Sunday, April 10, 2011

Election Pal Bill: கலைஞர் சாகும் வரை உண்ணாவிரதம்!

புதுச்சேரி: வரும் காலத்திலாவது, தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் அதிகாரம், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்கும் Election Pal Bill-ஐ நிறைவேற்றக் கோரி, தமிழக முதல்வர் கலைஞர் திடீரென்று, இன்று உண்ணாவிரதம் இருக்கத் துவங்கியுள்ளார்!
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்க, இந்த உண்ணாவிரதம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!  அன்னா ஹசாரேவுக்கு அடுத்து இன்னொரு உண்ணாவிரதமா என்று மத்திய அரசு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது!
புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர் பேசியதாவது:
"தேர்தல் கமிஷன் எங்களைக் கண்காணித்து வருகிறது. தேர்தல் கமிஷன் கண்காணிக்கக் கூடாது என்றோ, அதை எதிர்த்தோ நான் ஏதும் கூற மாட்டேன். ஆனால் விழுப்புரத்தில் கூட்டம் முடிந்த பின், அரசு விருந்தினர் மாளிகையிலோ அல்லது அரசுக்கு சொந்தமான மண்டபத்திலோ தங்குவதற்குக் கூட எனக்கு அனுமதி இல்லை. 
அட, எங்கு தான் தங்கினேன் என்று நீங்கள் கேட்பீர்கள்...விழுப்புரத்தில் தி.மு.க. அலுவலகத்து ஒண்டி அறையில் தங்கிவிட்டுப் புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன்.

இது போன்ற ஒரு அவல நிலை எனக்குத் தேவையா? ஈழத் தமிழர்கள் உட்பட்ட ஆறரை கோடி தமிழ் மக்களின் தலைமைக்கு இப்படி ஒரு அவமானமா? 
கேவலம், ஒரு அலுவலக அறையில் தங்கிப் படுத்து விட்டு வரும் அளவுக்கா நான் இருக்கின்றேன்?
என் எழுபதாண்டு காலப் பொது வாழ்க்கையில், ஏன்...,எமெர்ஜன்சியின் போது கூட, இப்படி ஒரு இழிவை நான் சந்தித்தது இல்லை!

மக்கள் பிரதிநிதி இந்தக் கருணாநிதி கேட்கிறேன்: தேர்தல் நடக்கும் போது ஒரு மாநிலத்துக்கு முதலமைச்சரே தேவை இல்லையா? தேர்தல் கமிஷனுக்கு ஆகும் செலவை நாங்கள் தானே கொடுக்கிறோம்? அந்த "நன்றி" கூடவா அவர்களுக்கு இல்லை?
தேர்தல் கமிஷனின் வரம்பு மீறிய செயல்களை எதிர்த்து, நானும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்! அவர்களின் அதிகாரங்களை வரையறுக்கும் Election Pal Bill ஐ நிறைவேற்றிக் கோரி இந்த உண்ணாவிரதம்!

அன்று இராவணன் தனக்காகவா, தன் ஆசைக்காகவா போரிட்டான்? இனம் வாழ அல்லவோ இகல் வேந்தன் களம் இயற்றினான்?
அந்தக் கோமகனின் அடியொற்றி, படியொற்றி, குடியொற்றி, கோலொற்றி, மிடியற்று, மடியற்று,  பந்தபாசம் அற்றுஅற்று, ஆண்டு வருபவன் அல்லவா இந்தக் கருணாநிதி?

உடன்பிறப்பே, இனமே அழிந்தாலும் பரவாயில்லை! ஆனால் இனமானம் மிகவும் முக்கியம்!
இனத்துக்கான உண்ணாவிரதத்தை விட, இன மானத்துக்கான உண்ணாவிரதம் புனிதமானது! உடன்பிறப்பே வா, உடனே உண்ணாவிரதம் இருக்க வா!
* அன்னா ஹசாரே தலைமையில், இந்தியாவை ஊழலின் பிடியில் இருந்து மீட்டாகி விட்டது!
* இந்த அண்ணாவின் தம்பி தலைமையில், இந்தியாவை, கமிஷன் என்னும் அதிகாரப் பிடியில் இருந்து மீட்டெடுப்போம்!"


இவ்வாறு அறிக்கையில் கூறிவிட்டு, தமிழக முதல்வர், திடீரென்று, அண்ணா சமாதியில் இன்று உண்ணாவிரதம் இருக்கத் துவங்கி விட்டார்!
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்க, இந்த உண்ணாவிரதம் மிகுந்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது!

இந்திய/தமிழக மீடியாக்களின் ஒட்டுமொத்த கவனமும் உண்ணாவிரதம் மீது திரும்பியுள்ளதால், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது!
எங்கே அனுதாப அலை வீசிவிடுமோ என்று அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் அச்சம் கொண்டுள்ளனர்!

மாநில சுயாட்சிக்கு உள்ள ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கருணாநிதி என்று பல அண்டை மாநில முதல்வர்களும் கலைஞரைப் புகழ்ந்து உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்!
லாலு பிரசாத் யாதவ், மாயாவதி, எடியூரப்பா, சுரேஷ் கல்மாடி என்று கட்சிக்கு அப்பாற்பட்டு, அனைத்து தலைவர்களும் முதல்வர் கலைஞருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்!

உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு, சோனியாவின் உத்தரவின் பேரில், குலாம் நபி ஆசாத்தின்  துணைநிலைச் செயலதிகாரி ஒருவர், இந்தப் பிரச்சனையில் நேரடித் தொடர்பு கொண்டு, முதல்வருக்குத் தந்தி கொடுத்துள்ளார்!

அண்ணா சமாதியில் இலவச ஏர் கூலர்கள், இலவச ஃபேன்கள் தருவிக்கப்பட்டுள்ளன! தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் ஆகியோரும், "இந்த வயதில் உங்களுக்கு உண்ணாவிரதம் தேவையா?" என்று கலங்கிய நிலையில் அருகில் உள்ளனர்!  ஒருவர் ஆலங்குடி நவகிரகக் கோயிலுக்கு ஆயிரம் மஞ்சள் துண்டும், இன்னொருவர் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு ஆயிரம் குடம் பாலாபிஷேகமும் நேர்ந்து கொண்டுள்ளனர்!

பிரச்சாரத்தில் இருக்கும் துணை முதல்வர் ஸ்டாலின் விஷயம் கேள்விப்பட்டு சென்னைக்கு விரைந்துள்ளார்!
வங்கிப் பரிவர்த்தனை சம்பந்தமான ஒரு முக்கியமான ஆய்வில் இருக்கும் மத்திய அமைச்சர் அழகிரியும் சென்னைக்கு விரைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டங்கள் தெரிவிக்கின்றன!

முதல்வரின் உடல்நலம் கருதி, உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும், Election Pal சட்டக் குழுவிலே, உதயநிதி மற்றும் துரை தயாநிதி இருவரையுமே கமிட்டி அங்கத்தினர்களாகச் சேர்க்கவும் தயாராக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார்!

அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் திட்டத்தை ஸ்ரீமான்.கலைஞர் அம்போ என்று கைவிட்டாலும், அதை நம்பிச் சேர்ந்து, இன்று வாழ்க்கையைத் தொலைத்து  நிற்கும் முன்னூறு குடும்பங்களும், முதல்வர் வெற்றியடைய, சிறப்பு அர்ச்சனைகளை, ஆலய வெளியில் இருந்தே செய்து வருகிறார்கள்!
செத்துப் பிழைத்த தமிழக மீனவர்கள் பலரும், பாச மிகுதியால் மீன் குழம்பு வைத்து, இதை "ஜூஸ்" என்று கருதியாவது முதல்வர் குடிக்க வேண்டும் என்று கெஞ்சி வருகிறார்கள்!

முதல்வரின் உடல்நிலை கருதி, உயர் ரக ஆம்புலன்ஸ் ஒன்று உடனடியாகத் தருவிக்கப்பட்டுள்ளது!
ஆனால் வண்டி புறப்படும் முன்னர், சில தேர்தல் கமிஷன் அதிகாரிகள், அதையும் நிறுத்திச் சோதனை செய்துள்ளனர்!

இது இன்னும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது!
"ஆம்புலன்ஸைக் கூட செக் பண்ணறீங்களே? எங்களுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் அதற்கு கமிஷனே முழுப் பொறுப்பு" என்று கனிமொழி எம்.பி. அவர்கள் கண்ணீர் வடித்துள்ளார்! இது போன்ற பிரச்சனைக்கெல்லாம் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பாரா என்ற தார்மீகக் கேள்வியும் எழுப்பியுள்ளார்!

முதல்வரின் பேரன் "ஆதித்யா" (எ) செந்தமிழ்ச் செல்வன், தன் பிஞ்சுக் கைகளால், "தாத்தா பிஸ்கோத்து", "தாத்தா பிஸ்கோத்து" என்று கெஞ்சியது, காண்பவர் நெஞ்சத்தை உருக்குவதாக இருந்தது!

மேலும் செய்திகள்,  விளம்பர இடைவேளைக்குப் பிறகு....


@ All makkaLs...
கலைஞர், அரசு விடுதியில் தங்க முடியாமல், ஆபீஸ் ரூமில் படுத்து விட்டு வந்தேன் என்று அங்கலாய்த்து, தேர்தல் ஆணையத்தைத் திட்டியது மட்டுமே உண்மையான செய்தி! பிற கற்பனையே! ஆனால் உணர்வுகள் உண்மையே!

43 comments:

 1. தலைவருக்கு என்னவாயிற்று

  சீக்கிரம் செய்தியைப் போடுங்க தலைவரே

  பயமாய் இருக்கிறது தமிழகம் பற்றிக் கொண்டு எரிய‌ப் போகிற‌து

  வ‌த‌ந்தி வேண்டாம் அப்பா

  உண்மை தானா

  விள‌க்கமாக‌
  விரிவாக‌
  போடுங்க அப்பா


  அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

  ReplyDelete
 2. ithellam politics maamu? 2 hours fasting irunthu pudiya saathanayai padaitha dubakoor muthalvarthaan intha karunaanithi. ithukellam feela pannaatheenga.
  Anna Hazaarey pothu nalathukku unna viratham irunthaar
  karunaanithi suyanalathirukku unna viratham irukkiraar

  ReplyDelete
 3. thambii..
  hmm..otha vaanga pora..
  naadu vittu naadu ponathaala thulir vittu poyiducha??
  tamil
  thattachu inga velai seyyalai..
  power cut..
  thamil naattula thaana irukken..
  ups katharathukku munnadi enthirichiduren...

  ReplyDelete
 4. நான் கூட உண்மையென்று என்டிடிவி பார்த்தேன்..

  ஆனாலும்....சொல்லமுடியாது..தமிழீனத் தலைவர் is capable of this too..

  ReplyDelete
 5. அன்பின் கேயாரெஸ் - பயந்து விட்டேன் - 24 மணி நேரமும் தொலைக்காட்சி பார்க்கிறேன். எங்கே தவற விட்டேன். மதுரையில் இருக்கிறேன். எப்படி நமக்குத் தெரியாமல் போகுமென நினைத்தேன். பிறகு தெளிந்தேன். வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டின் எதிரிகள்.

  ReplyDelete
 6. @ All makkaLs...
  கலைஞர், அரசு விடுதியில் தங்க முடியாமல், ஆபீஸ் ரூமில் படுத்து விட்டு வந்தேன் என்று அங்கலாய்த்து, தேர்தல் ஆணையத்தைத் திட்டியது மட்டுமே உண்மையான செய்தி!
  பிற கற்பனையே!

  @சீனா ஐயா, அறிவன், திகழ்
  இது டகால்ட்டி பதிவு என்பது படித்தவுடனேயே தெரிந்து விடுமே! "தாத்தா பிஸ்கோத்து" ஒன்னு போதாதா?:)

  //வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டின் எதிரிகள்//
  :)))
  கீழே லேபில்களில், "Imaginary News" என்றும் போட்டிருக்கேன் பாருங்க!
  கலைஞரைப் பற்றிய வதந்தி, மகத்தான தமிழ்ப் பணி! நாட்டுப் பணி!

  ReplyDelete
 7. ஈனத்தனம் எவ்வளவு இருந்தால், இன்னமும் தமிழின் பேரைச் சொல்லி,HYPOCRITE-தனம் பண்ண முடியும்?

  ஒரு காலத்தில் திமுக நிலையெடுத்த எங்களைப் போன்றோரின் நிலையே இப்படியென்றால், நேரடியாகப் பட்டவர்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை உணர முடிகிறது!

  தமிழின் எதிரிகளுக்குக் கூட மன்னிப்பு உண்டு! ஆனால் தமிழ்த் துரோகிகளுக்கு மன்னிப்பே இல்லை!

  இப்படி ஈனத்தனமாகப் பேசிப்பேசி்யே, வளரும் தலைமுறையிடம் தமிழுக்கு கெட்ட பெயர் வாங்கித் தந்தவர்களில் முதன்மையானவர் கலைஞர்!

  நவீன திருதிராட்டிரன்! துரியோதனின் அழிவுக்கு மூல காரணம்! அவர் காட்டுக்குச் செல்லும் நேரம் வந்து விட்டது!

  ஒருவர் காட்டுக்குச் செல்வதாலேயே நாட்டுக்குப் பெரிய நன்மை வந்து விடாது!
  ஆனால் அந்த ஒருவர் காட்டுக்குச் செல்லாவிட்டால், நாட்டுக்கே பெருங் கேடு!

  ஊழல் ராணிகளின் ஊழல் கூடப் பெரிய விஷயம் அல்ல! அதை விடக் கொடுமை, மக்களையும் ஊழல்வாதிகள் ஆக்குவது!
  "அதான் ஓட்டு போடறேன்-ல்ல, பணம் கொடுத்தால் என்னவாம்?" என்ற நச்சு மனப்பான்மையைத் தூவி வளர்த்து, அதற்கும் தமிழ்ப் பரணி பாடும் கயவர்கள், ஒரு தலைமுறைக்கே அவமானம்!
  இவர்களால் தமிழ் என்ற உணர்வே நீர்த்துப் போய்விடும்! தமிழுணர்வு என்ற சொல்லே கேலிச் சொல்லாகப் போய் விடும்! இவர்கள் கட்டாயம் ஒழிய வேண்டும்!

  ReplyDelete
 8. >>தேர்தல் கமிஷனுக்கு ஆகும் செலவை நாங்கள் தானே கொடுக்கிறோம்? அந்த "நன்றி" கூடவா அவர்களுக்கு இல்லை?<<

  Who is/are "nAngaL". The DMK? DMK party funds the Election Commission? The taxpayers fund the Election Commission and the Election Commission wants to be impartial. Hence the controls. If the CM uses government facilities while canvassing for his party candidates it gives an undue advantage to him and the opposition will cry foul. Hence the EC placed the restriction. Doesn't the DMK have funds which can put up the CM in a 5-star hotel? Where are the wealthy party cadres who can put up the CM in their bungalows ovrnight?

  ReplyDelete
 9. @nAraDa
  சேது சார், லாஜிக் எல்லாம் ரொம்ப பேசறீங்க? கலைஞர் அதையெல்லாம் என்னிக்குப் பார்த்து இருக்காரு? நீங்க எத்தனை தரவு கொடுத்தாலும், அவர் அவர் தான்! :))

  ReplyDelete
 10. @சரவணன் அண்ணா
  //thambii..hmm..otha vaanga pora..naadu vittu naadu ponathaala thulir vittu poyiducha??//

  :)
  நாடு எல்லாம் விட்டுப் போகலை! மனம் பெங்களூரில் தான் இருக்கு!
  எங்கே இருந்தால் என்ன? அங்கே இருந்தாலும் இதையே தான் எழுதியிருப்பேன்! இதுக்கெல்லாம் அஞ்சுறவன்/கூச்சப்படுறவன் நான் இல்லை! கல்லூரி தி.க. வாசம் கொடுத்த தைரியம் இன்னும் இருக்கு! :) நாத்திகன் ஆத்திகன் ஆன கதை - பழைய பதிவைப் பார்த்தீங்க-ன்னா தெரியும்! :)

  ReplyDelete
 11. 'சாகும்வரை' ங்கிற தலைப்பைப் பார்த்துவிட்டு பிரியாணி குஞ்சுகள் பொங்கிடப் போறாங்க. கருணாநிதிக்கு அதுவராதுன்னு தான் நம்புறாங்க சாமியோவ்

  ReplyDelete
 12. @கோவி அண்ணா
  :)
  ச்சே! வேணாம்! நூறு ஆயுசு இருக்கட்டும்! ஆனா நம்மைப் பிடிக்காமல்/பீடிக்காமல் இருந்தாலே போதும்!

  கண்ணன் அசுவத்தாமனைச் சூளுரைப்பான்! "கருவில் உள்ள குழந்தையிடம் கூடப் பகைமை பாராட்டி அழிக்க நினைத்த நீ என்றும் சிரஞ்சீவியாக இரு, ஆனால் அவதிகளைப் பார்த்துக் கொண்டே சிரஞ்சீவியாக இரு" என்று சொல்லுவான்! ஏன் அப்படிக் கண்ணன் சொன்னான் என்று எனக்கு அப்போது புரியவில்லை! இப்போது கலைஞரைப் பார்க்கும் போது, நன்றாகப் புரிகிறது!
  சகோதர யுத்தம், மலை போல் அடித்துச் சேர்த்ததெல்லாம் மடுவில் கரைவது, குடும்ப ஆதிக்கம் குன்றி பேரன்-பேத்திகள் புலம்புவது, தங்கள் தாத்தாவையே ஏசுவது, தமிழக-ஈழ மக்கள் உண்மையான தமிழ் உணர்வோடு நன்றாக வாழ்வது - இதையெல்லாம் அவர் பார்க்க வேண்டும்! தமிழால் வாழ்ந்த தறுதலைகள், தமிழுக்காக வாழ்வதென்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்!

  ReplyDelete
 13. நல்ல கற்பனை!
  இப்ப உள்ள நம்ம இந்தியாவில் அண்ணா ஹஜாரே மட்டும் தான் உண்ணாவிரதம் இருந்திரிகிறார்.
  மத்தவங்க எல்லாம் காலை காப்பிக்கும் மதிய உணவுக்கும் உள்ள breakஐ தான் பெரிய பந்தலெல்லாம் போட்டு கூட்டம் எல்லாம் கூட்டி "உண்ணாவிரதம்"-ன்னு சொல்றாங்க! :)

  ReplyDelete
 14. Today situation:-
  No body Great in politics

  ReplyDelete
 15. கருனாநிதி உண்மையிலேயே ஒரு மிகச்சிறந்த நடிகர்தான் நீங்கள் சொன்னது போல் செய்தாலும் செய்வார்.

  ReplyDelete
 16. காலைச்சாப்பாட்டுக்கும் மதியச்சாப்பாட்டுக்கும் இடையில், மூண்று மணி நேரம் உன்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தை கொண்டு வந்து, யுத்ததை நிறுத்தி தமிழரை காத்தவர் அல்லவா, இது வெல்லாம் அவருக்கு சர்வசாதாரணம்.

  ReplyDelete
 17. Emotions apart, lets see whether karunanithi is right in his complaint.

  A CM goes on a election campaign. What do the rules say ?

  Can he be allowed to use the government guest house at night for rest only?

  I think he can, provided he does not use it for any other purpose

  In case he cant, then it will mean that he cant use anything connected with the post: as for e.g during the whole duration of his campaign, he should not enter Secretariat, his room and attend to all government work, coz he will have to use some facilities here and there, for e.g the VIP toilets, lift, and tight security on his way.

  So, Election Commission should have applied common sense to allow him to use the govt guest house under the strict proviso it should be for rest only, not for any confabulations and none of his party workers or colleagues should be seen around.

  Did Manmohan Singh pay for his Kovai air travel from Delhi to which he came to campaign only, from party funds? Was he denied security, and did the EC ask him to stay in private lodgings only from out of his party funds?

  Not at all.

  Karunanithi should also be allowed the same privileges due to him as CM under the condition such privileges should not be abused.

  What do you think ?

  ReplyDelete
 18. Another misconception generally found in all anti karunanithi blog writings, including yours loudly, that SL Tamil issue and the elections get linked.

  Karnunanithi runs a party as its leader and supremo. Elections need to be won by them.

  The issue of SL Tamils was given up by all - all parties, except Vaiko. Because it did not cut any ground with the electorate as seen in the last elections. For SL Tamil issue, even at the last days of Tamil massacres, there was no overwhelming support from TN electorate. In 1983, Tamils stood together in their support. Not any more. To search the reasons is out of relevance here.

  What is relevant is that the way we have to see Karunanithi action. If he calls himself as the unacknowledged leader of Tamils, he means only the TN Tamils. But you take him as a claimant of leadership of all Tamils.

  Pragmatism and the people of TN only are the considerations - not only in the mind of Karunanithi, but also in the minds of every leader here, including Vaiko.

  As an individual, I may have my own opinion on SL Tamil issue. But as a third party, viewing the TN scene, I see it differently as explained above.

  But you see it interlinked. Need not be, Ravishankar. Emotions and politics are different. Politics may issue the emotions of people, for a reasoned cool thinking. Thus, deep down, politics and emotions are enemies.

  ReplyDelete
 19. EC should have allowed the Guest House for Muka to rest; and withdraw that privilege only if it comes to know that the GH privilege was misused by him, like discussions of election strategy or campaign with his cabinet colleagues or party cadres.

  By denying the point blank and allowing to PM, EC played false; and its actions are suspect.

  ReplyDelete
 20. Last sentence should be corrected to read:

  By denying the privilege to Muka straightaway but allowing it to PM, EC played false. Its act has thus become suspect.

  ReplyDelete
 21. கீழே லேபில்களில், "Imaginary News" என்றும் போட்டிருக்கேன் பாருங்க!
  கலைஞரைப் பற்றிய வதந்தி, மகத்தான தமிழ்ப் பணி! நாட்டுப் பணி!


  If you want to be a neutral person or play the game fair, you ought to come up with such deriding imaginary posts on all leaders in the campaign.

  Muka have the nattuppani and thamizppani game of cheat. But others may have their own styles of games of cheat.

  Where are blogpost from out of your fertile imagination, Ravishankar?

  Your claim that you were an ardent fan of the DMK or DK, whatever that mean, policies in the past, but turned your face against all now - are out of context here. Do you want to add credit points thus?

  ReplyDelete
 22. கற்பனை என்றும் தெரியும் நண்பரே

  உணர்வு மீறி வார்த்தை எல்லை மீறக் கூடாது என்பதற்காகவே
  அப்படி எழுதினேன்.

  இடுகை மிக்க நன்றி நண்பரே

  த..தலைகளைப் பற்றிய உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 23. @கண்ணன் நாயர், திவா சார், அனந்த லோகநாதன் - சிரிப்புக்கு நன்றி

  @கீதாம்மா - பாருங்க, இவிங்க எல்லாம் சிரிக்கறாங்க! நீங்க grrrங்கறீங்க! :)

  @நல்லவன் - கலைஞருக்கு பல நாட்களாக மனசாட்சியின் காது கேட்பதில்லை!

  @KK - காலை டிபனுக்கும் மதியம் லஞ்சுக்கும் நடுவில் விரதம் இருப்பது எம்புட்டு கஷ்டம் தெரியுமா? :)

  @ராஜேஷ் - இன்றைய அரசியலில் யாருமே சரியில்லை தான்! ஆனால் கலைஞர் மொத்தமாய்ச் சரியில்லை! விஷக் கிருமிகளா? புழுக்களா? என்றால் முதல் ஒழிப்பு எதைச் செய்வோம்? :)

  @பிருந்தன் - கலைஞர் நடிகரா? நான் வசனகர்த்தா-ன்னுல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன்? :)
  ஓ இப்ப புரியுது, தயாளு அம்மாள் அல்லவோ வசனகர்த்தா? அவங்க வசனம் எழுதித் தானே கலைஞர் டிவி பங்குகளைச் சம்பாதித்தார்கள்? கலைஞருக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லையல்லவா? :)

  @திகழ் - ஹிஹி! அடியேன் எங்காவது வார்த்தை மீறி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்!

  ReplyDelete
 24. @அமலன்
  நியூயார்க் நகர மேயர் - இரட்டைக் கோபுரத் தாக்குதலைச் சமாளித்த வீரர் - ரூடி கூலியானி! அவருக்குப் பாதுகாப்பு கருதி, ஊருக்குள்ளேயே ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி உண்டு!
  அலுவலக வேலைப் பளுவினால், தன் மகள் பிறந்தநாள் பார்ட்டிக்குச் செல்ல நேரமாகி விட்டது! பறந்தார் ஹெலிகாப்டரில்! NYPD Officer ஒருவர் பின்னாலேயே பறந்து வந்து டிக்கெட் கொடுத்தார்! ஓவர் டைம் மக்கள் பணி செய்தாலும், தற்காரியத்துக்குப் பொதுவசதி கூடாது என்பது மரபு! கூலியானி தவறு என்று தெரிந்தும் அவசரத்துக்காகச் செய்ததாகச் சொல்லி, பணிந்து, Fine-உம் கட்டினார்!

  தேர்தல் நேரத்தில், எந்த முதல்வராயினும்....acting chief minister மட்டுமே! He or She is just a caretaker! Manmohan Singh is not a caretaker! This does not apply in a bye election, where a CM goes to campaign! Only during a transition, these rules apply! Bcoz, during a transition, there is only a little office-bearing and large self/personal campaign!

  சரி...எதுவாயினும், ஜெயலலிதா இதை விட துஷ்பிரயோகம் செய்வார் என்பதெல்லாம் எனக்கும் தெரியும்! ஆனால் இங்கே பேசுபொருள் அதுவல்ல! சில ஆயிரம் ரூபாய் தான் ஒரு ரூமுக்கு! ஆனால் அதைக் கூட பேசித் திரியும் அல்பத்தனம்! இந்தப் பேச்சை ஈழத்து உயிர்கள் போகும் போது, கூவிக் கொண்டே இருந்ததா? ஆனால் ஆயிரம் ரூபாய் ரூமுக்கு, மேடை தோறும் கூவிக் கொண்டே இருக்கு? ....த்தூ

  ஒரு குழந்தை கூடத் தன் பொம்மையை இன்னொரு குழந்தைக்கு எப்போதாவது கொடுக்கும்! அந்த முதிர்ச்சி கூடவா ஒரு தற்காலிக முதல்வருக்கு இல்லை?

  அல்பத்தனம் பிடித்த மனசு இப்படித் தான் கூவிக் கொண்டிருக்கும்! எதற்கு கூவணுமோ அதற்கு கூவாது! எதெற்கெல்லாம் கூவக் கூடாதோ, அதற்குத் தான் ஓவாது கூவும்!

  அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
  மக்கட்பண்பு இல்லா தவர்.

  கலைஞர் உரை:
  அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார் :)))

  ReplyDelete
 25. //If you want to be a neutral person or play the game fair, you ought to come up with such deriding imaginary posts on all leaders in the campaign.//
  //Where are blogpost from out of your fertile imagination, Ravishankar?//

  I AM NOT A "NEUTRAL" PERSON!

  தமிழின் பேரைச் சொல்லித் தூண்டி...
  போராட்டங்களில் தமிழ் மாணவர்களைப் பலி கொடுத்து...
  அந்தப் பலிபீடம் மேல் ஆட்சி பீடம் கண்ட ஒரு பீடாதிபதி!

  அந்தக் குடும்பங்களின் துயரத்தில் குளுகுளு வாழ்வு நடாத்தி,
  சங்கத் தமிழையும், திருக்குறளையும், சிலப்பதிகாரத்தையும் தன் வீட்டு வெங்காயம் நறுக்கப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பற்றி மட்டுமே என் சீற்றம்!

  ஆரிய மாயை என்று வித்தை ஊரெல்லாம் நட்டு...
  தமிழ்க் கடவுள் முருகனை இழிவு படுத்தி...
  தான் மட்டும் அய்யங்காருடன் கூடிக் குலாவிக் கள்ளத்தனம் நடத்தும் கேடர்களைப் பற்றி மட்டுமே என் சீற்றம்!

  //Your claim that you were an ardent fan of the DMK or DK, whatever that mean, policies in the past, but turned your face against all now - are out of context here//

  Thank You!

  ReplyDelete
 26. தேர்தல் நேரத்தில், எந்த முதல்வராயினும்....acting chief minister மட்டுமே! He or She is just a caretaker! Manmohan Singh is not a caretaker! This does not apply in a bye election, where a CM goes to campaign! Only during a transition, these rules apply! Bcoz, during a transition, there is only a little office-bearing and large self/personal campaign!

  Ravi

  Hav u checked up facts ?

  Dont compare US democracy with ours. They need different scales.

  Karunanithi is not an acting CM. You r wrong.

  He is a full fledged CM right now.

  Till the end of election process, which will be announced thro a gazette notification by the EC, not immediately we come know who won on May 13, the assembly is alive and Muka is the full fledged CM.

  When the election process is over, the President, not the EC, dissolves the Assembly; but the Governor, makes a ritual request to the incumbent or outgoing CM with his Cabinet to cntinue till the new Government takes over but
  with the condition that the outgoing CM with his cabinet should not take any fresh initiative or decision. He can only maintain the show. In this interregnum only, Muka can be called Caretaker CM.

  Right now, he is CM. Denying him his privileges as CM under the pretext that he may misuse them for his electoral victory, is hanging a person before the trial. I mean, EC can withdraw the privileges only when it comes to the decision beyond reasonable doubt that the Guest House was misused.

  EC has acted partially in his case.

  ReplyDelete
 27. I have not seen ur reaction in andaal thread yet. Will respond today, Sir.

  On what u have written here in response to mine, I am yet to write more; but after some time. Because the comp is not free for me.

  ReplyDelete
 28. ஆரிய மாயை என்று வித்தை ஊரெல்லாம் நட்டு...
  தமிழ்க் கடவுள் முருகனை இழிவு படுத்தி...
  தான் மட்டும் அய்யங்காருடன் கூடிக் குலாவிக் கள்ளத்தனம் நடத்தும் கேடர்களைப் பற்றி மட்டுமே என் சீற்றம்!

  "

  Why dont u write directly ? Persons like me, believe me, dont know such personal details of Muka. Which Iyengaar is being referred to here? Interesting to know. When you go no holds barred in your diatribe, y not reveal this also?

  I referred to the apathy of TN Tamils in general and karnanithi proclaiming himself as their leader, not the leader of SL Tamils. No comments from you.

  ReplyDelete
 29. I AM NOT A "NEUTRAL" PERSON!

  If not, in what way, one should take you, Sir?

  Why leaving out other leaders when they are too in the same boat of political and social sins ?

  Leaders in TN are of a kind. They differ only in degree. Why to single out one is my qn,

  Muka, JJ, Vaiko, Ramdass, Vkanth and even communist leaders - are all corrupt. Why this seetram only against Muka? May be, he is more sinful?

  ReplyDelete
 30. சரி...எதுவாயினும், ஜெயலலிதா இதை விட துஷ்பிரயோகம் செய்வார் என்பதெல்லாம் எனக்கும் தெரியும்! ஆனால் இங்கே பேசுபொருள் அதுவல்ல! சில ஆயிரம் ரூபாய் தான் ஒரு ரூமுக்கு!

  athuvee ena peesuporulum aakum.

  Not a few thousands matter it is, Sir. It is not insult to Muka. If it is an insult to Muka only, I, too, wont mind it.

  On the other hand, it is an insult to the chair of CM.

  Karnanithi is saying that only. He says I wouldnt have minded this insult. But I am still CM and the insult to my post only !

  There is some evasion on your part.

  ReplyDelete
 31. He said in Vizhuppuaram:

  I am habitatued to share a stone as my pillow and a bare floor as my mat. I have lived in all sorts of place; and this sharing my sleeping place in a dungeon wont upset me at all.

  But EC did not recognise me as a CM."

  Do you agree with that comment?

  ReplyDelete
 32. ஆரிய மாயை என்று வித்தை ஊரெல்லாம் நட்டு

  aaryan maayai and dravidaa maayai are both facts.

  Why to leave one and harp on the other?

  ReplyDelete
 33. அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார் :)))


  Ravi,

  It is killing a butterfly under a giant wheel.

  Reminding EC of their impetusity riding roughshod over etiquette is not a lack of makkal panbu. You r kidding.

  U r yoking two different things, Sir.

  ReplyDelete
 34. Ok enough on this. Thank you. I will come back after a few days.

  ReplyDelete
 35. //Ravi
  Hav u checked up facts ?
  Karunanithi is not an acting CM. You r wrong. He is a full fledged CM right now//

  Have I checked up facts?
  Here we go!
  http://eci.nic.in/eci_main/Model_Code_Conduct.pdf
  http://eci.nic.in/eci_main/faq/faq_mcc.pdf

  There was even a proposal that during an election, a state shall be brought under President's rule!
  Acting CM or Full fledged CM - forget the terminology; The CM is stripped of his so many powers, when the Model Code of Conduct comes into effect! Thatz it!

  Can we see some samples, Mr.Amalan?

  Q. Whether Govt. transport can be used for electioneering work?
  Ans. No
  No transport including official air-crafts, vehicles etc. shall be
  used for furtherance of the interest of any party or a candidate.

  Q. Whether Govt. can make transfers and postings of officials who are related to election work?
  Ans. There shall be a total ban on the transfer and posting of all
  officers/officials directly or indirectly connected with the conduct
  of the election.

  Q. Whether Ministers or any other political functionaries can
  use pilot car with beacon lights affixed with siren?
  Ans. No
  Minister or any other political functionary is not allowed during
  election period, to use pilot car or car with beacon lights of any
  colour or car affixed with sirens of any kind whether on private or
  official visit, even if the State administration has granted him a
  security cover.

  Q. Whether Governor/Chief Minister/ Ministers can participate and address the Convocation function of University or Institute?
  Ans. Governor may participate and address the Convocation. Chief
  Minister or Ministers may be advised not to participate and address the Convocation.

  Q. Whether “Iftar Party” or any other similar party can be hosted at the residence of political functionaries, the expenses of which will be borne by State exchequer?
  Ans. No
  However any individual is free by to host any such party in his personal capacity and at his personal expense.
  ---------------------------------------

  போதுமா இன்னும் வேணுமா?
  This clearly shows that a CM cannot act and exercise powers like a routine CM, during model code of conduct....and this code is not "May", but "Shall" - So legally mandatory!

  ReplyDelete
 36. //Because the comp is not free for me//

  Queue-ல்ல நிக்கறீங்களா? பிள்ளைங்க தர மாட்டேங்குறாங்களா? ஹா ஹா ஹா! வாழ்க பிள்ளைகள்! :)))

  //I have not seen ur reaction in andaal thread yet. Will respond today, Sir//

  I have responded. Pl walk the talk, if you are "truly" concerned abt history not getting hijacked by aanmeegam!
  நீங்கள் சொன்ன "திருமங்கையை ஞானசம்பந்தர் ஆட்கள் இழிவு செய்தார்கள்" என்பதற்கு என்ன தரவு? இருவரும் நூறு ஆண்டாவது கால வேறுபாடு கொண்டவர்கள்! பின்பு எப்படி இது சாத்தியம்? வரலாறு மீது "உண்மையான" அக்கறை கொண்ட தாங்களே வரலாற்றைத் திரிக்கலாமா? அப்பறம், சமயவாதிகளுக்கும் உங்களுக்கும் பெரிதாக என்ன வேறுபாடு?

  ReplyDelete
 37. //Why this seetram only against Muka? May be, he is more sinful?//

  வேறு எவரும் தமிழை வைத்து பிழைப்பு நடத்தி ஆட்சிக் கட்டில் சுகம் காணவில்லை! இன்று இவர் ஒருவரே அந்த Third Rate Hypocrite!

  //On the other hand, it is an insult to the chair of CM//

  No itz not!
  எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு முதலமைச்சர், ஆணையச் சட்டங்களைப் படிக்க வேண்டும்! அல்லது படிக்க வைத்து கேட்டுக் கொள்ள வேண்டும்!
  The rules are very clear, when it comes to CM, what he can do & what he cant do during model code of conduct in force! Itz NOT insult, Itz the Law!

  //It is killing a butterfly under a giant wheel//
  //over etiquette is not a lack of makkal panbu. You r kidding//

  No I am NOT!
  ஆயிரம் ரூபாய் ரூமுக்கு ஒப்பாரி வைக்கும் ஒரு முதல்வர் - மக்கட் பண்பு இல்லாதவரே!
  அதை விட பெரிய கொடுமைக்கு எல்லாம் ஒப்பாரி வைக்காதவர், தன் சி.எம். பதவிக்கு உண்டான "மரியாதை" தரவில்லை என்பதற்கு மட்டும் ஒப்பாரி வைப்பது - மக்கட் பண்பு இன்மையே!

  If hez so sure abt his constitutional grievance, let him to goto court! They already threw out his case there! :)

  //Why single out muka//

  Coz his acts amount to greater throgam!

  Roadside Saamiyar will not be hit that much!
  Only Nithyanandas will get a bigger bang, coz their roles are of higher impact than others!

  I end this discussion! The post is imaginary, but not its spirit!
  தமிழ் வாழ்க!
  தமிழால் வாழ்ந்த கலைஞரின் துரோகம் வீழ்க!!

  ReplyDelete
 38. wah..wah..wah...

  i enjoyed reading this.. and speaking with facts...Good..

  சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

  ReplyDelete
 39. தல, செம கலக்கல்......

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP