Wednesday, December 31, 2008

Y2K போலவே Y2K9! Microsoft-க்கு ஆப்பு!

யாரெல்லாம் IPod-க்கு பதிலா Microsoft Zune வச்சீருக்கீங்க? அத்தினி பேருக்கும் New Year Eve ஆப்பு! :)
Dec-31 காலையில் எழுந்தவுடன் அத்தனை பேரும் ஜெர்க் ஆனார்கள்! ஏன்?

Y2K போலவே Y2K9! Z2K9! = Zune-2K9 Bug! :)

உலகெங்கிலும் உள்ள Microsoft Zune வாடிக்கையாளர்கள் இதனால் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்! இதைப் படிங்க! 30GB Zunes Failing Everywhere, All At Once


//Apparently, around 2:00 AM today, the Zune models either reset, or were already off. Upon when turning on, the thing loads up and... freezes with a full loading bar (as pictured above).
I thought my brother was the only one with it, but then it happened to my Zune.
Then I checked out the forums and it seems everyone with a 30GB HDD model has had this happen to them!//

இங்க பாத்துகிட்டே இருங்க.....தீர்வுக்கு!

அவனவன் இது ஆப்பிள் செய்த சதி-ன்னு வேற Forums-ல பேசிக்கிட்டு இருக்கான்! ஏதோ ஆதாம் ஏவாள் கதை போல!:)
இன்னும் சில ஹாலிவுட் கிறுக்குப் பய புள்ளைக, வேற்று கிரக மாந்தர்கள் செய்த சதி-ங்கிறாங்க! விஸ்டாவுக்காக பில் கேட்ஸை மன்னிப்பு கேட்க வைக்க, இதைத் திடீர்-ன்னு முடக்கி இருக்காங்களாம்! :)

நேற்று நள்ளிரவில் இருந்து, பாட்டுக் கருவியை ஆன் பண்ணா.....
பாட்டு வருதா?
ஹிஹி! ரேவதி சொல்லுறாப்பல,
காத்து தாங்க வருது! :)

இனிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் மைக்ரோசாஃப்ட்! :)

(நல்ல வேளை! திருப்பாவைப் பாசுரங்களைப் ப்ளாக்பெர்ரி-இல் சேமிச்சி வச்சிருந்தேன்! இன்று காலையும் கேட்க முடிந்தது! அவனவன் கவலை அவனவனுக்கோ? :)))
மீண்டும், இனிய 2009 - புத்தாண்டு வாழ்த்துக்கள்!

14 comments:

  1. தலை... என்னதிது ??

    ReplyDelete
  2. அண்ணா, இனிய புத்தாண்டில் எல்லா வளமும் இன்று போல் பெற்று, மகிழ்ச்சியுடன் எங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குங்கள்.

    அம்மா, அப்பா, அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.

    ReplyDelete
  3. /
    நேற்று நள்ளிரவில் இருந்து, பாட்டுக் கருவியை ஆன் பண்ணா.....
    பாட்டு வருதா?
    ஹிஹி! ரேவதி சொல்லுறாப்பல,
    காத்து தாங்க வருது! :)
    /

    :)))))


    புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  4. //Raghav said...
    தலை... என்னதிது ??//

    ஏன் ராகவ், இந்த வியப்பு?:)

    ReplyDelete
  5. இதுக்கு தான் நான் இன்னும் பழைய ரேடியோ போட்டியை பத்திரமா வச்சு இருக்கேன்

    ReplyDelete
  6. //Raghav said...
    அண்ணா, இனிய புத்தாண்டில் எல்லா வளமும் இன்று போல் பெற்று, மகிழ்ச்சியுடன் எங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குங்கள்//

    இனிய வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள் ராகவ்!
    அனைவரும் குணானுபவத்தில் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்போம்! எமனை வரதனுக்கு ஒரு சங்கல்ப அர்ச்சனை பண்ணிடுங்க! :)

    எங்கும் திருவருள் பெற்று இன்புறவர் எம் பாவாய்! :)

    //அம்மா, அப்பா, அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்//

    :)
    Sure!

    ReplyDelete
  7. //அவனவன் இது ஆப்பிள் செய்த சதி-ன்னு வேற Forums-ல பேசிக்கிட்டு இருக்கான்! ஏதோ ஆதாம் ஏவாள் கதை போல!:)//

    நம்ம எது எடுத்தாலும் இது அயல்நாட்டு சதின்னு சொல்லுவுமே அது மாதிரியா :-))))

    ReplyDelete
  8. செல்ல அங்கிளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

    (அது ஆரது ரேவதி ? ச்ச்ச்ச்ச்ச்சொல்லவேயில்ல ? :P

    ReplyDelete
  9. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    மைக்ரோசாப்டுக்கு நேரம் சரியில்லை :)

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    எங்களது
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  12. is it a big matter to write a blog on this. To listen songs there r 1000 websites r available.

    kuppan_yahoo

    ReplyDelete
  13. தங்கச்சிக்கு iPod வாங்கி தரேன்னு சொல்லி அதற்கு பதிலாக அல்வா கொடுத்தால் இப்படிதான் ஆகும் :Dநான் சொன்ன மாதிரி தங்கச்சி பாவம் சும்மா விடாது :)))))

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.இன்னைக்கு உங்களைப் பார்க்கவே முடியல :P
    நீங்க எம்புட்டு பெரிய ஆள் :)))
    தங்களின் தரிசனம் வேண்டி காத்து கொண்டிருகின்றேன்.

    ReplyDelete
  14. //குப்பன்_யாஹூ said...
    is it a big matter to write a blog on this. To listen songs there r 1000 websites r available//

    ஐயா சாமீ
    ஆயிரம் சைட் இருந்தாலும், அதைக் கணினியில் தான் கேக்கோணும்!

    பாக்கெட்டில் போட்டுக்கிட்டு, போற இடமெல்லாம் கொண்டு செல்லும் பாட்டுக் கருவியாச்சே இது! அதான்! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP