Sunday, July 20, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - Final Part!

"இல்லையப்பா! எனக்கு மோட்சம் கிட்டாது! நான் மோட்சத்தைச் சம்பாதிக்க முடியாது!" - அதிர்ந்து விட்டான் வில்லி!
எடக்கு மடக்கு பண்ணுவதே, இப்பவெல்லாம் இந்த உடையவருக்கு வழக்கமாகப் போய் விட்டது! இவரே இப்படிச் சொன்னால் இவரை நம்பி வந்த சீடர்கள், பாவம் என்ன செய்வார்கள்? முந்தைய பதிவு இங்கே!

"முன்பு, குருவின் ஆணையை மீறி, எட்டெழுத்தின் பொருளை, ஊரைக் கூட்டிச் சொன்னேனே! மறந்து விட்டாயா?
நன்மையோ, தீமையோ, நான் செய்த காரியம் செய்தது தானே? விதைத்தது முளைத்து தானே ஆகும்! குருவின் ஆணையை மீறியவனுக்கு நரகம் அல்லவா கிட்டும்? சரி தானே வில்லி?"

(மெளனம்)

"ஆனால்.....இங்கே, இப்போதே, அரங்கன் சாட்சியாகச் சொல்கிறேன்!
குருவின் ஆணையை மீறினவன் என்றாலும்.....
எனக்கும் மோட்சம் உண்டு!
என்னைப் பற்றினீர்கள் அல்லவா? உங்கள் எல்லாருக்கும் மோட்சம் உண்டு
!"

(குழப்பத்துடன்...)
"ஆகா! குருவே! உங்கள் வாக்கிலிருந்து இப்படி ஒரு சொல் வர என்ன புண்ணியம் செஞ்சோமோ தெரியலையே! என் கவலை எல்லாம் தீர்ந்தது!"

"அட என்ன சீடனப்பா, நீ? "என்னால்" தான் உங்களுக்கு எல்லாம் மோட்சம் என்று சொல்கிறேன்! திமிர் பிடித்துப் போய், ”தான்” என்னும் ஆணவமாகப் பேசுகிறார் இராமானுசர்? - இப்படியெல்லாம் திருப்பித் தாக்க மாட்டாயா?
அடியேன் அடியேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நீ எப்போது அடுத்த குரு ஆவது?"

(குரு தன்னிடம் மட்டும் ஏன் இப்படி விளையாடுகிறார் என்று குழம்புகிறான் வில்லி! தப்பாக எதுவும் விவாதத்தை ஆரம்பித்து வைத்து விட்டோமோ? அதான் உடையவர் இந்த வாங்கு வாங்குகிறாரோ?)


"என்ன வில்லி? குழப்பமா இருக்கா?....எனக்கு மோட்சம் கிடைத்தால், உங்களுக்கும் கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும்-னு சொன்னேன் அல்லவா!
எனக்கு யாரால் கிடைக்கும்-னு நினைக்கிறாய்? என் சுய பிரதாபத்தாலா கிடைக்கும்? இல்லை! என் குருவான பெரிய நம்பியால் கிடைக்கும்! அவருக்கு மோட்சம் உண்டு என்றால் எனக்கும் கண்டிப்பாக உண்டு!
ஆனால்...பெரிய நம்பிக்கு நிச்சயமாக் கிடைக்குமா? கிடைத்து விட்டதா??"

(வில்லி மயக்கம் போட்டு விழாத குறை! "இவரு ஊர்-ல ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டாரா?
மொதல்ல நம்ம மேல கையை வச்சாரு!
அடுத்து அவர் மேலேயே கை வச்சிக்கிட்டாரு!
இப்போ என்னடான்னா, அவர் குருநாதர் மேலேயே கையை வைக்கிறாரே?")

குரு பரம்பரை - இறைவி-இறைவனே முதல் குரு! அது சேனை முதலியார் என்று அப்படியே விரிந்து, ஒரு ஆபரணம் போல் ஒளிர்கிறது!


"என்ன வில்லி இவ்வளவு தீவிரமாக யோசிக்கிறாய்?
* உங்களுக்கு மோட்சம் கிடைக்கும் -> உங்கள் குரு இராமானுசனால்!
* இராமானுசனுக்கு மோட்சம் கிடைக்கும் -> அவர் குரு பெரிய நம்பியால்! - இது வரை சரி!

* பெரிய நம்பிக்கு கிடைக்கும் -> அவர் குரு, ஆளவந்தாரால்!
* ஆளவந்தாருக்கு கிடைக்கும் -> மணக்கால் நம்பியால்!

* மணக்கால் நம்பிக்கு கிடைக்கும் -> உய்யக் கொண்டாரால்!
* உய்யக் கொண்டாருக்கு கிடைக்கும் -> நாதமுனியால்!

* நாதமுனிக்கு கிடைக்கும் -> நம்மாழ்வாரால்!
சரி......நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைக்குமா? கிடைச்சுச்சா??"


(வில்லி அரண்டு நடுநடுங்கிப் போய் விட்டான்! சீடர்கள் பேந்த பேந்த விழிக்கிறார்கள்! உபன்னியாசம் கேட்க வந்த ஊரே வாயைப் பிளக்கிறது! "என்னாது? நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைச்சுச்சா-வாஆஆஆ?.....
அடேயப்பா! இவரு இந்தக் கட்சியில் இருந்து கொண்டு, இந்தக் கட்சிக்கே வேட்டு வைக்கிறாரே! இராமானுசர் பிறப்பால் சைவர்! ஒரு வேளை வைணவத்தில் விவகாரம் பண்ணவே இவரு இங்கிட்டு வந்தாப் போலத் தெரியுதே!" :-)

"நான் இன்னும் முடிக்கவில்லை வில்லி!
* நம்மாழ்வாருக்கு கிடைக்கும் -> சேனை முதலியாருக்கு கிடைத்தால்!
* சேனை முதலியாருக்கு கிடைக்கும் -> அன்னை மகாலட்சுமிக்கு கிடைத்தால்!
* அன்னை, மகாலட்சுமிக்கு ஒருவேளை மோட்சம் கிடைக்குமாஆஆ?...."

"அய்யோ.....குருவே....."

"பதறாதீர்கள்!....கேளுங்கள்!
* மகாலட்சுமிக்கு கிடைக்கும் -> இறைவனுக்கு கிடைத்தால்.......
* இறைவன், பரப்பிரம்மமான, நாராயணனுக்கு ஒருவேளை மோட்சம் கிடைத்தாஆஆஆஆஆஆஆஆல்......"

(அத்தனை மக்களும் அலறி அடித்துக் கொண்டு எழுந்து விட்டார்கள்.....கோவிந்தா கோவிந்தா என்கிற கோஷம்!.....அப்போதும் அவர் விடவில்லை.....)
* இறைவனுக்கு ஒருவேளை மோட்சம் கிடைத்தாஆஆல்....அப்போ மகாலட்சுமிக்கும் கிடைக்கும்!
* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? சொல்லுங்க பார்ப்போம்"
(காவிரியாறு கூட வாயைப் பொளந்து விட்டது! ஒரு துளிச் சத்தம் கூட எழவில்லை! மனிதன், மிருகம், புல், பூண்டு என்று அவ்வளவு உயிர்களும் கப்..சிப்..
"இவருடன் வாதாட முடியாது போலிருக்கே! இவர் வாதங்களை முன் வைக்கும் போது எம்பெருமானார் வாதாடுகிறாரா? இல்லை அந்த எம்பெருமானே வந்து வாதாடுகிறானா??....தெரியவில்லையே!")

"இறைவனின் வீட்டில் இறைவனுக்கு இல்லாத இடமா? இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா என்று எந்தப் பைத்தியக்காரனாவது கேட்பானா?
இறைவனுக்கு உண்டு என்றால், நான் சொன்ன வரிசையில் அப்படியே ஒவ்வொருவராய் பின்னோக்கி வாருங்கள்.....

அவனுக்கு உண்டு என்றால், அவளுக்கு உண்டு!
அவளுக்கு உண்டு என்றால் சேனை முதலியாருக்கு உண்டு.....
சேனை முதலியாருக்கு உண்டு என்றால், நம்மாழ்வாருக்கு உண்டு.....

இப்படியே பின்னோக்கி வந்து....உங்கள் வரை வந்து.....
பெரிய நம்பிக்கு உண்டு என்றால், இராமானுசனுக்கும் உண்டு!
இராமானுசனுக்கு உண்டு என்றால், உங்களுக்கும் உண்டு!

உங்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு!
உங்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!"


(அத்தனை பேர் முகத்தி்லும் அப்படி ஒரு சிரிப்பூபூபூபூபூ)

"இறைவனின் குழந்தைகள் தானே எல்லாரும்! அவைகளை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அவனும் அவளும் சொல்லத் தான் முடியுமா?
அப்படி ஒரு குடும்பக் கோட்பாட்டை எந்த தாய்-தந்தையாவது உருவாக்குவார்களா???

* குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டு இருக்கின்றன! ஆட்டம் முடிந்தால் அவை வீட்டுக்குத் தானே போக வேண்டும்?
** என்ன...சில குழந்தைகள் வீட்டுக்கு அருகிலேயே ஆடுவதால், பொழுதோடு வீட்டுக்குப் போய் விடுகின்றன! சில குழந்தைகள் ஊர் சுற்றிகள்! வீடு வந்து சேரக் கொஞ்சம் தாமதம் ஆகிறது! அவ்வளவு தான்!

மண்ணில் பிறந்தவர் அனைவர்க்கும் மோட்சம் உண்டு! வானவரும், தேவர்களும் கூட, மோட்சம் அடைய வேண்டும் என்றால், மானிடனாய்ப் பிறந்து தான் மோட்ச நிலைக்குச் செல்ல முடியும்!
வைகுந்தம் புகுதலும், வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர், எமது இடம் புகுக என்று
வைகுந்தத்து அமரரும், முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது ***மண்ணவர்*** விதியே!!!


புண்ணியமோ-பாபமோ, சொர்க்கமோ-நரகமோ,
கர்ம வினைகளை அறுக்க மானிடனாய்ப் பிறந்தே ஆக வேண்டும்!
அதனால் தான் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!
அப்படி மானிடராகப் பிறந்து,
அற்றது பற்றெனில், உற்றது வீடு! = ஆனால் அந்தப் பற்று எப்படி அறும்
???"


மாறனோடு இப்போது ஐயன் வள்ளுவனைத் துணைக்கு அழைப்போமா?

பற்றுக பற்றற்றான் பற்றினை! அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!
பற்றற்றான் பற்றிலே பரிபூர்ண சரணாகதி செய்தக்கால்=அற்றது பற்று!

அப்புறம் என்ன?
அற்றது பற்றெனில், உற்றது வீடு!

= மாறன் + வள்ளுவன் வாக்கு மாறுமோ? மாலவன் வாக்கு அல்லவா!

எனவே மோட்ச நிலை குறித்து அதீதமாகக் கவலைப்பட்டு, போலி குருக்களிடம் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு வீண் குழப்பங்கள் எதற்கு?
அவன் பத்துடை அடியவர்க்கு மிகவும் எளியவன், பிறர்களுக்குத் தான் அரிய வித்தகன்!

உங்கள் அறிவினால் மட்டுமே, அரியவனை, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

நாமே முயன்று நம் அறிவினால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், உங்கள் ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்!
ஆனால் அவற்றால் காலத்துக்கும் உங்கள் பசியை ஆற்ற முடியாது!

எனவே, காருண்யம் வற்றாத நீர் நிலை - எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்யுங்கள்! இதோ...
அகல கில்லேன் இறையும்! என்று
அலர் மேல் மங்கை உறை மார்பா!
புகல் ஒன்று இல்லா அடியேன், உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!!


அப்படிப் புகுந்தவர், வைகுந்தமும் புகுவர்!
இறைவனுக்கு மோட்சம் உண்டென்றால், நம் அனைவருக்கும் உண்டு!
வைகுந்தம் புகுவது *மண்ணவர்* விதியே!!!



இந்தத் தொடர் பதிவு - மூன்று பாகமாய் வந்தது.
இதில் சரணாகதி தத்துவத்தை வீடணன், பாஞ்சாலி, கஜேந்திரன் என்று ஒரு கதை போலத் தான் பார்த்தோம்!
This series was only a primer! Kinda Eye Opener! ஆனால் இன்னும் சில ஆழ்ந்த n-dimension பரிமாணங்கள் இதில் உள்ளன!

அதைப் பார்ப்பதற்கு முன்னால், அடிப்படையை கொஞ்சம் ஆழ வாங்கிக் கொள்ள வேண்டும்! அடிப் படையை வாங்காமால், ஆனைப் படைகள் ஆயிரம் வாங்கினாலும், வெற்றி என்பது சந்தேகமே! கொஞ்ச நாளில் காற்றில் கரைந்து விடும்!

எது அடிப்படை? = எம்பெருமானின் "அடிப்"-படையே அடிப்படை!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார்
இறைவன் "அடி" சேரா தார்!


திக்கெட்டும் தத்துவங்கள் ஆயிரம் பேசலாம்!
அவை எல்லாம் பளிச்செனத் தோன்றி மறையும் மின்னல் தான்!
திருவடி சரணங்கள் என்பதே நிலைத்த தீபம்!
நிலைத்த தீபிகை=அதுவே சரணாகதி தீபிகை!
ஹரி ஓம்!

(நிறைந்தது)


இன்னும் சிலருக்குச் சில-பல கேள்விகள்:

* பரிபூர்ண சரணாகதி செய்த பின் ஒருவனின் வாழ்க்கை நிலை என்ன?
* தாய்க் குரங்கைக் குட்டியானது கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டுமா? இல்லை, தாய்ப்பூனையே சேய்ப்பூனையைக் கவ்விச் சென்று காப்பாற்றுமா?

* மற்ற சமயங்களான கிறிஸ்துவம், இஸ்லாம், சமணம், பெளத்தம், சாக்தம், சைவம், வைணவம் போன்றவற்றில் சரணாகதியின் நிலை என்ன?
* சங்கத் தமிழ் இலக்கியத்தில் சரணாகதி பேசப்படுகிறதா?

* அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் = போன்ற தத்துவங்களின் சாராம்சம் என்ன? அவற்றில் சரணாகதி சொல்லப்படுகிறதா?
* மூன்று ஆச்சார்யர்களும் முரண்பட்டார்களா? இராமானுசர் சங்கரைப் புகழ்கிறார்! ஏன்? எதற்கு? எங்கே?

* பிறவி-சரணாகதி-மோட்சம் என்பது ஒரு சுழற்சியா? ஆதியில் என்னவாக இருந்தது? - இது அத்தனையும் ஏன்? எந்துக்கு? எந்து? யாகே? க்யோ? WHY? WHY? WHY?
* அறிவியல் இதற்கு வெளிச்சம் போட உதவுமா?

இவற்றை ஒவ்வொன்றாக மாதவிப் பந்தலில் பார்க்கப் போகிறோம்!
இரு வாரத்துக்கு ஒரு முறை (fortnightly) என்று முயல்கிறேன்;

நண்பர்கள் மற்றும் சக பதிவர்கள் கண்ணன் சார், குமரன், SK, மெளலி அண்ணா, கீதாம்மா, திவா சார், ஜீவா, கோவி கண்ணன் போன்றவர்கள் உதவியுடன்...!
உங்கள் விவாத விளக்குகளுடன்; அதற்கு முன் இவ்விரு பதிவுகளையும் படித்துப் பார்க்கவும்!


* தம்பி CVR இன் Destination Unknown சிறுகதை!
** நண்பர் குமரனின், இல்லாமையிலிருந்து பிறவி தோன்றுமா?

பெரும் தத்துவங்கள் என்பதால், எப்போதும் போல் விளையாட்டான நடையில் அடியேனால் எழுத முடியுமா தெரியவில்லை! அதனால் இந்தப் பொருளில் பேசப் போகும் பதிவுகளை எல்லாம் "$$$" என்று தலைப்பில் குறிப்பேன்!
இதையே அவரவர் எச்சரிக்கை மணி/ஆராய்ச்சி மணியாக எடுத்துக் கொண்டு வருவதும் வராமலும் போகலாம்! :)

அதே சமயம், மற்ற விளையாட்டான பதிவுகள் வழக்கம் போல் தொடரும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் :))

120 comments:

  1. சரணாகதி தத்துவத்தை, விசிஷ்டாத்வைதத்தின் சாரத்தை அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.

    // அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் = போன்ற தத்துவங்களின் சாராம்சம் என்ன? அவற்றில் சரணாகதி சொல்லப்படுகிறதா?//

    எல்லா மார்க்கங்களும் சரணாகதியைத்தான் பேசுகின்றன. சைவ சித்தாந்தம் பசுவானது பாசத்தை விட்டால் பதியை அடையலாம் என்று பகர்கின்றது.

    சீவனில் உள்ள ஆணவமான கொம்பை நீக்கி விட்டால் சீவன் சிவன் ஆகும் அதுவே சிவ சாயுஜ்யம் முக்தி நிலை.

    தங்கள் எழுத்தில் தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலை காண ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  2. //என்ன...சில குழந்தைகள் வீட்டுக்கு அருகிலேயே ஆடுவதால், பொழுதோடு வீட்டுக்குப் போய் விடுகின்றன! சில குழந்தைகள் ஊர் சுற்றிகள்! வீடு வந்து சேரக் கொஞ்சம் தாமதம் ஆகிறது! அவ்வளவு தான்!//

    ஆஹா, அழகாச் சொன்னீங்க!

    //தாய்க் குரங்கைக் குட்டியானது கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டுமா? இல்லை, தாய்ப்பூனையே சேய்ப்பூனையைக் கவ்விச் சென்று காப்பாற்றுமா?//

    ரெண்டும் வேறு வேறு நிலைகள்னு அடியேனுடைய சரணாகதி பற்றின குட்டிப் பதிவுல குமரன் சொன்னாரு... சேய்ப்பூனையின் நிலையே எனக்குப் பிடிச்சது :)

    ReplyDelete
  3. //எது அடிப்படை? = எம்பெருமானின் "அடிப்"-படையே அடிப்படை!
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார்
    இறைவன் "அடி" சேரா தார்!
    //

    கே.ஆர்.எஸ்

    பிறவிப் பெருங்கடலுக்குள் எப்படி வந்து ஒருவர் குதித்தார் ? நீந்துவாரா இல்லையா என்பது அடுத்த கேள்வி தான். (முன்பே யாரிடமோ இதைக் கேட்டு இருக்கிறேன்)
    :)

    //புண்ணியமோ-பாபமோ, சொர்க்கமோ-நரகமோ, கர்ம வினைகளை அறுக்க மானிடனாய்ப் பிறந்தே ஆக வேண்டும்! அதனால் தான் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!//

    வினைகள் அற்ற, பாபமற்ற, புண்ணியமற்ற ஏதுமற்ற பிறவிகள் என்றால் அது மனிதன் அல்லாது ஏனைய உயிர்களாக பிறப்பது தான். எனக்கு எப்போதும் புரியாதது இது, பாவம் செய்தவன் விலங்காக பிறக்கிறான் என்கிறார்கள், வினைப்பயனுக்கும் விலங்கு வாழ்விற்கும் என்ன தொடர்பு ? விலங்கு வாழ்கையில் வினையே செயலாற்றுவதே இல்லை. உங்களுக்கும் எனக்கும் தான் கொன்றால் பாவம், விலங்குகளுக்கு கொன்றால் தான் உணவே ?

    உயிர்கள் அனைத்து வகைகளின் விந்தும் கருமுட்டையும் அதே வகையில் மட்டுமே கலந்து உயிர்களைத் தோற்றுவிக்க முடியும், குதிரையோ யானையோ கலக்கவே முடியாது. ஆன்மாக்களுக்கு மட்டும் இது பொருந்தாதா ? மனிதன் மரித்தால் மரித்திருந்தாலோ மனிதனாகத்தானே பிறப்பான் ? கடவுள் கான்சப்டுகள் (உருவவழிபாடு) முழுவதும் மனித வாழ்கையை ஒட்டியே அமையப்பெற்றிருக்கும் போது மனித ஆத்மா பல்வேறு உயிர்களாக(வும்) பிறக்கும் என்பது நம்பிக்கைக்குகந்த வேதாந்தமா ? விவேகனந்தரின் கூற்றில் இருந்து படித்த நினைவு ஒன்று, 'நாய்களுக்கு கடவுள் இருந்தால் அது நாயாகத்தான் இருக்கும்' - இது புரிகிறது. மற்றபடி மேலே நான் எழுதியுள்ள ஐயங்கள் குறித்து...

    புரியல்ல, தயவு செய்து விளக்கவும்.

    நான் கிண்டல் அடிப்பதாக தாங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்றே கருத்துகிறேன்.

    ReplyDelete
  4. @கோவி அண்ணா
    வாங்க சிங்கை வன முனிவரே!

    //பிறவிப் பெருங்கடலுக்குள் எப்படி வந்து ஒருவர் குதித்தார்? நீந்துவாரா இல்லையா என்பது அடுத்த கேள்வி தான்//

    உங்களை இப்போ நான் சென்னை வங்காள விரிகுடாவில் தள்ளி வுடறேன்-ன்னு ஒரு பேச்சுக்கு வச்சிக்குங்க...:)
    நீங்க என்ன செய்வீங்க?

    கேஆரெஸ் அவனே தள்ளி வுட்டானா?
    இல்லை பாலாஜி/குமரன்/ராகவன் இவிங்க மூனு பேர்ல யாரோ சொல்லி கேஆரெஸ் தள்ளி வுட்டானா?
    இல்லை டிபிசிடி அண்ணாச்சி மாறு வேசம் கட்டிக்கிட்டு வந்து தள்ளி வுட்டாரா?
    இல்லை கோவி இன்னும் ஸ்டிராங்கா கரையில் நின்னிருந்தா விழாமலேயே இருந்திருக்கலாமோ?
    ...இப்படி எல்லாம் நினைச்சிக்கிட்டு இருப்பீங்களா?

    இல்லை "உதவி உதவி! ஹெல்ப் ஹெல்ப்"-ன்னு கத்துவீங்களா?

    இல்லை நீந்த ஆரம்பிப்பீங்களா?

    இல்லை ஒரு பதிவு போடுவீங்களா?
    :)))

    ReplyDelete
  5. //உங்களை இப்போ நான் சென்னை வங்காள விரிகுடாவில் தள்ளி வுடறேன்-ன்னு ஒரு பேச்சுக்கு வச்சிக்குங்க...:)
    நீங்க என்ன செய்வீங்க?

    கேஆரெஸ் அவனே தள்ளி வுட்டானா?
    இல்லை பாலாஜி/குமரன்/ராகவன் இவிங்க மூனு பேர்ல யாரோ சொல்லி கேஆரெஸ் தள்ளி வுட்டானா?
    இல்லை டிபிசிடி அண்ணாச்சி மாறு வேசம் கட்டிக்கிட்டு வந்து தள்ளி வுட்டாரா?
    இல்லை கோவி இன்னும் ஸ்டிராங்கா கரையில் நின்னிருந்தா விழாமலேயே இருந்திருக்கலாமோ?
    ...இப்படி எல்லாம் நினைச்சிக்கிட்டு இருப்பீங்களா?

    இல்லை "உதவி உதவி! ஹெல்ப் ஹெல்ப்"-ன்னு கத்துவீங்களா?

    இல்லை நீந்த ஆரம்பிப்பீங்களா?

    இல்லை ஒரு பதிவு போடுவீங்களா?
    :)))//

    நான் சீரியஸாக கேட்டால், காமடி பண்ணுவிங்களா ?

    எந்த ஒரு வினையற்ற சூழலில் பிறவிக்குள் எப்படி விழுந்தோம், அதிலிருந்து நீந்த ஏன் முயல்கிறோம், நீந்திக் கடந்தாலும் மீண்டும் (முன்புபோலவே) விழமாட்டோம் என்பது என்ன நிச்சயம் ?

    கேள்வி அபத்தமாக தெரிந்ததோ ?

    ReplyDelete
  6. சரி, All fun apart
    //பிறவிப் பெருங்கடலுக்குள் எப்படி வந்து ஒருவர் குதித்தார்//

    இதற்கான விளக்கங்கள் இந்திய இறையியலில் நுட்பமாகவே சொல்லப்படுகின்றன!
    பெரும்பாலும் நீந்தும் வழிகளைச் சொல்லும் அளவுக்கு, எப்படி எந்த ஆங்கிளில் வந்து குதித்தாய் என்பதை நேரிடையாகச் சொல்லவில்லை!

    ஆனால்...சொல்லாமலும் இல்லை!
    மேலோட்டமான பார்வை மட்டும் இப்போது சொல்கிறேன்; தரவுகளோடு அந்தந்தப் பதிவில்!

    ஒன்று பலவாகிய போது, அந்தப் பலவற்றில் பிறவியும் ஒன்று!

    பிறவிக்கு முதலில் வினைப்பயன் இல்லை ஆயினும், பிறவி வினை ஆற்றும் போது, வினையால் பயன் தானே விளைகிறது!

    பிறவிக்குச் சுதந்திரம் என்பது அதன் குணம்! அந்த ஸ்வதர்மம் என்கிற சுதந்திரத்தால் வினைகளிலும் ஒட்டிக் கொள்ளலாம், மூலமான பொருளிலும் ஒட்டிக் கொள்ளலாம்! அது பிறவியின் வேட்கை!

    கொஞ்சம் சிம்பிளாகப் பார்ப்போம்! (இது உவமைக்காக மட்டுமே...)

    யாரும் குழந்தையைப் பெரியவன் ஆகு என்று அனுமதிப்பதில்லை! அது தானே நடக்கும் evolution!

    குழந்தை, பெற்றவர்களால் தான் உருவானது! ஆனால் அப்படி உருவானதாலேயே, அது பெற்றவரின் கட்டுப்பாட்டுக்குள் "முழுதும்" வருவதில்லை! அதற்கென்று ஒரு சுதந்திரம் உள்ளது!

    அதே போல் உயிர்களுக்கும் சுதந்திரம் உள்ளது! அந்தச் சுதந்திரத்தால் வினை ஆற்றும் போது, தானே பிறவிக் கடலில் வருவதும் போவதுமாய் உள்ளன!

    இறைவனுக்கு அதையும் கடந்த சுதந்திரம் உண்டு என்றாலும், இந்தச் சுதந்திரத்தில் அந்தச் சுதந்திரம் "தேவை ஏற்பட்டால் அன்றித்" தலையிடுவதில்லை!

    இதை அறிவியல் வழியில் Nuclear Fission & Fusion வழியில் விளக்கப் போந்தால் இன்னும் புரிய ஏதுவாகும்!

    ReplyDelete
  7. //விவேகனந்தரின் கூற்றில் இருந்து படித்த நினைவு ஒன்று, 'நாய்களுக்கு கடவுள் இருந்தால் அது நாயாகத்தான் இருக்கும்'//

    அருமை!
    விவேகானந்தரை வைத்து நீங்களே பதில் சொல்லிட்டீங்க கோவி அண்ணா!

    நாய்களுக்கு கடவுள் இருந்தால் அது நாயாகத் தான் இருக்கும்!
    குரங்குகளுக்கு கடவுள் இருந்தால் அது குரங்காகத் தான் இருக்கும்!

    ஆனால் மனிதனுக்குக் கடவுள் இருந்தால் அது மனிதனாக மட்டு"மே" இருப்பதில்லை! - ஏன்?

    செடி, கொடி, நாய், குரங்கு, முதற்கொண்டு, தலைவன், அமைச்சன், நடிகன், துறவி, என்று மனிதனுக்கு மட்டும் ஏன் இத்தனை கடவுள் பரிமாணங்கள்? மனித உருவைத் தாண்டியும் மனிதனுக்கு கடவுள் பரிமாணங்கள் உள்ளனவே! ஏன்?

    ReplyDelete
  8. //விலங்கு வாழ்கையில் வினையே செயலாற்றுவதே இல்லை//

    அது எப்படி உங்களுக்குத் தெரியும்? :)

    //உங்களுக்கும் எனக்கும் தான் கொன்றால் பாவம், விலங்குகளுக்கு கொன்றால் தான் உணவே ?//

    விலங்குகளில் கொல்லாமை இல்லையா?
    விலங்குகள் "எல்லாவற்றையும்" கொன்று விடுகின்றனவா? "சிலவற்றை" மட்டும் கொல்வதில் தயக்கம் காட்டுகிறதே விலங்குகள்? அது ஏன்?

    //பாவம் செய்தவன் விலங்காக பிறக்கிறான் என்கிறார்கள்//

    தவறான கருத்து!
    மயில், கருடன், நந்தி என்பவரெல்லாம் பாவம் செய்ததால் தோன்றியவர்களா? :)

    ReplyDelete
  9. //நான் சீரியஸாக கேட்டால், காமடி பண்ணுவிங்களா ?//

    ஹிஹி!
    ஆன்மீகமே டோட்டல் காமெடி தான் கோவி அண்ணா! :)

    உங்களைக் கேலி எல்லாம் செய்ய மாட்டேன் கோவி அண்ணா!
    எங்கள் தேடலை விட உங்கள் தேடல் இன்னும் ஆழமான ஒன்று என்று நான் அறிவேன்! நீங்கள் கேட்டது எதுவும் அபத்தம் கிடையாது!

    அடியேன் அறிந்ததை இயன்ற வரை உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
  10. உங்கள் விளக்கம் நன்று. அவ்வளவுதான் சொல்ல முடியும் ? அதற்குமேல் சொல்வதற்கு கற்பனைக்கு எட்டாதவற்றை தொடவேண்டும், முடியாது, புரிந்த ஒன்றில் இருந்து புரியாத ஒன்றை விளக்கிச் சொல்வது போல் சொல்லி இருக்கிறீர்கள். :) பாராட்டுகிறேன்.

    //இதை அறிவியல் வழியில் Nuclear Fission & Fusion வழியில் விளக்கப் போந்தால் இன்னும் புரிய ஏதுவாகும்!//


    illusion, மாயை :)

    காலசுழற்சியில் (பாற்கடல் சுழற்சியால் அமுதம் போல்) எல்லாம் தோன்றும் பின்பு அதற்குள்ளேயே அடங்கும்.
    :)))))))

    ReplyDelete
  11. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    அது எப்படி உங்களுக்குத் தெரியும்? :)//

    நல்லது கெட்டது என்பதே அங்கு கிடையாது, உயிர்வாழ்த்தல், பாதுகாத்துக் கொள்ளுதல், இனப்பெருக்கம். இவைதான் விலங்குவாழ்கை, செடிகொடிகளுக்கு தற்காத்துக் கொள்ளும் அமைப்பு கூட கிடையாது. செயல் என்பது நன்மை தீமையுடன் தொடர்பிருந்தால் தானே அது வினை எனப்படுகிறது ? விலங்கோ, செடிகொடிகளோ அவற்றின் செயல்கள் வினை என்ற வகைக்குள் செல்லாது என்றே நினைக்கிறேன்.


    //விலங்குகளில் கொல்லாமை இல்லையா?//

    'விலங்குகளில்' என்று மொத்தமாக குறிப்பிட்டு சொல்லாதீர்கள்.

    சிங்கத்தில் சைவ சிங்கம் இருக்கிறதா ? மனிதன் என்னும் ஒரே வகைக்குள் சைவம் / அசைவம் இருக்கிறதல்லவா ?

    //விலங்குகள் "எல்லாவற்றையும்" கொன்று விடுகின்றனவா? "சிலவற்றை" மட்டும் கொல்வதில் தயக்கம் காட்டுகிறதே விலங்குகள்? அது ஏன்?//

    எல்லாவற்றையும் கொள்வதில்லை, பசி என்றால் கொல்கின்றன, ஆபத்து என்றால் தாக்குகின்றன. மனிதன் கூடத்தான் செடி கொடி, காய்கறிகள் பல இருந்தாலும் மனிதனால் உண்ணத்தக்கவை என்று இருக்கிறதே, அது போல் தான் விலங்குகளுக்கும் உண்ணத்தக்கவை இருப்பதால் அவை எல்லாவற்றையும் கொல்வதில்லை.

    ReplyDelete
  12. //உங்கள் கேள்வியில் உள்ள "ஆன்மா" என்பது மனிதன் அல்ல! மனித ஆத்மா என்று சொல்வதே தவறு!//

    உயிர்வித்து (விந்து அல்ல), ஆன்மா , ஆத்மா என்ற எந்த பெயரில் வேண்டுமானலும் வைத்துக் கொள்ளுங்கள். மனிதனாக பிறப்பெடுக்கும் ஆத்மா மனித ஆத்மா இல்லை என்றால் வேறு என்னச் சொல்வது ? கர்ம வினைகள் என்று பேசினால் அது மனிதனாக இருக்கும் போது தானே நிகழும் ? யாரோ ஒருவரை நாய் கடிக்கிறது என்றால் நாய் பாவம் செய்துவிட்டது என்று சொல்லிவிடமுடியுமா ?

    //மனிதனுக்குத் தனியாக மனித-ஆத்மா என்ற ஒன்று கிடையாது!//

    அப்படியென்றால் ஒவ்வொரும், தனித்தனியாக தண்ணுணர்வாக 'தான், நான்' என்றெல்லாம் உணர்வது எங்கனம் ? மூளையில் ஏற்படும் கெமிக்கல் ரியாக்சன் என்றெல்லாம் சொல்லிவிடாதீர்கள்


    //மனிதன் உருவாக்கிய கோட்பாடு என்றால் அது மனித நம்பிக்கைக்கு மட்டுமே உரிய வேதாந்தமாக இருக்கலாம்! ஆனால் மனிதன் "அறிந்து கொண்டு" கோட்பாடு அனைத்து உயிர்களையும் உள்ளடக்கியதே!// அப்படி ஒரு தனிப்பட்ட கோட்பாடு எதுவுமே கிடையாது, பலவற்றை உள்ளடக்கிய கோட்பாடுகளில் ஒன்றாக அது சொல்லப்பட்டு இருக்கும். பிற உயிர்களைப் பற்றிய கோட்பாடு அந்த உயிர்களுக்கு எவ்வாறு பயனிளிக்கும் / பாதிக்கும் ? பிற உயிர்களைப் பற்றி இருந்தாலும் அது மனித நம்பிக்கை தானே.

    ReplyDelete
  13. ஊர் கூடிச் தேரிழுக்க முயல்கிறீர்கள். வாழ்த்துக்கள். 21NEEE என்று நான் சொல்வதை மெய்ப்பிக்கும் பதிவுகளை படிக்க ஆவலாயிருக்கிறேன். :-)

    ReplyDelete
  14. வழக்கம் போல கலக்கல்.

    சரி, எனக்கு மோட்சம் கிடைக்குமா கேஆரெஸ் அண்ணா? :))

    ReplyDelete
  15. //இராமானுசர் பிறப்பால் சைவர்! ஒரு வேளை வைணவத்தில் வெவகாரம் பண்ணவே இவரு இங்கிட்டு வந்தாப் போலத் தெரியுதே!" :-)//

    இப்படியும் கொஞ்ச பேர். இங்க இருக்கிற சில அசைவர்களைப் பத்தி என்ன சொல்ல?

    டாலர் பதிவுக்கு எல்லாம் நானெல்லாம் உள்ளேன் ஐயாதான்.

    ReplyDelete
  16. இறைவனை சரணடைந்தால் மோக்ஷம் கிட்டும் என்று கூறியிருக்கிறீர்கள். எல்லாமே இறைவன் செயல். ஆனால், மனிதன் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றாற்போல அதற்கு உண்டான பலன்களையும் அனுபவிக்கிறான். இவை இரண்டும் முரண்பாடாக தெரிகின்றனவே. எல்லாமே இறைவன் செயல் என்றால் மனிதனை பாவம் செய்ய தூண்டுவதும் இறைவன் செயலா? தானே மனிதனை பாவம் செய்ய வைத்து விட்டு தானே அதற்குண்டான தண்டனையை கொடுக்கிறானா இறைவன்? புரியவில்லையே, கொஞ்சம் விளக்குங்களேன்.

    அருமையான பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  17. எனக்கு எப்ப மோட்சம் கிடைக்கும்? Just like the Jnanamudra says, when self separates from Mind, Body and Senses and joins with the limiless (being God). அப்படீங்கறது என் புரிதல். உங்க விளக்கங்கள் படிச்சு இன்னும் நிறைய புரிஞ்சுக்கறேன்.

    இன்னொரு கேள்வி மோட்சம் அடைய ஞானம் தேவையா??

    ReplyDelete
  18. \எந்த ஒரு வினையற்ற சூழலில் பிறவிக்குள் எப்படி விழுந்தோம், அதிலிருந்து நீந்த ஏன் முயல்கிறோம், நீந்திக் கடந்தாலும் மீண்டும் (முன்புபோலவே) விழமாட்டோம் என்பது என்ன நிச்சயம் ?\\ இந்தக்கேள்வி நேத்து தான் கீதை வகுப்பில நாங்க விவாதிச்சோம். ஏன் பரம்பொருள் நம்மை முதலில் படைக்கணும். அப்பறம் நம்ம வினை அறுக்கணும். படைக்காமலே இருந்திருக்கலாமெ. (இதுக்கு பதில் தெரிஞ்சா நாமெல்லாம் எங்கியோ இருந்திருப்போம்னு நீங்க சொல்லறது கேக்குது)

    ReplyDelete
  19. உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கின்றது. அருமை. அருமை.

    மற்ற கேள்விகளுக்கான பதில்களுக்காக வெயிட்டிங்.

    குரங்கு, பூனை சரனாகதிகளை விட எனக்கு பிடித்தது கங்காரு சரணாகதி முறை. :-) தாயும் சிரமப்பட வேண்டாம். குட்டியும் சிரமப்பட வேண்டாம் பாருங்கள். சொல்லுங்க KRS பேரில ஒரு பேடண்ட் வாங்கிடலாம். :-)

    மூன்று தத்துவங்களுக்கும் அடிப்படை 'த்வைதமா?' ? பெயரிலேயே அப்படி இருக்கிறதே என்பதனால் கேட்டேன். த்வைதம் இருந்தால்தான் அத்வைதம் வரும் :-)

    இப்படி சின்னப் புள்ளத் தனமா கேள்விகள் கேட்டாலும் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பேன் என்று எச்சரிக்கிறேன். :-))

    ReplyDelete
  20. @கோவி அண்ணா
    //illusion, மாயை :)//

    இராமானுசர் ”மாயை என்ற ஒன்றே இல்லை! அனைத்தும் உண்மை தான்” என்றே துணிவார்.

    //காலசுழற்சியில் (பாற்கடல் சுழற்சியால் அமுதம் போல்) எல்லாம் தோன்றும் பின்பு அதற்குள்ளேயே அடங்கும்.//

    இதெல்லாம் போலி ஆசிரமத்தில், போலி பக்தர்களிடம் எடுபடும். ஆனா பதிவர்கள் கிட்ட எடுபடாது, தெரிஞ்சிக்கோங்க!

    பாற்கடல் சுழற்சியில் அமுதம் தோன்றி அங்கேயேவா அடங்கிச்சி? வயிற்றில் தானே அடங்கிச்சி?

    சுழற்சி என்றாலே இரு கட்சிகள் சண்டை, Instability, விஷம் என்று பலவும் தோன்றும் போல! நீங்க சுழற்சி ஏதாச்சும் பண்றீங்களா என்ன? :)

    ReplyDelete
  21. //உயிர்கள் அனைத்து வகைகளின் விந்தும் கருமுட்டையும் அதே வகையில் மட்டுமே கலந்து உயிர்களைத் தோற்றுவிக்க முடியும், குதிரையோ யானையோ கலக்கவே முடியாது. ஆன்மாக்களுக்கு மட்டும் இது பொருந்தாதா ?//

    மனிதனும் மனித உயிர்களை மட்டும் தானே தோற்றுவிக்கிறான்! குதிரையை அவனால் தோற்றுவிக்க முடிவதில்லையே!

    உங்கள் கேள்வியில் உள்ள "ஆன்மா" என்பது மனிதன் அல்ல! மனித ஆத்மா என்று சொல்வதே தவறு!

    //கடவுள் கான்சப்டுகள் (உருவவழிபாடு) முழுவதும் மனித வாழ்கையை ஒட்டியே அமையப்பெற்றிருக்கும் போது மனித ஆத்மா பல்வேறு உயிர்களாக(வும்) பிறக்கும் என்பது நம்பிக்கைக்குகந்த வேதாந்தமா //

    மனிதனுக்குத் தனியாக மனித-ஆத்மா என்ற ஒன்று கிடையாது!

    மனிதன் உருவாக்கிய கோட்பாடு என்றால் அது மனித நம்பிக்கைக்கு மட்டுமே உரிய வேதாந்தமாக இருக்கலாம்! ஆனால் மனிதன் "அறிந்து கொண்ட" கோட்பாடு அனைத்து உயிர்களையும் உள்ளடக்கியதே!

    ReplyDelete
  22. கோவி.கண்ணன் said...

    //நல்லது கெட்டது என்பதே அங்கு கிடையாது,....இவைதான் விலங்குவாழ்கை//

    வேறு ஏதோ விலங்கினங்களுக்குப் பாலூட்டுவது, எவ்வளவு பசித்தாலும் பெரும்பாலும் சொந்தக் குட்டியை மட்டும் அடித்துச் சாப்பிடாமல் இருப்பது...இதெல்லாம் என்ன?

    //செடிகொடிகளுக்கு தற்காத்துக் கொள்ளும் அமைப்பு கூட கிடையாது//

    தொட்டாச் சிணுங்கி, நிறம் மாறும் செடிகள், பனியில் இலை உதிர்வது ?????

    //விலங்கோ, செடிகொடிகளோ அவற்றின் செயல்கள் வினை என்ற வகைக்குள் செல்லாது என்றே நினைக்கிறேன்//

    விலங்குக்கும் அறிவு உண்டு! சுதந்திரம் உண்டு! வினைகள் உண்டு! ஆனால் அவை எதுவும் மனிதன் அளவுக்கு இல்லை!

    மனிதனால் மட்டுமே மனம்(ஆத்மா) என்ற ஒன்று இருப்பதை உணர முடியும்! விலங்கால் பெரும்பாலும் உணர முடிவதில்லை! அது மட்டும் தான் வேறுபாடு!

    பாவம் (தவறு) என்பது செய்த உடனேயே மனிதனுக்குத் தானே தெரிந்து விடும்! யாரும் தனியாகத் தீர்ப்பு எழுத வேண்டியதில்லை! அவன் மனமே எழுதி விடும்! :)

    இருந்தாலும் அகங்காரத்தால் சாதிப்பான்!
    இந்த அகங்காரம் மட்டும் தான் பிற பிறவிகளில் இல்லை! மற்றபடி வினைச் சுழற்சியில் அனைத்துமே ஆட்படுகின்றன!

    இதைத் தான் தேசிகர் கீழ்க்கண்டவாறு சொல்லுவார்...
    ஆத்மா=இறைவனுக்கு உரியது!
    உடல்=பிரகருதிக்கு(உலகம்) உரியது!
    அப்போ இடையில் நீ யாரு?...

    உடலும் ஜீவனுமாய் தானே இருக்கிறாய்?
    இரண்டுமே வேறு ஒன்றுக்கு உரியது என்றால்,அப்போ நீ யாரு?

    அகங்காரம் தான் நான்!
    =பிருதா அகங்கரணம் பர:!

    ReplyDelete
  23. //யாரோ ஒருவரை நாய் கடிக்கிறது என்றால் நாய் பாவம் செய்துவிட்டது என்று சொல்லிவிடமுடியுமா ?//

    யாரோ ஒருவனை நீங்கள் செல்லும் பஸ் மோதி விட்டால் நீங்கள் பாவம் செய்தவரா?
    இல்லை
    யாரோ ஒருவனை நீங்கள் செல்லும் ஸ்கூட்டர் மோதி விட்டால் நீங்கள் பாவம் செய்தவரா? :)))))

    ReplyDelete
  24. பதிவைப் (சரணாகதி) பற்றிய விவாதங்கள் காணோமே?

    அவரவர் அவரவர் எல்லைகளுக்கு படக் படக் என்று தாவி விட்டார்களே!

    லாங்-ஜம்ப்பில் வென்றவர் யாரு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? :))

    ReplyDelete
  25. //ambi said...
    வழக்கம் போல கலக்கல்.
    சரி, எனக்கு மோட்சம் கிடைக்குமா கேஆரெஸ் அண்ணா? :))//

    போச்சுடா!
    பதிவைப் படிக்கவே இல்லியா அம்பி? :-(

    ReplyDelete
  26. //மதுரையம்பதி said...
    ஊர் கூடிச் தேரிழுக்க முயல்கிறீர்கள். வாழ்த்துக்கள். 21NEEE என்று நான் சொல்வதை மெய்ப்பிக்கும் பதிவுகளை படிக்க ஆவலாயிருக்கிறேன். :-)//

    21NEEE ஆஆஆ?
    அலோ...அவர் வாதாடினால் எம்பெருமானே வந்து வாதாடுவது போல் இருக்குமாம்!
    இங்கிட்டு நான் வாதாடினால் பாலாஜி வாதாடுவது போல் கூட இருக்காது!
    ஹா ஹா ஹா!

    //படிக்க ஆவலாயிருக்கிறேன்//

    எழுதப் போறதே நீங்க தான்!
    Pl start reading the Sankara Bhashyam!

    ReplyDelete
  27. இலவசக்கொத்தனார் said...
    //இராமானுசர் பிறப்பால் சைவர்! ஒரு வேளை வைணவத்தில் வெவகாரம் பண்ணவே இவரு இங்கிட்டு வந்தாப் போலத் தெரியுதே!" :-)//

    இப்படியும் கொஞ்ச பேர்.
    இங்க இருக்கிற சில அசைவர்களைப் பத்தி என்ன சொல்ல?//

    ஹா ஹா ஹா!
    யாருப்பா அந்த அச்சைவப் பசங்க?

    சரி, பிறப்பால் வைணவர்!
    ஆனால் சைவத்தில் வெவகாரம் பண்ணவே வந்தாப் போல...இப்படி யாராச்சும் இருக்காங்களா ஹிஸ்டோரியில்? :)

    //டாலர் பதிவுக்கு எல்லாம் நானெல்லாம் உள்ளேன் ஐயா தான்//

    டாலர் இருந்தும் கூடவா?
    வேணும்னா "€€€" என்று போடவா? :)

    ReplyDelete
  28. //பதிவைப் படிக்கவே இல்லியா அம்பி? //

    Grrr!

    காலங்கார்த்தால உம்ம பதிவை ஒப்பன் பண்ணி படிச்சு, ஜிமெயில் இல்லாட்டியும், என் பெயரில் பின்னூட்டம் இட்டா, ஏன் கேக்க மாட்டீரு நீவீர்..? :))

    கீதா மேடம் மாதிரி நல்ல பதிவுனு சொல்லி இருக்கனுமோ? :p

    கடைசி லைன் வரைக்கும் படிச்சேனாக்கும். இருந்தாலும் ஒரு சந்தேகம், அதான் ஆழ்வார்கிட்ட கேட்டுடுவோம்!னு கேட்டேன். :)

    ReplyDelete
  29. //Kailashi said...
    சரணாகதி தத்துவத்தை, விசிஷ்டாத்வைதத்தின் சாரத்தை அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.//

    வாங்க கைலாஷி ஐயா! ரொம்ப நாளாச்சு உங்களைப் பந்தலில் பார்த்து! நலமா?

    //எல்லா மார்க்கங்களும் சரணாகதியைத்தான் பேசுகின்றன//

    :)

    //சீவனில் உள்ள ஆணவமான கொம்பை நீக்கி விட்டால் சீவன் சிவன் ஆகும் அதுவே சிவ சாயுஜ்யம் முக்தி நிலை//

    அருமையான விளக்கம்!

    //தங்கள் எழுத்தில் தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலை காண ஆவலாக உள்ளேன்//

    எல்லாரும் சேர்ந்து தான் பதில் தேடப் போறோம் கைலாஷி ஐயா!
    கோவி கண்ணன் தான் எங்க லீடர்!

    ReplyDelete
  30. //கவிநயா said...
    //என்ன...சில குழந்தைகள் வீட்டுக்கு அருகிலேயே ஆடுவதால், பொழுதோடு வீட்டுக்குப் போய் விடுகின்றன! சில குழந்தைகள் ஊர் சுற்றிகள்! வீடு வந்து சேரக் கொஞ்சம் தாமதம் ஆகிறது! அவ்வளவு தான்!//

    ஆஹா, அழகாச் சொன்னீங்க!//

    :)
    Child is the Father of Man!

    //ரெண்டும் வேறு வேறு நிலைகள்னு அடியேனுடைய சரணாகதி பற்றின குட்டிப் பதிவுல குமரன் சொன்னாரு... சேய்ப்பூனையின் நிலையே எனக்குப் பிடிச்சது :)//

    குமரன் சொன்னது மிகவும் சரியான பார்வை கவி அக்கா!
    சேய்ப்பூனையாகவே எப்பவும் இருக்க முடியாது! மாறிக்கிட்டே இருக்கும்!

    ReplyDelete
  31. //Expatguru said...
    எல்லாமே இறைவன் செயல் என்றால் மனிதனை பாவம் செய்ய தூண்டுவதும் இறைவன் செயலா? தானே மனிதனை பாவம் செய்ய வைத்து விட்டு தானே அதற்குண்டான தண்டனையை கொடுக்கிறானா இறைவன்? புரியவில்லையே, கொஞ்சம் விளக்குங்களேன்//

    வாங்க Expatguru. இதுக்கும் முன் சொன்ன பெற்றோர்-குழந்தை உவமையே எடுத்துக் கொள்ளலாம்!

    வீட்டில் பல பொருட்களை வாங்கி வைக்கிறார் தகப்பனார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவைக்கு! பால் சமையல் அறையில் இருக்கு! பினாயில் இன்னொரு அறையில் இருக்கு!

    இரண்டுமே தகப்பன் செயல் தான்! ஆனால் குழந்தை ஒன்றை மட்டும் "அறியாமலோ/அறிந்தோ" குடிப்பது தகப்பன் செயல் அல்ல! அது குழந்தையின் வேட்கை! குழந்தைக்கு அந்த இடத்தில் ஸ்வதர்மம்/ மனோதர்மம்/ சுதந்திரம் உண்டு! அதனால் வரும் வினைப் பயன்களை அது ஏற்றுக் கொள்கிறது!

    குடிக்கும் முன்னர் குழந்தையைத் தடுக்க வேண்டியது தானே என்று கேட்டு விடாதீர்கள்! ஒரு உவமைக்காகச் சொன்னேன்.

    சாரம் என்னவென்றால்:
    உயிர்களுக்கும் சுதந்திரம் உள்ளது! அந்தச் சுதந்திரத்தால் வினை ஆற்றும் போது, தானே பிறவிக் கடலில் வருவதும் போவதுமாய் உள்ளன!

    இறைவனுக்கு அதையும் கடந்த சுதந்திரம் உண்டு என்றாலும்,
    இந்தச் சுதந்திரத்தில் அந்தச் சுதந்திரம் "தேவை ஏற்பட்டால் அன்றித்" தலையிடுவதில்லை!

    அடியேன் பதிவில் சொல்ல வந்தது:
    சரணாகதி செய்யும் போது, அந்தத் தேவை ஏற்பட்டு, தலையீடு நடக்கின்றது என்பதே! :)

    ReplyDelete
  32. //சின்ன அம்மிணி said...
    எனக்கு எப்ப மோட்சம் கிடைக்கும்? Just like the Jnanamudra says, when self separates from Mind, Body and Senses and joins with the limiless (being God). அப்படீங்கறது என் புரிதல்//

    உம்...
    Separation from mind, body & senses = very true!

    But how can self do that?
    Does self desire "that" in 1st place?
    If desired, how can it do? Has it any tools?

    //உங்க விளக்கங்கள் படிச்சு இன்னும் நிறைய புரிஞ்சுக்கறேன்//

    என் விளக்கங்கள் அதிகம் இல்லை அக்கா! அத்தனையும் ஆழ்வார்-ஆச்சாரியர் விளக்கங்கள்!

    //இன்னொரு கேள்வி மோட்சம் அடைய ஞானம் தேவையா??//

    மோட்சம்-ன்னு ஒன்னு இருக்கு என்ற ஞானம் கூடத் தேவை இல்லை! :)

    சின்ன அம்மிணி யக்கா...
    சென்ற பதிவை இன்னொரு முறை வாசித்து வந்து விடுங்கள்! உங்களுக்கே கொஞ்சம் ஈசியா இருக்கும்! நீங்களே பதிலைச் சொல்லிடுவீங்க!

    ReplyDelete
  33. //ஸ்ரீதர் நாராயணன் said...
    உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கின்றது. அருமை. அருமை//

    :)

    //மற்ற கேள்விகளுக்கான பதில்களுக்காக வெயிட்டிங்//

    நானும் தான் அண்ணாச்சி!

    //குரங்கு, பூனை சரனாகதிகளை விட எனக்கு பிடித்தது கங்காரு சரணாகதி முறை. :-)//

    சூப்பரு!
    Where is the patent form? Fill it right now! :)
    Teacher...help please...

    Kang-ga-roo=I dont know (I dont understand)
    ஆத்ம ஞான விலங்கு கங்காரு வாழ்க! வாழ்க!

    எங்கள் ஸ்ரீதர் காருவை, "கங்காரு சித்தர்" என்று இந்த வையம் கொண்டாடுவதாகுக!

    ReplyDelete
  34. @ஸ்ரீதர்

    //மூன்று தத்துவங்களுக்கும் அடிப்படை 'த்வைதமா?' ? பெயரிலேயே அப்படி இருக்கிறதே என்பதனால் கேட்டேன். த்வைதம் இருந்தால்தான் அத்வைதம் வரும் :-)//

    அ+த்வைதம் = அல்ல+இரண்டு
    விசிஷ்ட அ+த்வைதம் = தனித்தன்மையான அத்வைதம்

    எல்லாமே த்வைதம் என்ற பொருளில் தான் விசாரணையைத் தொடங்குகின்றன! ஏன் என்றால் கண்ணுக்குத் தெரிவது த்வைதம்! இரண்டு நிலைகள்!

    பெயரில் த்வைதம் இருப்பதால், த்வைதம் தான் ஆதாரம்-னு சொல்லிட முடியாது!
    இரண்டுமே த்வைத மறுப்பு தான்!

    பழைய கதை தான்!
    Scientific Heat is for both heat/cold. Luminuous Intensity is there for darkness as well :)
    நாஸ்தியில் இருந்து தானே ஆஸ்தி வருது?

    //இப்படி சின்னப் புள்ளத் தனமா கேள்விகள் கேட்டாலும் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பேன் என்று எச்சரிக்கிறேன். :-))//

    இம்புட்டு அருமையாக் கேள்வி கேட்டு போட்டு இது சி.பு.தனமா?
    கங்காரு சித்தரே, அடுக்குமா இது? :)

    ReplyDelete
  35. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    வேறு ஏதோ விலங்கினங்களுக்குப் பாலூட்டுவது, எவ்வளவு பசித்தாலும் பெரும்பாலும் சொந்தக் குட்டியை மட்டும் அடித்துச் சாப்பிடாமல் இருப்பது...இதெல்லாம் என்ன?//



    எதோ ஒன்றிரண்டு அதாவது ஒரு நாய் ஆட்டுக்குட்டிக்கு பாலூட்டி இருக்கலாம், நாய்கள் எல்லாமும் ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டுவதில்லை. சொந்தக் குட்டியை பாம்பு விழுங்கவில்லை என்றால் உலகமும் முழுவதும் பாம்புகளாகத்தான் அலையும். இதெல்லாம் இயற்கையில் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏற்படுத்திய அமைப்பு. இதில் பாவ புண்ணியமெல்லாம் எதுவுமே கிடையாது.



    //தொட்டாச் சிணுங்கி, நிறம் மாறும் செடிகள், பனியில் இலை உதிர்வது ?????//



    தொட்டாச் சிணுங்கி தற்காத்துக்கொள்கிறதா ? கல்லைக் கண்டால் நாய் ஓடுவது போல் தொட்டாச்சினுங்கி ஓடாதுங்க :) அது தற்காப்பு அமைப்பு அல்ல, மழைத்துளி அதன் மீது விழுந்தால் கூட சுறுங்கும், இயற்கையின் படைப்பில் அது ஒருவகை செடி அவ்வளவுதான், சுறுங்குவது தற்காத்துக் கொள்ள என்று எப்படிச் சொல்கிறீர்கள் ? சுறுங்கினால் காத்துக் கொள்கிறதா ?

    //
    விலங்குக்கும் அறிவு உண்டு! சுதந்திரம் உண்டு! வினைகள் உண்டு! ஆனால் அவை எதுவும் மனிதன் அளவுக்கு இல்லை!//



    விலங்குகளுக்கு அறிவு என்று சொல்வதைவிட அவற்றிற்கு புலன்களின் நீட்சி மிகுதி, மனித குரங்கு கிழங்குச்செடியின் மண்ணை நீரில் அலசிவிட்டு கிழங்கைத் தின்பதைப் பார்த்து இருக்கிறேன். அதே குரங்குகள் ஒரு குச்சியை புற்றில் நுழைத்து அதில் ஒட்டிக் கொண்டு வரும் கரையானை திண்பதைப் பார்த்திருக்கிறேன். அவற்றை அறிவு என்று சொல்ல முடியாது, அவற்றிற்கு இருக்கும் எல்லைக் குட்பட்ட திறன்களில் அதுவும் ஒன்று. இதைக் கற்றுக் கொண்டு வருவதில்லை. ஒரே ஒரு குரங்கு குட்டி தனித்து காட்டில் வசித்தாலும் இவற்றையெல்லாம் செய்யும். பருந்தைக் கண்டவுடன் தாய் கோழியினுள் ஒடுங்கும் கோழிக்குஞ்சும் கூட அப்படித்தான். அதனுடைய எதிரி எது என்பது அதன் மரபனுவிலேயே புதைந்திருக்கிறது, அவற்றின் செயல்களும் அப்படியே. உணவுகிடைக்கும் என்ற ஒப்பந்தத்தில் சொல்லிக்கொடுத்தால் அதனை விலங்குகள் செய்யும். ஒரு தாய் கரடி கயிற்றில் நடந்தால் அதன் குட்டியும் அப்படியே சொல்லிக் கொடுக்காமல் நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. சொல்லிக் கொடுத்தால் பின்பற்றும். அதை அறிவுத்திறன் என்று சொல்லமுடியாமா ?


    //

    இதைத் தான் தேசிகர் கீழ்க்கண்டவாறு சொல்லுவார்...
    ஆத்மா=இறைவனுக்கு உரியது!
    உடல்=பிரகருதிக்கு(உலகம்) உரியது!
    அப்போ இடையில் நீ யாரு?...
    //

    கிட்டதட்ட விசிட்டாத்வைதம்(?) பற்றி பேசுகிறீர்கள், தத்துவங்களில் அது ஒன்று ஆனால் அதுவே உண்மை என்றால்லாம் சொல்லிவிட முடியாது, புதிய தத்துவங்கள் தோன்றுவதற்கான காரணம் முன்பு தோன்றியவை எதுவும் ஒரு முடிவை எட்டவில்லை என்பதே.
    நீங்கள் ஒரு கொள்கையோடு இதனை அனுகுவதால் நான் சொல்வது எதுவும் எடுபடாது, எடுபடவைக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. மாற்றுக் கருத்து அம்புட்டுதான்.


    //உடலும் ஜீவனுமாய் தானே இருக்கிறாய்?
    இரண்டுமே வேறு ஒன்றுக்கு உரியது என்றால்,அப்போ நீ யாரு? //



    உடலும் ஜீவனமாக இருக்கும் போது 'தன்' உணர்வு இருக்கும், ஜீவனுடன் உடல் இல்லாவிட்டால் உடலும் ஜீவனுமாக இருப்பதையோ, ஜீவனையோ கூட உணரமுடியாது. உடலிலிருந்து உயிர்பிரிவு என்பது பெளதீக விதிகளுக்குட்பட்டது, எதோ ஒரு காரணத்தால், விபத்தாலோ உடல் நலிவுற்று உயிர் அதில் தங்க முடியாது என்ற நிலையில் வழியின்றி இரண்டும் பிரிவதே மரணம் என்கிறார்கள். உடல் வெறும் பஞ்சபூத கலப்புதானே, ஜீவனற்ற உடலோ, உடலற்ற ஜீவனோ இயக்கம் என்பதை உணரவே உணராது. அப்போது அந்த ஜீவன் (ஆன்மா) காலம் (Time) என்பதையே உணராது

    ReplyDelete
  36. //சின்ன அம்மிணி said...
    இதுக்கு பதில் தெரிஞ்சா நாமெல்லாம் எங்கியோ இருந்திருப்போம்னு நீங்க சொல்லறது கேக்குது//

    ஹிஹி
    பதில் இருக்கு சின்ன அம்மிணியக்கா!
    நீங்க ஏதோ ஒரு வகுப்பு-ன்னு சொன்னீங்களே! அதுலயே இருக்கு! :)

    நூலறிவை நாம் தான் மாத்தி மாத்திப் படிச்சிக் குழப்பிக்கறோம்!
    ஆனா நூல் குழம்பறதே இல்லை! :)

    "தான் கற்ற" நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு! :)

    ReplyDelete
  37. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //யாரோ ஒருவரை நாய் கடிக்கிறது என்றால் நாய் பாவம் செய்துவிட்டது என்று சொல்லிவிடமுடியுமா ?//

    யாரோ ஒருவனை நீங்கள் செல்லும் பஸ் மோதி விட்டால் நீங்கள் பாவம் செய்தவரா?
    இல்லை
    யாரோ ஒருவனை நீங்கள் செல்லும் ஸ்கூட்டர் மோதி விட்டால் நீங்கள் பாவம் செய்தவரா? :)))))//

    நான் உயிருள்ளவற்றைப் பற்றித்தான் பேசுகிறேன். நான் சொன்னது விலங்குகளின் செயலுக்கு எதிர்வினையோ, வினையோ கிடையாது, அப்படியே இருந்தாலும் கடிபட்ட மனிதன் (எல்லோரும் அல்ல) அதனை கொல்ல முயல்வான். மேனகா காந்தி போன்றவர்கள் விலங்கு மருத்துவமனைக்கு நாயை அழைத்துச் செல்வார்கள்.

    யாரோ ஒருவனை அல்ல, எந்த விபத்தும் இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டதே, நெருப்பில் கைவைத்தால் சுடத்தான் செய்யும், நெருப்பில் கைவைப்பதை எப்படி பாவ புண்ணியம் என்றெல்லாம் வகைப்படுத்துவீர்கள் ? மனதறிந்து விருப்பத்துடன் செய்யும் செயல்களின் தொகுதி நன்மை தீமை என்று வகைப்படுத்தப்பட்டால் புண்ணியம் / பாவம் பற்றியெல்லாம் சொல்ல முடியும். விபத்துக்களை எவ்வாறு அப்படிச் சொல்ல முடியும் ? விபத்துக்கள் இயற்பியல் விதிகளின் சேர்கையால் நடைபெறுவதே. அதற்கும் பாவ/புண்ணியத்திற்கும் தொடர்பு இல்லை என்றே நினைக்கிறேன். மனதைச் செலுத்தி (Will) செய்யப்படும் செயல்களே கர்மவினைக்குட்பட்டது.

    எத்தகைய உயரிய ஆன்மிக அனுபவம் பெற்றவராக இருந்தாலும் அவரை நெருப்பினுள் கைவைக்கச் சொல்லுங்கள், சுடுகிறதா இல்லையா என்பது தெரியும். கண்டிப்பாக சுடும், உடல் பஞ்சபூதங்களால் ஆனது, நெருப்பும் அதில் ஒன்று இதன் சேர்கையில் விரல் பொசுங்குவது என்பது இயற்பியல் விதி.

    ReplyDelete
  38. ambi said...
    //Grrr!//

    Is This tom or jerry? or jerry's poli?? :)

    //கடைசி லைன் வரைக்கும் படிச்சேனாக்கும். இருந்தாலும் ஒரு சந்தேகம்//

    ambi in style!
    இது இது இது தான் அம்பி கிட்ட புடிச்சது! :)

    ReplyDelete
  39. @கோவி அண்ணா
    சூப்பர் விவாதம்!

    //மனதைச் செலுத்தி (Will) செய்யப்படும் செயல்களே கர்மவினைக்குட்பட்டது//

    மனதைச் செலுத்திச் செய்யப்பட்ட செயல் என்று எப்படி அறிவது?
    அதையும் மனம் தானே சொல்ல வேண்டும்?
    அவனைப் பற்றி அவனே சாட்சியம் கொடுக்கலாமா? :))

    //எத்தகைய உயரிய ஆன்மிக அனுபவம் பெற்றவராக இருந்தாலும் அவரை நெருப்பினுள் கைவைக்கச் சொல்லுங்கள், சுடுகிறதா இல்லையா என்பது தெரியும். கண்டிப்பாக சுடும்//

    மிகவும் உண்மை!
    சுடக் கூடாது! சுடாமல் இருந்தால் தான் "உயரிய ஆன்மிக அனுபவம் பெற்றவர்" என்று நினைப்பது தான் பிரச்சனை!

    அனைவரும் இயற்பியில் விதிகளுக்கு உட்பட்டவர்கள் தான்! விதிகளை மீறும் சில பல வித்தையைத் தெரிந்து வைத்திருந்தாலும், இயற்பியல் விதிகளுக்குத் தம்மை உட்படுத்திக் கொள்பவர்களே "உயரிய ஆன்மிக அனுபவம் பெற்றவர்"!

    ReplyDelete
  40. அருமை...

    //உங்கள் அறிவினால் மட்டுமே, அரியவனை, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்! வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!//

    இது ரொம்ப அருமையா வந்துருக்கு...

    ReplyDelete
  41. //Pl start reading the Sankara Bhashyam! //

    அட மக்கா!, ஏதோ தெரியாம 1-2 கேள்விகள் கேட்டதுக்கு இது மாதிரி வேலை வேற செய்யணுமா. :-)

    ReplyDelete
  42. வழக்கம் போல சில சந்தேகங்கள்...

    //நாமே முயன்று அறிவினால் தேடி அறிந்தோம்! இந்த அகங்காரத்துக்கும் உங்கள் ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்! ஆனால் அவற்றால் காலத்துக்கும் உங்கள் பசியை ஆற்ற முடியாது!//

    இது ஞான யோகம் தானே?

    கர்ம யோகிகளுக்கும் இது ஒத்து வருமா?

    யாரை பற்றியும் அதிகம் கவலைப்படாமல் தன் கடமையை மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பவர்களுக்கு செருக்கு வரும்னு நினைக்கறீங்களா?

    இல்லை அப்படி இருக்கறவங்களும் பக்தி யோகத்துக்குள்ள வந்து தான் வைகுண்டம் புகுவார்களா???

    @ அம்பி,

    //உங்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!"//

    //* குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டு இருக்கின்றன! ஆட்டம் முடிந்தால் அவை வீட்டுக்குத் தானே போக வேண்டும்?
    ** என்ன...சில குழந்தைகள் வீட்டுக்கு அருகிலேயே ஆடுவதால், பொழுதோடு வீட்டுக்குப் போய் விடுகின்றன! சில குழந்தைகள் ஊர் சுற்றிகள்! வீடு வந்து சேரக் கொஞ்சம் தாமதம் ஆகிறது! அவ்வளவு தான்!//

    உங்க கேள்விக்கு இது தான் பதில்னு நினைக்கிறேன் :-))

    எல்லாருக்கும் தசவதாரம் டிக்கெட் கிடைக்கும். ஆனால் யாருக்கு முதல் நாள் கிடைக்கும்னு தெரியாது :-))

    ReplyDelete
  43. //எது அடிப்படை? = எம்பெருமானின் "அடிப்"-படையே அடிப்படை!//

    அட்டகாசம்...

    ReplyDelete
  44. //அதனால் இந்தப் பொருளில் பேசப் போகும் பதிவுகளை எல்லாம் "$$$" என்று தலைப்பில் குறிப்பேன்! இதையே அவரவர் எச்சரிக்கை மணி/ஆராய்ச்சி மணியாக எடுத்துக் கொண்டு வருவதும் வராமலும் போகலாம்! :)//

    ரொம்ப டாங்க்ஸ்...

    மீ தி எஸ்கேப்பு :-)

    ReplyDelete
  45. @கோவி அண்ணா
    //இதெல்லாம் இயற்கையில் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏற்படுத்திய அமைப்பு. இதில் பாவ புண்ணியமெல்லாம் எதுவுமே கிடையாது//

    யாருக்குக் கிடையாது? :)
    மனிதனுக்கு வேண்டுமானால் கிடையாது என்று தோன்றலாம்!

    மனிதன் மனிதனை வெட்டிக் கொல்வதும் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏற்படுத்திய அமைப்பு என்று ஒரு ஏலியன் கருதலாம் அல்லவா? Any Sci-Fi Story? :))

    //கல்லைக் கண்டால் நாய் ஓடுவது போல் தொட்டாச்சினுங்கி ஓடாதுங்க :)//

    ஓடினால் தான் தற்காப்பு என்று நீங்கள் கருதுவது தான் புரிதல்.

    பல செடிகள் தற்காத்துக் கொள்ள அமிலம் உமிழும். பூச்சிகளைப் பிடித்து உண்ணும் செடிகள் கூட உண்டு! (Utricularia)!
    தற்காத்துக் கொள்ளும் திறன் அவற்றுக்கு "இயற்கை" அமைப்பு கொடுத்திருந்தாலும்...அவை எந்நேரமும் அமிலம் உமிழ்வதில்லை! தீங்கு வரும் போது மட்டுமே தற்காத்துக் கொள்கின்றன!

    தீங்கு என்று அறியும் சக்தி உள்ளது அல்லவா? வினை ஆற்றும் சக்தியும் உண்டு!

    அந்த வினைகள் பாவ-புண்ணியம் என்ற அமைப்பில் அடக்குவதும் அடக்காததும் மனிதன் definition! ஆனால் அனைத்து உயிர்களும் விழைவுக்கு ஏற்ப வினை ஆற்றிக் கொண்டு தான் இருக்கின்றன! வினைகளின் பலன்கள் தானாக நடந்து கொன்டு தான் இருக்கு!

    //ஒரு தாய் கரடி கயிற்றில் நடந்தால் அதன் குட்டியும் அப்படியே சொல்லிக் கொடுக்காமல் நடக்கும் என்று சொல்லிவிட முடியாது//

    நீங்களே உடன்படவும் செய்து, மறுக்கவும் செய்கிறீர்கள்! :)

    பருந்தைக் கண்டு பதுங்கும் குணம் கோழிக்குஞ்சுக்கு ஜீனில் உள்ளது என்கிறீர்கள்!
    கரடிக்கு கயிற்றின் மேல் நடக்கும் பழக்கம் சொல்லிக் கொடுத்து வருவது என்றும் சொல்கிறீர்கள்!

    பருந்தைக் கண்டு பதுங்கும் குணம் ஏன் பச்சைக் குழந்தைக்கு இல்லை?

    பிறந்து ஒரு மணி நேரமே ஆன கோழிக் குஞ்சு பருந்தைக் கண்டு பதுங்குமா?

    ReplyDelete
  46. excuse me sir,

    அடியேன் உள்ளே வரலாமா, ஐயா?

    பெரியவா எல்லாம் ஏதேதோ பேசிண்டு போறேள். அடியேன், அத்தனை பதிவையும் படிப்பதால் நீங்கள் சொல்வதும் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக விளங்க ஆரம்பிக்கிறது.

    ஆனாலும், நேக்கு ஒரு சின்ன சந்தேகம்.....

    தயவுசெய்து, அருள்கூர்ந்து அடியேனுக்கு விளக்குவீராக....

    மோட்சம் என்றால் என்ன? அது, எங்கு இருக்கிறது? அதை நாம் எப்படி உணர முடியும்?

    இதுதான் ஐயா, எனக்குப் புரியாத ஒன்றாக இருக்கிறது.

    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே....

    மண்ணில் பிறந்த அனைவரும் வைகுந்தம் செல்லலாம். ஆனால், அது என்னவென்று தெரியலையே... வைகுந்தம் செல்வதால் என்ன பயன்?

    தயவுசெய்து, என் கேள்வி குதர்க்கமாக இருக்கிறது என்று எண்ணினால், அடியேனை மன்னிச்சிடுங்கோ. என் அறியாமையால் தான் நான் கேட்கிறேன். நான் ஆன்மீகப் பாடங்களுக்குப் புது மாணவன்.... அதனால்தான் ஒன்றும் விளங்காமல், விளக்க சொல்லிக் கேட்கிறேன்.

    ஏதேனும் பிழை இருந்தால், பெரிய மன்னிப்புக் கேட்கிறேன்....

    ReplyDelete
  47. //@கோவி அண்ணா
    சூப்பர் விவாதம்!

    மனதைச் செலுத்திச் செய்யப்பட்ட செயல் என்று எப்படி அறிவது?
    அதையும் மனம் தானே சொல்ல வேண்டும்?
    அவனைப் பற்றி அவனே சாட்சியம் கொடுக்கலாமா? :)) //

    மனது தூண்டுதலால் செய்யப்படுவையே அவை, அதையும் மனது தானே தூண்டவேண்டும் ? சும்மா தூண்டிவிடாது, கடந்தகால அனுபவம், எதிர்கால எதிர்பார்ப்பு, பலன் இவற்றின் எண்ணமே அந்த தூண்டலைத் தரும். நன்மை தீமை பார்க்கும் எண்ண அலைகளே அந்த தூண்டுதலுக்கான காரணம், ஆன்மா என்பதின் உட்பிரிவுகளாக மனம், புத்தி, சமஸ்காரம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், எண்ண அலைகளை உற்பத்தி செய்வது மனம், அதற்கான காரணம் சொல்லிவிட்டேன். அதனை செய்வதா ? வேண்டாமா ? என்று தீர்மானிப்பது புத்தி, அந்த செயலின் முடிவினால் கிடைக்கும் பலனின் (பலனல்ல)பதிவே சமஸ்காரம் அல்லது
    கர்மா என்று(ம்) சொல்கிறார்கள், இம்மூன்றின் தொகுப்பே ஆன்மா. :)


    //மிகவும் உண்மை!
    சுடக் கூடாது! சுடாமல் இருந்தால் தான் "உயரிய ஆன்மிக அனுபவம் பெற்றவர்" என்று நினைப்பது தான் பிரச்சனை!//

    நானும் அப்படிச் சொல்லவில்லை. யாராக இருந்தாலும் சுடும் என்பதற்காக சுட்டிச் சொன்னேன் :)

    ReplyDelete
  48. //கிட்டதட்ட விசிட்டாத்வைதம்(?) பற்றி பேசுகிறீர்கள்//

    போச்சு!
    தேசிகர் என்று சொன்னதால் வந்த எஃபெக்ட்டோ? எல்லாமே பேசப்படும் என்று சொல்லி உள்ளேனே கோவி அண்ணா! பார்க்கலையா?

    //தத்துவங்களில் அது ஒன்று ஆனால் அதுவே உண்மை என்றால்லாம் சொல்லி விட முடியாது//

    அப்படி நான் சொல்லவே இல்லையே!

    //புதிய தத்துவங்கள் தோன்றுவதற்கான காரணம் முன்பு தோன்றியவை எதுவும் ஒரு முடிவை எட்டவில்லை என்பதே//

    முன்பு தோன்றியதை வைத்துக் கொண்டு "தான்" ஒரு முடிவையும் எட்டவில்லை என்பதனால் கூட இருக்கலாம்! :)

    //நீங்கள் ஒரு கொள்கையோடு இதனை அனுகுவதால் நான் சொல்வது எதுவும் எடுபடாது//

    இல்லை!
    நான் விசிட்டாத்துவைதக் கொள்கையில் இதை அணுகப் போவதில்லை! அந்தக் கொள்கைக்கும் ஒரு எல்லை உண்டு! அதை அடியேனும் அறிவேன்! நீங்களும் அறிவீர்கள்! அந்தக் கொள்கையும் அறியும்! :)

    //உடலும் ஜீவனமாக இருக்கும் போது 'தன்' உணர்வு இருக்கும், ஜீவனுடன் உடல் இல்லாவிட்டால் உடலும் ஜீவனுமாக இருப்பதையோ, ஜீவனையோ கூட உணரமுடியாது//

    :)
    உடல் இல்லாத போதும், ஜீவன், தான் ஜீவன் என்பதை உணர முடியும்!

    ReplyDelete
  49. //அப்போது அந்த ஜீவன் (ஆன்மா) காலம் (Time) என்பதையே உணராது//

    போச்சு! தலைப்பை விட்டு விட்டு ரொம்ப தூரத்துக்கு வந்து விட்டோம்!
    நான் ஒன்னு சொல்லட்டுமா அண்ணா?

    பல விடயங்களைப் படிச்சி வச்சிருக்கீங்க! அதில் பலப்பல தேடல்கள், ஐயங்கள், லாஜிக் சறுக்கல்கள்!

    ஏதோ ஒரு சமயம் வரும் போது, அவை அத்தனையும், பீர் பாட்டில் (மடை) திறந்த வெள்ளம் போல், உங்களுக்குப் பொங்கி விடுகிறது!

    நீங்கள் அறிவு சார்ந்த Approach!
    சிலர் மனம் (பக்தி) சார்ந்த Approach!சிலருக்கு ரெண்டுமே வேண்டும்!
    ஒவ்வொரு தலைப்பாகக் கொண்டால் தான் ஏதுவாகும்! ஒவ்வொன்றாய்க் கொள்வோம்!

    சரி உங்களுக்குச் சில கேள்விகள்....
    1. நீங்க இந்தக் கேள்விகளை எல்லாம் எழுதி எழுதிக் கேட்பதற்குப் பதிலாக, தக்க ஒரு அறிஞரிடமோ, நல்ல ஒரு குருவினிடமோ பேசி உள்ளீர்களா?

    2. அப்படிப் பேசி உண்மையைத் தெரிந்து கொண்டால், அந்த உண்மையை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்? :)

    3. அதான் உண்மையை அறிந்து கொண்டாயே, இனிப் பொய்யில் கால் வைக்காதே என்றால் வைக்காமல் இருப்பீர்களா? அதற்கான துணிபு இருக்கா? :))))))

    ReplyDelete
  50. @வெட்டி
    //எல்லாருக்கும் தசவதாரம் டிக்கெட் கிடைக்கும். ஆனால் யாருக்கு முதல் நாள் கிடைக்கும்னு தெரியாது :-))//

    அப்படியே கிடைச்சாலும், கொஞ்சம் லேட்டானாக் கூட, ரங்கராஜ நம்பி சீனை அனுபவிக்க முடியாது!

    ஜாக்கெட் போடாத அசின் காட்சி மட்டுமே ஆறுதல் பரிசாகக் கிடைக்கும்! :))

    ReplyDelete
  51. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    @கோவி அண்ணா

    யாருக்குக் கிடையாது? :)
    மனிதனுக்கு வேண்டுமானால் கிடையாது என்று தோன்றலாம்!

    மனிதன் மனிதனை வெட்டிக் கொல்வதும் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏற்படுத்திய அமைப்பு என்று ஒரு ஏலியன் கருதலாம் அல்லவா? Any Sci-Fi Story? :))//


    இருப்பதை, தெரிந்ததை வைத்துப் பேசுவோம், கற்பனையானவற்றிற்கு கற்பனையான பதில் தான் சொல்ல முடியும், அது சரியாகவும் இருக்காது. :)

    //ஓடினால் தான் தற்காப்பு என்று நீங்கள் கருதுவது தான் புரிதல்.

    பல செடிகள் தற்காத்துக் கொள்ள அமிலம் உமிழும். பூச்சிகளைப் பிடித்து உண்ணும் செடிகள் கூட உண்டு! (Utricularia)!
    தற்காத்துக் கொள்ளும் திறன் அவற்றுக்கு "இயற்கை" அமைப்பு கொடுத்திருந்தாலும்...அவை எந்நேரமும் அமிலம் உமிழ்வதில்லை! தீங்கு வரும் போது மட்டுமே தற்காத்துக் கொள்கின்றன!

    தீங்கு என்று அறியும் சக்தி உள்ளது அல்லவா? வினை ஆற்றும் சக்தியும் உண்டு!//

    உள்ளங்கை அரித்தால் சொறிவதை எப்படி வினை ஆற்றுவது என்று சொல்வீர்கள், அது ஒரு தன்னிச்சையான / அனிச்சையான செயல். அங்கு செடியில் சுரக்கும் அமிலமும் அப்படித்தான். நம்மீது ஈ உட்கார்ந்தால் அனிச்சையாக தட்டிவிடுவது போன்ற அமைப்பு. மற்ற செடிகளைவிட தொட்டாச்சினுங்கிக்கு தொடு உணர்வினால் உடனடியாக இலையில் மாற்றம் தெரிகிற அமைப்பு இருக்கிறது. முட்கள் பாதுகாப்புக்கு என்று சொல்லலாம், ஆனால் அதை செடிகள் தேவையான போது பயன்படுத்தாது, பாதுக்காப்புக்காக இயற்கை வைத்திருக்கும் ஒரு அமைப்பே. விலங்குகள் தேவையான போது கொம்பு, விஷம், பற்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றன.

    //அந்த வினைகள் பாவ-புண்ணியம் என்ற அமைப்பில் அடக்குவதும் அடக்காததும் மனிதன் definition! ஆனால் அனைத்து உயிர்களும் விழைவுக்கு ஏற்ப வினை ஆற்றிக் கொண்டு தான் இருக்கின்றன! வினைகளின் பலன்கள் தானாக நடந்து கொன்டு தான் இருக்கு!//

    தியரிகெளெல்லாம் மனிதனுக்குத்தானே, மனிதனை வைத்துதானே பிறவற்றைப் பேசுகிறோம். டெபனேசன் என்று வெறும் சொற்களில் அடக்கிவிட முடியுமா ? விலங்குகள், செடிகள் விழைவுக்கு ஏற்ப வினை ஆற்றுகின்றன என்று நீங்கள் அவற்றின் செயல்களையே வினை என்கிறீர்கள், செயல்களைச் செய்தபின் அதன் பகுப்பு அதாவது நாம் மேலே பாவ/புண்ணியம் பற்றிபேசிக் கொண்டிருந்தோம்.

    //ஒரு தாய் கரடி கயிற்றில் நடந்தால் அதன் குட்டியும் அப்படியே சொல்லிக் கொடுக்காமல் நடக்கும் என்று சொல்லிவிட முடியாது நீங்களே உடன்படவும் செய்து, மறுக்கவும் செய்கிறீர்கள்! :)//

    சொல்லிக் கொடுத்தால் செய்யும், சும்மா செய்துவிடாது, அடிக்கு பயந்து தற்காத்துக் கொள்ள செய்யும், இல்லை என்றால் உணவு கிடைக்கும் என்பதற்காகச் செய்யும், நான் சொன்னதை நான் மறுக்கவில்லை, அப்படி அது செய்வது போன்றே அதன் குட்டியும் அதே போன்ற நிபந்தனையின்றியோ, பயிற்சி இல்லாமலோ செய்துவிடாது என்றேன்.

    //பருந்தைக் கண்டு பதுங்கும் குணம் கோழிக்குஞ்சுக்கு ஜீனில் உள்ளது என்கிறீர்கள்!
    கரடிக்கு கயிற்றின் மேல் நடக்கும் பழக்கம் சொல்லிக் கொடுத்து வருவது என்றும் சொல்கிறீர்கள்!

    பருந்தைக் கண்டு பதுங்கும் குணம் ஏன் பச்சைக் குழந்தைக்கு இல்லை?//


    வளர்ந்த மனிதன் தன் எதிரி என்று எதையும் வகைப்படுத்துவது, அதனால் ஏற்படும் முன் அனுபவமே, அதுவும் தனித்தனியான அனுபவம், எல்லோருமே பாம்பைக் கண்டு ஓடுவதில்லை. அப்படிப்பார்த்தால் எந்தவிலங்கும் மனிதனுக்கு எதிரிகிடையாது. அவற்றின் இடத்துக்குச் சென்றால், அவற்றிற்கு ஊறுவிளைத்தால் மட்டுமே அவை தாக்க வரும் என்பது மனிதனுக்கு வளர்ந்த பிறகுதானே தெரிகிறது. அறிவு வளர்ச்சியில் இருக்கும் குழந்தைக்கு இவை எப்படி தெரியும் ?


    குழந்தைபருவத்திற்கு உள்ள அறிவு வளர்ச்சியில் தான் அனைத்து விலங்குகளுமே அதனதன் குழந்தைபருவத்தில் செயல்படுகின்றன. 1 மாதம் ஆனதும் தான் கோழிக்குஞ்சு குப்பையை கிளரவே ஆரம்பிக்கும், இயற்கையின் எதிர்பாராத மாறுதல்கள் தவிர பொது எதிரி என்று மனிதனுக்கு எதுவும் இல்லை. திடிரென்று பயங்கர இடி இடித்தால் குழந்தை அழத்தான் செய்யும். அந்த அளவுக்குத்தான் அதன் பாதுக்காப்புக்கு அது ஆற்றும் எதிர்செயல்.


    //பிறந்து ஒரு மணி நேரமே ஆன கோழிக் குஞ்சு பருந்தைக் கண்டு பதுங்குமா?//

    பிறந்தவுடனேயே நீந்தும் மீன்குஞ்சுகள் போன்றுதான், பிறந்து ஒருமணிநேரத்தில் அது வெட்டவெளிக்குக் கூட்டிவரப்பட்டால் கண்டிப்பாக பருந்தைக் கண்டு நடுங்கும்.

    ReplyDelete
  52. @வெட்டி & ஆல் பதிவர்கள்
    //ரொம்ப டாங்க்ஸ்...
    மீ தி எஸ்கேப்பு :-)//

    வெட்டி யாரு?
    அவரு காடு "வெட்டி"!
    அறியாமை இருள் படர்ந்த அந்தகாரக் காட்டை வெட்டுபவர்!
    அவரு குரு!
    காடு-வெட்டி-குரு எல்லாம் அவரே!

    அவர் வந்தால் மட்டுமே, தொடர் பதிவுகள் இடப்படும் என்ற டிஸ்கியை இங்கிட்டுப் போட்டுக் கொள்கிறேன்!

    புலிப்பாணி சித்தர் வரிசையில் கங்காரு சித்தர் ஸ்ரீதர் நாராயணனும் அப்படியே வர வேண்டும் என்று உத்தரவாகிறது! :)

    ReplyDelete
  53. //Mukilarasi said...

    excuse me sir,

    அடியேன் உள்ளே வரலாமா, ஐயா?//

    ஐயா சாமிகளா,
    இது தமிழரசனா முகிலரசியானே தெரியல... அவுங்க அவுங்க சொந்த ஐடில வாங்கப்பா...

    ReplyDelete
  54. //சரி உங்களுக்குச் சில கேள்விகள்....
    1. நீங்க இந்தக் கேள்விகளை எல்லாம் எழுதி எழுதிக் கேட்பதற்குப் பதிலாக, தக்க ஒரு அறிஞரிடமோ, நல்ல ஒரு குருவினிடமோ பேசி உள்ளீர்களா?//

    எந்த ஒரு அறிஞரும், குருவும், என்னைப் போல் உடலில் செயலாற்றும் மற்றொமொரு ஜீவன் தானே ? அவர் உணர்ந்ததை அவர் சொல்வார், அவரளவில் அது உண்மையாக இருக்கும். :)))

    //2. அப்படிப் பேசி உண்மையைத் தெரிந்து கொண்டால், அந்த உண்மையை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்? :)//

    இதைத்தான் நான் அடிக்கடி யோசிப்பதுண்டு, எந்த உயரிய அறிவு நிலையை தனி மனிதன் எட்டினாலும், அப்பிறவியுடன், மரணத்துடன் அது அப்படியே சென்றுவிடும். (ஏட்டில் எழுதி வைப்பது பற்றி சொல்லவில்லை) தன்னளவில் இறப்பிற்கு பிறகு அவனுக்கு அது பயனாக இருக்கவே இருக்காது, மறுபிறவி எடுத்தாலும் அடுத்த சூழலைப் பொருத்தே அவனுடைய அறிவு வளர்ச்சியின் பாதை அமையப்பெற்றிருக்கும். போதிசாத்துவனின் அறிவு அவனைப் பொறுத்து அவன் இறப்போடு சென்றது. அதன்பிறகு அவனுக்கு பயன்பட்டதா என்று தெரியவில்லை.

    இப்போதைக்கு எதுவும் செய்வதாக உத்தேசம் இல்லை. ஆன்மிகம் பேசுகிறீர்கள் என்று சுவையாக உங்களிடம் விவாதம் செய்தேன். அவ்வளவுதான். :))

    //3. அதான் உண்மையை அறிந்து கொண்டாயே, இனிப் பொய்யில் கால் வைக்காதே என்றால் வைக்காமல் இருப்பீர்களா? அதற்கான துணிபு இருக்கா? :))))))
    10:31 AM, July 21, 2008//

    அப்படியெல்லாம் உண்மை / பொய் என்றெல்லாம் முழுதாகச் சொல்லாவிட்டாலும், முன்பு போல் பக்தி, பூஜை புனஸ்காரங்களில் நாட்டமில்லாமல் போனது என்று சொல்வேன். மற்றவர்கள் பார்வையில் நான் செய்வது கடவுள் மறுப்பு போன்று தெரியும். சடங்குகளையெல்லாம் திரும்பிக் கூட பார்காததை துணிவு என்று சொல்லமாட்டீர்களா ? :))


    சரி சரி...அடுத்து எப்போதாவது நற்சூழல் அமையப்பெற்றால் பேசுவோம்

    ReplyDelete
  55. //வெட்டிப்பயல் said...
    வழக்கம் போல சில சந்தேகங்கள்...//

    யாருக்கு பாலாஜி? :)

    //கர்ம யோகிகளுக்கும் இது ஒத்து வருமா?
    யாரை பற்றியும் அதிகம் கவலைப்படாமல் தன் கடமையை மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பவர்களுக்கு செருக்கு வரும்னு நினைக்கறீங்களா?//

    வரும்!
    ஏன் என்றால் நீங்களே சொன்னது போல் "தன்" கடமையை மட்டும் தானே அவர்கள் செய்கிறார்கள்! :)
    ஆனால் நடைமுறை உலக வாழ்வில், "தான்" மட்டுமே தனித்து இருக்க முடியாது அல்லவா?

    கர்மாவைச் செய்பவனுக்கு தன்னைப் பற்றிய செருக்கு வரவில்லை என்றாலும், தன் கர்மத்தைப் பற்றிய செருக்கு வர வாய்ப்புண்டு!
    கர்மன்யேவா அதிகாரஸ்தே என்று கீதையில் குறிக்கிறார்! கர்மாவின் மேல் அதிகாரம் கொள்ளக் கூடும்!

    ஆலயத்தில் பணி செய்யும் பலருக்கு தன் செருக்கு இல்லை என்றாலும் பணிச் செருக்கு உண்டல்லவா? தன் பணிக்குப் பங்கம் வருதே என்று தானே லோக சாரங்கர் திருப்பாணாழ்வார் மீது கல்லெறிந்தார்?

    ReplyDelete
  56. @பாலாஜி

    அதற்காக ஞான, கர்ம யோகங்கள் எல்லாம் வீண் என்று பொருள் அல்ல!
    ஞான யோகம், பக்தி யோகம் எல்லாம் சத்து மிக்க பானங்கள்! அவை நுரை தள்ளும்!

    அவற்றோடு சரணாகதி என்ற பரிசுத்தமான தீர்த்தம் (நீர்) சேரும் போது தான், ஆன்று அவிந்து அடங்கி, பிம்பம் தெளிவாகின்றது!

    ஞான யோகத்தில் = தான் உண்டு!
    கர்ம யோகத்தில் = தான் உண்டு!
    பக்தி யோகத்திலும் = தான் உண்டு!

    சரணாகதியில் மட்டுமே
    தானும் இல்லை!
    தன் ஞானமும் இல்லை!
    தன் கர்மமும் இல்லை!
    தன் பக்தியும் இல்லை!

    அவன் திருவுள்ள உகப்புக்கே இருப்போம் என்ற பணிவு ஒன்றே மற்ற யோகங்களையும் ஒருங்கே கொடுத்து விடும்!

    ஞானம் = பிறவித் தத்துவம் அறிவிக்கும்!
    கர்மம் = கர்ம வினைகளைக் காட்டிக் கொடுக்கும்!
    பக்தி = இறைவனின் முகம் காட்டும்!
    சரணாகதி மட்டுமே இறைவனின் "அடி" காட்டும்!


    பெரிய திருவடி, சிறிய திருவடி, நம்மாழ்வார் என்று அத்தனை "அடி"யவர்களும் அடியில் தான் உள்ளார்கள்!

    அதனால் தான் நடைமுறை உலக வாழ்விற்கு, சரணாகதியே சரியான கதி என்பதை உடையவர் அருளிச் சென்றார்!

    நான் மறையைக் கற்றவனா ஞானி?
    "நான்" மறையக் கற்றவனே ஞானி!

    ஹரி ஓம்!

    ReplyDelete
  57. //Mukilarasi said...
    அடியேன் உள்ளே வரலாமா, ஐயா?//

    :)

    //பெரியவா எல்லாம் ஏதேதோ பேசிண்டு போறேள்//

    என்னா பாஷை இது? நமக்கு இதெல்லாம் தெரியாது!
    ஒழுங்கா லோக்கலா பேசுங்க! இல்லாக்காட்டி நான் சென்னைத் தமிழுக்கு டிரான்ஸ்பர் ஆயிடுவேன்! :)

    //மோட்சம் என்றால் என்ன? அது, எங்கு இருக்கிறது? அதை நாம் எப்படி உணர முடியும்?//

    பற்றுக பற்றற்றான் பற்றினை!
    அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!!
    ஈசன் எந்தை இணையடி நீழலே!!!

    விசிஷ்டாத்வைதம்: ஜீவாத்மா பரமாத்மாவின் சொரூபத்தில் ஒடுங்குவது!
    அத்வைதம்: ஜீவாத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பது!

    எது எப்படியோ...
    அனந்த மயமான நீழலை, நிம்மதியை, அமைதியை அடைவதே மோட்சம் என்று genericஆகச் சொல்லலாம்! மோட்சம் என்பது இறைவனின் திருவடிகளை அடைவதே என்பது ஆன்றோர் கருத்து!

    //வைகுந்தம் செல்வதால் என்ன பயன்?//
    உங்கள் வீட்டுக்கே செல்வதால் என்ன பயன்?

    வீடு இங்கு தான் என்றில்லை!
    எங்கு வேண்டுமானாலும் வீடு அமைத்துக் கொள்ளலாம்!
    இருப்பவர் இருந்தால் அது வீடு!:)


    //ஏதேனும் பிழை இருந்தால், பெரிய மன்னிப்புக் கேட்கிறேன்....//

    ஒரு பின்னூட்டத்தில் இம்புட்டு டிஸ்கியா?

    மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் கூவின காண்!
    பல் கால் குயில்கள் ஆத்திகக் குயில்களாவும் இருக்கலாம், நாத்திகக் குயில்களாவும் இருக்கலாம்! தடையொன்றுமில்லை! கூவிக்கிட்டே இருங்க! :)))

    ReplyDelete
  58. //
    ஒரு பின்னூட்டத்தில் இம்புட்டு டிஸ்கியா?

    மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் கூவின காண்!
    பல் கால் குயில்கள் ஆத்திகக் குயில்களாவும் இருக்கலாம், நாத்திகக் குயில்களாவும் இருக்கலாம்! தடையொன்றுமில்லை! கூவிக்கிட்டே இருங்க! :)))//

    டிஸ்கி ன்னா?

    சரி அத விடுங்க... ஆத்திகக் குயில், நாத்திகக் குயிலா?!!!

    நான் இரண்டுமே இல்ல.... எனக்கு இரண்ட பத்தியுமே ஒன்னும் தெரியாது. ;-)) ஆன்மீகத்தப் பத்தி உங்க வலைப்பூ தான் எனக்கு நுழைவாயில்.

    இதைப் படிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு தான் நான் நாத்திகத்தைப் பத்தியும் கொஞ்சம் தேட ஆரம்பித்தேன்.

    வாதி, பிரதிவாதி இருவரின் கருத்துகளையும் அறிந்து கொள்ள ஆரம்பித்தது சில மாதங்களாகத்தான்....

    பற்றற்றவன் எவன்?

    இறைவனின் திருவடிகள் எங்கு உள்ளது? அம்மா, அப்பா, கணவர் இவர்களின் திருவடிகள் கண்டதுண்டு... ஆனால், இறைவன்.... ??????

    -முகிலரசிதமிழரசன்.

    ReplyDelete
  59. //இல்லாக்காட்டி நான் சென்னைத் தமிழுக்கு டிரான்ஸ்பர் ஆயிடுவேன்! :)//

    இங்கிலீஷ் ல்ல பேசுனா, வீட்டில மாட்டுவண்டி அகராதி இருக்கு.... அதாங்க oxford...

    இப்போ, சரண்யா கூட பக்கத்துல இல்லயே, சென்னை பாஷையெல்லாம் ட்ரான்ஸ்பர் செய்ய... ;-(((

    அதனால நீங்க எங்கயும் ட்ரான்ஸ்பர் ஆக வேண்டாம்..... நான் வேண்ணா, அப்பீட்டு ஆகிக்கிறேன்.... ;-))

    -முகிலரசிதமிழரசன்

    ReplyDelete
  60. //Mukilarasi said...
    டிஸ்கி ன்னா?//

    Disclaimer, chellama, Disci! :)

    சரி அத விடுங்க... ஆத்திகக் குயில், நாத்திகக் குயிலா?!!!

    //ஆன்மீகத்தப் பத்தி உங்க வலைப்பூ தான் எனக்கு நுழைவாயில்.
    இதைப் படிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு தான் நான் நாத்திகத்தைப் பத்தியும் கொஞ்சம் தேட ஆரம்பித்தேன்//

    ஆகா! அடியேன் பாக்கியம்!

    //பற்றற்றவன் எவன்?//

    இன்னொன்றைப் பற்றத் தேவை இல்லாதவன் பற்று அற்றவன்!

    //அம்மா, அப்பா, கணவர் இவர்களின் திருவடிகள் கண்டதுண்டு...//

    குழந்தையின் திருவடிகளைச் சொல்ல மறந்து விட்டீர்களே! :)

    //இறைவனின் திருவடிகள் எங்கு உள்ளது?//

    இறைவன் எங்கு உள்ளானோ, அங்கு அவன் திருவடிகளும் உள்ளது!
    இறைவன் எங்கு உள்ளான்?

    வேறு விதமாகக் கேட்கிறேன்!
    காதலை எங்கு காணலாம்? இறைவனை எங்கு காணலாம்? :)

    ReplyDelete
  61. //Mukilarasi said...
    இப்போ, சரண்யா கூட பக்கத்துல இல்லயே, சென்னை பாஷையெல்லாம் ட்ரான்ஸ்பர் செய்ய... ;-(((//

    ஹா ஹா ஹா!
    நேனு இக்கட சேஸ்தானு! டோன்ட் வொர்ரி! :)

    //அதனால நீங்க எங்கயும் ட்ரான்ஸ்பர் ஆக வேண்டாம்..... நான் வேண்ணா, அப்பீட்டு ஆகிக்கிறேன்.... ;-))//

    சூப்பர்! அப்பீட்டு, ரிப்பிட்டூ-ன்னு இதே பாஷையை மெயின்டெயின் பண்ணிக்கோங்க! பிரபல வலைப்பதிவர் ஆயிடலாம்! :))

    ReplyDelete
  62. அண்ணா,

    இரண்டு மணி நேரத்துக்குள்ள இவ்வளவு விவாதமா?

    உங்க ஆபீசுல ஏதாச்சும் அடிப்பொடி வேலை இருக்குமா? சும்மா பதிவு, பின்னூட்டம், விவாதம்னு (மட்டும்) சுவாரசியமா இருக்கும் போல இருக்கே. ஹி...ஹி...!

    ஏதாவது லாங் வீக் எண்டு வந்தாத்தான் படிக்க முடியும் போல. :-))

    அடியேன் இப்பொதைக்கு கங்காரு மடியிலேர்ந்து எஸ்கேப். அப்பாலீக்கா வந்து குந்திக்கிறேன் :-)

    ReplyDelete
  63. //சூப்பர்! அப்பீட்டு, ரிப்பிட்டூ-ன்னு இதே பாஷையை மெயின்டெயின் பண்ணிக்கோங்க! பிரபல வலைப்பதிவர் ஆயிடலாம்! :))//

    பின்னூட்டமே இப்பத்தான் போட ஆரம்பிச்சிருக்கேன். வலைப்பூ ஆரம்பிக்கற அளவுக்கு நேரம் ல்லாம் இருக்காதுங்க....

    குழந்தைக்கூட நான் ரொம்ப பிஜி ஆ இருக்கேன்.

    இன்னும் ஒரு சந்தேகம்....

    மோட்சம் இருக்கிற இடம் வைகுந்தமா? இல்ல, கைலாசமா? இல்ல, பூலோகமா?

    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே....

    எப்படியும் நாம எல்லாரும் வைகுந்தம் போயிடுவோம் ன்னு, பெரியவங்களே சொல்லி இருக்காங்க.... அப்புறம் எதுக்கு நாம பற்றற்றவனின் பற்றினை பற்ற வேண்டும்?

    -முகிலரசிதமிழரசன்.

    ReplyDelete
  64. //குழந்தைக்கூட நான் ரொம்ப பிஜி ஆ இருக்கேன்//

    ஆகா!
    அது ஒன்னே போதும்! கொள்ளை இன்பம்! வலைப்பூ, வாழைப்பூ-ன்னு வந்துடாதீங்க! :)

    //மோட்சம் இருக்கிற இடம் வைகுந்தமா? இல்ல, கைலாசமா? இல்ல, பூலோகமா?//

    உம்...
    முன்னர் சொன்ன பதிலே தான்!
    இறைவன் எங்கு இருக்கிறானோ, அது தான் மோட்சம்!

    கைலாசம், வைகுந்தம், இன்னும் ஹெவன், எல்லாம் ஒரு place holder என்று வைத்துக் கொள்ளுங்கள்!
    மோட்சம் என்பது ஒரு இடம் அல்ல! அது ஒரு நிலை! அது ஒன்றிய நிலை!

    //எப்படியும் நாம எல்லாரும் வைகுந்தம் போயிடுவோம் ன்னு, பெரியவங்களே சொல்லி இருக்காங்க.... அப்புறம் எதுக்கு நாம பற்றற்றவனின் பற்றினை பற்ற வேண்டும்?//

    மதுரை பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தா கண்டிப்பா மதுரை போயிடலாம் தான்! எல்லாரும் சொல்லிட்டாங்க!
    ஆனா.....டிக்கெட் எடுக்க வேணாங்களா? :)

    ReplyDelete
  65. //எப்படியும் நாம எல்லாரும் வைகுந்தம் போயிடுவோம் ன்னு, பெரியவங்களே சொல்லி இருக்காங்க.... அப்புறம் எதுக்கு நாம பற்றற்றவனின் பற்றினை பற்ற வேண்டும்?//

    சூப்பர் கேள்வி! இப்பத்தான் கேக்க ஆரம்பிச்ச மாதிரி தெரியலையே. :-)

    அடியேனின் இரண்டணா (இந்தப் பதிவுக்கு வந்தா புதைகுழி மாதிரி இழுத்துட்டுப் போவுது பாருங்க),

    இந்தப் பிறவிச் சாகரம் நீந்துதல்ன்னு சொல்றாங்களே... இது வெறும் குறியீடுதானுங்க. அதாவது... எதிர்காலம் பற்றி அறியாமல் வாழ்கிறோம் இல்லையா ஒரு வாழ்க்கை. அதுதான் பிறவிசாகரம். உங்களுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ நீங்க வாழ்ந்துதானே ஆகனும்?

    இந்த வாழ்க்கையின் முடிவு தான் 'வீடுப் பேறு'. கைலாசம் / வைகுந்தம் / சுவனம் எல்லாம் ஒண்ணுதான். எப்பெயரை வைத்து கூப்பிட்டாலும் ரோஜாமலர் ரோஜாதானே?

    வாழ்க்கையின் மிகப் பெரிய கேள்வி என்ன தெரியுங்களா? எப்படி வாழ்வது? எதற்காக அதைப் பற்றி கேட்க வேண்டும்?

    அருமையான ஒயின் இருக்கிறது. மனதிற்கு போதையூட்டும் மதுவகைகள் இருக்கின்றன. உங்களிடம் செலவிடப் பணமும் இருக்கிறது. வாங்கி சாப்பிட தெம்பும் இருக்கிறது. அப்புறம் எதற்கு கட்டுப்பாடுகள்?

    நாம் சாப்பிடுகிறோமோ இல்லையா என்பதை பொறுத்து நமது உடல்நிலை மாறுகிறது. 5 வருடங்கள் மது சாப்பிட்டால் குடல் அழற்சி வரும். 10 வருடங்கள் சாப்பிட்டால் ஈரல் காணாமல் போய் விடும். பிறகு உடல்நிலை படு மோசமாகி, மற்ற எல்லோரையும் கஷ்டபடுத்தி... எப்படா சாவான் என்று எல்லாரும் நினைக்க ஒரு நாள் போய் சேரத்தானேப் போகிறோம்? இப்பொழுதே ஏனிந்த கட்டுபாடுகள்?

    அதாவது கடலில் வீழ்ந்த நாம் எப்படி கரையேறப் போகிறோம் என்பதுதான் கேள்வி. இங்கு கரையேறுதல் என்பது இறப்பதுதான். திக்குமுக்காடி பலபேரை காயப்படுத்தி, சிலபேருக்கு பாரமாக இருந்து கரைசேருகிறோமா (இறக்கிறோமா) அல்லது இலகுவாக கடந்து செல்கிறோமா என்பதுதான் வாழ்க்கை முறை.

    பற்றற்றவனைப் பற்றுதல் மூலம் இப்பற்றுகளை அற்று வீடு பேறு ஏகுகிறோம். அதற்கு சரணாகதி ஒரு வழி. நிறைய்ய்ய்ய்ய்ய வழிகள் இருக்கலாம். இதெல்லாம் ஒரு குறியீடுகள்தான். ஆனால் அடிப்படை என்னவோ வாழ்க்கையை சிறந்த முறையில், சந்தோஷமாக வாழ்வதுதான் :-)

    P.S. I am going to recommend our admin to block this blog in my office at least :-(

    ReplyDelete
  66. Mukilarasi said...
    //
    மோட்சம் இருக்கிற இடம் வைகுந்தமா? இல்ல, கைலாசமா? இல்ல, பூலோகமா? //

    வைகுந்தம், கைலாசம் இரண்டுமே தான். "வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே"..

    நம்மாழ்வார் மோட்சம் பற்றி ஒரு பதிவு கே.ஆர்.எஸ் அண்ணா, ஒரு பதிவில் போட்டுள்ளார். மிக அருமையாக இருக்கும், ஒருமுறை படியுங்கள் விடை தெரியும்

    ReplyDelete
  67. @ஸ்ரீதர்
    //இந்தப் பதிவுக்கு வந்தா புதைகுழி மாதிரி இழுத்துட்டுப் போவுது பாருங்க//

    ஹா ஹா ஹா!

    //P.S. I am going to recommend our admin to block this blog in my office at least :-(//

    Jooperu!
    உங்க ஆபிசில் பந்தலைப் படிக்கும் மற்றவர்கள் யாராச்சும் இருக்காங்களா-ன்னு செக் பண்ணிட்டு, அப்பறமா ப்ளாக் பண்ணுங்க! :))

    இல்லீன்னா கங்காரு சித்தர் போட்டி ஆசிரமம் தொடங்கினார் என்று உங்கள் மேல் செய்திகள் பரப்பப்படும்! :))

    ReplyDelete
  68. @ஸ்ரீதர்
    //அப்புறம் எதுக்கு நாம பற்றற்றவனின் பற்றினை பற்ற வேண்டும்?//
    சூப்பர் கேள்வி!//

    மதுரை பஸ் நம்மளை மதுரைக்குக் கூட்டிக்கிட்டுத் தான் போகும்! அப்பறம் எதுக்காக டிக்கெட் எடுக்கணும்? சரியா அண்ணாச்சி? :))

    //இந்தப் பிறவிச் சாகரம் நீந்துதல்ன்னு சொல்றாங்களே... இது வெறும் குறியீடுதானுங்க. அதாவது... எதிர்காலம் பற்றி அறியாமல் வாழ்கிறோம் இல்லையா ஒரு வாழ்க்கை//

    தவறு!
    You are contradicting your own logic.
    You dont just float to stay alive!
    You swim! why? bcoz u want to reach the shore!

    எதிர்காலம் பற்றி அறியாமல் வாழ்கிறோம் என்று சொல்ல முடியாது! எதிர்காலம் நல்லபடியா இருக்கணும் என்ற ஒரு எதிர்பார்ப்பு - அதன் விதை நிகழ் காலத்தில் அறிந்தோ அறியாமலோ ஊன்றப் படுகிறது!

    //இந்த வாழ்க்கையின் முடிவு தான் 'வீடுப் பேறு'//

    தவறு!

    // கைலாசம் / வைகுந்தம் / சுவனம் எல்லாம் ஒண்ணுதான். எப்பெயரை வைத்து கூப்பிட்டாலும் ரோஜாமலர் ரோஜாதானே?//

    சரி! நானும் இதை முகிலுக்குச் சொல்லி உள்ளேன்!

    //வாழ்க்கையின் மிகப் பெரிய கேள்வி என்ன தெரியுங்களா? எப்படி வாழ்வது?//

    :)
    சரியே!

    //இங்கு கரையேறுதல் என்பது இறப்பதுதான்//

    தவறு!

    //சிலபேருக்கு பாரமாக இருந்து கரைசேருகிறோமா (இறக்கிறோமா) அல்லது இலகுவாக கடந்து செல்கிறோமா என்பதுதான் வாழ்க்கை முறை//

    நீங்கள் இலகுவாகக் கடந்து செல்வது, இன்னொருவருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால்???
    உங்கள் இலகுவுக்கு நீங்கள் வெட்டும் வழியில் இன்னொருவருக்குக் குழியாகிப் போனால்?

    //இதெல்லாம் ஒரு குறியீடுகள்தான். ஆனால் அடிப்படை என்னவோ வாழ்க்கையை சிறந்த முறையில், சந்தோஷமாக வாழ்வதுதான் :-)//

    :)
    சாருவாகம் என்ற ஒரு தத்துவம் உள்ளது. Just enjoy what makes u happy மாதிரி இருக்கும்!
    அதைப் பற்றிப் பேசும் போது நீங்க சொன்னதைப் பார்ப்போம்! :)

    ஆனால் பிறவியின் பயன் இன்பம் துய்த்தல் மட்டு'மே' அல்ல என்பது இந்திய நாட்டுத் தத்துவங்களின் கோட்பாடு!

    வாழ்க்கையைச் "சிறந்த" முறையில், "மகிழ்ச்சியுடன்" வாழ வேண்டும் என்பது ஒரு பூரண நிலை (ideal state)! அது இயலாத போது தான் இவ்வளவு விசாரணை!! இயலாததை இயல வைக்க!

    ReplyDelete
  69. //ஆனால் பிறவியின் பயன் இன்பம் துய்த்தல் மட்டு'மே' அல்ல என்பது இந்திய நாட்டுத் தத்துவங்களின் கோட்பாடு!

    வாழ்க்கையைச் "சிறந்த" முறையில், "மகிழ்ச்சியுடன்" வாழ வேண்டும் என்பது ஒரு பூரண நிலை (ideal state)! அது இயலாத போது தான் இவ்வளவு விசாரணை!! இயலாததை இயல வைக்க!//

    இதைத்தான் சொல்லனும்னு நினைச்சேன். ஏதோ 50% தேறிட்டேன்ப் போல. மீதியை சாய்ஸ்ல அட்ஜிஸ்ட் பண்னிக்கலாம்.

    சார்வாகம்-பற்றி ஜெயமோகன் எழுதியிருந்தார். பிரஹஸ்பதி ரிஷி தொடங்கி வைத்தவர் என்று நினைக்கிறேன்.

    விளக்கங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  70. அடுத்த இடுகைகளுக்காகக் காத்திருக்கிறேன் இரவிசங்கர்.

    ReplyDelete
  71. //குமரன் (Kumaran) said...
    அடுத்த இடுகைகளுக்காகக் காத்திருக்கிறேன் இரவிசங்கர்//

    இந்த இடுகையைப் பற்றிப் பேசுங்கள், குமரன்!
    சரணாகதி தீபிகையைப் பற்றி நீங்கள் பேசாமல் யார் பேசுவார்கள்?

    அடுத்த இடுகையா?
    இதான் Final Part! :))

    ReplyDelete
  72. //ஏதாவது லாங் வீக் எண்டு வந்தாத்தான் படிக்க முடியும் போல. :-))//

    நல்லாச் சொன்னீங்க ஸ்ரீதர் :))

    //நான் மறையைக் கற்றவனா ஞானி?
    "நான்" மறையக் கற்றவனே ஞானி!//

    சூப்பர்! :)

    //இந்தச் சுதந்திரத்தில் அந்தச் சுதந்திரம் "தேவை ஏற்பட்டால் அன்றித்" தலையிடுவதில்லை!
    அடியேன் பதிவில் சொல்ல வந்தது:
    சரணாகதி செய்யும் போது, அந்தத் தேவை ஏற்பட்டு, தலையீடு நடக்கின்றது என்பதே! :)//

    எனக்கே புரிஞ்சு போச்சு :) நன்றி கண்ணா.

    ReplyDelete
  73. //ஆகா!
    அது ஒன்னே போதும்! கொள்ளை இன்பம்! வலைப்பூ, வாழைப்பூ-ன்னு வந்துடாதீங்க! :)//

    அடேங்கப்பா, கண்ணபிரான் இரவிசங்கருக்கு என் மேல ஏன் இந்த கொலை வெறி!!!! எனக்கு வலைப்பூ வேணாம்... ஆனா, வாழைப்பூ வேணும்.... ;-)

    வீட்டு வேலை மட்டும் உனக்குப் போதும், வலைப்பூவல்லாம் நீ ஒன்னும் வலம் வர வேணாம் ங்கறத, எவ்வளவு டீஜன்டா, செப்பிட்டீங்க... ;-))

    சரி பரவாயில்ல, அத விடுங்க....

    ஸ்ரீதர்நாராயணன், கண்ணபிரான் இரவி சங்கர் எல்லாருக்கும் என் நன்றிகள்...

    எனக்கு இப்போ ரொம்ப நல்லா புரிஞ்சுடுச்சு....

    நான் நம்மாழ்வார் மோட்சம் படிச்சிருக்கேன்.... ஆனா, அத இதோட தொடர்பு படுத்தி பார்க்கல்.... ஜாரி...

    நான் அப்பீட்டு ன்னு சொன்ன, ஒரு வார்த்தைக்கே கண்ணபிரான் இரவி சங்கர், சும்மா அதிர்ந்து போயிட்டாங்க போல.... பயப்படாதீங்க, நான் வலைப்பூவுல்ல பதிவரால்லாம் வரமாட்டேன்...

    கடைசியா ஒரு கேள்வி,

    இறைத்தத்துவம், மோட்சம் இதல்லாம் பத்தி மக்கள் எப்போதிலிருந்து சிந்திக்க ஆரம்பிச்சாங்க.... கற்கால மக்கள் கிட்ட ல்லாம், இந்த மாதிரி சிந்தனைகள் இருந்துச்சா?

    அவங்கள்ல்லாம் மோட்சம் அடைஞ்சாங்களா? இறைவனுக்கு உருவங்கள் எப்படி வந்தது? நாராயணன் என்னும் சொல்லுக்கு அர்த்தம்? இறைவனைப் பற்றியும், நீங்க சொன்ன இந்த தத்துவங்கள பத்தியும் அறியாமல், டிக்கட் சொன்னீங்களே அத வாங்காம, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து, மற்றவர்களுக்கு மனதாலும் தீங்கு நினைக்காதவர்கள் ஆனால், டிக்கட் வாங்கத் தெரியாதவங்களுக்கு மோட்சம் உண்டா?

    இதுவரைக்கும் நீங்க சொன்னதெல்லாம், எனக்கு நல்லாவே புரிஞ்சுடுச்சு.... ஆனாலும் இவற்றிற்கு பதில் சொல்லுங்களேன், தயவுசெய்து...

    -முகிலரசிதமிழரசன்.

    ReplyDelete
  74. //பிறவிக்கு முதலில் வினைப்பயன் இல்லை ஆயினும், பிறவி வினை ஆற்றும் போது, வினையால் பயன் தானே விளைகிறது!//

    கண்ணபிரான் இரவி சங்கர் அவர்களே, நாம் செய்கின்ற வினைகளை அனுபவிப்பதற்காகத்தான் நமக்குப் பிறவி ஏற்படுகிறது....

    அப்டீன்னூ, நான் சொல்ல லேது, நம்ம பெரிய்ய்ய்ய்ய ஆழ்வார் சொன்னது.

    நாம் செய்வது நல்வினையோ, தீவினையோ... எதுவாயினும் அவற்றை அனுபவிப்பதற்குத்தான் இந்த பிறவியாகிய சுழற்சி ஏற்படுகிறது....

    -தமிழரசன்தமிழரசன்.

    ReplyDelete
  75. //Mukilarasi said...
    கண்ணபிரான் இரவி சங்கர் அவர்களே//

    தமிழ்...கேஆரெஸ்-ன்னே கூப்புடுங்க! நீங்க இப்படி முழுப்பேரையும் ஒரு முறை சொன்னா ஓக்கே! பல முறை சொன்னா எனக்கே மூச்சு வாங்குது! :)


    //நாம் செய்கின்ற வினைகளை அனுபவிப்பதற்காகத் தான் நமக்குப் பிறவி ஏற்படுகிறது....//

    நானும் அதைத் தான் சொல்லியுள்ளேன்!
    ஆனால் வினைகளே இல்லாமல், முதல் முதலில் பிறக்கும் போது, ஏன் பிறப்பு வந்தது-ன்னு ஒரு கேள்வி எழுந்தது அல்லவா? அப்போ சொன்னது தான் அது!

    ReplyDelete
  76. ஓகோ!

    பிறவிகளைப் பற்றிய உங்கள் கருத்து...

    -முகிலரசிதமிழரசன்.

    ReplyDelete
  77. In This post it has been told ramanuja was a born saivate. Ramanuja was not saivate he leanred under saivate guru . Ramanuja;s parents were devoted vaishnavites in sripreumbudur

    ReplyDelete
  78. @முகில்
    ஒன் வாழைப்பூ வடை பார்சேல்ல்ல்ல்ல் ப்ளீஸ்! :)

    //கற்கால மக்கள் கிட்ட ல்லாம், இந்த மாதிரி சிந்தனைகள் இருந்துச்சா?//

    அடடா! கற்கால மக்கள் எதுவும் எழுதி வச்சிருந்தா, அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்! ஆனா உங்க கேள்விக்குச் சிம்பிளான பதில்:
    இந்த சிந்தனை முதன் முதலில் எப்போது தோன்றி இருக்கும்-னு நினைக்கறீங்க? = முதல் மரணத்தைப் பார்த்த போது!

    //அவங்கள்ல்லாம் மோட்சம் அடைஞ்சாங்களா?//

    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! புகுந்து இருப்பாங்க!

    //இறைவனுக்கு உருவங்கள் எப்படி வந்தது?//

    நீருக்கு உருவம் நாம் பருகும் கலத்தைப் பொறுத்து வந்தது!

    //நாராயணன் என்னும் சொல்லுக்கு அர்த்தம்?//

    நாரம்=நீர்
    நீருக்கு ஒரு பெரிய குணம் இருக்கு!- அதுக்கு வடிவம் என்பதே கிடையாது! ஆனா, எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெற்று விடும்! அதே போல் இறைவனும்!

    துப்பு ஆர்க்குத், துப்பு ஆயத், துப்பு ஆக்கித், - துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை என்ற குறள் நினைவிருக்கா?
    உணவை உற்பத்தி செய்யவும் நீர் தேவை! அதே சமயம், அந்த நீரே ஒரு உணவாகவும் இருக்கு! - நீரைப் போலவே நீர் வண்ணன் நாராயணனும், உலகுக்குக் காரணமாகவும் இருக்கிறான்! அதே சமயம் காரியமாகவும் இருக்கிறான்!

    பார்க்க:
    http://verygoodmorning.blogspot.com/2007/11/25.html

    //மற்றவர்களுக்கு மனதாலும் தீங்கு நினைக்காதவர்கள் ஆனால், டிக்கட் வாங்கத் தெரியாதவங்களுக்கு மோட்சம் உண்டா?//

    உண்டு!

    டிக்கெட் என்பது ஒரு உவமானத்துக்குச் சொன்னது தான்! அதைப் பிடித்துக் கொள்ளாதீர்கள்! காசு கொடுத்து டிக்கெட் வாங்கினாத் தான் மோட்சம் என்று தப்பாப் புரிஞ்சிக்கப் போறாங்க யாராச்சும்! :))

    டிக்கெட் என்று சொன்னது, நம் முயற்சி, நம் சரணாகதி, அல்லது இறைவனை அடைய வேண்டும் என்ற எளிய ஆர்வம்! அவ்வளவு தான்!

    மோட்சம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் கூட, மோட்சம் செல்கிறார்கள் தான்! அதான் பதிவில் சொன்னேனே!
    //குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டு இருக்கின்றன! ஆட்டம் முடிந்தால் அவை வீட்டுக்குத் தானே போக வேண்டும்?//

    குழந்தைக்குப் போகணும் என்று தோன்றும் போது தானே போகும்! தோன்ற வேண்டும் அவ்வளவு தான்!

    சரி....முகில்...இப்படி எல்லாக் கேள்வியும் இந்தப் பதிவிலேயே கேட்டுவிட்டால், அப்பறம் அடுத்த பதிவுக்கு எல்லாம்???
    அங்கும் வந்து கேளுங்க! :)))

    ReplyDelete
  79. //Bala said...
    In This post it has been told ramanuja was a born saivate. Ramanuja was not saivate he leanred under saivate guru . Ramanuja;s parents were devoted vaishnavites in sripreumbudur//

    பாலா
    கருத்துக்கு நன்றி!
    யாதவப் பிரகாசர் என்னும் அத்வைத குருவிடம் பயின்றது உண்மையே!
    ஆனால் பிறப்பால் அவர் சைவக் குடும்பம் தான்!

    அப்பா=ஆசூரி கேசவ சோமையாஜி தீக்ஷிதர்
    அம்மா=காந்திமதி
    (So called) குலம்=வடமா என்னும் ஐயர் பிரிவு!

    http://en.wikipedia.org/wiki/Vadama
    The Vaishnava saints Ramanuja[30], Tirumalai Nambi[31] and Mudaliyandan [31] were born Vadama

    இருப்பினும் இராமானுசர் தந்தை, திருவல்லிக்கேணி பெருமாளின் பக்தரும் கூட! அங்கு வேண்டிக் கொண்டு பிறந்த குழந்தையே இளைய பெருமாள் என்னும் இராமானுசர்.

    ReplyDelete
  80. //எல்லாருக்கும் தசவதாரம் டிக்கெட் கிடைக்கும். ஆனால் யாருக்கு முதல் நாள் கிடைக்கும்னு தெரியாது //

    @வெட்டி, கரக்டு. ஆனா சில பேர் டிவிடி வெச்சும் பாக்கறாங்களே! :p

    ReplyDelete
  81. எனக்கு இப்போதான் நேரம் கிடைச்சது, அதான் கேட்டனன்...

    நான் கிராமத்துக்குச் சென்றுவிட்டால், இதை எல்லாம் கேட்க முடியாது... இன்னும் இரு வாரங்கள் மட்டுமே நான் ஓய்வாக இருப்பேன்....

    அதுக்கப்புறம், உங்க வலைப்பூப் பக்கம் வரக் கூட நேரம் இருக்காது....

    சரண்யா, பாலாஜி எல்லாரும் சொல்லுவாங்க, உங்கக் கிட்ட ஏதாவது கேள்வி கேட்டா, புரியற மாதிரி சூப்பப்பர்ர்ர்ர்ராராரா பதில் சொல்லுவீங்க ன்னு, அதனால தான் கேட்டேன்.

    நான் இது வரைக்கும் கேட்டதுக்கு ரொம்ப பொறுமையா, நல்லா தெளிவா பதில் சொன்னீங்க.... ரொம்ப ரொம்ப நன்றி ங்க...

    -முகிலரசிதமிழரசன்.

    ReplyDelete
  82. நல்ல பதிவு. ஒரு சந்தேகம், KRS -க்கு மோட்சம் கிடைத்தால் பதிவு படிப்பவர்களுக்கெல்லாம் மோட்சம் கிடைக்குமா? :)
    ஷோபா

    ReplyDelete
  83. //Shobha said...
    நல்ல பதிவு. ஒரு சந்தேகம், KRS -க்கு மோட்சம் கிடைத்தால் பதிவு படிப்பவர்களுக்கெல்லாம் மோட்சம் கிடைக்குமா? :)
    ஷோபா
    //

    கண்டிப்பா கிடைக்கும் ஷோபா, அதுல என்ன சந்தேகம். நாராயணன் பேரைக் கேட்டாலே மோட்சம் கிடைக்கும் எனும்போது.. இவ்வளவு அழகாக, விளக்கமாக, எளிமையாக, சரணாகதி தத்துவத்தை படித்தால்.. கண்டிப்பாக கிடைக்கும்..

    ReplyDelete
  84. // ambi said...

    //எல்லாருக்கும் தசவதாரம் டிக்கெட் கிடைக்கும். ஆனால் யாருக்கு முதல் நாள் கிடைக்கும்னு தெரியாது //

    @வெட்டி, கரக்டு. ஆனா சில பேர் டிவிடி வெச்சும் பாக்கறாங்களே! :p//

    DVDலயும் பார்க்கலாம், இண்டர் நெட்லயும் பார்க்கலாம், டொரண்ட் சைட்ல டவுண் லோட் பண்ணியும் பார்க்கலாம், இல்லை மெகா அப்லோட் மாதிரி சைட்ல இருந்து டவுண் லோட் பண்ணியும் பார்க்கலாம் ;)

    ஆனா படம் பார்க்கனும்னு எண்ணம் இருக்கனும்.. அஷ்டே :-))

    ReplyDelete
  85. //Shobha said...
    நல்ல பதிவு. ஒரு சந்தேகம், KRS -க்கு மோட்சம் கிடைத்தால் //

    KRSக்கு மோட்சமா?? No Way.. அவர் மோட்சம் கிடைச்சு போயிட்டார்னா.. அப்புறம் பதிவு யார் போடுறது.. அவர் மோட்ச பதிவு வேணா போடலாம்.. மோட்ச ப்ராப்தி லேது...

    ReplyDelete
  86. @Shoba-kka
    //நல்ல பதிவு. ஒரு சந்தேகம், KRS -க்கு மோட்சம் கிடைத்தால் பதிவு படிப்பவர்களுக்கெல்லாம் மோட்சம் கிடைக்குமா? :)//

    பதிவு படிப்பவர்களுக்கு எல்லாருக்கும் மோட்சம் (அனந்த ஆனந்தம்) கிடைத்தால்,
    KRS-க்கும் போனால் போகட்டும் என்று மோட்சம் உண்டு :)

    ReplyDelete
  87. //Raghav said...
    KRSக்கு மோட்சமா?? No Way.. அவர் மோட்சம் கிடைச்சு போயிட்டார்னா.. அப்புறம் பதிவு யார் போடுறது//

    //DVDலயும் பார்க்கலாம், இண்டர் நெட்லயும் பார்க்கலாம், டொரண்ட் சைட்ல டவுண் லோட் பண்ணியும் பார்க்கலாம், இல்லை மெகா அப்லோட் மாதிரி சைட்ல இருந்து டவுண் லோட் பண்ணியும் பார்க்கலாம் ;)
    ஆனா படம் பார்க்கனும்னு எண்ணம் இருக்கனும்.. அஷ்டே :-))//

    மேற்சொன்னவர் பதிவு போடுவாரு!
    குளம் வெட்டி தீர்த்தம் கொடுப்பாரு!
    அஷ்டே!! :))

    ReplyDelete
  88. @அம்பி
    //ஆனா சில பேர் டிவிடி வெச்சும் பாக்கறாங்களே! :p//
    //ஆனா படம் பார்க்கனும்னு எண்ணம் இருக்கனும்.. அஷ்டே :-))//

    அம்பி, இப்போ புரியுதா?
    திருட்டு விசிடியில் பார்த்த இரண்யகசிபுவுக்கும் மோட்சம் உண்டு!

    பார்த்து விட்டு கன்னா பின்னாவென்று விமர்சனம் போட்ட பதிவருக்கும் மோட்சம் உண்டா-ன்னு அடுத்து கேக்கப் போறீங்க தானே? :))

    ReplyDelete
  89. Fun or May not!
    What Balaji said is verily true too!
    //ஆனா படம் பார்க்கனும்னு எண்ணம் இருக்கனும்..அஷ்டே:-))//

    Thatz why adiyen told...
    //குழந்தைக்குப் போகணும் என்று தோன்றும் போது தானே போகும்! தோன்ற வேண்டும் அவ்வளவு தான்!//

    அமெரிக்காவில், துபாயில், ஐரோப்பாவில் வேலை பார்க்கும் மகனோ, மகளோ எவ்வளவு சொல்லியும் இந்தியா வர மாட்டேங்குறாங்க!

    பெற்றோர்களுக்கு ஏக்கம்! அதான் போதுமான வசதி வந்து விட்டதே! வந்து விடு என்று சொன்னாலும், குழந்தைகளுக்கு அவரவர் ஸ்வதர்மம், சுதந்திரம்!

    அதனால் பெற்றோரிடம் ஆசை இல்லை என்று அர்த்தம் ஆகாது!

    எவ்வளவு எடுத்துச் சொன்னாலும்
    போகணும் என்று தோன்றும் போது தான் போகும்! குழந்தைக்குப் தோன்ற வேண்டும் அவ்வளவு தான்!


    சரி....
    எப்போது குழந்தைக்குத் தோனும்?

    அமெரிக்காவில், ஐரோப்பாவில், துபாயில்.....
    அற்றது பற்று எனில்
    உற்றது வீடு!
    உற்றது இந்திய வீடு! :)))

    ReplyDelete
  90. //பதிவு படிப்பவர்களுக்கு எல்லாருக்கும் மோட்சம் (அனந்த ஆனந்தம்) கிடைத்தால்,
    KRS-க்கும் போனால் போகட்டும் என்று மோட்சம் உண்டு :)//

    பதிவு வாசகர்களுக்கு நீங்கள் தானே குரு ! அப்புறம் உங்க விஷயத்துல மட்டும் மோட்சம் கிடைப்பது எப்படி உல்ட்டா?
    BTW raghav நீங்கள் லாயெரா? இரண்டு விதமாகவும் பேசுகிறீர்களே? :))
    Shobha

    ReplyDelete
  91. அண்ணா,

    மெயில்ல விவாதம் தனியாக இருந்தாலும், இங்கேயும் படிச்சிட்டுதான் இருக்கேன். அதுக்குதான் ஒரு அட்டெண்டண்ஸ்.

    விவாதம் நல்லாத்தான் போயிட்டிருக்கு.

    //அம்பி, இப்போ புரியுதா?
    திருட்டு விசிடியில் பார்த்த இரண்யகசிபுவுக்கும் மோட்சம் உண்டு!//

    மோட்சத்துக்கு ஷார்ட்-கட் இருக்குன்னு சொல்றீங்க. மோட்சம் வேண்டாம்னு சொன்னவங்களுக்கு மோட்சம் உண்டா? அப்படி வேண்டாம்னு (ஏதாவது ஒரு காரணம்) சொன்னவங்களுக்கு என்ன கிடைக்கும்?

    ReplyDelete
  92. //BTW raghav நீங்கள் லாயெரா? இரண்டு விதமாகவும் பேசுகிறீர்களே? :))
    Shobha //

    ஹி ஹி.. முதல்ல பேசினது.. கே.ஆர்.எஸ் சிஸ்யன்.. ரெண்டாவது பேசினது "பதிவர் ராகவ்" (நாங்களும் ஒரு பதிவு போட்டுட்டம்ல)

    ReplyDelete
  93. //சிங்கத்தில் சைவ சிங்கம் இருக்கிறதா ? மனிதன் என்னும் ஒரே வகைக்குள் சைவம் / அசைவம் இருக்கிறதல்லவா ?//

    மனிதன் என்னும் ஒரே வகைக்குள், சைவம், அசைவமா?

    இதுல சைவம் ங்கறவங்க யாரு, அசைவம் ங்கறவங்க யாரு?

    உணவு வகையில தாவர உணவு மட்டும் உண்பவர்கள் - சைவம் என்றும்,

    மாமிச உணவு உண்பவர்கள் - அசைவம் என்றும் சொன்னால்.... அக்கருத்து உடன்படத்தக்கதாக இல்லையே...

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன், வள்ளலார் சொன்னது போல்...

    தாவரங்களும் உயிர்கள் தானே! அவற்றிற்கும் உயிருண்டு, உணர்வுண்டு.... இன்பம் வந்தால் அவைகளும் நன்கு செழித்து வளர்கின்றன. அவற்றை வெட்டும் போதும், சமைக்கும் போதும் அவர்களும் துன்பத்தால் வாடுகின்றன.

    -முகிலரசிதமிழரசன்

    ReplyDelete
  94. //உள்ளங்கை அரித்தால் சொறிவதை எப்படி வினை ஆற்றுவது என்று சொல்வீர்கள், அது ஒரு தன்னிச்சையான / அனிச்சையான செயல். அங்கு செடியில் சுரக்கும் அமிலமும் அப்படித்தான். //

    தாவரத்தில் அமிலம் சுரப்பது வேண்டுமானால் அனிச்சை செயலாக இருக்கலாம். ஆனால், நெப்பந்தஸ், போன்ற தாவரங்கள் பூச்சி உண்ணும் தாவரங்களாக இருக்கின்றன. அது கூட அனிச்சை செயல் என்கிறீர்களா?

    சரி அத கூட விடுங்க, தாவரங்களின் வேர் அடிப்பகுதியில் நீர் இருக்கின்ற திசையைத் தேடி, அதை நோக்கி வளர்கின்றன. வேரிலிருந்து நீரை இலைகளுக்கு எடுத்துச் செல்கின்ற செயலை வினையாற்றுவது என்று சொல்லலாமா...

    //தியரிகெளெல்லாம் மனிதனுக்குத்தானே, மனிதனை வைத்துதானே பிறவற்றைப் பேசுகிறோம். டெபனேசன் என்று வெறும் சொற்களில் அடக்கிவிட முடியுமா ? விலங்குகள், செடிகள் விழைவுக்கு ஏற்ப வினை ஆற்றுகின்றன என்று நீங்கள் அவற்றின் செயல்களையே வினை என்கிறீர்கள், செயல்களைச் செய்தபின் அதன் பகுப்பு அதாவது நாம் மேலே பாவ/புண்ணியம் பற்றிபேசிக் கொண்டிருந்தோம்.//

    வினை என்னும் அளவில் பார்த்தால், அது தாவரம், விலங்கு, மனிதன் அனைவருக்கும் பொதுவானது.

    ஆனால், மனிதன் எவ்வாறு வேறுபடுகின்றான் என்றால், அவனது சிந்திக்கும் ஆற்றல் மட்டுமே! மனிதனின் சிந்திக்கும் திறன் மட்டுமே, இந்த மாதிரி பாவம் புண்ணியம், இரக்கக் குணம் ஆகியவற்றை எல்லாம் எண்ண வைக்கின்றது.

    சுருக்கமாகச் சொன்னால் வினை எல்லாவற்றிற்கும் பொதுவானது. பாவ புண்ணிய எண்ணங்கள் மனிதனுக்கு மட்டுமே உரியது.

    -முகிலரசிதமிழரசன்

    ReplyDelete
  95. //சொல்லிக் கொடுத்தால் செய்யும், சும்மா செய்துவிடாது, அடிக்கு பயந்து தற்காத்துக் கொள்ள செய்யும், இல்லை என்றால் உணவு கிடைக்கும் என்பதற்காகச் செய்யும், நான் சொன்னதை நான் மறுக்கவில்லை, அப்படி அது செய்வது போன்றே அதன் குட்டியும் அதே போன்ற நிபந்தனையின்றியோ, பயிற்சி இல்லாமலோ செய்துவிடாது என்றேன்.//

    உயிரியின் ஜீனில் உள்ள தகவல்கள் மட்டுமே, அதன் சந்ததிகளுக்குக் கடத்தப்படும். சூழ்நிலைக் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் கடத்தப்படுவதில்லை.

    -முகிலரசிதமிழரசன்

    ReplyDelete
  96. //2. அப்படிப் பேசி உண்மையைத் தெரிந்து கொண்டால், அந்த உண்மையை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்? :)//

    செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்

    நாம் பள்ளியில் கற்பது எல்லாம் பின்னாளில் உபயோகமாகிறது என்று சொல்ல முடியாது. அவை அனைத்தும் நம் சிந்தனையைத் தூண்டுவதற்கே!

    சிந்திக்காவிடில், மக்கள் மாக்கள் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நாலும் தெரிந்து, அவற்றைப் பற்றி யோசிப்பதால் நம் அறிவு கூர்மையடையும்; இல்லாவிட்டால், பயன்படுத்தாத இரும்பைப் போல் மூளையும் துருப்பிடித்து விடும். அதாவது, மூளைச் செல்கள் செயலற்றுப் போய்விடும்.

    -முகிலரசிதமிழரசன்.

    ReplyDelete
  97. //
    //கற்கால மக்கள் கிட்ட ல்லாம், இந்த மாதிரி சிந்தனைகள் இருந்துச்சா?//

    அடடா! கற்கால மக்கள் எதுவும் எழுதி வச்சிருந்தா, அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்! ஆனா உங்க கேள்விக்குச் சிம்பிளான பதில்:
    இந்த சிந்தனை முதன் முதலில் எப்போது தோன்றி இருக்கும்-னு நினைக்கறீங்க? = முதல் மரணத்தைப் பார்த்த போது! //

    முதன் முதலில் எப்ப தோன்றியிருக்கும் னா, மனிதனுக்கு அவனது சிந்தனையை ஒருமுகப்படுத்தவும், cast away படத்துல வர்ர மாதிரி ஒரு சூழ்நிலை வந்ததன் பிறகு... இருக்கலாம்.....

    நான் ரொம்ப பேசிட்டேன்.... மீ த வெர்ரிரி வெர்ரிரி ஜாரி....

    -முகிலரசிதமிழரசன்

    ReplyDelete
  98. //நான் ரொம்ப பேசிட்டேன்.... மீ த வெர்ரிரி வெர்ரிரி ஜாரி....

    -முகிலரசிதமிழரசன்//

    என்ன இப்புடி சொல்லிட்டீக.. எங்க சிங்கம் இதுக்கெல்லாம் அசர மாட்டாப்புல.. அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் உண்டு. அவருக்கு "பதில்களின் பரமன்" அப்புடின்னு ஒரு பட்டம் இருக்கு.

    ReplyDelete
  99. //Raghav said...
    என்ன இப்புடி சொல்லிட்டீக.. எங்க சிங்கம் இதுக்கெல்லாம் அசர மாட்டாப்புல.. அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் உண்டு//

    எலே ராகவ்வு
    இப்போ அவிங்க உன்னைய ஏதாச்சும் கேட்டாங்களா? எதுக்குப்பா இப்படி ஏத்தி விடறீங்க?
    உங்க போதைக்கு அடியேன் ஊறுகாயா? :)))

    ReplyDelete
  100. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    எலே ராகவ்வு
    இப்போ அவிங்க உன்னைய ஏதாச்சும் கேட்டாங்களா? எதுக்குப்பா இப்படி ஏத்தி விடறீங்க?
    உங்க போதைக்கு அடியேன் ஊறுகாயா? :))) //

    ராகவ் (கரகாட்டக்காரன் செந்தில் ஸ்டைலில்): அண்ணே ஒரு விளம்பரம்...

    ReplyDelete
  101. //ஸ்ரீதர் நாராயணன் said...
    மெயில்ல விவாதம் தனியாக இருந்தாலும், இங்கேயும் படிச்சிட்டுதான் இருக்கேன். அதுக்குதான் ஒரு அட்டெண்டண்ஸ்//

    ஆபீஸ்ல ஒரு ரெண்டு நாள் கொஞ்சம் ஃப்ரீயாச்சே-ன்னு நினைச்சேன்!
    Project Kickoff பண்ணிட்டா நம்ம வேலை ஓவரு-ன்னு நினைச்சது தப்பாப் போச்சு! எல்லாரும் பதிவுல நம்மள Kickoff பண்ணுறாங்க! :)

    //மோட்சத்துக்கு ஷார்ட்-கட் இருக்குன்னு சொல்றீங்க//

    ஷார்ட்-கட் இருக்குறதா அஸ்யூம் பண்ணிக்கலாம், இரண்யகசிபு மாதிரி.
    ஆனா ஷார்ட்-கட்டை லாங்-கட்டா மாத்தும் தெறம இறைவனுக்கு உண்டு! :)

    Jokes apart,
    There are many routes! some arduous, some shortcut! The seeker's objective is not to outsmart anything.

    Once innate desire sets in, the route automatically sets in.
    and more importantly...
    he will realize that happiness is not only in the destination but also in the journey!

    //மோட்சம் வேண்டாம்னு சொன்னவங்களுக்கு மோட்சம் உண்டா?//

    உண்டு!

    ஆஞ்சநேயர் மோட்சம் வேண்டாம்-னு சொன்னார்!
    சில அடியவர்கள், திருமலை வாயிற்படியிலேயே இருந்து கொள்கிறேன்! மோட்சம் வேண்டாம்-னு சொல்லுறாங்க! சுப்ரபாதத்தில் வரும்!//ஸ்வர்க்கா பவர்க்க பதவீம் பரமாம் ஸ்ரயந்த//

    சிவனடியார்கள், வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்று சேக்கிழார் பாடுகிறார்!

    //அப்படி வேண்டாம்னு (ஏதாவது ஒரு காரணம்) சொன்னவங்களுக்கு என்ன கிடைக்கும்?//

    மோட்சமே கிடைக்கும்!

    வீட்டுக்கு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைக்குக் கூட, ஒதுங்க வேறொரு "வீடு" வேண்டுமல்லவா?

    மோட்சத்தை ஒரு குறிப்பிட்ட இடம் என்று பார்ப்பதால் தான் இவ்வாறான புரிதல்! மோட்சம்=கைலாசம், பாற்கடல், ஹெவன், கோட்டைக் கதவுகள்...இப்படி எல்லாம் இல்லை!

    எது மோட்சம்?
    ஈசன் எந்தை இணையடி நீழலே = மோட்சம்!
    ஜீவாத்மா, பரமாத்மாவில் ஒடுங்குவதே (அல்லது இரண்டறக் கலப்பதே) = மோட்சம்!
    முக்கியமாக...
    அந்தத் "தான்" என்ற நிலை, "தான்’ என்ற பிரக்ஞை அழிவதே மோட்சம்!

    ReplyDelete
  102. ஐய்ய்ய்ய்யா, நாஆஆஆன்ன்ன்ன் உள்ள்ள்ள்ளே வ்வ்வ்வ்வ்வர்ர்ர்ர்ரலாஆமாஆஆஆஆஆ.....

    எல்லா கேள்வியும் இப்பவே கேட்கவேணாம், அடுத்த அடுத்த பதிவுலயும் வந்து கேளுங்க ன்னு சொன்னீங்க... அதனாலேயே 2, 3 நாளா பயந்துட்டே இருந்தேன். ஆனா கேட்க்காம இருக்க முடியல, அதான்...

    தயவுசெய்து மன்னிச்சுடுங்க,

    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே, அப்டீன்னு சொன்னீங்கள்ல, அதுலதான் ஒரு சந்தேகம்...

    மண்ணவர் வைகுந்தம் போவதும் போவாததும், அவங்கவங்க விதிப்படிதான் நடக்கும் அப்டீன்னு அர்த்தமா, அல்லது

    மண்ணில் பிறந்தவர்கள் வைகுந்தம் போயே ஆக வேண்டும் என்று அர்த்தமா? நான் இரண்டாவதுன்னு புரிஞ்சிருக்கிறேன். என் புரிதல் தவறென்றால் தயவுசெய்து விளக்கவும்.

    இன்னொரு ஐயம் என்னவென்றால்,

    நாராயணன் என்னும் சொல்லில் நாரம் என்பது நீர் என்னும் பொருளுடைய சொல். இறைவன் நீரின் தன்மையை உடையவன். அப்டீன்னு சொன்னீங்க.

    அயணன் என்னும் சொல்லுக்கு என்ன அர்த்தம்?

    என் புரிதல்,

    இறைவன், பாற்கடலாகிய நீரில் சயனக்கோலத்தில் அதாவது... பாற்கடலில் பள்ளிகொண்டவன், அதனால் (நாரம் + சயணன் = நாராயணன்) என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய சிந்தனை.

    -முகிலரசிதமிழரசன்.

    ReplyDelete
  103. //Mukilarasi said...
    ஐய்ய்ய்ய்யா, நாஆஆஆன்ன்ன்ன் உள்ள்ள்ள்ளே வ்வ்வ்வ்வ்வர்ர்ர்ர்ரலாஆமாஆஆஆஆஆ.//

    ஹா ஹா ஹா.. ஏம்பா கே.ஆர்.எஸ்ஸு.. எங்கப்பா ஆளைக் காணோம்..

    பிரியாமல் இருப்பது.. கே.ஆர்.எஸ்ஸும் பதில்களும்.. அப்புடீங்கிற புதுமொழியை மாத்திராதிக..

    விரைந்து வந்து "முகிலுக்கு பதில்" உரையுங்கள்..

    ReplyDelete
  104. //எது மோட்சம்?
    ஈசன் எந்தை இணையடி நீழலே = மோட்சம்!
    ஜீவாத்மா, பரமாத்மாவில் ஒடுங்குவதே (அல்லது இரண்டறக் கலப்பதே) = மோட்சம்!
    முக்கியமாக...
    அந்தத் "தான்" என்ற நிலை, "தான்’ என்ற பிரக்ஞை அழிவதே மோட்சம்! //

    சிக்கினீங்களா? :-)

    நீங்க எதை எல்லாம் மோட்சம்னு சொல்றீங்களோ அது எல்லாம் எனக்கு வேண்டாம்னு ஒருத்தர் சொல்றார். அவருக்கு என்னா?

    எதுவாயிருந்தாலும் மோட்சம்னா... அப்ப நான் முன்னாடி சொல்ற 'இறத்தலுக்கும்' 'மோட்சம் பெறுவதற்கும்' என்ன வித்தியாசம்?

    இந்த ரீதியிலதான் நான் முன்னாடி சொல்லியிருந்தேன். நீங்க 'தவறு'ன்னு மார்க் போட்டுட்டீங்க. ரீ வேல்யுஷென் உண்டா? :-))

    ReplyDelete
  105. @முகில்
    சாரிங்க! கொஞ்சம் பயங்கர வேலை!
    உடனே பதில் சொல்ல முடியலை!
    நீங்க கேட்ட மத்த கேள்விக்கெல்லாம் அடுத்த வாரம் வருகிறேன்!

    இப்போ நாராயணன் மட்டும்!
    //அதாவது... பாற்கடலில் பள்ளிகொண்டவன், அதனால் (நாரம் + சயணன் = நாராயணன்) என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய சிந்தனை//

    (இராமாயணம்=இராம+ஆயணம்=இராமனை அறிவித்தல் என்பதை ஒப்பு நோக்கவும்)

    நாரம்=நீர்(மோட்சம்)!அதாச்சும் நீர் = universal solvent! சகலத்தையும் ஏற்கும்!
    ஆயணம்=அறிவித்தல்/சேர்த்தல்

    இறைவனை அறிவித்து,
    அவனிடத்தில் நம்மை ஆற்றுப்படுத்தி,
    நம்மை அந்த நீரிலே சேர்ப்பது/கரைப்பது.
    அதுவே நாராயணன் என்பதற்குப் பொருள்!

    திருப்பெயரிலேயே
    உயிர்களை எல்லாம் கட்டாயம் தன்னிடத்திலே சேர்த்துக் கொள்கிறேன் என்னும் மோட்ச உறுதியை அளித்து விடுகிறான்!


    "நாராயணனே நமக்கே" பறை தருவான் - என்று அதனால் தான் ஆண்டாளும் எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறாள்!

    மாதவா, கேசவா, அச்சுதா, வாசுதேவா, பத்மநாபா என்று எத்தனையோ பெயர்கள் இருந்தாலும்....
    இந்த "நாராயண" என்ற ஒரு பெயருக்கும் மட்டும் இப்படி ஒரு மகத்துவம் இருப்பது இதனால் தான்!

    சைவ மடாதிபதிகளும் கையெழுத்து போடும் போது "நாராயண ஸ்மிருதி" என்றே கையொப்பம் இடுவார்கள்! இந்த "நாராயணன்" மட்டும் சைவம்/வைணவம் என்று சகலத்துக்கும் அப்பாற்பட்டவன்!

    உங்களைச் சாக்காக வைத்து, அடியேனும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன்!
    ஓம் நமோ நாராயணாய!

    ReplyDelete
  106. again @ முகில்
    //மண்ணவர் வைகுந்தம் போவதும் போவாததும், அவங்கவங்க விதிப்படிதான் நடக்கும் அப்டீன்னு அர்த்தமா//

    இல்லை!
    இங்கே விதி என்பது Rule/Law
    Boyles law - பாய்ல்ஸ் விதி என்று சொல்வதில்லையா? அது போல!

    வைகுந்தம் புகுவது மண்ணவருக்கு Rule...அதை மாற்ற முடியாது!

    PV=Constant; Boyles Law
    அதை மாற்ற முடியாது!
    அதே போல் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

    ReplyDelete
  107. //ஸ்ரீதர் நாராயணன் said...
    சிக்கினீங்களா? :-)//

    he he
    as you like it :)

    //எதுவாயிருந்தாலும் மோட்சம்னா... அப்ப நான் முன்னாடி சொல்ற 'இறத்தலுக்கும்' 'மோட்சம் பெறுவதற்கும்' என்ன வித்தியாசம்?//

    //அந்தத் "தான்" என்ற நிலை, "தான்’ என்ற பிரக்ஞை அழிவதே மோட்சம்!// என்று தான் சொல்லி இருந்தேன்!
    இறத்தலில் உடல் மட்டுமே அழிகிறது. "தான்’ என்ற பிரக்ஞை அழிவதில்லை என்பதே மெய்யியல் சூத்திரம்!

    May his soul rest in peace என்று மேலைநாட்டினரும் அறிந்தோ அறியாமலோ சொல்கிறார்கள்!
    Soul அழிந்து விட்டதென்றால், அது எப்படி peace-il rest edukkum? :)

    So, from the motcham perspective
    இறத்தல் <> மோட்சம்

    //இந்த ரீதியிலதான் நான் முன்னாடி சொல்லியிருந்தேன். நீங்க 'தவறு'ன்னு மார்க் போட்டுட்டீங்க. ரீ வேல்யுஷென் உண்டா? :-))//

    Re-totalled; Same marks! :)

    ReplyDelete
  108. ரொம்ப நன்றிங்க, கண்ணபிரான் இரவிசங்கர்!!!

    -முகிலரசிதமிழரசன்.

    ReplyDelete
  109. //இறத்தலில் உடல் மட்டுமே அழிகிறது. "தான்’ என்ற பிரக்ஞை அழிவதில்லை என்பதே மெய்யியல் சூத்திரம்! //

    ஹ்ம்ம்.... அதே மெய்யியல்தான் 'கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை (ஏற்கெனவே சொல்லிவிட்டேனோ?) சொல்லியிருக்கு.

    ஆதலால் முரண்நிலை ஏற்படுகிறது போல. :-))

    நாந்தான் தப்பான பரீட்சையில உக்காந்துட்டேன்ப் போல. மீண்டும் மீண்டும் பெயிலாயிட்டிருக்கேன் :-))

    ReplyDelete
  110. பதிவை படிச்சிட்டேன்....அருமை ;))


    பின்னூட்டத்தை படிச்சிட்டு வரேன் தல ;)

    ReplyDelete
  111. மிகவும் ஆழமான ஆனால் அர்த்தமுள்ள கேள்விகள்.... இதற்கான பதிலகளைத்தாங்கும் பதிவுக்காக காத்திருக்கும் எத்தனையோ பேருடன் நானும்...

    ReplyDelete
  112. //ஸ்ரீதர் நாராயணன் said...
    ஹ்ம்ம்.... அதே மெய்யியல்தான் 'கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை//

    கண்டவர் விண்டிலர்
    விண்டவர் கண்டிலர்

    உண்மை தான் ஸ்ரீதர்!
    அப்புறம் எப்படி இந்த வாசகத்தைச் சொன்னவர் மட்டும் கண்டு விண்ட முடிந்தது? மெய்யியல் நூல் எழுதியவர்கள் எல்லாம் காணாதவர்கள் விண்டது என்ற கதை ஆகி விடுமே? :)

    இதன் உண்மையான பொருள்:
    கண்டவர் "வேறொரு சொல்லையும்" விண்டிலர்!
    விண்டவர் "வேறொரு பொருளையும்" கண்டிலர்!

    ஓட்டப் பந்தயத்தில் இறுதியைக் கண்டவர்...வெற்றிக் கணத்தில் வேறெதுவும் பேச முடிவதில்லை! = கண்டவர் விண்டிலர்

    இறுதியை நோக்கி ஓடுபவர், கூவுவார்! விண்டுவார்! இறுதி இலக்கு நன்றாகவே தெரிகிறது...
    ஆனால் இன்னும் அவர் இறுதியைக் காணவில்லை! அதைக் காணும் வரை, அவர் வேறெதுவும் காண்பதில்லை = விண்டவர் (வேறொன்று) கண்டிலர்!

    ஆதலால் முரண்நிலை இல்லை!

    //நாந்தான் தப்பான பரீட்சையில உக்காந்துட்டேன்ப் போல. மீண்டும் மீண்டும் பெயிலாயிட்டிருக்கேன் :-)//

    பெயிலா?
    ஒவ்வொரு கேள்வியிலும் டபுள் ப்ரமோஷன் வாங்கிட்டு இப்படி ஒரு நாடகமா? ஹூம்
    வென்றவர் தேர்ந்திலர்
    தேர்ந்தவர் வென்றிலர்
    :)))))))))))))))))))

    ReplyDelete
  113. எனக்கு மோடசம் கிடைக்குமா இப்படி எல்லோரும் பின்னூட்டமிட்டபிறகு கடைசியா 115வது நபராய் பந்தலில் நுழைகிறேனே?!

    மிகச்சிறந்தபதிவாக இருப்பதாலும் படிக்கும்போதே ரொம்பவேசிந்திக்க வைப்பதாலும் இதற்கு சீரியசாகவேநானும் பின்னூட்டமிட
    வேண்டி இருக்கிறது.
    ஆத்மானுபவ மோடசத்தைஆழ்வாரிப்படிக்கூறுகிறார்.

    "நன்றாய் ஞானம் கடந்துபோய்
    நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
    ஒன்றாய்க்கிடந்த அரும் பெரும் பாழ்
    உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து
    சென்று ஆங்குஇன்ப துன்பங்கள்
    செற்றுக்களைந்து பசையற்றால்
    அன்றே அப்போதே வீடு
    அதுவே வீடு வீடாகுமே!"

    //ஆளவந்தாருக்கு மோட்சம் கிடைத்தால், பெரிய நம்பிக்கும் கிடைக்கும்!
    * மணக்கால் நம்பிக்கு மோட்சம் கிடைத்தால், ஆளவந்தாருக்கும் கிடைக்கும்!

    * உய்யக் கொண்டாருக்கு மோட்சம் கிடைத்தால், மணக்கால் நம்பிக்கும் கிடைக்கும்!
    * நாதமுனிகளுக்கு மோட்சம் கிடைத்தால், உய்யக் கொண்டாருக்கும் கிடைக்கும்!

    * நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைத்தால், நாதமுனிகளுக்கும் கிடைக்கும்//

    இதைதான் ராமானுஜ நூற்றந்தாதியில், ஆரம்ப வரியிலேயே இப்படி வருகிறது.

    "பூமன்னு மாது பொருந்தியபொருந்திய மார்பன் புகழ்மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் ராமானுஜன்" என்று.

    விவரமும் விளக்கமும் சிறப்பு ரவி.
    //எது அடிப்படை? = எம்பெருமானின் "அடிப்"-படையே அடிப்படை!
    பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார்
    இறைவன் "அடி" சேரா தார்!//

    ஆஹா! அருமை!
    "தெண்ணலருவி மணிபொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!
    அண்ணலேஉன் அடி சேர அடியேற்காவாவென்னாயே!"

    மகத்தான இந்தப்பதிவிற்கு
    நான் எது எழுதி பின்னூட்டமிட்டாலும் அது மதுரகவி சொல்வதுபோல,

    "ஈயாடுவதோ கருடற்கெதிரே
    இரவிக்கெதிர்மின் மினியாடுவதோ
    நாயாடுவதோ உறுவெம்புலிமுன்
    நரியாடுவதோ நரகேசரிமுன்?" என்றாகிவிடும்.:):)ஆகவே,சமத்தாய் பாராட்டிவிட்டு ரவிக்கு அரங்கன் அருள் மேலும் கிடைக்க ஆசிர்வாதம் செய்துவிட்டு நகர்ந்துகொள்கிறேன்!!

    ReplyDelete
  114. நண்பர் கே.ஆர்.எஸ்..

    உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றுமே கல்கண்டு..

    இந்தப் பதிவையும் வழக்கம்போல் முழுவதையும் படித்தேன். அப்படியும் எனக்கொரு சந்தேகம்..

    எனக்கு மோட்சம் கிடைக்குமா?

    செய்த பாவங்களே தூங்கவிடாமல் செய்கின்றபோது.. போன ஜென்மத்துப் பாவங்கள் இயங்க விடாமல் செய்கின்றபோதும், செய்யப் போகின்ற பாவங்கள் வாழ்க்கையை வெறுப்பாக்கும் நிலையில்..

    இந்த மோட்சம் எங்கே, எப்படி எனக்குக் கிடைக்கும்..?

    ReplyDelete
  115. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    நண்பர் கே.ஆர்.எஸ்..
    உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றுமே கல்கண்டு..//

    அட, அப்பிடின்னா எனக்கு ஒரு கல்கண்டு சாதம் பார்ஸேல்ல்ல்ல் :)

    //இந்தப் பதிவையும் வழக்கம்போல் முழுவதையும் படித்தேன். அப்படியும் எனக்கொரு சந்தேகம்..
    எனக்கு மோட்சம் கிடைக்குமா?//

    இதில் என்ன சந்தேகம்?
    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! Boyles Law மாதிரி! நடந்தே தீரும்!

    //செய்த பாவங்களே தூங்கவிடாமல் செய்கின்றபோது..//

    அதை உணரும் போது
    உணர்ந்து "நடக்கும்" போது
    அற்றது பற்றெனில் உற்றது வீடு!

    //போன ஜென்மத்துப் பாவங்கள் இயங்க விடாமல் செய்கின்றபோதும், செய்யப் போகின்ற பாவங்கள் வாழ்க்கையை வெறுப்பாக்கும் நிலையில்..//

    போய பிழையும்=போன ஜென்மத்துப் பாவங்கள்
    புகு தருவான் நின்றனவும்=செய்யப் போகின்ற பாவங்கள்
    தீயினில் தூசாகும்
    செப்பேலோ ரெம்பாவாய்!

    இந்தக் கோதைத் தமிழ் வேதம் அனைத்துக்கும் வித்தாகும்!
    பொய் ஆகாது!

    முருகன் வழியில் சொல்லட்டுமா உங்களுக்கு?
    நாள் என் செய்யும்? வினை தான் என் செய்யும்?....
    குமரேசர் இரு தாளும்.....
    எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

    //இந்த மோட்சம் எங்கே, எப்படி எனக்குக் கிடைக்கும்..?//

    இறைவனின் அடிப்-படையே அடிப்படை!
    பரிபூர்ண சரணாகதியே மோட்ச உபாயம்!
    அவனே வழியும் ஜீவனுமாய் இருக்கிறான்!

    என் கல்கண்டு சாதம் என்ன ஆச்சு?
    செய்யலீன்னா வாங்கியாச்சும் கொடுங்க! :)))

    ReplyDelete
  116. //கண்டவர் "வேறொரு சொல்லையும்" விண்டிலர்!
    விண்டவர் "வேறொரு பொருளையும்" கண்டிலர்!//

    சூப்பரு. இதை இப்படியும் சொல்லலாம் போல. நல்லா எழுதியிருக்கீங்க தல.

    உங்களுக்கு ஒரு தனியான பதிவா எழுதிடலாம்னு தோணிட்டிருக்கு. நேரம் கிடைக்கும்போது எழுதறேன். :-)

    ReplyDelete
  117. //ஷைலஜா said...
    எனக்கு மோடசம் கிடைக்குமா இப்படி எல்லோரும் பின்னூட்டமிட்டபிறகு//

    இது என்ன வம்பு
    நான் என்ன டிஸ்ட்ரிபியூட்டரா? :)))

    //இதற்கு சீரியசாகவேநானும் பின்னூட்டமிட
    வேண்டி இருக்கிறது//

    ஷைலு அக்கா நகையாவும் சொல்வாய்ங்க! சுவையாவும் சொல்வாய்ங்க!

    //செற்றுக்களைந்து பசையற்றால்
    அன்றே அப்போதே வீடு
    அதுவே வீடு வீடாகுமே!//

    சூப்பர்-க்கா!

    //பூமன்னு மாது பொருந்திய மார்பன்
    புகழ்மலிந்த பாமன்னு மாறன்
    அடிபணிந்து உய்ந்தவன் ராமானுஜன்//

    ஆசார்ய பரம்பரையா? கலக்கல்!

    //தெண்ணலருவி மணிபொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!
    அண்ணலேஉன் அடி சேர அடியேற்காவாவென்னாயே//

    இது யார் பாசுரம் அக்கா?
    விவரமாச் சொல்லுங்க!

    இப்படி தடக் தடக்-ன்னு பாட்டு எடுத்து வுட்டா எனக்கு என்னா புரியும்? மீனிங் சொல்லணூம்ல?
    குமரன் பின்னூட்ட விதி! அதை மீறினா அடி உங்களுக்கு இல்ல! பதிவு ஓனருக்கு! கொஞ்சம் காப்பாத்துங்க க்கோவ்!

    //இரவிக்கெதிர்மின் மினியாடுவதோ//

    நான் அவன் இல்லை!
    (குமரன் வந்து கலாய்க்கும் முன்னர் நானே சொல்லிடறேன்!)

    //அரங்கன் அருள் மேலும் கிடைக்க ஆசிர்வாதம் செய்துவிட்டு நகர்ந்துகொள்கிறேன்!!//

    ஆசிக்கு நன்றி-க்கா!
    அப்படியே சன்மானமா ரெண்டு மை.பா! :))

    ReplyDelete
  118. //ஸ்ரீதர் நாராயணன் said...
    உங்களுக்கு ஒரு தனியான பதிவா எழுதிடலாம்னு தோணிட்டிருக்கு//

    ஸ்பெசல் ஆப்பு தயார் ஆகிகிட்டு இருக்கு-ன்னு டீஜென்ட்டா சொல்றீங்க! :)

    //நேரம் கிடைக்கும்போது எழுதறேன். :-)//

    ஆண்டவா...இவருக்கு நேரமே கிடைக்காம அருள் செய்யுப்பா! ஹா ஹா ஹா :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP