Monday, December 11, 2006

குறையொன்றுமுண்டோ? - எம்.எஸ்.நினைவு நாள்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்; Behind every successful man there is a Woman! என்பார்கள்.
ஆனால் ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால், ஆண் பக்க பலமாக இருந்தார். Behind a successful woman, there was a Man!
யார் என்று உங்களுக்கே தெரியாதா என்ன?
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி - கல்கி சதாசிவம் தம்பதியரே அவர்கள்!
இன்று பாரத ரத்னா,எம்.எஸ் அம்மாவின் நினைவு நாள் (Dec 12).

தமிழிசைக்கு அவர்கள் இருவரும் புரிந்த தொண்டு மகத்தானது.
முன்னணியில் எம்.எஸ். தமிழிசைப் பாடல்கள் பாடினாலும்,
பின்னணியில் அதைச் சேகரித்து, அதுவும் பக்தி இசைப் பாடல்களாகப் பார்த்து பார்த்துச் சேகரித்து, பிரபலமாக்கியதில் சதாசிவம் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார்.
தமிழிசை சற்றே தழைக்க ஆரம்பித்த காலத்தில், தயக்கமே இன்றி, துணிவுடன் அதற்கு இசைந்த ஒரு சில கலைஞர்களில் எம்.எஸ். ஒருவர்!

இசையையும் தாண்டி, ஆன்மீகத்திலும், மனித நேயத்திலும் இவர் செய்த பணிகள் தான், நம் தலைவர் அப்துல் கலாம் அவர்களை எம்.எஸ் பால் ஈர்த்தது!
பல கச்சேரியின் சன்மானங்களை எல்லாம் மேடையிலேயே மனித நேய நிறுவனங்களுக்குக் கொடுத்து விடும் வழக்கம்! அதுவும் பல பேருக்குத் தெரியாது!

நாம் எல்லாம் ஆபிசில் ஒரு பொன்னாடை போட்டாலோ, மலர்க் கொத்து தந்தாலோ, மறக்காமல் கிப்ட் வ்ராப்பிங்கோடு வீட்டுக்கு எடுத்து வரும் பார்ட்டிகள்!
அதுவும் பெண்கள் இது போன்ற சின்னச்சின்ன சந்தோஷங்களை எல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று வேடிக்கைக்குச் சிலர் சொல்வார்கள்! ஆனால் எம்.எஸ்-ஐப் பாருங்கள்!


சென்னைக் கோட்டூரில் இவர் இல்லத்தைப் பார்த்தால் வாய் அடைத்துப் போவீர்கள்; ஒரு பெரிய பாடகியின் வீடா இவ்வளவு எளிமையானது என்று! வீடு மட்டுமா எளிமை? இன்று சிலரைப் போல, ஆளை அடிக்கும் பட்டோ, நகையோ பிரதானமாகவே தெரியாது;
அலங்காரத்தை விட ஐச்வர்யம் அல்லவா மோலோங்கி இருக்கும்!


கீழே "குறையொன்றுமில்லை" வீடியோ!
பலர் ஏற்கனவே youtube-இல் பார்த்து இருக்கலாம்!
இருப்பினும், இன்று அவர் நினைவு நாளில் மீண்டும் ஒரு முறை லயித்துக் கேட்போம்!
திருமலைவாசன் மேல் எம்.எஸ் உருகி உருகிப் பாடியது!
அது சரி, யார் இந்தப் பாட்டை முதலில் பாடியது தெரியுமா?
சூடிக் கொடுத்த சுடர் கோதை, ஆண்டாள்!

ராஜாஜி எழுதிய எளிமையான தமிழ்ப்பாடல்; அதை எப்படி ஆண்டாள் பாடி இருக்க முடியும் என்கிறீர்களா?
"குறையொன்றுமில்லாத கோவிந்தா,
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!"
என்று அவள் தான், முதன் முதலாக இதற்கு அடி எடுத்துக் கொடுக்கிறாள்! நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள் இதை! :-)


வீடியோவின் கடைசிக் கட்டத்தில் தன் இரு கைகளையும் தோளுக்கு அருகே எடுத்துச் சென்று, சங்கு சக்கரம் போல் வைத்து,
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை

"ஒன்றும் குறையில்லை, ஒன்றும் குறையில்லை" என்று எம்.எஸ் உருகுவதைக் காணத் தவறாதீர்கள்!



பாடல் வரிகள் வேண்டுமென்றால், இங்கே செல்லவும்!
எம்.எஸ் அவர்களுக்கு, அவர் எம்பெருமான் ஊரான திருப்பதியில், ஆந்திர அரசு சிலை எடுத்துப் போற்றியது!

வாழ்க நீ அம்மா! வாழியே தமிழிசை!
வாழி அவன் மலரடியில், நீங்காது வாழியே!



(கீழே அவர் வாழ்க்கைச் சுருக்கம் படமாக உள்ளது; 00:05:03)

45 comments:

  1. கண்ணபிரான்,
    இசைக் குயில் அம்மாவைப்பற்றி
    அரிய அறியவேண்டிய செய்தி. அலுவலகத்தில் படம் தெரியவில்லை. வீட்டில் சென்று தான் பார்க்கவேண்டும்.

    நன்றி

    ReplyDelete
  2. பல முறை பார்த்த விடியோதான் என்றாலும் அவர் உருகி உருகி பாடிவது பார்க்க அலுக்கவே இல்லை. பதிவுக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

    ReplyDelete
  3. எத்தனை பாடல் இருந்தாலும் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகுமோ? எத்தனை பாடக பாடகிகள் இருந்தாலும் இந்த ஒரு பாடகிக்கு ஈடாகுமோ? பாட்டுக்கு ஒரே ஒரு புலவன் தான். பாடகி என்றால் இசைப்பேரரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி தான். எத்தனை முறை இந்தப் பாடலைக் கேட்டாலும் மனம் உருக்குதே. குறையில்லை குறையில்லை என்று பாடிக் கொண்டே இருக்கலாம். பாடிக் கொண்டே இருக்கலாம்.

    ReplyDelete
  4. தமிழிசைக்கு எம்.எஸ். அம்மா செய்த தொண்டினை சிலர் மறைக்க முயல்வது பகலவனை கைகளால் தடுத்து மறைக்க முயல்வது போல. தமிழிசை வளர்த்த சுப்புலட்சுமி வாழிய பல்லாண்டு.

    ReplyDelete
  5. ரவிஷங்கர்,
    அருமையான பதிவு.எத்தனை நன்றி உங்களுக்குச் சொல்லுவது.
    இது ஒரு மகுடம்.
    எல்லோரும் குறையில்லாமல் இருக்கட்டும்.

    ReplyDelete
  6. குமரன் கூறுவது போல் எத்தனைப் பாடகிகள் இருந்தாலும் எம் எஸ் அம்மாவிற்கு ஈடு ஆகுமோ? அவர்தம் குரலின் கனிவும் குழைவும் பக்தியும்தான் இந்தப்பாடலை உன்னதமாக்கிவிட்டிருக்கின்றன. எளிமையான வார்த்தைகள் எத்தனை வலிமையாய் நம் மனதை ஆட்கொள்கிறது! ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடலை இங்கும் அளித்த கண்ணபிரான் ரவிசங்கருக்குக் குறைஎன்று ஏதும் வராது.
    ஷைலஜா

    ReplyDelete
  7. பெருமாளை அவர்தந்த பாட்டால் வசம் கொண்டு வாழ்வோம்!
    பெருமாட்டி அதைதந்த பெருமை கண்டு மகிழ்வோம்!

    SP.VR.SUBBIAH

    ReplyDelete
  8. அருமையான பதிவு. அவர் ஒவ்வொரு பாடல்களையும் எத்துணை லயித்தோடும், பாவத்தோடும் பாடினார் என்பது பலருக்கு தெரியாது. அவர் பாடிய தமிழ் விருத்தங்கள், அதுவும் டிகேசி அவர்களுடைய பாடல்கள் ஆகா, ஆகா.

    ஆம் குமரன், அந்த காலத்தில் (30-40) வருடங்களுக்கு முன் அவரது கச்சேரிகளுக்கு 50-75 ஆயிரம் வசூலாகுமாம், அதெல்லாம் அப்படியே தானம் செய்துவிடுவார்களாம்.

    இன்னொன்று, அவரது வெங்கடேச சுப்ரபாதம் ராயல்டியினை பெருமாளுக்கே எழுதிவைத்துவிட்டார்.

    1952ல் யூ.என் வரை சென்று பாடி இந்த தேசத்திற்க்கு, தமிழகத்திற்க்கு பெருமை தேடித்தந்தார்.

    ஆந்திர அரசு அவருக்கு சிலை வைத்து தனக்கு பெருமை தேடிக்கொண்டுவிட்டது.

    நானும் ஒருதரம் உரத்துச் சொல்கிறேன்,

    வாழ்க நீ அம்மா! வாழியே தமிழிசை!
    வாழி அவன் மலரடியில், நீங்காது வாழியே!

    மெளலி.

    ReplyDelete
  9. ரவி சங்கர்!
    அவர் பெண்ணின் பெருமை;பாரத ரத்னம்!!
    வாழ்வில் அவர் பாடலை நேரே கேட்கக் கிடைக்கவில்லை.
    சில வாரங்களுக்கு முன் இந்த "குறையொன்றுமில்லை" பார்த்து;அக் குறையும் தீர்ந்தது.ஒரு கச்சேரிப் பாடகர் தாளம் கைகளில் வைத்துத் தட்டிப்பாடுவது. முதல் முறை கண்டேன்.
    அவர் புகழ் வாழும்....
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  10. கேட்ட பாட்டுக்கும்
    கேட்காத பெருவிருந்துக்கும்
    மனமுகந்த நன்றி.
    வாழ்க! வளர்க!!

    ReplyDelete
  11. //கோவி.கண்ணன் [GK] said...
    கண்ணபிரான்,
    இசைக் குயில் அம்மாவைப்பற்றி
    அரிய அறியவேண்டிய செய்தி.//

    GK ஐயா
    இப்படித் தமிழ் கொஞ்சி விளையாடுகிறதே உங்களிடம்!
    //அரிய அறிய செய்தி//

    முழு வீடியோவும் அவசியம் பாருங்கள்!

    ReplyDelete
  12. //இலவசக்கொத்தனார் said...
    பார்க்க அலுக்கவே இல்லை. பதிவுக்கு நன்றி கே.ஆர்.எஸ்.//

    கரெக்டா சொன்னீங்க கொத்ஸ்!

    குறையொன்றுமில்லை! அதில்
    அலுப்பொன்றுமில்லை!!

    ReplyDelete
  13. //குமரன் (Kumaran) said...
    எத்தனை பாடல் இருந்தாலும் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகுமோ?
    எத்தனை பாடக பாடகிகள் இருந்தாலும் இந்த ஒரு பாடகிக்கு ஈடாகுமோ? //

    உண்மை குமரன்; உன்னதமான உண்மை!

    திருவாசகத்துக்கு உருகாதார்
    ஒருவாசகத்துக்கும் உருகார்!

    அப்படியும் உருகாதார்
    இப்படித்தான் உருகுவார்!
    எம்.எஸ் பாட்டில் உருகுவார்!!

    ReplyDelete
  14. //Anonymous said...
    தமிழிசைக்கு எம்.எஸ். அம்மா செய்த தொண்டினை சிலர் மறைக்க முயல்வது பகலவனை கைகளால் தடுத்து மறைக்க முயல்வது போல. //

    வாங்க அனானிமஸ்.
    உண்மை தான்;
    அப்படி மறைக்க முனைவதின் நோக்கம் தான் புரியவில்லை!

    ஆனால் அப்படி மறைக்கத் தான் முடியுமோ? எம்.எஸ் காலத்திலேயே அவர் காது படவே சிலர் பேசினார்கள்; வழக்கம் போல் அவர் திருமுகத்தில் ஒரு மென்னகை தான்;

    ReplyDelete
  15. //வல்லிசிம்ஹன் said...
    ரவிஷங்கர்,
    அருமையான பதிவு.எல்லோரும் குறையில்லாமல் இருக்கட்டும்.//

    எம்.எஸ் அம்மாவின் கருத்து; அப்படியே சொல்லி உள்ளீர்கள் வல்லியம்மா!!

    "எல்லோரும் குறையில்லாமல் இருக்கட்டும்"

    ReplyDelete
  16. //ஷைலஜா said...
    எளிமையான வார்த்தைகள் எத்தனை வலிமையாய் நம் மனதை ஆட்கொள்கிறது!//

    வாங்க ஷைலஜா; மிகவும் பணி மிகுதியோ! வெகு நாள் ஆனது போல் இருக்கு திருவரங்கப்பிரியாவின் குரல் கேட்டு!
    உண்மை எளிமை, வலிமையாய் ஆவது வெகு சில இடங்களில் தான்; காந்தியண்ணலின் போர் ஒன்று! இது போல் இசையும் இன்னொன்று!!

    //ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடலை இங்கும் அளித்த கண்ணபிரான் ரவிசங்கருக்குக் குறைஎன்று ஏதும் வராது//

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  17. //SP.VR.சுப்பையா said...
    பெருமாளை அவர்தந்த பாட்டால் வசம் கொண்டு வாழ்வோம்!
    பெருமாட்டி அதைதந்த பெருமை கண்டு மகிழ்வோம்!//

    வாங்க சுப்பையா சார்! அருமையாச் சொல்லி இருக்கீங்க!

    பூவால் வாசம் உண்டு!
    பாவால் வசம் உண்டு!
    அவன் வசம் நாம் உண்டு!
    நம் வசம் அவன் உண்டு!!

    ReplyDelete
  18. என்னதான் சொன்னாலும் எம்.எஸ் அவர்களின் சுப்ரபாதம் இல்லாத வீடுண்டா! நான் சிறுவயதில் இருந்த பொழுது அந்தப் பாடலைத் தமிழில் அவர் பாடி வெளிவந்தது. அதுவும் சிறப்பே. முன்பொரு பொழுது எம்.எஸ் அவர்களின் ஒலிப்பேழை ஒன்று வெளிவந்திருந்தது. அதில் தமிழ்ப் பாடல்களாக இருந்தனவென்று வாங்கினேன். அத்தனையும் அருந்தமிழ்ப் பாக்கள். கைத்தல நிறைகனி என்று திருப்புகழே முதல் பாடல். வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி என்று அடுத்து சிலப்பதிகாரப் பாடல். நெஞ்சுக்கு நீதியும் என்ற பாடல். கடைசியாக மீரா படத்தில் அவர் பாடிய காற்றினிலே வரும் கீதம். அது ஒரு அருமையான பாடற்றொகுப்பு. திருப்புகழோ அநுபூதியோ...இவர் குரலில் கேட்கும் வாய்ப்பு கிட்டுமா?

    ReplyDelete
  19. //அவர் பாடிய தமிழ் விருத்தங்கள், அதுவும் டிகேசி அவர்களுடைய பாடல்கள் ஆகா, ஆகா.//

    வாங்க மெளலி ஐயா!
    உண்மை; ஆனால் அவருடைய டிகேசி பாடல்கள் அவ்வளவாக ஏன் குறுந்தகடாய் வரவில்லை என்று தான் தெரியவில்லை!!

    //இன்னொன்று, அவரது வெங்கடேச சுப்ரபாதம் ராயல்டியினை பெருமாளுக்கே எழுதிவைத்துவிட்டார்//

    இது போல் காமாட்சியம்மன் சுப்ரபாதம் ராயல்டியினை அன்னைக்கும், பாரதியார் பாடல்கள் ராயல்டியினை தமிழிசைச் சங்கத்துக்கும் தந்து விட்டார்!

    ReplyDelete
  20. //johan -paris said...
    ரவி சங்கர்! அவர் பெண்ணின் பெருமை;//

    சத்தியமான வார்த்தை யோகன் அண்ணா! மிரட்சி இல்லாமல் புரட்சி செய்த பெண்ணின் பெருமை!

    //கச்சேரிப் பாடகர் தாளம் கைகளில் வைத்துத் தட்டிப்பாடுவது. முதல் முறை கண்டேன்.//

    ஆரம்ப காலங்களில் இது போன்று இல்லை அண்ணா; அப்போது இலக்கணச் சுத்தமாகப் பாடும் பெரும் பாடகர்; மெல்ல மெல்ல பக்தி இசையில் ஊறித் திளைத்த பின்னர், அவரும் அப்படியே மாறினார்!

    இறைவனுடைய நாம சங்கீர்த்தனம் என்று ஆனது; கடினமான பாடல்களைத் தவிர்த்து எளிய பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார்! அப்போது தான் இந்தத் தாளம் அவர் திருக்கைகளில் ஒட்டிக் கொண்டது!

    ReplyDelete
  21. //Anonymous said...
    கேட்ட பாட்டுக்கும்
    கேட்காத பெருவிருந்துக்கும்
    மனமுகந்த நன்றி.
    வாழ்க! வளர்க!! //

    மிக்க நன்றி அனானிமஸ் அவர்களே!
    "கேட்காத பெருவிருந்து" - எது??

    ReplyDelete
  22. //G.Ragavan said...
    என்னதான் சொன்னாலும் எம்.எஸ் அவர்களின் சுப்ரபாதம் இல்லாத வீடுண்டா!//

    அதானே! சரியாச் சொன்னீங்க ஜிரா! அப்படின்னா நீங்க இனி தவறாம சுப்ரபாதப் பதிவகளுக்கு ஆஜராகணும்! ஓகே வா? உங்களுக்கு மட்டும் அட்டென்டண்ஸ் எடுக்கப்படும்; :-))

    //முன்பொரு பொழுது எம்.எஸ் அவர்களின் ஒலிப்பேழை ஒன்று வெளிவந்திருந்தது. கைத்தல நிறைகனி என்று திருப்புகழே முதல் பாடல்//

    உண்மை தான் ஜிரா! பாரதியின் "வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா" என்று அவர் பாடுவதைக் கேட்கணுமே! அச்சோ!!

    பாட்டும், சுட்டியும் "முருகன் அருள்" வலைப்பூவிற்கு அனுப்பட்டுமா? அனுமதி உண்டா அடியேனுக்கு? சொல்லுங்கள்!!

    ReplyDelete
  23. வீடியோவிற்கும் நினைவு கூர்ந்தமைக்கும் சிறப்பு நன்றி. சில சமயம் இது போன்ற பாடகல்களை அமைதியாய் இருக்கும் போது கேட்கும் போதும், அதே அமைதியின்றி இருக்கும் போது கேட்கும்போது மனம் அமைதிக்கு திரும்புவதையும் நன்கு உணரலாம்.

    ReplyDelete
  24. //பாட்டும், சுட்டியும் "முருகன் அருள்" வலைப்பூவிற்கு அனுப்பட்டுமா? அனுமதி உண்டா அடியேனுக்கு? சொல்லுங்கள்!!
    //

    நீங்களே இணையலாம்.

    ReplyDelete
  25. //பத்மா அர்விந்த் said:
    அமைதியின்றி இருக்கும் போது கேட்கும்போது மனம் அமைதிக்கு திரும்புவதையும் நன்கு உணரலாம்//

    மிகவும் உண்மைங்க பத்மா!
    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  26. //குமரன் (Kumaran) said...
    நீங்களே இணையலாம்.//

    அழைப்பு கிடைத்தது குமரன்; நன்றி!

    ReplyDelete
  27. அருமையான பதிவு. பதிவுக்கும் வீடியோக்களுக்கும் மிக்க நன்றி

    அவர் பாடிய மீரா பஜன்களும் மிக அருமையாக இருக்கும்.

    "ஹரி தும் ஹரோ " என்ற மீரா பஜனை மிக உருக்கமாகப் பாடியிருப்பார். மஹாத்மா காந்திக்கு மிகப் பிடித்த பாடல் அது.

    வேறொருவர் வாயால் இந்தப் பாடலைப் பாடிக் கேட்பதைவிட எம்.எஸ் தன் குரலால் இந்த வரிகளை வெறுமே (பாடாமல்) ஒப்புவித்தால் கூடப் போதும் என்று காந்தி சொல்லியிருக்கிறார்.

    காந்தி சுடப்பட்ட செய்தியை அறிவித்தபின் ஆல் இந்தியா ரேடியோ அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எம்.எஸ்ஸின் இந்த பஜனையே
    இசைத்தது.

    எம். எஸ் அம்மா நம்மைவிட்டு எங்கும் செல்லவில்லை. காலையில் துயிலெழுப்பும் சுப்ரபாதத்திலும் , பஜ கோவிந்தத்திலும், விஷ்ணு சஹஸ்ரனாமத்திலும், பாரதியின் பாடல்களிலும் அவரது குரல் நம் பலரின் அன்றாட வாழ்வோடு கலந்துவிட்டது.

    ReplyDelete
  28. கண்ணபிரான்:

    இன்றுதான் பார்க்க முடிந்தது. மிக நல்ல பதிவு. இந்த புழக்கடை சினிமாக்களை நான் பார்த்ததில்லை. எம்.எஸ் பற்றி அவ்வப்போது எண்ணுவதுண்டு. இதுவொரு இசை அவதாரம்! சினிமா என்ற மாபெரும் பிசாசு தமிழகத்தைப் பிடிக்கும் காலத்திலேயே, சினிமா வழியாக பக்தியைப் பரப்பிய எம்.எஸ் ஒரு நட்சத்திரம்! அவசர கதியான வாழ்வு வருவதை அறிந்துதானோ இந்த அவதாரம்? இல்லையெனில், நாமெல்லாம் என்று பஜகோவிந்தம், ஸ்ரீரங்கநாதகத்யம், வேங்கடேச சுப்ரபாதம் கேட்டிருப்போம்?

    1. 'குறையொன்றும் இல்லை' பாடல் பாடும் போது அவர் செய்யும் சமிக்ஞை 'பிரபத்தி சமிக்ஞை'. புருஷர்கள் கையை மேலே தூக்கி சரணாகதி செய்யலாம் (உம்.கிருஷ்ண சைதன்யர்), ஆனால் பெண்கள் மார்பை மூடியவண்ணம், குனிந்து சரணாகதி செய்யலாம். இதுவொரு மேடை சம்பிரதாயம் (த்ரௌபதி சைதன்யர் போல் செய்தாள். அது அந்தக் காலம் :-)

    2. இரண்டாவது சினிமாவில் நல்ல புகைப்படச் சேகரிப்பு இருக்கிறது. ஆனால் இன்னும் எவ்வளவோ சொல்லியிருக்கலாம், சுருக்கமாகவேனும். என்றுதான் தமிழில் பேசி ஒரு தமிழ் வித்வானை நாம் கௌரவிப்போமோ தெரியவில்லை!!

    ReplyDelete
  29. //ஜெயஸ்ரீ said...
    "ஹரி தும் ஹரோ " என்ற மீரா பஜனை.....வேறொருவர் வாயால் இந்தப் பாடலைப் பாடிக் கேட்பதைவிட எம்.எஸ் தன் குரலால் இந்த வரிகளை வெறுமே (பாடாமல்) ஒப்புவித்தால் கூடப் போதும் என்று காந்தி சொல்லியிருக்கிறார்//

    நல்ல தகவலைச் சொல்லியிருக்கீங்க ஜெயஸ்ரீ! பல பேருக்குப் புதிய தகவலும் கூட!
    மிக்க நன்றி!!

    ReplyDelete
  30. //நா.கண்ணன் said...
    சினிமா என்ற மாபெரும் பிசாசு தமிழகத்தைப் பிடிக்கும் காலத்திலேயே//
    :-)

    //அவசர கதியான வாழ்வு வருவதை அறிந்துதானோ இந்த அவதாரம்? இல்லையெனில், நாமெல்லாம் என்று பஜகோவிந்தம், ஸ்ரீரங்கநாதகத்யம், வேங்கடேச சுப்ரபாதம் கேட்டிருப்போம்?//

    கண்ணன் சார், வாங்க!
    உண்மையச் சொல்லணுமா? பொய் சொல்லணுமா?? சரி உண்மையைச் சொல்லிடறேன்!
    மேடைக் கச்சேரியில் மட்டும் இதை அவர்கள் பாடி விட்டுப் போய் இருந்தால், சத்தியமாய் நான் கேட்டிருக்க மாட்டேன்; :-)

    சிறு வயதில் தானாய் வந்து காதில் விழுந்தவை இவை!

    மேடைகளில் மட்டும் இருந்த தமிழை வீதிக்குக் கொண்டு வந்தவன் பாரதி!
    மேடைகளில் மட்டும் இருந்த பக்தி இசையை, வீதிக்குக் கொண்டு வந்தவரில் எம்.எஸ் அம்மாவும் ஒருவர்!

    ReplyDelete
  31. //1. 'பிரபத்தி சமிக்ஞை'. புருஷர்கள் கையை மேலே தூக்கி சரணாகதி செய்யலாம் (உம்.கிருஷ்ண சைதன்யர்), ஆனால் பெண்கள் மார்பை மூடியவண்ணம், குனிந்து சரணாகதி செய்யலாம். இதுவொரு மேடை சம்பிரதாயம் (த்ரௌபதி சைதன்யர் போல் செய்தாள். அது அந்தக் காலம் :-)//

    நீங்க ரொம்ப அழகாச் சொல்லி இருக்கீங்க சார்!
    உண்மை, த்ரௌபதி செய்தது பரிபூரண சரணாகதி! தன்னிலை மறந்து அவனில் கலந்ததால் வந்த வெளிப்பாடு!

    //2. இரண்டாவது சினிமாவில் ...என்றுதான் தமிழில் பேசி ஒரு தமிழ் வித்வானை நாம் கௌரவிப்போமோ தெரியவில்லை!!//

    நிஜமான ஆதங்கம்; பேசாம நாமளே நம்ம சத்சங்கம் மூலமா ஆரம்பித்து வைக்க வேண்டியது தான்! "தமிழில் பேசியே" சிறப்பு செய்வோம்!!

    ReplyDelete
  32. தன் இசைச் செல்வத்தை மட்டுமல்ல, தான் ஈட்டிய பொருட்செல்வத்தையும் வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்பதற்கேற்ப வாரி வழங்கியவர் எம்.எஸ்.அம்மா. காந்திஜி கேட்டவுடன் தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் உடனே கழற்றிக் கொடுத்ததாகச் சொல்லுவார்கள்.

    ஏன் தமிழிசை என்ற வட்டத்திற்குள் அடக்க வேண்டும்? பாரத நாட்டு இசையில், ஏன் உலக இசையில் அழியாத தடம் பதித்துச் சென்றவர் எம்.எஸ்.

    அவர் நினைவு நாளை மறக்காமல் நினைவு வைத்திருந்து பதிவு செய்திருக்கிறீர்கள் கண்ணபிரான். மிக்க நன்றி!

    ReplyDelete
  33. //ஜடாயு said...
    ஏன் தமிழிசை என்ற வட்டத்திற்குள் அடக்க வேண்டும்? பாரத நாட்டு இசையில், ஏன் உலக இசையில் அழியாத தடம் பதித்துச் சென்றவர் எம்.எஸ்.//

    உண்மை தான் ஜடாயு ஐயா! அப்படிப் பார்த்தால் இசைக்குத் தான் மொழி ஏது?
    ஆனாலும் தாய்த் தமிழ் இசை நலிந்திருந்த காலத்தில், அதற்குத் தோள் கொடுத்தார்களே! அதனால் அப்படிக் குறிப்பிட்டேன்! காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது அல்லவா?

    //அவர் நினைவு நாளை மறக்காமல் நினைவு வைத்திருந்து பதிவு செய்திருக்கிறீர்கள் கண்ணபிரான். மிக்க நன்றி!//

    நன்றி ஜடாயு ஐயா! சில நாட்களை மனம் மறப்பதில்லை! அதில் இதுவும் ஒன்று!!

    ReplyDelete
  34. Good one! I listen to this song almost daily when I drive to work!

    I am not able to open the YouTube to watch it! When I click on it, it says "Loading", then "Share"/"Play Again". Can you help me to watch the video clipping please?

    ReplyDelete
  35. //Lak said...
    Good one! I listen to this song almost daily when I drive to work!//

    Thanks Lak!

    //I am not able to open the YouTube to watch it! When I click on it, it says "Loading", then "Share"/"Play Again". Can you help me to watch the video clipping please?//

    If you get "share/play again" , please click the play button on the video again. See if it plays.
    If not here are the youtube direct links.

    http://www.youtube.com/watch?v=cKdHPCw3K9c
    and
    http://www.youtube.com/watch?v=wyDNKW7g2Co

    ReplyDelete
  36. //I am not able to open the YouTube to watch it! When I click on it, it says "Loading", then "Share"/"Play Again". Can you help me to watch the video clipping please?//

    You need to enable 'Java' in your IE6.0 (or whatever browser you use). See whether you have installed the most recent Macro Media player installed.

    ReplyDelete
  37. சென்னையிலேதான் இருக்கேன். ஆனால் டெல்லினு சொல்லுதே? ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குத் தான் வரமுடிஞ்சது உங்க பதிவுக்கு. போட்டி எல்லாம் முடிஞ்சு போச்சு. அடுத்ததுக்குப் பார்க்கலாம், எப்படி இருக்கோ தெரியலை. மத்தபடி உங்க பதிவைப் பத்தி விமரிசனம் பண்ணற அளவு எனக்குத் தகுதி இல்லைனு நினைக்கிறேன். வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!

    ReplyDelete
  38. Hi !!!!
    Thanx for the wonderful video.. today i have sent this song's lyrics to shravan for uploading it as a page in their blog.. lets see what happens

    thanx for everything

    ReplyDelete
  39. i need the song by mp3 format. if possible please send it in nagaindian@sify.com

    ReplyDelete
  40. //நா.கண்ணன் said...
    You need to enable 'Java' in your IE6.0 (or whatever browser you use).//

    நன்றி கண்ணன் சார்!

    ReplyDelete
  41. //கீதா சாம்பசிவம் said...
    சென்னையிலேதான் இருக்கேன். ஆனால் டெல்லினு சொல்லுதே?//

    வாங்க கீதாம்மா!
    தெரியலையே ஏன் என்று! ஒரு வேளை connection sharing அது இது என்று ஏதாவது இருக்குமோ?
    ip2location.com சென்று பாருங்களேன்! உங்கள் ISP பற்றிச் சொல்லும்!

    //மத்தபடி உங்க பதிவைப் பத்தி விமரிசனம் பண்ணற அளவு எனக்குத் தகுதி இல்லைனு நினைக்கிறேன். வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!//

    என்ன கீதாம்மா இப்படிச் சொல்லிட்டீங்க! நீங்க தான் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டணும்! தங்களுக்குத் தெரியாத ஆன்மீகமா? நீங்கள் உணராத கருத்துக்களா??

    என்னைப் பொருத்தவரை, நீங்க சொல்வது மிக்க மதிப்புடையது.
    உங்கள் அன்புக்கு என்றும் அடியேனின் நன்றி.

    ReplyDelete
  42. //Thanx for the wonderful video.. today i have sent this song's lyrics to shravan for uploading it as a page in their blog.. lets see what happens//

    சுதா,
    வாங்க! எனக்குத் தான் அனுப்பிச்சீங்க! இந்த வரிகளை குமரன் முன்பே வலையேற்றி விட்டார்; அவருடைய சுட்டி பதிவில் கொடுத்தேனே! பாத்தீங்களா??

    நீங்களும் அனுப்பி உள்ளீர்கள்; பின்பொரு நாள் இடுவோம்! நன்றி!

    ReplyDelete
  43. //நாகு said...
    i need the song by mp3 format. if possible please send it in nagaindian@sify.com//

    நாகு,
    Did u search in coolgoose.com?
    I am sure you will find an mp3 there! If not lemme know!

    ReplyDelete
  44. கட்டபொம்மன்
    மன்னிக்கவும்; தங்கள் பின்னூட்டத்தினை அனுமதிக்கவில்லை.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP