Monday, December 29, 2008

மார்கழி-15: Duet Song முதலில் போட்டது யாரு?

காதலன்-காதலி மாறி-மாறிப் பாடும் Duet Song, தமிழில் முதன் முதலாப் போட்டது யாரு? - இது என்னய்யா கேள்வி? நான் எம்.எஸ்.வி-ன்னு சொல்லுவேன்! அப்பறம் இளையராஜா விசிறிகள் வந்து விசுறுவாங்க! ரஹ்மான் விசிறிகள், "டூயட்" படம் போட்டதே எங்காளு தான்-பாங்க!

இவிங்க யாருமே இல்லை, ஜி.ராமநாதன் என்கிற ஜிரா தான் இப்படிப் போட்ட இசை மேதை-ன்னு சொல்லுவாரு ஒரு இசை நிபுணர்! அட, யாருப்பா Duet Song-ஐ மொத மொதல்ல தமிழுக்கு அறிமுகம் செஞ்சது? :)

வேற யாரு! என் தோழி ஆண்டாள் தான்! :)

அட, இவனுக்கு இதே பொழைப்பாப் போச்சி! எதுக்கெடுத்தாலும் ஆண்டாள், ஆண்டாள்-ன்னு சொன்னா எப்படி? ஆண்டாள் எப்படி டூயட் போடுவா? யாரு கம்போசர்? யாரு மியூசிக் டைரக்டர்? :)

ஹிஹி! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ?
@ சில் என்று அழையேன்மின்! நங்கையீர் போதருகின்றேன்!
* வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்!
@ வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!

* ஒல்லை நீ போதாய்! @உனக்கென்ன வேறுடையை?
@ எல்லாரும் போந்தாரோ? * போந்தார் போந்து எண்ணிக் கொள்!
வல்-ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு ஏல்-ஓர் எம் பாவாய்!



அட, மெய்யாலும் தாங்க சொல்லுறேன்! கோதை தான் மொத டூயட் போட்டா! அப்பறம் தான் அது செம ஹிட் ஆச்சு! இன்னிக்கி ஒரு டூயட் இல்லாம காதலே இல்லை-ன்னு ஆகிப் போச்சு! :)

இந்தப் புன்னகை என்ன விலை? = எல்லே இளங் கிளியே!
என் இதயம் சொன்ன விலை! = இன்னும் உறங் குதியோ?

அதே மெட்டில், பி. சுசீலாம்மா பாடின மாதிரியே, பாடிப் பாருங்க! ஹா ஹா ஹா! எப்படி இருக்கு? கோதை போட்ட டூயட் நண்பர்களுக்கு இடையில் தான்! காதல் டூயட் அல்ல! Conversational Tunes, Dialogue Tunes-ன்னு சொல்லுவாய்ங்க!
முதலடி ஒருத்தர் கொடுக்கணும்! அடுத்த அடி இன்னொருத்தர் எடுக்கணும்!

* இந்தப் புன்னகை என்ன விலை? @ என் இதயம் சொன்ன விலை!
* இவள் கன்னங்கள் என்ன விலை? @ இந்த கைகள் தந்த விலை!

* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ?
@ சில்லென்று அழையேன்மின்! நங்கையீர் போ-தரு கின்றேன்!


எப்படி இருக்கு டூயட்டின் முதல் வரி? இது போன்று ஆங்கிலப் பாடல்களிலும் உண்டு!
Donna: I work all night, I work all day!
Group: Ain't it sad? That's too bad! (Mamma Mia Musical)

You are sixteen going on seventeen!
I am sixteen going on seventeen - என்று Sound of Music-இல் வருவதும் கிட்டத்தட்ட இந்த வகை!

இது போல பாடல்கள் இப்போ பெரிய விஷயமில்லை தான்! ஆனா அந்தக் காலத்தில்? யார் பாடி இருக்கா, 1200 ஆண்டுக்கு முன்னால?
பொதுவா நாட்டுப்புறப் பாட்டுகள் தான் இப்படி இருக்கும்! ஏற்றம் இரைக்கும் போதும், சுமை தூக்கும் போதும் இப்படி மாறி மாறிப் பாடுவாய்ங்க!
* மூங்கில் இலை மேலே, தூங்கும் பனி நீரே
@ தூங்கும் பனி நீரை, வாங்கும் கதிரோனே!

ஏற்றம் இரைப்பது, நாட்டுப்புற வாழ்வு - இதெல்லாம் கோதை உன்னிப்பா பார்த்திருப்பாள் போல! அதை அப்படியே இலக்கியத்துக்கு எடுத்து வருகிறாள்! அதுவும் பக்தி இலக்கியத்துக்கு!
* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ?
@ சில்லென்று அழையேன்மின்! நங்கையீர் போ-தரு கின்றேன்!



சங்கப் பாடல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தில், சில குரவையர் கூத்துக்களில், இப்படிச் சில Tunes வரும்! திருவெம்பாவையில் கூட வருகிறது!
ஆனால் அவற்றிலெல்லாம் ஒரு வரிக்கு அடுத்த வரி-ன்னு இருக்காது! Line after Line என்று டூயட் போல இருக்கணும்! சிப்பி இருக்குது முத்தும் இருக்குது-ன்னு பாடலை ஒப்பிட்டுப் பாருங்க! அவள் ஹம் பண்ண, அவன் பாட, அது Dialog Tune!

இந்தத் திருப்பாவைப் பாட்டில் இன்னோரு சிறப்பும் இருக்கு! இந்தப் பாட்டை அம்மானைப் பாடல்களுக்கு முன்னோடி-ன்னு சொல்லலாம்-ன்னு நினைக்கிறேன்! ஏன் இது வரை யாருமே அப்படிச் சொல்லலை-ன்னு தெரியலை! அம்மானை பிற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஒரு வகை! பெண்கள் ஆடும் விளையாட்டு!

ஒருத்தி ஒன்னு சொல்ல, அதை இன்னொருத்தி மறுத்துச் சொல்ல, கடைசியில் பொதுவான தோழி சமரசமா ஒரு வரி சொல்லி முடிச்சிருவா! ஒரு வகையான கவிதை விளையாட்டு!
இங்கேயும் அப்படித் தான் இருக்கு! ஒருத்தி எழுந்திருடீ-ன்னு ஒத்தை வரி சொல்ல, இன்னொருத்தி சரி தான் போடீ-ன்னு ஒத்தை வரியில் மறுக்க, கடைசியில் மாயனைப் பாடு-ன்னு எல்லாரும் சமரசமா ஆயிடறாங்க! :)

* பிள்ளைத் தமிழுக்கு முன்னோடி-ன்னு பெரியாழ்வார் பாட்டைச் சொல்லுவாங்க!
* அம்மானைக்கு முன்னோடி-ன்னு ஆண்டாள் பாட்டை யாருமே சிந்தித்துப் பார்க்கலையோ?
நாம இன்னிக்கித் திருப்பாவைக்குப் போயி, இந்த Dialog Tune-ஐ மாறி மாறிப் பாடிப் பார்ப்போமா?


சரி, உங்க வீட்டுல, யாரு உங்களை எழுப்புவாங்க? அவங்க எழுப்ப எழுப்ப, நீங்க என்ன உளறுவீங்க? அதைக் கற்பனையில் ஓட்டிக்கிட்டே படிங்க! ஓக்கேவா? :)

* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ? = எலே, இளம் கிளியே, இன்னுமா தூங்குற?

எல்லே என்பது தான் எலே ஆகி, என்ன-லே, சொல்லு-லே, சொகமா இருக்கியா-லே-ன்னு தென் பாண்டித் தமிழாய், நெல்லைத் தமிழாய் ஆனது! இப்படி வட்டார வழக்கை எல்லாம் பக்தி இலக்கியத்தில் அன்னிக்கே கலந்தடிச்சவ நம்ம கோதை! :)
ஹா ஹா ஹா! அவ தோழன் நான், ஆன்மீகப் பதிவில் இது மாதிரி வட்டார வழக்கைக் கலந்தடிக்கக் கூடாதா? ஆன்மீகப் பதிவுப் பெரியவர்கள் என் நிலைப்பாட்டைக் கொஞ்சமே யோசிச்சிப் பார்க்க வேணுமாய்க் கேட்டுக்கறேன்! :)

@ சில் என்று அழையேன்மின்! நங்கையீர் போதருகின்றேன்! = அடச்சீ! சில்-லுன்னு கூப்பிடாதீங்க! ஏற்கனவே மார்கழிச் சில்! இதுல நீங்க வேறயா? இருங்க பைய வருகிறேன்!

* வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்! = யம்மாடி! நீ பெரிய ஆளு தான்! (வல்லை)! வல்லிய மோனே-ன்னு மலையாளத்திலும் வல்லை உண்டு!
உன் பேச்செல்லாம் முன்னாடியே உன் வாய் அறியும்! யார் யார் கேட்டாக்கா, என்னென்ன excuse கொடுக்கலாம்-ன்னு முன்னமே யோசிச்சி வச்சிருக்க போல!

@ வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக? = ஆகா! நானா வல்லை? நீங்க தான் வல்லை! உங்க ஆட்டத்துக்கு நான் வல்லை! சமயத்துக்கு ஏத்த மாதிரி நீங்க தான் பேசுவீங்க! (சமயானிகி தகு மாட்லாடென-ன்னு தியாகராஜர் கீர்த்தனை)


* ஒல்லை நீ போதாய்? = சீக்கிரம் நீ வர மாட்டே?
@ உனக்கென்ன வேறுடையை? = உங்களுக்கென்ன? வேறு வேலை இல்ல?

@ எல்லாரும் போந்தாரோ? = சரி, எல்லாரும் வந்துட்டாங்களா?
* போந்தார் போந்து எண்ணிக் கொள்! = ஆங்! இது வேறயா? எல்லாரும் வந்தாச்சி! வந்து நீயே எண்ணிக்கோ!

வல்-ஆனை கொன்றானை = கம்சன் ஏவி விட்ட குவலயா பீடம் என்னும் யானையைக் கொன்றவன்!
மாற்றாரை மாற்று அழிக்க = மாற்றாரை (எதிரிகளை) அழிப்பது தான் அவன் வேலையா? இணங்காதாரையும், இறையை வணங்காதாரையும் அழிப்பானா? அவன் மாற்றாரை அழிக்க மாட்டான்! மாற்றாறின் "மாற்றை"த் தான் அழிப்பான்!

பொன்னை "மாற்று"ரைத்தல்-ன்னு சொல்வாய்ங்க! தங்கத்தின் மாற்றைச் (தூய்மையை) சோதித்துப் பார்ப்பது! அதே போல மாற்றாரின் தவறான செயல்களை, தவறான கொள்கைகளை, "மாற்று"ரைத்து விடுவான்! அதனால் அவர்கள் கருத்துக்களின் வீக்னெஸ் அவர்களுக்குத் தானே தெரிந்து போய் விடும்! இன்றில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் அதை உணரத் தான் வேணும்!

* மாற்றாரை அழிப்பது இறைவன் நோக்கமல்ல!
* மாற்றாறின் "மாற்றை" அழிப்பதே இறைவனின் விளையாடல்!
முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்போன்! சிறு பேர் அழைத்தனவும் சீறி, "அருளா"தே!

வல்லானை மாயனைப் பாடு = இப்படி மாற்றழிப்பதில் வல்லவன் எங்கள் தலைவன்! அவன் மாயன்=மாயோன்=தமிழ்க் கடவுள்! அவனைப் பாடு, பாடு, பாடு!
பாடும் பணியே பணியாய் அருள்வாய்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!


ஆண்டாள் திருவடிகளே சரணம்!

43 comments:

  1. Dialogue Tunes explanations ந‌ல்லா இருக்கு.

    //அம்மானைக்கு முன்னோடி-ன்னு ஆண்டாள் பாட்டை யாரும் சிந்தித்துப் பார்க்கலையோ?//

    ஆஹா ஆஹா

    ந‌ல்லா வ‌ந்திருக்கு விள‌க்க‌ம் வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  2. அருமையான பாடல். இனிமையான குரல்! குருசரன் சூப்பர்.அதைவிட சூப்பர் உங்கள் படங்கள் மற்றும் நடை! நச்!

    ReplyDelete
  3. அடேங்கப்பா.. ரவி அண்ணா, இன்னைக்கு விளக்கங்கள் அருமையாக சொல்லிருக்கீங்க..

    ReplyDelete
  4. ஆஹா ஓஹோ ;)
    இதை தவிர நான் வேற ஒன்னுமே சொல்ல மாட்டேன்.எப்போ கமெண்ட் போட்டாலும் எனக்கு செம டெமெஜ் ஆகுது :P

    ReplyDelete
  5. போதருகின்றேன்
    போந்தரோ
    போதாய்

    தற்போது இவை வழக்கத்தில் இல்லை அல்லவா..

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. //எல்லாரும் போந்தாரோ? = சரி, எல்லாரும் வந்துட்டாங்களா?
    * போந்தார் போந்து எண்ணிக் கொள்! = ஆங்! இது வேறயா? எல்லாரும் வந்தாச்சி! வந்து நீயே எண்ணிக்கோ! //

    கோதை முக்கியமான இருவர் வரக்காணோமே.. கவனித்தாயா ??

    ஒருவர் நற்செல்வன் அக்காள்
    இன்னொருவர் உன் நண்பரின் நண்பர் :)

    ReplyDelete
  8. நல்லா வந்திருக்கு, இடரில்லாமல்!

    ReplyDelete
  9. இப்பாடல் - பேகடா இராகம்.

    ReplyDelete
  10. //மின்னல் said...
    Dialogue Tunes explanations ந‌ல்லா இருக்கு//

    நன்றி மின்னல்!

    //
    //அம்மானைக்கு முன்னோடி-ன்னு ஆண்டாள் பாட்டை யாரும் சிந்தித்துப் பார்க்கலையோ?//

    ஆஹா ஆஹா
    ந‌ல்லா வ‌ந்திருக்கு விள‌க்க‌ம் வாழ்த்துக‌ள்//

    உங்க மகிழ்ச்சி உங்க சொல்லிலேயே தெரியுது! :)
    நன்றி, நன்றி! :)

    ReplyDelete
  11. //OSAI Chella said...
    அருமையான பாடல். இனிமையான குரல்! குருசரன் சூப்பர்//

    செல்லா, இப்படித் திருப்பாவையை ரசிக்கிறாரா? மிக்க மகிழ்ச்சி! :)

    //அதைவிட சூப்பர் உங்கள் படங்கள் மற்றும் நடை! நச்!//

    நன்றி-ண்ணே!

    ReplyDelete
  12. //Raghav said...
    அடேங்கப்பா.. ரவி அண்ணா, இன்னைக்கு விளக்கங்கள் அருமையாக சொல்லிருக்கீங்க..//

    அப்ப இவ்வளவு நாளா சொன்னது எல்லாம்? :)))

    ReplyDelete
  13. //(unknown blogger) said...
    ஆஹா ஓஹோ ;)//

    நன்றி தங்கச்சி!

    //இதை தவிர நான் வேற ஒன்னுமே சொல்ல மாட்டேன்.எப்போ கமெண்ட் போட்டாலும் எனக்கு செம டெமெஜ் ஆகுது :P//

    சேச்சே! டேமேஜ் எல்லாம் இல்லை! அது பாட்டுக்கு அது! இது பாட்டுக்கு இது! உன் கூட விளையாடம யார் கூட துக்கா விளையாட முடியும்? :))

    ReplyDelete
  14. //Raghav said...
    போதருகின்றேன்
    போந்தரோ
    போதாய்
    தற்போது இவை வழக்கத்தில் இல்லை அல்லவா..//

    இருக்கே! சொல்-ஒரு-சொல் குமரன் வந்து சொல்லட்டும்!

    ReplyDelete
  15. //Raghav said...
    கோதை முக்கியமான இருவர் வரக்காணோமே.. கவனித்தாயா ??

    ஒருவர் நற்செல்வன் அக்காள்
    இன்னொருவர் உன் நண்பரின் நண்பர் :)//

    ஹா ஹா ஹா
    நற்செல்வனின் அக்கா அரங்கத்து ஆரா அமுதை, பத்தர் ஆவியைப் பாத்துப் பேசிக்கிட்டு இருப்பாங்க!
    நற்செல்வன் நான் தான் ஒன்னுத்துக்கும் பிரயோசனப்படாம இங்கிட்டு இருக்கேன்! ரங்கா ரங்கா!

    //கோதை நண்பரின் நண்பர்//
    ஆகா!
    கோதை நண்பர் யாரு?
    அந்த நண்பரின் நண்பர் யாரு? என்ன பேரு? எந்த ஊரு? :)

    ReplyDelete
  16. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    நல்லா வந்திருக்கு//

    நன்றி ஜீவா!

    //இடரில்லாமல்!//

    :)
    தூய உருப்பளிங்கு போல்வள்! என் உள்ளத்தின் உள்ளே இருப்பள்!
    இங்கு வாராது "இடர்"!

    ReplyDelete
  17. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    இப்பாடல் - பேகடா இராகம்//

    நன்றி ஜீவா!
    பேகடா - கம்பீரமான ராகம்-ல்ல?

    சிதம்பரம் ஹரஹரா என்றொரு தரம் சொன்னால் - கோபாலகிருஷ்ண பாரதியின் பாட்டு கூட பேகடா தான்!

    ReplyDelete
  18. மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடுவதற்கு முன்னர் ஒரு பிழைத்திருத்ததைச் சொல்கிறேன். :-)

    நங்கையீர் போதருகின்றேன் தவறு. நங்கைமீர் போதர்கின்றேன் சரி.

    போதருகின்றேன் என்பது போதர்கின்றேன் என்று வந்தது குறைதல் விகாரம் என்பது இலக்கணக்குறிப்பு.

    ReplyDelete
  19. ஒள்நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ!
    வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ!
    எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
    கண்ணைத்துயின்றுஅவமே காலத்தைப் போக்காதே
    விண்ணுக்கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
    கண்ணுக்கினியானைப் பாடிக்கசிந்துள்ளம்
    உள்ணெக்கு நின்றுருகயாமாட்டோம் நீயே வந்து
    எண்ணிக் குறையில் துயில் ஏலேரெம்பாவாய்.

    ReplyDelete
  20. மேலே குடுத்த திருவெம்பாவைப் பாட்டிலும் டூயட் வர்ற மாதிரி இருக்கே?

    ReplyDelete
  21. //ஒரு பிழைத்திருத்ததைச் சொல்கிறேன். :-)//

    ஒரு இல்ல! இரு! :)

    //நங்கையீர் போதருகின்றேன் தவறு. நங்கைமீர் போதர்கின்றேன் சரி//

    இப்படி மதுரைத் திட்ட அச்சில் மட்டும் இல்லை!
    ஆன்மீகப் புத்தகங்களிலும் இப்படித் தான் இருக்கு!
    http://www.sundarasimham.org/ebooks/Thiru2.pdf

    திருப்பாவை மூலச் செய்யுள் புத்தகம் எது? உங்க Reference எதுன்னு சொல்லுங்களேன்!

    //போதருகின்றேன் என்பது போதர்கின்றேன் என்று வந்தது குறைதல் விகாரம் என்பது இலக்கணக்குறிப்பு//

    குறைதல் விகாரமா இல்லை தொகுத்தல் விகாரமா? :)

    ReplyDelete
  22. //மேலே குடுத்த திருவெம்பாவைப் பாட்டிலும் டூயட் வர்ற மாதிரி இருக்கே?//

    இதுக்குத் தான் பதிவைப் படிச்சிட்டு பின்னூட்டணும்-ன்னு சொல்லுறது!:)

    //திருவெம்பாவையில் கூட வருகிறது!
    ஆனால் அவற்றிலெல்லாம் ஒரு வரிக்கு அடுத்த வரி-ன்னு இருக்காது! Line after Line என்று டூயட் போல இருக்கணும்!//

    நீங்க கொடுத்த பாட்டில் பாருங்க! Line after line-வா இருக்கு? டூயட் மாதிரி மாறி மாறியாப் பேசிக்கறாங்க? :)))

    ஒரே பொண்ணு பேசுறா பாருங்க!
    "எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்!
    கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே!
    விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
    கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
    உள்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயே வந்து
    எண்ணிக் குறையில் துயில் ஏலே ரெம்பாவாய்!"
    -ன்னு பத்து முழம் நீளத்துக்கு அட்வைஸ் பண்ணா யாருக்குப் பிடிக்கும்? ஹா ஹா ஹா :)))

    ReplyDelete
  23. >>* வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்! = யம்மாடி! நீ பெரிய ஆளு தான்! (வல்லை)! வல்லிய மோனே-ன்னு மலையாளத்திலும் வல்லை உண்டு!
    உன் பேச்செல்லாம் முன்னாடியே உன் வாய் அறியும்! யார் யார் கேட்டாக்கா, என்னென்ன excuse கொடுக்கலாம்-ன்னு முன்னமே யோசிச்சி வச்சிருக்க போல!<<

    When it comes to KRS I have got to tread ever so carefully. So with trepidation let me try to point out an "error" in this interpretation.
    Here the girls outside plead with the girl inside and outsmart her by saying "panDE un vAy aRidum" which should be taken to mean "Alright girl, we know way back you have a big mouth--so get going"
    un vAy = your smart talk
    aRidum = (we) know

    It is not "Your vAy knows how to handle the situation from previous experience"

    Correct me if I am wrong.

    ReplyDelete
  24. //When it comes to KRS I have got to tread ever so carefully.//

    hahahaha...not only you Sir. The whole world need to do this. :-)

    It is not an error rather a different interpretation. The one you said is traditional, more aligned with Srivaishnava tradition. The one KRS said is modern, more aligned with NY tradition. :-)

    ReplyDelete
  25. One more walk on eggshell!
    >>@ உனக்கென்ன வேறுடையை? = உங்களுக்கென்ன? வேறு வேலை இல்ல?<<

    Here, you have changed the singular word "unakku" to plural "ungaLukkenna". Here again the words "unakkenna vERuDaiyai" are spoken by the gang outside. they are asking, "What else do you have to do, with whom else are you engaged?"
    Reread the passage again and see if what I say makes sense. The girl inside has to talk to the outside girls in plural form and not "unakkenna". Recall that earlier she addresses them as "nangaimIr".

    The full sentence "ollai nI pOdAy unakkenna vERuDaiyai" is spoken by the girls at the threshold.

    ReplyDelete
  26. Sometimes this NY tradition reverberates between NC and MN, Singapore and Chennai etc. :-)

    ReplyDelete
  27. இரவி,

    தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். பின்னூட்டம் காணலையே என்று நினைக்க வேண்டாம். :-)

    ReplyDelete
  28. //When it comes to KRS I have got to tread ever so carefully//

    ஹா ஹா ஹா
    வாங்க சேதுராமன் சார்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    //un vAy = your smart talk
    aRidum = (we) know
    Correct me if I am wrong//

    You are not wrong!
    You are "also" correct! :)
    It is only enjoying the different interpretations, without harming the soul of the song!

    பண்டே, = முன்னமேயே,
    உன் வாய்(யை) அறிதும்! = உன் வாயைப் பற்றி எங்களுக்குத் தெரியும்!
    You are putting comma between பண்டே & உன் வாய்!

    பண்டே உன் வாய், = முன்னமேயே உன் வாய்,
    அறிதும் = இதையெல்லாம் அறியும்!
    I am putting comma between உன் வாய் & அறிதும்!

    :))

    ReplyDelete
  29. //குமரன் (Kumaran) said...
    இரவி,
    தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். பின்னூட்டம் காணலையே என்று நினைக்க வேண்டாம். :-)//

    செல்லாது! செல்லாது! :)
    குமரன் பின்னூட்டம் எங்கே?
    தென் மதுரை மைந்தன் பின்னூட்டம் எங்கே?
    ராம்நாட் ராகவ் கேள்விகளுக்கு விடை எங்கே? எங்கே? எங்கே?
    :)))

    அண்ணிக்கும், உங்களுக்கும், சிவக்கொழுந்துக்கும், சிவந்த முருகனுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் குமரன்! :)

    ReplyDelete
  30. //குமரன் (Kumaran) said...
    Sometimes this NY tradition reverberates between NC and MN, Singapore and Chennai etc. :-)//

    இதுக்கு மட்டும் சடக்-ன்னு பின்னூட்டம் போட ஓடியாந்துருவீங்களே! :))

    NC = ?
    MN = தெரியும்!
    Singapore = u mean my sis? :)
    Chennai = ?
    Wherz my Amsterdam? :)

    ReplyDelete
  31. //Anonymous said...
    hahahaha...not only you Sir. The whole world need to do this. :-)//
    யக்கா...
    உங்க கும்மிக்கு ஒரு அளவே இல்லையா? :))
    whole world ஓரடியால் அளந்தவன் ஆளு! தெரிஞ்சிக்கோங்க! :)

    //It is not an error rather a different interpretation//
    நன்றி! சேது சார் கூட இதான் சொல்ல வந்தாரு-னு நினைக்கிறேன்!

    //The one you said is traditional, more aligned with Srivaishnava tradition//
    Nopes, It has nothing to do with SriVaishnava.
    ஸ்ரீவைஷ்ணவ சமய நுட்ப வியாக்யானம்: பண்டைய கட்டுரைகளை எல்லாம் அர்ஜூனன், சபரி, ரிஷ்ய சிருங்கர், சுக முனிவர் என்று பலரும் அறிந்தார்கள்!

    //The one KRS said is modern, more aligned with NY tradition. :-)//
    அடியேன் நியூயார்க்-பொமோனா அரங்கன் கோயிலின் தாசன்! :)

    ReplyDelete
  32. //One more walk on eggshell!//

    I like this discussion! Very constructive and different facets propping up! Thank you Sethu sir!

    //Here, you have changed the singular word "unakku" to plural "ungaLukkenna".//

    Again it is the matter of "comma" & Interpretation! :)

    * ஒல்லை நீ போதாய்? = Though the whole gang is outside, "only one" can speak at a time. Else it becomes noisy! So one girl asks "Cant you not come soon?"

    @ உனக்கென்ன வேறுடையை? = In turn, the girl inside, hits back "specifically" to the girl who fondly admonished her! "Why, you dont have any other job?"

    You have to read the next line to understand the previous line!எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்!
    This single line contains two persons' talks! So the previous line, in harmony with the whole structure of the poem, is also two persons' talks!

    * The 1st 4 lines have individual talks in each line!
    * The next 2 lines have "dual" talks in each line!
    * The next 2 lines have the compromise of the group!
    - Thatz my "harmonical" view point & Andal's too :)

    //Reread the passage again and see if what I say makes sense//

    Sure, you make sense!
    Reread the passage again and see if I say make sense too! :)

    ReplyDelete
  33. //NC = ?//

    சேது சாரைக் கூட கும்மியில் சேத்துட்டீங்களே குமரன்! பாவம் அவர்! :)

    இதில் பெங்களூரைச் சொல்லவேயில்லையே! இருங்க Blore Balaji-கிட்ட சொல்றேன்! :)

    ReplyDelete
  34. குணானுபவம் என்றால் அது குணானுபவம். வெறும் கும்மியென்றால் அது கும்மி தான். :-)

    சிங்கப்பூர்ல அப்பாவிச் சிறுமி மட்டும் தான் இருக்காங்களா? காலம் காலமா அங்கேயே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். :-)

    ஆம்ஸ்டெர்டாம், பெங்களூரு எல்லாம் etcல அடக்கம். ஏன்னா அவங்க எல்லா அடக்கமே உருவானவங்க. உங்களை மாதிரி இல்லைன்னு சொல்ல வர்றேன். :-)

    ReplyDelete
  35. //யக்கா...//

    ????

    ReplyDelete
  36. >>Though the whole gang is outside, "only one" can speak at a time. Else it becomes noisy! So one girl asks "Cant you not come soon?"<<

    Just to beat a dead (?) horse! (sorry I don't do that, just a figure of speech!):
    It really is noisy there! Until song #15 there is no indication that the the girl sleeping in song #15 will be visited by the gang. So when they come to her house and call out "ellE iLam kiLiyE.." all of them are calling out in chorus to which the girl inside answers, "cil enRu azhaiyEn min nagaimIr". Here she addresses all of them. After they accuse her of giving fictional excuses, again she addresses all of them " vallIrgaL nIngaLE...". If we take "ollai nI podAy" is spoken by only one among the gang and our kumbakarNi responds "unakkenna vERuDaiyAy" she appears to falter here. All along she speaks to the gang collectively but now she starts in singular suddenly. A real conundrum indeed!

    ReplyDelete
  37. சான்ஸே இல்லை. அருமை சேதுராமன் சுப்பிரமணியன் ஐயா. எங்கள் இரவிசங்கருக்கு இணையாகப் பேசக்கூடியவராக எங்கள் சுப்பிரமணியன் ஐயா இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. அருமையாகச் சொன்னீர்கள். :-)

    ReplyDelete
  38. Forgive my trespasses, KRS.
    ANDAL, though your friend, is my goddess. I know her mind as she knows mine.
    ANDAL tiruvaDigaLE saraNam!

    ReplyDelete
  39. //nAradA said...
    Just to beat a dead (?) horse! (sorry I don't do that, just a figure of speech!)://

    Sethu Sir,
    I dont like the phrase "dead horse"! Request you to avoid such phrases in a lively discussion.
    A horse is NOT dead until certified. Here it can stand up too!

    Now resuming the discussion,
    //It really is noisy there!//

    No doubt it! I only said that in a noisy scene, if one person speaks, then it is audible & clear!

    //Until song #15 there is no indication that the the girl sleeping in song #15 will be visited by the gang//

    Totally Flawed!
    #6 தூயோமாய் வந்து "நாம்" தூமலர் தூவித் தொழுது
    #8 கூவுவான் வந்து "நின்றோம்"
    #11 சுற்றத்து தோழிமார் "எல்லாரும்" வந்து நின் முற்றம் புகுந்து
    So, There IS enough evidence in the PREVIOUS songs that the girl in #15 WILL be visited by the "gang"! Do u need more examples?

    //to which the girl inside answers, "cil enRu azhaiyEn min nagaimIr"//

    Chil means "shreaky"! NOT every one shouting! Both are different!
    The girl inside speaks to one person at at a time to the girls outside.
    The girls outside are adiyaars and they dont shout as a group. They take turns one by one to pose "chil"-shreaking questions.

    //she appears to falter here. All along she speaks to the gang collectively but now she starts in singular suddenly. A real conundrum indeed!//

    No!
    All along she speaks to the gang, but via one person at a time!
    Since the subject matter is applicable to all, she addresses all, but speaks to one at a time.
    Itz not that 10 people are yelling at the same time & the girl inside yells back. There is a refined discussion going on between them!

    I DID NOT brush aside your view point! All I said was:
    //Sure, you make sense!
    Reread the passage again and see if I say make sense too! :)//


    To summarize my view point:
    Those 2 lines have dual exchanges.
    *ஒல்லை நீ போதாய்? <> @ உனக்கென்ன வேறுடையை?
    @ எல்லாரும் போந்தாரோ? <> * போந்தார் போந்து எண்ணிக் கொள்!

    * The 1st 4 lines have individual talks in each line!
    * The next 2 lines have "dual" talks in each line!
    * The next 2 lines have the compromise of the group!
    - Thatz "harmonical" in tune to the poem!

    Can you now say, "The Horse is Dead"?

    ReplyDelete
  40. கே. ஆர். எஸ்.. கலக்ஸ் பதிவு... இரசித்து படித்தேன்....

    ReplyDelete
  41. //nAradA said...//

    Oops, I guessed we crossed each other while typing our replies, sir! :)

    //Forgive my trespasses, KRS//

    அச்சோ! என்ன சார் இது? நான் தான் சொன்னேனே, உங்கள் விவாதங்கள் மிகவும் சுவை சேர்க்கின்றன என்று!
    Please, no forgiveness! Instead wish us & bless us! :)

    //ANDAL, though your friend, is my goddess. I know her mind as she knows mine//

    Sure no doubt it! Thatz I say: we have "interpretations" to a poetry!

    ஆண்டாள் திருவடிகளே சரணம்!
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! :)))

    ReplyDelete
  42. >>//Until song #15 there is no indication that the the girl sleeping in song #15 will be visited by the gang//
    Totally Flawed!
    #6 தூயோமாய் வந்து "நாம்" தூமலர் தூவித் தொழுது
    #8 கூவுவான் வந்து "நின்றோம்"
    #11 சுற்றத்து தோழிமார் "எல்லாரும்" வந்து நின் முற்றம் புகுந்து
    So, There IS enough evidence in the PREVIOUS songs that the girl in #15 WILL be visited by the "gang"! Do u need more examples?<<
    No I don't. Songs 6-15 are meant to wake up those 10 girls. It is my guess that ANDAL wakes up the girl in song #6 either alone or with other girls in her group. From then on the number in the group increases. When I said "no indication" it is for the girl in #15 (sannidhi street, if you will!) and hence she is fast asleep. My point was the sleeping girl #15 need not have said "nangaimIr", "vallIr" etc in the early dialog and later on address only one girl in the gang "unakkenna vERuDaiyai", if only one of them speaks at a time. If she is half-asleep and if only one girl speaks at the outset "ellE iLam kiLiyE" how would she guess that there are so many outside as to address them "nangaimIr" to begin with? So it was a chorus and the purpose was to make a ruckus so that the kumbakarNi will wake up and come out. Accordingly the end appeal "unakkenna vERuDaiyai" was a remark going from outside to inside, in my interpretation.

    >>Chil means "shreaky"! NOT every one shouting! Both are different!<<
    chil also means "harsh". If the girls speak at the same time (not necessarily loud but can be) but in an admonishing tone, "innam uRangudiyO?" the inside girl takes offense and says no to "chil".

    ReplyDelete
  43. >>Can you now say, "The Horse is Dead"?<<
    No, it is alive and kicking still! It depends very much on what we mean by the "horse".

    When I said "beat a dead horse" (sonnadaiyE tirumbac colludal--on my part) I was referring to repeating the same point I made earlier. The "argument-counter-argument horse" will perhaps never die. That is OK with me.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP