Thursday, December 11, 2008

ராபின்ஹுட் ஆழ்வார்! Happy Birthday!!

ஆழ்வார்களிலேயே படு வேகமானவர்!
முதலில் நீலன்; பின்னர் திருமங்கையின் மன்னர்; அதற்குப் பின் கள்வர்; பெருமாளிடமே வழிப்பறி செய்த ராபின்ஹூட்! அவரின் Birthday இன்று! ஆமாம், ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபம் அன்று தான் திருமங்கை ஆழ்வாரின் பிறந்த நாள்! (Dec 11, 2008)

கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் ஆழ்வார் அவதாரம். (எட்டாம் நூற்றாண்டு); திருக்குறையலூர் என்னும் ஊரில் (சீர்காழிக்கு அருகில்) பிறந்தார்;
உலக வாழ்வில் மிகவும் ஈடுபட்டுப், பின்னர் எல்லாம் அற என்னை இழந்த நலமாய், நாரணன் பணி செய்து கிடந்தார். "வைணவ அருணகிரி" என்றும் நயத்துக்குச் சிலர் சொல்லுவார்கள்!

நிலையில்லாத இந்தப் பூவுலகில், எம்பெருமான் பாதங்களை ஒருவர் நேராகத் தொடத் தான் முடியுமா? காலம் எல்லாம் தவங் கிடக்கிறார்களே, இதற்காக!
வழிப்பறியின் போது, பரமனின் காலில் உள்ள மெட்டியைத் திருடுவதற்காகத் தொட்டார்! தொட்டது தான் தாமதம்!
இனி வேறு என்ன!!! கலியன் (வலிமை மிக்கவன்) என்று எம்பெருமானே இவரை வாய் விட்டு அழைத்தான்! இவர் காதில் "நாராயண" எட்டெழுத்து மந்திரம் உபதேசித்து அருளினான்.

இவர் கால்படாத திருத்தலம் தான் உண்டா? மிக அதிகமான திவ்ய தேசங்களைப் பாடியது இவர் ஒருவர் தான்!
வைணவத்தை ஒரு மக்கள் அமைப்புக்குள் கொண்டு வந்தவர்.
சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
இன்று திருவரங்கம் கோவில் இப்படிப் பரந்து விரிந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக்காரணம் இவரே! இவர் துணைவியார் குமுதவல்லி நாச்சியார், இவருக்கு உற்ற துணையாய், இறைப்பணிகள் அனைத்துக்கும் கைகொடுத்தார். ஆழ்வார்களிலேயே, தம்மோடு தம் மனைவிக்கும் சேர்த்தே, சிலையும் வழிபாடும் இருப்பது, இவருக்கு மட்டும் தான்!


அவர் பிறந்த நாளில், இதோ அவரின் நெஞ்சை அள்ளும் ஒரு பாசுரம்!
திருவேங்கடமுடையான் மீது தீராத காதல் கொண்டு, கடைத்தேற வழி தெரியாது, "அப்பா... உன்னை வந்து அடைந்தேன்! காப்பாற்று" என்று பாடுகிறார்!
செப்பார் திண்வரை சூழ் திருவேங்கட மாமலை என்
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே!

இவரை ஆட்கொண்டானா? அவரே சொல்கிறார்; கீழே மிக முக்கியமான பாசுரம்; பாக்கலாம் வாங்க!
இந்தப் பாசுரம் வைணவர் உலகம் கொண்டாடும் மிக முக்கியமான பாசுரம்!!
மந்திரப் பூர்வமானது! (திரு மந்திரம்-திரு எட்டு எழுத்து- அஷ்டாக்ஷரம்);
இதை சதா சர்வ காலமும், அதிலும் இறுதிக் காலத்தில் கேட்க எல்லாரும் விரும்புவர்! அவ்வளவு விசேடம்!
பெருமாள் தன் காதில் சொன்னதை, அவர் ஊருக்கெல்லாம் சொல்லும் பாசுரம்!


குலம்தரும் செல்வம் தந்திடும்
--அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
--அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
--பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
--நாராயணா என்னும் நாமம்!


நல்ல குலம்/சுற்றத்தைத் தரும் (உத்தமர் தம் உறவு); செல்வம் தரும் (திருமகள் கடாட்சம்).
அடியவர்கள் படும் துன்பங்களை எல்லாம் தரைமட்டமாக்கும்! (நிலந்தரம்)
நீளமான வைகுந்தப் பாதையை (நீள்விசும்பு), நொடியில் அருளும்;
இறைவன் அருளும், கைங்கரியம்/தொண்டு (பெருநிலம்) என்னும் மகா பாக்கியத்தையும் அளிக்கும்!

வலிமை தரும், மற்ற எல்லாம் தரும். (அவனை அடைய என்ன வலிமையும், மற்றவையும் உனக்குத் தேவைப்படுமோ, அவை எல்லாம் தரும்)
பெற்ற தாயை விட அதிகமான பரிவு காட்டும்!
நல்லதே தரும் சொல் ஒன்றே ஒன்று! அது தான் நாராயணா என்னும் நாமம்!
அதை நான் கண்டு கொண்டேன்! நீங்களும் கண்டு கொள்ளுங்கள்!!



ithan meeL-pathivu :)

25 comments:

  1. செப்பார் திண்வரை சூழ் திருவேங்கட மாமலை என்
    அப்பா வந்து அடைந்தேன் அடியேன் ராகவனை ஆட்கொண்டு அருளே!

    ReplyDelete
  2. brother,
    suodo anmigam niriantha nalil original,old, heart touched prabantham by Thirumangai mannan @ alwar , is very good. keep always touch with adiyars
    by Atheeswaran

    ReplyDelete
  3. அண்ணா.. ரொம்ப நாளா உள்ள சந்தேகம்...

    எங்க ஊர் திருவிழாவில் எட்டாம் திருநாள் அன்று வேடப்பரியாகம் நடைபெறும். அப்போ, திருமங்கையாழ்வார் பெருமாளை மூன்று முறை சுற்றி வரும் போது, பெருமாளின் மீதிருந்து நகைமுடிப்பை ஆழ்வார் தொட்டியில் போடுவர்.

    பின்பு அர்ச்சகர் (என் தாத்தா, இப்போ எங்க அண்ணன்) வேடப்பரியாக நிகழ்வை சொல்வர்..

    அதன்படி, பெருமாள் வீதிவுலா வரும் நேரத்தில் பெருமாளின் ஆடை ஆபரணாங்கள் பறிபோனதென்றும்.. கள்வர் யாரென்று பார்த்து வர சேனை முதலியார் ஒவ்வொரு திசையாக சென்று பார்த்து விட்டு, இறுதியில் வடதிசையில் கூக்குரல்களையும், தீப்பந்தத்தையும் கவனித்து சென்று தாளூதுவான், நிழலிலே மறைவான், திருமங்கையாழ்வான் ஆகியோரைக் கண்டு பின்பு தான் பெருமாளுக்கும், ஆழ்வாருக்கும் உரையாடல் நடப்பதாக இந்நிகழ்வை ஒரு பாட்டாக படிப்பார். (பாட்டு அப்புறமா சொல்றேன் :) ..

    நீங்க முந்தி போட்ட பதிவுல, திருமங்கையாழ்வார், பெருமாளிடம் நேரடியாகப் போய் பொருட்களை மிரட்டி பறிமுதல் செய்வது போல் சொல்லிருந்தீங்க..

    கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன்..

    ReplyDelete
  4. friend,
    alwar pasuram induce my inner feelings. you did a good job in a race world
    athee

    ReplyDelete
  5. When I read the words, I can only
    remember M.S's voice.
    You wrote the meaning of the line "ananyas chinta yantomam"
    in another post. I have said it many times without knowing the meaning of it. It has proven to be very true in my case. Solutions are out there! That's what the saints keep on emphasizing! Good post!

    ReplyDelete
  6. ஏங்க! KRS இத்தனை தகவல்கள் எங்கே இருந்து பிடிக்கறீங்க?

    உங்கள் ஆர்வத்தை பார்க்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தெய்வமே நீங்க ஒரு நடமாடும் encyclopedia..
    கூடவே வரும் wikipedia
    இப்படி எல்லாம் பிடியாவும் நீங்கதான் அண்ணா :D
    நீங்க ஒரு மூத்த பதிவர் என்று இங்கே கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும்

    ReplyDelete
  8. //Raghav said...
    செப்பார் திண்வரை சூழ் திருவேங்கட மாமலை என்
    அப்பா வந்து அடைந்தேன் அடியேன் ராகவனை ஆட்கொண்டு அருளே!//

    ஃபுல் பாசுரம் ப்ளீஸ்!

    அடடே, திருமங்கை மன்னனுக்கு ராகவ்-வை தெரிஞ்சிருக்கு போல கீதே! :)

    ReplyDelete
  9. //brother,
    suodo anmigam niriantha nalil original,old, heart touched prabantham by Thirumangai mannan @ alwar , is very good//

    நன்றி அதீஸ்வரன்!
    அது என்ன ஈஸ்வரன், சங்கரன்-ன்னு பேரு இருக்குறவங்க எல்லாம் பெருமாளிடம் லயிக்கறாங்க?
    ராகவன்-ன்னு பேரு இருக்குறவங்க எல்லாம் சிவனாரிடம் லயிக்கறாங்க?
    :))

    //keep always touch with adiyars//

    நற்சொற்களுக்கு நன்றி! அடியார்கள் சத்சங்கம் தான் மாதவிப் பந்தலில் நடக்கும்! நண்பர்கள் அறிவார்கள்!

    "அடியார்கள்" வாழ! அரங்க நகர் வாழ!
    சடகோபன் தண்டமிழ் நூல் வாழ - கடல் சூழ்ந்த
    மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே
    இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    ...என்று முதலிலேயே அடியார்கள் தான்! அப்புறம் தான் அரங்கநகர், அரங்கன் எல்லாம்! :)

    ReplyDelete
  10. //Anonymous said...
    friend,
    alwar pasuram induce my inner feelings. you did a good job in a race world//

    அதே அதீஸ்வரன் தானே இந்த அதீ? :)
    ஆழ்வார் பாசுரங்கள் வைணவத் திருவாசகம்-ங்க!
    ஆழ்வாரில் ஆழாதார், ஆழாதார் ஆழாதாரே!

    நம்மாழ்வாரின் நான்கு அருளிச் செயல்களும் = நால் வேதங்கள்!
    திருமங்கையின் ஆறு அருளிச் செயல்களும் = ஆறு வேதாங்கங்கள்!
    கோதைத்தமிழ் இது அனைத்துக்கும் வித்து!

    வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்
    ஐ-ஐந்தும்-ஐந்தும் அறியாத மானிடரை
    வையஞ் சுமப்பதும் வம்பு!

    திருவாய்மொழி = சாமவேதம்!
    வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன் என்று சைவர், சிவவாக்கியரே உளம் உருகிப் பேசி உள்ளார்!

    பொதுவாக இறைவன் திருநாமம் பாடும் எல்லாப் பாடல்களையும், அது சினிமாப் பாடலாக இருந்தால் கூட, தமிழ் வேதம்-ன்னு சொல்லிக்கலாம்! தப்பில்லை!

    ஆனால் வேதத்தைத் தமிழ்ப்படுத்தி, அனைவருக்கும் தரணும் என்ற நோக்கத்துக்காகவே ஒரு நூல் செய்யப்பட்டது-ன்னா அது திருவாய்மொழி மட்டுமே! அதனால் தான் அதைச் சிவவாக்கியர் தமிழ்வேதம்-ன்னு சொன்னாரு! வேறு காரணம் அல்ல!

    ReplyDelete
  11. //Anonymous said...
    When I read the words, I can only
    remember M.S's voice.//

    எம்.எஸ் அம்மாவின் நினைவு நாளும் கூட..
    பாரதியின் பிறந்த நாளும் இன்றே!
    Dec-11

    //You wrote the meaning of the line "ananyas chinta yantomam"
    in another post. I have said it many times without knowing the meaning of it//

    :)
    மருந்து என்னான்னு தெரியாமக் குடிச்சாக் கூட ஒடம்பு சரியாயிடும் தான்!
    ஆனா தெரிஞ்சிக் குடிச்சா, மனசும் லைட்டாயிடும்!

    மனசு லைட்டானா, பாதி ஒடம்பு குணமானா மாதிரி, இல்லீங்களா? :)

    //It has proven to be very true in my case. Solutions are out there! That's what the saints keep on emphasizing! Good post!//

    ஆமாம்! அன்பான சொற்களுக்கு நன்றி! தொடர்ந்து வாசிங்க! சத்சங்க கைங்கர்யங்களிலும், உரையாடல்களிலும் கலந்துக்குங்க!

    ReplyDelete
  12. //கிரி said...
    ஏங்க! KRS இத்தனை தகவல்கள் எங்கே இருந்து பிடிக்கறீங்க?//

    ஹிஹி! அடப் போங்க கிரி! திட்டாதீங்க! :)

    யாமோதிய கல்வியும் ....
    தாமேபெற மாலவர் தந்ததினால்...
    (வேலவர்-ன்னு அருணகிரி சொல்லுவாரு! எனக்கு மாத்திக்கிட்டே இருக்கப் பிடிக்கும்! :)

    //உங்கள் ஆர்வத்தை பார்க்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு//

    அன்பு ஈனும் ஆர்வம் உடைமை-ன்னு ஒரு குறள்!
    மனசைச் செலுத்தினா ஆர்வம் தானா வந்துரும்!

    நன்றி...சிங்கைப் பதிவர் சந்திப்புல உங்க படம் பாத்திருக்கேன்! :)

    ReplyDelete
  13. //Raghav said...
    அண்ணா.. ரொம்ப நாளா உள்ள சந்தேகம்...//

    வந்துட்டாருய்யா, வந்துட்டார்! :)

    //பெருமாளை மூன்று முறை சுற்றி வரும் போது, பெருமாளின் மீதிருந்து நகைமுடிப்பை ஆழ்வார் தொட்டியில் போடுவர்//

    சரி தான்! பெருமாளே சீதனமா கொள்ளை அடிச்சிக்கிட்டு தானே வராரு! :)

    //கள்வர் யாரென்று பார்த்து வர சேனை முதலியார் ஒவ்வொரு திசையாக சென்று பார்த்து விட்டு//

    இது சுவைக்காகச் சேர்க்கப்படும் உற்சவ ப்ரீதி!

    //தாளூதுவான், நிழலிலே மறைவான், திருமங்கையாழ்வான் ஆகியோரைக் கண்டு பின்பு//

    தாளூதுவான், நிழலிலே மறைவான் எல்லாம் திருமங்கையின் கூட்டாளிகள்! அடியாட்கள்! அவிங்க தான் மரத்து மேல இருந்து பெருமாள் கோஷ்டி வரதைப் பார்த்துச் சொல்லுவாங்க!

    //(பாட்டு அப்புறமா சொல்றேன் :) ..//

    சஸ்பென்சா? :)

    //நீங்க முந்தி போட்ட பதிவுல, திருமங்கையாழ்வார், பெருமாளிடம் நேரடியாகப் போய் பொருட்களை மிரட்டி பறிமுதல் செய்வது போல் சொல்லிருந்தீங்க.//

    தாளூதுவான், நிழலிலே மறைவான் - இவர்களைப் பதிவிலே சொல்லாமைக்குக் காரணம், நீண்டு விடும் என்பது தான்!
    இன்னும் ரெண்டு பேரு வேற இருக்காய்ங்க! நீர் மேல் நடப்பான், தோலா வழக்கன்...மொத்தம் நாலு கூட்டாளிஸ்! :)

    மேலும்,
    பெருமாள் மற்ற நால்வரையும் கண்டால் கூட, அந்த நால்வரும் பரிவாரங்களைக் கொள்ளையடித்து மூட்டை சுமந்து விடுவார்கள்!

    பெருமாள்-தாயார் மூட்டையைக் கொள்ளையடிப்பது திருமங்கை மட்டுமே! ஏன்னா திருமங்கை பெரும் பொக்கிஷம் கிட்ட மட்டுமே போவாரு! :)
    பாவ மூட்டையைத் தூக்க முடியாமல் அல்லல் பட்ட போது, மத்த நால்வரும் அருகில் இல்லை! மந்திர உபதேசமும் திருமங்கைக்குத் தனியாகவே ஆகும்!

    ReplyDelete
  14. என் நண்பர் வேலன் தன் மகன்களுக்கு ஆதித்தன், நீலன்னு பெயர் வச்சிருக்கார். நீலன்ங்கறது திருமங்கையாழ்வார் பேருன்னு அவர்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சுக்குவேன். ஒவ்வொரு தடவையும் மறந்து போகுது. :-)

    வைணவ அருணகிரின்னு சொல்றது சரியில்லை - அப்படி யாரும் சொல்லலை. அருணகிரிநாதர் தான் காலத்தால் பிந்தியவர். அதனால அவரை வேண்டுமானால் சைவ/கௌமார திருமங்கையாழ்வார்ன்னு சொல்லலாம். :-)

    ஆக ஆழ்வார்களில் ரெண்டு ஆழ்வார்கள் இருக்காங்கன்னு சொல்லலாம். இல்லையா? கோதை நாச்சியாரோடு இனிமேல் குமுதவல்லி நாச்சியாரையும் ஆழ்வார்ன்னு சொல்லலாம்.

    ஆழ்வார்களில் சூப்பர் ஸ்டார் பதவிக்கு இவரும் நம்மாழ்வாரும் தான் போட்டி போடறாங்கன்னு நினைக்கிறேன். சரியா? :-) இவங்க ரெண்டு பேருக்கு நிறைய நிறைய இரசிகர்கள் - வெறி பிடித்த இரசிகர்கள் - இருக்கிறார்கள் போல் தோன்றுகிறது. எனக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களில் கொஞ்சம் பயிற்சி உண்டு. இவரோட இரசிகர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர் பாசுரங்களையும் படித்து அனுபவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். :-)

    ReplyDelete
  15. //(unknown blogger) said...
    தெய்வமே நீங்க ஒரு நடமாடும் encyclopedia..
    கூடவே வரும் wikipedia
    இப்படி எல்லாம் பிடியாவும் நீங்கதான் அண்ணா :D//

    ஹிஹி!
    என் சைக்கிளைப் பிடியா-ன்னு சொல்ல இம்புட்டு நாடகமா தங்கச்சீ?

    //நீங்க ஒரு மூத்த பதிவர் என்று இங்கே கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும்//

    எச்சூஸ் மீ!
    "மூ"த்தப் பதிவர் இல்லை! ஸ்பெல்லிங் ரொம்ப முக்கியம் பின்னூட்டத்துக்கு!

    மு குறில்! மூ நெடில் அல்ல! ஓக்கே! :)

    ReplyDelete
  16. //குமரன் (Kumaran) said...
    என் நண்பர் வேலன் தன் மகன்களுக்கு ஆதித்தன், நீலன்னு பெயர் வச்சிருக்கார்//

    நேத்து தான் ஒரு நண்பர் வளன், வள்ளி-ன்னு அவங்க பசங்க பேரைச் சொன்னாரு! இப்போ நீலன்-ன்னு நீங்க சொல்றீங்க! நல்ல தமிழ்ப் பெயர்!

    //நீலன்ங்கறது திருமங்கையாழ்வார் பேருன்னு அவர்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சுக்குவேன். ஒவ்வொரு தடவையும் மறந்து போகுது. :-)//

    ஓடிப் போய் மொதல்ல சொல்லிட்டு வாங்க! திருமங்கை பிறந்தநாள் பரிசு அது தான்! :)

    //வைணவ அருணகிரின்னு சொல்றது சரியில்லை - அப்படி யாரும் சொல்லலை//

    ஆகா! சொல்லலை-ங்கிறத்துக்கு தரவு இருக்கா? :))

    //அருணகிரிநாதர் தான் காலத்தால் பிந்தியவர். அதனால அவரை வேண்டுமானால் சைவ/கௌமார திருமங்கையாழ்வார்ன்னு சொல்லலாம். :-)//

    யப்பா....ஒரு பின்னூட்டத்தில் ஒன்பது உள்குத்தா? :))
    * அருணகிரி திருமங்கைக்கு அப்புறம் வந்தவரா குமரன்?
    * அருணகிரி சைவ/கெளமார வா? முருக இல்லீயா? வைணவ இல்லீயா?
    * அருணகிரியைச் சிலர் சாக்த-ன்னும் சொல்றாங்க! murugan.orgலயே! பாருங்க!

    ReplyDelete
  17. //ஆக ஆழ்வார்களில் ரெண்டு ஆழ்வார்கள் இருக்காங்கன்னு சொல்லலாம். இல்லையா?//

    யூ மீன் பெண் ஆழ்வார்கள்?

    //கோதை நாச்சியாரோடு இனிமேல் குமுதவல்லி நாச்சியாரையும் ஆழ்வார்ன்னு சொல்லலாம்//

    சொல்லலாம்! தப்பே இல்லை!
    ஆனால் பன்னிரு ஆழ்வார் பட்டியலில் குமுதாவைச் சேர்க்க மாட்டாங்க! ஏனென்றால் அவள் அருளிச்செயல் பாசுரங்கள் பாடவில்லை! பாட வைத்தாள் :)

    இதனால் தான் நாயன்மார்கள் தொகுப்பு முறை எனக்கு ரொம்ப பிடிக்கும்-ன்னு சொன்னேன்! பாடி இருக்கணும் என்ற அவசியம் இல்லை நாயன்மார் பட்டியலில்!

    //ஆழ்வார்களில் சூப்பர் ஸ்டார் பதவிக்கு இவரும் நம்மாழ்வாரும் தான் போட்டி போடறாங்கன்னு நினைக்கிறேன். சரியா? :-)//

    ஹிஹி!
    அ.உ.வை.சூ ஸ்டாரா?

    பாசுர எண்ணிக்கை, திவ்யதேச எண்ணிக்கையில் திருமங்கை தான் சூப்பர் ஸ்டார்!

    ஆனா திருமங்கையைப் பொறுத்தவரை நம்மாழ்வார் தான் சூப்பர் ஸ்டார்!

    அதனால் தான் திருமங்கையே நம்மாழ்வாருக்கு மட்டும் தனி விழாவினை ஏற்பாடு செய்தார் அரங்கத்தில்! திருவாய்மொழித் திருநாள்!

    //இவங்க ரெண்டு பேருக்கு நிறைய நிறைய இரசிகர்கள் - வெறி பிடித்த இரசிகர்கள் - இருக்கிறார்கள் போல் தோன்றுகிறது//

    ஆமாம்!
    தமிழ் வேதம் நம்மாழ்வார்!
    வேதாங்கம் மட்டுமே திருமங்கை-ன்னு விவாதம் எல்லாம் நடக்கும்!
    ராகவ நண்பனை அந்த விவாதக்குக் கூட்டிக்கிட்டு போவணும்! ரொம்பவே சந்தோசப்படுவான்! :)

    //எனக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களில் கொஞ்சம் பயிற்சி உண்டு. இவரோட இரசிகர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர் பாசுரங்களையும் படித்து அனுபவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். :-)//

    இப்படி எல்லாம் சொன்னா ஒத்துக்க மாட்டோம்!
    நீங்க யார் கட்சி?
    நம்மாழ்வாரா? திருமங்கையா?
    அதை மட்டும் சொல்லுங்க! :)))

    ReplyDelete
  18. இவர் துணைவியார் குமுதவல்லி நாச்சியார், இவருக்கு உற்ற துணையாய், இறைப்பணிகள் அனைத்துக்கும் கைகொடுத்தார். ஆழ்வார்களிலேயே, தம்மோடு தம் மனைவிக்கும் சேர்த்தே, சிலையும் வழிபாடும் இருப்பது, இவருக்கு மட்டும் தான்!
    >>>>>>>>..ஹலோ ரவி அவர்களே இங்க திருமதிராபின்ஹுட் பத்தி இன்னும் நாலுவார்த்தை சொல்லி இருந்தா மகளிர் மனங்களை கொள்ளைகொண்ட கண்ணபிரான் ரவிசங்கராக ஆகீருக்கலாமே ஐயா!!!!

    குமுதவல்லி அப்போ உலக அழகியாம்! அவள் நடனம் பார்த்து மயங்கிய மன்னன் அவளைத்தான் மணக்க தீர்மானிக்க அவலோ திருவிலச்சினை திருமண் காப்பு முதலிய பஞ்சசமஸ்காரங்கள் உடைய ஒரு வைஷ்ணவவுக்கேயன்றி பிறருக்கு வாழ்க்கைப்படமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.

    காதலின் தீவிரம் அதிகமாகிவிட திருமங்கை மன்னன் அதைக்கேட்டு திருநரையூர் சென்று, குரு வாகிய நம்பியிடமிருந்து, தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழித்திகழ் சக்கரத்தின் கோயிற்பொறியாலே(சங்குசக்கர அடையாளங்களை இரு கைகளிலும் மேல்பக்கம் தீப்பொறிபறக்க சின்னங்களை பதித்துக்கொண்டாராம்! (இப்போவும் இதெல்லாம் பெண்களும் செய்துகொண்டால்தான் திதி முதலான காரியங்களுக்கு சமையல் செய்யவே அனுமதிக்கப்படுகிறார்கள் வைணவ இல்லங்களில்!)

    பிற‌கும் குமுதாவிட்டாளாஅவ‌ரை இல்லையே இத‌பாருங்க‌ நீங்க‌ ஒருவ‌ருஷ‌த்துக்கு தின‌மும் 1008 வைண‌வ‌ருக்கு அமுது அளித்தால்தான் க‌ல்யாணம் செய்துப்பேன் உங்க‌ளைன்னு க‌ண்டிஷ‌ன் போட்டா!
    இப்ப‌டித்தான் அவ‌ர் திருமாலின் ப‌ர‌ம்ப‌க்தனானார்.
    அண்ண‌லின் காலைக்க‌டித்த‌ க‌லிய‌னுக்கு காதில் ம‌ஹா ம‌ந்திர‌ம் உப‌தேசித்தார்.
    வெற்றி பெற்ற‌ ஒவ்வொரு ஆணின் பின்னும் ஒருபெண் இருப்ப‌து அந்நாளிலிருந்து தொட‌ர்கிற‌து. !!!

    ந‌ல்ல‌ ப‌திவு ர‌வி பாராட்டுக்க‌ள்!

    ReplyDelete
    Replies
    1. திருநரையூர்--->Isn't the place called "tirunaRaiyUr" திருநறையூர் ? (aka nAcciyArkovil) which means a place which is fragrant? In Sanskrit it is called "sunganda giri"--right?

      Delete
    2. திருந"றை"யூர் என்பதே சரி;
      நறை=தேன்/ மகரந்தம்;

      திருநாரையூர் என்பது வேறு
      நாரை=நீர்ப் பறவை
      தேவாரம் (திருமுறை)தொகுத்த நம்பியாண்டார் நம்பியின் ஊர்;

      Delete
  19. //ஷைலஜா said...
    ஹலோ ரவி அவர்களே இங்க திருமதிராபின்ஹுட் பத்தி இன்னும் நாலுவார்த்தை சொல்லி இருந்தா மகளிர் மனங்களை கொள்ளைகொண்ட கண்ணபிரான் ரவிசங்கராக ஆகீருக்கலாமே ஐயா!!!!//

    ஹா ஹா ஹா
    போதும்-க்கா போதும்! எத்தனை மனங்களைத் தான் கொள்ளை கொள்ளுறது? :))

    இது சும்மா எப்பவோ போட்டதன் மீள்பதிவு-க்கா!
    குமுதவல்லி கதையை ஒரு லவ் ஸ்டோரி கணக்கா சொல்ல எனக்கு ரொம்ப நாள் ஆசை! இன்னொரு வாய்ப்பில் சொல்கிறேன்! எப்படி சைவத் திருமங்கை அசைவத் திருமங்கை ஆனான், பெண்ணிவளின் கண்ணசைவால்! :))

    //திருவிலச்சினை திருமண் காப்பு முதலிய பஞ்சசமஸ்காரங்கள் உடைய ஒரு வைஷ்ணவவுக்கேயன்றி பிறருக்கு வாழ்க்கைப்படமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாள்//

    வைணவப் பதிவர் போல குமுதா! பாத்து இருக்கச் சொல்லுங்க! ஜிரா வரப் போறாரு! :)

    //இப்போவும் இதெல்லாம் பெண்களும் செய்துகொண்டால்தான் திதி முதலான காரியங்களுக்கு சமையல் செய்யவே அனுமதிக்கப்படுகிறார்கள் வைணவ இல்லங்களில்!//

    ஆகா! பெண்களுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் நடக்கிறதா-க்கா? பொதுவா பெண்களை ஒதுக்கி வைப்பாங்களே! மேல் விளக்கம் ப்ளீஸ்!

    //பிற‌கும் குமுதாவிட்டாளாஅவ‌ரை இல்லையே இத‌பாருங்க‌ நீங்க‌ ஒருவ‌ருஷ‌த்துக்கு தின‌மும் 1008 வைண‌வ‌ருக்கு அமுது அளித்தால்தான் க‌ல்யாணம் செய்துப்பேன் உங்க‌ளைன்னு க‌ண்டிஷ‌ன் போட்டா!//

    சத்துணவுத் திட்டம்? :)

    //வெற்றி பெற்ற‌ ஒவ்வொரு ஆணின் பின்னும் ஒருபெண் இருப்ப‌து அந்நாளிலிருந்து தொட‌ர்கிற‌து.//

    உண்மை! உண்மை! உண்மை!
    பின்னால் இருக்கும் பெண், பக்கத்திலோ இல்லை முன்னாலோ வந்தா இன்னும் நல்லா இருக்கும்!

    ReplyDelete
  20. //ஆகா! பெண்களுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் நடக்கிறதா-க்கா? பொதுவா பெண்களை ஒதுக்கி வைப்பாங்களே! மேல் விளக்கம் ப்ளீஸ்! //

    என்ன அண்ணா, இப்புடி சொல்லிட்டீங்க.. எங்க குடும்பத்தில் அனைவருக்கும் பெண்கள் உட்பட பஞ்ச சம்ஸ்காரம் நடந்துள்ளது (பெண்களுக்கு கல்யாணத்திற்கு பிறகு)..

    பொதுவாக வடகலை சம்ப்ரதாயத்தில் பெண்களுக்கும் உண்டு. தென் ஆசார்யர்கஆள் சம்ப்ரதாயம் பற்றி கேட்டு சொல்கிறேன்.

    ReplyDelete
  21. //Raghav 9:52 AM, December 14, 2008
    //ஆகா! பெண்களுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் நடக்கிறதா-க்கா? பொதுவா பெண்களை ஒதுக்கி வைப்பாங்களே! மேல் விளக்கம் ப்ளீஸ்! //

    என்ன அண்ணா, இப்புடி சொல்லிட்டீங்க..//

    ஹா ஹா ஹா!

    //எங்க குடும்பத்தில் அனைவருக்கும் பெண்கள் உட்பட பஞ்ச சம்ஸ்காரம் நடந்துள்ளது (பெண்களுக்கு கல்யாணத்திற்கு பிறகு)..//

    இதை எப்பவாச்சும் பதிவுலகத்துக்கு உரக்கச் சொல்லி இருக்கீங்களா? நல்ல விசயம் அல்லவா! இப்போ சொல்லி ஆகி விட்டதல்லவா? :))

    ReplyDelete
  22. Raghav said...
    >>>>என்ன அண்ணா, இப்புடி சொல்லிட்டீங்க.. எங்க குடும்பத்தில் அனைவருக்கும் பெண்கள் உட்பட பஞ்ச சம்ஸ்காரம் நடந்துள்ளது (பெண்களுக்கு கல்யாணத்திற்கு பிறகு)..

    பொதுவாக வடகலை சம்ப்ரதாயத்தில் பெண்களுக்கும் உண்டு. தென் ஆசார்யர்கஆள் சம்ப்ரதாயம் பற்றி கேட்டு சொல்கிறேன்.
    >>>>>>.
    ராகவ் உரக்கச்சொல்லுமா உங்க அண்ணனுக்கு என்னவோ கேள்வி கேக்கறார் பாரேன் அதுவும் சமஸ்காரம் செய்துகொண்ட அக்காகிட்டயே!

    ஆமா ரவி! கல்யாணம் ஆனதும் வரதட்சணைக்கொடுமை என்றுசூடுவைக்கமாட்டாங்க வைணவவீடுகளில் !!! சமஸ்காரம் என்பதை (சம்மாஷர்ணம் என பேச்சுவழக்கில் இருக்கு) குருதேவர் முன்பு சேவித்து அவரது திருக்கரத்தால் சங்குசக்கரச்சின்னங்களின் இலச்சினைப்பெற்றுக்கொள்வது வழக்கம்.

    ஆண்களுக்கு பிரம்மோபதேசம் ஆனதும் இது நடக்கும் பெண்களுக்கு ராகவ் சொன்னமாதிரி மணம் முடிந்ததும்தான்.

    ஆனா எல்லாக்குடும்பத்திலும் இது கண்டிப்பா செய்துதான் ஆகணும்னு இல்லை என்பதால் சூடுபோடாதபசுக்கள்,காளைகள் பல உண்டு!


    திருவரங்கப்ரியாக்கு திருமணம் ஆன மறுநாளே சூடுபோட்டாச்சு!!!!!

    ReplyDelete
  23. //உங்க அண்ணனுக்கு என்னவோ கேள்வி கேக்கறார் பாரேன் அதுவும் சமஸ்காரம் செய்துகொண்ட அக்கா கிட்டயே!//

    வாவ்!
    அக்கா, Hats off to you!
    இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    அன்னிக்கி உங்க வீட்டில், உங்கள் கீழே உட்கார்ந்து சேவிக்கிறா மாதிரி கொடுத்தது போஸ் தான் என்றாலும், இன்று அதையே சமாஸ்ரயண வணக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள்!
    வணங்குகிறேன்!

    //ஆமா ரவி! கல்யாணம் ஆனதும் வரதட்சணைக்கொடுமை என்றுசூடுவைக்கமாட்டாங்க வைணவவீடுகளில் !!! சமஸ்காரம் என்பதை (சம்மாஷர்ணம் என பேச்சுவழக்கில் இருக்கு) குருதேவர் முன்பு சேவித்து//

    அருமை! நண்பன் ராகவன் கிட்ட சொல்லுறேன்! மிகவும் மகிழ்வான்! பெண்களின் ஆன்மீக முன்னேற்றத்தை மதிக்கும் வீடுகள், மங்களகரமானவை! அங்கே இன்பம் தங்கட்டும்!

    //ஆனா எல்லாக்குடும்பத்திலும் இது கண்டிப்பா செய்துதான் ஆகணும்னு இல்லை என்பதால் சூடுபோடாதபசுக்கள்,காளைகள் பல உண்டு!//

    ஓக்கே தான்-க்கா!
    கட்டாயப்படுத்தக் கூடாது! விரும்பினால் செய்து கொள்ளும் முறை இருக்கு பாருங்க! அது போதும்!

    //திருவரங்கப்ரியாக்கு திருமணம் ஆன மறுநாளே சூடுபோட்டாச்சு!!!!!//

    உய்யுமாறு என்று எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP