Monday, November 21, 2016

தமிழ் இலக்கண வாத்தி லீலை!

வளமொடு.. செந்தமிழ் “உரைசெய
அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே! (திருப்புகழ்)
---------
நேரடியாக Matter-க்கு வருவோம்!

*சந்துலகில் எந்த Controversy-லயும் சிக்கிக் கொள்ளாது,
தன் Image காத்துக் கொள்வதில் குறியாய்ச் செயல்படும் Gentleman..

*சந்துலகில்/ பதிவுலகில்.. தமிழ் இலக்கணத்தை,
ஊருக்கே போதனை செய்யும் தமிழ் வாத்தி!
(சில சமயங்களில்.. தமிழை “மிகைத் திருத்தம்” செய்தாலும்)
*அம்பானி முதல் அறிஞர் அண்ணா வரை..
பல "அவியல் புத்தகங்கள்".. தாள் தாளாக எழுதிக் குவித்துள்ள எழுத்..”தாளர்”


*ஸ்ரீமான். Writer பா.ரா-வின் சிஷ்யகோடி/ செல்லப் பிள்ளை..
அந்த Group-இல் சேர்ந்து உலாவும் மக்களுக்கு, இவர் ஓர் 'ஆதர்ச' தளபதி!

என். சொக்கன்
(எனும்)
நாக ஸூப்ரமண்யன். சொக்கநாதன்!

தமிழ் இலக்கணம் என்கிற பேரில்,
பிஞ்சுக் குழந்தைகள் மனத்தில் நஞ்சைக் கலக்கும்
அற்புதத் திருக்காட்சி இதோ... தவறாமல் காணீர்!

நன்னாப் புரிஞ்சுண்டேளா, குழந்தைகளா?
மொத்த தமிழ் இலக்கணமே = “லஷணம்” தான்;
தமிழுக்குச் சம்ஸ்கிருதம் போட்ட பிச்சை!:((
சொல்வது யாரு?
இலக்கணம் சொல்லிக் குடுக்கும் தமிழ் வாத்தி!
அட, இலக்கணம் போதிப்பவரே, இலக்கணம்= Sanskrit-ன்னு சொல்லீட்டாருப்பா!
தமிழ்ப் பண்டிதாள் Group!
(Groupஇல் யார்? யார்? பதிவின் இறுதியில் சொல்கிறேன், மக்கள் விழிப்புணர்ச்சிக்காக)
இவர்கள், ஏன் இப்படிச் செய்கிறார்கள்?
3000+ Documented ஆண்டுகள் தொன்மை நிரம்பிய ஒரு மொழிக்கு,
அதன் இலக்கணம் என்பதே,
சம்ஸ்கிருதம் போட்ட பிச்சையா? பார்ப்போமா?
ஆனா, அதற்கும் முன்பு.. ஒரு சில சொற்கள் பேசணும், உங்க மனச்சாட்சி கிட்ட!

ஏன்னா, மனச்சாட்சி மட்டும் தான்..
*பிறர் அறியாத.. நீங்கள் மட்டுமே அறிந்த இடம்!
*இறைவன் அமரும் இடம்!
இதைப் படிப்பவர் அனைவரின் மனச்சாட்சிகளைக் கேட்டுப் பாருங்கள்!
---------


இக் காணொளி கண்ட நாள் அன்றே, என் விழியோரம் கண்ணீர்!

தமிழ் மொழி.. சங்கத் தமிழ்க் காலந் தொட்டே, எவர் மரபிலும் "ஊடுருவாது" வாழும் மொழி; அப்படி வாழும் போதே,  அதற்கு எத்துணை எத்துணை மறைப்புகள் & சிதைப்புகள்:(
தன்னை விட்டுப் பிரிந்த சென்ற மொழிகளில் கூடப் போயி, "உன் சொல்லுல்லாம் என் சொல்லு தான்!" எ. ஒருநாளும் சொன்னதில்லை தமிழ்!

"நாங்க எப்பவோ போட்ட 2 நாள் சோறுல தான், இன்னிக்கி உன் குடும்பமே நிமிந்து நிக்குது".. என்று சொல்லிக் காட்டி ஏய்க்கும் நம் உறவினர்கள்!
நம் அம்மா, உறவினர் கையில் படும் "இழிவு" கண்டு, நம் மனம் பொறுக்குமா?
போலவே, தமிழ்த் தாய், Sanskrit ஆட்களின் கையில் படும் இழிவுகள்:(


Sentiment வேண்டாம்; பேசு பொருளுக்கு வருவோம்!
1. இலக்கணம் = "லக்ஷணம்" என்று சும்மா ஒரு பேச்சுக்கு வைச்சிக்குவோம்; ஆனால், அதை இங்கு சொல்லத் தேவையா?
குழந்தைகளுக்கு “எளிய பாடம்” எடுக்கும் இடத்தில், சம்ஸ்கிருதம் “நுழைத்துச்” சொல்வது ஏன்? குழந்தைகள், மொழி-இயல் ஆய்வா செய்கிறார்கள்?

குழந்தைகள், எதிர் தரவு குடுக்க மாட்டாங்க! எ. தெகிரியம் தானே? 
பிஞ்சு உள்ளங்களிலா நஞ்சைத் தூவுவது?
அதுங்க வளரும் போதே, தன் தாய் மொழியின் இலக்கணமே= Sanskrit போட்ட பிச்சை என்றா வளரும்? இது கொடுமை அல்லவா?:(

எப்படி, பசுமரத்தில்.. ஆணி அடிச்சாரு, பார்த்தீங்களா?
இது, இன்று நேற்றல்ல..
தமிழ்ப் "பண்டிதாள்" என்ற Group! வெளிப் பார்வைக்குத் தமிழ் வாத்தியாய், உள்ளுக்குள் Sanskrit/ பார்ப்பனீயமே கொண்டவர்கள்.. காலங் காலமாய்ச் செய்து வருவதே!

*சொல் எல்லாம் "வார்த்தை" ஆச்சு
*பொருள்= "அர்த்தம்" ஆச்சு
*எடுத்துக்காட்டு= "உதாரணம்" ஆச்சு
*ஒருபுடை உருவகம்= "ஏக தேச" உருவகம் எ. பாடப்புத்தகத்திலேயே நிலைச்சிப் போச்!

தமிழில், அதுவும் அதன் இலக்கணத்திலேயே.. "ஏகம்/ Ek Dho Theen" ஏன்?
சம்ஸ்கிருத இலக்கணத்தில்.. "ஒன்று, இரண்டு" இருக்கா என்ன? இல்லையே!

ஏன்.. இங்கு மட்டும்.. Parasite ஒட்டுகிறார்கள்? யார் ஒட்டுகிறார்கள்?
உங்க மனச்சாட்சியைக் கேளுங்க!
தனிப்பட்ட நட்புகளை ஒரு நொடி ஒதுக்கி விட்டு.. உங்க மனச்சாட்சியைக் கேளுங்க!


2. "பார்ப்பனீயம் சொல்லிக் குடுக்கும் தமிழை, ஒரு நாளும் நம்பாதீர்கள்!" 
என்று முன்பு சொல்லியிருந்தேன்..

இங்கு, பார்ப்பனீயம் என்று சொன்னது = புத்தியை! சாதியை அல்ல!
தனிப்பட்ட எவரையும் அல்ல!

முன்பு, தமிழை = "டுமீல்" என்று எள்ளிய இலவசக் கொத்தனார்; பாரா/ சொக்கன் குழுமத்தின் பற்பல பண்டிதாள்!
#TNFisherMan #SaveEelam போன்ற ஒவ்வொரு தமிழ் முயற்சியையும், எள்ளி எள்ளியே காலம் தள்ளும் மக்கள்!:(

#MullaPeriyar என்பதை.. PeriyaaRu எனாது, Periyar என்னும் மலையாள மொழி வழக்கம்! அங்கே குற்றியலுகரம் இல்லாமை!
ஆனால் "Mulla Periyar; தந்தை பெரியார் முஸ்லீம் முல்லாவா? குல்லா போட்ட முல்லா" என்றெலாம் எகத்தாளம் பேசிய இலக்கணப் பண்டிதாள் Group!
அதே Adyar Ananda Bhavanஐ, Adaiyaaru என்று எழுதச் சொல்லி, எள்ளச் சொல்லுங்கோ பார்ப்போம்? மாட்டார்கள்; அவா அவா பாசம்!

"அப்படில்லாம் பேசாதீங்க! தமிழை, டுமீல் என்று தாழ்த்தாதீங்க!" என்று சொல்லக் கூட, ஸ்ரீ. சொக்கனுக்கு அப்போ மனம் வரலை!
இத்தனைக்கும், பேசுவது, அவர்கள் குழாம் தான்; Same Set/ Shaving Set தான்!
ஆனால்.. "பார்ப்பான் சொல்லிக் குடுக்கும் தமிழை நம்பாதீங்க" என்று சொன்னதுக்கு மட்டும், உடனே பாய்ந்தோடி என்னிடம் சண்டைக்கு வந்த சொக்கன்!

கம்பனின் நடையில் நின்றுயர் நாயகன், ஸ்ரீ. சொக்கன், இதோ காணுங்கள்:)

இதிலிருந்து என்ன தெரிகிறது?
தமிழுக்கு வராத உள்ளம், பார்ப்பனீயம் என்றால் மட்டும்.. ஓடோடி வருகிறது:) 
நீங்களே காண்க!
முழு Twitter உரையாடல், இங்கே= 
https://goo.gl/z7vOZm


ஸ்ரீ. சொக்கன் என்ன சாதி? என்ற வினவல் இங்கு.. கிஞ்சித்தும் இல்லை!
அது தேவையும் இல்லை!
பார்ப்பனீயம் = புத்தி; சாதி அல்ல!
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்; அஃதே தமிழ் நெறி!

"பார்ப்பான் சொல்லிக் குடுக்கும் தமிழை நம்பாதே!" என்றால்.. சொல்லிக் குடுப்போரின் சாதி தெரிந்தால் தானே, அது முடியும்? எ. கேட்டு விடாதீர்கள்!:(
ஒருவரை = சாதி வினவல்! என்பது பேரசிங்கம்; மனித இழிவு..

அடியார்களைக் குலம் விசாரிப்பவன் எவனோ, அவன் பெற்ற தாயை.. யோனி விசாரித்தவன் ஆகின்றான்! என்பது இராமானுச நெறி!
அதனால்.. ஒருபோதும், யாரையும்.. "சாதி விசாரித்து" விடாதீர்கள்!

அப்போ, எப்படித் தான் பார்ப்பனீயப் புத்தியைக் கண்டுகொள்வது? அவர்களின் தமிழை நம்பாமல் இருப்பது?
இதோ வழி: அவர்களின் சம்ஸ்கிருத பாசம், தானே காட்டிக் குடுத்து விடும்!

நாம் என்ன தான் சாதி பாராது, "அம்மா" என்று பழகினாலும்..
ஆரம்பத்தில் வளைய வந்து, ஆள் சேர்த்த பிறகு..
Sanskrit/ பகவத் கீதா எ. உண்மையான கொண்டை காட்டினார்களே, ஸ்ரீமதி.அமாஸ்?
அதே போல், சாதி வினவாமலேயே.. தாங்களே காட்டி விடுவார்கள்:)


சம்ஸ்கிருத பாசம்! is the keyword..
நீங்கள், ஜாதி வினவாமலேயே.. தானே வெளிக்காட்டி விடுவார்கள்:)
அப்போது அறிந்து கொள்ளுங்கள்.. இவர்கள் கொண்டைகளை!

இவர்களை மட்டுமல்ல!
இவர்கள் என்ன சொல்லித் தமிழைத் தாழ்த்தினாலும்.. இவர்களோடு "ஈஷிக் கொண்டு" உறவாடும் நம்ம மக்களே பலர் உளர்; புண்ணியாத்மாக்கள்!!!
அத்தனை பேரையும் திரைச்சொட்டில் உணர்த்தல் அரிது; அறமும் அன்று! நீங்களே, கண்டுணர்ந்து கொள்க! All of them, Totally Blocked!

இப்படி ஈஷிக் கொண்டு உறவாடும் பலர்.. என் தமிழக/ ஈழ நண்பர்களும் கூட!:(
ஆனால், தமிழைத் தாழ்த்தி, எனக்குத் தனிப்பட்ட நட்பு வேண்டேன்;
நான்.. ஈழத்துக் கருணா அல்ல! தனிச் சுகம் வேண்டி, தமிழைத் துறக்க!

நண்பர்கள் எ. கூறிக் கொண்டு, தமிழ்த் தாழ்ச்சியை, கண்டும் காணாமல் இருந்த உங்கள் "உயர்ந்த உள்ளங்களுக்கு".. வணக்கம்!
நட்பின் மதிப்பால்.. சிலரை மட்டும் Block செய்யாது, Unfollow மட்டும் செய்கிறேன்! 
இதையே, ஈற்றுமடல் எ. கருதிக் கொள்க! 
உங்கள் போலித்தனத்தில் இருந்து, இன்று முதல் விலகிக் கொள்கிறேன்! நன்றி!

இங்கு பிரபலங்களின் நட்பு  மூலம் கிடைக்கும் Networking ஆதாயங்கள்/ ஊடகத் திறப்புக்கள் எனக்குத் தேவையில்லை!
மொழிஞாயிறு பாவாணர் ஒருவரே.. தமிழ்இயல் நூல் பலவும் யாத்தளித்து விட்டார்;
இனி இன்னொருவர் நூல் எழுதித் தான், தமிழை நிலைநாட்டத் தேவையும் இல்லை!!

*அறிஞர்கள் அளவிலேயே தங்கி விட்ட தமிழ் உண்மைகளை..

*சிறுகச் சிறுக..
*பொது மக்களின் அரங்கிலே கொண்டு சேர்ப்பதே, போதுமானது!

தனிப்பட்ட நட்புக்காக, தமிழைச் "சமரசம்" செய்து கொள்ளல்.. அறவே இல்லை!

மனத்தாலும் வாக்காலும் (தமிழ்மறைகள்) பேணும்
இனத்தாரை அல்லாது இறைஞ்சேன் - தனத்தாலும்
ஏதும் குறைவில்லேன்; எந்தை (நேயப்பாவாணன்)
பாதங்கள் யாமுடைய பற்று!


3.  எதுக்கெடுத்தாலும், பார்ப்பானைத் திட்டுறதே பொழைப்பாப் போச்சு! 
எ. சலித்துக் கொள்ளும்..
"அறிவு சால்" தமிழர்கள், இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
உங்கள் இனத்தின் இலக்கணமே = Sanskrit "லக்ஷண"த்தின் பிச்சை தானா?:(

தனிப்பட்ட நட்பு முக்கியம்!
அதனால்.. கண்டும் காணாமல் போய் விடுவோம்! அப்படித் தானே?:)

நீங்கள்.. நூற்றாண்டு நூற்றாண்டுகளாய்.. 
கண்டும் காணாமல் போனதால் தான்..
ன்னிக்கி, இப்பிடி வேர்களே அறுந்து போய் நிக்குறீங்க!
ஈழத்தில்.. தோற்றுப் போய் நிக்குறீங்க:(


உங்களை அழிச்சவனையே, சூரசம்ஹாரம் -ன்னு கும்புடறீங்க!
முருகனை -> ஸூப்ரமண்யன் ஆக்கிய போதும், வாயே திறக்காமல்..
உங்கள் சுயநல நட்புக்கு, முருகனையே சாவடிச்சிட்டு, 
இன்னிக்கி அவன் Photoவுக்கு மாலை போட்டு, சுய-இன்பமே= பேரின்பம்னு வாழுறீங்க!

*பகவத் கீதைக்கு, பாய்ந்தோடி வரும் அவர்கள்.. ஒங்க நட்பைப் பாக்கலையே?
*தமிழ் இலக்கணம்= லக்ஷணம்னு இழிக்கும் போது, நீங்க மட்டும் நட்பு பார்ப்பது ஏனோ?

அவர்கள்.. அவங்க பகவத் கீதாவுக்குப் பாய்ந்தோடி வந்தது போல்

நீங்க.. ஒங்க தமிழுக்காக, திருக்குறளுக்காகப் பாய்ந்தோடி வருவீங்களா?:)

வர மாட்டீங்க! அதான் நீங்க!
ஈழத்தின் கருணாவைத் திட்ட, உங்களுக்குத் 'தார்மீகமே' இல்லை;
ஏன்னா, அன்றாட வாழ்வில், நீங்களே ஒரு கருணா தான்!:)
உங்கள் சுயநலம், தனிப்பட்ட Networking/ Interests தான் மிகப் பெரிது!

---------
பொதுவா, நான் யாருடனும்.. Twitterஇல் நேரடி விவாதம் செய்வதில்லை!
யாருடனும் உரையாடலாய் இல்லாமல்,
"பொதுவான பேச்சு" & தரவு மட்டுமே, என் வழக்கம்!

பொதுப் பேச்சு கூடப் பொறுக்க மாட்டாமல், எதிர்ப்பு காட்ட.. 
அவாள் தாங்களாய் வந்து விழும் போது தான், என் தரவடிகள் பலமாகிறது!

அது அமாஸ் ஆத்தா ஆகட்டும் (அம்மா= நலம் மிகு சொல்; இங்கு மனம் ஒப்பவில்லை; மன்னிக்க! ஆத்தாளும் சொல்லே; ஆத்தாளை அபிராம வல்லியை!)

அது காஞ்சிப் பெரியவா ஷாந்தி மேடம் ஆகட்டும்.. தன் தலையில் தானே அட்சதை போட்டுண்ட கதை தான்!:)
---------

என் "அழுத்தம் மிகு" சொற்கள்,
உங்கள் பொய்யான தமிழ்ச் சிதைப்பின் மேலேயே அன்றி, உங்கள் மேல் அல்ல!


"அவன்/ இவன்" எ. ஒருமை ஏசலும், 
"மானங் கெட்டவன்"; "சாணி போடுறான்"; 
"தொல்காப்பியன் தொம்பி" போன்ற உங்க தனி மனித வசவுகளை
நான் ஒ
ரு நாளும் செய்யேன்!.. அது குறள் நெறி/ இறை நெறி, இரண்டுமே அல்ல! 

பல நூற்றாண்டு மறைப்புக்களை, ஒரே கீச்சில்.. சொல்லீற முடியாது!
சிறுகச் சிறுக, சாணி போட்டுத் தான்.. மெழுக முடியும்!
உங்கள் கோமாதா சாணியை,
நீங்களே மதிக்காது என்னை ஏசும் போதே தெரியலையா?..
உங்களிடம் இறைவன் இல்லை என்று!:) | "ஆத்மாபஹாரம்" எ. இதற்குப் பெயர்! 


சம்ஸ்கிருதம் அறிந்து கொண்டு, சம்ஸ்கிருத விசிறி வீசுங்கள்.. 
மனிதம் ஒரு துளியும் இலாப் 'பெரிய ஸ்டார்' கொண்டைகளே!

மனிதம் இலாமைக்குத் துணை போகும், பல பேரை.. இன்றோடு விலக்கி விட்டேன்!

என் மிச்சமுள்ள நண்பர்கள் யாரும்.. இனி என்னிடம் தனிமையில் வந்து, 
தமிழையெல்லாம் "கொஞ்சம் குறைச்சிக்கலாமே?" என்று சொல்லாதீர்கள்!
சொன்னால், என்ன ஆவீர்கள்? எ. இந்நேரம் ஒங்களுக்கே தெரீஞ்சீருக்கும்:)
---------


பார்ப்பனீயம் சொல்லிக் குடுக்கும் தமிழை நம்பாதே! = இது என் சொல் மட்டுமல்ல! 
*மென்மையே உருவான தமிழ்த் தென்றல், திரு.வி.க முதல்..
*மொழிஞாயிறு பாவாணர் வரை சொன்னது தான்!

இதெல்லாம் Mainstream Media வராமல், பார்த்துக் கொள்வார்கள்:)
ஆனால்.. காலம் மாறிடுத்து; Social Media-வாய் ஆயிடுத்து; நான் என்ன ஓய் செய்ய?


தமிழறிஞர். வ.உ.சி -யை, Group சேர்ந்து தள்ளி வைச்சேளே?
அதெல்லாம் பழைய காலம் ஓய்!
தமிழ் மொழி.. பண்டிதாள் கையிலிருந்து, பொதுமக்கள் கைக்கு வரத் துவங்கியாச்!
அவ்வளவு ஏன்..
பிறவியால் பார்ப்பனர்; ஆனாலும், போலி அல்லர்! 
மெய்யாலுமே தமிழ்க் காதலர்!
"சூரிய நாராயண சாஸ்திரி" ; தன் பேரையே, "பரிதி மால் கலைஞர்" எ. மாத்திக்கிட்ட

ஓர் அந்தணரே.. "பார்ப்பனீயம் சொல்லிக் குடுக்கும் தமிழை நம்பாதே"! எ. சொல்றாரு:)

ஸ்ரீ. சொக்கன்.. பரிதிமால் கலைஞரோடு உரையாடட்டுமே? பிறகு தெரியும்!


4. சரி, பார்ப்பனீயம்-லாம் விட்டுருவோம்!
இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?
தமிழுக்குள், Sanskrit Parasite ஒட்ட வேண்டிய தேவை.. இவர்களுக்கு என்ன?



Writer பா. ராகவன் எனும் பா.ரா!
ஸ்ரீ சொக்கனின் குருநாதர்;

சந்தில், பெரிய தல! ஊடக பலம் மிக்கவர்; 
அந்த Groupஐப் பகைச்சிக்காதீங்கோ.. என்று
எனக்கு, வடகிழக்கு அமெரிக்க மாபியா நண்பர்கள் அறிவுறுத்தியும் உள்ளார்கள்:)

அவரை, எதுக்கு நான் பகைச்சிக்கிணும்? பிழையான 
"கருத்தை" அல்லவா எதிர்ப்பது?
அப்படி, என்னய்யா சொல்லீட்டாரு பாரா? இதோ.. பாரா மன்னா, செப்பவதுடையேன்!!

சம்ஸ்கிருதத்தில் எப்படி இருக்கோ.. அப்படியே தான் தமிழில் புழங்கணுமாம்!
*இது, தமிழ் இலக்கண விதியா?
*அல்ல! பாரா - சொக்கன் - இலவசக் கொத்தன்; பண்டிதாளின் Group விதி!


स्वतन्त्र = ஸ்வ-தந்த்ரம் | சுதந்திரம்-னு சொல்லப்படாது!
आत्मिका = ஆன்மிகம் | ஆன்மீகம்-னு சொல்லப்படாது!
Sanskritல எப்பிடியிருக்கோ, அதே போல் தான் தமிழிலும் சொல்லணும்!

ஆனா தொல்காப்பியர், சம்ஸ்கிருதத்துக்கு இயைஞ்சிப் போகாதே! 
தமிழில் பயன்படுத்த வேண்டியிருந்தா, "சிதைத்தே" புழங்கு-ன்னு சொல்றாரே?
*சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்!
*வடசொற் கிளவி, வட எழுத்து ஒரீஇ;  Sanskrit எழுத்து ஒதுக்கு -ன்னு சொல்றாரே?

தமிழ் மொழிக்கு, பாரா-சொக்கன் பெரிதா? 
இல்லை..  தொல்காப்பிய விதிகள் பெரிதா?

இப்படீல்லாம் நீங்க கேட்க மாட்டீங்க?:)
*உங்களுக்கு Friendship முக்யம்;
*அவாளுக்கு, ஸந்தி முக்யம்; Sanskrit முக்யம்!

இப்பிடி Adjust பண்ணி, Adjust பண்ணித் தான், இந்த நிலமையில் இருக்கோம்!
தமிழில், கலந்து.. கள்ள உறவாடும் சம்ஸ்கிருதச் சொற்கள் > 30%

ஆங்கிலமாச்சும், சும்மா பேச்சு வழக்கு; Figureன்னு ஒங்க ஆயா கூடச் சொல்லீரும்:)
ஆனா.. வார்த்தை/ அர்த்தம் எ. சொற்கள்?
தமிழ்-ன்னே நினைப்பு; அந்நிய ஊடுருவல்-னு கூடத் தெரியாது:(

பாரா/ சொக்கன் போன்ற பண்டிதாள், தமிழ் ஆசிரியர் நாற்காலியில், 
"வாத்தி" என்று உட்கார்ந்து கொண்டு.. 
காலங் காலமாய்ச் செய்த கள்ள மாய்மாலங்கள்!

Sanskrit சொற்களையெல்லாம், தமிழில் எதுக்குய்யா எழுதறீங்க?
அதை நேரடியாச் சம்ஸ்கிருதத்திலேயே எழுதிக்கோங்களேன்? 

...என்று தமிழர்கள் ஆகிய நீங்கள் கேட்கவே இல்லை! விளைவு?

விளைவு: தமிழில்.. கிரந்த Alphabet புகுத்தல்!
"அ/ஆ" என்ற தமிழ் எழுத்தையே,
எப்படி மாத்தி வச்சிருக்கா, மேலே பாருங்கோ!

நல்ல வேளை.. நீங்க ஜ, ஸ, ஷ, ஹ.. &  க்ஷ, ஸ்ரீ -இதை மட்டும் எடுத்துக்கிட்டு,
மற்றதை மறந்துட்டீங்க; தமிழ் மொழி பொழைச்சுது!

---------

இவர்களுக்குப் பாதை போட்டுக் குடுப்பது யாரு?
= காஞ்சி (போன) மஹா பெரியவா!
அவல் சாப்ட்டு அஞ்சு மைல் நடப்பாரே, அதே "எளிமை மிகு" பெரியவா!

புனிதம்/ எளிமை/ பகவான் என்ற பேரில், இங்கு எதுவும் செல்லுபடி ஆகுமே?


கீழே பாருங்கோ!
இலக்கணம்= "லக்ஷணம்" எ. ஆரம்பிச்ச மஹான் யாரு? 
ஸ்ரீ. சொக்கனா? மஹா பெரியவாளா?

ஸ்ரீ சொக்கன் எ. தனித்த ஆள் மட்டும், இதைப் பண்ணலை! 
இஃதொரு பெரிய Network!
இவர்கள், செய்வது என்ன?
ஆங்காங்கே, Networking வளர்த்துக் கொண்டு, Parasite ஒட்டல்!

சங்கத் தமிழ்க் கவிஞர்கள்-லாம் யாரு தெரியுமா? இதோ வாத்திகள் சொல்றா!
अ முதல் ह வரை (அ முதல் ஹ வரை) 48 எழுத்துக்கள்!
51 Sanskrit Letters தான், 51 சங்கப் புலவர்களா.. அவதாரம் எடுத்துச்சாம்!

So, ஒங்க சங்கத் தமிழுக்கே மூலம் எது? = Sanskrit!:)
சொல்வது: சாமிப் பாட்டு;
பகவான் என்பதால், நீங்க ஒத்துக்கிட்டுத் தான் ஆகணும்!


சரி, ஸ்ரீ சொக்கனுக்கு, Sanskrit தெரியுமா?
தெரியாது! அவரே, பொதுவில் சொல்லி இருக்காரு..
அப்பறம் எப்படி, இலக்கணம்= லக்ஷணம்-ன்னு சொன்னாரு?

அதை மட்டும் கேட்கப்படாது;
வேதமே படிக்கலீன்னாலும்.. வேதம் ரொம்ப நல்ல வேதம்;
அதில் ஜாதியே இல்லை-ன்னு பரப்பல் செய்வாரு நம்ம சொக்கன்:) 
இதோ.. https://goo.gl/JuxkGE

இப்படி.. மூலம் தெரியாமலேயே எழுதிக் குவித்த "அவியல்" புத்தகங்கள்;
அதான் வினவு தளம்.. இவர்களை "அஜினோ மோட்டோ" என்று உணர்த்திக் காட்டியது!
பா.ராகவன் : அஜினோ மோட்டோ ராஜரிஷி!https://goo.gl/wOxH19

எல்லாப் பார்ப்பனர்களும், இப்படிச் செய்கிறார்களா?
இல்லை!
ஆனால் பலப் பல பேர்; பெரும்பாலும் செய்கிறார்கள் தான்!

Sanskrit தெரியலீன்னாலும், Sanskrit பாசம்;
தங்கள் வேர்.. அங்கே தான் உளது! எனும் ஆழ்மன நம்பிக்கை!
வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும்.. பல ரூபங்களில் வெளிப்பட்டூரும்:)

அதைக் கடந்தவர்கள்... வெகு குறைவே! நல்ல பிராமணர்கள்!

*Sanskrit வேண்டுமானால், தனித்து நல்லபடியா வாழட்டுமே!
*தமிழில் ஏன் Parasite போல், ஒட்டி உறிஞ்ச வேண்டும்?
இந்தத் தெளிவுள்ள நல்ல பிராமணர்கள், மிக மிகக் குறைவே!

*தமிழ்த் தாத்தா, உ.வே.சாமிநாதர், ஓரளவு கடந்தவர்!
*கல்கி. கிருஷ்ணமூர்த்தி, ஓரளவு கடந்தவர்
*சூரிய நாராயண சாஸ்திரி எ. பரிதி மால் கலைஞர்.. முற்றும் கடந்தவர்! எதிர்ப்பவர்!


Sanskrit பாசம் கடந்தாலும்.. தமிழ்த் தாத்தா உவேசா-வை,
ஆசை காட்டி Corrupt செய்யும் காஞ்சிப் பெரியவா Technique! 
மஹா பெரியவா, தன் வாயாலயே ஷொல்றாரு, பாருங்கோ!:) இதோ= https://goo.gl/fN01Jg
---------

என் சம்ஸ்கிருத ஆசிரியர், ஸ்ரீ. உ.வே. வேங்கட கிருஷ்ணமாச்சாரியார்!

அவரை, இங்கு நினைத்து, வணங்கிக் கொள்கிறேன்!
ஒரு நாளும்.. தமிழுக்குள் Sanskrit புகுத்தித் திணிக்காதவர்;
தமிழே= பெருமாளுக்கு உகப்பு! எ. வாயால் சொல்லாது, வாழ்ந்து காட்டுபவர்!


கல்லூரிக் காலத்தே, எனக்குத் தனிப்பட்ட முறையில் சம்ஸ்கிருதம் சொல்லிக் குடுத்த போதெல்லாம்..
என் எத்தனையோ அடாவடி/ குறும்பு/ பெரியார் கேள்வில்லாம் பொறுத்துக் கொண்டு
வேதங்களை விடத் தெளிவு= ஆழ்வார் ஈரத் தமிழே! எ. துணிந்து சத்தியம் செய்தவர்!

பா.ரா/ ஸ்ரீ. சொக்கனை விட, 1000 மடங்கு மேலானவர், என் சம்ஸ்கிருத ஆசிரியர்!
*அவர், சம்ஸ்கிருதம் அறிவார்!

*இவர்கள், அறிய மாட்டார்கள்!
அறியாமலேயே.. இந்தக் குதி குதிக்கிறார்களே? அறிந்தால்?

பெரியார் சொன்ன பொன்மொழி:
*வைதீகப் பார்ப்பானைக் கூட நம்பலாம்!
*ஆனால் லெளகீகப் பார்ப்பானை, நம்பிடாதே!
முற்போக்கு வேஷங்கள்; ஆனால் அடி மனசில்?

இந்த ஒலித் துண்டு கேளுங்கள் (இது என் ஆசிரியர் அல்லர்)
வேளுக்குடி என்ற உபன்யாசகர்; ஆயினும், இராமானுச தமிழ் இயக்கத்தின் வழியில், "ஓரளவாச்சும்" செல்பவர்! Sanskrit திணிக்காமை: "கருத்தை" மட்டும் கேளுங்கள்!


என் சம்ஸ்கிருத ஆசிரியரிடம் பயின்ற போது, பெற்ற 'அனுபவங்களை'யே..
மாதவிப் பந்தல் எனும் வலைப்பூவில் எழுதத் தொடங்கினேன்!
"இறைமையில் தமிழ்" எ. நோக்கத்தில் மட்டுமே! 
இராமானுசரோடு பெரியாரும் உலா வருவார், என் பதிவுகளில்:) ஆனால்... 

*பொறுக்காத ஹிந்து/ சைவர்கள்= என்னை வைணவன் எ. முத்திரை குத்தினர்:)
பின்பு, பகவத் கீதா/ கம்ப ராமாயணக் கயமைகளைச் சொன்ன போது..
*பொறுக்காத வைஷ்ணவர்கள்.. என்னை நாஸ்திகன் எ. முத்திரை குத்தினர்:)
பின்பு, ஆதித் தமிழ்/ சங்கத் தமிழ் உண்மைகள் சொன்ன போது..
*பொறுக்காத சைவ/வைஷ்ணவ இருவருமே, என்னைச் சமணன் எ. குத்தினர்:)

இதோ.. சமணன் ஆகிய நான்! :)))))
இதிலிருந்தே தெரிகிறது.. நான் போகும் தமிழ்ப் பாதை, சரியே என்று!
அவரவர் அபிமானங்கள் உடையும் போது, அவரவர்க்குப் பகை ஆகும் நான்:))
என்னை... என் சிறுவயது (அந்தரங்க) தமிழ் முருகனே நன்கு அறிவான்!





முடிப்புரை:

ஸ்ரீ சொக்கன், உங்களுக்கு நமஸ்காரம்!

ஆரிய அரசன், பிரகதத்தனை மறுத்து.. சங்கத் தமிழ் பாடிய கபிலர்!

அதே போல், நானும் உங்களை மறுக்கிறேன்..

தமிழ் இலக்கணம் = லக்ஷணம் எ. சம்ஸ்கிருதம் அல்ல!
*இலக்கணம் = இலக்கு + அணம்
*இலக்கியம் = இலக்கு + இயம்

இதை, 2012லேயே, உங்கள் பதிவில் சொல்லியுள்ளேன்; இதோ= https://goo.gl/s9Kujm
ஆனாலும், Gentleman போல் உலா வந்து,
கடைசியில்.. உங்கள் "புத்தி" காட்டி விட்டீர்கள்:(


சிறு பிள்ளைகள் நெஞ்சில், நஞ்சை விதைக்கும்..
நீரோ ஆசிரியன்? அல்ல; நீயே கள்ள வாத்தி:(


இலங்குவதால், இலக்கணம்!
இன்னின்ன எழுத்து, இன்னின்ன சொல், இன்னின்ன பொருள்.. 
இப்படி இப்படி "இலங்க" வேண்டும் என்ற மொழி வரையறையே = "இலக்க"ணம்!

சம்ஸ்கிருத லக்ஷணம் தான் இலக்கணம் என்றால்..
Sanskritஇல் ஒரு Grammar நூலாச்சும்.. "லக்ஷணம்" எ. பேருடன் காட்டுங்க பார்ப்போம்?

சம்ஸ்கிருதத்தில்..
*இலக்கணம் = "வியாகரணம்" (व्याकरण); லக்ஷணம் (लक्षण) அன்று!

*இலக்கியம்  = "ஸாஹித்யம்" (साहित्य) ; லக்ஷியம் (लक्ष्य) அன்று!
இதிஹாஸம்/ புராணம் என்று, ஸாஹித்யம் விரிவு பெறும்;

Sanskrit தெரியுமா, சொக்கா.. உமக்கு?
ஸ்லோகார்த்தம் ஏவ விவரண ஹஸ்தோபி! - இதன் பொருள் சொல்லுங்க பார்ப்போம்?

பாணினி Sanskrit Grammar = "பாணினி லக்ஷணம்" என்றா இருக்கு?
பாணினி வியாகரணம், அஷ்ட த்யாயி!
வியாகரணம் என்ற Sanskrit Grammar கூட அறியாமல்,
3000+ ஆண்டு "தமிழ் இலக்கணத்தை", Sanskrit ஆக்கும் நீயோ தமிழ்-ஆசிரியன்?
உன்னிடமா, இங்கு தமிழ் ஐயம் கேட்டோம்/ கேட்கிறார்கள்? ச்சீ!:((((((

"இல்" என்ற தமிழ் வேர்ச்சொல்லால்.. இலக்குதலும், இலங்குதலும்!

*இலக்குக்கு,  இயம் செய்வது   =  இலக்கியம்!
*இலக்குக்கு, அணம் செய்வது = இலக்கணம்!
இலக்கியங்கள் எழுந்த பின்னரே, அதைச் செந்தரப்படுத்த.. இலக்கணங்கள் எழும்!

இதோ, தொல்காப்பிய "இலக்கணம்"!
ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொல் கிளவி
"இலக்கண" மருங்கில் சொல்லாறு அல்ல! - (சொல்லதிகாரம்; கிளவியாக்கம்: 510)

தொல்காப்பியம், என்ன "லக்ஷண" மருங்கா, ஸ்ரீ சொக்கன்?:(
எத்துணை, நெஞ்சழுத்தம் ஒமக்கு.. 3000+ ஆண்டு, தமிழ் இலக்கணத்தை இழிவு செய்ய?

இதோ, நாலடியார் "இலக்கணம்"!
முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
"இலக்கணம்" யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலுமென்
தீம்பாவை செய்த குறி (நாலடியார் 399)

இதோ, சிலப்பதிகார "இலக்கணம்"!
சிலம்பு காணிய வந்தோர் இவரெனச்
செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம்
பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட
"இலக்கண" முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படும் மகனலன் என்று கூறும்! (கொலைக்களக் காதை: 159-163)

இதோ, சிவ சிவா என்று திருவாசக "இலக்கியம்"!
பேசும் பொருளுக்கு "இலக்கியமாம்" பேச்சிறந்த 
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப் 
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல 
மருத்தினடி என்மனத்தே வைத்து! (பண்டாய நான்மறை 48:7)

அத்தனையும்.. "இலக்குதல்/ இலங்குதல்" என்ற பொருளிலே, தமிழ் "இலக்கணம்"

இலக்கு + அணம் = இலக்கணம்
இலக்கு + இயம் = இலக்கியம்
இலங்குவதால்.. இலக்கணம்!
இன்னின்ன எழுத்து, இன்னின்ன சொல், இன்னின்ன பொருள்..
இப்படி இப்படி ‘இலங்க’ வேண்டும் என்ற வரையறையே = 'இலக்க'ணம்! 

இலக்கு-இலங்கு: மெலித்தல் / வலித்தல் விகாரங்கள்;
'இல்' என்பதே வேர்ச்சொல்;
இலக்கை இயம்புவது = இலக்கியம்
இலக்கை அடைய வழி (அணம்) வகுப்பது = இலக்கணம்

ஓர் எடுத்துக்காட்டு பார்த்தால் உங்களுக்கே விளங்கிவிடும்;
சிலப்பதிகாரம் போல ஓர் இலக்கியம் எழுத ஆசைப்படுகிறேன்;
என் இலக்கு+இயக் கொள்கை என்ன?
1. புகழ்சால் பத்தினி உலகம் போற்றும்
2. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

சரி, இலக்கை இயம்பியாச்சு; எப்படி அடைவது? இலக்கு+அணம் வழி காட்டும்;
என்ன கருப்பொருள், உரிப்பொருள்? என்ன கதை?
யார் ஆண்பால், பெண்பால் கதை மாந்தர்கள்?
என்ன திணையில் என்ன Scene வைப்பது?
எங்கெல்லாம் பண் / இசை வரணும்? ஆசிரியப்பாவா? உரையிடை பாட்டா?
இதையெல்லாம் சேர்த்துக் கட்டினால், இலக்கு+இயம் கிடைக்கும்;
அதற்கு, அணம் (வழி) சொல்வதே, இலக்கு+அணம்!

தமிழ் மொழியின் முதல் பிள்ளை = இலக்கியமே; பின்னரே இலக்கணம்!
இலக்கியங்கள் எழுந்த பின்னரே செந்தரப்படுத்த இலக்கணங்கள் எழும்! 
எள்ளில் இருந்து தான் எண்ணெய்; எண்ணெயில் இருந்து எள் அன்று! :)
இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே! எள் இன்றாகில் எண்ணெயும் இன்றே!

வழக்கின் ஆகிய உயர்சொல் கிளவி
"இலக்கண" மருங்கில் சொல்லாறு அல்ல!
(தொல்காப்பியம்; கிளவியாக்கம்: 510)

இலக்கணம் = லக்ஷணம் அல்ல! சம்ஸ்கிருத மொழியிலேயே.. அது வியாகரணம் / व्याकरण தான்; யாரும் சம்ஸ்கிருத லக்ஷணம்' என்று சொல்லுவதில்லை! பாணினி 'வியாகரணம்'!

ஆனால் பாணினி வியாகரணத்துக்குள், 'லக்ஷணம்' என்றொரு வரியும் வரும்;
அதைத் திரித்து, வெறும் சொலைக் காட்டி, பொருள் மறைப்பார்கள்!
ஆனால் இக்காலத்தில், இவர்களை விட,
நாம் சம்ஸ்கிருதம் அறிந்து வைத்துள்ளோமே? என்ன செய்ய? :)

பிரத்யய லோபே, பிரத்யய லக்ஷணம் | प्रत्यय लोपे प्रत्यय लक्षणम् |
பிரத்யயம் = முன்னொட்டு / பின்னொட்டு
பிரத்யய லோபே = ஒரு (Sanskrit) சொல்லில் முன்னொட்டோ / பின்னொட்டோ லோபம் ஆனாலும் (மறைந்து போனாலும்)..
பிரத்யய லக்ஷணம் = அந்த முன்னொட்டு / பின்னொட்டின் இயல்பு மறைந்து போகாது! இவ்ளோ தான், இந்தப் பாணினி வரிக்குப் பொருள்;

Sanskrit தெரியலீன்னாலும், Sanskrit பாசம் கொண்டு ஆதிக்கப் புத்தி காட்டினால், தமிழிடம் அசிங்கப் படலே, உங்கள் லக்ஷணம்!
लाक्षण / லஷணம் என்றால் இயல்பு / குணம்! பொய் சொல்றியே, இதான் உன் லட்சணமா? என்று கேட்பது, இயல்பு / குணம் என்ற பொருளில் தான்; இதான் உன் Grammarஆ? என்ற பொருளில் அல்ல! :)

லக்ஷ்மணன் = தமிழில் கிரந்தம் தவிர்க்க வேண்டி இலக்குவன் என்று எழுதுவதால்,
அக் கொம்பைப் பிடித்த குரங்கு போல்,
இலக்கணம் = லக்ஷணம் என்று Reverse Gear அடிக்கும் திருட்டுத்தனம் / மடத்தனம்!

தறியில் இருந்து வெட்டி எடுக்கப்படுவதால்.. வெட்டி, ஆதிநீண்டு வேட்டி!
ஷொல் (சொல்), ஆஷை (ஆசை), Goலு (கொலு), வேஷ்டி (வேட்டி) என்றெல்லாம் பிழையாகப் புழங்கிவிட்டு.. பின்பு, வே’ஷ்’டியில் இருந்தே, வேட்டி வந்தது என்று சொன்னால் எப்படி?
பேரனுக்குத் தாத்தன் பிறந்தான்! எனும் மூடம் தான்! சம்ஸ்கிருதமே அறியாவிட்டாலும், இப் 'புத்தி' சிலருக்கு எதனால் வருகிறது?

அறிக: இலக்கியம் / இலக்கணம் = தமிழ்ச் சொற்களே! 
சம்ஸ்கிருதம் அல்லவே அல்ல!
2500+ ஆண்டுள்ள ஒரு மொழியின் இலக்கணத்தை..
 “அது உன் மொழியே அல்ல; சம்ஸ்கிருதப் பிச்சை”
என இழிவுசெய்தல் = கொடுமனம்! மட்டமான 'புத்தி'!

---------

ஸ்ரீ. சொக்கன்..
ஒரு தொல் மொழியின் இலக்கணத்தையே = Sanskrit என்கிறோமே?
என்ற அச்சம்.. கூடவா உம்மிடம் இல்லை?

எத்துணை நெஞ்சழுத்தம்  உமக்கு, ஓர் ஆதிமொழியின் இலக்கணத்தையே இழிக்க?:(

உம் போன்றவர்களின் திருக்கூத்து பார்த்துட்டு,
மனசுக்குள்ளேயே புழுங்கி,  வாய்மூடிச் சென்று விட, நான் 
மெல்லியல்பாளர்கள் கானாபிரபாவோ/ ராகவனோ இல்லை!
இருந்தேன்.. ஒரு காலத்தில், மென்மையே உருவாக! 
Controversy-யே இலாது, அனைவர்க்கும் நண்பனாய்! பதிவுலகில் கேட்டுப் பாருங்க..

ஆனால்.. உம் போல்வார் Sanskrit திருக்கூத்து கண்டு கண்டு, மனமொடிந்து மாறினேன்; 
தனிப்பட்ட நட்புக்கு.. தமிழையே அடகு வைக்கும் மெல்லியல்.. இனி போய்விட்டது!:(
---------

1. வாழ்த்துக்கள்/ வாழ்த்துகள் - இரண்டும் சரியே! 
அத் தமிழ் மொழி நெகிழ்வைச் சிதைக்க முயன்றீர்கள்!
சரி, வெறும் சொல் தானே.. என்று விட்டுப் பிடித்தேன்; 
ஜெயமோகனுக்கு, உம் பேர் சொல்லாது எழுதினேன்! 
நச்சினார்க்கினியர் தரவு மட்டும் முன் வைத்து, அமைந்து போனேன்;

2. கோயில்/ கோவில் - இரண்டும் சரியே!
அத் தமிழ் மொழி நெகிழ்வைச் சிதைக்க முயன்றீர்கள்!
உம் பதிவிலேயே, தரவு சொல்லி, திருத்தி.. அமைந்து போனேன்!

3. இவை சிறுசிறு விவாதங்களே! பொருட்படுத்தல் இல்லை; வெறுஞ் சொல் தானே!
ஆனால் தனிப்பட்டு எடுத்துக் கொண்டு,
என்னை, அந்தக் கால அக்ரஹார ஜாதி பிரஷ்டம் போல்..

என் நண்பர்களையெல்லாம், விலக்கப் பார்த்தீர்கள்;
உங்கள் Influence மூலமாக, பலருக்கும் DM/ மின்னஞ்சல் செய்து:(

இது குறித்து உங்கள் மட்டமான செய்கைகளை,
ஸ்ரீமதி. அமாஸ்.. எனக்கு அனுப்பிய email-ஐப் பொதுவில் வைக்கட்டுமா?
(அவர்கள் இசைவு அளித்தால்); 
உங்கள் Gentleman சுயரூபங்கள்?:(

இதெல்லாம், என் மேலான தனித் தாக்குதல் மட்டுமே!
இதனால் தமிழுக்குப் பாதகம் இல்லையே? எ. நான் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை! 
ஆனால்... இன்றோ எத்துணை நெஞ்சழுத்தம் இருப்பின்.. 
ஒட்டுமொத்த தமிழ் இலக்கணத்தையே..
Sanskrit லக்ஷணம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்வீர்கள்?

அதுவும், ஏதுமறியாப் பிஞ்சு உள்ளங்களில்? சீச்சீ..

உங்களை... "ஏமாற்றுக்காரன்" எ. சொல்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்!
இதோ, வாங்கிக் கொள்ளுங்கள்!
"பார்ப்பனக் கூலி"யாம்; நான் சொல்லலை.. தமிழே உருவான பாரதிதாசன் சொல்றாரு!
இலக்கணம் = லக்ஷணமா? என்ற அவர் ஆய்வையும், இதோ படிக்கவும்!


ஸ்ரீ. என். சொக்கன்,
உம் Gentleman-தனத்தில், ஏமாந்து தான் போனேன்/ போனோம்:(

ஆனால்.. "அவரவர் எச்சத்தாற் காணப்படும்"! 
என்று இறைவன், காலம் காட்டி அருள்கிறான்!

கரவு ஆகிய கல்வி உளார், கடை சென்று
இரவா வகை, மெய்ப்பொருள் ஈகுவையோ?
யாம் ஓதிய கல்வியும், எம் (தமிழும்)
தாமே பெற வேலவர் தந்ததினால்...! (கந்தர் அநுபூதி)

இனி மேல்.. உம் தமிழ் வாத்திப் போதனைகளில்.. ஏமாற மாட்டோம்!

உங்கள் 365paa தளத்தில், விடிய விடிய தமிழ் எழுதி..
இன்று உங்கள் கயமையால் ஏமாந்து நிற்கும் நான்..
உள்ளபடியே வெட்கித் தலை குனிகிறேன்:(

பிஞ்சுக் குழந்தைகளின் தமிழைக் கெடுக்கும்.. காணொளி கண்ட நாள் முதலாகவே!

அந்ய க்ஷேத்ரே கர்மோ பாபம், புண்ய க்ஷேத்ரே விநச்யதி;
புண்ய க்ஷேத்ரே கர்மோ பாபம், வாரணாசே விநச்யதி!
வாரணாசே கர்மோ பாபம், ஸ்ரீநிவாசே விநச்யதி;
தமிழுக்குக் கர்மோ பாபம்?
சர்வம் நஹி விநச்யதி; சக குடும்பாம் நஹி விநச்யதி; சகல ஜென்மாம் நஹி விநச்யதி!

தமிழுக்குச் செய்த பாவம்.. எப்படி, வேதம் எ. ஆதாரமே.. இன்று உங்களவாளை விட்டுப் போயிருச்சோ, 
போலவே.. ஸ்ரீ சொக்கனே, தமிழ் உமக்கு அறம் கூறும்! முருகன் திருவடி ஆணை!

உங்கள் மேல், முன்பொரு காலத்தில் வைத்த மரியாதை கருதி, வீண் கும்மிகள் வேண்டாம் என்று பந்தலில் முதன்முறையாகப் பின்னூட்டங்களைப் பூட்டுகிறேன்!
சென்று வாருங்கள் என். சொக்கனே; பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு, ஈசன் நக்கு நிற்பர்.. அவர் தமை நாணியே!:(

தமிழ் மொழி இலக்கணம்= இலக்கு+அணமே!
Sanskrit "லக்ஷணம்" அன்று, அன்று!

பிஞ்சுக் குழந்தைகளின் தமிழைக் கைவைச்சிக் கெடுக்காதீர்கள்; ச்சே! மனமே ஆறலை:(
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP