Sunday, August 16, 2009

ஓம் நமோ Dash! "நாரணம்" என்பது தமிழ்ச் சொல்லா?-3

இன்னிக்கி டாபிக் கொஞ்சம் வெவகாரமானது! வித்தியாசமானது! ஆனா ரொம்ப உண்மையானது! :)
* நாரணம் = நாரம் + அணம் = நீர் + வழி (தமிழில்)
* நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம்
(வடமொழியில்)
-ன்னு சென்ற பதிவில் சொல்லி இருந்தேன்! இன்னிக்கி அதைக் கொஞ்சம் விரிவாப் பார்க்கலாம்! அவரவர் சார்பு நிலைகளைக் கழற்றி வச்சிட்டு, "மெய்ப் பொருள்" காண்பதாகவும் பார்க்கலாம்! என்ன வாரீங்களா? :))

அதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு!
பதிவின் நோக்கம்: எல்லாம் கடந்த இறைவனை, வெறுமனே மொழிக் குறுகலுக்குள் அடைப்பது இல்லை!
ஆனால் ஆன்மீகம் எப்படி முக்கியமோ, அதே போல் மொழியும், அதைச் சார்ந்த இனமும், அங்கு இறையியல் எப்படித் தோன்றி வளர்ந்தது என்பதும் முக்கியம்!
நம் தமிழில், நம் இறையியல் என்ன? என்பதான வேர்களைத் தேடும் முயற்சியே இது! இனி மேலப் படிங்க! :)



"நாரணம்" என்ற பெயரே கொஞ்சம் சிக்கலானது தான்!
பல உண்மைகளை உள்ளடக்கியது! ஒரு நல்ல அழகான தொன்மையான தமிழ்ச் சொல்லைப் பார்த்து, "இது தமிழ்ச் சொல் தானா?" என்று கூட கேட்க வைப்பது! ஹா ஹா ஹா :))

என் முருகப் பெருமானுக்கு இந்தக் கஷ்டமே இல்லை! முருகன்=அழகன்-ன்னு ஈசியா சொல்லிட்டுப் போயீரலாம்! அம்புட்டு எளிமையானவன்! செல்லமானவன்! :)
ஆனா இவரு "ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்" ஆச்சே! அதான் பதிலுக்கு இவரையும் ஆராயும் படி வச்சிட்டாங்க போல! நல்லா வேணும்-ப்பா ராசா உனக்கு! :)


தமிழ்-வட பண்பாட்டுக் கலப்பின் போது, இரண்டு பக்கமும் பரிமாற்றங்கள் நடந்து கொண்டன! மாயோனும் சேயோனும் தமிழ்க் கடவுளர்கள்! இதோ அதற்கான விவரணப் பதிவு!
மாயோன்-சேயோன் = நாட்டு வழக்காக பெருமாள்-முருகன்!
மாயோன்-சேயோன் = விஷ்ணு-ஸ்கந்தன் என்று ஆகி வடக்கே சென்றனர்!

* ஆனால் போன இடத்தில், மாயோன் என்ற விஷ்ணுவைக் கொண்டாடிய அளவுக்கு, ஏனோ சேயோன் என்னும் ஸ்கந்தனை அதிகம் கொண்டாடவில்லை!
* முல்லை நில முதல்வனை, மும்மூர்த்திக்குள் ஒருவராய் வைக்க முடிந்த அளவுக்கு, குறிஞ்சி நில முதல்வனை ஏனோ வைக்கவில்லை!


இத்தனைக்கும் முல்லையின் கண்ணன் கருப்பு! குறிஞ்சியின் முருகன் தான் வெள்ளை! :)

ஒரு வேளை, கண்ணனை ஒத்திருந்த கதைகள் அங்கு ஏற்கனவே இருந்ததோ என்னவோ, இயல்புக்கும் இணைப்புக்கும் ஈசியாய் இருந்தது போலும்!
ஆனால் ஸ்கந்தனுக்கு "முதன்மை" காட்டவில்லையே தவிர, ஸ்கந்த புராணம், தேவர் படைத் தலைவன், பிரணவம் சொன்னவன் என்று அவர்களும் ஏற்றுக் கொண்டு போற்றத் தான் போற்றினர்!

இங்கிருந்த போது, இயற்கை முறைப்படி இருவருக்குமே இயல்பான மனித உருவம் தான்!
அங்கு சென்றவுடன், நான்கு கரம்/பன்னிரு கரம், ஒரு முகம்/ஆறு முகம் என்று வேறு விதமான பரிணாம வளர்ச்சி! :)

இங்கிருந்து சென்ற இரு குழந்தைகள்! அங்கு ஒரு குழந்தை மாநிலத்துக்கே முதல்வராகி விட்டது! இன்னொரு குழந்தை மாநகரத்துக்கு மட்டும் கமிஷனர் ஆகி விட்டது! :)
* அவர்கள் ரொம்பவும் ஏற்றுக் கொள்ளாத குழந்தை "மட்டுமே", இனிமேல் என் குழந்தை!
* அவர்கள் அதிகம் ஏற்றுக் கொண்ட குழந்தை, இனிமேல் என் குழந்தை அல்ல! - என்று தமிழ்த் தாய் சொல்வாளா?


அப்படி ஒரு தாய் சொல்லுவா-ன்னு சொல்றவங்க கையைத் தூக்குங்க ப்ளீஸ்! :))))))
நினைவில் வையுங்கள்: எங்கு சென்றாலும், எப்படி இருந்தாலும், மாயோனும் சேயோனும் என்றென்றும் தமிழ்க் கடவுளரே!


* நாரணம் = நாரம் + அணம் = நீர் + வழி (தமிழில்)
* நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் (வடமொழியில்)

சரிப்பா, இலக்கியத்தில் மாயோன் = இன்றளவும் திருமால் = நாட்டு வழக்காய் பெருமாள்! தமிழ்க் கடவுள் தான்! ஒப்புத்துக்கறோம்!
ஆனால் "நாரணம்" எப்படி தமிழ்ச் சொல் ஆகும்? அதைப் "பார்த்தாலே" வடமொழி மாதிரி-ல்ல இருக்கு? :)))))
அதுக்கு பதில் சொல்லு கேஆரெஸ்! அதை விட்டுட்டு, நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற? :)

நாரணம் என்பது தமிழ்ச் சொல்லே! வட சொல் அல்ல!
அது மாயோனின் பெயர் என்பதை விட, அவன் தத்துவத்தைக் குறிக்க வந்த சொல் என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும்!

அவன் பெயர்களான "மாயோன்", "திருமால்" என்ற சொற்களே தொல்காப்பியம் மற்றும் இலக்கியங்களில் எல்லாம் மிக அதிகமாகப் புழங்குமே தவிர,
தத்துவமான "நாரணம்" என்னும் சொல் அதிகம் புழங்காது! இருப்பினும் அதுவும் சங்க இலக்கியத்தில் ஆங்காங்கே குறிக்கப்பட்டுத் தான் உள்ளது!

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
"நாராயணா" என்னாத நா என்ன நாவே?
- என்பது சிலப்பதிகார வரிகள்!

காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் "நாரணன் காப்பு" என்று உரைத்தனன்
- என்பது மணிமேகலை வரிகள்!

இப்படி தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் "நாரணம்" என்பதற்குப் பொருள் தான் என்ன?



குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ


முதலில், தமிழ்-ல அணம்-ன்னா என்ன? = வழி/அருகில் சேர்த்தல் என்று பொருள்!
* இலக்கணம் = இலக்கு + அணம் = மொழியின் இலக்குக்கு "வழி" சொல்வது = Grammar
* காரணம் = கார் + அணம் = கருவுக்கு(Core) "அருகில்" செல்வது = Reason
* ஏரணம் (Logic) = ஏர்(ஏல்) + அணம் = ஏற்றுக் கொள்ளலுக்கு "வழி" சொல்வது = Logic
* நாரணம் = நார் + அணம் = நாரம்(நீர்மை)-க்கு "வழி" சொல்வது!

அணம் = அண்மை என்பதின் வேர்ச்சொல்! அண்மை = அருகில்!
சில சமயம் தொழிற்பெயர் விகுதியாகவும் இது வரும்!
கட்டணம், பொக்கணம், தக்கணம் (தக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்-ன்னு வருது இல்லையா? அதைப் போல-ன்னு வச்சிக்குங்களேன்)

அணம் என்றால் வழி (அ) அருகில் இட்டுச் செல்வது-ன்னு பார்த்தோம்! அப்போ, நாரம் என்றால் என்ன?


* நாரம் = நீரம் = நீர்மை = நீர்
* ஆனால் நாரம் = நாளம் = கருமை என்று கொள்வாரும் உண்டு!

நாளம் என்பதே நாரம் ஆனது என்று சில தமிழ் அறிஞர்கள் கருதுவர்!
காளி=காரி ஆவது போல் நாளம்=நாரம் ஆகிறது! நாள் = இரவு = கருமை!

சங்கத் தமிழில் நாள்-ன்னா இரவு! நாள்->நள்! நள்ளிரவு-ன்னு சொல்றோம்-ல்ல?
இன்னிக்குப் பேச்சு வழக்கில் வேணும்-ன்னா, நாள் என்பது பகலும் இரவும் சேர்ந்த ஒன்று-ன்னு இருக்கலாம்!
ஆனால் பண்டைத் தமிழில், நாள் = இரவு! அந்த இரவால் "பகு"க்கப்படுவது பகல்!

* கருமையான தமிழ்க் கடவுள் மாயோன் = நாள்!
* அவன் அண்மையில் செல்வது = அணம்!
* நாரம் + அணம் = நாரணம்!
ஆனால் நாரம் என்பதற்கு "நீர்மை" என்ற பொருள் தான் தமிழில் மிகவும் பொருந்தி வருகிறது!

= "நாரம்" உண்டு எழுந்தன மேகங்காள்
= நதியின் பெருவலி "நார்" வலி தானே
= நளிர் கடல் "நாரம்" நா உற வேட்கையின் பருகிய மேகம்
= நலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன "நாரம்"
= கடிகொண்ட "நாரம்" அனையன் கொணர்ந்து கரம் உய்ப்ப நுங்கி யெழுவான்
(கந்த புராணம்)
என்று இலக்கியங்களில் எல்லாம் "நாரம்" வருகிறது! நாரம் = நீரம் என்பதே நீர் தொடர்புடைய ஒன்று தான்!

* "நாரத்தை" செடி தெரியும் தானே? மிகுந்த சாறு(நீர்மை) உள்ள பழம் இந்த நாரத்தை!
* "நாரை" என்பதும் நீர் வாழ் பறவை தான்!
* "நார்"ச் சத்து-ன்னு சொல்வாங்களே! அதாச்சும் Dietary Fibre! செடிகளில் நீரை உறிஞ்சிச் சேர்க்கப்படும் சத்துக்கு நார்ச்சத்து என்றே பெயர்! பழமும் ஈரமா, நார் நாரா இருக்கும்! Fibre சத்து "கரைக்க" வல்லது! ஜீரணம் (அ) உணவுக் கரைசலுக்கு உகந்தது!


இப்போது புரிகிறது அல்லவா?
* நாரம் = நீர்மை (அ) நீர்த் தன்மை!
* அணம் = அருகில் செல்லல் (அ) அப்படிச் செல்லும் வழி!

ஏன் இந்த நீர்மை? = பரிணாமக் கொள்கையின் படி, முதல் உயிரினம், நீரில் தான் தோன்றியது! பின்பு தான் ஒவ்வொன்றாகப் பரிணாம வளர்ச்சி!
எவ்வளவு பரிணமித்தாலும், எல்லா உயிர்களுக்கும் நீர் கட்டாயம் தேவை! இன்றும் மனித உயிர்கள் கர்ப்பத்து "நீரில்" மிதந்து விட்டுத் தான் பிறக்கின்றன!

நீர் இன்றி அமையாது உலகு என்பது குறள்!
அது போல் அவன் இன்றி அமையாது உலகு என்பதால் நீரணன்! நாரணன்!

ஊழி என்பது இயற்கைச் சுழற்சிப் பரிணாமம்! அதைப் பரிபாடல் காட்டுகிறது!
1. ஆகாய ஊழி = Big Bang
2. காற்று ஊழி = ஆகாயத்தில் இருந்து காற்று
3. நெருப்பு ஊழி = காற்றில் இருந்து நெருப்பு
4. நீர் ஊழி = நெருப்பில் இருந்து நீர்
5. மண் ஊழி = "நீரில்" இருந்து உயிர்கள்!

...பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
ஊள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்

...
ஊழி யாவரும் உணரா
"ஆழி முதல்வ" நிற் பேணுதும் தொழுதும்

என்று ஊழி முதல்வனாய், ஆழி முதல்வனைக் காட்டுகிறது பரிபாடல் செய்யுள்!

தானோர் உருவே தனிவித்தாய்த்
மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் "பெருநீர்" தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா"மாயோன்"


இப்போது புரிகிறது அல்லவா?
* நாரம் = நீர்மை! அணம் = அருகில் செல்லும் வழி!
* நீர்-மையுள்ள மாயோனுக்கு அருகில் செல்வது = நாரணம்!


மேலே உள்ள "நீர்"-மைக் கருத்துக்கள் பற்றித் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் பின்னூட்டத்தில் உரையாடுங்கள்! இதற்கு செம்மை சேர்க்க உதவுங்கள்!

இப்போ வடமொழியில் "நாராயணம்" பற்றியும் கொஞ்சம் லேசுமாசா பாத்துருவோம்!

அட, அப்படிப் பார்க்கலீன்னா என் கதி அதோ கதி தாங்க! பந்தல் சாஸ்திர விரோதமானது-ன்னு சில ஆன்மீக அன்பர்கள் என்னைய ஒதுக்கியே வச்சிருவாங்க! :))
இராமானுசன் என்று தான் நாலாயிரப் பாட்டில் கூட வருது!
ஆனா, ஏதோ நான் தான் வேணும்-ன்னே, இராமானு"ஜ"ன் என்று எழுதாம, இராமானு"ச"ன்-ன்னு எழுதறேன்-ன்னு ஏற்கனவே கோப தாபங்கள் வேற இருக்கு! :)

அது என்னமோ தெரியலை, மத்தவங்க என்ன வேணும்-ன்னாலும் சொல்லலாம்! ஆனா கேஆரெஸ்-ன்னா மட்டும் எல்லாருக்கும் நல்ல பிள்ளையா நடந்துக்கணும்-ன்னு ஒரு "எதிர்பார்ப்பு"! அப்படி நடந்துக்கலீன்னா "மனக்கசப்பு"! என்ன கசப்போ போங்க! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே! :))
எது-ன்னாலும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், "மெய்ப்" பொருளை
1. அறிய விழைவதும்,
2. அறியத் தருவதும்,
3. அறியக் கேள்வி கேட்டு, ஐயம் நீங்க உரையாடுவதும் கூட "பகவத் கைங்கர்யமே"!



நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் = நீரை இடமாகக் கொண்டவன் (வடமொழியில்)
-> நாரம் = அனைத்துக்கும் மூலமான நீர்! பிரளய ஜலம் முதற்கொண்டு அனைத்து நீர் ஆதாரங்களுக்குமான ஆதாரம்! ஆபோ "நாரா" இதி ப்ரோக்தா...பூர்வம் தேன "நாராயண" ஸ்மிருதா:
-> அயணம் = இடம் (இடத்துக்கு வருதல்)! இராமாயணம், உத்தராயணம், தக்ஷிணாயணம்-ன்னு எல்லாம் சொல்றாங்க-ல்ல?

கிட்டத்தட்ட, தமிழில் பார்த்த "நாரணம்" என்பதற்கு என்ன பொருளோ, அதே பொருள் தான் "நாராயணம்" என்று வடமொழியிலும் இருக்கு!

இது போல் தமிழில் இருந்து கடன் வாங்கப்பட்ட வடமொழிச் சொற்களை இராம.கி ஐயா பல பதிவுகளில் சொல்லி இருக்கார்! ஆதி, பகவன் போன்ற பல தமிழ்ச் சொற்களைப் போலவே நாரணம் என்பதும் ஒன்று!


வடமொழியில் இன்னொரு பொருளும் "நாராயணம்" என்பதற்குச் சொல்லப்படுவது உண்டு! இதை மகான் ஆதி சங்கரரும் தனது சங்கர பாஷ்யம் என்னும் உரை நூலில் உறுதிப் படுத்துகிறார்!

* நரம் = மனிதன்/உயிர் "தான்" என்னும் செருக்கு/உணர்வு உள்ள உயிர்!
* நாரம் = உயிர்கள்! ஒட்டு மொத்த நரமும் சேர்ந்தால் நாரம்!
* அயணம் = இடம் புகல்-இடம்/தஞ்சம்

மொத்த நரத்துக்கும் புகல்-"இடமாய்" இருப்பது எதுவோ, அதுவே நாராயணம்! அதுவே பரம்!
நாராயண பரோ ஜோதிர், ஆத்மா நாராயண பரோ!
நாராயண பரப் பிரும்ம, விஸ்வ ஆத்மனம் பராயணம்!
- என்பது வேதம்!

சைவக் குடும்பத்தில் வந்துதித்த ஆதி சங்கரரும், வேதங்களுக்கு உரை நூலான தன்னுடைய பாஷ்யத்தில், "நாராயண" பரம் என்று சொல்லியே ஆரம்பிக்கிறார்!
நாராயண பரோ வக்யாத், அண்டம் அவ்யக்த சம்பவம்! என்று தான் சங்கர பாஷ்யமே தொடக்கம்!


இப்படி, நம் செந்தமிழிலும், வடமொழியிலும் "நாரணம்" என்பது நீர்-மையை ஒட்டியே பேசப்படுகிறது! ஏன்?

Water is colorless, odourless, tasteless, formless!
Yet will take color, odour, taste, form!
* நீர், கொள்ளும் கலத்துக்கு ஏற்ற வடிவம் பெறுவது போல்,
* நாராயணன், நாம் எப்படிக் கொள்கிறோமோ, அப்படி வடிவம் கொள்கிறான்!

ஆவியான மேகத்தின் நீர்,
கடலில் இருந்து வந்த உப்பு நீரா? ஆற்றில் இருந்து வந்த நல்ல நீரா?
குட்டை நீரா? கூவம் நீரா? என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாதபடி இருப்பது போல்...

இறைவனின் நீர்-மையில் சேரும் உயிர்களை,
நல்லவர்-தீயவர், தேவர்-அசுரர், ஆண்-பெண், சாதி-மதம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவே முடியாது!
அனைவரும் அடியார்களே! பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே!

அதான் ஆலயங்களிலும் தீர்த்தமாக, அவனையே பருகத் தருகிறார்கள்! = நீர்-மையான அவனை, நம்முள், உள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்! விளக்கப் பதிவு இங்கே!

இப்படி நீர் இன்றி அமையாது உலகு என்னும் படிக்கு,
நீராகப் பரவி நிற்கும்...நீர்-மையான்...
"நீராயணன்-நாராயணன்" திருவடிகளே சரணம்!


கோபுரத்தின் மேல் இருந்து, குருவையும் மீறி, ஊருக்கே அப்படி என்ன தான் சொன்னாரு? ஓம் நமோ Dash கேட்டு ஊரே திருந்திருச்சா? :).....அடுத்த பதிவில்...(தொடரும்)

66 comments:

  1. //நீர்-மையான்//

    அருமையான யோசித்தல். அருமையா இருக்கு.

    ReplyDelete
  2. தக்கணம் என்பது கூட தெற்கு அணம் (தெற்கு பக்கத்தில்) என்பதன் மருவல் ஆக இருக்கலாம்

    ReplyDelete
  3. அண்ணா, படிச்சு முடிக்கிறதுக்கே மூச்சு முட்டுது. இவ்வளவு விளக்கங்களும் மலைக்க வைக்கின்றன. ரெண்டு மூணு முறை படித்துவிட்டு விவாதத்தில் கலந்துக்கிறேன்.

    ReplyDelete
  4. //Raghav said...
    அண்ணா, படிச்சு முடிக்கிறதுக்கே மூச்சு முட்டுது. இவ்வளவு விளக்கங்களும் மலைக்க வைக்கின்றன. ரெண்டு மூணு முறை படித்துவிட்டு விவாதத்தில் கலந்துக்கிறேன்
    //


    >>>>>>>>>>>>>>>

    ராகவன் வழியில் திருவரங்கப்ரியாவும்..... உள்வாங்கிப்படிக்கணும் இதெல்லாம் நுனிப்புல் மேயக்கூடாது ....சொல்ப டைம் பேக்கு!

    ReplyDelete
  5. //Raghav said...
    அண்ணா, படிச்சு முடிக்கிறதுக்கே மூச்சு முட்டுது. இவ்வளவு விளக்கங்களும் மலைக்க வைக்கின்றன. ரெண்டு மூணு முறை படித்துவிட்டு விவாதத்தில் கலந்துக்கிறேன்
    //


    >>>>>>>>>>>>>>>

    ராகவன் வழியில் திருவரங்கப்ரியாவும்..... உள்வாங்கிப்படிக்கணும் இதெல்லாம் நுனிப்புல் மேயக்கூடாது ....சொல்ப டைம் பேக்கு!

    ReplyDelete
  6. // சின்ன அம்மிணி said...
    //நீர்-மையான்//

    அருமையான யோசித்தல். அருமையா இருக்கு//

    நன்றி-க்கா!
    அது என்ன ரெண்டு வாட்டி அருமை? :)
    நீர்-மை என்று இரண்டுமே (நீரும், மையும்) வராப்போலத் தான் சொல்ல முயன்றேன்! :)

    ReplyDelete
  7. //supersubra said...
    தக்கணம் என்பது கூட தெற்கு அணம் (தெற்கு பக்கத்தில்) என்பதன் மருவல் ஆக இருக்கலாம்//

    ஆமாங்க! பொருந்தியே வருகிறது!

    ReplyDelete
  8. //Raghav said...
    அண்ணா, படிச்சு முடிக்கிறதுக்கே மூச்சு முட்டுது//

    மாப்பிள்ளை விநாயகர் எலுமிச்சை சோடா ஒடைச்சிக் குடுக்கவா ராகவ்? :)

    //இவ்வளவு விளக்கங்களும் மலைக்க வைக்கின்றன//

    :)
    இந்த முறை ரொம்ப வெளக்கமாப் போயிரிச்சா? வேற வழியில்லை! சொல்லி ஆகணும்-ல்ல?

    //ரெண்டு மூணு முறை படித்துவிட்டு விவாதத்தில் கலந்துக்கிறேன்//

    ஓ விவாதத்துக்கு வேற வரப் போறீயா? சரி சரி! தயார் ஆகிக்குறேன்! :)

    ReplyDelete
  9. //ஷைலஜா said...
    ராகவன் வழியில் திருவரங்கப்ரியாவும்.....//

    ராகவன் இருப்பது ஆம்ஸ்டர்டாமில்! அப்பறம் எப்படி நீங்க ராகவன் வழியில்? :))

    //உள்வாங்கிப்படிக்கணும் இதெல்லாம் நுனிப்புல் மேயக்கூடாது ....//

    நுனிப்புல் உஷாக்கா அனுமதிச்சா நுனிப்புல் மேயலாம்! :))

    //சொல்ப டைம் பேக்கு!//

    நிமகேன்னா? வாபஸ் எவுக பருத்துரே?

    ReplyDelete
  10. அற்புதமான விளக்கம்

    /வாரணம் அரற்ற வந்து.
    கரா உயிர் மாற்றும் நேமி
    நாரணன் ஓக்கும். இந்த‌
    நம்பிதன் கருணை என்பார்.
    ஆரணம் அறிதல் தோற்றா
    ஐயனை அணுக்கி நோக்கி
    காரணம் இன்றியேயும்
    கண்கள் நீர் கவழ நிற்பார்./

    நீரைப் பற்றி சொல்லும் இந்த வரிகள் நினைவிற்கு வருகிறது

    /
    நீர் உளஎனின் உள. மீனும் நிலமும் :
    பார் உளஎனின் உள. யாவும் : பார்ப்பறின்
    நாள் உள தனு உளாய் ! நானும் சீதையும்
    ஆர் உளர் எனின் உளம் ? அருளுவாய் ! என்றான்./

    நீர் என்பதற்கு வெண்மை என்றும் பொருளுண்டு.

    நாரை,நுரை,நரை ‍ - வெண்மையின் அடிப்படையில் தோன்றிய சொற்கள்

    தங்களின் விளக்கம் திகைக்க வைக்கிறது.
    மொழியில் முழ்கினால் முத்துகள் எடுக்க முடியும்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  11. அற்புதமான சிந்தனை! நல்ல விளக்கங்கள்...ஓரளவு புரிஞ்சிது இப்போ... அதனால் நீரானவருக்கு காற்றாய் வீச பின்னூட்டத்தென்றலை அனுப்பிவைக்கிறேன்!

    ReplyDelete
  12. //நாரணம்" என்ற பெயரே கொஞ்சம் சிக்கலானது தான்!
    பல உண்மைகளை உள்ளடக்கியது! ஒரு நல்ல அழகான தொன்மையான தமிழ்ச் சொல்லைப் பார்த்து, "இது தமிழ்ச் சொல் தானா?" என்று கூட கேட்க வைப்பது! ஹா ஹா ஹா :))

    என் முருகப் பெருமானுக்கு இந்தக் கஷ்டமே இல்லை! முருகன்=அழகன்-ன்னு ஈசியா சொல்லிட்டுப் போயீரலாம்! அம்புட்டு எளிமையானவன்! செல்லமானவன்/////

    சரி சரி,,,’முருக ஐஸ்’ இப்போ எதுக்காம்? நீங்க எழுதறதைப்பாத்து குறும்புச்சிரிப்பு சிரிக்கறார் பாருங்க திருத்தணி முருகன்!

    ReplyDelete
  13. // இனிமேல் என் குழந்தை அல்ல! - என்று தமிழ்த் தாய் சொல்வாளா?

    அப்படி ஒரு தாய் சொல்லுவா-ன்னு சொல்றவங்க கையைத் தூக்குங்க ப்ளீஸ்! :))))))
    நினைவில் வையுங்கள்: எங்கு சென்றாலும், எப்படி இருந்தாலும், மாயோனும் சேயோனும் என்றும் தமிழ்க் கடவுளரே!
    ///>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    யாராலும் இதை மறுக்கமுடியாதே...கையைத்தூக்கமுடியாதுபோங்க ஸார்!(என்னவோ ஸ்கூல்வாத்தியார்மாதிரிதான் பேசறீங்க):)

    ReplyDelete
  14. முதலில், தமிழ்-ல அணம்-ன்னா என்ன? = வழி/அருகில் சேர்த்தல் என்று பொருள்/////



    ராமாயணம் கூட ராமன் வழி எனும் பொருளில் வருமோ?

    ReplyDelete
  15. //
    * காரணம் = கார் + அணம் = கருவுக்கு(Core) "அருகில்" செல்வது = Reason
    * ஏரணம் (Logic) = ஏர்(ஏல்) + அணம் = ஏற்றுக் கொள்ளலுக்கு "வழி" சொல்வது = Logic
    * நாரணம் = நார் + அணம் = நாரம்(நீர்மை)-க்கு "வழி" சொல்வது!

    ////


    நல்ல விளக்கம் அதிலும் கார் அணம் ஆஹா இப்படியெல்லாம் சிந்தித்ததே இல்லை.

    ReplyDelete
  16. நாரம்" உண்டு எழுந்தன மேகங்காள்
    = நதியின் பெருவலி "நார்" வலி தானே
    = நளிர் கடல் "நாரம்" நா உற வேட்கையின் பருகிய மேகம்
    = நலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன "நாரம்"
    = கடிகொண்ட "நாரம்" அனையன் கொணர்ந்து கரம் உய்ப்ப நுங்கி யெழுவான் (கந்த புராணம்)
    என்று இலக்கியங்களில் எல்லாம் "நாரம்" வருகிறது! நாரம் = நீரம் என்பதே நீர் தொடர்புடைய ஒன்று தான்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    இலக்கியங்களில் இன்னும் படித்த நினைவு இந்தச்சொல்லினை இப்போ நினைவில்லை பார்க்கிறேன் நினைவுவந்தால் நாரம் வரும் வரிகள் ஏதும்கிடைத்தால் இங்கு ந்தருகிறேன்

    ReplyDelete
  17. //இப்போது புரிகிறது அல்லவா?
    * நாரம் = நீர்மை! அணம் = வழி!
    * நீர்-மையுள்ள மாயோனுக்கு அருகில் செல்வது = நாரணம்!

    மேலே உள்ள நீர்மைக் கருத்துக்கள் பற்றித் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் பின்னூட்டத்தில் உரையாடுங்கள்! இதற்கு செம்மை சேர்க்க உதவுங்கள்!
    ////

    ஆர்வமுடன் உரையாட நான் தயார்.திகழ்மிளிர்பதிவிலும் படித்தேன் மிக அருமையாய் எழுதி இருக்கிறார். தமிழை வளர்க்கும் உங்களைப்போன்றவர்களின் பூமாலையில் நாராக( அட இங்கயும் நார்?:)) நான் வருவதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  18. //இறைவனின் நீர்-மையில் சேரும் உயிர்களை,
    நல்லவர்-தீயவர், தேவர்-அசுரர், ஆண்-பெண், சாதி-மதம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவே முடியாது!
    அனைவரும் அடியார்களே! பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே!

    அதான் ஆலயங்களிலும் தீர்த்தமாக, அவனையே பருகத் தருகிறார்கள்! = நீர்-மையான அவனை, நம்முள், உள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்! விளக்கப் பதிவு இங்கே!

    இப்படி நீர் இன்றி அமையாது உலகு என்னும் படிக்கு, நீராகப் பரவி நிற்கும்...நீர்-மையான்...
    "நீராயணன்-நாராயணன்" திருவடிகளே சரணம்//

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    குலம் தரும் செல்வம்தரும் அடியார்படுதுய்ராயினவெல்லாம் நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும் வலம் தரும் மற்றும் தரும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்!

    ஆழ்வார் உணர்ந்துபாடியதின் அர்த்தம் இப்போதல்லவா புரிந்து உணரவும் முடிகிறது? புண்ணியமெல்லாம் ரவிக்கே! வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. V. Dhivakar Sir in email...

    Awsome KRS, Quite Interesting. Some more Inputs from other blogs on Narayana.

    The famous philosopher Dr.Surendranath Dasgupta in his monumental History of Indian philosophy makes an interesting observation. He says that while Bhagavad Gita does not use the term Narayana, the Mahabharata identifies Narayana with Vishnu. This, according to him, could show that Bhagavad Gita was composed much before Mahabharata tale was reduced to writing. He opines, Bhagavad Gita was composed when Narayana was yet to be equated with Vishnu.


    6.1. The term Narayana is a compound of Nara (Man, more particularly the foundation of all men) and Ayana (the goal); meaning, Narayana is he who directs towards the ultimate goal moksha of the humans. In Mahabharata, Krishna is often referred to as Narayana and Arjuna as Nara. Here Narayana guides Nara the man towards true understanding and liberation. The epic, in fact, commences with salutations to Narayana and Nara.

    6.2. The expression Narayana also suggests several other meanings; the more common of which are: ‘that which does not perish’; ‘the spirit that abides (ayana) in the water (Nara, apah) of existence’ and being the ‘goal of all knowledge’. Narayana’s association with water is very intimate. Narayana, it is said, not only resides in water but is the very essence of water. These explanations are meant to suggest that Narayana is an infinite cosmic ocean from which all creation arises, in which all beings live and into which all that exists resolves.

    6.3. Further , the creation and destruction of the universe, it is believed, is neither its beginning nor its end. They are just segments of a long spread out cyclical process. When creation is withdrawn, the universe does not totally cease or is it wiped out. The universe that was destroyed persists in a subtle form as a reminder of what once was; and as a germ of what will be the next universe. That potent reminder (Sesha) of the destroyed universe is embodied in Sesha the serpent coiled itself and floating upon limitless ocean of casual waters. Sesha whose other name is Anantha (the endlessness) represents the non-evolved form of nature (prakrti).Vishnu the pervader and preserver rests on Sesha floating on water, until he wills the next cycle of creation. Vishnu then is Narayana the one who abides in water . Narayana also means ‘the abode of man and of all existence’.

    [There is an interesting sidelight to Narayana’s association with water. It was mentioned to me; and am not sure if it is based in a text. This has reference to the ever –going conflict between two powerful sages of the early Vedic era – Brighu and Angirasa. Brighu was the son of Varuna the Vedic deity of water-principle. The Brighu clan and followers were close to life on rivers and seas.The vast stretch of the mouths of the mighty Sarawathi as it branched into number of rivulets and joined the occasion was the domain of the Brighus. The Brighus were the people of the sea. The Angirasas were, on the other hand, closely associated with mountains, hills, dales, and vast open spaces; they lived mainly in the foothill regions of the Himalayas. The Angirasas were mountain dwellers.

    The myth of churning sea-water with a mountain-head is largely seen as a symbolic representation of the oscillating conflict between the people of the sea (Brighus - Asuras) and the people of the hills (Angirasas- Devas).The Angirasas eventually won the battle; Vishnu the leader of the Angirasas (Devas) took Lakshmi (aka Bhargavi meaning Brighu’s daughter), the daughter of the vanquished sea-people, as his wife. Vishnu also derived his riches like the Kaustuba gem, Panchajanya etc from the sea; and resided among the people of the sea (Brighus). Vishnu who in early Rig Veda was a mountain dweller (giristha) eventually made his home in water. He became Narayana. ]
    .
    http://ssubbanna.sulekha.com/blog/post/2009/07/vishnu-dwadashanamas-part-two.htm

    Dhivakar

    ReplyDelete
  20. நாரணம் என்பது தமிழ்ச் சொல்லே! வட சொல் அல்ல!
    அது மாயோனின் பெயர் என்பதை விட, அவன் தத்துவத்தைக் குறிக்க வந்த சொல் என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும்
    //ORIGIN AND HISTORY
    Narayana is a Sanskrit name, and there are several possible meanings. The most probable interpretation of this name is "son of man," or "son of Primal man," since that is the translation given by Sanskrit dictionaries.[1] The root word nara refers to "man", although it may also be interpreted as "water."[1] The association with water refers to the god Narayana, who was said to be omniscient and infinite as the ocean.[1]

    Variations on the meaning of Narayana include "path of man,"[1], "eternal man"[1] and "the abode of beings."[1] The numerous meanings can be attributed to the ambiguous interpretations of the two parts of the name, nara and ayana. This is a complicated name, with many shades of meaning.

    In Hindu tradition, Narayana is another name of the important god Vishnu. Chanting the name Narayana is said to destroy evil and uplift the fallen.[1]//
    //YOUR ARE TRYING TO EXPLAIN...THE UNEXPLAINABLE....DON'T DO THE FOOLISHNESS AGAIN...MR.nara.alias MAANIDA.I think your ...AYANA OR GOAL....is to create chaos..//

    ///vara vara oohnoda ULARAL adhigamayiduchi...///

    oyallu...oyallu ...goyalluu

    SWAMI AVADUDHA

    ReplyDelete
  21. அயணம் என்றால் இடம் என்று வடமொழியில் பொருளா? ராமாயண: என்ற வட சொல்லுக்கு இராமனின் இடம் என்று பொருளா? அங்கே வேறு பொருள் கொள்ள வேண்டுமா?
    தக்ஷிணாயண:, உத்தராயண: என்பவற்றிலும் அயண என்பதற்கு இடம் என்று தான் பொருள் கொள்ள வேண்டுமா?
    ***

    //மாயோன்-சேயோன் = விஷ்ணு-ஸ்கந்தன் என்று ஆகி வடக்கே சென்றனர்!//

    அப்படியா?

    ***
    'சேவடி செவ்வித் திருக்காப்பு' என்று பிற்காலத்தில் பெரியாழ்வார் பாடியது அவர் காலத்தில் தோன்றியதில்லை; சங்க காலத்திலேயே 'நாரணன் காப்பு' என்று விண்ணவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது மணிமேகலை வரியால் தெரிகிறது.

    ReplyDelete
  22. ரவி அண்ணா, இந்தப் பதிவு என்னுள் நிறைய கேள்விகளை எழுப்பி விட்டது... இன்னமும் நிறைய விஷயங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.. இந்தத் தொடரை நிறைவு செய்தவுடன், எனது அனைத்துக் கேள்விகளையும் அனுப்புகிறேன்.. பதிவாகப் போட்டால் மகிழ்வேன்... குமரனும் இணையும் பட்சத்தில் எனக்கு விருந்துச் சாப்பாடே கிடைத்த மாதிரி இருக்கும். குமரன் விரைந்து வாருங்கள்.

    ReplyDelete
  23. நாராயண சமுத்திரத்தில் மூழ்கினேன். எழுந்து வர மனமில்லை!

    - விஜயசாரதி

    ReplyDelete
  24. கொஞ்ச நாள் காய்ச்சல்-ல இருந்ததால் வீட்டில் இல்லை! அதான் எட்டிப் பார்க்க முடியலை! Sorry Folks :)

    யாருப்பா இந்த ஸ்வாமி அவதூதா? படா ஆளா இருப்பாரு போல இருக்கே! :)

    ReplyDelete
  25. //Anonymous said...
    //நாரணம் என்பது தமிழ்ச் சொல்லே! வட சொல் அல்ல!//
    ORIGIN AND HISTORY
    Narayana is a Sanskrit name, and there are several possible meanings.//

    வாங்க ஸ்வாமிகளே அவதூதா! :)
    "நாராயணம்" என்பது வடமொழிச் சொல்லு தான்!
    "நாரணம்" என்பது தான் தமிழ்ச் சொல்லு-ன்னு சொல்லி இருக்கேனே! ஸ்வாமிகளுக்கு ஞானக் கண் மட்டும் தானோ? ஊனக் கண் இல்லையோ? :))

    //YOUR ARE TRYING TO EXPLAIN...THE UNEXPLAINABLE....DON'T DO THE FOOLISHNESS AGAIN...//

    Foolishness? U mean Arivu illaamai?
    ஹிஹி! "அறிவொன்றும் இல்லாத" ஆய்க்குலத்து உன் தன்னைப்
    பிறவிப் பெறும்தனை புண்ணியம் யாம் உடையோம்!
    We want to be foolish, swamiji! :))

    //MR.nara.alias MAANIDA.I think your ...AYANA OR GOAL....is to create chaos..//

    ஹா ஹா ஹா! நான் நரனா? வாவ்! என் நாரணன் எங்கே? :)

    ///vara vara oohnoda ULARAL adhigamayiduchi...///

    நன்றி! :)

    //oyallu...oyallu ...goyalluu//

    இது சத்தியமா உளறல் இல்லை! சுவாமிகள் மகா வாக்யம் போல! :)))

    ReplyDelete
  26. //vijay said...
    நாராயண சமுத்திரத்தில் மூழ்கினேன். எழுந்து வர மனமில்லை!//

    :)
    ஆழியுள் புக்கு
    முகந்து கொண்டு
    ஆர்த்து ஏறி
    வாருங்கள் விஜய்!

    ReplyDelete
  27. //Raghav said...
    ரவி அண்ணா, இந்தப் பதிவு என்னுள் நிறைய கேள்விகளை எழுப்பி விட்டது...//

    ஹைய்யோ! :)

    //இன்னமும் நிறைய விஷயங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறேன்..//

    ஹைய்யய்யோ! :)

    //இந்தத் தொடரை நிறைவு செய்தவுடன், எனது அனைத்துக் கேள்விகளையும் அனுப்புகிறேன்.. பதிவாகப் போட்டால் மகிழ்வேன்... //

    கிழிஞ்சுது கிருஷ்ணகிரி! :)
    யப்பா ராகவ்! உனக்கு ஏன்பா இம்புட்டு கேள்வி கேக்கக் தோனுது? அதும் இங்கன மட்டும்? கூடலம்பதி, மதுரையம்பதி, திருப்பதி-ன்னு எத்தனை பதிகள் இருக்கு? பந்தல் தானா கெடைச்சுது? :)

    //குமரனும் இணையும் பட்சத்தில் எனக்கு விருந்துச் சாப்பாடே கிடைத்த மாதிரி இருக்கும்//

    பாவம் அவரு! அவரை வச்சி நீ விருந்து சாப்பிடத் திட்டம் போடுறியா? :)

    //குமரன் விரைந்து வாருங்கள்//

    நீங்க குமரனை அழைச்சா, நான் எங்க ராகவனை அழைக்கிறேன்!
    ராகவா, விரைந்து வாடா! மயில் மீது விரைந்து வாடா :)

    ReplyDelete
  28. //குமரன் (Kumaran) said...
    'சேவடி செவ்வித் திருக்காப்பு' என்று பிற்காலத்தில் பெரியாழ்வார் பாடியது அவர் காலத்தில் தோன்றியதில்லை; சங்க காலத்திலேயே 'நாரணன் காப்பு' என்று விண்ணவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது மணிமேகலை வரியால் தெரிகிறது//

    சரியாப் புடிச்சீங்க பாயிண்ட்டை! :)

    //
    //மாயோன்-சேயோன் = விஷ்ணு-ஸ்கந்தன் என்று ஆகி வடக்கே சென்றனர்!//

    அப்படியா?//

    ஹிஹி! அப்படியா குமரன்? :))

    ReplyDelete
  29. @குமரன்
    //அயணம் என்றால் இடம் என்று வடமொழியில் பொருளா?//

    பதிவில் சொல்லி இருக்கேன் பாருங்க!

    அயணம் = இடம் (இடத்துக்கு வருதல்)!

    //ராமாயண: என்ற வட சொல்லுக்கு இராமனின் இடம் என்று பொருளா?//

    இராமன் இடத்துக்கு வருதல் என்று பொருள்!

    //தக்ஷிணாயண:, உத்தராயண: என்பவற்றிலும் அயண என்பதற்கு இடம் என்று தான் பொருள் கொள்ள வேண்டுமா?//

    சூரியன்...
    தட்சிண (தெற்கு) இடத்துக்கு வருதல் தட்சிண அயணம்
    உத்தர (வடக்கு) இடத்துக்கு வருதல் உத்திர அயணம்!

    ReplyDelete
  30. //திகழ்மிளிர் said...
    அற்புதமான விளக்கம்//

    நன்றி திகழ்மிளிர்!

    /வாரணம் அரற்ற வந்து.
    கரா உயிர் மாற்றும் நேமி
    நாரணன் ஓக்கும். இந்த‌
    நம்பிதன் கருணை என்பார்.
    ஆரணம் அறிதல் தோற்றா
    ஐயனை அணுக்கி நோக்கி
    காரணம் இன்றியேயும்
    கண்கள் நீர் கவழ நிற்பார்./

    கம்பராமாயணம் தானே திகழ்மிளிர்?
    நல்ல அழகான பாடல்! பொருள் சொல்லுங்களேன்! :)
    வாரணம் அரற்ற = யானை ஆதிமூலமே-ன்னு கத்த...இந்த ஒரு வரி தான் எனக்குப் புரிகிறது! :)

    //நீர் என்பதற்கு வெண்மை என்றும் பொருளுண்டு//

    உம்! அப்படியா?

    //தங்களின் விளக்கம் திகைக்க வைக்கிறது//

    ஆகா! திகைப்பா! தப்பா ஏதும் சொல்லிட்டேனா?

    //மொழியில் முழ்கினால் முத்துகள் எடுக்க முடியும்//

    மூழ்காமலேயே உங்க பின்னூட்டத்தின் வாயிலாகவும் முத்தெடுக்க முடியுமே! :)

    ReplyDelete
  31. //ஷைலஜா said...
    சரி சரி,,,’முருக ஐஸ்’ இப்போ எதுக்காம்?//

    ஹிஹி! முருகன் எப்பமே உள்ளம் கவர் கள்வன் தானே-க்கா எனக்கு!
    கள்வனைப் பத்தி ரொம்ப வெளிப்படையா பேச மாட்டேனே! :)

    பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள்! புகுந்த வீட்டைப் பத்தியோ, கணவனைப் பத்தியோ வெளிப்படையா பேசுறாங்களா?

    எப்பமே பொறந்த வீட்டுப் புராணம் தானே! அப்படித் தான் எனக்கும்! கண்ணன் தலைவன்! அவன் புராணம் தான் ரொம்ப வாசிப்பேன்! தொழியின் உத்தரவு வேற!

    ஆனாலும் புகுந்த வீட்டுக் கள்ளன், கள்ளன் தான்! :)))

    //நீங்க எழுதறதைப்பாத்து குறும்புச்சிரிப்பு சிரிக்கறார் பாருங்க திருத்தணி முருகன்!//

    வள்ளியை ஆட்கொண்ட திருத்தணிகையாச்சே! அதான் சிரிக்கிறாரு! :)

    ReplyDelete
  32. //ஷைலஜா said...
    ராமாயணம் கூட ராமன் வழி எனும் பொருளில் வருமோ?//

    இல்லைக்கா!
    இராமா + அயணம் = இராமன் வருதல்! இராமன் இடத்துக்கு வருதல்!

    அயணம் வடமொழிச் சொல்! = இடத்துக்கு வருதல்
    அணம் தமிழ்ச் சொல்! = வழி!

    * வடமொழி = நாராயணம் = நீர் + இடம்
    * தமிழ் = நாரணம் = நீர் + வழி

    ReplyDelete
  33. // ஷைலஜா said...
    நல்ல விளக்கம் அதிலும் கார் அணம் ஆஹா இப்படியெல்லாம் சிந்தித்ததே இல்லை//

    :)
    அதான் காரணம்! நன்றி-க்கா!

    //இலக்கியங்களில் இன்னும் படித்த நினைவு இந்தச்சொல்லினை இப்போ நினைவில்லை பார்க்கிறேன் நினைவுவந்தால் நாரம் வரும் வரிகள் ஏதும்கிடைத்தால் இங்கு ந்தருகிறேன்//

    அவசியம் தாங்க!
    நாரம் என்ற தமிழ்ச் சொல்லைப் பதிக்கப் பதிக்கத் தான்,
    புழக்கம் வரும்! புழுக்கம் தீரும்! :)

    இப்படி ஒளிந்து கொண்டுள்ள அழகிய தமிழ்ச் சொற்கள் எத்தனை எத்தனையோ!

    ReplyDelete
  34. //ஷைலஜா said...
    ஆர்வமுடன் உரையாட நான் தயார்.திகழ்மிளிர்பதிவிலும் படித்தேன் மிக அருமையாய் எழுதி இருக்கிறார்//

    ஆமாம்! கம்பரசம் சொட்டுகிறது திகழ்மிளிர் பதிலில்!

    //தமிழை வளர்க்கும் உங்களைப்போன்றவர்களின் பூமாலையில் நாராக( அட இங்கயும் நார்?:)) நான் வருவதில் மகிழ்ச்சி//

    தோடா! நீங்க நாரா? நீங்க நாரம்! நீங்க நீர் ஊற்றினாத் தான் தமிழ்ப் பயிர் இன்னும் செழித்து கொழித்து வளரும்!

    ReplyDelete
  35. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    கொஞ்ச நாள் காய்ச்சல்-ல இருந்ததால் வீட்டில் இல்லை! அதான் எட்டிப் பார்க்க முடியலை! Sorry Folks :)

    >>>>>.what happenend? என்ன உடம்பு? இப்போ சரியாச்சா? கவனமாக இருக்கவும். மிளகுரசம் வச்சி கொரியர் பண்ணட்டுமா?:)

    ReplyDelete
  36. Sanskrit word Transliteration Grammar English word Edit
    अयन ayana adj. going
    अयन ayana n. walking a road
    अयन ayana n. advancing [ astron. ]
    अयन ayana n. precession [ astron. ]
    अयन ayana n. equinoctial and solstitial points
    अयन ayana n. way
    अयन ayana n. manner
    अयन ayana n. progress
    अयन ayana n. solstice
    अयन ayana n. circulation
    अयान ayaana n. halting
    अयान ayaana n. stopping

    நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் இடத்தில் தான் இந்தப் பொருட்களைச் சொல்லியிருக்கிறார்கள் இரவி. இவற்றில் எதுவும் 'இடம்' என்ற பொருளோ 'இடத்திற்கு வருதல்' என்ற பொருளோ சொல்லவில்லை. 'வருதல்' என்ற பொருளும் 'வழி' என்ற பொருளும் உண்டு. ஆனால் 'இடம்' என்பதிலோ 'இடத்திற்கு வருதல்' என்பதிலோ இடம் என்ற சொல்லுக்குத் தான் அதிகம் அழுத்தம் இருப்பதாக உணர்கிறேன்; அந்தப் பொருட்கள் அயனம் என்ற வடசொல்லுக்குச் சொல்லி படிக்கவில்லை. அதனால் தான் கேட்டேன். திருவரங்கபிரியா அக்கா சொன்னது போல் இராமாயணம் என்பதற்கு இராமன் வழி என்று தான் பொருள் கேள்விபட்டிருக்கிறேன். பகலவன் தெற்குப் பகுதியில் இருக்கு வழியில் செல்வது தட்சிணாயனம்; வடக்கில் இருக்கும் வழியில் செல்வது உத்தராயனம் என்றும் படித்திருக்கிறேன். அதனால் தான் நீங்கள் அயனம் என்பதற்கு இடம் என்ற பொருள் சொன்னதும் குழப்பமாக இருக்கிறது. குழப்பத்தைத் தீர்த்தருளவும்.

    ReplyDelete
  37. //குமரன் (Kumaran) said...
    நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் இடத்தில் தான் இந்தப் பொருட்களைச் சொல்லியிருக்கிறார்கள் இரவி.//

    ha ha ha! yes yes! vazhakkamaana idam thaan! :)
    http://spokensanskrit.de

    //ஆனால் 'இடம்' என்பதிலோ 'இடத்திற்கு வருதல்' என்பதிலோ இடம் என்ற சொல்லுக்குத் தான் அதிகம் அழுத்தம் இருப்பதாக உணர்கிறேன்;//

    உண்மையே! "இடம்" என்ற பொருளுக்கு அதிக அழுத்தம் உண்டு!

    //திருவரங்கபிரியா அக்கா சொன்னது போல் இராமாயணம் என்பதற்கு இராமன் வழி என்று தான் பொருள் கேள்விபட்டிருக்கிறேன்.//

    இராமாயணம் என்றால் இராமன் வருகையை அறிவிப்பது என்பது நேரடி பொருள்!

    ஆனால் அதன் உள்ளுறை, இராமனின் "வருகை"!
    இராமன் இடத்துக்கு "வருதல்"! அதைச் சொல்வது இராமாயணம்!

    மது என்ற சொல்லைப் போலத் தான்! விதப்பாக மது பானம் என்று பொருள் கொண்டாலும், இனிமை/மதுரம் என்ற வேர்ச்சொல்லைக் கணக்கில் எடுத்துக் கொள்வதால், இடத்துக்கு ஏற்றவாறு கொள்கிறோம் அல்லவா?

    //பகலவன் தெற்குப் பகுதியில் இருக்கு வழியில் செல்வது தட்சிணாயனம்; வடக்கில் இருக்கும் வழியில் செல்வது உத்தராயனம் என்றும் படித்திருக்கிறேன்.//

    அதே தான் நானும் சொல்லியுள்ளேன்! நீங்க "செல்வது"-ன்னு சொல்றீங்க! நான் "வருவது"-ன்னு சொல்றேன்! அம்புட்டு தான் வித்தியாசம்!

    கிழக்கு-மேற்கான பாதை கொண்ட சூரியன்,
    தெற்கு இடத்துக்கு வருதல் = தட்சிண + அயணம்!
    அதற்காக தெற்குக்கு முழுமையாச் சென்று விடாது! தெற்கு நோக்கி "வரும்"! தென் கிழக்காக உதிக்கும்! Solisticial Point என்னும் இடம் நோக்கி வரும்!

    //குழப்பத்தைத் தீர்த்தருளவும்//

    :)
    இப்படி நீங்களே சொன்னா, நான் எங்கே போறது? :)

    சரி, இந்தாங்க...என் புரிதலாச் சொல்லாம, அகர முதலியில் இருந்தே கொடுக்கிறேன்!

    (H2B) अयन [L=14678] n. place of refuge Mn. i , 10

    பதிவில் இருந்து...
    அயணம் = இடம்/தஞ்சம்
    மொத்த நரத்துக்கும் புகல்-"இடமாய்" (தஞ்சமாய்) இருப்பது எதுவோ, அதுவே நாராயணம்!

    அயணம் என்பதற்கு Place of Refuge = தஞ்சம் = இடம் என்பதே சாலவும் பொருந்தும்!

    * அவன் நீர்த் தஞ்சத்தில் இருப்பதால் நாரா+அயணம்
    * உயிர்கள் அவனிடம் தஞ்சம் அடைவதால்
    நர(நாரா)+அயணம்!

    ReplyDelete
  38. தமிழில் நாரம்+அணம் பொருள் நன்றாகப் பொருந்தி வருது!
    அதில் எல்லாருக்கும் மகிழ்ச்சி தானே! கேள்வி இல்லை-ன்னு நினைக்கிறேன்! :)

    வடமொழியில் தான் நாரம்+அயணம்-க்கு இத்தனை குழப்பமா?
    அதுவும் குமரனுக்கே! ஹா ஹா ஹா :)

    சரி, இப்போ குமரனே கேட்டு விட்டதால்,
    முமுட்சுப் படி என்னும் உயரிய நூலில் இருந்து,
    (பிள்ளை லோகாசார்யர் என்பவர் எழுதி, அதற்கு மணவாள மாமுனிகள் உரை செய்தது)

    நாரம்+அயணம் என்பதற்கான வடமொழி அர்த்தத்தைப் பார்க்கலாம் வாங்க!
    **********************************

    திருமந்த்ர விவரண அவதாரிகை!
    வாச்ய ப்ரபாவம் போலன்று வாசக ப்ரபாவம்!

    97. நாரங்களாவன = நித்ய வஸ்துக்களினூடிய திரள்!

    நார பதமாவது = சமஸ்த லோக ஜீவாதாரமான பிரளயாதி ஜலம் முதற்கொண்டு அதனால் உஜ்ஜீவிக்கின்ற சேதனா அசேதனங்களின் திரள் என்பதைக் காண்பித்துக் கொடுக்கிறார்!

    98. அயணம் என்றது = இவற்றுக்கு ஆஸ்ரயம் என்னும் படி
    அயண சப்தம் "இருப்பிடத்தைக்" குறிக்கும் ஆகையாலே, அயணம் என்பது இந்த நாரங்களுக்கும் "இருப்பிடம்" என்னும் பொருள்படுகிறது!

    நாரா: அயணம் யஸ்ய ச நாராயணம் என்கிற படி உண்டாகும் பொருளை அடுத்த சூர்ணையில் அருளிச் செய்கிறார்!

    99. அங்கனன்றிக்கே இது தன்னை ஆஸ்ரயமாக உடையனென்னவுமாம்!

    அதாவது நாரங்களுக்கு "இருப்பிடம்" என்று சென்ற சூர்ணையில் தத்புருஷ ஸமாசமாகச் சொன்னது போலல்லாமல், நாரங்களை "இருப்பிடமாகவும்" உடையவன் என்று பஹூவ்ரீஹி ஸமாசமாகவும் சொல்லலாம் என்பது கருத்து!
    **********************************

    இது தான் குமரன் முமுட்சுப் படியில் அயணம் என்பதற்கு, "இருப்பிடம்" என்பதான விளக்கம்!

    அப்பாடா! மூச்சு முட்டுது! குடிக்க ஒரு கிளாஸ் நாரம் கொடுங்கப்பா! :)

    ReplyDelete
  39. @குமரன்
    என்னையப் போயி இப்படியெல்லாம் எழுதி வச்சிட்டீங்களே! :)
    மை மம்மி வில் பீட் மீ!
    & ராகவன் வில் டெஃபெனெட்லி பீட் மீ! :)))

    ReplyDelete
  40. முமுட்சுப்படி தரவிற்கு நன்றி இரவிசங்கர். இதனைத் தான் கேட்டேன்.

    அணம் என்றால் வழி என்ற தமிழ்ச்சொல் பொருளிலும் கேள்வி இருக்கிறது. ஏரணம், காரணம், இலக்கணம், வீராணம் எல்லாத்துக்கும் நீங்க பொருள் சொல்லியிருக்கீங்க. அதெல்லாம் சரியா தவறான்னு தெரியலை. அதுக்கும் ஏதாவது தரவு வச்சிருக்கீங்களா?

    ReplyDelete
  41. //குமரன் (Kumaran) said...
    அணம் என்றால் வழி என்ற தமிழ்ச்சொல் பொருளிலும் கேள்வி இருக்கிறது....அதுக்கும் ஏதாவது தரவு வச்சிருக்கீங்களா?//

    போச்சுறா! இன்னிக்கி என் நேரஞ் சரியில்லை போல! புள்ளையாரப்பா! :))

    தரவு தரவு-ன்னு தரவு கிட்டயவே தரவு கேட்டா எப்படி குமரன்? :)

    ReplyDelete
  42. தரவு = இரவிசங்கர்ன்னு சொல்றீங்களா இரவி? ஒத்துக்க வேண்டியது தான். :-)

    ReplyDelete
  43. //குமரன் (Kumaran) said...
    முமுட்சுப்படி தரவிற்கு நன்றி இரவிசங்கர். இதனைத் தான் கேட்டேன்//

    போதுமா? திருப்தியா? தஸ்ஸூ, புஸ்ஸூ-ன்னு என்னைய மணிப்பிரவாளத்தில் எழுத வச்சிட்டீங்க-ல்ல? :)

    அமர கோசத்திலும் அயணம் = இருப்பிடம் சொல்லப்படுகிறது! தேடிப் பாருங்கள்! மெளலி அண்ணாவிடமும் கேட்கலாம்! :)

    ReplyDelete
  44. //குமரன் (Kumaran) said...
    தரவு = இரவிசங்கர்ன்னு சொல்றீங்களா இரவி? ஒத்துக்க வேண்டியது தான். :-)//

    ஹைய்யய்யோ! முருகா! எனக்கும் தரவுக்கும் தரவு வச்சாலும் எட்டாது!
    தரவு-ன்னா அது என்னிக்குமே குமரன் தான்! = கேட்பதும் , கொடுப்பதும்!

    மீ நாட் தரவு!
    ஒன்லி உறவு!
    உன்தன்னோடு-உறவேல்-நமக்கு!

    ReplyDelete
  45. //ஏரணம், காரணம், இலக்கணம், எல்லாத்துக்கும் நீங்க பொருள் சொல்லியிருக்கீங்க.
    அதெல்லாம் சரியா தவறான்னு தெரியலை.அதுக்கும் ஏதாவது தரவு வச்சிருக்கீங்களா//

    :)

    காரணம் = கார் + அணம் = கருவிற்கு அருகில் செல்லல்!
    அதே போல் ஏரணம், இலக்கணம் எல்லாம்!
    இதோ, இராம.கி. ஐயா பதிவை ஒப்பு நோக்குங்கள்!

    காரணம் என்ற சொல் கரு என்னும் சொல்லடியின் நின்று பிறந்தது என்ற சொல்லறிஞர் ப.அருளியார் கருதுவார். கருவின் அணம் காரணம் என்று ஆகும். அதாவது கருவிற்கு நெருங்கியது காரணம்!

    *****************************

    என்ன குமரன்,
    இன்னிக்கி கேள்வி எல்லாம் பிச்சி வாங்குறீங்க?
    திருமந்திரப் பொருள் சொல்லும் போது அடியேன் சிறிய சிறிய ஞானத்தன் கொஞ்சம் கவனமாத் தான் இருப்பேன்! நம்புங்க குமரன் நம்புங்க! :)

    ReplyDelete
  46. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  47. எனக்கென்னவோ இராம.கி. ஐயாவின் இடுகையில் இருப்பதைப் படித்த பின்னர் அணம் என்பதற்கு வழி என்ற பொருளை விட 'நெருக்கம்', 'ஆதாரம்' என்ற பொருட்கள் தான் சரியென்று தோன்றுகிறது. இலக்கணம், ஏரணம், செய்கணம் போன்ற சொற்களுக்கு 'ஆதாரம்' என்ற பொருளைச் சொல்கிறார் - அந்தப் பொருளின் படி அணம் என்பதற்கு அயணம்/அயனம் என்பதற்குச் சொன்ன பொருளே பொருந்தி வருகிறது என்று தோன்றுகிறது. நெருக்கம் என்ற பொருள் காரணம் என்ற சொல்லிற்கு மட்டும் சொல்லியிருக்கிறார்.

    நானும் அதையே தான் சொல்கிறேன் என்பீர்கள் என்று நினைக்கிறேன். எளிமைப்படுத்துகிறேன் என்று சொல்லி நீங்கள் கொஞ்சம் மாற்றி மாற்றி எழுதுவது எனக்கு குழப்பத்தைத் தருகிறது போலும்.

    ReplyDelete
  48. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  49. ஸ்வாமி அவதூதா என்ற அனானியாரின் பின்னூட்டத்தை மட்டுறுத்த வேண்டிய சூழல்! மன்னிக்கவும்!

    ஸ்வாமி அவதூதா:
    பொதுவாக அன்பர்கள் சொல்லும் கருத்துக்களை வைத்து அவர்களை எடை போடும் குணமோ, ஒதுக்கும் குணமோ, அடியேனுக்கு கிடையாது!

    உங்கள் நியாயமான எண்ணங்களை, அது ஆத்திகமோ நாத்திகமோ, இங்கு தாராளமாக நீங்கள் முன் வைக்கலாம்.....
    ஆனால் நயமான முறையில்! தனிப்பட்ட வெறுச் சொல் இன்றி!

    கூடி இருந்து குளிர்ந்தேலோ என்று அடியவர்கள் குணானுபவத்தில் திளைப்பதே பந்தலில் பகவத் கைங்கர்யம்! அதைப் புரிந்து கொள்ளுங்கள்!

    நீங்கள் என்ன தான் தரம் குறைந்து எழுதி இருந்தாலும், உங்கள் பின்னூட்டத்தில், எனக்குப் பிடித்த கருத்தே, இறைவனைப் பேசி அளக்க முடியாது என்பதே!

    உண்மை தான்!
    ஆனால் இறைவனை அளப்பதற்காக இங்கு பேசவில்லை!
    பெருமானுடன் உறவாடவே பேசுகின்றோம்! = அதற்குப் பெயர் குணானுபவம்! வல்லானை மாயனைப் பாடு ஏல்-ஓர் எம்பாவாய்!

    அதைப் புரிந்து கொண்டால், இப்படித் தன்னிலை இறங்க மாட்டீர்கள்!
    நக்கீரர் முதற்கொண்டு, அருணகிரியார் வரை, யேசுநாதர்-நபிகள் வரை, பீஷ்மர் ஆயிரம் நாமங்கள் சொன்னது வரை...

    அத்தனை பேரும் திருப்பித் திருப்பிச் சொன்னதே சொன்னது,
    இறைவனை அளக்க அல்ல!
    இறைவனைக் கொள்ளவே!

    வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்! அதைத் தான் தாங்களும் சொல்ல வந்தீர்கள் என்றால் அதை முதலில் தாங்கள் எழுதும் எழுத்தில் நடைமுறைப் படுத்தி விட்டு, அப்புறம் பேசுவது அழகாம்! :)

    வாழி ஈதென்ன உறக்கமோ! வாய் திறவாய்!

    ReplyDelete
  50. //குமரன் (Kumaran) said...
    எனக்கென்னவோ இராம.கி. ஐயாவின் இடுகையில் இருப்பதைப் படித்த பின்னர் அணம் என்பதற்கு வழி என்ற பொருளை விட 'நெருக்கம்', 'ஆதாரம்' என்ற பொருட்கள் தான் சரியென்று தோன்றுகிறது//

    அணம் என்பது "அண்மை" என்ற சொல்லில் இருந்து வந்தது என்றும் சொல்லி இருக்கேனே குமரன்! :)

    நெருக்கம் என்பது சரியே! நானும் "அருகில் செல்வது" என்று பதிவில் சொல்லி உள்ளேனே!

    ஆனால் நெருக்கம் என்று மட்டும் நேரடியாகப் பொருள் கொண்டால், நீருக்கு நெருக்கம் என்று தான் மிஞ்சும்! அப்படி என்ன பெருசா நீருக்கு நெருக்கம்? என்று ஆகி விடும்!

    அதான் ஒற்றைச் சொல் பொருளாகச் சொல்லாமல்...
    நீருக்கு நெருங்கிச் செல்வது,
    நீர்மை-க்கான வழி என்று,
    கொண்டு கூட்டிப் பொருள் சொன்னேன்!

    //அந்தப் பொருளின் படி அணம் என்பதற்கு அயணம்/அயனம் என்பதற்குச் சொன்ன பொருளே பொருந்தி வருகிறது என்று தோன்றுகிறது//

    இதுவும் பதிவில் உள்ளதே! :)
    ***கிட்டத்தட்ட, தமிழில் பார்த்த "நாரணம்" என்பதற்கு என்ன பொருளோ, அதே பொருள் தான் "நாராயணம்" என்று வடமொழியிலும் இருக்கு!***

    //நானும் அதையே தான் சொல்கிறேன் என்பீர்கள் என்று நினைக்கிறேன்//

    ஹா ஹா ஹா

    //எளிமைப்படுத்துகிறேன் என்று சொல்லி நீங்கள் கொஞ்சம் மாற்றி மாற்றி எழுதுவது எனக்கு குழப்பத்தைத் தருகிறது போலும்//

    அதெல்லாம் இல்லை! போகப் போக என் தொல்லை பலருக்கும் பழகிப் போய் விடுகிறது! :))
    கண்ணன் தெருவிலே பதிவருக்கு ஓயாத தொல்லை! :))

    அணம் = நெருக்கம் தான்! அந்த நெருங்குதலுக்கு ஒரு வழியும் வேண்டும் அல்லவா? வழியில் நெருங்க நெருங்கத் தானே நெருக்கம்?

    அப்படியும் பாருங்கள்! அணம்=வழி என்பதற்கான கம்பராமாயணப் பாடல்களையும் முடிந்தால் தருகிறேன்!

    ReplyDelete
  51. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  52. //* நாரம் = மனித குலம்! மொத்த நரமும் சேர்ந்தால் நாரம்! //
    எந்த மொழியில் இருந்து வரீங்கன்னு தெரியலே.
    வடமொழியில் நரஹ என்பது பஹுவசனத்தில் நராஹா என்றாகும்.
    "நாரம் நரம் என்பதன் பன்மை" என்பது தமிழோ என்னவோ. எனக்கு தமிழ் அவ்ளவா தெரியாது. ;-)
    வடமொழியில் நார ஷப்தம் மனிதகுலத்தினை மட்டுமா குறிக்கிறது ? நாராயணன் மனிதர்களுக்கு மட்டும் தானா கதி/இருப்பிடம்? ;-)

    ReplyDelete
  53. // நாள்->நள்! நள்ளிரவு-ன்னு சொல்றோம்-ல்ல? //
    இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு.
    நள் + இரவு = நள்ளிரவு
    இங்கு நள் என்றால் "நடு" என்று பொருள் கிடையாதா ?
    "மேலே, கீழே, நடுவிலே எங்கும் இறைவன் உள்ளான்" என்ற அர்த்தம் தொனிக்கும்படி உள்ள இந்த பதிகத்தை பாருங்க.

    "கொள்ளுங் கொல்லெனை அன்பரிற் கூய்ப்பணி
    கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
    நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்
    எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே."

    ReplyDelete
  54. பதிவை படிச்ச பிறகு நீங்க சொல்ல வர்றத புரிஞ்சிக்க பின்னூட்டங்களையும் படிக்க வேண்டும் போல இருக்கு. :-)

    ReplyDelete
  55. //அணம்=வழி என்பதற்கான கம்பராமாயணப் பாடல்களையும் முடிந்தால் தருகிறேன்! //

    குமரனை போலவே நானும் waiting. :-)

    ReplyDelete
  56. மணிப்ரவாளம்,முமூக்ஷுபடி,ஸமாஸம் அப்படி இப்படின்னு பேசி குமரனை காலி பண்ணிடீங்க போல. :-)

    அப்படியே "ஸ்ரீ எவரிடம் நித்ய வாசம் செய்கிறாளோ அவரே ஸ்ரீநிவாசன்" என்பதை சமஸ்கிருதமாக்கி என்ன ஸமாஸம் அப்படின்னு சொல்லுங்க. நான் போயி கண்ணபிரான் ரவிசங்கர் இப்படி தான் வேங்கடவன் ஸ்ரீநிவாசன் ஆனாருன்னு சொல்றாருன்னு சொல்லி ராம.கி ஐயா பதிவுல போயி சொல்லிட்டு வரேன். ;-)

    ReplyDelete
  57. //Radha said...
    எந்த மொழியில் இருந்து வரீங்கன்னு தெரியலே//

    ஹிஹி! மெளனம்! :)

    //வடமொழியில் நரஹ என்பது பஹுவசனத்தில் நராஹா என்றாகும்.
    "நாரம் நரம் என்பதன் பன்மை"//

    உண்மையே!

    //எனக்கு தமிழ் அவ்ளவா தெரியாது. ;-)//

    ராதாவை நம்பிட்டோம்! :)
    ஆனா நப்பின்னைக்கு நல்லாத் தமிழ் தெரியும்! :)

    //வடமொழியில் நார ஷப்தம் மனிதகுலத்தினை மட்டுமா குறிக்கிறது ? நாராயணன் மனிதர்களுக்கு மட்டும் தானா கதி/இருப்பிடம்? ;-)//

    இல்லை அனைத்து சேதனாசேதனங்களுக்கும் இருப்பிடம்!

    பதிவில் ஒரே இடத்தில் அப்படிச் சொல்லிட்டேன் போல! சாரி ராதா! இப்போ பதிவில் திருத்தி விட்டேன் பாருங்கள்! "மனித" என்பதை "உயிர்கள் என்று மாற்றி விட்டேன்!

    ReplyDelete
  58. //Radha said...
    இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு.
    நள் + இரவு = நள்ளிரவு
    இங்கு நள் என்றால் "நடு" என்று பொருள் கிடையாதா ?//

    கிடையாது! நடு என்பது பின்னாளைய பொருள்! நள் என்பது இரவு என்பதற்கு முனைவர் நா.கணேசன் ஐயா தரும் சான்றுகள் இதோ!

    நற்றிணை:
    திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ
    நடு "நாள்" வேட்டம் போகி வைகறைக்
    கடல் மீன் தந்து கானற் குவைஇ

    மீனவர் மீன்பிடிக்க நடு ராத்திரியில் தீப் பந்தம்
    கொளுத்திக் கடலுள் போவதைச் சொல்கிறது.
    இச்செய்யுளில் இரவு, இருட்டு சொல் இல்லாமலே அப்பொருள்
    காணலாம்.

    திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன (தொல். எழுத். 286)
    = இங்கே நாள் என்றால் இரவில் தோன்றும் விண்மீன் என்று பொருள்.

    //"மேலே, கீழே, நடுவிலே எங்கும் இறைவன் உள்ளான்" என்ற அர்த்தம் தொனிக்கும்படி உள்ள இந்த பதிகத்தை பாருங்க//

    உண்மை! ஆனால் நள் என்பதற்கான சங்க கால விளக்கம் மட்டுமே நாம் பார்த்தது! அதான் நாள் என்பது பின்னாளில் இரவும் பகலும் சேர்ந்த ஒன்றாகி விட்டது என்றும் சொல்லி இருக்கேனே! :)

    //நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்
    எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே."//

    நள் = நடு என்றால்...
    இரண்டு பகல்களுக்கு "நடுவில்" உள்ளது இரவு தானே? :))
    இரவால் பகுக்குப்படுவது = பகல் என்றும் ஒரு வழக்கு உண்டு!

    ReplyDelete
  59. //Radha said...
    பதிவை படிச்ச பிறகு நீங்க சொல்ல வர்றத புரிஞ்சிக்க பின்னூட்டங்களையும் படிக்க வேண்டும் போல இருக்கு. :-)//

    ஹிஹி!
    பந்தலில் பதிவை விட பின்னூட்டங்களே சுவையானவை! :))

    குணானுபவம்! சுகானுபவம்!

    ReplyDelete
  60. //Radha said...
    மணிப்ரவாளம்,முமூக்ஷுபடி,ஸமாஸம் அப்படி இப்படின்னு பேசி குமரனை காலி பண்ணிடீங்க போல. :-)//

    ஹிஹி! நல்லாவே வத்தி வைக்கறீரு!
    அ.உ.ஆ.சூ குமரனை ஒருவர் காலி பண்ணவும் முடியுமோ? :)

    ReplyDelete
  61. //அப்படியே "ஸ்ரீ எவரிடம் நித்ய வாசம் செய்கிறாளோ அவரே ஸ்ரீநிவாசன்" என்பதை சமஸ்கிருதமாக்கி என்ன ஸமாஸம் அப்படின்னு சொல்லுங்க//

    //நான் போயி கண்ணபிரான் ரவிசங்கர் இப்படி தான் வேங்கடவன் ஸ்ரீநிவாசன் ஆனாருன்னு சொல்றாருன்னு சொல்லி ராம.கி ஐயா பதிவுல போயி சொல்லிட்டு வரேன். ;-)//

    ஸ்ரீநிவாசன் = திருக்குடி-ன்னு கொஞ்சம் காமெடியா என் தோழன் மொழி பெயர்த்தான் சுப்ரபாதப் பதிவில்! அது ஒரே கலாட்டா ஆகி...
    அப்பறம் இராம.கி ஐயா தான் வந்து அழகா இயல்பா திருப்பதி என்று மொழியாக்கிக் கொடுத்தாரு!

    ஸ்ரீநிவாசம் = திருப்பதி

    ஸ்ரீ நிவாசிப்பது = திரு பதிவது...அதனால் அவன் பெயரே திருப்பதி! திருப்பதியான்! திருமலையான்!

    இது போல் இன்னும் நிறைய இருக்கு:
    * ஸ்வாமி புஷ்கரிணி = கோன் ஏரி
    * Sweet Heart = மனத்துக்கினியான்
    * புஷ்ப பாவாடை = பூலங்கி

    ஊரு பேரும் திருப்பதி தானே? அப்பறம் எப்படி இறைவன் பேரும் திருப்பதி என்ற கேள்வியும் எழும்!

    பொதுவா மிகப் பெரும் திவ்ய தேசங்களில் உள்ள எம்பெருமானுக்குத் தனியா அவனுக்கு-ன்னு ஒரு பேரே இருக்காது! அந்த தலத்தை வைத்தே அவன் கொண்டாடப்படுவான்! ஊருக்கு அம்புட்டு மதிப்பு!

    * அரங்கம் = திரு-அரங்க-நாதன்
    * வேங்கடம் = திரு-வேங்கடம்-உடையான்

    இந்நாளில்....
    * குருவாயூர் = குருவாயூர்-அப்பன்
    * பழனி = பழனி-அப்பன், பழனி-ஆண்டி (தண்டாயுதபாணி-ன்னு எல்லாம் பொது மக்களுக்குத் தெரியாது :)

    ReplyDelete
  62. அன்பிற்குரிய ரவிசங்கர்,

    வேறொரு நண்பர் கேட்டுக் கொண்ட வேலையில் சிலநாட்கள் ஆழ்ந்து போனதாலும், என்னுடைய “பழந்தமிழர் நீட்டளவை”த் தொடரை முடிப்பதற்கான முயற்சிகளில் இருந்ததாலும், 108 திருப்பதிகளைக் காணும் விழைவின் ஒருபகுதியாய் மலைநாட்டு 13 பதிகளைக் காண சென்ற ஒருவாரம் சேரலம் போனதாதாலும் காலம் கழிந்து போயிற்று. அதனாலேயே இந்தச்
    சுணக்கம். மன்னியுங்கள்.

    வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
    நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
    பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
    தோரணம் நாட்டக் கணாக் கண்டேன் தோழீ நான்.

    என்ற நாச்சியார் திருமொழி. 6.1 ஆம் பாடலைக் கண்டு மயங்காதார் மிகக் குறைவு. அதேபொழுது, ”வாரணம்” என்ற சொல்லை ஒழுங்காய்ப் புரிந்து கொண்டவரும் மிகக் குறைவு. ”யானை, பன்றி, தடை, மறைப்பு, கவசம், சட்டை, காப்பு, கேடகம், நீங்குகை, உன்மத்தம், கோழி, உறையூர்” போன்று அகராதியிற் சொல்லியிருக்கும் எந்தப் பொருளும் இங்கு சரிவராது.
    ”வரிவரியாய்க் கிளர்ந்தெழும் வரிச்சங்கை இங்கு முன்னே கொண்டுவந்து பொருளாய்ச் சொன்னால் தான் சரிவரும். நம் அகரமுதலிகள் ”சங்கம்” என்பதையும் வாரணத்திற்குப் பொருளாய்ச் சொல்லுகின்றன. ஆனாலும் தென்பாண்டித் தமிழ்மரபு, பழக்கவழக்கம் தெரியாதோர், சங்கென்ற பொருளுக்குச் சட்டென வரவும் மாட்டார்கள்.

    இங்கே மாப்பிள்ளை அழைப்பு நடக்கிறது. நாரண நம்பி மெதுவாய் அசைந்து மண மண்டபம் நோக்கி நடந்து வருகிறான். தென்பாண்டி நாட்டில், மாப்பிள்ளை அழைப்பின் போது சங்கூதி ஊரைக் கூட்டி, சுற்றம் சூழ்ந்துவர, எல்லோருமாய்ப் போய், மாப்பிள்ளையை அம்பலத்தில் இருந்து மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். இன்றுங்கூடச் சங்கொலியில்லாமல் மாப்பிள்ளை அழைக்கப் போவது எங்களூர்ப் பக்கம் மரபில்லை. மாப்பிள்ளை திருமண மண்டபத்திற்கு வரும்போது, ஆங்காங்கு சங்கொலி கேட்க வேண்டும். அதைக்கேட்டு, அவர் வரும் பாதையின் முக்கு, முனங்குகளில் ஊர்மக்கள், குறிப்பாகப் பெண்மக்கள், திரண்டுவந்து மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடுவர். அந்த இடங்களில் தோரணமும் கட்டப்பட்டிருக்கும். பெண்மக்கள் பூரணகும்ப மரியாதை [கும்பம் + தேங்காய், பனம்பாளை அல்லது தென்னம் பாளை] செய்வதும், ஆலத்தி எடுப்பதும் [குங்குமநிறத்தில் ஆலத்தி கரைத்து வைத்திருப்பதும் ஒரு கலை.] ஆங்காங்கு இருக்கும் முறை. [இன்றைக்குத் தென்பாண்டியில் தேர்தலுக்கு வரும் தலைவருக்கெல்லாம் பூரண கும்பமும், ஆலத்தியும் சங்கொலியோடு சக்கை போடுகிறது.]

    ”நம்மூர்ப் பெண்ணுக்கு இவன் ஏற்றவன் தானா?” என்று தெரிய வேண்டாமா? பெண்வீட்டுக் காரரும் ஊராரிடம், “பார்த்துக்குங்கப்பா, எங்க வீட்டு மாப்பிள்ளை இவர் தான், எங்க பெண்ணு நல்ல இடத்துலே தான் வாக்கப்படுறா!” என்று சொல்லாமற் சொல்ல வேண்டாமா? அதற்கு ஒரே வழி இந்தச் சங்கொலி தான். நாதசுரம், மேளம் - அது இதெல்லாம் அப்புறம் வந்தது. முதலில் அறதப் பழங்காலத்திற் சங்கு தான் பயன்பட்டது. [இந்தக் காலத்தில் ”band" um, வேட்டும் கூடச் சில இடங்களிற் சேர்ந்து கொள்ளுகிறது.] சங்கொலி மங்கலமானது என்ற நம்பிக்கை தென்பாண்டி நாட்டில் மிகுதியாக உண்டு. சங்கும் முத்தும் குளித்தெடுத்தவர்கள் சங்கொலியைப் பெரிதாய்க் கருதத் தானே செய்வார்கள்? எத்தனை முறை வெண்சங்கம் நாலாயிரப் பனுவலில் பேசப்படுகிறது? இங்கே ஆயிரம் சங்கொலி சூழ , மாப்பிள்ளை எழில்நடை போட்டு நடந்து வருகிறாராம்.(”நம்ம பொண்ணுக்கு இருக்குற ஆசையைப் பார்த்தீங்களா? ஒரு சங்கொலி இவளுக்குப் பத்தாதாம், ஆயிரஞ் சங்கு சுற்றி வந்தாப்புலெ ஒலியெழுப்ப, இவ ஆளு ”ராசா” கணக்கா நடந்து வரோணுமாம்.”) அப்படி வருபவரை வீதி நெடுகிலும் தோரணங் கட்டி, பூரணப்பொற்குடம் வைத்து பெண்மக்கள் எதிர்கொள்ளுவது போலக் கனாக் காண்கிறாளாம். ஆகத் தென்பாண்டிப் பெண் அவளுக்குத் தெரிந்த மாதிரிக் கனவு காணுகிறாள். வட்டாரப் பண்பாடு இந்தப் பாட்டில் தூக்கி நிற்கிறது. இதை உணராமல், வெறுமே எந்திரத் தனமாக, பல உரைகளில் ”ஆயிரம் யானைகள் சூழவந்தன” என்று சொன்னதையே கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ”மாப்பிள்ளை அழைப்பின் போது எந்த ஊரில், யார் யானையைக் கொண்டு வருகிறார்கள்?” என்று நானும் ஓர்ந்து பார்க்கிறேன். கொஞ்சமும் தெரியவில்லை. அப்புறம் என்ன முறையில்லாக் கற்பனை? அதே பொழுது, சங்கொலி இல்லாமல் மாப்பிள்ளை அழைப்பு இன்றும் தென்பாண்டிநாட்டில் இல்லை.

    ”வாரணம்” என்ற ஒரு சொல்லுக்கே இப்படிப் பல உரைகாரர் தடுமாறும் வேளையில், ”நாரண நம்பி” பற்றி நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். என்னால் முடிந்ததைச் செய்கிறேன். கொஞ்சம் மெதுவாய் என் வலைப்பதிவில் வரும். பொறுத்துக் கொள்ளுங்கள்.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  63. தேன் மழை பொழியப் போகிறதா. நன்று நன்று. நன்றி இராம.கி. ஐயா.

    ReplyDelete
  64. @இராம.கி ஐயா
    வாங்க ஐயா! நலமா இருக்கீயளா?
    வாரணத்துக்கே இம்புட்டு விளக்கமா? வாவ்! அப்போ நாரணம் என்பதற்கு என்னவெல்லாம் மடை திறக்கப் போறீங்களோ? ஆவலுடன் இருக்கேன்! இருக்கோம்! :)

    வர்ணம் = வர்+அணம்-ன்னும் முன்பு எப்போதோ பொருள் சொல்லியிருக்கீக! நினைவு இருக்கு!
    வாரணம் ஆயிரம்-ன்னு பலரும் சொல்லி சொல்லி அது யானை-ன்னே ஆயிரிச்சி இல்லையா?

    சங்கு முழக்கம் என்பது மிகவும் புதுமையா, இயல்பா பொருந்தி வருது!
    சங்கு ஊதுதல் என்றாலே இன்னிக்கி பொருள் மாறி விட்ட நிலை! ஆனால் சங்கு முழங்கல் என்பது மங்கல வழக்கம் தான்! அதும் ஒவ்வொரு விழாவுக்கும் ஒவ்வொரு விதமான சங்கு முழக்கம்!

    காதல் நோன்புக்கு கூடச் சங்கு முழங்கலைத் தான் தோழி கோதையும் சொல்கிறாளே! போல்வன சங்கங்கள் போய்ப் பாடு உடையனவே!

    பாவேந்தரும் சங்கே முழங்கு என்கிறார்! போருக்கு மட்டும் சங்கு அல்ல! வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு-ன்னு வாழ்வுக்கும் வளத்துக்கும் கூட சங்கு முழக்கம் இருக்குல்ல?

    சங்கு ஊதல்-ன்னாலே எதிரிகளை/துஷ்ட சக்திகளை விரட்டல்-ன்னு அன்புடன் பாலா பதிவில் ஒரு விவாதம் வந்து, அதை நான் மறுத்துச் சொன்ன ஞாபகம் தான் வருது! :)

    நீங்க வாரணம்=சங்கு-ன்னு சொன்னப்பறம் தான் சிலப்பதிகாரத்தில் தேடினேன்! இந்திர விழாவில் வருது!
    புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
    முள்வாய்ச் சங்கம்
    முறைமுறை ஆர்ப்ப!

    ReplyDelete
  65. //108 திருப்பதிகளைக் காணும் விழைவின் ஒருபகுதியாய் மலைநாட்டு 13 பதிகளைக் காண சென்ற ஒருவாரம் சேரலம் போனதாதாலும்//

    ஆகா! அருமை!
    குறளப்பன், காட்கரை அப்பன், கொப்பூழில் பூவழகன் முதலான அனைத்து எம்பெருமான்களும் நலமா?

    திருவித்துவக் கோடு போகணும்-ன்னு ரொம்ப நாளா ஆசை!
    கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்-ன்னு சொல்லும் போதே இனிக்கும்!

    என் பால் நோக்காயே ஆகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன்!
    நீ வேண்டாயே ஆயிடினும்
    மற்ற ஆரும் பற்றில்லேன்!

    எங்கும் போய்க் கரை காணாது எறிகடல்வாய் மீண்டேயும்
    வங்கத்தின் கூம்பு ஏறும் மாப்பறவை போன்றேனே!

    ReplyDelete
  66. நண்பரே!

    நாரணன் என்னும் பதிவு போட்டாயிற்று. கொஞ்சம் http://valavu.blogspot.com/2009/08/blog-post_28.html

    என்னும் பதிவிற்குப் போய் படிக்க முடியுமா?

    மலைநாட்டுப் பதிகள் பார்க்க வேண்டியவை. பின்னால் எழுதுகிறேன்.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP