Friday, June 12, 2009

ஓம் என்றால் இது தான்! - Part 3!

ஓங்காரத்தின் பொருள் உண்மையிலேயே "வேறு யாருக்குமே" தெரியாதா? அதனால் மொத்த உலகமும் பயன் பெற முடியாதா? சிவபெருமான், உமையன்னை, முருகன் என்ற மூவருக்கு "மட்டுமே" தெரிய, "ஓம்" என்ன குலக் கல்வியா? இல்லை! இல்லை! இல்லை! முந்தைய பதிவு இங்கே!

சில "தீவிர" சைவப் பெருமக்கள் இவ்வாறு சொல்வது முற்றிலும் தவறு! மதத்துக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு, தங்களையும் அறியாமல், அந்த முருகனுக்கே களங்கம் சேர்ப்பிக்கிறார்கள்! என் முருகன் ஓம்-ஐ ஒளித்து வைக்கவில்லை! உலகத்துக்கே தந்து விட்டான்!

ஓங்காரம் சொல்லித் தவம் செய்து கொண்டிருந்தார் பிருகு முனிவர்! அவர் தலை மேல் கை வைத்து, தவம் கலைத்தான் ஈசன்! அதனால் ஓங்காரப் பொருள் மறந்து போகுமாறு ஆயிற்று! அதையே முருகன் திருவிளையாட்டு செய்து, அப்பனுக்கு மீள் உபதேசித்த சுப்பன் ஆனான்!

முருகப் பெருமான் சாட்சாத் சிவ சொரூபம்! சிவத்தால் சிவத்துக்கே உபதேசம் ஆயிற்று! சின்ன சிவத்தால் பெரிய சிவத்துக்கு உபதேசம் ஆயிற்று! :)

ஏனிந்த திருவிளையாட்டு? பிரம்மனுக்கே பொருள் அறியாமல் இருந்ததால், அவனை முன்னிட்டு, அவன் படைத்த எல்லா உயிர்களுக்கும் இதைப் பொதுச் சொத்து ஆக்கத் தான் இப்படி ஒரு விளையாடல்!

பிரம்மனை சிறையில் இருந்து விடுவித்த போது, சிவபெருமான் இதைப் பிரம்மனுக்குச் சொல்லிக் கொடுத்தே அனுப்புகிறார்! பின்னர் இதை நந்தி தேவருக்கும் உபதேசிக்கிறார்!
நந்தி -> சிவயோக முனிக்கும், சிவயோகர் -> பதஞ்சலிக்கும்...இப்படியே வரிசை திருமூலர், சித்தர்கள் என்று விரிந்து, திருக்கைலாய ஞான பரம்பரை உருவாகிறது! எனவே "ஓம்" என்பது மூவரின் தனிச் சொத்து என்பதை நம்பவே நம்பாதீர்கள்! :)


சென்ற பதிவில், பல சமயங்களிலும், ஓங்காரம் எப்படிப் பயின்று வருகிறது-ன்னு பார்த்தோம்! ஆனால் அவை எல்லாம் ரொம்ப "ஞான பரமாக" இருக்கு! நாதம், விந்து-ன்னு ஒரே காம்ப்ளெக்சா இருக்கு! உலகத் தோற்றவியலா இருக்கு!
அட, உலகத் தோற்றத்தை எல்லாம் விடுங்கப்பா! இன்னிக்கு நமக்குப் பயன்படுறா மாதிரி ஒரு பொருள் இருக்கா? சஸ்பென்ஸ் வைக்காம அது என்னான்னு இன்னிக்கி பாத்துருவோமா? :)

முருகன் சொன்ன பொருள், வைணவம் சொல்லிக் கொடுக்கும் ஓங்காரப் பொருளாகவே இருக்கு! மிகவும் எளிமையா இருக்கு :)
அட, இதை நான் சொல்லலீங்க! ஸ்கந்த புராணம் - பிரபாச காண்டமே சொல்லுது! கந்த புராணத்தில் வைணவமா?-ன்னு வியப்பா இருக்கா? ஹிஹி!
"ஓம்" நமோ விஷ்ணு குப்தாய, விஷ்ணு ரூபாய நமஹ!
சான்னித்யே பவ தேவே! சாகரே லவணாம்பஸி!
- என்பது ஸ்கந்த புராணம் தான்! ஜீவஸ் தது உபகரணம் - வைஷ்ணவ விதம்!

அப்படி எளிமையா, அனைவருக்கும் பயன்படும் படி உள்ள ஓங்காரப் பொருள் என்ன?
ஓம் = அ + உ + ம்
* அ = "அ"-வன்! அகர முதல இறைவன்!
* ம் = நா-"ம்"

இந்த ரெண்டு பேருக்கும் என்ன கனெக்ஷன்? "அ"-வை, "ம்" அடைவது எப்படி?
* உ = உறவால் அடைய முடியும்!

என்ன உறவு? எப்படிப்பட்ட உறவு? அதைப் பிரணவம் என்னும் DNA-ல கண்டுபுடிச்சிறலாமா?
புடிச்சிறலாம்! அதுக்கு "உ"-ன்னா என்ன-ன்னு தெரிஞ்சிக்கிட்டா போதும்! "உ"-ன்னா என்ன?

உ-காரோ = அனன்யார்க நியம இதி சம்பந்த மனயோஹோ என்று இதை விளக்கும் ஸ்காந்த சுலோகம்! அனன்யார்க சம்பந்தம்-ன்னா என்ன? அழகு தமிழில் சொல்லணும்னா = "உறவேல்"!
இந்த ஜீவன் இன்னொருத்தருக்கு சம்பந்தப் பட்டவன் அல்ல! பரமாத்மாவுக்கு மட்டுமே சம்பந்தப் பட்டவன்! அது தான் உ-காரம்! அதுவே உற"வே"ல்! இங்கிட்டு "ஏ"-காரம் மிகவும் முக்கியம்!

* பரமாத்மாவுக்"கே" உரியவன் ஜீவன்!
* ஜீவனுக்"கே" சரண்யன் பரமாத்மா!
* இப்படிச் சரண்யனாய் இருக்கக் கூடிய அவனை, இவன், சரணம் அடையற"தே" சம்பந்தம்! = பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றை பற்றுக பற்று விடற்கு!

இவன் இன்னொருத்தரைப் பற்ற வேண்டியவன் அல்ல!
இவன் இன்னொருத்தருக்குச் சொந்தமானவன் அல்ல!
அவன் ஒருவனுக்கே சொந்தமானவன்! - அப்படின்னு நிரூபிக்கக் கூடியதான உ-காரத்தை நடுவில் சேர்த்து விட்டால், ஓம் வந்து விடும்!

* உந்தன்னோடு = "அ"வனோடு = "அ"
* "உ"றவேல் = "உ"
* நமக்கு = ந"ம்" = ம்
=> அ + உ + ம் = ஓம்!

உந்தன்னோடு + உறவேல் + நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது! இறைவா நீ தாராய், பறையேலோ ரெம்பாவாய்! - என்று ஓங்காரப் பொருளை, அத்தனை பேருக்கும் வெட்ட வெளிச்சம் ஆக்குகிறாள் கோதை!
DNA-வை யாராச்சும் ஒழிக்கத் தான் முடியுமா? பெத்த தாயே நினைச்சாலும் முடியுமா? பிள்ளை கோவிச்சிக்கிட்டு, தனக்கு DNA மாற்று அறுவை சிகிச்சை பண்ணிக்கத் தான் முடியுமா? ஹிஹி! அதான் "இங்கு ஒழிக்க ஒழியாது" என்று ஆண்டாள் வாக்கு!

* அ+உ+ம-வை ஒழிக்க ஒழியாது! அவனாலும் ஒழிக்க முடியாது! நம்மாலும் ஒழிக்க முடியாது!
* "அ"-வுக்கு ம! "ம"-வுக்கு அ! இரண்டுக்கும் "உ" = உறவு!
* அவனுக்கு நாம்! நமக்கு அவன்! = இதுவே நம் DNA! இதுவே நம் ஓங்காரம்! இதுவே நம் பிரணவப் பொருள்!

அறி-வோம்! அரி ஓம்! ஓம்!


மக்களே!
இதுவே ஓங்காரம் (எ) பிரணவத்தின் எளிமையான பொருள்!

நம்மில் பல பேர் அன்றாட வாழ்வில் "ஓம்"-ன்னு சொல்லுறோம்! தியானம், யோகா, பாட்டு, நடனம், உரக்கக் கத்தல், மெல்லிய முணுமுணுத்தல்-ன்னு பல வகையாக "ஓம்" என்பதைக் கையாள்கிறோம்! இனி "ஓம்"-ன்னு சொல்லும் போதெல்லாம் வெறுமனே உச்சரிக்காது, பொருளோடு உச்சரிக்கப் பழகுவோம்!

"ஜீவாத்மா ஆகிய நான், பரமாத்மாவுக்கு மட்டுமே உரியவன்" - அப்படிங்கற ஞானத்தோடே பிரணவத்தை ஜபிக்கணும்! அனுசந்தானம் பண்ணனும்!

ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று இனி மெல்லிதாக ஜபிக்கும் போதோ, உச்சரிக்கும் போதோ... மனசுக்குள்ளே இனி மேல் இதையும் மெல்லிதாக ஓட்டிக் கொள்ளுங்கள்! கீழே சொன்னவாறே இனி ஓம்-ன்னு சொல்லுங்க!

* உனக்கு நான் - ஓம்..........................
* எனக்கு நீ - ஓம்.................................
* ஓம்! ஓம்! ஓம்!



1. ஏன் எல்லா மந்திரத்தோடும் ஓம் ஓம்-ன்னு சேர்த்துச் சேர்த்துச் சொல்றாய்ங்க? மந்திரம், தந்திரம், தியானம், யோகா - ஏன் எல்லாத்திலும் ஓம் சேர்க்கணும்?

2. எல்லாருக்கும் பொதுவான ஒரு விஷயம் = பந்தத்தில் மாட்டிக் கொள்வது!
அனாதி காலமா நீ பந்தத்தில் மாட்டிக்கறே இல்லையா? இன்னும் அனந்த காலமும் மாட்டிக்கப் போறே! ஏன் மாட்டிக்கறே?-ன்னு மட்டும் தெரிஞ்சிக்கோ! தெரிஞ்சிக்கலாமா? "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்! "நமோ" என்றால் என்ன? (....தொடரும்)

23 comments:

  1. இனி பொருள் தெரிஞ்சு ஓம் சொல்வேன்.

    ReplyDelete
  2. அறிவியல் சார்ந்த விளக்கம் வெகு அருமை!
    ஸ்கந்த புராணம் பல விஷ்ணு ஸ்தலங்களின் பெருமையையும்
    கூறுகிறது; வைஷ்ணவ புராணங்களின் பெருமையையும் பகர்கிறது.

    தேவ்

    ReplyDelete
  3. பிச்சாடனராக வரும் ஈசன் கயிலை காட்டில் வாழும் முனிவர்களின் அகம்பாவத்தை போக்க , நடனம் ஆடுகிறார் .அந்த தாண்டவமே ஊழித்தாண்டவம் என்று சொல்லபடுகிறது. அது சமயம் பரம்பொருள் ஈசன் அறியாமை என்ற அரக்கனை (அவனே முயலகன்!) தன் திருவடியால் வதம் செய்கின்றார். அவர் கையில் விளங்கும் உடுக்கை என்பதே ஒம் என்ற தத்துவத்தை உரக்க பறைகின்றது.
    அதுவே உயிர்களின் ஜனனம் என்று கூரபடுகின்றது. அவருடைய மற்றொரு கையில் இருக்கும் தீ ஆனது வதைக்கும் சக்தி ஆகும். இதை பறை சாற்றுவதே நடராஜரின் திருநடனம். இந்த நடனமான பாரதத்தை பதஞ்சலி கற்க அதன் மூலமாகவே ஒம் என்ற தத்துவத்தை விளக்குகின்றார். மிக எளிதான விளக்கம் என்னவென்றால் ஐக்கியம் .... அதுவே நாத விந்தம். ஒளியின் விந்து. எல்லா ஒளியின் அடியில் ஓடும் ஒரு இல்லை தன இந்த ஒம். அது "சிக்கு புக்கு ரயிலு" ஆனாலும் சரி... "தோடுடைய செவியன்..." ஆனாலும் சரி.. ஐயக்கியம் இருந்தால் ஓம்காரத்தை உணரலாம்

    ReplyDelete
  4. ம்ம்..கூடவே வந்துக்கிட்டு இருக்கேன்.

    நன்றாக எளிமையுடன் இருக்கு பதிவு...அதுதான் உங்க ஸ்பெசல் என்பது தெரியும் ;)))

    ReplyDelete
  5. அருமையான தொடர்! வாழ்த்துக்கள்.

    திருமந்திரத்தில் ஓம் பற்றியதாக இருக்கும் பாட்டுக்களையும் இங்கே எழுதுங்க. நன்றி.

    அன்பிணை,
    நா. கணேசன்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்! பொருளோடு சொல்லும் போது அதன் மகிமையே தனி. ஓம் காரத்தின் முதல் ஒலியான `அ` என்றால் விஷ்ணு என்று அபிதான கோசம் சொல்கிறது. அரிசுவடி என்று அ, ஆவன்னா எழுதுகிறோம் என்றால் `ஹரியை` அறிந்து கொள்கிறோம் என்று பொருள், ஆரம்பத்திலேயே அவனுடனான நம் உறவு ஒழிக்க ஒழியாது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறோம் என்று பொருள்.

    ஹரி ஓம்!

    ReplyDelete
  7. //இராம்/Raam said...
    நன்று... :)//

    நன்றி :))

    ReplyDelete
  8. //புதுகைத் தென்றல் said...
    இனி பொருள் தெரிஞ்சு ஓம் சொல்வேன்//

    சூப்பரு! அப்படியே சொல்லுங்க-க்கா! அதுக்குத் தான் இந்த தொடர் பதிவே! :)

    ReplyDelete
  9. //R.DEVARAJAN said...
    அறிவியல் சார்ந்த விளக்கம் வெகு அருமை!//

    நன்றி தேவ் சார்!

    //ஸ்கந்த புராணம் பல விஷ்ணு ஸ்தலங்களின் பெருமையையும்
    கூறுகிறது; வைஷ்ணவ புராணங்களின் பெருமையையும் பகர்கிறது.//

    ஆமாம்! ஸ்கந்த புராணத்தை வைத்து தான் பூரி ஜகன்னாதர் ஆலயத்தின் ஆகமத்தை முறைப்படி மாற்ற நினைத்தார் இராமானுசர்! ஆனா அர்ச்சகர்களால் அவர் உயிருக்கே ஆபத்து உருவாகி, இறைவன் காப்பாற்றினான்!

    திருமலையில் பெருமாளே என்று தான் ஸ்கந்த புராணமே சொல்லும்! அதுவே தெரியாம கும்மி அடிச்சிக்கிட்டு இருப்பாங்க சில பேரு! :))
    ஆயிரம் தரவுகள் காட்டினாலும், அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, கும்மியின் மகிமையே மகிமை! :))

    ReplyDelete
  10. //கோபிநாத் said...
    ம்ம்..கூடவே வந்துக்கிட்டு இருக்கேன்//

    சூப்பரு! வா வா கோபி! ஜாலியா ஊர் சுத்தலாம்! :)

    //நன்றாக எளிமையுடன் இருக்கு பதிவு...அதுதான் உங்க ஸ்பெசல் என்பது தெரியும் ;)))//

    எளிமையே இனிமை!
    ஆயிரம் நுட்பமான விளக்கத்தை விட, ஒரு கடைபிடிக்கத் தக்க விளக்கம் எவ்வளவோ மேல்! :)

    ReplyDelete
  11. //நா. கணேசன் said...
    அருமையான தொடர்! வாழ்த்துக்கள்//

    நன்றி கணேசன் ஐயா! இதுக்குக் காரணமே உங்க பதிவும், அங்கு உங்களை எதிர்த்து பின்னூட்டம் இட்ட ஒரு பதிவரும் தானே? :)

    //திருமந்திரத்தில் ஓம் பற்றியதாக இருக்கும் பாட்டுக்களையும் இங்கே எழுதுங்க. நன்றி.//

    ஆகா! போன பதிவில் திருமந்திரப் பாடல்களை அப்படியே கொடுத்து இருந்தேனே!

    ஓம் எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
    ஓம் எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
    ஓம் எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
    ஓம் எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே - (திருமந்திரம் 9ஆம் தந்திரம்)

    ReplyDelete
  12. //நா.கண்ணன் said...
    வாழ்த்துக்கள்! பொருளோடு சொல்லும் போது அதன் மகிமையே தனி.//

    நன்றி கண்ணன் சார்! ஆமாம், பொருளோடு ஓங்காரத்தைச் சொல்லும் போது சிறப்பு!
    இவ்வளவு நாள் "அறிந்தோம்"!
    இன்று "உணர்ந்தோம்"!

    //ஓம் காரத்தின் முதல் ஒலியான `அ` என்றால் விஷ்ணு என்று அபிதான கோசம் சொல்கிறது//

    ஓங்காரம் பொது மறை என்பதால் பதிவில் எந்தக் கடவுளின் பெயரையும் சொல்லாமல் இறைவன் என்றே குறித்தேன்!

    //ஆரம்பத்திலேயே அவனுடனான நம் உறவு ஒழிக்க ஒழியாது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறோம் என்று பொருள//

    உண்மை!
    உறவு-ன்னு ஒன்னு ஏற்பட்ட பின்னர் தானே நம்பிக்கையோடு கொடுக்கல் வாங்கல் நடத்த முடிகிறது...நட்பிலும், குடும்பத்திலும்! :)

    அதான் உறவைச் சொல்லி ஓங்காரத்தைச் சொல்கிறாள் என் தோழி! :)

    ReplyDelete
  13. பிரணவ மந்திரத்தில் அடங்கிய ஒலி வடிவங்களான அகாரம் உகாரம் மகாரத்தை இதைவிட எளிமையாக சிறப்பாக அறிவியல் பூர்வமாகவும் உளவியல் பூர்வமாகவும் ஆன்மீக பூர்வமாகவும் யாராலும் சொல்ல இயலாதென்றே நினைக்கிறேன். யோகாவில் ஓம் என்னும் சொல்லை ஆரம்பப் பிரார்த்தனை தொடங்கி ரிலாக்ஸிங் பொழுதும் சேர்த்து இறுதிப்ரார்த்தனை வரை பலப்பலமுறை சொல்கிறோம். ஓம் என்ற சொல் உடலையும் மனதையும் ஆரோக்கியமா வைப்பதை அனுபவத்தில் உணரமுடிகிறது. இப்போதும் எப்போதும் சொல்லுவோம், ஓம்!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  14. //அவர் கையில் விளங்கும் உடுக்கை என்பதே ஒம் என்ற தத்துவத்தை உரக்க பறைகின்றது.//

    உடுக்கையிலிருந்து ‘ஓம்’ பிறந்ததாக
    எங்கு கூறியுள்ளது ?
    உடுக்கையிலிருந்து 14 வித ஒலிகள்
    ஏற்பட்டன.மஹேசுவரனின் உடுக்கையிலிருந்து தோன்றிய அவை
    மாஹேச்வர ஸூத்ரம் எனும் பெயரில்
    வடமொழி இலக்கண அமைப்புக்குக் காரணமாயின.

    தேவ்

    ReplyDelete
  15. //sskswamy said...
    பிச்சாடனராக வரும் ஈசன் கயிலை காட்டில் வாழும் முனிவர்களின் அகம்பாவத்தை போக்க , நடனம் ஆடுகிறார் .அந்த தாண்டவமே ஊழித்தாண்டவம் என்று சொல்லபடுகிறது//

    வாங்க sskswamy!
    அது ஊர்த்துவ தாண்டவம்! ஊழித் தாண்டவம் அல்ல!
    ஊழிக் கூத்து என்பது பிரளயத்தின் போது!

    //அவர் கையில் விளங்கும் உடுக்கை என்பதே ஒம் என்ற தத்துவத்தை உரக்க பறைகின்றது. அதுவே உயிர்களின் ஜனனம் என்று கூரபடுகின்றது//

    உடுக்கையில் ஓங்காரம் சப்தம் எழும் என்பது மரபு! ஆனால் ஓங்காரம் அப்போது பிறக்கவில்லை! ஓங்காரம் என்பது திமிர் பிடித்த முனிவர்களின் முன்னால், தாருகாவனத்திலா பிறந்தது? இல்லையே! அது உயிர்களின் ஜனனம்-ன்னு நீங்களே சொல்லிட்டு, முனிவர்களுக்கு அப்புறம் பிறந்தது-ன்னா லாஜிக்கே இல்லையே! :)

    ஈசனார் உடுக்கையின் சப்தம், மாயோன் சங்கொலி, முருகனின் மயில் வடிவம், விநாயக வடிவம் என்று எல்லோமே ஓங்காரத்தைக் காட்ட வல்லன! அம்புட்டு தான்!

    //மிக எளிதான விளக்கம் என்னவென்றால் ஐக்கியம் .... அதுவே நாத விந்தம். ஒளியின் விந்து//

    இது அவ்வளவு எளிமையாத் தெரியலையே!
    இந்த விளக்கத்தை வைத்துக் கொண்டு உலகத் தோற்றம் எப்படி-ன்னு வேணும்னா ஏதோ சொல்லலாம்!

    ஆனால் உயிர்கள் இறைவனை அடைவது எப்படி-ன்னு அனைவருக்கும் காட்டிக் கொடுப்பதே "பயன் தரவல்ல" விளக்கம்! என்ன, சரியா? :)

    ReplyDelete
  16. Intha thodarai muthalil irunthu padithu kondu varugiren. Ivvalavu simpleaa athe samayam ella details um koduthu irukeenga. Matha religionla om irukkarathai patri kooda romba sollama, simpleaave solli mudichiteenga.

    From now on, I will tell unakku naan om. enakku nee om.
    I have never seen a simple narrator like this. Keep it up for the benefit of all.

    ReplyDelete
  17. //Anonymous said...
    Intha thodarai muthalil irunthu padithu kondu varugiren.//

    நன்றி!

    //Ivvalavu simpleaa athe samayam ella details um koduthu irukeenga. Matha religionla om irukkarathai patri kooda romba sollama, simpleaave solli mudichiteenga//

    எளிமையே இனிமை! :)

    //From now on, I will tell unakku naan om. enakku nee om.//

    நன்று!
    ஓம்ம்ம்ம் -ன்னு மூச்சுப் பயிற்சி செய்யும் போது....
    உள்ளே இழுக்கும் போது...உனக்கு நான்-ன்னு நினைச்சிக்கலாம்! சொல்லத் தேவையில்லை!
    வெளியே விடும் போது - எனக்கு நீ-ன்னு நினைச்சிக்கலாம்! சொல்லத் தேவையில்லை!
    சொல்ல வேண்டியது ஓம் மட்டுமே!

    //I have never seen a simple narrator like this. Keep it up for the benefit of all.//

    மீ்ண்டும் நன்றி!

    ReplyDelete
  18. ஆகா,
    சமயத்தில் பல ஆண்டு தேடி தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் இது.
    ஆனால் இந்த அவசர உலகில் அது சாத்தியம் இல்லை என்று இறைவன் உம்மை போன்றோர் மூலம் blog எழுத வைத்து என் தேடலை பூர்த்தி செய்கிறான் .
    நகைச்சுவையுடன் எவ்வளவு பெரிய விடயம் பகிர்ந்து உள்ளீர்.
    நன்றி.

    ReplyDelete
  19. ஸ்காந்த புராணத் தகவல்கள் புதியவை. நன்றி இரவி.

    ReplyDelete
  20. //prince said...
    ஆகா,
    சமயத்தில் பல ஆண்டு தேடி தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் இது.
    ஆனால் இந்த அவசர உலகில் அது சாத்தியம் இல்லை என்று இறைவன் உம்மை போன்றோர் மூலம் blog எழுத வைத்து என் தேடலை பூர்த்தி செய்கிறான்//

    ஹிஹி! இளவரசரே!(prince)! நீங்கள் யாரோ? ஆனா இதெல்லாம் டூ மச்! :)
    ஏதோ, எழுதி வச்சேன்! ஆனா ஒளிக்காம, மறைக்காம! அம்புட்டு தான்!

    சமயத்தில் எப்பமே எளிதா தெரிஞ்சிக்கலாம்! ரொம்ப கஷ்டம் எல்லாம் இல்ல! ஆனா சமயம்-ன்னாலே, இறைவன்-னாலே பெரிய விஷயம் நாமா நம்மள சுத்தி ஒரு போர்வை போர்த்திக்கறோம்! அதுனால அப்படி முதலில் தெரியுது! ஆனால் இறைவனுடனான குடும்பம் நடத்த நடத்த, சட்டுனு புரிஞ்சிரும்!

    //நகைச்சுவையுடன் எவ்வளவு பெரிய விடயம் பகிர்ந்து உள்ளீர்.
    நன்றி//

    நகைச்சு வைச்சா நன்கு புரியும்! உடனே ஒட்டிக்கும்! அதான்! :)

    ReplyDelete
  21. //குமரன் (Kumaran) said...
    ஸ்காந்த புராணத் தகவல்கள் புதியவை. நன்றி இரவி//

    எனக்கும் புதிது தான் குமரன்!
    நண்பன் "படைப்பில் அடைப்பில்லாமல் இருக்க"-ன்னு ஒரு பதிவு போட்டான்-ல? அப்போ சொன்னது தான் இந்த மூவருக்கு மட்டுமே தெரியும் என்பது!

    அப்போ தான் பிரணவ உபதேசம் பத்தி ஸ்கந்த புராணம் என்ன சொல்லுது-ன்னு போய் பார்த்தா....
    ஹா ஹா ஹா....அருணகிரி மாதிரியே ஈற்றடியில் முடிக்குது! :)

    தேவயானை கதை, பூரி ஜன்னாதர் கதை, திருப்பதி மலை மேல் மாமாவைப் பார்க்க மருகன் குமாரதார தீர்த்தம் வந்த கதை-ன்னு என்னென்னமோ சொல்லுது! செம இன்டரஸ்டிங்!

    உடையவர், ஸ்காந்த புராணம் காட்டியே, திருமலை எம்பெருமான் முருகன் அல்ல-ன்னு வாயடைக்க வச்சாரு-ன்னு கேள்விப்பட்டிருகேன்! இப்போ நாமளா படிக்கும் போது தான் தெரியுது! :)

    ReplyDelete
  22. அருமை அண்ணா.. எங்க எல்லாருக்கும் பிரவணத்தின் பொருளை விளக்கமாவே சொல்லிருக்கீங்க.. உங்க மூலமா தெரிஞ்சுக்கும் போது ரொம்ப எளிமையா புரியுது.

    வேலைப்பளு அதிகமா இருக்கு.. அதனால் ஆழ்ந்து படிக்க முடியவில்லை.. மீண்டும் படித்து விட்டு கேள்விகளுடன் வருகிறேன் :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP