புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு!
மோனா, பொன்ஸ், ஜெயஸ்ரீ - 10/10
ஆதித்தன், பினாத்தல் சுரேஷ், ஜி.ராகவன், சத்தியா - 9/10
மனதின் ஓசை, ஸ்ரீதர் வெங்கட் - 8/10
------------------------------------------------------------------------
விடைகள் கீழே...bold செய்யப்பட்டுள்ளன. விரிவான விளக்கங்கள், பின்னூட்டத்தில்! நின்றவர்க்கும், வென்றவர்க்கும் வாழ்த்துக்கள்!!!
பரிசேலோர் எம்பாவாய்!
பொன்னியின் செல்வனுக்கு, ஓவியர் மணியம் வரைந்த இரண்டு படங்கள்:
இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
1. காதல் ஜோடிகள்: குந்தவை-வந்தியத்தேவன், நந்தினி-பழுவேட்டரையர்
2. வீரநாராயணபுரம் ஓவியம் - இது விண்ணகரக் கோவில் என்று நூலின் முதலிலேயே வந்து விடும். அதன் வசனம், சாம்பிளுக்கு இதோ!
//ஸ்ரீமத் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸ்ரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.
அத்தகைய பெருமாளின் கோயிலுக்குத்தான் இப்போது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றார்கள். சந்நிதிக்கு வந்து நின்றதும் ஆழ்வார்க்கடியான் பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-
"பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம்//
படங்களுக்கு நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளை-tamilheritage.org
பொன்னியின் செல்வன் பற்றி நாள் கணக்கில் பேசலாம், பதிவுக் கணக்கில் பேசலாம்! சரி..........மீள் பதிவு மாதிரி, பொன்னியின் செல்வனை மீள் படிப்பு படிச்சா என்னவென்று தோன்றியது!
சரியான சோம்பேறியாச்சே நானு, எங்கிருந்து படிக்கப் போகிறேன்?
அதான் ஒரு பத்து கேள்வி கேட்டுப்புட்டு, பதில் ஒன்றும் பிடிபடலைன்னா, உடனே புத்தகமும் கையுமா உட்காருவதா ஒரு முடிவெடுத்து விட்டேன்!
இதைப் படமாக எடுப்பது பற்றியெல்லாம் பலர் பேசினார்கள்! வந்தியத் தேவனா யாரு நடிக்கலாம்?
என்னைக் கேட்டா, எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பதிவரின் பெயரைத் தான் ரெக்கமண்டேஷன் செய்வேன்!
நீங்க யாரையாச்சும், இல்லாக்காட்டி உங்களையே ரெக்கமண்டேஷன் செய்து கொள்வீர்களா? The Lord of The Rings படமாகுது.....பொன்னியின் செல்வன் ஆக முடியாதா?
நம்ம குருநாதர் Dubukku எப்பயோ ஒரு முறை சொன்னது ஞாபகம் வருது!
"பொன்னியின் செல்வனை ஒரே படமாக எடுப்பது என்பது, பதினெட்டு முழம் புடவையை எடுத்துக் கழுத்தில் "டை" யாக கட்டிக் கொள்வது போல"
பார்ப்போம், எத்தனை தூரம் நந்தினியும் குந்தவையும் நினைவில் இருக்கிறார்கள் என்று!
சேந்தன் அமுதனுக்கும் பழுவேட்டரையருக்கும் என்ன தொடர்பு என்று!
இலங்கையின் பட்டினங்கள் பெயர் நினைவுக்கு வருகிறதா என்று!
இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-)
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு பொன்னியின் செல்வன்!
1 | "திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரசோழ பராந்தகரின் மகாமான்ய முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மாதி ராஜர் வருகிறார்! பராக்! பராக்!....." இந்த அநிருத்தப் பிரம்மராயரின் இயற்பெயர் என்ன? | 1 அ) அருண்மொழிப் பட்டன் |
2 | ஆதித்த கரிகாலனின் நெருங்கிய நண்பர்கள் இருவர். அதில் ஒருவன் இவன். இவன் பெயர் என்ன? இவன் தங்கை தான் வந்தியத் தேவனை விரும்பினாள். ஆனால் இறுதியில் மாண்டாள். அவள் பெயர் என்ன? | 2 அ) பார்த்திபேந்திரன் - பூங்குழலி |
3 | இலங்கையில் முதன் முதலாக, பூங்குழலியின் உதவியோடு, நாகத் தீவில் இறங்கினான் வந்தியத்தேவன். பின்னர் இளவரசர் அருண்மொழி இருக்கும் நகரத்தை நோக்கிக் கிளம்பினான். எந்த நகரம்? | 3 அ) யாழ்ப்பாணம் |
4 | சுந்தர சோழர் அடிக்கடி கனவில் கண்டு பயப்படும் ஊமை ராணியின் பெயர் என்ன? | 4 அ) மந்தாகினி தேவி |
5 | இன்று தமிழ்மணத்தில் போலிகளின் பிரச்சனை இருப்பது போல பொன்னியின் செல்வன் -இலும் ஒரு போலி பாத்திரம் இருந்தது? - ஒரு போலி இளவரசனாய் வலம் வரும் அவர் யார்? | 5 அ) குடந்தை வைத்தியர் மகன் |
6 | தீப்பொறி கண்களும் தொங்கும் மீசையுமாக மணியம் வரைந்த பெரிய பழுவேட்டரையர் பற்றிப் படித்திருக்கிறோம். அவரைக் கொன்றது யார்? | 6 அ) சின்னப் பழுவேட்டரையர் |
7 | மாய மோகினி, எவரையும் கவரும் வல்லமை கொண்டவள், பேரழகி, சாகசக்காரி....நம்ம நந்தினி, கதையின் கடைசியில் என்ன ஆனாள்?...... தப்பி ஓடினாள். ஆம்; பழுவூர் இளைய ராணி நந்தினி தேவியும் மறைந்து விட்டாள். இனி அவளை இக்கதையிலே நாம் காண மாட்டோம் என்கிறார் கல்கி. அவள் மலைக்குகையில் யாரிடம் இருந்து தப்பி ஒடினாள்? | 7 அ) ரவிதாசன் |
8 | கல்கி, தம் புதினத்தின் நடுநடுவே சைவ, வைணவ, பெளத்த ஆலயங்கள் பற்றிக் குறிப்புகள் பலவற்றைக் கொடுப்பார். கிழவன் சிவனார், கிழவி உமையவளை நான் பாட மாட்டேன் என்று சுந்தரர் கோபித்துக் கொண்டு போன தலம் பற்றி ஒரு குறிப்பு வரும்! பின்னர் உமையவளை மட்டும் இளையவளாக பிரதிட்டை செய்வார்கள். சுந்தரர் வந்து பாடுவார்! இதே போல் யாரோ பாடமாட்டேன் என்று சொன்னதால் தான் கிழவன் பழுவேட்டரையன் இளையவள் நந்தினியைப் பிடித்தானோ என்று, ஆதித்த கரிகாலன் கிண்டல் செய்வான்! அது எந்தத் தலம்? | 8 அ) திருவையாறு |
9 | ஆழ்வார்க்கடியான் செய்யும் அடிதடி வம்பு தும்புகள் எல்லாம் படிக்கும் போது ஒரே சிரிப்பாய் இருக்கும். ஆனால் அவன் தமையனார் (அண்ணா) ஒரு சிவ நெறிச் செல்வர்! சோழ தேசத்து ராஜகுருவாகவும் இருந்தவர். யார் தெரிகிறதா? | 9 அ) திருநாரையூர் நம்பி |
10 | கதையின் கடைசியில் சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்! அருண்மொழி தானே பட்டமேறப் போவதாகப் பிரகடனம் செய்து விட்டு, திடீர் என்று விழாவில், மகுடத்தை சேந்தன் அமுதன் தலையில் அருண்மொழியே சூட்டி விடுகிறார். அப்போது சேந்தன் அமுதன் மறுப்பேதும் சொல்லாமல் இருக்க, அவர் தோள்களை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது யார்? | 10 அ) சின்னப் பழுவேட்டரையர் |
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!
1 அ) அருண்மொழிப் பட்டன் ஆ) ராமன் கிருஷ்ணன் இ) வைணவதாசர் ஈ) கிருஷ்ணன் ராமன் |
2 அ) பார்த்திபேந்திரன் - பூங்குழலி ஆ) கந்தமாறன் - மணிமேகலை இ) பினாகபாணி - வானதி ஈ) முருகையன் - பூங்குழலி |
3 அ) யாழ்ப்பாணம் ஆ) அனுராதபுரம் இ) மாதோட்டம் ஈ) திருக்கேதீசுவரம் |
4 அ) மந்தாகினி தேவி ஆ) செம்பியன் மாதேவி இ) வானவன் மாதேவி ஈ) இலாட மாதேவி |
5 அ) குடந்தை வைத்தியர் மகன் ஆ) மதுராந்தகத் தேவர் இ) மதுராந்தக உத்தம சோழர் ஈ) சேந்தன் அமுதன் |
6 அ) சின்னப் பழுவேட்டரையர் ஆ) இடும்பன் காரி இ) பெரிய பழுவேட்டரையர் ஈ) நந்தினி |
7 அ) ரவிதாசன் ஆ) குந்தவை இ) பழுவேட்டரையர் ஈ) பாண்டிய ஆபத்துதவிகள் |
8 அ) திருவையாறு ஆ) நாகைப் பட்டினம் இ) விருத்தாச்சலம் ஈ) ராமேஸ்வரம் |
9 அ) திருநாரையூர் நம்பி ஆ) ஈசான சிவபட்டர் இ) குடந்தை சோதிடர் ஈ) திருக்கோவிலூர் மலையமான் |
10 அ) சின்னப் பழுவேட்டரையர் ஆ) பூங்குழலி இ) பிரம்மராயர் ஈ) வந்தியத் தேவன் |
ஈ) கிருஷ்ணன் ராமன்
ReplyDelete2 ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3 ஆ) அனுராதபுரம்
4 அ) மந்தாகினி தேவி
5 ஈ) சேந்தன் அமுதன்
6 ஆ) இடும்பன் காரி
7 ஈ) பாண்டிய ஆபத்துதவிகள்
8 அ) திருவையாறு
9 ஆ) ஈசான சிவபட்டர்
10 ஆ) பூங்குழலி
ஈ) கிருஷ்ணன் ராமன்
ReplyDelete2 ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3 ஆ) அனுராதபுரம்
4 அ) மந்தாகினி தேவி
5 ஈ) சேந்தன் அமுதன்
6 ஆ) இடும்பன் காரி
7 ஈ) பாண்டிய ஆபத்துதவிகள்
8 அ) திருவையாறு
9 ஆ) ஈசான சிவபட்டர்
10 ஆ) பூங்குழலி
சின்ன அம்மணி வாங்க!
ReplyDeleteமுதல் போணி நீங்க தான்!
1,2,4,9 கரெக்டுங்க!
5ஆம் கேள்விக்கு போலியைத் தான் விடையாச் சொல்லணும்....Twisted Question! :-)
1 வைணவதாசர்
ReplyDelete2 ஈ) முருகையன் - பூங்குழலி
3 ஈ) திருக்கேதீசுவரம்
4 அ) மந்தாகினி தேவி
5 அ) குடந்தை வைத்தியர் மகன்
6 ஈ) நந்தினி
9 ஆ) ஈசான சிவபட்டர்
ரொம்ப நாள் ஆச்சுங்க படிச்சு சும்மா பாதி guess work தான்......ரொம்ப தப்பா இருந்தா கோச்சுக்காதீங்க........
Radha Sriram
ReplyDeleteவாங்க...ரொம்ப நாளாச்சு படிச்சு என்பதற்குத் தான் இந்த தூசு தட்டற பதிவு! :-)
4 & 9 Correct!
சூப்பர் பதிவு அண்ணாத்த!!
ReplyDeleteபடிச்சு ரொம்ப நாள் ஆகிப்போச்சு !!
இந்த புதிர்ப்பதிவின் விடைப்பதிவை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்!! :-)
1 ஈ) கிருஷ்ணன் ராமன்
ReplyDelete2 ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3 இ) மாதோட்டம்
4 அ) மந்தாகினி தேவி
5 அ) குடந்தை வைத்தியர் மகன்
6 இ)பெரிய பழுவேட்டரையர்
7 ஈ) பாண்டிய ஆபத்துதவிகள்
8 அ) திருவையாறு
9 ஆ) ஈசான சிவபட்டர்
10 ஈ) வந்தியத் தேவன்
ஒரு 3 மாதம் வரைக்கும் இதை வைச்சு இருங்க.புத்தகத்தைப் படிச்சுட்டு பதில் சொல்லுறேன் அண்ணா :D
ReplyDeleteவிஜய்...கலக்கிட்டீங்க!
ReplyDelete5,7,8 தவிர எல்லாமே கரீட்டு! :-)
1 அ) அருண்மொழிப் பட்டன்
ReplyDelete2 ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3 இ) மாதோட்டம்
4 அ) மந்தாகினி தேவி
5 ஆ) மதுராந்தகத் தேவர்
6 அ) சின்னப் பழுவேட்டரையர்
7 இ) பழுவேட்டரையர்
8 இ) விருத்தாச்சலம்
9 ஆ) ஈசான சிவபட்டர்
10 ஈ) வந்தியத் தேவன்
ஏதோ என்னால் முடிந்த விடைகள்.
ReplyDelete1) இ) வைணவதாசர்
2) ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3) இ) மாதோட்டம்
4) அ) மந்தாகினி தேவி
5) ஆ) மதுராந்தகத் தேவர்
6) இ) பெரிய பழுவேட்டரையர்
ஆனாலும் இது பொன்னியில் செல்வனில் அறுதியாக கூற்ப்படவில்லை. பழுவேட்டரையரின் வாக்குமூலத்தைதான் எடுத்துகொள்ளவேண்டியிருக்கிறது
7) இ) பழுவேட்டரையர்
8) இ) விருத்தாச்சலம்
9) ஆ) ஈசான சிவபட்டர்
10) ஈ) வந்தியத் தேவன்
1
ReplyDelete2 ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3
4 அ) மந்தாகினி தேவி
5 ஆ) மதுராந்தகத் தேவர்
6 இ) பெரிய பழுவேட்டரையர்
7
8 அ) திருவையாறு
(இது யூகம்)
9 அ) திருநாரையூர் நம்பி
(இது யூகம்)
10 இ) பிரம்மராயர்
(இது யூகம்)
நான் பாஸா பெயிலா. . .?
மனதின் ஓசை...
ReplyDeleteகலக்கல் போங்க!
1,6 தவிர எல்லாமே சரி தான்!
இப்பத்திக்கு நீங்க தான் டாப்பர்!
ஆதித்தன் பிச்சு உதறி இருக்காரு!
ReplyDelete1ஆம் கேள்வி தவிர மற்ற எல்லாமே கரெக்டுங்க!
மனதின் ஓசை கிட்ட இருந்து டாப்பர் பதவியைப் பறிச்சிக்கிட்டீங்களே! :-)
வெங்கட்ராமன் என்னங்க
ReplyDeleteஃபாசா, ஃபெயிலா என்று கேட்கறீங்க!:-)
2,4,5,6 கரெக்டுங்க!
பினாத்தலாரு வந்து 9/10 அடிச்சிட்டு போயிருக்காரு! (அவரு மட்டும் தனிக் களத்துல விளையாடி இருக்காரு - மின்னஞ்சல் விடைகள் அனுப்பி இருக்காரு :-)
ReplyDelete1,வைணவதாசர்
ReplyDelete2,கந்தமாறன் மணிமேகலை
வந்தியத்தேவன் போன இடம் அனுராதபுரம்,
போலி சேந்தன் அமுதன்
கொன்றது நந்தினி
நந்தினி தப்பி ஓடியது ரவிதாசனிடமிருந்து.
இதெல்லாம் கூகிள்ள தேட நேரமில்லை ரவி.
நினைவுக்கு வந்ததைப் போட்டு இருக்கேன்.
வந்தியத் தேவனா நடிக்க எங்க சிங்கத்தை அனுப்பறேன்:))
1. ஈ) கிருஷ்ணன் ராமன்
ReplyDelete2. ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3. ஆ) அனுராதபுரம்
4 அ) மந்தாகினி தேவி
5. ஆ) மதுராந்தகத் தேவர்
6. இ) பெரிய பழுவேட்டரையர்
7. இ) பழுவேட்டரையர்
8. இ) விருத்தாச்சலம்
9. ஆ) ஈசான சிவபட்டர்
10. ஈ) வந்தியத் தேவன் = தலையை இல்லை, கையை...
வல்லியம்மா...
ReplyDeleteவந்தியத்தேவனா நடிக்க உங்க அன்புச்சிங்கம் அவர்களை அனுப்பறீங்களா? அச்சச்சோ! அவரைப் போட்டா போட்டி போட்டு பல பேர், மணிமேகலை, நந்தினி, குந்தவை-ன்னு சுத்தி வருவாங்களே பரவாயில்லையா? :-)))
உங்கள் 2 மட்டுமே சரி!
பொன்ஸ் அக்கா வந்து ஒரு கலக்கு கலக்கி இருக்காங்க!
ReplyDeleteபோதாக்குறைக்கு பொன்னம்மான்னு கேள்வியில் வேற ஒரு திருத்தம் செஞ்சிருக்காங்க!
மகுடம் சூட்டும் போது, இன்னொருவர் தலையைப் பிடிக்கவில்லையாம். கையைத் தான் பிடித்தார்களாம்! சரிக்கா...மாத்திடறோம்! நீங்களே குந்தவைப் பிராட்டி மாதிரி சொல்லிட்டீங்க! மறு பேச்சு உண்டா? :-)
உங்க 3 ஆம் கேள்வி தவிர எல்லாமே கரீட்டு! நீங்களும் 9/10!
நீங்கள் சொன்ன நகரமும் போவாங்க...ஆனால் அது அப்புறம்!:-)
1)இந்த அநிருத்தப் பிரம்மராயரின் இயற்பெயர் என்ன?
ReplyDeleteஈ)கிருஷ்ணன் ராமன்
2)ஆதித்த கரிகாலனின் நெருங்கிய நண்பர்கள் இருவர். அதில் ஒருவன் இவன். இவன் பெயர் என்ன? இவன் தங்கை தான் வந்தியத் தேவனை விரும்பினாள். ஆனால் இறுதியில் மாண்டாள். அவள் பெயர் என்ன?
ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3)பின்னர் இளவரசர் அருண்மொழி இருக்கும் நகரத்தை நோக்கிக் கிளம்பினான். எந்த நகரம்?
இ) மாதோட்டம்
4)சுந்தர சோழர் அடிக்கடி கனவில் கண்டு பயப்படும் ஊமை ராணியின் பெயர் என்ன?
அ) மந்தாகினி தேவி
5)இன்று தமிழ்மணத்தில் போலிகளின் பிரச்சனை இருப்பது போல பொன்னியின் செல்வன் -இலும் ஒரு போலி பாத்திரம் இருந்தது? அது யார்?
ஆ) மதுராந்தகத் தேவர
6)தீப்பொறி கண்களும் தொங்கும் மீசையுமாக மணியம் வரைந்த பெரிய பழுவேட்டரையர் பற்றிப் படித்திருக்கிறோம்.
அவரைக் கொன்றது யார்?
இ) பெரிய பழுவேட்டரையர்
7)நந்தினி மலைக்குகையில் யாரிடம் இருந்து தப்பி ஒடினாள்?
இ) பழுவேட்டரையர்
8)இதே போல் யாரோ பாடமாட்டேன் என்று சொன்னதால் தான் கிழவன் பழுவேட்டரையன் இளையவள் நந்தினியைப் பிடித்தானோ என்று, ஆதித்த கரிகாலன் கிண்டல் செய்வான்! அது எந்தத் தலம்?
இ) விருத்தாச்சலம்
9)ஆழ்வார்க்கடியான் செய்யும் அடிதடி வம்பு தும்புகள் எல்லாம் படிக்கும் போது ஒரே சிரிப்பாய் இருக்கும். ஆனால் அவன் தமையனார் (அண்ணா) ஒரு சிவ நெறிச் செல்வர்! சோழ தேசத்து ராஜகுருவாகவும் இருந்தவர். யார் தெரிகிறதா?
ஆ) ஈசான சிவபட்டர்
10)அவர் தலையை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது யார்?
ஈ) வந்தியத் தேவன்
கேள்விகள் மிகவும் சுலபமானவை... என்னை மாதிரியான ஆட்களுக்கு(சுமார் 50 முறையாவது பொ.செ படித்தாச்சி..)
சினிமாவாக எடுத்தால், நிச்சயம் நமக்கு பரிட்சயம் இல்லாத புது முகங்களை கதாபாத்திரத்திற்கு ஏற்றவாரு தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது... சினிமா கதாநாயகர்கள் யாரையும் யோசிக்கவே முடிவதில்லை... இதைப் பற்றி என் அம்மாவுடன் பெரிய விவாதமே நடக்கும்....
என் அம்மா, இந்த கதாபாத்திரத்திற்கு இவரைப் போடலாமா,அவரைப் போடலாமா என நிறைய பேரை சொல்லுவார்கள்.. நான் அனைவரையும் மறுப்பேன்... உதாரணமாக பொ.செ னாக கமல்.. வ்.தே னாக மாதவன்(அழகாக வழிவதால்..) குந்தவையாக மீனா( சரியா திட்டுவாங்கினாங்க என்னிடம்).. நந்தினியாக சினேகா... எதுவும் பிடிக்கல.... என்னால் ஒருத்தர மட்டும் ஏத்துக்க முடிந்தது சு.சோழனாக ஜமினிகனேசன்... மத்தபடி.... புதுமுகங்களே நன்று என்பதே என் எண்ணம்..
1 அ) அருண்மொழிப் பட்டன் ஆ)
ReplyDelete2 ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3 இ) மாதோட்டம்
4 அ) மந்தாகினி தேவி
5 ஆ) மதுராந்தகத் தேவர்
6 இ) பெரிய பழுவேட்டரையர்
7 இ) பழுவேட்டரையர்
8 இ) விருத்தாச்சலம்
9 ஆ) ஈசான சிவபட்டர்
10 ஈ) வந்தியத் தேவன்
// இதைப் படமாக எடுப்பது பற்றியெல்லாம் பலர் பேசினார்கள்! வந்தியத் தேவனா யாரு நடிக்கலாம்?
ReplyDeleteஎன்னைக் கேட்டா, எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பதிவரின் பெயரைத் தான் ரெக்கமண்டேஷன் செய்வேன்! //
ம்ம்ம்...என்னால ஊகிக்க முடியுது! அவந்தானா...அவந்தானா...நமீதன்தானே? ;)
// G.Ragavan said...
ReplyDeleteம்ம்ம்...என்னால ஊகிக்க முடியுது! அவந்தானா...அவந்தானா...நமீதன்தானே? ;)//
கிழிஞ்சுது போங்க!
நமீதனைப் போட்டாக்கா படம் முழுக்க வாய் விட்டுச் சிரிக்கக் கூடாதுன்னு கண்டிசன் வேற போடணுமே! வந்தியத் தேவன் அடிக்கடி நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிற பாத்திரமாச்சே! :-)
நீங்க இவ்வளவு பெரிய தியாகியாக இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சே ஜிரா! வர லட்சுமியை யாராச்சும் வேண்டான்னு சொல்லுவாங்களா? இப்பிடி தாரை வார்த்துக் கொடுக்கீங்களே! :-)
ஜிராவும் 9/10ஆ?
ReplyDeleteசூப்பரு!
ஜிரா...முதல் கேள்விக்கு மட்டும் தான் விடை தவறு! மற்றதெல்லாம் பின்னிட்டீங்க!
என் பதில்கள் கிடைத்ததா.. மார்க் சொல்லலியே
ReplyDeleteமோனா என்பவர் 10/10 ஜாக்பாட் அடிக்கிறாங்க பா! - சூப்பர்! வாழ்த்துக்கள் மோனா!
ReplyDeleteபரிசில் முடிவு வெளியிட்ட பின். இன்னும் யார் எல்லாம் சொல்லுறாங்க பார்ப்போம்!
மோனா சொல்வது என்னவென்றால்:
ReplyDeleteகேள்விகள் மிகவும் சுலபமானவை... என்னை மாதிரியான ஆட்களுக்கு(சுமார் 50 முறையாவது பொ.செ படித்தாச்சி..)
சினிமாவாக எடுத்தால், நிச்சயம் நமக்கு பரிட்சயம் இல்லாத புது முகங்களை கதாபாத்திரத்திற்கு ஏற்றவாரு தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது... சினிமா கதாநாயகர்கள் யாரையும் யோசிக்கவே முடிவதில்லை... இதைப் பற்றி என் அம்மாவுடன் பெரிய விவாதமே நடக்கும்....
என் அம்மா, இந்த கதாபாத்திரத்திற்கு இவரைப் போடலாமா,அவரைப் போடலாமா என நிறைய பேரை சொல்லுவார்கள்.. நான் அனைவரையும் மறுப்பேன்... உதாரணமாக பொ.செ னாக கமல்.. வ்.தே னாக மாதவன்(அழகாக வழிவதால்..) குந்தவையாக மீனா( சரியா திட்டுவாங்கினாங்க என்னிடம்).. நந்தினியாக சினேகா... எதுவும் பிடிக்கல.... என்னால் ஒருத்தர மட்டும் ஏத்துக்க முடிந்தது சு.சோழனாக ஜமினிகனேசன்... மத்தபடி.... புதுமுகங்களே நன்று என்பதே என் எண்ணம்..
1 ஈ) கிருஷ்ணன் ராமன்
ReplyDelete2 ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3 இ) மாதோட்டம்
4 அ) மந்தாகினி தேவி
5 ஆ) மதுராந்தகத் தேவர்
6 இ) பெரிய பழுவேட்டரையர
7 இ) பழுவேட்டரையர்
8 இ) விருத்தாச்சலம
9 ஆ) ஈசான சிவபட்டர
10 ஈ) வந்தியத் தேவன்
கேள்விகள் சுலபம் என்னை மாதிரியான ஆட்களுக்கு.. (50 முறை படித்தாச்சி...)
மற்றபடி பொ.செ படமாக எடுத்தால் புதிய முகங்களை, பாத்திரத்திற்கு ஏற்றவாரு தேர்வு செய்வது தான் சிறந்தது... என்னால் தேரிந்த முகங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
எனக்கும் அம்மாக்கும் வாக்குவாதமே நடக்கும்.. யாரை எந்த கதாபாத்திரத்தில் போடுவது என்று...
உதாரணமாக... பொ.செ னாக கமல்.. வ்.தே னாக மாதவன்(வழிவதால்).. குந்தவையாக மீனா( சரியா திட்டுவாங்கினாங்க என்னிடம்..), நந்தினியாக சினேகா.. வானதியாக அசின்... யாரையும் பிடிக்கல...
ஒன்றே ஒன்று தான் ஒத்துக்கொள்ளும் படியாக இருக்கும்.. சு.சோழனாராக ஜமினி...
புது முகங்களே நன்று
1. கிருஷ்ணன் ராமன் - இவரது மகன் பெயர்தான் அருண்மொழி பட்டன்
ReplyDelete2. கந்தமாறன் - மணிமேகலை
3. அனுராதபுரம்
4. மந்தாகினிதேவி
5. மதுராந்தகத் தேவர். இவர் பின்னர் வீரபாண்டியரின் வாரிசாக அறியப்படுகிறார். சின்ன பழுவேட்டரையரின் மருமகனும் கூட.
6. பெரிய பழுவேட்டரையர். அது ஒரு தற்கொலை
7. ரவிதாசன்
8. விருத்தாச்சலம்
9. ஈசான பட்டர்
10. வந்தியத் தேவன்
பெரிய பழுவேட்டையாராக நாசர் நன்றாக இருப்பார் என்பது என் எண்ணம்.
ReplyDelete3 இ) மாதோட்டம் ?
ReplyDelete//சு.சோழனாக ஜமினிகனேசன்..//
ReplyDeleteஇறைவனடி சேர்ந்தார்.
1 அ) அருண்மொழிப் பட்டன்
ReplyDelete2 ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3 இ) மாதோட்டம்
(இதைப் பற்றிக் குறிப்பிடுகையில் "மஞ்ஞை நடமிடு மாதோட்டம்" என்று திருஞானசம்பந்தர் உண்மையில் கடல்தாண்டி இலங்கை போகாமல் இங்கிருந்தே பார்த்து எழுதியதாக கிணற்றுத்தவளைப் பண்டிதர்கள் சொல்லுவது தவறு என்பதாக கல்கி எழுத்யிருப்பார்)
4 அ) மந்தாகினி தேவி
5 ஆ) மதுராந்தகத் தேவர்
6 அ) நந்தினி
7 இ) பழுவேட்டரையர்
8 இ) விருத்தாச்சலம்
9 ஆ) ஈசான சிவபட்டர்
10 ஆ) பூங்குழலி
வழ்க்கம்போல, பார்வையாளராக மட்டுமே. பொ.செ போட்டி வைப்பாங்க. படிச்சதே நினைவில் இல்லை.
ReplyDelete//சு.சோழனாக ஜமினிகனேசன்..
ReplyDeleteஇறைவனடி சேர்ந்தார்//
நான் இப்போதய நிலவரத்தில் சொல்லவில்லை.. பொதுவாக சொன்னேன்...
வைணவதாசன்
ReplyDelete2.கந்தமாறன்
3.அனுராதபுரம்
4.மந்தாகினி
5.மதுராந்தகத் தேவர்
6.பெரிய பழுவேட்டரையர் விட்டெறிந்த கட்டாரி அவரைக் கொன்றதாய்க் கடைசியில் அவரே சொல்லுவார். ஆனால் இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி! :)
7.சின்னப் பழுவேட்டரையர் படையுடன் சுத்திக் கொண்டதும் ரவிதாசனிடம் இருந்து தப்புவாள்.
8.திருமுதுகுன்றம் என்று சொல்லப் பட்ட விருத்தாசலம்.
9.ஈசான சிவ பட்டர்
10.வந்தியத் தேவன்,
நேத்து வெளியே போயிட்டதாலே வழக்கம்போல் :D தாமதம், அதுக்குள்ளே பரிசு போயிடுச்சே! :(((((((
ReplyDeleteபொன்ஸ் அக்கா மீண்டும் வந்து அந்த ஒரு கேள்விக்கும் சரியான விடை சொல்லி 10/10 வாங்கிட்டாங்கோவ்!
ReplyDeleteவாழ்த்துக்கள் பொன்ஸ்
ஜடாயு சார், வாங்க
ReplyDelete1,6,10 தவிர மற்ற எல்லாமே சரி!
ஞான சம்பந்தப் பெருமான் பற்றிய கல்கியின் குறிப்பு வேறு கொடுத்திருக்கீங்க! ஆனா இப்ப வெளியிட்டா ஆன்ஸர் பேப்பர் லீக் செஞ்சதா ஆயிடும்! So..வெயிட்டீஸ்!:-)
கீதாம்மா...வாங்க!
ReplyDelete1,3,7 தவிர எல்லாம் சரியே!
பெரிய பழுவேட்டரையர் மில்லியன் டாலர் கேள்வி அல்லவே!
ஆதித்த கரிகாலன் தான் மில்லியன் டாலர் கேள்வி! ஆளாளுக்கு "நான் தான் செஞ்சேன்" என்பார்கள்! :-)
I have studied ponniyin selvan long back. answers mostly enakku theriyala, but artists i can think of!
ReplyDeleteVanthiya Thevan - Vikram
Nandhini - Nameetha!
குந்தவை - Sneha
Poonguzhali - Meera Jasmin
Vanathi - Nila or Vedhika
Pazhuvettaiyar - Vinuchakravarthi
Azhvarkadiyan - Delhi Ganesh
Arul Mozhi Varman - Ajith
Karihalan - Pasupathi
Sundara chozhar - Jai Ganesh
Mathuranthakan - Vadivelu or Manoj
Manimekalai - Nandita
Chenthan Amuthan - Navdeep or Bharat
1. கிருஷ்ணன் ராமன்
ReplyDelete2. கந்தமாறன் - மணிமேகலை
3. அனுராதபுரம்
4. மந்தாகினி தேவி
5. மதுராந்தகத் தேவர்
6. பெரிய பழுவேட்டரையர்
7. பழுவேட்டரையர்
8. விருத்தாச்சலம்
9. ஈசான சிவபட்டர்
10.வந்தியத் தேவன்
1) கிருஷ்ணன் ராமன்
ReplyDelete2)ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3)ஆ) அனுராதபுரம்
4)அ) மந்தாகினி தேவி
5)இ) மதுராந்தக உத்தம சோழர்
6)இ) பெரிய பழுவேட்டரையர்
7)அ) ரவிதாசன்
8)அ) திருவையாறு
9)அ) திருநாரையூர் நம்பி
10)ஈ) வந்தியத் தேவன்
வாங்க ஜெயஸ்ரீ
ReplyDeleteஉங்க 3 ஆம் கேள்வி தவிர எல்லாமே கரீட்டு! நீங்களும் 9/10!
அட எல்லாருமே அந்த இலங்கைக் கேள்வியில் கன்பூஸ் ஆகறாங்கப்பா! :-)
அனிதா வருக!
ReplyDeleteஉங்க 1,2,4,6,10 கரெக்டுங்க!
1 இ) வைணவதாசர்
ReplyDelete2 ஆ) கந்தமாறன் - மணிமேகலை
3 ஆ) அனுராதபுரம்
4 அ) மந்தாகினி தேவி
5 ஆ) மதுராந்தகத் தேவர்
6 இ) பெரிய பழுவேட்டரையர்
7 இ) பழுவேட்டரையர்
8 அ) திருவையாறு
9 ஆ) ஈசான சிவபட்டர்
10 ஈ) வந்தியத் தேவன்
வாங்க அனானி...
ReplyDeleteபேர் சொல்லாட்டி எப்படி பரிசு கொடுக்கறது? :-)))
1,3,8 தவிர எல்லாமே சரி தானுங்க!
நான் பதில் சொல்லலாம்னு வந்தேன், எங்கக்காவே எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டதால நான் கலந்துக்கலை.
ReplyDeleteஅக்காவே பதில் சொல்றாங்கன்னு, கேள்விகள் ஈசியா இருந்திருக்கணும்.
கிர்ர்ர்ர்ர்ர்.
ரவி, பதில்கள் போட்ட மாதிரி ஞாபகம். வரவில்லையா உங்களுக்கு?
ReplyDeleteஏற்கெனவே போட்டிருந்தேன் என்று நினைக்கிறேன். மீண்டும் நினைவிலிருந்து
ReplyDelete1. கிருஷ்ணன் இராமன் - இவருடைய மகன் தான் அருண்மொழி பட்டன்
2. கந்தமாறன் - மணிமேகலை. கடம்பூர் சம்புவரையரின் வாரிசுகள்
3. அனுராதபுரம்
4. மந்தாகினிதேவி
5. மதுராந்தகத் தேவர் - இவர் பின்னர் வீரபாண்டியரின் வாரிசாக அறியப்படுகின்றார். சின்ன பழுவேட்டரையரின் மருமகனும் கூட.
6. பழுவேட்டரையர் - அது ஒரு தற்கொலை
7. ரவிதாசன்
8. விருத்தாசலம்
9. ஈசான பட்டர்
10. வந்தியத்தேவன்
//Sridhar Venkat said...
ReplyDeleteரவி, பதில்கள் போட்ட மாதிரி ஞாபகம். வரவில்லையா உங்களுக்கு?//
அச்சோ, Bloggerஇல் வந்து இருக்கு வெங்கட். நான் மின்னஞ்சல் வழியாத் தான் பின்னூட்டங்கள் பார்த்தேன்! எப்படி மிஸ் பண்னேன் தெரியலையே?
மன்னிக்கவும்!
3,7 தவிர எல்லாமே சரி!
அட நீங்களும் அந்த இலங்கைக் கேள்வியில் கன்பூஸ் ஆயிட்டீங்களா? :-)
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteகிழிஞ்சுது போங்க!
நமீதனைப் போட்டாக்கா படம் முழுக்க வாய் விட்டுச் சிரிக்கக் கூடாதுன்னு கண்டிசன் வேற போடணுமே! வந்தியத் தேவன் அடிக்கடி நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிற பாத்திரமாச்சே! :-) //
ஹா ஹா ஹா அது உண்மைதான். பேசாம நமீதனை மதுராந்தகனாக்கீரலாம். அழகுக்கு அழகு அப்படியொரு பொருத்தம். :)
// நீங்க இவ்வளவு பெரிய தியாகியாக இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாமப் போச்சே ஜிரா! வர லட்சுமியை யாராச்சும் வேண்டான்னு சொல்லுவாங்களா? இப்பிடி தாரை வார்த்துக் கொடுக்கீங்களே! :-) //
ஓ எனக்கா..எனக்கா...எனக்கே எனக்கா...நம்ப முடியவில்லை. இல்லை...இல்லை........
பாவம் வந்தி
1. வைணவதாசர்
ReplyDelete2. கந்தமாறன் - மணிமேகலை
3. மாதோட்டம்
4. மந்தாங்கினி தேவி
5. மதுராந்தக தேவர் (மதுராந்தக உத்தம சோழர் என்ற பெயர், அவருக்கு கடைசியில் தான் கிடைத்தது.உண்மையான இளவரசன்
சேந்தன் அமுதன்).
6. பெரிய பழுவேட்டையர் (தற்கொலை செய்துக்கொண்டார்)
7.பாண்டிய ஆபத்துதவிகள் ( ஆனால் அங்கு பெரிய பழுவேட்டரையரும் இருந்தார்)
8.திருவையாரு.
9. ஈசான சிவபட்டர்
10.வந்தியத்தேவன்
வாங்க அன்புத்தோழி!
ReplyDelete1,7,8 தவிர அனைத்தும் சரி!
//CVR said...
ReplyDeleteபடிச்சு ரொம்ப நாள் ஆகிப்போச்சு !!
இந்த புதிர்ப்பதிவின் விடைப்பதிவை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்!! :-)//
நோக்குங்க நோக்குங்க CVR அண்ணா!
//†hµrgåh said...
ஒரு 3 மாதம் வரைக்கும் இதை வைச்சு இருங்க.புத்தகத்தைப் படிச்சுட்டு பதில் சொல்லுறேன் அண்ணா//
ஆகா...மூனு மாசம் என்னை வேறு எந்தப் பதிவும் எழுத வேணாம்னு ஒரு திட்டத்தோட தான் வந்து கீறீங்க துர்கா! :-))))
//வெங்கட்ராமன் said...
ReplyDeleteபெரிய பழுவேட்டையாராக நாசர் நன்றாக இருப்பார் என்பது என் எண்ணம்//
ஹூம்; நல்ல தேர்வு!
கீழே ஆனந்த் ஒரு லிஸ்டே கொடுத்துருக்கார் பாருங்க! :-)
//பத்மா அர்விந்த் said...
வழ்க்கம்போல, பார்வையாளராக மட்டுமே. பொ.செ போட்டி வைப்பாங்க. படிச்சதே நினைவில் இல்லை//
எனக்கும் நிறைய மறந்து போச்சுங்க பத்மா! இன்னொரு முறை படிக்கணும்!
சாருப்ரபா பப்ளிகேஷன்ஸ் பாக்கெட் சைஸ் புத்தகம் போட்டிருக்காங்க...மொத்தம் 11 பாக்கெட் சைஸ் புத்தகங்கள்!
தினமும் பேருந்தில் படித்துக் கொண்டே செல்ல எண்ணம்!
//கீதா சாம்பசிவம் said...
நேத்து வெளியே போயிட்டதாலே வழக்கம்போல் :D தாமதம், அதுக்குள்ளே பரிசு போயிடுச்சே! :((((((( //
பரிசு போகலை கீதாம்மா! போட்டி முடியும் வரை சொல்லலாமே! ஒன்றுக்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் உண்டு!
//மோகன்தாஸ் said...
நான் பதில் சொல்லலாம்னு வந்தேன், எங்கக்காவே எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டதால நான் கலந்துக்கலை//
ஆகா..என்னங்க மோகன்தாஸ் இது...ஆனா அக்காவுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல! பாருங்க பரிசை உங்களால் அவுங்க இழக்கறாங்க! :-)
//Ananth said...
ReplyDeleteVanthiya Thevan - Vikram
Nandhini - Nameetha!
குந்தவை - Sneha
Arul Mozhi Varman - Ajith
Mathuranthakan - Vadivelu or Manoj
//
ஆனந்த்...உங்களுக்குக் குறும்பு ஜாஸ்திங்க! நந்தினி வேடத்துக்கு நமீதா-வா? ஐயகோ!!! :-)
ஜிரா - பாத்தீங்களா? நமீதாவின் புகழ் திக்கெட்டும் பறக்குது!
நல்ல காலம் - செம்பியன் மாதேவிக்கு யாரும் குஷ்புவைச் சொல்லலை! :-)
கண்ணா(அப்பிடி கூப்பிடலாம்ல?)
ReplyDeleteஇன்னும் வடை(சாரி விடை) இன்னும் போடலை அதனால, என்னையும் ஆட்டைக்கு சேத்துக்குவிங்கதானே..
1) அருண்மொழிப் பட்டன்
2)கந்தமாறன் - மணிமேகலை
3) மாதோட்டம்
4) மந்தாகினி தேவி
5) மதுராந்தகத் தேவர்
6) பெரிய பழுவேட்டரையர்
7) பழுவேட்டரையர்
8)விருத்தாச்சலம்
9)ஈசான சிவபட்டர்
10) வந்தியத் தேவன்
சத்தியா...வாங்க வாங்க...வடை இன்னும் கொஞ்ச நேரத்துல போடலாம்னு இருந்தேன்...
ReplyDeleteஅதுக்குள்ளாற சைக்கிள் கேப்பில் வந்து, சாண்ட்ரோ ஓட்டறீங்களே! சூப்பர்! :-)
1 கேள்வி தவிர மற்ற எல்லாத்துக்கும் உங்க விடை சரியே! அருமை! அருமை!
3. மாதோட்டம்
ReplyDeleteமத்த எத வேணும்னாலும் ஒத்துக்குவேன் ஆனா
ReplyDeleteAzhvarkadiyan - Delhi Ganesh..
அய்யா ஆனந்த உங்க கிண்டலுக்கு அளவேயில்லையா..
1.இந்த அநிருத்தப் பிரம்மராயரின் இயற்பெயர் என்ன?
ReplyDeleteகிருஷ்ணன் ராமன் என்பது தான் சரி!
அருண்மொழிப்பட்டன் அவர் மகன்
வைணவதாசன் அவர் ஒற்றன்
ரொம்ப நன்றி ரவி.
ReplyDelete1 ம், 3ம் சும்மா guess work தான். உறுதியாத் தெரியாது.
இந்தப் பாத்திரங்களை நினைவு கூர்வதே மிக இனிமையான அனுபவமாக இருந்தது.
நன்றி.
This comment has been removed by the author.
ReplyDelete//2. ஆதித்த கரிகாலனின் நெருங்கிய நண்பர்கள் இருவர். அதில் ஒருவன் இவன். இவன் பெயர் என்ன?//
ReplyDeleteகந்தமாறன். வந்தியத்தேவன் தன்னை முதுகில் கத்தியால் குத்தி விட்டதாக எண்ணி அவனிடம் சிறிது காலம் பகைமை பாராட்டுவான்!
//இவன் தங்கை தான் வந்தியத் தேவனை விரும்பினாள். ஆனால் இறுதியில் மாண்டாள். அவள் பெயர் என்ன?//
மணிமேகலை. இவள் தான் வந்தியத்தேவனின் முதல் காதல். ஆனால் கந்தமாறன் குறுக்கே நின்றதால் வந்தியத்தேவன் விலகிக் கொள்ள...மணிமேகலையோ இறுதியில் சித்தம் கலங்கி....கதையின் கடைசித் தொடரில் உயிர் துறக்கிறாள்!
3. இலங்கையில் முதன் முதலாக, பூங்குழலியின் உதவியோடு, நாகத் தீவில் இறங்கினான் வந்தியத்தேவன்.
ReplyDeleteபின்னர் இளவரசர் அருண்மொழி இருக்கும் நகரத்தை நோக்கிக் கிளம்பினான். எந்த நகரம்?
பலரும் அனுராதபுரம் என்று சொல்லி உள்ளார்கள்! மாதோட்டம் என்பதே சரி!
பூதத் தீவில் இருந்து மாதோட்டம் தான் முதலில் செல்வான் வந்தியத்தேவன். அங்கே பூதி விக்ரம கேசரி காவலில் வைத்து விடுவார்!
அங்கிருந்து தப்பித்து, காட்டு வழியில் யானைப்பாகனாக இருக்கும் இளவரசரைச் சந்திப்பான். பின்னரே அனைவரும் அனுராதபுரம் செல்வார்கள்.
4. சுந்தர சோழர் அடிக்கடி கனவில் கண்டு பயப்படும் ஊமை ராணியின் பெயர் என்ன?
ReplyDeleteமந்தாகினி தேவி - பலரும் சரியாகச் சொல்லியுள்ளார்கள்
அருண்மொழியைப் பல இடங்களில், இலங்கையில் கூட காப்பவள். இறுதியில் தஞ்சை அரண்மனையில் சுந்தரசோழருக்கு வந்த காட்டாரியைத் தான் ஏற்றுக் கொண்டு உயிர் துறக்கிறாள்!
5. இன்று தமிழ்மணத்தில் போலிகளின் பிரச்சனை இருப்பது போல பொன்னியின் செல்வன் -இலும் ஒரு போலி பாத்திரம் இருந்தது? - ஒரு போலி இளவரசனாய் வலம் வரும் அவர் யார்?
ReplyDeleteமதுராந்தகத் தேவர் என்பதே சரி! - கதையின் குழப்பமே இவர் தான். இவருக்கு முடி சூட்டத் தான் சதி ஆலோசனை எல்லாம்!
சிவ பக்தராய் இருந்து, கடைசியில் கேட்பார் பேச்சைக் கேட்டு, சிம்மாசன ஆசை/வெறி வந்து விடுகிறது இவருக்கு!
கடைசியில் பார்த்தால்....இவர் செம்பியன் மாதேவியின் வளர்ப்பு மகன்.
உண்மையான மகன்/வாரிசு - சேந்தன் அமுதன்! இவருடைய பட்டப் பெயர் தான் மதுராந்தக உத்தம சோழர்!
உண்மையான மதுராந்தகர் இவரே!
6. தீப்பொறி கண்களும் தொங்கும் மீசையுமாக மணியம் வரைந்த பெரிய பழுவேட்டரையர் பற்றிப் படித்திருக்கிறோம்.
ReplyDeleteஅவரைக் கொன்றது யார்?
இவர் செய்து கொள்வது தற்கொலை! அதனால் சரியான பதில் பெரிய பழுவேட்டரையர் என்னும் இவரே தான்!
இடும்பன் காரியின் கத்தியை கரிகாலர் மேல் வீசியது தான் தான் என்று பெரிய பழுவேட்டரையர் சொன்னதும் சின்னப்பழுவேட்டரையர், துரோகி என்று கத்தியை ஓங்குகிறார்.
ஆனால் தடுத்து விடுகிறார்கள்!
அதற்குள் பெரியவரே, திருகுக் கத்தியால் தம்மைத் தாமே குத்திக் கொள்கிறார். அருண்மொழி தடுக்க ஓடி வருவதற்குள் இது நடந்து விடுகிறது!
7. மாய மோகினி, எவரையும் கவரும் வல்லமை கொண்டவள், பேரழகி, சாகசக்காரி....நம்ம நந்தினி, கதையின் கடைசியில் என்ன ஆனாள்?...... தப்பி ஓடினாள்.
ReplyDeleteஅவள் மலைக்குகையில் யாரிடம் இருந்து தப்பி ஒடினாள்?
பாண்டிய ஆபத்துதவிகள், ரவிதாசன் எல்லாரும் அவளுக்கு முன்னரே தப்பி, மலை மீது ஏறி விடுவார்கள்!
நந்தினி மட்டும் தலை விரி கோலமாக, தன் தாய் மந்தாகினி தேவியின் கொலை பற்றி எண்ணி அழுதிருக்க, பழுவேட்டரையர் அவளை நெருங்கும் போது, அவரிடம் இருந்து தப்பி, குதிரை மேல் ஏறி ஓடி விடுகிறாள்!
பெரிய பழுவேட்டரையரும் அவளைப் பின் தொடர வேண்டாம், விட்டு விடுங்கள் என்று சொல்லி விடுகிறார்!
//8
ReplyDeleteகல்கி, தம் புதினத்தின் நடுநடுவே சைவ, வைணவ, பெளத்த ஆலயங்கள் பற்றிக் குறிப்புகள் பலவற்றைக் கொடுப்பார். கிழவன் சிவனார், கிழவி உமையவளை நான் பாட மாட்டேன் என்று சுந்தரர் கோபித்துக் கொண்டு போன தலம் பற்றி ஒரு குறிப்பு வரும்! பின்னர் உமையவளை மட்டும் இளையவளாக பிரதிட்டை செய்வார்கள். சுந்தரர் வந்து பாடுவார்!
இதே போல் யாரோ பாடமாட்டேன் என்று சொன்னதால் தான் கிழவன் பழுவேட்டரையன் இளையவள் நந்தினியைப் பிடித்தானோ என்று, ஆதித்த கரிகாலன் கிண்டல் செய்வான்! அது எந்தத் தலம்? //
விருத்தாசலம் என்பதே சரி!
திருமுதுகுன்றம் என்பது பெயர்!
இறைவன் பெயர் விருத்தகிரீஸ்வரர்!
விருத்தம் என்றால் முதுமை என்று பொருள். அம்பிகையின் பெயரும் விருத்தகிரீஸ்வரி என்று இருந்ததால், சுந்தரர் ஆலயத்தாரிடம் கோபித்துக் கொண்டாராம்!
பின்னைப் புதுமைக்கும் நாயகனான ஈசனை வயதானவர் என்று சொன்னதால் கோபம்! அதன் பின் அவர் கோபத்தைத் தணித்து, பதிகப் பாடலைப் பெற வேண்டி, ஆலயத்தார், பாலாம்பிகை என்று இளைய இறைவியை எழுந்தருளப் பண்ணினர். சுந்தரரும் பாடினார் என்று கல்கி குறிப்பிடுகிறார்!
9. ஆழ்வார்க்கடியான் செய்யும் அடிதடி வம்பு தும்புகள் எல்லாம் படிக்கும் போது ஒரே சிரிப்பாய் இருக்கும். ஆனால் அவன் தமையனார் (அண்ணா) ஒரு சிவ நெறிச் செல்வர்! சோழ தேசத்து ராஜகுருவாகவும் இருந்தவர். யார் தெரிகிறதா?
ReplyDeleteஈசான சிவ பட்டர் என்பதே சரி!
ஆழ்வார்க்கடியான் செய்யும் சில செயல்கள் சிவ நிந்தனை ஆக இருப்பதால், இவர் மிகவும் வருத்தப்பட்டு பேசுவார்! ஈசான சிவ பட்டரின் மனைவி தான், மைத்துனனுக்குப் பரிந்து பேசி அவனை ராமேஸ்வரம் அனுப்பலாம் என்று சொல்வாள்!
வந்தியத்தேவனை அழைத்துப் போய் குந்தவையை முதல் முதலில் சந்திக்க ஏற்பாடு செய்வதும் ஈசான சிவ பட்டர் தான்!
10. கதையின் கடைசியில் சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்! அருண்மொழி தானே பட்டமேறப் போவதாகப் பிரகடனம் செய்து விட்டு, திடீர் என்று விழாவில், மகுடத்தை சேந்தன் அமுதன் தலையில் அருண்மொழியே சூட்டி விடுகிறார். அப்போது சேந்தன் அமுதன் மறுப்பேதும் சொல்லாமல் இருக்க, அவர் தோள்களை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது யார்?
ReplyDeleteசாட்சாத் வாணர் குல வீரர், வந்தியத்தேவர் தான்!
நீங்களே வாசியுங்க!
இவ்விதம் பொன்னியின் செல்வர் சொல்லிக் கொண்டே சக்கரவர்த்தியின் மறுபக்கத்தில் வீற்றிருந்த மதுராந்தகரின் அருகிலே சென்று அவர் சிரசில் கிரீடத்தை வைத்தார். மகுடத்தை வைக்குங்கால் மதுராந்தகர் அதைத் தடுக்காமலிருக்கும் பொருட்டு வந்தியத்தேவன் முன் ஜாக்கிரதையாக அவர் பின்னால் நின்று அவருடைய தோள்கள் இரண்டையும் நட்புரிமையுடன் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். ஆனால் மதுராந்தகரோ அப்படி ஒன்றும் செய்ய முயலவில்லை. அவர் மெய்மறந்து தன் வசமிழந்து உண்மையிலேயே பித்துப்பிடித்தவர் போல் நாலுபுறமும் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மணி மகுடத்தைச் சூட்டியதும் பொன்னியின் செல்வர் "கோப்பரகேசரி மதுராந்தக உத்தமச் சோழ தேவர் வாழ்க!" என்று முழங்கினார்.
KRS,
ReplyDeleteபத்து கேள்விக்கும் பதில் விளக்கம் போட்ட பின்னாலும், நீங்க இன்னுமொரு முறை பொ.செ படிக்கணும்னா சொல்றீங்க?
தாஸ், அந்த மோனான்னு வந்து சொல்லிருக்காங்களே, அவங்க தான் உங்க அக்காவா? ;)
//தாஸ், அந்த மோனான்னு வந்து சொல்லிருக்காங்களே, அவங்க தான் உங்க அக்காவா? ;)
ReplyDeleteநீங்க மட்டும் தான் சரியா புரிந்துகொண்டீர்கள்
இப்படி ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருப்பது எனக்குச் சொல்லித்தான் தெரியும்.
ReplyDeleteஆமாம் மோனா என்ற பெயரில் அநானிமஸ் பின்னூட்டம் போட்டது எங்கக்கா தான். நான் போட்டேன்னு சந்தேகப்படாதீங்க பெருமையெல்லாம் அக்காவுக்கு போக வைக்கிற அளவுக்கு நான் நல்லவன் கிடையாது.
பொன்ஸ் சரியாய் புரிந்து கொண்டதற்கு நன்றிகள்.
//ஆகா..என்னங்க மோகன்தாஸ் இது...ஆனா அக்காவுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல! பாருங்க பரிசை உங்களால் அவுங்க இழக்கறாங்க! :-)//
KRS, இணைய உலகில் எனக்கு நிறைய அக்காக்கள் உண்டுதான் மறுப்பதற்கில்லை, இது கூட பிறந்த தொந்தரவு(அக்கா). கண்டுக்காதீங்க.
பொதுவா படிச்சிட்டு போயிருவாங்க, பொன்னியின் செல்வன் அப்படின்னதும் கை சும்மாயிருக்காம பின்னூட்டம் போட்டிருப்பாங்க. ;)
நல்லதொரு போட்டிக்கு நன்றி!
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
objective answers கொடுத்து விடை தவறென்றால் மறு வாய்ப்பும் கொடுத்தால் மிகவும் சுலபமாகி விடுமே. இல்லையா? :-)) (தப்பா எடுத்துக்காதீங்க... just an opinion :-) )
சரி உங்களுக்கு சில கேள்விகள்... கூகுளிடாமல் சொல்லுங்களேன் -
ReplyDeleteஅ) பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட புதினம் எது? ஒன்றிற்க்கு மேற்பட்ட பதில்கள் தெரிந்தால் காலக் கிரமப்படி (கதை நடக்கும்) சொல்லுங்களேன்...
ஆ) பாலகுமாரன் எழுதிய 'உடையார்' பொன்னியின் செல்வனின் சில சரித்திர தகவல்களை மறுக்கிறது. அதில் மிக முக்கியமான ஒரு சரித்திர சான்று என்ன?
இ) மந்தாகினி தேவியும் சுந்தர சோழரும் சந்தித்த தீவின் பெயர் என்ன?
ஈ) சோழர் வம்சத்தில் 'சிறிய குந்தவை பிராட்டி' என்றழக்கப் படுகிறவர் யார்?
உ) பிற்பாடு அருண்மொழிவர்மனின் அரசவையில் வந்தியத்தேவன் என்ன பதவி வகிக்கிறார்?
:-)) சும்மா தோணின கேள்வியெல்லாம் கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.
// Sridhar Venkat said...
ReplyDeleteநல்லதொரு போட்டிக்கு நன்றி!
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
objective answers கொடுத்து விடை தவறென்றால் மறு வாய்ப்பும் கொடுத்தால் மிகவும் சுலபமாகி விடுமே. இல்லையா? :-)) (தப்பா எடுத்துக்காதீங்க... just an opinion :-)//
வாங்க ஸ்ரீதர்
ச்ச்சும்மா தான்...மக்கள் enthu வாப் பதில் சொல்லுறாங்களே...அதுக்குத் தான் 2nd attempt! அதுக்கு மேல் allowed இல்லை! அப்பறம் ஒவ்வொரு கேள்விக்கும் பத்து சாய்ஸ் அல்லவா கொடுக்க வேண்டி வரும்! :-)))
என்ஜாய்!
//Sridhar Venkat said...
ReplyDeleteசரி உங்களுக்கு சில கேள்விகள்... கூகுளிடாமல் சொல்லுங்களேன்//
ஆகா...இது என்ன பாட்டுக்குப் பாட்டு மாதிரி போட்டிக்கே போட்டியா? :-)
சரி ட்ரை பண்ணறேன்!
பரிசு கிடைச்சா எனக்குக் கொடுங்க!
வேறு ஏதாவது கிடைச்சா?....வேறு ஆளை அனுப்பி வைக்கிறேன்!
யார் அங்கே? வெட்டிப்பயல் ஊருக்குத் திரும்பி வந்துட்டாரா? :-)
அ) பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட புதினம் எது? ஒன்றிற்க்கு மேற்பட்ட பதில்கள் தெரிந்தால் காலக் கிரமப்படி (கதை நடக்கும்) சொல்லுங்களேன்...
ReplyDeleteநந்திபுரத்து நாயகி - விக்ரமன் எழுதியது
உடையார் by பாலகுமாரன்.
அப்பறம் அண்மையில் கந்தமாறனை முன்னிறுத்தி ஒரு புதினம் வந்துருக்காம்...என்னன்னு விசாரிக்கணும்!
ஆ) பாலகுமாரன் எழுதிய 'உடையார்' பொன்னியின் செல்வனின் சில சரித்திர தகவல்களை மறுக்கிறது. அதில் மிக முக்கியமான ஒரு சரித்திர சான்று என்ன?
சரியாத் தெரியலீங்களே!
கரிகாலனைக் கொலை செய்தது யார் என்பதையா?
உடையார் இன்னும் முழுக்க படிக்கல! முதல் இரண்டு பாகங்களுக்கு அப்புறம் அப்படியே நிறுத்தி விட்டேன். கல்கியின் நடை போல் இல்லாததால் போலும்....மற்ற பாகங்களையும் படித்து முடிக்க வேண்டும்!
இ) மந்தாகினி தேவியும் சுந்தர சோழரும் சந்தித்த தீவின் பெயர் என்ன?
பூதத் தீவு
ஈ) சோழர் வம்சத்தில் 'சிறிய குந்தவை பிராட்டி' என்றழக்கப் படுகிறவர் யார்?
ராஜராஜத் தேவரின் மகள்...
கீழைச்சாளுக்கிய விமாலாதித்தனின் மனைவி
உ) பிற்பாடு அருண்மொழிவர்மனின் அரசவையில் வந்தியத்தேவன் என்ன பதவி வகிக்கிறார்?
தனாதிகாரி-பின்னர் வல்லத்து அரசர்
//சும்மா தோணின கேள்வியெல்லாம் கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க//
தாராளமாக் கேளுங்க ஸ்ரீதர்! இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு! :-)
எல்லாம் சரி...என் பரிசு எங்கே?
சும்மா கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க :-)))
//அ) நந்திபுரத்து நாயகி - விக்ரமன் எழுதியது
ReplyDeleteஉடையார் by பாலகுமாரன்.
அப்பறம் அண்மையில் கந்தமாறனை முன்னிறுத்தி ஒரு புதினம் வந்துருக்காம்...என்னன்னு விசாரிக்கணும்!
//
நந்திபுரத்து நாயகி மிகச் சரியான பதில். வேங்கையின் மைந்தன் என்ற 'அகிலன்' எழுதிய நாவலையும் இந்த கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். அது இராஜேந்திரச் சோழன் இலங்கைக்கு சென்று பாண்டியர் மணிமகுடத்தையும் இரத்தின ஹாரத்தையும் கைப்பற்றிக் கொண்டு வருவதை பற்றி இருக்கும். வந்தியத்தேவர் குந்தவை தேவி போன்ற எல்லா பாத்திரங்களும் இருக்கும். வந்தியத்தேவரின் பாத்திரத்தை பொன்னியின் செல்வன் தொடர்ச்சியாகவே அகிலன் எடுத்து சென்றிருப்பார்.
ஆ) கரிகாலனைக் கொலை செய்தது யார் என்பதையா?
//
அதுவேதான். உடையாரில் ஆதித்த கரிகாலனை கொன்றதாக செம்பியம் மாதேவி குற்றம் சாட்டப்படுகிறார். பாண்டிய ஆபத்துவதிகள் கேரள மந்திரவாதிகளாக சொல்லப்படுகிறார்கள் மிகப்பெரும் contradiction. அதற்கு பாலகுமாரன் சரித்திர சான்றுகளும் அளிக்கின்றார்.
//
இ) பூதத் தீவு
//
சரியான விடை. நல்லா ரொமாண்டிக்கான பகுதி இது :-) சுந்தர சோழர் என்ற பெயருக்கு ஏற்றவாறு மணியம், மணியம் செல்வனின் படங்கள் மிக அழகாக இருக்கும்.
//
ஈ) சோழர் வம்சத்தில் 'சிறிய குந்தவை பிராட்டி' என்றழக்கப் படுகிறவர் யார்?
ராஜராஜத் தேவரின் மகள்...
கீழைச்சாளுக்கிய விமாலாதித்தனின் மனைவி
//
சரியான விடை. இவர்களின் புதல்வந்தான் பிற்பாடு சோழவம்சத்தை ஆளும் முதலாம் குலோத்துங்கன்.
உ) பிற்பாடு அருண்மொழிவர்மனின் அரசவையில் வந்தியத்தேவன் என்ன பதவி வகிக்கிறார்?
//
தனாதிகாரி-பின்னர் வல்லத்து அரசர்
//
தவறு. சோழ தேசத்து மாதண்ட நாயகர். அவர் எப்பொழுதுமே வல்லத்து அரசர்தானே. அருன்மொழிவர்மனை சந்திக்கும் பொழுதும், பழையாறை சிறையில் குந்தவையை சந்திக்கும் பொழுதும் கூட வல்லத்து அரசரின் பெருமையை பற்றி பாடிதானே சொ.செ.சூ. வைத்துக் கொள்கிறார். அந்த பாடல் நினைவிருக்கிறதா?
பரிசு அந்த பாடல்தான் :-)
என் கவிகை என் சிவிகை
என் கவசம் என்துவசம்
என்கரி யீ(து) என்பரி யீது என்பரே -
மன்கவன மாவேந்தன்
வாணன் வரிசைப் பரிசு
பெற்ற பாவேந்தரை, வேந்தர் பார்த்து!
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல!
அட.. லிஸ்டில நம்ம பேரும் இருக்கு.. :-))))))
ReplyDeleteஸ்ரீதர்
ReplyDelete__/\__!
அன்புள்ள ரவி,
ReplyDeleteஇன்றுதான் உங்கள் பதிவினைப் பார்த்தேன். பொன்னியின் செல்வனை ரசியாதோர் யாரோ?
பொன்னியின் செல்வன் பெயரில் ஒரு யாஹூ குழுமம் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. அந்தக் குழுமத்தில் அடியேனும் ஒரு உறுப்பினன் என்பதில் எனக்குப் பெருமை. பொன்னியின் செல்வனின் பெருமை மிகச் சிறப்பாகப் பேசப்படுகிற குழுமத்தில் உறுப்பினராக உங்களையும், பின்னூட்டமிட்ட அன்பர்களையும் அழைக்கிறேன். சரித்திரம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கு http://groups.yahoo.com/group/ponniyinselvan/
பதில்களும் கிடைக்கும்.
அன்புடன்
திவாகர்.
//ஸ்ரீதர்
ReplyDelete__/\__!
//
போதும் நிப்பாட்டிக்குவோம்னு சொல்ல வர்றீங்களா? ரைட்டேய்! :-))
தல, உங்கள் மெயின் பதிவுலக URL எது?
ReplyDeleteபொன்னியின் செல்வன்... சொன்னா மாதிரி.. பேசிக்கிட்டே.. பதிவிட்டுகிட்டே போகலாம்.
ReplyDeleteபடிச்சு தூங்கினா ராத்திரி கனவுல குதிரை ஓடும்..
//பொன்ஸ்~~Poorna said...
ReplyDeleteKRS,
பத்து கேள்விக்கும் பதில் விளக்கம் போட்ட பின்னாலும், நீங்க இன்னுமொரு முறை பொ.செ படிக்கணும்னா சொல்றீங்க? //
ஆமாங்க!
ஸ்ரீதர் கேட்ட கேள்விக்கு, மாதண்ட நாயகர் வந்தியத்தேவனை மறந்து போச்சே!
இன்னுமொரு முறை பொ.செ படிக்கணும்! :-)
காலை எழுந்தவுடன் (Bus-இல்)படிப்பு! :-)
ரவி,
ReplyDeleteஉங்களை சின்ன வேலை 8க்கு அழைக்கிறேன்.
பதிவைப் பார்க்கு மாறு வேண்டுகிறேன்.நன்றி.
//மோகன்தாஸ் said...
ReplyDeleteஆமாம் மோனா என்ற பெயரில் அநானிமஸ் பின்னூட்டம் போட்டது எங்கக்கா தான். நான் போட்டேன்னு சந்தேகப்படாதீங்க பெருமையெல்லாம் அக்காவுக்கு போக வைக்கிற அளவுக்கு நான் நல்லவன் கிடையாது//
மோகன்தாஸ், மோனா-ன்னு ஒரே ரைமிங்கா வந்துச்சா...அதேன் குழப்பம் :-)
இப்ப தெளிஞ்சிடிச்சிங்க மோகன்தாஸ்! :-)
///பரிசு அந்த பாடல்தான் :-)
ReplyDeleteஎன் கவிகை என் சிவிகை
என் கவசம் என் துவசம்
என்கரி யீ(து) என்பரி யீது என்பரே -
மன்கவன மாவேந்தன்
வாணன் வரிசைப் பரிசு
பெற்ற பாவேந்தரை, வேந்தர் பார்த்து!//
ஸ்ரீதர் கலக்கிட்டீங்க!
பரிசுக்கு நன்றி!
ஆத்தா நான் பாசாயிட்டேன்! (BOSS இல்லை Pass! :-)
4/5 - ஸ்ரீதர் வைத்த தேர்வில்!
//மனதின் ஓசை said...
ReplyDeleteஅட.. லிஸ்டில நம்ம பேரும் இருக்கு.. :-))))))//
அட என்னங்க!
தலைவர் படத்தை profileஇல் போட்டிருக்கீங்க! உங்கள எப்படி விட முடியும்!
தலைவருக்கு எந்தப் பாத்திரம் பொருந்தி வரும், பொன்னியின் செல்வனில்...? சொல்லுங்க பார்ப்போம்!
//பொன்ஸ்~~Poorna said...
ReplyDeleteஸ்ரீதர்
__/\__! //
பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் கும்பிடு மாதிரி தான் இருக்கு! :_)
ReplyDelete//DHIVAKAR said...
அன்புள்ள ரவி,
பொன்னியின் செல்வன் பெயரில் ஒரு யாஹூ குழுமம் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது//
ஆமாங்க திவாகர் சார்!
பார்த்தேன்! உறுப்பினர் ஆகியும் விட்டேன்!
கதாபாத்திரங்களின் அத்தனை படமும் உள்ளது! சூப்பர்!
மேலும் மணியம் வரைந்த b/w படங்கள் கண்டு மலைத்துப் போனேன்!
//சரித்திரம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கு http://groups.yahoo.com/group/ponniyinselvan/
பதில்களும் கிடைக்கும்//
வரலாறு.காம் அவர்களுடன் இணைந்து பல அரிய/நல்ல தகவல்கள் தருகிறார்கள் என்று நினைக்கிறேன்!
நானும் இந்த yahoo groupஐ நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்!
//Sridhar Venkat said...
ReplyDeleteபோதும் நிப்பாட்டிக்குவோம்னு சொல்ல வர்றீங்களா? ரைட்டேய்! :-))//
சேச்சே...பொன்ஸ் அக்கா அப்படி சொல்லலை! போட்டிக்குள் ஒரு போட்டி வைத்து, அதுவும் நம்ம வந்தி கவிதையைப் பரிசாக் கொடுத்தீங்கல்ல....அதான் உங்களுக்குப் பெரிய சலாம் போட்டார்! :-)
//Dreamzz said...
ReplyDeleteதல, உங்கள் மெயின் பதிவுலக URL எது?//
Dreamzz வாங்க!
மாதவிப் பந்தல் தான் மெயின்!
http://madhavipanthal.blogspot.com/
ஏங்க, அங்க இங்கன்னு பாத்து ரொம்ம்ப கன்ப்யூஸ் ஆயிட்டீங்களா? சாரி! நான் பல இடங்களில் கடை விரித்து விட்டேன்! என்ன செய்ய! :-)
ஆனா..சிம்பிள்
CVR எங்க இருக்காரோ, அங்க நானும் இருப்பேன்! :-))))
//Dreamzz said...
ReplyDeleteபொன்னியின் செல்வன்... சொன்னா மாதிரி.. பேசிக்கிட்டே.. பதிவிட்டுகிட்டே போகலாம்.
படிச்சு தூங்கினா ராத்திரி கனவுல குதிரை ஓடும்..//
என்னாது...தூக்கத்துல நடக்கற வியாதி கேள்விப்பட்டிருக்கேன்!
இது என்ன புதுசா குதிரை ஓட்டும் வியாதி? :-)
Dreamzzz க்கே கனவா? :-)
அன்பு ரவி,
ReplyDeleteஎன் அழைப்பை ஏற்றமைக்கு நன்றி மகிழ்ச்சி.உங்கள் அ என்றால் 8ஐ ஆவலுடன் எதிர் பார்கிறேன்
//ulagam sutrum valibi said...
ReplyDeleteஅன்பு ரவி,
என் அழைப்பை ஏற்றமைக்கு நன்றி மகிழ்ச்சி.உங்கள் அ என்றால் 8ஐ ஆவலுடன் எதிர் பார்கிறேன்//
ஆகா....போட்டாச்சே!
சுட்டி தந்திருந்தேனே உங்க பதிவுல!
பாக்கலையா மிஸ்?
இன்றுதான் இதைப் படித்தேன்.
ReplyDeleteகேள்விகள், பொன்னியின் செல்வனை படித்தவர்களை பொறுத்தவரை, "சின்னப்புள்ளத் தனமா"யிருக்கு!!!;-)
//3.இலங்கையில் முதன் முதலாக, பூங்குழலியின் உதவியோடு, நாகத் தீவில் இறங்கினான் வந்தியத்தேவன். //
வந்தியத்தேவன் முதலில் இலங்கையில் இறங்கும்(கால் வைக்கும்) இடம் பூதத்தீவு(போதத்தீவு)!!!
//அட என்னங்க!
ReplyDeleteதலைவர் படத்தை profileஇல் போட்டிருக்கீங்க! உங்கள எப்படி விட முடியும்!//
:-)
//தலைவருக்கு எந்தப் பாத்திரம் பொருந்தி வரும், பொன்னியின் செல்வனில்...? சொல்லுங்க பார்ப்போம்! //
ஆதித்த கரிகாலன் கேரக்டருக்கு ரஜினி மிக பொருத்தமாக இருப்பார்.
மேலும்
சுந்தர சோழர் - சிவாஜி கணேசன்.
வந்தியத்தேவன் - கமல்.
நந்தினி - ஸ்ரீதேவி
பெரிய பழுவேட்டரையர் - சத்தியராஜ்.
பெரிய விவாதம் எல்லாம் செஞ்சி கிட்டத்தட்ட எல்லா பாத்திரத்துக்கும் ஆட்களை செலக்ட் பன்னி வைத்திருந்தோம் ரொம்ப வருடங்களுக்கு முன்.. இப்பொது மீதி பாத்திரங்களுக்கு யார் யார் என மறந்து போய் விட்டது. :-(
பொன்னியின் செல்வன் கதைக்களக் கேள்விகள், நினைவுகளை பின்நோக்கி இழுத்துச் சென்று விட்டது.
ReplyDeleteபின்னூட்டங்கள்ல நிறைய பேரு நடிகர்கள் தேர்வ பத்தி சொல்லியிருந்தாங்க. கொஞ்சம் கவனிச்சு பாத்ததில எல்லாரும் கொஞ்சம் பழசாவே யோசிச்சிருக்காங்க மாதிரி தோணுது உதாரணம் சிவாஜி, ஜெமினி... ஆதித்த கரிகாலனாக ரஜினியா? வந்தியத்தேவனா கமல் எல்லாம் நினச்சுப் பார்த்தா ஒரு youthness-ஏ இல்லாம போயிடும்கிறதுனால நம்மளால முடிஞ்சது...
ReplyDeleteசுந்தர சோழர் - கமல். சூப்பரா சூட் ஆகும்னு தோணுது.
வானவன் மாதேவி - ஸ்ரீதேவி. செம ஜோடி இல்லயா...
மந்தாகினி / நந்தினி - சிம்ரன். இவங்கள விட்டா இந்த டபுள் ரோல் செய்யறதுக்கு ஜோதிகா தான் நெக்ஸ்ட் சாய்ஸ்.
செம்பியன் மாதேவி - கொஞ்சம் இளைத்த சரிதா
ஆதித்த கரிகாலன் - சிம்பு. maverick character-க்கு இவர்தான் சரியான் தேர்வு.
குந்தவை - த்ரிஷா... சந்தேகம்தான். ஆனா வாய்ப்பு குடுத்தா செய்வாங்கன்னுதான்னு தோணுது.
அருண்மொழிவர்மன் - சித்தார்த். அழகா, ஆழமா, வெகுளியா நடிக்கிறதுக்கு இவர்தான் இப்ப.
வந்தியத்தேவன் - தனுஷ். என்னமோ இவர்தான் பெஸ்ட் சூட்-னு தோணுது.
இப்படி சொல்லிட்டே போகலம்ல :-))
//யோசிப்பவர் said...
ReplyDeleteஇன்றுதான் இதைப் படித்தேன்.
கேள்விகள், பொன்னியின் செல்வனை படித்தவர்களை பொறுத்தவரை, "சின்னப்புள்ளத் தனமா"யிருக்கு!!!;-)//
அட ஆமாங்க! அதான் வினா விளையாட்டுன்னு பேரு வைச்சேன்! :-)
//3.இலங்கையில் முதன் முதலாக, பூங்குழலியின் உதவியோடு, நாகத் தீவில் இறங்கினான் வந்தியத்தேவன். //
வந்தியத்தேவன் முதலில் இலங்கையில் இறங்கும்(கால் வைக்கும்) இடம் பூதத்தீவு(போதத்தீவு)!!!//
நீங்க சொல்றது சரி தாங்க! பூதத் தீவில் பூங்குழலி விசாரித்துக் கொண்டு வந்து பின்னர் நாகத் தீவில் இறக்கி விடுவாள்! ரெண்டும் எதிர் எதிர் தீவுகள்!
//மனதின் ஓசை said...
ReplyDeleteஆதித்த கரிகாலன் கேரக்டருக்கு ரஜினி மிக பொருத்தமாக இருப்பார்//
சூப்பரா இருப்பார்; அதுவும் மொட்டை ரஜினி! :-)
//சுந்தர சோழர் - சிவாஜி கணேசன்//
நடிகர் திலகம் ஆச்சே! இந்தப் பாத்திரத்தில் அவ்வளவா நடிப்புக்கு வேலை இல்லையே!
//வந்தியத்தேவன் - கமல்.
நந்தினி - ஸ்ரீதேவி//
ஐயோ! ஒரு ஹீரோயினை வில்லியாக்கி விட்டீர்களே! ஸ்ரீதேவி பாவம்-ங்க! வேணும்னா ரம்யா கிருஷ்ணனைப் போட்டுக்குங்க! சின்ன வயசு ஜெ. கூட இதற்கு நல்லாத் தான் இருப்பாய்ங்க!
//பெரிய பழுவேட்டரையர் - சத்தியராஜ்//
ஹிஹி!
//Dhavappudhalvan said...
ReplyDeleteபொன்னியின் செல்வன் கதைக்களக் கேள்விகள், நினைவுகளை பின்நோக்கி இழுத்துச் சென்று விட்டது//
நன்றி Dhavappudhalvan!
அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல் தான் பொங்குவதேன்? :-)
//
ReplyDeleteஒரு youthness-ஏ இல்லாம போயிடும்கிறதுனால நம்மளால முடிஞ்சது...
சுந்தர சோழர் - கமல். சூப்பரா சூட் ஆகும்னு தோணுது.
வானவன் மாதேவி - ஸ்ரீதேவி. செம ஜோடி இல்லயா...//
இது சூப்பர்-ங்க ஸ்ரீதர்! கலக்குறீங்க!
//மந்தாகினி / நந்தினி - சிம்ரன். இவங்கள விட்டா இந்த டபுள் ரோல் செய்யறதுக்கு ஜோதிகா தான் நெக்ஸ்ட் சாய்ஸ்//
சிம்ரனுக்கு வில்லத்தனம் பண்ண வருமா? சோதிகா அக்கா, கண்ணை உருட்டிக் கலக்கிட மாட்டாங்க? :-)
//செம்பியன் மாதேவி - கொஞ்சம் இளைத்த சரிதா//
நல்ல காலம், ராதிகா-ன்னு சொல்லலை நீங்க! ஏங்க சன் டிவியில் செல்வி பாத்த எஃபெக்டா? :-)
//ஆதித்த கரிகாலன் - சிம்பு. maverick character-க்கு இவர்தான் சரியான் தேர்வு//
ஹூம்....சரி தானோன்னு படுது!
//குந்தவை - த்ரிஷா... சந்தேகம்தான். //
குந்தவை நிறைய பேசுவாங்க!
த்ரிஷா எப்படியோ?
சோதிகாவை இதுக்குப் போட்டா, வந்திக்கு சூர்யாவைப் போடலாம்!
//அருண்மொழிவர்மன் - சித்தார்த்.
வந்தியத்தேவன் - தனுஷ். என்னமோ இவர்தான் பெஸ்ட் சூட்-னு தோணுது//
ஏங்க சூர்யாவும் விக்ரமும் ஞாபகத்துக்கு வரலீயா? இந்த ஜோடி ஏர்கனவே படங்களில் கலக்கி இருக்கே!
சூர்யா = வந்தி
விக்ரம் = அருண்மொழி
வந்தியத்தேவன் - Tom Hanks.
ReplyDeleteIt was nostalgic, and just love the humor too.
ReplyDeleteமிகவும் அற்புதம். பத்து கேள்விகளுக்கும் அருகே விடை கொடுத்திருப்பதனை எடுத்துவிடவும். புதியதாக படிப்பவர்கள் விடையை தேடிக் கொள்ளட்டும்,. இறுதியாக விடையை இணைத்துவிடுங்கள். எனது வேண்டுகோள் இது.
ReplyDelete