Wednesday, November 05, 2008

திருமதி. ஓபாமா - அமெரிக்காவின் முதல் பெண்மணி!

Michelle Obama - மிஷேல் ஓபாமா! இவர் தான் இனி அமெரிக்காவின் முதல் பெண்மணி! வெள்ளை மாளிகையின் தலைவி! கருப்பினப் பெண்மணி வெள்ளை மாளிகையை ஏற்று நடத்தப் போகிறார்!


அவர் எப்படி? தேறுவாரா? ஓபாமாவுக்கு ஈடு கொடுப்பாரா? அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற மரியாதையைத் தகுந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள அவரால் முடியுமா? - இப்படியும் ஒரு கருத்துக் கணிப்பு நடைபெற்றது, தேர்தலின் போது!

60% மக்கள் - மிஷேல் ஓபாமாவை ஆதரித்து வாக்களித்தனர்!
35% மக்கள் - அவரால் முடியுமா என்று ஐயப்பட்டனர்.

ஆக, இதிலும் ஓபாமா தம்பதியருக்கு வெற்றி தான்! மக்கள் நிற வேற்றுமையைப் பாராட்டவில்லை என்பதையே இதுவும் உறுதிப்படுத்துகிறது!
குடியரசுக் கட்சியின் டென்னிசி மாகாணக் கிளை, திருமதி ஓபாமா-வை தேர்தல் பிரசாரத்தின் போது பலமுறை வம்புக்கு இழுத்தது! Primary என்னும் முதல் சுற்றில், அவர் பேசிய போது,
First time in my adult life, I am proud of my country because it feels like hope is finally making a comeback.
எனது வாலிப வயதில் முதன் முறையாக, நான் நாட்டை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நம்பிக்கை மீண்டும் வருவது போல உணர்கிறேன்
- என்று குறிப்பிட்டார்.

இதைத் திரித்து, கறுப்பினக் கணவர் அதிபர் பதவிக்கு நிற்பதால் மட்டுமே, அவர் முதன் முறையாக நாட்டை நினைத்துப் பெருமைப்படுகிறாரா? இல்லையென்றால் படமாட்டாரா? - என்று சிக்கலான கேள்விகளை எழுப்பினார்கள்! இதோ சுட்டி

சில பத்திரிகைகளும், அவரை வெறும் வீட்டுத் தலைவி என்றும், Mrs. Grievance (திருமதி. வருத்தம்) என்றும் எழுதின!

ஆனால் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகக் கடந்து, கணவரின் வெற்றிக்கு, பின்னணியில் வெகுவாக உழைத்தார்! அதிகம் வாய் திறக்காது, பல பிரச்சாரங்களில், செயல்முறைகளில் மட்டுமே ஈடுபட்டார்.
ஓபாமாவும், தன் மனைவியைத் தாக்குவோரைக் கடிந்து கொண்டார். "குடும்பம் சிவிலியன்கள் போல! அவர்களைப் போருக்குள் இழுப்பது அமெரிக்க அரசியல் பண்பாட்டுக்கு இழுக்கு" என்று சொன்னவுடன் எல்லாம் அடங்கியது!


வெள்ளை மாளிகைத் தலைவிக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

திருமதி ஓபாமா அவர்களே!
உலகத் தலைவர்களை உங்கள் மாளிகைக்கு வரவேற்கத் தயாராகும் அதே சமயத்தில்,
* உலகில் நிறவெறி குறையவும்,
* அதே சமயம் ஒடுக்கப்பட்ட நிறத்தினர் தாழ்வு மனப்பான்மை கொள்வதைக் குறைக்கவும்,
* ஆப்பிரிக்காவில் ஒடுக்கப்பட்ட குழந்தைகள் நலம் காணவும், உங்களால் முடிந்த முயற்சிகளை எல்லாம் எடுங்கள்! இனி ஆப்பிரிக்கக் குழந்தைகளின் அவலங்களைப் படங்களில் தேடினாலும் கிடைக்காது என்று உத்வேகம் உங்களைச் சூழட்டும்!

வெள்ளை மாளிகை,
உங்களால் மேலும் வெண்மை பெறட்டும்!
வாழ்த்துக்கள் மிஷேல் ஓபாமா! :)

49 comments:

  1. சூப்பர் ண்ணா, எல்லாரும் தலைவனை பாராட்டினால் நீங்க தலைவிய பாராட்டுறீங்க..

    திருமதி. ஒபாமாவிற்கு நானும் வாழ்த்துக்கள் சொன்னதா நீங்க சந்திக்கும் போது மறக்காம சொல்லிடுங்க..

    ReplyDelete
  2. Raghav said...
    சூப்பர் ண்ணா, எல்லாரும் தலைவனை பாராட்டினால் நீங்க தலைவிய பாராட்டுறீங்க..

    >>>>>
    அதானே பெண் இனப்பிரதிநிதியே புதியபாரதியே! இப்போ உங்கள நான் வாழ்த்தறேன்.!

    ReplyDelete
  3. //எல்லாரும் தலைவனை பாராட்டினால் நீங்க தலைவிய பாராட்டுறீங்க//

    கேஆரெஸ் அண்ணாச்சி கரக்ட்டா தான் பாராட்டி இருக்கார்.

    வேற ஒன்னும் இல்ல ராகவ் அண்ணே!

    இப்போ கேஆரெஸ் அண்ணாச்சி ஆக்டிவா பதிவு/பின்னூட்டம் போடறார்னா அதுக்கு அண்ணியின் பெருந்தன்மை தானே காரணம்? :p

    அதே தான் ஒபாமாவுக்கும்.

    @KRS, அண்ணே நீங்க நடத்துங்க. :))

    ReplyDelete
  4. எல்லோரும் ஒபாமாவை பற்றி பேசும் போது நீங்க திருமதி ஒபாமாவை பற்றி பேசி அசத்திட்டீங்க....

    ReplyDelete
  5. இப்போ ஆன்மீக பார்வையில இந்த பதிவுல பாக்கலாமா?

    அடியவர்கள் தமக்கு ஏதேனும் காரியம் ஆகனும்னா நேரிடையா பகவானை அதாவது பெருமாளை அணுகுவதை விட தாயாரை அணுகினால் சீக்ரம் நடந்தேறி விடும்.

    அது போல ....

    (கேஆரேஸ் அண்ணே! இப்படி ஒரு விளக்கம் ரெடியா இருக்குமே உங்ககிட்ட) :))

    ReplyDelete
  6. //வேற ஒன்னும் இல்ல ராகவ் அண்ணே! //
    என்னது அண்ணனா ?? மீ ஒன் உண்மையான பிரம்மச்சாரி. :)

    ReplyDelete
  7. //என்னது அண்ணனா ?? மீ ஒன் உண்மையான பிரம்மச்சாரி.//

    அண்ணே!னு தானே கூப்டேன், இதுக்கும் உங்க பிரம்மசரியத்துக்கும் என்ன சம்பந்தம்..? :))

    மை பாதர் இஸ் நாட் இன்சைடு தி குதிர்..? :p

    ReplyDelete
  8. //அண்ணே!னு தானே கூப்டேன், இதுக்கும் உங்க பிரம்மசரியத்துக்கும் என்ன சம்பந்தம்..? :))
    //

    நீர் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து பெருசுங்க லிஸ்ட்ல சேந்துட்டீக.. நான் கல்யாணமாகா கட்டிளாம் காளை.. ஸோ ஐ ஆம் நாட் அண்ணன்.. அதை சொல்ல வந்தேன்..

    ReplyDelete
  9. ambi said...
    //என்னது அண்ணனா ?? மீ ஒன் உண்மையான பிரம்மச்சாரி.//

    அண்ணே!னு தானே கூப்டேன், இதுக்கும் உங்க பிரம்மசரியத்துக்கும் என்ன சம்பந்தம்..? :))

    மை பாதர் இஸ் நாட் இன்சைடு தி குதிர்..?
    <<<<<<<<<<<<<<

    அம்பி!!! ஆரம்பிச்சாச்சா:)::) ராகவ் பச்சக்குழந்தைப்பா:)

    ReplyDelete
  10. //அம்பி!!! ஆரம்பிச்சாச்சா:)::) ராகவ் பச்சக்குழந்தைப்பா:)//

    ஹா ஹாஹ்ஹா..

    அம்பி பார்த்தீரா..

    உம் குறு(அ)ம்பு எனும் அஸ்த்திரத்தை என் அக்காவின் மை.பா. எனும் கேடயம் (அவ்ளோ ஸ்ட்ராங்)கொண்டு தகர்த்திடுவேன்..

    ReplyDelete
  11. Raghav said...
    //அம்பி!!! ஆரம்பிச்சாச்சா:)::) ராகவ் பச்சக்குழந்தைப்பா:)//

    ஹா ஹாஹ்ஹா..

    அம்பி பார்த்தீரா..

    உம் குறு(அ)ம்பு எனும் அஸ்த்திரத்தை என் அக்காவின் மை.பா. எனும் கேடயம் (அவ்ளோ ஸ்ட்ராங்)கொண்டு தகர்த்திடுவேன்..

    6:04 AM, November
    <<<<<<<<<<<<<>>
    ஹ்ம் என் மைபாவை நீ இப்படியா கிண்டல் செய்யணும் தசரதபுத்ரா?:0
    பேசாம அம்பிக்கே சப்போர்ட் பண்ணி இருக்கலாம் ஹ்ம்:):)

    ReplyDelete
  12. Ravi
    she is first lady and not first citizen:)) So muthal peNmani is appropriate translation.

    ReplyDelete
  13. முதல் குடிமகள் என்ற பெயர் திருமதி.ஒபாமாவுக்குச் சரியாகப் பொருந்தும்.

    மாற்றம் என்பது மாறாதது என்பது இன்றைய நிகழ்வைப் போல் எப்போதும் நிகழ்ந்ததில்லை.

    மாற்றத்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. இவங்கதான் உயரமான முதல் பெண்மணியும் கூட...5 ft 11 inches!!

    ReplyDelete
  15. அம்பி & ராகவ்
    நீங்க எந்த காலேஜ்-ல கும்மியாலஜி படிச்சீங்க? தெரிஞ்சிக்கலாமா? :)

    ReplyDelete
  16. //Raghav said...
    சூப்பர் ண்ணா, எல்லாரும் தலைவனை பாராட்டினால் நீங்க தலைவிய பாராட்டுறீங்க..//

    என் வழி தனி வழி! :)

    //திருமதி. ஒபாமாவிற்கு நானும் வாழ்த்துக்கள் சொன்னதா நீங்க சந்திக்கும் போது மறக்காம சொல்லிடுங்க...//

    இதுக்கும் நான் தான் தூதாகக் கெடைச்சேனா? :)

    ReplyDelete
  17. //ஷைலஜா said...
    அதானே பெண் இனப்பிரதிநிதியே புதியபாரதியே! இப்போ உங்கள நான் வாழ்த்தறேன்.!//

    யக்கா, யூ டூ கும்மியாலஜி? :)

    ReplyDelete
  18. //ambi said...
    @KRS, அண்ணே நீங்க நடத்துங்க. :))//

    (அடியேன் அப்பாவியான-இயல்பான முகத்துடன்)
    எதை நடத்தணும் அம்பி அங்க்கிள்? :)

    ReplyDelete
  19. //இசக்கிமுத்து said...
    எல்லோரும் ஒபாமாவை பற்றி பேசும் போது நீங்க திருமதி ஒபாமாவை பற்றி பேசி அசத்திட்டீங்க....//

    அசத்துனது ஓபாமா & ஓபாமா தாங்க இசக்கிமுத்து!
    காலம் காலமா குடியரசுக் கட்சியின் கோட்டைகளைக் கூட அண்ணாச்சி கைப்பற்றி இருக்காரு!

    ReplyDelete
  20. //ambi said...
    இப்போ ஆன்மீக பார்வையில இந்த பதிவுல பாக்கலாமா?//

    :)

    //அடியவர்கள் தமக்கு ஏதேனும் காரியம் ஆகனும்னா நேரிடையா பகவானை அதாவது பெருமாளை அணுகுவதை விட தாயாரை அணுகினால் சீக்ரம் நடந்தேறி விடும்//

    ஹா ஹா ஹா!
    காரியம் ஆகனுமே-ன்னு மட்டும் தாயாரை அணுகினா ஒன்னுமே ஆகாது! தயிர் கடையும் மத்துல ாடி விழும். இல்லீன்னா நீங்க வழக்கமா இட்லி அரைக்கும் கிரைண்டரில் கட்டப்படுவீங்க :)

    //(கேஆரேஸ் அண்ணே! இப்படி ஒரு விளக்கம் ரெடியா இருக்குமே உங்ககிட்ட) :))//

    அடப்பாவி அம்பி
    பந்தலுக்கு வாரிசா உன்னைய போட்டுறட்டுமா? :)

    ஹூம்...மெளலி அண்ணனுக்குக் கொடுக்கலாம்-னு இருந்தேன்!:)

    ReplyDelete
  21. //ambi said...
    //என்னது அண்ணனா ?? மீ ஒன் உண்மையான பிரம்மச்சாரி.//
    அண்ணே!னு தானே கூப்டேன், இதுக்கும் உங்க பிரம்மசரியத்துக்கும் என்ன சம்பந்தம்..? :))//

    பிரம்மசரியமா? அப்படின்னா? என்ன ராகவ், உன்னைய அம்பி இப்படித் தப்பா எடை போட்டுட்டாரு? :)

    ReplyDelete
  22. //Raghav said...
    //அம்பி!!! ஆரம்பிச்சாச்சா:)::) ராகவ் பச்சக்குழந்தைப்பா:)//

    வாட்?
    பச்சைக் குழந்தை?
    யூ மீன் க்ரீன் பேபி?
    க்ரீன் மா மலை போல் பாடி-ன்னு என்னைத் தானே பாடி இருக்காங்க? :))

    ReplyDelete
  23. //ஹ்ம் என் மைபாவை நீ இப்படியா கிண்டல் செய்யணும் தசரதபுத்ரா?:0
    பேசாம அம்பிக்கே சப்போர்ட் பண்ணி இருக்கலாம் ஹ்ம்:):)//

    அக்ரமம்! அராஜகம்! அநீதி!
    அக்காவின் மைபா-வைக் கேடயமாக்கிக் குளிர் காய நினைத்த ராகவ்வே!
    கருட புருடாணத்தின் படி, உன்னைய பெங்களூருவில் இருந்து மைசூருக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறேன்! :)

    ReplyDelete
  24. //பத்மா அர்விந்த் said...
    she is first lady and not first citizen:)) So muthal peNmani is appropriate translation//

    You are right Padma!
    Namooru-la thaan president = 1st citizen of India.
    Inga 1st citizen of America-nnu google panna, kandathum varuthu :)

    Namooru-la muthal peNmani endraal Evaal-nu cholvaangalo? :)

    Will change the heading. but TM-la maarathu!

    ReplyDelete
  25. //இளைய பல்லவன் said...
    மாற்றம் என்பது மாறாதது என்பது இன்றைய நிகழ்வைப் போல் எப்போதும் நிகழ்ந்ததில்லை.//

    ஆமாங்க! White House, Black House ஆகப் போகுதான்னு எல்லாம் கொஞ்சம் நகைச்சுவையாக் கேட்டாங்க! ஆயிடுச்சே! இத்தனை வாக்கு வித்தியாசத்துடன்!

    ReplyDelete
  26. //Radha Sriram said...
    இவங்கதான் உயரமான முதல் பெண்மணியும் கூட...5 ft 11 inches!!//

    அதுக்குள்ள இந்தப் பெண்கள் அளவெடுத்துருவாங்களே, புதுத் துணி தைப்பதற்கு! :)
    ராதா-க்கா, ஏமி இது? ஃபுல் பயோ டேட்டாவும் கையில உந்தியா?

    ReplyDelete
  27. \\ ambi said...
    இப்போ ஆன்மீக பார்வையில இந்த பதிவுல பாக்கலாமா?

    அடியவர்கள் தமக்கு ஏதேனும் காரியம் ஆகனும்னா நேரிடையா பகவானை அதாவது பெருமாளை அணுகுவதை விட தாயாரை அணுகினால் சீக்ரம் நடந்தேறி விடும்.

    அது போல ....

    (கேஆரேஸ் அண்ணே! இப்படி ஒரு விளக்கம் ரெடியா இருக்குமே உங்ககிட்ட) :))
    \\

    அம்பி அண்ணே...எப்படிண்ணே இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...கலக்கல் ;))

    ReplyDelete
  28. முதல் குடிமகளே
    வாழ்த்துக்கள்,அப்படியே ஈழத்தமிழர் துயரையும் துடைக்க ஒரு வழி செய்யுங்கள்

    ReplyDelete
  29. //ஹ்ம் என் மைபாவை நீ இப்படியா கிண்டல் செய்யணும் தசரதபுத்ரா?:0
    பேசாம அம்பிக்கே சப்போர்ட் பண்ணி இருக்கலாம் ஹ்ம்:):)//

    அக்ரமம்! அராஜகம்! அநீதி!
    அக்காவின் மைபா-வைக் கேடயமாக்கிக் குளிர் காய நினைத்த ராகவ்வே!
    கருட புருடாணத்தின் படி, உன்னைய பெங்களூருவில் இருந்து மைசூருக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறேன்! :)



    கருட புராணத்தின் படி விடப்பட்ட சாபம் எந்த நாளில் இருந்து நடைமுறைக்கு வரும்? ராகவன் எப்போது மைசூர் செல்ல வேண்டும்?

    ராகவன் மைசூர் போகவேண்டிய வசதிகளை அண்ணன் என்னும் முறையில் கண்டிப்பா பேஷா உதவி செய்ய தயாரா இருக்கேன்.

    ReplyDelete
  30. திருமதி ஒபாமாவுக்கு வாழ்த்து(க்)கள்.

    வெள்ளைமாளிகை ஜொலிக்கப்போகுது. அப்படியே அதுலே ஒரு அறை,(??? ரூம்) நமக்கும் கேட்டுப் பார்க்கணும்.
    பதிவர் சந்திப்புக்கு இடம் வேணுமுல்லே?

    ReplyDelete
  31. //அதானே பெண் இனப்பிரதிநிதியே புதியபாரதியே! இப்போ உங்கள நான் வாழ்த்தறேன்.!//

    நானும்!

    ReplyDelete
  32. // இதைத் திரித்து, கறுப்பினக் கணவர் அதிபர் பதவிக்கு நிற்பதால் மட்டுமே, அவர் முதன் முறையாக நாட்டை நினைத்துப் பெருமைப்படுகிறாரா? இல்லையென்றால் படமாட்டாரா? - என்று சிக்கலான கேள்விகளை எழுப்பினார்கள்!//

    correct அண்ணே! சிலபேர் கேள்வி கேட்டே கலக்கிருவாங்க, ஆனா ஒரு கேள்வி கூட அவங்கள யாரும் கேட்டு விடக்கூடாது......:)

    தம்பி

    ReplyDelete
  33. //இதுக்கும் நான் தான் தூதாகக் கெடைச்சேனா? :) //

    வேற எதுக்கும் நான் உங்களை தோது போகச் சொல்லலியே..:).. இனிமே தான் சொல்லனும்..

    ReplyDelete
  34. //அம்பி & ராகவ்
    நீங்க எந்த காலேஜ்-ல கும்மியாலஜி படிச்சீங்க? தெரிஞ்சிக்கலாமா? :) //

    காலேஜா??? நான் கும்மியில் எல்.கே.ஜி.. மாணாக்கன் ஐயா.

    ReplyDelete
  35. //என் வழி தனி வழி! :) //

    அதுவே என் வழியும்..

    //பிரம்மசரியமா? அப்படின்னா? என்ன ராகவ், //

    பிரம்மசரியம் = ராகவன் (நாந்தான்)

    ReplyDelete
  36. திருமதி ஒபாமா அழகான பேரு,அழகான சிரிப்பு, பொறுமையோடு கஷ்டமான நாட்களைக் கடந்துவந்திருக்காங்க.
    இந்த தம்பதிகளால இந்த ஊரில நல்லது நிறைய நடக்கணும்.
    வாழ்த்துகள் ரவி.

    எப்பவுமே தாயாரைக் கண்டு கொள்றதுதான் நல்லது:)

    ReplyDelete
  37. //Anonymous said...
    correct அண்ணே! சிலபேர் கேள்வி கேட்டே கலக்கிருவாங்க, ஆனா ஒரு கேள்வி கூட அவங்கள யாரும் கேட்டு விடக்கூடாது......:)//

    ஹா ஹா ஹா
    தம்பி, ஆனாலும் நீ மதுரைக்காரவுங்களை இப்படி எல்லாம் சொல்லக் கூடாது! :)

    கேள்வி கேட்டே பேர் வாங்கும் புலவர்கள்-ன்னு தருமியும் மதுரைக்காரரைத் தான் சொன்னாரு! நீயும் அதே தான் சொல்லுற! :)

    ReplyDelete
  38. //என் வழி தனி வழி! :) //

    அதுவே என் வழியும்..

    //பிரம்மசரியமா? அப்படின்னா? என்ன ராகவ், //

    பிரம்மசரியம் = ராகவன் (நாந்தான்)



    ராகவன் ப்ரம்மச்சாரின்னு யார் சொன்னது?

    ஒரு விசாரணை குழு அமைத்து விடலாமா?

    தவிரவும்
    கும்மியாலஜி ல PHD வாங்கி இருக்கான்.இதுக்கு முன்னால எங்க எல்லாம் ஆட்டம் போட்ருக்கான்னு பாக்கணும்(நான் சொல்வது கண்ணனை பாடும் கோலாட்டம் தான்.)

    ReplyDelete
  39. //கோபிநாத் said...
    அம்பி அண்ணே...எப்படிண்ணே இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...கலக்கல் ;))//

    ஐயகோ...கோப்பி நீயுமா? :)

    ReplyDelete
  40. //குடுகுடுப்பை said...
    முதல் குடிமகளே
    வாழ்த்துக்கள்,அப்படியே ஈழத்தமிழர் துயரையும் துடைக்க ஒரு வழி செய்யுங்கள்//

    ஹூம்...செஞ்சா நல்லாத் தான் இருக்கும் குடுகுடுப்பை. ஆனால் ஓபாமாவுக்கு தன்னாட்டு, தன் அரசியல் நிர்ப்பந்தங்களும் உண்டு போல! இன்னும் ஈழத்துக்கான ஆதரவை, அல்லது திட்டங்களை அவர் சொல்லலை!

    நமக்கு நாமே! :)

    ReplyDelete
  41. //paravasthu said...
    கருட புராணத்தின் படி விடப்பட்ட சாபம் எந்த நாளில் இருந்து நடைமுறைக்கு வரும்? ராகவன் எப்போது மைசூர் செல்ல வேண்டும்?//

    நான் சொன்னது கருட புராணம் இல்லண்ணே! புருடாணம்! :)
    ராகவ் மைசூர் போகணும்-ன்னா மைசூர்-ல ஒரு நல்ல பொண்ணா பாக்க வேண்டியது தான்! :)

    //ராகவன் மைசூர் போகவேண்டிய வசதிகளை அண்ணன் என்னும் முறையில் கண்டிப்பா பேஷா உதவி செய்ய தயாரா இருக்கேன்//

    நாலு சாத்து சாத்தி அனுப்புங்க. நல்லா கும்மி அனுப்புங்க! கும்மிக்கு கும்மி வையகத்தில் உண்டு-ன்னு தெரிஞ்சக்கட்டும் பையன்! :)

    ReplyDelete
  42. //துளசி கோபால் said...
    வெள்ளைமாளிகை ஜொலிக்கப்போகுது. அப்படியே அதுலே ஒரு அறை,(??? ரூம்) நமக்கும் கேட்டுப் பார்க்கணும்.
    பதிவர் சந்திப்புக்கு இடம் வேணுமுல்லே?//

    எத்தனை பின்னூட்டம் வந்தாலும் டீச்சர் டீச்சர் தான்! :)
    வெள்ளை மாளிகையில ஓவல் ஆபிசைக் கேட்போமா, பதிவர் சந்திப்புக்கு? அதை விட சூப்பர் அந்த Fountain பக்கத்துல பதிவர் சந்திப்பு! :)

    ReplyDelete
  43. //கவிநயா said...
    //அதானே பெண் இனப்பிரதிநிதியே புதியபாரதியே! இப்போ உங்கள நான் வாழ்த்தறேன்.!//

    நானும்!//

    யக்கா...யூ டூ? :)
    மீ ஒன் அப்பாவிச் சிறுவன்!

    ReplyDelete
  44. //Raghav said...
    வேற எதுக்கும் நான் உங்களை தோது போகச் சொல்லலியே..:).. இனிமே தான் சொல்லனும்..//

    ஒரு முடிவோடத் தான் இருக்காங்கப்பா! :)

    //காலேஜா??? நான் கும்மியில் எல்.கே.ஜி.. மாணாக்கன் ஐயா//

    ஓ...எல்.கே.ஜி ல இருந்தே கும்மி தொடருதா? இப்பல்ல புரியுது? :)

    //பிரம்மசரியம் = ராகவன் (நாந்தான்)//

    என்னாது பிரம்மா சரிஞ்சாரா? அவரை ஏன்யா சரிச்சீங்க? :)

    ReplyDelete
  45. //paravasthu said...
    ராகவன் ப்ரம்மச்சாரின்னு யார் சொன்னது?
    ஒரு விசாரணை குழு அமைத்து விடலாமா?//

    தேவையே இல்லீங்கண்ணா!
    அதான் ஊரே பேசுதே! மை-சூரே பேசுதே! :)

    //இதுக்கு முன்னால எங்க எல்லாம் ஆட்டம் போட்ருக்கான்னு பாக்கணும்(நான் சொல்வது கண்ணனை பாடும் கோலாட்டம் தான்.)//

    கண்ணன் தாண்டியா ஆட்டம் யாரோட ஆடுவான்னு தெரியாதா என்ன? :)

    ReplyDelete
  46. //வல்லிசிம்ஹன் said...
    திருமதி ஒபாமா அழகான பேரு,அழகான சிரிப்பு,//

    அதே தான் வல்லியம்மா! ரொம்ப இயல்பா இருக்காங்க-ல்ல?

    //எப்பவுமே தாயாரைக் கண்டு கொள்றதுதான் நல்லது:)//

    அது! :)
    இதெல்லாம் அம்பிக்கு எங்கே புரியப் போவுது! ஏன்னா அவன் அதானே பண்ணிக்கீட்டு இருக்கான்! :)

    ReplyDelete
  47. //Anonymous said...
    correct அண்ணே! சிலபேர் கேள்வி கேட்டே கலக்கிருவாங்க, ஆனா ஒரு கேள்வி கூட அவங்கள யாரும் கேட்டு விடக்கூடாது......:)
    தம்பி//

    கணேசா
    உன் பேரைச் சொல்லி அம்பி போட்ட பின்னூட்டம் தானே இது? :)
    எந்த நேரத்துல இதைப் போட்டானோ தெரியலை....உம்ம்ம்ம்.

    சரி...
    ஒரு கேள்வி என்னா, பல கேள்வி என்னைய கேட்டுக்கலாம்-பா! அதான் ஆஸ்திக நாஸ்திக-ன்னு எல்லாக் கேள்வியும் வருதே! பாக்குறீயல்ல? :)
    குற்றச்சாட்டு கூடத் தாராளமாச் சொல்லலாம். ஆனா அது என்னான்னு சொல்லணும்-னு தான் கேட்டுக்கறேன்! :)

    ReplyDelete
  48. //வெள்ளை மாளிகையில ஓவல் ஆபிசைக் கேட்போமா, பதிவர் சந்திப்புக்கு? அதை விட சூப்பர் அந்த Fountain பக்கத்துல பதிவர் சந்திப்பு! :)//

    அது என்னப்பா...பதிவர் சந்திப்பு தண்ணிக்குப் பக்கத்துலேதான் இருக்கணுமா?

    சென்னைன்னா தண்ணி இல்லா குளத்துப் பக்கத்துலே!!!!!

    இதுக்கு என்ன காரணமா இருக்கும்?????

    ReplyDelete
  49. //துளசி கோபால் said...
    அது என்னப்பா...பதிவர் சந்திப்பு தண்ணிக்குப் பக்கத்துலேதான் இருக்கணுமா?//

    ஹிஹி! கோவியண்ணே, சிபி அண்ணாச்சி - டீச்சர் கேக்குறாங்க பாருங்க! :))

    //சென்னைன்னா தண்ணி இல்லா குளத்துப் பக்கத்துலே!!!!!/

    ஓ...குளத்துத் தண்ணீயா? :))

    //இதுக்கு என்ன காரணமா இருக்கும்?????//

    சுப்ரபாதப் பதிவுல சொன்ன அதே காரணம் தான் டீச்சர்! :)
    தண்ணி எதுல ஊத்துருமோ, அந்தந்த ஃபார்முக்கு வந்துரும்! பதிவர்கள் எல்லாம் ஒரு ஃபார்முக்கு வரத் தான் இப்படி தண்ணி பக்கமா பதிவர் ஜந்திப்பு நடத்துறாகளோ? :))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP