Wednesday, December 28, 2011

கோதைத்தமிழ்13: ஆண்டாளும் அப்துல் கலாமும்!

Today's Podcast was supposed to be from a Celebrity!:)
பாவம், அவருக்குச் சற்று வேலை அதிகம்! அதனால் இன்னொரு Celebrity-ஐ பார்ப்போம்:) = ஆண்டாளும், அப்துல் கலாமும்!

என்ன பேச்சு இது? அப்துல் கலாமா? ஆண்டாள் எப்போ ராக்கெட் விட்டா? ஏவுகணை விட்டா? விண்வெளி ஆராய்ச்சி பண்ணா? பாக்கலாம் வாரீயளா? :)


வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று! - அப்படின்னா என்ன?

வெள்ளிக்கிழமை பொறந்தாச்சி! வியாழக்கிழமை ஓடியே போச்சு! அப்படின்னு ஆண்டாள் சொல்ல வராளா?
ஆனால் செவ்வாய் எழுந்து திங்கள் உறங்கிற்று-ன்னு எல்லாம் அவள் பாடினா மாதிரி தெரியலையே! அப்படின்னா இதுல வேற ஏதோ ஒன்னு இருக்கு!

வெள்ளி=Venus! வியாழன்=Jupiter!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = Venus rose as Jupiter set!



பகலவன் உதிக்கும் முன்னுள்ள வைகறை வேளையில், வானிலே விடி வெள்ளி தெரியும்!
இன்னிக்கிக் கூட, புது வீட்டுக்குப் போகும் போதோ, சொந்த வீடு கட்டிக்கிட்டுப் போகும் போதோ, வெள்ளி எதிரே போகாதே-ன்னு சொல்லுவாய்ங்க!

* அதிகாலைச் சூரியன் உதிப்பதற்கு முன்னால் வானில் ரொம்ப வெளிச்சம் இருக்காது!
* அதனால் பூமிக்கு மிக அருகில் உள்ள வெள்ளிக் கிரகம் (Venus) ஒரு நட்சத்திரம் போல தெரியும்! வெறுங் கண்ணாலேயே பார்க்கலாம்!
* ஆனால் வியாழன் (Jupiter) அவ்வளவு சீக்கிரம் தெரியாது! தன் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் போது மட்டுமே தெரியும்!


வியாழன் கிரகம் ஒரு பக்கமாய் மறைய,
எதிரே வெள்ளிக் கிரகம் தோன்றும் வானியல் நிகழ்வு இது!

பார்க்கிறாள் கோதை! அவள் காலத்தில் நடைபெற்ற ஒரு அதிசய வானியல் நிகழ்வை உடனே குறித்து வைக்கிறாள் அவள் திருப்பாவை டைரியில்!
ஒரு கோதையின் டைரிக் குறிப்பு!

எப்போதெல்லாம் இப்படி அதிசய நிகழ்வு நடந்தது என்பதை விஞ்ஞானிகளின் துணையோடு, வானியல் குறிப்பை ஆராய்ந்தார்கள்!
அதை வைத்து ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! நாம் அந்த ஆய்வுக்குள் போகாமல், இந்த நுட்பத்தை மட்டும் இப்போதைக்கு ரசிப்போம்!

ஆண்டாள் காலத்தில் மட்டும் தான் இப்படி நடந்ததா? அதுக்கு அப்பறம் இப்படி நடக்கவே இல்லையா? நம் காலத்தில் இவ்வாறு எல்லாம் நடந்துள்ளதா?
இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடித் தான் நடந்திருக்கு! Nov 28 - Dec 01, 2008! இதோ செய்தி!

Pic Shot on Dec-01-2008, during Venus-Jupiter Conjunction

* நீங்க யாராச்சும் அன்னிக்கி இதைக் கண்டீர்களா?
* டைரியில் குறிச்சி வச்சீங்களா?
* பதிவு ஏதாச்சும் போட்டு, பதிஞ்சு வச்சீங்களா? :)
அறிவியல் காலத்தில் வாழும் போதே நாமெல்லாம் இப்படின்னா, கிராமத்துப் பொண்ணு கோதை இது பற்றி அன்றே பதிஞ்சி வைப்பதைப் பாருங்கள்! இப்போ தெரியுதா அவளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்?

* மன்னர்களின் அந்தப்புர லீலைகளைச் அக்காலப் புலவர்கள் சிலர் உலாவாகப் பதிந்து வைத்தார்கள்!
* மானிடனைப் பாடாது, இறைவன் அருளை மட்டுமே பாட்டாக வடித்து வைத்தார்கள் இன்னும் சில அருட்கவிஞர்கள்!
* ஆனால் ஆண்டாள் இன்னும் ஒரு படி மேலே போய், அறிவியல்-வாழ்வியல்-இறையியல் என்று அத்தனையும் சமதளத்தில் கொண்டு வருகிறாள்!

இப்போ தெரிகிறது அல்லவா, அவள் பாவை மட்டும் தனித்து நிற்கக் காரணம் என்ன-ன்னு?
Space Data Aggregator, Andal திருவடிகளே சரணம்! :)


புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக், கீர்த்திமை பாடிப் போய்ப்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!!


புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்,
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய், நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கொக்காக வந்த அரக்கனின் வாயைக் கிழிச்சவன்! பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன்! அவன் புகழைப் பாடி, பெண்கள் பலரும் பாவை நோன்பின் குளக் கரைக்குப் போயிட்டாங்க!

அட! வானத்திலே, வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று! அதிசய நிகழ்வு!

பறவைகள் ஒலிக்கத் துவங்கியாச்சி!
பெண்ணே, வீட்டின் குளியல் அறைக்குள்ளேயே முடங்கி நீராடமல், பாவைக் களத்துக்கு வந்து குடைஞ்சிக் குடைஞ்சி நீராடு!
அதை விட்டுட்டு, நல்ல நாள் அதுவுமா இப்படித் தூங்கலாமா? வா, எங்களோடு கலந்து விடு!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = போதரி!
நாதா* -ன்னு எல்லாம் ட்விட்டரில் சிலர் பேசுறாங்களே! அதில்லை இது:))

போதரிக் கண்ணினாய் = போது + அரிக் கண்ணை உடையவளே!
போது=விரியும் மலர்; அரி=வண்டு!
அது என்ன வண்டு+மலர்-ன்னு ரெண்டையுமே கண்ணுக்குச் சொல்லுறா?

அந்தப் பொண்ணு அப்படித் தான் தூங்குறாளாம்! பூப்போல விரிந்த கண், அதில் கருவண்டு போல உன் கருமணி நல்லாவே தெரியுது!
இப்படியா விழிச்சிக்கிட்டே அரைத் தூக்கம் தூங்குவ? அடிச்சீ! எழுந்து வாடீ!:))

ஆண்டாள் காட்டும் உவமையின் வீச்சைப் பாருங்க...
முழிச்சிக்கிட்டே தூங்கும் கண் = போது அரிக் கண்!

நாளை, இன்னொரு தமிழன்பப் பையன் பேசுவான்! நான் விமானத்தில் இருப்பேன்! பதிவு தானியங்கியில் பதிப்பிக்கும்! வர்ட்டா?:)

5 comments:

  1. இன்றைக்கு யாரும் பேசவில்லையா?

    ReplyDelete
  2. டைரி எழுதுனதெல்லாம் சரி. ஒரு தேதி போட மாட்டாளோ ?

    ReplyDelete
  3. //டைரி எழுதுனதெல்லாம் சரி. ஒரு தேதி போட மாட்டாளோ ?//
    மார்கழி 13-ம் தேதி நடக்கும் போதே எழுதினால் தேதி குறிக்கத் தேவையில்லாமல் போயிருக்கலாம். நீங்க உங்க time-machine பதிவுகளில் போய் இதைப் பார்த்துச் சொல்லலாமே!!

    ReplyDelete
  4. அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி என்று விநாயகர் அகவலில் ஔவையார் சொன்னார். அது மாதிரி இங்கே கோதை நாச்சியாரும் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று அறிவியலை இறையியல் ஆன கண்ணன் பாசுரத்தில் கொண்டு வருகிறாள். போதரி என்ற சொல் விளக்கம் மிக அருமை. நன்றி KRS
    amas32

    ReplyDelete
  5. இந்தப் பாடலின் ராகம் அடானா. தூங்குபவர்களை அடித்து எழுப்புவது போல இருக்கும்.ஒரு பாடலில் இப்படி அதட்டும் ஆண்டாள் இதற்கு அடுத்த உங்கள் புழக்கடைப் பாடலில்
    வருடிக் கொடுப்பது போல இதமாக ஆனந்த பைரவியில் பாடுகிறாள். பிறகு
    எல்லே இளங்கிளியே என்று அடியே எழுந்திரிக்க மாட்டாயா என்று கெஞ்சுகிறாள்.தூங்குபவர்களை எழுப்ப (தூங்கும் ஆத்மாவை எழுப்ப) எத்தனை விதங்களில் முயற்சி செய்கிறாள் ஆண்டாள்! (sorry two times spelling mistakes :( )

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP