Tuesday, December 23, 2008

புதிரா? புனிதமா?? - திருப்பாவை கேம் விளையாடலாமா?

மக்களே, ஃபார் ஏ சேஞ்ச்...ஒரு விளையாட்டு விளையாடுவோம் வாங்க! திருப்பாவை வெளக்கமாவே கேட்டுக்கிட்டு இருந்தா உபன்யாசம் மாதிரி-ல்ல ஆயிரும்? எப்பமே லெக்சர் டைப் ஆன்மீகம் நமக்கு மிக்சர் டைப் ஆயிரும்!
ஹிஹி! இரு வழிப் பங்கேற்பு (Two Way Participation) ரொம்ப முக்கியம்!
அப்போ தான் ஆன்மீக டேபிள் டென்னிஸ் ஜாலியாப் போவும்! வாங்க ஆட்டையப் போடலாமா?

இந்த விளையாட்டு - திருப்பாவைக் குறுக்கெழுத்து! Paavai Crosswords!
*****இங்கே போயி இந்த விளையாட்டை விளையாடுங்க மக்கா!*****

புதிரை இங்கேயே இட்டிருப்பேன்! ஆனால் வரும் அத்தனை விடைகளையும் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யணும்! இது மற்ற திருப்பாவைப் பதிவுகளுக்கு இடைஞ்சலா இருக்கும்!
அதனால் "இனியது கேட்கின்" என்னும் என்னுடைய இன்னொரு வலைப்பூவில் இடுகிறேன்! அங்கிட்டு போயி ஜாலியா ஆட்டம் போடுங்க! கும்மி அடிங்க! :)

(பிகு: அங்கே இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒருத்தரு திருப்பாவை விளக்கங்களைச் சொல்லி இருந்தாரு! இப்பல்லாம் எதுவுமே சொல்லுறதில்லை! யாருக்கும் விளக்கம் சொல்லக் கூடாது, தனக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்-ன்னு சுயமான ஒரு நலத்துல இருக்காரு! :))
எல்லாம் அற, "என்னை இழந்த நலம்", சொல்லாய் முருகா! சுர பூபதியே! ஹரி ஓம்!
)

ஹா ஹா ஹா! ஓவர் டு இனியது கேட்கின்!
விடைகள் கிறிஸ்துமஸ் கழிச்சி சொல்லட்டுமா? குறுக்கெழுத்துப் பரிசும் உண்டு! :)


1 2 3
4
5 6
7
89 10
1112
1314
15
16
17 18

5 comments:

  1. சூப்பர், தேர்வு எழுதி தேர்ச்சி பெறனும்னு ஆண்டம்மா கிட்ட வேண்டிக்கிறேன்.

    இப்போ புதிருக்கு போயிட்டு வர்றேன்.

    ReplyDelete
  2. தல..ஒரு உள்ளேன் ஐயா ;))

    ReplyDelete
  3. //Raghav said...
    சூப்பர், தேர்வு எழுதி தேர்ச்சி பெறனும்னு ஆண்டம்மா கிட்ட வேண்டிக்கிறேன்//

    ஹா ஹா ஹா
    அதான் 21/22 வாங்கி இருக்கியேய்யா! :)

    ReplyDelete
  4. //கோபிநாத் said...
    தல..ஒரு உள்ளேன் ஐயா ;))//

    மாப்பி
    உள்ளேன் ஐயாவும் கொய்யாவும் இல்லை!
    கட்டத்தை ஃபில்லுங்கோ! :)

    ReplyDelete
  5. விடைகள் திங்கள் அன்று பப்ளிஷ் செய்கிறேன்! ;)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP