Saturday, December 31, 2011

கோதைத்தமிழ்16: மலையாள நென்னல் @ThirumaranT

மக்கா, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
முன்பு 2012 ன்னு படம் வந்துச்சு! இப்ப 2012யே வந்துருச்சி:)

முருகனருளால், இப்புத்தாண்டு, அனைவருக்கும் நிம்மதி என்கிற பேரின்பத்தைக் கொண்டு வந்து சேர்க்கட்டும்!

ஒவ்வொரு ஆண்டின் முதல் நாளும், British ஆபீசர்களுக்கு என்ன வணக்கம் சொல்வது? நாம, நம்மவனுக்கு வாழ்த்து சொல்லுவோம்-ன்னு துவங்கியதே = Jan 1st திருத்தணிப் படிப்பூசை!
இன்றும் விடாமல் நடக்கும் விழா! ஆங்கிலப் புத்தாண்டு விழா, தமிழ்க் கடவுள் முருகனுக்கு!:)


மார்கழியைத் தொடர்வோமா? இன்னிக்கு பேசப் போவது Amsterdam Arignar!
யாரு? ஒரு விகடனாரைக் முகப்பில் கொண்ட விகடனார் = நம்ம திருமாறன் aka @ThirumaranT

நல்ல தமிழ் ஆர்வலர், ட்விட்டர் தமிழ் முயற்சிகளில் நல்ல புரிதல் உள்ளவர்! என்ன சொல்றாரு-ன்னு கேளுங்க! இதோ...
All thozhis have finished giving missed calls to each other & now assembled in front of Kannan Mall:)நன்றி திருமாறன்! புத்தாண்டு அதுவுமா உங்க Podcast! உங்கள் சார்பாகவும் வாசகர்களுக்கு இனிய 2012 வாழ்த்துக்கள்!:)இன்றிலிருந்து 2nd half of திருப்பாவை! அடுத்த 15 பாடல்கள்!

சென்ற பாட்டோடு,
* காலையில் எழுந்து, பெருமாளே-ன்னு சொல்லியாச்!
* ஊர் நல்லா இருக்க மழை வேணும்-ன்னு வேண்டியாச்!
* எல்லா வகையான பெண்களையும் எழுப்பியாச்!
* எல்லாரும் நோன்பில்!
* குள்ளக் குளிரக் குடைந்து நீராடியாச்!
* புறத் தூய்மை-அகத் தூய்மை ரெண்டும் பண்ணிக்கிட்டாச்!
* நேரே கண்ணன் வீட்டுக்கு!!

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக் கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியரோமுக்கு, அறை பறை


மாயன் மணி வண்ணன், நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம்! துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கு! ஏல்-ஒர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: எங்கள் ஊருக்கே நாயகன் = நந்தகோபன்! கூர்வேல் கொடுந்தொழிலன்! கண்ணனின் அப்பா! அவரு தான் ஊர்த் தலைவரு!
அவர் வீட்டைக் காவல் காக்கும் வீரர்களே, உங்களுக்கு வணக்கம்! கதவைத் திறங்கோள்!

எங்களை நேராப் பார்த்து, பறை என்னும் நோன்புச் சாமான் தருவதாக, கண்ணன் நேற்றே வாக்களித்து விட்டான்!
அதனால் நாங்களும் தூய்மையா வந்து, துயில் எழப் பாடுகிறோம்!

சாக்கு போக்கு எதுவும் சொல்லாமல், காவல் வீரர்களே, அவன் கதவைத் திறங்கோள்!
அவன் கதவே நேசக் கதவு! பாசக் கதவு! அதைத் திறந்து, எங்களை அவனுக்குக் காட்டுங்கள்!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = நென்னல்

நெருநல் என்பதன் திரிபு = நென்னல்! (மரூஉ மொழி, மருவிய மொழி)
"நெருநல்" உளன் ஒருவன், இன்று இல்லை என்னும்
பெருமை படைத்து இவ்வுலகு - ன்னு குறள்!


* நென்னல் = நேற்று!

நம்ம அண்டை வீடான மலையாளத்தில், நென்னலே-வை, இன்னலெ என்று, இன்னிக்கும் புழங்குகிறார்கள்!
* நேற்று = இன்னெல்
* இன்று = இன்னு
* நாளை = நாள

அதே போல்
* ஓர்ந்து (நினைத்து - ஓர்மையாச்சோ)
* விளி (அழைப்பு - அவள் விளிக்குன்னு)
* நோக்கு (பார்த்தல் - அவன் நோக்கியான்)
* புறம் (வெளியே - ஆயாளு புறத்துப் போயி)
* பறைதல் (சொல்லு,பேசு - எந்தா பறைஞ்சு)

இப்படி, நாம மறந்து போன தமிழ் கூட மலையாளத்தில் இருக்கு!:)
இப்படியான பண்பாட்டு ஒற்றுமை இருந்தும், வீண் மனத்தாபங்கள்!
அணையால் அணைக்க வேணாமா? புத்தாண்டில் புரிதல் வரட்டும்!
------

இந்தப் பாசுரத்தில் "தாள்"-ன்னு இருக்கு பாருங்க! = மணிக்கதவம் தாள் திறவாய்!
இலக்கிய வழக்கோ, பொது வழக்கோ...தாழ்-தாள் இரண்டுமே சரி தான்! பூட்டும் Pin/Latchஐக் குறிப்பவை!
பூங்கதவே 'தாள்' திறவாய் என்ற வைரமுத்து பாட்டும் சரியே!:)

அகராதியில் இருந்து...
தாள் = (புறநானாறு. 395).
Bolt, bar, latch; தாழ்ப்பாள். தம்மதி தாந்திறப்பர் தாள் (பு. வெ. 9, 24). Wooden catch turning on a central screw that fastens a pair of shutters; கொய்யாக்கட்டை.
15. Pin that holds a tenon in a mortise; மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும்

தாள் போடு = காலைப் போடு-ன்னு எல்லாம் டபுள் மீனிங் எடுத்துக்கிட்டு....
நமக்குப் பிடிக்கல-ங்கிற ஒரே காரணத்துக்காக எல்லாம்.....
தமிழ்ச் சொற்களை, மொழியை விட்டே துரத்தி விட முடியாது:)

அதே போலத் தான் வாழ்த்துக்கள்!
விண்ணோடும் மண்ணோடும் உடுக்களோடும்…உடுக்கள்=நட்சத்திரங்கள்! அதே போல் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்/ வாழ்த்துகள் இரண்டும் சரியான பயன்பாடே!
வாழ்த்து+க்+கள் - கள்ளைக் குடிங்க-ன்னு எல்லாம் டபுள் மீனிங் எடுத்தா, மொழியில் பாதிச் சொல்லைத் துரத்த வேண்டி இருக்கும்!:))

ஒரு மொழியில் சொல் உருவாவது, கரு உருவாவது போல!
பார்த்தீங்க-ல்ல, மலையாளத்தில் எப்படிச் செந்தமிழ்ச் சொற்கள் இருக்கு-ன்னு?:)
நம் அறியாமையால், இருக்கும் தமிழ்ச் சொற்களை எல்லாம், நாமே புறம் தள்ளி விடக் கூடாது! அந்தப் புரிதல் வரவேண்டும்!

* நெருநல் - நென்னல் = New Years Eve
* இன்று = Happy New Year 2012! புத்தாண்டு வாழ்த்துக்கள்:)
Read more »

Friday, December 30, 2011

கோதைத்தமிழ்15: ஒல்லை @iamkarki

மக்கா...இன்னிக்கிப் பேசப் போறது ஒரு ட்விட்டர் பிரபலம்! குறும்படப் பிரபலம்! Blog பிரபலம்! - பிராப்லமோ பிராப்லம்:))
வேற யாரு? நம்ம எடுப்பட்ட பய, குஜ்ஜூ குமரன், தோழியின் தோழன் = @iamkarki தான்!:)

ஆளைப் போல் அல்லாமல், கார்க்கியின் குரலில் மென்மை, என்னைப் போலவே!:)
கார்க்கி = மென் குரல்! இன் குரல்! வசீகரமான குரல்!

அடங்கொய்யால! இவனுக்கு என்னடாத் திருப்பாவை பத்தித் தெரியும்? எந்த மடையன்டா இவனைப் பேசக் கூப்பிட்டது-ன்னு கேக்குறீயளா? ஐயோ! நானில்லை நானில்லை!:))

ஆண்டாளை யாரும் பேசலாம்! எலக்கியவாதி தான் பேசணும் என்பதற்கு தமிழ் ஒன்னும் மேட்டுக்குடியல்ல!
தமிழ் = யாவருக்கும் எட்டும் குடி = எட்டுக்குடி! கேளுங்க கார்க்கித் தமிழில் கோதைத் தமிழை!நன்றிடா! கலக்கிட்ட கார்க்கி! I enjoyed கார்க்கித் தமிழ்!:)டூயட் (Duet) முதலில் போட்டது யாரு? = ஆண்டாள்
அட, மெய்யாலும் தாங்க சொல்லுறேன்! கோதை தான் மொத டூயட் போட்டா!
இன்னிக்கி ஒரு டூயட் இல்லாம காதலே இல்லை-ன்னு ஆகிப் போச்சு! :)

இந்தப் புன்னகை என்ன விலை? = எல்லே இளங் கிளியே!
என் இதயம் சொன்ன விலை! = இன்னும் உறங் குதியோ?

அதே மெட்டில், பி.சுசீலாம்மா பாடின மாதிரியே, பாடிப் பாருங்க! ha ha ha! எப்படி இருக்கு?

கோதை போட்ட டூயட் நண்பர்களுக்கு இடையில் தான்! காதல் டூயட் அல்ல! Conversational Tunes, Dialogue Tunes-ன்னு சொல்லுவாய்ங்க!
முதலடி ஒருத்தர் கொடுக்கணும்! அடுத்த அடி இன்னொருத்தர் எடுக்கணும்!

* இந்தப் புன்னகை என்ன விலை? = என் இதயம் சொன்ன விலை!
* இவள் கன்னங்கள் என்ன விலை? = இந்த கைகள் தந்த விலை!
* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ? =  சில்லென்று அழையேன்மின்! நங்கையீர் போ-தரு கின்றேன்!

எப்படி இருக்கு ஆண்டாள் டூயட்? இது போன்று ஆங்கிலப் பாடல்களிலும் உண்டு!
Donna: I work all night, I work all day! = Group: Ain't it sad? That's too bad!
(Mamma Mia Musical)
You are sixteen going on seventeen! = I am sixteen going on seventeen
- என்று Sound of Music-இல் வருவதும் கிட்டத்தட்ட இந்த வகையே!

இது போல பாடல்கள் இப்போ பெரிய விடயமில்லை தான்! ஆனா அந்தக் காலத்தில்? யார் பாடி இருக்கா, 1200 ஆண்டுக்கு முன்னால?
பொதுவா நாட்டுப்புறப் பாட்டுகள் தான் இப்படி இருக்கும்! ஏற்றம் இரைக்கும் போதும், சுமை தூக்கும் போதும் இப்படி மாறி மாறிப் பாடுவாய்ங்க!


* மூங்கில் இலை மேலே, தூங்கும் பனி நீரே =  தூங்கும் பனி நீரை, வாங்கும் கதிரோனே!
ஏற்றம் இரைப்பது, நாட்டுப்புற வாழ்வு - இதெல்லாம் கோதை உன்னிப்பா பார்த்திருப்பாள் போல!
அதை அப்படியே இலக்கியத்துக்கு எடுத்து வருகிறாள்!* எல்லே, இளம் கிளியே, இன்னம் உறங்குதியோ?
# சில் என்று அழையேன்மின்! நங்கையீர் போதருகின்றேன்!
* வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்!
# வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!

* ஒல்லை நீ போதாய்! # உனக்கென்ன வேறுடையை?
# எல்லாரும் போந்தாரோ? # போந்தார் போந்து எண்ணிக் கொள்!
வல்-ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:

இவள்: எலே, இன்னுமாத் தூங்குற?
அவள்: ச்ச்சீ...சில்ல்-ன்னு கூப்பிடாதங்கடி...இவ்ளோ காலைல! வரேன் வரேன்!

இவள்: ஏய்...நீ எப்படிப்பட்ட தில்லாலங்கடி-ன்னு தெரியும்! எங்க கிட்ட என்ன சொல்லி டபாய்க்கலாம்-ன்னு உன் வாய் முன்னமே திட்டம் போட்டு வச்சிருக்குமே!
அவள்: உக்கும்...நான் ஒன்னியும் இல்ல! நீங்க தான் தில்லாலங்கடி!

இவள்: சரி சரி, சீக்கிரம் வந்து தொலை!
அவள்: எல்லாரும் வந்துட்டாங்களா?

இவள்: தோடா! வந்தாச்சு வந்தாச்சு, வந்து நீயே எண்ணிக்கோ!
அவள்: அன்று மதயானையை அடக்கினானே! எதிரிகளை ஒடுக்கினானே! மாயோன்...அந்தக் கண்ணன் வீட்டுக்குத் தானே போறோம்?

எல்லோரும்: ஆமாம்! தமிழ்க் கடவுளான மாயோனைப் பாடுவோம் வாருங்கள்!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = ஒல்லை!

ஒல்லை வா = வேகமா வா!
சட்-னு வா, சரேர்-னு வா ன்னு சொல்றோம் அல்லவா? அதே போல் ஒல்-என்று வா என்பதும் ஒலிக் குறிப்பு!

இன்னும் சில சொற்கள்:
* எல்லே = எலே, என்ன-லே, வா-லே-ன்னு நெல்லைத் தமிழ்/ தென்பாண்டித் தமிழ்!
* சில்லென்று = சில்-ன்னு குளிரில், சிலிர்க்க அழைக்காதே!

* போந்தாரோ? = போந்தார்! போந்து எண்ணிக் கொள்!
போதுதல் என்பது பாவையில் மறுபடி மறுபடி வரும்!
நீராடப் போதுவீர், போதுமினோ, போதராய், போதருகின்றேன், போதருமா போலே, போந்தார் போந்து = இப்படிப் பல "போதுகள்"!

போது என்றால் என்ன? = போதலா? (அ) வருதலா??
=>நீராடப் போதுவீர் = நீராடப் போகின்றவர்களே!
=>போந்தாரோ? போந்து எண்ணிக் கொள் = வந்துட்டாங்களா? வந்து நீயே எண்ணிக்கோ
அப்போ போதுதல் = போ? இல்லை வா? :)

ரெண்டுமே தான்!
போது = Move! It can be either Come or Go!
Can I come with you?ன்னும் கேட்கிறோம்! Can I go with you?-ன்னும் கேக்கறோம்-ல்ல?
அதே போலத் தான்:) முன்னிலை ஒருமை/பன்மை வினைமுற்று!

நாளைக்கு யாரு? = ஆம்ஸ்டர்டாம் ஆளு! ட்விட்டர் அறிஞ்ச அறிஞரு...தமிழ் ஆர்வலர்.....வர்ட்டா?:)
Read more »

Thursday, December 29, 2011

கோதைத்தமிழ்14: புழக்கடை @raguC

மக்கா, இன்னிக்கி பேசறவரு தமிழ் ஆர்வலர் மட்டுமில்ல! தண்ணி ஆர்வலரும் கூட! அட... நான் சொல்லுறது நீர்ப்பாசனத் தண்ணி-ங்க:)
அணை - மதகு - பாசனம் - அறிவியல் ன்னு அவர் பதிவுகளை வாசிங்க தெரியும்! இதோ @raguC உங்கள் முன்பு!நன்றி ரகு! இயல்பான, செறிவான பேச்சு!


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள்,
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண் பல்-தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்!


எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய், எழுந்திராய்! நாணாதாய், நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு, ஏல்-ஓர் எம் பாவாய்.


மேலோட்டமான பொருள்: ஏன்டீ, உங்க புழக்கடையில், ஒரு சின்ன குளம் இருக்கே! அதுல தாமரைப் பூவெல்லாம் பூத்து, ஆம்பல் (அல்லி) பூவெல்லாம் கூம்பிருச்சி! இன்னுமா எழுந்திருக்கலை நீயி?

செங்கல் வண்ணத்துல கூறை உடை உடுத்திக்கிட்டு, பல வெள்ளை மனசு முனிவர்கள், கோயில் நோக்கி சங்கு ஊதிக்கிட்டே போறாங்கடீ!

என்னமோ எங்களையெல்லாம் எழுப்பி விடுவேன்-ன்னு வாய் மட்டும் பேசின நீயி? வாடீ நாணாத நங்கையே! சங்கு-சக்கரம் ஏந்திக் காட்சி குடுக்கும் கண்ணனைப் பாடி வருவோம்! கிளம்பு கிளம்பு!இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = புழக்கடை

இன்றைய நகரா-நரக-நகர வாழ்க்கையில் 2BHK, 3BHK, Patio, Cul-de-sac, Walk-in Closet, இன்னும் என்னன்னமோ சொல்லுறோம்!
புழக்கடை-ன்னா என்ன? எத்தினி பேருக்கு அது தெரியும்? எத்தனை பேர் வீட்டுல இருக்கு? இல்லை புழக்கடை Patio ஆகி விட்டதா? :)

புழக்கடை = புழை+கடை!
* கடை-ன்னா கடைசி;
* புழை-ன்னா குறுகிய வாயில்!
குறுகிய வாசலைத் தாண்டி, வீட்டின் கடைக் கோடியில் இருப்பது புழக்கடை!

என்ன அழகான தமிழ்க் காரணப் பெயர் பார்த்தீங்களா?
புழக்கடை புழங்கும் கடையும் கூட! சின்ன தோட்டம், குளம் கூட இருக்கும்!
பண்ட பாத்திரங்களை இங்கு தான் பல நேரங்களில் விளக்குவார்கள்!
துணியும் காயப் போட்டுக்கலாம்! புழக்கடையைத் தாண்டினா அடுத்து கொல்லை தான்! கொல்லையில் கழிப்பறைகளும் உண்டு!

புழக்கடை = சின்னப் பசங்க ஒளிஞ்சி விளையாட சூப்பரான இடம்!
கூடை, வைக்கோற் புதர், துணி மேடை, கிணற்றடி-ன்னு ஒளிஞ்சிக்க நிறைய இடங்கள்! கோழிக் கூண்டுல கூட ஒளிஞ்சிக்கலாம்!:) உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்!

நாளைக்கிப் பேசப் போறது...ட்விட்டர் பிரபலம்...பல தேர்தல்-லயும் வெல்லும் வீரரு! யாரு? வர்ட்டா?:)
Read more »

Wednesday, December 28, 2011

கோதைத்தமிழ்13: ஆண்டாளும் அப்துல் கலாமும்!

Today's Podcast was supposed to be from a Celebrity!:)
பாவம், அவருக்குச் சற்று வேலை அதிகம்! அதனால் இன்னொரு Celebrity-ஐ பார்ப்போம்:) = ஆண்டாளும், அப்துல் கலாமும்!

என்ன பேச்சு இது? அப்துல் கலாமா? ஆண்டாள் எப்போ ராக்கெட் விட்டா? ஏவுகணை விட்டா? விண்வெளி ஆராய்ச்சி பண்ணா? பாக்கலாம் வாரீயளா? :)


வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று! - அப்படின்னா என்ன?

வெள்ளிக்கிழமை பொறந்தாச்சி! வியாழக்கிழமை ஓடியே போச்சு! அப்படின்னு ஆண்டாள் சொல்ல வராளா?
ஆனால் செவ்வாய் எழுந்து திங்கள் உறங்கிற்று-ன்னு எல்லாம் அவள் பாடினா மாதிரி தெரியலையே! அப்படின்னா இதுல வேற ஏதோ ஒன்னு இருக்கு!

வெள்ளி=Venus! வியாழன்=Jupiter!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று = Venus rose as Jupiter set!பகலவன் உதிக்கும் முன்னுள்ள வைகறை வேளையில், வானிலே விடி வெள்ளி தெரியும்!
இன்னிக்கிக் கூட, புது வீட்டுக்குப் போகும் போதோ, சொந்த வீடு கட்டிக்கிட்டுப் போகும் போதோ, வெள்ளி எதிரே போகாதே-ன்னு சொல்லுவாய்ங்க!

* அதிகாலைச் சூரியன் உதிப்பதற்கு முன்னால் வானில் ரொம்ப வெளிச்சம் இருக்காது!
* அதனால் பூமிக்கு மிக அருகில் உள்ள வெள்ளிக் கிரகம் (Venus) ஒரு நட்சத்திரம் போல தெரியும்! வெறுங் கண்ணாலேயே பார்க்கலாம்!
* ஆனால் வியாழன் (Jupiter) அவ்வளவு சீக்கிரம் தெரியாது! தன் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் போது மட்டுமே தெரியும்!


வியாழன் கிரகம் ஒரு பக்கமாய் மறைய,
எதிரே வெள்ளிக் கிரகம் தோன்றும் வானியல் நிகழ்வு இது!

பார்க்கிறாள் கோதை! அவள் காலத்தில் நடைபெற்ற ஒரு அதிசய வானியல் நிகழ்வை உடனே குறித்து வைக்கிறாள் அவள் திருப்பாவை டைரியில்!
ஒரு கோதையின் டைரிக் குறிப்பு!

எப்போதெல்லாம் இப்படி அதிசய நிகழ்வு நடந்தது என்பதை விஞ்ஞானிகளின் துணையோடு, வானியல் குறிப்பை ஆராய்ந்தார்கள்!
அதை வைத்து ஆண்டாளின் காலம் கி.பி 855 என்றும் வரையறை கூடச் சிலர் செய்தார்கள்! நாம் அந்த ஆய்வுக்குள் போகாமல், இந்த நுட்பத்தை மட்டும் இப்போதைக்கு ரசிப்போம்!

ஆண்டாள் காலத்தில் மட்டும் தான் இப்படி நடந்ததா? அதுக்கு அப்பறம் இப்படி நடக்கவே இல்லையா? நம் காலத்தில் இவ்வாறு எல்லாம் நடந்துள்ளதா?
இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடித் தான் நடந்திருக்கு! Nov 28 - Dec 01, 2008! இதோ செய்தி!

Pic Shot on Dec-01-2008, during Venus-Jupiter Conjunction

* நீங்க யாராச்சும் அன்னிக்கி இதைக் கண்டீர்களா?
* டைரியில் குறிச்சி வச்சீங்களா?
* பதிவு ஏதாச்சும் போட்டு, பதிஞ்சு வச்சீங்களா? :)
அறிவியல் காலத்தில் வாழும் போதே நாமெல்லாம் இப்படின்னா, கிராமத்துப் பொண்ணு கோதை இது பற்றி அன்றே பதிஞ்சி வைப்பதைப் பாருங்கள்! இப்போ தெரியுதா அவளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்?

* மன்னர்களின் அந்தப்புர லீலைகளைச் அக்காலப் புலவர்கள் சிலர் உலாவாகப் பதிந்து வைத்தார்கள்!
* மானிடனைப் பாடாது, இறைவன் அருளை மட்டுமே பாட்டாக வடித்து வைத்தார்கள் இன்னும் சில அருட்கவிஞர்கள்!
* ஆனால் ஆண்டாள் இன்னும் ஒரு படி மேலே போய், அறிவியல்-வாழ்வியல்-இறையியல் என்று அத்தனையும் சமதளத்தில் கொண்டு வருகிறாள்!

இப்போ தெரிகிறது அல்லவா, அவள் பாவை மட்டும் தனித்து நிற்கக் காரணம் என்ன-ன்னு?
Space Data Aggregator, Andal திருவடிகளே சரணம்! :)


புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக், கீர்த்திமை பாடிப் போய்ப்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!!


புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்,
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய், நீ நன்னாளால்,
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கொக்காக வந்த அரக்கனின் வாயைக் கிழிச்சவன்! பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன்! அவன் புகழைப் பாடி, பெண்கள் பலரும் பாவை நோன்பின் குளக் கரைக்குப் போயிட்டாங்க!

அட! வானத்திலே, வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று! அதிசய நிகழ்வு!

பறவைகள் ஒலிக்கத் துவங்கியாச்சி!
பெண்ணே, வீட்டின் குளியல் அறைக்குள்ளேயே முடங்கி நீராடமல், பாவைக் களத்துக்கு வந்து குடைஞ்சிக் குடைஞ்சி நீராடு!
அதை விட்டுட்டு, நல்ல நாள் அதுவுமா இப்படித் தூங்கலாமா? வா, எங்களோடு கலந்து விடு!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = போதரி!
நாதா* -ன்னு எல்லாம் ட்விட்டரில் சிலர் பேசுறாங்களே! அதில்லை இது:))

போதரிக் கண்ணினாய் = போது + அரிக் கண்ணை உடையவளே!
போது=விரியும் மலர்; அரி=வண்டு!
அது என்ன வண்டு+மலர்-ன்னு ரெண்டையுமே கண்ணுக்குச் சொல்லுறா?

அந்தப் பொண்ணு அப்படித் தான் தூங்குறாளாம்! பூப்போல விரிந்த கண், அதில் கருவண்டு போல உன் கருமணி நல்லாவே தெரியுது!
இப்படியா விழிச்சிக்கிட்டே அரைத் தூக்கம் தூங்குவ? அடிச்சீ! எழுந்து வாடீ!:))

ஆண்டாள் காட்டும் உவமையின் வீச்சைப் பாருங்க...
முழிச்சிக்கிட்டே தூங்கும் கண் = போது அரிக் கண்!

நாளை, இன்னொரு தமிழன்பப் பையன் பேசுவான்! நான் விமானத்தில் இருப்பேன்! பதிவு தானியங்கியில் பதிப்பிக்கும்! வர்ட்டா?:)
Read more »

கோதைத்தமிழ்12: SweetHeart @nilaakaalam

மக்கா, இன்னிக்கி திருப்பாவை பேசப் போறது, ஒரு பெண்புலி! பெண்நிபுணி! பெண் FM:)
வேற யாரு? நம்ம @nilaakaalam (எ) நிலா தான்!

அவங்க சும்மா எல்லாம் பேச மாட்டாங்களாம்! ஒவ்வொரு பேச்சுலயும் BGM (எ) பின்னணி இசை இருக்கணுமாம்! அப்போ தான் பேசுவாங்களாம்!
அதுக்காக, இவங்க Podcastக்கு, நான் என்ன இளையராஜா-வையா BGM போடச் சொல்ல முடியும்?:)

கேளுங்க ஒலிக் கோப்பை!
விடிகாலை ஒலி, மாடு கத்தும் ஒலி, இராம-இராவணக் கத்திச் சண்டை ஒலி, எழுந்திருக்கும் ஒலி, காதல் ஒலி-ன்னு...
பின்னணி ஒலிகளோடு...கோதை ஊருக்கே நம்மைக் கூட்டிப் போறாங்க!

இந்தப் பெண்ணின் மிக வித்தியாசமான Podcast! அழகா யோசிச்சிச் செஞ்சி இருக்காங்க! நல்ல மாற்றுச் சிந்தனை!
நிலா நிலா ஓடி வா! நில்லாமல் பேசி வா!
FM Station ஏறி வா! இசை நிலவு கொண்டு வா:)நன்றி நிலா! நல்ல முயற்சி! எழிலான பேச்சும் ஒலியும்! வாழ்த்துக்கள்!கனைத்து, இளம் கற்றெருமை, கன்றுக்கு இரங்கி,
நினைத்து, முலை வழியே, நின்று பால் சோர,
நனைத்து, இல்லம் சேறாக்கும்! நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ, நின் வாசற்கடை பற்றிச்,


சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற,
மனத்துக்கு இனியானைப் பாடவும், நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேர் உறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கன்னுக்குட்டியைப் பார்த்தவுடன் மனசு இரங்கிப் போய்...எருமை கனைக்கிறது! நினைத்த மாத்திரத்தில் தானாவே பால் வடியுது!
இப்படி வடியும் பால் ஆறாய் ஓடி, வீட்டையே சேறாக்குகிறது! அடியே நற்செல்வன் என்னும் கண்ணனின் ஆருயிர்த் தோழனின் தங்கச்சியே, எழுந்திருடீ!

ஒரே பனி பெய்யுது எங்க தலை மேலே! இருந்தாலும் உன் வீட்டு வாசலில் வந்து உன்னைக் கூப்புடுகிறோம்! எதுக்கு?
இலங்கை வேந்தனைச் சினந்து வென்றவன்! அவன் தானே நமக்கு Sweet Heart? அவனைப் பாடும் ஒலி கேட்டுமா நீ வீட்டைத் திறக்கலை?

அப்படியென்ன ஒரு பெரிய தூக்கம்? அக்கம் பக்கத்து வீட்டுக்கெல்லாம் உன் தூங்குமூஞ்சிப் புராணம் தெரிவதற்குள் எழுந்து, எங்களோடு வாடீ!இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = மனத்துக்கினியான்!

Sweet Heart என்று காதலில் கொஞ்சுகிறோமே? அதுக்கு நல்ல மொழியாக்கம் என்ன? தமிழைப் படுத்தாத தமிழ்ப்படுத்தல் என்ன?:)
கோதை ஒரு நல்ல மொழியாளர்! மிக அழகான சொல்லாக்கம் தருபவள்! இதோ தருகிறாள் பாருங்கள்! Sweet Heart = மனத்துக்கினியான்!

அடுத்த இரண்டு நாளும், தானியங்கிப் பதிவுகள்! Posts & Tweets are scheduled:) வர்ட்டா?:)
Read more »

Tuesday, December 27, 2011

கோதைத்தமிழ்11: "பொண்டாட்டி" என்றால் என்ன?

மக்கா...இன்று பேச வேண்டிய நம்ம @4SN குழந்தை, As I am Suffering from thoNdai katting-ன்னு விடுப்புக் கடிதம் விடுத்ததால்...
@4SN க்கு இணையான @வேளுக்குடி பேசுவதைச் "சற்றே" கேளுங்கள்:) செஞ்சொற் தமிழ்க் கொண்டல்!
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறல் அழியச், சென்று செருச் செய்யும்,
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே, போதராய்!


சுற்றத்து, தோழிமார் எல்லாரும் வந்து, நின்
முற்றம் புகுந்து, முகில் வண்ணன் பேர் பாட,
சிற்றாதே, பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏல் ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கன்றை, கறவை மாட்டுக்கு அருகே விட்டு, பால் கறக்கும் ஆயர்கள்....போருக்கும் செல்லக் கூடிய சங்கத்தமிழ் வீரர்கள்!
தங்கள் ஆநிரைகளை எதிரி நாட்டுப் படைகள் கவர்ந்து போகும் போது, வெட்சி/கரந்தைப் பூச்சூடி இந்தப் போர்!

இப்படியான கோவலர்கள் வீட்டுப் பெண்ணே! பாம்பின் படம் போல் அதிசய வளைவுடீ உன் இடுப்பு! அதை ஆட்டி ஆட்டி, எழுந்து வாடீ:)

இத்தனை தோழிகளும் உன் வீட்டின் முற்றத்தில் வந்து நிக்கறோம்-ல்ல? அவனைப் பாடுறோம்-ல்ல? அப்பறம் என்ன இன்னும் தூக்கம் வேண்டிக் கிடக்கு உனக்கு?

சிற்றாதே பேசாதே = முணுமுணுக்காதே, கத்தாதே! பணம் படைத்த பெருந்தனக்காரியே! இப்படித் தூங்கி என்னத்த கண்ட? வா வெளியே! போவோம்...அவனைக் காண!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = பெண்டாட்டி!:)

பொண்டாட்டி என்பது கொச்சை போலவும், மனைவி என்பது தான் நல்ல தமிழ் போலவும், இன்னிக்கி ஒரு மாயத் தோற்றம் வந்துருச்சி! 
ஆனா உண்மையிலேயே பெண்டாட்டி = ஓர் அழகிய தமிழ்ச் சொல்!

பெண்டாட்டி = பெண்டு + ஆட்டி
* பெண்டு = பெண்
* ஆட்டி = ? (ஆட்டி வைப்பதாலா?:))))

=> ஆட்டல் = நிர்வகித்தல்
இல்லத்தை நிர்வாகம் செய்பவள் ஆதலாலே = ஆட்டி!
ஆளுதல்=ஆள், ஆட்டி! ஆளுதல் doesn't always mean rule! ஆளுதல்=நிர்வகித்தல்! முறம் ஆள வசதியா இருக்கு-ன்னு சொல்றோம்-ல்ல? அதான்!

ஆட்டி என்பது ஒரு வகை பெண்பால் விகுதி!
சீமாட்டி, பெருமாட்டி, மகவாட்டி, கோமாட்டி (கோமான்) என்றெல்லாம் பல வகை ஆட்டிகள், தமிழிலே உண்டு!

அதுக்காக குரங்கு+ஆட்டி-ன்னெல்லாம் நீங்க யோசிச்சா, அதுக்கு நான் பொறுப்பில்லை-ப்பா!:) உங்களை நோக்கி, எம்பெருமானின் சக்கரத்தை விட, என் முருகனின் வேலை விட, சக்தி வாய்ந்த பூரிக்கட்டை பறக்கட்டும்:))


இன்றைய பாசுரத்தில்...இன்னும் பல நற்றமிழ்ச் சொற்கள் இருப்பதால், விட மனசில்லாது, சுருக்கமாக் காட்டிச் செல்கிறேன்!

* கற்றுக் கறவை = கன்று + கறவை
* கோவலர் = மாடு + காப்போர் = ஆயர்கள்

* முற்றம் = Itz not a Corridor, But an Inner Court Yard!
வீட்டிற்கு உள்ளே, முன்பக்கத்தில், வானம் பார்த்தபடி, சூழ்ந்து இருக்கும் பகுதி!

* சிற்றாதே-பேசாதே
= முணுமுணுக்காதே-உரக்கவும் பேசாதே!


* அல்குல் = பெண் குறி (அ) மேல்-இடுப்பு (based on context)
Hip = இடுப்பு
Waist = அல்குல்
Therez a difference between Hip & Waist! See Picture!
The Curve between her Hip & Waist is so sexy:) Like the head of the cobra!
So கோதை coins a Beautiful Tamizh Chol = புற்று அரவு அல்குல் புனமயிலே!

நாளைக்கு பேசப் போவது...என்னைத் தம்பி தம்பி-ன்னு ஓட்டும் ஓர் இன்குரல் இசைக்காரி:) வர்ட்டா?
Read more »

Sunday, December 25, 2011

கோதைத்தமிழ்10: நாற்றம்-தேற்றம் @Kuumuttai

மக்கா, வணக்கம்! இன்னிக்கி திருப்பாவை பேசப் போறது, என் நண்பன், கூமுட்டை!
ஒரு கூமுட்டையை எல்லாம் எதுக்குடா நண்பனா வச்சிக்கிட்டு இருக்கே?-ன்னு கேக்காதீக:)) இது வேற = @kuumuttai என்ற Twitter குல திலகம்!:)

சில பேரிடம் நேரில் பேசியது கிடையாது, பார்த்தது கிடையாது! அவ்வளவு ஏன்?...கூமு குரலே இப்பத் தான் எனக்குத் தெரியும்!
ஆனாலும் அதையும் தாண்டி ஒரு நட்பு ஆழமாய் இருப்பது சற்று வியப்பு தான்!

அதுக்காக என்னைய சோழன்-ன்னோ, கூமு-வைப் பிசிராந்தையார்-ன்னோ எல்லாம் நான் சொல்ல வரலை! சேச்சே, கூமு-க்கு செந்தமிழ் அவ்ளோவா வராது:))
ஆனாலும் இசை! எனக்காகவே கூமு, youtube-இல் ஏற்றிய அபூர்வ பாடல்கள் நிறைய!
அதையும் தாண்டி சிலுக்கு என்னும் தாரகை! அவளே எங்களுக்கு வழிகாட்டி!:))

என் முருகன் எனக்குக் காட்டுவதெல்லாம்...குமரன், செந்தில், சண்முகம்-ன்னே வருது:)
கூமு-வின் குரலில் இன்றைய திருப்பாவை! கூமு (எ) பெங்களூர் குமரன் இதோ உங்க முன்னே!நன்றி கூமு! தென்கச்சி சாமிநாதன் போல என்னமா BuildUp குடுக்குற நீயி?:) கோர்வையான பேச்சு!


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்,
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன்! நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்! பண்டு ஒரு நாள்


கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்,
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: அவனை அடைய, நோன்பு நோற்கும் தோழியே! நீ கதவைத் தான் திறக்கலை, வாயைக் கூடவாத் திறக்க மாட்டே? எழுந்து பதில் சொல்லுடீ!
மணம் மிக்க துளசியைச் சூடிய கண்ணன்! அவனைப் போற்றிப் பாட, அதிகாலையில் எழுந்து போகிறோம்!

முன்பு, அவனிடம் தோற்றானே, கும்பகருணன்! அவன் உன்னிடமும் தோற்று, அவன் தூக்கத்தை உனக்குக் குடுத்துட்டானோ என்னமோ?
ஆற்றும் செருக்கும், ஞானச் செருக்கும் உனக்கு ரொம்ப இருக்கு போல! அதெல்லாம் வேணாம்டீ என் நல்லவளே! நிச்சயமாய் வந்து கதவைத் திறடீ!இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = நாற்றம்-தேற்றம்!

நாற்றம் = மணம்
பேசிப் பேசி...கும்மியடித்து அடித்து, இன்னிக்கி இது துர்-நாற்றத்தை மட்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!:)
ஆனா அது நறு-நாற்றத்தையும் குறிக்கும்!
நாற்றத் துழாய் = துளசி என்பதால்...இங்கே நறுமணம்!

நாறுதல் என்பதே மூலப் பெயர்!
எப்படி, கண்=பார்த்தலோ, மூக்கு=நாறுதல்!
Can you Smell it? = அதை நாறுகிறாயா? (அ) முகர்கிறாயா?
நாற்றம் பொதுவான சொல்!
-------

"தேற்றமாய்" வந்து கதவைத் திற-ன்னு சொல்லுறாய்ங்க! = Come & Surely open the door
தேற்றம் = நிச்சயம்/ உறுதி!

Pythagoras Theorem = பிதாகரஸ் தேற்றம்-ன்னு சொல்லுறோம்-ல்ல?
அது கணித உறுதிப்பாடு! a^2 + b^2 = c^2 இது நிச்சயம் இப்படித் தான் என்பதால் = தேற்றம்!
தேற்றேகாரம்-ன்னும் சொல்லுவாய்ங்க!
"ஏ"காரம் நிச்சயத்தன்மையைக் குறிக்கும்! என் கடன் பணி செய்து கிடப்ப"தே"! If u want to add surety, add ஏ to the end:) கிடப்பது & கிடப்பதே!
-------

கூமு கேட்ட கேள்வி = மாற்றமும் தாராரோ?
மாற்றம் = மாற்று மொழி! (alternate word)

ஒருவன் ஒன்னு சொன்னா, அதுக்குப் பதில் மொழி சொல்லுறது = மாற்றம்!
அவனோடு "மாறு" = Debate with him!
"மாறு"படு சூரரை வதைத்த முகம் ஒன்று!
கதவைத் தான் தொறக்கல, மாற்றமாச்சும் தர மாட்டியா? Can you not exchange words?

நாளைய பேச்சாளர் = நானா?:)
Read more »

Saturday, December 24, 2011

கோதைத்தமிழ்09: மாடம் @amas32

மக்கா...இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
இயேசு நாதப் பெருமான் அவதரித்த இந்தக் குளிர் மார்கழி நன்னாளிலே, எளியோரின் மனமெல்லாம் குளிரட்டும்!
கர்த்தரின் திருமகனுக்கு நல்வரவு = என்&முருகன் சார்பாக:)

இன்று கோதையின் பாவையைப் பேசப் போவது, இன்னொரு பெண்! தாய்! = @amas32 என்னும் சுஷிமா சேகர்!

ட்விட்டரில், நம் பலருக்கும் அறிமுகமானவர்! ஒரு இளைஞியைப் போல் துடிப்பாகக் கீச்சுபவர்! தமிழ்ப் பாக்களின் தீவிர வாசகி! பின்னூட்டப் புயல்:)
அவர் கீச்சைக் கண்டிருக்கிறீர்கள்! ஆனா அவர் குரலைக் கேட்டிருக்கீங்களா? இதோ...நன்றிம்மா! உங்களுக்கு மிகுந்த பொறுமை-ன்னு நினைக்கிறேன்! நிறுத்தி நிதானமா...மென்மையா விளக்குறீங்க! வாழி:)
உங்கள் தமிழ்ப் பலுக்கல் (உச்சரிப்பு) அருமை! chonnaan ன்னு என்னைப் போலவே சொல்றீங்க!:) என்னைச் சொல்ல வைத்தது என் தூத்துக்குடி உயிர்த் தோழன்:)
chol, not sol = அதுவே தொல்காப்பியத் தமிழ் மரபு!தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரியத்,
தூபம் கமழத், துயிலணை மேல் கண் வளரும்,
மாமான் மகளே! மணிக் கதவம் தாள் திறவாய்!
மாமீர், அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்


ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: வீட்டின் மாடங்களில் நேற்று இராத்திரி வைச்ச விளக்கெல்லாம் இன்னும் லேசா எரிஞ்சிக்கிட்டு இருக்கு! தூபப் புகை வேற லேசா கமழுது!
நல்ல வசதியான வீட்டுப் பொண்ணே, பஞ்சு மெத்தைத் தூக்கம் போதும்! கண்ணைத் தொற, வீட்டையும் தொற:)

மாமி, இவளைக் கொஞ்சம் எழுப்புறீங்களா?
உங்க பொண்ணு என்ன ஊமையா? செவிடா? சோர்வோ? யாராச்சும் மந்திருச்சி விட்டுட்டாங்களோ? இந்தத் தூக்கம் தூங்குறா?

(கன்னிப் பெண்கள் கனவுகளோடு நல்லாவே தூங்குவாங்க!:)
ஆனா கல்யாணம் ஆச்சோ! தூக்கம் போச்சோ!:)
குழந்தை வாய்ச்சோ! தூக்கம் போச்சே போச்சோ! :))

சங்கத் தமிழ்க் கடவுள் = மாயோன், மாதவன், வைகுந்தன் என்று எத்தனை திருப்பெயர்கள் இருக்கு!
அதையெல்லாம் பாடலாமே? ஏன் இப்படித் தூங்கி வழியிறா? எழுந்திருக்கச் சொல்லுங்க-ம்மா!


இன்றைய எழிலான சொல் = மாடம்!

மாடம், மாடம்-ன்னு பேசுறோம்! "மாட" மாளிகை-ன்னு அடிக்கடி சொல்லுறோம்! ஆனா மாடம்-ன்னா என்னாங்க?
பார்த்து இருக்கீங்களா? இன்றைய நகர வீடுகளில், மாடம் என்பதே சுத்தமா ஒழிஞ்சிப் போச்சி!:( இதோ ஒரு கிராமத்து விளக்கு மாடம்!


கிராமத்து வீடுகளிலும், ரேழிகளிலும், மாடம் வச்சித் தான் சுவர் கட்டியிருப்பாங்க! சுவரைக் குடைந்தாற் போல இருக்கும்!
விதம் விதமான Style! விளக்கு வைப்பதற்கென்றே அந்தக் காலத்தில் கட்டப்பட்டவை மாடங்கள்!

பொழுது ஆச்சுன்னா இல்லப் பெண்கள் ஒவ்வொரு மாடமா விளக்கு வைப்பாங்க!
இப்பல்லாம் கிராமத்து மாடங்களில் கூட....கார்த்திகைக்கு மட்டும் தான் மாட விளக்குகளைப் பார்க்க முடிகிறது!

சாமி மாடம், விபூதி மாடம், கோவிந்த மாடம், துளசி மாடம், புறா மாடம்-ன்னு நிறைய இருக்கு!
ஆனா மாடம்-ன்னா...அதுக்குப் பொருள் என்ன?

மாடம் = உயர்வு! 
மாடி-ன்னு சொல்லுறோம்-ல்ல? மாடத்தில் இருந்து தான் மாடி வந்தது!

மாடம் = உயரத் தூக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடம்!
விளக்கு மாடத்தைச் சுவரில், உயரத் தூக்கி வச்சி இருப்பாங்க! அப்போ தான் வெளிச்சம், வீடு முழுக்கப் பரவும்!

Corridor = உப்பரிகையும் மாடம் தான்! வீட்டின் மேலே உயரமான இடத்தில் உள்ளது!
புறா மாடமும் அப்படியே! சாமி மாடம்/ விபூதி மாடமும் உசரமான இடத்தில் தான் இருக்கும்! மாட மாளிகை = மாடிகள் உள்ள மாளிகை!

வீடுகளில் விளக்கு மாடம் இருந்தா, அதன் அழகே தனி! மாடம் வச்சி வீடு கட்டுவோம்!:))

நாளைக்கி பேசப் போறது....ட்விட்டர் பெரும்புயல்...என்னைப் போலவே சில்க் ஸ்மிதா ரசனையாளர்! இசையாளர்......வர்ட்டா?:)
Read more »

Friday, December 23, 2011

கோதைத்தமிழ்08: சேவித்து @balaramanL

மக்கா, இன்றைய #PaavaiPodcast பேசப் போறது, ட்விட்டரில் பெரும் தமிழ் ஆர்வலர்! தமிழ்க் கவிதைகளில் மாறுபட்ட வடிவங்களைப் படைத்துப் பார்ப்பவர்!
யாருய்யா அது? = எறுழ்வலி பலராமன் @balaramanL

ஆகா! அது என்னா எறுழ்வலி? அப்படின்னா?
அவரோட வலைப்பூவின் பேரு அது! என்னா பொருள்-ன்னு அவரு வந்து சொல்லட்டும்! இல்லீன்னா அங்கே போய் கட்டாயம் பாருங்க:)

இதோ...உங்கள் முன்னால் நற்றமிழ் நவில...நன்றி பலராமா! பேருக்கேத்தபடி, பலமான பேச்சு!:) என்ன மக்களே, ஐயா-வைப் பெண்கள் கல்லூரி விரிவுரையாளரா அனுப்பிச்சீறலாமா?:)


கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான், பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலம் உடைய


பாவாய், எழுந்திராய்! பாடிப் பறை கொண்டு!
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய,
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,
ஆ-வா என்று ஆராய்ந்து, அருள் ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கிழக்கு வானம் வெளுத்துருச்சி! எருமை மாடுகளைச் சிறுவீட்டில் (கொல்லைப் புல்வெளி) மேய விட்டாச்சி!
கோயிலுக்குப் போற பொண்ணுங்களையெல்லாம் புடிச்சி வச்சிக்கிட்டு, "இருடீ, இவளும் வரட்டும்"-ன்னு உனக்காகத் தான்டீ காத்துக்கிட்டு இருக்கோம்!

துள்ளலான பொண்ணே, எழுந்துருடீ, பறையடிச்சி நோன்பு கொண்டாடும் நேரம் வந்துருச்சி!
முன்பு குதிரை அரக்கனின் வாயைப் பிளந்தவன், கொல்ல வந்த மல்லரை மடக்கியவன் - நம்ம கண்ணன்...

அவனை இங்க இருந்தே சோம்பேறித்தனமாக் கும்பிடாம, அங்கு மற்ற அடியவர்களோடு....சென்று + சேவிப்போம்!
அவன் நம்மைப் பார்த்தவுடனேயே, ஆ-வா ன்னு வியப்பும் அன்புமாக் கூப்புடுவான்!
நம் விருப்பங்களை ஆராய்ந்து அருள் செய்வான்! ஓடியா! போவோம்ம்ம்ம்ம்!இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = சேவித்தல்!

பொதுவா, திருமால் கோயில்களில் மட்டுமே...பெருமாளைச் சேவிச்சிக்கோ-ன்னு சொல்லுறது வழக்கம்!

முருகனைச் சேவிச்சிக்கோ, சிவபெருமானைச் சேவிச்சிக்கோ, அம்பாளைச் சேவிச்சிக்கோ-ன்னு யாரும் அவ்வளவா சொல்லுறது இல்லை! ஏன்?
இவ்விடங்களில், "தரிசனம்"-ன்னு வடமொழியில் சொல்வதே பெரும்பாலும் வழக்கம்!

ஆனால் கிறித்துவம் - புனித விவிலிய (Holy Bible) - தமிழாக்கத்தில், "கர்த்தரைச் சேவித்து அவர் நிழலில் இளைப்பாறி இருப்பாய்"-ன்னு வரும்!
ஆக...இந்தச் "சேவித்தல்", சில பேரு மட்டுமே நுணுக்கமாய்க் கையாளுறாங்க! சேவித்தல்-ன்னா என்ன?

செய்தல் -> செய்வை -> சேவை -> சேவி

* சும்மா போய், இறைவனை 'லுக்கு' விட்டுட்டு வராம...
* தன்னைப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளுதல் = சேவித்தல்!

வெறுமனே 'தரிசனம்' என்பது வைணவத்தில் அவ்வளவாக இல்லை! அடியார் தொண்டு 'செய்'யணும்! அடியவர் தொண்டே ஆண்டவன் தொண்டு!
மாலை தொடுத்தலோ, கோயில் ஒழுகலோ, உணவு இடலோ, பாசுரம் சேவித்தலோ...ஏதாச்சும் ஒன்னு...
= "செஞ்சாத்" தான், 'சேவித்த' பலன் கிடைக்கும்!

செய்வை-ன்னு கலித்தொகை, புறநானூறு பேசும்!
பரிசிலர் இடத்தே இனியவை "செய்வை" -ன்னு, பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடுவாங்க!
இந்தச் செய்வை தான் -> சேவை ஆச்சு! 
"சேவா" தள் (Seva Dal)-ன்னு வடமொழியில் இருப்பதெல்லாம், இங்கிருந்து போனது தான்! அதன் மூலம் = செய்வை-சேவை!

இப்படி, இறைக் காட்சியை, அடியவர் தொண்டோடு சேர்த்துவிட்டு, செய்வை->சேவை! சேவி...என்று ஆனது!
* பெருமாளைச் சேவி-ன்னா, வெறும் "Darshan"-ன்னு நினைச்சிக்காதீங்க!:)
* மானுட சேவை செய்து, அவனையும் கண்டால் மட்டுமே "சேவித்தல்"! 
அதுவே நல்லது! அப்படியே செய்விப்போம்/ சேவிப்போம்!

நாளை, இன்னொரு பெண் பதிவர், நமக்கெல்லாம் தாய்ப் பதிவர்...பேசுவார்! வர்ட்டா?:)
அனுமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!:)
Read more »

Thursday, December 22, 2011

கோதைத்தமிழ்07: கீச்சுகீச்சு @KumaranMalli

மக்கா, வணக்கம்! இன்னிக்கி பேச இருந்தது, ஒரு பெரிய நாத்திகர் = நம்ம @tbcd 
ஆனா, ஆத்திகம் கிட்ட நாத்திகம் தோத்துருச்சி:))

திடீர்-ன்னு @tbcd "As I am suffering from fever"-ன்னு கடிதம் போட...நாத்திகத்தை நிரப்ப வந்தது யாரு?:) = என் பதிவுலக குருநாதர்!
தமிழ்ப் பதிவுலகின் ஆன்மீக சூப்பர் ஸ்டார் என்று கொடி கட்டிப் பறந்த "கூடல் குமரன்" @kumaranmalli பேசும் Podcast இன்று!

என் பதிவுகள் கூடல் ஏறி இருக்கு! ஆனால் குமரன் பதிவுகள் பந்தல் ஏறியதில்லை!
இதுவே முதல் முறை! ஆகா! வருக குமரன் அண்ணா வருக! வற்றாத் தமிழின்பம் தருக!

கேளுங்க மக்கா...குமரனின் வீச்சை, பேச்சை!நன்றி குமரன் அண்ணா!
உங்களால் ரெண்டு மணி நேரம் கூட இதப் பத்திப் பேச முடியும்-ன்னு எனக்குத் தெரியும்!
ஆனா ரெண்டே நிமிடம் பேசு-ன்னு உங்களைக் கூண்டுக்குள் அடைத்து விட்ட இந்த KRS "நாயகப் பெண் பிள்ளையை" மன்னித்து அருள்க!:))

இந்த 'எழுப்பும்' பாட்டை, குமரன், தன் மகளான தேஜஸ்வினிக்கு பாடித் 'தூங்க' வைக்கும் ஒலிச்சுட்டி இதோ!:)


கீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக், கை பேர்த்து,
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்


ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:  கருங்குருவி (ஆனைச்சாத்தன்) பறவைகள் கீச் கீச் எனக் கீச்சுகின்றன! அது உன் காதுல விழலையாடீ?
அடி பேய்ப் பெண்ணே, ஆய்ச்சி தயிர் கடையும் சத்தம்...புர்ர் புர்ர்-ன்னு புலி உறுமுறாப் போல...கேக்கலையா உனக்கு?

அவளோட கையில் - தங்க நகையின் மேல் முத்தும் பவழமும் உராயும் சத்தம் கூடவா கேக்கலை உனக்கு?

தமிழ்க் கடவுளான திருமாலைப் பாடுகிறோம்! கேட்டும், கேட்டுக்கிட்டே தூங்குற மூஞ்சியைப் பாரு!
ஏய்ய்ய்ய்....கோச்சிக்காத....மூஞ்சில ஒளி மின்னுதுடீ! கதவைத் திறடீ! கள்ளீ!


இன்றைய எழிலான சொல் = வாச-நறுங்-குழல்!

கீச்சு = Tweet!
கீச்சு கீச்சு-ன்னு பறவைகள் கீச்சியதை...முதல் பதிவிலேயே பார்த்துட்டோம்-ல்ல? அதனால் இன்னிக்கி வேற சொல் எடுத்துப்போம் = குழல்!

குழல் = புல்லாங்குழல் (அ) கூந்தல்!

*குழல்வதால் = குழல்! காரணப் பெயர்!
தமிழில் வினையை (செயலை) ஒட்டி அமைந்த காரணப் பெயர்களே அதிகமா இருக்கும்! நாமாக இட்டுக் கொண்ட இடுகுறிப் பெயர்கள் மிகவும் சொற்பமே!

=>செல்வதால் = செல்வம்
=>இடுவதால் = இட்லி
=>தோய்ப்பதால் = தோசை
=>குழலுவதால் = குழல்

குழலுதல் = சுருண்டு-வளைதல் = Curl 
* பெண்/ ஆணின் கூந்தல் அப்படி இருந்தால் = குழல்!
* கூந்தலுக்குச் சரி! ஆனா புல்லாங்குழலுக்கு எப்படி அதே பேரு வந்துச்சி?

புல் + ஆம் + குழல்
* புல் = மூங்கில் என்பது ஒரு வகைப் புல்! (Bamboo is a weed/grass)
* ஆம் = ஆன
* குழல் = ஓட்டைகளில் காற்று சுருண்டு-வளைந்து, இசை வரும்

மூங்கிலால் ஆன + குழலுதல் ஓசை வருவதால் = புல்+ஆம்+குழல் = புல்லாங்குழல்!
தமிழ்ப் பேர்களே அவ்ளோ நல்லா இருக்கு-ல்ல? வாங்க, திருப்பாவையில், தமிழின்பத்தில் தோய்வோம்!

நாளிக்கி, ஒரு தமிழ் அறிஞர் - தமிழ் ஆர்வலர் பேசப் போறாரு! யாரு?:) வர்ட்டா?:)
Read more »

Wednesday, December 21, 2011

கோதைத்தமிழ்06: Function Overloading @PSankar

இன்னிக்கிப் பேசப் போறவரு ஒரு Techie Guy! ட்விட்டரில் மேலாண்மைக் கருத்துக்களைக் கீச்சுபவர்! @psankar

Android  மணம் கமழுற ஒருத்தரு, தமிழ் மணமும் கமழ, இதோ...கேளுங்க வெங்கலக் குரலை:)
ஆண்டாள் Function Overloading செஞ்சி இருக்காளாம்!
அடிப்பாவி, நீயும் software பொண்ணாடீ? கிழிஞ்சிது போ!:) பேசாம என்னை மாதிரி bankingக்கு வந்துறேன்டீ:)நன்றி சங்கர்! இரத்தினச் சுருக்கமா, கோதைத்தமிழை Techie ஆக்கிய உம்மை மறக்கவே மாட்டேன்:) கல்லூரியில் படித்த C++ க்குச் சென்று விட்டேன்!

function int GenerateRandomNumber(int Value)
{
return rand * Value
}


function int GenerateRandomNumber(int MinValue, int MaxValue)
{
return MinValue + rand * (MaxValue - MinValue)
}

ஒரே பேரு!
ஆனா குடுக்குற குடுப்பைப் பொருத்து, விதவிதமான அமைப்பை உருவாக்கலாம்! அதானே?
தோழி கோதையும் அதைத் தான் பண்ணுறாளோ? :)

function string அரவம்(சங்கு)
{
return சத்தம்
}


function string அரவம்(கடல்)
{
return பாம்பு
}

:))
ஐயோ...என்னை அடிக்க வராதீங்க! சும்மா பழைய ஆர்வத்தில் Try பண்ணேன்! எதுனா ஒரு compilerல compile பண்ணிக்கோங்க ராசாக்களா/ ராணிகளா:))


புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய் முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி,

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து, "அரி" என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: பறைவைகள் கீச்சத் துவங்கியாச்சு! பறவையரசன் கருடன் கோயில்ல, சங்கு ஊதுற சத்தம் உன் காதுக்கு கேட்கலயா? எழுந்திருடீ!

பூதகி என்னும் பேயிடம் பால் குடிச்சவன்; சகடம் என்னும் சக்கரமாய் வந்த அரக்கனை அடக்கியவன்!
பாற்கடல் வெள்ளத்தில் துயில் அமர்ந்தவன்! = "அமர்ந்தவன்"? = உட்கார்ந்து கிட்டே தூங்குவாரோ ஒங்க பெருமாள்?:))

அவனை உள்ளத்தில் ஏந்திக் கொண்டு, சான்றோர்கள், "அரி அரி" என்று சொல்லியவாறு செல்கின்றார்களே!
அந்தச் சத்தம், நம் உள்ளத்தில் போய், ஒரு குளிர்ந்த தன்மையைக் குடுக்குதே! எழுந்துரு செல்லம், எழுந்துரு!:)


இன்றைய எழிலான சொல் = ஓச்சி!

ஓச்சுதல்-ன்னா என்ன? இராசராச சோழன் கோலோச்சினான்-ன்னு படிப்போம்-ல்ல? = செங்கோலை ஓச்சுதல்!
* சோழன் கோல் ஓச்சினான்
* கண்ணன் கால் ஓச்சினான்

ஓச்சுதல் = உயர்வு/ எழுச்சி
செங்கோலை உயரத் தூக்கிப் பிடித்து அரசாளுதல் = (செங்) கோல் ஓச்சுதல்!
அதே போல் கண்ணன், காலை உசரத் தூக்கி, மாய அரக்கன்-சக்கர உருவில் வந்தவனின் மேலத் தன் காலை வச்சான்-ன்னு பாடுறா தோழி!

அடுத்த தபா, யாராச்சும் ரொம்பவே அலட்டினாங்க-ன்னா, என்னடா, ரொம்பத் தான் ஓச்சுற?-ன்னு தாராளமாக் கேட்கலாம்:)
ஆண்டொரு கணிச்சியை அவுணன் ஓச்சினான்-ன்னு கந்த புராணத்தில் இன்னொருத்தரு பாடுவாரு! பொருள் என்னைய கேக்காதீக! கண்டிப்பாக 18+ :)

நாளைக்கு Podcast = நாடறிஞ்ச நாத்திகர்!:))) வர்ட்டா?
Read more »

Tuesday, December 20, 2011

கோதைத்தமிழ்05: செப்பண்டி @UmaKrishh

மக்கா, இன்றைய Twitter குரல் = பெண் குரல்! நன் குரல்! மதுரைக் குரல்!
பாசுரமும் = "மதுரை" மைந்தனை!
வேற யாரு? நம்ம @UmaKrishh தான்!:)

இவங்க கிட்ட, டீச்சரைக் கண்டால் போல், எனக்கு பய பக்தி! அடக்கியே வாசிப்பேன்:) நீங்களே கேளுங்க...என்னமா நயவுரை சொல்லுறாங்க-ன்னு!

இது உமாவின் அப்பாவுக்குப் பிடித்தமான பாட்டாம்! = ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும், தன் பெண்ணைச் சான்றோள் எனக் கேட்ட தந்தை:)நன்றி உமா! உங்க "மதுரை":) வட மதுரை = வில்லிபுத்தூருக்கு வடக்கால இருக்கும் மதுரை:)மாயனை, மன்னு வட, மதுரை மைந்தனைத்,
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்,


தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கப்,
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:  சங்கத் தமிழ்க் கடவுளான மாயோன்...
அவன் கதை வடக்கே போன போது, வட மதுரை மைந்தனும் ஆனான்!யமுனை ஆற்றுத் துறைகள் அவன் விளையாட்டுத் துறைகள் ஆயின!

ஏழை பாழையான ஆயர்கள் குலத்திலே "தோன்றிய" விளக்கு!
அவனால் அவன் அம்மா வயிற்றுக்கே பெருமை!

அந்த மாயோனை, உள்ளத் தூய்மையோடு அணுகுவோம்! பாசாங்கு அலங்காரங்கள் வேண்டா!
மலர் தூவினால் போதும்! கை தொழுதால் போதும்!
வாயால் பாடினால் போதும்! மனசால் சிந்தித்தால் போதும்!

ஹோமம்/ யாகம்/ ஆடம்பரம் தேவையில்லை!
நம் வாயும், மனமுமே = வேள்வி! அந்தத் தீயில் தூசாகும்! = எது?

* போய பிழையும் = இது வரை செய்த பாவங்களுக்குக் கூலி
* புகுதருவான் நின்றனவும் = இனி வரப் போகும் கூலி
ரெண்டுமே தீயில் தூசாகி விடும்! ஆடம்பரம் இன்றி, அன்போடு வாய் விட்டுச் சொல்லுங்கள் = அப்பா, பெருமாளே!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = "செப்பண்டி"

ஐயோ...செப்பண்டி தெலுங்கு-டான்னு என்னைப் பார்த்துக் கத்தறீங்களா? :))
ஆமா, இன்னிக்கு அது தெலுங்கு ஆயிருச்சி! ஆனா அது தமிழ்ச் சொல்லும் கூட!
தமிழ்-தெலுங்கு ஒற்றுமைக்கு இப்படி நிறைய சொற்கள் உண்டு = செப்புதல், நவ்வு(நகுதல்), பாவி(வாவி) etc etc etc!:)

செப்புதல் = சொல்லுதல்
வெண்பாவின் ஓசை "செப்பல்" ஓசை! செப்பு, செப்பல், செப்பம் என்று தமிழில் சொற்கள் குவிந்து கிடக்கின்றன!

சொற்கோட்டம் இல்லது "செப்பம்" - ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்
-ன்னு குறளே செப்பு-ன்னு தான் செப்புது:)

ஆனா சில "நல்ல" தெலுங்கர்கள் ஒப்புக்கவே மாட்டாங்க!:)
வேணும்-ன்னா தெலுங்கில் இருந்து, "செப்பு", திருக்குறளுக்குச் சென்றது-ன்னு சொல்வாங்களே தவிர, "செப்பு" தமிழ் காதண்டி! காதண்டி!:)

தவறில்லை! தீவிரத் தெலுங்குப் பாசம் அப்படிப் பேச வைக்குது!
* திருக்குறள் கால கட்டம் கிமு!
* தெலுங்கின் முதல் நூலே நன்னய்யா = கிபி-ன்னு தரவு காட்டலாம்!
ஆனா, சிலருக்கு எத்தனை தரவு காட்டினாலும் ஏலாது! உண்மையை விட அவிங்கவிங்க மனசே முக்கியம்:))

கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
செய்ததும் வாயாளோ? "செப்பு"" - இது பரிபாடல் (எட்டுத் தொகை)
அண்மையில்....பாரதியார் கவிதை....
ப்பு மொழி பதினெட்டு உடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள்!


செப்பு=சொல்லு-ன்னு பார்த்தோம் அல்லவா?
ஆனா இன்னும் நிறைய இருக்கு!

1. செப்பு 2. சொல் 3. நவில் 4. நுதல் 5. நுவல்
6. நொடி 7. பகர் 8. பறை 9. பன்னு 10. பனுவு
 11. புகல் 12. புலம்பு 13. பேசு 14. மாறு 15. மிழற்று
16. மொழி 17. விளத்து 18. விளம்பு


சொல்லுதல் என்பதற்கு மொத்தம் 18 சொற்கள் தமிழில்:) ஒவ்வொன்னும் பொருள் லேசா மாறுபடும்!
எல்லா நேரமும் செப்ப முடியாது! சில நேரம் பகர வேண்டும்! சில நேரம் நவில வேண்டும்!
என்ன வேறுபாடு-ன்னு நீங்களே கணக்கு போட்டு, நாக்குச் செப்பண்டி!:)

நாளைய Twitter Podcaster = என் பேரில் உள்ள, ஆனால் என்னை விட நல்ல ட்வீட்டர்! வர்ட்டா?:))
Read more »

Monday, December 19, 2011

கோதைத்தமிழ்04: கரடி விடாதே @rsGiri

மக்கா, இன்னிக்கி ஒரு பிரபல பாடகர் பாடப் போறாரு, பேசப் போறாரு!
யாரு? = நம்ம கிரி ராமசுப்பிரமணியன் என்னும் @rsGiri யே தான்!:)

ஐந்து மாசம் முன்பு, நான் ட்விட்டருக்கு வந்த புதுசில், கிரி-யின் புகைப்படம் கண்டு, அவர் கூடப் பேசவே பயந்தேன்! நம்மைப் பாத்து மொறைக்குறாப் போலவே போஸ் இருக்கும்:)
அப்பறம் அவர் குரலைக் கேட்ட பின்னாடித் தான்...இந்த மனுசன் மென்மையானவரு-ன்னு புரிஞ்சுது:))

கிரியின் இன்-குரலில், மென்-குரலில், நன்-குரலில் கேளுங்க:நன்றி கிரி! ஒங்களுக்குத் தெரியாததா? 6 அடிகளில், 3 அடிகள் அவனைப் பத்தியே பேசுறது...சில லூசுங்க வழக்கம்!:)
எதைப் பேசினாலும், அவன் வந்து உக்காந்துருவான்! முருகா!


இந்தப் பாசுரம்...தமிழ்க் கடவுளான திருமாலுக்கு, தமிழாய் நிற்கும் பாட்டு!
மொத்தம் 11 இடத்தில், தமிழுக்கே உரிய "ழ" வரும் பாட்டு! நீங்களே எண்ணிப் பாருங்க:)

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!
ஆழி உள் புக்கு, முகந்து கொடு, ஆர்த்து ஏறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்,
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில்


ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல்,
வாழ உலகினில் பெய்திடாய்! நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: டேய் கண்ணா, எங்க கிட்ட நைசா எதையும் மறைக்காதே!
* கடலில் புகு!
* அள்ளி எடு!
* மேல் ஏறு!
* அவன் உடம்பு போல், கருமேகம் ஆகு!
* அவன் சக்கரம் போல் மின்னு!
* அவன் சங்கு போல் இடி இடி!
* அவன் வில்லில் புறப்பட்ட அம்பு போல், சரம் சரமாய் மழை பொழி!

எதுக்கு-ன்னு கேக்குறியா? = உலகத்தில் எல்லாரும் வாழணும்-டா!
மார்கழி நீராடும் உன் காதலி, உனக்கு ஆணை இடுகிறேன்! பெய் எனப் பெய்யும் மழை!இன்றைய எழிலான சொல் = "கை கரவேல்"!

அது என்ன கர-வேல்? முருகன் கரத்தில் வேல்! அப்படித் தானே?:))
எனக்கும் அப்படிச் சொல்ல ஆசை தான்! ஆனா இவ முன்னாடி ஒரு "கை" போட்டு, கை-கரவேல்-ன்னு எழுதிட்டா:)
போடீ, உன் ஆளை நீ பாடினா, என் ஆளை நான் பாடிக்கிறேன்...இல்ல முருகா?:)

கரத்தல் = ஒளித்தல், மறைத்தல்
காக்கை கரவா கரைந்து உண்ணும் = ஒரே வடை-ன்னாலும் காக்கை ஒளிக்காது! எல்லாக் காக்கையும் சத்தம் போட்டுக் கூப்பிட்டு உண்ணும்!

"கரடி விடாதே"-ன்னு சொல்லுறோம்-ல்ல?
அது என்ன கரடி?
கரடி என்ற விலங்குக்கும் இதுக்கும் என்னாய்யா தொடர்பு?

ஒரு தொடர்பும் இல்ல!:))
* கரடி = கர + டி
உண்மையை ஒளித்து (கர) + திரித்துக் கூறுவதால் = கர+டி = கரடி!
களவறிந்தார் நெஞ்சிற் கர-வு என்பது குறள் அல்லவா?

"பூசை வேளையில் கரடி நுழைஞ்சாப் போல்" - இந்தப் பழமொழியும் இதே கதி தான்!:)
ஏன்...சிங்கம், நரி புகுந்தா மட்டும் பூசை நல்லாவா இருக்கும்?
பூசை வேளையில் புலி புகுந்தாப் போல்-ன்னு சொன்னா, பு-பூ-ன்னு எகனை மொகனையா இன்னும் நல்லா இருக்குமே!
எதுக்குப் போயும் போயும் கரடியை இழுக்கணும்?:))

இறைவனை வணங்கும் வேளையிலாவது, உண்மையை மறைக்காது, தன் தவறுகளை ஒப்புக் கொண்டு, உள்ளொன்றி வழிபட வேணும்!
பூசை வேளையில், கர-டி கூடாது! ஒளிப்பும் திரிப்பும் கூடாது! 

மத்தபடி, பாவம்...விலங்கு கரடிக்கும், பூசைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லா!:))
இனி யாரும், கரடி-ன்னு கரடி விடாதீங்க!:))

நாளை Podcast-க்கு, மதுரை மீனாட்சிக்குச் சொந்தக்கார ட்வீட்டர் ஒருவங்க பேசப் போறாங்க! வர்ட்டா?:)
Read more »

Sunday, December 18, 2011

கோதைத்தமிழ்03: கயல்-உகள @MayilSenthil

வாங்க மக்கா, இன்னிக்கி ட்விட்டர் குல திலகம், ராஜா ரசிகன், மயிலேறும் பெருமாள்- @MayilSenthil கோதைத்தமிழ் பற்றிப் பேசுறாருங்கோ!:)

இதை, அம்மா-அப்பாவிடமெல்லாம் போட்டுக் காட்டி, வாழ்க்கையில் மொத முறையா நல்ல பேரு வாங்கிக் கொண்ட மயில் செந்திலின் குரலில், கேட்டு + கண்டு மகிழுங்கள்! :)


ஏயப்பா...என்னமாப் படங் காட்டுறாரு! அன்னாரின் soundcloud இங்கே! அவர் தேன் குரலைத் தரவிறக்கிக் கொள்ள விரும்புவோர்க்கு:) நயம்பட உரைத்தமைக்கு நன்றி மயிலு!:)இன்றைய பாசுரம், மிகவும் மங்களகரமான பாசுரம்!
நாங்க சைவக் குடும்பமாய் இருந்தாலும், மணமக்கள் சபையில் விழுந்து வணங்கும் போது, கிராமத்துப் பெரியங்க இந்தப் பாசுரத்தைச் சொல்லியே வாழ்த்துவாங்க! - நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

ஓங்கி உலகளந்த உத்தமன், "பேர்" பாடி,
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து,
ஓங்கு பெரும் செந் நெல் ஊடு கயல் உகளப்
,பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்!
நீங்காத செல்வம் நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!

மேலோட்டமான பொருள்: முன்னொருகால், குள்ளமாய் இருந்து, பின்பு ஓங்கி உலகளந்தாரு ஒருத்தரு!
அப்போ, உலகத்தில் உள்ள நம்ம அத்தனை பேரையும் ஒரு Surveyor போல் அளந்து, தன் பொருளை(நம்மை) தனக்கே சொந்தமாக்கிக்கிட்டாராம்!

அவன் பேரைச் சொல்லிக் கொண்டே, குளிர்-ல்ல கதகத-ன்னு குளிப்போமா?
'ஏய், உன் காதலுக்கு நாங்க ஏன்டி குளிர்ல குளிக்கணும்'?-ன்னு கேக்காதீக! இது நோன்பு-டீ! இப்படிச் செஞ்சா...

நல்ல மழை பொழியும், மழை வளத்தால் வயல் நிரம்பும்
நெல் வயல் தண்ணியில் மீனும் துள்ளும்-ன்னா பாத்துக்கோங்களேன்!
(Extra Bit: கடல் மீனை விட, ஆற்று மீன்/ வயல் மீனின் சுவையே சுவை:)

குவளைப் பூவில், பொறிவண்டு, குடிச்சிட்டுப் படுத்துக் கிடக்குது!
பசுக்கள் பாலைத் தேக்காமல், சும்மா ஒரு இழு இழுத்தவுடனேயே, குடம் முழுக்க நிறைஞ்சிரும்!
தனக்கு இல்லீன்னாலும், ஊருக்கே குடுக்கும் உண்மையான வள்ளல்=பசுக்கள்!

இப்படியான 1. மழை வளம், 2. உணவு வளம், 3. பொருள் வளம், 4. மன வளம் எல்லாம் பெருகும்! நீங்காத செல்வம் நிறையும் எம்பாவாய்!இன்றைய அழகான சொல் = ஊடு+கயல்+ உகள

அது என்ன "உகள"? பொருளை விடுங்க! உகள-ன்னு சொல்லும் போதே, மீன் அப்படியே கையில் துள்ளி நழுவற feeling வருதுல்ல?:)

* உகள = Leap, தாவுதல்!
மீனுக்குத் தண்ணில தான் மூச்சு!
அதைத் தண்ணியில் இருந்து அரை நொடிக்கு எடுத்தாலும், அது பல விதமாய் எம்பும், எகிறும், தாவும், குதிக்கும், வழுக்கும், நழுவும்!
கழுவுற மீன்-ல நழுவுற மீன்-ன்னு சொல்வோமே! அதே தான்!:)

எம்பும், எகிறும், தாவும், குதிக்கும், வழுக்கும், நழுவும்
= இத்தனைக்கும் ஒரே எழிலான தமிழ்ச் சொல் = "உகள"!


கோல நன் னாகுகள் உகளு மாலோ!
கொடியென குழல்கள் குழறுமாலோ!
மல்லிகை அலம்பி வண்டு ஆலுமாலோ!!
- இப்படியெல்லாம் அழகான தமிழ்ச் சொற்கள், ஆழ்வார்கள் அருளிச் செயலிலே கொட்டிக் கிடக்கும்!

ஆண்டாளின் இந்தப் பாட்டையே பாருங்க! இன்னும் நிறைய இருக்கு! "தினம்-ஒரு-சொல்" என்பதால் ஒன்னோட நிறுத்திட்டேன்:)
பூங்குவளைப் போது, பொறி வண்டு, சீர்த்த முலை, வள்ளல் பசு, நீங்காத செல்வம்!

அதென்ன "நீங்காத செல்வம்"? செல்வம்-ன்னாலே நீங்குறது தானே? செல்வம், செல்வம், செல்வோம்-ன்னு நகர்ந்து கொண்டே இருப்பது தான் பணம்! Cash"Flow"!
= அப்பறம் என்ன நீங்காத செல்வம்? யோசிங்க:) வர்ட்டா?:)

நாளைய குரல், podcasted by a perfect singer on twitter:)
Read more »

Saturday, December 17, 2011

கோதைத்தமிழ்02: பைய @ChPaiyan

வாங்க, வாங்க...கோதைத் தமிழ்த்தேரில் இன்று கன்னடமும் கொஞ்சிப் பேசுகிறது:)

இன்னிக்கி @ChPaiyan (ச்சின்னப் பையன்) பேசுறாரு!
அது என்ன ச்ச்ச்ச்சின்ன?:)
கேட்டுட்டு நீங்களே சொல்லுங்க; இவரு சின்னப் பையனா, இல்லை பல விடயங்கள் அறிந்த பெரிய பையனா-ன்னு?:))நன்றி ச்சின்னப்பையரே:)
கன்னடமும் களிதமிழும் சேர்த்துக் குடுத்த சுவைக்கு நன்றி!


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன், "அடி" பாடி,
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாள் காலே நீராடி,மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக் குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆ(கு)ந் தனையும் கை காட்டி,
உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம் பாவாய்
.


மேலோட்டமான பொருள்: நேற்றிலிருந்து காதலிக்கத் துவங்கியாச்சி! அவனே எனக்கு வரணும்-ன்னு நோன்பு!
நான் மட்டும் தனியாவா நோன்பு? சேச்சே! நீங்க நண்பி-கள்! நீங்களும் என் கூட விரதம் இருக்கணும்டீ! (ஐயோ பாவம், காதலர்களின் நண்பர்கள்:)))

* நெய், பாலு-ன்னு கலந்து கட்டித் திங்காம,
* காலையிலேயே நீராடி,
* மை,மலர்-ன்னு புற அலங்காரம் ரொம்ப இல்லாம, அக-அலங்காரம் செய்துகிட்டு...

* யாரு பத்தியும் குறளை (கோள்) சொல்லாம = பொண்ணு உசாரு:) தன் காதலை ஊரெல்லாம் பேசிப் பரப்பிடுவாங்களோ-ன்னு பயந்து, கோள் சொல்லாமையை நோன்புக்குள் கொண்டாந்து வைக்குறா:)

* ஐயமும், பிச்சையும் = மற்றவர்களுக்கு இயன்ற வரை உதவி செய்வோம்! அதையும் கடமையே-ன்னு செய்யாம, "உகந்து" செய்வோம்!

=>ஐயம் = ஒரே நிலையில் உள்ளவர்களுக்கு குடுப்பது!
=>பிச்சை = தன்னிலும் மேலான/ கீழான நிலைக்கு குடுப்பது!
துறவி/ பெரியவர்கள் எடுத்துக் கொள்வதும் பிச்சை தான்! ஏழைகள் எடுத்துக் கொள்வதும் பிச்சை தான்!
எனவே யாரையும் "பிச்சை" என்று கேவலமாகப் பேசுவது வேண்டாம்!இன்றைய எழிலான சொல் = பைய
கோயமுத்தூரு, கொங்கு, தென் தமிழ்நாட்டுல அதிகம் புழங்கும் சொல் = "பைய"! பையப் பேசுங்க-ப்பு!

பைய = மெல்ல...
இது நற்றமிழ்ச் சொல் தானா? ஏதோ பேச்சு வழக்கு சொல்லு மாதிரி-ன்னா இருக்கு?
அட போங்கய்யா! சென்னைக்காரங்களுக்குச் செந்தமிழ் வாசம் என்னிக்குத் தான் புரிஞ்சிருக்கு?:)))
தென்பாண்டித் தமிழாலத் தான், இன்னிக்கும் பல நல்ல சொற்கள், தமிழில் உயிர்ப்போடு உள்ளன!

* பைம்மை = மென்மை
* பையப் போ = மெல்ல போ!

...........யான் நோக்கப்/  பசையினள் "பைய"   நகும்!
-ன்னு குறளே, "பைய"ன்னு தான் சொல்லுது! ஆண்டாளும் சொல்லுறா! தெக்கத்திக்காரங்க, கொங்கு மக்கள் இன்னிக்கும் சொல்லுறாங்க!

நகும்-ன்னாலே மென் சிரிப்பு! அப்போ, பைய நகும்-ன்னா...எவ்வளவு மெல்லிய சிரிப்பு? கணக்கு போட்டுக்குங்க!
பையத் துயின்ற பரமன் = இறைவனுக்குத் தூக்கம் ஏது? அறி துயில்! அதுவும் மெல்ல்ல்ல்ல்லிய துயில்! அதுக்கு கவிஞர். ஆண்டாள் ஆளும் சொல் = "பைய"!

வாய் விட்டுச் சொல்லிப் பாருங்க = பைய்ய்ய்ய்யத் துயின்ற....அப்படியே மெத்தென்ற கட்டிலில்...மெல்லிய தூக்கம் வருது-ல்ல?:)

பைய = உரிச்சொல்!
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்-ன்னு உங்க காதில் எப்பவோ விழுந்திருக்குமே?:)

கார்க்கி தோழியொடு பைய வந்தான்!
* கார்க்கி & தோழி = பெயர்ச்சொல்
* வந்தான் = வினைச்சொல்
* (தோழி) ஒடு = இடைச்சொல்
* பைய = உரிச்சொல்!

கார்க்கியை உரிச்சி வச்சாச்சி, போதுமா?:)
நாளைக்கி பார்ப்போம், மயில் மேல வரும் ட்வீட்டர் ஒருவர் Podcast-இல் பேசுவதை:)
Read more »

Friday, December 16, 2011

கோதைத்தமிழ்01: நேரிழை @nchokkan @dagalti

தமிழ் அன்பர்கள் - Twitter நண்பர்கள் - பந்தல் வாசகர்கள் எல்லோருக்கும், குளிர்ர்ர்ந்த-கதகதப்பான மார்கழி வாழ்த்துக்கள்:)

* இந்த ஆண்டு மார்கழியில், ஒரு தமிழ்த் தேர்!
* ஊர் கூடி இழுப்பது = Tamil Twitters!
ஒவ்வொரு நாளும் உங்கள் அபிமான Twitter நட்சத்திரங்கள்! 

அவங்க கீச்சுகளை.....படிக்க மட்டுமே அல்லாது, அவங்க குரலைக் கேட்கவும் போறீங்க!:))
 PaavaiPodcast - Entirely Podcasted by Tamil Twitters!!

திருப்பாவை என்னும் தமிழ்த் தேரை ஓடவிட்டவள் = ஒரு அற்புதமான காதலி!
அவனோட செவ்வாய் நாறுமோ? தித்தித்து இருக்குமோ?-ன்னு 1000 ஆண்டுக்கு முன்பே வெளிப்படையாக் கேட்டவ! காதலனை, Publicஆ ஓட்டி மகிழ்ந்தவ!:)

அது என்ன ட்விட்டர் மக்கள் மட்டும் தான், தேரை இழுக்கணுமா?
தமிழ் =அனைவரின் சொத்து! எல்லாரும் விளையாடலாம் வாங்க!:)
ஆனா Twitter-க்கு மட்டும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு! என்னான்னு தெரியுமா?

Tweet = சிறு பறவைகளின் சத்தம்!
Lil' Birds are Tweeting! தமிழில் = கீச்சு!

கீச்சு கீச்சு என்றெங்கும், ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
-ன்னு அன்னிக்கே Tweetஐ = கீச்சு ஆக்கியவள் தோழி கோதை! அதான், இன்னிக்கி இத்தனை Twitter மக்களும் இங்கே = "கீச்சு"கின்றனர்!:))

ஆங்.....வாங்க..............எல்லாரும் ஒரு கைப்பிடிங்க! எல்லாருக்கும் இளஞ்சூடான பனைவெல்லப் பானகம்!
ஆங்.....இழுங்க............தமிழ்த் தேர் அசைந்து, அசைந்து...
மாசறு பொன்னே வருக! மணி ரதமதில் உலவ...தமிழே வருக!

இதோ...நாம் அனைவரும் அறிந்த...நாக சொக்கநாதன்!
Naga S/ எழுத்தாளர் சொக்கன்/ @nchokkan கொடியசைத்து, துவக்கி வைக்கிறார்! கம்பீரமான/வேகமான சொக்கனின் குரலைக் கேளுங்க :))நன்றி சொக்கரே!:)
அது ஏன்-யா திருப்பாவை மட்டும், 1000+ ஆண்டுகளா, இத்தனை பிரபலம், இத்தனை பேச்சு-கீச்சுகள்? அப்படி என்ன தான்-யா அதுல இருக்கு?

பணம்? சண்டை? காமெடி? 'ஜா'தக-'ஜோ'சிய பரிகாரம்? = ஒன்னுமே இல்ல! ஞானம்/தத்துவம்-ன்னு அடுக்கலை!
* எளிய தமிழ் இருக்கு!
* நட்பு இருக்கு!
* நட்பு-க்குள்ள தினமும் பேசிக்குற பேச்சு இருக்கு! = அதான் இத்தனை வெற்றி!

பல உரைகள் இருக்கு! நாம அதுக்குள்ள எல்லாம் போவப் போறதில்லை! ஆராயாமல், அனுபவிக்க மட்டுமே போகிறோம்:)))


@dagalti = நமக்கெல்லாம் நல்லாத் தெரியும்! பேரைப் போலவே ஆளும் டகால்ட்டி:)
கம்பன் கவியில் தோய்பவர்!
Twitter Timeline-இல் திடீர்-ன்னு தோன்றி, அசால்ட்டா கலக்குபவர்! ஆனா அவரு குரலு எப்படி இருக்கும்? கேட்டு இருக்கீயளா? இதோ!மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்?
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
,ஏர் ஆர்ந்த கண்ணி, யசோதை இளம் சிங்கம்,
கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!
நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்!!
பாரோர் புகழப் படிந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!மேலோட்டமான பொருள்:  இந்தக் காலத்துப் பொண்ணுங்க, காதலனைக் காதலிக்கத் தொடங்கும் முன்னர் ஒரு Bio-Data போடுதுங்க-ல்ல? அது போலப் போடறா ஆண்டாள்! :)

* மொதல்ல Dating Date-ஐக் குறிச்சி வச்சிக்கிறா = மார்கழித் திங்கள்! மதி நிறைந்த நன்னாள்!
* அப்புறம் ஊரு = சீர் மல்கும் ஆய்ப்பாடி!
* அப்புறம் Daddy = கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன்! - கையில் வேலு இருக்காம்....இவரு நந்த-கோபனா? கந்த-கோபனா?:))
* அப்புறம் Mummy = ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை!
* அப்புறம் அவ ஆளு = கார்மேனி(கருப்பன்), செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!

* அவன் பேரு = ?
அதை மட்டும் "கண்ணன்"-ன்னு சொல்லாம, மறைச்சி வைக்குறா! புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை!:)


இன்றைய அழகான சொல் = நேர்+இழை
இழை = Fibre
ஒளி+இழை = Optical Fibre
மெல்லீசா, நுட்பமா, ஒன்னுக்குள்ள ஒன்னு 'இழை'ந்து இருப்பது = இழை!

ஒட்டி உறவாடும் சில நண்பர்களைப் பார்த்து, "ஏன்டா நீங்க ரெண்டு பேரு மட்டும் இப்படி இழையறீங்க"-ன்னு கேக்குறோம்-ல்ல?:)
இலக்கியத்தில் பெண்களுக்கு = இழை-ன்னே பேரு! இழைவா இருக்காங்க-ல்ல?:))

* நேரிழை
* சேயிழை
* ஏந்திழை (ஏந்தி இருக்காங்களாம் நகையை)
* ஆயிழை (ரொம்பவே ஆராய்ஞ்சி shopping பண்ணுவாங்க போல:)
* முறுக்கிழை (வளையல்)

அன்மொழித் தொகை-ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? பள்ளியில், இலக்கணக் குறிப்பு-ன்னு 6th முதல் 12th வரை கொடுமைப் படுத்துவாங்களே?:)))

எப்பமே, தேர்வுக்காகப் படிக்கும் போது புடிக்காத ஒன்னு,...
அப்பறமா சாவகாசமாப் படிக்கும் போது ரொம்பப் பிடிச்சிப் போயீரும்!

ஆபிசில் அவளைக் கண்டாலே பத்திக்கிட்டு வரும்! ஆளு இனிக்க இனிக்கத் தான் பேசுறா, ஆனா சரியான அல்டாப்பு கேசு-ன்னு முதலில் முறைப்பு, அப்பறமா அதுவே காதலாகி இனிக்குதே!
அதே போலத் தான்! சொல்லிக் குடுக்குறவங்க சொல்லிக் குடுத்தா, தமிழ் ரொம்ப ரொம்ப இனிக்கும்!:)

அன்மொழி = அல் (இல்லை) + மொழி
பல சொற்கள் நேரடியா இடம் பெறாது; நாமளாச் சேர்த்து....பொருள் கூட்டிப் புரிஞ்சிக்கணும்! அதான்....அன்+மொழி+தொகை!
=> நேரிழை வந்தாள் = இழை(யை) (அணிந்திருக்கும்) (பெண்) வந்தாள்

* இதுல 'ஐ' மறைஞ்சி (தொகைஞ்சி) வருது = 2ஆம் வேற்றுமை
* 'அணிந்திருக்கும்'-ன்னு நாமளாச் சேர்த்துக்க வேண்டியிருக்கு!
* முக்கியமா, 'பொண்ணு'-ன்னே சொல்லல! :)) நாமளாக் கற்பனை பண்ணிக்க, இவ என்ன Anushka-வா?:)

இப்படி, 2ஆம் வேற்றுமை தொகைஞ்சி, கூடவே பலதும் தொகைஞ்சி வருவதால்....
*** நேரிழை = 2ஆம் வேற்றுமைத் தொகை + புறத்துப் பிறந்த + அன்மொழித் தொகை!
சுருக்கமா = அன்மொழித் தொகை!:) Ok-vaa?:))

நாளைக்கு எந்த ட்விட்டரு-ப்பா Podcasting?
அவரு பேருலயே முத்தம் இருக்கும்! அவரே தான்!:)
அது வரை வர்ட்டா style-இல் வரட்டா?:)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP