Wednesday, December 27, 2006

பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!! - 1

வைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது?=திருவரங்கம்.

திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. "கோயில்" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான்! நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.

ஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.
அரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து, அப்படியே ஆனைக்காவில் அப்பனுக்கும் அந்த மாலவன் மாலை தனையே சூட்டி மகிழ்கிறாள். பின்னர் கல்லணைக்குச் சற்று முன்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரே ஆறாக ஓடுகிறாள்!
அதனால் கங்கையினும் புனிதமான காவிரி என்று பெரும் சிறப்பு பெறுகிறாள்!

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்கு நீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!
(- தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

அரங்கன் அரங்கத்துக்கே அரசன்! எந்த அரங்கம்? திருவரங்கமா? இல்லை இல்லை!
உலகம் என்பதே பெரும் நாடக அரங்கம்; அந்த அரங்கத்துக்கு அரசன்! அவன் குடிகள் நாம் எல்லோரும்!

ரங்கராஜன் என்று அவனை அழைப்பதில் தான் அரங்கவாசிகளுக்கு அப்படி ஒரு சுகம். ஏதோ தன் வீட்டுப் பிள்ளை தான், ஊருக்கே ராஜா என்று சொல்லிக் குதிக்கும் ஒரு கோலாகலம். அதுவும் மார்கழியில் பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களில் இதை கண்கூடாகக் காணலாம்;

அழைப்பு ஏதும் இன்றி, தன் வீட்டு விழா போல் இதைச் சிறப்பிக்கிறார்கள் ஊர் மக்கள். சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி ஊரே கொண்டாடி மகிழும் விழா! மாற்று மதத்து வழக்கமாகவும் சில பூசைகள் நடக்கும்!

அதுவும் தமிழுக்குச் சிறப்பு செய்யும் திருவிழா! = திருவாய்மொழித் திருநாள்

என்ன... இப்போதெல்லாம் கூட்டத்தைச் சமாளிக்க சரியான வழியை அரசும் தொண்டு நிறுவனங்களும் கொஞ்சம் கடைப்பிடித்தால், எல்லாரும் இந்தத் தமிழ் விழாவைப் புரிந்து கொண்டு ரசிக்க ஏதுவாகும்!


சரி, நாம் கதைக்கு வருவோம். அரங்கனின் திருக்கோவிலில்,
குட திசை முடியை வைத்துக், குண திசை பாதம் நீட்டி,
வட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கி

பள்ளி கொண்டுள்ளான் அரங்கன்.

அவனுக்கு அர்ச்சனை செய்வதையே தர்மமாகக் கொண்டுள்ளார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பவர். ஒரு குழந்தைக்குச் செய்வது போல அவனுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்வார். மற்றபடி ஒரு எளிய அர்ச்சகர். அவ்வளவு தான்.

அவருக்கு மனதில் வெகு நாளாய் ஒரு ஆசை, ஆனால் பெருமாளிடம் சொல்லத் தயக்கம்.
தன் அர்ச்சனை போய், அவன் கர்ச்சனை ஆகி விடுமோ என்ற மயக்கம்.
ஆனால் அன்று மட்டும் தட்டைக் கீழே வைத்து விட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்: "ரங்கா, எனக்கும் மோட்சம் கொடேன்!"

அரங்கன்: "என்ன சுவாமி இன்று திடீர் என்று உங்களுக்கு மோட்சத்தில் ஆசை வந்தது?"

"எனக்கு அதில் ரொம்ப நாள் ஆசை ரங்கா! எல்லாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா? எனக்கு நீ கொடுக்க மாட்டாயா?"

"சரி யோசிக்கலாம்; நீங்கள் கர்ம யோகம் ஏதாச்சும் செய்திருக்கிறீரா?"

"இல்லை, சுவாமி!"

* சரி, ஞான யோகம்?"

"அதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்!"

"* சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா?"

"அந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே!"

"* ஹூம்ம்ம்ம்ம்ம்; சரணாகதி செய்திருக்கிறீரா?"

"அச்சச்சோ, எனக்குத் செய்யத் தெரியாதே சுவாமி."

"* சரி போகிறது! ஒரு நாளாவது என் பக்தனுக்கு அன்னம் இட்டு உள்ளீரா?"

"பசித்த பலருக்கு அப்பப்போ சாப்பாடு கொடுத்துள்ளேன், ஆனால் பக்தனா என்றெல்லாம் பார்த்து சோறிட்டது இல்லை சுவாமி"

* என்ன இது இப்படிச் சொல்கிறீர்? சரி, போனால் போகட்டும்! என் கதை சொல்லப்படும் இடத்திலாவது போய்க் கேட்டதுண்டா?"

"இல்லை சுவாமி! நான் உண்டு என் வேலையுண்டு என்று இருந்து விடுவேன்!"



வந்ததே கோபம் ரங்கநாதருக்கு! எழுந்து உட்கார்ந்தார்!
நாம் எல்லாரும் சயனத் திருக்கோலம் மட்டும் தானே சேவித்துள்ளோம்! அவனுடைய உட்கார்ந்த திருக்கோலம் கண்டவர் பிள்ளைப் பெருமாள் ஐயா மட்டுமே!

"* எதற்கெடுத்தாலும் இல்லை, இல்லை என்றே பதில் சொல்கிறீர்கள்? என்ன அக்ரமம்! மோட்சத்தை இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே! மோட்சம் என்ன கிள்ளுக் கீரை என்று நினைத்தீரா? ஒன்றுமே செய்யாத உமக்கு எப்படி ஐயா கொடுப்பது மோட்சம்?"

இதைக் கேட்டவுடன், பிள்ளைக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது!
பெருமாள் அவரிடம் சினந்து பாத்ததே இல்லையா, அதனால் மிகவும் கழிவிரக்கம் வந்து கோபமாய் மாறி விட்டது! அடியவருக்கும் அவனுக்கும் உள்ள உறவைப் பாருங்கள்! இருவரும் என்னவெல்லாம் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்!

பிள்ளை இடுப்புத் துண்டை இறுக்கி இழுத்துக் கட்டிக் கொண்டார்.
"ரங்கா, உன்னை ஒரு குழந்தை போல் கவனிக்கும் என்னிடமா கோபப்படுகிறாய்?
உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?...
அன்று பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தவன் தானே நீ!..."
என்று கேட்டாரே ஒரு கேள்வி!

அதைக் கேட்டுப் படுத்தவன் தான் அரங்கன்!
இன்று வரை எழுந்திருக்கவே இல்லை!
அப்படி என்ன தான் கேள்வி கேட்டார்?....
சற்றுப் பொறுங்கள்! அடுத்த பதிவில்!!

வைகுந்த ஏகாதசி Dec 30 (மார்கழி 15) அன்று வருகிறது!
அதையொட்டி தினம் ஒரு தொடராக ஐந்து பதிவுகள் இடலாம் என்று எண்ணம்.
இந்தக் கதையை ஒட்டி, தமிழ் விழா, அழ்வார்கள் உற்சவம், இராப்பத்து திருநாள்,
இறைவன் பல்லக்கில் இருந்து கொண்டு எல்லார்க்கும் அள்ளு தமிழில் இடும் ஆணைகள்.
இப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் காணலாம், வாங்க!

69 comments:

  1. அவன் அம்பலத்தரசன்; இவன் அரங்கத்து அரசன். இருவருக்கும் ஒரே மாலை; ஏன்?
    இருவரும் ஒன்றன்றோ?

    இறுதியில் எல்லோரையும் சிந்திக்க வைத்துவிட்டது. பொய் சொன்னது யார்? அதுவும் பெரும் மாயாவியான கள்வனிடம்?

    ReplyDelete
  2. அந்த ரங்கராஜன் ஆட்சி செய்யும் ஊரில் பிறந்த இரண்டு ரங்கராஜன்கள் இலக்கிய உலகில் கொடிகட்டிப் பறப்பவர்கள.

    யாரென்று தெரிகிறதா?

    ஒருவர் கவஞர் வாலி
    இன்னொருவர் எழுத்தாளர் சுஜாதா
    (இருவரின் இயற்பெயரு்ம் ரங்கராஜன்தன்)

    ReplyDelete
  3. நன்றிகள் பல..கே ஆர் எஸ்....

    தொடரட்டும் உங்கள் தொண்டு......

    மெளலி...

    ReplyDelete
  4. இந்தக் கதையை நான் கேள்விப்பட்டதில்லையே. தொடரட்டும். சுவாரசியமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. பக்தி மணம் சொட்டும் பதிவுகள் தொடரட்டும் கண்ணபிரான்!

    // வட திசை பின்பு காட்டி //

    இதற்கு உரையாசிரியர்களின் அற்புதமான வியாக்கியானம் உண்டு (நினைவிலிருந்து எழுதுகிறேன். exact சொற்கள் கொஞ்சம் வேறாயிருக்கலாம்)

    "ஆழ்வார்களது தீஞ்சொல்லும், தமிழும் அறியாத முருடர் வாழும் தேசமாகையினாலே பின்னழகு மாத்திரம் சாதித்தருளினார் என்க"

    // இப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் //

    மேலே சொன்னபடிக்கு, பெருமாளே செய்து வைத்த ஏற்பாடு அல்லவோ இது!

    ReplyDelete
  6. சத்தமில்லாமல் எனது கோரிக்கையை நிறைவேற்றுகிறீர்கள்...(சில நாட்கள் முன் ஒரு பின்னூட்டத்தில் இராப்பத்து-பகல்பத்து பற்றி எழுதக் கேட்டேன்.) இந்த தொடரில் அது கிடைக்குமெனத் தோன்றுகிறது....நன்றி.

    மெளலி...

    ReplyDelete
  7. நடராஜனையும், ரங்க ராஜனையும் பத்தி எவ்வளவு எழுதினாலும் சுவை தான்.

    ReplyDelete
  8. ரவிசங்கர்!
    கங்கையிற் புனிதமாய காவேரி"....இப்பாசுரம் படித்துள்ளேன். அதன் பொருள் இதுவா???நன்று நன்று!!
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  9. respected sri.KRS,

    Ur way of celebrating VaikuntaEkadesi is astonishing to say the least.

    Sendra 30pathu Kaisikan, intha 30 Vaikuntatherke Vinavidukum Ekadesi aga amaiyum pol therigirathu.

    Classic; keep it up eagerly awiting ur blog.

    sundaram

    ReplyDelete
  10. //ஞானவெட்டியான் said...
    அவன் அம்பலத்தரசன்; இவன் அரங்கத்து அரசன். இருவருக்கும் ஒரே மாலை; ஏன்?
    இருவரும் ஒன்றன்றோ?//

    நன்று ஞானம் ஐயா! இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து என்று தானே ஆழ்வாரும் பாடுகிறார்!

    //இறுதியில் எல்லோரையும் சிந்திக்க வைத்துவிட்டது. பொய் சொன்னது யார்? அதுவும் பெரும் மாயாவியான கள்வனிடம்?//

    :-) இன்று மாலை தெரிந்து விடும்.

    ReplyDelete
  11. nice post!1
    waiting for the next part!

    ReplyDelete
  12. //SP.VR.சுப்பையா said...
    இரண்டு ரங்கராஜன்கள் இலக்கிய உலகில் கொடிகட்டிப் பறப்பவர்கள.
    யாரென்று தெரிகிறதா?
    ஒருவர் கவஞர் வாலி
    இன்னொருவர் எழுத்தாளர் சுஜாதா
    (இருவரின் இயற்பெயரு்ம் ரங்கராஜன் தன்)//

    நன்றி சுப்பையா சார்! அனைவரும் அறியத் தந்தீர்கள்!

    ராகி ரங்கராஜன் வேறு ஊரா?

    ReplyDelete
  13. //Mathuraiampathi said...
    நன்றிகள் பல..கே ஆர் எஸ்....
    தொடரட்டும் உங்கள் தொண்டு......//

    நன்றி மெளலி சார்.

    ReplyDelete
  14. //G.Ragavan said...
    இந்தக் கதையை நான் கேள்விப்பட்டதில்லையே. தொடரட்டும். சுவாரசியமாக இருக்கிறது.//

    வாங்க ஜிரா; சுவாரசியம் தொடரும் பாருங்க! :-)

    ReplyDelete
  15. //ஜடாயு said...

    // வட திசை பின்பு காட்டி
    "ஆழ்வார்களது தீஞ்சொல்லும், தமிழும் அறியாத முருடர் வாழும் தேசமாகையினாலே பின்னழகு மாத்திரம் சாதித்தருளினார் என்க" //

    உண்மை தான் ஜடாயு சார்! மணவாள மாமுனிகள் காலத்தே தோன்றிய வடமொழி குறித்த சிறு சர்ச்சைகளினால், அப்படி அருளினர்!
    இருப்பினும் "முன்னிலும் பின்னழகன்" என்றும் சாதித்து அருளினர்! ஒரு மென்மையான நோக்கில் இடித்துரைக்க ஏற்பட்ட வியாக்யானம் அது!

    // இப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் //

    மேலே சொன்னபடிக்கு, பெருமாளே செய்து வைத்த ஏற்பாடு அல்லவோ இது!//

    உண்மை; முற்றிலும் உண்மை!

    ReplyDelete
  16. //Anonymous said...
    சத்தமில்லாமல் எனது கோரிக்கையை நிறைவேற்றுகிறீர்கள்...(சில நாட்கள் முன் ஒரு பின்னூட்டத்தில் இராப்பத்து-பகல்பத்து பற்றி எழுதக் கேட்டேன்.) இந்த தொடரில் அது கிடைக்குமெனத் தோன்றுகிறது....நன்றி.//

    மெளலி சார், மூன்றாம் நாள் தொடரில் விரிவாக வரும்! அன்று தான் இராப்பத்து தொடக்கம்!

    ReplyDelete
  17. //கீதா சாம்பசிவம் said...
    நடராஜனையும், ரங்க ராஜனையும் பத்தி எவ்வளவு எழுதினாலும் சுவை தான்.//

    உண்மை தான் கீதாம்மா!
    ராஜாதி ராஜன்கள் அல்லவா? :-)

    ReplyDelete
  18. //johan -paris said...
    ரவிசங்கர்!
    கங்கையிற் புனிதமாய காவேரி"....இப்பாசுரம் படித்துள்ளேன். அதன் பொருள் இதுவா???நன்று நன்று!!//

    வாங்க யோகன் அண்ணா
    இப்படித் தான் காவிரி இன்னும் சிறப்பு பெற்றாள்! தஞ்சை திருச்சேறை தலத்தில் அவள் தவத்தை இன்றும் காணலாம்!

    ReplyDelete
  19. ரவியின் எழுத்தில் ரசனைக்கா பஞ்சம்!
    அதுவும் அந்த பொடி வைத்து நிறுத்துவது!!

    அவருக்கே வந்த கலை அல்லவா!

    என்ன.... அந்த 'ராப்பாத்தை' ராப்பத்தாக்கலாம்!

    :))

    ReplyDelete
  20. இப்படி சஸ்பென்ஸ் வெச்சி முடிச்சா நாங்க எல்லாம் என்ன பண்ணுவோம் :-(

    சரி காத்திருக்கிறோம் :-)

    ReplyDelete
  21. இராகவன். நீங்கள் மட்டும் இல்லை. நானும் இந்தக் கதையை இப்போது தான் முதன்முதலில் படிக்கிறேன் என்று நினைக்கிறேன். அடுத்த பகுதி வந்தால் தெரிந்துவிடும் நான் முன்பு இந்தக் கதையைப் படித்திருக்கிறேனா இல்லையா என்று. :-)

    ReplyDelete
  22. இரவு என்பதை இந்திய நேரப்படி இப்ப போடக்கூடாதா??? :-(

    ReplyDelete
  23. இன்றைக்கு தமிழ் ஆலயங்களில் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரே கூச்சல் கேட்கிறது. சில ஆலயங்களில் தமிழுக்கு இரண்டாவது இடம் இருப்பது உண்மை என்றாலும் பல ஆலயங்களில் குறிப்பாக எல்லா வைணவ ஆலயங்களிலும் (தமிழகம் தாண்டியும் சில வைணவ ஆலயங்களில்) பல நூற்றாண்டுகளாக தமிழுக்குத் தான் முதலிடம். ஆலயங்களில் தமிழ் இல்லை என்று எத்தனை உரக்கச் சொல்லப்படுகிறதோ அத்தனை உரக்க ஆலயங்களில் தமிழுக்கு முதலிடம் உண்டு என்பதையும் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  24. //வெட்டிப்பயல் said:
    இப்படி சஸ்பென்ஸ் வெச்சி முடிச்சா நாங்க எல்லாம் என்ன பண்ணுவோம் :-(//

    2006 இன் சிறந்த பதிவரே வருக!
    தங்கள் பாதம் பட அடியேன் பதிவு என்ன புண்ணியம் செய்ததோ! :-)

    உங்களையே காக்க வைக்கிறான் பாருங்கள் அரங்கன்! :-))

    ReplyDelete
  25. திருவரங்கத்தில் நடக்கும் பல திருவிழாக்கள் ஆழ்வார்களின் அமுதத் தமிழுக்குச் செய்யும் சிறப்புகளானாலும் இந்த வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முழுக்க முழுக்க நாலாயிர திவ்ய பிரபந்தத் தமிழுக்கு மட்டுமே செய்யும் சிறப்பு அல்லவா? 21 நாட்கள் வேதங்கள் ஓதுவதை அறவே நிறுத்திவிட்டு தமிழை மட்டுமே ஓதுவார்களே. தமிழின் பின்னே ஒடி வடமொழியைப் பின் தொடரச் செய்தவன் தமிழுக்கு முகம் காட்டி வடமொழிக்கு முதுகு காட்டினான் என்ற ரசமான விளக்கத்தை இன்றே படித்தேன். ஆகா.

    ReplyDelete
  26. //வெட்டிப்பயல் said...
    இரவு என்பதை இந்திய நேரப்படி இப்ப போடக்கூடாதா??? :-(//

    வாங்கய்யா பாலாஜி!
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! :-))

    நெல்லிக்காய் நாவலில் எத்தனை சஸ்பென்ஸ் கொடுத்திருப்பீங்க? உங்க ரசிகர் பட்டாளம் நாங்க எல்லாரும் எப்படிக் காத்துக் கிடந்தோம்!

    நல்லா வேணும்ய்யா உமக்கு :-))))

    ReplyDelete
  27. பிள்ளை பெருமாள் ஐயங்கார் தானே வியாக்கியானச் சக்ரவர்த்தி? அவருக்கும் அரங்கனுக்கும் நடந்த உரையாடல் மிகச் சுவாரசியமாக இருக்கிறது இரவிசங்கர். கதையின் தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  28. //SK said:
    ரவியின் எழுத்தில் ரசனைக்கா பஞ்சம்!
    அதுவும் அந்த பொடி வைத்து நிறுத்துவது!!//

    பொடியன் அடியேன்
    பொடி வைக்க அறியேன்,
    SK ஐயா! :-))

    //என்ன.... அந்த 'ராப்பாத்தை' ராப்பத்தாக்கலாம்!//

    'ராப்பாத்தை' கால் ஒடித்து ராப்பத்தாக்கி விட்டேன் ஐயா! மருத்துவர் கால் ஒடிக்கச் சொல்லலாமா? :-))

    நன்றி!!

    ReplyDelete
  29. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //வெட்டிப்பயல் said:
    இப்படி சஸ்பென்ஸ் வெச்சி முடிச்சா நாங்க எல்லாம் என்ன பண்ணுவோம் :-(//

    2006 இன் சிறந்த பதிவரே வருக!
    தங்கள் பாதம் பட அடியேன் பதிவு என்ன புண்ணியம் செய்ததோ! :-)

    உங்களையே காக்க வைக்கிறான் பாருங்கள் அரங்கன்! :-))
    //

    நாராயணா!!!
    என்ன கொடுமை இது??? அரங்கன் பெயரை பார்த்து வராமல் போய் விடுவேனா???

    இந்த பதிவை படிக்க நாங்களல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்!


    அரங்கனுக்காக காத்திருப்பதும் சுகமன்றோ!!!

    ReplyDelete
  30. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //வெட்டிப்பயல் said...
    இரவு என்பதை இந்திய நேரப்படி இப்ப போடக்கூடாதா??? :-(//

    வாங்கய்யா பாலாஜி!
    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! :-))

    நெல்லிக்காய் நாவலில் எத்தனை சஸ்பென்ஸ் கொடுத்திருப்பீங்க? உங்க ரசிகர் பட்டாளம் நாங்க எல்லாரும் எப்படிக் காத்துக் கிடந்தோம்!

    நல்லா வேணும்ய்யா உமக்கு :-))))
    //

    நியாபகப்படுத்தி விட்டீர்கள்...
    இறுதி பகுதி உடனே எழுதி போடுகிறேன்...

    நாடுவதும் அதுவே!!! :-)

    ReplyDelete
  31. //இன்றைக்கு தமிழ் ஆலயங்களில் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரே கூச்சல் கேட்கிறது. சில ஆலயங்களில் தமிழுக்கு இரண்டாவது இடம் இருப்பது உண்மை என்றாலும் பல ஆலயங்களில் குறிப்பாக எல்லா வைணவ ஆலயங்களிலும் (தமிழகம் தாண்டியும் சில வைணவ ஆலயங்களில்) பல நூற்றாண்டுகளாக தமிழுக்குத் தான் முதலிடம். ஆலயங்களில் தமிழ் இல்லை என்று எத்தனை உரக்கச் சொல்லப்படுகிறதோ அத்தனை உரக்க ஆலயங்களில் தமிழுக்கு முதலிடம் உண்டு என்பதையும் சொல்ல வேண்டும்.//

    ஐயா அனாமதேயரே! நீர் யாரோ? யார் பெற்ற பிள்ளையோ? நன்றாக இருக்கவேண்டும். நீடூழி வாழ் வேண்டும்.

    சென்றமாதம் ஒரு நாள் குடந்தை சாரங்கபாணி கோவிலுக்குச் சென்றிருந்தேன். திவ்வியதேசங்களில் மூன்றாவதாக இத்தலம் வருகிறது. அங்குள்ள பட்டர் ஆராவாமுதனின் ஆராதனையின்போது அக்கோவிலை மங்களாசனம் செய்வித்த இரண்டு பாசுரங்களை மட்டும் அருமையாக மெய்யுறுகப் பாடிவிட்டு ஆராதனை முடித்தார். அங்கிருந்தோர் அனைவரின் மனங்களும் ஒரு ஆயுளுக்கு நிறைந்தன.

    (என்னது? பதிவைப் பற்றியா? அதற்கென்ன? அமோகமாய் இருக்கிறது!)

    ReplyDelete
  32. இதென்ன அநியாயம், ரவி!

    கேக்கறதுக்கு ஆள் இல்லேன்னு ஆடறீங்களா?:))

    என் பின்னூட்டத்தில் எங்காவது காலை ஒடிக்கச் சொல்லி எழுதியிருக்கிறேனா?

    ////என்ன.... அந்த 'ராப்பாத்தை' ராப்பத்தாக்கலாம்!//

    நான் "ஆக்கத்தான்" சொன்னேன்!

    //'ராப்பாத்தை' கால் ஒடித்து ராப்பத்தாக்கி விட்டேன் ஐயா!//

    ஒடித்தது நீங்கள்!

    // மருத்துவர் கால் ஒடிக்கச் சொல்லலாமா? :-))//

    பழி ஓரிடம்! பாவம் ஓரிடம்!!

    ம்ம்ம்ம்ம்!!:(

    :)

    ReplyDelete
  33. ரவி நல்ல ஸஸ்பென் ஸில் நிறுத்தி விட்டீர். அது யாரு தர்மபுத்திரரா?

    ReplyDelete
  34. //குமரன் (Kumaran) said...
    இராகவன். நீங்கள் மட்டும் இல்லை. நானும் இந்தக் கதையை இப்போது தான் முதன்முதலில் படிக்கிறேன் என்று நினைக்கிறேன். அடுத்த பகுதி வந்தால் தெரிந்துவிடும் நான் முன்பு இந்தக் கதையைப் படித்திருக்கிறேனா இல்லையா என்று. :-)//

    படித்திருக்கிறீர்கள் :-)))

    ReplyDelete
  35. //Anonymous said...
    இன்றைக்கு தமிழ் ஆலயங்களில் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரே கூச்சல் கேட்கிறது.... குறிப்பாக எல்லா வைணவ ஆலயங்களிலும் (தமிழகம் தாண்டியும் சில வைணவ ஆலயங்களில்) பல நூற்றாண்டுகளாக தமிழுக்குத் தான் முதலிடம்.//

    அனானி ஐயா!
    அருமையான பின்னூட்டம்; நல்ல கருத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கீங்க! நீங்க சொல்வது முற்றிலும் உண்மை! இதற்கு எல்லாம் வழி கோலிய ஆச்சாரியர்களையும் உடையவர் ராமானுசரின் தொலைநோக்கையும் என்னவென்று சொல்வது?

    தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் ஆலயங்களில் கூட இப்படித் தமிழ் இடையறாது ஒலிக்குமா என்பது சற்று சந்தேகம் தான்! இந்நிலை மாறி தமிழே தழைத்தோங்கினால் முருகனடியார் முகத்தில் எல்லாம் முறுவல் தானே பூக்கும் :-) அந்த நாளும் வந்திடாதா?

    ReplyDelete
  36. //Anonymous said...
    //ஆலயங்களில் தமிழ் இல்லை என்று எத்தனை உரக்கச் சொல்லப்படுகிறதோ அத்தனை உரக்க ஆலயங்களில் தமிழுக்கு முதலிடம் உண்டு என்பதையும் சொல்ல வேண்டும்//

    அடியேன் அறிந்த வரை இப்படி தமிழ் முதலிடம் பெறும் ஆலயங்கள், அதன் விழா வைபவங்களை, அவன் அருளால், சொல்லிக் கொண்டு வருகிறேன் ஐயா! அடியேனின் திருமலைப் பதிவுகளையும், தமிழுக்காக சுப்ரபாதம் பாதியில் நிறுத்தம் பதிவையும் கண்டு கருத்துரைக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கிறேன்!

    http://verygoodmorning.blogspot.com
    http://madhavipanthal.blogspot.com/2006/10/8_02.html

    ReplyDelete
  37. //குமரன் (Kumaran) said...
    திருவரங்கத்தில்...21 நாட்கள் வேதங்கள் ஓதுவதை அறவே நிறுத்திவிட்டு தமிழை மட்டுமே ஓதுவார்களே. தமிழின் பின்னே ஒடி வடமொழியைப் பின் தொடரச் செய்தவன் தமிழுக்கு முகம் காட்டி வடமொழிக்கு முதுகு காட்டினான் என்ற ரசமான விளக்கத்தை இன்றே படித்தேன். ஆகா.//

    ஆமாம் குமரன்; எம்பெருமான் இன்னும் ஒரு படி மேலே போகிறான்!
    தமிழுக்கு அவன் முகம் காட்ட வில்லை!
    தமிழ் தான் அவனுக்கே முதுகு காட்டுகிறது! :-)

    அந்த ஆழ்வார் தமிழமுது உண்ணத் தானே, தமிழ் முன்னால் செல்ல அதன் பின்னே பெருமாள் ஓடுகிறான்!
    எங்கே தமிழ்ச்சுவையில் தங்களை மறந்து விடுவானோ என்று பயந்து, வேத கோஷ்டி பெருமாள் பின்னே அலறி அடித்து ஓடி வருகிறது!

    ReplyDelete
  38. //குமரன் (Kumaran) said...
    பிள்ளை பெருமாள் ஐயங்கார் தானே வியாக்கியானச் சக்ரவர்த்தி?//

    அவரே!

    //அவருக்கும் அரங்கனுக்கும் நடந்த உரையாடல் மிகச் சுவாரசியமாக இருக்கிறது இரவிசங்கர். கதையின் தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.//

    நன்றி குமரன்! காத்திருக்கிறீர்களா? :-)
    காக்கும் பணியே பணியாய் அருள்வாய்! - தமிழ்
    காக்கும் பணியே பணியாய் அருள்வாய்!

    ReplyDelete
  39. //தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் ஆலயங்களில் கூட இப்படித் தமிழ் இடையறாது ஒலிக்குமா என்பது சற்று சந்தேகம் தான்! //

    Hahahahaha. Ragavan, Please note this point. My argument for a long time is Maayavan also has the rights to be called Thamiz KadavuL.

    ReplyDelete
  40. //வெட்டிப்பயல் said...
    நியாபகப்படுத்தி விட்டீர்கள்...
    இறுதி பகுதி உடனே எழுதி போடுகிறேன்...
    நாடுவதும் அதுவே!!! :-) //

    நாடுவோம்! நாடி நாம் கண்டு கொள்வோம்
    நாராயணா என்னும் நாமம்!

    ReplyDelete
  41. //ஓகை said...
    சென்றமாதம் ஒரு நாள் குடந்தை சாரங்கபாணி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள பட்டர் ஆராவாமுதனின் ஆராதனையின் போது அக்கோவிலை மங்களாசனம் செய்வித்த இரண்டு பாசுரங்களை மட்டும் அருமையாக மெய்யுறுகப் பாடிவிட்டு ஆராதனை முடித்தார். அங்கிருந்தோர் அனைவரின் மனங்களும் ஒரு ஆயுளுக்கு நிறைந்தன//

    வாங்க ஓகை ஐயா!
    //மனங்களும் ஒரு ஆயுளுக்கு நிறைந்தன// எத்தனை அனுபவித்துச் சொன்ன வார்த்தை!

    குடந்தை திருத்தலம் தான் ஒளிந்து கிடந்த தமிழ்ப் பிரபந்தங்களை உலகுக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்தது! அங்கு நீங்கள் உருகி நின்றதிலும் ஒரு பொருள் இருக்கத் தான் செய்கிறது!

    //(என்னது? பதிவைப் பற்றியா? அதற்கென்ன? அமோகமாய் இருக்கிறது!)//

    :-)
    தங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஓகை ஐயா!

    ReplyDelete
  42. ஓகை ஐயாவுக்காக ஸ்பெஷலாக,
    கும்பகோணப் பாசுரங்கள் (குடந்தை)

    ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
    நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடு மாலே
    சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருக் குடந்தை,
    ஏரார் கோலம் திகழக் கிடந்தாய், கண்டேன் எம்மானே
    -நம்மாழ்வார்

    நடந்த கால்கள் நொந்தவோ
    நடுங்கு ஞாலம் ஏனமாய்,
    இடந்த மெய் குலுங்கவோ
    விலங்கு மால் வரைச்சுரம்
    கடந்த கால் பரந்த கா-
    விரிக் கரைக் குடந்தையுள்,
    கிடந்தவாறு எழுந்தி ருந்து
    பேசு வாழி கேசனே
    -திருமழிசை ஆழ்வார்

    ReplyDelete
  43. //SK said...
    இதென்ன அநியாயம், ரவி!
    கேக்கறதுக்கு ஆள் இல்லேன்னு ஆடறீங்களா?:))//

    அய்யகோ! SK அயா!
    அடியேன் பொடியேன், இனிப் பொடி வைத்து முடியேன்! :-)
    கருணை காட்டுங்கள் கதிர் வேலா!

    ஆறுவது சினம், மாறுவது மனம்!
    கோவியார் அன்பர் கோவிக்கல் ஆகுமா! :-))

    ReplyDelete
  44. //தி. ரா. ச.(T.R.C.) said...
    ரவி நல்ல ஸஸ்பென் ஸில் நிறுத்தி விட்டீர். அது யாரு தர்மபுத்திரரா?//

    வாங்க திராச ஐயா.
    அவன் தர்மத்தின் தலைவன்; இவனோ சாதாரணத் தொண்டன்! :-))

    ReplyDelete
  45. //ஆறுவது சினம், மாறுவது மனம்!
    கோவியார் அன்பர் கோவிக்கல் ஆகுமா! :-))
    //

    கோவியார் நண்பர் என்பதால் இவரும் கோவியார் என்று எடுத்துக் கொள்ளலாமா இரவி. தவறல்லவா? :-)

    ReplyDelete
  46. படங்களும் பாசுரங்களும் அருமை ரவி. ஜடாயுவின் பதிவிலும் அருமையான படங்கள். எங்கிருந்து எடுத்து போடுகிறீர்கள்?

    ReplyDelete
  47. //குமரன் (Kumaran) said:
    //தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் ஆலயங்களில் கூட இப்படித் தமிழ் இடையறாது ஒலிக்குமா என்பது சற்று சந்தேகம் தான்! //

    Hahahahaha. Ragavan, Please note this point. My argument for a long time is Maayavan also has the rights to be called Thamiz KadavuL//

    குமரன், இது என்னங்க புதுக்கதை?
    அடியேனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்! :-)
    இதற்கு ஏன் விவாதம்?
    மாயவன் தமிழ்க் கடவுளே தான் என்பது தான் வெள்ளிடை மலை ஆயிற்றே!!!

    முன்னவன் தமிழ்ச் சொன்னவன்
    அதனால் தமிழ்க் கடவுள்!
    கண்ணவன் தமிழ்க் கேட்பவன்
    அதனால் தமிழ்க் கடவுள்!

    சொல்ல நா ஒன்றென்றால்
    கேட்கச் செவி இரண்டன்றோ!

    தமிழ் சொல்வது ஒரு சுவை என்றால்
    தமிழ் கேட்பதும் ஒரு சுவை தானே!

    கற்றலின் கேட்டலே நன்று! :-)

    அடியேனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வீர்களா? :-))

    ReplyDelete
  48. "மாயவன், தமிழ்க்கடவுள், வெள்ளிடைமலை!"

    மார்கழி மாதத்தில், மிகத் திறமையாக, மாமனையும், மருகனையும், அப்பனையும் கொண்டுவந்து காட்டிவிட்டீர்களே! :))
    **********

    அது சரி, 'கோவியார்' கோவியார் என குமரனுக்கு ஆர் சொன்னது?:))
    **********

    அப்படியே ஒரு சின்ன விளம்பரமும் போட்டுவிடுகிறேன்!

    இன்றைய திருவெம்பாவை பதிவு இன்னும் சில மணி நேரங்களில் பதியவிருக்கிறேன்.

    தமிழ்ச்சுவை நாடுவோர்க்கு இன்று ஒரு தனி விருந்து காத்திருக்கிறது!

    அனைவரும் தவறாது வந்து, விருந்தைச் சுவைத்துச் "சொல்லுமாறு" பணிவன்புடன் வேண்டுகிறேன்!!
    ***********

    ReplyDelete
  49. இரவிசங்கர். கூடலில் என் தமிழ்மண விண்மீன் வாரப் பதிவொன்றைப் படித்துப் பாருங்கள். தேடிப் பார்க்கிறேன். உடனே கிடைத்தால் சொல்கிறேன்.

    ReplyDelete
  50. http://koodal1.blogspot.com/2006/01/134.html

    இதோ இருக்கிறது அந்த விவாதம். வெட்டிப்பயலாரும் படித்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். கோவியாரின் நண்பரும் படித்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன்.

    ஹும். இந்தப் பதிவை இப்போது பார்க்கும் போது 'அதெல்லாம் ஒரு காலம்' என்று தோன்றியது.

    ReplyDelete
  51. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  52. // கோவியாரின் நண்பரும் படித்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். //


    கோவியாரின் எந்த நண்பரைக் குறித்து நீங்கள் சொன்னீர்களோ எனக்குத் தெரியாது குமரன்!

    ஆனால் நான் இதை மீள்பதிவாக வந்தபோது படித்து, பின்னூட்டமும் போட்டிருக்கிறேன்!!

    நீங்களும் பதில் சொல்லி இருக்கிறீர்கள்!!

    [பார்க்க கடைசி சில பி.ஊ.களை!]

    ம்ம்ம்..நீங்கள்தான் சரியாகப் பார்க்கவில்லை!

    "அப்பல்லாம் நான் புச்சுதானே!" :-((

    :))

    ReplyDelete
  53. ஆமாம் எஸ்.கே. நீங்கள் படித்திருக்கிறீர்கள். மேலே அப்படி சொல்லிவிட்டு பின்னர் பார்த்த போது உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன். இரவிசங்கரும் படித்திருக்கிறார். திருமலை பிரம்மோத்ஸவப் பதிவில் அந்தப் பதிவிற்கு சுட்டி கொடுத்திருக்கிறார். பாலாஜி மட்டும் இப்போது படித்து பின்னூட்டம் போட்டிருக்கிறார். :-)

    நீங்க புச்சா? மயிலை மன்னார் மட்டும் தான் 'புச்சு'ன்னு நெனைச்சேன்?!! :-)

    ReplyDelete
  54. பின்னூட்டமிட நேரமாகி விட்டது, ரவி. அரங்கன் கதை ஏகப்பட்டது இருக்கே. எல்லாவற்றையும் போடுங்கள்.
    நீங்கள் கதை எழுதுவதைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது நிறைய சந்தோஷம்.
    நேரே பார்ப்பதுபோல் இருக்கிறது.

    ReplyDelete
  55. ஸ்ரீரங்க கோபுரத்தில் இப்போதுதான் கவனிக்கிறேன், முன்பக்கத்தில் கொஞ்சம் வெளியே வந்தாவாறு ஒரு முக்கோணமாய் இருக்கிறது. இருகை கூப்பியதுபோல...!

    தொடர் சுவாரஸ்யமாக இருக்கும் போல...வீடு சென்றவுடன் தொடரை படித்துக்காட்ட எண்ணம்!

    ReplyDelete
  56. அன்புள்ள கண்ணபிரான், உங்கள் எழுத்துநடை அருமையாக உள்ளது. அனைவரையும் போல், சஸ்பென்ஸ் உடைக்கப்படும் தருணத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறேன் :-)

    ReplyDelete
  57. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

    இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

    இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  58. //பத்மா அர்விந்த் said:
    படங்களும் பாசுரங்களும் அருமை ரவி. ஜடாயுவின் பதிவிலும் அருமையான படங்கள். எங்கிருந்து எடுத்து போடுகிறீர்கள்?//

    நன்றி பத்மாஜி.
    சர்வம் கூகுள் மயம்.
    krishna.com இல் அழகு கொஞ்சும் கண்ணன் படங்கள் உள்ளன!

    இந்தப் பதிவில் உள்ள b/w ஓவியங்கள் scannned personal collection.

    ReplyDelete
  59. // SK said...
    "மாயவன், தமிழ்க்கடவுள், வெள்ளிடைமலை!"

    மார்கழி மாதத்தில், மிகத் திறமையாக, மாமனையும், மருகனையும், அப்பனையும் கொண்டுவந்து காட்டிவிட்டீர்களே! :))//

    மாமனை அப்படிக் காட்டச் சொன்னதே மருகன் தான் sk ஐயா!
    அவங்களுக்குள்ள அப்படி என்ன தான் ஒரு understandingஓ :-))

    ReplyDelete
  60. //குமரன் (Kumaran) said...
    ஹும். இந்தப் பதிவை இப்போது பார்க்கும் போது 'அதெல்லாம் ஒரு காலம்' என்று தோன்றியது.//

    குமரன்
    தங்களுக்கா இந்தா பெருமூச்சு!

    மறுபடியும் கடை கட்டி விடலாம்!
    உம் என்று சொல்லுங்க! :-)

    ReplyDelete
  61. //வல்லிசிம்ஹன் said...
    நீங்கள் கதை எழுதுவதைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது நிறைய சந்தோஷம்.
    நேரே பார்ப்பதுபோல் இருக்கிறது//

    நன்றி வல்லியம்மா!
    நேரே அரங்கத்தில் காணக் கண் கோடி போதுமா என்று சரியாகத் தெரியவில்லை!
    அவ்வளவு அழகா இருக்கும்!

    ReplyDelete
  62. //Jeeva Venkataraman said...
    ஸ்ரீரங்க கோபுரத்தில் இப்போதுதான் கவனிக்கிறேன், முன்பக்கத்தில் கொஞ்சம் வெளியே வந்தாவாறு ஒரு முக்கோணமாய் இருக்கிறது. இருகை கூப்பியதுபோல...!//

    ஓ அதுங்களா! நீங்க சொன்னப்புறம் தான் பார்த்தேன். முகப்பு வைத்து கட்டின கோபுரம். இஞ்சிமேட்டு ஜீயர் சுவாமிகளின் நுட்பம்.

    ஒரு lift உம் இருந்தது. பின்னர் பழுதானது. சரி பார்க்கவில்லை!

    //தொடர் சுவாரஸ்யமாக இருக்கும் போல...வீடு சென்றவுடன் தொடரை படித்துக்காட்ட எண்ணம்!//

    நன்றி ஜீவா.

    ReplyDelete
  63. //சேதுக்கரசி said...
    அன்புள்ள கண்ணபிரான், உங்கள் எழுத்துநடை அருமையாக உள்ளது. அனைவரையும் போல், சஸ்பென்ஸ் உடைக்கப்படும் தருணத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறேன் :-) //

    நன்றிங்க சேதுக்கரசி!
    சஸ்பென்ஸ் உடைத்தாகி விட்டது! இரண்டாம் பாகம் பாருங்க!

    ReplyDelete
  64. //மு.கார்த்திகேயன் said...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..//

    கார்த்தி, கலக்கிட்டீங்க!
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  65. அருமை !கண்ணபிரான் ரவி!சில காரணங்களால் இங்கு நான் என் மடலைத் தாமதமாய் அளிக்க வேண்டியதாகிவிட்டது.
    திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு அரங்கனைப்பற்றி நீங்கள் இத்தனை அழகாக எழுதுவது கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. திருவரங்கத்தில் அரங்கன் வீதி உலா வரும்போது தமிழ் தான் முன்னின்று செல்லும்.பின்னே வேதம் தொடரும். திருவரங்கத்தில் நாலாயிரதிவ்யபிரபந்தமும் அரையர்கள் மூலமாய் செவிமடுப்பான் அரங்கன், அபிநயித்து அவர்கள் அதனைக்கூறும் அழகினைக் காணக் கண்கோடி வேண்டும் இயல் இசை நாடக்ம் என முத்தமிழும் அரங்கேறும் மார்கழிமாததில் கோவிலுக்குள் வேறு யாரும் உரக்க பாசுரம் சொல்ல அனுமதி இல்லை.
    அற்புதமாய் இந்தப்பதிவினை எழுதிவரும் உங்களுக்கு
    அரங்கனின் ஆசிகளும் அருளும் கண்டிப்பாய் உண்டு.
    திருவரங்கப்ரியா

    ReplyDelete
  66. புதிய பதிவுகள் தெரிய அந்த அரங்கனின் அருள் வேண்டும். என்ன செய்வதுன்னும் புரியலை.

    ReplyDelete
  67. //ஷைலஜா said...
    திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு அரங்கனைப்பற்றி நீங்கள் இத்தனை அழகாக எழுதுவது கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.//

    நன்றி திருவரங்கப்ரியா!
    எங்கேனும் திருத்தம் செய்ய வேண்டி இருந்தாலும் சுட்டிக்காட்டுங்கள்! என்ன இருந்தாலும் நீங்க அரங்கனிடம் வளர்ந்தவர் ஆயிற்றே!

    //அரையர்கள் மூலமாய் செவிமடுப்பான் அரங்கன், அபிநயித்து அவர்கள் அதனைக்கூறும் அழகினைக் காணக் கண்கோடி வேண்டும் இயல் இசை நாடக்ம் என முத்தமிழும் அரங்கேறும்//

    அரையர் சேவை பற்றித் தனிப் பதிவு ஒன்று பின்னர் இடுகிறேன் ஷைலஜா!

    //அற்புதமாய் இந்தப்பதிவினை எழுதிவரும் உங்களுக்கு
    அரங்கனின் ஆசிகளும் அருளும் கண்டிப்பாய் உண்டு//

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  68. //கீதா சாம்பசிவம் said...
    புதிய பதிவுகள் தெரிய அந்த அரங்கனின் அருள் வேண்டும். என்ன செய்வதுன்னும் புரியலை.//

    கீதாம்மா, பதிவுகள் தெரியவில்லையா?
    சுட்டி தனிமடலில் அனுப்பித்தேனே! அங்கிருந்துமா செல்லக் கடினமாக உள்ளது? என்ன பிரச்னை என்று சொன்னால் முடிந்த அளவு உதவுகிறேன்!

    ReplyDelete
  69. Arangar Mouli soozhkinna(soozhkindra enbathu ezhuthu murai) maalaiyai ch chootikkoduthavall thol arul`al vaazhkinna vallalhallukku namaskaaram.

    Thiruvarangam, thiruvilliputtur, matrum aazhvaar thirunagari, aahiya moondru divya desangalil mattum thaan araiyar sevai nadakkirathu(enakku therinthu, veru engaavathu araiyar sevai nadanthaal adiyenai, pizhai thiruthunngal).

    Athilum aranganin arulai, suvaiyudan sollumpothu "maivanna narungunji kkkuzhal pin thaala, maharam sernthu irupaadu ilangiyaada eivanna vengilaiye vadivaai inge, iruvaraai vanthaar en ethire ninnar, kai vannam thaamarai vaay kamalam polum, kaithalamum aravindan kannum ahuthe avvannathavar nilamai kandum thozhi avarai naam thevarennu anjinome"

    endru, perumaalin ella angangalum thaamarai (kai, vaai,kaithalam, kann Inai(pair of eyes) nnu thirumangai mannan sonna paattai araiyar abhinayam pannumpothu arbuthamaha irukkum.

    Araiyar sevaihalai muzhuvathum anubavithavarhal athai patri innum ezhuthalaam

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP