Thursday, August 01, 2013

ஒர் ஈழத் தமிழனே= உலகத் தமிழ் மாநாட்டின் தந்தை!

Xavier தனிநாயகம் அடிகள்!
= இந்த "ஈழத் தமிழரின்" நூற்றாண்டு விழா.. நாளை (Aug 2 - 2013)

யாருய்யா இவரு?
= நமக்குத் தெரியுமா?
= தெரியலீன்னாலும் பரவாயில்லை; தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கா? - நல்ல தமிழுக்கு உழைத்த நல்லோர் பற்றி?
மறைந்த நடிகை மஞ்சுளா அவர்களின் மருமகன் = "இயக்குநர் ஹரி" -ன்னு தெரிஞ்சி வச்சிக்கறோம்!
கலைஞரைப் பிடிக்காதவர்கள் கூட, அவர் பேரன் பேரு = "ஆதித்யா" -ன்னு தெரிஞ்சி வச்சிக்கறாங்க;
ஆனால்,  Xavier தனிநாயகம் அடிகள்??

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் - பாரதி

2000+ ஆண்டுக்கு முன்னுள்ள தொல்காப்பியத்  தமிழ் /  ஓசை நுட்பம் -ன்னுல்லாம் நாமளே பேசிக்கறோமே?  ஆனால் உலகம் பேசுமா???

பக்கத்தில் இருக்குற "தெலுங்கானா" நண்பன் கூட ஒத்துக்க மாட்டான் = தமிழ் 2000+ yrs முன்னுள்ள மொழி-ன்னு:)
ஆனா, "வேதம்" -ன்னு ஒசத்தியாப் பேசுவான்;
Vedas -ன்னு வெள்ளைக்காரனும் பேசுவான்! Power of Religious Marketing:)

ஆனால், தமிழையும், அப்படிப் பேச வைத்தவர் = ஒர் "ஈழத் தமிழர்"!



தமிழைத், தமிழகத்துக்கு வெளியேயும் பரவச் செய்ததில் பெரும் பங்கு! = Xavier Thanai Nayagam AdigaLar!
கிறிஸ்துவர் என்பதால், "அயல் நாட்டவர்" -ன்னு முடிவு கட்டிறாதீக! இவர் தாய் மண் = தமிழ் ஈழம் தான்!


* இராபர்ட் நொபிலி (Robert De Nobile - Italy)
* சீகன் பால்க் (Ziegenbalg - Germany)
* வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi - Italy)
* கால்டுவெல் (Robert Caldwell - Ireland)
* ஜி.யு. போப் (G.U. Pope - Canada/ England)
* ழான் பில்லியொசா (Jean Filliozat - France) (திருமுருகாற்றுப்படை & திருப்பாவை அறிஞர்)
-ன்னு பல பேரு, தமிழகத்துக்கு வெளியே, தமிழ் ஆய்வு செய்துள்ளார்கள்!

அண்மைய அறிஞர்கள்
* கமில் சுவலெபில் (Kamil Zvelebil - Praha, Czechoslovakia)
* ஜார்ஜ் ஹார்ட் (George Hart, California, USA)
-ன்னு, அந்தத் தமிழ் ஆய்வு தொடர்ந்தது/ தொடர்கிறது...

Young Xavier Thaninayagam
ஆனால்...
தனிப்பட்ட ஆய்வில் மட்டும் நிற்காமல்,
பலரையும் திரட்டியவர் = தனிநாயகம் அடிகளார்!

இப்படித் திரட்டியதால் தான், மேலும் பலருக்கு வெளிச்சம் பரவி, "தமிழ்" என்ற வெண்கொற்றக் குடையின் கீழ், பிற நாட்டு நல்லறிஞர் ஒருங்கிணைந்தார்கள்

அப்படி, அவர், திரட்ட உருவாக்கிய ஆயுதம் = "உலகத் தமிழ் மாநாடு"


Ulaga Tamizh Maanaadu - Chennai, 1968
Arignar Anna with President Zakir Hussain, Kalaignar at the back

IATR - International Assocation of Tamil Research (உலகத் தமிழ் ஆராய்ச்சிக் குழுமம்) என்பதை உருவாக்கி...
பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில், Tamil Chair என்று உருவாக வழி வகுத்து...

"உலகத் தமிழ் மாநாடு" என்றொரு நிகழ்வைத் தோற்றுவித்தவரே
= சேவியர் தனிநாயகம் அடிகளார் தான்!

1966 = 1st Word Tamil Conference = மலேசியா
2nd = Chennai
3rd = Paris
4th = Yaazh paaNam (Jaffna) - துயரம் கலந்த தமிழ் மாநாடு!

அடிகளார் இறந்து விட்டார்...

5th = Madurai
6th = Kuala Lumpur
7th = Mauritius
8th = Thanjavur

{இப்படி வழி வழி வந்த வாழையடி வாழை...
அதைத் தான் கலைஞர். கருணாநிதி, தன் வசதிக்கு வரலை-ன்னு உடைச்சாரு:(
உலகத் தமிழ் மாநாடு -> உலகச் செம்மொழி மாநாடு -ன்னு புது "அவதாரம்" எடுத்தது, 2010-இல்!

"தன் வழிக்கு வரவில்லை என்றால், தன் குடியையே பிரித்தாளு"
= இதென்ன வள்ளுவர் அறமா?
= "சாணக்கியத்" தந்திரம் அல்லவா!
வடநெறிக் காவலர் ஆகி விட்டார் போலும் கலைஞர்!

தமிழினும் காமமே பெரிது என்று "மவுண்ட் ரோடு மகா விஷ்ணுக்களோடு" சம்பந்தி ஆகி விட்டவர், வேறென்ன செய்ய முடியும்?:)
நம் பதிவுக்குத் தேவையற்ற ஒன்று; அடிகளாரைப் பற்றி மட்டும் காண்போம்!}



ஈழத்திலுள்ள காவலூர் (Kayts - ஊர்க்காவற் துறை)
யாழ்ப்பாண உச்சித் தீவுகளில் -  ஹென்றி & இராசம்மா - இவர்களின் பிள்ளையாகப் பிறந்தார் சேவியர்; (Aug 2, 1913)

யாழ்ப்பாணம், கொழும்பு என்று கல்லூரிகளில் படித்தவர்..
திருவனந்தபுரம் (இந்தியா) மூலமாக, இறையியல் (Religion) படிக்க, வெளிநாடு சென்றார்;
மீண்டு வந்து, வ.உ.சி (எ) மறத் தமிழ் அறிஞனைத் தந்த, தூத்துக்குடியில் தங்கிப் பணியாற்றினார்;

அண்ணாமலைப் பல்கலையில், தமிழறிஞர் தெ.பொ.மீ உந்துதலால், தமிழிலும் பட்டம் பெற்றார்;
அப்போது எழுந்த ஆராய்ச்சிக் கட்டுரை தான் = A study of Nature in Sanga Tamizh! (சங்கத் தமிழிலே இயற்கை)

இது, amazon.com இலும் கிடைக்கிறது;  "List of English Books on சங்கத் தமிழ்" - dosa365 தளத்திலும் கொடுத்துள்ளேன் (தினமொரு சங்கத் தமிழ்);

இலங்கைக்கே மீண்டும் சென்று, பின்பு இங்கிலாந்து, மலேசியா என்று Academic Circles - சுற்றிக் கொண்டே இருந்தார் அடிகளார்;
மலேசியப் பல்கலையில், தமிழ்ப் பேராசிரியராகவும் ஆனார்;
Academic Circles எனப்படும் கல்விக் குழுமங்களில், "தமிழ், தமிழ்" என்று புதிதாக ஒலிக்கத் துவங்கியது;

அப்படி என்னய்யா இருக்கு தமிழ்ல? 
அதுவும் வெள்ளைக்காரன் கல்லூரியில் = தமிழுக்கு எதுக்குய்யா மெனக் கெடணும்?
அடிகளார் வாயாலேயே கேட்போமா?


Nobody knows Tamizh!:(

"If Latin = is the Language of Law & Medicine
French = the Language of the Diplomacy
German = the Language of Science
And English = the Language of Commerce
Then Tamil = is the Language of Bhakti & Innate Devotion

தமிழ் மொழி = இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று! 
குறிப்பாகச் சைவர்களுக்கு மட்டுமே உரியதன்று! அப்படியொரு தோற்றம், வழி வழி வந்த பண்டிதர்களால் கொடுக்கப்பட்டு விட்டது;

தமிழ் மொழி = வைணவர், சமணர், பௌத்தர், இசுலாமியர், கிறித்துவர் என சிறுபான்மைச் சமயத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி!"
என்று வீறுடன் உரைத்தவர் அடிகளார்!

தமிழ்த் திறனாய்வு (Tamil Research) என்பதில், அடிகளார், முற்றிலுமாய்த் தலை-கீழ் மாற்றங்கள் செய்தார்;
அது வரை வ.வே.சு ஐயர், டி.கே.சி போன்றவர்கள் = 1) மதம் 2) ரசனை என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து, திறனாய்வுக்கு வித்திட்டனர்;

ஆனால், அடிகளார், பல நாடுகளிலும் பயின்றவர் அல்லவா? "அறிவியல் பார்வை" அவருக்கு இயல்பிலேயே இருந்தது!

சமய வெளியைத் தாண்டி வந்து... 
"அறிவியல் பார்வையில்" தமிழ்
என்று அணுகும் முறையைப் பெரிதும் ஊக்குவித்தார்; அதனால் தான், பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களில், தமிழ்க் கொடியும் பறக்க முடிந்தது;




"உலகத் தமிழ்" என்பதற்கும் வித்தினை நட்டார்!
எங்கே? = காங்கிரஸ் கோலோச்சும் தில்லி மாநகரில்! 1964!

தனியொரு ஆளாக, மத்திய அரசிடம், நேரில் சென்று வாதாடக் கூடிய மேலாண்மை பெற்ற அறிஞர்! (தன் "குடும்ப மந்திரிசபைக்கு" அல்ல)

தன் முன்னாள் ஆசிரியர் தெ.பொ.மீ,  டாக்டர் மு.வ  அவர்களுடன் சேர்ந்து..
Professor Filliozat (Paris), Prof. Burrow (Oxford),  Prof. Kuiper (Hague)
- என்று பன்னாட்டு அறிஞர்களையும், அரசின் முன் நிறுத்தி, தமிழ்த் திட்டங்கள் வகுக்க ஆரம்பித்தார்!

அப்படி உருவானதே! = முதல் உலகத் தமிழ் மாநாடு! (கோலாலம்பூர் - 1966)


பின்பு, அறிஞர் அண்ணா நடத்திய = இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் (சென்னை - 1968)...
"தனிநாயகம் அடிகளார் (எ) ஈழத் தமிழ்க் கொழுந்து" -என்று,
அண்ணா, அவரையே மாநாட்டுக்கு முன்னோடியாய் அறிவித்தார்; தன்னை அறிவித்துக் கொள்ளவில்லை:)

ஒரு செயல் வீரர் போல, ஓடியாடி உழைத்துச், சென்னை மாநாட்டை, அரசியலுக்கு அப்பாற்பட்டு, Academic என்று வெற்றி பெறச் செய்தார்!

அதே சமயம், "அறிஞர்" என்று அடைப்புக்குறிக்குள் தங்கி விடாமல்...
 "தமிழ்ப் பெருமை" மக்களிடமும் போய்ச் சேர வேண்டும் என்று = ரசனை மிக்கதாகவும் மாநாடு ஆக்கப்பட்டது!

சென்னைக் கடற்கரையில், எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு, திறந்து வைத்த தமிழ்ச் சான்றோர் சிலைகள், இன்றும் உள்ளன!

Some Research Papers during World Tamil Conferences:

* 1st உலகத் தமிழ் மாநாடு (கோலாலம்பூர்) = http://tamilnation.co/conferences/cnfMA66/index.htm

* 2nd உலகத் தமிழ் மாநாடு (சென்னை)
http://tamilnation.co/conferences/cnfTN68/index.htm
(ஓவியக் கலை - சங்க காலம் முதல் கம்பன் வரை - இதைத் தேடிப் படிங்க:))

* 4th உலகத் தமிழ் மாநாடு (யாழ்ப்பாணம்) = http://tamilnation.co/conferences/cnfJA74/index.htm
(தமிழ் - சிங்கள அரசர்கள் கலப்புத் திருமணம் பற்றிய கட்டுரையும் உண்டு)


தமிழ் = உலக மொழி ஆகணும்; 
(meaning: people of the world should atleast know the name of Tamizh - like Greek or Latin
They should realize, Humanity had a great culture existed & existing! = Not a Culture of Rituals, But a Culture of Heart)
அதற்கான தகுதி தமிழுக்கு உள்ளது; தமிழின் வளங்களை உலகமெங்கும் ஆங்கிலம் வாயிலாகப் பரப்ப வேண்டும் - என்பதே அடிகளார் நோக்கம்!

ஜப்பானிய/ சீன மொழிக்கும் - தமிழுக்கும் இடையில் சில ஒற்றுமை நிலவுவதைக் கூடச் சுட்டிக் காட்டியுள்ளார்;

தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம்
= இவையே, தமிழில் முக்கியமான நூல்கள், என்று குறிப்பிடுவார்;

தமிழைப் பற்றிக் குறிப்பிடும் = 1335 பிறமொழி நூல்கள்; "Reference Guide to Tamil Studies" என்ற நூலாக வெளியிட்டார்; Also available on Amazon.com
------------------------------

1974 - யாழ்ப்பாண உலகத் தமிழ் மாநாட்டில் வெடித்த வன்முறை, அடிகளாரை மிகவும் பாதித்து விட்டது!
ஒடுங்கிய நிலையில், பணிகளைத் தொடர்ந்தவர் = Sep 1 1980, யாழ்ப்பாண மண்ணிலேயே மறைந்து போனார்:(
------------------------------

எனக்குத், தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள் /  தமிழ்ப் "பண்டிதர்கள்" மீது, மிகப் பெரிய வருத்தம் ஒன்னு இருக்கு!
= ஈழத் தமிழ் இலக்கியங்கள், தமிழகத்தில் அறியப்படுவதே இல்லை!:(

1) பொதுவா, "சமயம் சார்ந்த", தமிழையே ரொம்பப் பரப்புவாங்க! அறிவியல் ஒத்த திறனாய்வு? = மிக அரிது! 

அதிலும், "சிறுபான்மைச் சமய" இலக்கியங்கள் அடக்கியே வாசிக்கப்படும்;
சங்க இலக்கியம்/ சிலம்பை விடக்...
"கம்பன்" என்றே தலையில் வைத்து ஆடும் "துதி" மனப்பான்மை கூட உண்டு!

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் போன்ற துதி மொழிகள் இளங்கோவுக்கு வாய்க்கவில்லை!
இளங்கோ வீட்டு இட்லித் தட்டும் இசை பாடும் -ன்னு பரப்பி இருக்கணுமோ?:))

கல்வியிற் பெரியவன் கம்பன்; அவனைக் குறை சொல்லவே முடியாது;
அவனை முன்வைத்து எழும்பும் குழு மனப்பான்மை/ துதி மனப்பான்மை மேல் தான் நம் வருத்தம்:(
= கம்பன் கழகம், கம்பன் விழா, கம்பன் தொலைக்காட்சி பட்டிமன்றப் பகடிகள்;
= ஆனா இளங்கோ மன்றம்? அப்பிடியொன்னு இருக்கா என்ன?

தேவாரம்/ அருளிச்செயல் ஏதோ ஒப்புக்கு இருக்கு!
அருணகிரியின் சந்தத் தமிழ்? = ஊகும்! அதெல்லாம் இலக்கியத்துக்குள்ளேயே வராது:(
சமணத் தமிழ் = ஊத்தி மூடியாச்சு:( மக்கள் கிட்ட போய்ச் சேராது;

2) சம்ஸ்கிருதம் (எ) வடமொழி மேல், ஒரு கீறலும் படாதவாறு செய்யும் தமிழ் முயற்சிகள் = இதை மட்டுமே, "பண்டிதர் குழு" வரவேற்கும்!

தனித் தமிழ்/ தூய தமிழ் எல்லாம், ஏதோ மறைமலையடிகள் காலத்தில் கொஞ்சம் முளைச்சி வந்தாலும்...

இன்று இணையத்தில், "திராவிட அரசியல் ஏளனம்" என்கிற பேரில், மெய்யான தமிழ் முயற்சிகளும் ஏளனமே செய்யப்படுகின்றன!:(

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை;
பண்டிதர்களே நிரம்பியுள்ள பதிப்புலகில்/ மீடியாவில், பாவாணர் போன்ற தனித்தமிழ் அறிஞர்கள் அறியப்படுவது அரிதே!:(

தொ. பரமசிவன் அய்யா (தொ.ப) போன்றவர்களின் தமிழ்ப் பூர்வகுடிகளின் ஆய்வு?
= நம்ம சமயத்துக்கு ஒத்து வரலை-ன்னு "தீண்டத் தகாதவர்களா" ஆக்கி வச்சிருக்கோம்:(

3) இது எல்லாத்தையும் விடக் கொடுமை 
= ஈழத் தமிழ் இலக்கியங்கள்... என்னான்னே பல பேருக்குத் தெரியாது!:(((
ஒரு நூலின் பேரைச் சொல்லுங்க பார்ப்போம்?




* சங்கத் தமிழில் = ஈழத்துப் பூதன் தேவனார் முதல்...
* நேற்றைய தமிழில் = ஈழத்து யாழிசை - விபுலானந்த அடிகள் வரை...

பொது மக்களிடம், இவர்களைக் கொண்டு சேர்ப்பதே இல்லை:(
* உ.வே. சா = பல பேருக்குத் தெரியும்;
* சி.வை. தாமோதரம் பிள்ளை? = தெரியுமா??? ஈழத் தமிழர்!

உ.வே.சா = இலக்கியம் திரட்டினாரு-ன்னா
சி.வை.தா = இலக்கணம் திரட்டினாரு!

தொல்காப்பியம் / நன்னூல் -ன்னு, இன்னிக்கு இருக்குற எல்லா இலக்கண நூல்களையும் திரட்டியவர் இவரே;
"உரை நூல்கள்" கூடச், சுவடி சுவடியாத் தேடிப் பதிப்பிச்சாரு!

ஆனா, நம்மில் எத்தனை பேருக்கு...
சி.வை. தாமோதரம் பிள்ளை தெரியும்??? = உ.வே.சாமிநாத ஐயர் மட்டும் தெரியும்!

{இப்படிச் சொன்னதுக்காக, ஒடனே சிலர், என்னிடம் கோபிக்க வரலாம்/ வந்துள்ளனர் = "பாப்பானைத் திட்டியாச்சா? You go... so Low"

ஆனா.. முருகனுக்கும், என் மனசாட்சிக்கும் தெரியும்; என் அந்தண நண்பர்கள் பலருக்கும் என்னை "மானசீகமாகத்" தெரியும் = How Low I am:))
ஒரு சொல்லு மேலே விழுந்துறாம, அவரவர் சொந்தப் பிடித்தங்களை யெல்லாம் , நான் பாத்துப் பாத்து எழுதணும்-ன்னா.... ரொம்பவே கஷ்டம்}

தமிழ் = பிறப்பால் வருவது அன்று!
தமிழுக்கு, மனதார நல்லது நினைப்போர் யாவரும்...
= பிராமணர்கள் உட்பட = அனைவரும் தமிழர்களே!

* உ.வே.சா = தமிழ்த் தாத்தா! அவர் காலடியில், என்றென்றும் நான் வீழ்ந்து வணங்குவேன்!
* சொல்ல வருவது என்ன-ன்னா.. அதே பாடுபட்ட, சி.வை. தாமோதரம் பிள்ளைக்கு மட்டும் "இருட்டடிப்பு" ஏனோ?
All you need is, "networking" of samasthana vidwans & tamil pundits??? Lobbying is the best!:(
உ.வே சா & சி.வை.தா

ஈழத் தமிழ்ப் பங்களிப்பு 
= இது பற்றிப் பொது மக்களிடம் எடுத்துச் செல்லும் தமிழ்ப் பண்டிதர்கள்/ ஊடகங்கள் மிகவும் குறைவு
= அப்பறம் எப்படி, ஒரு தலைமுறைக்கு, "ஈழம் = தொப்புள் கொடி உறவு" -ன்னு உணர்வு மட்டும் வரும்??

ஈழத் தமிழ்ப் பங்களிப்பு 
= செய்யாததை விதந்தோதச் சொல்லலை!
= ஆனா, உ.வே.சா  தெரிந்து, சி.வை. தாமோதரம் பிள்ளை தெரியலை-ன்னு இருக்கலாமா?

"உலகத் தமிழ் மாநாடு" -ன்னு
தமிழ்க் கொடி பறக்க விட்டதே = ஓர் "ஈழத் தமிழன்" தான்டா!

அவர் நூற்றாண்டு அடக்கி வாசிக்கப்படுகிறது;
அவர் விழாவில், கிறிஸ்துவர்கள் தென்படும் அளவுக்கு, "தமிழ்ப் பண்டிதர்கள்" தென்படுவதில்லை:((
வெளிநாட்டு விழாக்களை விடத் தமிழ் நாட்டு விழாக்கள் மிக மிகக் குறைவு:(

அதான், ஆத்தாமையில் எழுதினேன்!
சேவியர் தனிநாயகம் அடிகளார் வாழ்க! = அவர் நூற்றாண்டு வாழ்க!
http://thaninayagamadigalar.com

41 comments:

  1. ///தமிழ் மொழி = இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று!
    குறிப்பாகச் சைவர்களுக்கு மட்டுமே உரியதன்று! //

    இதில் தான் ஈழத்தமிழர்களின் தமிழர் என்ற அடையாளம் தங்கியுள்ளது. எங்களின் தமிழ் அடையாளம் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. ஒரு கிறித்தவ ஈழத்தமிழனுக்கும் , சைவ ஈழத் தமிழனுக்கும் தமிழில், தமிழ்ப்பாரம்பரியத்தில் சமமான பங்குண்டு. (ஆனால் முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல. :))

    ReplyDelete
    Replies
    1. //ஒரு கிறித்தவ ஈழத்தமிழனுக்கும் , சைவ ஈழத் தமிழனுக்கும் தமிழில், தமிழ்ப்பாரம்பரியத்தில் சமமான பங்குண்டு//

      அருமை! வாழி!

      //(ஆனால் முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல. :))//

      நீங்கள் விளையாட்டுக்குச் சொன்னதாகவே எடுத்துக் கொள்கிறேன்:)
      தமிழுக்கு நன்மை நினைப்போர் "யாவரும்" = தமிழரே!

      Delete
    2. //(ஆனால் முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல. :))//
      நீங்கள் விளையாட்டுக்குச் சொன்னதாகவே எடுத்துக் கொள்கிறேன்:)//

      இல்லை நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லீம்களை நீங்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் உங்களைச் செருப்பால் அடிப்பார்கள். இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. அதனால் தான் அவர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து தமிழைப் பேசிக் கொண்டே ஈழத்தில் தமிழர்களின் கழுத்தறுத்தார்கள். தமிழ்நாட்டிலும் அந்த நிலை ஏற்படாதிருக்க தமிழ்க்கடவுள் நெடியோனை பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை. :)

      Delete
    3. சரி, இப்போதைக்கு இதை விட்டுருவோம்!:) அடிகளார் பதிவில் பிற வேண்டாம்!
      எனினும், இந்த நிலை மாறி, சமயங் கடந்து, தமிழால் இணையும் நாள், நன்னாள்!

      Delete
  2. என்ன சொல்ல வர்றீங்க...?

    என்ன செய்யலாம்...?

    ReplyDelete
    Replies
    1. //என்ன செய்யலாம்//

      ஈழத் தமிழ் இலக்கியங்கள் = பரவலாகப் பேசப்படவும்/ பரப்பப்படவும் செய்யலாம்!
      முதலில், உ.வே.சா போல், சி.வை.தாமோதரம் பிள்ளையும், இனி அடிக்கடி முன்னிறுத்த வேண்டும்! (out of sight, out of mind!)

      Delete
    2. தமிழில்: கம்பன் கழகம் இருக்கு! கம்பன் விழா இருக்கு! கம்பன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருக்கு!

      மதத்தில்: சேக்கிழார் குருபூஜை இருக்கு!

      ஆனா, "இளங்கோ மன்றம்" இருக்கா?
      இரண்டிலுமே இல்லாத இளங்கோ அவலநிலை!

      மக்களிடம், இளங்கோ மன்றங்க"ளும்" சென்று சேரணும்!

      Delete
  3. சங்கத் தமிழில் = ஈழத்துப் பூதஞ் சேந்தனார் முதல்...///

    மன்னிக்கவும், அது ஈழத்துப் பூதந்தேவனார்

    //தேவாரம்/ அருளிச்செயல் ஏதோ ஒப்புக்கு இருக்கு!//

    தனிநாயகம் அடிகளார் தமிழைப் பக்தியின் மொழி என்றதன் காரணமே தேவார திருவாசகமும், திருவாய்மொழியும் தான்.

    //சமணத் தமிழ் = ஊத்தி மூடியாச்சு//
    ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாம் சமண/பெளத்த தமிழ் தானே.

    ReplyDelete
    Replies
    1. //பூதந்தேவனார்//
      பிழையே! மன்னிக்கவும் வியசன்;
      பதிவில் திருத்தி விட்டேன்; நன்றி!
      மணி அதிகாலை 03:30 - கண்ணு சொக்குது:)

      //ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாம் சமண/பெளத்த தமிழ் தானே//
      சிலம்பு = சமயங் கடந்த காப்பியம்!
      மேகலை முதல் குண்டலகேசி வரை = பொதுமக்கள் பலருக்கும் கதையே தெரியாது:(
      பின்னாளில், "பண்டிதர்களும்", கம்பனை விதந்தோதிய அளவுக்கு, இந்த இலக்கியங்களைக் கண்டு கொள்ளவும் இல்லை!:(

      Delete
  4. தனிநாயகம் அடிகளாரின் முன்னோர்களும், யாழ்ப்பாணச் சைவர்கள் தான். அவரது பெயர் தனிநாயகம் என்பது ,யாழ்ப்பாண இராச்சியம் நிறுவப்பட்டதும், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் செய்யூர் என்ற பழமையான ஊரிலிருந்து நெடுந்தீவில் குடியேறிய சைவ வேளாளப்பிரபு என யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்படும் இருமரபுந்துய்ய தனிநாயக முதலியின் வழி வந்தவர்கள் என்பதைக் குறிப்பதாகும். :)


    "…இறைவனிகர் செல்வன் எழில்செறிசே யூரன்
    நிறைபொறுமை நீதியக லாதான் - நறைகமழும்
    பூங்காவி மார்பன் புகழுளவெள் ளாமரசன்
    நீங்காத கீர்த்தி நிலையாளன் - பாங்காய்
    இனியொருவர் ஒவ்வா இருகுலமுந் துய்யன்
    தனிநா யகனெனும்போர் தாங்கு - முனியவனை
    மற்றுமுள பற்று நகர்வளமை சூழ்ந்திடுதென்
    பற்று நெடுந்தீவு பரிக்கவைத்துச் – சுற்றுபுகழ்…"


    http://viyaasan.blogspot.ca/2013/06/2013.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி வியசன், யாழ்ப்பாண வைபவ மாலை வரிகளை இங்கு கொடுத்தமைக்கு!
      என்னைக் கேட்டா, தமிழ்நாட்டுத் தமிழ்ப் பாடநூல் திட்டத்தில், ஈழ இலக்கியம் ஏதேனும் ஒன்றை வைத்தே ஆகணும்!
      - அது மதங்க சூளாமணியோ, வைபவ மாலையோ, இரகு வம்சமோ, பூத~ண் தேவனார் சங்கத் தமிழோ..
      - ஏதேனும் ஒன்று, கட்டாயம் மாணவப் பருவத்தில் அறிமுகஞ் செய்தல் வேண்டும்!

      Delete
  5. வழ்த்துக்களுடன் வணக்கம்.
    மிகச்சிறந்த ஆய்வினை மேற்கொண்டு பதிவிட்டுள்ளீர்கள்.
    நா.தியாகராஜன்.

    ReplyDelete
  6. அற்புதமான படைப்பு நண்பா, இன்றுள்ள தலைமுறைக்குச் சென்று சேரும் வண்ணம் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. வருக கா.பி!
      இன்றுள்ள (தமிழகத்) தலைமுறைக்கு, ஈழ இலக்கியம் நிறையவே அறிமுகம் செய்யணும்!
      என் ஆதங்கமெல்லாம், தமிழ்நாட்டுப் பாடநூல் திட்டத்திலேயே, "ஈழத் தமிழ் இலக்கியம்" சிறார்களுக்கு அறிமுகம் ஆகணும்-ன்னு தான்! எந்த நாளோ?

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஏன் திலகன் அழித்து விட்டீர்கள்?
      யாழில் நடந்த அடிகளார் விழாப் படங்கள் தானே? உங்கள் அனுமதியோடு மீண்டும் தரட்டுமா? நன்றி!
      https://www.facebook.com/santhiramouleesan.laleesan/media_set?set=a.10152019722170744.1073741834.739040743&type=3

      Delete
    2. பகிர்ந்துவிட்டுதான் யோசித்தேன், அதை பார்பதற்கு உங்களுக்கு அனுமதியிருக்காயெண்டு தெரியாது? அது என்னுடைய படங்களுமிலாததால்.அழித்துவிட்டேன் :)

      Delete
  8. காரிருள் சூழ் வலைதனில்..
    "பகலவனாக" தமிழுக்கென..
    ஒளியும் ஒலியுமாய் தொகுத்தளித்து..
    தனிநாயக அடிகாளாருக்கு
    அடிதொழ படையல் செய்த பாங்கு மனதெங்கும் இனிக்கிறது.

    ReplyDelete

  9. சமய கலாச்சாரதுக்கென இருந்த தமிழ் மொழியின் வளமும் பழமையும் அறிந்து பொதுவாய் புகழ் பாடுதல் மொழிக்கும் நல்லது. சமயத்திற்கும் நல்லது.
    என்ன புரியலியா..!?
    சரி உங்க முறையிலேயே... நீங்க சொன்னதையே மறுபடி சொல்லுவோம்.
    சமய இலக்கியங்களில் உள்ள தமிழை கொண்டாடுவோம் என்பது எந்தவொரு சமயத்தையும் மதத்தையும் தூற்றுவது என்பதாகாது
    சரிதானே.!

    ReplyDelete
    Replies
    1. Welkom Captain:)

      //சமய இலக்கியங்களில் உள்ள தமிழை கொண்டாடுவோம் என்பது எந்தவொரு சமயத்தையும் மதத்தையும் தூற்றுவது என்பதாகாது சரிதானே//

      சரி தான்!
      சமயத்தில் உள்ள குற்றங் குறைகளைச் சொல்லலாம்! அதற்காகத் "தூற்றுதல்" தவறு!
      சமயம், தன்னோட வளர்ச்சிக்குத் தமிழைப் பயன்படுத்திக் கொண்டாலும், அதுவும் தமிழின் பரிணாம வளர்ச்சியே!

      அதே போழ்தில், சமயங் கடந்து, "தமிழைத் தமிழாய் அணுகுதல்" என்ற மனப்பான்மை, இலக்கிய நுகர்வில் வர வேண்டும்!
      = அதுவே சங்கத் தமிழ்ச் சான்றாண்மை!

      Delete
  10. "அதே பாடுபட்ட, சி.வை. தாமோதரம் பிள்ளைக்கு மட்டும் "இருட்டடிப்பு" ஏனோ?" எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. யோசித்து பார்க்கையில், என் வாழ்க்கையில் தமிழை ரசித்து வந்துள்ளேனன்றி, அதன் வளர்ச்சிக்கு எந்தவொரு முயற்ச்சியும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை. ( எனது கல்வியின் ஆரம்பமே 1956 ஓர் திண்ணை பள்ளி அதுவும் ஓலை சுவடியில்) தமிழ் நாட்டிலேயே ஏராளமான இலக்கியங்கள் நிறைந்து கிடக்கின்றன. அதனால்தான் ஒருவேளை ஈழ தமிழ் இலக்கியம் இங்கு கண்டுகொள்ளபடவில்லையோ ? இருந்தாலும் முயற்சி எடுத்திருக்கவேண்டும் இங்குள்ளவர்கள். அல்லது அதற்க்கு பாடுபட்டவரையாவது ஆக்கபூர்வமாக ஊக்கி விட்டிருக்கவேண்டும். ஆனால் அரசர்கள் காலமுதல் இந்நாள் வரை தமிழ் அறிஞர்கள் ஆளுபவர்களின் தயவை நாடி அவர்களின் கைப்பாவையாக வலம் வந்துள்ளனர் என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம் :(
    சேவியர் தனிநாயகம் அடிகளார் வாழ்க! = அவர் நூற்றாண்டு வாழ்க!

    நன்றாக ஆராய்ந்து உணர்வுபூர்வமாக கொடுத்தமைக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா! நீங்களா? வாங்க சார், கீச்சுலகில் அனைவரும் நலமா?

      //என் வாழ்க்கையில் தமிழை ரசித்து வந்துள்ளேனன்றி, அதன் வளர்ச்சிக்கு எந்தவொரு முயற்ச்சியும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை//

      ரசனை தான் முக்கியம்!

      அவரவர் வாழ்க்கையில் ரசித்து வாழ்ந்தாலே, தமிழ் தானே வளரும்!
      தமிழுக்கு ரட்சகர் தேவையில்லை:)
      ரசனையூட்டும் நல்ல நட்பே போதும்!

      //தமிழ் நாட்டிலேயே ஏராளமான இலக்கியங்கள் நிறைந்து கிடக்கின்றன//

      அப்படி இருந்தும், வடநாட்டு இலக்கியத்தையெல்லாம் தமிழில் மொழியாக்கிக் கொண்டே இருந்தார்களே! ஆனால் ஈழத்தை மட்டும் கண்டு கொள்ளவில்லை!

      உண்மை என்ன-ன்னா..
      ஈழத் தமிழை, மாற்றாந்தாய் மகவாகத் தான் பார்த்தார்களே அன்றி, தமிழ்த் தாயின் மகவு -ன்னு பார்க்கவே இல்லை:(
      இவர்கள் பார்வையில், ஈழத் தமிழ் = "புறவாசல்"; தன் வீட்டுப் புழைக்கடைக்கு என்ன பெருசா மதிப்பு இருக்கப் போவுது?:(

      //அரசர்கள் காலமுதல் இந்நாள் வரை தமிழ் அறிஞர்கள் ஆளுபவர்களின் தயவை நாடி//

      அப்படிச் சொல்லி விட முடியாது;
      சங்க இலக்கியக் கவிஞர்கள், மன்னனுக்கே "செவி அறிவுறூஉ" -ன்னு சொன்னவர்கள் தான்!
      மன்னன் விதித்த தண்டனைகளைக் கூட, நல்லது எடுத்துச் சொல்லி மாற்றியவரும் உள்ளார்கள் (கோவூர்க் கிழார்); பரிசிலுக்காக அடங்கி விடுபவர்கள் அல்லர்!

      சங்கக் கவிஞர்கள் = 700+
      பலர் மன்னனின் அவைக்குக் கூடச் சென்றதில்லை; பாடியது = இயற்கையை மட்டுமே!
      அவரவர் தொழில் செய்து கொண்டு, தமிழும் செய்தார்கள்; மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்; கணக்காயனார் -ன்னுல்லாம் பேரே காட்டிக் குடுக்கும்!

      மதம் கலந்து, பிற்கால இலக்கியத்தில் தான்.. உலா, கோவை, பரணி -ன்னு "துதி பாடல்கள்" அதிகமாகிப் போனது:( சங்கத் தமிழில் அப்படி அல்ல!

      Delete
  11. wow. thank u for this. Recently Praba anna (Aussie)tweeted how young generation from Eezham dont know who Thaninagayam is, to tell u the truth, i was lazy to google and read abt him or ask my parents. And today, i saw ur post being shared SSudha (twitter) and i read it. thank u for enlightening me :) well written! &i know u dont come on twitter, but please please please share ur blog updates there :) thanks in advance muruga :)

    ReplyDelete
  12. wow. thank u very much for enlightening me with this blog. Recently Praba anna (aussie) tweeted abt him and i was wondering who he is and was lazy to read upon. then i saw SSudha shared this link on twitter. thank u :) very well written and i know much now :) and i know u avoid twitter but please please please do share ur blog updates there. :) thanks in advance muruga :)

    ReplyDelete
    Replies
    1. Wow! என்னம்மா கண்ணு, செளக்கியமா?:))

      என்ன, கீச்சு மக்களாத் திரண்டு வந்துருக்கீக? நானே நல்ல பையனா ஒதுங்கித் தானே இருக்கேன்? Any complaints, still?:)
      So happy to see u here, esp. you! At least our generation should bank on such solid heritage of eezham; Win or lose, it flies beautiful bubbles in our heart:)

      நல்ல பதிவு-ன்னு ஏதாச்சும் ஒன்னை எழுதுனா, அப்போ கண்டிப்பாச் சொல்லுறேன்-ம்மா:)
      "Awareness" is the key to any Self Respect - இல்லியா?

      கா.பி & SSudha -க்கும் நன்றி; முருகனுக்கும் நன்றி, ஒன்னைக் கூட்டி வந்ததுக்கு:))

      Delete
  13. //நல்ல பதிவு-ன்னு ஏதாச்சும் ஒன்னை எழுதுனா// - ஆம்! நீங்கள் சொல்வது சரிதான் கண்ணபிரான் அவர்களே! நீங்கள் எப்பொழுது பார்த்தாலும் சிறப்பு மிகுந்த பதிவுகளாகவே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல பதிவு எனக் குறைத்து மதிப்பிடக்கூடிய அளவுக்கு ஒரு பதிவை நீங்கள் எழுதுவது அரிது.

    ReplyDelete
    Replies
    1. இந்த ட்விட்டர் பெண்ணிடம், என்னைப் போட்டுக் குடுப்பதில், உமக்கு அப்படியென்ன மகிழ்ச்சி ஐயா?:)))

      Delete
  14. எனக்கும் இந்தக் கேள்வி கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. தமிழுக்காக உயிரையே கொடுத்துப் போராடும் அளவுக்கு இவ்......வளவு தமிழ்ப்பற்று மிகுந்த ஈழத்தில் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் எவ்வளவோ பேர் இருந்திருப்பார்களே; ஆனால், இங்கு கருணாநிதி முதல் சுஜாதா வரை -அதாவது அரசியல் முதல் இலக்கியம் வரை- தமிழுக்குத் தொண்டு செய்த ஒவ்வொருவரின் பெயரும் அறியப்படும் அளவுக்கு ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்களின் பெயர்கள் அறியப்படுவதில்லையே ஏன் என்று.

    இதற்குக் காரணம் மனித சமுதாயத்தில் காலம் காலமாக இருந்து வரும் பெரும்பான்மைக்கே மதிப்பளிக்கும் பழக்கம்தான். ஈழத்தை விட இங்கு தமிழர்களின் எண்ணிக்கை பன்மடங்கு மிகுதி. எனவே, இதுதான் 'தமிழ்நாடு' எனவும், இங்கு செய்யப்படுவதுதான் 'தமிழ்ச் சேவை' எனவும், இங்கிருப்பவர்கள் மட்டும்தான் 'தமிழறிஞர்கள்' எனவும் ஒரு மிதப்பு நமக்கு. உலக சமுதாயத்துக்கும் அப்படித்தான். இங்கு 7 கோடிப் பேர் இருப்பதால் இதுதான் தமிழ்நாடு, தமிழர்களின் தாயகம் இதுதான், தமிழர்களின் பிரதிநிதித்துவப் பகுதி இது மட்டும்தான் என ஒரு கருத்து உலக சமுதாயத்துக்கு இருக்கிறது. எனவேதான் நாமும், உலக சமுதாயமும் ஈழத் தமிழர்களின் அருந்தமிழ்த் தொண்டுகளைக் கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டோம்! நம் இனத்தைப் பற்றி மட்டும் இல்லை, உலகெங்குமே, எப்பொழுதுமே ஒரு விடயம் என வந்தால் அது பற்றிப் பெரும்பான்மைச் சமூகத்தின் கருத்துதான் கருத்தாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இது மாறும், கண்டிப்பாக மாறும்! 7 கோடிப் பேர் இங்கு இருந்தாலும் நாம் வெறும் மாநிலக் குடிமக்கள்தாம். ஆனால் நம் முயற்சியாலோ தானாகோ நாளை ஈழத்தில் தமிழர் தனிநாடு மலர்ந்தால் அதன்பின் அவர்கள்தாம் உலகளாவிய தமிழ்ப் பிரதிநிதிகள்! அப்பொழுது வெளிவரும் ஈழத் தமிழர் பெருமையும், உலகத் தமிழர் அருமையும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஞானப்பிரகாசன்!
      "பெரும்பான்மை"ப் பித்து, உள்ளதையும் நல்லதையும் மறைக்கும்!

      சைவ சமய ஆதிக்கம், பின்னாள் தமிழ் இலக்கியத்தில், இப்படித் தான் நடந்தேறியது - "பெரும்பான்மை"

      //நம் இனத்தைப் பற்றி மட்டும் இல்லை, உலகெங்குமே, எப்பொழுதுமே ஒரு விடயம் என வந்தால் அது பற்றிப் பெரும்பான்மைச் சமூகத்தின் கருத்துதான் கருத்தாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது//

      yes! sad:(
      மாற்றுப் பாலினம், திருநங்கைகள் -ன்னு சிறுபான்மை உணர்வு, உணர்வல்ல! பெரும்பான்மை உணர்வே உணர்வு -ன்னு அல்லவா இருக்கு!:(

      //நாளை ஈழத்தில் தமிழர் தனிநாடு மலர்ந்தால் அதன்பின் அவர்கள்தாம் உலகளாவிய தமிழ்ப் பிரதிநிதிகள்!
      அப்பொழுது வெளிவரும் ஈழத் தமிழர் பெருமையும், உலகத் தமிழர் அருமையும்//

      haiyo! இதைச் சொன்ன உம் வாய்க்கு நாட்டுச் சருக்கரை கலந்த பஞ்சாமிர்தம் கொட்டுகிறேன்:)
      கனவு "மெய்ப்பட" வேண்டும்!

      Delete
    2. மிக்க நன்றி!

      எல்லோரும் தனக்குப் பிடித்த பதிவர்களின் இடுகைகளை மட்டும்தான் பின்தொடர்வார்கள். உங்கள் விசிறிகளான நான்/நாங்கள் என்/எங்கள் பின்னூட்டம் பற்றிய உங்கள் பதில்களையும் இப்படிக் காத்திருந்து பின்தொடர்கிறோம்! :-)

      Delete
  15. அரிய தகவல்களை ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அளித்திருக்கிறீர்கள் இரவி.
    பாராட்டுக்கள்!

    நன்றி-சொ.சங்கரபாண்டி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்:)

      பண்டை ஈழத்தமிழ் இலக்கியங்களை, அறிமுகம் செய்யும் ஒரு பதிவும் விரைவில் இடுவேன்!

      Delete
    2. ஆகா! பின்னூட்டங்களுக்கு 'விருப்பம்' தெரிவிக்கும் வசதியை இந்த பிளாக்கர் இன்னும் வழங்காமலிருக்கிறதே!

      Delete
    3. இதெல்லாம் tooooo much:)
      Blogger pei will come in your dreams & scold you:)

      Delete
  16. முழுவதும் படித்து விட்டு வருகிறேன்; முஸ்லிம்கள் தமிழ் பற்று அதிகம். என் நண்பன் தமிழில் பேசுவதே அழகு. அவன் அரசியல் வாதிகளை தமிழில் திட்டுவதே அழகு (கெட்ட வார்த்தையில் அல்ல)பெரிய டாக்டர். தமிழில் மட்டுமே பேச ஆசைபடுவான்.

    திருத்தணி படி உற்சவத்திற்கு வரும் மூன்று பெரிய பாடகர்களில் ஒருவர்; மஜீத்! மற்ற இரண்டு பேர்; பெங்களூர் ரமணியம்மாள்; பித்துக்குளி முருகதாஸ்.
    திருத்தணி படி உற்சவத்தில் (டிசெம்பர் 31 இரவு நடக்கும்) நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது செல்வோம்; செல்வோம் என்பதை விட எங்க அப்பா கூட்டிக்கொண்டு செல்வார். சென்றே ஆகவேண்டும். நோ அப்பீல்.

    பெங்களூர் ரமணியம்மாள் பங்களூரிலிருந்து ரயிலில் வந்து இறங்கினதும் இறங்ககாமல் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டாம் பாடும் அழகே அழகு! என்ன குரல்.

    முருக பக்தர்களுக்கு கொண்டாட்டம்.
    -----------------
    நான் ஒரு வோட்டு போட்டு இருக்கேன். நான் விஜய் மாதிரி...அவர் அவர் பேச்சையே கேட்கமாட்டென் என்று சொல்வது மாதிரி, என் இடுகையைக்கு நானே ஒட்டு போட்டுக்கு மாட்டேன்!











    மிக சிறந்த பதிவு! பலரிடம் செல்ல வேண்டும்!


    ReplyDelete
  17. ///ஆனால், இங்கு கருணாநிதி முதல் சுஜாதா வரை -அதாவது அரசியல் முதல் இலக்கியம் வரை- தமிழுக்குத் தொண்டு செய்த ஒவ்வொருவரின் பெயரும் அறியப்படும் அளவுக்கு ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்களின் பெயர்கள் அறியப்படுவதில்லையே ஏன் என்று.//

    ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் ஒப்பிடும்போது எங்களின் எண்ணிக்கையின் வீதாசாரத்துக்கு அதிகமாக எங்களின் ஈழத்தமிழ் முன்னோர்கள் தமிழ்த் தொண்டாற்றியிருக்கிறார்கள், தமிழுணர்வுடன் திகழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை தமிழ்நாட்டில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும், எங்களுக்குத் தெரியும், அது எங்களின் எழுத்துக்களில், கருத்துக்களில் எங்களையறியாமலே வெளிப்படுவதைத் தான், ஈழத்தமிழர்கள் திமிர் பிடித்தவர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். :)

    ReplyDelete
    Replies
    1. அந்தத் திமிர்தானப்பா உங்கள் அழகு! அந்தத் திமிர் உங்களுக்கு இருப்பதால்தான் நம் மொழியை அழிக்க சிங்களன் முதல் கல் எறிந்தவுடனே நீங்கள் விழித்துக் கொண்டு தனிநாடு போராட்டம் தொடங்கிவிட்டீர்கள். அந்தத் திமிர் எங்களுக்கு இல்லாததால்தான், உடன்பிறப்புக்களான உங்களில் ஒன்றரை இலட்சம் பேரைக் கொன்று குவித்த பின்னரும் இன்னும் எங்களுக்குத் தனிநாடு கேட்கத் துணிவு பிறக்கவில்லை!

      (தமிழர்களை இப்படி நீங்கள், நாங்கள் எனத் தனித்தனியாகப் பிரித்துப் பேசுவது எனக்குப் பிடிக்காது. ஆனால், இங்கு ஒரு நல்ல தேவை கருதி இப்படிப் பேச வேண்டியிருக்கிறது).

      Delete
    2. வியாசன் அவர்கள் கூறுவது உண்மை;
      தமிழ் ஒப்பிலக்கியத் துறையில் கவனம்
      செலுத்தியது ஈழத் தமிழரே. இணையத்
      தொழில் நுட்பத்தோடு தமிழை இணைத்ததும்
      புலம் பெயர்ந்த ஈழத்தவரே. எண்ணிக்கை
      விகிதாரப்படிப் பார்த்தாலும் அவர்களது
      பங்களிப்பு மிகுதி

      http://oorodi.com/literature/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF.html

      தேவ்

      Delete
  18. என் ஆதங்கமெல்லாம், தமிழ்நாட்டுப் பாடநூல் திட்டத்திலேயே, "ஈழத் தமிழ் இலக்கியம்" சிறார்களுக்கு அறிமுகம் ஆகணும்-ன்னு தான்! எந்த நாளோ?//// சிரமம் தான் மொழி கடந்து அரசியாலாகி விட்ட சூழ்நிலையில் :(((

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP