Tuesday, May 26, 2009

Happy Birthday: ஜிரா வித் சில்க் ஸ்மிதா!

பிறந்த நாள் அதுவுமா என் தோழன் ஜிரா என்னும் ஜி.ராகவன், ஒரு பரங்குன்றின் மேல், பலத்த போதையில் மலையேறிக்கிட்டு இருந்தாரு! புதுச் சொக்கா, புது IPod! பிறந்தநாள் பரிசுகள் பளபளக்க, IPod-இல் ஒரு செம கிக்கான ரொமான்டிக் பாட்டு!
"நடவிஞ்ச மயூராலு ஒச்சின மோமு ஒக்கடே!
ஈசருகி பாக மொழி செப்பின மோமு ஒக்கடே!"


1975-இல், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, நம்ம சில்க் ஸ்மிதா-க்குன்னே போட்ட தெலுங்குப் பாட்டாம்! இந்தப் பாட்டெல்லாம் எம்.எஸ்.வி-க்கு கூட இப்போ கிடைக்காது! ஆனா எங்க ஜிராவுக்கு மட்டும் எப்படியோ கிடைச்சிரும்! :)

ஜிராவுக்கு அன்னிக்கின்னு பார்த்து ரொம்ப ஆழ்ந்த சிந்தனை!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்-ன்னு எகனை மொகனையாச் சொல்லுறாங்களே! அது நிஜமாலுமே உண்மையா?
* அப்படீன்னா திருப்பதி மலை மேல குமரன் தானே இருக்கணும்?
* சோளிங்கபுரம் மலை மேல குமரன் தானே இருக்கணும்?
* அட, சென்னைப் பரங்கிமலை மேல கூட குமரன் தானேப்பா இருக்கணும்?

இதை யாரு கிட்ட போயி எப்படிக் கேட்கறது-ன்னு தெரியாம தவியாத் தவிச்சிக்கிட்டு இருந்தாரு ஜிரா! அந்த நேரம் பார்த்து அங்கன வந்தாரு அவரோட உயிர்த் தோழன் சூரியச்சிவம்! :)



ஜிரா: "ஹேய், வா வா! நல்ல சமயத்தில் வந்தே! மொதல்ல இதுக்குப் பதில் சொல்லு! நீ தானே எனக்கு எப்பமே சந்தேக நிவாரணி!"

நண்பர்: "எலே ராகவா! நிவாரிணி, பவாரிணி-ன்னு எப்பமே பொண்ணுங்க பேராத் தான் பேசிக்கிட்டுத் திரிவியா? பொறந்த நாளு அதுவுமா என்ன ராசா ஒனக்குச் சந்தேகம்?"

ஜிரா: "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமா? அதை மொதல்ல சொல்லு"

நண்பர்: "இதுல என்னப்பா சந்தேகம்? அப்படித் தானே தமிழ் சினிமா முதற்கொண்டு எல்லா டயலாக்-லயும் சொல்லிட்டு வராய்ங்க! ஏதோ புதுசா கேக்குறாப்புல கேக்குற?"

ஜிரா: "அட போப்பா! உனக்குத் தெரியாது! இதுக்கும் ஏதாச்சும் சங்கத் தமிழ்ப் பாட்டை எடுத்துக் காட்டி, அவன் பதிவு போட்டாலும் போட்டுருவான்! எல்லாரும் வந்து கும்மி அடிப்பாய்ங்க! அவன் சொல்லுறதும் நம்பறாப் போலத் தான் இருக்கும்! எனக்கே என் மேல சந்தேகம் வந்துரும்! அதான் முன்னாடியே உன்னைக் கேட்டுக்கிடறேன்!"

நண்பர்: "உம்...நீ ஆன்மீகப் பதிவு எழுதறத நிப்பாட்டிட்டே! காதல் குளிர், காதல் சளி-ன்னு எழுதினா இப்படித் தான் ஆவும்! நீ ஏன் ஆன்மீகப் பதிவை நிப்பாட்டினே? அதைச் சொல்லு மொதல்ல!"

ஜிரா: "ஓய், இது என்ன புதுப்பழக்கம்? கேள்வி எல்லாம் கேக்குற? பதில் மட்டும் தான் நீ சொல்லணும்! கேள்வி எல்லாம் நான் தான் கேப்பேன்! சரியா??"

நண்பர்: "அப்படீயா நண்பா! இதோ...இந்தச் சின்ன மலையில் படியேறிப் போனா, ஒரு "குளுகுளு" குகை வரும்! அதுக்குள்ளாற போயி பாரு! குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருக்கானா?-ன்னு உன் கேள்விக்கு விடை கிடைச்சிரும்!"

ஜிரா: "சங்கரா, அது எப்படிடா இவ்வளவு கரெக்ட்டா சொல்றே? இதெல்லாம் உனக்கு மட்டும் எப்படிடா தெரியுது?"



நண்பர்: "அலோ! விஷயம் தெரியாம பேசாதே! இப்போ நீ நிக்கற இடம் என்னா-ன்னு தெரியுமா?
இந்தக் குகையில தான் அலெக்சாண்டர் நக்கீரரை அடைச்சி வச்சாரு! அப்போ நக்கீரர் பாடின மியூசிக்கல் தான் புகழ் பெற்ற "The Murugan River Troops"! (திரு-முருகு-ஆற்றுப்-படை)! சும்மா கும்முன்னு மிலிட்டிரி சாங்! அந்த Beat-ஐக் கேட்டு ஓடியாந்து தான், முருகன் நக்கீரனைக் காப்பாத்தினாரு! தெரிஞ்சிக்கோ!"

ஜிரா: "ஓ! மிலிட்டிரி பாட்டா? அதான் எனக்கு முருகனை ரொம்ப பிடிச்சிருக்கு போல! நமக்கு எப்பமே மிலிட்டிரி-ன்னா தான் பிடிக்கும்! சாப்பாட்டில் கூட!"

நண்பர்: "சரி சரி போதும்! மிலிட்டிரி ஏப்பம் எல்லாம் அப்பறம் விட்டுக்கலாம்! மொதல்ல குகைக்குள்ளாற போயி உன் கேள்விக்குப் பதில் தெரிஞ்சிக்கிட்டு வா"

ஜிரா: "நீ உள்ள வரலையா?"

நண்பர்: "நீ உள்ளாற போயிட்டா, யாரு குகைக்குக் காவல் இருக்கறதாம்? எவன்-ன்னா தெரியாம குகையை மூடிட்டா, நீ உள்ளாற மாட்டிப்பியே!"

ஜிரா: "ஹேய்....Thanksடா! இங்கு உன்னை நான் பெறவே...என்ன தவம்...செய்து விட்டேன்"

நண்பர்: "போதும் போதும்; சட்புட்டுனு பதில் தெரிஞ்சிக்கிட்டு சீக்கிரமா வந்துடுப்பா ராசா!"


ஜிரா குளுகுளு குகைக்குள் நுழைகிறார். ஓம் ஓம்-ன்னு குகை முழுக்க சவுண்டு டிஜிட்டல் டால்பியில் கேட்குது! ஜிரா பயபக்தியுடன் கன்னத்துல போட்டுக்கறாரு! குகைக்குள்ளே குளிர்! வெறும் குளிர் தான்! காதல் குளிர் இல்ல! ஜிராவுக்கு மயிர்க் கூச்செறிகிறது! மயில் கூச்செறிகிறது!

ஆகா! ஆங்கே பெரிய, கரிய, மயில் வாகனத்தில்...வாவ்...ஜிராவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை! ராஜ கம்பீர நாடாளும் நாயகன் நம்ம முருகப் பெருமானா அது?


ஜிரா: "பச்சைக் கலாப - மயில் மேல் அமர்ந்து
இச்சைக்கு இனித்திடும் இகபர வேலா!
இன் தமிழ்ச் சீலா! வள்ளியின் லீலா!
என் சிவ பாலா! மருகனே மாலா!

(மனதிற்குள்: ச்சே! இதுக்குத் தான் அவன் கூட ரொம்ப பழகக் கூடாது-ன்னு சொல்லறது! மால்...மாலா-ன்னு வந்துருது பாரு!
வேணாம்! வேற எதுனா ரைமிங்கா போடுவோம்...ஆங்... அது தான் சரி.... )
கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா"

குரல்: "வாட்?..."

ஜிரா: "அடடா! நீயா முருகா என்னைத் தேடி வந்து காட்சி கொடுப்பது?"

குரல்: "ஹேய்! நான் ஒன்னியும் தேடி வரவில்லை! நீ தான் என்னைத் தேடி குகைக்குள்ளே வந்து, கோக்கோ கோலா-ன்னு கேலி பேசிக் கொண்டிருக்கிறாய்!"

ஜிரா: "ஆகா! கோபித்துக் கொள்ளாதே சண்முகா! தமிழோடு நீ மட்டும் தான் விளையாடணுமா?

கோ-ன்னா = உலகம்!
கோ-கோ-ன்னா = உலகை ஆளும் அரசே-ன்னு அர்த்தம்!
கையில் கோல் வேற வச்சிக்கிட்டு நிக்குறியா! கையில் வேல் இருந்தா வேலா! கோல் இருந்தால் கோலா!
அதான் கோ-கோ-கோலா-ன்னு... உணர்ச்சி வசப்பட்டு செந்தமிழில் முந்துற முழங்கிவிட்டேன் முருகா! "

குரல்: "அடப்பாவி! நீ மச்சியாள் குச்சியாள்-ன்னு பேசுவே-ன்னு முன்னமே சொல்லி இருக்காய்ங்க! ஆனா முருகனுக்கே கோக்கோ கோலா கொடுத்து, கோக்கோ கோலாவுக்கு புதுப்புது அர்த்தங்கள் கொடுத்துட்டியேப்பா!"


ஜிரா: "முருகா! சற்று இரு! என் தோழனையும் உள்ளே அழைக்கிறேன்! வெளியே காட்டிக்கலீன்னாலும் அவனுக்கு உன் மேல ரொம்பவே ஆசை! இரு, அவனும் உன்னைக் கண்ணாரக் கண்டு களிக்கட்டும்!"

குரல்: "வேணாம்! வேணாம்! அவன் சொல்லித் தான்....நானே இங்கே...அவனே இங்கே...நீயே இங்கே...."

ஜிரா: "என்ன முருகா இப்படித் தடுமாறுகிறாய்? தமிழ்க் கடவுள் தடுமாறலாமா? தடம் மாறலாமா? என்ன ஆயிற்று உனக்கு?
சரீரீரீரீ...அப்பவே கேக்கணும்-ன்னு நினைச்சேன்! உன்னோட குரல் ஏன் பெண் குரல் போல இருக்கு? முருகன்-னா இவ்வளவு மென்மையா?"

குரல்: "ஹேய்! உனக்கு எதுக்கு இந்த வேண்டாத ஆராய்ச்சி எல்லாம்? கள்ளியிலும் பால் வடியும்! என்னிலும் பெண்குரல் கேட்கும்! "கள்ளி மே தூத்" படம் பார்த்ததில்லையா நீ?
சரி போகட்டும்! உனக்குப் பிறந்த நாள் பரிசு அளிக்கச் சொல்லி எனக்குக் கட்டளை! என்ன வேண்டும்? கேள் ஜிரா!"

ஜிரா: "முருகா! உன் கிட்ட சொல்றத்துக்கு என்ன? வெட்கத்தை விட்டுச் சொல்றேன்! எனக்கு சில்க் கூடப் பேசணும் பழகணும்-ன்னு ரொம்ப நாளா ஆசை! அதுவும் அவங்க சின்னப் பாப்புவா வந்து, என்னைப் பாவா, பாவா-ன்னு கூப்பிடணும்-ன்னு ரொம்ப நாள் ஆசை!"

குரல்: "என்னே உன் தமிழ்த் தாகம்!"

ஜிரா: "இந்தக் கிண்டல் தானே வேணாங்குறது!"

குரல்: "சரி, சரி! சில்க்கை உமக்குத் தந்தோம்! என்னருகில் வா!
வா...ஜிரா...வா!
வா...பாவா...வா! "

ஜிரா: "வாட்! முருகா! ஏமி செப்தாவு நூவு? ஒள்ளு பாக லேதா? என்னைப் பார்த்து ஏன் பாவா என்று அழைக்கிறாய்? சரவண பவா தானே? சரவண பாவா இல்லையே!"

குரல்: "ஜிரா! என்னை நன்றாகப் பார்! நான் அழைத்த பாவா-வில் குற்றமா?"

ஜிரா: "ஹேய்! ஹேய்...உங்க கண்ணு! அந்தக் கண்ணு!......ஹேய், நீங்க சில்க் தானே?"



குரல்: "என்ன பாவா, அதைக் கண்டு பிடிக்க உங்களுக்கு இம்புட்டு நேரம் ஆச்சா? அதான் பொண்ணு குரல்-ன்னு அப்பவே சந்தேகமாக் கேட்டீங்களே! ஹாங்....அப்பறம் என்னவாம்?"

ஜிரா: "ஆஆஆ...நீ....நீங்க எப்படி முருகனா வந்தீங்க?"

சில்க்: "ஏன்...வரக் கூடாதா? ஸ்ரீதேவி முருகனா வந்தா மட்டும் படம் பாக்குறீங்க! இந்த சில்க்கு முருகனா வேசம் கட்டக் கூடாதா? தப்பா ஜிராஆஆ?"

ஜிரா: "சேச்சே! தப்பே இல்ல! ஆக்சுலி உங்க கண்ணு போலவே தான் முருகன் கண்ணும் இருக்கும்! உங்களைப் போலவே முருகனும் ரொம்ப சாஃப்ட்!
முருகன் இடுப்பு கூட உங்களைப் போலவே வளைஞ்சி ஒடிசலாத் தான் இருக்கும்! என்ன... அவரு கையில கூர் வேல்! உங்க கண்ணுல கூர் வேல்! அவ்ளோ தான் வித்தியாசம்!"

சில்க்: (மனதிற்குள்) அடப்பாவி ஜிரா! இப்படிக் கம்பேர் பண்ணி அந்த முருகனையே கவுத்துட்டியே! இதுக்கு அந்த கேஆரெஸ் பய புள்ள எவ்ளோ தேவலாம்! :)

ஜிரா: "என்னது கேஆரெஸ்-ஸா? அவனை உங்களுக்கு முன்னமே தெரியுமா? இதுக்கெல்லாம் ஐடியா கொடுத்தது அவன் தானா? அவனை....."

சில்க்: "ச்சீச்சீ! பாவம் அவரு! அவரும் பாவா தான்! அவரை ஒன்னும் சொல்லாதீங்க!
சரி....பொறந்த நாள் அதுவுமா என்னைப் பார்க்க வந்துட்டு வெறுங்கையோட போனா எப்படி? சின்னப் பாப்பு வச்சிருக்கும் திருப்பதி உண்டிக்கு டப்பு இச்சி பாவா! ஈ திருப்பதி உண்டி-ல உங்க கையால காணிக்கை வேஸ்கோண்டி பாவா!"

ஜிரா: "ஆகா! அப்படியே செஞ்சிட்டாப் போச்சி! சின்னப் பாப்புக்கு பிடிச்ச பெருமாள் தான் எனக்கும் ரொம்ப பிடிக்கும்! You know what? I actually like PerumaaL very much! :) சின்னப் பாப்புவுக்காகவே நான் கண்ணன் பாட்டு வலைப்பூவில் இருந்திருக்கேன் தெரியுமா? இந்தாங்க ஜிராவோட திருப்பதிக் காணிக்கை, 1008 Euros!" :)

சில்க்: "வாவ்! ஜிரா! நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு....."

ஜிரா: "ஆமாங்க..." (மனசுக்குள் கறுவிக் கொண்டே...ஆனா அவனுக்கு மட்டும் நான் நல்லவன் இல்ல...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!)

சில்க்: "குகைக்குள்ள ஏதோ கேள்வி கேட்கணும்-ன்னு வந்தீங்களே ஜிரா! உங்க கேள்விக்கு பதில் தெரிஞ்சிடுச்சா? குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் தானே?"

வெளியில் இருந்து தோழன்: "சேச்சே! யாரு சொன்னா? குன்று இருக்கும் இடமெல்லாம்.....ஒங்களைப் போல....குமரி இருக்கும் இடம்!"
.......
ஓடும் சத்தம் கேட்க..... "டேய், ஓடாதே! நில்லுடா.....டேய்...." என்று ஜிரா நண்பனைத் துரத்திக் கொண்டு ஓட...

சில்க்: "ஹிஹி! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிரா!"
நாமும்: "ஹிஹி! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிரா!"
May-27-2009! Happy Birthday Ragava! கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா! :)

இன்னிக்கி நடக்கும் மொத்த பார்ட்டிக்கும் பில்லு கட்டிய சந்தோசம், புள்ள முகத்துல :))

49 comments:

  1. பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் ராகவன்.

    நல்லா இருங்க.

    என்றும் அன்புடன்,
    துளசியும் கோபாலும்.

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள வாழ்த்துக்கள் ராகவன்

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள வாழ்த்துகள்

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராகவன்.

    ReplyDelete
  5. :)

    என்னது ஜிரா ஹேர் ஸ்டைல் மாற்றி மாற்றி அசத்துறார்.

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஜிரா :))

    ReplyDelete
  7. //அவரு கையில கூர் வேல்! உங்க கண்ணுல கூர் வேல்!///

    வாவ்!

    வாவ்!

    வாவ்!


    கலக்கிப்புட்டீங்க போங்க :)))

    ReplyDelete
  8. //சரவண பவா தானே? சரவண பாவா இல்லையே!"
    //

    கலக்கிட்டீங்க !!

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீரா !!

    சில்க் ஸ்மிதாவக் கேட்டேன்னு சொல்லுங்க.. அப்படியே என் பர்த்டேக்கும் ஒரு அட்வான்ஸ் புக்கிங் !!

    அன்புடன்
    சீமாச்சு...

    ReplyDelete
  9. ஜி.ரா.வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

    பதிவு ரொம்ப பெருசா இருக்கு.. அப்பாளிக்கா வந்து படிக்கறேன் :D

    ReplyDelete
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி.ரா. :))

    பதிவு கலக்கல்! :-))))

    ReplyDelete
  11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி.ரா.

    ReplyDelete
  12. கேப்பில கே ஆர் எஸ் அங்கிள் சில்க் என்ற கெடாயை கவுத்த மாதிரி இருக்கே.. ;-)))

    ReplyDelete
  13. ராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    இலியானா பீரியட்ல வந்து சில்க்ஸ்மிதான்னு கலாய்ச்சிட்டு... போங்க ரவி அங்கிள்! உங்களுக்கே ட்ரெண்டே தெரியல :(

    ReplyDelete
  14. //சில்க்: "ச்சீச்சீ! பாவம் அவரு! அவரும் பாவா தான்! //

    இதுக்கு பேரு தான் சைக்கிள் கேப்ல ஏரோப்ளேன் ஓட்டுறதோ :P

    ReplyDelete
  15. // Sridhar Narayanan said...
    இலியானா பீரியட்ல வந்து சில்க்ஸ்மிதான்னு கலாய்ச்சிட்டு... போங்க ரவி அங்கிள்! உங்களுக்கே ட்ரெண்டே தெரியல :(//

    வாங்க பட்டர்ஃபிளை ஸ்ரீதர் அங்கிள்! உங்களுக்குத் தான் ட்ரெண்டே தெரியல! :)

    எனக்குப் பதிவு போட்டிருந்தா இலியானா, தமன்னா & பாவனா தான்!
    ப்ளாக்காயணப் பதிவு பாருங்க!

    இது ஜிரா பதிவு! அவரோட ஆல் டைம் பேஃவரிட் - ஒன் & ஒன்லி சில்க்கு! Birthday Boy என்ன கேக்குறாரோ அதை அன்னிக்கி மட்டும் கொடுத்துறணும்! ஓக்கேவா? :)

    கான சில்க்காட கண்டிருந்த இலியானா-ன்னு உங்களை அடிக்க வரப் போறாரு பாருங்க செஞ்ஜொள் ஜிரா! :)

    ReplyDelete
  16. //G3 said...
    பதிவு ரொம்ப பெருசா இருக்கு.. அப்பாளிக்கா வந்து படிக்கறேன் :D//

    ஹிஹி! சொன்ன சொல் தவறாத எங்க G3 யக்கா-வுக்கு ஒரு காபினட் மந்திரி கொடுங்கப்பு! :)
    என்ன துறை வேணும்-க்கோவ்?

    ReplyDelete
  17. //கோவி.கண்ணன் said...
    :)
    என்னது ஜிரா ஹேர் ஸ்டைல் மாற்றி மாற்றி அசத்துறார்//

    கோவி அண்ணே! நல்லாப் பாருங்க! அவரு அன்னிக்கி தலையே சீவலை! சீப்பு தொலைஞ்சி போச்சாம்! :)

    ReplyDelete
  18. //தமிழ் பிரியன் said...
    கேப்பில கே ஆர் எஸ் அங்கிள் சில்க் என்ற கெடாயை கவுத்த மாதிரி இருக்கே.. ;-)))//

    சாரி அங்கிள் நோ கமென்ட்ஸ்! :)
    ஆனா நான் ஒரு அப்பாவிச் சிறுவன்-ன்னு மட்டும் உண்மையைச் சொல்லிக்கிறேன்!

    ReplyDelete
  19. //Seemachu said...
    //சரவண பவா தானே? சரவண பாவா இல்லையே!"
    //

    கலக்கிட்டீங்க !!//

    ஹிஹி! எல்லாம் நம்ம சரவண பாவா அண்ணாச்சி சொல்லிக் குடுத்தது தான்! :)

    //சில்க் ஸ்மிதாவக் கேட்டேன்னு சொல்லுங்க.. அப்படியே என் பர்த்டேக்கும் ஒரு அட்வான்ஸ் புக்கிங் !!//

    ஆசை தோசை அப்பளம் பிட்சா! :)
    சில்க் ஒன்லி ஃபார் ஜிரா!
    உங்களுக்கு தண்டர் தைஸ் ஜெயமாலினி வேணும்னா கன்சிடர் பண்றேன் சீமாச்சு அண்ணே! :)

    ReplyDelete
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பர் ஜி.இராகவன் !

    ReplyDelete
  21. //ஜிராவுக்கு அன்னிக்கின்னு பார்த்து ரொம்ப ஆழ்ந்த சிந்தனை!
    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்-ன்னு எகனை மொகனையாச் சொல்லுறாங்களே! அது நிஜமாலுமே உண்மையா?
    * அப்படீன்னா திருப்பதி மலை மேல குமரன் தானே இருக்கணும்?
    * சோளிங்கபுரம் மலை மேல குமரன் தானே இருக்கணும்?
    * அட, சென்னைப் பரங்கிமலை மேல கூட குமரன் தானேப்பா இருக்கணும்?//

    அண்ணாமலை மேல கூட குமரன் தானே இருக்கணும்?!

    ReplyDelete
  22. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், ஜிரா.

    தமிழ்

    ReplyDelete
  23. பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ராகவன்.

    இனிமையான பல வருடங்கள் இந்த நாளைக்கும் அதுக்கு அப்புறமும் உங்கள் வாழ்வில் வருவதற்கும் வாழ்த்துகிறோம்.

    கஷ்டப்பட்டு மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் தமிழில் சொல்லி இருக்கிறேன்.

    மன மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் எப்பவும் பெருகவும் வாழ்த்துகள்.
    கூடவே இதை சுவரொட்டிய
    போக்கிரிப் பிள்ளை ரவிக்கும் நன்றிகள்.:)

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் ஜிரா

    ReplyDelete
  25. உங்களுக்கு என்னை விட ராகவன் அண்ணா மேல தான் ரொம்ப பாசம் :(
    என் பிறந்த நாள் எல்லாம் மறந்து போச்சு ஆனா ராகவன் அண்ணா பிறந்த நாளைக்கு மட்டும் சிறப்பு போஸ்டு???உன் பேச்சு கா...போ அண்ணா :((


    btw

    என் அன்பு அண்ணாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  26. I would like to tell you about free web hosting service I use now.
    Register here: http://www.000webhost.com/168023.html

    ReplyDelete
  27. //υnĸnown вlogger™ said...
    உங்களுக்கு என்னை விட ராகவன் அண்ணா மேல தான் ரொம்ப பாசம் :(//

    ஹா ஹா ஹா

    //என் பிறந்த நாள் எல்லாம் மறந்து போச்சு ஆனா ராகவன் அண்ணா பிறந்த நாளைக்கு மட்டும் சிறப்பு போஸ்டு???//

    ஹா ஹா ஹா


    //உன் பேச்சு கா...போ அண்ணா :((//

    ஹா ஹா ஹா
    ஜிஸ்டர் உனக்கு எதுக்குமா போஸ்ட்டு? நீ அதையும் தாண்டிய ஏஞ்செல் :)

    ReplyDelete
  28. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. //வல்லிசிம்ஹன் said...
    கூடவே இதை சுவரொட்டிய
    போக்கிரிப் பிள்ளை ரவிக்கும் நன்றிகள்.:)//

    என்ன கொடுமை இது வல்லீம்மா?
    நான் போக்கிரிப் பிள்ளையா?
    கேக் சாப்பிட்டதால், ராகவன் மட்டும் பேக்கரிப் பிள்ளையா? :))

    //கஷ்டப்பட்டு மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் தமிழில் சொல்லி இருக்கிறேன்//

    எதுக்கு இம்புட்டு கஷ்டப்படணும்-ங்கறேன்?
    Many Happy Returns of the Day = இந்த நாளின் நற்பயனை எல்லாம் அடைக! :)

    ReplyDelete
  30. //ஹா ஹா ஹா
    ஜிஸ்டர் உனக்கு எதுக்குமா போஸ்ட்டு? நீ அதையும் தாண்டிய ஏஞ்செல் :)//

    அப்போ ராகவன் அண்ணா devil ன்னு சொல்ல வரீங்களா????

    ReplyDelete
  31. சூப்பரு ;))

    ஜிராவும் + சில்க்கும் ;)

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிரா ;))

    ReplyDelete
  32. //υnĸnown вlogger™ said...
    //நீ அதையும் தாண்டிய ஏஞ்செல் :)//

    அப்போ ராகவன் அண்ணா devil ன்னு சொல்ல வரீங்களா????//

    இல்ல...
    அவரு அதையும் தாண்டாத ஏஞ்செல்!
    நீ அதையும் தாண்டிய ஏஞ்செல்!
    :))

    ReplyDelete
  33. என்ன இருந்தாலும் எங்க முத்துக் குமரனை இப்படி கலாய்க்கலாமா கண்ணா?? ஜி.ரா., பி.நா.வா இருக்கேன்னு மன்னிக்கிறேன்!

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஜிரா!

    ReplyDelete
  34. //என்ன இருந்தாலும் எங்க முத்துக் குமரனை இப்படி கலாய்க்கலாமா கண்ணா?? //

    என்னைத் தானே சொல்றீங்க அக்கா. இந்த இடுகையில நாலு பேரைக் குத்திக் குதறியிருக்காரு உங்க தம்பி 'கண்ணா' & 'அதையும் தாண்டிய ஏஞ்செலின் - அண்ணா'. 1. சிலுக்கு 2. பிறந்தநாள் பையன், 3. சூரியச்சிவம் (இது யாருன்னு டக்குன்னு தெரிஞ்சிருக்காது. ஆனா இது யாருன்னு நாலு வரியிலேயே சங்கரான்னு இராகவன் கூப்புட்டு காட்டிக் குடுத்துட்டாரு), 4. நான். :-)

    ReplyDelete
  35. இராகவனுக்கு அருணகிரிநாதர் பிடிக்கும்ன்னு தெரியும். ஆனா தெலுங்கு பாட்டு ஏன் பிடிக்குதுன்னு இதுவரைக்கும் புரியவே இல்லை இரவி. உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன். எதுக்கு அவரு அருணகிரிநாதர் பாட்டெல்லாம் தெலுங்குல பாடுறாரு/கேக்குறாரு? ஒளவையார் பாட்டி 'ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்று'ன்னு எம்புட்டு நல்லா பாடுவாங்க. அதை ஏன் தெலுங்குல இப்படி போட்டு கொலை பண்றாரு?

    ReplyDelete
  36. கோகோ கோலா விளக்கம் அருமை.

    ReplyDelete
  37. //கவிநயா said...
    என்ன இருந்தாலும் எங்க முத்துக் குமரனை இப்படி கலாய்க்கலாமா கண்ணா??//

    என் முத்துக் குமரனை நான் கலாய்க்காம வேற யாரு கலாய்ப்பது-க்கா? அவன் கூட விளையாடலீன்னா அவன் கோச்சிக்குவான்! ஓக்கேவா? :)

    //ஜி.ரா., பி.நா.வா இருக்கேன்னு மன்னிக்கிறேன்!//

    மன்னிப்பா?
    என்ன குற்றம் செய்தேன்?
    எலே முருகா! இந்த கவி அக்காவை என்னான்னு கேளு! :))

    ReplyDelete
  38. //தமிழ் said...
    அண்ணாமலை மேல கூட குமரன் தானே இருக்கணும்?!//

    அப்போ குஷ்பு மேல? :))

    ReplyDelete
  39. //G3 said...
    //சில்க்: "ச்சீச்சீ! பாவம் அவரு! அவரும் பாவா தான்! //

    இதுக்கு பேரு தான் சைக்கிள் கேப்ல ஏரோப்ளேன் ஓட்டுறதோ :P//

    ஹிஹி!
    G3 யக்கா கண்ணுக்கு மட்டும் எப்படித் தான் இதெல்லாம் மாட்டுதோ? அதுவும் இம்புட்டு பெரிய பதிவுல? :))

    ReplyDelete
  40. //குமரன் (Kumaran) said...
    என்னைத் தானே சொல்றீங்க அக்கா//

    ஒகோ! இவரும் கெளம்பிட்டாரா? :)

    //இந்த இடுகையில நாலு பேரைக் குத்திக் குதறியிருக்காரு உங்க தம்பி 'கண்ணா' & 'அதையும் தாண்டிய ஏஞ்செலின் - அண்ணா'//

    யம்மாடி துர்கா...குமரனைக் கவனிச்சிக்கோ! :)

    //. சூரியச்சிவம் (இது யாருன்னு டக்குன்னு தெரிஞ்சிருக்காது. ஆனா இது யாருன்னு நாலு வரியிலேயே சங்கரான்னு இராகவன் கூப்புட்டு காட்டிக் குடுத்துட்டாரு)//

    சூரிய=ரவி
    சிவம்=சங்கர்

    // 4. நான். :-)//

    ஹிஹி!
    மின்னசோட்டால குன்று இருக்கா குமரன்? என்ன பேரு? எத்தனையாவது படை வீடு? :)

    ReplyDelete
  41. //குமரன் (Kumaran) said...
    கோகோ கோலா விளக்கம் அருமை//

    முருகனருள் பதிவுல இந்த கோ-கோ-கோலா-வை வச்சி ஒரு காவடிச் சிந்து போடப் போறேன்! :)

    ReplyDelete
  42. //குமரன் (Kumaran) said...
    இராகவனுக்கு அருணகிரிநாதர் பிடிக்கும்ன்னு தெரியும். ஆனா தெலுங்கு பாட்டு ஏன் பிடிக்குதுன்னு இதுவரைக்கும் புரியவே இல்லை இரவி. உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்//

    ஹிஹி! டாப் சீக்ரெட் :)

    //எதுக்கு அவரு அருணகிரிநாதர் பாட்டெல்லாம் தெலுங்குல பாடுறாரு/கேக்குறாரு?//

    சிலப்பதிகாரத்தையே அவரு கண்ணகி அம்மவாரிக்கி சிலப்பதிகாரமுலு-ன்னு படிக்கப் போறாராம்! நீங்க வேற!

    //ஒளவையார் பாட்டி 'ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்று'ன்னு எம்புட்டு நல்லா பாடுவாங்க.//

    ஆகா..அது ஒளவை எழுதியதா அருணை எழுதியதா? அத மொதல்ல சொல்லுங்க!

    ReplyDelete
  43. //இல்ல...
    அவரு அதையும் தாண்டாத ஏஞ்செல்!
    நீ அதையும் தாண்டிய ஏஞ்செல்!
    :))//
    ??நாங்க அப்படி என்னத்தா தாண்டிட்டோம்?

    ReplyDelete
  44. இல்ல...
    அவரு அதையும் தாண்டாத ஏஞ்செல்!
    நீ அதையும் தாண்டிய ஏஞ்செல்!
    :))//

    எதை தாண்டினோம் அண்ணா??இப்படி எல்லாம் குருட்டு பதில் சொல்லி நீங்க என்னை விட ராகவன் அண்ணா மேலதான் பாசம் அதிகம்ன்னு ஒத்துக்காமா ஓடுறீங்க இல்ல :((

    ReplyDelete
  45. ////இந்த இடுகையில நாலு பேரைக் குத்திக் குதறியிருக்காரு உங்க தம்பி 'கண்ணா' & 'அதையும் தாண்டிய ஏஞ்செலின் - அண்ணா'//

    யம்மாடி துர்கா...குமரனைக் கவனிச்சிக்கோ! :)//

    குமரன் ஐயாவை நான் ஒன்னுமே பண்ணமாட்டேன்.உனக்குதான் இருக்கு ரவி அண்ணா..அவரா அதையும் தாண்டிய ஏஞ்சல்ன்னு என்னை கிண்டல் பண்ணினாரு!நீங்கதானே ஆரம்பிச்சீங்க..தனியா உங்களுக்கு பூஜை போடுறேன்.be careful

    ReplyDelete
  46. // துளசி கோபால் said...

    பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் ராகவன். //

    வாழ்த்துகளுக்கு நன்றி டீச்சர். :-)

    // கானா பிரபா said...

    இனிய பிறந்த நாள வாழ்த்துக்கள் ராகவன் //

    வாழ்த்துகளுக்கு நன்றி பிரபா :-)

    // திகழ்மிளிர் said...

    இனிய பிறந்த நாள வாழ்த்துகள் //

    மிக்க நன்றி திகழ்மிளிர் :-)

    // கோவி.கண்ணன் said...

    :)

    என்னது ஜிரா ஹேர் ஸ்டைல் மாற்றி மாற்றி அசத்துறார். //

    மாற்றி மாற்றின்னு சொல்றதென்னவோ உண்மை கோவி. ஆனா அசத்துறார்னு சொல்றது அதிகம்.

    // ஆயில்யன் said...

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஜிரா :)) //

    நன்றி நன்றி :-)

    // Seemachu said..
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீரா !! //

    நன்றி சீமாச்சு :-)

    ReplyDelete
  47. // G3 said...

    ஜி.ரா.வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-) //

    நன்றி ஜி3. எப்படியிருக்கீங்க?

    // Blogger சென்ஷி said...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி.ரா. :)) //

    மிக்க நன்றி சென்ஷி

    // Blogger தமிழ் பிரியன் said...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி.ரா. //

    நன்றி தமிழ்ப்பிரியன்

    // Sridhar Narayanan said...

    ராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். //

    நன்றி ஸ்ரீதர்.

    // எம்.ரிஷான் ஷெரீப் said...

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பர் ஜி.இராகவன் ! //

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரிஷான்

    // தமிழ் said...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், ஜிரா. //

    மிக்க நன்றி தமிழ்.

    // Blogger வல்லிசிம்ஹன் said...

    பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ராகவன்.

    இனிமையான பல வருடங்கள் இந்த நாளைக்கும் அதுக்கு அப்புறமும் உங்கள் வாழ்வில் வருவதற்கும் வாழ்த்துகிறோம். //

    நன்றி வல்லிம்மா. :-)

    // கஷ்டப்பட்டு மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் தமிழில் சொல்லி இருக்கிறேன். //

    கஷ்டப்பட்டாச்சும் தமிழ்ல வாழ்த்துச் சொல்லனும்னு நெனைச்சீங்களே.... அதுக்கு இன்னொரு நன்றி :-)

    ReplyDelete
  48. // முரளிகண்ணன் said...

    வாழ்த்துக்கள் ஜிரா //

    நன்றி முரளிகண்ணன் :-)

    //Blogger υnĸnown вlogger™ said...

    என் அன்பு அண்ணாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) //

    நன்றி சகோதரி

    // ILA said...

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் //

    நன்றி இளா :-)

    // கோபிநாத் said...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிரா ;)) //

    வாழ்த்துகளுக்கு நன்றி கோபிநாத்

    // கவிநயா said...
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஜிரா! //

    மிக்க நன்றி கவிநயா :-)

    ReplyDelete
  49. ...அலெக்சாண்டர் நக்கீரரை அடைச்சி வச்சாரு! அப்போ நக்கீரர் பாடின மியூசிக்கல் தான் புகழ் பெற்ற "The Murugan River Troops"! (திரு-முருகு-ஆற்றுப்-படை)! சும்மா கும்முன்னு மிலிட்டிரி சாங்! அந்த Beat-ஐக் கேட்டு ஓடியாந்து தான், முருகன் நக்கீரனைக் காப்பாத்தினாரு! தெரிஞ்சிக்கோ!" ...........
    அருமை!!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP