Sunday, January 31, 2010

"அறிவு கெட்ட" பீஷ்மரா? "மகா ஞானி" பீஷ்மரா??

பந்தல் வாசகர்களுக்கு இனிய வணக்கம்! தலைப்பைக் கண்டு என்னமோ ஏதோ-ன்னு பயந்துறாதீங்க! பீஷ்மர் கதாபாத்திரத்தை மிகவும் நேசிப்பவர்கள் ஓவரா டென்ஷனும் ஆவாதீங்க :) .....இன்று பீஷ்ம ஏகாதசி! (26-Jan-2010) பெரிய ஞான யோகியும்...சிறந்த கர்ம யோகியுமான...பீஷ்ம பிதாமகர்! அவரோட நினைவு நாள் இன்று! * பீஷ்மர் => "அறிவு கெட்ட" பீஷ்மரா?.... "பக்த பெரும்" பீஷ்மரா?? * நாம் எல்லாம் => "அறிவு கெட்ட" ஆத்திகர்களா? "அன்பு...
Read more »

Friday, January 29, 2010

நரசிம்ம சரணாகதி - 1

அரங்கனின் பெருமைகளைப் பேசிக் கொண்டே வந்த பெரியாழ்வாருக்கு, தன் மனம் ஐம்புலன்களிலே சென்றதைக் குறித்து வெறுப்புக் கொண்டு, 'என் பிழையைப் பொறுக்க வேண்டும்; எனக்கு அருள் செய்ய வேண்டும்' என்று, வாக்குத்தூய்மை என்ற திருமொழியின் மூலம் அரங்கனை வேண்டுகின்றார்.திருமொழியின் 9-ஆம் பாசுரத்தில், நரசிம்மனை அழைக்கிறார்.***நம்பனே! நவின்றேத்த வல்லார்கள்* நாதனே! நரசிங்கமதானாய்!*உம்பர்கோன்! உலகேழுமளந்தாய்!* ஊழியாயினாய்!...
Read more »

Friday, January 22, 2010

தசாவதார நரசிம்மர்

முந்தைய பாசுரத்தில், நரசிம்மனே வாமனனாய் வந்து காட்சி தரும் கோயில் அரங்கம் என்றார்.ஆனால் அடுத்த பாசுரத்தில்?***தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அரியாய்க் குறளாய்*மூவுருவில் இராமனாய்* கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்*சேவலொடு பெடை அன்னம்* செங்கமல மலர் ஏறி ஊசலாடி*பூவணைமேல் துதைந்து எழு* செம்பொடி ஆடி விளையாடும் புனலரங்கமே. மரவடியை 4-9-9அருள் உடைய மீனாக, ஆமையாக, வராகமாக, நரசிம்மமாக, வாமனனாக,...
Read more »

Sunday, January 17, 2010

ஒரு "தாசி" உணர்ச்சி அடைகிறாள்! - பிங்கலாவின் கதை(கீதை)!

மாயக் கண்ணன் மாயப் போகிறான்! துவாரகை மூழ்கப் போகிறது!திருச்சீர் அலைவாய்கள் அலைத்து அலைத்து விளையாடும் தீவு நகரமாம் அந்த துவரைப் பதி! அதைக் கடல் சூழ்ந்து "சுனாமி"க்கப் போகிறது!துவரைப் பதியின் சில வேளிர் குடிகள், இன்னும் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டன! தமிழைக் கைக்கொண்டு புறப்பட்டு விட்டன!தன் அன்பனும்-நண்பனும்-பக்தனுமான உத்தவனுக்கு,தன்னுடைய "கடைசி" நேரத்தில்....இன்னொரு கீதையைச் சொல்லத் துவங்குகிறான்...
Read more »

Friday, January 15, 2010

நரசிம்ம வாமனன்

பெரியாழ்வாரின் திருவரங்கக் காதல் தொடர்கின்றது ...***உரம் பற்றி இரணியனை* உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க ஊன்றி*சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க* வாயலறத் தெழித்தான் கோயில்*உரம் பெற்ற மலர்க் கமலம்* உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட*வரம்புற்ற கதிர்ச் செந்நெல்* தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண் அரங்கமே.மரவடியை 4-9-8இரணியனின் இருதயத்தைத் தொட்டு, நகங்களின் முனையால் அவன் ஒளி பொருந்திய மார்பு அழுந்தும்படி...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP