Monday, March 28, 2011

குமரன் பிறந்தநாள்!

May-28-2011
இன்று, இனிய, பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமரன் அண்ணா!

நல்ல கோட்பாட்டு உலகங்கள், மூன்றின் உள்ளும் தான்நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை, அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள், இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர், கொண்ட பெண்டிர் மக்களே!!

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர், வாழ்மின் வாழ்மின் என்று அருள்கொடுக்கும்
படிக்கேழ் இல்லாப் பெருமாளை, பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துள், திருவேங்கடத்துக்கு இவைபத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து, பெரிய வானுள் நிலாவுவரே!!!

12 comments:

  1. அருமை நண்பர் குமரன் அவர்கட்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

    குமரனின் பிறந்த நாளை எமக்கும் அறியத் தந்த கண்ணபிரான் ரவி சங்கருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ... i'm baffled by your grasp of prabhandhams.. anyhow, i'm new to poetry, prabhandhams and blogging.இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன் ..எல்லாவற்றையும்..your tamil unicode editor is very nice.. இப்படி தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதுவதுக்கு மன்னிக்கவும். இந்த தட்டச்சு பலகையை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

    ReplyDelete
  3. i read your whole tiruppavai commentary on a sunday...contemporary and very nice.. so many years i used net for useless things.. கண்ணபிரான் பற்றி தெரியாமல் இருந்தது " பழுதே போன நாட்கள் போலும்:" ;)

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அன்புகுழந்தைகள் இருவரின் தந்தையாரே
    கண்ணனை இஷ்டதெய்வமாக கொண்டவரே
    இன்பத் தமிழில் பல்வேறு சேதி சொல்பவரே
    பங்குனி உத்தரத்தில் பிறந்தவரே! - வாழ்த்துக்கள்

    அன்புள்ள அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. @கோவி அண்ணா, வெற்றி - எப்படி இருக்கீங்க?
    @சிவா - வாழ்த்துக்கு நன்றி!

    @ஆதித்ய சரவணா - உங்க பேரு நல்லா இருக்குங்க!
    இது பிறந்தநாள் பதிவுங்க! வாழ்த்து சொல்லாம வேற என்னமோ என்னைய பத்திச் சொல்றீங்களே! :)

    பழுதே போயின நாட்களா? அது என்னுடைய நாட்கள் தான்!
    இப்பல்லாம் அதிகம் எழுதுவதில்லை!

    பதிவில் சுட்டி கொடுத்துள்ளேன் பாருங்க! குமரன் அண்ணாவின் கூடல் வலைப்பூ-க்கு செல்லுங்கள்! அதுவே ஆழ்வார் பொழில்!

    வாச மா மலர் நாறு வார் பொழில்
    சூழ் தரும் பதிவுக்கெல்லாம்
    தேச மாய்த் திக ழும் மலை திருக்
    கூடல் அடை நெஞ்சமே!

    ReplyDelete
  7. நன்றி கோவி.கண்ணன்!

    நன்றி வெற்றி! இந்த மாதிரி வாழ்த்துப் பதிவுகளுக்கு மட்டும் வர்றீங்க. ரொம்ப வேலைன்னு நினைக்கிறேன். :-)

    நன்றி சிவமுருகன்.

    ReplyDelete
  8. இடுகையிட்டு வாழ்த்தியதற்கு மீண்டும் நன்றி இரவி!

    குழந்தை முருகனும் குழந்தை கண்ணனும் அழகாக இருக்கிறார்கள். குழந்தை முருகன் இப்போது என் மடிக்கணியின் முகப்பில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறான். :-)

    பாசுரக்கனிகளுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  9. இனிய ரவி,

    தங்களுடைய விளக்கம மிக அருமை

    ReplyDelete
  10. குமரனுக்கு தாமதமான, ஆனால் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  11. நன்றி கவிக்கா. :-)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP