Wednesday, May 26, 2010

பித்துக்குளி - ஜிரா - "நின்று" என்றால் என்ன?

முன்பு கண்ணன் பாட்டில், பித்துக்குளி ஹிட்ஸ்-இல், Fast Beat கண்ணன் பாட்டு ஒன்றைப் பார்த்தோம் அல்லவா!
அதே அலைவரிசையில் இன்று, பித்துக்குளியார் முத்துக் குளித்த முருகன் பாடல்களையும் காண்போம்! வாருங்கள்! ஆனா, அதுக்கும் முன்னாடி...

"‘நின்று’ என்றால் என்ன? சொல்லுங்க பார்ப்போம்!"

"‘நின்றா’?? அட போடா வென்று - ரவி"

"ஹா ஹா ஹா! சரி, நான் வென்றாவே இருந்துக்கிட்டு போறேன்!
ஆனா, சிந்திக்கிலேன், "நின்று" சேவிக்கிலேன்-ன்னு அருணகிரி பாடுறாரு!
மாயோனைப் பற்றி "நின்றேன்", வாயார என்று கொலோ வாழ்த்து நாளே?-ன்னு ஆழ்வார் பாசுரம்!

இப்படி எல்லாரும், "நின்று", "நின்று"-ன்னு சொல்லுறாங்களே!
ஏன், நின்னுக்கிட்டுத் தான் கும்பிடணுமா?
உட்கார்ந்து கும்புட்டா ஏலாதா?
படுத்துக்கிட்டு மனசால கும்பிட்டா ஆகாதா? - ஏன் இந்த "நின்று"???



இன்று மிகவும் இயைந்து வரும் தினம்! மூவரின் பிறந்த நாள்!
1. தமிழ்க் கடவுள் - என் காதல் முருகப் பெருமான்
2. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் (எ) நம்மாழ்வார்

இருவருமே வைகாசி விசாகத்தில் தோன்றியவர்கள் தான்!

இந்த ஆண்டோ, வைகாசி விசாகம், May-27 அன்று வருவதால்...
இவர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிக் கொள்ளும்...
3. தோழன் இராகவன் (எ) ஜிரா...


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முருகா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாறா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா!
:)
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பல்லாண்டு பல்லாண்டு!


மகரந்தம் என்றும், இனியது கேட்கின் என்றும்...முன்னொரு காலத்தில் பல பதிவுகள் வாரி வழங்கிய கைகளால்......

ஜிரா (எ) இராகவன் கைகளால்...

ரொம்ப நாள் கழிச்சி....இன்றைய முருகனருள் பதிவு எழுதப்படுகிறது! இதோ - இங்கிட்டு செல்லுங்கள்!




சிந்திக்கிலேன், "நின்று" சேவிக்கிலேன்! அன்பே, உன்னை "நின்று" சேவிக்கிலேன்! முருகாஆஆஆ!

4 comments:

  1. அனைத்து கடவுள்களின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. இறைவனுக்கும் இறையடியார்களுக்கும் 'இனிய' பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. //கிரி said...//

    எப்படி இருக்கீங்க கிரி? ரொம்ப நாளாச்சி!

    //அனைத்து கடவுள்களின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்//

    :)
    அது என்ன "அனைத்து" கடவுள்? கடவுள் ஒருவர் தான்! எத்தனை நடிகர்கள் சுவாரஸ்யமா நடிச்சாலும், இயக்குனர் ஒருவர் தான்! அவரு படத்துல தெரிய மாட்டாரு! கடந்து+உள்ள இருப்பாரு! :))

    ReplyDelete
  4. //குமரன் (Kumaran) said...
    இறைவனுக்கும் இறையடியார்களுக்கும் 'இனிய' பிறந்த நாள் வாழ்த்துகள்!//

    ’இனிய’ வாழ்த்தா?
    ’இனிய’ நன்றி குமரன்! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP