதத்தை முடிவு செய்தது! இதோ சபை விவாதங்களின் சுட்டி! ஜன கன மன தேசிய கீதமாக உதித்தது!
அதே சமயம், வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்தின் ஆத்ம நாதம் - எனவே இது தேசியப் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டு, தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பு அளிக்கப்பட்டது!

இன்று உலகின் பல இசைக்கருவிகளில் நம் தேசிய கீதத்தை இசைக்க இயலும்! அதுவும் Band இசை! அதில் வெளுத்த வாங்க நம் தேசிய கீதத்தை மிஞ்ச எந்த கீதத்தாலும் முடியாது! அமெரிக்க கடற்படை (US Naval Band) நம் கீதத்தை வாசிப்பதை இங்கு கேளுங்கள்!


2005இல், தேசிய கீதத்தில் இன்னொரு புதிய சர்ச்சை முளைத்தது.
சிந்து என்று கீதத்தில் வருகிறதே! அது இப்போது பாகிஸ்தானில் அல்லவா உள்ளது? அதைப் போய் நாம் எப்படிப் போற்றிப் பாட முடியும்?
"சிந்துவை" எடுத்து விட்டு, "காஷ்மீரம்" என்ற சொல்லைப் போட்டு விடுங்கள் என்று வாதிட்டார்கள்!

உச்ச நீதிமன்றம் வழக்கைக் கேட்டு விட்டு,
சிந்து என்பது கலாச்சாரம், பண்பாடு, மக்கள் ஆகிய இவற்றைத் தான் குறிக்கும். வெறும் பல ஆயிரம் ஏக்கர்கள் கொண்ட மண்ணை மட்டும் அல்ல!
சிந்து நதியும், சிந்தி மக்களும் இந்தியக் கலாச்சாரத்தில், பெரும் பங்கு வகிப்பவை!
எனவே தேசிய கீதத்தைத் துளியும் மாற்றத் தேவை இல்லை என்று தீர்ப்பு அளித்தது!


ஒரு பாடலின் ஆத்மா-வைப் பார்ப்பதை அனைவரும் கொஞ்சம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!

அதில் வரும் வார்த்தைகளையோ, இல்லை கால கட்டத்தையோ "மட்டும்" பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கத் தேவையில்லை!

வரும் தலைமுறையை, அது எப்படி உற்சாகப்படுத்தும் என்ற சிந்தனை இங்கு மிகவும் முக்கியம்! அப்படி எல்லாம் பார்த்தால்,
ஜன கன மன அதி நாயக - மக்களின் மனங்களில் அதி நாயகமாக, என்றென்றும் ரீங்காரம் இட்டுக் கொண்டு தான் இருக்கும்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே!!!



சில சுட்டிகள்:
தேசிய கீதம் - தமிழில், பொருளுடன்! நண்பர் குமரன், முன்னொரு முறை இட்ட இடுகை
வந்தே மாதரம் - பாரதியாரின் மொழிபெயர்ப்பு

வெள்ளைக்கார பெண்ணொருத்தி, சொல் ஒரு சொல்லாய், சொல்லிக் கொடுக்கும் ஜன கன மன!


சியாச்சென் (Siachen) பனிப்பாறைகளில் - ஜன கன மன முழக்கம்!


ஜன கன மன - பல வாத்தியங்களில் முழக்கம்!


References:
Meaning of the National Anthem at Nation Portal of India, Government of India.
http://india.gov.in/knowindia/national_anthem.php


Are we still singing for the Empire? - by Pradip Kumar Datta
http://www.sacw.net/DC/CommunalismCollection/ArticlesArchive/pkDatta092004.html

How the anthem was set to music? - An article from The Hindu -
http://www.hindu.com/mag/2006/03/19/stories/2006031900120400.htm

Tagore's undying allegiance to India & Jana Gana Mana
http://homepages.udayton.edu/~chattemr/janaganamana.html

Capt Ram Singh Thakur playing the National Anthem in the presence of Mahatma Gandhi.
http://www.tribuneindia.com/2002/20020504/windows/main2.htm



சென்ற ஆண்டு விடுதலை நாள் விழாவின் போது இட்ட இடுகையின் மீள்பதிவு!

18 comments:

  1. மீ த பர்ஸ்ட்...

    ReplyDelete
  2. அவசியமான பதிவு. புது விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன்.

    கல்லூரியில் தேசிய மாணவர் படையில் இருந்த போது கொண்டாடியது. அதற்குப் பிறகு, மனத்தில் ஒரு சல்யூட் அடிப்பது மட்டும் தான் தொடர்கிறது. எங்கள் ஊர் எமனேஸ்வரத்தில்,தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன், அதற்கு தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு வைத்து, கற்பூரம் ஏற்றி பூஜை செய்த பின் தான் கொடி ஏற்றுவர்.

    வந்தே மாதரம்

    ReplyDelete
  3. hmmm....நிறைய மேட்டர் சொல்றீங்க. படிக்கத்தான் நேரம் கிடைக்க மாட்டேங்குது.

    உங்களுக்கு யாரோ blogging பத்தி தப்பா சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன். நீங்க எழுதற ஒவ்வொரு இடுகையும் ஒரு புத்தகம் அளவுக்கு மேட்டர் இருக்கு. சீக்கிரமா அச்சுத் துறைக்கு முன்னேறுங்க தல.

    ReplyDelete
  4. ரெண்டு இடுகை ஒரே சமயத்துல போட்டா எப்படித்தான் படிக்கிறது :( மீள்பதிவுங்கிறதால மீண்டு(ம்) வந்து படிச்சிக்குறேன்.

    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. போனவருடம் இந்த நேரம் ரொம்ப அலைச்சல், படிக்கலை போலிருக்கு. நல்ல தொகுப்பு.

    சுதந்திர தின வாழ்த்துகள். பாருக்குள்ளே நல்ல நாடு! मेरा भारत महान!

    ReplyDelete
  6. அருமையான் நிறைந்த கருத்துக்கள்...சில போன பதிவில் இல்லைன்னு நினைக்கிறேன்..:)
    நன்றி கே.ஆர்.எஸ்.

    எல்லோருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அருமை.

    ஜெய்ஹிந்த்!

    ReplyDelete
  8. தண்ணிர் விட்டோ வளர்த்தோம்,சர்வேசா,கண்ணீரால் காத்தோம் !
    இது கருகத் திருவுளமோ ??????

    நிறைய வருத்தமும் இருக்கிறது,இன்றைய தேச நிலை கண்டு !

    கூடவே பெருமிதமான சுதந்திரதின வாழ்த்துக்கள்.


    நிறைய விதயங்கள் சொல்லியிருக்கீங்க..
    உங்களைப் பார்த்தால்(படித்தால் !) பொறாமையாகத்தான் இருக்கிறது !
    :)

    ReplyDelete
  9. இனிய விடுதலை நாள் நல்வாழ்த்துகள்

    அருமையான பதிவு - ஏகப்பட்ட செய்திகள் - பலமான ஆதாரத்துடன்

    கேயாரெஸ் = நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  10. //வெள்ளைக்கார பெண்ணொருத்தி, சொல் ஒரு சொல்லாய், சொல்லிக் கொடுக்கும் ஜன கன மன!
    //

    சுட்டிக்கான படம் இல்லை எனச் சொல்கிறட்து யூடியூப்

    ReplyDelete
  11. அருமையான பதிவு நிறைய செய்திகள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை - இன்றுதான் தெரிந்துக்கொண்டேன்!

    நன்றி!

    ReplyDelete
  12. ஆயில்யனுக்கு ரிப்பீட்டேய்!!

    ReplyDelete
  13. பதிவுக்கு மிக நன்றி.

    இனிய விடுதலைநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. யு எஸ் நேவி வாசித்த பேண்ட் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  15. நல்லதொரு பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  16. மணிமணியான தகவல்கள். அதெப்படி ரவி ஆன்மீகவிஷயங்களிலும் கொடிகட்டிப்பறக்கறீங்க அருமைத்தாய்த்திருநாட்டுவரலாற்றினைக்கூறும் தகவல்களிலும் சிறந்து நிக்கறீங்க! ரியலி அமேசிங்! தேசியகீதம்பற்றிய இந்தப்பதிவே இனிய கீதமாய் நெஞ்சில் நிறைகிறது

    ReplyDelete
  17. அன்பின் கண்ணபிரான்,
    சுதந்திர தின வாழ்த்துக்கள், அருமையான பதிவு.

    // மூன்றாம் செய்யுளில் இறைவனை நேரிடையாகவே சொற்களால் குறிக்கிறார் தாகூர்! கடவுளைச் சாரதியாகக் கொண்டு, காலங்காலமாக ஓடும் நாடு என்னும் தேர் //

    அந்த கடவுள் ஏதோ அனானி கடவுள் அல்ல, அந்த சாரதியும் அனானி சாரதி அல்ல, நாம் வணங்கும் ஸ்ரீ பார்த்த சாரதி தான் அது. ஸ்ரீகிருஷ்ணனையே இறை என்ற அளவில் க்வியோகி தாகூர் கண்டார். இந்தப் பாடலில் பாரத பாக்ய விதாதா என்றும் மேலும் *பல இடங்களுலும்* தாகூர் தெளிவாகக் குறிப்பிடுவது ஸ்ரீகிருஷ்ணரையே. முழுமையான விளக்கம் இங்கே -

    http://www.slideshare.net/kichu/secret-of-janaganamana

    ஜனகணமன ஏதோ ஒரு சுத்திகரிக்கப் பட்ட "செக்யுலர்" பாடல் என்று ஜல்லியடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த விளக்கத்தை அனுப்பி வையுங்கள்.

    உண்மையில் வந்தே மாதரம் என்ற அமர கீதத்தில் கூட "மதவாதம்" எதுவும் இல்லை. பூமியையும், அதன் அங்கமான நம் தேசத்தையும் அன்னை என்று கூறுவது இந்துமதக் கருத்தாக்கம் தான். (அதனால் தான் மாபெரும் இந்து ஞானி திருவள்ளுவர்
    "நிலமென்னும் நல்லாள் நகும்" என்று பாடியுள்ளார்!!). பாரதப் பண்பாட்டில் உதித்த இந்த உன்னத சிந்தனையை ஏன் மத முத்திரை குத்தி நிராகரிக்க வேண்டும்? அது போலி மதச்சார்பின்மை வாதிகள் விளைவித்த குழப்பம்! பார்க்க: எனது பழைய விரிவான கட்டுரை - http://jataayu.blogspot.com/2006/09/blog-post_115735972528194365.html

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP