Tuesday, March 10, 2009

பக்தி For Dummies! பக்தி For Supers! - Part 1

என்ன மக்களே வித்தியாசமாப் பாக்கறீங்க? என்னடா இது, திடீர்-ன்னு பக்தி For Dummies-ன்னு பாக்குறீங்களா? ஹிஹி! ரொம்பா நாளாச் சொல்லணும்-ன்னு நினைச்சி விட்டுப் போன "$$$" பதிவுகளில் இதுவும் ஒன்னு! :)

இதைப் பற்றி முன்னரே இங்கு பேச்செடுத்து இருந்தேன்! ஆனா இப்போ தான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது!
இம்புட்டுப் பொருளாதாரப் பின்னடைவிலும் டாலர் சக்கைப் போடு போடுதுல்ல? இப்பவே டாலரை இந்தியாவுக்கு அனுப்பத் தான் இந்த டாலர் பதிவுகள்!:)) சரி மேட்டருக்கு வரேன்!


பக்தி-ன்னா என்ன? பக்தி பண்ணனுமா என்ன? - இது ஒரு பெரீய்ய்ய்ய்ய கேள்வி!
ஆனால் அதுக்கு முன்னாடி...
குழந்தையில் இருந்து கொஞ்சம் வயசுக்கு வந்துட்டாலே, பொண்ணு/பையன் எல்லார் மனசுலயும் சில அடிப்படைக் கேள்விகள் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்! ஆனா பல காரணங்களுக்காக வெளிப்படையாக் கேட்க மாட்டாங்க! :)

அதுக்குள்ளாற, பசங்க பின்னாடி பொண்ணுங்க சுத்த, பொண்ணுங்க பின்னாடி பசங்க சுத்த, அப்பறமா மொத்த உலகமும் சுத்தோ சுத்து-ன்னு சுத்தி...
திடீர்-ன்னு ஒரு நாள், ஏதாச்சும் ஒரு பதிவுல கேள்வியாக் கேட்டு வைப்பாங்க! :)

* உலகம் என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன?
* இந்த இரண்டத்துக்கும் நடுவுல நாம் என்னவா இருக்கிறோம்?
* முன்பு என்னவா இருந்தோம்? அடுத்து என்னவா இருக்கப் போறோம்?
* எதுக்கு இத்தனை ஆட்டம்?

இது மாதிரியான சிந்தனை நம்ம எல்லாருக்குமே எப்பவாச்சும் ஒரு முறையாச்சும் வந்திருக்கும் இல்லையா?
சிவா மனசுல சக்தி-ன்னும் வரும்! இந்த மாதிரி கேள்வியும் வரும்! :)
வயசு - சமயம் - ஜாதி - ஆண்/பெண் - பணம் - கொள்கை என்ற வித்தியாசமே கெடையாது! எல்லாருக்குமே எப்பவாச்சும் இது மின்னல் போல பளிச்சிட்டு ஓடிப் போயிருக்கும்!

இதுக்குப் பெரிய பெரிய தத்துவம் சொல்றவங்க எல்லாம் இருக்காங்க! அப்படிச் சொல்றதாச் சொல்லிக்கிட்டு...வேற எதையோ சொல்லிக்கிட்டு இருக்குறவங்களும் இருக்காங்க! :)
ஆனால், நாம அப்படியெல்லாம் லெக்சர் டைப்புக்கு போகாம, கலந்துரையாடல் பாணியில், நாமளே ஒன்னாச் சேர்ந்து, சில விடைகளைக் கண்டு பிடிக்கலாமா? = அதான் பக்தி For Dummies!

சரி, அப்ப எதுக்கு பக்தி For Supers?
ஹிஹி! அதாச்சும் சில பேருக்கு "ஞான பரமா" யோசிக்கறது தான் ரொம்பவும் பிடிக்கும்! பக்தி-ன்னா ஏதோ ஜனரஞ்சகமானது, உணர்ச்சி வசப்படறது, "அறிவை" உபயோகிக்காம, "மனசை" மட்டும் உபயோகிப்பது...

அதுக்கும் மேலா, அறிவுப் பூர்வமாக, வேதம் சொன்ன வழியில், ஞானம், கர்மம், சாதகம்-ன்னு பண்ணினா இறைத் தத்துவம் புரிய ஆரம்பிக்கும்-ன்னு சில பேரு சொல்வாங்கல்ல? அதையும் நாம லேசாப் பாக்கணும்-ல்ல? அதான், பக்தி For Supers! :)உலகம் மாயை! எல்லாமே மாயை! மாயை விலகினா கடவுளைக் காணலாம் = இது அடிப்படையே தப்பு! :)

உலகம் உண்மை! எல்லாமே உண்மை!
உண்மையா இருந்தா இறைவனைத் தரிசிக்கலாம் என்பதே பொருந்தி வரக் கூடிய உண்மை!
சரி, நீங்களே சொல்லுங்க, உலகம் மாயையா? உண்மையா? :)

சில ஞானபரமான நூல்கள் "பாம்பு-கயிறு" உதாரணத்தைக் காட்டும்! அது கயிறு தான், பாம்பு போலத் தெரியுது! ஆனா பாம்பு கிடையாது = மாயை!
சில நூல்கள் "கானல் நீர்" உதாரணத்தைக் காட்டும்! வெய்யிலில் கானல் நீர்...தண்ணி போலவே தெரியும்! ஆனால் நீர் கிடையாது! = அதே போல உலகமும் மாயை- ன்னு சொல்வாங்க!

ஆனால்...கானல் நீர் என்பது ஏதோ கண் கட்டு வித்தை அல்லவே! கண் எதிரே நடக்கும் அறிவியல் உண்மை தானே?
தோற்றத்தை வச்சி அங்கே தண்ணி போல ஒன்னு இருக்கு-ன்னு நாமளே கற்பனை பண்ணிக்கறோம்! "நீர்" என்ற "எதிர்பார்ப்பு" நம்மிடம் இருக்கு!
அதுவே கற்பனையா உருவாகுது! ஆனா நீர் இல்லை-ன்னு தெரிஞ்சவுடன், உடனே மாயை-ன்னு சொல்லி விடுகிறோம்!

இப்போ சொல்லுங்க....மாயை எங்கு இருக்கு? = கானல் நீரிலா? நம்ம எதிர்பார்ப்பிலா? :)எனவே உலகம் மாயை இல்லை! உலகம் உண்மை! உண்மை! = என்பதே வேத விளக்கம்!
இந்தத் தத்துவத்துக்குப் பேரு என்ன, இதை யாரு சொன்னாங்க என்பதை எல்லாம் இப்போதைக்கு விட்டுருவோம்! கருத்து என்ன-ன்னு மட்டும் பார்ப்போம்!

மொத்தம் மூன்று பொருட்கள்! மூன்றுமே உண்மைப் பொருட்கள்!
1. உயிர்ப்பு/ஞானம் இல்லாதவை = உலகம் (அசித்து)
2. உயிர்ப்பு/ஞானம் உள்ளவை = நாம் (சித்து)
3. இவை இரண்டுக்கும் பொதுவான = இறைவன் (ஈஸ்வரன்)

உலகம்-னா பூமி மட்டுமல்ல! அண்ட வெளி, பஞ்ச பூதம் எல்லாம்!
நாம்-னா நாம் மட்டுமல்ல! உயிர்கள் எல்லாமே!

சித்-அசித்-ஈஸ்வரன் என்று மூன்று தத்துவமாச் சொல்லுறது வழக்கம்! பல சமயங்களும் மூன்று மூன்றாகத் தான் சொல்லுது!
= சித்-அசித்-ஈஸ்வரன்! பிதா-மகன்-பரிசுத்த ஆவி! பசு-பதி-பாசம்!
ஒன்றோடு ஒன்றைத் தொடர்பு படுத்திப் பார்த்தால், பல விஷயங்கள் விளங்கும்! :)

இப்போ நாம ஞாபகம் வச்சிக்க வேண்டியது = உலகம் உண்மை!
ஒவ்வொரு பொருளும் எதிலேயோ தோன்றி, காலம் என்பதில் நீந்தி, எப்படியோ உரு மாறுது, மறையுது இல்லையா? = அறிவியல் பூர்வமா ஆற்றல்/எனர்ஜி-ன்னு இதைப் பிற்பாடு பார்க்கலாம்!

ஆக, உலகம் உண்மை-ன்னு பார்த்தாலே தெரியுது! அதுனால காதல் உண்மை! காமம் உண்மை! ஞானம் உண்மை! செயல் உண்மை! மொத்த உலகமும் உண்மை! :)
நெருப்புல கை வைச்சா சுடுது-ல்ல? உடம்புக்கு மட்டும் தான் சுடுது! ஆத்மாவுக்குச் சுடலை-ன்னு யாரும் சொல்ல முடியுமா?
உடம்புக்கும் கருப்பு கலர்ல சுடுது! அதை ஆத்மாவும் வலியால் உணருது!

நான் ஒருமுறை வெஸ்ட் வெர்ஜினியா-வில் இருக்கும் இஸ்கான் பொற்கோயிலுக்கு நண்பர்கள் கூட்டத்தோடு போயிருந்தேன்! செம கும்மாளம்!
உள்ளே தங்கத் தகடுகள் போல லேசா ஒட்டி இருந்தார்கள்! பழனி, திருப்பதி போல பெருசா ஒன்னும் இல்லை! தங்கச் சுவரைத் தொடக் கூடாது-ன்னு போர்டு எதுவும் வைக்கலை! எங்களை நடத்திச் சென்ற இஸ்கான் வெள்ளைக்காரப் பையனும் ஒன்னுமே சொல்லலை!

"Soul-ன்னா இந்தியப் பாரம்பரியத்தில் என்ன?"-ன்னு கேள்வி கேட்டான் அந்தப் பையன்! கூட வந்த ஜனங்க எல்லாம் "ஆத்மா", "ஆத்மா"-ன்னு சொன்னாங்க! அவனும் "வெரி குட், இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்களே"-ன்னு சொன்னான்!
"அடிங்க, நம்ம கிட்ட தெரிஞ்சிக்கிட்டு நம்பளுக்கேவா"-ன்னு என் நண்பனோ பக்கத்துல கிடந்து குதிக்கிறான்! :)

இந்த மாதிரி ஆன்மீக விஷயம் எல்லாம் நமக்கு எதுக்கு-ன்னு, வழக்கம் போல ஒதுங்கிட்டேன்! அங்குள்ள சுவரை லேசாத் தொட்டுப் பாத்துக்கிட்டு இருந்தேனா? அட மன்மதன்-ரதி தங்கத் தகட்டுல சூப்பரா ஜொலிக்கிறாங்க! அதான்! :)

"How dare you touch the wall?"-ன்னு அந்த வெள்ளைக்காரப் பையரு டென்சன் ஆயிட்டாரு! "Oh Sorry-nga! தொடக்கூடாது-ன்னு எங்கும் சொல்லவே இல்லையே"-ன்னு சொல்லிப் பார்த்தேன்! ஹூஹூம்! அடங்க மாட்டேன்-ன்னுட்டாரு!

கடைசியா, "My Soul didn't touch the wall! Just my Body touched it, Swami"-ன்னு அடியேன் சொன்னது தான் தாமதம்!
கூட்டம் கொல்-ன்னு சிரிக்க, அமெரிக்க ஸ்வாமி மொத்தமா அடங்கிப் போயிட்டாரு! :) நண்பர்கள் எல்லாரும் "Hurray!"..... :)))

ஆக, என்ன தான் வாயால பல தத்துவம் பேசினாலும், நமக்கு-ன்னு வரும் போது......எல்லாருக்குமே உலகம் உண்மை!சரி, மேட்டருக்கு வருவோம்!

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே மாயை ஸ்க்ரீன் போலத் தொங்குது! காண்பதெல்லாம் மாயை! அந்த மாயை விலகினால் எல்லாம் ஒன்னாயிடும்!-ன்னு சிலர் சொல்லலாம்! ஆனால் அது சரியல்ல!
மாயை என்பதே ஒரு மாயை! அதற்கான மெய்யான வேத விளக்கத்துக்குப் பிற்பாடு வருவோம்!

மக்களே,
இப்போ அடுத்த கேள்வி! சத்-அசித்-ஈஸ்வரன் என்னும் மூன்றில், உலகம் உண்மை-ன்னு சொல்லிட்ட! அப்போ உலகத்தில்...* நாம் யார்? இறைவன் யார்?
இதுக்குப் பதில் சொல்லுறது ரொம்பவே ஈசி-ல்ல? :) ஹா ஹா ஹா!

* பல பிறவிகள் எடுத்து வந்து, உலகில் செயல் புரிவது = ஜீவாத்மா! (சித்து)
* ஞானமுள்ள இந்த ஜீவாத்மாவுக்கும், ஞானமற்ற பிரபஞ்சத்துக்கும் = சொந்தம் உடையதாய் இருப்பது பரமாத்மா! (ஈஸ்வரன்)
= இப்படி எல்லாம் சொன்னா ஒன்னுமே புரியாது! அடிக்கத் தானே வருவீங்க? :)

கொஞ்சம் புரிஞ்சவங்க, அடுத்த கேள்வி கேட்பாங்க!
* பிறவியா? நான் எதுக்குப் பிறவி எடுத்துக் கஷ்டப்படணும்?
* சரிப்பா...தெரியாம ஏதோ பாவம் பண்ணிட்டேன் போன ஜென்மத்துல! அது என்னா-ன்னு சொன்னா, சரி பண்ணிப்பேன்-ல?
* ஒன்னுமே சொல்லாம சும்மா பிறவி பிறவி-ன்னா, கடவுள் என்ன சாடிஸ்டா? :))

புத்தகம் புத்தகமாப் படிச்சவங்க, வேற மாதிரி கிராஸ் கொஸ்டின் போடுவாங்க!
* பிறவியா? அப்போ மொதல் மொதல், நான் என்னவா இருந்தேன்?
* சரி, இப்போ தான் பாவம் பண்ணேன்! அதுனால அடுத்த பிறவி-ன்னு சொல்றீங்க! ஓக்கே! ஆனா முதல் முதலா பரமாத்மா கிட்ட "ஒன்னாத்" தானே இருந்தேன்? அப்போ பாவம் பண்ணி இருக்க சான்ஸ் இல்லை-ல? அப்போ எதுக்குப் பிறவி வந்துச்சி? :)))

இப்படிப்பட்ட கேள்விக்கெல்லாம் ஒவ்வொன்னா வருவோம்!
விளையாட்டா பார்த்தாலும், சிலதைச் சீரியஸாத் தானே பார்க்கணும்? அதுனால அப்பப்போ சீரியசாப் பேசினாக் கோச்சிக்காதீங்க மக்களே! ஆன்மீகத்தைச் சீரியஸாப் பேச-லைன்னு தான் ஒரு சிலருக்கு என் மேல கொஞ்சம் கோவமும் கூட! :)

* நெருப்பு சுடும்-ன்னு, மூஞ்சைப் பயங்கரமா வச்சிக்கிட்டு, பாப்பாவுக்கு பயம் காட்டுங்க! பாப்பா பயந்தா மாதிரி தலையை ஆட்டும்!
ஆனால் சூடு-ன்னா என்னா-ன்னு, அதுக்கே ஒரு நாள் தொட்டாத் தான் தெரியும்!

* விஷம்-ன்னா ஆளு க்ளோஸ்-ன்னு, மூஞ்சைப் பயங்கரமா வச்சிக்கிட்டு பயம் காட்டுங்க! நாமும் பயந்தா மாதிரி தலையை ஆட்டுவோம்!
ஆனால் விஷம்-ன்னா என்னான்னு, நாமளே ஒரு நாள் குடிச்சிப் பாத்தா தான் தெரியும்!...............................ன்னு சொல்லுவோமா? :))

இறைத் தத்துவம் கூட அப்படித் தாங்க!
சிலதைத் தொட்டுப் பாக்கலாம்! சிலதைக் குடிச்சிப் பாக்க முடியாது! :))அடுத்து.....பெரும்பாலும் சான்றோர்களால் மேற்கோள் காட்டப்படுவது பகவத் கீதை! ஆனால் தப்பும் தவறுமாக அவரவர் சுயநலத்துக்கு, அதிகம் மேற்கோள் காட்டப்படுவதும் இதே பகவத் கீதை தான்! :)

கீதை-ல என்ன சொல்லி இருக்கு?
* ஞான யோகம்
* கர்ம யோகம்
* தியான யோகம்
* பக்தி யோகம்

எது பண்ணாலும் ஓக்கே தான்! ஆனால் கரெக்டாப் பண்ணனும்! மோட்சம் உறுதி-ன்னு கியாரென்ட்டி கொடுப்பவர்கள் உண்டு! :) ஆனால்....
ஞான யோகம், கர்ம யோகம் = ரெண்டுமே மோட்சம் கொடுக்காது என்றே கீதை காட்டுகிறது!

என்னடா, இவன் ஒவ்வொன்னாக் கொளுத்திப் போடுறானே-ன்னு பதறக் கூடாது! முக்கியமா, எள்ளலா எடுத்துக்கிட்டு தாம் தூம்-ன்னு குதிக்காமல், என்ன தான் நடக்குது-ன்னு பொறுமையாப் படிங்க! :)

"எனக்கு ஞான பரமான விஷயம் தான் பிடிக்கும்"-ன்னு சிலர் சொல்லலாம்!
ஆனால் நம்ம ஞானத்தால் மட்டுமே, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்! வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

நாமே நம்ம ஞானத்தால் ஆராய்ச்சி பண்ணி, சடங்குகளால் கர்மா பண்ணி....அவனைத் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உங்களுக்கு உதவலாம்! ஆனால் அவற்றால் காலத்துக்கும் பசியை ஆற்ற முடியாது!

கீதையில் சொன்ன ஞான யோகம், கர்ம யோகம் அதுவல்ல!
* ஞான யோகம் என்றால் வேதம் படிப்பது, "ஞான பரமாகப்" பேசுவது! - என்பது மட்டும் அல்ல!
* கர்ம யோகம் என்றால் கர்மா பண்ணுவது! ஹோமம் பண்ணுவது! நித்ய கர்மா, ஜப தபங்கள் பண்ணுவது! நமக்கு-ன்னு "விதிச்சதை" தவறாமல் பண்ணுவது - என்பது மட்டும் அல்ல!

ஒரு சிலர் இன்னிக்கி அப்படி ஆக்கி வைத்து விட்டார்கள்! கீதையில் சொல்வது அது கிடையாது!
அவரவர் "கர்மா"/"பிழைப்பு" நல்லபடியா நடக்கணும்-ன்னு, அவரவர் செய்து கொண்ட சுயநலமான வசதிகள் எல்லாம் இந்தக் கணக்கில் வராது! :)

ஞான/கர்ம யோகம் முக்கியம் தான்! கொஞ்சம் ஞானமும் வேணும், செயலும் செய்யணும் தான்! ஆனால் ஞான யோகம் & கர்ம யோகம் இறைவனிடம் இட்டுச் செல்லாதாம்! - ஏன்?
கண்ணனே சொல்கிறான்! கேளுங்களேன்... "ஞான யோகம், கர்ம யோகம் செய்பவர்களை எனக்கு அவ்வளவாப் பிடிக்காது அருச்சுனா!"


* ஞானம்-கர்மா எதுவுமே செய்யாத பிரகலாத "அசுரன்" இறை அன்பில் விழுந்தான்!
* ஞானம்-கர்மா எல்லாம் சூப்பராச் செஞ்ச பிருகு "மகரிஷி" இறைவன் மார்பில் எட்டி உதைத்தார்! :)
= இதில் இருந்து என்ன தெரிகிறது? ஞானம்-கர்மா-ன்னே கட்டிக்கிட்டு அழுதால் என்ன ஆகும்?ஞான/கர்ம யோகம் = ஆத்ம சாக்ஷாத்காரம்!
அதாச்சும், ஆத்மாவை அறிவிப்பது! "நான் யார்?" என்று நம்மை நமக்கே உணர்த்துவது!
அதற்கு மட்டுமே ஞான/கர்ம யோகங்கள் உபயோகப்படும்! "நாம், நமது"-ன்னு நம்மைச் சுற்றியே நிறைய பேசும்!

* நான் யார்-ன்னு தெரிஞ்சிக்கிட்டா மட்டும் போதுமா?
* அடுத்த நிலை, இறைவன் யார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
* அவனுக்கும் நமக்கும் என்ன உறவு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பழனி மலைக்கோ, திருப்பதி மலைக்கோ அடிவாரம் வரை மாவட்டப் பேருந்து இட்டுச் செல்லும்! ஆனால் அத்தோட முடிஞ்சிப் போச்சா?
அடுத்து இன்னொரு சிறு பேருந்திலோ, ரோப் காரிலோ, படிக்கட்டிலோ ஏறினாத் தானே தரிசனம்?

ஞான யோகம்/கர்ம யோகம் = ஆத்ம சாக்ஷாத்காரம் = ஆத்மாவை அறிவிப்பது! மாவட்டப் பேருந்து! அடிவாரம் வரைக்கும் தான்!
பக்தி யோகம் = பரமாத்ம சாக்ஷாத்காரம் = பரமாத்மாவை அறிவிப்பது! இதுவே உண்மையான படிக்கட்டு! இதில் ஏறினால் தான் தரிசனம்!

ஏதோ நானே "வாக்குச் சாதுர்யத்தால" கதை அடிச்சி விடலை! :) கீதையில் சொல்வதும் இதுவே! முதல் ஆறு அத்தியாயங்களில் ஞான யோகம், கர்ம யோகம் பற்றிக் கண்ணன் நிறையவே சொல்லிட்டான்! எதுக்கு?

மனம் தளர்ந்து இருக்கும் அருச்சுனனுக்கு, "மொதல்ல உன்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சிக்கோ! அப்புறம் என்னைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்!" - ஆத்மாவை முதலில் தெரிஞ்சிக்கோ! அப்புறம் பரமாத்மாவைத் தெரிஞ்சிக்கலாம்! = இதான் காரணம்!

இதி ஞான யோகஹா! இதி கர்ம யோகஹா-ன்னு அடுக்கி அடுக்கிச் சொல்லியாகி விட்டது!
* உடல் வேறு, ஆத்மா வேறு! ஆத்மாவுக்கு சுதந்திரம் உண்டு!
* ஆத்மா என்னும் நுண்-சக்தி, பல உடல்கள் எடுத்துப் பல செயல்களைச் செய்து கொள்ளலாம்!
* ஆத்மாவுக்கு அழிவே இல்ல! ஆத்மா ஆனந்த மயமானது-ன்னு எல்லாம் சொன்னவுடன்....

அருச்சுனன் இப்போ தான் யாரு, தன் லெவல் என்ன-ன்னு ஓகோ-ன்னு தெரிஞ்சிக்கிட்டான்! ஆனால் கூடவே வந்தது ஒரு ஆபத்து!
"தானே எல்லாம்" என்ற ஒரு திமிரும் கூடவே வந்து விட்டது! ஞானச் செருக்கு, கர்மச் செருக்கு! :))
அஹம் பிரம்மாஸ்மி! நானே கடவுள்! நான் மட்டுமே கடவுள்-ன்னு ஐயா நினைக்க ஆரம்பிச்சிட்டாரு! = Thanks to: ஞான யோகம், கர்ம யோகம்! :))

ஆத்மாவை அறிந்து கொண்டாயிற்று! பழனி அடிவாரம் வந்தாச்சி!
இனி பரமாத்மாவை அறிவோம்! பழனி மலை ஏறுவோம்-ன்னு இல்லாமல்...

அடிவாரமே பழனி மலை! ஞான-கர்ம யோகம் தான் சூப்பர்!
"நான்", "என்" கர்மாவைப் பண்ணிக்கிட்டே இருப்பேன்! யாரும் "என்" கர்மாவைக் கேள்வி கேட்க முடியாது! :)
"நானே" ஞான பரமாப் படிச்சி அவனை அடைஞ்சிருவேன்!
"நானே" விதிச்சதைப் பண்ணி அவனை அடைஞ்சிருவேன்! - இப்படியெல்லாம் ஐயா யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு! வந்தது விபரீதம்!

இப்போ தான் கீதையின் திருப்பு முனை, அந்த ஏழாம் அத்தியாயம் துவங்கப் போகிறது! என்ன சொல்கிறான் கண்ணன்?
"ஞான யோகம், கர்ம யோகம் செய்பவர்களை எனக்கு அவ்வளவாப் பிடிக்காது அருச்சுனா!"

யோகினாம் அபி சர்வேசாம், மத் கதேன அந்தர் ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம், சமே யுக்த தமோ மதா:
6:47

"ஆகா...அப்போ யாரைத் தான் உனக்குப் பிடிக்கும் இறைவா?"

சுபா அசுப பரித் தியாகி, பக்திமான் யச மே ப்ரியஹ! 12.17
ச்ரத்தா தன மத் பரம, பக்தாஸ் தேதிவ மே ப்ரியஹ! 12:20

"எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கறவங்களை ரொம்பவே பிடிக்கும்! அவங்களுக்கெல்லாம் இன்னிக்கே மோட்சம்!" :))

(பக்தி For Dummies, பக்தி For Supers...தொடரும்...)

45 comments:

 1. :) அட நல்லா இருக்கு, ஆனால் ஒண்ணும் புரியல.

  ReplyDelete
 2. //கோவி.கண்ணன் said...
  :) அட நல்லா இருக்கு, ஆனால் ஒண்ணும் புரியல//

  அட, என்னாங்கண்ணே!
  ஒங்களுக்குத் தானே சூப்பராப் புரியும்! உலகம், மாயை, சூனியவாதம், பிறவி-ன்னு எல்லாம் இருக்கே! என்ன புரியலை?

  எலெக்சன் டைம்ல கட்சி கிட்சி மாறிட்டீங்களா? :)

  ReplyDelete
 3. ஷ்ரவணம்,கீர்தனம்.ன்னு ஆரம்பிச்சு ஆத்ம நிவேதனம்ன வரை ஒன்பது வகை பக்திய பத்தி வேளுகுடி சொல்லி கேட்ருக்கேன்.....:):)(நடுவுல மறந்து போச்சு!!)

  நல்ல ஆரம்பம்...நிஷ்காம்ய பக்தின்னு அவசியம்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க....

  //"எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கறவங்களை ரொம்பவே பிடிக்கும்! அவங்களுக்கெல்லாம் இன்னிக்கே மோட்சம்!" :))//

  இது புரியல...அடுத்த பதிவுல தெளிவு கிடைக்கும் இல்லையா??

  ReplyDelete
 4. // Radha Sriram said...
  நல்ல ஆரம்பம்...நிஷ்காம்ய பக்தின்னு அவசியம்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க....//

  வாங்க-க்கா! நலமா?

  கண்ணனுக்கே உரியது காமம்! மத்ததெல்லாம் நிஷ்-காம்யம்! :)
  அது ஆச்சாரமோ! அண்ணா நகர் ஃப்ளாட்டோ! சும்மா தொட்டுக்கலாம்! ஆனால் காமத்தை அதுங்களுக்கு கொடுக்க முடியாது! காமம் கண்ணனுக்கே! :)

  //
  //"எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கறவங்களை ரொம்பவே பிடிக்கும்! அவங்களுக்கெல்லாம் இன்னிக்கே மோட்சம்!" :))//

  இது புரியல...அடுத்த பதிவுல தெளிவு கிடைக்கும் இல்லையா??//

  ஹிஹி! கண்டிப்பா-க்கா!

  ReplyDelete
 5. கேஆர்எஸ்,

  தங்களின் கடைசி முன்று பதிவுகளயும் படித்தேன். நன்று

  வேலை நிமித்தம் உடனடியாக பின்னோட்டம் இடமுடியவில்லை.

  திருக்கச்சி நம்பிகளின் பெருமைகளை அறிந்தேன்.

  //ப்ளஸ் அது ஆன்மீகம் அல்ல! "பெண்"மீகம்! அதுனாலயும் இருக்கலாம்! :)) //

  கவிதை ஸுப்பெர். ( மீ த பஸ்ட் - ஆண் பின்னோடமிட்டவர் )

  //பக்தி For Dummies! பக்தி For Supers! - Part 1 //

  கொஞ்சம் கொஞ்சமாதான் புரியுது, சோ ஐயம் டம்மி :'(

  ReplyDelete
 6. //Logan said...
  திருக்கச்சி நம்பிகளின் பெருமைகளை அறிந்தேன்//

  சூப்பர்! அதை அப்படியே ஒரு தொடராகவும் நீட்டிக்கிறேன் லோகன்!

  //கவிதை ஸுப்பெர். ( மீ த பஸ்ட் - ஆண் பின்னோடமிட்டவர் )//

  எல்லாப் பின்னூட்டமும் இங்கயேவா? :)

  //
  //பக்தி For Dummies! பக்தி For Supers! - Part 1 //
  கொஞ்சம் கொஞ்சமாதான் புரியுது, சோ ஐயம் டம்மி :'(//

  ஆகா! நானும் டம்மி தான் லோகன்!
  அதான் நமக்கு நாமே! = பக்தி For Dummies! :)

  கூடுமான வரை எளிமை ஆக்கி, லோக்கலாத் தான் எழுதி இருக்கேன்! ஆங்காங்கு கீதை சுலோகங்கள் கஷ்டமா இருந்தா ஸ்கிப் பண்ணிருங்க! அவை பண்டிதர்களுக்கான தரவு மட்டும் தான் :))

  ReplyDelete
 7. Vanakkam sir,
  Good,you have started to write a very big subject.some times, I am very late to your blog,but reading many times.(Is it not prigu maharishi sir)
  ARANGAN ARULVANAGA.
  anbudan,
  k.srinivasan.

  ReplyDelete
 8. //Anonymous said...
  Vanakkam sir,
  Good,you have started to write a very big subject.//

  முருகனருள் முன்னிற்க!
  கண்ணன் கருணை கண்ணிற்க!

  //some times, I am very late to your blog,but reading many times//

  ஸ்ரீநிவாசன் சார், கூகுள் ரீடர்-ல போட்டுக்குங்க or Just subscribe your email on the left pane, to be automatically alerted!

  //(Is it not prigu maharishi sir)//

  ஆமாம் சார்! தவறு தான்! மன்னிக்கவும்!

  துர்வாசர் பட்டது அம்பரீஷனிடம்!
  இங்கு பிருகு மகரிஷியே சரி! பதிவில் திருத்தி விட்டேன்! நன்றி!

  ReplyDelete
 9. இனி வரப்போகும் இடுகைகளின் எல்லைகளை குறித்து வைத்திருக்கிறீர்கள் இந்த இடுகையில். :-)

  ReplyDelete
 10. Vanakkam sir,
  I am just reminding you, so no thvaru.I have learnt lot from you.Geedhai very difficult to understand for me,so I am requesting you to write more azhwar passurams.Thanks sir.
  ARANGAN ARULVANAGA.
  Anbudan
  k.srinivasan.

  ReplyDelete
 11. நல்ல துவக்கம், சத் நன்றாக நடக்கட்டும்!

  ReplyDelete
 12. //இப்போ தான் கீதையின் திருப்பு முனை, அந்த ஏழாம் அத்தியாயம் துவங்கப் போகிறது! என்ன சொல்கிறான் கண்ணன்?
  "ஞான யோகம், கர்ம யோகம் செய்பவர்களை எனக்கு அவ்வளவாப் பிடிக்காது அருச்சுனா!"

  யோகினாம் அபி சர்வேசாம், மத் கதேன அந்தர் ஆத்மனா
  ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம், சமே யுக்த தமோ மதா: 6:47

  "ஆகா...அப்போ யாரைத் தான் உனக்குப் பிடிக்கும் இறைவா?"

  சுபா அசுப பரித் தியாகி, பக்திமான் யச மே ப்ரியஹ! 12.17
  ச்ரத்தா தன மத் பரம, பக்தாஸ் தேதிவ மே ப்ரியஹ! 12:20//

  சுலோகங்கள் கீதையில் எங்கே வருகின்றன என்று அவற்றின் எண்களைத் தரக் கேட்டிருந்தேன் (தனிமடலில்). தந்ததற்கு நன்றி இரவி.

  நீங்கள் பொருள் சொல்லாம விட்டுட்டதால இதோ அந்த சுலோகங்களுக்கான பொருட்கள்:

  6.47 - அனைத்து யோகியர்களிலும் யார் என்னிடம் வைக்கப்பட்ட உயிர், அறிவு, இதயம், மனம் கொண்டவனோ, என்னிடம் முழு நம்பிக்கை கொண்டவனோ, என்னையே வணங்குகின்றானோ, அவனே மிகச் சிறந்த யோகி என்பது என் கருத்து.

  12.17 - யார் மகிழ்வதில்லையோ, யார் துக்கப்படுவதில்லையோ, யார் புலம்புவதில்லையோ, யார் ஆசைப்படுவதில்லையோ, சுபம் அசுபம் இவற்றை விட்டவனோ, அந்த பக்தனே எனக்கு பிரியமானவன்.

  12.20 - யார் அழியாத பாதையான இறைப்பணியில் என்னையே அனைத்துமாகக் கொண்டு முழு நம்பிக்கையுடன் ஈடுபடுகின்றார்களோ அந்த பக்தர்களே எனக்கு மிக மிகப் பிரியமானவர்கள்.

  ReplyDelete
 13. இங்கே சொல்லப்பட்ட கீதைச் சுலோகங்களோடு மேலும் இரு கீதைச் சுலோகங்களையும் பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

  சதுர்விதா பஜந்தே மாம் ஜனா சுக்ருதோர்ஜுன
  ஆர்த்தோ ஜிக்ஞாஸுர் அர்த்தார்த்தி ஞானி ச பரதர்சப 7.16

  தேசாம் ஞானி நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே
  ப்ரியோ ஹி ஞானினோத்யர்த்தம் அஹம் ச ச மம ப்ரிய 7.17

  7.16: நான்கு விதமான மக்கள் அவர்களுடைய நல்வினையால் என்னை வணங்குகிறார்கள் அருச்சுனா. பரதர்களில் சிறந்தவனே. அவர்கள்: துன்ப்படுபவர்கள், ஞானம் வேண்டுபவர்கள், பொருள் வேண்டுபவர்கள், ஞானிகள்.

  7.17: அவர்களில் என்றைக்கும் பக்தியில் மூழ்கியிருக்கும் ஞானியே எனக்கு மிகவும் பிரியமானவன். எனக்கு மிகவும் நெருக்கமானவன். நானே அவன். மீண்டும் சொல்கிறேன். அவன் எனக்கு பிரியமானவன்.

  வேறு இடங்களில் பக்தர் எனக்கு பிரியமானவர்கள் என்று சொன்னவன் இங்கே பக்தியுடன் இருக்கும் ஞானியை 'நானே அவன்' என்று சொல்கிறான்.

  ReplyDelete
 14. Dear Krs

  nalla vishayam discuss pannureenga, romba nalladhu, eena ithu aaththuma visharamunu kadaisila derinjdukkura matter, thauavu seithu mudichurunga
  krs........

  enna neriya vishayangkalai neengka kedappula pottu irukkeenga...

  pls...........

  ReplyDelete
 15. //குமரன் (Kumaran) said...
  இனி வரப்போகும் இடுகைகளின் எல்லைகளை குறித்து வைத்திருக்கிறீர்கள் இந்த இடுகையில். :-)//

  ஹா ஹா ஹா
  கோயில் கட்டும் முன், யானையை விட்டு எல்லை மார்க் பண்ணுவாங்க! அது போலவா குமரன்? :)

  ReplyDelete
 16. //Anonymous said...
  Vanakkam sir,
  I am just reminding you, so no thvaru.I have learnt lot from you//

  No Probs Srinivasan Sir!
  Discrepancies do occur!
  Eppa venumnaalum thavaRaathu chutti kaatunga!

  //Geedhai very difficult to understand for me,so I am requesting you to write more azhwar passurams//

  ஹா ஹா ஹா
  தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே-ன்னு தேசிகர் சொன்னது சும்மா இல்ல போல!

  வேதம் சாஸ்திரம்-ன்னு எவ்வளவோ படிச்சேன்! என்ன பலன்? குழப்பம் தான் மிஞ்சியது! தெளியாத மறை நிலம்! அப்படி-ன்னு "வேதாந்த" தேசிகரே சொல்றாருன்னா நாம எல்லாம் எந்த மூலைக்கு?

  ஆழ்வார் பாசுரங்களின் ஈரம்...அந்தத் தெளியாத மறை நிலங்களையும் தெளிவிக்கின்றது-ன்னு அவரே சொல்கிறார்! அதான் அடியேனுக்கு வியப்பு!

  //I am requesting you to write more azhwar passurams//

  இங்கே கீதையைப் பற்றிப் பேசப் போவதில்லை சார்! அங்கொன்னு இங்கொன்னா சில மேற்கோள் தான்! பாசுர விளக்கமா சில தத்துவங்களைத் தான் பாக்கப் போறோம்! எனவே புரியாதோ-ன்னு அஞ்சத் தேவையில்லை! :))
  Dont worry! It will be very light & I will take my readers with me on an interesting journey!

  ReplyDelete
 17. //ஜீவா (Jeeva Venkataraman) said...
  நல்ல துவக்கம், சத் நன்றாக நடக்கட்டும்!//

  தங்கள் ஆசி ஜீவா!
  அப்பப்போ ஐயம் எழும் போது உங்களையும் குமரனையும் திவா சாரையும் கேட்டுக்கறேன்!

  ReplyDelete
 18. //நீங்கள் பொருள் சொல்லாம விட்டுட்டதால இதோ அந்த சுலோகங்களுக்கான பொருட்கள்://

  சுலோகப் பொருளுக்கு நன்றி குமரன்!

  இதே மாதிரி, இனி வரும் பதிவிலும், நான் நம்பர் மட்டும் சொல்லிட்டு, கருத்தை மட்டும் சொல்லிட்டுப் போயிருவேனாம்! நீங்க வந்து பொருளும் சொல்லிருவீங்களாம்! ஓக்கேவா? :))

  கீதை வாசிக்கவே நீங்க வடமொழி வாசிக்கத் துவங்கியதாகச் சொன்னது ஞாபகம் வருது! கீதைக் காதலர் குமரனுக்கு அடியேன் வணக்கம்!

  //அவனே மிகச் சிறந்த யோகி என்பது என் கருத்து//
  //சுபம் அசுபம் இவற்றை விட்டவனோ, அந்த பக்தனே எனக்கு பிரியமானவன்//
  //அந்த பக்தர்களே எனக்கு மிக மிகப் பிரியமானவர்கள்//

  கண்ணன் சொல்வதே இதான்!
  படித்த ஞானிகளை, ஞானி-ன்னோ, யோகி-ன்னோ சொல்ல மாட்டான்!
  சதா சர்வ காலமும் அவன் பால் உருகும் பக்தர்களைத் தான், "ஞானி" என்றும், "யோகி" என்றும் கொண்டாடுகிறான்!

  அப்படிப் பார்த்தால் கண்ணப்ப நாயனார், திருப்பாணாழ்வார்-ன்னு எளிய பக்தர்களே ஞானிகளாகவும் யோகிகளாகவும் அழகாக வலம் வருகிறார்கள்!

  மற்றவர்கள் யோகமும் ஞானமும் சாதகமும் பயின்றாலும், அவர்கள் பக்தியின் ஆழமே அவர்கட்கு ஞான/யோக ஸ்தானத்தைப் பெற்றுத் தருகிறது!

  ReplyDelete
 19. //குமரன் (Kumaran) said...
  ஆர்த்தோ ஜிக்ஞாஸுர் அர்த்தார்த்தி ஞானி ச பரதர்சப 7.16//

  அடுத்த பதிவுக்கு வச்சிருந்தேன்! :))

  //வேறு இடங்களில் பக்தர் எனக்கு பிரியமானவர்கள் என்று சொன்னவன் இங்கே பக்தியுடன் இருக்கும் ஞானியை 'நானே அவன்' என்று சொல்கிறான்//

  பக்தியில் விளைந்த ஞானம்!
  அவன் திருவுள்ள உகப்பே உகப்பு என்ற ஞானம்! நாராயண"னே" நமக்"கே" என்கிற ஞானம்! தத்துவ ஞானத்தை இங்கே சொல்லவில்லை என்ற நினைக்கிறேன்! சரியா குமரன்?

  ReplyDelete
 20. //Mani Pandi said...
  Dear Krs
  nalla vishayam discuss pannureenga, romba nalladhu, eena ithu aaththuma visharamunu kadaisila derinjdukkura matter, thauavu seithu mudichurunga
  krs........//

  ஹா ஹா ஹா!
  கண்டிப்பாகத் தொடர் எளிமையாத் தொடர்ந்து வந்து நிறைவு அடையும் மணியண்ணே!

  //enna neriya vishayangkalai neengka kedappula pottu irukkeenga...//

  ஹிஹி! ஞாபகம் வச்சி இருக்கீங்களா? என்னென்ன-ன்னு ஒரு சின்ன லிஸ்ட்டும் கொடுங்களேன்! கெளப்பி விட்டுக்கலாம்!

  ReplyDelete
 21. //7.16: நான்கு விதமான மக்கள் அவர்களுடைய நல்வினையால் என்னை வணங்குகிறார்கள் அருச்சுனா. பரதர்களில் சிறந்தவனே. அவர்கள்: துன்ப்படுபவர்கள், ஞானம் வேண்டுபவர்கள், பொருள் வேண்டுபவர்கள், ஞானிகள்.

  7.17: அவர்களில் என்றைக்கும் பக்தியில் மூழ்கியிருக்கும் ஞானியே எனக்கு மிகவும் பிரியமானவன். எனக்கு மிகவும் நெருக்கமானவன். நானே அவன். மீண்டும் சொல்கிறேன். அவன் எனக்கு பிரியமானவன்.//

  What about a person like Bill Gates? He donates his time and money in uplifting fellow human beings.Karma yoga perhaps? There are many in this world who live as
  just human beings and not seem to be interested in any organized religion. I would like to think that Gita is more universal than
  belonging to one particular nation or ethnic group!

  ReplyDelete
 22. //What about a person like Bill Gates? He donates his time and money in uplifting fellow human beings.Karma yoga perhaps?//

  சக உயிர்களுக்கு உதவி புரிவதைக் கர்ம யோகமாகச் சொல்லவில்லை! கடமையாகச் சொல்லவில்லை! ஆனால், Surprisingly, பக்தி யோகமாகச் சொல்கிறது! ஏன்? இதையும் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்!

  //There are many in this world who live as
  just human beings and not seem to be interested in any organized religion//

  Letz leave religion for now.
  But is it ok, if many in this world "just" live as human beings? Thatz one question to cherish! Gonna explore that too!

  //I would like to think that Gita is more universal than
  belonging to one particular nation or ethnic group!//

  Very True!
  But some sections of Gita, make it kind of a localized version!

  ReplyDelete
 23. //What about a person like Bill Gates? He donates his time and money in uplifting fellow human beings.Karma yoga perhaps?//

  ராமலிங்க ராஜூ அவர்களும் இது போன்ற பல தர்ம காரியங்களைச் செய்தார் தான்!
  அப்படிச் செய்ததின் நோக்கத்தை விட்டு விடுவோம்! விளைவை மட்டுமே பார்ப்போம்!

  அவராலும் பல நல்லவைகள் விளைந்தன! ஆனால்...?

  அதே தான்...
  கர்மம் மட்டுமே செய்து கொண்டிருந்து, "மனிதனாக" மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்று சொல்வது!

  "மனிதனாக" மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பது மிகவும் சிறப்பு! ஆனால் அப்படித் தொடர்ந்து வாழ முடியாது! அப்படி வாழ விடாமல் "சுயம்", "சுயநலம்" தடுக்கப் பார்க்கும்! - அப்போது தான் "உண்மையான" பக்தி"**யும்***" தேவைப்படுகிறது!

  அலுவலகத்தையே எடுத்துக்காட்டாகக் கொள்வோம்!
  என் வேலையை மட்டுமே செஞ்சிக்கிட்டு இருந்தா போதாதா என்று கேட்பவர்கள் உண்டு! ஆனால் ப்ரமோஷன் யாருக்குக் கிடைக்குது? :)

  தன் வழக்கமான வேலையோடு கூட, துறைக்கு மதிப்பு சேர்க்கும் செயல்களும் செய்யும் போது - adding value to process - அப்போ ப்ரமோஷன் கிடைக்கிறது அல்லவா? சும்மா ஒரு எ.கா-குச் சொன்னேன்! :))

  ReplyDelete
 24. dummy standard எனக்கு அதிகமா இருக்கு தம்பீ. கொஞ்சம் கீழ வாங்க :) குமரன் எடுத்துக் காட்டிய ஸ்லோகங்களுக்கும் பொருளுக்கும் மிக்க நன்றி.

  ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லுவார் - சமூகத் தொண்டு செய்பவர்கள் சுயநலமில்லாமல் (உள்நோக்கங்கள் இல்லாமல், புகழ் போன்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல்) செய்ய வேண்டுமென்று.

  ReplyDelete
 25. //கவிநயா said...
  dummy standard எனக்கு அதிகமா இருக்கு தம்பீ. கொஞ்சம் கீழ வாங்க :)//

  ஹிஹி!
  இது என் "இஷ்டைலே" அல்ல-ன்னு ஒரு நண்பர் சொன்னாரு! பந்தல்-ல தத்துவமாப் பேசிப் பாத்ததே இல்லீங்களா...அதான் போல! :)

  எங்கே ரொம்ப கடினமா இருக்கு-க்கா? சாஷாத்காரம்-ன்னு வடமொழியில் வருவதாலா? ஒரே பதிவில் பல விஷயங்கலும் சொல்லியதாலா? பதிவின் நீளத்தை வேணும்னா கொறைக்கட்டுமா?

  லோக்கலா பழனி அடிவாரம், பழனி மலை-ன்னு உதாரணம் கொடுத்த பின்புமா கடினம்?
  எங்கே-ன்னு சொல்லுங்கக்கா! தனி மடலில் சொன்னாக் கூட ஓக்கே தான்! அடுத்த பதிவில் திருத்திக்க வசதியா இருக்கும்!

  //ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லுவார் - சமூகத் தொண்டு செய்பவர்கள் சுயநலமில்லாமல் (உள்நோக்கங்கள் இல்லாமல், புகழ் போன்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல்) செய்ய வேண்டுமென்று//

  உண்மை!
  ஆனால் ரொம்ப கஷ்டம்! :))

  பெரும்பாலும் சமூகத் தொண்டு செய்பவர்கள், புகழோ, வேறு ஏதோ ஒன்னை எதிர்பார்த்து செய்வது வழக்கம் தான்! பெரும் ஞானிகள் எடுத்துச் செஞ்சா, அப்படி இருக்காது!

  ஆனால் ஞானிகள் பெரும்பாலும் தொண்டுக்கு வருவதில்லை!
  தொண்டு செய்பவர்கள் ஞானத்துக்குச் செல்வதில்லை! :)

  ReplyDelete
 26. //சக உயிர்களுக்கு உதவி புரிவதைக் கர்ம யோகமாகச் சொல்லவில்லை! கடமையாகச் சொல்லவில்லை! ஆனால், Surprisingly, பக்தி யோகமாகச் சொல்கிறது! ஏன்? இதையும் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்!//
  Thank you.
  As long as we are on this topic may be you can answer
  one more question. We have no memory of our past lives. From this we can safely assume that will
  no memory of this life in our next life. Why do we have to bother about afterlife or salvation!

  ReplyDelete
 27. //பெரும்பாலும் சமூகத் தொண்டு செய்பவர்கள், புகழோ, வேறு ஏதோ ஒன்னை எதிர்பார்த்து செய்வது வழக்கம் தான்!//
  In this economy a self made unassuming millionaire banker in Florida has distributed 65 million among his employees. I have read about many cases like this in U.S. Warren Buffet is leaving his wealth for charities, not for his children.

  ReplyDelete
 28. News report on the banker

  //Abess didn't publicize what he had done. He didn't even show up at the bank to bask in his employees' gratitude on the day the bonus envelopes were distributed. He was inundated with letters soon afterward.

  Asked later what motivated him, Abess said he had long dreamed of a way to reward employees. He had been thinking of creating an employee stock option plan before he decided to sell the bank.

  ''Those people who joined me and stayed with me at the bank with no promise of equity -- I always thought some day I'm going to surprise them,'' he said. ``I sure as heck don't need [the money].''//

  ReplyDelete
 29. //Anonymous said...
  Thank you.
  As long as we are on this topic may be you can answer
  one more question//

  ha ha ha!
  Itz not me answering! Itz we answering!
  Itz only a collective exploration.
  Unga perai chollalaame? U can put you name under the comment, even if you comment as anonymous.

  //We have no memory of our past lives. From this we can safely assume that will
  no memory of this life in our next life.//

  Yes...we can safely assume!
  and therez a reason why the past & future lives are hidden variables :)
  ...which we might see in this series as well.

  //Why do we have to bother about afterlife or salvation!//

  Lemme just touch lightly on this!
  சிறு வயதில் தாய் ஒரு பிள்ளையைத் தொலைச்சிட்டாங்க, இல்லை ஒரு பிள்ளை தாயைத் தொலைச்சிடிச்சி-ன்னு வச்சிக்குங்க...

  சினிமாவில் வரா மாதிரி, திடீர்-ன்னு ஒரு ரயில்வே ஸ்டேஷன்-ல ரெண்டு பேரும் சந்திச்சிக்கிறது - இப்படியெல்லாம் நிஜ வாழ்வில் இல்லைன்னாக் கூட...

  அந்தத் தாயோ/பிள்ளையோ, தங்கள் வேர்களைப் பற்றிய யோசனை/ தேடலில், "அவ்வப்போது" ஈடுபடுவது என்பது மனித இயற்கை தான்! அனைத்து நாடுகளிலும்!...why we have to bother?-ன்னு கேட்க மாட்டோம்!

  அந்தச் சிறு வயது ஞாபகங்கள் ரொம்ப கூட இருக்காது! பலருக்கு மறந்து கூட போயிருக்கும்! ஆனால் தேடல்/யோசனை மட்டும் போகாது! அப்பப்போ வரும்! அதே போலத் தான் இதுவும்!

  சென்ற ஜென்மமோ, அடுத்த ஜென்மமோ பற்றிய தேடல்-ன்னு அடியேன் இதைக் கருத மாட்டேன்! அதை விட, நாம் யார்?-இறைவனுக்கும் நமக்குமான உறவு என்ன? என்பதான தேடல்கள் வீண் அல்ல! "Why we have to bother?"-ரகமும் அல்ல! :))

  ReplyDelete
 30. //Anonymous said...
  In this economy a self made unassuming millionaire banker in Florida has distributed 65 million among his employees//

  அதான் "பெரும்பாலும்" என்று குறிப்பிட்டேன்!
  சமூகத் தொண்டு செய்பவர்கள், வெறும் பணவான்களாக மட்டும் இல்லாமல், குணவான்களாக இருக்கும் போது, "யோகம்" சாத்தியம் ஆகிறது!

  அந்த யோகத்தைப் பக்தி யோகமாகவே கண்ணன் குறிப்பிடுகிறான்!

  ReplyDelete
 31. //தனி மடலில் சொன்னாக் கூட ஓக்கே தான்! //

  ஓக்கீ. சொல்றேன்...

  //ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லுவார் - சமூகத் தொண்டு செய்பவர்கள் சுயநலமில்லாமல் (உள்நோக்கங்கள் இல்லாமல், புகழ் போன்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல்) செய்ய வேண்டுமென்று//

  மன்னிக்கணும், பாதி சொல்லிட்டு மீதி சொல்லல! அப்படி செய்தாதான் அது கர்ம யோகத்துல சேர்த்தின்னு சொல்ல வந்தேன். கர்ம யோகமே பலன் எதிர்பாராம செய்யறதுதானே?

  ReplyDelete
 32. //பக்தியில் விளைந்த ஞானம்!
  அவன் திருவுள்ள உகப்பே உகப்பு என்ற ஞானம்! நாராயண"னே" நமக்"கே" என்கிற ஞானம்! தத்துவ ஞானத்தை இங்கே சொல்லவில்லை என்ற நினைக்கிறேன்! சரியா குமரன்?
  //
  எனக்கு தெரியாது. ஆண்டாள் திருவுள்ளம் தெரிந்த உங்களுக்குத் தான் கண்ணனின் திருவுள்ளமும் தெரிந்திருக்கும்.

  ReplyDelete
 33. கே.ஆர்.எஸ்!

  நீங்கள் கீதையை விளக்கும் விதம் எளிமையாக உள்ளது. ஒரு தலைப்பை ஒட்டியே ஒரு பதிவில் விளக்கம் வந்தால் இன்னும் விளங்குவதற்கு இலகுவாக இருக்கும்.

  முன்பு இந்து மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் ஒப்பிட்டு நான் இட்ட பதிவின் ஒரு பகுதியை பதிந்துள்ளேன். நேரமிருப்பின் இப்பதிவைப் பற்றிய உங்கள் கருத்தையும் தெரிவியுங்களேன்.

  1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
  1 : 1 - குர்ஆன்

  புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
  8 : 1 : 1 -ரிக் வேதம்

  2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
  1 : 2 - குர்ஆன்

  அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
  3 : 34 : 1 - ரிக் வேதம்

  3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
  1 : 5

  எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
  40 : 16 - யஜுர் வேதம்.

  4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
  2 : 107 - குர்ஆன்

  பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
  1 : 100 : 1 - ரிக் வேதம்

  5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
  2 : 115 - குர்ஆன்

  அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
  10 :12 :14 - ரிக் வேதம்

  கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
  10 : 36 : 14 - ரிக் வேதம்

  இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
  10 : 81 : 3 - ரிக் வேதம்

  6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
  25 : 2 - குர்ஆன்

  பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
  7 : 19 : 1 - அதர்வண வேதம்

  7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
  25 : 62 - குர்ஆன்

  இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
  10 : 190 : 2 - ரிக் வேதம்

  8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
  6 : 96 - குர்ஆன்

  அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
  10 : 190 : 3 - ரிக் வேதம்

  9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
  57 : 3 - குர்ஆன்

  ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
  1 : 31 : 2 - ரிக் வேதம்.

  10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
  48 : 23 - குர்ஆன்

  அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
  18 : 15 - அதர்வண வேதம்

  11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
  10 : 64 - குர்ஆன்

  இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
  1 : 24 : 10 - ரிக் வேதம்

  12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
  13 : 9 - குர்ஆன்

  இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
  20 : 58 : 3 - அதர்வண வேதம்

  மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்களைத் தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்.

  ReplyDelete
 34. The following person's hypothesis (Dean Hamer) was discussed a few years ago in the print and television media. To me it makes sense because not everyone in this world is interested in sprituality
  and they don't seem to feel that they are missing out on something important. I am not discounting the fact many connect to a higher Being! Please don't get me wrong.
  Will discuss more @ the end of your
  series.
  Faith-Boosting Genes
  By Carl Zimmer
  Scientific American, October, 2004
  Link

  A review of The God Gene: How Faith Is Hard-wired Into Our Genes, by Dean Hamer.

  By page 77 of The God Gene, Dean H. Hamer has already disowned the title of his own book. He recalls describing to a colleague his discovery of a link between spirituality and a specific gene he calls "the God gene." His colleague raised her eyebrows. "Do you mean there's just one?�¿½�¿�½" she asked. "I deserved her skepticism," Hamer writes. "What I meant to say, of course, was 'a' God gene, not 'the' God gene."

  Of course. Why, the reader wonders, didn't Hamer call his book A God Gene? That might not have been as catchy, but at least it wouldn't have left him contradicting himself.

  Whatever you want to call it, this is a frustrating book. The role that genes play in religion is a fascinating question that's ripe for the asking. Psychologists, neurologists and even evolutionary biologists have offered insights about how spiritual behaviors and beliefs emerge from the brain. It is reasonable to ask, as Hamer does, whether certain genes play a significant role in faith. But he is a long way from providing an answer.

  Hamer, a geneticist at the National Cancer Institute, wound up on his quest for the God gene by a roundabout route. Initially he and his colleagues set out to find genes that may make people prone to cigarette addiction. They studied hundreds of pairs of siblings, comparing how strongly their shared heredity influenced different aspects of their personality. In addition to having their subjects fill out psychological questionnaires, the researchers also took samples of DNA from some of them. Hamer then realized that this database might let him investigate the genetics of spirituality.

  He embarked on this new search by looking at the results of certain survey questions that measured a personality trait known as self-transcendence, originally identified by Washington University psychiatrist Robert Cloninger. Cloninger found that spiritual people tend to share a set of characteristics, such as feeling connected to the world and a willingness to accept things that cannot be objectively demonstrated. Analyzing the cigarette study, Hamer confirmed what earlier studies had found: heredity is partly responsible for whether a person is self-transcendent or not. He then looked at the DNA samples of some of his subjects, hoping to find variants of genes that tended to turn up in self-transcendent people. His search led him to a gene known as VMAT2. Two different versions of this gene exist, differing only at a single position. People with one version of the gene tend to score a little higher on self-transcendence tests. Although the influence is small, it is, Hamer claims, consistent. About half the people in the study had at least one copy of the self-transcendence boosting version of VMAT2, which Hamer dubs the God gene.

  Is the God gene real? The only evidence we have to go on at the moment is what Hamer presents in his book. He and his colleagues are still preparing to submit their results to a scientific journal. It would be nice to know whether these results can withstand the rigors of peer review. It would be nicer still to know whether any other scientists can replicate them. The field of behavioral genetics is littered with failed links between particular genes and personality traits. These alleged associations at first seemed very strong. But as other researchers tried to replicate them, they faded away into statistical noise. In 1993, for example, a scientist reported a genetic link to male homosexuality in a region of the X chromosome. The report brought a huge media fanfare, but other scientists who tried to replicate the study failed. The scientist's name was Dean Hamer.

  To be fair, it should be pointed out that Hamer offers a lot of details about his study in The God Gene, along with many caveats about how hard it is to establish an association between genes and behavior. But given the fate of Hamer's socalled gay gene, it is strange to see him so impatient to trumpet the discovery of his God gene. He is even eager to present an intricate hypothesis about how the God gene produces self-transcendence. The gene, it is well known, makes membrane covered containers that neurons use to deliver neurotransmitters to one another. Hamer proposes that the God gene changes the level of these neurotransmitters so as to alter a person's mood, consciousness and, ultimately, self-transcendence. He goes so far as to say that the God gene is, along with other faith-boosting genes, a product of natural selection. Self-transcendence makes people more optimistic, which makes them healthier and likely to have more kids.

  These speculations take up the bulk of The God Gene, but in support Hamer only offers up bits and pieces of research done by other scientists, along with little sketches of spiritual people he has met. It appears that he has not bothered to think of a way to test these ideas himself. He did not, for example, try to rule out the possibility that natural selection has not favored self-transcendence, but some other function of VMAT2. (Among other things, the gene protects the brain from neurotoxins.) Nor does Hamer rule out the possibility that the God gene offers no evolutionary benefit at all. Sometimes genes that seem to be common thanks to natural selection turn out to have been spread merely by random genetic drift. Rather than address these important questions, Hamer simply declares that any hypothesis about the evolution of human behavior must be purely speculative. But this is simply not true. If Hamer wanted, he could have measured the strength of natural selection that has acted on VMAT2 in the past. And if he did find signs of selection, he could have estimated how long ago it took place. Other scientists have been measuring natural selection this way for several years now and publishing their results in major journals.

  The God Gene might have been a fascinating, enlightening book if Hamer had written it 10 years from now-after his link between VMAT2 and self-transcendence had been confirmed by others and after he had seriously tested its importance to our species. Instead the book we have today would be better titled: A Gene That Accounts for Less Than One Percent of the Variance Found in Scores on Psychological Questionnaires Designed to Measure a Factor Called Self-Transcendence, Which Can Signify Everything from Belonging to the Green Party to Believing in ESP, According to One Unpublished, Unreplicated Study.  Copyright 2004 Carl Zimmer

  ReplyDelete
 35. //குமரன் (Kumaran) said...
  //பக்தியில் விளைந்த ஞானம்!
  அவன் திருவுள்ள உகப்பே உகப்பு என்ற ஞானம்! நாராயண"னே" நமக்"கே" என்கிற ஞானம்! தத்துவ ஞானத்தை இங்கே சொல்லவில்லை என்ற நினைக்கிறேன்! சரியா குமரன்?
  //
  எனக்கு தெரியாது. ஆண்டாள் திருவுள்ளம் தெரிந்த உங்களுக்குத் தான் கண்ணனின் திருவுள்ளமும் தெரிந்திருக்கும்//

  ஹா ஹா ஹா
  கோதையின் ஆருயிர்த் தோழன் கண்ணனுக்கும் ஆழ்ந்த நண்பனா என்ன? :))

  அ.உ.ஆ.சூ.-க்கா தெரியாது?
  ஒரு குறள் போதுமே - ஞானத்தைப் பற்றி?
  "கற்றதனால் ஆய பயன் என் கொல்?" - வாலறிவன்
  நற்றாள் தொழாஅர் எனின்!

  ReplyDelete
 36. //சுவனப்பிரியன் said...
  கே.ஆர்.எஸ்!நீங்கள் கீதையை விளக்கும் விதம் எளிமையாக உள்ளது. ஒரு தலைப்பை ஒட்டியே ஒரு பதிவில் விளக்கம் வந்தால் இன்னும் விளங்குவதற்கு இலகுவாக இருக்கும்//

  வாங்க சுவனப்பிரியன்! நலமா?
  இந்தப் பதிவு எல்லைகளை நிறுத்தும் பதிவு தான்!
  உங்கள் யோசனையும் ஏற்றுக் கொள்கிறேன்! ஒரு பதிவிற்கு ஒரு தலைப்பு என்றே இனி எடுத்துச் செல்கிறேன்!

  //முன்பு இந்து மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் ஒப்பிட்டு நான் இட்ட பதிவின் ஒரு பகுதியை பதிந்துள்ளேன். நேரமிருப்பின் இப்பதிவைப் பற்றிய உங்கள் கருத்தையும் தெரிவியுங்களேன்//

  கண்டிப்பா...இன்று மாலை வருகிறேன் சுவனப்பிரியன்!

  முன்பு பக்ரீத்-தின் போது சரணாகதி-ஈமான் என்று இரு சமயத்தின் நற்சிந்தனைகளை ஒப்பிட்டுப் பதிவு போட்டேன்-ல? அது சில "ஆசார சிரேஷ்டர்களுக்கு" பயங்கர கோவம்! :))
  ஆனா அதுக்காக எல்லாம் சோர்ந்து போயிற மாட்டேன்! :)

  இது போன்ற ஒப்பீடுகள், மன மலர்ச்சியை இன்னும் கெட்டிப்படுத்தும்! இது, மீமாம்சை என்று வேதமே காட்டிய வழி தான்! ஆனாப் பாவம் சில "வேத" மக்களுக்கே புரிய மாட்டேங்குது!

  வணங்கும் துறைகள் பல பலவாக்கி...
  நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்...
  நின்கண், வேட்கை எழுவிப்பனே!

  ReplyDelete
 37. //நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
  1 : 5

  எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
  40 : 16 - யஜுர் வேதம்//

  அருமை! தினமும் இவர்கள் செய்யும் காயத்ரி ஜபமும் இதையே சொல்கிறது! தேவஸ்ய தீமஹி தியோயன!

  தமசோ மா ஜ்யோதிர் கமய!
  இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வழி நடத்து!

  ReplyDelete
 38. //I am not discounting the fact that many connect to a higher Being!//
  It should be "I am not discounting the fact that anyone can connect to a higher Being if they so desire!"

  ReplyDelete
 39. //அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
  2 : 107 - குர்ஆன்//

  நாராயண"னே" நமக்"கே" பறை தருவான் என்று அப்படியே ஆன்ற தமிழ் நூற்களும் காட்டுகிறது பாருங்கள்! அருமை சுவனப்பரியன்!

  //யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே.
  57 : 3 - குர்ஆன்//

  முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
  பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே
  - என்பது மாணிக்கவாசகப் பெருமான் வாக்கு! எப்படி கருத்து மட்டும் அல்லாமல் வார்த்தைகள் கூட ஒன்றுகின்றன பாருங்கள்!

  பல தெய்வ வழிபாடு தவிர்த்து, இஸ்லாமிற்கும் இந்து தர்மத்துக்கும் அடிப்படை ஒற்றுமைகள் பலப்பல! சொல்லப் போனால் வைணவக் கருத்துக்கள் இன்னும் நிறையவே பொருந்தும்! சரணாகதி, அனன்ய கதித்தவம், நம் கைம்முதல் ஒன்றில்லாமை..என்று நிறைய...

  ReplyDelete
 40. அதோ போல் கிறிஸ்துவமும்...

  ஆதியிலே தேவன் "வார்த்தையாய்" இருந்தார் = Old Testament!

  "சொல்லினால் படைக்க" நீ
  படைக்க வந்து தோன்றினார்,
  சொல்லினால் சுருங்க நின்
  குணங்கள் சொல்ல வல்லரே

  சொல்லினால் தொடர்ச்சி நீ
  சொலப்படும் பொருளும் நீ,
  சொல்லினால் சொலப் படாது
  தோன்றுகின்ற சோதி நீ
  = திருமழிசை ஆழ்வார்

  அதே போல் இயேசு பெருமான் சொல்வதும்...கீதை சொல்வதும்...

  நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்! = இயேசு பெருமான்

  நானே காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறேன்! = கண்ணன்

  இன்னும் நிறைய...
  பொறுமையா வரேன்! ஆபீஸ் மக்கள் Team Lunch-க்கு கூப்பிடறாங்க! :)

  ReplyDelete
 41. கே.ஆர்.எஸ்!

  நலம். நீங்கள் நலமா?

  நான் படிக்கும் காலங்களில் நான்கு வேதங்களைப் பற்றி எனது ஆசான் ரங்க பாஷ்யம் மூலம் நிறைய கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் அதன் பிறகு அதன் விளக்கங்களையோ விரிவுரைகளையோ மொழி மாற்றத்தில் பார்த்தது கிடையாது. ராமாயணமும் கீதையும் பிரபல்யம் ஆனது போல் நான்கு வேதங்களும் ஏன் மக்களை சென்று அடையவில்லை? இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

  இந்த மொழி பெயர்ப்பும் ஜாகிர் நாயக் வேத விற்பன்னர்களைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுதான். தமிழில் வேத மொழி பெயர்ப்பு உண்டா? விளக்கவும்.

  மேலும் இந்தியாவிற்க்கென்று ஒரு கடவுள், அரேபியாவிற்க்கென்று ஒரு கடவுள், அமெரிக்காவென்று ஒரு கடவுள் என்று கண்டிப்பாக இருக்க முடியாது. உலகை படைத்து பரிபாலிப்பவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். பிரம்மா, கர்த்தர், இறைவன், அல்லாஹ் என்று மொழிக் கேற்றவாறு பலவாறாக பிரித்து விட்டோம். பலவாறாக உருவகமும் படுத்தி விட்டோம். அவனது அடிமைகளான நாம் அனைவரும் ஒரே இனமே என்ற பரந்த எண்ணத்துக்கு வந்து விட்டால் பல சிக்கல்கள் தானாக தீர்ந்து விடும் என்பது என் கருத்து.

  ReplyDelete
 42. //சுவனப்பிரியன் said...
  நான் படிக்கும் காலங்களில் நான்கு வேதங்களைப் பற்றி எனது ஆசான் ரங்க பாஷ்யம் மூலம் நிறைய கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் அதன் பிறகு அதன் விளக்கங்களையோ விரிவுரைகளையோ மொழி மாற்றத்தில் பார்த்தது கிடையாது.//

  இப்போது அச்சில் வந்து விட்டது சுவனப்பிரியன்! எழுதாக் கிளவி என்று முன்னர் தான், வாய் வழியாகவே, தலைமுறைக்கு தலைமுறை வந்தது! ஸ்ருதி-ன்னே பேரு! அதாச்சும் "கேட்பது"! எழுதி வைக்கவே மாட்டார்கள்! இப்போது நூல்கள் பல வந்து விட்டன!

  சுவாமி தயானந்த சரஸ்வதியின் நூல் ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும்!

  இணையத்தில்...
  http://www.hinduwebsite.com/vedicsection/vedaindex.asp

  //ராமாயணமும் கீதையும் பிரபல்யம் ஆனது போல் நான்கு வேதங்களும் ஏன் மக்களை சென்று அடையவில்லை? இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?//

  :)
  வேதம் ஓதியவர்கள் தான் காரணம்! :)

  வேதம் இறைவன் தந்தது என்பது நம்பிக்கை! அதைத் தங்களுக்கு மட்டுமே என்று ஆக்கிக் கொண்டு, எங்கும் பரவி விடாமல், கவனமாகப் பூட்டி வைத்தால் என்ன ஆகும்?

  தாமே வேத அறிவால் இறைவனைக் காண முடியும்! மற்றவர்கள் எல்லாரும் தங்கள் மூலமாகத் தான் காண முடியும் - என்பது போன்று சுயநலங்கள் கலக்க ஆரம்பித்த போது தான், இப்படி நலிந்து போனது!

  வேத கால ரிஷிகள் இப்படியெல்லாம் சட்டம் போடவில்லை! ரிஷி பத்தினிகளும் வேதம் சொன்னார்கள்! மாற்று வருணத்தில் இருந்த விஸ்வாமித்திரருக்கும் வேத சுலோகங்கள் எளிதாகக் கிட்டியது! ஆனால் பின்னாளில் சுயநலப் போக்கால், பொதுவான வேதம் அனைவரையும் சென்றடையாமல் ஒடுங்கிக் கொண்டது!

  //தமிழில் வேத மொழி பெயர்ப்பு உண்டா? விளக்கவும்//

  மூல நூல், புத்தக வடிவில் என்றால், கேட்டுச் சொல்கிறேன்! சென்னை தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான பதிப்பகத்தில் கிடைக்கும்!

  வேதத்தின் சாரத்தை அனைவருக்கும் பொதுவாக ஆக்கி வைக்க, அதே போன்று நான்கு பிரிவுகளாக, மாறன் என்னும் நம்மாழ்வார் உருவாக்கினார்! அப்படியே மொழி பெயர்ப்பு அல்ல! சாராம்சங்கள் மட்டும்! யாகம், வேள்வி நீங்கலாக, தத்துவம் மட்டும்! = திரு வாய் மொழி (வாயால் சொல்வது, ஸ்ருதி) என்றே கொண்டாடப் படுகிறது!

  வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன் என்று இடைக்காட்டுச் சித்தரும் புகழ்ந்துரைத்தார்! திராவிட வேதம் என்று இன்றும் கொண்டாடப்படுகிறது! ஆண்-பெண், ஜாதி/மத/பண/எந்த பேத வித்தியாசமின்றி எளிய தமிழில் யாரும் ஓதலாம்!

  //மேலும் இந்தியாவிற்க்கென்று ஒரு கடவுள், அரேபியாவிற்க்கென்று ஒரு கடவுள், அமெரிக்காவென்று ஒரு கடவுள் என்று கண்டிப்பாக இருக்க முடியாது. உலகை படைத்து பரிபாலிப்பவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும்//

  சூப்பராச் சொன்னீங்க! ஐ லைக் திஸ்! :)

  //பிரம்மா, கர்த்தர், இறைவன், அல்லாஹ் என்று மொழிக் கேற்றவாறு பலவாறாக பிரித்து விட்டோம். பலவாறாக உருவகமும் படுத்தி விட்டோம். அவனது அடிமைகளான நாம் அனைவரும் ஒரே இனமே என்ற பரந்த எண்ணத்துக்கு வந்து விட்டால் பல சிக்கல்கள் தானாக தீர்ந்து விடும் என்பது என் கருத்து//

  உண்மை! மனிதன் அவரவர் நாக்குச் சுவை போல, எண்ணச் சுவைக்கு உருவகப்படுத்துவதால் பிரிவுகள் வரத் தான் செய்யும்! ஆனால் அடிப்படையை அப்பப்போ பார்த்துக்கிட்டா பிரச்சனையே வராது!

  வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதி விகற்பால்
  பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவை அவை தோறு
  அணங்கும் பல பல ஆக்கி, நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்!
  இணங்கு நின்னோரை இல்லாய், நின் கண் வேட்கை எழுவிப்பனே.

  - இதுவும் தமிழ் வேதம் தான்! திருவாய்மொழி! :)

  ReplyDelete
 43. ஆத்மாவுக்கு ஏது சுடலை!!! ம்ம்ம். அற்புதம். ரவியின் மொழி தனிதான். ரொம்பநல்லா இருக்கு.

  ReplyDelete
 44. //வல்லிசிம்ஹன் said...//
  வல்லீ்ம்மாஆஆஆஆ, நலமா இருக்கீங்களா? :)
  நேத்து தான் குறுங்குடி நம்பி பத்திய சிடி ஓடிக்கிட்டு இருந்துச்சி! உங்களைத் தான் நினைச்சுக்கிட்டேன்! அடுத்த சிடி-ல சோளிங்கபுரம்! உங்க சிங்கம்! அங்கிளை நினைச்சிக்கிட்டேன்! :)

  //ஆத்மாவுக்கு ஏது சுடலை!!! ம்ம்ம். அற்புதம். ரவியின் மொழி தனிதான். ரொம்பநல்லா இருக்கு//

  நன்றி வல்லிம்மா! என் மொழி ஒன்னுமில்ல! எல்லாம் மாறன் மொழி! மாறன் மொழியைக் கொஞ்சம் மாடர்ன் மொழி ஆக்கித் தாரேன்! அம்புட்டு தான்! :)

  ReplyDelete
 45. //எல்லாம் மாறன் மொழி! மாறன் மொழியைக் கொஞ்சம் மாடர்ன் மொழி ஆக்கித் தாரேன்! அம்புட்டு தான்! :)//

  இது நல்லாருக்கே! :)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP