Wednesday, December 31, 2008

மார்கழி-17: ஆண்களா? பெண்களா?? - Who is தூங்குமூஞ்சி? :)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! Wish u All a Very Happy New Year-2009! :)
இறைவன் எம்பெருமானின் ஆசியுடன், தங்கள் இல்லத்தில், இனிதே இன்பம் பொங்க, வாழ்த்துகிறேன்!


இன்றைய பாவை, புத்தாண்டுப் பாவை! குடும்பத்தைக் காட்டும் பாவை! குடும்ப மகிழ்ச்சியைக் காட்டும் பாவை! பார்க்கலாமா?

தூக்கத்தில் பிஸ்து யாருங்க? யாருக்கு நல்லாத் தூக்கம் வரும்? ஆண்களா? பெண்களா??
இதைக் கேட்டா ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாய்ங்க! வாழ்க்கை பூரா அரட்டை அரங்கம் நடத்தும் அளவுக்கு மேட்டர் இருக்கு இந்தக் கேள்வீல! :)

காதலி: எனக்குத் தூக்கமே வரதில்லை! இவன் நினைப்பாவே இருக்கு! இவன் எப்படித் தான் நல்லாக் கொஞ்சிட்டு, வீட்டுக்குப் போனவுடன், என்னை மறந்துட்டு தூங்கறோனா? :)
புது மனைவி: ஏம்ப்பா! தூக்கமே வர மாட்டேங்குது! புது இடமா வேற இருக்கு! நல்லாக் கொஞ்சிட்டு, நீங்க மட்டும் எப்படித் தான் இப்படிக் கொறட்டை விட்டுத் தூங்கறீங்களோ? :)
புது அம்மா: என்னாங்க! குழந்தை அழுவறது காதுல விழலை? அப்படி என்ன தூக்கம்? எழுந்து போயி, குழந்தைக்குக் கொஞ்சம் போக்கு காட்டுங்க! :)
பழைய மனைவி: அலோ! பையன் காலிங் பெல் அழுத்தறான்! எழுந்து போயி கதவைத் திறங்க! எப்பமே நான் தான் எழுந்து போகணுமா? :)

காதலன்/புது கணவன்/புது தந்தை/பழைய கணவன்(மனைவன்): அது எப்படித் தான், வண்டி பின் சீட்டில் ஏறி உட்கார்ந்த அடுத்த நிமிஷம், உங்களுக்கெல்லாம் தானா தூக்கம் வருதோ? :)

இந்த செல்லப் பட்டிமன்றத்துக்கு என்ன தான் தீர்ப்பு? ஆண் தூங்குமூஞ்சியா? பெண் தூங்குமூஞ்சியா?
* கோதை சொல்லுறா: "ஆண்கள் தான் தூங்குமூஞ்சி!" :)
* நானும் சொல்லுறேன்: "ஆண்கள் தான் தூங்குமூஞ்சி!" :)

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க! :)
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

அம்-பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே,
எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய்!


அம்-பரம் ஊடு அறுத்து, ஓங்கி, உலகு அளந்த,
உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய்!
செம் பொற் கழலடிச் செல்வா, பலதேவா,
உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய்!



சென்ற பாட்டில் வாயிற் காப்போனைப் பாடினார்கள். (கவனிக்கவும்: வாயிற் காப்போனை எழுப்பவில்லை! ஜஸ்ட் பாடினார்கள்! ஏன்னா அவன் தூங்கவில்லை! வாயில் "நிஜமாலுமே" காத்துக் கொண்டிருந்தான்:)

இந்தப் பாட்டில் கண்ணனின் வீட்டுக்குள்ளேயே சென்று விட்டார்கள்! இதிலிருந்து பாத்துக்குங்க கண்ணன் வீட்டில் எவ்வளவு எளிமை-ன்னு! கெடுபிடிகள் எல்லாம் ஒன்னும் கிடையாது! எல்லா அடியவர்களும் அன்போடே நடத்தப்படுவார்கள் அவன் வீட்டில்!

அம்-பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும் = உடை, தண்ணீர், உணவு என்று மூன்று அறங்களையும் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய் = எம்பெருமானின் தகப்பனாரே! பெருமாளுக்கே பெருமானே! நந்த கோபன் அப்பா (மாமா)! எழுந்திருங்க!

அடிப்படைத் தேவை: உடுக்க அம்பரமே=உடையே! உண்ண சோறே=உணவே!
ஏன் உடையை மொதல்ல சொல்லி, உணவை அப்புறமா சொல்றாரு?

ஏன்னா மனிதனுக்கு மானம் முக்கியம்! பசித்த பசியிலும், சோறு வாங்கத் துணியில்லாம வெளியில் வரமுடியுமா? அதான் முதலில் உடை கொடுத்து, பின்னர் உணவும் கொடுத்து, தர்மங்கள் செய்கிறாராம் நந்தகோபன்! தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரும் தண்ணீர் பந்தல் அறங்களும் செய்கிறார்! எங்கூரு தண்ணி உனக்கு கிடையாது-ன்னு சொல்லாதவர்! :)

இன்னொரு பார்வை:
அம்-பரம் = ஓம்! சோ-றே! = நமோ! தண்ணீரே = நாராயணா!

* அம்-பரம் = அந்தப் பரத்துவமான மோட்ச வீடு = ஓம்!
* சோ-றே! = சோற்றைத் தனக்கு-ன்னு சேமிச்சிக்க முடியாது! அழுகிடும்! எனதில்லை = ந+மோ!
* தண்ணீரே = தண்ணீர்/தீர்த்த வடிவாய் இருப்பவன் = நாராயணாய!

நாரணம்=தண்ணீர் என்று முன்னரே சொல்லி இருக்கேன்!
நீர், கலத்துக்கு ஏற்றவாறு வெவ்வேறு வடிவம் கொள்வது போல், நாரணன் நம் மனத்துக்கு ஏற்றவாறு வெவ்வேறு தெய்வ வடிவம் கொள்கிறான்!
மதங்கள் வேறாக இருந்தாலும், அத்வைத-விசிஷ்டாத்வைத-த்வைத என்று கொள்கைகள் வேறாக இருந்தாலும், அவனே பரப்பிரம்மம் என்பது சங்கரர்-இராமானுசர்-மாத்வர் மூன்று ஆச்சார்யர்களின் வாக்கு!



கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே = பெண்கொடிகளுக்கு எல்லாம் கொழுந்தே! ஆயர் குலத்தின் விளக்கே!
கொழுந்து இலை = அது துளிர் விடும் போது தான் ஒரு உயிரின் அருமை நமக்குத் தெரியுது! அது போல் யசோதை! அவளை வைத்துத் தான் நமக்கு நம்பிக்கையே பிறக்குது!

குலவிளக்கே = கண்ணன் மனித குலச் செல்வம்! அந்தப் புதையலை எப்படித் தேடுவது? விளக்கை வைத்துத் தானே இருளில் தேடணும்? அதான் குலத்தின் விளக்காக அம்மா யசோதை!
மாதா->பிதா->குரு->தெய்வம்! = அன்னை முதல் விளக்கை ஏற்றி அப்பாவைக் காட்ட, அப்பா இரண்டாம் விளக்கை ஏற்றி நல்ல கல்வியைக் காட்ட, குரு மூன்றாம் விளக்கை ஏற்றி, இறைவனைக் காட்டுகிறார்!
இப்படி அத்தனை விளக்குக்கும் முதல் விளக்கு, அம்மா = குல விளக்கு!

எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய் = எம்பெருமானின் தாயாரே! பெருமாளுக்கே பெருமாட்டியே! யசோதாம்மா (அத்தை)! முழிச்சிக்கோங்க! :)

******* முக்கியமான பாயிண்ட்********
நந்தகோபனுக்கு = எழுந்திராய்! யசோதைக்கு = அறிவுறாய்!
* நந்தகோபனை உலுக்கி, குலுக்கி, அலாரம் வச்சி, சகலமும் செஞ்சி "எழுப்பணும்"
* யசோதையை "அறிவுறாய்" - முழிச்சிக்கோங்க-ன்னா போதும்! உடனே தூக்கத்தில் இருந்து எழுந்திருவாங்க!
இப்போ சொல்லுங்க! தூங்குமூஞ்சி - ஆண்களா? பெண்களா?? :))


1189lordvamana

அம்-பரம் ஊடு அறுத்து, ஓங்கி, உலகு அளந்த = ஆகாசம் என்னும் வெளியை(அம்பரம்) ஊடு அறுத்து, ஓங்கினான்! உலகு அளந்தான்! நம் எல்லாரையும் அளந்தான்!
அவன் பரத்துவம்(அம்-"பரம்")! அந்தப் பரத்தையே நமக்காக ஊடு அறுத்தான்! பரத்தை விட்டுக் கீழிறங்கி வந்து நமக்காக உலகளந்தான்!

உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய் = தேவாதி தேவர்களின் கோமகனே! உறங்கியது போல் உறங்கியது போதும்! நாங்க எல்லாம் வந்திருக்கோம்-ல? எங்களை முதலில் கவனி!

வாமனன் - திரிவிக்ரமன் - உலகளந்த பெருமாள்!
திருக்கோவிலூர் என்ற ஊருக்குப் போய் உள்ளீர்களா? கதை கதையாகச் சொல்லலாம் அந்த ஊரைப் பற்றி!
* அவதாரங்களிலேயே நடு-நாயகமான அவதாரம்! இது வரை ஒன்பதில், ஐந்தாம் அவதாரம் (வாமன-திரிவிக்ரம) இரட்டை அவதாரம்!
* இதற்கு முன்பு விலங்குகள், இதற்குப் பின்பு மனிதர்கள் என்று பகுத்துக் காட்டும் அவதாரம்.
* நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார்! அப்படி நடுவிலே நின்ற அவதாரம்!
* அழிவு, சம்காரம் என்பதே இல்லாத ஒரே அவதாரம் இது தான்!
* இந்த அவதாரத்தில் தான் பூமிக்கும் பல நன்மைகள் நடந்தன! அதில் மிக முக்கியமான ஒன்று = கங்கை ஆறு தோன்றியது!

அதனால் தான் இந்த அவதாரத்தை மட்டும், எல்லாச் சமயங்களிலும், மதங்களிலும் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள்!
கணபதியைப் போலவே குள்ள உருவம் வாமனம்! முருக பக்தர் அருணகிரியும் வாமனனைப் போற்றிப் பாடுகிறார்! சைவ, வைணவ, சாக்த இலக்கியங்கள் மட்டும் இல்லை, ஜைன-பெளத்த இலக்கியங்களிலும் இந்த அவதாரக் குறிப்பு காணப்படுகிறது!

எந்தப் பிரிவினர் செய்யும் யாகத்திலும், மூன்று முறை திரிவிக்ரமனுக்கு அவிர்ப்பாகம் அளித்தே யாகம் செய்ய வேண்டும் என்பது நியதி.
கணபதி ஹோமம் ஆகட்டும், லலிதா-சண்டி ஹோமம் ஆகட்டும், ஈஸ்வரனின் மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகட்டும், வைணவ சுதர்சன ஹோமம் ஆகட்டும், அவ்வளவு ஏன் - காபாலிகள் செய்யும் அகோர ஹோமங்கள ஆகட்டும்! அனைத்திலும் உலகம் காத்த திரிவி்க்ரமனுக்கு மும்முறை துதி வழங்கப்படும்! அத்தனை பெருமை இவனுக்கு மட்டும்!

திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே! அதனால் தான்,
* முதல் பத்தில் = ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
* இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடறுத்து ஒங்கி உலகளந்த
* மூன்றாம் பத்தில் = அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

என்று ஆண்டாளும் மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கிறாள், வாமன மூர்த்திக்கு!


அப்போது செய்த இலக்குவத் தொண்டுக்கு, இப்போது கால் பிடிச்சி விடறான், பலராமனுக்கு!


செம் பொற் கழலடிச் செல்வா, பலதேவா = செம்பொன்னால் ஆன வீரக் கழல்! அதைத் திருவடியில் மாட்டி இருக்கும் பலதேவா!
பலதேவன் = வாலியோன் என்பது சங்க காலத் தமிழ்ப் பெயர்! இவனுக்குப் பனைமரக் கொடியும், கலப்பையும் கொடுக்குது சங்கத் தமிழ் இலக்கியம்!

ஏன் பலராமன் அவ்வளவு முக்கியம்? அவனுக்கு மட்டும் தனி அவதார அந்தஸ்து ஏன்?
ஏன்-னா அவன் தான் தொண்டின் அடையாளம்!
அவன் தான் சென்ற முறை இலக்குவன்! இந்த முறை பலராமன்!

அன்பு,தொண்டு = இரண்டிலும் சிறந்து விளங்கினான் இலக்குவன்!
மற்றவர்கள் இராமனின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத் தொண்டில் இருந்து சற்றே ஒதுங்கினர்! ஆனால் இவன் மட்டும் தொண்டை விடவே இல்லை! கைங்கர்யம் செய்தே தீருவேன் என்று பெருமாளிடமே சண்டை போட்டு தொண்டு செய்தான்! :)

மனசால் அன்பு செய்தால் மட்டும் போதாது! கையாலும் தொண்டு செய்யணும்! இறைவனைப் பேசி/பாடிக் கொண்டும், பதிவு போட்டுக் கொண்டும் இருந்தால் மட்டுமே போதாது! மானுடத் தொண்டும் கொஞ்சமாச்சும் செய்யணும்!
* இதைக் காட்டவே இலக்குவனை மட்டும் முன்னிறுத்துகிறான் இறைவன்!
* அதான் அவனுக்கு மட்டும் அடுத்த முறை தனி "அவதார அந்தஸ்து = பலராம அவதாரம்"!

நின்றால் மரவடியாம் = பாதுகை!
அதுவே ஆதிசேஷன்! அதுவே இலக்குவன்! அதுவே பலராமன்!
செம்பொற் ***கழல்-அடிச்*** செல்வா! என்று பாதுகையாகவே பலராமனைப் பாடுகிறாள் கோதை! தொண்டுக்குக் கிடைத்த பரிசு இது! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!


உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய் = பலராமனைத் தான் கோதை முதலில் சொல்கிறாள்! தலைச்சன் புள்ள தான் எப்பமே எல்லாத்தையும் தாங்குது! அதான்:)
கண்ணனை, As Usual, வெளிப்படையாச் சொல்ல மாட்டாள்! பலராமா, நீயும் உன் தம்பியும் என்று சொல்லி விடுகிறாள்! :)

நீயும், உன் தம்பியும் (கண்ணனும்) தூங்காதீர்கள்/தூங்குங்கள் = உறங்கேல்/உறங்கு+ஏல்!
* உறங்கேல் (தூங்காதீர்)+ ஓர் (எண்ணுங்கள்) எம்பாவாய்!
* உறங்கு (தூங்கு)! ஏல்-ஓர் (ஏற்றுக்கொள்-எண்ணுங்கள்) எம்பாவாய்!
ஹா ஹா ஹா! இது என்ன குழப்பமாப் பேசுறாளோ கோதை? காதலன் கண்ணன் பாவமாத் தூங்குறான், சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்-ன்னு விட்டுடறாளோ? ஹிஹி! அடுத்த பதிவு இட்டாகி விட்டது! அதில் படியுங்கள் இப்படி ஏன் சொல்கிறாள் என்று!

நாங்க கண்ணன் இல்லம் வந்திருக்கோம்-ல? இப்போ எங்களை ஏல்-ஒர் எம்பாவாய்! ஏல்-ஒர் எம்பாவாய்!
இலக்குவ-பலராம-தொண்டர்கள்-அடியார்கள் திருவடிகளே சரணம்! சரணம்!

36 comments:

  1. ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

    ReplyDelete
  2. //சென்ற பாட்டில் வாயிற் காப்போனைப் பாடினார்கள். (கவனிக்கவும்: வாயிற் காப்போனை எழுப்பவில்லை! ஜஸ்ட் பாடினார்கள்! ஏன்னா அவன் தூங்கவில்லை! வாயில் "நிஜமாலுமே" காத்துக் கொண்டிருந்தான்:) //

    ஆஹா.. சூப்பர், போன பாசுரத்தில் இதை கவனிக்கவே இல்லை..

    ReplyDelete
  3. //பசித்த பசியிலும், சோறு வாங்கத் துணியில்லாம வெளியில் வரமுடியுமா? அதான் முதலில் உடை கொடுத்து//

    இராமனுஜர் ஏழை பிராமணரான வரதாசாரியார் இல்லத்துக்கு செல்லும் போது, அவர் மனைவி உள்ளிருந்தே குரல் கொடுக்க, எம்பெருமானார் அவள் நிலை அறிந்து தன் வஸ்திரத்தை வீட்டினுள் போடுவார். அந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது.

    ReplyDelete
  4. //* அம்-பரம் = அந்தப் பரத்துவமான மோட்ச வீடு = ஓம்!
    * சோ-றே! = சோற்றைத் தனக்கு-ன்னு சேமிச்சிக்க முடியாது! அழுகிடும்! எனதில்லை = ந+மோ!
    * தண்ணீரே = தண்ணீர்/தீர்த்த வடிவாய் இருப்பவன் = நாராயணா! //

    மிகவும் அருமையான விளக்கம் அண்ணா..

    ReplyDelete
  5. விளக்கத்திற்கேற்ப ஏற்புடைய படங்கள் அருமை.

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //நீர், கலத்துக்கு ஏற்றவாறு வெவ்வேறு வடிவம் கொள்வது போல், நாரணன் நம் மனத்துக்கு ஏற்றவாறு வெவ்வேறு தெய்வ வடிவம் கொள்கிறான்!//

    நீராலானவன் நம் நாராயணன் :)

    //திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே!//

    விளக்கம் அருமை

    //செம்பொற் ***கழல்-அடிச்*** செல்வா! என்று பாதுகையாகவே பலராமனைப் பாடுகிறாள் கோதை//

    அருமை.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  7. அண்ணா நான் வந்துட்டேன் :D

    // Who is தூங்குமூஞ்சி? :)"//
    கண்டிப்பா நான் இல்லைப்பா :P

    ReplyDelete
  8. >>உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய்<<
    Now I have a problem (Don't tell me I am the problem, KRS!)
    In all these pAvai songs the end is "ElOr empAvAy" except the 30th song which ends with "inbuRuvarempAvAy" ( no :"El Or" there).
    (My interpretation for "El Or" is different from what you gave. But we will not go into that here).
    In all the songs ending with "ElOr empAvAy", the split is made from the previous words such as "nIkkElOr", "magizhndElOr". "irangElOr" etc in all the 29 songs including #17. The split makes sense in all of them except #17. In nIkkElOr it is nIkku + ElOr, irangElOr goes to irangu + ElOr etc. You get the message.
    But in #17 it is"umbiyum nIyum uRangElOrempAvAy". Here ANDAL is trying to wake up Krishna and Balarama. Accordingly the admonition is "umbiyum nIyum uRangEl" (you and your brother should not sleep any more), ie., uRangEl (don't sleep) has to be taken as is and cannot be split as uRangu + El, ( if you do, that would encourage sleeping). So where is the separate "El" here?
    It is only in #17 we encounter this. I know you'd come up with an explanation. But I see this as a "thorn in the flesh" situation.

    As for who is "tUngumUnjci", do you count the comfortable afternoon naps that women take if they stay home (as opposed to men who nap at their desks when the boss walks away but get jolted back when he/she meanders back)?!!!!!

    ReplyDelete
  9. //nAradA said...
    Now I have a problem (Don't tell me I am the problem, KRS!)//

    Not at all sir! No self pity - ok?
    I have never said so, even in previous pointers. I always welcome discussions & counter points :)

    //uRangEl (don't sleep) has to be taken as is and cannot be split as uRangu + El, ( if you do, that would encourage sleeping). So where is the separate "El" here?//

    சரியாப் பாக்கலை போலிருக்கு நீங்க! நான் இந்தப் பதிவில் இட்ட பாசுர வரிகளைப் பாருங்க! நீங்களே கட் & பேஸ்ட் வேற செஞ்சிருக்கீங்களே உங்க பின்னூட்டத்தில். See again.

    //உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய்//

    உறங்கேல்-ஓர் ன்னு தான் சொல்லி இருக்கேன்!
    உறங்கு, ஏல்+ஓர் எம்பாவாய்-ன்னு சொல்லலையே!
    அப்புறம் ஏன் இந்தக் கேள்வி? :))

    ஹா ஹா ஹா
    நான் அப்படித் தான் எழுதி இருப்பேன்-ன்னு நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டு பின்னூட்டினீர்களா என்ன? :))

    ReplyDelete
  10. @சேது சார்
    சென்ற பதிவில்
    //நேய நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்!//-ன்னு சொல்லி இருந்தேன்!

    இந்தப் பதிவில்
    //உம்பியும் நீயும் உறங்கேல் - ஓர் எம் பாவாய்//-ன்னு மாத்திச் சொல்லி இருக்கேன் பாருங்க!
    //உன் தம்பி கண்ணனும், நீயும் தூங்காதீர்கள்!//-ன்னு தான் பொருளும் சொல்லி இருக்கேன்! அதையும் பாருங்க!

    ReplyDelete
  11. // selvanambi said...
    Nandri//

    முதல் வருகைக்கு நன்றி செல்வநம்பி!
    உங்கள் ப்ரொஃபைல் படத்தில் இருப்பவர் திருக்கோட்டியூர் செளமியனா? :)

    ReplyDelete
  12. KRS:
    You misunderstood my post. I did not say the problem was what was stated by you. If you read my full post you will understand better.

    I read your post alright. I know you said uRangEl +Or. I said the problem is with #17 compared to all others except 30. Only 17 does not lend itself to the split whereby you can get ElOr empAvAy as with all others. In all others the meaning will be retained if you split the ElOr but if one does it with 17 it would not make sense. That was the problem I mentioned. I did NOT say you split it wrong. Please read it again. The ending in 17 creates an anomaly compared to the other 28 pAsurams.

    ReplyDelete
  13. //Raghav said...
    //(கவனிக்கவும்: வாயிற் காப்போனை எழுப்பவில்லை! ஜஸ்ட் பாடினார்கள்! ஏன்னா அவன் தூங்கவில்லை! வாயில் "நிஜமாலுமே" காத்துக் கொண்டிருந்தான்:) //

    ஆஹா.. சூப்பர், போன பாசுரத்தில் இதை கவனிக்கவே இல்லை..//

    தூங்கிட்டீங்க போல ராகவ்! அதான்! கோதையை அனுப்பித் தான் உங்களை எழுப்பணும் போல! அவ வந்து எல்லே-ன்னு அதட்டட்டும்! :))

    ReplyDelete
  14. //Raghav said...
    அவர் மனைவி உள்ளிருந்தே குரல் கொடுக்க, எம்பெருமானார் அவள் நிலை அறிந்து தன் வஸ்திரத்தை வீட்டினுள் போடுவார். அந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது//

    மனைவியின் பெயர் என்ன?
    அந்த அம்மாள் பின்னாளில் எவ்ளோ பெரிய ஆள் ஆனாங்க! மகளிர் அணியில் மாணிக்கமா திகழ்ந்தாங்க! அதைச் சொல்லுங்க!

    ReplyDelete
  15. //Raghav said...
    மிகவும் அருமையான விளக்கம் அண்ணா..//

    அம்-பரம்
    சோ-றே
    தண்ணீரே

    கேள்வி எதுவும் இல்லீயா ராகவ்? :)

    ReplyDelete
  16. //Kailashi said...
    விளக்கத்திற்கேற்ப ஏற்புடைய படங்கள் அருமை//

    நன்றி கைலாஷி ஐயா! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  17. //மின்னல் said...
    நீராலானவன் நம் நாராயணன் :)//

    எக்ஜாக்ட்லி! :)

    //
    //திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே!//
    விளக்கம் அருமை//

    நன்றி மின்னல்! சமய விளக்கங்கள் இப்போ கொஞ்சம் கொஞ்சமா வருதா, அடியேன் பாவைப் பதிவுகளில்? :)

    //
    //செம்பொற் ***கழல்-அடிச்*** செல்வா! என்று பாதுகையாகவே பலராமனைப் பாடுகிறாள் கோதை//

    அருமை.வாழ்த்துகள்//

    முக்கியாமான இடங்களை மிகவும் ரசிச்சிப் படிக்கிறீங்க போல! :)

    ReplyDelete
  18. //(unknown blogger) said...
    அண்ணா நான் வந்துட்டேன் :D//

    தங்கையும் அண்ணனும் உறங்கேல் ஓர் எம்பாவாய்! :))

    // Who is தூங்குமூஞ்சி? :)"//
    கண்டிப்பா நான் இல்லைப்பா :P

    இதை நீ சொல்லக் கூடாதும்மா!
    உன் ரசிகர் பட்டாளம் இருக்கு பார்! அவிங்க சொல்லட்டும்! :))

    ReplyDelete
  19. //nAradA said...
    In all others the meaning will be retained if you split the ElOr but if one does it with 17 it would not make sense. That was the problem I mentioned//

    ஓ...அப்படிச் சொல்ல வரீங்களா! புரியுது!

    //The ending in 17 creates an anomaly compared to the other 28 pAsurams//

    Hmmm...need not be seen as an anomaly!
    Coz kothai need not stereotype in her last line "el+or" everytime.
    She is a poet and has her own share of poetic justice.

    கடைசிப் பாசுரம் இன்புறுவ ரெம்பாவாய்-ன்னு முடியுது! அதில் "ஏலோ" வராது! மற்ற எல்லாப் பாசுரத்திலும் வரும்! அதனால் அது "அனாமலி" ஆகி விடுமா என்ன?

    ஏல்+ஓர்-ன்னு தான் ஒவ்வொரு பாசுரத்திலும் முடிக்கணும்-னு எந்த இலக்கண விதியும் அவளுக்கு இல்லை!
    #30 முடிப்பு - அதில் அப்படி முடிக்கலை! சொல்லப் போனா "ஏல்" என்ற சப்தமே வரலை!
    #17 நடுவில் - அதில் "ஏல்" சப்தம் வந்தாலும், அதை "உறங்கு"வுடன் சாமர்த்தியமாகச் சேர்த்து விடுகிறாள்.

    ReplyDelete
  20. இன்னும் சொல்லப் போனா,
    உறங்கேலோ ரெம்பாவாய்க்கு இன்னொரு விளக்கமும் உண்டு! சொன்னா அடிக்க வருவாய்ங்க! :)

    கோதை எல்லாரையும் எழுப்பினாலும், கண்ணனை மட்டும் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கச் சொல்லுறா! :))

    உறங்கு + ஏல்-ஓர் எம்பாவாய் :)
    ஏன்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!

    சேது சார்
    அப்படியே, உங்களின் ஏலோ ரெம்பாவாய் விளக்கத்தையும் தாருங்களேன்!

    ReplyDelete
  21. //
    இதை நீ சொல்லக் கூடாதும்மா!
    உன் ரசிகர் பட்டாளம் இருக்கு பார்! அவிங்க சொல்லட்டும்! :))//
    u mean kola veri pudicha happy family ? :D
    avanga ellam sonna unmai illai :D

    ReplyDelete
  22. நான் இனிமே ரெண்டு நாள் கழிச்சு தான் வந்து படிக்கணுமோ? அப்ப தானே உங்க அருமையான இடுகையோட அருமையான பின்னூட்ட உரையாடல்களையும் படிக்க முடியுது?! :-)

    ReplyDelete
  23. >>//The ending in 17 creates an anomaly compared to the other 28 pAsurams//
    Hmmm...need not be seen as an anomaly!
    Coz kothai need not stereotype in her last line "el+or" everytime.<<

    Well, that is an anomaly alright. (Webster: anomaly: a deviation from the common type, rule, arrangement, or form; irregularity)
    Definitely by accepted definition the ending in 17 compared to the other 28 songs is an anomaly. An anomaly, per se, is not bad. I didn't say it was a flaw. What I was questioning was the reason behind her choosing to introduce this anomaly in this song. ANDAL was definitely capable (in view of her immense scholarship) of getting conformity in 17 with all the other "elOrempAvAy". There must have been some reason she chose to do so to which we are not privy. It is somewhat metaphysical in that respect. We can explore this one aspect for ages and still not get the answer.
    As for song #30, it is also an anomaly but she deliberately introduced it because it is an exhortation to the devotees (not addressed to her cohorts--the other girls) to recite the songs including the last one to get salvation. Song 30 is not addressed to the other gOpis. It is a benediction song.

    >>She is a poet and has her own share of poetic justice.<<

    You mean "poetic license". I am sure you meant to say poetic license. Poetic justice is a sort of redemption (such as distribution of a deserving reward or punishment). Poetic license is a "liberty taken by a poet or a writer in deviating from a conventional norm, logic, fact, etc." according to Prof. Webster.
    When Bharathi says "mullaic ceDi adan pAl" it is a poetic license (ceDi is a bush; technically he should have said "mullaik koDi adan pAl". That is an example of poetic license. Sorry to elaborate it although I am sure you know it all.

    Once again let me reiterate I did NOT say you split it the "elOrempAvAy" in 17 inappropriately. Song #17 is a different animal altogether from the rest in terms of suffix conformity.
    If ANDAL really meant it as uRangu +elOr empAvAy, it is acceptable. The scenario here is she is letting Krishna and Balarama to take a few more winks (out of love) although the very purpose of coming there is to wake them up. She could have indulged for the sake of her "manattuk kiniyAn" to let him sleep some more. She is prepared to wait.

    The anomaly in song 30 was deliberate since it addresses others (not the pAvais).

    Cheers!

    ReplyDelete
  24. //குமரன் (Kumaran) said...
    அப்ப தானே உங்க அருமையான இடுகையோட அருமையான பின்னூட்ட உரையாடல்களையும் படிக்க முடியுது?! :-)//

    பின்னூட்ட உரையாடல்கள் வேணும்னா அருமை-ன்னு சொல்லுங்க குமரன்!

    இடுகை அருமை கிடையாது!
    அது வெறும் சிறுமை!

    ReplyDelete
  25. No self pity....

    I am not saying this...it is just an echo of what you have said....

    ReplyDelete
  26. //nAradA said...
    There must have been some reason she chose to do so to which we are not privy. It is somewhat metaphysical in that respect. We can explore this one aspect for ages and still not get the answer//

    சேது சார்!
    நேற்றே இந்த விளக்கத்தை இங்கு சொல்லி இருப்பேன்! ஆனா இன்றைய இடுகையின் சஸ்பென்ஸ் போயிடும்! அதான் குறிப்பாக மட்டும் சொன்னேன் - வேற ஒரு காரணம் இருக்கு! கண்ணனை மட்டும் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கச் சொல்லுறா-ன்னு!:)

    உறங்கேல் + ஓர் -ஆ?
    உறங்கு + ஏல்-ஓர் ஆ?
    இன்றைய இடுகை போட்டாச்சு! பாருங்க! :)

    //If ANDAL really meant it as uRangu +elOr empAvAy, it is acceptable//

    ஹா ஹா ஹா! நல்லாத் தூங்கும் காதலனைப் பார்த்தா, சில சமயம் காதலிக்கு, பாவம் தூங்கட்டும்-ன்னு ஒரு எண்ணம் வரும்! அதோடு கூட இல்லாமல், கோதை அவனை எழுப்பும் முன் இன்னொரு முக்கியமான நபரை எழுப்பவே இப்படி உறங்கேல்/உறங்கு-ன்னு விளையாடறா! :)
    யார் அந்த நபர்? இன்றைய இடுகை போட்டாச்சு! பாருங்க! :)

    //As for song #30, it is also an anomaly but she deliberately introduced it because it is an exhortation to the devotees//
    #30 = வங்கக் கடல் கடைந்த பாசுரம்! அதை நூற்பயன், பலஸ்ருதி என்று சொல்வார்கள்!

    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் என்று பாடுகிறாள்! இங்கும் ஏல்+ஓர் சொல்லி இருக்க முடியும்!

    ஆனால் மற்றை நம் காமங்களை மாற்றி விட்ட பிறகு, ஏல்+ஓர் வராது! ஏற்க ஒன்றுமில்லை, அவன் ஏற்றுக் கொண்டு விட்டான். ஓர்-ஆய்வு செய்யவும் ஒன்றுமில்லை, அவனில் ஆழ்ந்தாகி விட்டது! அதனால் இதில் ஏல் சப்தமும் இல்லை! ஓர் சப்தமும் இல்லை!
    #17 இல் ஏல் சப்தமும் உண்டு! ஓர் சப்தமும் உண்டு! :)

    //Song 30 is not addressed to the other gOpis. It is a benediction song//
    I am of the view, that all songs, not only #30, are addressed to us, via "so called Gopis"!

    Even those Gopis are her own Real/Imaginary friends, whom she transported from vada naadu to then naadu, beyond the dimension of time :)
    The way she transported madura, yamunai thurai, kannan, all his sports to her own back yard, she transports gopis too!...

    and these gopis are us! Kothai transports both her past (real gopis) & her future (we gopis) into her present time. kothai transcends time dimension!
    WE ARE THE GOPIS! :)

    //You mean "poetic license"//

    yes sire! thanks for the correction, explanation & the cheer-up! :)

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    No self pity....//

    ha, ha, ha!
    I am not pitying myself and I hate to do that too!
    I just duly echoed what "some" people felt, coz they wanted to feel that way, without any reasons :)

    ReplyDelete
  28. >>Not at all sir! No self pity - ok?<<
    Not at all, for sure! It was, if I may say so, a preemptive strike!

    ReplyDelete
  29. >>சேது சார்
    அப்படியே, உங்களின் ஏலோ ரெம்பாவாய் விளக்கத்தையும் தாருங்களேன்!<<
    Here you go!
    As you know "El" has several meanings. Let me mention just 4 which have contextual compatibility with tiruppAvai songs.
    1. "welcome" (in verb form) "varuga"
    2. "accept" (this is your choice)
    3. "wake up" (from mental slumber)
    4. "identify with" (suitability)
    I choose #3 to mean "get real, shake off any delusion, and let us go". ANDAL tells her friends, "come on girls, let us get going" That is what I take for "El"

    "Or"
    This is a filler word, an expletive (ie., an asaic col) similar to "kol" as in "ennORRAn kol enum sol". So this "Or" is present as an innocent bystander (in "ElOr") in the 29 pAsurams.

    If you like to read couple of my articles on TiruppAvai I am giving here the URLs.
    http://chennaionline.com/columns/variety/Dec07/12article56.asp
    httep//chennaionline.com/columns/variety/Dec07/12article57.asp

    ReplyDelete
  30. //nAradA said...
    1. "welcome" (in verb form) "varuga"
    2. "accept" (this is your choice)
    3. "wake up" (from mental slumber)
    4. "identify with" (suitability)//

    நன்றி சேது சார்!
    ஏல் என்பதற்கு அகராதிப் பொருள் இதோ!

    //I choose #3 to mean "get real, shake off any delusion, and let us go".//

    நல்ல செலக்ஷன் தான்!
    ஆனால் Wake-up! எழுந்து கொள்!-ன்னு வரும் போது சரி தான்!
    ஆனா, ஏல் எப்படி எழுந்து கொள்-ன்னு பொருள் ஆகும்-ன்னு தமிழறிஞர்களைக் கலந்து பேசணும்!

    நான் #2 எடுத்துக் கொண்டுள்ளேன்!
    ஏல் என்பது நேரடி வினைச் சொல்!
    ஏல்=ஏற்றுக் கொள்!
    நீங்கள் சொன்ன #1 & #4 என் விளக்கத்தோடு ஒத்துப் போகிறது!

    #1 Welcome = விருந்தினரை ஏற்கிறோம்! வீட்டுக்குள் ஏற்கிறோம்! வரவு+ஏற்(ஏல்)கிறோம்=வரவேற்கிறோம்=Welcome!

    #4 Identify with (Suitability) = Suitable means நமக்குப் பொருந்தி வருவதை ஏற்றல்=ஏல்!

    எனவே தான் என் விளக்கம், ஏல்=ஏற்றுக் கொள் என்ற அடிப்படையில் அமைந்தது!

    //"Or"
    This is a filler word, an expletive (ie., an asaic col)//

    இருக்கலாம்!
    அப்படிப் பார்த்தால் ஏல் என்பதும் negative filler! செய்யேல், வேண்டேல், சொல்லேல்!
    ஆண்டாள் மகிழ்ந்தேல் ஓர் எம்பாவாய் என்னும் போது, மகிழ்ந்தேல்=மகிழாதே-ன்னு எடுத்துக்கறோமா? இல்லை அல்லவா!

    ஓர் = ஓர்தல், சிந்தித்தல்,
    Give it a thought-ன்னு சொல்றோமே, அது!
    ஓர் is also a singular expletive! ஓர் அரசன்! ஒருமை x பன்மை!

    ஒருமை->ஒரு->ஓர்
    எல்லாவற்றையும் ஆய்ந்த பின், எது சிறந்தது என்ற ஒருமைக்கு வா! அது தானே ஓர்தல்! அதான் ஓர் என்று ஆகியது! தமிழில் காரணப் பெயர்களின் அருமையே அருமை! இராம.கி. ஐயாவிடம் கேட்டுப் பார்க்கலாமா இந்த "ஓர்" பற்றி?

    //If you like to read couple of my articles on TiruppAvai I am giving here the URLs.//

    படிச்சிப் பார்த்தேன் சார்!
    அருமையாச் சொல்லி இருக்கீங்க! எளிமையான விளக்கம் தான்! ரொம்ப சமய வேதாந்தமா எல்லாம் சொல்லலை! பிடிச்சிருக்கு! :)

    சில சுட்டிகள் வேலை செய்யலையே!
    ஒரு மின்னஞ்சல் தட்டுங்களேன்!
    Your profile page doesnt have your mailid. mine is shravan(dot)ravi(at)gmail(dot)com

    ReplyDelete
  31. இந்தப் பாடலை, ரஞ்சனி&காயத்ரி அவர்கள் - விருத்தமாக பாடியிருப்பார்கள் - கேட்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும்!

    ReplyDelete
  32. //அவனே பரப்பிரம்மம் //
    அந்த பரப்பிரம்மமும், அம்மா என்று அழைத்ததாமே, தாயே யசோதா, என்ன தவம் செய்தனை!

    ReplyDelete
  33. >>உறங்கு + ஏல்-ஓர் எம்பாவாய் :)
    ஏன்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
    இன்னொரு முக்கியமான நபரை எழுப்பவே இப்படி உறங்கேல்/உறங்கு-ன்னு விளையாடறா! :)<<

    I was planning to respond to these remarks a while ago but got distracted by something else and forgot. Here is the belated response.

    uRangu + El vs uRangEl (sleep, don't sleep) dichotomy is just in the mind of the reader. We can't surmise that ANDAL was playing with word splits here. It is because ANDAL cannot flip-flop. Just read the line before "sempoRkazhalaDic celvA....". That line reads, "umbar kOmAnE! uRangAdu ezhundirAy" (oh, the king of the celestials, don't sleep, get up!). That is a request to Krishna after wake-up calls to nandagOpan, and YasOdhai. Then, how can we assume ANDAL is telling Balaraman to tell him "umbium nIyum uRangu" in order to indulge in his lover to let him sleep some more?
    uRangAy, uRangu one after the other is confusing not only for us but for Krishna too. I am sure ANDAL does not want to confuse Krishna.

    So, in 17, one cannot split uRangEl (do not sleep) into uRangu +El. (sleep). The
    "El" in 17 is an inseparable vigudi (terminus) unlike all other "El"s in the other 28 pAsurams where the separation of "ElOr empAvAy" is required to get the intended meaning.

    ReplyDelete
  34. Just a clarification.
    Read uRngAy as uRangAdE in the previous post. I take uRangAy to mean uRangAdE.

    ReplyDelete
  35. /திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே//
    Great explanation!!!
    Thans for this gr8 post!!!!!!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP