Thursday, March 18, 2010

ஆண்டாள் கனவில் கண்ட கல்யாணம் !


உதவி வேண்டுபவர்கள், மிரட்டி உதவி கேட்டால் வேலை நடக்குமா என்ன? அப்போது ஓடிய குயில், மீண்டும் அந்தச் சோலைப் பக்கமே வரவில்லை!

விரட்டியவளுக்கோ, சிறு நப்பாசை! ஒரு வேளை குயில் வேறு எங்காவது சென்று கோவிந்தனைக் கூவியிருந்தால்? அப்படியாவது கண்ணன் வரமாட்டானா என்ற ஏக்கம்! வெகு நாட்கள் ஆன பின்பும் கண்ணன் வராததால், குயில் கூவவில்லை என்று உணர்ந்தவள், திகைக்கிறாள்! வருத்தத்தில், மெலிகிறாள்!

நம் பாவையின் பர பக்தி, பரம பக்தியாகிறது!

காலம் கனிந்துவிட்டதை அறிந்த கண்ணன், அவளுக்குக் காட்சியளிக்கத் தீர்மானிக்கிறான்! எப்படி?

நினைவில் வந்தால், அவளுக்குச் சிறிது களிப்பு, பிறகு வருத்தம்!
கனவில் வந்தால், அவளுக்கு அதிக மகிழ்ச்சி, இரவு மட்டுமல்ல!
கனவில் வந்ததை அவள் நினைவெல்லாம் வரும், பகல் கனவும்!
கனவில் வந்தான், அவள் மணாளனாக , கண்ணனெனும் கள்வன்!

(நேரில் வந்தால் அந்த 'சந்தோஷ அதிர்ச்சி'யை அவளால் தாங்க முடியாது என்று அறிந்தே, கனவில் வந்ததாக விளக்கம் சொல்லப்படுவது உண்டு)

***

இடம்: அதே சோலை
காட்சி: பகல் காட்சி - கனவு

(பாவையும் தோழியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)


தோழி: என்ன, ரொம்ப குஷியாய் இருக்கே! அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டாரா?

பாவை: எனக்குக் கல்யாணம் ஆயிடுத்து!

தோழி: ஏய்! நேற்று வரை நல்லா தானே இருந்தாய்! உடம்பு சரியில்லையா?

பாவை: நேற்று இரவு ஒரு கனவு வந்தது! நாராயணன் என்னை முறையாகக் கல்யாணம் செய்தான்!

தோழி (சற்று குழம்பி): முறையாக என்றால்? புரியல ...

பாவை: ஒண்ணுமே தெரியாதா உனக்கு? நம்மாத்துக் கல்யாணம் பார்த்ததே இல்லையா?

தோழி (மழுப்பலாக): எனக்கு எல்லாம் தெரியும்! இருந்தாலும், நீயே, உன் Style-ல் சொல்லிடேன்?

பாவை: சூரியன், தன் பெண்ணான சூர்யாவை சோமனுக்குத் (சந்திரனுக்கு) திருமணம் செய்து கொடுத்த போது கூறிய மந்திரங்கள், நடந்த சடங்குகள், ரிக் வேதம் 10-வது மண்டலம், பகுதி 23/32/65/85-ல் உள்ளன. சில மந்திரங்கள், யஜுர் வேதத்தில் உள்ளன.

நாராயணனுக்கும் எனக்கும் நடந்த கல்யாணமும், இதையே பின்பற்றி நடந்தது!

தோழி: எல்லாமே ஒரே கனவிலா? இது Too-much! அப்புறம், அந்தச் சடங்குகள், மந்திரங்கள் ...?

***

வேத சம்பிரதாயமான திருமணத்தில், பல அங்கங்கள் உண்டு. முதல் அங்கம், வாக் தானம்.

மணமகன் (வரன்), கல்யாணம் நல்லபடியாக அமைய, தன் வீட்டுப் பெரியவர்களையும், அர்யமாவையும் (Lord of Cosmic order), பகனையும் (Lord of Blessings/Grace) வேண்டி, 2 மந்திரங்கள் (10.32.1, 10.85.23) சொல்கிறான்.

பின்னர் அவன் வீட்டுப் பெரியவர்கள் பெண் (வது) வீட்டிற்குச் சென்று, பெண் கேட்பர்.

பெண்ணின் தந்தை வரனை ஒப்புக் கொள்வது முதல், திருமணச் சடங்குகளும், ஏற்பாடுகளும் தொடங்கும்.

ஆண்டாள் கனவில், கண்ணன் திருமணக் காட்சி தந்த அதே சமயத்தில், பெரியாழ்வார் கனவில் தோன்றி 'ஸ்ரீ ஆண்டாளை அரங்கத்திற்கு அழைத்து வாரும், அவளை நாம் திருமணம் செய்து கொள்கிறோம்' என்று கூறியதாகவும், ஸ்ரீரங்கத்தில் உள்ள புரோகிதர்கள் சிலர் கனவிலும் வந்து, 'பெரியாழ்வார் வீட்டிற்குச் சென்று அவரிடம் ஆண்டாளைப் பெண் கேளுங்கள்' என்று உத்தரவிட, 'வாக் தானம்' நடந்ததாகக் கூறுவர்.

திருமணம் முழுவதையும் கனவாகக் கண்டது பற்றித் தோழியிடம் விவரித்த ஆண்டாள், 'அரங்கன் வீட்டார் தன் வீட்டிற்கு வந்து பெண் கேட்டார்கள்' என்று மட்டும் இத்திருமொழியில் சொல்லவில்லை. எனவே ஆண்டாள் இத்திருமொழியை அருளிச் செய்த போது, அரங்கன் பெரியாழ்வார் கனவில் வந்து பெண் கேட்கவில்லை என்று யூகிக்க இடமுள்ளது.

நாச்சியார் திருமொழியில், 'வாரணமாயிரம்' அருளிச் செய்த பிறகும், ஆண்டாள் 'கண்ணன் வரவில்லை' என்று, வேங்கடவனையும், திருமாலிருஞ்சோலை அழகரையும் வரச் சொல்லி, மேகங்களையும், பூக்களையும் தூது விடுகின்றாள். அதன் பிறகே, 'அரங்கனைக் காண வேண்டும்' என்று சொல்கிறாள். எனவே, அரங்கன் 'பெரியாழ்வாரிடம் பெண் கேட்கும் படலம் நடந்தது இன்னும் சில காலத்திற்குப் பிறகே' என்று இன்னொரு சாரார் கூறுவர்.

வேறு சிலர், பெரியாழ்வார் கனவில் அரங்கன் வந்தான்; ஆனால், திருவரங்கத்துப் புரோகிதர்கள் வர கால தாமதம் ஆகிவிட்டதால், அதைக் கூடப் பொறுக்காமல் ஆண்டாள் மீதித் திருமொழிகளை அருளிச் செய்ததாகக் கூறுவர்.

***

(கனவாடல் ... அதாங்க - கனவு + உரையாடல் .. .தொடர்கிறது ...)

பாவை: நாராயணன், ஆயிரம் யானைகள் சூழ (வாரணம் ஆயிரம் சூழ) வருகின்றான்!


தோழி: ஆய்ப்பாடியில் யானைகள் ஏது?

பாவை: எல்லாம் நந்தகோபருடையது! அவர் தன் எதிரிகளை அழிப்பதற்கு, யானைப் படையையே வைத்துள்ளாரே! 'உந்து மதகளிற்றன்' பாசுரம் சொன்னேனே, அதற்குள் மறந்து விட்டதா?

தோழி: சரி! சரி! அப்புறம்?

பாவை: தன்னைப் போலவே தன் தோழர்களையும் யானை மீது ஏற்றி, அவர்கள் சூழ்ந்து வர ஸ்ரீவில்லிபுத்தூர் தெருக்களை வலமிருந்து இடமாகப் பிரதக்ஷிணம் செய்து (வலம் செய்து) வருகின்றான்!

தோழி: தோழர்களும் யானைகள் மீதா?

பாவை: 'தம்மையே வணங்கித் தொழுவார்க்கு, தம்மையே ஒக்க அருள் செய்வர்' எனும்படி இருக்கும் 'நாரண நம்பி' ஆயிற்றே அவன்? தன் நண்பர்களையும், யானை மேல் ஏற்றிக் கொள்கிறான் (இப்போது, மாப்பிள்ளை தன் நண்பர்களையும், ஊர்வலத்தில் காரில் ஏற்றிக் கொள்வது போல்)!

தோழி ('கனவில் கூட நல்லாவே யோசிக்கறா இவ' என்று நினைத்து): மேலே சொல்லு!

பாவை: ஊரெங்கும் தோரணம் கட்டி, என் அப்பாவும், உறவினரும், என் தோழிகளும் (நீயும் தான்), பூரண கும்பங்களுடன் நாராயணன் எதிரே வந்து, அவனை வரவேற்றனர்!

தோழி: ஒரு வழியாக கனவு முடிந்ததா?

பாவை: இல்லடீ! இப்போ தான் ஆரம்பமே!

***

நாளை வதுவை* மணமென்று நாளிட்டு*
பாளை கமுகு* பரிசுடைப் பந்தல் கீழ்*
கோளரி மாதவன்* கோவிந்தன் என்பான்* ஓர்
காளை புகுத* கனாக் கண்டேன், தோழீ! நான்.
நாச்சியார் திருமொழி 6-2

நாளை திருமணம் என்று நாள் குறித்து, பாக்கு மரங்களை உடைய அலங்காரங்கள் நிறைந்த பந்தலின் உள்ளே, மிடுக்கு உடைய நரசிம்மன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் பெயருடைய ஒரு காளை நுழைவதைப் போல் கனவு கண்டேன், தோழி, நான்!

(பாளை - பட்டை; கமுகு - பாக்கு மரம்; பரிசு - அழகு, பெருமை; கோள் - மிடுக்கு, ஒளி)

***

(நம் பாவை மீண்டும் தொடர்கிறாள்)

பாவை: நாளை திருமணம் (நாளை வதுவை மணம்) என்று பெரியோர்கள் நாள் குறித்தனர் (நாளிட்டு). குறிப்பிட்ட நல்ல நேரத்தில், நரசிம்மனும், மாதவனும் ஆகிய கோவிந்தன் (கோளரி மாதவன் கோவிந்தன்), பாக்கு மரப் பட்டைகளுடன் (பாளை கமுகு) அலங்கரிக்கப் பட்ட மணப் பந்தலுக்கு (பரிசுடைப் பந்தல் கீழ்) வந்தான்.


ராமாயணத்தில், சீதை, உப்பரிகையில் இருந்து, ராமன் எனும் சிங்கத்தை நேரில் பார்த்து வெட்கமடைந்தது போல நானும், கோவிந்தனை, வெட்கத்துடன் நேரிலே பார்த்தேன்!

(மிடுக்கும், ஒளியும் உள்ள முக அழகைப் பற்றிப் பேசும் போதும், நடந்து, பந்தலுக்குள் வரும் அழகையும் சொல்லும் போதும், ஆண்டாளுக்கு முதலில் நினைவுக்கு வருவது, நம் நரசிம்மன் தான்! மற்ற பெருமாள்கள் எல்லாம் அதன் பிறகே!

எனவே தான் இதையும் நரசிம்மன் பாசுரமாக அடியேன் கருதுகிறேன்! சிலர், இதை நரசிம்மர் பாசுரம் இல்லை என்பர்! அதில் அடியேனுக்கு உடன்பாடு இல்லை!)

தோழி ('முற்றி விட்டது' என்று நினைத்து): அதாவது, நேரிலே, கனவிலே, பார்த்தேன் என்கிறாய்!

பாவை: ஏய்! கிண்டல் வேண்டாம்! அப்புறம் நான் வீட்டுக்குப் போய் விடுவேன்!

தோழி: ஸாரிடி! மேலே சொல்லு!

பாவை: என் அப்பா, கோவிந்தனை கிழக்கு முகமாக உட்கார வைத்து, தன் வருங்கால மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே நினைத்து, அவன் திருவடிகளை அலம்பி விடுகிறார். பின்னர், கோவிந்தனுக்கு, சில வேத மந்திரங்களைச் சொல்லி, 'மது பர்க்கா' (தயிர், தேன், நெய் ஆகியவற்றின் கலவை) கொடுத்தார்!

(வேதங்கள், சூரியன், சோமனையும் விஷ்ணுவாகவே நினைத்து மந்திரங்களைச் சொன்னதாகக் கூறும்; இந்தச் சடங்கு, 'கன்யா தானம்' எனும் சடங்கின் ஒரு பகுதி.

சில வீட்டார், இந்தக் கலவையைக் கொடுப்பதில்லை!
)

***

பாவை: பின்னர் என்னை, பந்தலுக்கு அழைத்து வந்தனர்! இப்போது தான், முறையாக நேரில் கண்ணனைப் பார்த்தேன்!

தோழி (பாவை வெட்கப் படுவதைப் பார்த்து): கனவிலேயும் வெட்கம் வருமா உனக்கு?

பாவை: சும்மா இருடீ! மண்டபத்தில், இந்திரன் உட்பட (இந்திரன் உள்ளிட்ட) பல தேவர்கள் வந்திருந்தனர் (தேவர் குழாமெல்லாம் வந்திருந்து). அங்குள்ள தேவர்களும், முனிவர்களும், என்னை மாதவனுக்குத் திருமணம் செய்து (என்னை மகள் பேசி) கொடுக்க முடிவு செய்தனர்.

நானும் மாதவனும், எனக்கு இருக்கும் தோஷங்களைப் போக்க, பிரஹஸ்பதி, இந்திரன், வருணன், சூரியன் ஆகியோரை மந்திரங்கள் (Rg 10.85.44-47) சொல்லி வணங்கினோம் (மந்திரித்து).

இந்திரனிடம், பத்து நல்ல புத்திரர்கள் பெற அருள் செய்யுமாறு வேண்டினோம்! 11-வது குழந்தையாக, நாராயணனையே (என் கணவனையே) கேட்டேன்! அவர், எங்களைத் தம்பதிகளாக ஆசீர்வதித்தார்.

கண்ணன், என் தோஷங்கள் நீங்க, மந்திரங்கள் சொல்லி, தர்ப்பைப் புல்லால், என் புருவங்களில் தடவினான்.

(புரோகிதர் இந்த மந்திரத்தைச் சொல்லும்போது, மணப் பெண்கள், பக்தியுடன் நன்கு திரும்பச் சொன்னால் அவர்கள் குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்)

தோழி: பத்து பெற்றால், எப்படிடீ சமாளிப்பே நீ? இதிலே உனக்கு 'Buy-10-Get-11th-Free' வேறே!

பாவை: சும்மா வாயை மூடிண்டு கேளுடீ! நாராயணன், எனக்கு வாங்கிய புடவையை (கோடி உடுத்தி), தன் தங்கை மூலம் (அந்தரி - துர்க்கை) அணியச் செய்தான். பிறகு, எனக்கு மணமாலை அணிவித்தனர். இவ்வாறு, எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்தது!


தோழி (Tension-னுடன்): Suspense தாங்கலை! கல்யாணம் நடந்ததா, இல்லையா?

***

பாவை: கண்ணன், என் வலது கையைப் பிடித்து, அக்னி குண்டத்தின் மேற்குப் புறம் மணையில் (பாய்) அமரச் செய்தான். அவனும் வடக்குப் புறம் அமர்ந்தான்.

மந்திரம் (Rg 10.85.26) சொல்லி, புஷனை (12 ஆதித்யர்களில் ஒருவன்) வணங்கி, என்னை கண்ணனின் வீட்டுத் தலைவி ஆக்குமாறு வேண்டினோம்.

தோழி: ம்ம்...

பாவை: நல்ல ஒழுக்கம் உடைய, வேதம் ஓதுகின்ற பிராம்மணர்கள் பலர் (பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார்), பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் (நால் திசை) இருந்து, புனித நீரைக் கொண்டு (தீர்த்தம் கொணர்ந்து) வந்திருந்தனர்!

தோழி (ஏதோ கேட்கவேண்டும் என்பதற்காக): எதற்காம்?

பாவை: எனக்கு மங்களாசாசனம் செய்யத்தான்! சவிதா, சூரியன், வருணன், தேவர்கள், புனித நதிகள் (Holy Waters) ஆகியோர் மீது 5 மந்திரங்கள் சொல்லி (எடுத்து ஏத்தி), எங்கள் மீது தெளித்தனர் (நனி நல்கி)! எங்கள் வீட்டுக் குழாயில் அன்று தண்ணீர் வராததால், என் மீது இன்னும் கொஞ்சம் நன்றாகச் தெளிக்கச் சொன்னேன்!

பின்னர், பலவித மாலைகள் அணிந்து, புனிதனாக வந்த கண்ணனுடன் (பூப்புனை கண்ணிப் புனிதனோடு) என்னைச் சேர்த்து வைத்தனர்.

தோழி: கண்ணன் புனிதனாக வந்தானா? எதற்கு?

பாவை: அதுவா! இவனோ, எப்போதும் காடுகளில் மாடுகளுடன் திரிந்து, வெண்ணை திருடித் தின்று உடம்பெல்லாம் அழுக்காய் இருப்பவன்! என் அப்பா ரொம்ப ஆசாரம் ஆயிற்றே! சுத்தமா வரலேன்னா கல்யாணம் இல்லைன்னுட்டார்! எனவே, கண்ணன் நீராடி, மாலை தரித்து, கையில் தர்ப்பையுடன் ஆசாரமாக வந்தான்!

பின்னர், கண்ணன், என் இடுப்பில் தர்ப்பைப் புல்லால் காப்பு கட்டினான் (காப்பு நாண் கட்ட). என் கையிலும் காப்பு (கங்கணம்) கட்டினான்!


(இன்று சிலர் வழக்கத்தில், கையில் மஞ்சள் கயிறு மட்டும் காப்பாகக் கட்டப் படுகிறது)

***

பாவை: அவன் மீண்டும் மணப்பந்தலுக்கு வரும் போது, நீயும், பக்கத்து வீட்டு பத்மாவும், வேறு சில தோழிகளும் சேர்ந்து (சதிரிள மங்கையார்), சூரியன் போன்ற ஒளி உடைய மங்கள தீபங்களுடனும் (கதிரொளி தீபம்), பூர்ண கும்பங்களோடும் (கலசமுடன் ஏந்தி), எதிரே வந்து வரவேற்றீர்கள் (வந்து எதிர் கொள்ள)!


தோழி: நானா? நான் நேற்று என் வீட்டில் நன்றாகத் தூங்கினேன்! உன் கல்யாணத்திற்கு வந்து, கும்பமும் தீபமும் தூக்கிய நினைவு இல்லையே எனக்கு?

பாவை: அம்மா தாயே! கனவிலே, நீ வருங்காலத்தில் ரயிலைக் கூடத் தூக்கலாம்!! ... சும்மா குறுக்கே பேசாமல், மேலே கேள்! மதுரை மன்னன் (மதுரையார் மன்னன்), பாதுகைகளை அணிந்து கொண்டு (அடிநிலை தொட்டு) பூமி அதிரும் படி வந்தான் (அதிரப் புகுத)!

('கொடுத்தே பழக்கப் பட்ட வாமனன், யாசிக்க வந்ததனால், பதற்றத்தில் பூமி அதிரும்படி வந்தான்' என்று நஞ்சீயர் கூறுவது போலே, இங்கு கண்ணன் பூமி அதிரும்படி வந்தான் என்கின்றாள் நம் பாவை!)

(கண்ணனுக்கு, பரமபத நாதன் என்ற பெயரை விட, 'மதுரையார் மன்னன்' எனும் பெயர் அதிகம் பெருமை தரும்! பரமபதத்தை விட்டு, இங்கு வருவதைத் தானே அவன் விரும்பினான்? இதனால் தானே ஆண்டாளும் திருப்பாவையில், 'மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை' என்று தானே அவனை அழைக்கின்றாள்!

ஒரு வைணவர், வெண்ணைக்காடும்பிள்ளை சிலையை வைத்து, அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தார். அன்றிரவு அவர் கனவில் கண்ணன் தோன்றி, "என்னை 'நம்பி', 'பிம்பி', என்று நாட்டு மானிடப் பேரிட்டு அழைக்காதே! ’மதுரை மன்னன்’ என்று கூப்பிடு" என்று சொல்லி மறைந்ததாக ஒரு கதை உண்டு!)

- சிம்ம சொப்பனம் தொடரும்!

68 comments:

  1. hey, me the firshtuuuu for my thOzhi...
    iniya kalyaana vaazthukkaL dee! :)

    Have a blissful wedlock, Kothai!

    Raghav chonna post-kku wait paNNen. Post varala. Thoonga poyitten...
    Ippo thideer nu muzhichi vanthu comment pOdaren! :)
    Coz, you are my best dee, loosu peNNe! :)

    ReplyDelete
  2. Fotos sooperu!
    Where did u take those fotos & put them as pics?
    Ella kalyana foto-layum, naanum kooda irukken :)

    ReplyDelete
  3. அருமை!
    Sweet & Cute ஆண்டாள்!

    ReplyDelete
  4. KRS

    //Fotos sooperu!
    Where did u take those fotos & put them as pics?//

    These pictures are on the temple walls, in front of Sri AaNdAL Sannidhi, Srirangam.

    We (Raghavan & myself) took them when we visited the place during Feb-10. We had planned the use of these pictures for VAraNamAyiram.

    Still 6 more to come ...

    ReplyDelete
  5. ரொம்ப ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க.
    -------------
    அப்புறம்,

    தயிர், தேன், நெய் இம்மூன்றும் கலந்த கலவையை பெரியாழ்வார் தந்ததாகச் சொல்றீங்க இல்லையா!

    அதுல ஒரு சின்ன சந்தேகம்...

    எங்க பள்ளிக்கூடத்துல, எங்க தமிழ் ஆசிரியை சொல்லிருக்காங்க.. சுத்தமான தேனும், நெய்யும் கலந்த கலவை நஞ்சு! அப்படின்னு...

    இது உண்மையா??

    இல்ல இப்ப நீங்க சொன்னது உண்மையா??

    -முகில்

    ReplyDelete
  6. முகிலரசி

    //எங்க பள்ளிக்கூடத்துல, எங்க தமிழ் ஆசிரியை சொல்லிருக்காங்க.. சுத்தமான தேனும், நெய்யும் கலந்த கலவை நஞ்சு! அப்படின்னு...//

    இதைப் பற்றி எனக்குத் தெரியாது.

    ஆனால், இந்த மதுக் கலவை, காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

    ஒரு வேளை, தேனும், நெய்யும் நஞ்சு என்பதால் தான், தயிரையும் கலந்து கொடுக்கிறார்களோ என்னவோ?

    ReplyDelete
  7. நன்றி இரங்கன் ஐயா.

    -முகில்

    ReplyDelete
  8. யம்மாடி கோதே! இது உன் கனவே அல்ல! என்னைய பொறுத்த வரை உன் கல்யாணமே தான்!

    உனக்குத் தான் தெரியுமே, திருப்பாவைப் பதிவுகளில்... கடைசிப் பதிவில்...
    ஒவ்வொரு பாசுரத்திலும் "கனாக் கண்டேன் தோழி நான்" என்பதை மட்டும் கட் செய்து விடுவேனே! :)

    நல்லா இருடீ!
    தீர்க்க சுமங்கலி பவ!

    வடிவாய் வல மார்பினில் வாழ்வாங்கு வாழப் பல்லாண்டு பல்லாண்டு!

    ReplyDelete
  9. //பாளை கமுகு* பரிசுடைப் பந்தல் கீழ்*//

    பந்தல்-ல பாளை, கமுகு எல்லாம் கூட விளையுதா என்ன? :)

    பந்தலைப் பரிசுடைப் பந்தல்-ன்னு வேற சொல்றா? இங்க பரிசு எல்லாம் வேற இருக்கா என்ன? :)

    ReplyDelete
  10. ரங்கன் அண்ணா,

    ஒவ்வொரு கட்டத்திலும், வேத மந்திரங்களின் உசாத் துணை (Reference) எல்லாம், ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கொடுத்து, சிறப்பான பதிவைத் தந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. //உதவி வேண்டுபவர்கள், மிரட்டி உதவி கேட்டால் வேலை நடக்குமா என்ன? அப்போது ஓடிய குயில், மீண்டும் அந்தச் சோலைப் பக்கமே வரவில்லை//

    ஹா ஹா ஹா
    கோதைக்கும் குயில் என்றால் கொஞ்சம் பயம்!
    அது சொந்தமாகப் பலதும் பாடி விடும்! இதே, கிளி என்றால் சொன்னதை மட்டுமே சொல்லும்!

    தன் காதல் மணாளனிடம் போய், தன் மனத்தில் என்னவெல்லாம் தோன்றிற்றோ,
    அதை அப்படியே தன் வார்த்தையாக, தன் தனிமைக் கண்ணீராக...
    ஒப்பித்து வரத் தானே என் காதல் மனசு ஏங்கும்???

    அதான் குயில் இல்லாமல், தோழி கோதைக்கு கிளியே உதவியது! அவள் தோளிலும் வந்து அமர்ந்தது!
    இதுவரை அடியேன் விளக்கம்!
    ----------------------------

    இனி ஆசார்ய விளக்கம்! (பத்தி பிரித்து)

    குயிலானது, எந்துணையும் திறல் உடைத்தாய் இருப்பினும், சங்கீத ஸ்வர ஞானம் கொண்டாயதே ஆகிலும், அந்த வித்வத் ஆனது, தான் தன் ஞான வேஷத்துக்கே அன்றி, எம்பெருமானிடத்தே ஆழங்காற்பட்ட காதலுக்கு அத்துணை உபகாரமாக இல்லாது நின்றாற் போலே....

    இது எவ்வாறு என்னுங்கால், ஞான கர்ம யோகாதிகள்,
    அவ்வளவிற், தான் தன் ஸ்வப் ப்ரவருத்தியாலும்,
    தன் விசேஷணங்களுக்கே உரித்தான சாதுர்ய உபாயங்களாலும்,

    அவனிடத்திலே ப்ரேமையைப் பரிபூர்ணமாகக் காட்டித் தாராது, ஸ்வப் ப்ரவருத்தி சாதுர்யங்களே காட்டித் தருமாப் போலே, குயிலின் உபாயம் நின்றதே என்னலுமாம்!

    அஞ்சுகப் பிரம்மமான கிளியோ, ஸ்வப் ப்ரவருத்திகள் ஏதுமின்றி, சொன்னதைச் சொன்னுமாம் கிளிப்பிள்ளை என்னுமாப் போலே, தானாக ஒன்று ப்ரஸ்தாபிக்காது,
    தான் மானசீகத்தால் உற்று உரைத்த உள்ளொளியை எம்பெருமானிடத்திலே சென்று கொட்டுமாறு நின்றதால் அன்றோ,

    ஆழ்வார்களாதிகளிடையே, பகவத் பருவருத்தி விரோதியான ஸ்வப் ப்ருவருத்தியை நிவர்தித்த அஞ்சுகம் ஏற்றுமுடைத்து என்னலுமாம்!

    ReplyDelete
  12. இனி...

    பதிவில் உள்ள சில விஷயங்களை,
    அடியேன், கோதையின் தோழனாக,
    ஒரு சில வார்த்தைகள் பேச அனுமதிக்குமாறு,
    ரங்கன் அண்ணாவையும், சபையினரையும் வேண்டுகிறேன்!

    ReplyDelete
  13. கோதையின் திருமணம் வைதீக முறைப்படி, ஊர் அறிய நடந்த திருமணமாகவே, அவள் கனவிலே காட்டுகின்றாள்!

    ஆனால் வைதீகத் திருமணத்தில் இல்லாத, பல சங்கத் தமிழ் மரபுகளையும் இந்தத் திருமணத்திலே கலக்கின்றாள் கோதை!

    இது எப்படீன்னா,
    இந்தக் காலத்தில் என்ன தான் லவ் மேரேஜ்-ன்னாலும், அம்மா அப்பா கிட்ட சொல்லி, வாதாடிப் போராடி, இரு வீட்டு சம்மதமாகவும், அவரவர் சடங்குகளோடு...

    ஒரு லவ் மேரேஜ், அரேஞ்ச்டு மேரேஜ் ஆவது போல...
    இதுக்கு அன்றே வழிகாட்டியவள் என் கோதை! :))

    கண்ணன் வைதீக குலம் அல்ல! தினப்படி குளிக்கக் கூடத் தெரியாத ஆயர் குலம்! கிட்டக்க போனாலே வெண்ணெய் வீச்சம் அடிக்கும்! ஏறு எல்லாம் தழுவித் தான் கண்ணாலம் எல்லாம் நடக்கும் :)

    ஆனா பெரியாழ்வார் என்னும் வைதீகோத்தமர் கிட்டக்க போயி, அவன் அப்படியெல்லாம் மாட்டு வாலை ஆட்ட முடியுமா? :)
    ஏறு எல்லாம் தழுவ வேணாம்! ஒழுங்கா ரெண்டு மந்திரம் சொல்லு பார்ப்போம்-ன்னு சுயம்வரம் வச்சிட்டாரு-ன்னா? :)

    அதான் ஒழுங்காக் குளிச்சிட்டு, மாப்பிள்ளையா லட்சணமா, சுத்த பத்தமா பந்தலுக்கு வரான்! :)

    இதை
    * "நாரணன் ஆயன்" நடக்கின்றான் என்றெதிர்-ன்னு சொல்லாம
    * "நாரணன் நம்பி" நடக்கின்றான் என்றெதிர்-ன்னு
    அவனை எங்க ஆத்து நம்பியாக, எடுத்த எடுப்பிலேயே காட்டி விடுகிறாள், தன் கூட்டத்துக்கு! :))

    கண்ணன் = கோ+விந்தன் = பசு காப்போன்!
    ஆனா எப்படி வரான் பந்தலுக்கு?
    கோளரி + மாதவன் போல் வரான்!

    மாதவன் = மா+தவம் = நல்ல அனுஷ்டானங்கள் எல்லாம் செய்பவன் போல ஒரு வேஷம் கட்டிக்கிட்டு, லுக்கு விட்டுக்கிட்டு,

    கோளரி = பாதி மனிதன்/பாதி மிருகம் போல்....
    பாதி வைதீகன்/பாதி ஆயனாக

    கோளரி = மாதவன் + கோ-விந்தனாக...
    புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்!

    :))

    ReplyDelete
  14. என்ன தான் ஆரம்பத்தில் அவனை நாராயணன் "நம்பி" ஆக்கினாலும்,

    முடிக்கும் போது "ஆயனுக்காக" தான் கண்ட கனாவினை என்றே முடித்து விடுகிறாள்!
    அம்மணி, புகுந்த வீட்டு கலாச்சாரத்துக்கு வந்துட்டாங்க போல! :))

    ReplyDelete
  15. அற்புதமான படங்கள் !!

    ReplyDelete
  16. கோதை, வைதீகத் திருமணத்தில் சங்கத் தமிழ் மரபையும் கொண்டு வருகிறாள் என்று சொன்னேன் அல்லவா? இப்படித் தான்!

    தமிழ் மரபில்...களவு மணத்துக்கு அதிக ஏற்றம் உண்டு, இலக்கியங்களில்! அதான் தலைவன்-தலைவி காதலாக, கண்ணனும் தானும், முன்பே மனத்தால் கலந்ததைக் காட்டி விடுகிறாள்!

    கோதையின் மாலை மாற்று வைபவம் திருமணத்துக்கு முன்பே நடந்து விடுகிறது!
    களவில் தான் தலைமகள், தான் சூடிய குருக்கத்திப் பூமாலையை (மாதவிப் பூ), தலைமகன் கழுத்தில் இட்டு விளையாடுவாள்! அதையே கோதையும் செய்து விடுகிறாள், ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக!

    பின்னர் ஒவ்வொன்றாக நடக்கிறது!

    1. தலைமகனை எண்ணி வாடுதல்:
    ஊனிடை ஆழிசங்கு உத்தமனுக்கு என்று
    உன்னித்து எழுந்த என் தடமுலைகள்!

    2. காமனின் கரும்பு வில்லை துணைக்கு அழைத்தல்:
    கருப்பு வில் மலர்க் கணைக் காம வேளைக்
    கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற...

    3. தலைவன் சிற்றில் வந்து சிதைக்க:
    சிற்றில்வந்து சிதையேலே

    4. தலைவன் தன் புடவையோடு விளையாட:
    தோழியும் நானும் தொழுதோம்
    துகிலைப் பணித்து அருளாயே

    5. தலைவனைச் சேருவேனோ? என்று இழைத்துப் பார்த்தல்:
    என் கைப்பற்றி, தன்னோடும்
    கூட்டும் ஆகில் நீ கூடிடு கூடலே!

    6. திருமணமும் கூடியது:
    மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத,
    மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக் கைத்தலம் பற்ற..

    இப்படியாக
    * தமிழ் மரபிலே களவு மணம் கண்டு
    * வைதீக மரபிலே கற்பு மணம் முடிக்கிறாள்!!!

    களவிலும் அளவு மீறலை, என் தோழி!
    கண்ணாலத்துக்கு அப்பறம் தான் டச்சிங் டச்சிங் எல்லாம்! :)

    வாரணமாயிரம் கல்யாணம் முடிந்த பின்னர் தான்...
    கருப்பூரம் நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ? :)))

    யம்மாடி, ஆண்டாள் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  17. இப்போ...கொஞ்சலான கல்யாண வரிகளை அனுபவிப்போம்! :)

    //வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து...
    //பாவை: நாராயணன், ஆயிரம் யானைகள் சூழ வருகின்றான்!//

    பொதுவாக, எல்லா உரைகளிலும் இந்த ஆயிரம் யானைகள்-ன்னு தான் இருக்கு! ஆண்டாள் திருமண Magnum Opus! மிகப் பிரம்மாண்டமான கற்பனை! மிகவும் நல்லா இருக்கு!

    ஆனால் முன்பு இராம.கி ஐயா இதற்கு இன்னொரு பார்வையும் கொடுத்து இருந்தார்! வாரணம் ஆயிரம் சூழ = ஆயிரம் சங்குகள், கல்யாண வரிசையில் சூழ...
    இதோ சுட்டி!

    இந்த இன்னொரு பார்வையும் சுவையானதே! கோதை இந்தத் திருமணத்தில் வேற பிரம்மாண்டங்களை எல்லாம் காட்டாமல் எளிமையாகத் தான் திருமணம் நடத்துகிறாள்! இந்த ஆயிரம் யானை மட்டுமே பிரம்மாண்டம்! அதனால் ஆயிரம் சங்குகள் சூழ என்ற கட்டுரையும் வாசித்துப் பாருங்கள்! அதுவும் சுவையாகவே இருக்கும்! :)

    //தோழி: ஆய்ப்பாடியில் யானைகள் ஏது?
    பாவை: எல்லாம் நந்தகோபருடையது! 'உந்து மதகளிற்றன்' பாசுரம் சொன்னேனே, அதற்குள் மறந்து விட்டதா?//

    ஓ, அப்படி கனெக்ஷன் போடறீங்களா ரங்கன் அண்ணா! :)
    உந்து மத களிற்றன் என்பது உருவகம்!
    யானை போல நிதான+வலிமை உடையவன்-ன்னு பொருள்!

    * உவமை அணி = புலி போன்ற வீரன் வந்தான்!
    * உருவக அணி = புலி வந்தான்!

    உந்து மத களிற்றன் = அவ்வகையில் வரும்!
    ஆயர்பாடியில் யானைங்க அவ்வளவா வளர்க்க மாட்டாங்க!
    ஆநிரை கவர்தல் போரின் போது கூட, ஆயர்களிடம் கூர்வேல் இருக்குமே தவிர, யானைப்படை எல்லாம் இருக்காது!

    அப்படிப் பார்த்தா
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்-ன்னு கூட வருது!
    அதுக்காக ஆயிரம் சிங்கம் யசோதை வளர்த்ததாக ஆயீருமா? :)

    மற்றபடி ஆயிரம் யானைகள் என்பது சுவையான சந்திரலேகா படம் பார்த்த எஃபெக்ட்! நல்லாத் தான் இருக்கு!

    ReplyDelete
  18. //தன் நண்பர்களையும், யானை மேல் ஏற்றிக் கொள்கிறான்//

    இல்லையில்லை!
    நண்பர்களை மட்டுமே யானைகளின் மேல் ஏற்றுகிறான்!
    தான் மட்டும், நடக்கின்றான் என்றெதிர் என்று, நடந்து தான் வரான்! :))

    * அடியார்களுக்கு ஏற்றம் கொடுத்து
    * தனக்கு இறக்கம் கொடுத்துக் கொள்வது
    அல்லவோ அவன் அவதார சுபாவம்!

    //(இப்போது, மாப்பிள்ளை தன் நண்பர்களையும், ஊர்வலத்தில் காரில் ஏற்றிக் கொள்வது போல்)!//

    ஹிஹி!
    இதை வீட்டுல அண்ணி படிக்கலையா ரங்கன் அண்ணா? :)

    மாப்பிள்ளை காரில் குழந்தைகளை வேணும்-ன்னா ஏத்தலாம்! மாப்பிள்ளைத் தோழன்-ன்னு பெண்ணோட தம்பியை ஏற்றலாம்!

    நண்பர்களை எல்லாம் ஏற்றினால் கண்ணாலத்துக்கு முன்னாடியே பூரிக்கட்டை பறக்கும்! :)
    FYI...பூரிக்கட்டை, சக்கரத்தை விட பவர்ஃபுல், தெரிஞ்சிக்கோங்க! :)

    ReplyDelete
  19. //எனவே தான் இதையும் நரசிம்மன் பாசுரமாக அடியேன் கருதுகிறேன்! சிலர், இதை நரசிம்மர் பாசுரம் இல்லை என்பர்! அதில் அடியேனுக்கு உடன்பாடு இல்லை!)//

    ஹா ஹா ஹா
    **அரி-முகன்** அச்சுதன் கை மேல் என் கை வைத்து!
    பொரி முகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!

    ReplyDelete
  20. //பின்னர், கோவிந்தனுக்கு, சில வேத மந்திரங்களைச் சொல்லி, 'மது பர்க்கா' (தயிர், தேன், நெய் ஆகியவற்றின் கலவை) கொடுத்தார்!//

    //இந்திரனிடம், பத்து நல்ல புத்திரர்கள் பெற அருள் செய்யுமாறு வேண்டினோம்! 11-வது குழந்தையாக, நாராயணனையே (என் கணவனையே) கேட்டேன்!//

    ஹிஹி!
    இதெல்லாம் பாட்டில் இல்லையே!

    ஆனா 'Buy-10-Get-11th-Free' ரொம்ப பிடிச்சிருக்கு! :)))

    ReplyDelete
  21. //கண்ணன், என் தோஷங்கள் நீங்க, மந்திரங்கள் சொல்லி, தர்ப்பைப் புல்லால், என் புருவங்களில் தடவினான்.

    (புரோகிதர் இந்த மந்திரத்தைச் சொல்லும்போது, மணப் பெண்கள், பக்தியுடன் நன்கு திரும்பச் சொன்னால் அவர்கள் குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்)//

    அப்படியே அமையட்டும்! ததாஸ்து!

    அந்த மந்திரத்தை இங்கே பந்தலில் கொடுக்க முடியுமா அண்ணா? (பொருளோடு)

    ReplyDelete
  22. //சும்மா வாயை மூடிண்டு கேளுடீ! நாராயணன், எனக்கு வாங்கிய புடவையை (கோடி உடுத்தி), தன் தங்கை மூலம் (அந்தரி - துர்க்கை) அணியச் செய்தான்//

    இது பாசுரத்தில் மிகவும் முக்கியமான குறிப்பு!

    நாராயணஸ்ய அனுஜாம் என்று அம்பாள் போற்றப்படுகிறாள்!
    இன்றும் திருக்கோவிலூரில் பெருமாள் கோயிலில் துர்க்கை சன்னிதி உள்ளது!

    ரங்கன் அண்ணா
    மணமாலை அந்தரி சூட்ட என்றல்லவோ வருகிறது!
    மணமகனின் தங்கையாகிய அந்தரி, பெண்ணுக்கு மணமாலை சூட்டுவாளா? கோடி உடுத்துவாளா?

    ReplyDelete
  23. //பின்னர், கண்ணன், என் இடுப்பில் தர்ப்பைப் புல்லால் காப்பு கட்டினான் (காப்பு நாண் கட்ட)//

    அட, அப்ப என் தோழியும் "தாமோதரள்" ஆஆ? :)

    //தோழி: நானா? நான் நேற்று என் வீட்டில் நன்றாகத் தூங்கினேன்! உன் கல்யாணத்திற்கு வந்து, கும்பமும் தீபமும் தூக்கிய நினைவு இல்லையே எனக்கு?//

    அட, விடுறீ கோதை! இந்தப் பத்மாவுக்கு, உன் பாசுரத்தில் நீ கல்யாணப் பந்தியைப் பற்றிச் சொல்லலையே-ன்னு கோவம்! அதான் உன்னை வெறுப்பேத்தறா! :)

    உனக்கு நாங்க இருக்கோம் தீபம் கும்பம் தூக்க! உன் ஆளையே குண்டாக் கட்டாத் தூக்கிப் பந்தல்-ல உட்கார வைக்கச் சொன்னாக் கூட அதையும் செஞ்சீருவோம்! :)

    ReplyDelete
  24. அது தாமோதரள் இல்ல...

    தர்ப்போதரள்...

    -முகில்

    ReplyDelete
  25. // Mukilarasi said...
    நன்றி இரங்கன் ஐயா//

    ஏம்மா முகில், அரங்கன் அண்ணாவை ஏன்-மா இரங்கன்-ன்னு கீழ இறக்குற? :)

    ரவி என்னும் போது மொழி முதல் ரகரம் வாரா! அதனால் இரவி!
    ஆனால் அரங்கன் அப்படி அல்லவே! அரங்கம் என்பதே தூய தமிழ்ப் பெயர் தானே!
    அதுனால நோ இரங்கன்! ஒன்லி அரங்கன்! அர்த்தம்வாயிந்தா? :)

    ReplyDelete
  26. kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    // Mukilarasi said...
    நன்றி இரங்கன் ஐயா//

    ஏம்மா முகில், அரங்கன் அண்ணாவை ஏன்-மா இரங்கன்-ன்னு கீழ இறக்குற? :)*/

    இரங்குபவர்கள் இறங்குவார்கள், இறங்குபவர்கள் இரங்குவார்கள். :-)

    ரவி என்னும் போது மொழி முதல் ரகரம் வாரா! அதனால் இரவி!
    ஆனால் அரங்கன் அப்படி அல்லவே! */

    அப்போ 'இரங்கன்' தூஊஊய தமிழ் பெயர் இல்லீங்களா அண்ணா. :-)

    அரங்கனுக்கும் இரங்கனுக்கும் என்ன பொருள் வேறுபாடு? விளக்குங்களேன்.

    பேசாம எல்லாரும் தமிழ் ன்னே பேர் வச்சிட்டா இந்த பிரச்சினையே வர்ராது. இல்லீங்ண்ணா :-)

    அதுனால நோ இரங்கன்! ஒன்லி அரங்கன்! அர்த்தம்வாயிந்தா? :)*/

    அரங்கன் என்பதற்கு என்ன பொருள் என்பது எனக்கு புரியல....
    ஆனால், இரங்கன் என்றால் இரக்கங்கொள்பவன் ன்னு பொருள்.

    இரங்கன் அரங்கன் ஆனாதாலே, அரங்கன் இரங்கன் ஆனான்... அர்த்தம் ஆகிறதா அண்ணா...

    -முகில்

    ReplyDelete
  27. அப்பாடி, கல்யாணத்துக்கு வர முடியாட்டாலும் விருந்துக்காவது வர முடிஞ்சதே..

    அண்ணா.. கல்யாண வீடியோ பதிவு பார்த்தேன்.. ஓரே தடபுடல் தான் போல..

    ReplyDelete
  28. ரங்கன் அண்ணா.. என்னதிது பொண்ணு வீட்டுக்காரர் (ரவி) ரொம்ப குதிக்கிறாரு..கொஞ்சம் சொல்லி வைங்க.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களே அமைதியா இருக்கோம் :)

    ReplyDelete
  29. அண்ணா, ஆண்டாள் சொல்லியவாறு இப்போ கல்யாணம் நடக்கிறதா.. மங்களாசாசனம் எல்லாம் நடப்பதில்லை அல்லவா..

    ReplyDelete
  30. //தோழி: ஆய்ப்பாடியில் யானைகள் ஏது? //

    இல்லாவிட்டால் தான் என்ன.. பத்மாவதியை திருமணம் செய்து கொள்ள கடன் வாங்கியது போல்.. இப்போ யார்கிட்டயாவது யானை கடன் வாங்கியிருக்கலாமே.. “கடன் வாங்கியாவது காதலியின் கனவை நிறைவேற்ற மாட்டானா ?

    ReplyDelete
  31. //நாராயணன், எனக்கு வாங்கிய புடவையை (கோடி உடுத்தி), தன் தங்கை மூலம் (அந்தரி - துர்க்கை) அணியச் செய்தான்.//

    இது ஏன் அண்ணா ? நாத்தனாருக்கும், பொண்ணுக்கும் பிற்காலத்துல சண்டை வரக்கூடாதுன்னு தானே ?

    ReplyDelete
  32. பந்தல் பதிவில் ஆண்டாளை கண்டாயா!
    பந்தல் பதிவில் ஆண்டாளை கண்டேனே!

    ReplyDelete
  33. //பந்தல்-ல பாளை, கமுகு எல்லாம் கூட விளையுதா என்ன? :)//

    எடுத்தாந்து கட்டினாங்க! வாசனைக்காக! அதுவும் அரங்கத்திலே, காவேரியின் ஓரத்தில் பாக்கு மரம் விளையுமாமே! அங்கேந்து கொண்டாந்தாங்க! பாக்குப் பட்டை வாசனை 2-3 நாள் தாங்கும்ல!

    ’பைம்பொழில் கமுகின் மடலிடைக் கீறி, வண் பாளைகள் நாற’

    என்கின்றாரே அடிப்பொடியார், திருப்பள்ளி எழுச்சியில்!

    ReplyDelete
  34. KRS

    //ஒவ்வொரு கட்டத்திலும், வேத மந்திரங்களின் உசாத் துணை (Reference) எல்லாம், ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கொடுத்து, சிறப்பான பதிவைத் தந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!//

    நன்றி.

    ReplyDelete
  35. //குயிலானது, எந்துணையும் திறல் உடைத்தாய் இருப்பினும், சங்கீத ஸ்வர ஞானம் கொண்டாயதே ஆகிலும், அந்த வித்வத் ஆனது, தான் தன் ஞான வேஷத்துக்கே அன்றி, எம்பெருமானிடத்தே ஆழங்காற்பட்ட காதலுக்கு அத்துணை உபகாரமாக இல்லாது நின்றாற் போலே....//

    ஆசார்யர்களை, ‘பறவைகள்’ என்று சொல்வதுண்டு! தூது போகும் பறவைகள், நமக்காக எம்பெருமானிடம் தூது போகும் ஆசாரியர்களே!

    இங்கு ஆண்டாளும், தனக்காக, ஒரு பறவையை தூது அனுப்புகிறாள். குறிப்பாக, குயில், புறா, கிளி ஆகியவை, தூது அனுப்ப ஏதுவாக இருக்குமாம்!

    ReplyDelete
  36. Raghav said..
    என்னதிது பொண்ணு வீட்டுக்காரர் (ரவி) ரொம்ப குதிக்கிறாரு..கொஞ்சம் சொல்லி வைங்க.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களே அமைதியா இருக்கோம் :)::))))

    அதானே! மாப்பிள்ளை ரொம்ப soft type. .இருந்தாலும்
    மாப்பிள்ளை வீட்டுகாரங்க நாங்க! மிடுக்கு கொஞ்சம் அதிகம் .
    பிரச்சனை பண்ணாம விடமாட்டோம்ல!

    ReplyDelete
  37. //ரங்கன் அண்ணா
    மணமாலை அந்தரி சூட்ட என்றல்லவோ வருகிறது!
    மணமகனின் தங்கையாகிய அந்தரி, பெண்ணுக்கு மணமாலை சூட்டுவாளா? கோடி உடுத்துவாளா?//

    கல்யாணத்தின் போது, இன்றும் கூரைப் புடவையை பெண்ணின் நாத்தனார் கட்டி விடுவது உண்டு!

    ReplyDelete
  38. //அண்ணா, ஆண்டாள் சொல்லியவாறு இப்போ கல்யாணம் நடக்கிறதா.. மங்களாசாசனம் எல்லாம் நடப்பதில்லை அல்லவா..//

    இது இப்போது நடப்பதில்லை! யாராவது கங்கை நீர் கொண்டு வந்து, புரோகிதரிடம் கொடுத்தால் சும்மா மேலே தெளிப்பர்! மந்திரங்கள் சொல்வதில்ல!

    ReplyDelete
  39. KRS

    //உந்து மத களிற்றன் = அவ்வகையில் வரும்!
    ஆயர்பாடியில் யானைங்க அவ்வளவா வளர்க்க மாட்டாங்க!
    ஆநிரை கவர்தல் போரின் போது கூட, ஆயர்களிடம் கூர்வேல் இருக்குமே தவிர, யானைப்படை எல்லாம் இருக்காது!//

    யானை வந்ததா, சங்கு வந்ததா என்று அடியேன் பார்த்ததில்லை! எனினும் சில விளக்கங்கள், கருத்துக்கள்:

    ஆய்ப்பாடியில் யானை வளர்ப்பதில்லை, உண்மைதான்! ஆனால் நந்தகோபர் ஒரு சிற்றரசர்! அவரிடம் இருந்ததாக பாகவதம் கூறும்:

    ரோகிணி நந்தகோபர் இடத்திற்கு வந்த உடனேயே, ஆய்ப்பாடியில், கண்ணனும் பலராமனும் வசிப்பதற்குரிய எல்லா குணங்களும் விசேஷங்களும், செல்வங்களும், அரச சூழ்நிலையும் நிறைந்ததாய், லக்ஷ்மி இருக்கும் இடமாய் விளங்கியதாக பாகவதம் (10.5.18) கூறுகிறது!

    அரச சூழ்நிலை! எல்லாம் நந்தகோபருக்கே வந்தது! கட்டாயம் யானை இருக்குமே அரசர்களிடம்! அரசன் மகன் யானையில் வருவது ஒன்றும் பெரிதல்லவே!

    பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீநிவாஸய்யங்கார் வியாக்கியானம் (Tpyed as is):

    உந்து மதகளிற்றன்:

    பல யானைகளின் பலத்தை ஒருங்கே உடையவர்.

    பல மதம் கொண்ட யானைகளை தன் பலத்தாலே தள்ளுபவர்.

    மதஜலம் பெருகும் யானைகளை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்! ஆய்ப்பாடியில் யானைகள் இருக்குமோ எனில்: வஸுதேவருக்கு இவர் ப்ராண ஸ்நேகிதர். அவர் பிள்ளையை வளர்ப்பவர்! தன் பிள்ளைக்காக தன் சொத்துக்களை அங்கே விட்டிருப்பவர்! தத் புத்திரனுக்கு, இரண்டு இடத்துச் சொத்துக்களிலும் பாத்யதை உண்டு!

    நீங்கள் குறிப்பிட்ட அந்த Article படித்தேன். வித்தியாசமான சிந்தனை! ஆனால் அதில் எனக்கு ஒப்புதல் இல்லை!

    அடியேன் பிறந்து வளர்ந்த மதுரையில், ஸ்ரீ வைஷ்ணவர்களின் திருமணத்தில் சங்கு பார்த்ததாக நினைவில்ல!

    திருப்பாவை, நாச்சியார் திருமொழி எழுதும்போது, ஆண்டாளுக்கு, ஒரு கோபிகை பாவனை! ஆயர் குலக் கண்ணன் தன்னை மணம் செய்வதாகத் தான் கற்பனை!

    எனவே, தென் தமிழ் நாட்டில் சங்கு இருந்ததா? என்பது இங்கு முக்கியமில்லை! கண்ணனுக்கு யானைகள் இருந்ததா என்பதே கவனிக்க வேண்டியது!

    ஒரு அதி முக்கியமான நபரை மரியாதை செய்வதற்கு, அந்தக் காலத்தில் - தென் தமிழ் நாட்டிலும் கூட - யானை மேல் ஏற்றி பவனி வரச் செய்வது உண்டு!

    ஒரு கல்யாணத்தில், மணமகனை விட முக்கியமான நபர் வேறு யார்?

    பெரியாழ்வாருக்கே அந்த மரியாதை கிடைத்ததே! யானை மீதிருந்து பிரபந்தம் பாடிய ஒரே ஆழ்வார் அவர் தானே?

    இன்றும் நாம் கல்யாணத்திற்கு, சத்திரம், Mike Set, ஓட்டை Car, பந்தல், தண்ணீர், Current, முதல் எல்லாம் வாடகைக்கு எடுப்பதில்லையா? அதுபோல், யானைகளை வாடகைக்கு எடுத்து இருக்கலாமே?

    ReplyDelete
  40. //அதானே! மாப்பிள்ளை ரொம்ப soft type. .இருந்தாலும்
    மாப்பிள்ளை வீட்டுகாரங்க நாங்க! மிடுக்கு கொஞ்சம் அதிகம் .
    பிரச்சனை பண்ணாம விடமாட்டோம்ல!//

    ஹா ஹா ஹா
    எங்க வூட்டுப் பொண்ணு...ஒரு லுக்கு விட்டாப் போதும்,
    உங்க மா-பிள்ளை, எங்க மாப்பிள்ளை, பொசுக்-னு அடங்கீருவாரு! உங்களையும் ராகவ்-வையும் அடக்கீருவாரு! :))

    பை தி வே, ராகவ் வேணும்-ன்னா மாப்பிள்ளை வீட்டுக்காரனா இருக்கலாம்!
    ஆனால் நானும் இராகவனும் பொண்ணு வீட்டுக்காரங்க தான்!

    குமரன் அண்ணா கூட பொண்ணு வீட்டுக்காரவுக தான்!
    அதுனால, ஊரு விட்டு ஊரு வந்திருக்கும் மா-பிள்ளை வீட்டுக் காரவுக கொஞ்சம் அடக்கி வாசிங்க! :))

    ReplyDelete
  41. //குமரன் அண்ணா கூட பொண்ணு வீட்டுக்காரவுக தான்!
    அதுனால, ஊரு விட்டு ஊரு வந்திருக்கும் மா-பிள்ளை வீட்டுக் காரவுக கொஞ்சம் அடக்கி வாசிங்க! :))//

    நான் பொண்ணு வீட்டுக்காரன். ஆனால், கண்ணன் பொண்ணு வீட்டுக்காரன். எனவே நான் கண்ணன் வீட்டுக்காரன்.

    இப்படி, இரண்டு வீட்டுக்கும் நான் சொந்தமானதுனால, நான் இந்த சண்டையில் இருந்து ஜகா வாங்கிக்கறேன் :-)

    ReplyDelete
  42. சரி, இது வரை ரங்கன் அண்ணா கூட விவாதமே செஞ்சதில்லை! இப்போ செஞ்சீறலாமா-ண்ணா? சும்மா விளையாட்டுக்குத் தான்! சதஸ்-ன்னு எடுத்துக்கோங்க மக்களே! :))

    வாரணம் ஆயிரம் என்பது யானையா, சங்கா? என்பது ஒரு சுவையான இலக்கிய ஆய்வு! அவ்ளோ தான்! இரண்டு கட்சிகளுமே அவரவர் கருத்துக்களைக் கூறலாம்! ஆனால் வாரணமாயிரம் என்பது மகத்தான ஒரு காதல்-திருமணக் காவியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை!

    இப்போ...
    //ஆனால் நந்தகோபர் ஒரு சிற்றரசர்!//

    திருமங்கை மன்னன் சிற்றரசர் தான்! அவரிடம் யானைகள் இருந்ததாகச் செய்திகள் இல்லை!
    மாறனின் தந்தை கூட கிட்டத்தட்ட சிற்றரசர் தான்! தண் பொருநல் திருவழுதி நாடு!
    கூரேசன் கூட, கிட்டத்தட்ட சிற்றரசர் தான்!

    இங்கே சிற்றரசர் என்பது...அந்த ஊர் மக்களின் தலைவர் என்ற அளவிலே பொருள் கொண்டால்...யானைப் படைகள் இருந்தனவா என்று ஒருவாறு விளங்கிவிடும்!

    //அவரிடம் இருந்ததாக பாகவதம் கூறும்://

    பாகவதம் லஷ்மீ கடாட்சம் என்று சொல்லிற்றே அன்றி, யானைப் படைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லிற்றா அண்ணா?

    //பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீநிவாஸய்யங்கார் வியாக்கியானம் (Tpyed as is):
    உந்து மதகளிற்றன்:
    பல யானைகளின் பலத்தை ஒருங்கே உடையவர்//

    எக்ஜாக்ட்லி!
    பல யானைகளின் பலத்தை தன்னிடம் ஒருங்கே உடையவர்!
    யப்பா...அவருக்கு அசுர பலம், யானை பலம் என்று சொல்வது போல்... :)

    //தத் புத்திரனுக்கு, இரண்டு இடத்துச் சொத்துக்களிலும் பாத்யதை உண்டு!//

    உண்டு! உண்டு!
    ஆனால் வசுதேவர் கைதியாக இருந்த போது இல்லையே! பிறகு தானே! ஆய்ப்பாடியில் இருக்கும் வரை எளிய வாழ்க்கை முறை தானே கண்ணனுக்கு?

    //அடியேன் பிறந்து வளர்ந்த மதுரையில், ஸ்ரீ வைஷ்ணவர்களின் திருமணத்தில் சங்கு பார்த்ததாக நினைவில்ல!//

    இன்றைய திருமணத்தில் யானை கூடப் பரவலாக இருப்பதில்லையே! இன்றைய வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கலாம்! ஆனால் சில இடங்களில் இன்றும் உள்ளது! என் நண்பன் திருமணத்தில் வரிசைத் தட்டில் 12 சங்கு அடுக்கி வைத்திருந்தார்கள்! மேலும் சிலப்பதிகாரம், திருமணத்தில் சங்கு இருந்ததைக் காட்டுகிறதே!

    //ஒரு அதி முக்கியமான நபரை மரியாதை செய்வதற்கு, அந்தக் காலத்தில் - தென் தமிழ் நாட்டிலும் கூட - யானை மேல் ஏற்றி பவனி வரச் செய்வது உண்டு!
    //

    உண்மை தான்! யானை மேல் வந்தால் ஒரு தனி மரியாதை தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனால் ஆயிரம் யானைகள்? :)

    //இன்றும் நாம் கல்யாணத்திற்கு, சத்திரம், Mike Set, ஓட்டை Car, பந்தல், தண்ணீர், Current, முதல் எல்லாம் வாடகைக்கு எடுப்பதில்லையா? அதுபோல், யானைகளை வாடகைக்கு எடுத்து இருக்கலாமே?//

    ஹிஹி! குபேரன் கிட்ட கடன் வாங்கினா மாதிரி, கஜானனர் கிட்ட யானைப் படைக் கடனா? :)

    //பெரியாழ்வாருக்கே அந்த மரியாதை கிடைத்ததே! யானை மீதிருந்து பிரபந்தம் பாடிய ஒரே ஆழ்வார் அவர் தானே?//

    பெரியாழ்வாரைப் போற்றிய மன்னன் கூட ஆயிரம் யானைகளை உலா வரச் செய்ததில்லை, அத்தனை பெரிய ஊரான மதுரையில்!
    அப்படி இருக்க, அன்றைய ஒரு சிறு கிராமமான வில்லிபுத்தூரில், ஆயிரம் யானைக்கு இடமேது?

    அதுவும் மாப்பிள்ளை ஊர்வலத்தில் சூழ வலம் செய்து என்னும் போது, கல்யாண வீட்டின் நெருக்கமான தெருக்களில் ஆயிரம் யானைகள் வர முடியுமா?

    திறந்தவெளி பூரம் திருவிழாவில் கூட, கேரளத்தில் ஆயிரம் யானைகள் ஒரு சேர நிக்க முடியாதே! அப்படி இருக்க ஸ்ரீவில்லிபுத்தூர் சந்துக்களில்?

    ஹிஹி! இதெல்லாம் சும்மா விளையாட்டுக்குத் தான் கேட்கிறேன்! மத்தபடி, கனாத் திறம் உரைத்த காதை என்பதில்...
    வாரணம் ஆயிரம் is a Magnum Opus! No doubt about it!

    //நீங்கள் குறிப்பிட்ட அந்த Article படித்தேன். வித்தியாசமான சிந்தனை! ஆனால் அதில் எனக்கு ஒப்புதல் இல்லை!//

    சும்மா சுவைக்குத் தான் கொடுத்தேன்-ண்ணா! ஒப்புக் கொள்ளணும்-ன்னு எல்லாம் அவசியம் இல்லை! பூர்வாச்சார்ய கிரந்தங்கள் எல்லாம் யானை என்று தான் சொல்கின்றன! அதையும் அறிவேன்! இது ஒரு இலக்கியப் பார்வைக்கு மட்டுமே! :)

    ReplyDelete
  43. KRS

    //சரி, இது வரை ரங்கன் அண்ணா கூட விவாதமே செஞ்சதில்லை! இப்போ செஞ்சீறலாமா-ண்ணா? சும்மா விளையாட்டுக்குத் தான்! சதஸ்-ன்னு எடுத்துக்கோங்க மக்களே! :))//

    ஆஹா! வம்பு இழுக்கறதுல அவ்வளவு சந்தோஷமா? ஏதோ ஒரு பொடியன், தெரிஞ்ச கொஞ்சத்தை எழுதிட்டு இருந்தா பிடிக்காதா! பாவம் சாமி! விட்ருங்க :)

    //அதுவும் மாப்பிள்ளை ஊர்வலத்தில் சூழ வலம் செய்து என்னும் போது, கல்யாண வீட்டின் நெருக்கமான தெருக்களில் ஆயிரம் யானைகள் வர முடியுமா?//

    வடமொழியில், ‘சஹஸ்ரம்’ எனும் சொல்லுக்கு, ’ஆயிரம்’ என்பது பொருள். ’ஸஹஸ்ர ஸீர்ஷா புருஷ:’ என்று சொன்னால், அதற்கு, ‘ஆயிரம் தலைகள் உடைவன்’ என்ற பொருளை விட, ’பல முகங்களையும், உருவங்களையும் உடைவன்’ - அதாவது, ’இருக்கின்ற எல்லாப் பொருளும் அவனே’ என்ற பொருளே அதிகம் பொருந்தும்!

    பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா! உந்தன் பச்சை முகம் தோன்றுதடா நந்தலாலா!

    அது போலவே, இங்கும், ஆயிரம், மிகுதியைக் குறிக்கும்.

    ‘வாரணம் ஆயிரம்’ என்று சொன்னால், ’இந்தக் காலத்து Decimal System-ல் 1000 யானைகள்’ என்ற பொருளை விட, ‘பல யானைகள்’ என்றே பொருளே அதிகம் பொருந்தும்!

    ‘தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்’ எனும் பெரியாழ்வார் பாசுரத்தின் பொருளாக, ’தனக்கு நிகரான தோழர்கள் அனைவரும் சூழ வருவான்’ என்றும் விளக்கம் தருவர். இங்கு, ஆயிரக் கணக்கு பெரும்பாலும் சொல்லப் படுவதில்லை!

    ReplyDelete
  44. //இன்றைய திருமணத்தில் யானை கூடப் பரவலாக இருப்பதில்லையே! இன்றைய வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கலாம்! ஆனால் சில இடங்களில் இன்றும் உள்ளது! என் நண்பன் திருமணத்தில் வரிசைத் தட்டில் 12 சங்கு அடுக்கி வைத்திருந்தார்கள்! மேலும் சிலப்பதிகாரம், திருமணத்தில் சங்கு இருந்ததைக் காட்டுகிறதே! //

    இன்றைய திருமணத்தில், Cadbury's Choclate உண்டு. ஆனால் அது ஆண்டாள் காலத்தில் இல்லையே! அது மாதிரித் தான்!

    ReplyDelete
  45. //வாரணம் ஆயிரம்’ என்று சொன்னால், ’இந்தக் காலத்து Decimal System-ல் 1000 யானைகள்’ என்ற பொருளை விட, ‘பல யானைகள்’ என்றே பொருளே அதிகம் பொருந்தும்!//

    அப்படி வாங்க வழிக்கு! :)
    அப்போ ஆயிரம் யானை இல்லை! பல யானைகள்-ன்னு ஒத்துக்கிட்டமைக்கு நன்றி! இதை நான் உடனே நண்பர் ராதாமோகன் கிட்டச் சொல்லணுமே! :)

    //
    இன்றைய திருமணத்தில், Cadbury's Choclate உண்டு. ஆனால் அது ஆண்டாள் காலத்தில் இல்லையே! அது மாதிரித் தான்!//

    ஆகா! சொல்லுங்க! அடுத்த ஆண்டாள் கல்யாணத்துல வரிசைத் தட்டில் Cadburys வச்சீருவோம்? Milk Chocolate-aa? Fruit & Nut-aa? :)

    அண்ணா, உங்களுக்குத் தெரியுமா-ன்னு தெரியாது!
    அறியா வயசுல, கோயில்ல கொசுத்தொல்லை ஜாஸ்தியா இருக்கே, பெருமாள் பாவம்-ன்னு, அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி வச்சிக் கொடுத்து, பட்டர் கிட்ட ஒதை எல்லாம் வாங்கி இருக்கேன்! ஸோ, காட்பரீஸ் எல்லாம் நோ ப்ராப்ளம்! :)

    ReplyDelete
  46. //அப்படி வாங்க வழிக்கு! :)
    அப்போ ஆயிரம் யானை இல்லை! பல யானைகள்-ன்னு ஒத்துக்கிட்டமைக்கு நன்றி! இதை நான் உடனே நண்பர் ராதாமோகன் கிட்டச் சொல்லணுமே! :)//

    வழிக்கு வந்துட்டேன் அப்பவே! ‘பல யானைகள்’ என்றால், ஆயிரத்துக்குக் கீழ்ப்பட்ட எண்ணிக்கை என்று அர்த்தம் இல்லையே? கோடி என்றும் இருக்கலாமே :-))

    ReplyDelete
  47. //வழிக்கு வந்துட்டேன் அப்பவே! ‘பல யானைகள்’ என்றால், ஆயிரத்துக்குக் கீழ்ப்பட்ட எண்ணிக்கை என்று அர்த்தம் இல்லையே? கோடி என்றும் இருக்கலாமே :-))//

    ஓ...ஸ்ரீவில்லிபுத்தூர் நேசமணிப் பொன்னைய்யா சந்துல, "ஒரு கோடி"-ல இருக்கும் யானையைச் சொல்றீங்களா? அப்படீன்னா சரி தான்! :)

    ஏன்டீ தோழீ, வாரணம் ஆயிரம்-ன்னு பாடினாலும் பாடின, வானரம் ஆயிரம் கணக்கா நாங்க போயிக்கிட்டு இருக்கோம்! :)

    ReplyDelete
  48. //ஓ...ஸ்ரீவில்லிபுத்தூர் நேசமணிப் பொன்னைய்யா சந்துல, "ஒரு கோடி"-ல இருக்கும் யானையைச் சொல்றீங்களா? அப்படீன்னா சரி தான்! :)//

    அண்ணே! நீங்க ஒரு Typo பண்ணிட்டீங்கன்னு நினைக்கறேன் ...

    ‘ஒரு கோடியிலே இருக்கும் யானை *கள்* என்று தட்டியிருக்க வேண்டும் :-))

    ReplyDelete
  49. //ஹிஹி!
    இதெல்லாம் பாட்டில் இல்லையே! //

    பாட்டில் இருக்குங்க - ஆனால் மறைமுகமாக!

    இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்து, என்னை மகள் பேசி, ‘மந்திரித்து’ என்று ஆண்டாள் கூறுகின்றாளே!

    அந்த மந்திரித்து தாங்க இந்த மந்திரித்து!

    ReplyDelete
  50. 50!

    :)
    மா-பிள்ளை வீட்டுக் காரவுக காணோம்! இல்லீன்னா சதம் அடிச்சி இருக்கலாம்!

    நூறு தடா அக்காரவடிசலை அழகருக்குத் தாராம, இவிங்களே சாப்பிட்டுத் தூங்குறாக போல! :)

    ReplyDelete
  51. /*//பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீநிவாஸய்யங்கார் வியாக்கியானம் (Tpyed as is):
    உந்து மதகளிற்றன்:
    பல யானைகளின் பலத்தை ஒருங்கே உடையவர்//

    எக்ஜாக்ட்லி!
    பல யானைகளின் பலத்தை தன்னிடம் ஒருங்கே உடையவர்!
    யப்பா...அவருக்கு அசுர பலம், யானை பலம் என்று சொல்வது போல்... :)*/

    அண்ணே! பெரியவாச்சான் பிள்ளை சொன்னதாக 3 அர்த்தமும், அதற்கு அவர் தரும் விளக்கமும் போட்டிருந்தேனே! நீங்கள் ஒண்ணை மட்டும் எடுத்து, ‘எக்ஜாக்ட்லி’ என்றால் என்னா அர்த்தம் அண்ணே :-)))

    ReplyDelete
  52. //அந்த மந்திரத்தை இங்கே பந்தலில் கொடுக்க முடியுமா அண்ணா? (பொருளோடு)//

    அடியேனுக்கு வடமொழியில் அவ்வளவாகப் பரிச்சயம் கிடையாது! எனவே, முடிந்தவரை/தெரிந்தவரை தமிழில், சுருக்கமான அர்த்தத்துடன் கொடுத்துள்ளேன்! தவறிருந்தால் மன்னிக்கவும்!

    அகோர சாக்ஷுரபதிக்ஞேதி ஷிவ பசுப்யஹ: சுமநா: ஸுவர்ச்சா: I

    வீராஸுர் தேவகாமாஸ்யோநா ஸம் நோ பவ த்விபதே ஸம் சதுஷ்பதே II
    (10.85.44)

    மணப்பெண்ணே! கணவனுடன் அன்புடன் இரு! இந்த விட்டின் யஜமானியாக உன் கடமைகளை சந்தோஷமாகச் செய்! என் அற்புதமான் குழந்தைகளின் தாயாக இரு! இந்த வீட்டின் இன்பத்திற்குக் காரணமாக இரு!

    இமம் தவம் இந்த்ர மே த்வா: சுபுத்ரம் சுபகாம் க்ருணு I

    தஸாயாம் புத்ரானாம தேஹி பதிம் ஏக தஸம் க்ருதி II
    (10.85.45)

    ஓ இந்திரா! இவளுக்குப் பல செல்வங்களையும், மக்கள் செல்வங்களையும் கொடு! இவளுக்கு, நல்ல 10 புத்திரர்களைக் கொடு! நான் 11-வதாக இருப்பேன்!

    ஸாம்ராஜினி ஸ்வஸுரே பவ ஸாம்ராஜினி ஸ்வஸ்ரவம் பவ I

    ஸாம்ராஜினி நனாந்தரி பவ
    ஸாம்ராஜினி அதிதேவ்ருஷு II
    (10.85.46)

    மணப்பெண்ணே! என் தகப்பனாருக்கும், தாயாருக்கும், சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் நீ பேரரசியாக (ஸாம்ராஜினி) இரு!

    ஸமந்ஜந்து விஷ்வே தேவா: ஸ்மாபோ ஹ்ருதயானி நௌ I
    ஸம் மாதரிஸ்வா சந்தாதா ஸமுதேஷ்த்ரி தாதாதுநௌ II
    (10.85.47)

    தேவ விருந்தினர்களே! எங்கள் இதயங்களைச் சேர்த்து வையுங்கள்! நாங்கள் இருவரும், உடம்பும் ப்ராணனும் போல, நதியும் கடலும் போல, குருவும் சீடனும் போல என்றும் இணைபிரியாது, அன்பாக, துணையாக இருக்க எங்களை ஆசீர்வதியுங்கள்!

    ReplyDelete
  53. மேலே சொன்ன 4 மந்திரங்களின் பின், இடுப்பில் தர்பை கட்டும் போது சொல்லும் மந்திரம்:

    ஆஸதா சௌமனஸாம் ப்ரஜாகும் சௌபாக்யம் தனும் I

    அக்நே அனுவ்ரத பூத்வா ஸத்நஹ்யே சுக்ருதாயகம் II

    ஹே அக்னி பகவானே! இந்தப் பெண், சுத்தமான மனதுடன், குழந்தைகள், ஸர்வ மங்களம், வியாதியற்ற உடல் வேண்டி, உன் முன்னே நிற்கின்கிறாள்.

    என்னுடன் சேர்ந்து, குடும்பத்தவருக்கான ஹோமங்கள் செய்ய அவள் தயார். அதற்காக, அவள் இடுப்பில் தர்பையை நான் கட்டுகிறேன். எங்களை ஆசீர்வதியுங்கள்!

    ReplyDelete
  54. நூறு தடா அக்காரவடிசலை அழகருக்குத் தாராம, இவிங்களே சாப்பிட்டுத் தூங்குறாக போல! :)

    he . he. no no adellam konjam taruvom!
    good morning ..

    ReplyDelete
  55. ஆயிரம் யானைகள் சூழ வலம் செய்வது அனைவருக்கும் பிடித்த ஒன்று.
    அதில் ஆண்டாளுக்கும் கொள்ளை பிரியம்

    யானைகள் எப்படி வாங்குவது?
    ஆண்டாள் ஆசைபட்டுட்டாங்க!
    அரங்கனுக்கு திருமணம் என்றால் ஒவ்வொரு நாட்டு மன்னர்களும் வேணும்னா யானைகள் கூட்டத்தையே கொண்டு வருவாங்க!
    யானைக்கா பஞ்சம்.
    so no problem how to buy?....

    மணமக்களை யானை மேல் அமர செய்து தெரு குறுகியதாக இருந்தாலும் தெருவ ஒடச்சிக்கிட்டு வலம் வருவோம்.
    யானை மேல் வலம் வருவது தனி ஆனந்தம் . அதுவும் 1000 யானைகள் அப்பப்பா!

    ஆண்டாள் அரங்கனை எப்படியெல்லாம் மணம் புரிய வேண்டும் என்ற ஆசைக்கும் ஏக்கத்திற்கும்
    இவைகளே சாட்சி.

    so வாரணம் ஆயிரம் - யானைகள் ஆயிரம்!

    ReplyDelete
  56. ஒரு உம்மாச்சி கல்யாணம் பார்த்த அனுபவம் வருகிறது... நல்ல வர்ணனை ஸ்வாமி

    ReplyDelete
  57. //Rangan Devarajan said...
    KRS

    //சரி, இது வரை ரங்கன் அண்ணா கூட விவாதமே செஞ்சதில்லை! இப்போ செஞ்சீறலாமா-ண்ணா? சும்மா விளையாட்டுக்குத் தான்! சதஸ்-ன்னு எடுத்துக்கோங்க மக்களே! :))//

    ஆஹா! வம்பு இழுக்கறதுல அவ்வளவு சந்தோஷமா? ஏதோ ஒரு பொடியன், தெரிஞ்ச கொஞ்சத்தை எழுதிட்டு இருந்தா பிடிக்காதா! பாவம் சாமி! விட்ருங்க :)//

    ஹிஹி!
    இது வரை 2% வம்பு தான் இழுத்திருக்கேன்!

    //வம்பு இழுக்கறதுல அவ்வளவு சந்தோஷமா?//

    பின்னே?
    தீராத விளையாட்டுப் பிள்ளை - கேஆரெஸ்
    பதிவிலே பலருக்கும் ஓயாத தொல்லை! :))

    அடியேன் சம்பவாமி யுகே யுகே, ரங்கன் அண்ணா :)

    ReplyDelete
  58. //ஸாம்ராஜினி ஸ்வஸுரே பவ ஸாம்ராஜினி ஸ்வஸ்ரவம் பவ I

    ஸாம்ராஜினி நனாந்தரி பவ
    ஸாம்ராஜினி அதிதேவ்ருஷு II
    (10.85.46)

    மணப்பெண்ணே! என் தகப்பனாருக்கும், தாயாருக்கும், சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் நீ பேரரசியாக (ஸாம்ராஜினி) இரு!//

    Wow!
    இதை மொழி பெயர்த்து எல்லாத் திருமணங்களிலும் சொன்னா மாமியார்-மருமகள் பிரச்சனையே வராது! அருமை அருமை!

    ரொம்ப நன்றி ரங்கன் அண்ணா, என் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, மந்திரப் பூர்வமான திருமண வேண்டுதல்களைப் மாதவிப் பந்தலில் இட்டமைக்கு! அடியார்கள் அனைவருக்கும் இது பயன் தரட்டும்!

    நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த
    அல்லிக் கமலக் கண்ணனை, அந்தண் குருகூர்ச் சடகோபன்
    சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்து வல்லார்கள்

    நல்ல பதத்தால் மனை வாழ்வர்!
    நல்ல பதத்தால் மனை வாழ்வர்!
    நல்ல பதத்தால் மனை வாழ்வர்!
    கொண்ட பெண்டிர் மக்களே!!!

    ReplyDelete
  59. //ஸம் மாதரிஸ்வா சந்தாதா ஸமுதேஷ்த்ரி தாதாதுநௌ II
    (10.85.47)

    தேவ விருந்தினர்களே!
    எங்கள் இதயங்களைச் சேர்த்து வையுங்கள்!//

    எங்கள் இதயங்களைச் சேர்த்து வையுங்கள்!!!

    //நாங்கள் இருவரும்,
    உடம்பும் ப்ராணனும் போல,
    நதியும் கடலும் போல,
    குருவும் சீடனும் போல
    என்றும் இணைபிரியாது,
    அன்பாக,
    துணையாக
    இருக்க
    எங்களை ஆசீர்வதியுங்கள்!//

    அப்படியே பந்தலில் விழுந்து, ரங்கன் அண்ணா முதற்கொண்டு அனைவரையும் சேவிச்சிக்கறேன்!
    எங்களை ஆசீர்வதியுங்கள்!
    எங்களை ஆசீர்வதியுங்கள்!

    முருகா! உன்னால, இதெல்லாம் பந்தலில் கேட்கணும்-ன்னு இருக்கு!

    ReplyDelete
  60. பத்து நல்ல புத்திரர்கள் பெற அருள் செய்யுமாறு வேண்டினோம்! 11-வது குழந்தையாக, நாராயணனையே (என் கணவனையே) கேட்டேன்!:::)))))
    Konjam Late pick up this doubt..……………

    ஆண்டாளுக்கு அத்தனை குழந்தைங்க பிறந்ததா ஐயா!

    ReplyDelete
  61. எங்க வூட்டுப் பொண்ணு...ஒரு லுக்கு விட்டாப் போதும்,
    உங்க மா-பிள்ளை, எங்க மாப்பிள்ளை, பொசுக்-னு அடங்கீருவாரு!:::))))


    எஆ .. அதுவரைக்கும் எங்க கை பூ பறிச்சுட்டு இருக்குமா!
    எங்க கள்ளன் ஒரு ஸ்மைல் பண்ணி ரொமான்சா ஒரு பார்வை
    பார்த்தா போதும். namma பொண்ணு மயங்கி விழுண்டுருவா! நீங்களும் பிளாட்,
    அப்பறம் தண்ணிய தெளிச்சுதான் உங்கள எழுப்பனும்.

    ReplyDelete
  62. சந்தேகத்தை தாங்கள் தீர்க்கவில்லை!

    ஆண்டாளுக்கு குழந்தை உண்டா இல்லையா!

    ReplyDelete
  63. // Sri Kamalakkanni Amman Temple said...
    சந்தேகத்தை தாங்கள் தீர்க்கவில்லை!
    ஆண்டாளுக்கு குழந்தை உண்டா இல்லையா!//

    என்ன ரங்கன் அண்ணா, கமலக் கண்ணியார் கேக்குறார்-ல்ல? பதில் சொல்லுங்க! :)

    ராஜேஷ்
    கோதைக்குக் குழந்தை இல்லை!
    அவள் தான் அரங்கனுள் கலந்து விட்டாளே!

    ஆனால் ஆண்டாள் பூமாதேவியின் அம்சம்!
    அப்படிப் பார்த்தால், பூமித் தாயின் குழந்தைகள் எல்லாம் அவள் குழந்தைகளே!

    ReplyDelete
  64. //என்ன ரங்கன் அண்ணா, கமலக் கண்ணியார் கேக்குறார்-ல்ல? பதில் சொல்லுங்க//

    ரவிஅண்ணா.. ரங்கனண்ணா திருமலை விஜயம்..திருப்பாவாடை உற்சவம் எல்லாம் கண்டு வருவதாகச் சொல்லிச் சென்றுள்ளார்.. வந்து பதில் சொல்வார். :)

    ReplyDelete
  65. //ராஜேஷ்
    கோதைக்குக் குழந்தை இல்லை!
    அவள் தான் அரங்கனுள் கலந்து விட்டாளே!

    ஆனால் ஆண்டாள் பூமாதேவியின் அம்சம்!
    அப்படிப் பார்த்தால், பூமித் தாயின் குழந்தைகள் எல்லாம் அவள் குழந்தைகளே!//

    அண்ணே! மன்னிச்சுருங்க! பெருமாள் கூப்பிட்டாரு, போயிட்டேன்!

    ஒரு உபன்யாசத்தில் கேட்டது இது:

    ஸ்ரீதேவி, நீளா தேவியைப் போல், ஆண்டாள், எம்பெருமானின் பிராட்டி!

    பூமிப் பிராட்டியை வராகனாக மீட்டுக் கொண்டு வரும்போது, அவன் மடியில் அமர்ந்து கொள்கிறாள் பிராட்டி!

    வராகன், அவளுக்கு உபதேசிக்கிறான். அவள், இதை, தன் குழந்தைகளுக்காக, தானே (ஒரு தாய் குழந்தைகளுக்கு ஊட்டி விடுவது போல) உபதேசிக்க நினைக்கிறாள்! இதற்காகவே ஸ்ரீ ஆண்டாள் அவதாரம்!

    வராகப் பெருமான் உபதேசித்ததை, தன் குழந்தைகளாகிய நமக்கு, குழந்தைகளுக்கு ஜெரிக்கும் வகையில், ‘வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, தூமலர் தூவு’ என்று சொல்லிக் கொடுக்கிறாள் ஆண்டாள்!

    காரியம் முடிந்தது! உடனே வைகுந்தம் போக நினைக்கிறாள்! ஆனால், அவன் வரத் தாமதமாகிறது! எனவே தான் இந்தக் கனவு சமாச்சாரம் எல்லாம்!

    குழந்தைகள் எல்லாம் ஏற்கனவே பிறந்தாகி விட்டது!

    குழந்தைகளுக்கு, உபதேசம் எல்லாம் திருப்பாவையிலேயே ஊட்டி முடிந்தாகி விட்டது!

    எனவே, ஆண்டாள் கனவில் தான் இந்த மந்திரங்கள் வந்தன! நனவில், தீவலம் செய்ததாகக் கதை இல்லை! மேள தாளங்களுடன், ஆண்டாள் உள்ளே சென்று மறைந்து விடுவதாகக் கதை!

    ReplyDelete
  66. மிக்க நன்றிங்க!

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  67. only a duet is missing in the kanavu scene but a guide for our marriages to be held in a heartfilling way.

    ReplyDelete
  68. Hi

    //only a duet is missing in the kanavu scene but a guide for our marriages to be held in a heartfilling way.//

    Thanks. Great Idea, too! If this idea was given earlier :-) I would have definitely created some duet song for this :-(

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP