Sunday, June 26, 2011

நாயன்மாரை வெறுத்த நாயன்மார்!

தன் சொந்த "காம" விஷயங்களுக்கெல்லாம் இறைவனைத் தூது அனுப்புவதா? என்று சக அடியாரிடம் 'வெறுப்பு' பாராட்டி........., அந்தப் பகையால், உயிரையே விடத் துணிந்த ஒருவரின் கதை!

பந்தலில், நாயன்மார்களின் கதைகளை, பெரிய புராணப் பூச்சுகள் இல்லாமல்...மூல நூலில் உள்ளது உள்ளபடி...
இன்று ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் குரு பூசை (நினைவு நாள்) - Jun 25,2011 (ஆனி மாதம், ரேவதி நட்சத்திரத்தில்...)



ஏயர்-கோன்-கலிக்காம-நாயனார்!

அது என்னாங்க ஏயர் கோன்?
ஏயன் = காங்-கேயன், கார்த்தி-கேயன், நச-ரேயன்(இயேசுநாதர்)...இப்படிப் பல ஏயன்கள்! ஏயன்=தலைவன்!
இன்னும் விவரமாச் சொல்லணும்-ன்னா...ஏயன்=ஈயன்! ஈன்று தரப்படும் குழந்தை, பின்பு தலைவனாகத் திகழ்வது!

* கங்கை ஈன்றதால் = காங்கேயன் (முருகன்)
* கார்த்திகை ஈன்றதால் = கார்த்திகேயன் (முருகன்)
* நசரேத் என்னும் ஊர் ஈன்றதால் = நசரேயன் (இயேசு பிரான்)
* குந்தி ஈன்றதால் = கெளந்தேயன் (அருச்சுனன்)

அது போல பல ஏயன்களுக்கு (வீர மகன்களுக்கு)...கோன்-ஆக (தலைவனாக) விளங்கியதால் = ஏயர் கோன்!
கலிக்காமர் என்பதே இவர் சொந்தப் பெயர்! ஏயர் கோன் = பட்டப் பெயர்!

சீர்காழி/ வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ள 'திருப்பெரு மங்கலம்' தான் இவரோட சொந்த ஊரு!
நந்தனாருக்கு நந்தி விலகுச்சே (திருப்புன்கூர்), அதுக்கும் சற்று கிட்டக்க!
சோழப் படைகளுக்குத் தளபதிகளைக் கொடுக்கும் குடியில் தோன்றியவர்! பெரும் வீரர்! அதை விட, பெரும் சிவ பக்தர்!

ஆனால்.......
ஆனால்.......
இவருக்கு, இன்னொரு சிவபக்தரான சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டாலே ஆகாது!


ஏனாம்? அவரு பாட்டெழுதி பேரு வாங்கிக்கறாரு-ன்னு பொறாமையா? ஏதாச்சும் வாய்க்கால்-வரப்பு தகறாரா? :)
அதெல்லாம் ஒன்னுமில்லை! சுந்தரர், தன் 'காம இச்சைக்காக' ஈசனையே தூது போகுமாறு வேண்டினாராம்! அதான்! :))

'இவன் பண்ணினது தப்பு - அதுக்குத் தூது, இறைவனே போக வேணுமா? அட, அந்தாளு தான் மானங்கெட்டுக் கேட்டா, இந்த ஈசனும் அப்படியே போயிடறதா? சீச்சீ!' - இப்படியான வெறுப்பு கலிக்காமருக்கு! :))
ஆனா சமயக் குரவர் நால்வருள் ஒருவரான, சுந்தரர் நிலை என்ன?
'போடா! என்னை ஈசனே ஒன்னும் சொல்லலை! நீயென்ன பெருசா கருத்து சொல்ல வந்துட்ட'?-ன்னு பதிலுக்கு குதிச்சாரா? :) இல்லை!



சுந்தர மூர்த்தி நாயனார் = சொகுசு மூர்த்தி நாயனார் தான்!:)
ஆனால் அந்த சொகுசிலும், ஈசனையே முன்னிறுத்தி எதையும் செய்பவர்!

ஈசன் தான் அவருக்கு உற்ற தோழன்! அவனிடம் எதையுமே மறைக்கும் வழக்கம் இல்லை அவருக்கு!
* சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சா, அதையும் அவன் கிட்ட சொல்லுவாரு!
* தான் ஸ்டைலாப் போட்டுக்கும் உடுப்பு எப்படி இருக்கு-ன்னு, அதையும் அவன் கிட்டவே கேப்பாரு!
* ஒரு பொண்ணு அழகா நடனம் ஆடுறாங்களா, வாவ் செம ஃபிகர்-ன்னு அதையும் ஈசன் கிட்டயே சொல்லித் தான் அவருக்குப் பழக்கம்:)
அப்படி ஒரு அன்னோன்ய பாவனை! எனக்கு முருகனா வந்து வாய்ச்சானே, அது போல-ன்னு கூட வச்சிக்கோங்களேன்!:))

ஈசன்-ன்னா பெரிய கடவுள், அவரைத் துதிக்கணும், கைலாச பதவி, அவர் முன்பு பணிவோடு நடந்துக்கணும் போன்ற எண்ணமெல்லாம் சுந்தரருக்குத் தோனாது!
ஏதோ தோள் மேல் கை போட்டு பேசுற பாவனை தான் எப்பமே!

ஆனா இது உலகத்தில் எல்லாருக்கும் புரிஞ்சிடுமா? இது "ஒரு வினோதமான" பாவனை!

யாராச்சும் முருகன் சிலையைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு, Bed-ல்ல வச்சிக்கிட்டே தூங்குவாங்களா?:) காலையில் எழுந்திரிச்ச உடனேயே, முருகனுக்கு முத்தம் கொடுப்பாங்களா?:)
யாராச்சும் தன் அந்தரங்க ஆசை, காமம் உட்பட, இதையெல்லாம் போய் தெய்வத்து கிட்ட சொல்லுவாங்களா?

இப்படித் தான் சொகுசு மூர்த்தி நாயனாரான = சுந்தர மூர்த்தி நாயனார், தன் அந்தரங்க ஆசைகளையும் ஈசனிடம் மட்டுமே சொல்லுபவர்!


திருவாரூரில் பரவை நாச்சியோடு காதல் திருமணம்! ஆனால் சென்னை திருவொற்றியூர் ஆலயம் சென்ற போது, அங்கே இன்னொரு நடன மங்கை, சங்கிலி நாச்சியைக் கண்டு இருவருக்கும் காதல்!
அங்கேயே மணம் செய்து கொண்டார்! பின்னர் இறைவனிடம் படவும் பட்டார்! ஆனால் திருமணத்தைக் கேள்விப்பட்ட பரவை நாச்சிக்கு தாங்க மாட்டாத கோவம்! சுந்தரர் மீண்டும் திருவாரூர் சென்ற போது, கதவடைத்து விட்டார்!

அவள் கோபத்தைத் தணிக்க, ஆரூர் அழகேசரான ஈசனையே தூது செல்லுமாறு வேண்டினார் சுந்தரர்!
மாறு வேடத்தில் சென்ற ஈசனுக்கும் கதவு சார்த்தப் பட்டது!
ஒரு முறைக்கு இரு முறை...., வீதி விடங்கப் பெருமான், வீதியில் கால் தேய நடந்து, பரவையின் கோபத்தைத் தணித்தார்!

இதைக் கேள்விப்பட்டுத் தான், நம்ம கலிக்காமருக்கு மனசே ஆறலை!
'மாலும் ஐயனும் தேடித் தேடொணாத் திருவடிகள்...
அதைக் கால் தேய நடக்க விட்டானே...அதுவும் தன் இச்சைக்காக! பாவி! இவனெல்லாம் ஒரு சமயக் குரவனாம்? சுந்தரனாம்....ச்ச்சீ'
- இப்படியொரு வெறுப்பை வளர்த்துக் கொண்டு, அதைப் பலரிடம் சொல்லியும், அவ்வப்போது வெளிக்காட்டியும் வந்தார் கலிக்காமர்!

விஷயம் சுந்தரர் காதுகளுக்குச் சென்றது! சுந்தரருக்குத் தன் மேலேயே வெட்கமாக இருந்தது! 'ஆமாம்-ல்ல? நான் ஈசனை மதிக்காமல் ரொம்பத் தான் வேலை வாங்குறேனோ? ஆனா எனக்கு அவன் தானே எல்லாம்!
இது உலக வழக்கத்துக்கு மாறாக வேணும்-ன்னா இருக்கலாம்! காமமோ? காதலோ? அவன் கிட்டச் சொல்லாம யார் கிட்ட போய்ச் சொல்வது? - இதை கலிக்காமருக்கு எப்படிப் புரிய வைப்பேன்'?

'ஏன் புரிய வைக்க வேண்டும்? போனாப் போறான் கலிக்காமன்! அவன் வழி அவனுக்கு, என் வழி எனக்கு!'
- இப்படி உதறித் தள்ள மனம் வரவில்லை சுந்தரருக்கு! அடியார்கள் குழுவில் இசைந்து இருப்பதல்லவோ அழகு!

கலிக்காமர் நல்ல மனிதர்! நல்ல சிவ பக்தர்! அவர் வெறுக்கும் படி நான் இருக்கிறேனே! அவருக்குப் புரிய வைப்பது எப்படியோ?.....
என்று ஈசனிடமே மறுபடியும் போய்......ஏங்ங்ங்ங்கி.......நிற்க........



கலிக்காமருக்குச் சூலை நோய்! கடும் வயிற்று வலி! மருத்துவர்கள் வந்து மருந்து குடுத்தும் நிற்கவில்லை!
கனவில் ஈசன்...."கலிக்காமரே, நம் சுந்தரன் இங்கு வருவான்...உன் வலி தீரும்!"

திடுக்கிட்டு எழுந்தார் கலிக்காமர்! 'ஆகா! என்ன கொடுமை இது! நம் சுந்தரன்-ன்னு அடைமொழியா? ச்சீ...அவன் வந்தா என் வலி தீர வேண்டும்?
வேண்டவே வேண்டாம்! நான் செத்தாலும் சாவேன்! ஆனால் அவன் வந்து, என் வலி தீர்ந்தது-ன்னு இருக்கக் கூடாது'

அங்கு ஈசன்...."சுந்தரா...நம் கலிக்காமனின் வலியைத் திருநீற்றால் தீர்ப்பாயா? உன்னைப் பிடிக்காதவன் வீட்டுக்கு நீ செல்வாயா?"
சுந்தரர்: 'ஈசனே...நீயே....நம் கலிக்காமன்-ன்னு உறவு கொண்டாடுகிறாயே, அப்படியானால் உன் உறவு என் உறவு அல்லவா! இதோ கிளம்பிப் போகிறேன்!'

இருவருமே சிறந்த பக்தர்கள் தான்! ஆனால் தன்னைப் பின்னுக்குத் தள்ளி, தன் மானத்தையும் பின்னுக்குத் தள்ளி...அவனுக்கே அவனுக்கே....என்று இருக்கும் மனசு??? = பேதை மனசு!



சுந்தரர், திருப்பெருமங்கலம் வருகிறார் என்று தெரிந்து, ஊரே கூடி விட்டது!

பலருக்கும் சுந்தரரின் தெய்வத் தமிழ்ப் பதிகம் கேட்க ஆசை இருக்கோ இல்லையோ.....ஆனால் இரண்டு எதிர் துருவங்கள் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் ரசா பாசம் அரங்கேறுமோ?.....அதைக் 'கண்டு களிக்கும்' ஆவல் கூடி விட்டது :))

ஆனால், கலிக்காமருக்கு, இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை!
என்ன இது...இக்கட்டான நிலைமை!
அவனா? ச்சே...வேண்டவே வேண்டாம்! தனி அறையில்....தன் வாள் எடுத்து, தன் வயிற்றைத் தானே குத்திக் கொண்டார்!

ஐயோ! இரத்த வெள்ளம்!
கலிக்காமரின் மனைவி துடிக்கிறார்கள்!
கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில்...
இப்படிக் குப்-பென்று நடந்து விட்டதே! முருகா!

பொன்னார் மேனியனே....புலித்தோலை அரைக்கசைத்து
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?
ஆகா! வீட்டு வாசலில் தேவாரப் பதிகச் சத்தம் கேட்கிறதே! சுந்தரர் வந்து விட்டாரோ?

வீடேறி வந்து விட்ட ஒருவரை எப்படி நடத்துவது?
குகக் குறிப்போ? அல்லது முகக் குறிப்போ?
வாங்க வாங்க, வந்த அஞ்சே நிமிடத்தில் போங்க போங்க....
.........இப்படியெல்லாம் செய்ய மனம் வருமா அந்தக் குல மகளுக்கு? மானக் கஞ்சாற நாயனாரின் மகள் அல்லவா!

அருமைக் கணவனின் உடலை, அறையில் பத்திரப்படுத்தி இருத்தி, கட்டி அணைத்து...கண்ணைத் துடைத்து...
அழுகை ஒலிகளை அடக்கச் சொல்லி விட்டு, தானும் அடக்கிக் கொண்டு....வெளியில் ஓடுகிறாள்!
சிறந்த சிவத் தொண்டரான சுந்தரரை, உள்ளே வருக, என்று அழைத்து, பணிந்து, இடி விழுந்தது போல் நிற்கிறாள்!

சுந்தரரும், 'அம்மா, கலிக்காமரைக் காண வேண்டுமே!' என பேச்சை ஆரம்பிக்க...விஷயம் ஒவ்வொன்றாய் வெடித்து வெளியில் வருகிறது...

சுந்தரர் அலறி அடித்து, அறைக்குள் ஓட....அங்கே இரத்த வெள்ளத்தில் கலிக்காமர்!
ச்சே...நல்லது செய்ய நினைத்து தீயதாய் முடிந்ததே...இதற்கா இத்தனை தூரம் வந்தேன்...வந்து இவள் மாங்கல்யத்தைக் கெடுத்தேனோ?
இப்படியுமா.....என் மீது வெறுப்பின் உச்ச கட்டம்?....சுந்தரர் கதறி அழ.....

திடுமென்று, யாரும் எதிர்பாரா வண்ணம்....
அருகே இருந்த வாளை உருவி....தன் மீது பாய்ச்சிக் கொள்ள.....

"சுந்தரா...நில்!!!!
எப்படிப் புரிய வைப்பது என்று தவித்தாயே!
உயிரைப் 'பரிந்தால்' புரியும்! பரிவதில் ஈசனைப் பாடி...."

கலிக்காமர் எழுந்தே விட்டார்!
என்ன மாயமோ...கலிக்காமர் எழுந்தே விட்டார்!
சுந்தரரின் உருவிய வாளை இறுகிப் பிடித்து கொண்டார்!

சுந்தரனின் விந்தையான பேதை மனம், அப்போது தான் கலிக்காமருக்குப் புரிந்தது...
* ஈசனே, நம் சுந்தரன் என்று சொல்லியும், தன் கருத்தை மட்டுமே முன்னிறுத்திய தான் எங்கே......
* பலரிடமும் பேசி இழிவு படுத்துகிறேன் என்று தெரிந்தும், ஈசனின் பேச்சை மட்டுமே முன்னிறுத்தி, என் வீட்டு வாசலில் நின்ற சுந்தரன் எங்கே....

வெட்கம் பிடுங்கி தின்ன....சுந்தரர் காலில் கலிக்காமர் வீழ....
அன்பு பிடுங்கித் தின்ன....கலிக்காமர் காலில் சுந்தரர் வீழ....

இருவரும் ஆரத் தழுவிக் கொண்டார்கள்! உயிர் நண்பர்கள் ஆனார்கள்!
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

திருப்புன்கூர் ஆலயத்துக்குச் சுந்தரரை அழைத்துச் சென்ற கலிக்காமர்...அங்கே இறைவன், நந்தனாருக்கு விலகிய நந்தி....என்று அனைத்தும் காட்ட...
சுந்தரர் தேவாரப் பதிகங்கள் பாடி....அதில் தன் நண்பரான கலிக்காமர் பேரையும் பாடிக் குறித்து வைத்தார்!

ஏத நன்னிலம் ஈராறு வேலி
ஏயர் கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து
பூத வாளி நின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொழில் திருப் புன்கூர் உளானே

உம்பர் ஆளியை உமையவள் கோனை
ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து
அன்பினாற் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு
ஐந்தும் வல்லவர் அருவினை இலரே

பந்தல் வாசகர்களே......நம் மனசாட்சியை நாமே கேட்டுக் கொள்வோமா?
* ஈசனே, நம் சுந்தரன் என்று சொல்லியும், நம் கருத்தை மட்டும் தான் நாம் முன்னிறுத்துவோமா?
* இழிவு படப் போகிறோம் என்று தெரிந்தும், அன்பனின் பேச்சை மட்டுமே முன்னிறுத்தி, இன்னொரு வீட்டு வாசலில் போய் நிற்போமா?....

அவன் உள்ள உகப்புக்கு நாமா?
நம் உள்ள உகப்புக்கு அவனா?

பேதை மனம் கொண்ட சுந்தரரையும், வீர மனம் கொண்ட கலிக்காமரையும் சேர்த்து வைத்த....
திருவாரூர் தியாகேசப் பெருமான் திருவடிகளே சரணம்!
ஏயர் கோன், கலிக்காம நாயனார் திருவடிகளே சரணம்!

41 comments:

  1. அப்படி ஒரு அன்னோன்ய பாவனை! எனக்கு முருகனா வந்து வாய்ச்சானே, அது போல-ன்னு கூட வச்சிக்கோங்களேன்!:)//

    nice...........

    ReplyDelete
  2. இன்னைக்குத்தான் ஆதியும் மீனாவும் கேட்டாங்க..எப்பவுமே ஆழ்வார் கதையா சொல்லுறீங்களே.. ஒரு நாயன்மார் கதை சொல்லுங்கன்னு.. முன்னமே படிச்சிருந்தா நல்லா சொல்லி இருப்பேன்.. நாளைக்கு சொல்லுறேன் ஆதிக்கு..ஒரு பதினைந்து வருசத்துக்கு முன்னாடி படிச்சது 63வர் கதைகளை..

    ReplyDelete
  3. என்ன KK, ஒத்தைச் சிரிப்பு?:)

    ராஜேஸ்வரி: நன்றி

    சரவணன் அண்ணா: குழந்தைகளுக்குச் சொல்லும் படி உள்ள நாயன்மார் கதைகளையே, வன்முறையான/வெறிதரும் நிகழ்வுகளை நீக்கி, மூல நூலில் இருப்பது போலச் சொல்லி வருகிறேன்!
    நாயன்மார்கள் சிறந்த அருளாளர்கள்! ஆழ்வார்களும் நாயன்மார்களும் இல்லையேல், இன்னிக்கு தெய்வத் தமிழ் இல்லை! பிள்ளைகளுக்கு ஆர்வம் ஊட்டும் வண்ணம் கதை சொல்லுங்கள்!:) அதுவும் இந்தக் காலப் பிள்ளைகள்!:))

    ReplyDelete
  4. //அவன் உள்ள உகப்புக்கு நாமா?
    நம் உள்ள உகப்புக்கு அவனா?//

    அவன் உள்ள உகப்பை நமக்கு வெளிப்படுத்தியபின் அவன் உகப்புக்கு நாம். சரிதானே?

    ReplyDelete
  5. ஒரு பொண்ணு அழகா நடனம் ஆடுறாங்களா, வாவ் செம ஃபிகர்-ன்னு அதையும் ஈசன் கிட்டயே சொல்லித் தான் அவருக்குப் பழக்கம்:)

    சைக்கிள் கேப்ல இப்படி உண்மைய போட்டு உடைக்க கூடாது :)

    ReplyDelete
  6. அவன் உள்ள உகப்புக்கு நாமா?
    நம் உள்ள உகப்புக்கு அவனா?

    mm ok:)

    ReplyDelete
  7. @ராஜேஷ்
    //சைக்கிள் கேப்ல இப்படி உண்மைய போட்டு உடைக்க கூடாது :)//

    உண்மை தானே! சைக்கிள் கேப்-லயும் உடைக்கலாம்! சான்ட்ரோ கேப்லயும் உடைக்கலாம்!:)

    ReplyDelete
  8. //அவன் உள்ள உகப்பை நமக்கு வெளிப்படுத்தியபின் அவன் உகப்புக்கு நாம். சரிதானே?//

    :)
    அவன் உள்ள உகப்பை வெளிப்படுத்தும் வரை காத்திருந்து அவனுக்கு அன்பு செய்வதல்ல காதல்!

    அவன் உள்ள உகப்பை எப்படியோ அறிந்து தானே அதன்படி நடப்பது! ஒவ்வொன்றிலும், இதனால் அவன் உள்ளம் உவக்குமா, உவக்குமா என்று அவனைச் சுற்றியே தன் காதலை அமைத்துக் கொள்வது!:)

    நல்ல ஒளைவையார் பழந்தமிழ்ப் பாடல் ஒன்னு இருக்கு!

    * சில கனிகள் பூக்காமலேயே காய்க்கும்=பலா மரம்=பெருமை மிக்கவர்கள் அது போல! சொல்லாமலேயே செய்வார்கள்!
    * சில கனிகள் பூத்துத் தான் காய்க்கும்=மா மரம்-சிறியவர்கள் அது போல! சொன்னாத் தான் செய்வார்கள்
    * சில பூக்கும், ஆனா காய்க்கவே காய்க்காது=பாதிரி மரம்=கயவர்கள் சொன்னாலும் செய்ய மாட்டார்கள்!:)

    சொல்லாமலே பெரியர்; சொல்லிச் சிறியர்
    சொல்லியும் செய்யார் கயவர் - நல்ல
    குலமாலை வேல் கண்ணாய், கூறு உவமை நாடின்
    பல மாவை பாதிரியைப் பார்!

    ReplyDelete
  9. //அவன் உள்ள உகப்பை எப்படியோ அறிந்து தானே அதன்படி நடப்பது! //

    ஆன்மீக எழுத்தாளர் மொழியில் சொல்வதானால், 'அவன் உள்ள உகப்பை 'நாமாக' எப்படி அறியமுடியும்? அதற்கும் அவன் சித்தம் வேண்டாமா? நினைப்பதும் அவனே நினைக்க வைப்பதும் அவனே.... சொல்வது நான் செய்வதும் நான் நீ ஏன் வீணில் கவலைப்படுகிறாய்? கீதையில் சொல்லப்படுவது இதுதானே...' (exact வரிகள் மறந்து போயி. கொஞ்சம் ஞாபகப்படுத்துங்கள்)


    //ஒவ்வொன்றிலும், இதனால் அவன் உள்ளம் உவக்குமா, உவக்குமா என்று அவனைச் சுற்றியே தன் காதலை அமைத்துக் கொள்வது!:)//

    மிகத் தெளிவான கருத்து. வாவ். அருமை. கடைப்பிடிக்கிறேன் (அவன்/அவள் சித்தம் இருந்தால்).


    //பல மாவை பாதிரியைப் பார்!//

    இப்போதைக்கு நான் மாவாக இருக்கலாம். (இட்டளி மாவன்று)

    ReplyDelete
  10. @இந்திரன்
    என்னமா தத்துவம் எல்லாம் பேசறீங்க! பேசாம பந்தலை ஒங்க கிட்ட குடுத்துற வேண்டியது தான்! :)

    //இப்போதைக்கு நான் மாவாக இருக்கலாம்//

    சேச்சே! மாம்பழம்-ன்னா மட்டும் சும்மாவா? நாம எல்லாருமே ஒரு வகையில் மா தான்!
    பலா ஆகணும்-ன்னா நெஞ்சில் நிறைய காதல் இருக்கணும்!

    //அருமை. கடைப்பிடிக்கிறேன் (அவன்/அவள் சித்தம் இருந்தால்)//

    ஐயையோ! கடைப்பிடிக்கிறேன்-ன்னு நடைமுறையில் இருந்து போயிடப் போறீங்க! அப்பறம் என் பாடு போலத் தான் நீங்களும் பட வேண்டி இருக்கும்! அதெல்லாம் வேணாம்-ப்பா! :)

    பந்தல்-ல சொல்லுறது பலவும் நான் என் உள்ளத்துள் பட்டுச் சொல்லுறது! அதெல்லாம் நடைமுறைக்கு உதவாது போகலாம்! ஆனால் அதில், கொஞ்சூண்டு மனசாட்சியின் உண்மை இருக்கும்!

    காதலிச்சி இருந்தாத் தான் எம்பெருமானை எளிதில் புரிந்து கொள்ள முடியும்!
    அவன் அருள் இருந்தாத் தானே அவனை வணங்க முடியும்-ன்னு தத்துவமாப் பேசாது, அவன் அருள் இருக்கோ இல்லீயோ, நான் அவனுக்கென்றே இருப்பேன்-ன்னு ஒரு காதல்.....

    அது காதல் உள்ளங்கள் மட்டுமே செய்யக் கூடியது!
    எத்தனை ஆற்றாமை இருந்தாலும், காதலி தன் காதலனை மறுதலிப்பாளா?

    இது நடைமுறை வாழ்வில் கடினம்! பந்தலில் பேசப்படுகிறது-ன்னு யாரும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு...வேணாம்! இந்த நிலைமை வேறு யாருக்கும் வேணாம்! அனைவரும் இன்புற்று இருக்க வேணும்!

    என்னை நீ வேண்டாயே ஆயிடினும், மற்றாரும் பற்றில்லேன்!!
    உன் தன்னோடு உறவேல், எனக்கு! இங்கு ஒழிக்க ஒழியாது!

    ReplyDelete
  11. தத்துவம் எல்லாம் நம்மலுது இல்ல சாமி. சில ஆன்மீக எழுத்தாளர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள் (உங்களைச் சொல்லவில்லை) ஐ ஜஸ்ட் பிரான்க்ட் தெம்.

    என் கடைப்பிடிக்க முடியாது என்கிறீர்கள். அவனுக்கு பிடிக்குமா என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டு, முடிவையும் நாம் தான் (அத்துவைதம்) எடுக்கப்போகிறோம். வெளியிலும் ஒரு கண்டிசன் இருக்கிறதே (அவன்/அவள் சித்தம் இருந்தால்)... ரொம்ப முடியவில்லை என்றால் அவன் சித்தம் இல்லை என்று தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா...
    (its not rigid. conditions apply* just like lokpal bill)

    ReplyDelete
  12. ஒரு ரெக்வெஸ்ட். துவைத அத்வைத விசிட்டாத்துவைத தியரிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள நீண்ட நாள் ஆவல். எளியோனுக்கும் புரியும் வண்ணம் உங்கள் பாணியில் விளக்கி ஒரு பதிவு போடுங்களேன். (சீரியசாகத் தான் கேட்கிறேன்)

    ReplyDelete
  13. இந்திரா...போயி தூங்கு இந்திரா! பந்தலே கதி-ன்னு இருந்தா எப்படி? or kadalai putting with some one on the next chat window? :)

    ReplyDelete
  14. இரவி, ஏயர் என்பதற்கு விளக்கம் நீங்களே தந்ததா வேறு எங்கேனும் இந்தப் பொருளைப் படித்தீர்களா?

    ஏயர்கோன் கலிக்காமரின் திருக்கதையை முன்பு சுருக்கமாகப் படித்திருக்கிறேன். உணர்வுகள் பொங்க நன்கு எழுதியிருக்கிறீர்கள். நன்றி இரவி.

    நாயன்மார்கள் திருக்கதைகளை இப்படி வரிசையாக எழுதி வருகிறீர்கள். இதற்கு என்ன கைம்மாறு செய்வேனோ?

    ReplyDelete
  15. http://koodal1.blogspot.com/2008/08/6.html

    இந்திரன்,

    இரவிசங்கரின் கட்டளைப்படி இந்த இடுகையின் சுட்டியைத் தருகிறேன். போய் பாருங்கள்.

    ReplyDelete
  16. இந்திரன்,

    இந்த இடுகையைப் பாருங்க. நீங்க கேட்டது இருக்கான்னு. http://koodal1.blogspot.com/2008/08/6.html

    இன்னொன்னும் இருக்கு. ஆனா அதை இப்ப படிச்சா எனக்கே குழப்பமா இருக்கு. புரியுதான்னு பாருங்க. :-) http://koodal1.blogspot.com/2009/05/1.html

    ReplyDelete
  17. "உன் உறவு என் உறவு அல்லவா?".இதயத்தைத்தொடும் சொற்கள்!

    பூரண [அன்கண்டிஷனல்]சரணாகதியின் பாவமும்,சுவாதீனமான பேச்சும்

    சுந்தரருக்கே உரியது!அருமையான பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  18. //இந்திரா...போயி தூங்கு இந்திரா! பந்தலே கதி-ன்னு இருந்தா எப்படி? or kadalai putting with some one on the next chat window? ://

    ஐ ஆம் அ காலேஜ் ஸ்டுடன்ட். பார்காட் இட்? மை நைட்டைம் இஸ் ஒன்லி 2 டு 9 காலேஜ் ரீஒப்ன்ஸ் அட் ஜூலை ௪. அதுக்கப்புறம் இங்க வர்ற நேரம் குறைஞ்சுடும்... :(

    நீங்க குடுத்த பதிவைப் படிச்சுட்டு இருக்கேன். தாங்க்ஸ்

    ReplyDelete
  19. @KRS: //என்ன KK, ஒத்தைச் சிரிப்பு?:) //
    kadhai pidichirundhudhu, adhu dhaan :)
    enak

    ReplyDelete
  20. kadhai pidichirundhudhu, at the same time,ur side "snippets" were great :)

    ReplyDelete
  21. @KK
    //kadhai pidichirundhudhu// - நன்றி
    //at the same time,ur side "snippets" were great :)// - ஆகா! my side snippetsஆ? அப்படீன்னா என்ன?:)

    ReplyDelete
  22. //ரொம்ப முடியவில்லை என்றால் அவன் சித்தம் இல்லை என்று தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா...
    (its not rigid. conditions apply* just like lokpal bill)//

    ஹா ஹா ஹா
    இந்திரா, ஐ லைக் யுவர் ஸ்டைல்!:)
    ஆனால் தப்பித்துக் கொள்ளவே முடியாதபடிக்கு, கண்ணி நுண் சிறுத் தாம்பினால், கட்டுண்டப் பண்ணி விடுவான் பெரு மாயன்!:))

    கடைப்பிடிக்க முடியாது-ன்னு சொல்லலை! உலக வழக்கத்துக்கு கொஞ்சம் மாறாத் தெரியும்! என்னளவில் பட்டுள்ளேன்! அதான் சொன்னேன்!:)
    உலக வழக்கத்துக்கு மாறாத் தெரிஞ்சாலும், அவன்-என் உள்ளத்துக்கு உவப்பே!

    ReplyDelete
  23. @இந்திரன்

    * அத்வைதம் (அல்லிருமை)
    * விசிஷ்ட-அத்வைதம் (விதப்பொருமை)
    * துவைதம் (இருமை)
    - இம்மூன்றும் in a nutshell, நாலே வரில இன்னொரு நாள் சொல்கிறேன்!

    இப்போதிக்கு குமரன் அண்ணா பதிவை வாசியுங்கள்! கொஞ்சம் புரியலீன்னாலும், இரண்டு முறை வாசியுங்கள்! ஒரு நல்ல கருத்துருவாக்கம் கிடைக்கும்! குமரன் அண்ணா touches every aspect!

    ReplyDelete
  24. //குமரன் (Kumaran) said...
    இரவி, ஏயர் என்பதற்கு விளக்கம் நீங்களே தந்ததா வேறு எங்கேனும் இந்தப் பொருளைப் படித்தீர்களா?//

    :)
    ஏன் குமரன்? தவறா? தவறு-ன்னா தாராளாமாச் சொல்லித் திருத்தலாமே! ஒங்களுக்கு இல்லாத உரிமையா? எப்படியும், 'நீ என்ன லூசா'-ன்னுல்லாம் தம்பி பாலாஜி போல பப்ளிக்கா திட்ட மாட்டீங்க-ன்னு ஒரு நம்பிக்கை தான்:)

    ஏயன்=ஈசன் என்பதின் திரிபாகவும் இருக்கலாம்!
    ஆனா கெளந்தேயன்-ன்னு பொருத்திப் பார்த்து, நானாச் சொன்னது தான்:)

    ReplyDelete
  25. @குமரன்
    //நாயன்மார்கள் திருக்கதைகளை இப்படி வரிசையாக எழுதி வருகிறீர்கள். இதற்கு என்ன கைம்மாறு செய்வேனோ?//

    கைம்மாறா? அதெல்லாம் நம்பியாண்டார் நம்பிக்கும், இராசராச சோழனுக்கும் சொல்ல வேண்டியது! அவிங்க தான் தெய்வத் தமிழ்ப் பதிகங்களை மீட்டு எடுத்தது!

    வேணும்ன்னா...
    சைவச் செம்மலான என் தோழனுக்குப் பல்லாண்டு பல்லாண்டு-ன்னு சொல்லுங்க! அதுவே போதும்!

    ReplyDelete
  26. @லலிதாம்மா - நன்றி!
    //பூரண சரணாகதியின் பாவமும்,சுவாதீனமான பேச்சும்//

    ஆழ்வார்கள் மனத்தை ஒட்டிய கருத்துக்கள்-ன்னா அது...அப்பர், சுந்தரர் இவர்களிடம் அதிகம் காணலாம்! சரணாகதி பாவம்!

    மாணிக்கவாசகர் கிட்ட அத்வைதம் கொட்டிக் கிடக்கும்!
    சுந்தரர் கிட்டத்தட்ட உலகம் மாயை இல்லை-ன்னே சொல்லிடுவாரு, விசிட்டாத்வைதம் போல:))

    ReplyDelete
  27. ஏயன்னா என்னன்னு பொருள் தெரியாது இரவி. லெக்சிகன்ல தேடினேன்; கிடைக்கலை. மற்ற இலக்கியங்கள்லயும் ஏயர்ங்க சொல் இருக்கிறதா கூகிளார் சொல்றார். ஆனா பொருள் பிடிபடலை.

    கௌந்தேயன், காங்கேயன் எல்லாம் உங்க டகால்டியோன்னு தோணிச்சு. அதனால தான் கேட்டேன்.

    இப்பவும் ஏயன்னா நீங்க சொன்ன பொருள் சரி, தவறுன்னு சொல்லத் தெரியலை. ஆனால் கௌந்தேயன், காங்கேயன் எல்லாம் வடசொற்கள்; அங்கே தமிழ் இலக்கணம் பொருந்துமான்னு ஒரு கேள்வி இருக்கு. ;-)

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!

    ReplyDelete
  28. ரவி,
    வணக்கம்.
    பதிவுக்கு மிக்க நன்றி. மிகவும் அருமையான பதிவு. அறிந்திராத பல சங்கதிகளை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.

    நன்றி.

    ReplyDelete
  29. //ஆனால் கௌந்தேயன், காங்கேயன் எல்லாம் வடசொற்கள்; அங்கே தமிழ் இலக்கணம் பொருந்துமான்னு ஒரு கேள்வி இருக்கு. ;-)//

    நான் தமிழ் இலக்கண விதியெல்லாம் ஒன்னும் காட்டலையே குமரன்? ஏயன்=ஈசன், தலைவன்! (ஒருத்தரு மூலமா) ஈன்று வரும் தலைவன்-ன்னு சொன்னேன், அவ்ளோ தான்! 'ஈன்று' என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியதால் அப்படித் தோனிருச்சோ?

    தமிழ் 'ஏய' வேற! ஆய கலைகள் அறுபத்து நான்கினையும், 'ஏய' உணர்விக்கும் என்னம்மை...

    ReplyDelete
  30. //பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!//

    குமரன் அண்ணா
    இந்த ஆசிக்குப் பெரிதும் நன்றி!:) I will gather all blessings for him and treasure it in a chest :)

    ReplyDelete
  31. @வெற்றி
    //அறிந்திராத பல சங்கதிகளை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்//

    அதுக்குத் தானே வெற்றி், முன்னே மாதிரி இல்லாட்டாலும், அப்பப்போ-வாச்சும் எழுதறது!

    ஆழ்வார்களும், நாயன்மார்களும் அறிந்து கொண்டாலே போதும்! இறைவனின் கதைகளை விட அடியவர்களின் கதைகளே, இறைவனுக்கு உகப்பு! ஏன் தெரியுமா?

    ஒரு மானைப் பிடிச்சிப் பழக, புலியைக் கட்டி வைச்சா, அந்த மான் கிட்டக்க வருமா?
    மானைக் கொண்டு தான் மானைப் பிடிக்கணும்!
    அது போல அடியவரைக் கொண்டே அடியவரைப் பிடிக்க முடியும்! மற்ற மக்களை எல்லாம் பிடித்து இறைவனிடம் சேர்க்க முடியும்!:)

    ReplyDelete
  32. >> கங்கை ஈன்றதால் காங்கேயன்<<

    இதயும் சேத்துக்கலாம் -

    விநதை ஈன்றவன் வைநதேயன் (கருடன்)

    ராதையின் மகன் ராதேயன் (கர்ணன்)

    வ்ருஷ்ணி குலத்தோன்றல் வார்ஷ்ணேயன் (கண்ணன்)

    சாம்பேயம் - செண்பக மரம், பொன்,
    தாமரை நூல்


    தேவ்

    ReplyDelete
  33. *ஏயர்கோன்*

    தமிழகம் வந்த வ்ருஷ்ணிகள் வேளிர்கள் ஆனதுபோல் கேகயர் ஏயர் எனப் பெயர் பெற்றனர். ’ஹேஹய’ என்ற ஒரு வம்சமும் இருந்துள்ளது.

    வடஇந்தியாவில் கேகய அரச வம்சத்தை க்ஷத்திரியர் குடியாகக் கூறுகின்றனர். சங்க காலத்திற்குப் பின் இக்குடியினர் தமிழகத்திற்குள் குடியேறிய பொழுது, இங்கு ஏயர் குடி என்று அழைக்கப்பட்டனர்

    http://www.sishri.org/tt4print.html


    தேவ்

    ReplyDelete
  34. KauntEya = son of Kunti
    It applies equally to Yudhistra, Bhima, and Arjuna. But that is only part of the story. More than these three Karna is the one who deserves that title since he was the first son of Kunti. Society in those times (why even now) did/does not give due credit to the birth mother. Instead Karna was called rAdEya in recognition of his foster mother Radha.

    ReplyDelete
  35. >> KauntEya = son of Kunti
    It applies equally to Yudhistra, Bhima, and Arjuna.<<

    'Kaurava' applies equally to PANdavas also.
    They are also born in the dynasty of King Kuru


    dev

    ReplyDelete
  36. Dear Ravi:- Enjoyed reading. :-)

    ReplyDelete
  37. தேவ் ஐயா
    வருக! வைநதேயன், ராதேயன் என்று இன்னும் எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி! குமரன் அண்ணாவின் ஐயம் உங்கள் மூலமாகத் தெளிந்திருக்கும் என்று நம்புகிறேன் :)

    ஏயர் கோன்: கேகயர் என்பது தான் ஏயர் ஆயிற்று என்பதற்கு இன்னும் தரவுகள் தேவை என்று கருதுகிறேன்!

    ReplyDelete
  38. @nAradA
    //Society in those times (why even now) did/does not give due credit to the birth mother.//

    ஹா ஹா ஹா
    என்ன தான் கெளந்தேயன் என்று உலகம் அறிந்து கொண்டாலும், கர்ணனுக்கு அவனளவில் ராதேயன் என்ற பெயர் தான் பிடிக்கும்-ன்னு நினைக்கிறேன்! :)

    மற்றபடி, இந்தப் பெயர்கள் எல்லாம் ஒரு "அடையாளம்" ஆகி விட்டன! தேவ் ஐயா சொன்னதையும் பாருங்கள்! கெளரவர்-ன்னா இருவருமே தான்! ஆனால் துரியன் கூட்டத்துக்கு மட்டுமே அது அடையாளம் ஆகி விட்டது! அது போலத் தான் ராதேயன்=கர்ணன்! கெளந்தேயன்=அருச்சுனன்! காங்கேயன்=பீஷ்மரைக் கூட அழைக்கலாமே? ஆனால் முருகனுக்கு மட்டுமே அந்தப் பெயர் அடையாளம்! :))

    உலக அடையாளங்கள் இப்படித் தான்! அமைந்து விட்டால் அழிவதில்லை!:)

    ReplyDelete
  39. பிரசாத்: என்சாய் மாடி!:)

    ReplyDelete
  40. >>> காங்கேயன்=பீஷ்மரைக் கூட அழைக்கலாமே? ஆனால் முருகனுக்கு மட்டுமே அந்தப் பெயர் அடையாளம்! :)) <<<


    அம்புப்படுக்கையில் தளர்ந்து விழுந்து கிடக்கும் பீஷ்மரைக் கண்ணபிரான் ‘காங்கேய’ என விளிப்பது -

    yac ca mām āttha gāṅgeya bāṇaghāta rujaṃ prati
    gṛhāṇātra varaṃ bhīṣma matprasāda kṛtaṃ vibho

    யச்ச மாம் ஆத்த² கா³ங்கே³ய பா³ணகா⁴த ருஜம் ப்ரதி |
    க்³ரு’ஹாணாத்ர வரம் பீ⁴ஷ்ம மத்ப்ரஸாத³ க்ரு’தம் விபோ⁴ ||

    http://www.sacred-texts.com/hin/mbs/mbs12052.htm


    தேவ்

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP