Tuesday, July 15, 2008

புதிரா? புனிதமா?? - கோலிவுட் - முருகனருள்-100!

முடிவுகள் ரிலீஸ் பண்ணியாச்சே!
விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!

வெற்றிப் பட்டியல்!
முதல் வெற்றியாளர்
Gnana Raja

அடுத்து
நம் ஜிரா

அடுத்து
முகிலரசி தமிழரசன்!

வெற்றியாளருக்கு இனிய வாழ்த்துக்கள்!

முருகப் பெருமான் திருவருள் துணைக்கொண்டு,
வெற்றியாளருக்கு மட்டும் அன்றி,
நம் அனைவருக்குமே
முருக வாழ்த்துக்கள்! நன்மை
பெருக வாழ்த்துக்கள்! இன்பம்
வருக வாழ்த்துக்கள்!!!


மக்கள்ஸ்! இன்று முருகனருள் வலைப்பூவின் நூறாவது பதிவை முன்னிட்டு ஒரு "சிறப்புப்" புதிரா? புனிதமா?? முருகப்பெருமான், நம்ம கோலிவுட்டில் எடுத்த அவதாரங்கள் தான் இன்னிக்கி தலைப்பு! கமல், ரஜினி, சிவாஜி, எம்.ஜி.ஆர்-னு யாரெல்லாம் முருகன் வேசம் கட்டுனாங்க? யோஜிங்க மக்கா யோஜிங்க!

அப்படியே முருகனருள்-100 பதிவுக்குப் போய் ஒரு எட்டு எட்டிப் பாருங்க!
நம்ம பதிவர்கள் கும்மி அடிப்பாய்ங்க, தெரியும்! - காவடி எடுப்பாய்ங்களா?

எடுக்கறாங்களே!
KRS, ஜிரா, குமரன், VSK, திராச, ஜீவா-ன்னு அத்தினி பேரும் காவடி எடுக்கறாய்ங்க!
அத்தினி பேரும் காவடிச் சிந்து பாடறாய்ங்க!

அப்பிடீடீடீடீ எடுத்து வுடற பாட்டைக் கேட்டுக்கிட்டே குவிஜ் ஆடுங்க மக்கா! புதிரா புனிதமா ஆடுவமா? விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!


1

தேவரின் "தெய்வம்" படம் பற்றிச் சொல்லத் தேவையில்லை! படமும் பாடல்களும் சூப்பர் ஹிட்! மருதமலை மாமணியே முருகய்யா, தேவரின் குலம் காக்கும் வேலய்யா-ஐயா! - இந்தப் பாடல் ஒலிக்காத வாயில்லை!

தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தோம் தோம் என்று இசையமைப்பாளர் சொல்ல, on the spot, சத்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் என்று சொல் வந்து விழுந்தது கவியரசர் கண்ணதாசனுக்கு!

பாட்டின் இசையமைப்பாளர் யார்?-பாடகர் யார்? (நோ சாய்ஸ் :-)

1

குன்னக்குடி வைத்தியநாதன்-மதுரை சோமு

2

காதலா, காதலா படத்துல உலக நாயகன் கமல், ஒரு காமெடி சீன்-ல, முருகன் வேசம் கட்டுவாரு! - "தெ..தெ...தெய்வயானை, எனக்கு உன்னைத் தவிர வேற ஒரு செ..செ...செட்டப் இருக்குது"-ன்னு சொல்லுவாரு!

"வாட், செட்டப்ப்பா? யூ மீன் சக்களத்தி?.."-அப்படின்னு தெய்வயானை கேட்பாங்க! யார் இந்த தெய்வயானையா நடிச்சது?

2

அ) சவுந்தர்யா

ஆ) ரம்பா

இ) மீனா

ஈ) பிரபுதேவா

3

ஒளவையார் படத்துல கேபி சுந்தராம்பாள் பாட்டு பாடி யானைகளை வரவழைப்பாங்க! அதுங்க எல்லாம் போய் மூவேந்தர் கோட்டையை முட்டும். (ஒரு குட்டி யானை உட்பட)

பாரியின் மகளிர் அங்கவை-சங்கவையின் காதலனான திருக்கோவிலூர் மன்னனைச் சிறைப்பிடித்து கோட்டையில் வைத்ததால் இந்த வினை!

யார் அந்தக் கதைக் காதலன்? பட நடிகர்??

3

அ) ஓரி-சிவாஜி

ஆ) தெய்வீகன்-கிட்டப்பா

இ) ஓரி-தியாகராஜ பாகவதர்

ஈ) தெய்வீகன்-ஜெமினி கணேசன்

4

உபதேசம் செய்வதோடு மட்டுமில்லாமல், அதன்படியே வாழ்ந்து காட்டிய வெகு சில ஆன்மீகப் பெருமக்களில் முக்கியமானவர், முருகத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள். (அடியேனைத் தொட்டுத் தூக்கிப் பரிசளித்ததை இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது).

சிறு குழந்தைகளுக்கான இராமகிருஷ்ண குடிலுக்கு, சுவாமிகள் அள்ளி அள்ளிக் கொடுத்த மகான்! எம்.எஸ். அம்மாவைப் போலவே மேடையிலேயே பணம் பட்டுவாடா ஆகி விடும்! வீட்டுக்கு ஒரு பொன்னாடை கூடப் போகாது!

சுவாமிகள் பல தமிழ்த் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். ஆனால் வாரியார் தானே முழுத் திரைக்கதையும் எழுதிய படம் எது?

4

அ) தெய்வம்

ஆ) சிவகவி

இ) கந்தர் அலங்காரம்

ஈ) மிருதங்கச் சக்ரவர்த்தி

5

கொஞ்சும் சலங்கை படத்துல, சிங்கார வேலனே தேவா-ன்னு சாவித்திரி பாடுவாங்க! அதுக்கு ஜெமினி, சிவாஜி மாதிரி நாதஸ் வாசிக்க ரொம்பவே ட்ரை பண்ணுவாரு!:-)

உண்மையாகவே படத்துல அந்தப் பாட்டுக்கு நாதசுரம் வாசிச்சது யாரு?-எந்த ஊர் முருகன் கோயில்?

5

அ) நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்னம் பிள்ளை-திருச்செந்தூர்

ஆ) ஷேக் சின்ன மெளலானா-சிக்கல்

இ) காருக்குறிச்சி அருணாசலம்-சிக்கல்

ஈ) தில்லானா மோகனாம்பாள் புகழ் MP பொன்னுசாமி-திருச்செந்தூர்

6

(சினிமா அல்லாத ஒரு முருகன் கேள்வி)

முருகன் இல்லாத தமிழ் ஈழமா? முருகனுக்குத் தான் எத்தனை எத்தனை கோயில்கள் ஈழத்தில்!

பெளத்தம், முகம்மதியம், இந்து சமயம் என்று மும்மதமும் வழிபடும் ஒரு முருகன் கோயில் இருக்கு ஈழத்தில்! அவரவர் தங்கள் தங்கள் தெய்வம்/குரு என்று சொந்தம் கொண்டாடிக் கொள்ளும் அந்த முருகன் கோயில் எது?

6

அ) நல்லூர் கந்தசாமி ஆலயம்

ஆ) கதிர்காமம் முருகன் ஆலயம்

இ) மன்னார்-திருக்கேதீஸ்வரம்

ஈ) மட்டக்களப்பு-கல்லடித் திருச்செந்தூர்

7

முருகன் பெயரைப் புனைப்பெயராக வைத்துப் பாடல்கள் புனைந்த இசை மேதை யார்?

7

அ) லால்குடி ஜெயராமன்

ஆ) முத்துசாமி தீட்சிதர் (குரு"குஹ" என்ற முத்திரை ஒவ்வொரு பாட்டிலும் வரும்)

இ) அரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர்

ஈ) MM தண்டபாணி தேசிகர்

8

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு பாட்டுக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முருகனாக நடிக்க, ஜெயலலிதா வள்ளியாக நடித்தார்! இதை தேர்தல் போஸ்டர்களில் கூடச் சிலர் பார்த்திருக்கலாம்!

ஏற்கனவே சிவாஜி திருப்பதி போய் வந்ததைப் பெரிய சர்ச்சை ஆக்கிய தி.மு.கழகத் தலைவர்கள், எம்.ஜி.ஆர் முருகனாகத் தோன்றியதையும் சர்ச்சையாக்க முயன்று, முடியாமல் போனார்கள்!

என்ன படம்?

8

தனிப்பிறவி

9

கம்பீர கான மணி என்று மறைந்த காஞ்சிப் பெரியவரால் போற்றப் பெற்றவர் சீர்காழி கோவிந்தராஜன்! அவர் பல தமிழ்ப் படங்களில் தோன்றி நடித்துள்ளார்! குள்ள உருவத்துக்கு ஏற்ற ரோல் என்றால் உடனே சீர்காழி தான் என்று இருந்த கால கட்டம், தமிழ்ச் சினிமாவில்!

சீர்காழி முதல் முதலாக திரைப்படத்தில் தோன்றிய வேடம் எது?

9

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) அகத்தியர்

இ) ஒரு பக்திப் பாடகர்

ஈ) நக்கீரர்

10

முருகன் என்றாலே இளமை! தமிழ்ச் சினிமாவில் இளமை என்றாலே சிவகுமார்! கோடம்பாக்க மார்க்கண்டேயன்! ஆக கந்தன் கருணை படத்தில் முருகனாகச் சிவகுமார் நடித்தது சாலவும் பொருத்தம்!

ஆனால் குழந்தை முருகனாக நடித்து, //ஜெமினிக்கு - தந்தைக்கு உபதேசம் சொன்ன// குழந்தை நடிகர் யார்? (நோ சாய்ஸ் :-)

10

மாஸ்டர் ஸ்ரீதர்



இது காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1

2 அ) சவுந்தர்யா ஆ) ரம்பா இ) மீனா ஈ) பிரபுதேவா

3 அ) ஓரி-சிவாஜி ஆ) தெய்வீகன்-கிட்டப்பா இ) ஓரி-தியாகராஜ பாகவதர் ஈ) தெய்வீகன்-ஜெமினி கணேசன்
4 அ) தெய்வம் ஆ) சிவகவி இ) கந்தர் அலங்காரம் ஈ) மிருதங்கச் சக்ரவர்த்தி
5 அ) நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்னம் பிள்ளை - திருச்செந்தூர் ஆ) ஷேக் சின்ன மெளலானா-சிக்கல் இ) காருக்குறிச்சி அருணாசலம்-சிக்கல் ஈ) தில்லானா மோகனாம்பாள் புகழ் MP பொன்னுசாமி-திருச்செந்தூர்
6 அ) நல்லூர் கந்தசாமி ஆலயம் ஆ) கதிர்காமம் முருகன் ஆலயம் இ) மன்னார்-திருக்கேதீஸ்வரம் ஈ) மட்டக்களப்பு-கல்லடித் திருச்செந்தூர்
7 அ) லால்குடி ஜெயராமன் ஆ) முத்துசாமி தீட்சிதர் இ) அரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர் ஈ) MM தண்டபாணி தேசிகர்
8
9 அ) நம்பியாண்டார் நம்பி ஆ) அகத்தியர் இ) ஒரு பக்திப் பாடகர் ஈ) நக்கீரர்
10

72 comments:

  1. இன்னைக்கு இரவு வரை வேலை பிஸி... ஓடிக்கிட்டே இருக்க வேண்டி இருக்கு.... முடிந்தால் கடைசி ஆளாக சேர்ந்துக்கிறேன்... :)

    ReplyDelete
  2. indha pottila naan kalandhukalama? :D

    ReplyDelete
  3. 1. நினைவிலிருந்து எழுதுகிறேன். இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன், பாடியவர் மதுரை சோமு.

    2. அ) சவுந்தர்யா

    3. ஈ) தெய்வீகன்-ஜெமினி கணேசன்

    4. இ) கந்தர் அலங்காரம்

    5. இ) காருக்குறிச்சி அருணாசலம்-சிக்கல்

    6. ஆ) கதிர்காமம் முருகன் ஆலயம்

    7. ஆ) முத்துசாமி தீட்சிதர்

    8. ??

    9. ஆ) அகத்தியர்

    10. கமல்

    ReplyDelete
  4. //G.Ragavan said...
    indha pottila naan kalandhukalama? :D//

    Murugan-na endraikkum muthal urimai ungalukku thaan Ragava!

    Puthiril thaaralamaa kalanthukunga!:-)

    ReplyDelete
  5. @குமரன்!

    முருகனே குமரனா வந்து விடை சொன்னாலும்...குற்றம் குற்றமே!
    :-))))

    2,4,8,9,10 தவறு குமரன்!
    =5/10

    கூகுள் வாகனத்தில் ஏறு குமரா!
    இந்த முறை அண்ணனிடம் ஏமாந்துடாதே! பழம் உனக்கே கிடைக்க முந்து முந்து! :-))

    ReplyDelete
  6. 1. kunnakudi vaithiyanathan, madurai somu
    2. soundarya
    3. deiveegan, gemini
    4. kandar alangaram
    5. karukurichi arunachalam chikal
    6. kathirkamam
    7. muthusamy deekshidar
    8. thanipiravi (thevar films)
    9. nakeerar
    10. master sridhar

    ReplyDelete
  7. Ragavan, kamalai-ai paathu kitte heroine-ai cheriyaa paakama vittaro :-)

    2,4,10 thavaRu gira
    =7/10

    ReplyDelete
  8. உள்ளேன் ஐயா :)

    ReplyDelete
  9. 1.இசையமைப்பாளர்:குன்னக்குடி
    பாடகர்:மதுரை சோமு
    2.ரம்பா
    4.தெய்வம்
    5.காருக்குறிச்சி அருணாசலம்-சிக்கல்
    8.தனிப்பிறவி
    9.அகத்தியர்
    10.மாஸ்டர் பிரபாகர்

    ReplyDelete
  10. திண்டுக்கல் சர்தார், வாங்க!
    1,2,5,8 சரி!
    =4/10

    ReplyDelete
  11. 1. Music Director : Kunnakkudi Vaidyanathan
    Singer: Madurai Somasundaram
    2. ஆ) ரம்பா
    3. ஈ) தெய்வீகன்-ஜெமினி கணேசன்
    4. ஆ) சிவகவி
    5. இ) காருக்குறிச்சி அருணாசலம்-சிக்கல்
    6. ஆ) கதிர்காமம் முருகன் ஆலயம்
    7. ஈ) MM தண்டபாணி தேசிகர்
    8. Thani Piravi
    9. ஈ) நக்கீரர்
    10. Master Sridhar

    ReplyDelete
  12. Gnana Raja - Kalakkal
    7,10 thappu
    matra ellam cheri = 8/10

    7-punai peyar thalaivare! neenga sonnathu nija peyar
    10-video-vai poyi paarunga youtube la! (ithukku mela bittu koduthaa naan maatippen) :-))

    ReplyDelete
  13. 10)
    Sridevi
    http://www.youtube.com/watch?v=GPyalc_pi5E

    ReplyDelete
  14. Gnanaraja = 9/10

    Ethukku antha onnai vittu vachirukeenga! hmmmm adichi aadunga thala! 10/10 enge? enge? :-))))

    ReplyDelete
  15. 2. oppps.... valliya kaeteengannu nenachean. deivanaiya... appo ramba. chee valli-nu ramba cholvanga. sri valli endru cholnu kamal thiruthuvaru. nalla ninaiviruku. kelviya ozhunga pakalanga.

    4. kandar alangarathukum avar thaan thiraikathainnu nenaikirean. need to confirm. but the answer is deivam.

    10. avar peru sridhar illaiya... avvvv....avaru pinnalil cinemala naradhara ellam varuvare....avaru kurathi magan padathula kooda nadichirukarunga herova. athula avaruku frienda varrathu kamal. avar per sridhar illaiya!!!!

    ReplyDelete
  16. 7. ஆ) முத்துசாமி தீட்சிதர்
    http://en.wikipedia.org/wiki/Muthuswami_Dikshitar
    But not directly mentioned.

    In general second attempt should not be allowed for multiple choice questions ;)

    ReplyDelete
  17. எனக்கு ஒரு கேள்விக்கு தான் விடை தெரியும்...

    அது 2 அ) சவுந்தர்யா

    ReplyDelete
  18. தல

    முருகா இது என்ன சோதனை...2வது கேள்விக்கு மட்டும் தான் விடை தெரியுது..அ ;)

    ReplyDelete
  19. 9.ஒரு பக்திப் பாடகராக,டி.எம்.எஸ்.உடன் சேர்ந்து பாடி இருப்பார்.படம் தெய்வம்.
    10Sridevi.

    ஏற்கனவே பெற்ற மதிப்பெண்களுடன் சேர்த்துக் கொள்ளலாமா?

    ReplyDelete
  20. இசை அமைப்பாளர் சங்கர்,
    பாடகர் மதுரை சோமு

    2.சவுந்தர்யா

    3.தெய்வீகன் - ஜெமினி கணேசன்

    4.தெய்வம், தேவர் பிலிம்ஸ் தேவரின் வேண்டுகோள்படி

    5.காருகுறிச்சி அருணாசலம் - சிக்கல்

    6.நல்லூர் கந்தசாமி ஆலயம் - இது கொஞ்சம் சந்தேகம் தான், திரும்ப வரேன்

    7,எம்.எம். தண்டபாணி தேசிகர்

    8.சந்திரோதயம்

    9.அகத்தியர்

    10.ஸ்ரீதேவி

    எத்தனை சரி, எத்தனை தப்புனு சொன்னதும் திரும்பவும் வரேன்.

    ReplyDelete
  21. முருகா! முருகா!
    1. குன்னக்குடி வைத்தியநாதன்; பாடகர் - மதுரை சோம சுந்தரம்.
    2. ஆ. இரம்பா - தெய்வானை; சவுந்தர்யா - வள்ளி.
    3. ஈ. தெய்வீகன் - ஜெமினி கனேசன்.
    4. ஆ. சிவகவி.
    5. இ. காருக்குறிச்சி அருணாச்சலம் - சிக்கல்.
    6. ஆ. கதிர்காமம் முருகன் கோயில்.
    7. ஆ. முத்துசுவாமி தீட்சிதர் (பெயர் - குருகுகா).
    8. தனிப்பிறவி 1966
    (எதிர்பாராமல் நடந்ததடி
    முகம் கண்ணுக்குள் விழுந்ததடி).
    9. ஈ. கந்தன் கருணை படத்தில் நக்கீரராக.
    10. ஸ்ரீ தேவி.

    ஓம் முருகா!
    முகிலரசி தமிழரசன்.

    ReplyDelete
  22. 1. Music : Kunnakudi Vaidhyanathan, & Singer :Madurai Somu
    2. Rambha
    3.ஈ) தெய்வீகன்-ஜெமினி கணேசன்
    4. ஆ) சிவகவி
    5.இ) காருக்குறிச்சி அருணாசலம்-சிக்கல்
    6.ஆ) கதிர்காமம் முருகன் ஆலயம்
    7.MM தண்டபாணி தேசிகர்
    8. Thanippiravi
    9.ஈ) நக்கீரர்
    10.Sridevi

    ReplyDelete
  23. 1. குன்னக்குடி வைத்தியநாதன்

    2. அ) சவுந்தர்யா ?
    3. ஆ) தெய்வீகன்-கிட்டப்பா

    4. அ) தெய்வம்

    5. ஆ) ஷேக் சின்ன மெளலானா-சிக்கல்

    6. அ) நல்லூர் கந்தசாமி ஆலயம்

    7. ஈ) MM தண்டபாணி தேசிகர்

    8. நான் ஆணையிட்டால்

    9. ஆ) அகத்தியர்

    10. பிரபு

    ReplyDelete
  24. ராகவா
    ippo 2-seri!
    valli-nu ninachikitte padicha ippdi thaan!
    question paper-ai question paper-la irunthu thaan padikkanum! :-)

    4, 10 thavaru!
    =9/10

    ReplyDelete
  25. Gnana Raja
    kalakkal! 10/10
    முதல் வெற்றியாளர் ஞான ராஜாவுக்கு
    முருக வாழ்த்துக்கள்! நன்மை
    பெருக வாழ்த்துக்கள்!

    :-)

    ReplyDelete
  26. @வெட்டி

    உங்களுக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு கேள்விக்கும் விடை தப்பு! :-)

    எங்க ஜிரா இப்போ கண்டுபுடிச்சிட்டாரு! அவர் கிட்ட பிட் அடிங்க! :-)

    ReplyDelete
  27. @மாப்பி கோபி
    வாய்யா...தொடர் கதையில கப்பிய மாட்டி என்னை மாட்டு விடறியா நீயி? :-)

    Why only question 2?
    But answer is wrong! jorry! :-)

    ReplyDelete
  28. 1. Isai Kunnakkudi, Singer: Madurai Somu.
    2 அ) சவுந்தர்யா
    3ஈ) தெய்வீகன்-ஜெமினி கணேசன்
    4இ) கந்தர் அலங்காரம்
    5 இ) காருக்குறிச்சி அருணாசலம்-சிக்கல்
    6ஆ) கதிர்காமம் முருகன் ஆலயம்
    7ஆ) முத்துசாமி தீட்சிதர்
    9ஆ) அகத்தியர்
    10 SriDevi

    ReplyDelete
  29. @திண்டுக்கல் சர்தார்
    9 thappunga!
    10 correct!
    =5/10

    திருப்பியும் ட்ரை பண்ணலாம்! :-)

    இது கண்ணபிரான் வலைப்பூ!
    காதலும், மலர்களும் மலர்ந்து கொண்டே இருக்கலாம்! :-)))))))

    ReplyDelete
  30. கீதாம்மா வாங்க!
    2,4,6,7,8,9 = thappu!
    =4/10

    isai methai punai peru neenga eppdi miss pannalama? too bad!
    neenga chonna peru punai peru illa! unmai peru!

    ReplyDelete
  31. வாங்கய்யா தமிழ்!
    லோவெல் நகரத்து மன்னா!

    மொத ஆட்டத்துலேயே பத்துக்குப் பத்தா!
    ஜூப்பரோ ஜூப்பர்!

    =10/10

    ஸ்டார் வெற்றியாளர் முகிலரசி தமிழரசன் வாழ்க! வாழ்க!
    முருக வாழ்த்துக்கள்! நன்மை
    பெருக வாழ்த்துக்கள்! இன்பம்
    வருக வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. ப்ரசன்னா
    கலக்கல்! 7 mattum thappu!
    google vahanam erunga! vudatheeenga! just one more! :-)

    =9/10

    ReplyDelete
  33. கோவி அண்ணா
    நீங்களும் அவரை மாதிரியே கேள்வித் தாளைத் தாளில் இருந்து படிக்க மாட்டீங்களா? unga own மனசில் இருந்து தான் படிப்ப்பீங்களா?
    கந்தன்-தாளில் இருந்து படிங்க அண்ணாச்சி! :-)

    1 half correct-paadagar yaaru? easy annachi!
    matha ellame thappu anna! very sorry! mayil vahanam ippo vendam, google vahanam yerunga!

    =0.5/10

    ReplyDelete
  34. Shobha, nalama? romba naal aachu ungala paathu!

    249 thappu
    =7/10

    rendam aatam aadunga pleaajeee! :-)

    ReplyDelete
  35. 2. ரம்பா

    4 கந்தர் அலங்காரம், அப்படி ஒரு படம் வந்துச்சு??/

    6.கதிர்காமம் முருகன் ஆலயம்

    8.ஒளி விளக்கு??? படம் பார்த்ததில்லை, அதனால் தெரியலை! :P

    9.நம்பியாண்டார் நம்பியாகத் தான் இருக்கணும், நக்கீரராய்த் திருவிளையாடலில் நடிச்சவர் ஏ.பி.நாகராஜன், பக்திப் பாடகராய் வந்தது அதுக்கு அப்புறம்தான்னு நினைக்கிறேன்.

    7. பேரு நினைப்பு மனசிலே இருக்கு, வெளியே வரமாட்டேங்குது. மாமியார் இங்கே இல்லை, இருந்தால் உடனே சொல்லி இருப்பாங்க, நேரம், போங்க!.

    ReplyDelete
  36. @கீதாம்மா
    என்னாது மாமியார் கிட்ட இருந்து பிட் அடிக்கத் திட்டம் போட்ட மருமகள் ஒலகத்துலேயே நீங்க ஒருத்தராத் தான் இருப்பீங்க போலக் கீதே! :-)


    4,8,9 thappu
    7 no attempt
    2,6 correct

    =6/10

    ReplyDelete
  37. நன்றி ரவி, நலம்தான். மகளும் பேத்தியும் இந்தியா வந்ததால் கொஞ்சம் பிஸி.
    249 தவறு என்றால் என் மதிப்பெண் 6 தான். எட்டாம் கேள்வி நான் சாய்சில் விட்டது. :)
    ஷோபா

    ReplyDelete
  38. ஆஹா...

    தெய்வயானை யாருனு கேள்வியா.. நான் வள்ளினு நினைச்சிட்டேன்...

    அது நம்ம MSV காண்ற கணவாச்சே...

    தெய்வயானையா வரது ரம்பா...
    வள்ளி சௌந்தர்யா...

    சௌந்தர்யாவை கமல் மடில உக்கரா வைப்பாறே..

    அந்த சீன்ல வர சில முக்கியமான டயலாக்ஸ்...

    உனக்கு தெரியாமல் எனக்கு செட் அப் ஒன்று இருக்கிறது

    இவள் தான் வள்ளி... என் உள்ளம் கவர்ந்த கள்ளி

    அது ராமனுக்கு தானே.. நான் தான் முருகனாயிற்றே :-)

    ReplyDelete
  39. முருகனருளே அருள்.... ரொம்ப நன்றி கண்ணபிரான் இரவிசங்கர்!

    முகிலரசி தமிழரசன்.

    ReplyDelete
  40. 2 இ) மீனா
    4 ஆ) சிவகவி
    8 Thanipiravi
    9 ஈ) நக்கீரர்

    ReplyDelete
  41. Shoba-kka
    ippo 4,8,9 coreetu!
    2 thappu!
    Balaji-yoda comedy comment-ai releaje panna, ellarum vidai cholliruvaanga! :-)

    =9/10
    kalakkaal! wht that onne onnu? youtube ethukku irukku? google vahanam kai kodukkatha pothu, garuda vahanam kai kodukkum :-)

    i mean youtube vahanam! :-)

    ReplyDelete
  42. வெட்டிப்பயல் has left a new comment on your post " புதிரா? புனிதமா?? - கோலிவுட் - முருகனருள்-100! ":

    ஆஹா... தெய்வயானை யாருனு கேள்வியா.. நான் வள்ளினு நினைச்சிட்டேன்... அது நம்ம MSV காண்ற கணவாச்சே... தெய்வயானையா வரது ****... வள்ளி ****...
    ****வை கமல் மடில உக்கரா வைப்பாறே.. அந்த சீன்ல வர சில முக்கியமான டயலாக்ஸ்... உனக்கு தெரியாமல் எனக்கு செட் அப் ஒன்று இருக்கிறது இவள் தான் வள்ளி... என் உள்ளம் கவர்ந்த கள்ளி அது ராமனுக்கு தானே.. நான் தான் முருகனாயிற்றே :-)

    Publish this comment.

    Reject this comment.

    ReplyDelete
  43. 1. இசைமைப்பாளர் - குன்னக்குடி வைத்தியநாதன்; பாடகர் - மதுரை சோமு. உபயம்: http://muruganarul.blogspot.com/2006/10/007.html :-))

    2. தெய்வானையாக நடிச்சது - ரம்பா

    3. ஜெமினி கணேசன்

    4. சிவகவி - பாகவதர்தானே ஹீரோ?

    5. காருகுறிச்சி

    6. கதிர்காமம்னுதான் நினைக்கிறேன்.

    7. தண்டபாணி தேசிகர்.

    8. தனிப்பிறவி

    9. நக்கீரர். (கந்தன் கருணை)

    10. ஸ்ரீதேவி.

    ReplyDelete
  44. ரவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    கந்தன் கருணை படத்தையே போட்டுப் பாத்துட்டேன். மாஸ்டர் ஸ்ரீதர்தான் அந்தப் படத்துல பாலமுருகனா நடிச்சது. அது தப்புன்னு சொல்றது தப்பு.

    அடுத்தது வாரியார் திரைக்கதை அமைச்சது சிவகவி படத்துக்கு.

    ReplyDelete
  45. 1) Kunnakkudi Vaidyanathan
    2) அ) சவுந்தர்யா
    3) Gemini Ganesan as Tirukovilur King Theiveegan.
    4) ஆ) சிவகவி
    5) இ) காருக்குறிச்சி அருணாசலம்-சிக்கல்
    6) ஆ) கதிர்காமம் முருகன் ஆலயம்
    7) Dont understand the question . So, I am writing 2 answers.
    Muthusamy Deekshidar - Guruguha, which is another name for Lord Subramanya.
    (or)
    or Senthil mevum by Lalgudi Jayaraman
    8) Thanipiravi - "edirpaaramal Nadanthathadi-mugam Kannukkul vizhunthathadi"
    9) ஈ) நக்கீரர்
    10) Sridevi

    ReplyDelete
  46. After long time, today I vistied blogs.
    THe last time I visited was during last Puthira Punithama.
    Hmmm. It is Good that ,I am participating in this.

    ReplyDelete
  47. Vaanga Sridharblogs :-)
    7 thappu!

    mathathu silathukku u gave only 1 part of answer. aana unga nalla neram, those answers were un-ambiguous, which automatically answers the 2nd part of question.
    :-)

    so
    =9/10

    ReplyDelete
  48. Were is my result.

    thappa irunthaalum paathu podunga :)

    ReplyDelete
  49. @Ragava
    Ithu enna Raveeeeeeeeeeeeeeeee -nnu intha e ezhukkareenga?
    pagar aaravam ee-nnu arunagiri cholvaare athuvaa? :-)

    ippo thaan vaariar question-kku unga answer right!
    ungalai yaaru chonnathu valai ulaga vaariar-nu? neenga thirai kathai ezhuthanathu ungalukke therila! :-)

    =9/10

    last question = bala murugan
    unga answer thappu thaaaaaaaaaaaaaaan!
    gemini kaathula othara balamurugan neenga chonna aalu illa! nalla video-la paarunga! athai correct-aa moonu peru answer panni irukaanga! (that too with no choice)

    ReplyDelete
  50. @Anandha Loganathan
    1 partly correct! yaaru singer?
    2 thappu
    matha ellam coreeetttu!

    =8.5/10

    2nd easy-nga! kelviya ozhunga padinga! :-)

    ReplyDelete
  51. 1) Music Director : Kunnakkudi Vaidyanathan
    Singer : Madurai Somasundaram
    2) Rambha

    ReplyDelete
  52. Anandha Loganathan
    jeyichiteenga!
    =10/10

    வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  53. "கோலிவுட்காத்தா"ழ்வாருக்கு கடும் கண்டனம். அவ்ளோ தான் முடியும் இப்போதைக்கு. முடிந்த போது கப்பலில் ஆட்டோக்கள் அனுப்பப்படும்.

    ReplyDelete
  54. // @Ragava
    Ithu enna Raveeeeeeeeeeeeeeeee -nnu intha e ezhukkareenga?
    pagar aaravam ee-nnu arunagiri cholvaare athuvaa? :-) //

    பகர் ஆர்வம் ஈ என்று கேட்க வேண்டியவர் ஆர்வமில்லாதாரே. நான் இல்லை. ஈயென நான் இரக்காமலே கொள்ளெனக் கொடுத்த வள்ளல் முருகன்.

    // ippo thaan vaariar question-kku unga answer right!
    ungalai yaaru chonnathu valai ulaga vaariar-nu? neenga thirai kathai ezhuthanathu ungalukke therila! :-) //

    வலையுலக வாரியாரா! ஆகா... இது வேறயா... பாவம் வாரியார்.

    // last question = bala murugan
    unga answer thappu thaaaaaaaaaaaaaaan!
    gemini kaathula othara balamurugan neenga chonna aalu illa! nalla video-la paarunga! athai correct-aa moonu peru answer panni irukaanga! (that too with no choice) //

    திரும்பவும் சொல்றேன். உங்க விடை தவறு. பஞ்சாட்சரன் என்று ஐந்தெழுத்து... சடாட்சரன் என்று எங்களுக்கு ஆறெழுத்து என்று சொல்லிவிட்டு ஜெமினியிடம் மந்திரம் ஓதுவது மாஸ்டர் ஸ்ரீதர். அதைத் தொடர்ந்து சொல்லச் சொல்ல இனிக்குதடா என்று பாடல் செல்லும்.

    இதோ யுடியூப் பாடல். பார்த்து விட்டு உடனடியாக தீர்ப்பை மாற்றி எழுதுங்கள். இல்லையேல் முருகனைப் பற்றித் தவறான தகவல்களை நீங்கள் பரப்புவதாக போராட்டம் நடத்தப்படும். :D

    http://www.youtube.com/watch?v=QERt_u5orik

    ReplyDelete
  55. 1. குன்னக்குடி வைத்தியநாதன்
    2.சவுந்தர்யா
    3. ஈ) தெய்வீகன்-ஜெமினி கணேசன்
    4. தெய்வம்
    5. இ) காருக்குறிச்சி அருணாசலம்-சிக்கல்
    6.தெரியலை - கேதீச்சரம் முருகன் கோயில் இல்லைன்னு மட்டும் தெரியும்
    9. அகத்தியர்

    ReplyDelete
  56. @chinna ammini akka
    1-paathi coreeetu
    2-thappu
    3-seri
    4-thappu
    5-seri

    =2.5/10
    ungalukku innum time irukku. last question-kku nadakkura sandaiyila...:-)

    ReplyDelete
  57. @ஜிரா
    பகர் ஆர்வம் ஈ-ன்னு கேட்ட அருணகிரி, பாவம், உங்க கணக்குப்படி ஆர்வம் இல்லாதவர் தானே! ஈ என கேட்காமலேயே அவருக்குக் கொடுக்கல போல வள்ளல்! :-(

    என்னாது முருகனைப் பற்றித் தவறான தகவல்களை அடியேன் பரப்புறேனா? நீங்க போராட்டம் நடத்தப் போறீங்களா?
    சூப்பர்! தாராளமா நடத்துங்க! இதை ஒன்னும் புதுசா சொல்லலையே நீங்க! ஏற்கனவே பால் பொங்கல்-ல கலப்படம் பண்ணுறவன் தானே நானு? :-)

    ReplyDelete
  58. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    @ஜிரா
    பகர் ஆர்வம் ஈ-ன்னு கேட்ட அருணகிரி, பாவம், உங்க கணக்குப்படி ஆர்வம் இல்லாதவர் தானே! ஈ என கேட்காமலேயே அவருக்குக் கொடுக்கல போல வள்ளல்! :-( //

    well...arunagiri avarukaga kekalai. namakaga kekurar. neenga iniyathu kaetkin padikirathillai pola :D athellam padichirundha....ithellam konjamachum therinjirukum ;)

    // என்னாது முருகனைப் பற்றித் தவறான தகவல்களை அடியேன் பரப்புறேனா? நீங்க போராட்டம் நடத்தப் போறீங்களா?
    சூப்பர்! தாராளமா நடத்துங்க! இதை ஒன்னும் புதுசா சொல்லலையே நீங்க! ஏற்கனவே பால் பொங்கல்-ல கலப்படம் பண்ணுறவன் தானே நானு? :-) //

    paal pongal ellam onga velai..video-voda onga vidai thappu. naan chonnathu correctnu nirubichirukean. ozhunga enaku 10/10 kuduthuttu.. munnadi 10/10nnu chonnavangaluku oru mark korainga.

    ReplyDelete
  59. ஆல் மக்கள்ஸ்

    குழந்தை முருகனாக இரண்டு நடிகர்கள் நடித்து உள்ளனர்!
    - தாய் தந்தையிடம் சேரும் முருகன் ஒருவர்
    - அதன் பின் தந்தைக்குப் பொருள் சொல்வதில் இருந்து மற்ற எல்லாத்துக்கும் இன்னொருவர்!

    அவர்கள் "இருவரும்" யார் யார் என்று கேள்வியைச் சற்றே மாற்றி அமைக்கிறேன்!


    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்களையும் தள்ளிடாது, இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னவர்களையும் தள்ளிடாது இருக்க, இது தேவைப்படுகிறது!

    கேள்வியின் நோக்கம்: குழந்தை முருகன் யார் என்று கண்டுபிடிப்பது தான்!

    விடைகள் அறிவிப்பினை இன்று இரவு வரை தள்ளி வைக்கிறேன்!

    ReplyDelete
  60. sridhar ஆங்க அந்த அசைப் படத்திற்கான பதில்?

    -முகிலரசி தமிழரசன்.

    ReplyDelete
  61. //well...arunagiri avarukaga kekalai. namakaga kekurar//

    sooperu....
    antha "namakaaga" kekurar enbathil unagalaiyum chethu kiteenga thaane?
    Illai...
    Arunagiriyoda antha "namakkaga" list-il naan illai; Enakku kEkkamalaiye koduthutaan; avar mathavangalukku thaan kEkkaraar- appdinu marupadiyum cholla poreengala? :)

    sila peru-kku "mattum" special-aa....kEtkaamaleye kavanikkaran pola karunai vallal aana murugaperuman! mathavanga ellam pagar aarvam ee nu kEttu kEttu thaan vaanganum pola :-)

    //neenga iniyathu kaetkin padikirathillai pola :D athellam padichirundha....ithellam konjamachum therinjirukum ;)//

    ennanga panarathu?
    athai ellam padichi irunthaa adiyen en ippdi irukka poren?
    athellam padichi karai yera try pannaren!
    (btw - appo potta pinottam ellam padikkamaye pottathu thaan! :-)

    ReplyDelete
  62. சரி மக்களே...
    ஆட்டத்தை முடிச்சிக்கலாமா?

    Here are the scores
    Kumaran=6/10
    gira=8
    sardar=4
    Gnana Raja=9
    Gnana Raja=10
    gira=9
    sardar=4
    geethamma=3
    tamizh=9
    prasanna=8
    shoba=5
    geethamma=5
    shoba=8
    sridhar=8
    gira=10
    anantha loganathan=7.5
    anantha loganathan=9
    chinna ammini akka=2.5
    tamizh=10

    என்னடா இது...சில பேருக்கு ஒரு மார்க் கொறைஞ்சி, ஒரு மார்க் கூடி இருக்கு-ன்னு பாக்குறீங்களா?

    ஹிஹிஹி
    உன் தமிழோடு விளையாடவே வந்தோம்! :)


    பத்தாம் கேள்வி கொஞ்சம் விவகாரமான கேள்வி!
    அதற்குண்டான விடை மாஸ்டர் ஸ்ரீதர்!
    Thatz why I asked to see the video and answer. Gnana Raja-vukku 1st-laye potta ennnoda pathilai paarunga!
    //10-video-vai poyi paarunga youtube la! (ithukku mela bittu koduthaa naan maatippen) :-))//

    ஆனா இன்னிக்கும் பல பேரு அதை ஸ்ரீதேவி-ன்னு "நினைச்சிகிட்டு" இருக்காங்க! அவங்க "நினைச்சதை" இணையத்திலும் எழுதி வச்சிட்டுப் போயிட்டாங்க! :)

    இணையத்தில் யாரும் மாஸ்டர் ஸ்ரீதர்-ன்னு எழுதி வைக்கலை என்பதற்காக அது மாஸ்டர் ஸ்ரீதர் இல்லை என்று ஆகி விடுமா என்ன?

    அதே போல பிற்கால இலக்கியங்களில் மாலவனைத் தமிழ்க் கடவுள் என்று யாரும் எழுதி வைக்கலை என்பதற்காக மாயோன் தமிழ்க் கடவுள் இல்லை என்று ஆகிட மாட்டான்!

    அவனைத் தமிழ்க் கடவுள் என்று தமிழர் தந்தை தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிறுவிச் சென்று விட்டார்!

    சேயோனும் மாயோனும் தமிழ்க் கடவுளரே! தமிழர் கடவுளரே!
    முத்தமிழ் தனிப்பட்ட சொத்து அல்ல! அது அனைவருக்கும் பொதுவான பொதுச் சொத்து!

    என்ன பாட்டீ-பழம் சுடுகிறதா? ஹா ஹா ஹா! இது தமிழ்க் கடவுளான முருகவேளின் பதிவல்லவா?
    அதான் புதிர் "விளையாட்டில்" இந்த முறை உரிமையுடன் உங்கள் அத்தனை பேரிடமும் விளையாடி விட்டேன்! - என் குழந்தை முருகனைப் போலவே!

    அடியேன் இவ்வாறு உரிமை எடுத்துக் கொண்டதை அனைவரும் அருள் கூர்ந்து மன்னிக்கவும்!

    ReplyDelete
  63. முதல் வெற்றியாளர்
    Gnana Raja

    அடுத்து
    நம் ஜிரா

    அடுத்து
    முகிலரசி தமிழரசன்!


    வெற்றியாளருக்கு இனிய வாழ்த்துக்கள்!

    முருகப் பெருமான் திருவருள் துணைக்கொண்டு,
    வெற்றியாளருக்கு மட்டும் அன்றி,
    நம் அனைவருக்குமே
    முருக வாழ்த்துக்கள்! நன்மை
    பெருக வாழ்த்துக்கள்! இன்பம்
    வருக வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  64. ஏங்க என்னொட மார்க், 9 ஆ இல்ல 10ஆ? ரெண்டு தமிழ் இருக்கு... எந்த தமிழ் ன்னு எனக்குத் தெரியல.

    9 ன்னா, நான் தான் இரண்டாவது முறையில ஸ்ரீதர் ன்னு சொன்னேனே.

    -முகிலரசி தமிழரசன்.

    ReplyDelete
  65. I was too busy with work today.. Checked the final results now...

    ReplyDelete
  66. //தமிழரசன் said...
    ஏங்க என்னொட மார்க், 9 ஆ இல்ல 10ஆ?//

    10/10

    //ரெண்டு தமிழ் இருக்கு... எந்த தமிழ் ன்னு எனக்குத் தெரியல//

    ha ha ha
    mukilarasi id layum vareenga
    தமிழரசன் id layum vareenga
    neenga entha thamizh? :-)))))

    athu ileenga
    neenga thaan last-aa vanthu athu master sreedhar-nu cholliteengale...
    athan neengalum 10/10

    ReplyDelete
  67. //க்கேபிக்குணி (05430279483680105313!) said...
    "கோலிவுட்காத்தா"ழ்வாருக்கு கடும் கண்டனம்.//

    ஆகா! எதுக்குக்கா கண்ட-னம் எல்லாம்?

    கோவிவுட் காத்தாழ்வாரா?
    வுட்டா ஆழ்வார் படத்துக்கு, தலைக்கு ஐடியா போட்டு பாட்டு எழுதிக் கொடுத்ததே நான் தான்-னு சொல்லிடுவீங்க போல இருக்கே!
    இந்த ஆழ்வார் பிட்டு தாங்க முடியலப்பா சாமீ!

    //முடிந்த போது கப்பலில் ஆட்டோக்கள் அனுப்பப்படும்//

    அறிவியல் கதைப் போட்டி போயிக்கிட்டு இருக்கு! ஸோ, தண்ணி மேல் போற ஆட்டோவைக் கண்டுபுடிச்சி அனுப்புங்க!

    ReplyDelete
  68. ஓ... அது மாஸ்டர் ஸ்ரீதரா? நான் யூட்யூப்ல பாக்கல. ஆனா இணையத்துலதான் எங்கேயோ ஸ்ரீதேவின்னு படிச்ச மாதிரி ஞாபகம்.

    முத்துசுவாமி தீக்ஷிதர் மிஸ் ஆயிடுச்சு. கூகுள்ள இன்னமும் நல்லா தேடிப் பழகனும் :-))

    ஒரு சுவையான தகவல் தெரியுமா? 'குறத்தி மகன்' படத்துல மாஸ்டர் ஸ்ரீதர்தான் ஹீரோ (விஜய் டீவில முன்ன அடிக்கடி போடுவாங்க). அவரோட அண்ணனா ஸைடு கேரக்டர்ல நடிச்சது யாரு தெரியுமா? நம்ம ஒலக நாயகன்தான். :-)) பின்னாடி நம்ம மாஸ்டர் டீவிக்கு வந்துட்டார்.

    ReplyDelete
  69. //ha ha ha
    mukilarasi id layum vareenga
    தமிழரசன் id layum vareenga
    neenga entha thamizh? :-)))))//

    அட, ஆமாங்க! ரெண்டு id இருக்கு!!!

    எனக்கு இப்ப வரைக்கும் தெரியாது. ஒரு பதிவுக்கு, இன்னொரு பதிவர்தான் பின்னூட்டம் போட முடியும் ன்னு தவறா நெனச்சிட்டேன். அப்படின்னா, கூகிள் id போதுமா?

    எனக்குப் பின்னூட்டம் போடவே தெரியாது, அதனாலதான் நான் கலந்துகிட்ட முதல் புதிரா புனிதமா? (மகளிர் தின விழாவுக்குரியது) ஆர்க்குட் ல்ல பதில் சொன்னேன். மன்னிச்சுடுங்க!

    ரெண்டுமே நான்தான், முகிலரசிதமிழரசன் தான். உங்களோட எல்லா புதிரா? புனிதமா? ல்ல பதில் சொன்னது நான்தான்.

    -முகிலரசி தமிழரசன்

    ReplyDelete
  70. @முகில்
    //ஆர்க்குட் ல்ல பதில் சொன்னேன். மன்னிச்சுடுங்க!//

    ஆகா! எதுக்கு மன்னிக்கணும்?
    ஆர்க்குட்-ல புதிரா புனிதமாவைப் பரப்பிய கொ.ப.செ நீங்க!

    //ரெண்டுமே நான்தான், முகிலரசிதமிழரசன் தான். உங்களோட எல்லா புதிரா? புனிதமா? ல்ல பதில் சொன்னது நான்தான்.//

    ஹிஹி
    அப்படியே அவர் ஏதாச்சும் சொன்னாலும், பரிசுன்னு வரும் போது உங்களுக்கு மட்டுமே கொடுப்பேன்! - இதை இங்கு கல்வெட்டில் பொறிச்சிச் சொல்கிறேன்!

    வீட்டுக்கு வரும் போது, நீங்களும் எனக்கு சாப்பிடப் பொரிச்சித் தரணும்! ஓக்கேவா :)))

    ReplyDelete
  71. எங்க என் ஒரு மார்க்கை காணவில்லை???

    நான் ஒரு மார்க் எடுத்தா பத்து மார்க் வாங்கின மாதிரி ;)

    என்ன ஜி.ரா.. சரிதானே :-)

    ReplyDelete
  72. ரொம்ப நன்றிங்க!!! ஆனா, நான் கொ.ப.செ கிடையாதுங்க, கு.ப.செ...

    குவிஸ் பரப்பு செயலாளர்... ;-)))

    ஏன்னா, உங்களன்ட ஆன்மீகப் பதிவுகளப் படிக்கிற அளவுக்குக் கூட அடியேனுக்கு ஞானம் இல்ல... ஆனாலும், எல்லா பதிவையும் படிச்சுடுவேன்.... பின்னூட்டம் தான் போடமாட்டேன்.

    மற்றபடி, பொதுவான செய்திகள் தமிழ், திருக்குறள், குவிஸ் போன்றவற்றில் முதல் ஆளாக பங்கு கொள்வேன்!

    //ஹிஹி
    அப்படியே அவர் ஏதாச்சும் சொன்னாலும், பரிசுன்னு வரும் போது உங்களுக்கு மட்டுமே கொடுப்பேன்!//

    என் மாமாவுக்குக் கிடைக்காத எதுவும் எனக்கும் வேண்டாம், என்பது எனது பணிவான வேண்டுகோள்!

    //வீட்டுக்கு வரும் போது, நீங்களும் எனக்கு சாப்பிடப் பொரிச்சித் தரணும்! ஓக்கேவா :)))//

    கண்டிப்பா வாங்க, அப்படியே திருவரங்க நாதனையும் கண்ணார தரிசிக்கலாம்! அருகிலேயேதான் ஆத்தா சமயபுரம் மாரியம்மனும் இருக்காங்க....

    -முகிலரசிதமிழரசன்

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP