Sunday, May 17, 2009

அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது! - கலைஞர் அறிவிப்பு!

பிற் குறிப்பு ( May-18-2009 1:20 pm): முன்பே சொன்னது போல், இது போர்முனையில் சிக்கிய நம் ஈழத்தமிழரைக் காக்கும் பொருட்டு, கலைஞருக்கு அவர் சுயநலத்திலாச்சும், பொதுநலம் காண, ஒரு யோசனைப் பதிவு மட்டுமே!
ஆனால் விறுவிறு என நடந்து விட்ட அரசியல் நிகழ்வுகளால், இனி இந்த யோசனைக்கு வேலையே இல்லாதபடி ஆகி விட்டது! :(((


வணக்கம்! அதிரடிச் செய்திகள்!

"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!
இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது!

"ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!

"இதனால் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு இல்லை என்று பொருளாகி விடாது! அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்" என்று இன்று கூடிய தி.மு. கழக செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறி உள்ளது!


இது பற்றி திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறுகையில்:

"தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், மனசாட்சியின் பேச்சைக் கேட்பவர்! அதனால் தான் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல், திடீரென்று அதிகாலையில் எழுந்து, அண்ணா சமாதிக்குச் சென்று உண்ணாவிரதம் இருந்தார்! இப்போதும் அதே மனசாட்சியின் படித் தான் இந்த அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளார்!

"ஈழத் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் கலைஞர் ஒரு துரோகி" என்று தன்னை அபாண்டமாகச் சித்தரித்த எதிர்க்கட்சிகள், தேர்தலில் மண்ணைக் கவ்வி விட்டாலும்...கலைஞர் நெஞ்சில் ஏற்பட்ட அந்த வடு மட்டும் இன்னும் நீங்கவில்லை! தீயினாற் சுட்ட புண் உள்ளாறும்! ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற குறளோவியத்தின் படி நடந்து கொண்டுள்ளார் கலைஞர்!

ஐம்பதாயிரம் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி திமுக செயற்குழு கூடி முடிவெடுக்கும்!" - இவ்வாறு பேராசிரியர் அன்பழகன் நிருபர்களிடம் கூறினார்!

"பிரபாகரன் குறித்து ஏதேனும் கோரிக்கை வைப்பீர்களா?" என்று நிருபர்கள் கேட்டதற்கு....

"கோரிக்கையைப் பிரபாகரனிடமும் வைக்க வேண்டும் அல்லவா? இது வரை அவரிடம் தமிழகத் தலைவர்கள் யாரும் கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லையே!"

"அப்பாவி மக்கள் வெளியேறினால் அவர்களைத் தடுக்க வேண்டாம் என்ற கோரிக்கையைத் தம்பி பிரபாகரனிடம் வைப்போமே தவிர, அவரைப் பற்றிய கோரிக்கையை அரசிடம் வைக்க மாட்டோம்! இது அப்பாவிப் பொதுமக்களுக்கான கோரிக்கை மட்டும் தான்! அவர்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு உத்தரவாதம் கொடுத்தால் மட்டும் போதுமானது!" என்று பேராசிரியர் அன்பழகன் மேலும் விளக்கம் அளித்தார்!


ஈழத் தமிழருக்காக ஏற்கனவே ஆட்சி இழந்த கலைஞர், இந்த முறை ஈழத் தமிழருக்காக ஆட்சியே வேண்டாம் என்று சொல்லி இருப்பது மிகுந்த அதிர்ச்சியை உலகெங்கும் ஏற்படுத்தி இருக்கிறது!

டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மன்மோகன் சிங், தமிழக முதல்வருடன் அவசரம் அவசரமாகத் தொலைபேசியுள்ளனர். ராகுல் காந்தியும் தொலைபேசியில் கலைஞரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனாலும் கலைஞர் தன் முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது!

கலைஞரின் இந்த முடிவுக்கு தமிழகம் முழுதும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது!
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கலைஞரைச் சந்தித்து, ஆளுயர மாலை அணிவித்து, முதல் ஆளாக வாழ்த்தி விட்டுக் கண் கலங்கினார்.

இயக்குனர் சீமான் மற்றும் பாரதிராஜா ஆகியோர் கலைஞரின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவினை வரவேற்றுள்ளனர்!
இது வரை கலைஞரைப் பற்றித் தவறாகப் பேசியமைக்கு அவர்கள் பகிரங்கமாகப் பொது மன்னிப்பு கேட்டுள்ளனர்!

இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், பாட்டாளி மக்கக் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கலைஞரின் இந்த முடிவினை ஆத்மார்த்தமாக வரவேற்பதாகக் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். கலைஞர் இந்த முடிவில் உறுதியுடன் இருந்தால் அவருக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருப்போம் என்று அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் "இது பற்றி உடனடியாக கருத்து சொல்ல முடியாது என்றும், என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். "கலைஞர் சில சமயம் அவரையும் அறியாமல் சில நல்லது செய்வார். அதில் இது ஒன்று" என்றும் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மட்டும், "இது கருணாநிதியின் திட்டமிட்ட நாடகம்! சட்டசபைத் தேர்தலை முன் கூட்டியே நடத்தி, அமோக வெற்றி பெற்று, ஸ்டாலினிடம் வலுவான ஒரு ஆட்சியை ஒப்படைக்க, கருணாநிதி இந்த நாடகம் நடத்துகிறார்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்!

இருந்தாலும், கலைஞரின் முடிவு தமிழக மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது!
வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம் என்று சொல்லி இருந்தாலும் கூட, டெல்லியில் ஆட்சி அமைக்கும் வேலைகளில் சற்றுப் பின்னடைவு ஏற்படத் தான் செய்துள்ளது!
இது பற்றிக் கலைஞரிடம் நேரடியாகப் பேச, சோனியாவின் செயலர் அகமது படேல் இன்னும் சில மணி நேரங்களில் சென்னை வருகிறார்.

விரிவான செய்திகள், விளம்பர இடைவேளைக்குப் பிறகு...


இது வதந்தி இல்லீங்க! யோசனை! கலைஞரின் சுயநலத்திலாவாது கொஞ்சம் பொதுநல யோசனை!

இதைப் படிக்கும் போதே இனிக்கிறதே! அதுவும் கடைசிப் பகுதி! கலைஞருக்கும் அவருக்குப் பின்னால் வரப் போகிற வாரிசுகளுக்கும் ஒரு நிலையான அடிப்படை அமைத்துக் கொடுப்பது...
அதான் கலைஞருக்கு இப்படி ஒரு ஐடியா! சுயநலத்திலாவாது கொஞ்சம் பொதுநல யோசனை செய்யட்டுமே அவர்!

40 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. எப்படியெல்லாம் யோசிக்கறீங்க.

  ReplyDelete
 3. இப்படியான ஒரு அதிரடியான முடிவினை கலைஞர் அறிவிப்பாரேயானால் நான் என்னை தி.மு.க வில் இனைத்துக் கொள்வேன்.

  அதற்கான வாய்ப்பினை அவர் தரமாட்டார் என்பதுதான் நிச்சயம்.

  அழகிரிக்கு ஹெல்த் மினிஸ்ட்ரி, தயாநிதிக்கு டெலிகாம், கனிமொழிக்கு ரயில்வே இனை அமைச்சர் இப்படியான பதவிகளை வாங்கித் தருவதே அவரின் பிரதான வேலையாக இருக்கும்

  ReplyDelete
 4. இலங்கை பிரச்சினையென்பது தமிழக அரசியல்வாதிகளுக்கு ஊறுகாய் மாதிரியான சமாச்சாரம்.

  இனி அது அவர்களுக்கு தேவைப்படாது....இளங்கோவன், முத்துகுமார் யாரென கேட்ட மாதிரி இனி இவர்கள் ஈழத்தமிழர்கள் யாரென கேட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

  ReplyDelete
 5. எல்லாம் முடிந்து விட்டது:(இருந்தும் வரவேற்போம்.

  ReplyDelete
 6. தொடரும் நாடகம் ......

  ReplyDelete
 7. //வரவேற்க படவேண்டிய முடிவு...//

  மாநிலத்தில் பங்கு கேட்க்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு இது இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லல்

  ReplyDelete
 8. பாராட்டுக்கள்,
  அழகிரிக்கு,தயாநிதிக்கு,கனிமொழிக்கு,அமைச்சர் பதவிகளை வாங்கித் தருவதே பிரதான வேலை,தொடரும் நாடகம்.எப்படியெல்லாம் யோசிக்கறீங்க.இருந்தும் வரவேற்போம்.

  ReplyDelete
 9. ஏன் சார் இப்படி வதந்திகளை பரப்புறீங்க?

  உங்க விளையாட்டுக்கு ஒரு அளவு இல்லையா?

  ReplyDelete
 10. தமிழக அரசியல்வாதிகளுக்குத்தான் ஈழம் ஒரு ஊறுகாய் என்றால் உங்களுக்கும் அதுதானா.

  ஏற்கனவே தமிழகத்தமிழன் வெட்கக்கேடாக நடந்து கொண்டிருக்கிறான்.. இந்த நேரத்தில் இப்படி ஒரு வதந்தி வேறா..

  இப்படி ஒரு வதந்திப் பதிவினால் என்ன சாதிக்கிறீர்கள்.

  ReplyDelete
 11. //இந்த முறை ஈழத் தமிழருக்காக ஆட்சியே வேண்டாம் என்று சொல்லி இருப்பது மிகுந்த அதிர்ச்சியை உலகெங்கும் ஏற்படுத்தி இருக்கிறது//

  இது கொஞ்சம் ஓவரா இருக்கே!

  //இது வரை கலைஞரைப் பற்றித் தவறாகப் பேசியமைக்கு அவர்கள் பகிரங்கமாகப் பொது மன்னிப்பு கேட்டுள்ளனர்///

  அதுக்குள்ளயேவா!!

  //விரிவான செய்திகள், விளம்பர இடைவேளைக்குப் பிறகு...//

  இதில் ஏதாவது உள்குத்து உண்டா! ;-)

  ரவிசங்கர் இந்த பதிவு சீரியஸ் பதிவா! கிண்டல் பதிவா! ஒண்ணும் பிரியலையே

  ReplyDelete
 12. //ஏற்கனவே தமிழகத்தமிழன் வெட்கக்கேடாக நடந்து கொண்டிருக்கிறான்.. இந்த நேரத்தில் இப்படி ஒரு வதந்தி வேறா..
  இப்படி ஒரு வதந்திப் பதிவினால் என்ன சாதிக்கிறீர்கள்//

  இது வதந்தி இல்லீங்க!

  இதைப் படிக்கும் போதே இனிக்கிறதே! அதுவும் கடைசிப் பகுதி! கலைஞருக்கும் அவருக்குப் பின்னால் வரப் போகிறவர்களுக்கும் ஒரு நிலையான அடிப்படை...
  அதான் கலைஞருக்கு இப்படி ஒரு ஐடியா! சுயநலத்திலாவாது கொஞ்சம் பொதுநல யோசனை செய்யட்டுமே அவர்!

  ReplyDelete
 13. //கிரி said...
  இந்த பதிவு சீரியஸ் பதிவா! கிண்டல் பதிவா! ஒண்ணும் பிரியலையே//

  அட, கிரி, பதிவின் இறுதியில் கீழே பாருங்க! லேபிள்! "டகால்ட்டி"
  :)

  கலைஞருக்கு சுயநலத்திலாவது ஒரு பொதுநல யோசனை.

  ReplyDelete
 14. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(

  ReplyDelete
 15. என்ன இது விளையாட்டா போய்டுச்சா உங்களுக்கு...

  ReplyDelete
 16. வேண்டாம் அழுதுடுவேன்........... முடியலடா... இன்னுமுமா .....

  ReplyDelete
 17. //"ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!//

  உண்ணா விரதம் இருந்தவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டது போல், அமைச்சரவையில் இடம் பெறும் அன்று தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கைவரும் !
  :)

  இதெல்லாம் அசிங்கயியலில் சகஜமப்பா !

  ReplyDelete
 18. இன்னும் என்னைய்யா ஈழம் அதான் தேர்தலில் புஸ்ஸாகிவிட்டதே

  ReplyDelete
 19. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 20. இங்க பார்றா தீபாவளி முடிஞ்சும் பட்டாசு விக்கிறாரு ஒருத்தல்

  ReplyDelete
 21. தொலைத் தொடர்பு ‍ தயானிதி

  கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை டி ஆர் பாலு

  இரயில்வே அழகிரி

  உள்ளிட்ட ஆறோ இல்லை ஏழோ அமைச்சர் பதவி கிடைத்தால் தானாக சப்போர்ட் செய்வார்கள்.

  மேலே சொன்னது நடக்காவிட்டால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கு அல்லது விளக்குமாற்றால் அடிக்கவும்.

  இப்படிக்கு

  ஒரு அனானி

  ReplyDelete
 22. //மேலே சொன்னது நடக்காவிட்டால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கு அல்லது விளக்குமாற்றால் அடிக்கவும்//

  எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்

  ReplyDelete
 23. -சின்னபாண்டி2:51 PM, May 17, 2009

  //மேலே சொன்னது நடக்காவிட்டால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கு அல்லது விளக்குமாற்றால் அடிக்கவும்.

  இப்படிக்கு

  ஒரு அனானி//


  அனானியா ஒளிஞ்சுகிட்டு இப்படி என்ன வீரவசனம் வேண பேசலாம்!!!

  ReplyDelete
 24. -சின்னபாண்டி2:53 PM, May 17, 2009

  //இங்க பார்றா தீபாவளி முடிஞ்சும் பட்டாசு விக்கிறாரு ஒருத்தர்//

  ரசித்தேன்!

  ReplyDelete
 25. கேட்பது கிடைக்காது என்று தெரிந்தவுடன் இந்தப் புலுடா எல்லாம்.
  கறிவேப்பிலைக் கதை தான்.
  இனிமேல் சோனியாவுக்கு யாரின் தயவும் தேவையில்லைப் போலுள்ளதே? போதாக் குறைக்கு லாலுவுடனும் பேச்சு வார்த்தையென்று கேள்வி!!!
  பாவம் மு.கருணா.

  ReplyDelete
 26. நவீன்12:45 AM, May 18, 2009

  நீங்கள் கூறிய அதே இன்று உதயன் நாளிழலில் செய்தியாக வந்திருக்கிறதே. பின்வரும் இணைப்பைப் பாருங்கள்.

  http://www.euthayan.com/UY/UY/2009/05/18/index.shtml

  என்னய்யா நடக்குது இந்த உலகத்துல!

  ReplyDelete
 27. நீங்கள் விளையாட்டாக சொன்னது அனைத்து ஈழ ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்திருக்கிறது.

  இனிமேல் , லேபிளில் மட்டும் டகால்டி என்று சொல்லாமல் செய்தி கற்பனை என்றே சொல்லி விடுங்கள்.

  ஏனென்றால் ஈழத்தவர்களின் வலியை தணிக்காவிட்டாலும் இது போன்ற செய்திகள் மேலும் கிளறி விடும்

  நன்றி

  மதிபாலா

  ReplyDelete
 28. @மதிபாலா
  //நீங்கள் விளையாட்டாக சொன்னது அனைத்து ஈழ ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்திருக்கிறது.

  இனிமேல் , லேபிளில் மட்டும் டகால்டி என்று சொல்லாமல் செய்தி கற்பனை என்றே சொல்லி விடுங்கள்//

  அச்சச்சோ!
  மன்னிக்கவும் மதிபாலா...

  இடுகையின் இறுதியில் "இது யோசனை" என்று வேற சொல்லி இருக்கேனே! அப்படியிருந்தும் எப்படி இப்படி ஒரு செய்தி வந்தது?

  அதுவும் உதயன் நாளிதழில் வரிக்கு வரி அப்படியே போட்டிருக்கிறார்கள்! OMG! ஒரு இடுகையை வைத்தா செய்தித்தாளில் செய்தி போடுவது? இது ரெம்பவே ஓவர்.....
  :(

  ReplyDelete
 29. இனிய உளவாக, "இன்னாத" கூறல்

  ReplyDelete
 30. முன்பே சொன்னது போல், இது போர்முனையில் சிக்கியுள்ள நம் ஈழத்தமிழரைக் காக்கும் பொருட்டு, கலைஞருக்கு அவர் சுயநலத்திலாச்சும், பொதுநலம் காண, ஒரு யோசனைப் பதிவு மட்டுமே!

  ஆனால் விறுவிறு என நடந்து விட்ட அரசியல் நிகழ்வுகளால், இனி இந்த யோசனைக்கு வேலையே இல்லாதபடி ஆகி விட்டது! :(((

  ReplyDelete
 31. கோவி அண்ணாவின் இடுகையில் நான் இட்ட பின்னூட்டத்தில் இருந்து...

  தமிழ் ஈழமே...
  இனி உன் விடிவுக்கு ஒருக்காலும் தமிழனை நம்பாதே!
  அவனுக்கு - தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவை உண்டு, தான் உண்டு என்பான்!

  இன விடிவு எல்லாம் வல்லரசுகள் மூலம் பேரம் பேசி சாதித்துக் கொள்!

  வல்லரசுகள் துணையின்றி மெல்லரசுகள் உருவான சரித்திரம் இந்த நூற்றாண்டில் இல்லை! இனி மேலாவது இதைப் புரிந்து கொள்!

  அண்ணாவின் நூற்றாண்டில், அவர் மொழியில் சொல்வதானால்.....
  "ஏ! தாழ்ந்த தமிழகமே! தேய்ந்த தமிழ்நாடே! தன்னை மறந்த தமிழ்நாடே! தன்மானம் அற்ற தமிழ்நாடே! கலையை உணராத தமிழ்நாடே! கலையின் இலட்சணத்தை அறியாத தமிழ்நாடே! மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ்நாடே! ஏ சோர்வுற்ற தமிழ்நாடே..."

  ReplyDelete
 32. Even if Karunanidhi withdraws his support to Congress, who cares now?
  Mulayam, Mayawati and Nitesh will rush to save the Congress. Who knows, even AIADMK's 9 MPs may immediately come to the rescue of Congress.

  Infact, Congress is now in a very better position in the past two decades.

  ReplyDelete
 33. //Aneez Jawahar said...
  Even if Karunanidhi withdraws his support to Congress, who cares now?
  Mulayam, Mayawati and Nitesh will rush to save the Congress.//

  Sorry-nga! You didnt understand the post at all!
  I clearly said Kalignar must NOT participate in the Govt. But his support is still there and so Congress will not run after Mulayam or Mayawati.

  But they will keep on insisting Kalaignar to join the Govt, just for their own safety.

  அதைச் சாக்காக வைத்து, ஈழத்துக்கு கடைசி நேர உதவி செய்திருக்கலாம் கலைஞர்!
  ஈழத்துக்காக இல்லாவிட்டாலும், தன் சுயநலத்துக்காகவும், அவர் வாரிசுகளுக்கு ஒரு தேர்தல் அலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவாச்சும்!

  ஆனால்....
  அதான் இப்போது எல்லாம் முடிந்து விட்டதே! ஒரே நாளில் விறுவிறு என பல காட்சிகள் அரங்கேறி விட்டதே! :(((

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP