Sunday, December 21, 2008

திருப்பாவை vs திருவெம்பாவை!

திருவெம்பாவை என்றால் என்ன? திரு+வெம்+பாவை? ஈசன் மேல் கொண்ட காதல் வெப்பத்தால், சூடான பெண்ணொருத்தி, சூடான பதிவு போட்டு பாடுவதா? ஹா ஹா ஹா!
அப்படி இல்லீங்க! அது திரு+எம்+பாவை தான்! "எங்கள் பெண்ணே (எம் பாவாய்), நோன்பு எடு" என்று சொல்வதே திருவெம்பாவை! மேன்மை கொள் சைவ சமயத்தின் பாவைப் பாடல்!


இன்னிக்கி மத்தியானம் நல்ல தூக்கம்! மாலையில் ஒரு குழந்தைக் காப்பக கிறிஸ்துமஸ் வேலை வேற இருந்திச்சி!
பனிப்பொழிவு என்பதால் என்னால அடுப்பைப் பத்த வைக்க முடியலை! :)
மூனு மசால்தோசை, சுடுசோறு, தக்காளி குருமா, சேனைக்கிழங்கு வறுவல், மிளகு ரசம், தாளிச்ச மோரு...ப்ளஸ் பிஸ்டாச்சியோ ஐஸ் க்ரீம்!
அன்னமிட்ட பக்கத்து வீட்டு அக்காவே - இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)

சாப்பிட்டு போட்டு, கட்டையைச் சாய்ச்சது தான்! செம தூக்கம்! எழுந்து பார்த்தா...OMG! மாலை நிகழ்ச்சிக்கு ஏற்கனவே லேட்டு! ச்சே! எப்போ பதிவை எழுதி, எப்போ போடுறது? போதாக் குறைக்கு மாணிக்கவாசகர் வேற இன்னிக்கி ப்ளான்-ல இருந்தாரு! என்னாத்த பண்ண?

பெண்களுக்குத் தான் எப்பமே காத்துக் கிடப்பது ரொம்ப பிடிக்குமாமே! :)
"அலோ கோதை, நீ கொஞ்சம் காத்துக்கிட்டு இருக்கீயாடீ? மாணிக்க-வாசகரை வாசகம் பண்ணிட்டு அப்பாலிக்கா உன் கிட்ட வாரேன்!
அமெரிக்க நேரப்படி நாளை காலையில் தானே அடுத்த திருப்பாவை? அது வரைக்கும் மொட்டை மாடியில் கொஞ்சம் வெயிட் மாடி!

மீ சைவம் பர்ஷ்ட்! வைணவம் நெக்ஸ்ட்! இல்லீன்னா மம்மி வில் பீட் மீ! :) முருகனைக் கொஞ்சலீன்னா, அடுத்த முறை இந்தியப் பயணத்தில் அவரைக்காய் பொரிச்ச கூட்டு கட்!
சைவக் குடும்பத்தில் பொறந்துட்டு, இந்தப் பெருமாளை வச்சிக்கிட்டு படும் பாடு இருக்கே! Sorry, dee கோதை! See u in the Morning" :)))


திருப்பாவை = பெண் ஒருத்தியே, கண்ணன் பால், தன் உணர்ச்சிகளைக் கொட்டுகிறாள்!
திருவெம்பாவை = ஆண் ஒருவர், அகத்துள்ளே பெண்ணாகி, ஈசன் பால் தன் உணர்ச்சிகளைக் கொட்டுகிறார்!
ஏன் பெண் ஆக வேண்டும்? இப்படிப் பெண்ணாக மாறிச் சொன்னால் அது இயற்கையாக இருக்குமா? கோதை என்ற பெண் வடிக்கும் உணர்ச்சிகளை ஒரு ஆணால் வடிக்க முடியுமா?
ஏன் பெண் ஆக வேண்டும்? ஆணாகவே இருந்து உணர்ச்சிகளைச் சொல்ல முடியாதா?
ஏன் அப்படிச் சில ஆன்றோர்கள் செய்யவில்லை? ஏன் நாயகி பாவமாகப் பாடினார்கள்?
ஏன், ஆண்களுக்கு அழுவத் தெரியாதா என்ன? இங்கு பதிவுலகில் உள்ள பல ஆண்களைக் கேட்டுப் பாருங்க! நெஜமாலுமே ஜூப்பரா அழுவாங்க! :)))

ஹிஹி! நாயகி பாவத்துக்குக் காரணம் இருக்குங்க! ஒரு நோக்கமும் இருக்கு! நல்ல நோக்கம் தான்! :) இன்னொரு சமயம் சொல்கிறேன்! இன்னிக்கு திருவெம்பாவைப் பாட்டு மட்டும் ஒன்னு பார்ப்போம்!
என்னை மிகவும் கவர்ந்த திருவெம்பாவைப் பாட்டுகள் இரண்டு! அதில் இது ஒன்று! இன்னோன்னு ரொம்பவே சர்ச்சைக்குரிய பாட்டு! மார்கழி நிறையும் போது சொல்கிறேன்! அது வரை அது என்னான்னு ஊஊஊகிச்சி வைங்க! :)

இரண்டு பாவைகளுக்கும் அடிப்படை ஒன்று தான்!
* திருவெம்பாவை = என்ன குறையும் இலோம், ஏலோர் எம்பாவாய்!
* திருப்பாவை = நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!
இறைவனைப் பற்றினால் எந்தக் குறையும் இலோம் என்பது சைவப் பாவை! இறைவனின் பற்று ஒன்"றே" நீங்காத செல்வம் என்பது வைணவப் பாவை!

இப்போ பாவைக் கட்டமைப்புகளைக் கொஞ்சம் பார்க்கலாமா?
* அது (திருவெம்பாவை) ஈசன் மேல் பாடியது, இது(திருப்பாவை) கண்ணன் மேல் பாடியது!
* அது ஆண் (மாணிக்கவாசகர்) பெண்ணாகப் பாவித்துப் பாடினார்! இது பெண் (ஆண்டாள்) பாடினாள்!
* அது இருபது பாடல்கள்! இது முப்பது பாடல்கள்!
* அது திருவண்ணாமலையில் ஈசனைப் பாடியது! இது எந்தவொரு தலத்து இறைவன் மேலும் பாடப்படவில்லை!
* அதில் அண்ணாமலை, தில்லை என்று தலங்கள் வரும்! இதில் தலத்தின் பெயர்கள் எங்குமே வராது! பொதுவான கண்ணன்-காதல்-பாடல்! அவ்வளவே!
இன்னும் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க மக்களே!
மற்றபடி இரண்டுக்கும் உள்ள சொற்செட்டுகள், இயற்கை வர்ணனைகள், சமூகப் பார்வை, வானியல் குறிப்புகள், பேச்சு/வட்டார வழக்கு, இறை நுட்பம் - இதெல்லாம் சைவ ஆன்றோர்களும், வைணவச் சான்றோர்களும் வந்து பேசி மகிழ்விக்கட்டும்! நாம பாட்டுக்குப், பாட்டுக்குப் போகலாம் வாங்க! :)


கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்!
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்!
கேழில் பரஞ்சோதி! கேழில் பரங்கருணை!
கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?


வாழி ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்!

கோழி கூவுது! குருகு கூவுது! ஏழிசைச் சங்க நாதம் எங்கும் கேக்குது! குற்றமில்லாத பரஞ்சோதியின் பரங்கருணையைப் பாடுறோமே? உன் காதில் விழவில்லையா? நல்லா இருடீ! இப்படியா தூங்குவ? எழுந்து வாசலைத் திற!

எம்பெருமானான சக்கரம் சுழலும் பெருமாள், சிவபெருமான் மேல் எம்புட்டு அன்பு வச்சிருக்கான்! அதில் நீ கொஞ்சமாச்சும் வச்சிருக்கியா?
ஊழிக் காலத்தில் அழிக்கும் கடவுளாக ஈசன் நிற்கிறான்! ஆனால் காக்கும் காலத்தில் ஏழைப் பங்காளனாய் இருக்கானே! அவனைப் பாடவோம்! எழுந்து வா, போகலாம்!


இப்போ கொஞ்சம் பிரிச்சி மேயலாமா? (அப்படியே உங்க கிராமத்துக் காலைக் காட்சிக்கும் போங்க பார்ப்போம்!)
கோழி சிலம்ப = கோழி கூவும்! அது என்னா சிலம்பும்?
சிலம்பில் பரல்கள் கம்மி! கொலுசு மாதிரி கிடையாது! அதுனால நடக்கும் போது சத்தம் வரும், ஆனா தொடர்ந்து ஜல்ஜல் வராது! விட்டு விட்டு வரும்! அதே போலத் தான், கோழியும் விட்டு விட்டுக் கூவுது! தொடர்ந்து கூவித் தூக்கத்தைக் கெடுத்துச்சினா, நீங்க அந்தக் கோழியை என்ன பண்ணுவீங்க-ன்னு எனக்குத் தான் நல்லாத் தெரியுமே! :)

சிலம்பும் குருகு எங்கும் = குருகு-ன்னா ஒரு வகையான நீர்ப்பறவை! கொக்கு போல! திரு+குருகூர் என்று நம்மாழ்வார் பிறந்த தலத்தைச் சொல்றோம்-ல? குருகுகள் இருக்கும் ஊர் குருகூர்! இங்கன கோழி கூவ, அதைக் கேட்டு குருகு கூவுது! Chain Reaction போல! :)

ஏழில் இயம்ப இயம்பும், வெண் சங்கு எங்கும் = ஏழிசை சரிகமபதநி! அந்த ஏழிசையும் காலையில் பூபாளமாய் ஒலிக்க, கூடவே வெண் சங்கு எங்கும் ஒலிக்குது! கோயில்களில் காலையில் சங்கு ஊதுவது மங்கல மரபு! இன்னிக்கித் தான் சங்கு ஊதறது-ன்னா வேற மாதிரி பொருள் ஆயிரிச்சி! :)

கேழில் பரஞ்சோதி! கேழில் பரங்கருணை! = ஆகா! நம்ம வள்ளலார் சொல்வது போலவே இருக்கே! அருட் பெருஞ்சோதி! தனிப் பெருங்கருணை!
கேழ் = ஒப்புமை! ஒப்பில்லாத சோதியான்! ஒப்பில்லாத கருணையான்!

சிவபெருமான் வரப்பிரசாதி, பக்த கோலாகலன்! சோதனைகள் நிறைய கொடுத்தாலும், தவத்தில் வென்று விட்டால் அள்ளி அள்ளிக் கொடுப்பவர்!
இந்தப் பெருமாள் அப்படி அல்ல! மகா கஞ்சன்! :) அவ்வளவு சீக்கிரம் பெயராது! "ஆராய்ந்து" அருளேலோ ரெம்பாவாய் தான்! ஏதோ தாயார் அவன் மார்பில் இருக்கா! நாம எல்லாரும் பொழைச்சோம்!

கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? = இப்படி ஈசனின் பெருமைக்குரிய பொருட்கள் - ஜடாமகுடம், கங்கை, பிறைச் சந்திரன், திருநீறு, நாகாபரணம், புலித்தோல், மழு-மான், கையில் தீ, எடுத்த பொற்பாதம், சூலம், டமருகம்(உடுக்கை), ரிஷபக் கொடி, நந்தி தேவர் - என்று பாடினோமே! ஒன்னு கூடவா நீ கேக்கலை? அடிப் பாவீ!

வாழி = நல்லா இரு!
ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்! = அப்படியென்ன தூக்கம்? கதவைத் திற!

ஹிஹி! இந்தக் காலத்தில் நண்பன் மேல ரொம்ப கோவம் வந்தாச் சொல்றோமே! = நல்லா இருங்கடே! அதே தான்! வாழி என்கிறார்! :)
சிவபிரானை இம்புட்டு பாடுறோம்? நீ பாட்டுக்குனு ஏதோ தூங்கிக்கிட்டு இருக்க? நல்லா இரு டீ! சீக்கிரம் கதவைத் தொற! தொறந்து, கேஆரெஸ் பதிவுல போயி, நமசிவாய வாழ்க!-ன்னு பின்னூட்டம் போட்டுட்டு வா! :)


ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ? = இந்த வரிகளை நல்லபடியா நோக்கணும் என்று அனைவரையும் கேட்டுக்கறேன்! மாணிக்க வாசகரின் ஒரு வாசகம் என்றாலும் அது திருவாசகமான வரிகள் இவை!
ஆழியானான பெருமாள், ஈசன் மேல் வைத்திருக்கும் அளவிலா அன்பில், ஒரு சிறு பங்காவது நீ வச்சிருக்கியா? - என்று கேட்கிறார் மாணிக்கவாசகர்!
யாரை? திருவண்ணாமலை வீதியில் இருக்கும் ஒரு பொண்ணையா? இல்லை! நம்மை! என்னை! உங்களை! ஏன்?

சைவத்தைக் காக்கிறேன் பேர்வழி என்று சிவத்தை மறந்து விடுகிறோம்! சிவன் பால் மாசற்ற அன்பைத் தருவதில்லை! மனசின் கலப்படப் பாலை ஊற்றுகிறோம்! நமக்காக அமைத்துக் கொண்ட கட்டமைப்பைக் காக்கும் பொருட்டு, சைவத்தைப் பிடிச்சிக்கறோம்! சிவனை மறக்கிறோம்!

* இல்லையென்றால் தில்லையில், பொன்னம்பலத்தில், எண்ணெய் ஊற்றி வழுக்கி ஓடச் செய்வார்களா? "அய்யோ! நம் பிள்ளை ஆடும் அம்பலமாச்சே! ஆடும் அம்பலத்தில் அம்பலவாணப் பிள்ளை வழுக்கி விழுந்தால் என்ன ஆகும்" என்ற துளி பாசம் வந்ததா?
உள்ளே வரும் காவலரைத் தடுக்கணும்-ன்னா, தான் படுத்து, தன் மேல் ஏறிப் போங்கள்-ன்னு சொல்லலாமே? ஹிஹி! பாசம் பரஞ்சோதிக்கா வைத்தாய்? என்று இடித்துக் கேட்கிறார் மணிவாசகப் பெருமான்! :(
* "தேவாரத் திருப்பதிகங்களை அம்பலத்தில் பாடி விட்டுப் போகட்டுமே! வீண் அவப்பெயர் மட்டும் அல்லாமல், வளரும் தலைமுறை இதையெல்லாம் பார்த்துவிட்டு, நாத்திகர்கள் அல்லவா ஆவார்கள்? சிவ துவேஷத்திற்கு நாமே காரணம் ஆகலாமா?" - இப்படி எல்லாம் யோசிக்கவே மாட்டார்கள் இந்தக் கர்ம சீலர்கள்! கர்மானுஷ்டானம்! யார் கர்மம்? சிவபெருமானோட வேலையா? இல்லையில்லை! தங்கள் வேலை! தங்கள் கர்மம்! ஏன்? நம்ம கட்டமைப்பைக் காத்துக்கிடணும்! சிவன் என்னவானா நமக்கு என்ன? :(

* அது என்ன நந்திக்குப் பின்னால் இருந்து தான் தமிழ் பாடணும்-ன்னு ஒரு குருட்டு வாதம்? அதான் நந்திக்கு முன்னால் இருந்து, ஈசனே பாடி விட்டாரே! "மாணிக்கவாசகன் சொல்லச் சொல்ல, நாமே எழுதியது" என்று பொன்னம்பலத்தில் தானே தமிழில் திருக்கடைக்காப்பு இட்டார்? பொன்னம்பலம் என்ன நந்திக்குப் பின்னா? அப்புறம் என்ன? பொன்னம்பலத்தில் அவர்களும் தமிழ் பாடட்டும்! கருவறைச் சிற்றம்பலத்துக்குள் நாமும் தமிழ் பாடுவோம் என்ற எண்ணம் வருமா? வராது! சுட்டுப் போட்டாலும் வராது! :(

* ஏன்? = தங்களை முன்னுக்குத் தள்ளி, இறைவனைப் பின்னுக்குத் தள்ளும் போக்கு!
தங்களையும், தங்கள் பூஜா முறைகளையும், தங்கள் கர்ம அனுஷ்டானங்களையும் காத்துக் கொள்வோம்! ஈசனை அவரே பார்த்துக் கொள்வார்! அவர் சன்னிதியில் நாமே எண்ணெய் ஊற்றினால் என்ன? பெட்ரோல் ஊற்றினால் தான் என்ன? சிவோஹம்! சிவோஹம்!

அதான் மாணிக்கவாசகப் பெருந்தகை நெத்தியடி அடிக்குறாரு! ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ? --- ஆழியானாகிய பெருமாள், நம் ஈசனிடம் வைத்த பாசத்தில், ஒரு சிறு பங்கு இருக்கா உங்க கிட்ட? என்று கேட்கிறார் மாணிக்க வாசகர்!
இந்த மணி வாசகத்தை மட்டும் மன்னன் படிச்சிருந்தான் என்றால், தில்லையில் கோவிந்தராசரை அப்புறப்படுத்தியே இருக்க மாட்டான்! :(
என்ன செய்வது! காலம் காலமாக, தனிப்பட்ட மனிதர்களின் சுய லாபங்களும், சுய பிரதாபங்களும் முன்னே! ஈசனும் அம்பிகையும் பின்னே! ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?


ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை = (ஆக்கல், காத்தல், அழித்தல்) ஊழிக் காலத்தில் அழிக்கும் கடவுளாய் நிற்கும் சிவபிரானை! "ஒருவனை"! ஊழியின் போது வேறு எவரும் கிடையாது! சிவபிரான் ஒருவரே! அவரே தனியாக இருந்து அழிக்கிறார்! அதனால் "ஒருவனை" என்கிறார்!
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய் = அது என்ன ஏழைப் பங்காளன்? சிவபெருமான் அரசியல் கட்சி எதுவும் தொடங்கலையே? அவிங்க தான் ஏழைப் பங்காளன் என்பார்கள்! :) இதுக்கு என்னவா இருக்கும்-ன்னு திருவாசக உரைகளைத் தேடினேன்!
ஏழை = உமை அன்னை! அவளைத் தன் பங்கில் கொன்டவன்! = ஏழைப் பங்கு ஆளன்!

ஏன் உமையன்னையை ஏழை-ன்னு சொல்லணும்? ஏந்திழை-ன்னு இருக்குமோ? ஏழை-ன்னு சுருங்கிருச்சோ? அவ மலையரசன் மகளாச்சே! அவளா ஏழை? மதுரையின் அரசியாச்சே! அவளா ஏழை? யோசிச்சிப் பார்த்தேன்! ஆமாம் அவள் ஏழை தான்! இல்லாதவள் தான்! ஏன்னா Wealthy Accumulate! Poor Spend!

பக்தர்களின் குறைகளை மனசுக்குள்ளாற தேக்கி வச்சிக்கத் தெரியாது அவளுக்கு! போனாப் போகட்டும், போனாப் போகட்டும்-ன்னு, தன்னருளைச் செலவு செய்து கொண்டே இருப்பாள் உலகன்னை! ஜகன் மாதா! அவள் ஏழையே தான்! ஏழை பங்கு ஆளனையே பாடேலோர் எம்பாவாய்!

ஆழியான் பெருமாளின் அன்பைப் பெற்று விளங்கும் அம்பலவாணன் திருவடிகளே சரணம்! திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!

37 comments:

  1. //மூனு மசால்தோசை, சுடுசோறு, தக்காளி குருமா, சேனைக்கிழங்கு வறுவல், மிளகு ரசம், தாளிச்ச மோரு...ப்ளஸ் பிஸ்டாச்சியோ ஐஸ் க்ரீம்!//

    ம்.. நல்லா இருங்கண்ணா..

    ReplyDelete
  2. திருவெம்பாவையை சிலமுறை காதில் கேட்டதோடு சரி.. இன்று தான் கொஞ்சம் உள்வாங்கி படிக்கிறேன்.

    கோழி சிலம்ப = புள்ளும் சிலம்பின காண்..

    இது போன்ற நிறைய ஒற்றுமைகள் இருந்தும் நாம் தான் வேற்றுமை காண்கிறோம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. //ம்.. நல்லா இருங்கண்ணா..//

    ஹிஹி! வாழி-ன்னு சொல்லணுமாம்! பதிவைப் ஃபுல்லா படிங்க! :)

    மணி இப்போ பின்னிரவு ரெண்டே முக்கா!
    Community Center வேலை எல்லாம் முடிச்சிட்டு, இப்போ தான் வந்து, திருவெம்பாவை பதிவு எழுதி அனுப்பிச்சிட்டு, குமரன் பதிவுக்குப் போயிட்டு வாரேன்! :)

    ஓக்கே! மீ தி தூங்கப் போயிங்! :)

    ReplyDelete
  4. எம் ஆண்டாளை ரொம்ப நேரம் மொட்டை மாடியில் காக்க வைக்காதீர் ஓய்.. வீட்டுக்குள்ளேயாவது கூப்பிட்டு உக்கார வைங்க..

    ReplyDelete
  5. திருப்பாவை இப்படி ஒரு பாடல் படிக்கவே இல்லையே :)

    ம்ம்ம் ஒரு வீரவைணவளை திருவெம்பாவை படிக்க வைத்த பெருமை பெற்றீர்.

    ReplyDelete
  6. சார்,

    அட்ட காசம்.நல்லா இருக்கு.புதிய தகவல்கள்.நீங்க ஏதாவது இங்குள்ள
    ஆன்மீக பத்திரிக்கைக்கு இங்கிருந்தபடியே காலம்(column) எழுதலாமே.நிச்சியம் போடுவார்கள்.

    நான் வழக்கமாக கதை/கவிதை/கட்டுரை எழுதுபவன். ஒரு தடவை
    ஒரு வித்தியாசமான ஆன்மீக பதிவு "சலங்கை ஒலி நாத வினோதங்கள் நடன" என்ற பாட்டில் வரும் "வாகர்தாவிவ ஸ்ம்ப்ருக்தெள வாகர்த" என்பதை பற்றி எழுதினேன் . அடுத்து "இரட்டை அர்த்த பாடல்கள்-காள மேக புலவர்"

    பரமாச்சாரியாளின் “தெய்வத்தின் குரல்” எடுத்து எழுதியது(சுட்டது?)

    தயவு செய்து படித்து விட்டு கண்டிப்பாக கருத்துச் சொல்லவும்.

    என்னுடைய வலை பகுப்பின் Ref:

    இசை - (சலங்கை ஒலி நாத)
    கட்டுரை - (இரட்டை அர்த்த பாடல்கள்)

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. //சீக்கிரம் கதவைத் தொற! தொறந்து, கேஆரெஸ் பதிவுல போயி, நமசிவாய வாழ்க!-ன்னு பின்னூட்டம் போட்டுட்டு வா! :)//

    ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய


    ஆண்டாளின் திருப்பாவையை மட்டும் பாடி எங்கே மாணிக்கவாசகரை மறந்து விட்டீர்களோ என்று கண்டிக்கலாமென்று இருந்தேன் தப்பித்துக் கொண்டீர்கள் .

    அடியேனுக்கு பிடித்த பாடல் "பைங்குவளை கார் மலராற்" அதில் வரும் சிலேடையை தங்கள் பாஷையில் பிரித்து மேயுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. திருவெம்பாவைப்பாடலுக்கு சிறப்பா விளக்கம் கொடுத்திருக்கிங்க ரவி.
    அதிகம் இவைகளைப்படித்ததில்லை லேசாய் கேட்டதோடு சரி.

    மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
    நானே எழுப்புவனென்றலு நாணாமே
    போனதிசை பகரா யின்னம் புலர்ந்தின்றோ
    வானே நில‌னே பிறவே யறிவரியான்
    தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்.....

    இந்தப்பாட்டும் அருமையா இருக்கும்.

    நென்னலை என்றால் நேற்றாம்!

    ReplyDelete
  9. பனிப்பொழிவுக்கும் அடுப்பைப் பத்த வைக்கிறதுக்கும் என்ன தொடர்பு இரவி? சமைக்கத் தேவையான பொருட்கள் வாங்க முடியலைன்னு சொல்றீங்களா?

    ----

    திருவெம்பாவையைப் பற்றி சொல்ல வந்துவிட்டு 'அது' என்று திருவெம்பாவையையும் 'இது' என்று திருப்பாவையையும் குறித்தது பொருந்தவில்லை. மாற்றுங்கள். இல்லை உங்க மம்மி வில் பீட் யூ. :-)

    ---

    என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? 'வடமதுரை'ன்னு ஒரு தலம் திருப்பாவையில வருதே. இல்லைன்னு சொல்லிட்டீங்க?

    ReplyDelete
  10. கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்!

    இரவிசங்கர் சிலம்ப சிலம்பும் குமரன் எங்கும்! :-)

    ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்!

    ஏழில் என்றால் ஏழிசைக்கும் இல்லமாக இருக்கும் யாழை குறிக்கிறாரோ?

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை - படித்தவுடன் எனக்கும் அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணி நினைவிற்கு வந்தது. :-)

    விளக்கம் நல்லா இருக்கு இரவி.

    ReplyDelete
  11. //Kailashi said...
    ஆண்டாளின் திருப்பாவையை மட்டும் பாடி எங்கே மாணிக்கவாசகரை மறந்து விட்டீர்களோ என்று கண்டிக்கலாமென்று இருந்தேன்//

    கைலாஷி ஐயா
    திருப்பாவையை மட்டும் பாடி மாணிக்கவாசகரைப் பேசாமல் இருப்பது என்பது அவரவர் சமய உரிமை!

    கிவாஜ, புலவர் கீரன் முதலானோர் திருவெம்பாவை பற்றிப் பேசியுள்ளார்கள்! திருப்பாவை பற்றிப் பேசவே இல்லை!
    அதை எப்படிக் கண்டிப்பீர்கள்?

    கண்டித்து இருந்தால், அந்தக் கண்டிப்புக்குப் பெரும் கண்டிப்பு காட்டி இருப்பேன் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!

    //தப்பித்துக் கொண்டீர்கள்//

    * தப்ப வேண்டிய அவசியமோ/பயமோ எனக்கில்லை! நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!

    * அப்படித் தப்பித்துக் கொள்வதற்காக திருவெம்பாவை பற்றி எழுதினால், அதில் ஜீவனும் இல்லை!

    * வற்புறுத்தியோ/கும்பலாக வந்து கும்மி அடித்தோ/மிரட்டியோ (நீங்கள் அல்ல) அடியேனை அசைக்க முடியாது! வேறு மாதிரி தான் திரும்பும்!

    //அடியேனுக்கு பிடித்த பாடல் "பைங்குவளை கார் மலராற்" அதில் வரும் சிலேடையை தங்கள் பாஷையில் பிரித்து மேயுமாறு கேட்டுக்கொள்கிறேன்//

    தாங்கள் "தப்பித்துக் கொண்டீர்கள்" என்று சொன்ன ஒரே காரணத்துக்காகவே இதைச் செய்யப் போவதில்லை!

    ReplyDelete
  12. //தாங்கள் "தப்பித்துக் கொண்டீர்கள்" என்று சொன்ன ஒரே காரணத்துக்காகவே இதைச் செய்யப் போவதில்லை!//

    ஒரு நண்பனாகச் சொல்வது இது இரவிசங்கர். இது தேவையில்லாத கண்டிப்பு. கைலாஷி ஐயா அவர்கள் சொன்னது என்ன என்று தங்களுக்குத் தெரியும். மற்றவர்கள் கும்மியடித்ததால் நமக்கு எத்தனையோ மன வருத்தம் இருக்கலாம். ஆனால் கும்மியடிக்க வேண்டும் என்றோ உங்களை மன வருத்தம் கொள்ள வைக்க வேண்டும் என்றோ கைலாஷி ஐயா எண்ணி இவ்வார்த்தைகளைச் சொல்லவில்லை. உங்களிடம் இருக்கும் நட்பு முறையில் கூறிய வார்த்தைகள் இவை. அவலை நினைத்து உரலை மற்றவர் இடிக்கலாம்; நாமும் அதையே செய்ய வேண்டாம். ஐயாவிற்கு நீங்கள் சொன்ன மறுமொழி ஓகே. அது அவருக்குத் தந்த மறுமொழியாக இல்லாமல் பொதுவாகச் சொன்னதாகவே எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் அதில் சொன்னவை அப்படிப்பட்டவை. அவற்றில் எனக்கும் முழு ஒப்புதல் உண்டு. உஜாலாவிற்கு யார் வேண்டுமானால் மாறிக்கொள்ளட்டும்; ஒன்றைப்பேசுவதால் இன்னொன்றைப் பேசியே ஆகவேண்டும் என்ற தேவை இல்லை. அதனால் மறுமொழியில் சொன்னவற்றை எல்லாம் என் கருத்தாகவும் கொள்ளலாம். ஆனால் கடைசியாக கைலாசி ஐயாவின் வேண்டுகோளை மறுத்ததை விடுக்க வேண்டும். அவர் வேண்டுகோளின் படி 'பிரித்து மேய்வதற்கும்', 'நீட்டி முழுக்குவதற்கும்' கருத்துகள் இருந்தால் தனி இடுகையாக இடவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். 'இவ்வார்த்தைக்காக இடமாட்டேன்' என்று சொல்லக் கூடாது. அன்பனின் வேண்டுகோள்.

    ReplyDelete
  13. செறிவான சொற்களுக்கு நன்றி குமரன்!

    கைலாஷி ஐயா இது வரை இப்படிப் பேசியதும் இல்லை! உரிமை எடுத்துக் கொண்டதும் இல்லை! சிரிப்பானும் இட வில்லை! அதனால் அப்படிச் சொல்ல நேர்ந்தது! ஐயா அப்படி இல்லை என்பது எனக்கு ஓரளவுக்குத் தெரியும்! அதான் கோபம் காட்டவில்லை! //நீங்க இல்லை//-ன்னு அடைப்புக் குறிகளில் சொல்லி இருந்தேன்!

    இதையே முன்னிட்டு இங்குத் தெள்ளத் தெளிவாக அனைவருக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

    என் பதிவில், இனி சைவ/வைணவ பேதா பேதம் கிளப்பும் தொனியில்/வகையில், யார் பேசினாலும், (அது நண்பர்களோ இல்லை மற்றவர்களோ), அதை நான் சிவாபராதமாகத் தான் பார்ப்பேன்!

    முன்பு போல் அடியேன் அடியேன் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன்! கடுமை காட்டுவேன் - என்பதை இங்கே பொறித்து வைக்கிறேன்! படிப்பவர் படித்து உணர்ந்து கொள்ளட்டும்!

    ReplyDelete
  14. Hi Ravi,

    மிக சிறந்த பதிவு, பாடலையும் அதற்கான பொருளையும் தெரிந்து கொண்டேன்,
    ஒரு சிறு ஐயம்/வேண்டுகோள்.
    //ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை = (ஆக்கல், காத்தல், அழித்தல்) ஊழிக் காலத்தில் அழிக்கும் கடவுளாய் நிற்கும் சிவபிரானை! "ஒருவனை"! ஊழியின் போது வேறு எவரும் கிடையாது! சிவபிரான் ஒருவரே! அவரே தனியாக இருந்து அழிக்கிறார்! //

    இதில் "அவரே தனியாக இருந்து அழிக்கிறார்" என்ற வரிகள் சற்று புறம்படுகின்றன,
    "உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த ஊழிக் காலத்தில், சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தைத் தோணியாக அமைத்து, உமதேவியுடன் அதில் புறப்பட்டார். தோணி சீர்காழி வந்த போது எல்லா இடமும் அழிந்தும் இவ்விடம் மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு இதுவே மூலத்தலம் என்று உமாதேவியிடம் கூறி இங்கு தங்கினார்." (shivatemples.com).இது சிர்காழியின் தல வரலாறு.

    So, சிவன் அழிக்கும் தொழில் செய்ய/தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படவில்லை :), All the living beings are already finished/dummped into water....
    might be/since water is also an source from him only :)

    Add : கோவிலின் முதல் தளத்தில் உள்ள மிக பெரிய விஸ்வருப சுதையாலான தெய்வங்களை, முதல் முறையாக பார்க்கும் எவருமே ஒருகணம் பிரமித்து நிற்பர்.

    ReplyDelete
  15. அருமையாக எழுதியிருக்கீங்க கண்ணா. வாழ்க வாழ்க!

    ReplyDelete
  16. \\ஏன் பெண் ஆக வேண்டும்? ஆணாகவே இருந்து உணர்ச்சிகளைச் சொல்ல முடியாதா?
    ஏன் அப்படிச் சில ஆன்றோர்கள் செய்யவில்லை? ஏன் நாயகி பாவமாகப் பாடினார்கள்?
    ஏன், ஆண்களுக்கு அழுவத் தெரியாதா என்ன?\\\

    தல...இப்படி ஆர்வத்தை கிளப்பிட்டு எஸ்கேப்பு ஆகிட்டிங்க...மறக்கமால் இதை பற்றி பதிவு போடுங்கள் தல ;))

    ReplyDelete
  17. //Logan said...
    Hi Ravi,
    மிக சிறந்த பதிவு, பாடலையும் அதற்கான பொருளையும் தெரிந்து கொண்டேன்//

    வாங்க லோகன்! நன்றி!

    //ஒரு சிறு ஐயம்/வேண்டுகோள்.
    இதில் "அவரே தனியாக இருந்து அழிக்கிறார்" என்ற வரிகள் சற்று புறம்படுகின்றன//

    ஹூம்!

    //"உலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த ஊழிக் காலத்தில், சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தைத் தோணியாக அமைத்து, உமதேவியுடன் அதில் புறப்பட்டார். தோணி சீர்காழி வந்த போது எல்லா இடமும் அழிந்தும் இவ்விடம் மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு இதுவே மூலத்தலம் என்று உமாதேவியிடம் கூறி இங்கு தங்கினார்." (shivatemples.com).இது சிர்காழியின் தல வரலாறு//

    ஆமாங்க லோகன்! இது பற்றி நானும் ஒரு சீர்காழிப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்! இதைப் பாருங்க!
    http://sivanpaattu.blogspot.com/2008/05/blog-post_15.html

    ஆனால் அது தல வரலாறு மட்டுமே! சைவத்தின் ஆதி நூல்களும், மற்ற பிரமாணங்களும் இப்படிப் பேசவில்லை!

    குறிப்பாகச் சைவசித்தாந்தத்தின் பைபிளாகக் கருதப்படும் திருமூல சுவாமிகளின் திருமந்திரம்! அதில் அனேகனான ஈசன், ஊழிக்காலத்தில் ஏகன் என்றே சொல்லப்படுகிறது!

    பெருமாள் ஊழிக்காலத்தில் ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் "தனித்தே", "ஏகனாக" இருக்கிறார் என்றே வைணவமும் பேசுகிறது!

    ஆக ஊழிக் காலத்தில் இந்த ஏகம் எனப்படும் கான்செப்ட் மிகவும் முக்கியமானது! தல புராணங்கள் குடந்தையைக் கூட ஊழிக் காலத்தில் குறிப்பிடும்! எனவே ஒரு கான்செப்ட் என்று வரும் போது, தல புராணங்களை விட அதிக பிரமாண பலமுள்ள திருமந்திரம், சூக்திகள், வேதம் - இதைத் தான் ஆதாரமாகக் கொள்ள வேணும்!

    //Add : கோவிலின் முதல் தளத்தில் உள்ள மிக பெரிய விஸ்வருப சுதையாலான தெய்வங்களை, முதல் முறையாக பார்க்கும் எவருமே ஒருகணம் பிரமித்து நிற்பர்//

    சீகாழி தோணியப்பர் ஆலயம் அடியேனும் சென்றுள்ளேன் லோகன்! மிகவும் அருமையான சுதைச் சிற்பங்கள்! மேற் கொடுத்த சீர்காழிப் பதிவை வாசித்துப் பார்க்கவும்!

    ReplyDelete
  18. //கோபிநாத் said...
    நமசிவாய வாழ்க!//

    வா மாப்பி!
    நாதன் தாள் வாழ்க!

    ReplyDelete
  19. //கோபிநாத் said...
    \\ஏன் நாயகி பாவமாகப் பாடினார்கள்?
    ஏன், ஆண்களுக்கு அழுவத் தெரியாதா என்ன?\\\
    தல...இப்படி ஆர்வத்தை கிளப்பிட்டு எஸ்கேப்பு ஆகிட்டிங்க...மறக்கமால் இதை பற்றி பதிவு போடுங்கள் தல ;))//

    ஹிஹி! இது ரொம்ப சூடான டாபிக் கோபி! மார்கழி முடிந்தவுடன் எப்பவாச்சும் போடுறேன்!

    ஆனா ஜிரா கூட இத பத்தி நிறைய விவாதம் பண்ணி இருக்கேன்! ஜி டாக்-ல அவர் வந்தாருன்னா, லபக்-ன்னு புடிச்சி என்னான்னு கேளு! :))

    ReplyDelete
  20. //கவிநயா said...
    அருமையாக எழுதியிருக்கீங்க கண்ணா. வாழ்க வாழ்க!//

    நன்றிக்கா!
    சரியான புரிதல்/பரிதல் உங்களுக்கு! அடியேன் மேல்!
    வாழ்க வாழ்க!!

    ReplyDelete
  21. கே.ஆர்.எஸ்,
    வணக்கம்.
    நீங்க இங்கே குடுத்து இருக்கும் எச்சரிக்கையை மீறி நான் கொஞ்சம் சொல்லிக்கொள்ள அனுமதி குடுங்க. சொல்லலாமா வேணாமான்னு ரெண்டு நாளா யோசனை பண்ணிட்டுத் தான் சொல்றென். உங்களை கொஞ்சம் கேள்வி கேட்கிறேன். கோவிச்சுக்காதிங்க. முன்ன எல்லாம் யார் என்ன சீண்டினாலும் அமைதியா சிரிச்சிக்கிட்டே அழகாகபதில் சொல்லுவீங்க. பார்த்திருக்கென்.சமீப காலமா உங்களுக்கு கோவம் ரொம்ப வருதோன்னு என்று நினைக்கிறென். உங்களை விட வயதில் பெரியவர்கள் சொல்வதாக எடுத்துக்கோங்க. கோவத்தை விட்டு யோசிச்சிங்கோன்னா உங்களுக்கே புரியும்.

    இந்த பதிவுல திருவாசகம் தானே பேசறீங்க? குருகுன்னு வரும் இடத்தில் எதுக்குத் தேவை இல்லாமல் நம்மாழ்வார் குருகூர்-ன்னு எல்லாம் விளக்கம் குடுக்கறிங்க? தேவை இல்லாம ஆழ்வார் ஆழ்வார்ன்னுட்டு பேசினாக்கா சில பேர் இல்லைன்னாலும் சில பேருக்கு கோவம் வரும் தானே?இப்போ கூடத் திருப்பாவையைத் தானே நீங்க எடுத்துக்கறீங்க?அதுக்குத் தானே தினம் ஒரு பதிவா எழுதிக் குவிக்கறீங்க? அணு ஆராய்ச்சியோட எல்லாம் ரிலேட் பண்ணி எழுதறீங்க. படிக்கவே சுவாரஸ்யமாயிருக்கு. அதை சைவமார்க்கத்துக்கும் பண்ணலாம் தானே?ஏன் பண்ண மாட்டேங்கறீங்க?

    அப்பறம் இன்னோன்னு. இது திருவெம்பாவை தானே?இங்கே தேவையில்லாம எதுக்கு சிதம்பரம் பத்தி எழுதறீங்க?சிதம்பரம் நடராஜருக்குன்னே உயிரைக் குடுத்த எத்தனை தீக்ஷிதர்கள் இருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா?சிதம்பரம் ஹிஸ்டரி பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியாமயே என்னவெனாலும் எழுதனா கோவம் வராதா?

    எல்லாரும் உங்க ப்ளாக்கை விரும்பிப் படிக்கறாங்க.அவங்க எல்லாரும் நீங்க சொல்வது தான் வேதவாக்கு போல எடுத்துக்குவாங்க. அந்தப் பொறுப்பை கொஞ்சமாச்சும் யோசிச்சிப் பார்த்தீங்களா?நீங்களே அப்பைய தீக்ஷிதர் பற்றியும் எழுதியிருக்கீங்க.அவரும் ஒரு தீக்ஷிதர் தான்.

    தமிழ்க்கடவுள் பத்தி எழுதறீங்க. முருகன் தமிழ்க்கடவுள் மட்டும் தானா? ஆசார்யாள் முருகனுக்கு கெளமாரம்ன்னே தனியா ஏற்படுத்திக் கொடுக்கலையா?பெருமாள் தமிழ்க்கடவுள் என்று சொல்றீங்களே.ஒத்துக்கறோம். அதேபோலத் தானே வருணபகவானும், இந்திரனும்.அவர்களை ஏன் சொல்லமாட்டேங்குறீங்க?இந்திரனையும் வருணபகவானையும் வேதங்கள் ஸ்ருதிகள் ஸ்மிருதிகள் நமஸ்காரம் செய்கிறெதே?

    உஙகளைப்போல கவர்ச்சியா எழுதமுடியறது இல்லை.அதுக்குத்தான் சைவத்தைப் பற்றியும் உங்களையே எழுதச் சொல்கிறொம். அதை நீங்க மிரட்டுவதா எடுத்துக்கறீங்கன்னா அது உங்க தப்பு தான்.அடிக்கடி வைஷ்ணவம் தான் தமிழ் வளர்த்தா மாதிரியும் எழுதறீங்க.சைவத்தில் தான் தமிழ்ப்பதிகம் அதிகம் என்று உங்களுக்குத் தெரியுமா? கிட்டத்தட்ட எல்லாத் தமிழறிஞ்சர்களும் சைவர்கள் தான்.அதுவும் நீங்க தெரிஞ்சுக்க வேண்டும்.அதே போல சம்ஸ்கிருதமும் ஒரு கண் தான்.அதுவும் கடவுளுக்குப் பிடித்த பாஷை தான்.நீங்க என்னமோ தெய்வத்தமிழ் தெய்வத்தமிழ் என்று தமிழுக்கு மட்டும் தான் ஏத்திப்பிடிக்கறீங்க. தமிழ் அர்ச்சனை பற்றி ஒரு பதிவு போட்டிருந்தீங்க.அதுல ஏதோ சம்ஸ்கிருதத்தை எதிரி மாதிரி காட்டி இருந்தீங்க. இதெல்லாம் தேவை தானான்னு தான் கேக்குறொம். ஒன்றை மாற்றாமயே எவ்வளவோ நல்லது பண்ணலாமே?பூஜா புனஸ்காரம் எல்லாம் லோகக்ஷேமத்துக்கு தான்.லோக சமஸ்தா சுகினோ பவந்து அப்படின்னு தான் எல்லாப் பூஜைகளிலும் நித்யகர்மாக்களிலும் சொல்கிறோம். இது நீங்க அறியாதது அல்ல. இருந்தாலும் இப்படியெல்லாம் வேண்டுமென்றே பண்ணுவது போல இருக்கு.

    நீங்க நாஸ்திகரில் இருந்து ஆஸ்திகர் ஆகியிருக்கவே வேண்டாம்.அப்படியே இருந்திருக்கலாம்.நல்லா இருந்திருக்கும்.இப்போது நீங்க சொல்வதையெல்லாம் நிஜம் என்றே இங்கே பலபேர் நம்பறாங்க.அதான் உங்க மேல வருத்தம்.

    உங்களை விட வயதில் மூத்தவங்களாச் சொல்லுறொம்.உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன். கோவப்படாம நான் சொன்னதை எல்லாம் இந்த மார்கழி மாசத்தில் யோசிச்சிப் பாருங்க. மாசானாம் மார்கசீர்ஷோஹம்ன்னு உங்க கண்ணனும் சொல்லியிருக்காரு.உங்ககிட்ட அபாரமான வித்வத் இருக்கு.பகவத் அனுகூலம் இருக்கு.அதை நல்ல முறையில் பயன்படுத்திக்குங்க.ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லணும் போல இருந்தது. சொன்னேன்.உங்க மேல எத்தனை கோவம் இருந்தாலும் உங்க அபார தேஜஸ்க்கு எங்க ஆசிர்வாதம்.

    ReplyDelete
  22. திரு/திருமதி அனானி அவர்களே!

    முதலில் உங்கள் ஆசிக்கு மிக்க நன்றி!

    முழுவதும் படித்தேன்! உங்கள் பெயரைச் சொல்லியே நீங்கள் இந்தக் கருத்துக்களைச் சொல்லலாமே! புரிதல் இன்னும் எளிதா இருக்கும்! பரவாயில்லை! பல நாள் உள்ளத்துள் மறைத்து வைத்ததை இப்பவாவது வெளிக் கொட்டினீர்களே! நன்றி!

    உங்களுக்கு ஓரிரு நாள் கழித்துப் பதில் சொல்கிறேன்!
    அதற்கு முன் உங்களிடம் எனக்குத் தெரிய வேண்டுவன இரண்டு:

    1. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

    பொதுவாகச் சொல்லாம இது தான் இது தான்-னு நம்பர் போட்டுச் சொல்லுங்க! முடியும் முடியாது-ன்னு சொல்லிடறேன்!

    2. அடிக்கடி "நாங்க, நாங்க"-ன்னு சொல்லியிருக்கீங்க! இந்த "நாங்க" என்பது யார்?

    நீங்க தனி மனிதராப் பேசறீங்களா? இல்லை ஒரு குழுவின் சார்பாகப் பேசினீங்களா?

    குழு என்றால் பேரைச் சொல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை, அது எது மாதிரியான குழு? ஆன்மீகப் பதிவர்கள் குழுவா? இல்லை வாசகர் குழுவா? இல்லை இலக்கியக் குழுவா? இல்லை வடமொழி ஆராய்ச்சிக் குழுவா? எதுன்னு சொன்னீங்க-ன்னா, உங்க எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தாற் போல் அடியேனால் புரிந்து கொண்டு விளக்க முடியும்! அதுக்குத் தான் கேட்டேன்!

    இங்கேயே சொன்னாலும் பரவாயில்லை!
    இல்லை shravan.ravi(at)gmail(dot)com-க்கு அனுப்பி வைங்க!

    என் மின்னஞ்சல் முகவரியைத் தெரிஞ்சவர் தான் நீங்க-ன்னு நினைக்கிறேன்! :)
    மற்றவை தங்கள் மறுமொழியோ/மடலோ கண்டு!

    ReplyDelete
  23. அனானி ஐயா/அம்மா

    நீங்கள் இது வரை தனி மடல் எதுவும் அனுப்பவில்லை! நான் கேட்டிருந்த சில ஐயங்களுக்கும் பதில் இல்லை! பெயர் சொல்ல அம்புட்டு அச்சமா? ஹூம்ம்ம்ம்! ஆனா விளக்கம், விடை, என் போக்கை மாற்றிக் கொள்வது இதெல்லாம் மட்டு்ம் உங்களுக்கு வேணும் இல்லையா?...

    சரி...சொல்கிறேன்!

    ReplyDelete
  24. //முன்ன எல்லாம் யார் என்ன சீண்டினாலும் அமைதியா சிரிச்சிக்கிட்டே அழகாகபதில் சொல்லுவீங்க. பார்த்திருக்கென்.சமீப காலமா உங்களுக்கு கோவம் ரொம்ப வருதோன்னு என்று நினைக்கிறென்//

    அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...முன்பு எல்லாம் கோபம் வராது-ன்னு!

    சரி...இதை யோசிங்க:
    எதற்கு சீண்டணும்?
    ஏன் சீண்டனும்?
    யார் சீண்டச் சொல்லிச் சீண்டினாங்க?

    அடியார்கள் என்று பொதுவாக நினைத்துத் தான், முன்பெல்லாம் யார் சீண்டினாலும், அமைதியாக, அடியேன்-அடியேன்-ன்னு சொல்லுவேன்!

    ஆனா அதை கேஆரெஸ்ஸை அடியேன்! நல்லா ஓங்கி அடியேன் எடுத்துக்கிட்டா? :(

    தெளிய வச்சி தெளிய வச்சி அடிக்கறாங்க-ன்னு அம்பி என்கிற ஒரு பதிவர் ரொம்பவே குஷிப்பட்டுக்கிட்டாரு ஒரு பின்னூட்டத்தில்! உங்களை மட்டும் தான் இப்படி பண்ணத் தோனுது-ன்னு மதுரையம்பதி என்ற பதிவர் சிரிச்சிக்கிட்டே ஒரு பின்னூட்டத்தில் சொன்னாரு!

    சரி, அதை விடுவோம்! இனி காலம் மாறிப் போச்சு!
    ஒருத்தனை ஒரு நாள் ஏமாத்தலாம்! பலரைப் பலநாள் ஏமாத்தலாம்! ஆனா எப்பவும் எல்லாரையும் ஏமாத்திக்கிட்டே இருக்க முடியாது!

    என் அடிப்படை நேர்மையில் கை வைத்தால், இனி திரும்பத் தாக்குவேன்!

    சைவ-வைணவக் கும்மி அடித்து அடித்து...அதுக்கப்புறம் சும்மா டமாஷ்-ன்னு எஸ்கேப் ஆயிறலாம்! ஆனால் முத்திரை விழுந்தது விழுந்தது தானே! பொய்யை உண்மை ஆக்கும் டெக்னிக் இனி என்னிடம் செல்லாது! As simple as that!
    அவ்ளோ தானுங்க! மத்தபடி கோபம் இல்லை!

    ReplyDelete
  25. //இந்த பதிவுல திருவாசகம் தானே பேசறீங்க? குருகுன்னு வரும் இடத்தில் எதுக்குத் தேவை இல்லாமல் நம்மாழ்வார் குருகூர்-ன்னு எல்லாம் விளக்கம் குடுக்கறிங்க?//

    அதே கேள்வி தான் உங்களுக்கும்!
    பாட்டு திருவாசகம்/திருவெம்பாவை தானே? எதுக்கு மாணிக்கவாசகர் ஆழியான் அன்புடைமை-ன்னு பெருமாள் அன்பைப் பற்றிப் பேசறாரு?

    கோவம் வரும் தானே? எரிச்சல் வரும் தானே?
    சொல்லுங்க! மாணிக்கவாசகரை என்ன பண்ணலாம்?

    திருப்புகழ் எல்லாத்துலயும் முதல் பாதி பெருமாளைப் பாடிட்டு, ரெண்டாம் பாதியில் அவன் மருகோனே-ன்னு பாடுறாரு அருணகிரி!
    எந்தை வருக, ரகுநாயக வருக! என் கண் வருக, எனது ஆருயிர் வருக - இது வீண் தானே? இது என்ன திருப்புகழா? திருமால் புகழா?

    கோவம் வரும் தானே? எரிச்சல் வரும் தானே?
    சொல்லுங்க! அருணகிரியை என்ன பண்ணலாம்?

    ReplyDelete
  26. //இப்போ கூடத் திருப்பாவையைத் தானே நீங்க எடுத்துக்கறீங்க? அதுக்குத் தானே தினம் ஒரு பதிவா எழுதிக் குவிக்கறீங்க? அணு ஆராய்ச்சியோட எல்லாம் ரிலேட் பண்ணி எழுதறீங்க//

    ஆமாம்! அதுனால உங்களுக்கு என்ன பிராப்ளம்? எதுக்கு எரியுது? எங்க எரியுது?

    //படிக்கவே சுவாரஸ்யமாயிருக்கு//

    நன்றி!

    //அதை சைவமார்க்கத்துக்கும் பண்ணலாம் தானே? ஏன் பண்ண மாட்டேங்கறீங்க?//

    அதைக் கேட்க நீங்க யாரு?
    நீங்க சம்பளம் கொடுத்து எழுத அப்பாயின்ட் பண்ண ஆளா நானு? நீங்க என்ன பண்றீங்க? அணுவியலோடு ஒப்பிட்டு நீங்க எழுத வேண்டியது தானே?

    இப்படிக் கேட்க உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்லை?
    Am I existing in office for your pleasure, whims & fancies? Who are you to ask this?

    புத்தி இருக்கு-ல்ல? நீங்க கேட்பது எப்படி இருக்குத் தெரியுமா?
    * எதுக்கு அவளைக் காதலிக்கற?
    * அவளை மட்டும் தான் காதலிப்பியா?
    * இதோ எங்க வூட்டுப் பொண்ணு, இவளையும் காதலி...இவ கூடவும்...


    வெட்கமா இல்லை? காதல் வேறு! நட்பு வேறு!
    அனைவரிடமும் கைகுலுக்குவேன்! நட்பு பாராட்டுவேன்!
    ஆனால் என் காதலியை மட்டும் தான் காதலிப்பேன்!

    வயசாச்சுல்ல உங்களுக்கு? பெரியவங்க தானே?
    I am a younger one. I am just growing up!
    You are supposed to be already grown up! Atleast "grow up now"!

    ReplyDelete
  27. //இது திருவெம்பாவை தானே?இங்கே தேவையில்லாம எதுக்கு சிதம்பரம் பத்தி எழுதறீங்க?//

    ஓ...நீங்க தான் சிதம்பரக் காவலரா?
    எது பதிவுக்குத் தேவை-ன்னு முடிவு பண்ண வேண்டியது நான்! நீங்க இல்ல!
    உங்களால் என்ன பண்ண முடியும்-ன்னா: நான் சொன்னதில் மறுப்பு இருந்தா தெரிவியுங்க! நீரூபியுங்க! இங்கே யார் கருத்தையும் பின்னூட்டத்தையும் அழிப்பதில்லை! This is a democratic blog!


    ஆழியான் அன்புடைமை-ன்னு மாணிக்கவாசகர் ஐயா உருகுகிறார்! அந்த அன்புல உனக்கு ஒரு துளி இருக்கா-ன்னு கேட்கிறார்! அதையே நானும் கேட்டிருக்கேன்! அவ்ளோ தான்!

    //சிதம்பரம் நடராஜருக்குன்னே உயிரைக் குடுத்த எத்தனை தீக்ஷிதர்கள் இருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா?
    சிதம்பரம் ஹிஸ்டரி பற்றி உங்களுக்கு தெரியுமா?//

    ஓ தெரியுமே! அப்பைய்ய தீட்சிதர் போல மகான்களைப் பற்றியும் தெரியும்! இன்று அம்பலவாணர் சன்னிதியில் எண்ணெய் ஊற்றி ஆடிய "அயோக்ய" தீட்சிதர்களைப் பற்றியும் தெரியும்!

    சந்தான குரவர்களில் உள்ள நல்ல தீட்சிதர்கள் பற்றியும் தெரியும்! அவிங்க சில பேரு தான் தப்பிப் பொறந்தவங்க! தமிழ்-ல பாடினாரு-ன்னு உமாபதி சிவம் என்னும் தீட்சிதரையே நீங்க எல்லாம் தள்ளி வைக்கலை?

    சிற்றம்பலத்தில் பூசை பண்ண அவருக்கு உரிமை இருந்ததே? உங்க ஆளு தானே? ஆனா அவரையே உள்ள வரவிடாம பண்ணலை? அதையே தான் இப்பவும் பண்றீங்க? ஆக மொத்தம் உங்களுக்கு நடராசர் கூட முக்கியம் இல்லை! நீங்க உங்க சுயநலத்துக்குக் கட்டி வைத்த ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ்! அதன் படி, எம்பெருமான் ஆடும் அம்பலத்தில் எண்ணெய் ஊத்தலாம், எகிறிக் குதிக்கலாம்! சவடால் வுடலாம்! நீங்க பண்ணினா சாஸ்த்ரோத்காரமாத் தான் இருக்கும்!

    வேணும்னா பொது விவாதம் வரீங்களா?
    * சிதம்பரம் பற்றியும், தீட்சிதர் பற்றியும் கருத்துக்கள் + தரவுகள் மட்டுமே வச்சி பேச நான் ரெடி!
    * உங்க கும்மிக் கும்பல் இல்லாம, தரவு மட்டுமே வைத்துப் பேச நீங்க ரெடியா?

    ReplyDelete
  28. //தமிழ்க்கடவுள் பத்தி எழுதறீங்க. முருகன் தமிழ்க்கடவுள் மட்டும் தானா?//

    ஆமாம்!

    //ஆசார்யாள் முருகனுக்கு கெளமாரம்ன்னே தனியா ஏற்படுத்திக் கொடுக்கலையா?//

    அது ஸ்கந்தனுக்கு! பின்னாளில் முருகன் ஸ்கந்தன் ஆனான்!
    ஆசார்யர் கெளமாரம்-ன்னு ஏற்படுத்தவே இல்லைன்னு யாராச்சும் சொன்னாங்களா என்ன? அதை யாரும் மறுக்கலையே!

    ஆனால் அவனைத் தமிழ்க் கடவுள்-ன்னு கொண்டாடினா, அதுல உங்களுக்கு என்ன கஷ்டம்? தமிழ்க் கடவுள்-ன்னு சொல்லும் போது கூடவே கெளமாரம் கெளமாரம்-ன்னும் சேர்த்தே சொல்லணும் என்பது தான் உங்க எதிர்பார்ப்பா?

    //பெருமாள் தமிழ்க்கடவுள் என்று சொல்றீங்களே.ஒத்துக்கறோம்//

    நன்றி!

    //அதேபோலத் தானே வருணபகவானும், இந்திரனும்.அவர்களை ஏன் சொல்லமாட்டேங்குறீங்க?//

    இதைப் பதிவிலேயே கேட்காலாமே! யாரும் தடுக்கலையே!
    வருணனும், இந்திரனும் முறையே நெய்தல்/மருத நிலத் தெய்வங்கள்! அவ்வளவு தான்!

    மாயோன்/சேயோனுக்கு உள்ளது போல மக்கள் வழிபாடு என்பதோ, ஆலயங்களோ, குரவைக் கூத்து முதலான அன்றாட பொது மக்கள் வாழ்வியலிலோ...வருணனும் இந்திரனும் இல்லை! இவர்கள் இருவரும் மக்கட் தெய்வங்களாக அறியப்படவில்லை! நண்பர் குமரனுக்குச் சொல்லி உள்ள இந்திர விழா பதிலைப் பார்க்கவும்!
    http://madhavipanthal.blogspot.com/2009/01/24.html#comment-9167690444931271663

    //இந்திரனையும் வருணபகவானையும் வேதங்கள் ஸ்ருதிகள் ஸ்மிருதிகள் நமஸ்காரம் செய்கிறெதே?//

    ஓ செய்கிறதே! ஆனால் பண்டைத் தமிழ் மக்கள் போற்றிக் கொண்டாட வில்லை! ஆலயம் எழுப்பவில்லை! சிலப்பதிகாரம் காட்டும் திருவரங்கம், திருவேங்கடம், திருவேரகம், செந்தில் போன்ற ஆலயங்களை வருணனுக்கோ, இந்திரனுக்கோ காட்டுங்களேன் பார்ப்போம்!

    ReplyDelete
  29. //உஙகளைப்போல கவர்ச்சியா எழுதமுடியறது இல்லை.//

    நான் கவர்ச்சியா எழுதறதும் இல்லை!
    மனசுக்கு உண்மையா எழுதுவதே எனக்குப் பிடிக்கும்! அதையே செய்வேன்!

    //அதுக்குத்தான் சைவத்தைப் பற்றியும் உங்களையே எழுதச் சொல்கிறொம். அதை நீங்க மிரட்டுவதா எடுத்துக்கறீங்கன்னா அது உங்க தப்பு தான்.//

    அதைச் சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது! உங்கள் கற்பனையான பத்திரிகை ஆபிசில் வேலை பார்க்கும் பதிவர் இல்லை நான்! வேணும்ன்னா உங்க விருப்பத்துக்கு ஆள் போட்டு, அவிங்கள எழுதச் சொல்லுங்க!

    ReplyDelete
  30. //அடிக்கடி வைஷ்ணவம் தான் தமிழ் வளர்த்தா மாதிரியும் எழுதறீங்க//

    அதுல உங்களுக்கு என்ன எரிச்சல்?
    சைவம் தமிழ் வளர்க்கலை-ன்னு சொன்னா, அப்போ வந்து கேளுங்க! தரவோடு வந்து நில்லுங்க!

    நான் வைணவ ஆலயங்களில் எப்படி தமிழ் வளர்ந்தது-ன்னு தானே சொல்லுறேன்! அதுல உங்களுக்கு ஏன் வீண் பொறாமை/எரிச்சல் வருது?

    ஒரு வேளை, என்ன தான் பெருமை இருந்தாலும், உங்க முன்னாடி அடக்கி வாசிக்கணும், தோள் துண்டை இடுப்பல கட்டணும்! ரொம்பவும் சிலாகிக்கக் கூடாது! = இது தான் உங்க எண்ணமா? ஏன் எரிச்சல் வருது உங்களுக்கு?

    ReplyDelete
  31. //சைவத்தில் தான் தமிழ்ப்பதிகம் அதிகம் என்று உங்களுக்குத் தெரியுமா?//

    தெரியுமே!
    வைணவப் பயலுக கிட்ட மொத்தம் 4000 தான்!
    சைவத்தில் தான் 18000+ பாடல்கள்!

    ஒரே கேள்வி: இந்த 18000+ ல எத்தனை பதிகம்,
    1. சிவாலயக் "கருவறைக்கு உள்ளே" ஒலிக்கிறது?
    2. கருவறைக்கு உள்ளே அர்ச்சகர் இதைப் பாடுவாரா? ஓதுவாரா?
    3. இறைவனுக்கு முன்னால் நால்வர் தமிழ்ப் பதிகம் ஓதிப் போறாங்களா? வேதங்களை இறைவனுக்குப் பின்னால் ஓதி வராங்களா?

    - இந்த மூனுத்துக்கும் பதில் சொல்லுங்களேன் பார்ப்போம்! அப்புறம், நான் "தவறான தகவல்" சொன்னதுக்கு, ஊரறிய உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்!

    ReplyDelete
  32. //கிட்டத்தட்ட எல்லாத் தமிழறிஞ்சர்களும் சைவர்கள் தான்.அதுவும் நீங்க தெரிஞ்சுக்க வேண்டும்//

    எத்தனை தமிழறிஞர்கள் சைவர்கள்-ன்னு இங்கு முக்கியம் இல்லை!
    அவர்களே இந்த தம்பட்டத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க! அவங்க நல்லவங்க! மதத்தின் பேரால் அவிங்கள நீங்க அடக்கி வச்சது தான் "ஜகத் பிரசித்தம்"! :)

    வாராது வந்த எங்கள் மாமணி வாரியார் சுவாமிகள்! அவர் தமிழ்த் தொண்டும் இறைத் தொண்டும் செய்யலை-ன்னு நான் சொன்னேனா? அப்படிச் சொன்னா என் நா அழுகிப் போகும்!

    அப்பேர்ப்பட்ட வாரியார் சுவாமிகளின் தொண்டும் தமிழும் கூட "வெளியில்" மட்டுமே நின்றது! தமிழ்க் கடவுள் முருகவேளின் சன்னிதியில் தமிழை இடையறாது ஒலிக்க வைக்க அவரால் முடிந்ததா? நீங்க தான் விடுவீர்களா?

    அருணகிரிப் பெருமானின் நாதவிந்து கலாதீ நமோ நம என்பது வடமொழி+தமிழ்! அதையாச்சும் முருகன் கருவறைக்குள் சொல்ல முடியுமா? காட்டுங்களேன் பார்ப்போம்!

    பல்லாண்டு பல்லாண்டு என்ற பெரியாழ்வார் பாசுரம் முழுக்க முழுக்க தமிழ்! அது கருவறைக்குள் சொல்லப் படுகிறது! அர்ச்சகர் சொல்றாரு! சொல்லியே ஆகணும்! நான் காட்டட்டுமா ஆலயங்களை?


    இத்தனைக்கும் அங்கே தமிழ் இல்லை-ன்னு கூடச் சொல்லலை!
    இங்கே இருக்கு-ன்னு சொல்றதுக்கே, உங்களால தாங்கிக்க முடியல! எரியுது! பொத்துக்கிட்டு வருது இல்லையா?

    இவ்ளோ அழுக்காறை வச்சிக்கிட்டு, நீங்க என்னைக் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க! கும்மி அடிக்க ஆள் அனுப்பறீங்க! இனி செஞ்சிப் பாருங்க! அப்பறம் தெரியும்!

    ReplyDelete
  33. //அதே போல சம்ஸ்கிருதமும் ஒரு கண் தான்.அதுவும் கடவுளுக்குப் பிடித்த பாஷை தான்//

    எவனும் இல்லை-ன்னு சொல்லலையே!
    உங்க மண்ணாங்கட்டி மூளையில், சுப்ரபாதப் பதிவு போடுறேனே! கண்ணுக்குத் தெரியலை?

    //நீங்க என்னமோ தெய்வத்தமிழ் தெய்வத்தமிழ் என்று தமிழுக்கு மட்டும் தான் ஏத்திப்பிடிக்கறீங்க.//

    ஆமா! பிடிப்பேன்!
    என் வீட்டுக்குச் செலவு பண்ணுவேன்!
    உன் வீட்டை மதிப்பேன்! அவ்ளோ தான்!

    //தமிழ் அர்ச்சனை பற்றி ஒரு பதிவு போட்டிருந்தீங்க.அதுல ஏதோ சம்ஸ்கிருதத்தை எதிரி மாதிரி காட்டி இருந்தீங்க//

    இல்லையே! சமஸ்கிருதத்தை வச்சிக்கிட்டு, தமிழைத் தடுக்கும் "ஆட்களைத்" தான் எதிரியாக் காட்டி இருந்தேன்!

    //இதெல்லாம் தேவை தானான்னு தான் கேக்குறொம். ஒன்றை மாற்றாமயே எவ்வளவோ நல்லது பண்ணலாமே?//

    அப்போ நீங்களும் நந்தனார் சிலையை தில்லையில் மாற்றாமல், அப்புறப்படுத்தாமல் எவ்ளோ நல்லது பண்ணலாமே?

    நான் இத்தனைக்கும் மாற்றக் கூட இல்லையே! அந்த அதிகாரம் கூட கையில் இல்லையே! மாற்றத்துக்கு வழி கோலி, தமிழ் அர்ச்சனை"யும்" பண்ணத் துவங்குங்க-ன்னு சொல்றதுக்கே...உங்களுக்கு இவ்ளோ பொங்குதா?

    //பூஜா புனஸ்காரம் எல்லாம் லோகக்ஷேமத்துக்கு தான்.லோக சமஸ்தா சுகினோ பவந்து அப்படின்னு தான் எல்லாப் பூஜைகளிலும் நித்யகர்மாக்களிலும் சொல்கிறோம்//

    தோடா...நித்ய கர்மாவோ, தக்காளி குர்மாவோ...
    (பொங்குமே, இதைச் சொன்னதுக்கு! வேணும்னே தான் சொன்னேன்! சரணாகதியை இன்ஸ்டன்ட் மசாலா மிக்ஸ்-ன்னு நீங்க சொல்லும் போது மட்டும் நியாயம்! அதானே?)

    நித்ய கர்மானுஷ்டானத்தை ஒழுங்காச் செஞ்சாத் தான் பரவாயில்லையே! கையெடுத்து கும்பிடுவேனே! கர்ம யோகமும் கண்ணன் சொன்னது தானே! அதற்கு எதிரி இல்லை நான்! ஆனால் கர்மானுஷ்டானம்-ன்னு சொல்லிக்கிட்டு, உடும்புப் புடி புடிப்பீங்க பாருங்க! அதுலயும் உங்க பூஜா புனஸ்காரம் சேர்த்து, மற்ற நெறிகளை ஓரம் கட்டுவீங்க பாருங்க! அங்கே மட்டுமே சுட்டிக் காட்டுவேன்!

    லோக சமஸ்தா சுகினோ பவந்து-ன்னு வாயால சொன்னா ஆச்சா?
    அடியார்கள் சமஸ்தா சுகினோ-ன்னு அவங்களுக்குப் புரியிறா மாதிரி ஒரு முறை தான் தமிழ் அர்ச்சனை பண்ணிக் காட்டுங்களேன்! அப்பறம் சொல்லுறேன், லோக சமஸ்தா சுகினோ பவந்து-ன்னு நடைமுறையிலும் காட்டறீங்க-ன்னு உங்களைக் கொண்டாடுகிறேன்!

    ReplyDelete
  34. //நீங்க நாஸ்திகரில் இருந்து ஆஸ்திகர் ஆகியிருக்கவே வேண்டாம்.அப்படியே இருந்திருக்கலாம்.நல்லா இருந்திருக்கும்.//

    அடா அடா அடா!
    இது தான் லோக சமஸ்தா சுகினோ பவந்து லட்சணம்! பாத்துக்கிட்டீங்களா? :)

    எம்பெருமானுக்கு ஒரு உள்ளம் ஆட்படாதா-ன்னு நினைத்தவர்கள் நாயன்மார்கள்! அவர்கள் சைவர்கள்! நீங்க? :(

    //இப்போது நீங்க சொல்வதையெல்லாம் நிஜம் என்றே இங்கே பலபேர் நம்பறாங்க.அதான் உங்க மேல வருத்தம்.//

    ஹா ஹா ஹா!
    உங்க பயம் அப்பட்டமாத் தெரியுது! :))

    கவலைப் படாதீங்க!
    நான் சொல்லுறது வேத வாக்கும் இல்லை! இங்க வாசகர்களும் சாமி கண்ணைக் குத்தும்-ன்னு பயப்படற மந்தைகளும் இல்லை! பதிவர்கள், வாசகர்கள் எல்லாம் படித்தவர்கள்! பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் திறன் படைத்தவர்கள்!

    நான் சொல்வது நிஜம் தான்! சத்யமேவ ஜெயதே! வாய்மையே வெல்லும்! நான் சொல்வது சத்தியமில்லை-ன்னு வேணும்னா நிரூபியுங்க! கருவறைக்குள் தமிழ் பற்றி மூன்று கேள்வி கேட்டேனே! அதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க பார்ப்போம்! பதில் சொல்லிட்டூ மீதியைப் பேசலாம்!

    ReplyDelete
  35. //உங்களை விட வயதில் மூத்தவங்களாச் சொல்லுறொம்//

    வயதில் மூத்தவங்க என்பதால் தான் இத்தனை நாளும் பொறுமையாக இருந்தேன்! வயதில் மூத்தவர்கள், முதிர்ச்சியா யோசிக்கணும்! இது போல வீண் கும்மியில் கலந்து கொள்வதும், ஒருத்தன் கருத்தை மடக்க முடியலைன்னா, உடனே வைணவம்-ன்னு சொல்லி முத்திரை குத்துறதும் இறங்கக் கூடாது!

    //மாசானாம் மார்கசீர்ஷோஹம்ன்னு உங்க கண்ணனும் சொல்லியிருக்காரு//

    அப்போ, உங்க கண்ணன் இல்லை போல? :)

    //உங்ககிட்ட அபாரமான வித்வத் இருக்கு.பகவத் அனுகூலம் இருக்கு.அதை நல்ல முறையில் பயன்படுத்திக்குங்க//

    மிக்க நன்றி! நல்ல முறையில் பயம்படுத்தறேனோ இல்லையோ, நிச்சயம் தீய வழியில் பயன்படுத்த மாட்டேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு! உங்கள் ஆசிக்கும் நன்றி!

    யோசிக்க வேண்டியவர்(கள்) நீங்க தான்! என் மூன்று கேள்விக்கும் விடை சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு இப்போ உங்கள் கையில்!

    ReplyDelete
  36. @அனானி அம்மா/ஐயா

    அதே போல் உங்களை வைத்து இன்னொன்னும் சொல்லிக்கிடறேன்!

    நட்ட கல்லும் பேசுமோ?-ன்னு சித்தர் பாடினார்-ன்னா, ஐயோ, எந்தக் கோயிலைப் பாத்து இப்படிச் சொல்லிட்டாரு? திருத்தணியா? திருப்பதியா? சிதம்பரமா, சீரங்கமா? எந்தக் கோயிலின் நட்ட கல்லை, இப்படி நக்கல் அடிச்சிட்டாரு-ன்னு குதிக்கிறாங்களா?

    அதே போலத் தான்! சமயத்தில் உள்ள சில மூர்க்கத்தனங்களை, இறைவனைக் காட்டிலும் சடங்குகளைக் கட்டி அழுவதை - இதை எல்லாம் என் பதிவில் பேசுகிறேன் என்றால்...உடனே நம்மளைச் சொல்லிட்டாரோ? நக்கல் ஓட்டுறாரோ-ன்னு நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டா, அதற்கு நான் பொறுப்பாக முடியாது!

    கர்மானுஷ்டானம் என்று சொல்ல வந்தால்...அதை மட்டுமே பிடிச்சிக்கிட்டு, நிஜ வாழ்வில் இறைவனைப் பின்னுக்குத் தள்ளுபவர்களைப் பதிவில் பொதுவாகத் தான் காட்டுகிறேன்! யாரையும் குறிப்பிட்டு அல்ல!

    என் பதிவில் உள்ள சில வாசகங்கள் உங்கள் மனசாட்சியை உறுத்தினால், உங்கள் மனதுடன் பேசத் துவங்குங்கள்! அப்போது நியாயம் தானாக விளங்கும்!

    நஹி நஹி ரட்சதி டுக்ருங் கரணே-ன்னு சங்கரர் பாடினால், உடனே சந்தியாவந்தனம், பாராயணம் பண்ணுறவங்களை எல்லாம் சங்கரர் ஓட்டுறார்-ன்னு அர்த்தமாகி விடாது! அதே கண் கொண்டு, அடியேன் பதிவில் சொல்வதையும் பாருங்கள்! அம்புட்டுத் தான்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP