Wednesday, January 07, 2009

வை.ஏகாதசி: புதிரா? புனிதமா?? - தெய்வத் தமிழ் மொழி!

மக்கள்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீக? புதிரா புனிதமா குவிஜ் ஆடி கொஞ்சம் நாள் ஆயிருச்சா? பரவாயில்ல! வைகுண்ட ஏகாதசி அன்னிக்கி கண் முழிச்சி, ஏதாச்சும் ஆடணும்-ல? எத்தனை நாள் தான் பாம்பு-ஏணி விளையாட்டு வெளையாடிக்கிட்டு இருப்பீக? இந்த ஏகாதசிக்குப் "புதிரா? புனிதமா?" ஆடலாம் வாங்க! :)

அப்படியே தொடர் திருப்பாவைப் பதிவில் இருந்தும், ஜாலியா ஒரு விளையாட்டுக்கு ப்ரேக் அடிச்சா மாதிரியும் இருக்கும்! :)
இன்னிக்கி சிறப்புத் தலைப்பு! - தெய்வத் தமிழ் மொழி!

அது என்னாங்க தெய்வத் தமிழ்? எல்லா மொழியிலும் தான் தெய்வங்கள் இருக்கு!
இல்லீன்னா இந்த மொழி மட்டும் தான் தெய்வங்களின் பாஷை-ன்னு சில பேரு சொல்வாங்களே! அது போலச் சொல்ல வாரீங்களா? :)


ஹிஹி! அப்படியில்லை! செம்மொழி-ன்னு சொன்னா, மற்ற மொழிகளில் செம்மை இல்லை-ன்னா பொருள்? அப்படியில்லை!

குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ


* பன்னெடுங்காலமா, பல பண்பாட்டுகளுக்கும் முன்னால் இருந்தே, ஒரு வளமான சிந்தனை, சொல், செயல், சமூகம்-ன்னு பார்த்த ஒரு மொழி = செம்மொழி!
* அதே போல பன்னெடுங்காலமா, பல பண்பாட்டுகளுக்கும் முன்னால் இருந்தே, ஒரு வளமான சிந்தனை, சொல், செயல்-ன்னு "இறையியல்" கண்ட தமிழ் = தெய்வத் தமிழ்!

இன்னிக்கி நாம ஆன்மீகம்-ன்னா, பல புத்தகம் எடுத்துப் படிக்கிறோம், பதிவுகளில் விவாதிக்கறோம், இன்னும் என்னென்னமோ பண்ணறோம்!
* ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால்,
* ஒரு ஒட்டு மொத்த சமுதாயமே,
* இறை இயல், ஆன்மீகம்-ன்னு வளப்பமான கருத்துக்களையும், செயல்களையும் கொண்டு இருந்தது என்றால்?
அது சும்மாவா? எவ்ளோ பெரிய விஷயம்? அதான் தெய்வத் தமிழ்!

சில பேரு கதை மாதிரியும் தெய்வத் தமிழைச் சொல்வார்கள்! தெய்வமே அகத்தியருக்கு கொடுத்த மொழி-ன்னும் சொல்வார்கள்! அதுனாலயும் அது தெய்வத் தமிழ்! :)

* எல்லாம் கடந்த இறைவனை மொழிக் குறுகலுக்குள் அடக்குவது நம் நோக்கம் இல்லை!
* நம் நோக்கம்: நம் மொழியில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை அறிந்து கொள்வது மட்டுமே!


TY03NAMPERUMAL


இன்றைய இரவு,
தமிழ்க் கடவுள் மாயோனின் ஆலயத்தில், தமிழ் இரவு!
தமிழ்ப் பெரு விழா! திருவரங்கத்தில் இராப் பத்து திருநாள்!

மார்கழி முழுதும் வடமொழிக்கும் தடை! சுப்ரபாதத்துக்கும் தடை!
அப்படீன்னா மற்ற மாதங்களில் தமிழ் இல்லையா? மார்கழி-க்கு மட்டும் தான் தமிழா?-ன்னு அவசரப்பட வேண்டாம்!:)

மற்ற மாதங்களில் இரண்டுமே உண்டு! மற்ற மாதங்களில்,
* தமிழ்ப் பாசுரம் ஓதும் குழு முன்னே செல்ல,
* இறைவன் தமிழின் பின்னே செல்ல,
* வடமொழிக் கோஷ்டி இறைவனின் பின்னே செல்கிறது!

ஆனால் மார்கழியில்,
* தமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்!
* கோதைத் தமிழ் மட்டுமே கேட்பான் வேங்கடவன்!
* ராப்பத்தில் மாறனின் திருவாய் மொழியைத் தவிர ஒரு வாய் மொழியையும் கேட்க மாட்டான்!
இதற்கு அவனே ஓலை எழுதி அனுப்புகிறான் ஒவ்வொரு ஆண்டும்!

"யாமே, நாச்சியார்களோடு, பொன்னாசனத்தில் கொலுவிருந்து,
பகல்பத்து-ராப்பத்து நாட்களில், எல்லாத் தமிழ் வேதங்களையும்
செவிகுளிரக் கேட்கச் சித்தம்! அது போழ்தினிலே,
எவ்வொருவரும், யாது மந்திரங்களையும், தனியே சாற்ற வேண்டாம்! கோதைத் தமிழ் மட்டுமே இதற்கு விலக்கு!"
- (முத்திரையுடன்) நம்பெருமாள் ஆணைப்படி!


அவன் மட்டும் தான் தமிழோடு விளையாடுவானா? நாம கூடத் தமிழோடு விளையாடவே வந்தோம்! விளையாடலாமா? :)
இன்னிக்கி ராத்திரி நல்லா முழிச்சிக்கிட்டே ஆடுங்க! :))
விடைகள், வெள்ளி இரவு (நியூயார்க் நேரப்படி)!


Crossword-க்கு சொன்ன அதே ஸ்டோரி தான்! :)
*இங்கே போயி இந்த விளையாட்டை விளையாடுங்க மக்கா!*

புதிரை இங்கேயே இட்டிருப்பேன்! ஆனால் வரும் அத்தனை விடைகளையும் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யணும்! இது மற்ற திருப்பாவைப் பதிவுகளுக்கு இடைஞ்சலா இருக்கும்!
அதனால் "இனியது கேட்கின்" என்னும் என்னுடைய இன்னொரு வலைப்பூவில் இடுகிறேன்! அங்கிட்டு போயி ஜாலியா ஆட்டம் போடுங்க! :)

6 comments:

  1. வந்தாச்சு வைகுண்டத்திலிருந்து!!!

    ReplyDelete
  2. //ஷைலஜா said...
    வந்தாச்சு வைகுண்டத்திலிருந்து!!!//

    ஆகா!
    வாங்கக்கா!
    மொதல்ல காலைக் காட்டுங்க!
    அடியேன் தொண்டர் அடிப்பொடியின் பொடி! :)

    அரங்கனைச் சேவித்த கரத்தை அடியேன் சேவிச்சிக்கிறேன்-க்கா!

    ReplyDelete
  3. ராகவ் கிட்ட ஏற்கனவே கேட்டுட்டேன்!
    இருந்தாலும் அவர் வந்து ரெண்டு நாளாச்சுல்ல? அரங்கன் அதுக்குள்ள ஏதாச்சும் சேட்டை பண்ணி வச்சிருப்பான்! :)

    தென்னரங்கன் திருச் செல்வமான எங்க தாயார் செளக்கியமா இருக்காளா?

    பெரிய பெருமாள் எப்படி இருக்காரு?
    அவர் திருமேனி எப்படி இருக்கு?
    அவர் பகல் பத்து எப்படி இருக்கு?
    அவர் அரங்கம் எப்படி இருக்கு?
    அவர் ஆஸ்தானம் எப்படி இருக்கு?
    அவர் நடை அழகு எப்படி இருக்கு?

    ஒழுங்கா வேளைக்குச் சாப்பிடறாரா?

    ஒழுங்கா ஊரை ஏமாத்தாம எல்லாருக்கும் தரிசன மகாபாக்கியம் செய்து வைக்கிறாரா?

    இல்லை இப்பவும் ஊர் சுத்திக்கிட்டு தான் இருக்காரா? :)

    ReplyDelete
  4. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ஷைலஜா said...
    வந்தாச்சு வைகுண்டத்திலிருந்து!!!//

    ஆகா!
    வாங்கக்கா!>>

    .வந்தேன் வந்தேன்!!! தேன்பதிவைக்கண்டேன் இங்கே !


    //மொதல்ல காலைக் காட்டுங்க!
    அடியேன் தொண்டர் அடிப்பொடியின் பொடி! :)//

    தூள் ரவி!

    அரங்கனைச் சேவித்த கரத்தை அடியேன் சேவிச்சிக்கிறேன்-க்கா!>>>>

    அரங்கன்சந்நிதில ஒருநாள் மாக் கோலம்போடும் பாக்கியம் கிடச்சுதுரவி இந்த விரல்களுக்கு! நானே அப்பபோ விரல்களை மானசீகமா சேவிச்சிக்கறேன்!

    1:03 AM, January

    ReplyDelete
  5. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //தென்னரங்கன் திருச் செல்வமான எங்க தாயார் செளக்கியமா இருக்காளா?>//>
    ரொம்ப சௌக்கியம் மஞ்சள் பட்டுப்புடவைல மஞ்சள் காப்புதரித்து அதனையே எங்களுக்கு பிரசாதமாய் கொடுத்து படிதாண்டா பத்தினியாக அங்கே ஆட்சி செய்துட்டு இருக்கா!

    //பெரிய பெருமாள் எப்படி இருக்காரு?//

    ஏன்பள்ளி கொண்டீரய்யான்னு கேட்டேன்...இந்த மாதவிப்பந்தல்காரர் பதிவைபடிச்சேன்,ரசிச்சி கண்மூடிப்படுத்துட்டேன்னார்!

    //
    அவர் திருமேனி எப்படி இருக்கு?//

    அமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணமுடியாமல் கார்மேனிச்செங்கண்கொண்டமுகமும் அழகியதிருமேனியும் நம் கண்ணைக்கட்டி இழுக்குது!


    //அவர் பகல் பத்து எப்படி இருக்கு?//

    அரையர் தமிழினை அசைந்து அசைத்துப்பாட அமர்க்களமாய் இருக்கு!

    //அவர் அரங்கம் எப்படி இருக்கு?
    அவர் ஆஸ்தானம் எப்படி இருக்கு?
    அவர் நடை அழகு எப்படி இருக்கு?//

    அரங்கம் ஆனந்தம்! ஆஸ்தானம் செல்வம்! நடை, மாரிமலைமுழைஞ்சில் சீரிய சிங்காதனத்திலிருந்து புறப்பட்டுவரும் சிங்கம்!

    //ஒழுங்கா வேளைக்குச் சாப்பிடறாரா?//

    காலைல துலுக்கநாச்சியார் ரொட்டியாம் ! தேவிகள் கவனிப்பில் நன்றாக சாப்பிடறார்னு கேள்வி!

    //ஒழுங்கா ஊரை ஏமாத்தாம எல்லாருக்கும் தரிசன மகாபாக்கியம் செய்து வைக்கிறாரா?//

    பாக்கியம் இருக்கிறவர்களுக்கு தரிசனம் கிட்டிவிடுகிறது!

    //இல்லை இப்பவும் ஊர் சுத்திக்கிட்டு தான் இருக்காரா? :)//

    நோ ஊர்சுத்தல்ஸ்! கிளிமண்டபத்துல சமத்தா இருக்கார் இனி ஆயிரங்கால்மண்டபம் எழுந்தருளுவார்!

    1:06 AM, January 07, 2009

    ReplyDelete
  6. //ஷைலஜா said...
    வந்தாச்சு வைகுண்டத்திலிருந்து!!!//

    வாங்கக்கா.. :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP