Saturday, March 27, 2010

கருடன்-அனுமனைக் கேலி செய்யும் இறைவன்! - திருப்புல்லாணி!

என்னது? கருடனைக் கேலி செய்வதா? என்ன திமிர்? என்ன ஆணவம்?
பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடனின் விநயம் என்ன? வீரம் என்ன? தொண்டு என்ன? துடிப்பு என்ன? அவன் வேகம் தான் என்ன என்ன?.....

அன்று யானை அலறிய போது, அவன் வந்த வேகம் = (3x10^8 m/s) x 10^7

அட....அதாங்க......ஒளியின் வேகத்தை விட கோடி மடங்கு வேகம்! = அதாச்சும் 30 கோடி Km/hr! சூரியனில் இருந்து ஒளி, பூமியை வந்து அடையவே சுமார் 8 நிமிடம் ஆகுமாம்! இதுவோ அதை விட வேகமாம்! Velocity of Light! = ஏய் "சோதீ" என்ன...இடர் தீர்க்கத் தோன்றினையே!
போலீஸ் மாமா கிட்ட மாட்டாம, அப்பவே இப்படியெல்லாம் ஓவர் ஸ்பீடிங் நடந்திருக்கு! :)

தொழுங் காதல் களிறு அளிக்க, புள் ஊர்ந்து.....தோன்றினையே!
* கருடன் ஊர ஆரம்பித்தான்! காரை கர்ர்ர்-ன்னு ஸ்டார்ட் செய்வது போல = புள் "ஊர்ர்ர்ந்து"
* அடுத்த விநாடி... = "தோன்றினையே"!!!
கருடனின் Speed-க்கு, "விதி" மீறல் டிக்கெட் கொடுக்கறாரு......நம்+ஆழ்வாராகிய மாறன்! :)

இப்படியாகப்பட்ட கருடனை, அவன் தோற்றத்தை வைத்துக் கேலி செய்வது யாரு-ன்னு கேட்கறீங்களா? சேச்சே...என்னை எதுக்குப் பாக்குறீங்க? நான் தான் அமைதியான சுபாவம்-ன்னு உங்களுக்கே தெரியுமே! :)
கருடனைக் கேலி செய்பவர், வேறு யாருமல்ல! = சாட்சாத் நம்ம ஆதி ஜகன்னாதப் பெருமாள்! :)


திருப்புல்லணை = 108 திருத்தலங்களில் இது பாண்டி நாட்டுத் தலம்!
இராமநாதபுரம்/இராமேஸ்வரம் கிட்டக்க இருக்கு! இந்தத் தண்ணியில்லா காட்டுல இருக்குற பெருமாள் தான் இப்படியெல்லாம் பண்றாரு!
இவரை வேற எந்தத் தண்ணி இல்லாக் காட்டுக்கு மாத்தறது-ன்னு நீங்களே சொல்லுங்க பார்ப்போம்? :)

ஒருவரைக் கேலி செய்யணும்-ன்னா என்ன பண்ணுவோம்? அவரைப் போலவே பேசிக் காட்டி, நடந்து காட்டி கிண்டல் அடிப்போம்-ல்ல??
அதையே தான் இவரும் செய்யறாரு! தன் கருட வாகனத்தை "Imitate" செஞ்சிக் காட்டறாரு! நீங்களே பாருங்க!

கருடன் படத்தைக் க்ளிக்கி, பெரிதாக்கிப் பாருங்கள்!
* கருடன் எப்படி இரு கைகளையும் தூக்கி, பெருமாளைத் தாங்குகிறானோ...
அதே Pose-இல் தான் பெருமாளும் இருக்கார்!
* அனுமன் கூட இப்படித் தானே வாகனமாக உலா வருவார்? ஒரு வேளை அனுமனையும் கிண்டல் ஓட்டுகிறானோ?
மெய்யாலுமே இது கிண்டல் அடிக்கத் தானா??? ஏன் இப்படி ஒரு Pose?


சுவாமி ரகுவீரதயாள் - "திருத்திரு" = இவரை அறிவீர்களா? பலரும் அறிவார்கள்!
பந்தல் வாசகர்களுக்கும் இவர் பரிச்சயம் தான்! இது தான் அவர் வலைப்பக்கம்!

* பல பழமையான நூல்களை எல்லாம் மின்னாக்குபவர்!
* ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்டவர்!
* ஊர் என்னமோ சென்னை தான் என்றாலும், திருவரங்கம் ஆண்டவன் ஆசிரமத்திலே செயலராக இருந்து கொண்டு, புல்லாணிக் கிராமத்திலேயே தங்கி விட்டவர்!
* புல்லாணி ஜகன்னாதனுக்கு பல கைங்கர்யங்கள் செய்து வருபவர்!
* இணையத்திலும், பாசுரம் குறித்த மென்பொருள் தொகுப்பிலும், பெரிதும் உலாவுபவர்!

இந்தத் திருப்புல்லாணி திவ்ய தேசத்தில் தான், இப்போது பிரம்மோற்சவம் நடைபெற்றுக் கொண்டுள்ளது!
ஒவ்வொரு நாளும்...விழாச் செய்திகளையும், வாகனங்களையும், படங்களையும், வீடியோக்களையும், திருத்திரு-வின் வலைப்பூவிலே சுடச்சுட......அவசியம் காணுங்கள்! இதோ சுட்டி!

* ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும் விழாக்கள்...
* அந்தந்த மாதங்களில் வரும் ஆழ்வார்/ஆசாரியர் பிறந்த நாட்கள்
இதையெல்லாம் நீங்க உடனுக்குடன் அறிந்து கொள்ளணுமா? = இதோ இராம தூதன் பக்கம்!
நண்பர் செந்தில், இந்தத் தொண்டினை ஆர்வமுடன் செய்து வருபவர்! எட்டிப் பாருங்கள்! கை-தட்டிப் பாருங்கள்!!



நாம கருடனுக்கு வருவோம்! - திருப்புல்லாணி கருட சேவையில் பெருமாள் ஏன் இப்படி ஒரு லுக்கு விட்டுக்கிட்டு வராரு?
வாங்க வாங்க-ன்னு கூப்பிடறாரா? சீக்கிரம் என்னைச் சரணம் அடையுங்க-ன்னு நம்மளைக் கெஞ்சறாரா? :)
அதற்கு காலைச் சுட்டிக் காட்டி இருக்கலாமே, திருவேங்கடமுடையானைப் போல?
ஏன் இரண்டு கைகளையும் உயரத் தூக்கணும்? அதுவும் கருடனைப் போலவே தூக்கணும்? எதுக்கு இப்படி அலங்காரம் பண்ணி வச்சிருக்காங்க இவிங்க?

எனக்குத் தெரிஞ்சதை உளறி வைக்கட்டுமா? :)...ஏன்-ன்னா.....

திருப்புல்லாணி = சரணாகதி க்ஷேத்திரம்! தஞ்சத் தலம்!
அருகிலேயே சேதுக்கரை - கடற்கரை! = இங்கு தான் விபீஷண சரணாகதி நடந்தது!

வீடணன் செஞ்சது சரியா? துரோகமா? - இதெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்!
அது வரைக்கும் அவனைத் "துரோகி"-ன்னே கூப்பிட்டாலும் கூட...அது வீடணனுக்கு ஓக்கே தான்!
ஆனால் நம் இனியன் அனுமனுக்குத் தான் அது ஓக்கே இல்லை! :)

எது எப்படியோ, இராமயணத்தில் மிகவும் சிலாகித்துப் பேசப்படும் ஆறு சரணாகதிகள், ஆறு காண்டங்களிலும்! = அதில் விபீஷண சரணாகதிக்கு தான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது!
* அங்கே, அவன் நிராதரவா அந்தரத்தில் நிற்க,
* இங்கே, இராமன் கோஷ்டியில், அவனைச் சேர்த்துக் கொள்வதா வேணாமா-ன்னு ஒரு விசாரணையே நடக்குது!
ஒரு "துரோகி"யை நம்ப, இராமன் கோஷ்டியிலேயே தயார் இல்லை!

சாந்தம், வீரம், விவேகம், கல்வி-கேள்வி இதெல்லாம் உள்ள வீடணனுக்கே இந்த விசாரணை-ன்னா, நம்ம கதி? என் கதி?? :)
* அதுக்கு மேல் விசாரணையை நீடிக்க விரும்பாத என் ராகவன்...
* அன்பை அறுத்துப் பார்த்து விசாரிக்க விரும்பாத என் ராகவன்...
ஹைய்யோ.....அவனையும் தீக்குளிக்கச் சொல்லப் போறானோ? ஹா ஹா ஹா!

ஊர் அறிய, உலகு அறிய, கடல் அலைச் சத்தத்தையும் மீறி, திடீர்-ன்னு ஒரு சத்தியம் செய்கிறான்!
சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே!
அபயம் சர்வ பூதேப்யோ: ததாம் யேதத் வ்ரதம் மம!!
இப்படிக்கு,
இராகவன்



அது என்ன சத்தியம்?

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே!
= ஒரே ஒரு முறை, சரணம் என்று வந்தக்கால், அன்பை ஆத்ம பூர்வமாய் தந்தக்கால்...

அபயம் சர்வ பூதேப்யோ:
- எது யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்...மனிதனோ, அசுரனோ, தேவனோ, பறவையோ, விலங்கோ,
- மனிதனுக்குள்ளேயே அந்தச் சாதியோ, இந்தச் சாதியோ, எந்த மொழியோ, நல்லவனோ, கெட்டவனோ, போகியோ, யோகியோ...
- ஞான யோகியோ, கர்ம யோகியோ, பக்தி நெறியாளனோ...யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும்...

ஒரே ஒரு முறை,
"சரணம்" என்று வந்தக்கால்...
அபயம் "சர்வ" பூதேப்யோ
= யாருக்கானாலும் “அபயம்” அளிப்பேன்!

ததாம் யேதத் வ்ரதம் மம!!
= இது விரதம்! சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

என்று நடுத் தெருவில் சத்தியம் செய்து காட்டுகின்றான்!
அதான் இரு கைகளையும் உரக்கத் தூக்கி,
This Jagannatha PerumaL of PullaaNi is taking Oath!

** சக்ருதேவ ப்ரபந்நாய = ஏகம் சரணம்!
** (அ+பயம்) = பயப்படாதே! மா சுச: = கவலைப்படாதே!

என்னை எப்படிக் கருடன் தாங்குகிறானோ...
அதே போல்...
என் ப்ரியமான சரணாகதனே...
உன்னை நான் தாங்குவேன்!
உன்னை நான் தாங்குவேன்!
உன்னை நான் தாங்குவேன்!

திருப்புல்லாணி கருட சேவை கண்டீர்களா?
ஒரே நேரத்தில் இரண்டு கருட சேவைகள் - உபய கருட சேவை - அது திருப்புல்லாணிக்கே விசேடம்!
ஒரு கருடன் மேல் பெருமாளும், இன்னொரு கருடன் மேல் இராமனும், தொம் தொம் என்று உலா வர...
கருடத்வனி என்னும் ராகத்தில், நாதஸ்வர-தவிலிலே மல்லாரி வாசிக்க,
தொம் தொம் தொம் என்று கருட கம்பீரக் காட்சி!

இதோ...உற்சவத்தையும், மற்ற வாகனங்களையும் அவசியம் காணுங்கள்!


திருப்புல்லாணி பற்றிய சிறு குறிப்புகள்:

* இலங்கைக்கு அணை கட்டும் பொருட்டு, அலைகளின் சீற்றத்தைக் குறைத்துக் கொள் - என்று கடலரசனை வேண்ட,
இராமன் தர்ப்பைப் புல்லின் மேல், விரதம் இருந்த கோலம்! = தர்ப்ப சயனம் = புல்+அணை
அது தான் புல்லாணி-ன்னு ஆயிருச்சி! :)
சும்மா சொல்லக் கூடாது...நம்ம மக்கள் பேச்சு வழக்குக்கு கூட இலக்கண விதி வச்சித் தான் லோக்கல் ஆக்குறாங்க போல! தலை+அணை = தலக்காணி! புல்+அணை = புல்லாணி! :)

* இலக்குவன் அருகில் இல்லை, ஆதி சேடனாய் இருப்பதால்! சேடனின் மேல் புல் விரிப்பை உற்று நோக்கவும்! தாயாரும் அருகில் இல்லை! அப்போது அசோக வனத்தில் இருந்ததால்!
ஆனால், நம் அனுமன் இருக்கிறான்! வீடணனுக்கும் சிலை உண்டு!
பெருமாள் கருவறையில் சுகன்-சாரணன் முதலான அரக்கர்களும் இருக்கிறார்கள்! :))

* ஆலயக் கருவறைச் சுற்றில் பெரிய அஸ்வத்த மரம் = ஆலமரம் உண்டு! அதன் கீழ் பல நாகர்கள்...நேர்த்திக் கடனாகச் செலுத்தும் வழக்கம் உண்டு!

* தர்ப்ப சயன இராமன் என்றாலும்...மூலவர் என்னவோ, ஆதி ஜகன்னாதப் பெருமாள் தான்! ஜகன்னாதன் = உலகீசன்!
பூரி ஜகன்னாதர் இடுப்பு உயரம்! புல்லாணி ஜகன்னாதர் முழு உருவம்! அருகே கல்யாணவல்லி, பத்மாசினித் தாயார்கள்!

* தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்து பெற்ற பாயசம், அதை அருந்திப் பிறந்த நால்வர்! இன்றும், பால் பாயசம் பெருமாளுக்கு நிவேதனம்!
"பெருமாள்" என்னும் இராமன் வழிபட்ட பெருமாள் ஆதலால் = இவரும் "பெரிய பெருமாள்"!

* திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த தலம்! தோழி ஆண்டாளும், திருமழிசையும் சேதுவைப் பாடியுள்ளனர்! சங்கீத மும்மூர்த்திகளில், தியாகராஜரும், முத்துசாமி தீட்சிதரும்...இப்பெருமாள் மேல் இசைத்து உள்ளனர்!

* இராமேஸ்வர யாத்திரையில் - புல்லாணியும், சேதுக்கரையும் முக்கியம்! திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப் பேறு வேண்டும் தலமும் கூட!

* எல்லாவற்றுக்கும் மேலாக...இது சரணாகதி க்ஷேத்திரம்...
= வீடணன் + உடன் வந்த நால்வர் = அனலன், அனிலன், அரன், சம்பாதி
= பின்னர் இராவணனால் வேவு பார்க்க அனுப்பப்பட்ட = சுகன், சாரணன்
= அதோடு கூட, கடலரசன், அவன் மனைவி வருணி
என்று பலப்பல சரணாகதிகள் நிகழ்ந்த ஒரே தலம் = திருப்புல்லணை!

இறைவன் யார் யாரை எல்லாம் அணைத்து மகிழ்ந்தான் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்!
ஞான கர்ம யோகிகளையா? வேதியரையா? பெரும் மன்னர்களையா? - இவர்களில் ஒருவரையாச்சும் அணைத்து மகிழ்ந்தானா? பின் யாரை அணைத்துக் கொண்டான்?
* படகோட்டி = குக சரணாகதி
* விலங்கு = ஆஞ்சநேய சரணாகதி
* அரக்கன் = விபீஷண சரணாகதி

துரோகி என்று "அங்கே" இழித்தாலும், அரக்கன் என்று "இங்கே" இழித்தாலும்..
என்னால் இனி ஆவதொன்று இல்...
எல்லாம் நின்னடிக்கே என்று நின்று விட்டேன்...
நின்னருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே??
* ஒரு அரக்கனை, இன்னொரு அடியவன் கண்டு கொண்ட தலம் = திருப்புல்லாணி!
*
ஒரு அரக்கனை, தம்பீ என்று அணைத்துக் கொண்ட தலம் = திருப்புல்லாணி!

இராவணன் கூட ஜெய-விஜயனாய், மீண்டும் மோட்சம் போய் விட்டான்!
ஆனால் இன்னி வரை தாங்கள் மோட்சம் போகாது,
* சரணாகத அன்பிலே...
* தன்னைப் பின்னுக்குத் தள்ளி, அவனை முன்னுக்குத் தள்ளி,
* இங்கேயே இருந்து கொண்டு,
* இன்னும் இன்னும் அடியார்களை, அவனிடத்திலே சேர்ப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்!
எம் இனியான் ஆஞ்சநேயன் திருவடிகளே சரணம்!
அடியார்க்கு நல்லான், விபீஷணாழ்வான் திருவடிகளே சரணம்!


திருப்புல்லாணிக்குச் செல்லுங்கள்! திருத்திரு பதிவிலே சேவித்து நில்லுங்கள்! ஹரி: ஓம்!


அப்படியே Mar-28, நம் கூடல் குமரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)
பதிவு குமரனுக்கு சமர்ப்பணம்! சரணாகதி க்ஷேத்திரத்தில், அர்ச்சனை துவங்கட்டும்! :)

30 comments:

  1. மிக அழகான பதிவு. எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை!
    "* ஊர் என்னமோ சென்னை தான் என்றாலும், திருவரங்கம் ஆண்டவன் ஆசிரமத்திலே செயலராக இருந்து கொண்டு, புல்லாணிக் கிராமத்திலேயே தங்கி விட்டவர்!"

    இல்லை! KRS! பிறந்தது, வாழ்வது எல்லாமே திருப்புல்லாணிதான். வயிற்றுப் பிழைப்புக்காக, சென்னையில் பணிபுரியும் அடியேன் குமாரன், குமாரத்தி இருவருக்கும் துணையாக அடியேன் எஜமானியும், அம்மாவும்(97+)சென்னையில் வாழ்கிறார்கள். அடியேன் கடந்த 15 ஆண்டுகளாக இங்கே ஸ்வாமி தேசிகன் க்ருபையாலும், ஸ்ரீதம் ஆண்டவன் அனுக்ரஹத்தாலும் இருந்து கொண்டிருக்கிறேன். 39 வருடங்களாக இராமநாதபுரம் தொலைபேசி நிலையத்திற்குப் "போய்" (Pl. note) வந்து கொண்டிருக்கிறேன்.
    >>>"* ஆலயக் கருவறைச் சுற்றில் பெரிய அஸ்வத்த மரம் = ஆலமரம் உண்டு! அதன் கீழ் பல சிவலிங்கங்கள்! வைணவக் கோயிலில், நாக-லிங்கங்களை நேர்த்திக் கடனாகச் செலுத்தும் வழக்கம் உண்டு!"
    இருப்பவை எல்லாமே சந்தான கோபால விக்ரஹங்கள். மற்ற எந்த ஊரில் உள்ளனவோ தெரியாது. இங்கே சிவ லிங்கம் இருந்தால் சேர்ப்பதில்லை! புத்திரப் பேறு இல்லாதவர்கள் சந்தான கோபாலன் ஸந்நிதியில் ஹோமங்கள் செய்து நாகர் பிரதிஸ்ரஷ்டை செய்து இங்கு ஒரு மண்டலம் ஆராதனம் கண்டு அதன்பின் இட வசதிகளுக்காக அரச மரத்தடியில் ஏளப் பண்ணுவது வழக்கம். அனேகமாக, தினமலர் நாளிதழைப் படித்து இதை எழுதி இருப்பீர்கள் என நினைக்கிறேன். தவற்றைச் சுட்டிக் காட்டிப் பல முறை நேரிலும் போய்ச் சொல்லியும் திருத்தம் இல்லை. இதுவாவது பரவாயில்லை. இந்த நாகப் பிரதிஷ்டையிலே முதல் நாள் ஜலாதி வாசம் என்னும் சடங்கிலே நாகருக்குப் பூஜை செய்து ஜலாதிவாசம் செய்வதை தினமலர் தனது இணையத்திலே குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து சக்ர தீர்த்தத்திலே"ஜலக்ரீடை" செய்தால் குழந்தை பிறக்கும் என்று இருக்கிறது.

    அப்புறம் இந்த சயன கோலம் சுகன், சாரணனுக்காக அளித்த காட்சி. சமுத்திர ராஜனுக்கோ, விபீஷணனுக்கோ கிடைக்காத பேறு. அதனால்தான் இராமன் திருவடியிலே இவர்களுக்கு மட்டும் இடம். விபீஷண, சமுத்திர ராஜனுக்கு வெளியில்தான் இடம்.

    ReplyDelete
  2. பிழை திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
    ஸ்ரீமத் ஆண்டவன் என்பது ஸ்ரீதம் என்று இருக்கிறது. பிரதிஷ்டை தவறுதலாக தட்டச்சு ஆகி விட்டது. முந்தைய பதிவை முடிக்கும்போது பவர் போய் வந்ததால் சரிபார்க்காமல் அனுப்பிவிட்டேன். மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. //இருப்பவை எல்லாமே சந்தான கோபால விக்ரஹங்கள். மற்ற எந்த ஊரில் உள்ளனவோ தெரியாது. இங்கே சிவ லிங்கம் இருந்தால் சேர்ப்பதில்லை!//

    அண்ணா
    பதிவில் மாற்றி விட்டேன்!

    நாகர் சிலைகள்-ன்னாலே சிவலிங்கம் உண்டு என்ற நினைப்பில் சொல்லி விட்டேன்! தினமலர் எல்லாம் இல்லை! அதான் நான் நேரிலேயே வந்திருக்கேனே! :)

    //39 வருடங்களாக இராமநாதபுரம் தொலைபேசி நிலையத்திற்குப் "போய்" (Pl. note) வந்து கொண்டிருக்கிறேன்.//

    ஹா ஹா ஹா

    அப்பறம்...
    தர்ப்ப சயன இராமனின் கருவறையில் உள்ள இதரர்களை எல்லாம் கொஞ்சம் விவரியுங்களேன்!

    ReplyDelete
  4. //என்னை எப்படிக் கருடன் தாங்குகிறானோ...
    அதே போல்...
    என் ப்ரியமான சரணாகதனே...
    உன்னை நான் தாங்குவேன்!
    // அருமையான உண்மை

    ReplyDelete
  5. அந்த ராவணனே சரணாகதி என்று வந்திருந்தாலும் ஸ்ரீ ராமர் ஏற்று கொண்டு இருப்பார். அது அவரின் குணாதிசயம்

    ReplyDelete
  6. //தக்குடுபாண்டி said...
    //என்னை எப்படிக் கருடன் தாங்குகிறானோ...
    அதே போல்...
    என் ப்ரியமான சரணாகதனே...
    உன்னை நான் தாங்குவேன்!
    //

    அருமையான உண்மை//

    :)
    உண்மை எப்பமே அருமையாத் தான் இருக்கும் தக்குடு!
    அருமை = அரிது :)

    ReplyDelete
  7. நல்ல ஹர்ட் வொர்க் பண்ணி இருக்கீங்க போல!
    பதிவு நிறைய இருக்குங்க! இங்கேயும் அங்கேயும் ஓட விடறீங்க!
    save offline. & i will read slowely krs.
    realy thanks for you.
    i learned lots of devotional information in madhavipandal

    ReplyDelete
  8. ஏன் இரண்டு கைகளையும் உயரத் தூக்கணும்? அதுவும் கருடனைப் போலவே தூக்கணும்?:))

    ---------------

    எனக்குத் தெரிஞ்சதை உளறி வைக்கட்டுமா?
    -
    கருடன் பெருமாளை தாங்க!
    பெருமாளோ பக்தர்களை தாங்கி கொண்டு வருகிறார்.!

    ReplyDelete
  9. //இதுவாவது பரவாயில்லை. இந்த நாகப் பிரதிஷ்டையிலே முதல் நாள் ஜலாதி வாசம் என்னும் சடங்கிலே நாகருக்குப் பூஜை செய்து ஜலாதிவாசம் செய்வதை...

    தினமலர் தனது இணையத்திலே குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து சக்ர தீர்த்தத்திலே"ஜலக்ரீடை" செய்தால் குழந்தை பிறக்கும் என்று இருக்கிறது//

    ஹா ஹா ஹா
    ஜலாதி வாசம் என்பதைத் தான் ஜலக் கிரீடை-ன்னு எழுதிட்டாங்களோ?

    உங்க பின்னூட்டம் பார்த்து இந்த நிலையிலும் சிரிச்சிட்டேன்! :)

    ரொமாண்டிக்கா ஜலக் கிரீடை செஞ்சாலும் குழந்தை பிறக்கும் அல்லவா! ஹைய்யோ ஹைய்யோ! :)))

    ReplyDelete
  10. //LK said...
    அந்த ராவணனே சரணாகதி என்று வந்திருந்தாலும் ஸ்ரீ ராமர் ஏற்று கொண்டு இருப்பார்//

    வாங்க LK!
    இராமன் ஏற்றுக் கொண்டிருப்பானோ என்னவோ...
    ஆனால் இராவணன் அப்படியெல்லாம் வர மாட்டார்! :)

    //அது அவரின் குணாதிசயம்//

    இராமனின் அதிசயமான குணாதிசயமா? :)

    எங்கள் கண்ணனும் அப்படித் தான்! இன்னும் ஒரு படி கூட!
    சரணம் என்று வராதவர்களையும் தானே சென்று தேடிப் பிடித்து ஏற்றுக் கொள்வான்! :)

    ReplyDelete
  11. //Sri Kamalakkanni Amman Temple said...
    நல்ல ஹர்ட் வொர்க் பண்ணி இருக்கீங்க போல!
    பதிவு நிறைய இருக்குங்க!//

    ரொம்ப நாள் பதிவிடாம இருந்து, இப்ப பதிவிட்டா இப்படித் தான் ஆகுமா? :)

    //இங்கேயும் அங்கேயும் ஓட விடறீங்க!//

    :)
    அட, முருகனருள் பதிவுக்குத் தானே எட்டிப் பார்க்கச் சொன்னேன்! அது போய் ஓட விடறதா? காலாற நடக்க விடறது-ன்னு சொல்லுங்க!

    //i will read slowely krs.
    realy thanks for you.
    i learned lots of devotional information in madhavipandal//

    :)
    பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் கூவின காண்!

    ReplyDelete
  12. // Sri Kamalakkanni Amman Temple கருடன் பெருமாளை தாங்க!
    பெருமாளோ பக்தர்களை தாங்கி கொண்டு வருகிறார்.!//

    சரியாச் சொன்னீங்க ராஜேஷ்!
    அருட்சோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்!
    தாயாகித் தந்தையுமாய்த் "தாங்குகின்ற" தெய்வம்!

    ReplyDelete
  13. இராமர் புல் மேல் உட்கார்ந்து கொண்டுதானே கடலைரசனை வேண்டினார்.
    பிறகு எப்படி சயன கோலம்.

    இராமர் இருக்கும் போதே சயன கோலத்தில் பெருமாள் திருபுல்லாணியில் இருந்தாரா!

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. திரு.ரகுவீர்தயாள் அவர்களுடன் - திருப்புல்லாணியில்
    2 நாட்கள் நட்பு - அவரின் கனிவை
    அனுபவித்தவன் - எனனுள் எழும்
    சந்தேகங்களுக்கு விளக்கும் கொடுக்கும்
    ஆசான். மாற்றாக அவரின் ஆன்மீக எழுத்து பணி அனுபவித்தவ்ர்களுக்கு
    புரியும்.
    அன்புடன் ராகவன்.வ

    ReplyDelete
  16. திரு.ரகூவீர்தயாள் - காணவேண்டுமா
    தீ்ர்த்தவாரி ஃபொட்டோவை பார்க்கவும்
    திரும்போது பெருமாளை ஏளப்பண்ணுவர்தான்.
    அன்புடன் ராகவன்.வ

    ReplyDelete
  17. //Sri Kamalakkanni Amman Temple said...
    இராமர் இருக்கும் போதே சயன கோலத்தில் பெருமாள் திருபுல்லாணியில் இருந்தாரா!//

    இராமன் இங்கு வரும் போது, நின்ற கோலத்து ஆதி ஜகன்னாதர் மட்டுமே ஆலயத்தில் இருந்தார்!
    சயன கோலத்தில் இருப்பது இராமன்! அவர் ஆலய மூலவர் அல்ல!

    ReplyDelete
  18. //Sri Kamalakkanni Amman Temple said...
    இராமர் புல் மேல் உட்கார்ந்து கொண்டுதானே கடலைரசனை வேண்டினார்.
    பிறகு எப்படி சயன கோலம்//

    என்ன ராஜேஷ், கேள்வி எல்லாம் பலமா இருக்கே? :)

    புல் மேல் "உட்கார்ந்தா"? உட்கார்ந்த நிலையில் இராமனை ஃபோட்டோ, கீட்டோ புடிச்சீங்களா? இல்லை தொலைக்காட்சில பார்த்தீங்களா? :)))

    அதாச்சும் இத்தகைய வேண்டுதல்களுக்கு பிரயோபவேசம்-ன்னு பேரு! அதில் ஒன்று தர்ப்பைப் படுக்கையில் படுத்து வேண்டுதல்!

    இப்பல்லாம் உண்ணாவிரதத்தில் கூடப் பார்க்கலாமே! ஆரம்பிக்கும் போது உட்கார்ந்து ஆரம்பிப்பாங்க! ஆனால் செல்லச் செல்ல, சோர்வின் காரணமாக, படுத்துக்கிட்டு தான் உண்ணாவிரதம் தொடரும்! அதே போல-ன்னு வச்சிக்குங்களேன்! :)

    இராமன் தர்ப்பைப் படுக்கையில் படுத்துக் கொண்டு தான் உபவாசம் இருக்கின்றான்! கம்பரும் அப்படியே காட்டுகிறார்! இதோ:

    தருண நங்கையை மீட்பதோர் நெறி தருக்கென்னும்
    பொருள் நயந்து, நன்னூல் நெறி "அடுக்கிய புல்லில்
    கருணை அம்கடல் துயின்றனன்" கருங்கடல் நோக்கி
    வருண மந்திரம் விதிமுறை எண்ணினன் வணங்கி!

    அதனால் தான் சயன கோலம்! அர்த்தம்வாயிந்தா? :)

    ReplyDelete
  19. //Raghavan said...
    திரு.ரகுவீர்தயாள் அவர்களுடன் - திருப்புல்லாணியில்
    2 நாட்கள் நட்பு - அவரின் கனிவை
    அனுபவித்தவன் - எனனுள் எழும்
    சந்தேகங்களுக்கு விளக்கும் கொடுக்கும்
    ஆசான்.//

    உண்மை தான் Raghavan!
    குடும்பம் சென்னையில் இருக்க, தான் மட்டும் திருப்புல்லாணியில்
    செய்து வரும் கைங்கர்யங்கள் மகத்தானது!
    பார்க்க வைணவக் கைங்கர்யம் போல் இருப்பினும்...பழமை நூல் மின்னாக்கம் என்பன போன்றவை தமிழ் மரபுத் தொண்டுகளே!

    நான் விளையாட்டாகவே ஆன்மீகத்தை அணுகி எழுதினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது, சுவாமி ரகுவீரதயாள் பந்தலின் பரம வாசகர் என்பதில் எனக்குத் தனிப்பட்ட மகிழ்வும் கூட! :)

    ReplyDelete
  20. //Raghavan said...
    திரு.ரகூவீர்தயாள் - காணவேண்டுமா
    தீ்ர்த்தவாரி ஃபொட்டோவை பார்க்கவும்
    திரும்போது பெருமாளை ஏளப்பண்ணுவர்தான்//

    யாராச்சும் கண்டுபுடிக்கறாங்களா-ன்னு வெயிட் பண்ணிப் பார்த்தேன்! :) நன்றி!

    அந்தப் புகைப்படத்தில், லேசான தாடி வளர்த்துக் கொண்டு, முதலில் தெரியும் நபர்...
    என் ஆருயிர்த் தோழன் ஒரு முறை இதே போலவே இருந்தானா தாடி வச்சிக்கிட்டு? அதான் டக்குன்னு இந்தப் படத்தையே எடுத்துப் போட்டுட்டேன்! :)

    ReplyDelete
  21. KRS Said….
    உட்கார்ந்த நிலையில் இராமனை ஃபோட்டோ, கீட்டோ புடிச்சீங்களா? இல்லை தொலைக்காட்சில பார்த்தீங்களா? :)))

    சரியா சொன்னீங்க!
    சன் டிவி ௦-ல் ராமாயணம் ஓடுது.
    உட்கார்ந்து கொண்டு இராமர் விரதம் இருப்பார் .
    அடுத்த episode miss பண்ணிட்டேன் .
    அந்த gape-la படுத்து கொண்டார் போல!

    ReplyDelete
  22. அடியேன் நமஸ்காரம்!

    இன்னொரு விஷயம் .
    பல பெருமாள் கோவில் கருட வாகனத்தில் பெருமாள் பாதம் கருடர் கை மேல் படும் படி நீட்டி அலங்காரம் பண்ணுவார்கள்.

    ஆனால் திருபுல்லானியில் பெருமாள் பாதம் கருடர் தோள் வரையே உள்ளது.
    கருடர் கை பெருமாள் பாதம் படுவதற்காக ஏங்குகிறது.

    இவை அலங்காரம் பண்ணுபவர்களின் தவறே என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  23. மல்லாரி ராகம் பற்றி.
    கோவிலில் பெருமாள் பிரகாரங்களில்
    பவனி வரும்போது இசைக்கபடும்
    நாதஸ்வர இசை.கேட்க மிகவும் ரம்யமாக இருக்கும். லால்குடி ஜெயராமன் இசையிலும் வந்துள்ளது.
    தேடுகிறேன் - கிடைத்ததும் upload செய்கிறேன். அன்புடன் - ராகவன்.வ

    ReplyDelete
  24. //பல பெருமாள் கோவில் கருட வாகனத்தில் பெருமாள் பாதம் கருடர் கை மேல் படும் படி நீட்டி அலங்காரம் பண்ணுவார்கள்//

    உண்மை தான் ராஜேஷ்!
    திருமலை போன்ற தலங்களில் அப்படியே!
    tirumala-garuda seva

    ஆனால் எல்லாத் தலங்களிலும் இப்படிச் செய்து விட முடியாது! உற்சவத் திருமேனியின் அளவைப் பொறுத்தே அவ்வாறு செய்ய முடியும்! சில இடங்களில் சிறிய உற்சவராகவோ, இல்லை ஏகத்துக்கும் பெரிய கருடனாகவோ இருந்தால், அப்படிச் செய்வது கடினம்! மிகவும் நீண்டு, பார்வைக்கும் சரியாக வராது!

    எ.கா:
    நாச்சியார் கோயில் கல் கருடன் - http://k41.pbase.com/g1/95/360595/2/94308056.MeQohKR8.jpg

    //இவை அலங்காரம் பண்ணுபவர்களின் தவறே என்று கருதுகிறேன்//

    ஹிஹி!
    திருப்புல்லாணியில் இந்த ஆண்டு நடைபெற்ற அலங்காரத்தில் ஒரு சின்ன தவறு! எனக்கும், சுவாமி ரகுவீர தயாளுக்குமே தெரியும்! :))
    நீங்க கிட்டத்தட்ட வந்துட்டீங்க! ஆனா நல்ல காலம் கண்டு புடிக்கலை! :))

    ரகுவீரதயாள் அண்ணா: கமலக் கண்ணியார் சொல்லுறத கவனிச்சீயளா? :)

    ReplyDelete
  25. //Raghavan said...
    மல்லாரி ராகம் பற்றி. லால்குடி ஜெயராமன் இசையிலும் வந்துள்ளது.
    தேடுகிறேன் - கிடைத்ததும் upload செய்கிறேன்//

    நன்றி Raghavan! தரவேற்றி விட்டுச் சொல்லுங்க!

    சரி, உங்களைச் சுருக்கமா எப்படிக் கூப்புடறது-ன்னு சொல்லுங்களேன்! :)
    என் தோழன் ஜி.இராகவனை மட்டும் தான் ராகவன்/ராகவா-ன்னு கூப்பிடறது வழக்கம்!

    இங்க, எனக்குன்னு பார்த்து, ஏகப்பட்ட இராகவன்-கள் வருகிறார்கள்! :)
    இப்படி முன்னாடி ஒருத்தர் வந்தார்! இப்ப அவரை ராகவ்-ன்னு ஆக்கியாச்சி! உங்களை என்ன ஆக்குறது-ன்னு தெரியலை! :))

    ReplyDelete
  26. திருப்புல்லணை திவ்ய தேசத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டேன். சுவாமி இரகுவீரதயாள் அவர்களின் பதிவில் வரும் பெருவிழா (பிரம்மோற்சவ) இடுகைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றி இரவி! நன்றி இரகுவீரதயாள் சுவாமி!

    ReplyDelete
  27. திருபுல்லாணி ப‌ற்றி வாய்வ‌ழி கேள்விப்ப‌ட்டிருந்தாலும் மேலும் ப‌ல‌ விப‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் சுட்டிக‌ள் மூல‌ம் கொடுத்து ப‌ல‌ விப‌ர‌ங்க‌ளை தெரிய‌ப்ப‌டுத்திவிட்டீர்க‌ள்.
    மிக்க‌ ந‌ன்றி.

    ReplyDelete
  28. நல்ல பதிவு..நன்றி அண்ணா...

    ReplyDelete
  29. >>அஸ்வத்த மரம் = ஆலமரம்.<<
    Not so! aswaththa is அரச மரம் .

    தல விருட்சம் : அரசமரம் (source: http://temple.dinamalar.com/New.php?id=837)

    ReplyDelete
  30. अश्वत्त --Peepal tree
    The Ficus religiosa tree is known by a wide range of vernacular names in different locales and languages, including:

    in Indic languages:
    Sanskrit — अश्वत्थः aśvatthaḥ vṛksha, pippala vṛksha (vṛksha means tree)
    Bengali language — অশ্বথ, i.e. ashwath, পিপুল, i.e. pipul
    Tamil — அரச மரம் arasa maram (literally King or King's Tree. Arasu or Arasan is Tamil for King)
    Telugu — రావి చెట్టు Raavi Chettu
    Kannada — araLi mara ಅರಳಿ ಮರ
    Konkani — Pimpalla Rook/jhadd
    Malayalam — അരയാല്‍ Arayaal
    Gujarati — પિપળો (Pipdo)
    Punjabi — Pippal / پپل
    Bhojpuri — Pippar
    Marathi — पिंपळ pimpaL (where L stands for the German ld sound, used in for example Nagold)
    Mahal — އަޝްވަތި ގަސް (Aśvati gas)
    Oriya — ଅଶ୍ୱତ୍ଥ (Ashwatth)
    Pali — assattha; rukkha
    Nepali (नेपाली) — पीपल(Peepal\Pipal)
    Sinhala — ඇසතු esathu
    Thai — โพธิ์ (Pho)
    Vietnamese — bồ-đề
    Urdu — peepal پیپل
    Source: http://en.wikipedia.org/wiki/Ficus_religiosa#Vernacular_names

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP