Thursday, March 20, 2008

***E=mc^2. எனவே கடவுள் இல்லை! - 2

"சரி சார், இவ்ளோ நேரம் என்னைக் கேட்டீங்க! இப்ப நான் உங்களைச் சில அறிவியல் கேள்விகள் கேட்கலாமா?"
(மொத்த வகுப்பே சீட்டின் நுனிக்கு வருகிறது!...அப்துல்லா தொடர்கிறான்)

"KPS சார்! வெப்பம்-னு ஒன்னு அறிவியல்-ல இருக்கு தானே சார்?"

"ஹிஹி! இதிலென்ன சந்தேகம்! இருக்கு தான்!"

"குளிர்ச்சி-ன்னு ஒன்னும் அறிவியல்-ல இருக்கா சார்?"

"என்னடா டுபுக்குத்தனமா கேக்குற? அதுவும் இருக்கு!"

"இல்லை சார்! குளிர் என்பது அறிவியல்-ல இல்லவே இல்லை!"
(வகுப்பு கூர்ந்து கவனிக்குது இப்போ!...என்னமோ நடக்கப் போகுது...)

"என்னடா சொல்லுற நீயி?"

"வெப்பம் நெறைய இருக்கு. Super Heat, Latent Heat-ன்னு எல்லாம் இருக்கு! ஆனா Super Cold, Latent Cold-ன்னு ஏதாச்சும் இருக்கா?
வெப்பம் எவ்வளவு வேணும்னாலும் போகலாம்! பத்தாயிரம் டிகிரி கூட! ஆனால் குளிர் -273k டிகிரி வரைக்கும் தான் போக முடியும், அதுக்கு மேலப் போக முடியாது அல்லவா? குளிர்-ன்னு ஒன்னு இல்லவே இல்லை சார்! வெப்பம் இல்லாமை தான் குளிர்!"

"ஆமா அப்துல்லா, என்ன எதாச்சும் காமெடி பண்ணுறியா நீயி?"

"வெளிச்சம்-ன்னு ஒன்னு அறிவியல்-ல இருக்கு! இருட்டு-ன்னு ஒன்னு இருக்கா சார்?"

"பகல்ல வெளிச்சம், நைட்ல இருட்டு! ரொம்ப சிம்பிள்! டேய், என்னாமோ வெளையாடுறடா நீ!"

"இல்லை சார்! திருப்பியும் தப்பு பண்றீங்க! வெளிச்சம் மட்டுமே அறிவியல்-ல இருக்கு! வெளிச்சம் இல்லாமையே இருட்டு! வெளிச்சத்தை எவ்வளவு வேணும்னாலும் கூட்டலாம்! உங்களால இருட்டைக் கூட்ட முடியுமா? இல்லையே! வெளிச்சத்தைக் குறைக்கத் தான் முடியும்!"

"சரி...கரெக்டு தான்! ஆனா...இப்ப என்னா சொல்ல வர நீயி?"

"உங்க அடிப்படையே தப்பு-ன்னு சொல்லறேன்!"

"வாட்? டு யூ நோ டு ஹூம் யூ ஆர் டாக்கிங்?"

"தெரியும் சார்! அறிவியல் பேராசிரியர், டாக்டர் KPS கூடத் தான் பேசுறேன்! உங்க தத்துவம் இரட்டைத் தத்துவம்! எதிர்மறைத் தத்துவம் சார்!
= நல்லதுxகெட்டது, வாழ்வுxசாவு, அழகுxஅசிங்கம், அன்புxவெறுப்பு - இப்படி!

நல்லது இல்லாததைப் பார்த்துவிட்டு, கெட்டதை ஏன் கடவுள் படைச்சாரு-ன்னு கேக்குறீங்க!
உங்க அக்கா வாழாததைப் பார்த்துவிட்டு, வெதும்பிப் போய், கடவுள் ஏன் சாவடிச்சாரு-ன்னு கேக்குறீங்க!

ஸ்கேலை வச்சி என் உசரத்தை அளக்கலாம்! என் எடையை அளக்க முடியுமா?
இல்லை என் கிட்ட அது தான் இருக்கு! அதை வச்சித் தான் அளப்பேன்! அப்படி அளக்க முடியலைன்னா எனக்கு எடையே இல்லை-ன்னு சொல்லுவீங்களா?
கடவுளைச் சரியா அளக்க உங்க கிட்ட ஒரு கருவி இல்லை! அதுனால கடவுள் இல்லை-ன்னு ஆயிடுமா?"




"என்னடா சொல்லுற நீயி? லாஜிக்கோட தான் பேசுறியா?"

"ஆமா சார்! கண்ணால பாக்க முடியுமா? தொட முடியுமா-ன்னு எல்லாம் கேட்டீங்களே! Magnetism என்ற காந்தக சக்தி இருக்கு அறிவியல்-ல! அதைத் தொட முடியுமா? இல்லை கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்த முடியுமா?
ஆனா அது கிளப்பும் விளைவுகளை மட்டும் பார்க்க முடியுது! அப்புறம் எதை வச்சி அது காந்தக சக்தி-ன்னு சொல்லுறோம்? அது தரும் விளைவை வச்சித் தானே!
அதே போல் தான் இறைவனும்!
மூலத்தைப் பார்க்க முடியலைன்னாலும், விளையும் விளைவுகளை வச்சி இறைவன் இருக்கிறான்-னு சொல்லுறாங்க
!"
(வகுப்பில்...ஆகா..ஈகி-ன்னு ஒரே சத்தம் தூக்குது...)

" நல்லது இல்லாமை தான் கெட்டது! வெளிச்சம் இல்லாமை இருள்! வெப்பம் இல்லாமை குளிர்! அதே போல, தர்மம் இல்லாமை அதர்மம்!
அதர்மத்தை இறைவனும் படைக்கல! சாத்தானும் படைக்கல! நாம தான் படைச்சோம்!
நாம நல்லது பண்றதில்லை! அதுனால அது கெட்டது-ன்னு ஆயிடுது! கெட்டதை ஏன் இறைவன் படைச்சான்-னு பகுத்தறிவுச் சுடரான நீங்க பகுத்தறியாது கேட்கலாமா?"
(வகுப்பில்...மேசைகள் தட்டப்படுகின்றன...)

"மனுசன் குரங்கில் இருந்து வந்தான்-னு நேற்று சொல்லிக் கொடுத்தீங்க! அந்த மாற்றங்களை எல்லாம் நேராப் போயிப் பார்த்தீங்களா? இல்லையே!
அறிஞர்களின் ஆராய்ச்சியைப் படிச்சிட்டு, அந்த ஆராய்ச்சி முறையாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சி-ன்னு நம்பித் தானே அடுத்த கட்டத்துக்குப் போறீங்க! இல்லீன்னா ஒவ்வொரு முறையும் பழைய ஆராய்ச்சி எல்லாத்தையும் உங்க கண்ணால உறுதிப்படுத்திக்கிட்டு, அப்புறம் தான் மேற்கொண்டு Experiment ஏதாச்சும் செய்ய ஆரம்பிக்கறீங்களா?"
(இப்போது KPS தலை கவிழ்கிறார்...)


"டியர் ஃப்ரெண்ட்ஸ், நம்ம KPS சார் மூளையை யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? தொட்டு, முகர்ந்து, சுவைத்து இருக்கீங்களா?"
(வகுப்பு கொல்லென்று சிரிக்கிறது...)

"கோச்சிக்காதீங்க சார்! உங்களை அவமதிக்கணும்-னு எல்லாம் இப்படிக் கேக்கலை! ஒருத்தர் மூளையை இங்க வேறு யாருமே பார்க்கலை அப்படிங்கிறதுக்காக, அவருக்கு மூளையே இல்லைன்னு சொன்னா எப்படி இருக்கும்?"
(வகுப்பு மீண்டும் கொல்லென்று சிரிக்கிறது...)
(KPS, அப்துல்லாவை எரித்து விடுவது போல் பார்க்கிறார்)

"இன்னொன்னும் சொல்கிறேன், யாரும் கோச்சிக்கக் கூடாது நண்பர்களே! நம்ம எல்லாருக்கும் நம்ம அம்மா அப்பா இவிங்க தான்-னு நம்பறோம் தானே!
பொறந்ததில் இருந்து கூடவே இருக்காங்க! அவங்க தான் அம்மா அப்பா என்ற நம்பிக்கை ஆழமாப் பதிஞ்சிக்குது இல்லையா? அறிவியல் பூர்வமாய் DNA Test காட்டினாத் தான் நம்புவோம்-னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சா என்னவாகும்?

அந்த அறிவியல் சோதனை எல்லாம் இயல்பு வாழ்க்கைக்கு வைத்துக் கொள்வதில்லை! விதிவிலக்கான சமயங்களின் போது தான் அவற்றைப் பயன்படுத்தறோம் இல்லையா? அது போலத் தான் இயல்பு வாழ்க்கைக்கு இறைவனை நாம் DNA பரிசோதனை செய்து கொள்வதில்லை!"


"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது!
ப்ளூட்டோ-ன்னு ஒரு கிரகம் இருந்திச்சின்னு அறிவியல் பாடத்துல நாங்கல்லாம் படிச்சோம்! ஆனா இப்ப விஞ்ஞானிகள் இல்லை-ன்னு சொல்லுறாங்க! எங்க பசங்க படிக்கும் போது ப்ளூட்டோ-ன்னு ஒரு கிரகம் பாடப்புத்தகத்தில் இல்லாமலே போகலாம்! அப்படின்னா மொத்த விஞ்ஞானமும் அறிவியலும் பொய்யாகி விடுமா சார்? எதையுமே நம்பக் கூடாதா?"

"ஹும்ம்ம்ம்...
ஆராய்ச்சிகளின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் அப்துல்லா! மனிதனுக்கும் அறிவியலுக்கும் இணைப்பே அந்த நம்பிக்கை தான்!
அறிவியலால் மனித வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கை அவசியம் வேண்டும்!"

"அதே தான்!
கடவுளின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் சார்! மனிதனுக்கும் கடவுளுக்கும் இணைப்பே அதே நம்பிக்கை தான்!
ஆன்மீகத்தால் மனித வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கை அவசியம் வேண்டும்!
அந்த நம்பிக்கை தான் சார் மனிதர்களை அன்றாடம் உயிர்ப்புடன் நடத்திக் கொண்டிருக்கு!"
(டாக்டர் KPS-க்கு ஏதோ புரிவது மாதிரி இருக்கு...உங்களுக்கு?)


நம்மாழ்வாரின் திருவாய்மொழி தான், காலம் காலமாய் உள்ள கேள்விக்கு விடை தேடத் துவங்குகிறது!
உளன் எனில் உளன்; அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என, இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே


கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்

அப்பர் சுவாமிகளும் இதை ஒட்டியே செல்கிறார்...
விறகில் தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன், மாமணிச் சோதியான்
உறவு கோல் நட்டு, உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக், கடைய முன் நிற்குமே!

விறகுக்குள் தீ ஒளிந்திருக்கும்! பாலுக்குள் நெய் ஒளிந்திருக்கும்!
பாலைக் காட்டி, இதில் நெய் எங்கே இருக்கு-ன்னு கேட்டா என்ன சொல்ல முடியும்? இல்லை, கடைஞ்சாத் தான் வரும்-னு சொல்லலாம்!

இல்லையில்லை! நான் எதுக்குக் கஷ்டப்பட்டுக் கடையணும்? ஒன்னு இருக்கா-ன்னு கேக்குறேன்! என்னையே வேலை பார்த்துக் கண்டுபுடிக்கச் சொல்றீங்க! யாரை ஏமாத்தப் பாக்குறீங்க? கண்ணு முன்னாடி நெய்யைக் காட்டுங்க பார்க்கலாம்-னு சொல்லுவோமா? அதுக்கு என்ன பண்ணனும்?

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துத் தான் பார்க்க வேணும்!
உறவு என்னும் கோலை நட வேண்டும்!
உணர்வு என்னும் கயிற்றினால்
உள்ளத்தைக் கடையக் கடைய,
நெய்யது நிலைப்படும்! தெய்வம் புலப்படும்!
:-)))


என்ன மக்களே? ரொம்ப ஓவராப் போவாம, எளிமையாத் தானே சொன்னேன்?
முன்னெப்போதோ மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கில ஆக்கத்தை, மேலும் செவ்வியாக்கி, ஐன்ஸ்டீனின் கொள்கை, DNA Testing, நம்மாழ்வார்-அப்பர் சுவாமிகளின் கருத்தையும் அதில் ஏற்றிச் சொல்லிப் புரிந்து கொள்ள முயன்றேன்!
புரியப் புரியப் புரியாமை புரியும்! :-) கீழே இன்னொரு அசைபடம் அருமையா இருக்கு!



87 comments:

  1. பஷ்ட்டு, வழக்கம் போல நான் கேசரி கேட்டாலும் நீங்க புளியோதரை தான் தர போறீங்க. :p

    இருங்க பதிவை படிச்சுட்டு வரேன். :))

    ReplyDelete
  2. //ஸ்கேலை வச்சி என் உசரத்தை அளக்கலாம்! என் எடையை அளக்க முடியுமா?
    //

    அவ்வ்வ்வ், புதிய தத்துவம் 10001 :))

    ReplyDelete
  3. அட பரவாயில்லையே! அப்பர் கூட பந்தலில் வந்து குந்திகினு இருக்காரு.

    அந்த பயம் இருக்கட்டும். :p

    ReplyDelete
  4. W = ma or W = mg இதுதான் அடுத்த பதிவின் தலைப்பா? :p

    ReplyDelete
  5. katru irukunu namba thaane vendi iruku ada unarthalum paarka mudiyarthu illaye..

    ReplyDelete
  6. me the secondu.. enaku puliyodarinalum ok thaan.. ambi mathiri kesari ellam keka maten

    ReplyDelete
  7. ஸ்கேலை வச்சி என் உசரத்தை அளக்கலாம்! என் எடையை அளக்க முடியுமா?//
    mudiyume .. weighing scale venum avalavu thaan vithyasam :D

    ReplyDelete
  8. W = ma or W = mg இதுதான் அடுத்த பதிவின் தலைப்பா? :p///
    F = m xa thaane formula...
    W = Fx d

    where F = force, m = mass, a = acceleration, W = Work and D = Distance.. idu eppudi...

    ReplyDelete
  9. appa vanthathuku rounda 10.. krs.. iduku thaniya edavathu tharanum.. seri enna india vanthachu.. oru mail thatti vidarthu

    ReplyDelete
  10. ////"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது!///

    அற்புதம்!

    ReplyDelete
  11. ஏனோ, ஒரிஜினல் மின்-அஞ்சலில் உள்ள அந்த Adrenalin Rush தங்கள் பதிவில் மிஸ்ஸிங்!!

    ஸ்கேல் எடுத்துக்காட்டு நன்றாக இருந்தது!!

    ReplyDelete
  12. ////"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது!///

    ரீப்பீட்டே!!!!

    ReplyDelete
  13. பிரச்சனை 'இருப்பதா' 'இல்லாததா ?'
    இல்லாதது இருப்பதாக சொன்னாலும், இருப்பதை இல்லாததாக சொன்னாலும்

    எல்லாம் ஒரே லாஜிக் ஓட்டையாகத்தான் இருக்கு
    :)

    ReplyDelete
  14. ஆன்மீகம் பேசுபவர்கள் கடைசியில் கையில் எடுப்பது "இல்லாமை இருப்பு"
    தத்துவம் தான்.
    இப்படித்தான் பாகற்காய் எனக்கு எப்போதும் இனிக்கிறது.சர்க்கரை எப்போதும் கசக்கிறது.எதனால் இப்படி?
    நாம் எதை உண்மை என்கிறோமோ மற்றவர்களுக்கு அது பொய்.
    இது நான் சொல்லலிங்க.ஒரு ஆன்மீக பெரிரியவர்ர்ர்ர் சொன்னது.நீங்க w=mc2 ல்லாம் போட்டு பின்னி பெடலடுத்திட்டீங்க!

    ReplyDelete
  15. ரவி,

    'இருப்பது' 'இல்லை' என்ற பிரச்சனை ஏன் ஏற்பட்டது அதன் காரணம் தான் என்ன ?

    அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது ? நம்புகிறவர்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் பெறுகிறார்கள் என்று சொல்லவேண்டாம். அது இல்லாதவங்க யாரும் பிரச்சனை என்றால் தற்கொலை செய்து கொள்வதில்லை.

    வெறும் இறைமறுப்பு என்ற வாய்ச்சவடாலுக்காக இறைமறுப்பாளர்கள் அதைச் செய்யவ்வில்லை. அதனை எதிர்ப்பதற்கான காரணம் அதை வைத்துப் பின்னப்படும் சமூக அரசியல் தான். இருப்பது நன்றாகவே இருக்கிறது என்று என்பதை இருப்பதை நம்புவர்கள் தான் நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும்.

    நம்புறவங்க நாராயணனைச் சேருவார்கள், நம்பாதவர்கள் நாசமாகப் போவார்களா ? நம்புவதை விடுவோம், நம்பாததால் என்ன பாதகம் ஏற்பட்டுவிடப் போகிறது ?

    புரியல்ல தயவு செய்து விளக்கவும் !

    இரட்டை தன்மையை விளக்குவதற்காக ஒன்றை இருப்பதாகவும் மற்றொன்றை இல்லாததாகவும் சொல்லி இருப்பதைத்தவிர வேறொன்றும் புரியவில்லை.

    இறைசக்தி என்று ஒன்று இருந்தால் அது வெறும் சாட்சியாகத்தான் இருக்கும், நடப்பதற்கும் அதற்கும் தொடர்பே இல்லை. அதை மாற்றும் திறனும் அதற்கு கிடையாது என்பதுதான் என் கருத்து. இதை நான் மட்டும் சொல்லவில்லை. தீமைக்கு கடவுள் காரணமில்லை என்று சொல்லும் நீங்கள் நன்மைக்கு அது காரணமில்லை என்று சொல்வதில் தயக்கம் ஏன் ?

    ReplyDelete
  16. //எல்லாம் ஒரே லாஜிக் ஓட்டையாகத்தான் இருக்கு//

    கோவி அண்ணா
    எந்த லாஜிக் ஓட்டை?
    சவால்: முடிந்தால் அப்பர் சுவாமிகளின் லாஜிக்கை மறுதலியுங்கள் பார்ப்போம்?

    ReplyDelete
  17. @கோவி
    சவாலே சமாளி
    அப்படி மறுதலித்தால், அப்பரின் தேவாரத்தை ஆலயத்தில் அழிக்கப் பார்க்கும் கோவி கண்ணன்-ன்னு போஸ்ட் ரெடி ஆகிக்கிட்டூ இருக்கு! :-))))

    ReplyDelete
  18. ரவி,

    காயப்படுத்துவதாக நினைத்துவிடாதீர்கள். விவாதம் தான் செய்கிறேன்.

    ReplyDelete
  19. // ambi said...
    அட பரவாயில்லையே! அப்பர் கூட பந்தலில் வந்து குந்திகினு இருக்காரு.
    அந்த பயம் இருக்கட்டும். :p//

    அடே அம்பி
    பயமா? எனக்கா?
    ஹா ஹா ஹா
    நாமார்க்கும் குடி அல்லோம்! நமனை அஞ்சோம்!
    முடிஞ்சா ஒண்டிக்கு ஒண்டி வா! (மாவாட்ட அல்ல! :-))

    ReplyDelete
  20. //W = ma or W = mg இதுதான் அடுத்த பதிவின் தலைப்பா? :p//

    ஏன் physics மட்டும் தான் தலைப்பா வப்பீங்களா? maths வைக்க மாட்டீங்களா-ன்னு காலேஜ் ஃபிகரை எல்லாம் எனக்கு எதிரா தூண்டி விடச் சதி பண்ணூறியா? :-)

    (A U B)' = A' n B'
    எல்லாம் கூட நாங்க வைப்போம்! :-)

    ReplyDelete
  21. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    கோவி அண்ணா
    எந்த லாஜிக் ஓட்டை?
    சவால்: முடிந்தால் அப்பர் சுவாமிகளின் லாஜிக்கை மறுதலியுங்கள் பார்ப்போம்?
    //

    அதை மறுதலித்தலின் உருவகம் தானே நாத்திகம் என்று ஒன்றாக இன்றும் இருக்கிறது.

    சமணர்கள் செய்யாத புனல் வாதமா நான் செய்யப் போகிறேன். வாதில் வெல்லவது கடினம் என்று தானே சூதில் வென்றார்கள்.

    ReplyDelete
  22. //புளியோதரை தான் தர போறீங்க//

    தமிழகச் சாலையோரம் உள்ள புளியமரங்கள் தரும் புளி, தமிழன் உணவில் ஒரு அங்கம்!
    அந்தப் புளியைப் புளித்துப் பேசும் புளியே அம்பி! புளித்துப் போ! :-)

    ReplyDelete
  23. //dubukudisciple said...
    me the secondu.. enaku puliyodarinalum ok thaan.. ambi mathiri kesari ellam keka maten//

    உங்களுக்கு இல்லாததா டிடி யக்கா!
    அவனுக்கு சீதாராம் கேசரி கூட கிடையாது!
    பாவிப் பையன் பின்னாடியே வந்து அது ஏன் சீதாராம் கேசரி?
    ஏன் தேவானைமுருகன் கேசரி-ன்னு சொல்ல மாட்டங்கறீங்க-ன்னு கேக்கப் போறான்! :-))

    ReplyDelete
  24. //dubukudisciple said...
    me the secondu.. enaku puliyodarinalum ok thaan.. ambi mathiri kesari ellam keka maten//

    உங்களுக்கு இல்லாததா டிடி யக்கா!
    அவனுக்கு சீதாராம் கேசரி கூட கிடையாது!
    பாவிப் பையன் பின்னாடியே வந்து அது ஏன் சீதாராம் கேசரி?
    ஏன் தேவானைமுருகன் கேசரி-ன்னு சொல்ல மாட்டங்கறீங்க-ன்னு கேக்கப் போறான்! :-))

    ReplyDelete
  25. //SP.VR. SUBBIAH said...
    ////"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது!///
    அற்புதம்!//

    இந்தப் புகழ் கொமரனுக்கே! :-)

    ReplyDelete
  26. //mudiyume .. weighing scale venum avalavu thaan vithyasam :D//

    athellam othukka mattom! only arai adi scale is allowed! :-))

    ReplyDelete
  27. //கருப்பன்/Karuppan said...
    ஏனோ, ஒரிஜினல் மின்-அஞ்சலில் உள்ள அந்த Adrenalin Rush தங்கள் பதிவில் மிஸ்ஸிங்!!//

    அதில் பேராசிரியரை நையாண்டி செய்தல் தூக்கலா இருக்குங்க!
    அடியேன் என் சுபாவப்படி, அதை எல்லாம் கத்தரித்து, லாஜிக் மட்டும் வைத்தேன்! மேலும் அப்பர் சுவாமிகள் என்று வேறு பலதையும் உள்ளே இழுத்து விட்டதால் அப்படித் தோன்றி இருக்கலாம்!

    அடுத்த முறை இன்னும் நல்லாச் செய்யப் பாக்குறேன்! நன்றி கருப்பன்!

    ReplyDelete
  28. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //SP.VR. SUBBIAH said...
    ////"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது!///
    அற்புதம்!//

    இந்தப் புகழ் கொமரனுக்கே! :-)
    //

    மறுபடியும் ப்ரஸ்டீஜ் இஸ்யூ கிளம்பிவிடாமல் இருக்கனுமே :(
    முன்பே தெரிந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேன்.

    ReplyDelete
  29. //அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது ?//

    குமரன்
    கொஞ்சம் உதவிக்கு வாங்க!

    //இறைமறுப்பு என்ற வாய்ச்சவடாலுக்காக இறைமறுப்பாளர்கள் அதைச் செய்யவ்வில்லை. அதனை எதிர்ப்பதற்கான காரணம் அதை வைத்துப் பின்னப்படும் சமூக அரசியல் தான்//

    அப்படீன்னா சமூக அரசியலை எதிர்க்கணும்!
    தென்னையில் தேள் கொட்டினா எதுக்கு பனையில் பஞ்சர் ஒட்டுறீங்க? :-))

    //இருப்பது நன்றாகவே இருக்கிறது என்று என்பதை இருப்பதை நம்புவர்கள் தான் நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும்.//

    ஆச்சாரியாரிடம் சொல்லுங்கள்! :-)))
    ச்சும்மாஆ

    //நம்புறவங்க நாராயணனைச் சேருவார்கள், நம்பாதவர்கள் நாசமாகப் போவார்களா ?//

    போக மாட்டார்கள்!
    இரணியன் வீடு பேறே பெற்றான்!
    இருக்கு என்று நம்புவதை விட, இல்லை என்ற திட "நம்பிக்கை" அவனுக்கு! நாராயணன் இல்லை, நாராயணன் இல்லை-ன்னு சதா சர்வ காலமும், நாராயண நாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தான்

    மருந்து விரும்பிக் குடிச்சாலும் விரும்பாமக் குடிச்சாலும் நன்மையே செய்யும்!

    //நம்புவதை விடுவோம், நம்பாததால் என்ன பாதகம் ஏற்பட்டுவிடப் போகிறது ?//

    அம்மையப்பன் இல்லாததால் பெருசா என்ன பாதகம் வந்து விடப் போகிறது?
    யார் இருந்தாலும் இல்லன்னாலும் வளரத் தானே போகிறோம்? எத்தனை குழந்தைகள் அம்மையப்பன் இல்லாம் இருக்குதுங்க? :-(
    அவங்க எல்லாம் பாதகப்பட்டுகிட்டா இருக்காங்க?

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்

    ReplyDelete
  30. //பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்//

    இறைவனுக்கு எம்புட்டு சுயநலம்? திமிர்?
    அவன் காலைப் புடிச்சாத் தான் பிறவிப் பெருங்கடல் நீந்த முடியுமாமே? ஆணவப் பேச்சு! :-))

    ReplyDelete
  31. \\அதே போல் தான் இறைவனும்!
    மூலத்தைப் பார்க்க முடியலைன்னாலும், விளையும் விளைவுகளை வச்சி இறைவன் இருக்கிறான்-னு சொல்லுறாங்க!"\\

    \\"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது!\\

    தல

    எளிமை...புதுமை..கடமை ;))

    கலக்கிட்டிங்க தல ;)

    ReplyDelete
  32. மக்கள்ஸ்
    வேகமா டைப்பிக்கிட்டு இருக்கேன்...எழுத்துப் பிழைக்கு எச்சூஸ் மீ ப்ளீஸ்! :-)

    ReplyDelete
  33. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது ?//

    குமரன்
    கொஞ்சம் உதவிக்கு வாங்க!
    //

    ரவி,

    தேவை இல்லாத சங்கடம் தவிர்கவே விரும்புகிறேன். எனது பின்னூட்டத்தை நீக்கிவிடவா ?

    ReplyDelete
  34. ஹாய் கேஆரெஸ்,

    //இறைசக்தி என்று ஒன்று இருந்தால் அது வெறும் சாட்சியாகத்தான் இருக்கும், நடப்பதற்கும் அதற்கும் தொடர்பே இல்லை. அதை மாற்றும் திறனும் அதற்கு கிடையாது என்பதுதான் என் கருத்து. இதை நான் மட்டும் சொல்லவில்லை. தீமைக்கு கடவுள் காரணமில்லை என்று சொல்லும் நீங்கள் நன்மைக்கு அது காரணமில்லை என்று சொல்வதில் தயக்கம் ஏன் ? //

    ஆமாம், நான் கூட இதை ஆமோதிக்கறேன். ஏன்னா எனக்கும் இந்த கருத்து தான். நமக்கு நடக்கும் எதுக்கும் நல்லதோ இல்லை கெட்டதோ எதுவானாலும் நாம செய்யும் வினைகள் தான் காரணம், அப்போ கடவுளுக்கு இங்க என்ன ரோல்?

    இந்த கடவுள் ங்கற பேரால இங்க எதை சொல்ல முயற்சிக்கிறீர்கள்?

    ReplyDelete
  35. இல்லையென்று நீ சொன்ன சொல்லிலும் உளன் என்று பிரகலாதன் தந்தையிடம் கூறினானாம்!

    GOD IS NO WHERE
    GOD IS NOW HERE!

    அமர்க்களப்பதிவு இது ரவி!ஆழ்ந்த சிந்தனையையும் தூண்டுகிறது.

    ReplyDelete
  36. //ரவி,

    தேவை இல்லாத சங்கடம் தவிர்கவே விரும்புகிறேன். எனது பின்னூட்டத்தை நீக்கிவிடவா ?//

    வேண்டாம்!
    கேள்வியே வேள்வி!

    நேரம் இருப்பின் நானே பதில் சொல்கிறேன்...இப்போ இல்லீனாக் கூட...இதை மீள்பதிவு செஞ்சி பின்னாடி!

    சரி
    எந்தப் போஸ்ட் வேணும்?
    இந்த விவாதமா?
    பாரத டகால்ட்டி - பார்ட் டூ-வா?

    ReplyDelete
  37. ஏதோ பார்வர்ட் மெயிலாக இதைப் படித்ததாக ஞாபகம் இருக்கிறது. இதற்கு அழகான எதிர் வாதங்களை வைக்கலாம். ஆனால் அர்த்தம் இல்லை அதனால் இந்தப் பதிவையும் ஐன்ஸ்டின் வீடியோக்களையும் பார்த்த பின்னால் எனக்கு ஒரு தனி பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது விரைவில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  38. //ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது!//

    "டபுக்குடிப்புடக்க" இப்படி ஒரு பொருள் இருக்கு! அதுதான் உலகத்தில சிறந்தது. யாரும் இனி இதைப்பற்றி கேள்வி கேட்க முடியாது ஹை! - அதான் இருப்பதற்குச் சான்று இல்லாமை இல்லாமைக்குச் சான்றாகி விடாதே-Logic புல்லரிக்குது.அட கொடுமையே!

    At least if you say the god thing is one of belief not logic - it is understandable and may even be acceptable. But without even some basic understanding of logic (as used in philosophy) you try to hoodwink - it all sucks - get a life!

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. //"டபுக்குடிப்புடக்க" இப்படி ஒரு பொருள் இருக்கு! அதுதான் உலகத்தில சிறந்தது. யாரும் இனி இதைப்பற்றி கேள்வி கேட்க முடியாது ஹை! -//

    நல்ல கேள்வி! :-)

    எதையும் கேள்வி கேட்க கூடாது என்று கணிதமும் கூறவில்லை. அறிவியலும் கூறவில்லை. ஆன்மீகமும் கூறவில்லை.

    இருப்பதை நிறுவ முடியாததினால், இல்லவே இல்லாதது ஆகிவிட முடியாது என்பது்தான் அடிப்படை.

    Fermats கடைசி தேற்றம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். Google-ல் கிடைக்கும். இது வரைக்கும் அந்த தேற்றத்தை நிறுவ முயன்று தோற்றவர்கள் அதிகம். 357 வருடங்கள் கழித்து 1995ல் அதை நிறுவினார்கள்.

    "Fermat's Last Theorem, has the peculiar distinction of being the mathematical problem for which the greatest number of incorrect proofs have been published".

    ஆனால் அந்த தேற்றம் தவறானது என்று யாராலும் நிறுவ முடியவில்லை.

    ReplyDelete
  41. //அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது ?//

    கர்மவினைகள்தான் நமக்கு நடக்கும் நல்லது கெட்டதை நிர்ணயம் செய்கின்றன. சரிதான். ஏன் எப்போதுமே கர்மவினை முன் சன்மங்களில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்? இப்போது நாம் செய்யும் செயல்களும் கர்மாதான். அவற்றுக்கும் பலன் இருக்கும். இறை நம்பிக்கை வலுப்படும்போது நல்லன செய்து தீயன விலக்க பழகுவோம். அப்போது செய்யும் காரியங்கள் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அல்லவா?

    //நம்புவதை விடுவோம், நம்பாததால் என்ன பாதகம் ஏற்பட்டுவிடப் போகிறது ?//

    நம்பினால் பிறவி அறுக்க வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால் மீண்டும் பிறந்து இறந்து.....

    ?// நமக்கு நடக்கும் எதுக்கும் நல்லதோ இல்லை கெட்டதோ எதுவானாலும் நாம செய்யும் வினைகள் தான் காரணம், அப்போ கடவுளுக்கு இங்க என்ன ரோல்?//

    இது பூர்வ மீமாம்ஸை வாதம். கடவுள் பலனை கொடுக்கும் ஏஜென்ஸி. கொஞ்சம் கூட்டி குறைத்து , கண்டோன் பண்ணி பலன் கொடுக்க வாய்ப்பு உண்டு!

    ReplyDelete
  42. கொஞ்சம் திகைப்பாக இருந்தது. http://anmikam4dumbme.blogspot.com/ ல இரண்டாம் பதிவாக விஞ்ஞானத்தை தொட்டு எழுதி வெச்சா நீங்களும் அதையே எழுதறீங்க!
    நல்ல காலமா பாயின்ட்ஸ் வேற வேற.

    ReplyDelete
  43. கேள்விகளால் வேள்வி செய்யும் திவா, சுமதி, கோவி அண்ணா, ஸ்ரீதர் - எல்லாருக்கும் அடியேன் நன்றி!

    நேரம் இல்லீங்க...ஆனா ஊர் போய் வந்தவுடன் ஒவ்வொன்னாப் படிச்சி, முடிந்தவரை பதில் அளிக்கிறேன்!

    ReplyDelete
  44. நல்லா சொல்லி இருக்கீங்க KRS.
    கத்தனு வாரிகி கத்து கத்தனி மொரலனிடு - உண்டு என்பாருக்கு உண்டு - தியாகராஜரும் சொல்லி இருக்காரு.

    ReplyDelete
  45. List of common logical fallacies

    You don't need to take drugs to hallucinate; improper language can fill your world with phantoms and spooks of many kinds. - Robert A. Wilson



    appeal to ignorance (argumentum ex silentio) appealing to ignorance as evidence for something. (e.g., We have no evidence that God doesn't exist, therefore, he must exist. Or: Because we have no knowledge of alien visitors, that means they do not exist). Ignorance about something says nothing about its existence or non-existence.


    proving non-existence: when an arguer cannot provide the evidence for his claims, he may challenge his opponent to prove it doesn't exist (e.g., prove God doesn't exist; prove UFO's haven't visited earth, etc.). Although one may prove non-existence in special limitations, such as showing that a box does not contain certain items, one cannot prove universal or absolute non-existence, or non-existence out of ignorance. One cannot prove something that does not exist. The proof of existence must come from those who make the claims.


    - "டபுக்குடிப்புடக்க" Anonymous

    ReplyDelete
  46. பம்மாத்துப் பதிவு! கடவுள் இருக்கிறார் என்ற உங்கள் நம்பிக்கையில் குறுக்கிட விரும்பவில்லை. எடுத்துக்காட்டுகளின் பலவீனத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    //குளிர்-ன்னு ஒன்னு இல்லவே இல்லை சார்! வெப்பம் இல்லாமை தான் குளிர்!//

    குளிர் இருக்கிறது என்பது பொது நம்பிக்கை. அது வெப்பம் இல்லாமை என்றது அறிவியல். கடவுள் இருக்கிறார் என்பது பொது நம்பிக்கை, இல்லை என மறுப்பது அறிவியல். உங்களுக்கு வசதியாக மாற்றிப் பயன்படுத்திக் கொண்டுள்ளீர்கள்.

    //ப்ளூட்டோ-ன்னு ஒரு கிரகம் இருந்திச்சின்னு அறிவியல் பாடத்துல நாங்கல்லாம் படிச்சோம்! ஆனா இப்ப விஞ்ஞானிகள் இல்லை-ன்னு சொல்லுறாங்க//

    புளுட்டோ இல்லை என்று யாரும் சொல்லவில்லை. கோள்களுக்கு என்று நாம் வகுத்த வரையறையில் அது அடங்காது என்று கருதி அதை கோள்களுக்கான பட்டியலில் இருந்து விலக்கி இருக்கிறார்கள். அவ்வளவே!

    கடவுள் இருக்கிறார் என்பதை உறுதி செய்வது எவ்வளவு கடினமோ அதைவிட கடினமானது இல்லை என்ற கூற்றை நிறுவுவது. அவ்வாறு நிறுவ இயலாமையைக் காரணம் காட்டி கடவுள் இருப்பதை உறுதி செய்வது பொருளற்ற கூறு.

    வாதில் வெல்வதும், சூதில் வெல்வதும் எதிர் கொள்பவரின் திறனைப் பொறுத்தது. ஆய்ந்து அறிவது அவரவர் கடமை. முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

    மற்றபடி நீங்கள் தரும் பதிவுகளை ஆன்மிகத்தையும் தாண்டி, தமிழ் வேண்டி, விரும்பியே நுகர்கிறேன். நன்றி.

    ReplyDelete
  47. //திவா said...
    கொஞ்சம் திகைப்பாக இருந்தது. http://anmikam4dumbme.blogspot.com/ ல இரண்டாம் பதிவாக விஞ்ஞானத்தை தொட்டு எழுதி வெச்சா//

    Great men think alike? or :-))
    No two fools disagree? :-))
    திவா
    தங்கள் பதிவுக்கு இன்று வர முயற்சிக்கிறேன்! உங்க ஒன் பேஜ் ஆன்மீகத்துக்கு விசிறி ஆயிடலாமான்னு பாக்குறேன்!

    ReplyDelete
  48. // Fermats கடைசி தேற்றம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். Google-ல் கிடைக்கும். இது வரைக்கும் அந்த தேற்றத்தை நிறுவ முயன்று தோற்றவர்கள் அதிகம். 357 வருடங்கள் கழித்து 1995ல் அதை நிறுவினார்கள்.

    "Fermat's Last Theorem, has the peculiar distinction of being the mathematical problem for which the greatest number of incorrect proofs have been published".

    ஆனால் அந்த தேற்றம் தவறானது என்று யாராலும் நிறுவ முடியவில்லை //

    அந்த தேற்றம் நிறுவும் வரை யாரும் அதை உண்மை என ஒப்பு கொள்ளவில்லை - அதே போல் கடவுளும் நிறுவப்பட்டால் கடவுளும் உண்மைதான்

    - "டபுக்குடிப்புடக்க" Anonymous

    ReplyDelete
  49. //சவால்: முடிந்தால் அப்பர் சுவாமிகளின் லாஜிக்கை மறுதலியுங்கள் பார்ப்போம்?//

    பந்தையத்தை ஏத்துக்கிட்டாப் போச்சு!

    //விறகுக்குள் தீ ஒளிந்திருக்கும்! பாலுக்குள் நெய் ஒளிந்திருக்கும்!
    பாலைக் காட்டி, இதில் நெய் எங்கே இருக்கு-ன்னு கேட்டா என்ன சொல்ல முடியும்? இல்லை, கடைஞ்சாத் தான் வரும்-னு சொல்லலாம்!//

    விறகை எரிக்காமலும், பாலைக் கடையாமலுமா தீயும் நெய்யும் ஒளிந்திருப்பதாக கூறினார்கள். ஏன் தண்ணீரை உவமைக்குக் கொள்ளவில்லை? தாவு தீர கடைஞ்சாலும் நெய் வராது என்று தானே!

    நெருப்பு எனும் உயர் வெப்பத்தில் எப்பொருளானாலும் எரிந்து தானே ஆக வேண்டும். ஆனால் இது போன்ற உணரும் உவமைகளால் தன் உணர்வை வெளிப்படுத்தியமை அவரது ஒன்றுதலையும், கவித்திறமையையும் காட்டுவதாகக் கொள்ளலாம்; கடவுளை அல்ல.

    ReplyDelete
  50. //அந்த தேற்றம் நிறுவும் வரை யாரும் அதை உண்மை என ஒப்பு கொள்ளவில்லை - அதே போல் கடவுளும் நிறுவப்பட்டால் கடவுளும் உண்மைதான்

    - "டபுக்குடிப்புடக்க" Anonymous
    //

    அனானி சார்,

    we are missing the point here.

    இருக்கிறது / இல்லை என்று நிறுவப்பட்டாததை 'இருக்கிறது / இல்லை' என்று கொள்ள முடியாது.

    Fermats போகிற போக்கில் எழுதியதை - அதாவது அவர் மனதுக்கு சரி என்று பட்டதை கிட்டதட்ட 360 வருடங்கள் போராடி பிறகு அதை நாம் 'உண்மை' என்று ஒப்பு கொண்டிருக்கோம். இந்த 360 வருடங்களும் அதை யாரும் 'இல்லை' என்று மறுதளிக்காமல், நிறைய பேர் அதை நிறுவ முயற்சி செய்தார்கள்.

    'டபுக்குடிப்புடக்க' உங்கள் விருப்பம் என்றால் அதில் தவறேதுமில்லை என்பது எனது கருத்து. ஆனால் 'டபுக்குடிப்புடக்க பற்றி கேள்வி கேட்க கூடாது' எனறு நீங்கள் சொல்வது போல் இங்கு யாரும் சொல்லவில்லை என்று சொல்ல விரும்பிதான் முந்தைய பின்னூட்டம் இட்டேன்.

    கேள்விகள் பல கேட்டு, ஆய்ந்து அறிந்து - பின் அவரவர்க்கு ஏற்ற / பிடித்த நிலையை அவரவர் எடுத்து கொள்ள வேண்டியது.

    இதற்கு மேலும் டபுக்குடிப்புடக்க இங்கு எதுவும் இல்லை :-). நன்றி!

    ReplyDelete
  51. கடவுள் இருக்காரா இல்லையா என்பது முற்றிலும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவது. ஆனா அறிவியல் அப்படி அல்ல. அதாவது அறிவியலில் அநேகமானவற்றை நம்மால் உறுதிசெய்துகொள்ள இயலும். மற்றவை hypothesis எனக் கொண்டாலும் அதிலுள்ள லாஜிக் அறிவு பூர்வமாயிருக்கும். ஆன்மீகத்துக்கு அறிவுபூர்வமான எதுவும் தேவையில்லை. அது உணர்ச்சிபூர்வமான ஒன்று.

    உங்களுடைய வாதங்களின் தொகுப்பு கடவுள் மறுப்பை மறுக்கிறதே தவிர கடவுளின் இருப்பை நிலைநாட்டவில்லை என்பதே உண்மை. அதை ஒருபோதும் செய்ய இயலாது. அது நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமே. அறிவியல் நம்பிக்கையை மட்டும் சார்ந்த விஷயமல்ல. Science is a set of proven universal truths. It is the same for everyone, whether you believe it or not. And it can be proven again and again.

    இப்ப நீங்க குதிரைக்கு கொம்பிருக்குதுண்ணு நம்புறீங்கண்ணு வையுங்க. அறிவியல் அத மறுக்குது. ஆனா நீங்க அத ஏற்க மறுக்கிறீங்க. யாரு என்ன செய்ய முடியும்? கற்பனைகளை இல்லை என்று நிரூபிக்க முடியுமா?

    இன்னும் விவாதிக்கலாம். முடிந்தால் ஒரு பதிவு போடுகிறேன். நல்ல சப்ஜெக்ட்.

    ஜெயகாந்தன் அறிவியல் + கடவுள் குறித்து ஒரு கதை எழுதியிருக்காரு.

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=100082011&edition_id=20000820&format=html

    அதையும் படியுங்க.

    ReplyDelete
  52. வாங்க முகவை மைந்தன்
    //ஆனால் இது போன்ற உணரும் உவமைகளால் தன் உணர்வை வெளிப்படுத்தியமை அவரது ஒன்றுதலையும், கவித்திறமையையும் காட்டுவதாகக் கொள்ளலாம்; கடவுளை அல்ல//

    கடவுளை உவமையிலேயே காட்டிற முடியும்-னா இன்னிக்கி எல்லாத் தமிழாசான்களும் கடவுள் கூட டீலிங் போட்டுக்கிட்டு சந்தோசமா இருப்பாங்களே! பாவம் கொறைஞ்ச சம்பளத்துக்கு பசங்கள எல்லாம் ஏணி போல ஏத்தி விட்டுகிட்டு இருக்க மாட்டாங்களே!

    அதாச்சும் செந்தாமரை முகம்-னா, தாமரையில் இதழ் இதழா தொங்குறா மாதிரி முகம் தொங்கிக்கிட்டு இருந்துச்சுன்னா சொல்வீங்க?
    தாமரையின் சிவப்பு, குளிர்ச்சி, அழகு போல் இருந்திச்சி-ன்னு தானே எடுத்துப்பீங்க! அதே போலத் தான் பால் உவமையை எடுத்துக்கிடணூம்! நீங்க நைசா தண்ணியைக் கடையத் தாவிட்டீங்க! :-))))

    பால் உவமை மட்டும் எடுத்துக்கிட்டுப் பதில் சொல்லுங்க!

    ReplyDelete
  53. //Science is a set of proven universal truths. And it can be proven again and again.//

    சிறில் அண்ணாச்சி!

    If it can be proven again and again, Why Pluto was proved existing and now proved non existing?

    I do agree Science is a set of proven universal truths.
    But proved with what?
    Proved with a std set of instruments and "available" facts!

    I can prove Lemuria still exists with some maps and satellite images. But with "available" facts we know Lemuria existed, but not exists!

    So the plane of measurement is time! and hence measurement has an inherent error! Thats why scientists apply zero error correction!

    I would say
    God=Mathematics
    World=Science


    In Maths we have so many theorems and riders...just to create the measurement plane.
    We only do indirect proving in Maths.
    A <> B and B <> C => A <> C
    No where we prove A <> C
    Its only implication! Same here with respect to The Lord!

    Technology/Science uses Maths wherever it could and grows on it!
    In the same way, human kind should use God and grow on it!

    Thatz my humble inference!
    ஆழ்வார் பாசுரம் ஒன்று இந்த கணிதக் கான்செப்ட்டை அருமையா விளக்கும்!
    ஆறும் ஆறும் ஆறுமாய் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் ...
    -ன்னு தொடங்கும்...
    வேணாம்! நான் ஆழ்வார் பாசுரம் எடுத்தா வைணவம் பேசுறேன்-ன்னு ஜிரா, அம்பி எல்லாரும் சண்டைக்கு வருவாங்க! :-(

    ReplyDelete
  54. //வேணாம்! நான் ஆழ்வார் பாசுரம் எடுத்தா வைணவம் பேசுறேன்-ன்னு ஜிரா, அம்பி எல்லாரும் சண்டைக்கு வருவாங்க! :-( //

    வேணாம்! இந்த பசப்பு வேலையெல்லாம் வேணாம். என்னதான் அப்பர் பாட்டெல்லாம் போட்டு படம் காட்டினாலும் நம்மாழ்வரைத்தானே முதல்ல போடுறீங்க! சவால் வுடுறதுக்கு மட்டும் அப்பர் வேணும் ஆனா முதல் மரியாதை மட்டும் ஆழ்வாருக்கா?

    ReplyDelete
  55. பட்டிணத்தாருக்கு பச்சையா பேசினாலும் புரியும் ஆனா பழங்குடிகளுக்கு பங்குச் சந்தை புரியுமா?

    பங்காவது? சந்தையாவது?

    ReplyDelete
  56. கண்ணபிரான் Pluto குறித்த உங்கள் பார்வை தவறானது. Pluto இல்லை என யாரும் சொல்லல. Pluto கோள் இல்ல என declassify பண்ணியிருக்காங்க. Pluto இருக்குது. அது கோள் அல்ல.

    இதையும் அறிவியல்தான் செஞ்சிருக்குது. அறிவியல் எந்த ஒரு காலகட்டத்திலும் தனக்கு எல்லா விடையும் தெரிந்துவிட்டது எனச் சொல்லவில்லை. (ஆனா மதம் சொல்லுது). தெரியாத விடைகள் உள்ளன எனும் முழுமையின்மையை அது ஏற்றுக்கொள்கிறது.

    ஒரு பதிவு எழுதிட்டிருக்கேன். போடுறேன். பாப்போம்.

    ReplyDelete
  57. //ஏன் தண்ணீரை உவமைக்குக் கொள்ளவில்லை? தாவு தீர கடைஞ்சாலும் நெய் வராது என்று தானே!
    //

    ஆனைக்கு அர்ரம்னா, குதிரைக்கு குர்ரம்னு சொல்லுவாங்களே அந்த மாதிரியா? :-))

    தண்ணீரை உவமையாக எடுத்து கொள்ளலாமே. நீருக்குள் மின்சாரம் இருக்கிறது. எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்? :-)

    அட! நம்ம அரசியல்வாதிங்க 'மின்சாரம் எடுக்காத நீரை' தருவோம்னு வாக்குறுதி எல்லாம் குடுத்து வாக்கு சேகரிச்சிருக்காங்களே :-)

    இந்த உவமைகள் சொல்வது ஒன்றைத்தான். 'இறை'யோ 'இயற்கை'யோ இருந்த இடத்திலிருந்து அறிய முடியாது.

    ஆறு முகங்கள், குதிரை முகம், நரசிம்ம அவதாரம் என்று வெறும் கதையை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் மேலே தேடத் தொடங்கினால் இரண்டில் ஒன்றை அடையலாம்.

    அதாவது பூஜ்யத்தில் தொடங்கி, inifinity-ஐ அடைவது போல். சிலருக்கு 100-க்கு அப்புறமே புரிபட்டு விடுகிறது. சிலருக்கு எப்பொழுதும் ஒரு 'எண்ணை' கூட்டிக் கொண்டே இன்னொரு பெரிய எண்ணை கண்டுபிடிக்கதான் தோன்றுகிறது.

    ரொம்ப ஓவரா உளறிட்டேனோ. நிப்பாட்டிக்கிறேன் :-))

    ReplyDelete
  58. இரவிசங்கர்,

    சிறில் கூறியதை வழிமொழிகிறேன்.

    புளுட்டோ இல்லை என்று யாரும் சொல்லவில்லை.

    ஒலிம்பிக்கில தகுதிக் குறைவு கண்டுபிடித்தால் பதக்கத்தைப் பறித்துவிடுவதைப் போல புளுட்டோ சூரிய குடும்பத்தில் ஒரு கோள் என்று கருதக் கூடிய தகுதிகள் இல்லை என்று உணர்ந்தபோது கோள்களின் பட்டியலிலிருந்து நீக்கி விட்டார்கள்.

    பட்டியல் நாம் செய்தது.
    நாம் வைப்போம்.
    நாம் நீக்குவோம்.
    புளுட்டோவை செய்தவர் யாரோ
    அவரல்லவா நீக்க வேண்டும்!

    ReplyDelete
  59. //பட்டியல் நாம் செய்தது.
    நாம் வைப்போம்.
    நாம் நீக்குவோம்.
    புளுட்டோவை செய்தவர் யாரோ
    அவரல்லவா நீக்க வேண்டும்!//

    இது 'நச்'. :)

    ReplyDelete
  60. //பட்டியல் நாம் செய்தது.
    நாம் வைப்போம்.
    நாம் நீக்குவோம்.
    புளுட்டோவை செய்தவர் யாரோ
    அவரல்லவா நீக்க வேண்டும்!//

    முதலில் ஓகை ஐயாவுக்கு மட்டும்! :-))
    Was impressed with that comment and so on the same lines...

    தமிழ்க் கடவுள் பட்டியல் நாம் செய்தது.
    நாம் வைப்போம்.
    நாம் நீக்குவோம்.
    ஆயின்
    பட்டியல் செய்தவரையும் செய்தவர் யாரோ
    அவரல்லவா நீக்க வேண்டும்!
    :-))))

    ReplyDelete
  61. //கண்ணபிரான் Pluto குறித்த உங்கள் பார்வை தவறானது. Pluto இல்லை என யாரும் சொல்லல.//

    புரிஞ்சிக்கிட்டேன் அண்ணாச்சி.
    பார்வையும் திருத்திக்கறேன்!
    Now I come to know that Pluto still exists; But just doesnt exist in the list of planets!

    //அறிவியல் எந்த ஒரு காலகட்டத்திலும் தனக்கு எல்லா விடையும் தெரிந்துவிட்டது எனச் சொல்லவில்லை//

    உண்மை! பதிவிலும் சொல்லி உள்ளேனே! Building experiments over experiments என்று!

    //ஆனா மதம் சொல்லுது//

    மறுக்கிறேன்! மதம் அப்படிச் சொல்லவில்லை!
    எந்த மதம் என்று பெயர் வேண்டாம். விவாதம் வேறு திசையில் போய் விடும்! ஆனா அட்லீஸ்ட் ஒரு மதமாச்சும் உண்மையின் முழுமையின்மையை ஏற்றுக்கொண்டு அதற்கேற்றாற் போல், மானுட குலம் பயன் பெற வேண்டும்-னு சொல்லுது!
    இது ஒன்றே உய்யும் வழி! என்று கூறாது...அலற்றுவதையும் அலற்றிப் பல வழிகளில் அடைவதையும் பேசும்!

    //ஒரு பதிவு எழுதிட்டிருக்கேன். போடுறேன்.//

    போடுங்க அண்ணாச்சி! ஆவலா இருக்கேன்! வீட்டூக்குப் போனவுடன் படிக்கிறேன்! முடிஞ்சா இங்க வந்து ஒரு சுட்டி கொடுத்துட்டு போங்க! :-)

    ReplyDelete
  62. //ஆனா அட்லீஸ்ட் ஒரு மதமாச்சும் உண்மையின் முழுமையின்மையை ஏற்றுக்கொண்டு அதற்கேற்றாற் போல், மானுட குலம் பயன் பெற வேண்டும்-னு சொல்லுது!
    இது ஒன்றே உய்யும் வழி! என்று கூறாது...அலற்றுவதையும் அலற்றிப் பல வழிகளில் அடைவதையும் பேசும்!//

    Very good. அப்ப கோவில்ல உக்கார்ந்துட்டு எவலூஷன்பத்தி ஒரு கதாகாலாட்ஷேபம் செய்யலாமே? கோவிலிலேயே அறிவியல் பாடங்களை எடுக்கலாமே? மதம் அப்படி செய்யவில்லையே?

    அப்படி தேடுவது சரியானதுதான் என்றால் அறிவியல் எனும் தேடலை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன? அதை குறை சொல்ல அவசியமில்லையே?

    என்னுடைய நானூறாவது பதிவு உங்களுக்கும் கடவுளுக்கும் சமர்ப்பணம் http://cyrilalex.com/?p=400
    :)

    ReplyDelete
  63. வர வர மொக்கை பதிவுக்கு தான் அதிகமா பின்னூட்டம் வராப்போல தெரியுது :-))

    ReplyDelete
  64. @வவ்வால்
    மொக்கையே எனக்கு எழுதத் தெரியலை-ன்னு நிறைய பேரு குறைபட்டுகிட்ட காலம் போயி, இப்போ நீங்க மொக்கைப் பதிவு-ன்னு சொன்னீங்க பாருங்க! சூப்பர்! எனக்கு மொக்கை எழுத வந்துருச்சே!
    ஆத்தா நான் பாசாயிட்டேன்! :-))

    ReplyDelete
  65. 400ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சிறில் அண்ணாச்சி!

    //Very good. அப்ப கோவில்ல உக்கார்ந்துட்டு எவலூஷன்பத்தி ஒரு கதாகாலாட்ஷேபம் செய்யலாமே?//

    எதுக்கு கோயில் தான் பண்ணனும்-னு ஆன்மீகத்தைக் கோவிலுக்கு மட்டும் ஒதுக்கறீங்க?
    Aanmeegam is Location Independent!

    //அப்படி தேடுவது சரியானதுதான் என்றால் அறிவியல் எனும் தேடலை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன?//

    கேள்வியே கேட்கக் கூடாதுங்கறீங்களா? அறிவியலின் அடிப்படையே கேள்வி தானே? அது அறிவியலுக்குப் பாதகமானதாகவே இருப்பினும், கேள்வியை என்றும் அறிவியல் வரவேற்கவே செய்யும்!

    //அதை குறை சொல்ல அவசியமில்லையே?//

    அறிவியலை இங்கு குறை சொல்லவில்லையே சிறில்!
    அறிவியலின் துணை கொண்டு தானே தன் கருத்துக்களை வலியுறுத்தி அப்துல்லாவும் பேசுகிறான்?

    ஒரு வேளை ஆன்மீகம் அறிவியலைத் துணைக்கழைத்து தன் கருத்துக்களை நிலைநாட்டக் கூடாது என்கிறீர்களா?

    எப்படி அறிவியல் தன் சாதக பாதகங்களை உணர்ந்து தன்னை வளப்படுத்திக் கொள்கிறதோ, அதே வழியைத் தான் மெய்யியலும், மெய்யான ஆன்மீகமும் செய்கின்றன!
    I would say both are NOT contradictory but complementary!

    ReplyDelete
  66. //ஓகை said...
    வேணாம்! இந்த பசப்பு வேலையெல்லாம் வேணாம்//

    ஓகை ஐயா, இது பசப்பு இல்லை! நீங்கள் தொடர்ந்து ஆடும் ஆட்டத்தால் வந்த கசப்பு!

    //என்னதான் அப்பர் பாட்டெல்லாம் போட்டு படம் காட்டினாலும் நம்மாழ்வரைத்தானே முதல்ல போடுறீங்க!//

    Okay...Lemme put a full stop to this!
    Ayya, If you think that this is just for fun, I REQUEST YOU TO STOP THIS FUN! This is not fun anymore! I dont want to escalate this across post to post! This is being done not only in one post, but a couple of posts. I havent seen any smileys either.
    So I dont feel this as fun!
    (I know Ambi was playing fun, which was obvious, but not in your case)

    If you really think that this is an issue, I am ready for discussion. Let me know!

    ஆழ்வார் பாட்டு எனக்கு மனப்பாடமாத் தெரியும். அதுனால அதை முதலில் இட்டேன். அப்பர் சுவாமிகள் பாட்டை ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து பின்னால் இட்டேன்!

    என் பதிவில் எதை முதலில் இட வேண்டும் எதைப் பிந்தி இட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை எனக்கே என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!
    இல்லை...அந்த உரிமை உனக்கில்லை என்று நீங்கள் கருதுவீர்களேயானால் அதற்கு விளக்கம் கொடுங்கள்!

    ReplyDelete
  67. //அதாவது பூஜ்யத்தில் தொடங்கி, inifinity-ஐ அடைவது போல். சிலருக்கு 100-க்கு அப்புறமே புரிபட்டு விடுகிறது. சிலருக்கு எப்பொழுதும் ஒரு 'எண்ணை' கூட்டிக் கொண்டே இன்னொரு பெரிய எண்ணை கண்டுபிடிக்கதான் தோன்றுகிறது.
    ரொம்ப ஓவரா உளறிட்டேனோ. நிப்பாட்டிக்கிறேன் :-))//

    ஆகா! உளறலா?
    ஸ்ரீதர்! கையைக் குடுங்க! கலக்கிட்டீங்க!
    இந்த infinity concept வைத்து வரும் பூர்ணஸ்ய பூர்ணமாதாய என்னும் பாட்டுக்கு விளக்கம் எல்லாம் சொன்னீங்கன்னா எல்லாருக்கும் இன்னும் சுளுவா புரியும்! சூப்பராகவும் இருக்கும்!

    மக்களே, கொஞ்ச நாளா ஒரே ஆங்கிலம்! எனக்கே தெரியுது! மன்னிக்கவும்!
    அதாச்சும் ஸ்ரீதர்
    Infinity is already expressed in math as "tending to"
    tending to infinity ன்னு தான் சொல்வார்களே அன்றி, equal to infinity என்று சொல்லவே மாட்டார்கள்!

    இறை நிலையும் அதே போல் tending to என்பதை வைத்தே பல சமயங்களும் விளக்குகின்றன!

    ReplyDelete
  68. @கோவி
    //சமணர்கள் செய்யாத புனல் வாதமா நான் செய்யப் போகிறேன். வாதில் வெல்லவது கடினம் என்று தானே சூதில் வென்றார்கள்.//

    யாருங்க சூதில் வென்றது?
    எனக்கென்னமோ அப்படி எவரும் சூதில் வென்றா மாதிரி தெரியலீங்கண்ணா!

    ReplyDelete
  69. //தீமைக்கு கடவுள் காரணமில்லை என்று சொல்லும் நீங்கள் நன்மைக்கு அது காரணமில்லை என்று சொல்வதில் தயக்கம் ஏன் ? //

    @சுமதி, @கோவி

    இங்க தான் லேசான சறுக்கல்!
    நான் இங்கே நன்மைக்கு எல்லாம் கடவுள் தான் காரணம்-னு எங்கே சொல்லி இருக்கேன்? காட்டுங்க!

    தீமைக்கு இறை காரணமில்லை-ன்னு ஏன் சொல்லப்பட்டது என்றால் அப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது! அதனால் அப்படிச் சொல்லப்பட்டது!
    ஒடனே...நன்மைக்கும் அவன் காரணமில்லை-ன்னு இறையாளர்கள் தங்கள் வாயால் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஏன்? எதற்காக? தெரிஞ்சிக்கலாமா?

    ஒரு சின்ன பார்வை!
    குழந்தை தவறி கீழே விழுந்து விட்டது! அதுக்கு அம்மா தான் காரணம்-னு சொன்னா இல்லை-ன்னு சொல்லலாம்!
    உடனே குழந்தை நடப்பதற்கு அம்மா தான் காரணம் என்பதையும் மறுங்கள் என்று சொல்லுறாப் போல இருக்கு! என்ன லாஜிக் இது?

    அம்மா நடைக்கு உதவி இருக்கலாம்! குழந்தையை அம்மா வளர்த்தார்கள்-ன்னு பொதுவாச் சொல்லுவோம்!
    அம்மா நடை பழக்கலைன்னாலும் குழந்தை நடந்திருக்கும் ஒத்துக்குங்க-ன்னு கேக்குறாப் போல இருக்கு!
    Couldnt help smiling but I really liked your question!

    ReplyDelete
  70. மறுமொழிகளில் இருந்து தெரிந்து கொண்டவை:

    இத்தனை பின்னூட்டமா என்பது சிலருக்குப் பொறுக்க இயலவில்லை என்பது தெரிகிறது! :-)

    ஏதாவது சாக்கு சொல்லி சைவம் Vs வைணவம் என்று கிண்டிப்பார்க்கும் முயற்சியும் தெரிகிறது.
    இருப்பதெல்லாம் ஒரே சமயம்.

    ReplyDelete
  71. கர்ம வினைகள் பற்றி திவாவின் விளக்கங்கள் நன்று.
    இன்னமும் பதிவுகளில் படிக்க விரும்புபவர்கள் இங்கே வரவும்.

    ReplyDelete
  72. //அப்ப கோவில்ல உக்கார்ந்துட்டு எவலூஷன்பத்தி ஒரு கதாகாலாட்ஷேபம் செய்யலாமே? //

    கே.ஆர்.எஸ்.

    எலலூஷனும் வைணவும்னு பதிவு எழுதலாம்.

    எடுத்துக் கொடுக்கிறேன்.


    எவலூஷன் படி உயிரினங்கள் கடலில் தோன்றி தரைக்கு வந்து பல்கிபெருகி பரிணாம வளர்ச்சி பெற்று மனித
    குலம் தோன்றியது.


    விஷ்ணுவின் பத்து அவதாரங்களை பார்த்தால்

    முதல் அவதாரம் - மச்சம் - பரிணாமத்தின் முதல் நிலை கடல் வாழ் உயிரினம்

    இரண்டாம் அவதாரம் - கூர்மம் - கடலிலிருந்து கரைக்கு வந்த ஆம்பிபியன்.

    மூன்றாம் அவதாரம் - வராகம் - கரையில் பரிணமித்த பாலூட்டி பன்றியினம்.

    நான்காம் அவதாரம் - நரசிம்மம் - மிருக நிலையிலிருந்த காட்டுவாசி மனித இனம்.

    ஐந்தாம் அவதாரம் - வாமணன் - குறுகலாய்த் தோன்றிய மனித வடிவம்.

    ஆறாம் அவதாரம் - பரசுராமன் - வளர்ந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாத மனிதன். மனிதனின் முதல் நிலை ஆயுதமான கோடாரி (பரசு).

    ஏழாம் அவதாரம் - ராமன் - சிறந்ததான் மனித அவதாரம். மனிதன் வேட்டையாடுவதற்கான வில் ஆயுதம்.

    எட்டாம் அவதாரம் - பலராமன் - உழவுக்கு முன்னுரிமை கொடுத்து கலப்பை ஏந்திய மனிதன்.

    ஒன்பதாம் அவதாரம் - கிருஷ்ணன் - கால்நடைகளை வசப்படுத்தி வாழத் துவங்கிய மனிதன்.

    பத்தாம் அவதாரம் - கல்கி - உலகையே அழிக்கும் ஆற்றல் பொருந்திய மனிதன். (ஆட்டம் பாம் போட்டு அழிப்பாரோ.)

    இப்படி அவதாரங்கள்ள எவலூஷன் இருக்கு.


    ------

    அப்பாலிக்கா முருகருக்கு இந்தமாதிரி பரிணாம வளர்ச்சி பெற வேண்டிய தேவையெல்லாம் இல்லையாக்கும், எடுத்த எடுப்புலயே அவரு மனிதனாதான் தோன்றினாரு. :)

    ReplyDelete
  73. @சிறில்
    //உங்களுடைய வாதங்களின் தொகுப்பு கடவுள் மறுப்பை மறுக்கிறதே தவிர கடவுளின் இருப்பை நிலைநாட்டவில்லை என்பதே உண்மை.//

    Exactly!
    அப்துல்லாவும் அதையே தான் சொல்கிறான்! பதிவை இன்னொரு முறை எனக்காக வாசியுங்கள் ப்ளீஸ்!
    அப்துல்லா சொல்வது என்னவென்றால் நிலைநாட்டத் தேவையே இல்லை என்பது தான்!
    Here:

    //கடவுளின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் சார்! மனிதனுக்கும் கடவுளுக்கும் இணைப்பே அதே நம்பிக்கை தான்!
    ஆன்மீகத்தால் மனித வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கை அவசியம் வேண்டும்!
    அந்த நம்பிக்கை தான் சார் மனிதர்களை அன்றாடம் உயிர்ப்புடன் நடத்திக் கொண்டிருக்கு!"
    //

    சரியா ஸ்ரீதர்! பார்த்துச் சொல்லுங்க!
    Two eyes are better than one!

    ReplyDelete
  74. @அரை பிளேடு!
    Again the life-enthuser, நீங்க தான்! டேங்கீஸ்! :-))
    நீங்க சொன்னதால் Evolution Concept-kku இன்னும் களை கூடியிருக்கு! அருமையான கருத்துக்கள்!

    நான் வைணவம்-ன்னு இனிப் பேசப் போவதில்லை! பொதுவா Evolution பத்திப் பேசறேன்!
    இவ்வளவு நல்ல கலந்துரையாடல், நான் எனக்குத் தெரிந்த வைணவப் பாடல்களை மேற்கோள் காட்டுவதால் சிலரால் சிதைந்து போகிறது! அப்படிச் சிதைந்து போகுமானால், எனக்கு அந்த வைணவம் தேவையே இல்லை!

    திருமுருகப் பெருமானும் Evolutionக்கு ஒரு வகையில் எடுத்துக்காட்டு தான்! வேறு மாதிரியான Strategic Evolution!
    ஆறு குழந்தைகளும் தனித்தனியாக இருந்து ஒன்றாவது ஏன் என்பதை யோசித்துப் பார்த்தீர்களா?

    ReplyDelete
  75. //இறையாளர்கள் தங்கள் வாயால் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது ஏன்? எதற்காக? தெரிஞ்சிக்கலாமா?//

    கேஆர்எஸ்,

    இது ஆத்திகருக்காக நம்பிக்கை ஊட்டும் இடுகை என்று சொல்லி இருந்தால் நான் விவாதம் செய்து இருக்க மாட்டேன், நீங்கள் அதை வலியுறுத்த எடுத்துக் கொண்ட பொருள் இறைமறுப்பு என்பதால் எனது கருத்தைச் சொன்னேன்.

    பாலில் நெய் இருப்பது மட்டும் தான் உங்களால் பார்க்க முடியும், பால் திரியக் கூடியது என்றும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதற்காக பேச வேண்டி இருந்தது.

    இரட்டை தன்மையை மறுத்து பேசுவதில் உங்கள் இடுகை மையப்படுத்தப்பட்டு இருக்கிறது, அது வேறு வேறு அல்ல, ஒன்றே என்பது என் கருத்து.

    ReplyDelete
  76. It was fun for only. And I stop it from now.

    ReplyDelete
  77. நெய் மட்டுமல்ல,பால் திரிந்தாலும் அதிலிருந்து cheese,panner போன்றவை கிடைப்பதில்லையா கண்ணன் சார்.இறை என்பதும் அப்படித்தான்.த்வைத,அத்வைத,விசிஷ்டாத்தைவதங்கள் எல்லாமே பௌதீக நிலை கொண்டவைதானே."ஒன்றுக்குள் ஒன்றாக உருவானது அது ஒன்றினுள் ஒன்றாக கருவானது"என்று கண்ணதாசன் அழகாக ஈரடிகளில் கூறி விடுகிறார் இதை.டால்டன்'ஸ் அடாமிக் தியரி இன்றும் பௌதீகத்தில் இருக்கிறது,குண்டு வெடித்து அது disprove செய்யப்பட்ட பின்னரும்!இறையை விளக்கும் தத்துவங்களும் பௌதீகமும் எங்கோ ஒரு புள்ளியில் சந்திக்கத்தான் செய்கின்றன.nature given constraints vs man made constraints என்று ரஸ்ஸல் கூறுவார்.புரிதலும்,உணர்தலும் எல்லா நேரத்திலும் ஒன்றாகாது.என்னையே எடுத்துக் கொண்டால்,நான் இறையை உணர்கிறேன்,அது போதும்.
    அன்புடன்
    சீனிவாசன்

    ReplyDelete
  78. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது ?//

    வெயில்ல போகனும்ன்னு இருந்தா குடை பிடிப்பது போன்றது தான் நீங்க சொல்ற இறைநம்பிக்கை!

    இல்ல நான் வெறும் கால்ல தான் நடப்பேன்னு இருந்தா, அனுபவி! யாரு வேணாம்னா?

    ReplyDelete
  79. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது ?//

    இல்ல நான் வெறும் கால்ல தான் நடப்பேன்னு இருந்தா, அனுபவி! யாரு வேணாம்னா?//

    மொதல்ல இத யாரு சொன்னாங்கன்னு படிச்சிட்டு அப்புறம் கமென்டுங்க "ஆதலினால்"
    //kannabiran, RAVI SHANKAR (KRS) said... //
    பதிவின் ஆசரியர் நான் இதைச் சொல்லவில்லை! அப்புறம் எதுக்கு இதை என்னை மேற்கோள் காட்டி இந்தப் பின்னூட்டம்?

    ReplyDelete
  80. பகுதி 1 போலவே, ஆண்டவன் இருக்கட்டும், முதலில் உங்கள் அறிவியலில் பிழை உள்ளதே.

    //குளிர் -273k டிகிரி வரைக்கும் தான் போக முடியும்//

    தவறு. 0 K அல்லது -273 டிகிரி செல்சியஸ். மேலும், வெப்பம், குளிர் என்ற இரண்டு வார்த்தைகளை அறிவியல் பயன்படுத்துவது இல்லை. 0 K என்றாலும், 10000 K என்றாலும் temperature அல்லது 'வெப்பநிலை' என்றே அழைக்கப்படுகிறது. குளிர் என்பது அன்றாட வாழ்வில் நாம் பழக்கத்தில் பயன்படுத்துகிற சொல் மட்டுமே. (மேலும் நீங்கள் சொல்லியுள்ளதற்கு மாறாக, super cooled state என்று கூட உண்டு!)

    அதே போல, ஒளியை எடுத்துக்கொள்வோம். ஒளி அளவு (brightness) லூமென் என்கிற அலகினால் அளக்கப்படுகிறது. இதைக்குறைத்துக்கொண்டே போனால், 'இருட்டு' வருகிறது. 'இருள் என்பது குறைந்த ஒளி'-- பாரதியார், வசன கவிதை. இருள் x ஒளி என்று இரட்டை நிலையையெல்லாம் அறிவியல் எங்கும் பயன் படுத்துவது இல்லை. இது உங்கள் வாதம் எதற்கும் சான்றாகவும் இல்லை.

    ////"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது!///

    தவறுகிறீர்கள் KRS! சான்று கிடைக்காத ஒன்றை இல்லாததாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். Magnetism என்பது யாரும், எங்கும், எப்பொழுது சோதித்தாலும் ஒரே முடிவைத் தருகிறது. அதைக் கடவுளோடு போட்டுக் குழப்பாதீர்கள்!

    உங்கள் இடுகையில் மிக மோசமான வாதம் என்றால் ப்ளூட்டோ பற்றியதுதான். ப்ளூட்டோ எங்கும் போய்விடவில்லை நண்பரே. அதன் வகைப்பாட்டில் சிறிய மாற்றம் அவ்வளவே. நாளுக்கு நாள் வளர்வது அறிவியல். மாற்றமின்றி அப்படியே இருக்க மதம் அல்ல.

    மேலும், இந்த இடுகையில் E=mc^2 என்கிற அளவுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. நிலக்கரியில் கூடத்தான் சக்தி உள்ளது. எஞ்சினையெல்லாம் இயக்குகிறது. வெளியில் பார்க்க அது தெரிவதில்லை. எரித்தால் வெளிப்படுகிறது. மனிதர்கள் முதலில் அதில் சக்தி இருப்பது தெரியாமல்தான் இருந்தனர். இதை வைத்தே இந்த இடுகையை நீங்கள் ஆரம்பித்திருக்கலாமே.

    வாளித்தண்ணீர், ஐன்ஸ்டைன் விதி என்று பலரும் சரியாகப் புரிந்துகொள்ளாத விஷயங்களை எழுதப்போய் நீங்களும் சறுக்கி (பார்க்க: பகுதி 1-ல் என் பின்னூட்டம்), மற்றவர்களையும் 'மிரட்டி' இருக்கவேண்டாம். மதன், சுஜாதா போன்றவர்கள் (இயற்பியலில் பெரிய அளவில் முறையான கல்வி இல்லாதவர்கள்) ஏற்கனவே குவாண்டம் இயற்பியலை வைத்து, ஏதோ அது அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைப்பது போலவெல்லாம் மாயக்கோட்டைகளைக் கட்டியுள்ள சூழல் நம்முடையது.
    நீங்களும், இரண்டு இடுகைகளிலும் இயற்பியலில் தவறியுள்ளீர்கள். அவற்றை எனக்குமுன் பின்னூட்டமிட்ட எவருமே சுட்டிக்காட்டவில்லை என்பது, ஒரு 'படிச்ச புள்ள' இயற்பியல் பற்றி சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலையின் வெளிப்பாடே.

    என் அன்பான வேண்டுகோள் உங்களுக்கும், இயற்பியலை முறையாகப் பயிலாத பிறருக்கும்: கடவுள் உண்டு என்பது உங்கள் நம்பிக்கை. வைத்துக்கொள்ளுங்கள். கடவுளைப் பற்றி ஆன்மீகவாதியாக எது வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். அறிவியலை--குறிப்பாக இயற்பியலை--விட்டுவிடுங்கள், அது பிழைத்துப்போகட்டும்!


    //கடவுள் இருக்காரா இல்லையா என்பது முற்றிலும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவது. ஆனா அறிவியல் அப்படி அல்ல. அதாவது அறிவியலில் அநேகமானவற்றை நம்மால் உறுதிசெய்துகொள்ள இயலும். மற்றவை hypothesis எனக் கொண்டாலும் அதிலுள்ள லாஜிக் அறிவு பூர்வமாயிருக்கும். ஆன்மீகத்துக்கு அறிவுபூர்வமான எதுவும் தேவையில்லை. அது உணர்ச்சிபூர்வமான ஒன்று//

    --சிறில் அலெக்ஸ்.

    அது!

    ReplyDelete
  81. சரவணன், நீங்கள் சொல்வதை வலுவாக மறுக்க வேண்டி உள்ளது.

    //பகுதி 1 போலவே, ஆண்டவன் இருக்கட்டும், முதலில் உங்கள் அறிவியலில் பிழை உள்ளதே.//

    பகுதி 1ல் உள்ள பிழை தண்ணீரின் ஹைட்ரஜன் சக்தியை மட்டுமே சொன்னது. இது தவறுதான் என்றாலும் பொருட்திணிவில் அளவற்ற சக்தி அடங்கியுள்ளது என்பதை வலியுறுத்த சொல்லப்பட்டதுதானே! அதில் தவறில்லையே!

    /////குளிர் -273k டிகிரி வரைக்கும் தான் போக முடியும்//

    தவறு. 0 K அல்லது -273 டிகிரி செல்சியஸ். //

    -273K என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருக்கிறார். -273 செல்சியஸ் என்பது சரிதான். ஆனால் இதற்குக் குறைவான வேப்பநிலை இல்லை என்பது உண்மையல்லவா? அதை அல்லவா அவர் தன் செய்திக்கு ஆதாரமாகக் கொண்டிருக்கிறார். வெப்பத்துக்கு அளவற்ற மேல் எல்லை உண்டென்றாலும் அதன் கீழ் எல்லை முற்றாக வரையறுக்கப் பட்டிருப்பதைத் தான் அவர் தன் விளக்கத்துக்குப் பயன் படுத்தி இருக்கிறார்.

    //மேலும், வெப்பம், குளிர் என்ற இரண்டு வார்த்தைகளை அறிவியல் பயன்படுத்துவது இல்லை.//

    தவறு. வெவ்வெறு வெப்பநிலைகளின் ஒப்புநோக்கில் சார்புச் சொற்கள்தாம் வெப்பம் அல்லது குளிர். (குளிர்தல் = வெப்பநிலை குறைதல்)

    //0 K என்றாலும், 10000 K என்றாலும் temperature அல்லது 'வெப்பநிலை' என்றே அழைக்கப்படுகிறது.//

    temperature என்ற சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பல்ல வெப்பநிலை என்பது. temperature என்ற சொல் ஒரு நிலைப்பாட்டைக் குறிக்கும் சொல்.

    //குளிர் என்பது அன்றாட வாழ்வில் நாம் பழக்கத்தில் பயன்படுத்துகிற சொல் மட்டுமே.//

    இது சார்புச் சொல். நம் சூழலில் பொதுவான ஒரு வெப்பநிலையுடன் ஒப்புநோக்கி அதற்கு கீழ் என்று குறிப்பதற்காகச் சொல்லப்படும் சொல்.

    //(மேலும் நீங்கள் சொல்லியுள்ளதற்கு மாறாக, super cooled state என்று கூட உண்டு!)//

    இதுவும் ஒப்புநோக்கு சார்புச் சொல்லே! 0K உடன் ஒப்பிட்டால் super cooled state என்று ஒன்று இல்லை.

    //ஒளி அளவு (brightness) லூமென் என்கிற அலகினால் அளக்கப்படுகிறது. இதைக்குறைத்துக்கொண்டே போனால், 'இருட்டு' வருகிறது. இது உங்கள் வாதம் எதற்கும் சான்றாகவும் இல்லை.//

    0 ஒளி அளவு (brightness) லூமென் என்ற நிலை ஒளி அளவின் சூன்ய நிலை என்பதை உங்களால் மறுக்க முடியாதே. இந்த அளவின் கீழான ஒளி அளவும் இல்லை. இதற்கு மேலான இருட்டும் இல்லை.

    0 ஒளி அளவு (brightness) லூமென் என்பதே ஒளியின் சுழிநிலை. இதற்கு மேற்பட்டதே வெளிச்சம்.

    -10 லூமென் என்பது ஈரேழு பதினாலு உலகத்திலும் இல்லை!


    ///////"ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது!///

    தவறுகிறீர்கள் KRS! சான்று கிடைக்காத ஒன்றை இல்லாததாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ////

    அப்படியென்றால் தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் நெப்டியூன், யுரேனஸ், புளுட்டொ எல்லாம் உருவானதாகக் கருதவேண்டுமா?

    பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறெங்கும் மனிதர்கள் இருப்பதற்கு சான்றுகள் இல்லை. ஆகையால் வேறெங்கும் மனிதர்கள் இல்லையெனக் கொள்ளலாமா? ஆய்வுகள் மேற்கொண்டால் எந்த அடிப்படையில் செய்ய வேண்டும்? இருக்கிறான் என்று வைத்துக்கொண்டா அல்லது இல்லை என்று வைத்துக் கொண்டா?

    //Magnetism என்பது யாரும், எங்கும், எப்பொழுது சோதித்தாலும் ஒரே முடிவைத் தருகிறது. அதைக் கடவுளோடு போட்டுக் குழப்பாதீர்கள்!//

    Magnetism இருப்பதை அதன் செயல்களால் நாம் உணர்ந்து அறிவதைப் போல இறைவனை பல நிகழ்வுகளால் உணரவேண்டும் என்று krs சொல்லுகிரார் என்றே நான் நினைக்கிறேன்.

    //உங்கள் இடுகையில் மிக மோசமான வாதம் என்றால் ப்ளூட்டோ பற்றியதுதான். ப்ளூட்டோ எங்கும் போய்விடவில்லை நண்பரே. அதன் வகைப்பாட்டில் சிறிய மாற்றம் அவ்வளவே.//

    இதை சிறில் சுட்டிக்காட்ட பிறகு அவரும் ஒப்புக் கொண்டார்.

    //நாளுக்கு நாள் வளர்வது அறிவியல். மாற்றமின்றி அப்படியே இருக்க மதம் அல்ல.//

    மதம் மாறாமல் அப்படியே இருக்கிறது என்று உங்களுக்கு யார் சொன்னது? மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதிருப்பது.

    //மேலும், இந்த இடுகையில் E=mc^2 என்கிற அளவுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. நிலக்கரியில் கூடத்தான் சக்தி உள்ளது. எஞ்சினையெல்லாம் இயக்குகிறது. வெளியில் பார்க்க அது தெரிவதில்லை. எரித்தால் வெளிப்படுகிறது.//

    அளவற்ற ஆற்றலையும் அந்த ஆற்றல் எவ்வளவிலானது என்பதைக் கூறவுமே
    E=mc^2 எடுத்துக் காட்டாக ஆளப்பட்டிருக்கிறது என்பது என் எண்ணம்.

    //நீங்களும், இரண்டு இடுகைகளிலும் இயற்பியலில் தவறியுள்ளீர்கள். அவற்றை எனக்குமுன் பின்னூட்டமிட்ட எவருமே சுட்டிக்காட்டவில்லை //

    புளுட்டோ சுட்டிக் காட்டப்பட்டது. மற்றபடி சிறு பிழைகள் இருந்தாலும் அவை சொல்ல வந்த செய்திகளுக்கு புறம்பானதாகவோ அல்லது முரணாகவோ இல்லை என்பதால் பொருட்படுத்தத் தேவை இல்லை.

    // அறிவியலை--குறிப்பாக இயற்பியலை--விட்டுவிடுங்கள், அது பிழைத்துப்போகட்டும்!//

    அதைக் கொலை செய்ய மனித முயற்சியால் முடியுமா நண்பரே!!

    ReplyDelete
  82. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //அவரவர் வாழ்க்கை அவரவர் கர்மவினைகள் என்ற கருத்து இருக்கும் போது இறை நம்பிக்கை அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போகிறது ?//

    இல்ல நான் வெறும் கால்ல தான் நடப்பேன்னு இருந்தா, அனுபவி! யாரு வேணாம்னா?//

    மொதல்ல இத யாரு சொன்னாங்கன்னு படிச்சிட்டு அப்புறம் கமென்டுங்க "ஆதலினால்"
    //kannabiran, RAVI SHANKAR (KRS) said... //
    பதிவின் ஆசரியர் நான் இதைச் சொல்லவில்லை! அப்புறம் எதுக்கு இதை என்னை மேற்கோள் காட்டி இந்தப் பின்னூட்டம்?
    //

    கண்ணபிரான் ரவிசங்கர் சார்பில் மறுமொழி எழுதுபவர்களுக்கு,

    ரவிசங்கர் வெறும் மறுப்பை மட்டுமே சொல்லிவிடமாட்டார்.

    ஒரு பொறுப்பை கொடுத்து சரியாக செய்ய முடியவில்லை என்றால் காத்திருக்கலாம்.

    :)

    இதனை இவனால் முடிக்கும் என்றாராய்ந்து...

    என்ற நம்பிக்கையில் தான் கொடுத்து இருப்பார்ர்.

    ReplyDelete
  83. எதிர்வினைகளுக்கு நன்றி ஓகையாரே. என் வாதங்களில் முக்கியமான பகுதி

    //மதன், சுஜாதா போன்றவர்கள் (இயற்பியலில் பெரிய அளவில் முறையான கல்வி இல்லாதவர்கள்) ஏற்கனவே குவாண்டம் இயற்பியலை வைத்து, ஏதோ அது அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைப்பது போலவெல்லாம் மாயக்கோட்டைகளைக் கட்டியுள்ள சூழல் நம்முடையது.
    நீங்களும், இரண்டு இடுகைகளிலும் இயற்பியலில் தவறியுள்ளீர்கள். அவற்றை எனக்குமுன் பின்னூட்டமிட்ட எவருமே சுட்டிக்காட்டவில்லை என்பது, ஒரு 'படிச்ச புள்ள' இயற்பியல் பற்றி சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலையின் வெளிப்பாடே. //

    இதற்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. இடையிலிருந்து ஒரு வரியைமட்டும் உருவி பதிலளித்துள்ளீர்கள்! இயற்பியலை/அறிவியலை யாரும் 'கொல்ல' முடியாதுதான். ஆனால் இந்திய/தமிழக இயற்பியல் அல்லது அறிவியலைக் கொல்லமுடியும்--misleading கருத்துகளைப் பரப்புவதன்மூலம்.

    அதிலும் இந்த அறிமீகர்களுக்கு (அறிவியல்+ஆன்மீகம் என்னும் 'படிச்ச புள்ளைகளுக்கு')அதென்னமோ தெரியலை இயற்பியல் மீதுதான் கண்! ஆழ்கடல் உயிரியல் போன்ற பிற துறைகளை இவர்கள் கொத்து புரோட்டா போடுவதில்லை! இதை வைத்து தனி இடுகை இடலாம் என்றிருக்கிறேன்.

    Feynman Lectues (Ind. edn)முன்னுரை வழங்கிய பேராசிரியர் வி. பாலகிருஷ்ணன் வகுப்பறையில் குறிப்பிடுவதுபோல 'you can't discover truths about the universe by contemplating the navel.'

    அறிமீகர்கள் அறிவியலையும், contemplating the navel ஐயும் குழப்பிக்கொள்கிறார்கள். இதைத்தான் நான் எதிர்க்கிறேன்.

    தனி இடுகையிடும்போது உங்கள் பங்களிப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
  84. //இதற்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. இடையிலிருந்து ஒரு வரியைமட்டும் உருவி பதிலளித்துள்ளீர்கள்!//

    என்ன சரவணன் இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? ஏறக்குறைய உங்கள் முழுப் பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லியிருந்தேனே!

    இதைப் படித்தீர்களா!

    //புளுட்டோ சுட்டிக் காட்டப்பட்டது. மற்றபடி சிறு பிழைகள் இருந்தாலும் அவை சொல்ல வந்த செய்திகளுக்கு புறம்பானதாகவோ அல்லது முரணாகவோ இல்லை என்பதால் பொருட்படுத்தத் தேவை இல்லை.//

    நீங்கள் குறிப்பிட்டுக் கேட்கும் பகுதிக்கான பதில் இதில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். நீங்கள் சுட்டிய தகவல் பிழைகளை நான் மறுக்கவில்லையே! மாறாக நானும் அவற்றை உறுதி செய்திருக்கிறேனே! மேலும் விளக்கங்கள் தரத் தயாராகவே இருக்கிறேன். உங்கள் தனி இடுகையின்போது பங்களிக்க ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP