Tuesday, March 23, 2010

வாணி ஜெயராம், சங்கராபரணம், ராமதாசு, இராமநவமி

சங்கராபரணம் படத்தைப் பத்தி உங்களுக்கே நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும்! ஏன்? எதுக்குத் தெரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்கீங்க?
இன்னைக்கும் அதன் "சங்கீத-அமைதியில்" மூழ்க முடிகிறதே! எப்படி?

இசை ரசிகர்கள் மட்டுமன்றி, பல தரப்பினருக்கும், படம் பிடிச்சி இருந்ததே!
தெலுங்குப் படம்-ன்னாலே மசாலா, உடற்பயிற்சி நடனங்கள்-ன்னு கேலி பேசப்படும் நிலையில், எப்படி இது போன்ற ஒரு கலைப் படத்துக்கு தெலுங்கில் ஹிட் கொடுக்க முடிந்தது?

தமிழில் சங்கராபரணம் போல் ஒரு படம் வந்துள்ளதா?

மிருதங்கச் சக்ரவர்த்தி, சலங்கை ஒலி, சிந்து பைரவி போன்ற படங்கள் இருக்கு தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனால் மசாலா எதுவும் கலக்காமல்? வெற்றிகரமாக??

இத்தனைக்கும் படத்தின் ஆரம்பமே, ரொம்ப மெதுவா...ஒரு கலைப் படம் போலத் தான் நகரும்! காதல் காட்சிகள், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் - இதெல்லாம் 2% கூட இருக்காது! பாடல்கள் கூட, ரொம்ப Dilute செஞ்சிருக்க மாட்டாங்க! எல்லாமே மரபிசைப் பாடல்கள் தான்! மொத்தம் 12 பாட்டு வேற! தாங்குமா? :)

இத்தனைக்கும், படத்தில், சமூகம் ஒப்புக் கொள்ளாத "உறவுக் குழப்பம்" வேற தொட்டுச் செல்லப்படுகிறது! அபூர்வ ராகங்கள் அவ்வளவா ஓடலையே!
ஆனால் சங்கராபரணமோ, பல மாநிலங்களில், தெலுங்கிலேயே ஓடி, அப்பறம் தான் தமிழில் எல்லாம் டப் செய்யப்பட்டது! ஆனால் இன்னிக்கும் தெலுங்கில் பார்க்கவே பிடிக்கிறது!

படத்தில் இத்தனை "Drawback" இருக்கும் போது, எப்படி...இது ஒரு Trend Setter? :)



இப்போ VJ என்னும் வாணி ஜெயராமுக்கு வருவோம்!

சுசீலாம்மாவுக்கு அடுத்து, என்னைத் தாலாட்டித் தூங்க வைக்க முடியும்-ன்னா அது வாணி ஜெயராம் தான்!
ஜானகி பாடினாங்க-ன்னா தூங்க முடியாது! ஒரு வித கிக்-கில் எழுந்து கொள்வோம்! :)

"பி.சுசீலா அவர்களை சுசீலாம்மா-ன்னு கூப்படறீங்க, ஆனா இவிங்கள மட்டும் ஜானகி-ன்னு மரியாதை இல்லாம கூப்பிடறீங்களே?"-ன்னு, என்னுடைய இசை இன்பம் பதிவுகளில் மக்கள் கேட்டு இருக்காங்க! :)
ஜானகி குரலோடு "கிக்" அப்படி! வேற ஒன்னும் பெருசா காரணம் இல்லை!

வாணிக்கு முன்பே ஒரு தேசிய விருது கிடைச்சிருந்தாலும்...சங்கராபரண தேசிய விருது மிகவும் பரவலாகப் பேசப்பட்டது...க்ளைமாக்ஸ் பாடலான = தொருகு நா இதுவன்ட்டி சேவா!

வாணி ஜெயராம், தமிழில், சங்கர் கணேஷ் கிட்ட தான் முதலில் பாடினாங்க-ன்னு நினைக்கிறேன்! அப்பறம் தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கண்டு கொண்டார்!
ஆனா எம்.எஸ்.வி கிட்ட பாடின "மல்ல்ல்ல்ல்லிகை - என் மன்னன் மயங்கும்" பாட்டு தான் முதல் பாட்டோ-ன்னு அப்பப்போ நினைச்சிக்குவேன்! அவ்வளவு இனிமை!

Vani Jayaram - MSV


ஆனால் எம்.எஸ்.வி-சுசீலாம்மா Vs இளையராஜா-ஜானகி என்னும் இரண்டு பெரிய மலைகளுக்கு இடையில், வாணி மாட்டிக்கிட்டாங்களோ-ன்னு எனக்கு அடிக்கடி தோனும்!
தமிழில் "காட்சிகரமான" வெற்றிகளை வாணியால் பெற முடியவில்லை! குன்னக்குடி மட்டுமே வாணியைத் தன் எல்லாப் படங்களிலும் பயன்படுத்திக் கொண்டார்!

பின்னாளில், மலையாள இசை உலகம், வாணி ஜெயராமை வெற்றிகரமாக இழுத்துக் கொண்டது! அதனால் என்ன? வாணியின் - "கேள்வியின் நாயகனே" பாட்டு ஒன்னே போதும்! திரை மரபிசையில், பல்லாண்டு பல்லாண்டு, மணம் பூத்துக் கிடக்கும்!

அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?-
ன்னு ஹை பிட்ச்சில் எகிறும்!
ஆனா பெருமாள் ஞாபகத்துக்கு வரவே மாட்டாரு! ஏன்னா இங்கே தாயார் மட்டுமே தெரிவாங்க! :)

But, அதுக்கு அப்பறம், பழனி மலையில் உள்ள வேல் முருகா-ன்னு ஆரம்பிப்பாங்க பாருங்க...
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்(தி) இரு முருகா...திருமுருகா...திருமுருகா
...ன்னும் போது, அந்தப் பிடிவாதம் கண்டு இன்னிக்கும் அழுதுருவேன்!


இப்போது சங்கராபரணம் + வாணி ஜெயராம்-க்கு வருவோம்!

தேசிய விருது என்னமோ தொரகு நா இதுவன்ட்டி சேவா என்னும் க்ளைமாக்ஸ் பாட்டுக்குத் தான்!
ஆனால் எந்த பெரிய இசைக் கருவியும் இல்லாம,
ஒரு டொய்ங்க் டொய்ங்க் என்பதை மட்டும் வச்சிக்கிட்டு,
ஒக்க நிமிஷப் பாட்டு ஒன்னு வரும் பாருங்க!
அந்த டொய்ங்க் டொய்ங்-கை வாழ்க்கை-ல மறக்கவே முடியாது!

மஞ்சு பார்கவியோட பையன் (பொண்ணு), சங்கர சாஸ்திரி வாரி இன்ட்டிக்கு ஒச்சிந்தே, ஈ பாட்டு மூலமா, அனாதை-ன்னு "பொய்" சொல்லி, Entry கொடுக்கும் கட்டம்!
அப்போ பாடப்படும் மிக எளிமையான பாடல்...மிக ஆத்மார்த்தமான பாடல்...

12 வருஷம் ஆகியும் கூட...தன்னை எட்டிப் பார்க்காத ஒருத்தருக்கு...
தன் அன்பை, பொய் ஆக்கி விடாத பாடல்!


ஆகா! என்ன பாட்டு-ங்க அது? = பத்ராச்சலம் இராமதாசர் கீர்த்தனை!
இன்று ராம நவமி! (Mar 24, 2010)!
சக்ரவர்த்தித் திருமகனின் பிறந்த நாள்! - Happy Birthday Rama!
Happy Birthday - Bharatha, Lakshmana, Satrughana - அடுத்த இரண்டு நாட்களும்...)

இராமநவமி அதுவுமா, ஜெயிலுக்குப் போவோம் வாங்க!.....இராமதாசரும் இராமனும் வாழ்ந்த அந்த ஜெயிலுக்குப் போயி, பாடலைக் கேட்போமா?


சிறைச் சுவரில்...இராமதாசரின் தனிமைக் கைவண்ணம்...


தெலுங்குப் பாடலுக்கு பெருசு பெருசா விளக்கம் சொல்வதற்குப் பதிலா...
"அதே மெட்டில்", தமிழாக்கிக் கொடுத்துள்ளேன்!
பொருளும் புரிஞ்சி, இசையும் அதே மெட்டில் இருக்கா-ன்னு பார்த்துச் சொல்றீங்களா?

பாட்டைக் கேட்டுகிட்டே, பதிவை வாசியுங்க!
* மூலப் பாடல் இங்கே!
* தமிழில் "பாட" முயற்சித்து உள்ளேன்! :) பயமா இருந்தா கேட்க வேணாம்! :)
ஆனால்...இந்தப் பாடல்...என் சுவாசம் போல!
அதான் நியுயார்க்கில் இருந்து, சிகாகோ வந்து, எங்கும் வெளியே போகாம, விடுதி அறையில்.....இதை ஹம் பண்ணிக்கிட்டே, எழுதிக்கிட்டு இருக்கேன்! :)


படம்: சங்கராபரணம்
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: பத்ராச்சலம் இராமதாசர்
ராகம்: நாத நாமக்ரியை

ஏ தீருக நன்னு, தய ஜூசே தவோ, இன வம்சோத்தம ராமா
நா தரமா பவ, சாகர மீதனு, நளின தளேக்ஷண ராமா

எப்படி என்மேல், கருணை புரிவாய், ரவி ராகவ குல ராமா?
எப்படி அடியேன், கடல் கடப்பேனோ, அல்லி விழி அபி ராமா??

ஸ்ரீ ரகு நந்தன, சீதா ரமணா, ச்ரித ஜன போஷக ராமா
காருண்யா லய, பக்த வரத நின்னு, கன்னதி காணுபு ராமா


திரு ரகு குலனே, சீதையின் சுவையே, அடியரை அணைத்திடும் ராமா!
தனிப் பெருங் கருணை, எங்களின் வரதா, கோசலை விளக்கே ராமா!


க்ரூர கர்மமுலு, நேரக சேசிதி, நேரமுலேஞ்சகு ராமா
தாரித்ரயமு, பரிகாரமு சேயவே, தெய்வ சிகாமணி ராமா

போய்புகு பிழைகள், செய்தேன் எனினும், தூசாக்கிடுவாய் ராமா!
வறுமையும் வெறுமையும், போக்கி எனக்கருள், தெய்வ சிகாமணி ராமா!

வாசவ நுத, ராம தாச போஷக, வந்தனம் அயோத்ய ராமா!
பாசுர வர, சத் குணமுலு கல்கின, பத்ராதீஸ்வர ராமா!

வாசவன் துதி, ராம தாசனைக் காக்கும், அபயம் அயோத்தி ராமா!
தேசமும் குணமும், நடையாய் உடையாய், பத்ர கிரீஸ்வர ராமா!



(* பாடலின் பொருளையும், சில தெலுங்குப் பதங்களையும்...சரி பார்த்துக் கொடுத்த மதுமிதா அக்கா, துளசி டீச்சர், திவாகர் சாருக்கு...மன வந்தனமுலு!)


சங்கராபரணம் - படத்தில் பாடல் வரும் காட்சி:


பக்த ராமதாசு படத்தில், இதே பாடல், விஜய் யேசுதாஸ் பாடுகிறார்:


கர்நாடக இசையில்:
* பால முரளி கிருஷ்ணா



ஏன் பத்ராச்சலம் இராமதாசர் பாடல்கள் மட்டும் இப்படி மனதை என்னமோ செய்யுது?

எல்லா விதமான அன்புக்கும், காதலுக்கும், பாசத்துக்கும், நட்புக்கும்...
கால அளவிலே...
ஒரு பொறுமை உண்டு! ஒரு எல்லையும் உண்டு!

சீதை இராமனுக்கு ஒரு வருடம் தான் காத்திருந்தாள்!
அதற்குள் தற்கொலை முடிவு!

நம் அன்பன் வந்து தடுத்தான்! பிழைத்தாள்!

ஆனால் இராமதாசர் என்னும் இந்தக் கோபண்ணா...
ஒரு வருடம் இல்லை, இரண்டு வருடம் இல்லை....
மொத்தம் 12 வருடம்....
மொத்த பாண்டவர்களின் வனவாச காலம்...
அவன் வந்து மீட்பானா, பார்ப்பானா என்று கூடத் தெரியாது...

அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!

நமக்கு கஷ்டம் வந்தா...ஒன்னு கடவுளை வெறுவெறு-ன்னு வெறுத்துக்குவோம்! இல்லை கர்ம பரிகாரத்தை பிடிபிடி-ன்னு பிடிச்சிக்குவோம்! :)
ஆனால், அவனுக்கென்றே அடைந்து கிடப்போமா?

இப்போ சொல்லுங்க.....
சரணாகதி என்னும் ஆத்ம சமர்ப்பணம் = உன் உள்ள உகப்புக்கே நான்!
இங்கு நம்மில் யார் ஆத்திகர்கள்? :)

இராம நவமி அன்று, இராமனைப் பற்றி எழுதவில்லை! சினிமாவும் பாட்டுமா எழுதி விட்டேன்! மன்னியுங்கள்!
ஆனால் இந்த ஆன்மீகம் "சினிமாத்தனமாக" இருந்தாலும்......
இதுவே நம் அன்பன் ஆஞ்சநேயனுக்குப் பிடித்தமானது! - யத்ர யத்ர ரகு நந்தன கீர்த்தனம்! எங்கெங்கெல்லாம்....அங்கெங்கெல்லாம்!

மனத்துக்கு இனியானை மனத்திலே வைத்தான்
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!

என் பால் நோக்காயே ஆகிலும்.....உன் பற்று அல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்....வேறு எங்கும் அகங் குழைய மாட்டேனே!


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...
ஏ தீருக நன்னு, தய ஜூசே தவோ???

46 comments:

  1. ராமநவமி அன்று அழ வைத்து விட்டீர்கள் அண்ணா...

    ReplyDelete
  2. இப்படி ஒரு பக்தி பாவம் எப்படி அமைகிறது.. அவன் அருளாம் கதியன்றி வேறில்லை என்று எப்போது உணர்வேனோ.. ராமா நீயே ஆட்செய்..

    ReplyDelete
  3. குழந்தையின் குரலில் மயங்கினவனை.. விஜய் உணர்ச்சிக்குள்ளாக்கினார்.. பாலமுரளி கிருஷ்ணா அழ வைத்து விட்டார்.. அர்த்தம் கொடுத்து, அழகாகப் பாடி ராம பக்தியில் ஆழ்த்தி விட்டீர்கள் ரவிண்ணா..

    ReplyDelete
  4. ஸ்ரீ ராமநவமி அன்று அழ வைத்துவிட்டீர்கள். ஹ்ம்ம் இதுதான் எல்லோருடைய நிலைமையும். இங்கெ வெங்கடேஸ்வரா பக்தி சானலில் பத்ராசலத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வாணியைப் பாட வைத்துவிட்டீர்கள். சோகத்தில் இசை இன்னும் பரிமளிக்கிறது.
    அதுவும் அந்தப் பிள்ளையின் BAAபாவமும் வாணியின் குரலும் மனதைப் பிழிந்துவிட்டன.
    நன்றி ரவி. ராமநாம சரணம். ராம்நவமி வாழ்த்துகள்.
    சிகாகொவில் இருக்கிறீர்களா!! அரோரா கோவில் போய் வாருங்களேன்.

    ReplyDelete
  5. //"பி.சுசீலா அவர்களை சுசீலாம்மா-ன்னு கூப்படறீங்க, ஆனா இவிங்கள மட்டும் ஜானகி-ன்னு மரியாதை இல்லாம கூப்பிடறீங்களே?"-ன்னு, என்னுடைய இசை இன்பம் பதிவுகளில் மக்கள் கேட்டு இருக்காங்க! :)
    ஜானகி குரலோடு "கிக்" அப்படி! வேற ஒன்னும் பெருசா காரணம் இல்லை!//

    தோழர் அனுராதாவிற்கு ஜானகி பாடமுடியாமல் விட்ட பாட்டுகளை வாணியும் பாடி இருக்கிறார்கள்.

    *****

    அம்மா வயது ஆனவர்கள் எல்லோரையும் அம்மாவென்றே அழைக்கலாம், அதற்கு காரணங்கள் தேவை இல்லை

    ReplyDelete
  6. எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு.

    ஜெய் ஸ்ரீராம்.

    ReplyDelete
  7. //இராம நவமி அன்றி, இராமனைப் பற்றி எழுதவில்லை! சினிமாவும் பாட்டுமா எழுதி விட்டேன்! மன்னியுங்கள்!
    ஆனால் இந்த ஆன்மீகம் "சினிமாத்தனமாக" இருந்தாலும்..........இதுவே நம் அன்பன் ஆஞ்சநேயனுக்குப் பிடித்தமானது! - யத்ர யத்ர ரகு நந்தன கீர்த்தனம்! எங்கெங்கெல்லாம்....அங்கெங்கெல்லாம்!

    அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
    அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
    என் பால் நோக்காயே ஆகிலும்.....உன் பற்று அல்லால் பற்றில்லேன்!
    உன் அந்தமில் சீர்க்கு அல்லால்....வேறு எங்கும் அகங் குழைய மாட்டேனே!

    எற்றைக்கும் ///////

    இங்கும் பந்தல் மூலையில் எங்காவது அனுமன் அமர்ந்திருப்பான் ரவி! நெகிழ்ச்சியான பதிவு!

    ReplyDelete
  8. ராம நவமி நல்வாழ்த்துக்கள்
    ஸ்ரீ ராமருக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்த கோடிகளுக்கும்..........

    ReplyDelete
  9. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை
    பரம்பொருளே இறங்கி வந்து வாழ்ந்து காட்டிய உன்னத அவதாரம்
    ஸ்ரீ ராம அவதாரம்
    ஜெய் ஸ்ரீ ராம்

    ReplyDelete
  10. //தனிப் பெருங் கருணை, எங்களின் வரதா, கோசலை விளக்கே ராமா!//

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி !

    Happy Rama Navami ! :)

    ReplyDelete
  11. மொழியாக்கம் அருமை ரவி.

    ReplyDelete
  12. அல்லூரி வேங்கடாத்ரி பஜனை பாடல்கள் இன்றும்
    பல பஜனை குழுக்கள் பாடி அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.
    அந்த பாடல் கிடைத்தாலும் போடுங்களேன்.
    அவர் 12 வயதில் பாடிய முதல் பாடல்

    சரணு சரணு சரணு
    ராம ராம ராமசந்திரா....

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. நா தரமா பவசாகர மீதனு நளின தளேக்ஷண ராமா!

    ராமா! ராமா!

    ReplyDelete
  15. //Raghav said...
    ராமநவமி அன்று அழ வைத்து விட்டீர்கள் அண்ணா...//

    அடடா!
    சாரிப்பா ராகவ்!
    கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்கி சிரிக்க வைத்து விடுகிறேன்! :)

    ReplyDelete
  16. // Raghav said...
    இப்படி ஒரு பக்தி பாவம் எப்படி அமைகிறது.. //

    ஞானம் என்ற "தனக்கான/தன் கருத்துக்கான" தேடல் அடங்கும் போது...
    கர்மம் என்ற "தனக்கான/தன் செயலுக்கான" தேடல் அடங்கும் போது...

    அவன் உள்ள உகப்பு-க்கு மட்டுமே இருக்கணும் என்று காதலிக்கும் போது...

    இப்படி ஒரு பாவம்...
    பாவனை அதனைக் கூடில்
    அவனையும் கூடலாமே!

    ReplyDelete
  17. //குழந்தையின் குரலில் மயங்கினவனை.. விஜய் உணர்ச்சிக்குள்ளாக்கினார்.. பாலமுரளி கிருஷ்ணா அழ வைத்து விட்டார்..//

    BMK was the best from a musical stand point!
    Vani was best from the bhaavam stand point!

    //அர்த்தம் கொடுத்து, அழகாகப் பாடி ராம பக்தியில் ஆழ்த்தி விட்டீர்கள் ரவிண்ணா//

    I was the worst from all stand points :))

    ReplyDelete
  18. //பாலமுரளி கிருஷ்ணா அழ வைத்து விட்டார்.. //

    மக்கள்ஸ்க்கு இன்னொரு தகவல்!

    சங்கராபரணம் படத்தில் பாட, முதலில் பாலமுரளியைத் தான் முயன்றார்கள்! அவர் தானே சங்கர சாஸ்திரிகள் வேடத்திலும் நடிப்பதாகச் சொன்னாராம்!

    இயக்குனர் கே.விஸ்வநாத் மறுத்து விட...
    அப்பறம் நம்ம கேவி மகாதேவன் ஐயா தான் SPB-ஐ மிகவும் வற்புறுத்திப் பாட வச்சார்! மரபிசையில் பழக்கம் இல்லாத SPB-க்கு மிகவும் தயக்கம்! அப்பறம் இதுக்குன்னே கொஞ்ச நாள் கத்துக்கிட்டு...

    முதல் படமே...தேசிய விருது...
    ஓம்கார நாதானு சந்தானமெள கானமே...சங்கரா பரணுமு!
    சங்கர கள நிகளுமு
    ஸ்ரீஹரி பத கமலுமு
    ராக ரத்ன மாலிகா தரளுமு...சங்கரா பரணமு!

    ReplyDelete
  19. //ஸ்ரீ ராமநவமி அன்று அழ வைத்துவிட்டீர்கள்.//

    அடடா! நீங்களுமா வல்லியம்மா?
    இப்படி எல்லாரையும் அழ வைக்கும் எனக்கு என்ன கிடைக்கப் போவுதோ தெரியலயே!

    //பத்ராசலத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வாணியைப் பாட வைத்துவிட்டீர்கள். சோகத்தில் இசை இன்னும் பரிமளிக்கிறது//

    சோகம்-ன்னு சொல்ல மாட்டேன்! ஒரு வித தவிப்பு!

    //அதுவும் அந்தப் பிள்ளையின் BAAபாவமும் வாணியின் குரலும் மனதைப் பிழிந்துவிட்டன//

    பொதுவா ஜானகி தான் குழைஞ்சிப் பாடுவாங்க...விதம் விதமா குரல் மாத்துவாங்க!
    ஆனால் வாணி, மிகவும் இயல்பாகவே, தன்னால் பாட முடியும் என்பதை நிரூபித்து விட்டார்!
    இதே போல் ப்ரோசேவா ஆஆ எவருரா-விலும் வாணி பாடி இருப்பாங்க! ஆனால் அதில் இசைக் கருவிகள் நிறைய! நோ டொய்ங் டொய்ங்க! :)

    //நன்றி ரவி. ராமநாம சரணம். ராம்நவமி வாழ்த்துகள்.
    சிகாகொவில் இருக்கிறீர்களா!! அரோரா கோவில் போய் வாருங்களேன்//

    ஹிஹி!
    தனியா கோயிலுக்கு-ன்னு போயே பல வருசம் ஆச்சு!
    கடேசியா போனது பத்து மலை முருகன்!ஆனா அது கோயிலாப் போல! ஏதோ புகுந்த வீட்டுக்குப் போறா மாதிரித் தான் போனேன்! :)

    நியூயார்க் வந்தாச்சு!
    ராம நவமி வாழ்த்துக்கள் வல்லீம்மா!

    ReplyDelete
  20. //கோவி.கண்ணன் said...
    தோழர் அனுராதாவிற்கு ஜானகி பாடமுடியாமல் விட்ட பாட்டுகளை வாணியும் பாடி இருக்கிறார்கள்//

    அனுராதா ஸ்ரீராம் சொல்றீங்களா-ண்ணா?

    //அம்மா வயது ஆனவர்கள் எல்லோரையும் அம்மாவென்றே அழைக்கலாம், அதற்கு காரணங்கள் தேவை இல்லை//

    :)
    அம்மா வயது ஆனாலும், அம்மா என்று அழைக்க முடியாமை-க்கு காரணம் இருக்கும் அல்லவா? அதுவே சொல்ல வந்தது!

    ReplyDelete
  21. //selvanambi said...
    எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு//

    வாங்க செல்வ நம்பி ஐயா!
    உண்மை தான்!
    எத்தனையோ மகானுபவர்கள்!
    அத்தனை பேருக்கும் வணக்கங்கள்!

    இதைப் பொதுவாக தியாகராஜர் பாடினாலும், ராமதாசரின் பாவ பக்தியைப் பேர் சொல்லிக் குறிப்பிட்டே ஒரு இடத்தில் பாடி இருக்கார்!

    ReplyDelete
  22. //ஷைலஜா said...
    இங்கும் பந்தல் மூலையில் எங்காவது அனுமன் அமர்ந்திருப்பான் ரவி! நெகிழ்ச்சியான பதிவு!//

    மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்!
    அவனும் ஒரு இன்னிசைக் குயில் தானே-க்கா!

    எனக்குத் தெரியும்! அவன் பந்தலில் இருக்கான்! அவனைச் "சினிமாத்தனங்கள்" உறுத்துவதில்லை!
    அவனால் சினிமாவிலும் இராமனைக் காண முடியும்!

    ஏன்னா...
    அவனுடைய ராமன் வெறும் ஏட்டுச் சுரைக்காய் மந்திரப் புத்தகங்கள் அல்ல! இராவணன் இராமனைக் கேலி செய்து புத்தகம் எழுதினாலும்...அதில் வரும் ராமா என்ற சொல்லிலும் அவன் இருப்பான்!

    தன் ஞானத் தீனிக்கு அவன் இராமனை உண்பதில்லை!
    தானே இராமனின் உணவாக, தன்னை நிவேதிக்கும் அனுமன்!

    இது ஒரு நாளும் கர்ம காண்ட கடு மண்டைகளுக்குப் புரியாது! :(

    ReplyDelete
  23. //ராம நவமி நல்வாழ்த்துக்கள்
    ஸ்ரீ ராமருக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்த கோடிகளுக்கும்..........//

    இனிய இராம நவமி வாழ்த்துக்கள் ராஜேஷ்!

    //ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை
    பரம்பொருளே இறங்கி வந்து வாழ்ந்து காட்டிய//

    தாழ்ந்து காட்டிய என்றாலும் பொருந்தும்!
    தாழ்ந்து காட்டியவன் இராமன்!
    வாழ்ந்தும் காட்டியவன் இராமன்!

    இராமாயணத்தில், முதலில் தான் வாழ்ந்து காட்டிய பின்னரே
    மகாபாரதத்தில், பின்னர், ஊருக்கு உபதேசம் செய்தான்!

    இராமன் நல்லது மட்டும் செய்து காட்டவில்லை!
    வாலி வதம் போன்ற அல்லதும் செய்து காட்டி, அல்லது செய்தால், வரும் விளைவை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் காட்டிப் போனான்!

    ReplyDelete
  24. //அல்லூரி வேங்கடாத்ரி பஜனை பாடல்கள் இன்றும்
    பல பஜனை குழுக்கள் பாடி அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.

    அந்த பாடல் கிடைத்தாலும் போடுங்களேன்//

    அல்லூரி காரு பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்! திருவல்லிக்கேணியில் வாழ்ந்தவர் தான்! அவர் பாடல்களை அனுப்பி வையுங்களேன்!

    ReplyDelete
  25. Radha said...
    //தனிப் பெருங் கருணை, எங்களின் வரதா, கோசலை விளக்கே ராமா!//

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி !//

    கரெக்ட்டா கண்டு புடிச்சிட்டீங்க ராதா :)
    சோதி என்று வரும் பாசுரங்கள் எவை?

    ReplyDelete
  26. //Radha said...
    மொழியாக்கம் அருமை ரவி//

    :)
    நன்றி ராதா! எல்லாம் தங்கள் ஆசி!

    கண்ணதி காணுபு = தாயைக் குடல் விளக்கம் செய்த...அதான் கோசலை விளக்கே-ன்னு தோனிச்சி!

    //போய்புகு பிழைகள் -- க்ரூர கர்மமுலு வா?//

    போய பிழையும் + புகு தருவான் நின்றனவும் = க்ரூர கர்மமுலு
    தீயினில் தூசாகும் = தூசாக்கிடுவாய் ராமா!

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    நா தரமா பவசாகர மீதனு நளின தளேக்ஷண ராமா!

    ராமா! ராமா!//

    :)
    என்ன குமரன், நளின தளேக்ஷணம் பிடித்துக் கொண்டதா? :)

    நளின தளேக்ஷண ராமா!
    அல்லி விழி அபி ராமா!

    ரவி ராகவ குல ராமா!
    தெய்வ சிகாமணி ராமா!

    ReplyDelete
  28. Jai Shri Ram. Thanks for a pretty good post and a good attempt from you on the song.

    //தெலுங்குப் படம்-ன்னாலே மசாலா, உடற்பயிற்சி நடனங்கள்-ன்னு கேலி பேசப்படும் நிலையில், எப்படி இது போன்ற ஒரு கலைப் படத்துக்கு தெலுங்கில் ஹிட் கொடுக்க முடிந்தது?//
    To my knowledge, All the movies from Director K Vishwanath were of this style. other gems are Salangai oli, sippikkul muthu.. etc.,

    ReplyDelete
  29. உங்களின் எழுத்து பாணி அலாதியானது.
    தமிழாக்கம் அருமை. தொடருங்கள் உங்கள் கச்சேரியை.
    அன்புடன் - ராகவன்.வ

    ReplyDelete
  30. என்னால் பாடல்களை கேட்க முடியவில்லை. ஏன் என்று காரணம் தெரியவில்லை. ஹும்மா, ராகாஸ் லிங்க் கேட்க முடிகிறது.
    அன்புடன் ராகவன்.வ

    ReplyDelete
  31. //Ravi said...
    Jai Shri Ram. Thanks for a pretty good post and a good attempt from you on the song//

    :)
    நன்றி ரவி! It was only an attempt to verify the "mettu" in tamizh!

    //To my knowledge, All the movies from Director K Vishwanath were of this style. other gems are Salangai oli, sippikkul muthu.. etc.,//

    உண்மை தான்! இசையின் பரிமாணங்கள் காட்டும் படங்கள் வராமல் இல்லை!

    சலங்கை ஒலியில், நடனம் மட்டும் இல்லாமல்...சமூகம், திருமணம் என்னும் கட்டமைப்பு, இதெல்லாம் கூடவே வந்துவிடும்!
    சிப்பிக்குள் முத்து இசையைக் காட்ட வந்ததை விட, எளிய காதலைக் காட்ட வந்தது எனலாம்! நல்ல இசை படத்தின் இரண்டாம் பரிமாணமே!

    சங்கராபரணம் முழுக்க முழுக்க இசைக்கானது! மசாலா கலவாதது! எல்லாவற்றுக்கும் மேல்...செயற்கைத்தனங்கள் இல்லாத கதை ஓட்டம்!

    ReplyDelete
  32. @வ.ராகவன்
    //Anonymous said...
    உங்களின் எழுத்து பாணி அலாதியானது.தமிழாக்கம் அருமை. தொடருங்கள் உங்கள் கச்சேரியை//

    நன்றி-ங்க! இப்பல்லாம் என் பதிவில் ஒரே ராகவன்களா வராங்க! :)
    கச்சேரி எல்லாம் இல்லை! சின்ன சின்ன ஆசை/முயற்சி மட்டுமே!

    //என்னால் பாடல்களை கேட்க முடியவில்லை//

    Youtube கூடவா? நீங்க சொன்னீங்களே-ன்னு பாடல் சுட்டிகளைச் சரி பார்த்தேன்! ஒழுங்கா வேலை செய்யுதே! Is it blocked in your browser or something?

    ReplyDelete
  33. krs said...
    அல்லூரி காரு பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்! திருவல்லிக்கேணியில் வாழ்ந்தவர் தான்! அவர் பாடல்களை அனுப்பி வையுங்களேன்!:::))))

    அல்லூரி வேங்கடாத்ரி
    பாடிய 200 பாடல்களில்
    30 பாடல்களே இசையுடன் கிடைத்து உள்ளது.
    மற்ற பாடல் வரிகள்
    முழுதும் கிடைத்தவுடன் நிச்சயம் அனுப்புகிறேன்.
    கூடிய விரைவில்.....

    ReplyDelete
  34. ஹைய்யோ!!!!!

    இப்படி மனசைப் பிழிஞ்சு வைக்கணுமா?

    எல்லாப் புகழும் 'மது'வுக்கே. இதில் நான் 'அணில் ரோல்' செஞ்சேன்.

    ReplyDelete
  35. //துளசி கோபால் said...
    ஹைய்யோ!!!!!
    இப்படி மனசைப் பிழிஞ்சு வைக்கணுமா?//

    வாங்க டீச்சர்!
    உண்மை பிழியத் தானே செய்யும்? :(

    //எல்லாப் புகழும் 'மது'வுக்கே. இதில் நான் 'அணில் ரோல்' செஞ்சேன்//

    அணில் கும்ப்ளே ரோல் தானே? :)

    நான் இல்லாவிட்டாலும் அப்பப்போ பந்தல் கீழே வாங்க! பந்தல்-ல துளசீ வாசம் வீசணும்-ல்ல? ரங்கன் அண்ணாவை புதிரா புனிதமா வேணும்-ன்னா போடச் சொல்றேன்!

    ReplyDelete
  36. @ ராஜேஷ்
    உங்க பின்னூட்டம் ஒன்னு விட்டுப் போச்சு! அப்பவே சொல்லணும்-ன்னு நினைச்சேன்! அனுமன் பந்தலில் இருப்பது பற்றி!!

    இராமானுசர் உபன்னியாசம் செய்யும் போது, மக்கள் கூட்டம் அலை மோதுமாம்! இருந்தாலும், ஒவ்வொருவரும் தன் பக்கத்தில் இன்னொருவர் உட்காரம் அளவுக்கு இடம் விட்டு உட்காரச் சொல்லுவாராம்! எதுக்கு-ன்னு புரியாம பலரும் விழித்த போது...

    "இந்த உபன்னியாசத்திலே அடியேன் பாசுரங்களைத் தலைக்கட்டுங் கால்...
    மோட்சமும் வேண்டாது, அடியார் குழாத்தையே வேண்டி,
    இங்ஙனேயே எழுந்தருளி இருக்கும் சிறிய திருவடியான ஆஞ்சநேயன்...

    இந்தக் கோஷ்டியிலே அமர்ந்து, உங்கள் ஒவ்வொருவர் பக்கலிலும் வந்து அமர்ந்து, உங்கள் ஒவ்வொருவர் லயிப்பிலும், லயிப்பான், ஆகையாலே..

    அந்த சரணாகத பாகவதோத்தமனுக்கு அர்க்யாதி உபசாரங்களும் ஆசனமும் அளிக்கா விட்டாலும்,
    அமரும் அளவுக்காவது இடம் அளிப்போம்..என்னுமாறு கோஷ்டியிலே நிர்வாகம் செய்தார்!"

    ReplyDelete
  37. //மோட்சமும் வேண்டாது, அடியார் குழாத்தையே வேண்டி,
    இங்ஙனேயே எழுந்தருளி இருக்கும் சிறிய திருவடியான ஆஞ்சநேயன்... //

    காரேய் கருணை இராமானுசனின் நிர்வாகத் திறன் சிறப்புக்கு எத்தனை சான்றுகள்..

    ReplyDelete
  38. அண்ணா, மேல்கோட்டையில் மாதவிப்பந்தல் அமைச்சுட்டு வந்துருக்கோம்.. தலைமை அர்ச்சகரிடம் பந்தலைப் பற்றி சொல்லி நீங்களும், ரங்கன் அண்ணாவும் செய்து வரும் கைங்கர்யத்தை நானும் அக்காவும் எடுத்துச் சொன்னோம்.. இன்னொருவர் ஆகமங்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்.. அவருக்கும் பந்தல் முகவரி தந்து.. சில முக்கிய பதிவுகளையும் புக்மார்க் செய்து கொடுத்து விட்டு வந்தாச்சு..

    இனி செல்லுமிடமெல்லாம் பந்தல் போடலாம்னு இருக்கேன்..

    ReplyDelete
  39. மிக்க நன்றி.
    ராமானுஜரை முன் இருத்தி சொல்லும் விளக்கங்கள் ஈர்க்க வைக்கிறது.
    ராமானுஜருக்கே உள்ள தனி சிறப்பு.

    ReplyDelete
  40. //வாணிக்கு முன்பே ஒரு தேசிய விருது கிடைச்சிருந்தாலும்...சங்கராபரண தேசிய விருது மிகவும் பரவலாகப் பேசப்பட்டது...க்ளைமாக்ஸ் பாடலான = தொருகு நா இதுவன்ட்டி சேவா!

    //

    எந்தரே மகானுபாவலு அந்திரிக்கி வந்தனமு

    :)

    ReplyDelete
  41. //காரேய் கருணை இராமானுசனின் நிர்வாகத் திறன் சிறப்புக்கு எத்தனை சான்றுகள்..//

    :)
    உடையவர் சிறந்த நிர்வாகி, Management Guru தான்! :)
    ஆனால் "கோஷ்டியிலே நிர்வாகஞ் செய்தார்"-ன்னா "ஏற்படுத்தி வைத்தார்"-ன்னு பொருள்!

    எதுக்குச் சொல்றேன்னா, நாளைக்கு...ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லணும்-ன்னு கேஆரெஸ் நிர்வாகஞ் செய்தான்-ன்னு யாராச்சும் சொன்னா...
    உடனே "நிர்வாகத் திறன்"-ன்னு தப்பா முடிவு கட்டீற கூடாது-ல்ல? அதுக்குத் தேன் சொன்னேன்! :)

    ReplyDelete
  42. //Raghav said...
    அண்ணா, மேல்கோட்டையில் மாதவிப்பந்தல் அமைச்சுட்டு வந்துருக்கோம்..//

    அடப் பாவி! என்ன திடீர்-ன்னு இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடற?

    //அவருக்கும் பந்தல் முகவரி தந்து.. சில முக்கிய பதிவுகளையும் புக்மார்க் செய்து கொடுத்து விட்டு வந்தாச்சு..//

    போச்சு..."முக்கியமான" பதிவுகளா?:(

    போன முறை சென்ற போது, மிகவும் அன்பாகப் பேசி, ஊஞ்சல் எல்லாம் ஆட்டி விட்டாங்க...
    அடுத்த முறை போனா, வேற வரவேற்பு இருக்கும்-ன்னு சொல்றீயா? கர்ம யோகமே என்னய மட்டும் காப்பாத்து! :)

    //இனி செல்லுமிடமெல்லாம் பந்தல் போடலாம்னு இருக்கேன்..//

    இராகவா,(உன்னை இல்ல ராகவ்) :))
    அபயம், அபயம்!
    என்னைக் காப்பாற்று!!
    அடைக்கலங் கொள் என்னை நீயே!

    ReplyDelete
  43. //Sri Kamalakkanni Amman Temple said...
    மிக்க நன்றி. ராமானுஜரை முன் இருத்தி சொல்லும் விளக்கங்கள் ஈர்க்க வைக்கிறது//

    ஷைலஜா அக்கா, இங்கும் ஒரு மூலையில் அனுமன் இருப்பார்-ன்னு சொன்னதுக்கு, உங்கள் பதில் பின்னூட்டத்தை Delete செஞ்சீங்களா? அதான் இந்தப் பதிலும் கதையும் கிடைத்தது! :))

    ReplyDelete
  44. //எம்.எம்.அப்துல்லா said...
    எந்தரே மகானுபாவலு அந்திரிக்கி வந்தனமு//

    அப்துல்லா அண்ணே...தெலுங்கில் பிச்சி ஒதறறீங்க போல!
    அப்படியே அந்தப் பாட்டைப் பாடியும் காட்டுங்க :)

    ReplyDelete
  45. ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம் - நல்ல
    திவ்யமுகச் சந்திரனுக்கு சுப மங்களம்
    மாராபி ராமனுக்கு மனு பரந்தாமனுக்கு
    ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு..(ஸ்ரீ ராம)

    கொண்டல்மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
    கோசலைக் குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
    புண்டரீகத் தாளனுக்கு பூச்சக்ர வாளனுக்கு
    தண்டுளவத் தோளனுக்கு ஜானகி மணாளனுக்கு..(ஸ்ரீ ராம)

    ReplyDelete
  46. //ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம் - நல்ல
    திவ்யமுகச் சந்திரனுக்கு சுப மங்களம்//

    ராஜேஷ்...
    இதான் அல்லூரி வேங்கடாத்ரி அவர்களோட பஜன்-ஆ?
    இது அழகான நாட்டுப் பாடல் மாதிரி-ல்ல இருக்கு!
    எங்க ஆயா பாடும் பாட்டு ஞாபகம் வந்துரிச்சி!

    ஸ்ரீபார்த்த சாரதிக்கு ஜெய மங்களம்
    எங்கள் சிங்காரக் கண்ணனுக்கு சுப மங்களம்!

    மங்களம் மங்களம் மங்களம் - ஸ்ரீகிருஷ்ணனுக்கு
    அச்சுதா நந்தனுக்கு, ஆயர்குல வாசனுக்கு
    கோபிகாள் லோலனுக்கு, கோபால கிருஷ்ணனுக்கு
    மங்களம் மங்களம் மங்களம்-ன்னு கிராமத்தில் கும்மி களை கட்டும்! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP