Sunday, June 07, 2009

ஓம் என்றால் என்ன? - Part 2!

வாங்க மக்களே! "ஓம்" இந்து மதத்துக்கு மட்டுமே உரியதா? ஓம்-ன்னா, அ-உ-ம் = இறைவன்-உறவு-உயிர்கள்-ன்னு சென்ற பதிவில் பார்த்தோம்! முந்தைய பதிவு இங்கே!

ஓம்-ஓங்காரம்-பிரணவம், ஏதோ இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தம்-ன்னு யாரும் நினைச்சிறக் கூடாது! சென்ற பதிவில் சொன்னது போல், ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்!
சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள், அட...சைனாவில் கூட "ஓம்" இருக்குதுங்க! கேள்விப்பட்டு இருக்கீங்களா? அட, நெசம் தானுங்க! :)


சமணத்தில் "ஓம்":
"ஓம் நமஹ"-ன்னு சமணர்கள் நவ்கார் மந்திரத்தை இன்னிக்கும் சொல்றாங்க! "ஓம் ஏகாட்சர-பஞ்ச பரமேஷ்டி-நாம தீபம்" என்பது சமண மந்திரம்!

ஓம் = அ-அ-அ-உ-ம்
என்று பிரித்துப் பொருள் சொல்லுவாய்ங்க சமணர்கள்! பஞ்ச பரமேஷ்டித் தத்துவம்-ன்னு இதுக்குப் பேரு!
அதாச்சும்...
அ = அரிஹந்த (மகாவீரர் ஈறான 24 தீர்த்தங்கரர்கள்)
அ = அசீரி (சித்தர்கள்)
அ = ஆச்சார்யர்
உ = உபாத்தியாயர்
ம் = முனி
என்று "குரு வணக்கமாக மட்டும்" சமணர்கள் ஓங்காரத்தைக் கருதுவார்கள்!


பெளத்தத்தில் "ஓம்":
வித்யா சடாக்ஷரி என்னும் முக்கியமான பெளத்த மந்திரம்! அதோடு, ஓம்-ஐ உடன் சேர்ப்பார்கள் பெளத்தர்கள்! கிட்டத்தட்ட நம்ம சைவத்தின் பஞ்சாட்சரம் போலத் தான் இதுவும்!

* நம சிவாய என்னும் திரு-ஐந்து-எழுத்தோடு, தனியாக "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்ப்பதைப் போலே...
* மணி பத்மேஹூம் = ம + ணி + பத் + மே + ஹூம் என்னும் ஐந்து எழுத்தோடு, "ஓம்" என்பதைச் சேர்ப்பது பெளத்த வழக்கம்!

போதிசத்வரை குறிப்பது தான் இந்த மணிபத்மேஹூம் = தாமரைத் திரு!
இவரைச் சிந்திக்க "ஓம் மணிபத்மேஹூம்" என்னும் மந்திரம் உதவுகிறது! இப்படி "ஞான சொரூபமாக" தியானித்தால், களங்க உரு/மனம் நீங்கி, பரிசுத்தமான புத்த உரு/மனம் கிடைக்கும்! அதுக்குத் தான் இந்த "ஓம்"!

* இப்படி ஓங்காரத்தை "ஞான சொரூபமாக மட்டும்" காண்கிறார்கள் பெளத்தர்கள்!
* சீனாவில் இந்தப் பெளத்த பிரணவ-த்தை "பிண்யின்" என்கிறார்கள்! அதன் எழுத்துரு "唵"!


சீக்கியத்தில் "ஓம்":

இது, இந்து தர்ம அடிப்படையான உபநிடதங்களில் இருந்து வந்தது தான்! ஆனால் சமுதாயத்துக்காக அதைக் கொஞ்சம் மேம்படுத்தித் தருகிறது சீக்கியம்!
"ஏக் ஓம்கார்" = "ஓம் என்பது ஒன்றே பொருள்!" - இது குரு நானக் அவர்களின் வாக்கு! இங்கு "ஏக்(ஒன்றே)" என்பது முக்கியமான சொல்!

"ஒன்றேயான ஓம்-இல் இருந்து தான் பிரம்மா தோன்றினார்! ஓம்-ஐ தன் ஞானத்தில் நிறுத்தினார்! பின்பு அந்த ஓம்-ஐக் கொண்டே, உலகம்/உயிர்கள் எல்லாம் படைத்தார்! அதனால் எல்லாப் படைப்புக்கு மூலம் ஓம்!" - இவ்வாறு சீக்கிய நூல்கள் சொல்லும்!

ஆனால் அதோடு நின்று விடாமல், எல்லா உயிர்களும் "ஒரே" மூலமான ஓம்-இல் தோன்றியதால், வேற்றுமை பாராட்டக் கூடாது! "ஒன்றே"-ன்னு இதைச் சீக்கியம் குறிக்கும்!

வேற்றுமை பாராட்டக் கூடாது-ங்கிற பகுதியை மட்டும் நீக்கி விட்டுப் பார்த்தால், கிட்டத்தட்ட மாண்டூக்ய உபநிடதம், கடோபநிடதம் சொல்வது போலவே தான் இதுவும் இருக்கும்!
இன்னிக்கும் குருத்வாராக்கள் முகப்பில், சீக்கிய "ஓம்" எழுத்துருவை ("") காணலாம்!


கிறித்துவத்தில் "ஓம்"???:
ஆதியிலே தேவன் வார்த்தையாய் இருந்தார்! = இது வேதாகமத்தின் (பைபிள்) வரிகள்!
"ஓம்" என்ற வார்த்தையாய் இருந்தார் என்று பைபிள் குறிப்பிடவில்லை! ஆனால் "வார்த்தையாய் இருத்தல்" என்பது கிட்டத்தட்ட ஓங்காரத் தத்துவம் தான்!

ஆதியிலே வார்த்தையாய் இருத்தல் = ஆதியிலே ஒலியாய் இருத்தல் = ஆதியிலே நாதமாய் இருத்தல் = நாத விந்து கலாதீ நமோ நம - என்று அருணகிரியார் பாடும் அதே பிரணவப் பொருளே!


இந்து மதத்தில் "ஓம்":

ஓம் என்பதே வேதம் தான்! ஓம் = வேதத்தின் ஆணி வேர்!

ஓம் என்பது ஆதி சப்தம்! அனைத்து வேதங்களையும் சுருக்கினால், மிஞ்சுவது "ஓம்" மட்டுமே!

* படைப்புக்கு முன் இருப்பதும் = ஓம்!
* பிரளயத்துக்குப் பின் எஞ்சி ஒடுங்குவதும் = ஓம்!
அதனால் தான் இன்னிக்கும் வேதம் ஓதும் போது, ஓம்-இல் தொடங்கி, ஓம்-இலேயே முடிப்பது வழக்கம்!

அடிப்படை அ+உ+ம என்று இருந்தாலும், விளக்கம் மட்டும் பல! :)
அ = உருவம், உ = அருவம், ம் = அருவுருவம்
அ = ஆக்கம், உ = காத்தல், ம் = அழிப்பு
அ = பிரம்மா, உ = விஷ்ணு, ம் = சிவன் (புராணம்)
என்றெல்லாம் பல மேல் விளக்கங்கள் மாண்டூக்ய, கடோ உபநிடதங்களில் உண்டு! ஆனால் அடிப்படை ஒன்று தான்! ஓம் = ஆதி மூலம்! Very Beginning!

எழுத்துக்களில் அ-கரமாய் இருக்கிறேன்! சேனாதிபதிகளில் முருகனாய் இருக்கிறேன்!
மாதங்களில் மார்கழியாய் இருக்கிறேன்! வேதங்களில் சாமமாய் இருக்கிறேன்!
என்றெல்லாம் கீதையில் சொல்லிக் கொண்டே வருபவன்...
அனைத்திலும் "ஓம்" என்னும் ஜீவப் பொருளாய் இருக்கிறேன் என்று உரைக்கின்றான்!

சிலர் "ஓம்" என்ற சொல்லைக் கூட வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்களாம்! அது மந்திர ரகசியமாம்! அதனால் அதன் வேறு பெயர்களான பிரணவம், தாரக மந்திரம், உத்கீதா என்று தான் அதைக் குறிப்பார்கள்!
ஆனால் கீதையிலும், கீதைக்குப் பிந்தைய காலத்திலும் இதெல்லாம் சற்று தளர்ந்து போயின! இஸ்லாமியரான கபீர் முதற்கொண்டு பலரும் "ஓம்" பற்றி அழகான விளக்கங்கள் எழுதி உள்ளனர்!


சரி, மற்ற இடங்களில் எல்லாம் "ஓம்"-ன்னா என்னா-ன்னு பாத்துட்டோம்! வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலைவாங்களா? இல்லை...கையில் பெப்சியை வச்சிக்கிட்டு யாராச்சும் ஏப்பத்துக்கு அலைவாங்களா? :))
வாங்க, நம்ம திருமந்திரத்தில், தமிழில், திருமூலர் என்ன சொல்றாரு-ன்னும் ஒருகா பாத்துருவோம்!

சைவ சித்தாந்தத்தில் ஓங்காரம்:
ஓம் = அ + உ + ம + நாதம் + விந்து

விந்து-ன்ன உடனே, கன்னா பின்னா-ன்னு எல்லாம் அர்த்தம் எடுத்துக்கக் கூடாது! பொறுமை! பொறுமை! :)
அது என்னமோ பாவம், விரிசடைக் கடவுளான நம்ம சிவபெருமான் ராசி போலும்! லிங்கம், நாத விந்து-ன்னு பெயர்கள் எல்லாம் இந்தக் காலத்துக்கு விவகாரமாவே அமையுது! :)

* = சிவம்! சலனமற்று இருப்பது! சிவனே-ன்னு கிடக்கிறேன்-ன்னு சொல்றோம்-ல?
* = சக்தி! சக்தியின் உந்துதலால் சலனம் பெறுவது!
* = மாயை! அதாச்சும் சலனமற்று இருந்த பொருள் இப்போ சலனம் பெறுவது!
* நாதம் = இந்தச் சலனத்தால் ஒலி உண்டாக,
* விந்து = அதனால் தோற்றம் ஆரம்பிக்கிறது!

இதுவே நாத-விந்து-கலாதீ! ஆதியிலே தேவன் "ஓம்" எனும் நாதமாய் நின்று உலகைத் துவக்கினான்!

ஓம் எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம் எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம் எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே - (திருமந்திரம் 9ஆம் தந்திரம்)


ஓம் என்னும் ஓங்காரம் ஒரே மொழி தான்! (ஒப்பு நோக்குக: வடமொழி ஏகாட்சரம், சீக்கிய ஏக்-ஓம்கார்)!
ஓம் என்பதற்குள் உருவமும் இருக்கு! அருவமும் இருக்கு!
ஓம் என்பதற்குள் பல பேதம் இருப்பது போலத் தெரியலாம்!
ஆனால் அது ஒன்றாகும் போது முக்தி சித்திக்கும்!

ஹிஹி! என்ன? ஏதாச்சும் புரிஞ்சுதா? ஒரே "ஞான பரமா"-ல்ல இருக்கு? இதை இன்னும் கொஞ்சம் எளிமையாச் சொல்ல முடியாதா? சரி, திருமூலர் சொல்வதை மேலும் கேளுங்கள்!

ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!


சீவனுக்கும் "ஓம்" தான் ரூபம்! சிவனுக்கும் "ஓம்" தான் ரூபம்! இதை மட்டும் உணர்ந்தால் சீவன் = சிவன் ஆகி விடும்!


ஐயோ! என்னைய அடிக்க வராதீங்க! எதுனா புரியலைன்னா பேசித் தீர்த்துக்கலாம்! அடி தடி எல்லாம் வேணாம்! :)
என்ன மக்கா, சீவன்-சிவன், ஏதாச்சும் புரிஞ்சுதா? எல்லாத்தையுமே எளிமையாச் சொல்லீற முடியுமா என்ன? நாமளும் மெனக் கெட்டால் தானே புரியும்-ன்னு சிலர் சொல்லலாம்!

ஆனால்.....
நான் அப்படிச் சொல்ல மாட்டேன் --- இறை விஷயத்தில் மட்டும்!
ஏன்னா இறைவன் எளிமையானவன்! ரொம்பவே எளிமையானவன்!

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்-ன்னு சொல்றாரு மாணிக்க வாசகப் பெருமான்!
"போதம்"(ஞானம்) கொடுப்பவன்-ன்னு சொல்லி இருக்கலாம்! "போகம்"(இன்பம்) கொடுப்பவன்-ன்னு ஏன் சொல்றாரு?

ஏன்னா எல்லா உயிர்களுக்கும், போகம்(இன்பம்)-ன்னா என்ன?-ன்னு "தானாவே" புரியும்!
* மாம்பழம் சாப்பிட்டா தித்திப்பா இருக்கும்!
* காதலியின் இதழ்களில் தேன் ஊறும்-ன்னு யாருமே சொல்லிக் கொடுக்க வேணாம்! பெருசா "ஞான பரமா" எல்லாம் இதுக்குச் சிந்திக்கத் தேவையில்லை! "போகமாம்" பூங்கழல்கள்! = அந்த இன்பம் "தானே" புரியும்! :))

அப்புறம் எதுக்கு இத்தனை நூல்கள்?-ன்னு கேட்கறீங்களா? = இன்பத்தைப் பற்றிப் பேசுவதும் இன்பம் தானே! அதான்! :)

இன்பத்தைப் பற்றிச் சிந்திப்பது, வந்திப்பது, பேசுவது, ஏசுவது, இன்பத்தைப் பற்றி நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, இன்பத்தைப் பற்றிக் காதலன்-காதலியிடம் வழிவது எல்லாமே இன்பம் தானே! :) அதான் இத்தனை பேச்சு! இத்தனை நூல்கள்! :))

திருமந்திரம் = சைவ சித்தாந்தப் பெருநூல்!
நம் தமிழ் மொழியில், தியான/ யோக/ தந்திர வகையில் அற்புதமான ஒரு நூல்! பல சிக்கலான சமயக் கருத்துக்களை விரிவாக விளக்கும் நூல்!

ஆனால் என்னமோ தெரியவில்லை, ஓங்காரம் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறார் திருமூலர்! உடனே பஞ்சாட்சரத்துக்குத் தாவி விடுகிறார்!
அதை விரிவாகப் விரித்துப் பேசுகிறார்! ஆர்வமுள்ளோர் ஒன்பதாம் தந்திரத்தைப் படித்துப் பார்க்கவும்!


இப்படிப் பல சமயங்களும் "குரு வணக்கம்", "ஞான சொரூபம்"-ன்னே ஓங்காரத்தைப் பற்றிப் பேசுகின்றன!
பலவற்றிலும் "ஞான பரம்" தான் அதிகமா இருக்கே தவிர...கொஞ்சம் எளிமையா "எல்லா மக்களுக்கும் ஓங்காரத்தால் என்ன பயன்?" என்பதை அவ்வளவு வெளிப்படையாகப் பேசவில்லை!

* ஓங்காரம் - அது ரகசியப் பொருள் - யாருக்கும் சொல்லீறக் கூடாது என்பார்கள் சிலர்!
* ஓங்காரம் - அது மந்திரம் - கிழக்கு பார்த்து உட்கார்ந்து, ஆச்சாரமா, நியமமா ஜபம் பண்ணனும் என்பார்கள் சிலர்!
* ஓங்காரம் - அது மந்திரப் பொருளாய் இருப்பதால் - அதை முறையாக ஆசிரியரிடம் வாங்கி, முழுக் கவனமாக (Total Concentration) சொல்ல வேண்டும் என்பார்கள் சிலர்!

இது முற்றிலும் உண்மை தான்! முழுக் கவனம் தேவை தான்! - ஆனால் அது யோகப் பயிற்சியில் மட்டுமே! மந்திரமாகச் சொல்லும் போது மட்டுமே!
மற்ற நேரங்களில் மந்திரமாக இல்லாமல், பொதுவான பொருளாகச் சொல்லலாமே! தவறில்லையே!

அசரீரி: "அடேய் கேஆரெஸ்! ஓங்காரத்தின் பொருள் உலகில் "வேறு யாருக்குமே" தெரியாது! அதாண்டா யாரும் அதைப் பத்தி ரொம்ப பேசறதில்லை!"

கேஆரெஸ்: "வாட்? என்னடா சொல்லுற நீயி? யாருக்குமே தெரியாதா?"

அசரீரி: "அந்தப் பிரம்மனுக்கும் தெரியாமல் தானே இருந்தது? அதானே முருகப் பெருமான், பிரம்மாவின் தலையில் குட்டினான்?
சிவ பெருமானுக்குத் தெரியும்! ஆனால் அவர் அதை மறந்திருந்தார்! தந்தைக்கு உபதேசம் செய்து, அதை மீள் ஞாபகப் படுத்தினான் முருகன்!"

கேஆரெஸ்: "அது வரைக்கும் சரி தான்-பா! இல்லை-ன்னு சொல்லலை! ஆனா யாருக்குமே தெரியாது-ன்னு சொன்னா எப்படி? அப்ப யாருக்குத் தான் தெரியும்?"

"ஓங்காரத்தின் பொருள் "வேறு யாருக்குமே" தெரியாது! முருகன், சிவன், உமையன்னை - இந்த மூவருக்கு மட்டும் தான் ஓங்காரப் பொருள் தெரியும் என்பார்கள் சில "தீவிர" சைவப் பெருமக்கள்! (என் அன்பு நண்பர்கள் உட்பட :)))

* உமா = உ + ம + அ!
அது தான் ரிவர்ஸில் அ,உ,ம என்று ஆகி, அப்புறம் "ஓம்" ஆனது என்றெல்லாம் வார்த்தை விளையாட்டு காட்டுவார்கள்! :)
* உமா = உ,ம,ஆ என்று "ஆ" தானே இருக்கு? "அ" இல்லையே-ன்னு கேள்வி கேட்டாக் கோவம் வந்துரும்! :)

உமையன்னைக்கு மட்டும் தானா? பிரணவ சொரூபமாகத் திகழ்கிறானே என் முருகப் பெருமான்! அவன் பெயரில் மட்டும் அ,உ,ம இல்லையா?-ன்னு கேட்டா, அதுக்கும் பதில் வராது! :)
ஹிஹி...எல்லாருக்கும் பொதுவான ஒரு தத்துவத்தை...இப்படிக் கதையெல்லாம் சொல்லி, "எங்களுக்கு மட்டும்"-ன்னு தனிப்பட்டு ஆக்கி வைத்தால்...வரும் பிரச்சனை இது தான்!
இந்த டகால்ட்டி எல்லாம் ஈசனோ, அன்னையோ, முருகனோ செய்வதில்லை! அத்தனையும் மனுசன் தான் செய்யறான்! :(



* மூவர் மட்டுமே அறிந்து, மற்றவர் அறிய முடியாது-ன்னா, இது என்ன குலக் கல்வியா? "எங்களுக்கு மட்டுமே தெரியும்"-ன்னு சொல்வதிலா ஈசனுக்கும் அன்னைக்கும் பெருமை?

* பிரம்மனுக்குத் தெரியவில்லை என்று முருகன் தண்டித்த வரை சரியே! ஆனால் அவரை வெளியே விடும் போது, அவருக்குச் சொல்லிக் கொடுத்தல்லவா அனுப்ப வேண்டும்? அப்போது தானே அடுத்த முறை படைக்கும் போது, பிரம்மா பிரணவம் அறிந்து படைப்பார்?

* மூவர் மட்டுமே அறிந்தது என்றால், ஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த்தி நாயனார், மணிவாசகப் பெருந்தகை, திருமூலர் - இவர்கள் எல்லாம் பிரணவப் பொருள்-ன்னா என்னன்னே தெரியாமல் ஓங்காரம் பற்றி எழுதினார்களா?

எளிமையா, எல்லாருக்கும் பயன்படுறா மாதிரி, ஓங்காரத்தின் பொருள் தான் என்ன? என்ன? என்ன?
முருகன் பிரம்மனுக்கு அதைச் சொல்லிக் கொடுத்து அனுப்பினானா இல்லையா?
ஓங்காரத்தின் பொருள் உண்மையிலேயே "வேறு யாருக்குமே" தெரியாதா? (.....தொடரும்)


உசாத்துணை (References):
1. Jaina Sutras - http://www.sacred-texts.com/jai/sbe22/index.htm
2. Avalokiteswara Mantra - http://www.visiblemantra.org/avalokitesvara.html
3. Moola Mantra - http://www.sikhismguide.org/
4. பத்தாம் திருமுறை - திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம் - பிரணவ சமாதி - http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10903&padhi=+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95
5. விளக்கப் புத்தகங்கள் தந்து உதவிய ஜைன நண்பர் Pratik Bapna, மற்றும் சீக்கிய நண்பர் Siddhu-வுக்கும் நன்றி.

36 comments:

  1. //வித்யா சடாக்ஷரி என்னும் முக்கியமான பெளத்த மந்திரத்தை, ஓம்-உடன் சேர்ப்பார்கள் பெளத்தர்கள்! கிட்டத்தட்ட நம்ம சைவத்தின் பஞ்சாட்சரம் போலத் தான் இதுவும்!//

    இப்பவே கண்ண கட்டுதே ..எப்படி இப்படி :-)

    //கையில் பெப்சியை வச்சிக்கிட்டு யாராச்சும் ஏப்பத்துக்கு அலைவாங்களா? :))//

    எனக்கு பெப்சி பிடிக்காது ;-)

    //அது என்னமோ பாவம், விரிசடைக் கடவுளான நம்ம சிவபெருமான் ராசி போலும்! லிங்கம், நாத விந்து-ன்னு பெயர்கள் எல்லாம் இந்தக் காலத்துக்கு விவகாரமாவே அமையுது! :(//

    நமக்கு (எனக்கு) தான் நல்ல விஷயம் கண்ணுலேயே தெரிய மாட்டேங்குது

    //ஹிஹி! என்ன? ஏதாச்சும் புரிஞ்சுதா? //

    ஒரே குஷ்டமப்பா

    //ஐயோ! என்னைய அடிக்க வராதீங்க! எதுனா புரியலைன்னா பேசித் தீர்த்துக்கலாம்! அடி தடி எல்லாம் வேணாம்! :)//

    டேய்! யாரு அங்கே! எடுடா ஆட்டோ வ.. அமெரிக்காவிற்கு!

    ReplyDelete
  2. விரிவாக ஆழமாக எழுதியுள்ளீர்கள்.
    மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்.

    தேவ்

    ReplyDelete
  3. Katha Upanishath என்பதைப் படித்துவிட்டு ‘கத உபநிஷத்’
    என்றே பலரும் எழுதுகிறார்கள்;
    ‘கட உபநிஷத்’ என்பது சரியான வடிவம்.

    தேவ்

    ReplyDelete
  4. //R.DEVARAJAN said...
    Katha Upanishath என்பதைப் படித்துவிட்டு ‘கத உபநிஷத்’
    என்றே பலரும் எழுதுகிறார்கள்;
    ‘கட உபநிஷத்’ என்பது சரியான வடிவம்//

    வாங்க தேவ் சார்!
    அடியேனை மன்னிக்கவும்! ஒலிப்புப் பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! பதிவில் திருத்தி விட்டேன்!

    ReplyDelete
  5. // R.DEVARAJAN said...
    விரிவாக ஆழமாக எழுதியுள்ளீர்கள்.
    மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்//

    நன்றி தேவ் சார்!
    விரிவு தான்! ஆனால் ரொம்ப ஆழம் செல்லவில்லை! அனைவருக்கும் எளிதில் புரியணுமே-ன்னு சாரம் மட்டுமே எடுத்து முன் வைத்தேன்! ஆழம் அதிகம்! :)

    ReplyDelete
  6. @கிரி
    //டேய்! யாரு அங்கே! எடுடா ஆட்டோ வ.. அமெரிக்காவிற்கு!//

    அடப்பாவி! கிரி! நீயா ஆட்டோ தளபதி? முருகா, என்னைய மட்டும் காப்பாத்துப்பா! :))

    கிரி, ஜிரா சிங்கை வந்திருந்தாரே! பார்த்தீங்களா பதிவர் சந்திப்பில்?

    ReplyDelete
  7. அருமை.. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...

    ReplyDelete
  8. ”ஓம்” என்பது தத்துவ குறியீடு என்று பலரும் அறிந்த விளக்கம் தான். ஆனால் அது இந்து மத தத்துவங்களில் இருந்து பிறந்தது என்பதை இவ்வளவு கஷ்டப்பட்டு மறைக்க வேண்டியதில்லை. சரி, இந்து தத்துவம் வேண்டாம், உங்கள் செக்யூலரிச பாஷையில் சொல்வதானால்,”இந்திய தத்துவம்” என்றும் சொல்லி கொள்ளாலாம். ஆட்சேபணையில்லை. இந்திய நிலப்பரப்பில் தோன்றிய கலாச்சாரங்களுக்கே உரிய நெகிழ்வுதன்மையுடன் அது பல்வேறு கலாச்சாரங்களில் உள்வாங்கபட்டிருக்கிரது. அதை பலரும்(மற்ற மதத்தவரும்) இன்று உபயோகப்படுத்துவதில் எந்த தவறுமில்லை. ஆனால், அது இந்து மதத்தை சேர்ந்தது அல்ல என்று நிரூபிக்க ஏன் இவ்வளவு பிரயத்தனம்?

    அடுத்த பதிவில் “இஸ்லாத்தில் ஓம்” என்று ஒரு ஜல்லி வராது என்று எதிர்பார்க்கிறேன். தயவுசெய்து எழுதிவிடாதீர்கள். முல்லாக்கள் நியூயார்க்கிலும் அதிகம் உண்டு.

    மற்றபடி, கிறித்துவத்தில் ஓம், இஸ்லாத்தில் ஓம், மாயன் கலாச்சாரத்தில் ஓம் போன்ற ஜல்லிகளை நிறுத்துவது நல்லது. பந்தலில் அதிக பொத்தல் விழுவது யாருக்கும் நல்லதல்ல

    ReplyDelete
  9. //Hari said...
    ”ஓம்” என்பது தத்துவ குறியீடு என்று பலரும் அறிந்த விளக்கம் தான். ஆனால் அது இந்து மத தத்துவங்களில் இருந்து பிறந்தது என்பதை இவ்வளவு கஷ்டப்பட்டு மறைக்க வேண்டியதில்லை.//

    திருவாளர் ஹரி
    நான் இவ்வளவு கஷ்டப்பட்டு மறைக்கிறேன் என்பதை நீங்க அவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கத் தேவையில்லை!

    இந்தப் பதிவை வாசிப்பவர்களிடத்தில் கேட்டாலே தெரிந்து விடும், "ஓம் இந்துத் தன்மை கொண்டது அல்ல" என்று இப்பதிவில் எங்கும் சொல்லப்படவில்லை!

    வேதம் மற்றும் திருமந்திரம் ஆகிய இத்தனை விளக்கங்களுக்கும் இடையில் - உங்கள் அரண்டவன் கண்ணுக்குப் பட்டதெல்லாம் - பிற சமயங்களின் பெயர்கள் மட்டுமே!

    //ஆனால், அது இந்து மதத்தை சேர்ந்தது அல்ல என்று நிரூபிக்க ஏன் இவ்வளவு பிரயத்தனம்?//

    1. பிரயத்தனம் எனது! உங்களுக்கு என்ன வந்தது இதிலே?
    2. இந்து மதத்தைச் சேர்ந்தது "அல்ல"-ன்னு சொல்லி விட்டேன் என்பதை எப்படி இம்புட்டு அறிவாளித்தனமாக் கண்டு பிடித்தீர்?

    //தயவுசெய்து எழுதிவிடாதீர்கள். முல்லாக்கள் நியூயார்க்கிலும் அதிகம் உண்டு//

    இந்த மிரட்டல் வேலையெல்லாம் என்னிடம் நடக்காது!

    //கிறித்துவத்தில் ஓம், இஸ்லாத்தில் ஓம், மாயன் கலாச்சாரத்தில் ஓம் போன்ற ஜல்லிகளை நிறுத்துவது நல்லது//

    எது ஜல்லி, யார் அடிப்பது ஜல்லி என்பதெல்லாம் உங்களை வாசிப்பவருக்கே தெரிந்து விடும்!

    //பந்தலில் அதிக பொத்தல் விழுவது யாருக்கும் நல்லதல்ல//

    உங்களுக்கு தேவையில்லாத அக்கறை! பந்தலை எனக்குப் பார்த்துக் கொள்ளத் தெரியும்!

    ReplyDelete
  10. " இது இந்து தர்ம அடிப்படையான உபநிடதங்களில் இருந்து வந்தது தான்! ” என்று KRS அவர்கள் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
    ஐயப்பாடு இருப்பின் தெளிவு பெறலாமே ! நாம் ஒரே ஆன்மிகப் பந்தலின் கீழ் உரையாடுபவர்கள்.
    காழ்ப்புணர்ச்சி எதற்கு ?

    அதன் பரிமாணமும், பன்முகத்தன்மையும் கண்டு மகிழ்ச்சியே ஏற்படுகிறது.

    தேவ்

    ReplyDelete
  11. சூப்பர் பிரேக் போட்டியிருக்கிங்க தல ;))

    அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ;)

    ReplyDelete
  12. மிகவும் உழைத்து எழுதி இருக்கீங்க..நானும் கொஞ்சம் ஆழ்ந்து படிச்சி மூளைல ஏத்திட்டு வந்து பின்னூட்டமிடறேன், வெயிட்டீஸ்!

    ReplyDelete
  13. //R.DEVARAJAN said...
    "இது இந்து தர்ம அடிப்படையான உபநிடதங்களில் இருந்து வந்தது தான்!” என்று KRS அவர்கள் தெளிவாகச் சொல்லியுள்ளார்//

    :)
    பார்வை அங்கு பட்டால் தானே? பதிவைப் பதிவில் இருந்து படிக்காமல், மனத்தில் இருந்து படிப்பதால் வரும் விளைவுகள் இவை! :))

    //ஐயப்பாடு இருப்பின் தெளிவு பெறலாமே ! நாம் ஒரே ஆன்மிகப் பந்தலின் கீழ் உரையாடுபவர்கள்.
    காழ்ப்புணர்ச்சி எதற்கு ?//

    தேவ் சார்
    இவர்களைப் போன்ற சிலர் கருத்துரையாட வருவதில்லை! கருத்துத் திணிப்பு செய்யவே வருகிறார்கள்! :(

    எப்பேர்ப்பட்ட மாற்றுக் கருத்துக்கும், நாத்திகக் கருத்துக்கும் பந்தலில் இடம் உண்டு என்பதை இரு சாராரும் நன்கு அறிவர்! அப்படி இருக்க வினா எழுப்பி விடை பெறலாம்! அதை விடுத்து, தனிப்பட்ட முத்திரை குத்துவது சிலருக்கு வாடிக்கை! இதெல்லாம் அவ்வப்போது பந்தலில் நடப்பது தான்! பழைய பதிவுகளைப் பாருங்கள்! தெரியும்! :)))

    சில பின்னூட்டங்களை அழித்து விடலாம் தான்! ஆனால் ஆன்மீகப் போர்வை போர்த்தி வருவதால், சிலவற்றை அனுமதிக்க வேண்டியுள்ளது! பதிவுலக ஜனநாயகத்தில் இதுவும் ஒரு அங்கம்!

    என்ன, முன்பெல்லாம் அடியேன், அடியேன்-ன்னு சொல்லி, இவர்களுக்கும் சாத்வீகமாக விளக்க முற்படுவேன்! ஆனால் அது செல்லுபடி ஆகவில்லை!

    யாரிடம் அடியேன்-ன்னு சொல்லணும், யாரிடம் வேறு மாதிரி பேசணும்-ன்னு முறைமை இருக்கு இல்லையா? அதான் இப்போது சற்றே மாறி விட்டேன்!

    தங்களைப் போல பெரியவர்கள் இருக்கும் பந்தலில், சில சமயம் அடியேன் கொஞ்சம் கரடு முரடாக நடந்து கொள்ள நேரிடுகிறது! அடியேனை மன்னிக்கவும்!
    கோயிலில் அராஜகம் செய்வோரை கைங்கர்யபாராள் நெட்டித் தள்ளுவதில்லையா? அது போல இவர்களை அடியேன் பார்த்துக் கொள்கிறேன்!

    தாங்கள் இதைப் பற்றிக் கவலைப்படாது, எம்பெருமான் குணானுபவத்தில் ஈடுபட வேண்டும் என்பது அடியேன் வேண்டுகோள்!

    ReplyDelete
  14. //இராம்/Raam said...
    அருமை.. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...//

    ஹிஹி! உனக்காகவே ஒவ்வொரு பகுதியா போடுறேன் ராமேய்! :)

    ReplyDelete
  15. //கோபிநாத் said...
    சூப்பர் பிரேக் போட்டியிருக்கிங்க தல ;))
    அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் ;)//

    முருகனைப் பத்திச் சொன்னா ஒனக்கு பிரேக் போட்டா மாதிரி இருக்கா கோபி? இரு இரு! ஜிரா வராரு.....சரண்டர் ஆக! :))

    ReplyDelete
  16. //ஷைலஜா said...
    மிகவும் உழைத்து எழுதி இருக்கீங்க..//

    :))

    //நானும் கொஞ்சம் ஆழ்ந்து படிச்சி மூளைல ஏத்திட்டு வந்து பின்னூட்டமிடறேன், வெயிட்டீஸ்!//

    ரொம்ப ஆழ எல்லாம் வேணாம்-க்கா! நானே ஒவ்வொரு சமயத்துக்கும் மேலோட்டமா நாலு வரி தான் சொல்லி இருக்கேன்! Only Intro! :)

    ReplyDelete
  17. //”ஓம்” என்பது தத்துவ குறியீடு என்று பலரும் அறிந்த விளக்கம் தான். ஆனால் அது இந்து மத தத்துவங்களில் இருந்து பிறந்தது என்பதை இவ்வளவு கஷ்டப்பட்டு மறைக்க வேண்டியதில்லை.//

    அடங்காப்பா இறைவணக்கமும், இறைவனும் இந்து மதத்தில் இருந்து "தான் தோன்றித்" கிளைத்தது, வெளிநாட்டுக்காரனெல்லாம் காட்டுமிராண்டி அவனுக்கு கடவுளே கிடையாதுன்னு சொல்லி இருந்தால் சல்லி நல்லா இருந்திருக்கும்.

    இட்லர் கூட இந்துமத ஸ்வதிக் சின்னத்தை காப்பி அடித்து தான் வச்சிருந்தானாம்.

    ReplyDelete
  18. //இவரைச் சிந்திக்க "ஓம் மணிபத்மேஹம்" என்னும் மந்திரம் உதவுகிறது//

    ’ॐ मणिपद्मे हुं ’-’ஓம் மணிபத்மே ஹூம் ’
    என்று பௌத்தர்கள் ஜபிப்பர்.
    ஹூம், பட் என்பனவற்றுக்குத் தனித்த பொருள் கிடையாது.

    ம, ணி, பத், மே, ஹூம் – பௌத்த பஞ்சாக்ஷரம்

    தேவ்

    ReplyDelete
  19. //கோவி.கண்ணன் said...
    அடங்காப்பா இறைவணக்கமும், இறைவனும் இந்து மதத்தில் இருந்து "தான் தோன்றித்" கிளைத்தது, வெளிநாட்டுக்காரனெல்லாம் காட்டுமிராண்டி அவனுக்கு கடவுளே கிடையாதுன்னு சொல்லி இருந்தால் சல்லி நல்லா இருந்திருக்கும்.//

    :))
    என்னை ஏன் திட்டறீங்கண்ணா? இதைக் கேட்டவர் ஹரி! அவரை நியாயம் கேளுங்க!

    தீவிர ஹிந்துக்கள் கிட்டேயும் திட்டு வாங்கிக்கணும்! உம்ம கிட்டேயும் திட்டு வாங்கிக்கணும்! என்ன கொடுமை இது! :)

    //இட்லர் கூட இந்துமத ஸ்வதிக் சின்னத்தை காப்பி அடித்து தான் வச்சிருந்தானாம்//

    ஹிட்லரோட ஸ்வஸ்திக் இந்து மதச் சின்னம்-ன்னு நல்லா தெரியுமா? :)

    ReplyDelete
  20. //ம, ணி, பத், மே, ஹூம்//

    ஆமாங்க தேவ் சார்! அது ஹூம்-ன்னு தான் ஒலிக்கணுமாம்! நீங்க சொன்னப்புறம் நானும் இங்கே விசாரிச்சேன்! பதிவில் மாத்திட்டேன்!

    //ஹூம், பட் என்பனவற்றுக்குத் தனித்த பொருள் கிடையாது.//

    இந்த ஹூம், பட் என்பதெல்லாம் பிராணப் பிரதிஷ்டை பண்ணும் போது கூட மந்திரத்தில் சொல்லுவாங்க இல்லையா தேவ் சார்? கோயில்ல கேட்டிருக்கேன்!
    ஆம் கவசாய ஹூம்!
    ஹ்ரீம் நேத்ர த்ரயாய வஷட்!
    க்ரோம் அஸ்த்ராய பட்!

    ReplyDelete
  21. இரவிசங்கர், சென்ற இடுகையின் பின்னூட்டத்தில் இந்திய சமயங்கள் அனைத்திலும் ஓம்காரம் உண்டு என்று நான் சொன்ன போது சமண, பௌத்த சமயங்களில் ஓம்காரம் உண்டு என்று தெரிந்திருந்தது.

    சமண சமயம் இறையிலி சமயம், அருகர்களையே (வீடு பேற்றினை அடைந்தவர்கள்) வணங்குபவர்கள் அவர்கள் என்பதால் ஓம்காரத்திற்கு அவர்கள் சொல்லும் பொருள் அவர்களின் தத்துவத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. அங்கே அருக வணக்கமான குரு வணக்கம் மட்டுமே பேச இயலும். தேவர்களும் தேவியர்களும் அருகர்களையே வணங்கி வாழ்த்துவதாக அவர்கள் சமயம் சொல்லும்.

    திபெத்திய பௌத்தமும் ஜென் பௌத்தமும் இப்போது மேற்கிலும் பெருமை பெற்று வருவதால் ஓம்காரம் எப்படி பௌத்தத்தில் வழங்கி வருகிறது என்பதை அவர்களின் சில மந்திரங்களைப் பற்றி படிக்கும் போது அறிந்திருக்கிறேன் ஆங்கில நூல்களில் வழியாக. ஆனால் மணிபத்மேஹூம் மந்திரத்தைப் பற்றி இன்று தான் அறிவேன்.

    சீக்கியமும் சமண பௌத்த சமயங்களைப் போல் இந்திய சமயங்களில் ஒன்று என்பதால் அதுவும் ஓம்காரத்தைப் போற்றுகிறது.

    கிறித்தவம் சொல்லும் 'ஆதி சொல்' சப்த பிரம்மமாகிய ஓம்காரம் தான் என்று முன்னர் சிலர் (கிறித்தவர்கள் உட்பட) எழுதிப் படித்திருக்கிறேன்.

    ‘Om has more than 100 meanings. One of them is Welcome to Gods’ என்று ஒரு சுவரொட்டியைச் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். பாரதியாரும் 'தேவர் வருக என்று சொல்வதோ; ஒரு செம்மைத் தமிழ் மொழியை நாட்டினால் ஆவல் அறிந்து வருவீர் கொலோ? உம்மை அன்றி ஒரு புகலும் இல்லையே' என்று தொடங்கி ஒரு வேள்விப் பாட்டைப் பாடியிருக்கிறார்.

    திருமூலரைப் போல் சிவ வாக்கிய சித்தரும் அ, உ, ம பற்றி பேசியிருக்கிறார்.

    ReplyDelete
  22. //என்னை ஏன் திட்டறீங்கண்ணா? இதைக் கேட்டவர் ஹரி! அவரை நியாயம் கேளுங்க!//

    நான் உங்களுக்கு அதைச் சொல்லவில்லை. உங்களுடைய பின்னூட்டங்களை எடுத்துச் சொன்னால் தான் அது உங்களுக்கு. ஏன் வர வர எல்லாம் தப்பு தப்பாகவே புரிந்து கொள்ளப்படுகிறது ?

    ReplyDelete
  23. அருமையான மையக்கருத்து; பல கோணங்களில் விவாதித்துப் புரிந்து கொள்ளலாம்; பகிர்ந்து கொள்ளலாம்.
    ஆராய்ச்சிகளுக்கு ஊக்கம் தர வேண்டுமே தவிர ஆராய்ச்சி செய்வோர் மனம் சோர்ந்துபோக விடக் கூடாது.
    பதிவில் திருத்தம் செய்து விட்டால் அதைச்சுட்டிய பின்னூட்டங்களையும்
    அழித்து விடலாம்.

    மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படித்தேன். நடு நிலைமையோடு
    சான்றுகளுடன்தான் KRS எழுதுகிறார்.
    ஜல்லி என்னும் சாடல் ஏன் என்பது புரியவில்லை.

    தேவ்

    ReplyDelete
  24. உலகெங்கும் பாகனிய மதங்களின் தத்துவங்களையும், குறீயீடுகளையும், நிறுவன மதங்கள் தங்களுடையதாக ஹை-ஜாக் செய்து, காலப்போக்கில் அந்த பாகனிய மதத்தை காலத்தின் பக்கங்களில் இருந்து முற்றிலும் அழித்துவிடுகின்றன. கிறுஸ்துமஸ் திருவிழாவின் வரலாறு குறித்து அறிவோர் எவரும் நான் கூறுவதை ஒப்புவர். தற்போது வெளியாகியிருக்கும் Angels & Demons படத்தில் கூட இது குறித்த வசனங்களை கவனிக்கலாம். இந்தப் பதிவு ஒரு ஆன்மீகவாதியின் பெருந்தன்மையை காட்டுவதாக அமைந்தாலும், உங்களை அறியாமலேயே இது போன்ற ஹை-ஜாக்கி்ங் பணிகளுக்கு நீங்கள் உதவுகிறீர்கள் என்பதை குறிப்பிட நினைத்தேன். அதைத்தான் சென்று பின்னூட்டத்தில் தெரிவித்தேன். நிறுவன மதங்களில் இந்திய பாகனிய மதங்களின் கூறுகளை தேடி இணைப்பது தற்கொலைக்கு சமம் என்பது அறிந்துகொள்ளுதல் நலம். இதை சொல்ல தீவிர இந்து ஒருவன் தேவையில்லை. திறந்த மனமும், வரலாற்றை அறிய முற்படும் ஒருவனே போதும்.

    கோவி, திக-வின் கொடியில் உள்ள கருப்பும், சிவப்பும் எங்கிருந்து வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

    ReplyDelete
  25. //கோவி.கண்ணன் said...
    //என்னை ஏன் திட்டறீங்கண்ணா? இதைக் கேட்டவர் ஹரி! அவரை நியாயம் கேளுங்க!//

    நான் உங்களுக்கு அதைச் சொல்லவில்லை//

    ஹிஹி! தெரியும்! :)

    //ஏன் வர வர எல்லாம் தப்பு தப்பாகவே புரிந்து கொள்ளப்படுகிறது ?//

    அதான் சிரிப்பான் போட்டேன்-ல? :)
    ஹிஹி! ரொம்ப சீரியசா "அடங்காப்பா"_ன்னு எல்லாம் எழுதனீங்களா? அதான் கெளப்பி விட்டேன்!

    வரவர தப்பா எல்லாம் புரிஞ்சிக்கலை!
    உம்மை யாம் அறிவோம்!
    எம்மை அன்றி யார் அறிவார்? :)))

    ReplyDelete
  26. //Hari said...
    இந்தப் பதிவு ஒரு ஆன்மீகவாதியின் பெருந்தன்மையை காட்டுவதாக அமைந்தாலும்//

    :)
    இதில் அடியேனுக்கு எந்தவொரு - பெரும்/சிறும் - தன்மையும் இல்லை! வியத்தலும் இலமே! இகழதலும் இலமே!

    //உங்களை அறியாமலேயே இது போன்ற ஹை-ஜாக்கி்ங் பணிகளுக்கு நீங்கள் உதவுகிறீர்கள் என்பதை குறிப்பிட நினைத்தேன்//

    அப்படி நினைத்தீர்களானால் அதை மட்டும் சொல்லுங்கள்!
    அதை விடுத்து, "முல்லா, பந்தலில் பொத்தல், ஜல்லி, கஷ்டப்பட்டு மறைக்கிறேன்" என்பதெல்லாம் நல்வகையில் சேர்த்தி இல்லை!

    //நிறுவன மதங்களில் இந்திய பாகனிய மதங்களின் கூறுகளை தேடி இணைப்பது தற்கொலைக்கு சமம் என்பது அறிந்துகொள்ளுதல் நலம்//

    அவலை இடிக்கிறேன்-ன்னு உரலை இடிப்பதும், எலியை விரட்ட வீட்டுக்கு நெருப்பிடுவதும், வெறுப்பைத் தான் வளர்க்கும்! உங்கள் கொள்கைக்கு வலு சேர்க்காது!

    பாரதி பாடிய அல்லா அல்லா அல்லா பாடலையோ, இயேசுநாதரின் பாடலையோ அவரின் கவிதைப் புத்தகத்தில் இருந்தே தூக்கி விடலாம்-ன்னு சொல்ல இங்கு யாருக்கும் உரிமையில்லை!

    பதிவில் ஓம் என்ற பிரணவத்தை இந்து மதம் கடன் வாங்கியது-ன்னு சொல்லி இருந்தா, அப்போ நீங்க சண்டைக்கு வரலாம்! அப்போ கூட விவாதம் தான் செய்யலாமோ ஒழிய, தாக்குதல் நடத்த உரிமையில்லை!

    ஆனால் அப்படி எதுவும் சொல்லாத பட்சத்தில், சீக்கியம் பற்றிய பத்தியில், நானக் அவர்களின் வாசகம் உபநிடதங்களில் இருந்தே ஆளப்பட்டவை-ன்னு சொன்ன பிறகும்.....
    நீங்கள் செய்வதால் மக்களிடத்தில் வெறுப்பு தான் மிஞ்சும்!

    இந்து தர்மம் பழம் பெரும் தர்மம்!
    பாரத நாடு பழம் பெரும் நாடு!
    அதன் தர்மங்களைத் தர்மமே காத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை!
    உங்கள் So Called இந்து தர்ம தர்சன பிரவர்த்தகம் இல்லாமலேயே அவை செழிக்க வல்லவை!

    ஹரி ஓம்!

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    இரவிசங்கர், சென்ற இடுகையின் பின்னூட்டத்தில் இந்திய சமயங்கள் அனைத்திலும் ஓம்காரம் உண்டு என்று நான் சொன்ன போது சமண, பௌத்த சமயங்களில் ஓம்காரம் உண்டு என்று தெரிந்திருந்தது//

    கோவி அண்ணாவுக்குச் சொன்ன பதில்ல சொன்னீங்களே! அதானே? :))

    //சமண சமயம் இறையிலி சமயம், அருகர்களையே (வீடு பேற்றினை அடைந்தவர்கள்) வணங்குபவர்கள் அவர்கள் என்பதால் ஓம்காரத்திற்கு அவர்கள் சொல்லும் பொருள் அவர்களின் தத்துவத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. அங்கே அருக வணக்கமான குரு வணக்கம் மட்டுமே பேச இயலும்//

    உண்மை! அவர்களுக்கேற்ற ஓங்காரம்!

    //திபெத்திய பௌத்தமும் ஜென் பௌத்தமும் இப்போது மேற்கிலும் பெருமை பெற்று வருவதால்//

    அப்படியா குமரன்? மேற்கு-ன்னா அமெரிக்காவிலுமா?

    //சீக்கியமும் சமண பௌத்த சமயங்களைப் போல் இந்திய சமயங்களில் ஒன்று என்பதால் அதுவும் ஓம்காரத்தைப் போற்றுகிறது//

    ஓங்காரம் இல்லாத இந்திய சமயம் என்னான்னு கண்டுபுடிங்க பார்ப்போம்!

    //Om has more than 100 meanings. One of them is Welcome to Gods//

    சூப்பரா இருக்கே!

    //பாரதியாரும் 'தேவர் வருக என்று சொல்வதோ; ஒரு செம்மைத் தமிழ் மொழியை நாட்டினால் ஆவல் அறிந்து வருவீர் கொலோ? உம்மை அன்றி ஒரு புகலும் இல்லையே' என்று தொடங்கி ஒரு வேள்விப் பாட்டைப் பாடியிருக்கிறார்.//

    ஓமெனப் பெரியோர்கள் ஓதுவதாய் வினை மோதுவதாய்...

    //திருமூலரைப் போல் சிவவாக்கிய சித்தரும் அ, உ, ம பற்றி பேசியிருக்கிறார்//

    சிவவாக்கியர் சொன்ன குறிப்போ பாடலோ இருந்தா தாங்க குமரன்! திருமழிசையோடு சேர்த்து வச்சிப் பார்க்க உதவியா இருக்கும்!

    ReplyDelete
  28. //R.DEVARAJAN said...
    பதிவில் திருத்தம் செய்து விட்டால் அதைச்சுட்டிய பின்னூட்டங்களையும்
    அழித்து விடலாம்//

    வேண்டாம் சார்! இருக்கட்டும்! தாங்கள் நடத்திய பாடத்தில் பங்கு பெற்ற மாணாக்கன்-ன்னு இருப்பது பெருமை தான் அடியேனுக்கு!

    கொடுப்பதும் கொள்வதும் குணானுபவம் ஆயிற்றே! கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

    ReplyDelete
  29. //கோவி, திக-வின் கொடியில் உள்ள கருப்பும், சிவப்பும் எங்கிருந்து வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?//

    நான் திக இல்லை, யாராவது திக காரர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்.

    ReplyDelete
  30. //உலகெங்கும் பாகனிய மதங்களின் தத்துவங்களையும், குறீயீடுகளையும், நிறுவன மதங்கள் தங்களுடையதாக ஹை-ஜாக் செய்து, காலப்போக்கில் அந்த பாகனிய மதத்தை காலத்தின் பக்கங்களில் இருந்து முற்றிலும் அழித்துவிடுகின்றன.//

    உங்கள் அச்சம் நியாயமானதுதான்.
    ஆயினும் இத்தகைய ஆராய்ச்சிகள்
    ஹிந்து மதத்தின் தொன்மைக்கு வலிமையைச் சேர்க்கும் என்றே நம்புகிறேன்.
    அவ்வாந்தர ப்ரளயம் குறித்து நம் புராணங்களும் கூறுகின்றன; விவிலியமும் வேறு விதத்தில் கூறுகிறது.
    இரண்டையும் ஒப்பிடாமல் ஓர் ஆராய்ச்சி செய்ய இயலுமா?
    நேர்மையாக ஒப்பீடு செய்தபின் நம் மதத்தில் இணைந்து கொண்டவரும் உள்ளனர் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
    கிறித்தவர் கையாளும் குறுக்கு வழிகள் இருக்கவே செய்கின்றன;
    அவற்றை நாம் வேறு விதத்தில்
    சமாளிக்க வேண்டும்.

    தேவ்

    ReplyDelete
  31. ///கிறித்துவத்தில் "ஓம்"???:
    ஆதியிலே தேவன் வார்த்தையாய் இருந்தார்! = இது வேதாகமத்தின் (பைபிள்) வரிகள்! "ஓம்" என்ற வார்த்தையாய் இருந்தார் என்று பைபிள் குறிப்பிடவில்லை! ஆனால் "வார்த்தையாய் இருத்தல்" என்பது கிட்டத்தட்ட ஓங்காரத் தத்துவம் தான்///

    அவர்களுடைய பிரார்த்தனையின் கடைசியில் முத்தாய்ப்பாக ஆமென்(Amen) என்று சொல்வது ஓம் என்பதன் திரிபு என்றே நினைக்க வேண்டியிருக்கிறது :)

    ReplyDelete
  32. //கபீரன்பன் said...
    அவர்களுடைய பிரார்த்தனையின் கடைசியில் முத்தாய்ப்பாக ஆமென்(Amen) என்று சொல்வது ஓம் என்பதன் திரிபு என்றே நினைக்க வேண்டியிருக்கிறது :)//

    வாங்க கபீரன்பன் ஐயா!
    ஒலிச் சந்தத்தை வைத்து அப்படி ஒரு நினைப்பு வரலாம் தான்! :)

    ஆனால் பொருள் அளவில்...
    Amen = So be it!
    ததாஸ்து!
    அப்படியே ஆகட்டும்! என்பதே!
    இதில் அ,உ,ம என்னும் தத்துவங்கள் முழுமையாகப் பயின்று வரவில்லை-ன்னே நினைக்கிறேன்!

    ReplyDelete
  33. //இதில் அ,உ,ம என்னும் தத்துவங்கள் முழுமையாகப் பயின்று வரவில்லை-ன்னே நினைக்கிறேன்!//

    திரிபு என்னும் போது முழுமையாக பயின்று வருவதை எதிர்பார்க்க முடியாதுதான் :)

    கீழ்கண்ட வலைப்பக்கத்தையும் காணவும். மேலும் புரியும் OM and Amen
    ///As the word naturally altered itself during meditation, I soon came to believe that, perhaps, the two words came from a common source...Amen is Om and Om is Amen.///

    ReplyDelete
  34. Anna,
    Islamiya mathathil varugira 786 endra sirapana ezhuthu kooda "om" ai kuripathaga kelvi paten.. unmaiya??

    ReplyDelete
  35. //dubukudisciple said...
    Anna,//

    யக்கா! இது ஒங்களுக்கே ஓவராத் தெரியலை? உங்க பொடிப் பையனைப் பாத்து திடீர்-ன்னு Anna-ன்னு கூப்பிட்டா என்ன அர்த்தம்-ங்கிறேன்? :)
    சிவபிரான் முருகனைப் பாத்து ஐயா-ன்னு கூப்பிடலாமா?

    ReplyDelete
  36. //Islamiya mathathil varugira 786 endra sirapana ezhuthu kooda "om" ai kuripathaga kelvi paten.. unmaiya??//

    இதைப் பத்தி நானே பதிவில் சொல்லணும்-ன்னு நினைச்சேன்! கபீரன்பன் ஐயா, தேவ் சார் சொன்னா இன்னும் சிறப்பா இருக்கும்!

    இஸ்லாத்தில் வரும் 786 என்பது "பிஸ்மில்லா இர் ரஹ்மான் இர் ரஹீம்" என்னும் வாசகத்தின் சுருக்கம்! (கருணையுள்ள இறைவனின் பேராலே-ன்னு பொருள்! குர் ஆன் இப்படித் தான் துவங்குகிறது)

    அதாச்சும் இந்த வாசகத்தை அரபு எழுத்துருவில் எழுதினால், அந்த ஒவ்வொரு எழுத்துக்குமான எண்; அந்த எண்களைக் கூட்டினால் வரும் தொகையே 786! இப்படி எண்ணாய் எழுதுவது இஸ்லாத்திலேயே அண்மைக் காலங்களில் தான் பிரபலம் அடைந்தது!

    இதுக்கும் ஓம் என்பதற்கும் நேரடித் தொடர்பெல்லாம் எதுவும் இல்லை!

    786-ஐ, தலைகீழாக 687 என்று எழுதினால், 6-8-7 என்ற ஒவ்வொரு எண்ணுக்கும் உள்ள வடமொழி எழுத்துரு...அதைக் கலந்து போட்டால் "ॐ" -ன்னு வருவது மாதிரி இருக்கும்!

    இப்படி Number Game-ஐ மட்டுமே வைத்துக் கொண்டு ஓம்-இஸ்லாத்தில் இருக்கிறது என்று சொல்லி விட முடியாது! தத்துவம் ஒத்துப் போனால் மட்டும் தான் "ஓம்" பிற சமயங்களிலும் பயில்கிறது என்று முடிவுக்கு வரலாம்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP