Tuesday, November 18, 2008

தேவாரம் பாடிய "ஒரே" பெண் - Icon Poetry!

மக்களே, நால்வர் பாடிய தேவாரப் பாடல்கள் சிலவற்றைச் சிவன் பாட்டில் இது வரை பார்த்தோம்! அத்தனை பேரும் ஆண்கள்! இன்னிக்கி ஒரு பெண் பாடிய தேவாரத்தைப் பார்க்கலாமா?
நாயன்மார்கள் 63 பேரில் மூன்று பேர் பெண்கள்! ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தான் வாய் திறந்து பாடியுள்ளார்! அதுவும் ஆண்களை விட நுட்பமாகத் தோண்டி துருவி, தத்துவ விசாரணை செய்துள்ளார்!

மூன்று பெண் நாயன்மார்களில்...
* இசை ஞானியார் = சுந்தர மூர்த்தி சுவாமிகளின் அம்மா!
* மங்கையர்கரசியார் = பாண்டியன் மனைவி!
ஆனால் இவர்கள் இருவரும் பாட்டாக எதுவும் எழுதவில்லை! சுந்தரர் அம்மா என்பதற்காகவும், மதுரைக்கு வாதம் செய்ய சம்பந்தரை அழைத்து வந்தமைக்காகவும் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்! அவ்வளவு தான்!

ஆனால் இது போன்ற செல்வாக்குப் பின்புலம் ஏதும் இல்லாமல்...
ஒரு பேதைப் பெண் நாயன்மார் ஆனார்!


கணவன், "இன்னொரு மாம்பழம் எங்கே என்று கேட்டால்", "அதாங்க இது" என்று நகைச்சுவையாகவோ,
இல்லை "ருசியா இருந்தது; அதான் நானே தின்று விட்டேன்" என்றோ பொய் சொல்லக் கூடத் தெரியாத பேதை!

"சிவனடியார்க்கு கொடுத்து விட்டோமே, இப்போது கணவன் இன்னொன்றும் கேட்கிறாரே, என்ன செய்வது?" என்று சற்று நேரம் கலங்கி நின்ற சாதாரணப் பெண் இவள்! "ஈசனே, மந்திர மாங்கனி தா"-என்று மேஜிக் எல்லாம் செய்து காட்டவில்லை! தானாக வந்தது! ஈசனின் எண்ணமோ ஏதோ, கனி வந்தது! வாழ்க்கை போனது!

கணவன் முகக் குறிப்புக்கு நடப்பவள்! ஆனால் கணவன் இவளின் அகக் குறிப்புக்கு நடந்தானா? வெட்கக்கேடு! :(மனைவி புனிதள் என்றால், கணவன் தள்ளிக் கொள்வானா?
கணவன் புனிதன் என்றால், மனைவி தள்ளிக் கொள்வதில்லையே!


யோகம், வேள்வி, சரியை, கிரியை என்று எல்லாம் அவன் செய்து முடித்த பின்னர், அவளுடன் "அதுவும்" செய்கிறானே! அவளும் குடும்பம் நடாத்திக் குழந்தை பெற்றுக் கொடுக்கிறாளே?

இங்கே மனைவி புனிதள் என்று ஆனவுடன், சொல்லாமல் கொள்ளாமல் வேற்றூருக்குச் சென்று விட்டான் பரமதத்தன்! போதாக்குறைக்கு இளம்பெண் பேரிலேயே "புனித"வதி! கேட்கணுமா?
இவனோ இன்னொருத்தியைக் கட்டிக் கொண்டு, குழந்தையுடன் வந்து நிற்கிறான்! கேட்டால், அந்தக் குழந்தைக்கும் புனிதவதி என்றே "பய-பக்தியுடன்" பெயரும் இட்டானாம்! அடா அடா அடா!

உற்றார், உறவினர், சமூகம் யாரும் எதுவும் கேட்க முடியாது!
கேட்கப் போனாலும், இளம்பெண் புனிதா தான் "புனிதள்" ஆயிற்றே! குடும்பம் நடத்த முடியுமா? கும்பிடத் தானே முடியும்? எல்லாரும் காலில் வீழ்ந்து கும்பிடுங்கள்! :(((

தில்லை இறைவனின் மனைவியும் ஒரு புனிதள் தான்! அந்தப் புனிதள் தான் சிவ-"காமி" ஆகவும் இருக்கிறாள்! குடும்பமும் நடத்துகிறாளே!
அதைப் பாடிப்பாடிக் கும்பிடும் ஒரு சமூகத்துக்கு, புனிதவதியின் நியாயம் மட்டும் தெரியாமல் போனது ஏனோ?

ஆனால் இன்னிக்கும் காரைக்காலில் "மாங்கனி உற்சவம்" மட்டும் வெகு ஜோராக நடத்துகிறார்கள்! அதில் பரமதத்தன் என்னும் கணவனுக்கு மாலை மரியாதைகள் செய்து, பல்லாக்கில் ஏற்றி, அவனை ஆற்றங்கரை விடு விழா வேறு நடத்துகிறார்கள்! :(( - இது இந்தக் காலத்திலும் தேவையா?


புனிதளக்குத் தான் மண வாழ்வு ஒவ்வாதே! அவளும் வேண்டிக் கொண்டாள்! ஈசனும் உடன்பட்டு விட்டான்! பேயாய் மாறி விட்டாள்!
ஒரு இளம்பெண், இன்னும் அம்மா கூட ஆகவில்லை...அவள் பேயாக மாறித் திரிகிறாள் என்றால்?....சுடுகாட்டு வாய்க்கரிசியை உண்டு பசியாறுகிறாள் என்றால்? அங்கேயே வாழ்கிறாள் என்றால்?...இருவது வயசு தான்! :((
பதிகத்தைப் படிச்சிப் பாருங்க! அந்தக் காலப் பேய் மகளிர் பற்றி அம்மையார் பாட்டில் சொல்லுவாங்க! கண்ணுல தண்ணி தான் வரும்!

* ஆண்டாளின் துணிவு, இந்தப் பேதைப் பெண் புனிதவதிக்கு இல்லாமல் போனது ஏன்?
* ஆண்டாளின் வித்தியாசமான எண்ணத்தை ஏற்றுக்கொண்ட சமூகத்தின் ஒரு பகுதி, புனிதவதியை மட்டும் புறம் தள்ளியது ஏன்?
ஆசாரமான குடும்பங்களின் கட்டுக் கோப்பா? ஆணாதிக்கமா? சமூக விதியா? எது? எது?

* ஆணின் இளம் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று குழந்தை சம்பந்தரால் காட்ட முடிகிறது!
* பெண்ணின் இளம் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று பேதை புனிதவதியால் காட்ட முடியாதோ?
* இளம் சம்பந்தருக்கு கல்யாண ஏற்பாடு பேசத் துணிந்த சமூகம், இளம் புனிதாவுக்கு மட்டும் சுடுகாட்டு வாச ஏற்பாட்டுக்குத் தான் துணியுமா?

தோழி கோதையின் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழும் அடியேன்,
தோழி புனிதாவின் கவிதைகளில் நனைந்து நனைந்து கண்ணீர் வடித்தும் உள்ளேன்! - புனிதா...உன்னை நினைக்கும் போதெல்லாம் எனக்கு......:(

வைணவ இலக்கியத்தின் - தமிழ் மொழி, சாதி, பெண்மை, சமூகம் - என்று மதிக்கும் சாதாரண நடைமுறைக் கோட்பாடுகள்! - இவை தான் சைவக் குடும்பத்தில் பிறந்து ஊறிய என்னை, நாலாயிர ஈர்ப்புக்கும் ஒரு காரணமாகப் போய் விட்டது!நாம் அம்மையாரிடம் வருவோம்! யம்மா புனிதா, இனிக் காரைக்கால் "அம்மையார்" என்றே உன்னை அழைக்கிறோம்! ஈசனே உன்னை "அம்மா" என்று அழைத்து விட்டானே! நாங்கள் எம்மாத்திரம்?

காரைக்கால் அம்மையார் = சிறந்த கவிதை, மாறுபட்ட சிந்தனை! தமிழ் இலக்கியத்துக்கு அந்தாதி என்ற புதுமையை முதன் முதலில் பிரபலப்படுத்தியவர் அம்மையார் தான்! அனைத்து நாயன்மார்களையும் விடக் காலத்தால் முந்தியவர்! முதலாழ்வார்களின் கால கட்டம்! இலக்கியத்தில் வெண்பா மாறி அந்தாதி துவங்கிய கட்டம்!

Iconographic Poetry என்று பின்னாளில் ஆங்கிலக் கவிஞர்கள்/ சிந்தனையாளர்கள் D.H. Lawrence, Sigmund Freud முதலானோர் பிரபலப்படுத்தினர்.

ஆனால் அந்தக் குறியீட்டுக் கவிதைகளை எல்லாம் அம்மையார் எப்போதோ தமிழில் செய்து விட்டார்!
என்ன..... அது தேவாரம் என்னும் பக்தி இலக்கியத்துக்குள் ஒளிந்து கொண்டது! அதனால் வெளியில் அதிகமாகத் தெரியவில்லை! அட, ஆன்மீகம் தானே, அதுல பெருசா என்ன இலக்கியம் இருக்கப் போவுது என்ற நம்மவர்களின் "பார்வை"! இன்னிக்கி அதில் ஒன்றைத் தான் நாம் தேவாரப் பதிவில் பார்க்கப் போகிறோம்!

அம்மையார் அத்தனை நாயன்மார்களிலும் காலத்தால் மிகவும் மூத்தவர் என்று சொன்னேன் அல்லவா? சொல்லப் போனால், முதல் தேவாரமே அம்மையாருடையது தான் எனலாம்!
ஆனாலும் முதலில் சிவக்கவி செய்த புனிதாவின் நூல்கள், 11ஆம் திருமுறையில் தான் வைக்கப்பட்டுள்ளது!
* அற்புதத் திருவந்தாதி
* திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
* இரட்டை மணிமாலை

அம்மையார் பாடல்களில் தில்லை பற்றிய குறிப்புகள் எல்லாம் இல்லை! அப்போது ஆரூர் தான் தில்லையினும் சிறப்பு!
பிள்ளையார், முருகன் என்ற மற்ற தெய்வங்களைப் பற்றியும் அவர் எங்கும் குறிக்கவில்லை!

திருவாலங்காட்டைப் பற்றி மட்டுமே சில குறிப்புகள் வருகின்றன! அதுவும் கோயில் போன்ற அமைப்பு எல்லாம் அப்போது இல்லை போலும்! உள்ளே போய் தான் கும்பிட வேண்டும் என்று இல்லாத நிலை! சுடுகாடு, ஆல மரக் காடான ஆலங்காட்டிலேயே ஈசனைத் தரிசித்து மகிழ்கிறார் அம்மையார்!

மாதொரு பாகன் வடிவத்தைத் தான் அம்மையார் மிகவும் போற்றுகிறார்! பெண்மைக்குச் சிவனார் தந்த சமத்துவத்தை, சைவச் சமூகமும் வாயளவில் இல்லாமல், வாழ்க்கையிலும் தர வேண்டும் என்ற அவரின் ஆழ்-மன ஏக்கமோ? என்னவோ?
* இராவணன் செருக்கு அழித்தது,
* முப்புரம் எரித்தல்,
* ஆலகால விடம் உண்ணல்,
* ஈசனின் அடி முடிகளைத் திருமாலும் அயனும் தேடியது என்று ஆங்காங்கு பாடினாலும், அம்மையார் பெரிதும் பாடுவது, ஈசனின் மயான நடனமே!

சாம்பல் பூசுதல், பேய் வாழ் காட்டகத்தே ஆடுதல் என்று ஈசனைக் கேலி பேசுவது போல், அம்மையாரையும் கேலி பேசி இருக்கக் கூடும்! அதான் அம்மையார் பேயாகவே, சிவ கணமாகவே மாறி விட்டார் போலும்!
உளவியல் அறிஞர்களுக்கு அம்மையார் வாழ்க்கை ஒரு பெரும் ஆய்வுப் பொக்கிஷம்!

வாங்க, அம்மையார் நகைச்சுவையிலும் எப்படிக் கலக்குகிறார்-ன்னு இன்னிக்கி பார்க்கலாம்!
* ஆன்மீகத்தில் நகைச்சுவையும் வைத்து,
* அதற்குள்ளே பெரும் உளவியல் கருத்தும் வைத்து,
* குறியீட்டுக் கவிதை ஆக்குகிறார் தேவாரப் பதிகத்தை!சிவனார் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு என்ன பேருங்க? யாரேனும் சொல்லுங்கள்! அந்தச் சிவப் பாம்புக்குச் சுத்தமா அறிவே இல்லை!

ஹிஹி! இது என்ன தடாலடி? பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளக்கியமா? என்று கண்ணதாசன் தான் பின்னாளில் பாடினார்!
அதற்கு கருடனும் தக்க பதில் கொடுத்துருச்சாம்! ஆனால் அம்மையார் சொல்வதைப் பாருங்கள்!

திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)
அது மதி ஒன்று இல்லா அரா!

ஏனம்=பன்றி; மருப்பு=கொம்பு
பிறைக் கொழுந்து=பிறைச் சந்திரன்;
மதி=நிலவு/அறிவு; அரா=அரவு (பாம்பு)

* திருமார்பில் பன்றியின் கொம்பை மாலையாக அணிந்து இருக்கான்!
* திருமுடியில் வெண் திங்களைப் பிறை சூடி இருக்கிறான் பெம்மான்!
* நடுவில், கழுத்தில் இருக்கும் பாம்பு என்ன செய்யுது? மேலும் கீழும் பார்க்குது!

மேலே பார்த்தால் - தலையில் வெண் பிறைச் சந்திரன்!
கீழே பார்த்தால் - மார்பில் வெண் பன்றிக் கொம்பு!
இப்படி மாறி மாறிப் பார்த்து, ஒரு நாளும் எது உண்மையான மதி என்று தேறவே தேறாது! மதி இல்லாத பாம்பே! மதி பெறாத வரை, நீ தேறவே மாட்டாய்!

இவ்ளோ தான் தேவாரக் கவிதை! இதில் குறியீடு என்னன்னு கேக்கறீங்களா?.....
பாம்பு எதற்குக் குறியீடு? உடல்-உள்ளத்துக்கு!
மனித வேட்கைகளுக்கு! மனித சூட்சுமத்துக்கு!
இன்னும் வெளிப்படையாகச் சொல்லட்டுமா? பாம்பு = மனிதனின் "காமம்"!

இன்றும் பல மருத்துவக் கல்லூரிகளின் இலச்சினையைப் பாருங்கள்!
ஒரு தண்டத்தைச் (கொம்பை) சுற்றிப் பாம்பு இருக்கும்! அட, இந்தியாவில் மட்டும் தானா இது? இல்லை, பல வெளிநாடுகளிலும் கூட இது தான் சின்னம்!
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி என்கிறது ஒளவையின் விநாயகர் அகவல்!

இந்தக் காமப் பாம்பு என்ன செய்கிறது? பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

* கீழே இருப்பது சூடான பன்றிக் கொம்பு என்றும் தெரியும்!
* மேலே இருப்பது குளிர்ந்த சந்திரன் என்றும் தெரியும்!
* இரண்டுமே ஒரே தோற்றம்/வளைவு கொண்டவை, ஆனால் பன்றிக் கொம்பு போலி-ன்னு தெரியும்! இருந்தாலும், பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

பன்றிக் கொம்பு = கீழான இச்சை என்றாலும், அதுவும் இந்த மனத்துக்கு வேண்டி இருக்கு!
பிறைச் சந்திரன் = மேலான பொருள் என்று தெரிந்தாலும், மேலே செல்ல எண்ணாது, கீழேயும் பார்த்துப் பார்த்து "மயங்கிக்" கொண்டே இருக்கு!
ஒரு நாளும், இது தான் மதி (சந்திரன்) என்று தேறாது! மதி ஒன்று இல்லாத மனது!

சிவனாரின் அழகான திருக்கோல வர்ணனையில், "முட்டாள் பாம்பே" என்று யாரேனும் சொல்லுவாங்களா? அதான் Icon Poetry! குறியீட்டுக் கவிதை!
* திருக்கோல அழகை வர்ணிப்பது போல் வர்ணிக்கிறார்! ஆனால் முழுமையாக வர்ணிக்காமல், "முட்டாள் பாம்பே" என்று ஒரே அறையாக அறைந்து விடுகிறார்!
* அதே சமயம் கீழான இச்சை, மேலான நெறி-ன்னு ஒரு வார்த்தை கூட வெளிப்படையாகச் சொல்லவில்லை! "முட்டாள் பாம்பே" என்ற ஒரே சொல்லில், அத்தனை உள்ளுறையும் வைத்து விடுகிறார்!

இதுவே Iconographic Poetry! குறீயீட்டுக் கவிதை! பாடுவது: இப்போது அம்மையார் ஆகி விட்ட ஒரு சின்னப் பெண்! என் தோழி புனிதா!

எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
எங்கள் புனிதவதிக்காக, ஆலங்காட்டில் நடம் இட்டனையோ சிவமே!

காரைக்கால் அம்மா திருவடிகளே சரணம்!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


(*** கார்த்திகைச் சோமவாரச் சிறப்புப் பதிவு *** சிவன் பாட்டில் இட்டது! ஆனால் திரட்டிக்கு அனுப்ப முடியவில்லை! அதனால் பந்தலில் பதிக்கிறேன்!)

140 comments:

 1. அருமையான படைப்பு கே ஆர் எஸ், இந்தப் படைப்புக்கள் ஏதாவது அச்சு இதழ்களிலும் வந்து பலரையும் சென்றடைய வேண்டும்.

  ReplyDelete
 2. காலால் நடக்காம தலையால் நடந்து போனவங்க இவங்க தானே

  ReplyDelete
 3. //கானா பிரபா said...
  அருமையான படைப்பு கே ஆர் எஸ்//

  நன்றி காபி அண்ணாச்சி!

  //இந்தப் படைப்புக்கள் ஏதாவது அச்சு இதழ்களிலும் வந்து பலரையும் சென்றடைய வேண்டும்//

  :)
  எதுக்கு இப்படி என்னைய திட்டறீங்க?

  ReplyDelete
 4. //சின்ன அம்மிணி said...
  காலால் நடக்காம தலையால் நடந்து போனவங்க இவங்க தானே//

  அவங்களே தான்-கா!
  கயிலை நோக்கித் தலையால் ஊர்ந்து செல்வாங்க என்பது கற்பனை கலந்த கதை! பேய் ஆகிட்டாங்கல்ல? அதனால் தலையால் நடக்க முடியுது!

  சிவபெருமான் அம்மா என்று கனிவுடன் அழைத்து தனது ஊர்த்துவ நடனத்தை ஆலங்காட்டில் காட்டி அருள்வார்!

  ReplyDelete
 5. அருமையான பதிவு,அதுவும் காரைக்கால் அம்மையார் பற்றிய செய்திகள்,மாங்கனி திருவிழா பற்றி படித்ததும் பழைய நினைவுகள் வந்தது அடியேன் ஊர் காரைக்கால்

  ReplyDelete
 6. //* ஆண்டாளின் துணிவு, இந்தப் பேதைப் பெண் புனிதவதிக்கு இல்லாமல் போனது ஏன்?
  * ஆண்டாளின் வித்தியாசமான எண்ணத்தை ஏற்றுக்கொண்ட சமூகத்தின் ஒரு பகுதி, புனிதவதியை மட்டும் புறம் தள்ளியது ஏன்?//

  ஆண்டாள் வேண்டியது என்ன??
  மானிடர்க்கென்று பேச்சுப் படின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!" என்று மன்மதனையே வென்றாள். இந்த அம்மையார் அப்படி ஒன்றும் ஈசனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிச்சதாயும் தெரியலையே?? :P:P:P:P இந்த அம்மையார் மானுடனுடன் திருமணம் செய்து கொண்டு, குடும்பமும் நடத்திய பின்னரே அவரின் புனிதத் தன்மை வெளிப்படும் நேரம் வந்தது. தவிர, அவர் ஒன்றும் ஆண்டாள் போல் திருமணமே வேண்டாம் என ஒதுங்கவில்லையே, சந்தோஷமாய்த் திருமணம் செய்து கொண்டார் தானே? அப்புறம் தானே தெரிந்தது அவரின் அற்புத இறை சக்தி! அது தெரிஞ்சதும் எந்த ஆண் அவளைத் தொடுவான்?? யாராலும் முடியாது!
  கணவன், ஆன்மீகத்தில் திளைத்திருந்தால் கட்டாயம் பெண் உதவி செய்வாள் தான். அவளால் எப்படியும் இருக்க முடியும் என்பதாலேயே. ஆனால் ஒரு ஆணால் பெண் துணை இல்லாமல் தனித்து வாழ முடியுமா?? ஏதேனும் ஒரு விதத்தில், அம்மா இல்லை எனில் சகோதரி, மனைவி இல்லை எனில் மகளோ, மருமகளோ, பெண்ணின் துணையோ அருகாமையோ அவங்க கவனிப்போ இல்லாமல் ஆணால் இருப்பது கஷ்டமே. இதை நான் சொல்லிட்டு ஏற்கெனவே வாங்கிக் கட்டிண்டாச்சு. இப்போவும் வாங்கிக் கட்டிக்கப் போறேன். :)))))))) ஆனாலும் சுட்டாலும் உண்மை இதுவே! இதை யாராலும் மறுக்க முடியாது. பெண்ணால் தனித்து வாழமுடியும், வாழ்ந்தும் காட்டி இருக்காங்க, காட்டுகின்றார்கள்.  //ஆசாரமான குடும்பங்களின் கட்டுக் கோப்பா? ஆணாதிக்கமா? சமூக விதியா? எது? எது?//

  எதுவுமே இல்லை, தன் புனிதத்தை ஒரு பெண் நிரூபிச்சதுக்குப் பின்னரும் அவளை" ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற உண்மையான பயமும், தயக்கமுமே காரணம்.

  *// ஆணின் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று குழந்தை சம்பந்தரால் காட்ட முடிகிறது!//

  சம்மந்தருக்கும் ஒரு பெண் தான் வந்து ஞானப் பால் கொடுத்து ஞானத்தை ஊட்டினாங்க, இல்லையா??? வயது என்ன தடைனு சொன்னது யாரு? இங்கே அந்தப் பேச்சே இல்லை! நீங்களா நினைச்சுக்கறீங்க! :P:P:P


  //* பெண்ணின் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று பேதை புனிதவதியால் காட்ட முடியாதோ?//

  அதனால தான் தன் உண்மை உருவே வேண்டாம்னு பேயுரு எடுத்துட்டாங்க போல! வயதும், இளமையும் இருந்தால் ஆன்மீகத்துக்குத் தடை எந்தக் காலத்திலும் ஆண்களால் இருந்திருக்கு இல்லையா? இது ஒண்ணு மட்டுமே சரி, ஒளவையும் அதான் பாட்டியாகிட்டாங்க, வம்பே இல்லைனு! என்றாலும் ஜெயிச்சாங்க தானே இரண்டு பேருமே!

  புனிதவதியாருக்கு நடந்ததை நான் புரிந்து கொண்ட கோணம் கீழே கொடுக்கிறேன்.


  கணவன் கொடுத்த மாம்பழத்தை சிவனடியார்க்குப் படைத்த அவர், பின்னர் இறை அருளால் மற்றொரு மாம்பழத்தை வரவழைக்கக் கண்ட கணவன், அவரிடம் பயந்து ஒதுங்கினான். ஏனெனில் அவரின் இறைத் தன்மையைக் கண்டு அவன் பயந்தான். பவளமல்லிப் பூவைத் தலையில் சூட முடியுமா??? இறைவனுக்கே படைக்கப் பட்டவை அல்லவா அவை??? தானே மலர்ந்து, தானே உதிரும் அந்தப் பூவைப் பொறுக்கி இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்க முடியும் அல்லவா?? அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம், மற்ற சில வேலைகளுக்கும் பயன்படும். ஆகவே இப்படிப் பட்ட பெண்களைப் புனிதவதியார் என்றழைக்கப் படுவதில் தவறே இல்லை. பிறப்பால் மட்டுமின்றி அவர்களின் புனிதத்தன்மை ஏதோ ஒரு காலகட்டத்தில் வெளிப்பட, அவர்கள் பிறந்ததின் நோக்கம் புலப்பட, சாதாரண வாழ்வு வாழ அவர்கள் படைக்கப் படவில்லை என்பது புலனாகின்றது. இதைப் போய்த் தவறு என்று சொல்லி, புனிதம் என்று பெண்ணை ஒதுக்கிய ஆணாதிக்கம் என்று பேசுபவர்கள் புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாதவர்கள். அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது. என்றாலும் முதலில் கலங்கிய அந்த அம்மையார் பின்னர் தெளிந்தார் அல்லவா? தன் வாழ்வின் நோக்கம் புரிந்து கொண்டார் அல்லவா?? இது பெண்ணை அடிமையாகவே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் வழிபட வேண்டிய ஒருத்தியைத் தான் மனைவியாக்கிக் கொண்டு விட்டதால் மனம் பதறியே ஒதுங்குகின்றனர். இதனாலேயே நம் தமிழ் மூதாட்டியான ஒளவையும் இதைப் புரிந்து கொண்டு, அதனாலேயே திருமணத்திற்கு முன்பே, மூப்பை வேண்டிப் பெற்றாளோ???

  வரேன், கல்லெடுத்து அடிக்கிறவங்க அடிக்கட்டும், மெதுவா வந்து வாங்கிக்கறேன். :)))))))))

  ReplyDelete
 7. //ஆண்டாளின் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழும் அடியேன், புனிதவதியின் கவிதைகளில் நனைந்து நனைந்து கண்ணீர் வடித்தும் உள்ளேன்!
  வைணவ இலக்கியத்தின் மொழி, சாதி, பெண்மை, சமூகம் என்று மதிக்கும் சாதாரண நடைமுறைக் கோட்பாடுகள்! - இவை தான் சைவக் குடும்பத்தில் பிறந்து ஊறிய என்னை, நாலாயிர ஈர்ப்புக்கும் ஒரு காரணமாகப் போய் விட்டது!//

  ஹிஹிஹி, தப்பா எடுத்துக்காதீங்க, நொ.கு.ச.சா???? சைவக் குடும்பத்தில் பிறந்தாலும், வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் இதை எல்லாம் ரசிக்க மனப்பக்குவம் போதுமே இல்லையா??? ஆண்டாளின் ஆசையே வேறே, புனிதவதியாரின் நோக்கமே வேறே, வெவ்வேறு திக்கில், அல்லது வெவ்வேறு துருவங்களில் உள்ளவர்களை இப்போதைய காலம் வேண்டுமானால் இணைக்கலாம், ஆனால் அடிப்படையே வேறேங்கறப்போ??? யோசிங்க, ஆண்டாளின் எண்ணம் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் சரி, அதே போல் புனிதவதியாருக்கு நடந்தது அப்போதைய காலகட்டத்தில் சரியானதே.

  ReplyDelete
 8. //அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம், மற்ற சில வேலைகளுக்கும் பயன்படும். ஆகவே இப்படிப் பட்ட பெண்களைப் புனிதவதியார் என்றழைக்கப் படுவதில் தவறே இல்லை.//

  நினைச்சேன், நடுவிலே சில வரிகள் விடுபட்டிருக்கோனு, அதே போல் ஆயிருக்கு!


  அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம், மற்ற சில வேலைகளுக்கும் பயன்படும். //ஆனால் புனிதவதியார் போன்ற பெண்கள் பவளமல்லிக்குச் சமமானவர்கள். // (இந்த வாக்கியம் விடுபட்டிருக்கு) ஆகவே இப்படிப் பட்ட பெண்களைப் புனிதவதியார் என்றழைக்கப் படுவதில் தவறே இல்லை.

  ReplyDelete
 9. Every thing was excellent My dear Ravi Sankar Knnabiran.

  ReplyDelete
 10. முதன் முறையாக கீதா மேடம் சொன்னதில் பெருன்பான்மையான கருத்த்துக்களை ஆமோதிக்கிறேன். :))

  ReplyDelete
 11. கீதா மேடம், ரொம்பவே ஆழ்ந்த, ஆணித்தரமான, ஜல்லியடிக்க முடியாத வாதங்களை தந்தமைக்கு வணங்குகிறேன். :)

  *ahem, உண்மைய சொல்லுங்க, இதெல்லாம் சாம்பு மாமா சொல்ல சொல்ல நீங்க தட்டியது தானே? :))

  ReplyDelete
 12. //இங்கே மனைவி புனிதள் என்று ஆனவுடன், சொல்லாமல் கொள்ளாமல் வேற்றூருக்குச் சென்று விட்டான் பரமதத்தன்! //

  தம்மால் மனைவியின் புனிததுக்கு பங்கம் வந்து விட கூடாதுன்னு நினைத்து இருக்கலாம் இல்லையா?

  பாசிடிவா பாருங்க கேஆரேஸ்.

  சந்தான விருத்தி என்பதை கிரஹஸ்ததில் ஒரு அங்கமாக கருதியுள்ளனர். நீங்க பயன்படுத்தி உள்ள சொல்லாடல் ரொம்ப சீப்பா இருக்கு. :(

  ஏதோ இதான் முழு முதல் வேலை என்பது போல. you could have avoided.

  ReplyDelete
 13. சொல்ல போனால் வைஷ்ணவத்தில் எல்லா பெரியவர்களும்(ஜீயர்களும்) (there could be exceptions, i am not sure)
  கிரஹஸ்தத்தில் இருந்து விட்டு தான் சன்யாசத்துக்கு வருகிறார்கள்.

  பதிவு திசை திரும்பும் என்பதால் சொல்ல விரும்பவில்லை,

  இருந்தாலும் ஆண்டாளுடன் ஒப்பிட்டதால் சொல்ல வேண்டியுள்ளது.

  ReplyDelete
 14. மருத்துவ லோகோ பத்தி இப்ப தான் உங்களால் அறிகிறேன்.

  நுண்ணிய தகவலுக்கு நன்னி.

  ReplyDelete
 15. //*ahem, உண்மைய சொல்லுங்க, இதெல்லாம் சாம்பு மாமா சொல்ல சொல்ல நீங்க தட்டியது தானே? :))//

  @வம்பி, சேச்சே, அம்பி, நீங்க கணேசன் சொல்லியோ எழுதிக் கொடுத்தோ எழுதறாப்போல் நினைச்சீங்களா என்ன?? நறநறநறநறநறநற :P:P:P:P:P

  ReplyDelete
 16. //ambi said...

  முதன் முறையாக கீதா மேடம் சொன்னதில் பெருன்பான்மையான கருத்த்துக்களை ஆமோதிக்கிறேன். :))//

  I am also

  ReplyDelete
 17. //RAHAWAJ said...
  அருமையான பதிவு,அதுவும் காரைக்கால் அம்மையார் பற்றிய செய்திகள்,மாங்கனி திருவிழா பற்றி படித்ததும் பழைய நினைவுகள் வந்தது அடியேன் ஊர் காரைக்கால்//

  நன்றி ரஹாவாஜ்! மாங்கனி உற்சவத்தில் பரமதத்தனைக் கப்பலேற்றி விடுவதைக் கூட செய்து காட்டுவார்களாமே? உண்மையாகவா?

  ReplyDelete
  Replies
  1. //...பரமதத்தனைக் கப்பலேற்றி விடுவதைக் கூட செய்து காட்டுவார்களாமே? உண்மையாகவா?

   உண்மைதான். நான் காரைக்காலில் வளர்ந்தவன்தான்.

   Delete
 18. //கீதா சாம்பசிவம் said...
  ஆண்டாள் வேண்டியது என்ன??
  மானிடர்க்கென்று பேச்சுப் படின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!" என்று மன்மதனையே வென்றாள். இந்த அம்மையார் அப்படி ஒன்றும் ஈசனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிச்சதாயும் தெரியலையே??//

  ரொம்ப சரி கீதாம்மா!
  ஈசனைக் கல்யாணம் பண்ணிக்க பிடிவாதம் பிடிக்கலை தான்! ஆனால் இல்வாழ்க்கை வேண்டாம்-ன்னு பிடிவாதம் பிடிச்சாளா? அப்புறம் எப்படித் தள்ளி வைக்கலாம்? இது தான் கேள்வி!

  //அப்புறம் தானே தெரிந்தது அவரின் அற்புத இறை சக்தி! அது தெரிஞ்சதும் எந்த ஆண் அவளைத் தொடுவான்?? யாராலும் முடியாது!//

  இதைச் சொல்ல உங்களுக்கு எப்படி வாய் வருது?
  சம்பந்தப் பெருமானின் அற்புத இறை சக்தி தெரியாதா? எந்த ஒரு பெண் அவரைத் தொடுவாள்?
  அது தெரிஞ்ச பின்னும், எப்படிக் கல்யாணம் செய்து வைத்தார்கள்?
  சம்பந்தர் ஆண் என்பதால் பரவாயில்லை! இங்கே புனிதவதி பெண்! அதானே தங்கள் நியாயம்?

  //கணவன், ஆன்மீகத்தில் திளைத்திருந்தால் கட்டாயம் பெண் உதவி செய்வாள் தான். அவளால் எப்படியும் இருக்க முடியும் என்பதாலேயே//

  ஓ...அவளால் எப்படியும் இருக்க முடியும்! இதைச் சொல்வது அவளா இல்லை மற்றவர்களா?
  அவனால் எப்படியும் இருக்க முடியாது! அவளால் எப்படியும் இருக்க முடியும்!
  அருமையான நியாயம்! :(

  //இதை நான் சொல்லிட்டு ஏற்கெனவே வாங்கிக் கட்டிண்டாச்சு. இப்போவும் வாங்கிக் கட்டிக்கப் போறேன். :))))))))//

  உங்களைத் தவறாகப் பேசும் எந்த பின்னூட்டத்துக்கும் இடம் கொடுக்க மாட்டேன்! வேண்டுமானால் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்து வைக்கட்டுமா?

  //ஆனாலும் சுட்டாலும் உண்மை இதுவே! இதை யாராலும் மறுக்க முடியாது. பெண்ணால் தனித்து வாழமுடியும், வாழ்ந்தும் காட்டி இருக்காங்க, காட்டுகின்றார்கள்//

  ஆணால் தனிச்சி வாழ முடியும்-ன்னு சொல்லவே இல்லையே!
  புனிதவதி அவனுடன் வாழ்கிறேன்-ன்னு தானே சொல்கிறாள்?

  மேலும் அவள் தவறு ஒன்னும் செய்யவில்லையே! அப்படி செஞ்சாலும் அவளுடன் வாழ முடியாது-ன்னு சொல்லலாம்! ஆனால் அவள் புனிதள்! அதனால் வாழ முடியாது என்பதல்லவோ பேசுகிறார்கள்? சம்பந்தர் புனிதர், வாழ முடியாது என்று பேச்சு வரவில்லையே! கல்யாணப் பேச்சுல்ல வந்திச்சி?

  //தன் புனிதத்தை ஒரு பெண் நிரூபிச்சதுக்குப் பின்னரும் அவளை" ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற உண்மையான பயமும், தயக்கமுமே காரணம்//

  ஓ...ஏய் இங்க வாடி-ன்னு கூப்பிடத் தான் கல்யாணம் போல! :(

  //சம்மந்தருக்கும் ஒரு பெண் தான் வந்து ஞானப் பால் கொடுத்து ஞானத்தை ஊட்டினாங்க, இல்லையா???//

  சூப்பர்! அந்தப் பெண்ணை அவிங்க புருசன் இந்தக் காரணம் காட்டித் தள்ளி வச்சாரா? சொல்லுங்க!

  //வயது என்ன தடைனு சொன்னது யாரு? இங்கே அந்தப் பேச்சே இல்லை! நீங்களா நினைச்சுக்கறீங்க! :P:P:P//

  நானா எதுவும் நினைச்சிக்கலை கீதாம்மா!
  வயது பற்றிய பேச்சு எதுக்குன்னா, வயதான "புனிதப்" பெண்களைச் சமூகம் ஒன்னும் சொல்லுறதில்லை!
  My question is very straight forward and simple!
  * இளம் பெண்களுக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்ச நியாயம்?
  * இளம் ஆண்களுக்கு இந்த நியாயம் இல்லையே! ஏன்?

  புனிதவதியின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடவில்லை! அருமையாக ஜெயித்தார்கள்! அதான் நானே சொல்லி உள்ளேனே! அவர்கள் குறியீட்டுக் கவிதையும் காட்டி உள்ளேனே! அப்பறம் எதுக்கு எனக்கே திருப்பிக் காட்டறீங்க, ஜெயிச்சாங்களே, ஜெயிச்சாங்களே-ன்னு?

  கேள்வி அவள் ஜெயித்தது பற்றி இல்லை!
  அவளுக்கு அவள் விருப்பத்தை மீறி நடந்த கொடுமையைப் பற்றி!

  ReplyDelete
 19. //பவளமல்லிப் பூவைத் தலையில் சூட முடியுமா??? இறைவனுக்கே படைக்கப் பட்டவை அல்லவா அவை??? அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம்//

  ஜூப்பரு!
  சம்பந்தர் பவள மல்லிப்பூவா? சாதாரண பிச்சிப் பூவா?
  சொல்லுங்க கீதாம்மா, சொல்லுங்க!

  இறைவனுக்கே சூட வேண்டியவராச்சே சம்பந்தர்! புனிதவதியாச்சும் ஏதோ ஒரு மாம்பழ அற்புதம் தான்! ஆனா சம்பந்தர் பலப்பல அற்புதங்கள் செய்து காட்டியவர் ஆச்சே! அப்புறம் எப்படி இறைவனுக்கே சூட வேண்டியவரை, கல்யாணம் கட்டி வைக்கறாங்க?

  அவர் "புனிதர்"-ன்னு நினைப்பு வந்தா, "ஏங்க, அத்தான்"-ன்னு எப்படி ஒரு பொண்ணு அழைக்க முடியும்? உங்க லாஜிக் தான்! ஆனால் ஆணுக்கும் அதே லாஜிக் தானே? :)

  //அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது//

  ஓ...அந்தப் பெண் படைக்கப்பட்டதின் நோக்கம் இப்போ தான் உங்களுக்குத் தெரியுது! அதுவும் அவள் சாதித்துக் காட்டிய பின்னால்! ஆனால் அப்போ, அவனுக்கும், அவன் சார்பாகப் பேசிய சமூகத்துக்கும் இந்த நோக்கம் தெரியுமா? அவள் ஈசனைப் பாடப் பிறந்தவள்-ன்னு தெரியுமா? அவள் பேய் ஆவதற்கு முன் ஒரு கவிதை, ஒரு பதிகம் கூட எழுதியதில்லை! சாதாரண பக்தை! அவ்ளோ தான்!

  நோக்கம் தெரிஞ்சா நல்லபடியாப் பிரிச்சி விட்டிருப்பாங்களே! எதுக்கு ஆதரவு ஒன்றும் கொடுக்காமல் ஒதுங்கிப் போகணும்? அவளைத் தனித்து விடணும்? பேய் மகளிர் ஆக்கணும்?

  தன்னைப் போலப் பேய் மகளிரின் நிலை பற்றி அம்மை எழுதிய பதிகங்களைப் படிச்சிப் பாருங்க! சமூக அவலம் தெரியும்! வெறுமனே புனிதப் பூச்சுகள் உதவாது!

  ReplyDelete
 20. //அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது//

  * அவள் விருப்பத்துக்கு மாறாக மறுக்கும் உரிமை யாருக்கு இருக்கு? எப்படி மறுக்கலாம்? என்ன நியாயம் இது?
  * அவள் படைக்கப்பட்ட நோக்கத்தைத் தீர்மானிப்பது யார்? அவளா? இல்லை இவர்களா?
  * சம்பந்தப் பெருமானின் படைக்கப்பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவருக்கு ஏன் மறுக்கப்படவில்லை?

  Can someone give plain answers to this?


  //புனிதம் என்று பெண்ணை ஒதுக்கிய ஆணாதிக்கம் என்று பேசுபவர்கள் புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாதவர்கள்//

  புனிதத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவனாகவே அடியேன் இருந்து விட்டுப் போகிறேன் பரவயில்லை!
  ஆனால் புனிதத்தின் அர்த்தத்தை முழுதும் புரிந்து கொண்டவர்கள், மேற்சொன்ன கேள்விக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்!

  ReplyDelete
 21. //Mani Pandi said...
  Every thing was excellent My dear Ravi Sankar Knnabiran//

  ஆகா, நன்றிங்க மணி பாண்டி! :)

  ReplyDelete
 22. //ambi said...
  முதன் முறையாக கீதா மேடம் சொன்னதில் பெருன்பான்மையான கருத்த்துக்களை ஆமோதிக்கிறேன். :))//

  இந்த அதிசய ஒற்றுமைக்குக் காரணமான கேஆரெஸ் என்னும் சிறுவனை மனம் குளிரப் பாராட்டுகிறேன்! :)

  ReplyDelete
 23. // ambi said...
  கீதா மேடம், ரொம்பவே ஆழ்ந்த, ஆணித்தரமான, ஜல்லியடிக்க முடியாத வாதங்களை தந்தமைக்கு வணங்குகிறேன். :)//

  ஹா ஹா ஹா!
  ஆணித் தரமான வாதம் = "ஆணி" என்பது உ.கு இல்லை தானே அம்பி?

  //*ahem, உண்மைய சொல்லுங்க, இதெல்லாம் சாம்பு மாமா சொல்ல சொல்ல நீங்க தட்டியது தானே? :))//

  ஆணித்தரமான வாதம் தான் ஆணி அடிக்கப்பட்டு விட்டதே! :)
  இதுல இருந்தே தெரியலையா, இது சாம்பு மாமா அவர்களின் வாதம் அல்ல என்று! :)

  ReplyDelete
 24. அய்யோ நிஜம்மாவே பாதி படிக்கும்போதே உங்கள் கேள்விகளை படிச்சிட்டு கன்ணில் நீ ர் கட்டிடிடுச்சு.. அப்பறம் பார்த்தா நீங்களே எழுதி இருக்கீங்க கண்ணீர் வரும்ன்னு..

  பின்னூட்டத்தில் நீங்க நிற்கும் பக்கம் தான் நானும்.. கணவரோட வாழ விரும்பிய பெண்ணை தள்ளிவைப்பது நியாயமில்லை. என்னதான் புனிதம் அது இது என்றாலும்.. ஒரு பெண்ணுக்கு அநீதி தான் என்பதில் ஐயமில்லை.. அப்படித்தான் புனிதம் என்று கடவுள் படைத்து பிரித்து வைப்பாரா என்ன.. ? :((

  ReplyDelete
 25. //ambi said...
  தம்மால் மனைவியின் புனிததுக்கு பங்கம் வந்து விட கூடாதுன்னு நினைத்து இருக்கலாம் இல்லையா?//

  இதுக்குப் பதில் சொல்லியாச்சு அம்பி!
  இல்வாழ்க்கையில் சாதாரண பக்தி, ஒருவரின் புனிதத்துக்கு, பங்கம் உண்டாக்கி விடாது!
  எ.கா = சம்பந்தப் பெருமான், திருமங்கை ஆழ்வார், சுந்தரமூர்த்தி நாயனார்...இன்னும் பலர்

  //பாசிடிவா பாருங்க கேஆரேஸ்//

  :)
  ஆண்களுக்கும் இதே நியாயம் தான். அதைப் பாசிடிவா பாருங்கன்னு தான் நானும் கேட்டுக் கொள்கிறேன்!

  //சந்தான விருத்தி என்பதை கிரஹஸ்ததில் ஒரு அங்கமாக கருதியுள்ளனர். நீங்க பயன்படுத்தி உள்ள சொல்லாடல் ரொம்ப சீப்பா இருக்கு. :(
  ஏதோ இதான் முழு முதல் வேலை என்பது போல. you could have avoided//

  Pardon me if it had sounded cheap! I could have avoided in the context of punitham, but didnt want to!
  எது உறுத்த வேண்டுமோ அது உறுத்தாமால் தங்களுக்கு இதுவே உறுத்தலாய்ப் படுகிறது! ஏன் என்றால் பார்வை அங்கே "மட்டும்" பதிந்து விட்டது!

  இங்கே இது தான் முழு முதல் வேலை என்றா சொல்லி இருக்கேன்? சரியாகப் படித்துப் பாருங்கள்! யோகம், சரியை என்ற முதற் கடமைகளை எல்லாம் முடித்து விட்டு என்று தானே சொல்லி இருக்கேன்!

  சந்தான விருத்தி கிருஹஸ்தத்தில் முக்கியமான, புனிதமான கடமையும் கூட! அதைத் தவறாகச் சொல்லவில்லையே! அதைச் செய்ய அவனுக்கு இருக்கும் அதே கடமை அல்லவா மனைவிக்கும் இருக்கு? அதைத் தானே சொல்லி இருந்தேன்!

  இத்தனை பெரிய பதிவில், ஒரு வார்த்தையை மட்டும் பிடித்துக் கொள்ளாமல், சைவ/வைணவ பேதக் கணக்குகள் போடாமல், அவரை/இவரை மனசில் வச்சி எழுதி இருப்பாரோ என்று சிறுபிள்ளைத்தனமாக எண்ணாமல்...
  I invite you to see it in a wider context. positive-aa paarunga ambi!

  (பி.கு:
  பொன்னாச்சியைத் தள்ளி வைக்க வில்லிதாசன் முடிவு கட்டிய போதும், அதையும் மறைக்காமல், அப்படியே தான் எழுதினேன்! அவனுக்குத் தான் ஆணவம், அவளுக்கு இல்லை என்றும் சொன்னேன்! இங்கு பேதக் கணக்குகள் கிடையாது)

  ReplyDelete
 26. //கீதா சாம்பசிவம் said...
  ஹிஹிஹி, தப்பா எடுத்துக்காதீங்க, நொ.கு.ச.சா????//

  நொ.கு.ச.சா = அப்படின்னா என்ன கீதாம்மா? தலைவி தான்! அதுக்காக CBI கோட் வோர்ட் மாதிரியே பேசறீங்களே! :)

  //சைவக் குடும்பத்தில் பிறந்தாலும், வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் இதை எல்லாம் ரசிக்க மனப்பக்குவம் போதுமே இல்லையா???//

  புனிதளாய் இருந்தாலும், அது பாட்டுக்கு அது, இல்லறக் கடமைக்கு இது என்று ரசிக்கவும் கொஞ்சம் மனப்பக்குவம் போதுமே இல்லையா?

  //ஆண்டாளின் ஆசையே வேறே, புனிதவதியாரின் நோக்கமே வேறே,...வேறேங்கறப்போ??? யோசிங்க//

  ஹிஹி!
  ஆண்டாளின் "லூசுத்தனமான" ஆசையையே நிறைவேற்றிக் கொடுக்கப்படும் போது...
  புனிதவதியின் நோக்கம் வெரி வெரி சிம்பிள்! She wanted to be an ideal & devout house wife! Can she not?

  அவள் நோக்கம் அதுவாய் இருக்கக் கூடாது, இதுவாய்த் தான் இருக்கணும், இன்னும் நிறைய பாட்டு எழுதணும், அதுக்கு அவளை விட்டொழிச்சாத் தான் சரி, அவள் பேய் மகளிர் ஆவட்டும் என்று தீர்மானிப்பது யார்? அவளா இல்லை...இவர்களா?

  அவ நல்லபடியா பாட்டெழுதி, சிவத் தொண்டு செய்யணும்-னு தான் பரமதத்தனும் மற்றவர்களும் அவளைப் புறம் தள்ளினார்களா?
  சுய நலம் இன்றி, சிவ நலம் கருதித் தான் அப்படிச் செஞ்சாங்க போல! ஆகா! ஆகா!

  ReplyDelete
 27. // Mani Pandi said...
  //முதன் முறையாக கீதா மேடம் சொன்னதில் பெருன்பான்மையான கருத்த்துக்களை ஆமோதிக்கிறேன். :))//

  I am also//

  ஹா ஹா ஹா! மணிபாண்டி, நீங்களுமா? கீதாம்மாவின் வாதங்களுக்கு எதிர் வாதங்கள் வைத்துள்ளேன்! கீதாம்மாவைக் காத்திடக் களம் இறங்குங்கள்! :)

  ReplyDelete
 28. சிவன் பாட்டுப் பதிவில் வந்த பின்னூட்டங்களும் சில ஆழமான விவாதங்கள் என்பதால்...இங்கும் பதிக்கிறேன்!

  Kailashi said...
  //தமிழ் இலக்கியத்துக்கு அந்தாதி என்ற புதுமையை முதலில் பிரபலப்படுத்திவர்களில் அம்மையாரும் ஒரு முன்னோடி!//

  பதிகத்திற்க்கும் முன்னோடி அம்மையார்தான்.

  கணவன் அம்மையாரை கைவிட்டாலும், ஆண்டவன் கைவிடவில்லை, என்றும் ஐயனின் திருவடி நீழலில் அம்மையார் நித்ய வாசம் செய்கிறார். அம்மை தாளம் போட ஐயன் அதற்கேற்ப ஆடுகின்றார். இதை இட வேறு என்ன பேறு வேண்டும் ஐயா. பதஞ்சல்லி வலப்புறம் நடுவில் அம்மையார் இடப்புறம் வியாக்ரபாதர் எப்போதும் நித்யமாக ஐயனின் பாதத்தில் நின்றுள்ளனரே.

  கார்த்திகை சோமவார வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //Kailashi said...
  கணவன் அம்மையாரை கைவிட்டாலும்//

  கணவன் மட்டுமல்ல,
  அவர்கள் மொத்த சமூகமே அம்மையாரைக் கைவிட்டது என்பது தான் அடியேன் வருத்தம்!

  //ஆண்டவன் கைவிடவில்லை//

  இறைவன் யாரையுமே கைவிடுவதில்லை! நல்லார் பொல்லார் இருவருக்கும் நடு நின்ற நடு!

  //ஐயனின் திருவடி நீழலில் அம்மையார் நித்ய வாசம் செய்கிறார். அம்மை தாளம் போட ஐயன் அதற்கேற்ப ஆடுகின்றார். இதை இட வேறு என்ன பேறு வேண்டும் ஐயா//

  மிகவும் உயர்ந்த பேறு தான் கைலாஷி ஐயா! அதை மறுக்கவில்லை!

  சம்பந்தர், சுந்தர மூர்த்தி சுவாமிகள் என்று மற்ற பலரும் குடும்ப சகிதமாகத் தாளம் போட, அதற்கும் தானே ஐயன் ஆடுகிறான்?

  ஈசன் திருவடி நீழலில் அம்மைக்கு என்றுமே இடம் உண்டு!
  நான் சுட்டிக் காட்ட விரும்பியது சமூகத்தின் போலி பக்தியின் தன்மையை மட்டுமே!

  கார்த்திகைச் சோமவாரம் என்று தான் இப்பதிவை இட்டேன்! வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

  ReplyDelete
 30. Kailashi said...
  //இறைவன் யாரையுமே கைவிடுவதில்லை! நல்லார் பொல்லார் இருவருக்கும் நடு நின்ற நடு!//

  கர்மவினை என்று கூறி எல்லாம் அவன் விதித்தது அவன் இச்சைப்படியே நடக்கின்றது, நடுவில் வரும் கணவன், மனைவி, தாய், தந்தை, சகோதரன், மக்கள் என்னும் எல்லா உறவும் மாயைதான் என்று எடுத்துக்கொண்டால் சமூகம் கைவிட்டால் என்ன, கணவன் கை விட்டால் என்ன எல்லாம் ஒன்றுதானே?

  November 17, 2008 10:07 AM


  kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //Kailashi said...
  கர்மவினை என்று கூறி எல்லாம் அவன் விதித்தது அவன் இச்சைப்படியே நடக்கின்றது...
  சமூகம் கைவிட்டால் என்ன, கணவன் கை விட்டால் என்ன எல்லாம் ஒன்றுதானே?//

  புனிதவதியின் கர்ம வினையாக அது இருக்கலாம்! ஆனால் அதையே காரணமாகச் சொல்லி, அந்தச் சமூகம் தப்பித்துக் கொள்ள முடியாது.

  இங்கே இரு பார்வைகள்
  * புனிதவதியின் கர்ம வினை - அது ஆன்மீகப் பார்வை
  * பெண்களின் ஆன்மீகத் தன்மை - இது சமூகப் பார்வை!

  கணவனின் புனிதத் தன்மையை மதிக்கும் சமூகம், மனைவியின் புனிதத் தன்மையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்! மனைவி தன்னை விட புனிதளாக இருந்தால், அவளைக் கும்பிட்டு ஓடி விடும் எஸ்கேபிசம் கூடாது என்பது தான் சொல்ல வந்தேன்!

  November 17, 2008 11:53 AM

  ReplyDelete
 31. குமரன் (Kumaran) said...
  முதன்முதலாக அம்மையின் பாடலைப் படிக்கிறேன் என்று நினைக்கிறேன் இரவி. நல்ல விளக்கம். மதி ஒன்றும் இல்லா அரவு தானே.

  November 18, 2008 4:43 PM


  கவிநயா said...
  நல்ல விளக்கம் கண்ணா. மதி ஒன்றும் இல்லா மனிதா -ன்னும் மாத்திக்கலாம். நன்றி.

  November 18, 2008 9:35 PM


  kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  // குமரன் (Kumaran) said...
  முதன்முதலாக அம்மையின் பாடலைப் படிக்கிறேன் என்று நினைக்கிறேன் இரவி//

  மெளலி அண்ணா காரைக்கால் அம்மையார் ஜெயந்தியின் போது போட்ட பதிவில், கொஞ்சம் பாடல்களைப் போட்டிருந்தார்-ன்னு நினைக்கிறேன்!

  //நல்ல விளக்கம். மதி ஒன்றும் இல்லா அரவு தானே//

  அரவின் பெயர் தெரியுமா குமரன்? வாசுகி, அனந்தன், ஆதிசேடன் என்பது போல் ஏதாச்சும் பேரு இருக்கா?

  November 18, 2008 10:41 PM


  kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //கவிநயா said...
  நல்ல விளக்கம் கண்ணா. மதி ஒன்றும் இல்லா மனிதா -ன்னும் மாத்திக்கலாம்//

  நன்றிக்கா!
  ஆமாம் மதி "ஒன்று"படாத மனிதா தான்! :)

  ReplyDelete
 32. குமரன் (Kumaran) said...
  நீங்கள் மீண்டும் கேட்ட பின் கூகிளாண்டவரைக் கேட்டேன். அவர் சொன்னது:

  காதுகளில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: பத்மன், பிங்களன்
  தோள்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: கம்பளன், தனஞ்செயன்
  கரங்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: அஸ்வதரன், தக்ஷகன்
  இடுப்பைச் சுற்றிய அரவின் பெயர்: நீலன்.

  கழுத்தைச் சுற்றும் அரவின் பெயரை அந்தப் பக்கம் சொல்லவில்லை. மேலே உள்ள தகவல் வாமன புராணத்தில் இருப்பதாக அந்தப் பக்கம் சொல்கிறது.

  http://1stholistic.com/Prayer/Hindu/hol_Hindu-Shiva.htm

  November 19, 2008 6:37 AM


  kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //தோள்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: கம்பளன், தனஞ்செயன்//

  சூப்பர்! இதுக்குத் தான் குமரன் வேணும்ங்கிறது!
  சைவச் செம்மல் குமரன் வாழ்க! வாழ்க! :)

  நன்றி குமரன்! தோளில் என்பதைக் கழுத்தில் என்றும் கொள்ளலாம்-ன்னு நினைக்கிறேன்!

  //கரங்களில் அணிகளாக இருக்கும் பாம்புகளின் பெயர்கள்: அஸ்வதரன், தக்ஷகன்//

  இதே தக்ஷகன் பெயர் கொண்ட பாம்பு தானே பரீட்சித்தையும் தீண்டும்?

  November 19, 2008 10:08 AM

  ReplyDelete
 33. //ambi said...
  சொல்ல போனால் வைஷ்ணவத்தில் எல்லா பெரியவர்களும்(ஜீயர்களும்) (there could be exceptions, i am not sure)
  கிரஹஸ்தத்தில் இருந்து விட்டு தான் சன்யாசத்துக்கு வருகிறார்கள்//

  உண்மை! நிராதரவாகவோ இல்லை சம்மதம் பெறாமலோ வந்தால் தவறு தான்! அதையும் எழுதுவேன்! அப்படித் தான் அவர்கள் செய்கிறார்கள் என்று அறிவீர்களா? அறியத் தருவீர்களா?

  இங்கு பேசப்படுவது என்ன?
  இளம் பெண்கள் ஆன்மீகத்தில் திகழ்ந்தால்,அவர்களை ஆண்கள் புனிதப் பட்டம் கொடுத்து தள்ளி வைப்பதா? இது என்ன நியாயம் என்பது தான் பேச்சு!

  இதே காரைக்கால் அம்மையார் துறவு பூண்டிருந்தால் பிரச்சனையே இல்லை! அவர் ஒரு சாதாரண இல்வாழ்க்கை பக்தர்!
  அம்மையார் விரும்பியது இல்வாழ்க்கையையே! ஆனால் பரமதத்தனும் சமூகமும் அவளைப் புனிதள் என்பதால் தள்ளியது! அது தான் பிரச்சனை!

  நீங்கள் சொன்ன ஜீயர்களின் நிலை என்ன? புனிதர் என்ற காரணத்தால் அவர்களில் யாரும் தள்ளி வைக்கப்படுவதில்லை! பல காலம் "புனிதர்களாக" இல்லறத்தில் இருந்து, முதிர்ந்த வயதில் துறவறம் பூணும் போது, சம்மதமும் பெற்று வருகிறார்கள்! இங்கு தள்ளி வைத்தல் இல்லை! அப்படி இருந்தால் சொல்லுங்கள்! தயங்காமல் சபையில் முன் வைக்கிறேன்!

  //பதிவு திசை திரும்பும் என்பதால் சொல்ல விரும்பவில்லை,
  இருந்தாலும் ஆண்டாளுடன் ஒப்பிட்டதால் சொல்ல வேண்டியுள்ளது.//

  ஹா ஹா ஹா!
  திசை திரும்பினாலும் பரவாயில்லை அம்பி.
  ஒன்னும் சொல்வதற்கு முன்னரே பல கும்மிகள் நடக்கும் போது, இதற்கு நடக்கும்-னு எனக்குத் தெரியாதா என்ன? :)

  இந்தப் புறம் தள்ளிய கொடுமை உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. சைவ/வைணவ பேதம் தானா இதில் தெரிகிறது? என்னால் ரங்கராஜ நம்பி போலிக் கற்பனைப் பாத்திரம் என்றும் துணிந்து எழுத முடியும்!பேதமில்லை!

  ReplyDelete
 34. //ambi said...
  மருத்துவ லோகோ பத்தி இப்ப தான் உங்களால் அறிகிறேன்.
  நுண்ணிய தகவலுக்கு நன்னி//

  இதைப் புரிந்து கொள்ளும் நீங்கள்
  இதற்கு விநாயகர் அகவலை எடுத்துக்காட்டாய் தந்ததைப் புரிந்து கொள்ளும் நீங்கள்...

  இது சைவ பேதம் என்றோ, இல்லை கிருஹஸ்தாஸ்ரம தர்மத்துக்கு மாறானது என்றோ, கர்ம நிஷ்டானுஷ்டானங்களுக்கு எதிரானது என்றோ தவறாகவும் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!

  ReplyDelete
 35. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
  அய்யோ நிஜம்மாவே பாதி படிக்கும்போதே உங்கள் கேள்விகளை படிச்சிட்டு கன்ணில் நீ ர் கட்டிடிடுச்சு.. அப்பறம் பார்த்தா நீங்களே எழுதி இருக்கீங்க கண்ணீர் வரும்ன்னு..//

  இன்னும் அந்தப் பதிகம் எல்லாம் இங்கிட்டு கொடுக்கலை முத்தக்கா!
  கொடுத்தா எனக்கு முத்திரையே குத்திருவாங்க! :)

  //பின்னூட்டத்தில் நீங்க நிற்கும் பக்கம் தான் நானும்.. கணவரோட வாழ விரும்பிய பெண்ணை தள்ளிவைப்பது நியாயமில்லை//

  நன்றிக்கா! சரியான புரிதலுக்கு!

  //அப்படித்தான் புனிதம் என்று கடவுள் படைத்து பிரித்து வைப்பாரா என்ன.. ? :(( //

  இல்லக்கா! சிவபெருமான், பிணக்கு கொண்ட கணவன்-மனைவியை (திருநீலகண்டர்) கூடச் சேர்த்து தான் வச்சாரு!

  ஈசன் வரப் ப்ரசாதி! பக்த கோலாகலன்! கருணை அதிகம்! ஆனால் அவர் பேரைச் சொல்பவர்கள்?

  திருநீலகண்டர் ஆண்! அவர் புனிதர் என்றாலும் அவர் மனைவி அவருடன் சேர்ந்துகிட்டாங்க!
  இங்க புனிதவதி பெண்! ஈசனே வந்து சொல்லியிருந்தாலும், சேத்து வச்சிருப்பாங்களோ என்னவோ? சிவநலத்தை விடச் சுயநலம் தானே பெரிது! :(

  ReplyDelete
 36. அடியேனின் சிறு கருத்து.

  ஆண்டாளுக்கும் , அம்மையாருக்கும் ஒப்பு நோக்குதல் சிறிதே இடறுகிறது.

  ஆண்டாள், தாயாரின் அவதாரமாகவே பிறந்தவள்.மானிடருக்கென்னு பேச்சுப் படில் வாழகில்லேன் என்று சபதமிட்டு வாழ்ந்து , வென்று காட்டியவள்.

  திலகவதி அம்மையார், சிவனாரின் அருள் கிடைக்குமுன்பே,சம்ஸார சாகரத்தில்,மூழ்கி விட்டவர்.

  தவிரவும் , இருவரும் வாழ்ந்த , கால தேஸ , வர்த்த மானங்கள் எல்லாம் , முற்றிலும் வேறு
  பட்டவை.

  ஆண்டாளிடம், இறைவன் மீதான் காதல் நெறி மற்றும் பக்தி நெறி மிகவும் அதிகம். அம்மையாருக்கு பக்தி நெறி மட்டுமே அதிகம் இருந்தது.

  கீதா அம்மா அவர்களின் பெரும்பாலான கருத்துக்கள் , சரியாகவே உள்ளன.

  ஆனால் அதே நேரத்தில் , கே ஆர் எஸ் அவர்களின் உள்ளக் குமுரலும் சரி தான். ஆண்டாள் காலத்தில், பெண்களுக்கு சம உரிமை, அல்லது ஆண்களைக் காட்டிலும், மேலான உரிமை இருந்து இருக்கலாம்.(அதுனால தான் திருப்பாவைக்கு ரொம்ப முக்கியத்துவம் தராங்களோ?

  பெண்கள் மிகக்குறைவாகவே சாமியாராக வருகிறார்கள்.ஒரு வேளை பெண்களை வணங்கக்கூடாது எனும் , உணர்வு அதிகம் இருந்திருக்கலாம்.

  சிவனாரின் திருவிளையாடல் மட்டுமே இங்கு முக்கியம் . அதனால் சில நிகழ்வுகள், நமது யதார்த்த சிந்தனைக்கு அப்பாற் பட்டு நிகழ்கின்றன.

  திலகவதியாரின் இறைத்தன்மை கண்டு, அவளது கணவன் பயப்பட்டது போல், ஆண்டாளின் இறைக்காதலை நினைத்து, பெரியாழ்வாரும் ஒரு நிலையில், மனக்கலக்கம் , அடைந்தார்.
  ஆனால், ஆண்டாளின் மன உறுதியே வென்றது..

  அம்மையார் விஷயத்தில், அவரது கணவரின் பயமே வென்றது.

  திருமங்கை ஆழ்வார், இறை தரிசனம் கண்ட பின்னும், குமுத வல்லியுடன் இணைந்தே, இறைப்பணி ஆற்றினார்.
  அதே போல், அம்மையாருடன் , இணைந்தே, இறைப் பணியை அவரது கணவர் ஆற்றி இருக்கலாம் என்பது கே ஆர் எஸ் போன்ற, உயர்ந்தோர்களின் கருத்தாக இருக்கலாம்.

  ReplyDelete
 37. அன்பர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே அம்மையாரைத் தாழ்த்தியோ, சைவ நெறியைத் தாழ்த்தியோ, இல்லை முக்கண் முதல்வனை எள்ளியோ, ஏதாச்சும் வாசகம் இருக்கா-ன்னு பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

  இது வரை அம்மையாரின் மாறுபட்ட Icon Poetry பற்றி சைவ அன்பர்கள் யாராவது வெளிக் கொணர்ந்தீர்களா? அடியேன் அதையும் இங்கு கொணர்ந்து வைத்துள்ளேனே!

  அம்மையின் DH Lawrence-க்கு ஈடான கவிச் சிறப்பு பற்றி யாரேனும் ஏதேனும் பேசினீர்களா? அதை விடுத்து, புனிதவதிக்கு இல்வாழ்க்கை மறுக்கப்பட்டது சரி என்று தானே பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்?

  தமிழ்ப் பெண்மணி பாடிய பதிகத்தைப் பற்றித் திறனாயும் பதிவு! அதில், என்னளவில் ஏற்பட்ட மாற்றத்தையும் குறித்துச் சென்றேன்! அவ்வளவு தான்! அம்மையின் வரலாற்றைத் திரித்தோ/மாற்றியோ எழுதவில்லை! இன்னொரு பார்வையைக் காட்டினேன் அவ்வளவே!

  பரமதத்தனையும் அவனின் அன்றைய சமூகத்தையும் தான் குறை கூறினேன்! இன்றும் மாங்கனி உற்சவத்தில் பரமதத்தனை படகு ஏற்றி விட்டுத் தான் வருகிறார்கள்:(

  ஆண்டாளை ஒப்புமை காட்டுவது, ஒரு பெண் என்கிற முறையில் தான்! பெண்ணின் துணிவு என்கிற முறையில் தான்! இரு பெண் கவிஞர்கள் என்கிற முறையில் தான்!
  அப்படிக் காட்டுவது இலக்கிய வழக்கு!


  அப்படியெல்லாம் செய்யக் கூடாது, வந்தோமா, கதா காலட்சேபம் சொன்னோமா, போனோமா-ன்னு இருக்கணும் என்று சொல்லுதல் யார்க்குமே அழகல்ல!

  மீராவையும் ஆண்டாளையும் ஒப்புமை காட்டிப் பல இலக்கிய இதழ்கள் வந்துள்ளன! நான் மீராவை எழுதினால், அப்போதும் ஆண்டாளின் துணிவு, மீராவுக்கு ஏன் இல்லாமற் போனது என்று தான் எழுதுவேன்! இதை எப்போதுமே அடித்து அடித்துப் பழக்கப்பட்ட சைவ/வைணவ ஜல்லியின் கண் கொண்டு பார்த்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை! :(

  ReplyDelete
 38. //paravasthu said...
  அடியேனின் சிறு கருத்து//

  வாங்க சுந்தர் அண்ணா!

  //தவிரவும் , இருவரும் வாழ்ந்த , கால தேஸ , வர்த்த மானங்கள் எல்லாம் , முற்றிலும் வேறு
  பட்டவை//

  அம்மையாருக்கு இரு நூற்றாண்டுக்குப் பிந்தியவள் ஆண்டாள்! அவ்வளவு தான்! ஒன்னும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை!

  //ஆண்டாளிடம், இறைவன் மீதான் காதல் நெறி மற்றும் பக்தி நெறி மிகவும் அதிகம். அம்மையாருக்கு பக்தி நெறி மட்டுமே அதிகம் இருந்தது.//

  உண்மை! அதெல்லாம் ஒன்னுமே சொல்லலையே! இங்கு பேசுவது வெறும் துணிவும், அந்தத் துணிவிற்கு சமூகத்தின் ஆதரவும்! அவ்வளவு தானே!

  அது இறைவனைக் காதலித்தாளோ, மனிதனை மணந்தாளோ, அவதாரமோ, இல்லையோ, எல்லாம் அடுத்த கதை! இரு பெரும் பெண் கவிஞர்கள்! சமூகம் அவர்கள் துணிவை எப்படி எதிர்கொண்டது? = இது தான் புலனம்!

  //அல்லது ஆண்களைக் காட்டிலும், மேலான உரிமை இருந்து இருக்கலாம்.(அதுனால தான் திருப்பாவைக்கு ரொம்ப முக்கியத்துவம் தராங்களோ?//

  இதற்கு தக்கவர்களே வந்து பதில் சொல்லட்டும்!

  //பெண்கள் மிகக் குறைவாகவே சாமியாராக வருகிறார்கள். ஒரு வேளை பெண்களை வணங்கக்கூடாது எனும் , உணர்வு அதிகம் இருந்திருக்கலாம்//

  சாமியாராக எல்லாம் வரச் சொல்லலை! அந்த லெவலுக்கே போக வேணாம்! ஒரு சாதாரண பக்தை, கவிஞர், இறையருள் பெற்ற பெண்!-அது தான் பேச்சு!

  //திலகவதியாரின் இறைத்தன்மை கண்டு, அவளது கணவன் பயப்பட்டது போல், ஆண்டாளின் இறைக்காதலை நினைத்து, பெரியாழ்வாரும் ஒரு நிலையில், மனக்கலக்கம் , அடைந்தார்//

  ஆனால் மகளைக் கை விட்டாரா? பேயாய் அலைந்தாளா? சமூகம் அவளை விரட்டியதா?

  //ஆனால், ஆண்டாளின் மன உறுதியே வென்றது..
  அம்மையார் விஷயத்தில், அவரது கணவரின் பயமே வென்றது//

  அது தான் நானும் சொல்லி உள்ளேன்! ஏன் இப்படி என்றும் கேட்டுள்ளேன்! என் கேள்வி சமூகத்தை நோக்கி மட்டுமே!

  சம்பந்தர் இறைப்பணிக்கே பிறந்தவர்! அற்புதங்கள் செய்தவர்! அது தெரிந்தே தானே, பிற்பாடு அவருக்குத் திருமணம் நடத்தி வைத்தார்கள்? கீதாம்மா சொல்லும் இறைப்பணிக்காக அவளுக்கு இல்வாழ்வு மறுக்கப்பட்டது என்ற வாதத்தில் கிஞ்சித்தும் நியாயம் இல்லை!

  பரமதத்தனுக்குப் பிடிக்கலை, அது, இது-ன்னு வேறு ஏதாவது காரணம் சொல்லுங்கள்! பெண் ஆன்மீகத்தில் இருப்பவள்! அதனால் தான் என்று சொத்தையான காரணத்தை மட்டும் சொல்லாதீர்கள்!

  //அதே போல், அம்மையாருடன் , இணைந்தே, இறைப் பணியை அவரது கணவர் ஆற்றி இருக்கலாம் என்பது கே ஆர் எஸ் போன்ற, உயர்ந்தோர்களின் கருத்தாக இருக்கலாம்//

  ஹைய்யோ! உயர்ந்தோரா? அண்ணே I am just 5ft 11" :)

  கணவன் அவளை விட்டிருந்தாலும், சமூகம் அவளைக் காக்க முயற்சி எடுத்திருக்கணும்! பேயாய் அலைய விட்டிருக்கக் கூடாது என்பது தான் அடியேன் ஆதங்கம்!

  என் கேள்வி சமூகத்தை நோக்கி மட்டுமே!
  ஒருத்தராவது, "உமையவள் ஈசனுக்கு இருப்பது போல், இவள் மனை வாழ்க்கையில் இருக்கலாமே-ப்பா" என்று பரமதத்தனுக்கு எடுத்துச் சொன்னார்களா? இல்லையே! அத்தனை பேரும் புனிதப் பூச்சு அல்லவா அவளுக்குப் பூசினார்கள்? பூசியது தான் பூசினார்கள்! அவளைப் போஷித்தார்களா? ஆசிரமம் அமைத்துக் கொடுப்பது தானே? சம்பந்தரைப் போல் முத்துப் பந்தல் கொடுப்பது தானே?

  ஒரு பச்சிளம் பெண், சைவக் கொழுந்து, பேயாய்ப் போனது தான் மிச்சம்! அதற்கு இன்னும் நாம சப்பைக் கட்டு கட்டிக்கிட்டு இருக்கோம்! மாங்கனி உற்சவத்தில் பரமதத்தனைப் படகு ஏத்தி விட்டு வருகிறோம்! வெட்கம்! :(

  ReplyDelete
 39. ஆமாம்,முன்பு 10நாட்களுக்கு மேல் திருவிழா கானூம் தற்ப்போது பொருளாதாரத்தினால் நாட்க்கள் குறைந்து விட்டது

  ReplyDelete
 40. நல்ல உரையாடல். எல்லா பின்னூட்டங்களையும் இப்போது தான் படித்தேன்.

  ReplyDelete
 41. பெண் என்ற வகையில் காரைக்கால் அம்மையாரைப் பற்றி பேசும் போது தஞ்சமாம்பாளும் நினைவிற்கு வருகிறார்கள். இக்கால நியாயங்களின் படி உடையவர் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே.

  ReplyDelete
 42. //குமரன் (Kumaran) said...
  நல்ல உரையாடல். எல்லா பின்னூட்டங்களையும் இப்போது தான் படித்தேன்//

  :)
  நன்றி குமரன்! எல்லாப் பின்னூட்டங்களையும் படித்த பின், என்ன தோன்றுகிறது? :)

  ReplyDelete
 43. //குமரன் (Kumaran) said...
  பெண் என்ற வகையில் காரைக்கால் அம்மையாரைப் பற்றி பேசும் போது தஞ்சமாம்பாளும் நினைவிற்கு வருகிறார்கள்//

  மிகவும் சரியான நினைவு தான்! வருவதில் தவறே அல்ல! :)

  //இக்கால நியாயங்களின் படி உடையவர் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே//

  உடையவர் என்ன செய்தார்?
  தஞ்சமாம்பாள் என்ன செய்தார்கள்?
  யார் யாருக்கு அநீதி இழைத்தார்கள்?
  சொல்லாமல் கொள்ளாமல் சுயநலமாய் வெளியூர் ஓடி, யார் புதிதாக மணமுடித்து வந்தார்கள்?
  புனிதர் ஆகி விட்டதாலேயே, வாழத் தகாது என்று மறுப்புச் சொன்னது யார்?
  "ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற பயத்தினால் மட்டுமே தள்ளி வைத்தது யார்?

  முடிந்தால் தனிப் பதிவாகவே இடுங்களேன் குமரன்!
  இங்கு பல பேருக்கு நீங்கள் சொல்வது தெரிந்திருக்க இயலாது-ன்னே நினைக்கிறேன்! அதனால் தனியாகப் பதிவிட்டால் ஒரு புரிதல் கிடைக்கும் அல்லவா?

  அது யாராயினும் சரி, அடியேனுக்கு ஒன்று தான்!
  பெரியோரை வியத்தலும் இலமே!
  சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே! :)

  ReplyDelete
 44. //RAHAWAJ said...
  ஆமாம்,முன்பு 10 நாட்களுக்கு மேல் திருவிழா கானூம் தற்ப்போது பொருளாதாரத்தினால் நாட்க்கள் குறைந்து விட்டது//

  உம்...அப்படியா ரஹாவாஜ்?
  வெள்ளை சார்த்துதல் எல்லாம் இன்றும் உண்டு-ன்னு தான் நினைக்கிறேன்!
  அம்மையார் கையால் உணவு படைப்பது போல் இருக்கும்! அன்னதானம் நடைபெறுகிறது அல்லவா? அது ஒன்றே போதும்! மிகவும் நன்று!

  ReplyDelete
 45. @குமரன்
  இங்கே சமூகத்தின் பார்வை பற்றிப் பேசுவதால்...

  அப்படியே தஞ்சமாம்பாளைச் சமூகம் ஆதரவு காட்டவில்லையா? அவர்கள் நியாயம் கேட்கப்படாமலேயே, சமூகம் அவர்களை விரட்டிற்றா? ஆதரவின்றி அவர்கள் உள்ளம் நொந்தார்களா? பேய் ஆனார்களா? என்பதையும் உரைத்திடுங்கள்!

  இன்னும் ராகவேந்திர சுவாமிகள் வேறு உள்ளார்! அருணகிரியார் உள்ளார்! இவர்களையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்! இவர்கள் எல்லாம் சுயநலத்திற்காகவோ, புனிதக் காரணங்களுக்காகவோ மட்டும், அபலைகளை ஆதரவு காட்டாமல் தள்ளி வைத்திருந்தால் நிச்சயம் அது தவறு தான்!

  ReplyDelete
 46. கே ஆரெஸ் , இந்த பதிவைப்பத்தி அப்பாகிட்ட பேசிட்டிருந்தேன். அவர் சொன்னார் காரைக்காலம்மையார் பாடினது தேவாரம்னு சொல்லறதில்லை. திருமுறைன்னு தான் சொல்லறதுன்னு. மூவர் தேவாரம்னுதான் சொல்வாங்க. அந்த மூவர் யாருன்னு உங்களுக்கே தெரியுமே.

  ReplyDelete
 47. //சின்ன அம்மிணி said...
  கே ஆரெஸ் , இந்த பதிவைப்பத்தி அப்பாகிட்ட பேசிட்டிருந்தேன். அவர் சொன்னார் காரைக்காலம்மையார் பாடினது தேவாரம்னு சொல்லறதில்லை. திருமுறைன்னு தான் சொல்லறதுன்னு//

  ஆகா! அப்பா கிட்ட பேசனீங்களா? சூப்பர்-க்கா! என்ன சொன்னார்? அவருக்கு என் நன்றி சொல்லுங்க, தகவலுக்கு!

  அவர் சொல்வது உண்மை தான்! தேவாரம்-ன்னு ஒரு பொதுப் பெயர் இப்போ தான் புழக்கத்தில் எல்லாத்துக்கு வந்திரிச்சி! ஆனா மொத்தம் பன்னிரு திருமுறைகள்!

  அம்மையார் பாடியது பதினோராம் திருமுறையில் இருக்கு! அதற்கு பிரபந்தம்-னு பேரு!
  இதில் அம்மையார் மட்டும் இல்லாமல் நம்பியாண்டார் நம்பி, சேரமான் பெருமாள், நக்கீரர், பட்டினத்தார்-ன்னு இன்னும் பல பேரின் நூல்களும் இருக்கு!

  //மூவர் தேவாரம்னுதான் சொல்வாங்க. அந்த மூவர் யாருன்னு உங்களுக்கே தெரியுமே//

  ஹிஹி!
  சம்பந்தர், அப்பர், சுந்தரர் தானே-க்கா?

  இன்னொன்னு தெரியுமா-க்கா?
  அப்பர் சுவாமிகள் செய்தது மட்டும் தான் தேவாரம்-ன்னு முதலில் குறிக்கும் வழக்கம்!
  அப்புறம் அது மூவருக்கும் பொதுவாகி, இப்போ பன்னிரு திருமுறைக்கும் பொதுப்பெயர் ஆகி விட்டது! :)

  திருமுறை
  1,2,3=திருக்கடைக்காப்பு (சம்பந்தர்)
  4,5,6=தேவாரம்(அப்பர்)
  7=திருப்பாட்டு(சுந்தரர்)
  8=திருவாசகம்/திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)
  9=திருவிசைப்பா/திருப்பல்லாண்டு(சேந்தனார், கருவூரார், கண்டராதித்தர்...முதலானோர்)
  10=திருமந்திரம்(திருமூலர்)
  11=பிரபந்தம்(காரைக்கால் அம்மை, நம்பியாண்டார் நம்பி, சேரமான் பெருமாள்...முதலானோர்)
  12=பெரிய புராணம்(சேக்கிழார்)

  ReplyDelete
 48. @குமரன்
  நீங்க சொன்ன பின்பு, இன்னும் எடுத்துப் படித்துப் பார்த்தேன்!

  அக்கம்மகா தேவியார் - மல்லிகார்ஜூன சுவாமி மேல் பற்று கொண்டவர்
  முருகம்மையார் - முருகப் பெருமான் மேல் பற்று கொன்டவர்
  என்று இந்தப் பெண் அடியவர்களுக்கும் அதே கதி தான்! :(
  கணவனை விடுங்கள்! சுற்றி இருந்த சமூகமும் இவர்களை இப்படித் தான் நடத்தியுள்ளது!

  தாரிகொண்ட வெங்கமாம்பா = இந்தப் பெண்ணை மதித்து, அன்னமாச்சார்யர் வழியில் வந்தவர்கள், ஆலயத்துக்குள் சிறப்பு காட்டி உள்ளார்கள்! எந்த ஆலயம், எந்த சமயம் என்பதெல்லாம் அவரவர் தேடிப் பார்த்துக் கொள்ளட்டும்! நான் சொன்னால் நன்றாக இராது!

  எதேச்சையா தேடிப் பார்க்கும் போது கூட இப்படித் தான் மாட்டுது! என்ன செய்ய! :(

  சமூகப் பார்வையில் பார்க்காமல், அவரவர் சமயம் காக்கும் பார்வையில் பார்த்தால் இது தான் வினை!

  ரிஷி பத்தினிகளை மதித்து நடத்திய வேத காலச் சமூகம் எங்கே போனது?

  சமணத்தில் பெண்களுக்கு வீடுபேறு இல்லை! அவர்கள் ஆணாகப் பிறந்து தான் வீடு பெற வேண்டும்-ன்னு இருக்காம்!
  ஆனால் பெளத்தம் அப்படி அல்ல! புத்த சங்கத்திலேயே சில பெண்களைச் சேர்த்தார் புத்த பெருமான்!

  இப்படிச் சில சமூகங்கள் தான் பெண்களுக்கு ஓரளவு மென்மை காட்டி இருக்கின்றன!

  வைணவத்தில், பெளத்ததில், பெண் அடியவர்களைச் சமூகம் சிதைத்து விரட்டியுள்ளதா என்றும் நண்பர்கள் தேடித் தாருங்கள்! நானும் தேடுகிறேன்! இங்கே ஒளிவு மறைவின்றி இடுகிறேன்! சமயப் போர்வை போர்த்தி யார் தவறு புரியினும் தவறு, தவறு தான்!

  கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்
  அவர் கண்டீர் நாம் வணங்கும் அடிகளாரே!

  ReplyDelete
 49. பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்த இதே ஆண்கள் சமூகம் தான்,
  இறை உணர்வை உணர வேண்டிய நிலை வரும் போது மட்டும்,

  தன்னைப் பெண்ணாக எண்ணிக் கொண்டு இறைவனைப் புருஷனாக எண்ணி நாயகி பாவத்தில் பாடியது!

  இது ஒன்றே போதும், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் ஆன்மீகத்தில் எப்படி ஆத்மார்த்தமாக ஈடுபட முடியும் என்பதற்கு!

  எத்துறையிலும் கொடி கட்டும் பெண்கள், ஆன்மீகத்திலும் கொடி கட்டிப் பறக்க வேண்டும்!

  அமிர்தானந்த மயீ போன்றவர்கள் தங்களுக்கு என்று மடங்கள் ஏற்படுத்திக் கொண்டாலும்...
  பாரம்பர்ய மடங்களிலும் நிலைமை மாற வேண்டும். பெண்கள் அங்கும் செழிக்க வேண்டும்!

  அது வைணவ மடங்களே ஆகட்டும்! அங்கும் பெண் மடத் தலைவர்கள் இப்போதெல்லாம் வருவதில்லை! இதுவும் மாற வேண்டும்!
  பருத்திக்கொல்லை நாச்சியார்
  பொன்னாச்சி
  அத்துழாய்
  என்று இருந்தவர்கள், இன்று அப்படிக் காணோமே! அதிலும் அடியேனுக்கு வருத்தம் தான்!

  ReplyDelete
 50. Geetha Said //ஆனால் ஒரு ஆணால் பெண் துணை இல்லாமல் தனித்து வாழ முடியுமா?? ஏதேனும் ஒரு விதத்தில், அம்மா இல்லை எனில் சகோதரி, மனைவி இல்லை எனில் மகளோ, மருமகளோ, பெண்ணின் துணையோ அருகாமையோ அவங்க கவனிப்போ இல்லாமல் ஆணால் இருப்பது கஷ்டமே. இதை நான் சொல்லிட்டு ஏற்கெனவே வாங்கிக் கட்டிண்டாச்சு. இப்போவும் வாங்கிக் கட்டிக்கப் போறேன். :)))))))) ஆனாலும் சுட்டாலும் உண்மை இதுவே! இதை யாராலும் மறுக்க முடியாது. பெண்ணால் தனித்து வாழமுடியும், வாழ்ந்தும் காட்டி இருக்காங்க, காட்டுகின்றார்கள்.//

  கீத்தாம்மா துணைங்கறது உறவுகள் மட்டுந்தான்னு எடுத்துக்க முடியாது; நீங்க சொன்ன அவ்வையருக்கும் அதியமனு ஒரு நண்பர் இருந்தார்
  . மனிதன் ஒருவரை ஒருவர் எபோதும் சார்ந்தேதான் இருக்காங்க.

  தன்னோட தெய்வ ஆற்றலை உணர்ந்தவங்க அதை உணரதவ்ங்க்ள விட்டு தனியே இருக்காங்க அவ்வளவுதான்

  ReplyDelete
 51. Geetha Said//
  எதுவுமே இல்லை, தன் புனிதத்தை ஒரு பெண் நிரூபிச்சதுக்குப் பின்னரும் அவளை" ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற உண்மையான பயமும், தயக்கமுமே காரணம்.
  //
  பரம தத்தனும் அவனுடன் இருந்தவர்களும் புனிதவதியாரின் தெய்வத்தன்மை மட்டும் அல்ல ஏதும் அறியாதவர்கள், அவர்கள் வணிகர்கள் வணிகத்தை தவிர ஏதும் தெரியாது, தெய்வ அதிசியங்களை கண்டவுடன் பெரியது நம்மால் நெருங்க முடியாது என்ற எண்ணம் வந்து விடுகிறது

  ஆனால் ஆண்டாளோ தன்னுடைய தெய்வத்தன்மையை வெளிப்படுத்தும் போது அவர் தந்தை உடன் இருந்து பார்த்து புரிந்து ஏற்று கொள்ள முடிந்தது,


  அதனால் அவரகள் பிரியவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை

  ReplyDelete
 52. நான் சேம் சைடில் கோள் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 53. @Mani Pandi Or Geethamma
  //வணிகர்கள் வணிகத்தை தவிர ஏதும் தெரியாது, தெய்வ அதிசியங்களை கண்டவுடன் பெரியது நம்மால் நெருங்க முடியாது என்ற எண்ணம் வந்து விடுகிறது

  ஆனால் ஆண்டாளோ தன்னுடைய தெய்வத்தன்மையை வெளிப்படுத்தும் போது அவர் தந்தை உடன் இருந்து பார்த்து புரிந்து ஏற்று கொள்ள முடிந்தது//

  என் கேள்வி ரொம்ப சிம்பிள்!

  புனிதத்தன்மையப் பார்த்தவுடன் கூட வாழ எல்லாம் வேண்டாம். சரி!
  ஆனாள் அவளைக் குறைந்த பட்சம் போஷித்து காக்கலாம் அல்லவா? அவள் திரிந்து பேயாக அலைய விடாமலாவது இருந்திருக்கலாம் அல்லவா? :(

  புனிதவதி கணவன் வேண்டாம் என்று சொன்ன ஓவர் நைட்டில் பேயாகி விடவில்லை! பல இயலாமைகளுக்கு அப்புறம், அலைந்து திரிந்து தள்ளப்பட்டாள்!

  ஆண்டாளின் விபரீத ஆசையைக் கண்டு விட்டு சித்தர் கலங்கினாலும், அவளை அவரோ, அந்தச் சமூகமோ அலைய விடலையே! அது ஏன் புனிதவதிக்கு நடக்கவில்லை?

  ReplyDelete
 54. //அவளை" ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற உண்மையான பயமும், தயக்கமுமே காரணம்//

  கீதாம்மாவின் இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்தன என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்! :(

  ReplyDelete
 55. ஆழமான சிந்தனைகள் கொண்ட பதிவு.

  காரைக்காலாரின் கவிதையை iconic poetryக்கு எடுத்துச் சென்ற உங்கள் பார்வைக்குப் பாராட்டுக்கள்.

  உங்கள் சிந்தனைக்கு மேலும் சில:

  எல்லாச் சமயங்களிலும் பெண்கள் ஆண்டவனை நெருங்குவது மற்றவர்களுக்கு அச்சம் தருவதாகவே இருந்திருக்கிறது.
  அவர்களை அசாதாரண்மாகக் கருதி அவர்களுக்கு இறைமை நிலையோ, பிசாசு நிலையோ அளிக்கப்பட்டு அவர்களிடமிருந்து விலகி நிற்பதே எல்லாச் சமூகங்களிலும் உள்ள நிலை.

  இது நம் 'கீழ் உள்ளவர்கள்' அதிகாரம் பெறும் போது ஏற்படும் எதிர்வினை. (empowerment of subordinates)
  இதன் வேர்களை பெண்களுக்கு சமூகத்தில் இருந்த நிலை குறித்து ஆராயும் போது உணர்ந்து கொள்ளலாம்.


  பாம்பு கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலும் காமத்துடன் தொடர்பு கொண்ட குறியீடாகவே காணப்படுகிறது. ஆதாமை 'முதற்பாவம்' செய்யத் தூண்டியது ஒரு பாம்பு என்பதை நினைவு கூர்ந்தால் இது உங்களுக்கு விளங்கும்.

  அன்புடன்
  மாலன்

  ReplyDelete
 56. நன்றி தல..;))

  ஏற்கனவே இவுங்களை பத்தி படிச்சிருக்கேன். உங்களின் பதிவின் மூலம் இன்னும் தெரிஞ்சிக்கிட்டேன் ;)

  ReplyDelete
 57. தானை தலைவி கீதா அவர்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் என்னோட ஸ்பெசல் ரீப்பிட்டே ;))

  ReplyDelete
 58. //Mani Pandi said...
  நான் சேம் சைடில் கோள் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்//

  ஹா ஹா ஹா
  எல்லா கோலும் இறைவனுக்கே! :)

  ReplyDelete
 59. //மாலன் said...
  ஆழமான சிந்தனைகள் கொண்ட பதிவு.
  காரைக்காலாரின் கவிதையை iconic poetryக்கு எடுத்துச் சென்ற உங்கள் பார்வைக்குப் பாராட்டுக்கள்//

  வாங்க மாலன்! நன்றி!
  காரைக்கால் அம்மையார் இன்னும் பல புதுமைக் கவிதைகள் எல்லாம் செய்துள்ளார். அடுத்த சில பதிவுகளில் பதிக்கிறேன்!

  சிவபெருமான் பாட்டுக்கென்று தனியான வலைப்பூ உள்ளது! அங்கு தான் பதிக்கிறோம்! அங்கேயே பாருங்கள்! இங்கு இதைப் பதிந்தது Technical Faultஇன் காரணமாகத் தான் :)
  http://sivanpaattu.blogspot.com

  //எல்லாச் சமயங்களிலும் பெண்கள் ஆண்டவனை நெருங்குவது மற்றவர்களுக்கு அச்சம் தருவதாகவே இருந்திருக்கிறது//

  உண்மை தான்!
  ஆனால் அதே ஆண்கள் தான் நாயகி பாவமாகவும் இறைவனைப் பாடுகின்றனர்! இது தான் முரண்! :)
  அவர்களை அசாதாரண்மாகக் கருதி

  //இது நம் 'கீழ் உள்ளவர்கள்' அதிகாரம் பெறும் போது ஏற்படும் எதிர்வினை. (empowerment of subordinates)
  இதன் வேர்களை பெண்களுக்கு சமூகத்தில் இருந்த நிலை குறித்து ஆராயும் போது உணர்ந்து கொள்ளலாம்//

  பெண்களின் சமூக நிலை முன்னேறிய அளவுக்கு, ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் என்பது இக்காலத்திலும் மிகவும் குறைவு தான்! திருமடங்களில் முதல் பெண்மணித் தலைவர் யாரோ?

  //ஆதாமை 'முதற்பாவம்' செய்யத் தூண்டியது ஒரு பாம்பு என்பதை நினைவு கூர்ந்தால் இது உங்களுக்கு விளங்கும்//

  அட, ஆமாம்!
  ஆனால் நம் பண்பாட்டில் பாம்பு, காமம் மட்டுமே குறிக்கவில்லை-ன்னு நினைக்கிறேன்! குண்டலினி, ஆன்ம வேட்கை, சேஷத்துவம் (வழுவிலா அடிமை) என்று பல நிலைகளில் வருகிறது!

  ReplyDelete
 60. //கோபிநாத் said...
  ஏற்கனவே இவுங்களை பத்தி படிச்சிருக்கேன். உங்களின் பதிவின் மூலம் இன்னும் தெரிஞ்சிக்கிட்டேன் ;)//

  :)
  கதையைப் படிச்சிருப்பீங்க மாப்பி!
  கவுஜயைப் பத்திச் சொல்லுங்க!

  ReplyDelete
 61. //கோபிநாத் said...
  தானை தலைவி கீதா அவர்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் என்னோட ஸ்பெசல் ரீப்பிட்டே ;))//

  ஹா ஹா ஹா
  "ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது - இதுக்குமா கோப்பி? :)

  ReplyDelete
 62. //நன்றி குமரன்! எல்லாப் பின்னூட்டங்களையும் படித்த பின், என்ன தோன்றுகிறது? :)//

  நல்ல உரையாடல் என்று தோன்றுகிறது. அதனைத் தான் சொன்னேன். :-)

  ReplyDelete
 63. //முடிந்தால் தனிப் பதிவாகவே இடுங்களேன் குமரன்!
  இங்கு பல பேருக்கு நீங்கள் சொல்வது தெரிந்திருக்க இயலாது-ன்னே நினைக்கிறேன்! அதனால் தனியாகப் பதிவிட்டால் ஒரு புரிதல் கிடைக்கும் அல்லவா?
  //

  ஏற்கனவே எழுத வேண்டிய பட்டியல் ரொம்ப பெரிசு. உடையவர் வாழ்க்கையை நீங்கள் எழுதினால் தான் நன்றாக இருக்கும். எழுதுங்கள்.

  ReplyDelete
 64. சமூகத்தை ஒரு நிலைமைக்கு மேல், கண்டுக்கக் கூடாது கே ஆர் எஸ் அவர்களே,

  சிறிய உதாரணம். திருமங்கை ஆழ்வார், தன்னை ஒரு பெண்ணாக பாவித்து, இறைவனை அடைய நினைக்கிறார்.ஆனால் அது நிகழவில்லை.உடனெ மடல் ஏற நினைக்கிறார். ஆனால் பெண்கள் மடல் ஏறுதல் என்னும் நிகழ்வு, சமூகத்தால் ஏற்க்கப்படாத ஒரு செயல். ஆனால் ஆழ்வாரால், தன்னுடைய பக்தி என்னும் விரக தாபத்தைத் தாங்க முடியாமல், கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

  “மன்னு மடல் ஊரார் என்பதோர் வாசகமும், தென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனையாந்தெளியோம் மன்னும் வட நெறியே வேண்டினோம்” என்கிறார்.பெண்கள் மடல் ஏறுதல், பொருந்தா நெறி என்று மருதளிக்கும்போது, தென்னெறியே வேண்டாம் , யாம் வட நெறியைக் கொள்வோம் என்று அறிவிக்கிறார். இறுதியில், கடவுள் பக்திக்கு மனித விதிகள் , பொருந்த வேண்டிய கட்டாயம் இல்லை என்ற எண்ணமும் வருகின்றது.

  அதே போல் ஒரு நிலைமைக்கு மீறி , சமூகம் , ஒருவரது, பக்தி மற்றும் தனிவாழ்வின் மீது கட்டுபாட்டைத் திணிக்கும் போது, அதை மீறலாம்.

  வணக்கத்திற்கு உரிய காரைக்கால் அம்மையார் அல்லது அவரது கணவர், இந்த விஷயத்தில் சமூகத்தைக் கண்டுக்காம விட்ருக்கலாம்.

  ReplyDelete
 65. உடையவரின் பிராட்டியார் தன் தாய் வீட்டிற்கு பொய்யான காரணம் சொல்லி அனுப்பப்பட்டது மட்டும் தான் வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அவர் தமது பெற்றோர்களால் தொடர்ந்து ஆதரிக்கப்பட்டாரா? உடையவர் சந்யாசி ஆன பிறகு மீண்டும் வந்து பார்த்தாரா? போன்ற விவரங்கள் எல்லாம் தெரியாது. அதனால் உங்கள் கேள்விகளுக்கு உண்டு இல்லை என்ற பதில்களைச் சொல்ல என்னால் இயலாது.

  இராகவேந்திரரும் தன் மனைவியாரைப் பிரிந்து சென்று சந்யாசம் ஏற்றுக் கொண்டார் என்று தெரியும். செய்தி தெரிந்த பின்னர் அந்தப் பெண்மணி உயிரை மாய்த்துக் கொண்டு பேய் உருவில் திரிந்ததாகவும் இராகவேந்திரர் அவருக்கு ஆத்ம விமோசனம் தந்ததாகவும் படித்திருக்கிறேன். திரைப்படத்திலும் காட்டுவார்கள்.

  அருணகிரிநாதர் திருமணம் செய்து கொண்டாரா? எனக்குத் தெரியவில்லை.

  சுயநலத்திற்கோ புனிதக் காரணங்களுக்கோ வேறு எந்த காரணத்திற்காகவோ இப்பெண்களைப் பிரிந்தார்கள் உடையவரும் இராகவேந்திரரும் இன்னும் பல பெரியவர்களும். ஆனால் தங்கள் விருப்பத்திற்கு எதிராகப் பிரிவைப் பெற்றவர்கள் படும் வேதனை எல்லோருக்கும் உண்டு தானே.

  ReplyDelete
 66. //திருமுறை
  1,2,3=திருக்கடைக்காப்பு (சம்பந்தர்)
  4,5,6=தேவாரம்(அப்பர்)
  7=திருப்பாட்டு(சுந்தரர்)
  8=திருவாசகம்/திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)
  9=திருவிசைப்பா/திருப்பல்லாண்டு(சேந்தனார், கருவூரார், கண்டராதித்தர்...முதலானோர்)
  10=திருமந்திரம்(திருமூலர்)
  11=பிரபந்தம்(காரைக்கால் அம்மை, நம்பியாண்டார் நம்பி, சேரமான் பெருமாள்...முதலானோர்)
  12=பெரிய புராணம்(சேக்கிழார்)
  //

  இந்த விவரங்கள் எல்லாம் தெரியாததால் விரைவில் இத்திருமுறைகளையும் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இறைவா, விரைவில் ஆசைப்படும் எல்லா இலக்கியங்களையும் படிக்கும் வாய்ப்பினை அருள வேண்டும்.

  ReplyDelete