Monday, November 24, 2008

கேஆரெஸ் சிவம்! துளசி சிவம்! பதிவர் சிவம்! பரமம் சிவம்!

கேஆரெஸ் சிவம்! ஜிரா சிவம்! துளசி டீச்சர் சிவம்! நம்ம ஜீவா சிவம்!
குமரன் சிவம்! கோவி கண்ணன் சிவம்! எஸ்.கே. சிவம்! மெளலி அண்ணன் சிவம்!
தேவும் சிவம்! வெட்டிப் பயலும் சிவம்! ஆயில்ஸ் சிவம்! அந்த அதிஷா சிவம்!
கானா சிவம்! கொத்த னாரும் சிவம்! துர்கா சிவம்! மை ஃபிரெண்டும் சிவம்!
பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்! பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்!!

அடப்பாவி கேஆரெஸ்! நல்லாத் தானே இருந்தே? என்ன ஆச்சுறா உனக்கு?
சுப்ரபாதம் போட்ட கையோடு, இப்படிச் சூடா வெண்பொங்கல் கணக்கா கொழ கொழ-ன்னு ஆயிட்டே? - அப்படின்னு பாக்கறீங்களா மக்களே? ஹா ஹா ஹா!

ஆல் பிகாஸ் ஆஃப் திஸ் குமரன்! இருங்க, அதுக்கு முன்னாடி ஒரே ஒரு சிவத்தை விட்டுபுட்டேன்! அவிங்களையும் சொல்லிடறேன்!
கீதா சிவம்! ஓ! அது அவங்க பேர்-ல ஏற்கனவே இருக்கா! சரி சரி!
கீதா சிவம்! கீதா சாம்ப சிவம்! கீதா சிவம்! கீதா சாம்ப சிவம்! :)

மேட்டர் என்னான்னா, நம்ம கூடலார்-குமரனார் ஒரு பதிவு போட்டிருக்காரு! நானே சிவன்! நானே சிவம்-ன்னு!
அதைப் படிச்சதிலிருந்து, எனக்கு வேற வேலையே ஓடலை! அப்படியே ஒட்டிக்கிச்சி! ஏன்னா, நான் ரொம்ப நாளாய், அதுவும் நாத்திகனில் இருந்து ஆத்திகனாய் மாறிய காலம் தொட்டு, மிகவும் விரும்பிப் படிக்கும் பாட்டு அது!

இல்லை, இல்லை-ன்னு தான் அந்தப் பாட்டில் வரும்!
இல்லை-ன்னு சொல்லும் நாத்திகத்தை விட்டு வர, எனக்கு இந்த "இல்லை-இல்லை" பாட்டு தேவைப்பட்டுதோ என்னமோ? :)

ஆத்ம ஷட்கம் (நிர்வாண ஷட்கம்) என்பது அதற்குப் பெயர்! விடுதல் ஆற்றுப்படை-ன்னு, தமிழில் மொழி பெயர்த்து இருக்கேன்! :)
நிர்வாணம் = விடுபடுதல்! விடுபட்ட நிலை
ஷட்கம் = ஆறு பாடல்கள்
அதான் நிர்வாண ஷட்கம் = விடுதல் ஆறு! விடுதல் ஆற்றுப்படை!
ஆறு செய்யுளும் இருக்கு! நமக்கு ஆற்றுப் படையாகவும் இருக்கு!

இது ஜகத்குரு ஆதி சங்கரரின் அருளிச் செயல்!
பல தத்துவங்களை உள்ளடக்கிய பாட்டு! அத்வைதம் என்றால் என்ன என்று படிக்கத் துவங்குபவர்கள், இதைப் படிச்சிட்டுத் துவங்கினா, அத்வைதத்தின் நுண்ணிய கருத்துகள் பலவும் மிக எளிதாகப் புலப்படும்! ஏன் தெரியுமா?

ஆதி சங்கரரே, இதைப் பாடி விட்டுத் தான், பாடம் படிக்கவே ஆரம்பிச்சாராம்!
அடியேன் சங்கரனும், இதைப் படிச்சிட்டு தான், பாடம் படிக்கவே ஆரம்பிச்சேன்!
வாங்க, எப்பமே கதையைச் சொல்லிட்டுக் கருத்தைச் சொல்லுறது தானே என் கெட்ட பழக்கம் :)


ஆதி சங்கரர், என்ன தான் கருவிலே திரு உடையவர் என்றாலும், ஒரு நல்ல குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்! அப்போது தான் முதலை வாயில் இருந்து தப்பித்து, தாயின் இசைவோடு ஆபத் சன்னியாசம் பெற்று இருந்தார்! அது தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட சன்னியாசம்! முறையான ஒன்று அல்ல!

அப்படியே நடந்து நடந்து, இமயமலையில் உள்ள பத்ரிநாத் என்னும் தலத்துக்கு வந்து சேர்ந்தார் சங்கரர்! கோவிந்தன் துணைகொண்டு ஞானம் பெற வேண்டும்! பரந்து விரிந்த ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம் போலும்!

திருவதரீ என்றும் பத்ரிகாச்ரமம் என்றும் சொல்லப்படுவது பத்ரிநாத்! 108 திவ்யதேசங்களிலே ஒன்றாக வைத்துப் போற்றப்படுவது! அதரி என்றால் இலந்தைப் பழ மரம்!
அதனடியில் பத்ரி நாராயணனாக, ஞான குருவாக இறைவன் வீற்றிருக்கிறான்! யோக முத்திரை காட்டியபடி! அவனுடன் மகாலக்ஷ்மி, சேனை முதலியார் என்று ஆசார்ய பரம்பரை!
கூடவே கருடன், வியாழன், நாரதர், குபேரன், உத்தவர், நர-நாராயணர்கள்!
பத்ரிநாதப் பெருமாள் ஞான குருவாக அமர்ந்து உபதேசிப்பதை, அர்த்த பஞ்சக ஞானம் என்று குறிப்பிடுவார்கள்!
1. ஜீவாத்மா எது?
2. பரமாத்மா எது?
3. ஜீவாத்மா எதை அடையணும்?
4. அடையும் வழிகள் என்ன?
5. அடையும் வழியில் தடைகள் என்ன?

சங்கரர் தப்த குண்டம் என்று சொல்லப்படும் சுடு நீர் ஊற்றிலே குளித்து விட்டு, பத்ரீநாதனை மனதால் சேவித்துக் கொண்டார்! பின்னாளில் அந்த ஆலயத்தின் இறைவனை ஆற்றில் இருந்து தாம் தான் எடுத்து மீட்கப் போகிறோம் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை! தன் அடி மன வேட்கையான ஒரு நல்ல குருவை அடையணுமே என்று வேண்டிக் கொண்டு, இமயமலையின் மேல் நடக்க ஆரம்பித்தது தான் தாமதம்...

கண் முன்னே அந்த ஞான குரு! பெயர் கோவிந்த பாதர்!
அடியேனைத் தங்கள் சீடனாய் வரிக்க வேண்டும் என்று இந்தப் பிள்ளை வேண்ட,
யாரப்பா நீ? என்று வந்தது ஒரே ஒரு கேள்வி!

சங்கரர் அதுகாறும் மனத்தில் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் மள மளவென்று மழை போல் பொழியத் துவங்கி விட்டார்!
* நான் மனம் இல்லை! நான் புத்தி இல்லை!
* நான் சினம் இல்லை! நான் சித்தம் இல்லை!
* நான் வான் இல்லை! மண் இல்லை! வளி இல்லை! ஒளி இல்லை!
* நான் அதுவும் இல்லை! நான் இதுவும் இல்லை! நேதி! நேதி!

எதுவுமாக இல்லாத நான், "நான் யார்?" என்பதை அறியவே தங்களை நாடி வந்துள்ளேன் குருவே என்று மொழிந்தார்!
தன் காலடிக் கதையைச் சொல்லிக் காலடியில் வீழ்ந்தார் அண்ணல்!
"நான் இல்லை! நான் இல்லை!" என்று சங்கரர், குருவிடம் சொன்ன முதல் சுலோகம் இதுவே! ஆத்ம ஷட்கம்! நிர்வாண ஷட்கம் என்றும் பெயர்!

கோவிந்தபாதருக்கு இந்தப் பிள்ளையின் ஞானத்தில் அப்படி ஒரு ஈர்ப்பு உண்டாகிவிட்டது! உடனே சன்னியாசத்தை முறையாக அளித்து, தன் சீடனாகச் சேர்த்துக் கொண்டார்!
அத்வைத நான்கு மகா வாக்கியங்களையும், அபேத சுருதிகளையும் சொல்லித் தர ஆரம்பித்தார்! அத்வைத விசாரணையும் படிப்பும் படிப்படியாகத் துவங்கியது!

பின்னாளில் ஞானம்-கர்மம்-பக்தி என்று மூன்று மார்க்கத்துக்குமே ஒரே எடுத்துக்காட்டாய் விளங்கப் போகும் சங்கரனின் பாடம் துவங்கியது இப்படித் தான்!
(* கோவிந்த பாதரை பத்ரிநாத்தில் சந்திக்காமல், நர்மதை நதிக் கரையில் சந்தித்தார் என்று சொல்வாரும் உண்டு)



குமரன் பதிவு இதோ! சொல்-ஒரு-சொல்லாய், பொருளும் கொடுத்திருக்காரு!
ஆறே ஆறு பாட்டு தான்! வாய் விட்டுப் படிக்கும் போது, சந்தம் தானா வந்துரும்!
இதைச் சந்தம் மாறாமல் தமிழ்ச் செய்துள்ளேன் அடியேன்!
சொல்லும் பொருளும் இசையும் சேர்ந்து வருதா என்று நீங்களே பார்த்துச் சொல்லுங்களேன்!

மந்திர ஒலி வடிவில் - வேகமாக! (கேட்டுக்கிட்டே படிங்க)


விடுதல் ஆற்றுப்படை

* அதுவும் இல்லை! இதுவும் இல்லை! நேதி! நேதி!

மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்


மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை!
சினம் தங்கு செவி நாக்கு கண்களும் இல்லை!
வானாகி மண்ணாகி வளி ஒளியும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(சிதானந்தம் = சித்தம்(ஞானம்) + ஆனந்தம்; சச்சிதானந்தம்/திருச்சிற்றம்பலம் என்பது போல் சித்+ஆனந்தத்தை மட்டும் தூய தமிழில் ஆக்காது, சிதானந்தம் என்றே வைத்து விட்டேன்! சிவோஹம் = சிவ + அஹம்)

ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

உயிர் மூச்சு மில்லை! ஐங் காற்றும் இல்லை!
எழு தாதும் இல்லை! ஐம் போர்வை இல்லை!
கை கால்கள் இல்லை! சினை வினையும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(ஐங்காற்று: ப்ராணன் - உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் - உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் - உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் - உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் - உடல் செய்கைகளை நடத்தும் காற்று

எழு தாது: ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை

ஐம் போர்வை: அன்னமய கோசம் - உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் - உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் - மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் - அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் - இன்பத்தால் ஆன போர்வை)

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


விரு வெறுப்பில்லை! மையல் பற்றும் இல்லை!
கரு கருவம் இல்லை! அழுக் காறும் இல்லை!
அறம் பொருள் நல்லின்ப வீடும் நானில்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


வினை வேட்கை இன்பங்கள் துன்பங்கள் இல்லை!
மறை வேத தீர்த்தங்கள் வேள்விகள் இல்லை!
துப்பில்லை துப்பாக்கித் துப்பாரும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(துப்பில்லை=உணவில்லை; துப்பாக்கித் துப்பாரும் இல்லை=உணவை உருவாக்கலும் இல்லை! உண்டு துய்ப்பவனும் இல்லை!)

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

மரணங்கள் கரணங்கள் சாதிகள் இல்லை!
தாய் தந்தை இல்லை! தரும் பிறப்பில்லை!
உற்றார்கள் சுற்றார்கள் குரு சீடர் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

அஹம் நிர்விகல்போ நிராகார ரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


மாற்றங்கள் இல்லை! பல தோற்றங்கள் இல்லை!
எங்கெங்கும் எங்கெங்கும், எதிலும் நான் நானே!
தளையில்லை! தடையில்லை! தரும் முத்தி இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


இதி ஸ்ரீ மத் சங்கராச்சார்ய விரசித, நிர்வாண ஷட்கம் சம்பூர்ணம்!
சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்! சிவோஹம்!
(***கார்த்திகைச் சோமவாரம் சிறப்புப் பதிவு***)


இசை வடிவில்:

51 comments:

  1. குமரன் பதிவில், ஒரு ஆச்சரியம் இருப்பதாக சொல்லிருந்தீங்க.. இதுதானா அது.

    சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

    ஆசார்யர் அடி பணிகிறேன்.

    ReplyDelete
  2. //துப்பில்லை துப்பாக்கித் துப்பாரும் இல்லை! //

    திருக்குறள் ஞாபகம் வந்து விட்டது.. :)

    ReplyDelete
  3. நானே சிவம் என்பது அத்வைத சித்தாந்தம், எனக்கு அதைச் சொல்லாதிங்க !

    கோவி.கண்ணன் சிவம் அல்ல, அதன் வடிவோன் மட்டுமே.

    :)

    ReplyDelete
  4. //கோவி.கண்ணன் said...
    நானே சிவம் என்பது அத்வைத சித்தாந்தம், எனக்கு அதைச் சொல்லாதிங்க !//

    ஏன் சொல்லக்கூடாது?

    //கோவி.கண்ணன் சிவம் அல்ல, அதன் வடிவோன் மட்டுமே//

    கோவி யார்?
    வடிவம் எது?
    வடிவம் மட்டுமே சிவம் என்றால் வடிவம் மாறும்! சிவம் மாறுமா?

    கோவி சிவம் அல்ல என்றால், கோவி என்பது என்ன?
    அதற்கு உரிமை யார்?
    கோவி சிவம் அல்ல என்று சொல்ல கோவிக்கு என்ன உரிமை?

    ReplyDelete
  5. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கோவி.கண்ணன் said...
    நானே சிவம் என்பது அத்வைத சித்தாந்தம், எனக்கு அதைச் சொல்லாதிங்க !//

    ஏன் சொல்லக்கூடாது?

    //கோவி.கண்ணன் சிவம் அல்ல, அதன் வடிவோன் மட்டுமே//

    கோவி யார்?
    வடிவம் எது?
    வடிவம் மட்டுமே சிவம் என்றால் வடிவம் மாறும்! சிவம் மாறுமா?

    கோவி சிவம் அல்ல என்றால், கோவி என்பது என்ன?
    அதற்கு உரிமை யார்?
    கோவி சிவம் அல்ல என்று சொல்ல கோவிக்கு என்ன உரிமை?

    2:59 AM, November 24, 2008
    //

    அத்வைத சித்தாந்தம் அனைத்தும் பிரம்மம், எல்லாமாக இருப்பது என்று சொல்வது ஒரு தத்துவம் மட்டுமே, உலகில் உள்ள எந்த மதத்திலும் இந்த கருத்து ஒட்டாது. அவை ஒரு சித்தாந்தம் என்று மட்டுமே கொள்க வலியுறுத்தும் அளவுக்கு அது புகழ்பெறவில்லை. அனைத்தையும் ஒன்றாக பார்ப்பது ஒரு உயர்ந்த எண்ணம் மட்டுமே, அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டியவர்களின் எண்ணங்கள் ஒருக்காலமும் அதுபோல் சிந்திக்காது.

    அனைத்து மதங்களிலுமே இறைவன் என்பவன் தனிப்பட்டவன் என்றே சொல்கிறார்கள், அதில் பரப்பிரம்மத்தை எங்கே கொண்டு ஒட்டவைப்பீர்கள் ? தனிப்பட்ட வடிவாக இல்லாத ஒன்றுக்கு தனிப்பட்ட குணம் கற்பிப்பதும், அதற்கு உயர்வு கற்பிப்பதும் எவ்வாறு ?

    தேடலில் இறைவனை கண்டு கொள்ளாதவர்கள் முடிவில் தானே அது என்று துணிந்து சொன்னதே அத்வைத சித்தாந்ததம். இது உண்மை எனும் போது இறைவன் என்ற ஒன்றே இல்லை, அனைத்தும் கற்பனையே மாயை என்றே சொல்வதாக பொருள்.

    அத்வைத சித்தாந்தம் எந்த வகையில் உயர்வு என்பதாக தாங்கள் கருதுகிறீர்கள். பெளத்த சூனிய வாதத்திற்கு மாற்று என்பதைத் தவிர்த்து அதில் பெரிதாக ஒன்று இல்லை என்றே நான் கருதுகிறேன்.

    ஆழ்கடல், சிறுதுளி தண்ணீர் கலந்தால் சிறுதுளியை பிரித்து அறிய முடியாது என்கிற விளக்கமெல்லாம் வேண்டாம், ஏனெனில் இவை பெளதீகம். பிரிப்பது, சேர்ப்பது எல்லாம் பெளதீக விளக்கத்தில் கூறுகளே.

    நீங்கள் பிரம்ம தத்துவமே உயர்ந்தது என்று நம்பலாம், ஆனால் அதனை வழியுறுத்தும் முன் அவற்றில் தெளிவு இருக்க வேண்டும், வெறும் நூல்களை வைத்து ஆதாரம் சொன்னால் ஏற்பதற்கு இல்லை.

    'உள்ளமே கோவில், ஊனுடம்பே ஆலயம்' என்ற சித்தர்களின் சொல்வழக்கு, 'உலகே மாயம் வாழ்வே மாயம்' என்னும் மாயா வாதத்தைவிட உயர்ந்தது, தெளிவானது, நடைமுறைக்கும் எளிதானது.

    சைவ சித்தாந்தங்களிலும் கூட பசு,பதி இரண்டாகத்தான் சொல்கின்றன.

    ReplyDelete
  6. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கோவி.கண்ணன் said...
    நானே சிவம் என்பது அத்வைத சித்தாந்தம், எனக்கு அதைச் சொல்லாதிங்க !//

    ஏன் சொல்லக்கூடாது?//

    தந்தையும் மகனும் தோற்றத்தில் ஒத்தவராக இருந்தாலும் குண நலன்களில் மாறுபட்ட இருவர். இருவரும் ஒன்றல்ல. பிறப்புக்கு அப்பாற்பட்டவருக்கும், பிறப்பு சக்கரத்தில் வருபவரும் ஒன்றா ?

    //கோவி.கண்ணன் சிவம் அல்ல, அதன் வடிவோன் மட்டுமே//

    கோவி யார்? - கோவியார் என்பது உடலின் பெயர் மட்டுமே, உள்ளுறையும் ஆன்மாவுக்கு பெயரில்லை.

    //வடிவம் எது?// பெளதீகத்திற்கு அப்பாற்பட்ட வடிவம். பரமாத்மா பேரொளி என்றால் ஆன்மாவும் ஒளிதான். ஆன்மா பரமான்மாவில் இருந்து ஒளித்தன்மையில் மட்டுமே மாறுபட்டது.

    //வடிவம் மட்டுமே சிவம் என்றால் வடிவம் மாறும்! // காலத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று காலமாற்றத்தால் மாறவே மாறாது. சிவவடிவம் கண்களால் தரிசிக்க முடியாத ஒளிவடிவமே, பொன்னிற மேனியான் என்று சொல்கிறார்களே, மேனியான் என்றால் உடல் என்ற பொருள் அல்ல, பொன்போன்று மின்னும் பேரொளி என்றும் சொல்லலாம்.

    //சிவம் மாறுமா? // மாற்றம் என்பது மானிட தத்துவம் மட்டுமே. சிவத்துக்கு பொருந்தாது.

    ReplyDelete
  7. ரவிசங்கர் சிவம் உங்க மொழிபெயர்ப்பு நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. மங்களம் மங்களம் மங்களம்.


    சிவம் என்றால் மங்களம் என்றும் ஒரு பொருள் இருக்கே.

    ReplyDelete
  9. நன்றி இரவிசங்கர். நல்லதொரு மொழிபெயர்ப்பு.

    பாருங்கள் நான் சொன்ன மாதிரி நீங்களே பந்தலில் இட்டது எவ்வளவு நன்றாக வந்திருக்கிறது.

    ஆதி சங்கரர் கோவிந்த பகவத்பாதரை திருவதரியில் சந்தித்தார் என்பது எனக்கு செய்தி. அவர் அவரை நர்மதைக்கரையில் தானே சந்தித்தார் என்று கேட்க வந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். ;-)

    ReplyDelete
  10. ஆமாம் துளசியக்கா. சிவம் என்றால் மங்களம் என்ற பொருள் இருக்கு.

    ReplyDelete
  11. //Raghav said...
    குமரன் பதிவில், ஒரு ஆச்சரியம் இருப்பதாக சொல்லிருந்தீங்க.. இதுதானா அது//

    அதே அதே, சபாபதே! :)

    //ஆசார்யர் அடி பணிகிறேன்//

    ஆசார்யர் பேரு சொல்லிப் பணிங்க! இல்லீனா சங்கரர் பேரு வாயில வரலை-ன்னு முத்திரை குத்த ரெடியா இருக்காங்க! :))

    ReplyDelete
  12. //Raghav said...
    //துப்பில்லை துப்பாக்கித் துப்பாரும் இல்லை! //

    திருக்குறள் ஞாபகம் வந்து விட்டது.. :)//

    ஹா ஹா ஹா
    அடியேனுக்கு வள்ளுவர் செய்த உதவி! ஈசியா மொழி ஆக்க முடிந்தது!

    ReplyDelete
  13. //சின்ன அம்மிணி said...
    ரவிசங்கர் சிவம் உங்க மொழிபெயர்ப்பு நல்லா இருக்கு//

    நன்றி சிவம் அக்கா! :)

    ReplyDelete
  14. //துளசி கோபால் said...
    மங்களம் மங்களம் மங்களம்.
    சிவம் என்றால் மங்களம் என்றும் ஒரு பொருள் இருக்கே//

    ஆமாங்க டீச்சர்!
    சிவோஹம் = சிவம் + அஹம் = மங்களம் + அஹம் ஆயிடுது பார்த்தீங்களா?

    ReplyDelete
  15. //குமரன் (Kumaran) said...
    நன்றி இரவிசங்கர். நல்லதொரு மொழிபெயர்ப்பு//

    நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்! இந்த ஷட்கத்தை இட்டமைக்கு! Down the memory lane :)

    //பாருங்கள் நான் சொன்ன மாதிரி நீங்களே பந்தலில் இட்டது எவ்வளவு நன்றாக வந்திருக்கிறது.//

    குமரன் திருவிளையாடல்! :)
    அடியேன் கற்றது மவுஸ் அளவு! கல்லாதது சிபியு அளவு! :)

    //ஆதி சங்கரர் கோவிந்த பகவத்பாதரை திருவதரியில் சந்தித்தார் என்பது எனக்கு செய்தி. அவர் அவரை நர்மதைக்கரையில் தானே சந்தித்தார் என்று கேட்க வந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். ;-)//

    மெளலி அண்ணாவின் உதவி இங்கு தேவைப்படுதே!

    நர்மதை வெள்ளத்தைக் கமண்டலத்தில் அடக்கி, பின்னர் குருவைச் சந்தித்தார். பின்னர் அங்கிருந்து இமயமலை சென்றார் என்று ஒரு தரப்பு!

    நேரடியாகவே இமயமலையில் தான், (பத்ரீகாச்ரமத்தில்) கோவிந்த பாதரையே சந்தித்தார் என்பது இன்னொரு தரப்பு!
    http://www.dlshq.org/saints/sankara.htm

    நர்மதை நதி தீரத்தில் கெளடபாதரோ, கோவிந்தபாதரோ மடம் அமைத்து இருந்தார்களா? காசி, இமயமலை போல், நர்மதையில் அவ்வளவு மகான்கள் சங்கமா? நர்மதை என்றால் அது எந்த ஊரில்? என்பதெல்லாம் சில கேள்விகள்! சங்கர விஜயம் என்ன சொல்கிறது?

    ReplyDelete
  16. @குமரன்/மெளலி அண்ணா
    சங்கரர் நர்மதை தீரத்தில் கெளடபாதரைச் சந்திக்கிறார்! கெளடபாதர் உடனே சீடனாக ஏற்காது, சங்கரரைத் தன் மாணாக்கரான கோவிந்தபாதரிடம் அனுப்பி வைக்கிறார்!

    கோவிந்தபாதரை இமயமலைகளில் சந்திக்கும் போது, இந்த உரையாடல் நிகழ்ந்ததாகப் பேசப்படுகிறது!

    இன்னொரு தகவல்:
    சங்கர பாஷ்யம் எழுதும் போதும், ஆச்சார்யர் மீண்டும் பத்ரிகாச்ரமத்துக்கே செல்கிறார்!

    இது ஓரளவு விரிவான தொகுப்பு:
    http://www.advaitin.net/Sankara/ShankaraBiography.pdf
    காஞ்சி மடத் தொகுப்பு:
    http://www.kamakoti.org/souv/2-4.html

    சிலர் ஷட்கத்தையே, தம் இறுதிக் கட்டத்தில் தான், அனைவருக்கும் ஒரு தொகுப்பாய்த் தந்ததாகச் சொல்கிறார்கள்! இன்னும் சிலர் சிவோஹம் என்று வாயளவில் உச்சரித்த சீடனுக்கு, காய்ச்சிய இரும்பைக் குடித்துக் காட்டி, இல்லாத ஒன்றுக்கு ஒன்றும் ஆகாது என்று சொன்னதாகவும் பேசுகிறார்கள்! :)

    ReplyDelete
  17. வாத்தி:இளா

    உள்ளேன் ஐயா..

    வாத்தி:பதிவ படிச்சியா??

    வழக்கம்போல பின்னூட்டத்துக்கு வந்துட்டேன் ஐயா..

    ReplyDelete
  18. //வாத்தி:இளா
    உள்ளேன் ஐயா..//

    என்ன இளா? அனானி அவதாரத்துல வரீங்க? :)

    //வாத்தி:பதிவ படிச்சியா??
    வழக்கம்போல பின்னூட்டத்துக்கு வந்துட்டேன் ஐயா..//

    நீங்க தான் பதிவுலக அரிச்சந்திரன்! :)

    ReplyDelete
  19. அத்வைதம் என்றால் என்ன என்று படிக்கத் துவங்குபவர்கள், இதைப் படிச்சிட்டுத் துவங்கினா........
    ....
    ....
    அதுக்கப்புறம் வேறெதும் படிக்கத் தேவையில்லை!
    நேதி நேதின்னு சொன்ன அப்புறம், வேறெது வேண்டும்?

    ReplyDelete
  20. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    நேதி நேதின்னு சொன்ன அப்புறம், வேறெது வேண்டும்?//

    :)
    அதுவும் இல்லை! இதுவும் இல்லை! என்ற பிறகு, அப்போ எது என்ற கேள்வி வந்தால், தத் த்வம் அசி வேண்டுமே! :))

    என்ன ஜீவா
    மொழியாக்கம் பற்றிச் சொல்லவே இல்லை? சொற்கள் சரி தானே? சந்தேகத்துக்கு இடமான பொருள் ஏதும் வரவில்லை தானே?

    ReplyDelete
  21. கோவியண்ணா,
    //பரமாத்மா பேரொளி என்றால் ஆன்மாவும் ஒளிதான். ஆன்மா பரமான்மாவில் இருந்து ஒளித்தன்மையில் மட்டுமே மாறுபட்டது.//
    ரொம்ம சரி, அந்த ஆன்மாவின் ஒளியை நம்மாலை உணர முடியுதா? இல்லை அல்லவா?. எதனால?
    நம்ம அறியாமையால. அந்த அறியாமை விலக, பல வழியில் யோகங்களை பல மகான்களும் விளக்கியிருக்காங்க. ஒரு ஊருக்கு போக பல வழிகள் இருக்கலாம். ஆனால், என்னோடு வழியிலை போனால்தான் போகமுடியும் என்று சொல்வது தலைக்கனம்!
    இந்த ஒரு சித்தாந்தம் தான் சரி என்று நம்புவதில் தவறில்லை. மற்றதெல்லாம் பொய் என்று பேசுபவன் முட்டாள். அப்படிப்பட்ட மூடத்தனத்தை சொல்லும் புத்தகங்களை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். முதலில் எந்த சித்தாந்தமும், அன்பை போதிக்கட்டும். சித்தாந்தங்களை, தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திய மடாதிபதிகள் போலி வாதாங்களில் மயங்கிட வேண்டாம்!
    இப்போ அத்வைதத்திற்கு வருவோம். இந்த பிரம்மம் அப்படீங்கறது - குணமில்லாத எங்கெங்கும் நிறைந்திருக்கிற, உண்மையான, ஆனந்த மயத்திற்கு பெயர். அப்படீன்னா - எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்று பொருள். - எல்லா சமயங்களையும், எல்லா சித்தாந்தங்களையும். இந்த ஒண்ணே போதும் என்று நினைக்கிறேன். மற்றவைகளை நீங்களே படித்துக் கொண்டிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  22. //என்ற பிறகு, அப்போ எது என்ற கேள்வி வந்தால், தத் த்வம் அசி வேண்டுமே! :))//
    அது தானா வரணும், சொல்லி அல்ல!
    :-)
    //மொழியாக்கம் பற்றிச் சொல்லவே இல்லை?//
    அதுக்குள்ளே மறுமொழிகளை படிச்சேனா....
    :-)

    ReplyDelete
  23. ////பரமாத்மா பேரொளி என்றால் ஆன்மாவும் ஒளிதான். ஆன்மா பரமான்மாவில் இருந்து ஒளித்தன்மையில் மட்டுமே மாறுபட்டது.//
    ஒளியை மட்டும் கவனிச்சேன், மாறுதலை இல்லை - அதனால திருத்தம்:
    ஒளித்தன்மையிலும் மாறுதல் இல்லை!
    :-)

    ReplyDelete
  24. //அந்த அறியாமை விலக, பல வழியில் யோகங்களை பல மகான்களும் விளக்கியிருக்காங்க. ஒரு ஊருக்கு போக பல வழிகள் இருக்கலாம். ஆனால், என்னோடு வழியிலை போனால்தான் போகமுடியும் என்று சொல்வது தலைக்கனம்! இந்த ஒரு சித்தாந்தம் தான் சரி என்று நம்புவதில் தவறில்லை. மற்றதெல்லாம் பொய் என்று பேசுபவன் முட்டாள்.//

    நான் அப்படி சொல்லவில்லை. கடவுளை அறியும் வழியை கடவுளே காட்டினால் மட்டுமே அது சரியான வழியாக இருக்கும். நான் எதையாவது வலியுறுத்த வேண்டுமென்றால் அதை எப்போதோ செய்திருப்பேன். இங்கே வெறும் கருத்து பரிமாற்றம் மட்டுமே நடக்கிறது.

    உங்களுக்கோ, எனக்கோ என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமென்பதை நீங்களோ நானோ தீர்மாணிக்க முடியாது என்பதை நான் அறிவேன். நான் எதையும் கொடுக்க முயல்வதோ, தடுக்க முயல்வதோ இல்லை.

    //அப்படிப்பட்ட மூடத்தனத்தை சொல்லும் புத்தகங்களை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்.//

    புத்தகங்களுக்கும் எனக்கும் தொலைவு மிகுதி, எதோ ஒரு சாதகன் அவன் அனுபவத்தை எழுதினால் அது பொதுவான ஒன்றாக இருக்கவே முடியாது.

    //முதலில் எந்த சித்தாந்தமும், அன்பை போதிக்கட்டும். //

    ஆன்மாவின் உண்மையான குணமே அமைதி, தூய்மை தான், இது இரண்டும் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி இருக்கும். இதை போதிக்காத எந்த சித்தாந்தத்தை நானும் பெரிதாக நினைப்பது இல்லை

    //சித்தாந்தங்களை, தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திய மடாதிபதிகள் போலி வாதாங்களில் மயங்கிட வேண்டாம்!//

    போலி மடாதிபதிகளை, சாமியார்களை நிறைய பார்த்திருக்கிறேன். எந்த ஒரு மனிதனையும் இறைவனாக நான் நினைப்பதே இல்லை.

    //இப்போ அத்வைதத்திற்கு வருவோம். இந்த பிரம்மம் அப்படீங்கறது - குணமில்லாத எங்கெங்கும் நிறைந்திருக்கிற, உண்மையான, ஆனந்த மயத்திற்கு பெயர். அப்படீன்னா - எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்று பொருள். - எல்லா சமயங்களையும், எல்லா சித்தாந்தங்களையும். இந்த ஒண்ணே போதும் என்று நினைக்கிறேன். மற்றவைகளை நீங்களே படித்துக் கொண்டிருக்கிறீர்கள்!//

    எங்கும் நிறைந்திருக்கிறது என்றால் எதுவும் தனித்து அல்லா, நீங்களும் நானும் ஏன் நாயும், சேற்றில் உறங்கும் பன்றியும், அதன் எச்சமும் கூட கடவுள் தான் என்று சொல்ல முடியும், இதில் எனக்கு ஒப்புதல் இல்லை. நீங்கள் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை.

    ஏன் அனைத்து மனிதர்களும் ஆன்மாக்களே என்று பார்த்தால் அன்பு வராதா ? அனைத்தும் ஒன்றே என்று கருதினால் தான் அன்பு வருமோ ?
    அத்வைத சித்தாந்தம் வெற்றிபெற்ற ஒன்று அல்ல, உலக அளவில் அதை பொதுவான ஒன்றாக கொண்டு செல்லவே முடியாது.

    இயக்கத்தையும் இறைவனையும் ஒன்றேன்றே கருதி அவையே பரப்பிரம்மம் அதில் நீ கலந்துவிடு அது முக்தி என்றால் அந்த முக்தியைக் காட்டும் பிறவி முக்தியை விட உயர்ந்ததென்றே சொல்ல முடியும். நீங்கள் சொல்லும் பிரம்மம் பிறவியை விட உயர்ந்ததாகத் தெரியவில்லை. எல்லாம் ஒன்றாக கலந்து உங்களையே அங்கு தொலைக்கிறீர்கள் என்றால் அது பேரானந்தம் என்று சொல்வதும் அதை உணர்வதும் யார், எல்லாம் ஒன்றாக அமிழ்ந்துவிட்ட பிறகு பேரனந்தம் எப்படி சாத்தியம் ?

    பிரம்மம் என்ற ஒன்று எப்போதும் இருந்ததே இல்லை, அவை சாதகனின் கற்பனை மட்டுமே. அப்படி ஒன்று இருந்தால் அதன் சித்தமாக செயல்படுவது எது ?

    முக்தி என்று சொல்லப்படுவதில்லாம் ஆன்மா இறப்பிற்கு பிறகு பிறப்பிற்கு முன் இருக்கும் உணர்வில்லா கால்கட்டம் மட்டுமே. வினையற்றவராக இருந்தால் அடுத்த பிறவியில் ஜீவன் முக்தராக பிறப்பர். அதாவது முக்திக்கு பிறகே ஜீவன் முக்தி, ஜீவன் முக்திக்கு பிறகு முக்தியல்ல.

    இதற்கெல்லாம் தரவுகள் காட்ட முடியாது.

    முன்பே கூட சொல்லி இருக்கிறேன், சங்கரர் காட்டிய வழி பொதுவானதாக இருந்திருந்தால் இராமனுஜருக்கொ வேறொரு வழி தேவைப்பட்டு இருக்காது.

    பெரிய மதங்களிலே கூட அப்படித்தான் கிறித்துவம் சிறந்த மதமாக இருந்திருந்தால் இஸ்லாமியர்களுக்கு வேறொரு மதம் தேவைப்பட்டு இருக்காது.

    ReplyDelete
  25. தமிழ் பொழி பெயர்ப்பு நன்றாக இருக்கிறது.சிறந்த தமிழ்ச் சான்றோர்களிடம் காண்பித்து, சந்தம் , யாப்பு, ஒலி இலக்கண மாத்திரைகளை சரி பார்த்து, புத்தக வெளியீடாகக் கொண்டு வரலாமே.அந்த அளவு, தரம் நிறைந்ததாக உங்கள் மொழி பெயர்ப்பு உள்ளது.

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    அது தானா வரணும், சொல்லி அல்ல!
    :-)//

    தத் த்வம் என்பதால் தானா வரணுமா? அதுவுஞ் சரி தான்! :)

    //அதுக்குள்ளே மறுமொழிகளை படிச்சேனா....:-)//

    பின்னூட்டக் கடையில் பதிவுக் கடையை மறந்துட்டீங்க! :)

    ReplyDelete
  27. //கோவி.கண்ணன் said...
    அத்வைத சித்தாந்தம் அனைத்தும் பிரம்மம், எல்லாமாக இருப்பது என்று சொல்வது ஒரு தத்துவம் மட்டுமே, உலகில் உள்ள எந்த மதத்திலும் இந்த கருத்து ஒட்டாது//

    ஒட்டணும்-னு அவசியமும் இல்லை!

    //அவை ஒரு சித்தாந்தம் என்று மட்டுமே கொள்க//

    அப்படித் தான் ஏற்கனவே கொண்டிருக்காங்க! நீங்க அட்வைஸ் பண்ணிப் புதுசா ஒன்னும் கொள்ளப் போறதில்லை-ண்ணா! :)

    பரம வைணவர்கள் சிலர் அத்வைதிகளாவும் இன்றும் இருக்காங்க! பெரும் சைவர்கள் துவைதமும் பின்பற்றி இருக்காங்க!
    த்வைதம், அத்வைதம், விசிட்டாத்வைதம் எல்லாம் Philosophy!
    சைவம், வைணவம், சமணம் எல்லாம் Faith!
    ரெண்டும் பலப்பல கட்டங்களில் சேரலாம்! சேராமலும் போகலாம்!

    //அனைத்து மதங்களிலுமே இறைவன் என்பவன் தனிப்பட்டவன் என்றே சொல்கிறார்கள், அதில் பரப்பிரம்மத்தை எங்கே கொண்டு ஒட்டவைப்பீர்கள் ?//

    அதான் நீங்களே சொல்லிட்டீங்களே!
    பரப்பிரம்மம்=தனிப்பட்டவன்!

    //தனிப்பட்ட வடிவாக இல்லாத ஒன்றுக்கு தனிப்பட்ட குணம் கற்பிப்பதும், அதற்கு உயர்வு கற்பிப்பதும் எவ்வாறு ?//

    தனிப்பட்ட நீர், ஆற்றில் ஒரு கலரும், கடலில் ஒரு கலரும், டம்ப்ளரில் ஒரு வடிவமும், பானையில் ஒரு வடிவமும் கொள்வது எவ்வாறு?

    //தேடலில் இறைவனை கண்டு கொள்ளாதவர்கள் முடிவில் தானே அது என்று துணிந்து சொன்னதே அத்வைத சித்தாந்ததம்//

    சூப்பரு! அப்புறம்?
    அரசியல் அறிக்கை மாதிரி இருக்கு! :)

    //இறைவன் என்ற ஒன்றே இல்லை, அனைத்தும் கற்பனையே மாயை என்றே சொல்வதாக பொருள்//

    அப்படிச் சொல்லலை! நீங்களா அடிச்சி விடாதீங்க!
    இறைவனை மாயை-ன்னு சொல்லலை! பரமாத்மாவையும் ஜீவாத்வாமையும் வேறாகக் காட்டும் அவித்யை தான் மாயை! அதான் சொல்லி இருக்கு!

    மாயை என்பது தனி விவாதம்! அதுக்கு அப்புறம் வரேன்!
    மொதல்ல வீட்டுப் பாடம் ஒழுங்கா பண்ணுங்க! அத்வைத/த்வைதம் இதன் ஆரம்பப் பாடத்தைக் குமரன் பதிவில் சொல்லி இருக்காரு! அங்கிட்டு ஒரு எட்டு போய் படிச்சிட்டு வாங்க!
    http://koodal1.blogspot.com/2007/07/blog-post_27.html

    இல்லீன்னா தம்பி சீவீஆரின் சிறுகதையைப் பொத்தாம் பொதுவாகப் படிச்சிட்டும் வரலாம்
    http://simplycvr.blogspot.com/2005/08/destination-unknown.html

    //அத்வைத சித்தாந்தம் எந்த வகையில் உயர்வு என்பதாக தாங்கள் கருதுகிறீர்கள். பெளத்த சூனிய வாதத்திற்கு மாற்று என்பதைத் தவிர்த்து அதில் பெரிதாக ஒன்று இல்லை என்றே நான் கருதுகிறேன்//

    உயர்வு-ன்னு யாருமே இங்கிட்டு சொல்லலையே!
    அத்வைதத்தில் ஒன்னும் இல்லையா? சூப்பர்! அதான் அத்வைதம்! ஒன்னுமே இல்லை! ஒன்னே ஒன்னு தான் இருக்கு! கரெக்டாப் புடிச்சிக்கிட்டீங்க! வாவ்! :)

    //ஏனெனில் இவை பெளதீகம். பிரிப்பது, சேர்ப்பது எல்லாம் பெளதீக விளக்கத்தில் கூறுகளே//

    பெளதீக விளக்கத்தைத் தத்துவத்துக்குச் சொல்லக் கூடாதா? பட்டா போட்டு மொத்தமா வாங்கிட்டீங்களா என்ன? யார் சொன்னா உங்களுக்கு அறிவியலை, ஆன்மீகத்துக்குக் காட்டக் கூடாது-ன்னு? அப்படிச் சொன்னா அது அறிவியலே இல்லை! அப்படிச் சொல்றவங்களுக்கு அறிவியலும் இல்லை! அறிவும் இல்லை! :))

    //வெறும் நூல்களை வைத்து ஆதாரம் சொன்னால் ஏற்பதற்கு இல்லை//

    நூல்களை வைத்து மட்டுமே இஅங்க யாருமே சொல்லலையே! சொல்லப் போனால் மூன்று தத்துவங்களுக்கும் நூலாதாரம் பெரிதாக ஒன்றுமே கிடையாது, சுருதி வாக்கியம் தவிர! எல்லாமே தத்துவம், வாதப் ப்ரதிவாதங்களாத் தான் இருக்கும்!

    அடிகள் சொன்னாரு! அய்யா சொன்னாரு! அந்த நூல் அப்படிச் சொல்லிச்சி! இந்த நூல் இப்படிச் சொல்லிச்சி-ன்னு எல்லாம் முத் தத்துவங்களில் கிடையாது!

    //'உள்ளமே கோவில், ஊனுடம்பே ஆலயம்' என்ற சித்தர்களின் சொல் வழக்கு, 'உலகே மாயம் வாழ்வே மாயம்' என்னும் மாயா வாதத்தைவிட உயர்ந்தது, தெளிவானது, நடைமுறைக்கும் எளிதானது//

    நல்லது! அதுவும் சரி தானே! அதை யாரும் மறுக்கலையே! அத்வைதம் உள்ளம் கோயில் இல்லை! என்று சொல்லவே இல்லையே!

    //சைவ சித்தாந்தங்களிலும் கூட பசு,பதி இரண்டாகத்தான் சொல்கின்றன//

    பசு, பதி, பாசம் = மூன்று!
    சித், அசித், ஈஸ்வரன் = மூன்று!
    பரமாத்மா, ஜீவாத்மா, மாயை = மூன்று!
    அதற்குள்ளாகவும்
    ஆணவம், கன்மம், மாயை = மூன்று!

    ReplyDelete
  28. //கோவி.கண்ணன் said...
    தந்தையும் மகனும் தோற்றத்தில் ஒத்தவராக இருந்தாலும் குண நலன்களில் மாறுபட்ட இருவர். இருவரும் ஒன்றல்ல.//

    சரி தான்! :)

    //பிறப்புக்கு அப்பாற்பட்டவருக்கும், பிறப்பு சக்கரத்தில் வருபவரும் ஒன்றா ?//

    தந்தையின் சொத்தும், (தந்தை முழுசாத் தந்து விட்ட) மகன் சொத்தும் வேறு வேறா? :)

    //கோவி யார்? - கோவியார் என்பது உடலின் பெயர் மட்டுமே, உள்ளுறையும் ஆன்மாவுக்கு பெயரில்லை//

    அப்பாடா! சரியாச் சொல்லி இருக்கீங்க!

    //பரமாத்மா பேரொளி என்றால் ஆன்மாவும் ஒளிதான். ஆன்மா பரமான்மாவில் இருந்து ஒளித்தன்மையில் மட்டுமே மாறுபட்டது//

    எப்படி மாறுபட்டது?
    பேரொளி உலகத்துக்கே வெளிச்சம்
    ஒளி ரூமுக்கு மட்டும் வெளிச்சம்
    அப்படியா? :)


    //சிவவடிவம் கண்களால் தரிசிக்க முடியாத ஒளிவடிவமே//

    ஆன்மாவுக்குக் கண் ஏது?

    //பொன்னிற மேனியான் என்று சொல்கிறார்களே, மேனியான் என்றால் உடல் என்ற பொருள் அல்ல, பொன்போன்று மின்னும் பேரொளி என்றும் சொல்லலாம்//

    நீங்க சொல்லலாம்!
    அவிங்க சொன்னது பொன்னார் மேனியனே தான்!
    அவிங்க ஒளியா இருக்கும் போது ஒளின்னும் மேனியா இருக்கும் போது மேனின்னும் சொல்லுறதுக்கு வெட்கப்படாதவர்கள்! :)

    //மாற்றம் என்பது மானிட தத்துவம் மட்டுமே. சிவத்துக்கு பொருந்தாது//

    அப்பாடா! இது சரியோ சரி!

    ReplyDelete
  29. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    கோவியண்ணா
    ....
    இந்த ஒரு சித்தாந்தம் தான் சரி என்று நம்புவதில் தவறில்லை. மற்றதெல்லாம் பொய் என்று பேசுபவன் முட்டாள். அப்படிப்பட்ட மூடத்தனத்தை சொல்லும் புத்தகங்களை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்//

    :)
    கையைக் குடுங்க ஜீவா!
    ஜீவா-வா இப்படி பளார்-ன்னு பேசுறது? வாவ்!

    //முதலில் எந்த சித்தாந்தமும், அன்பை போதிக்கட்டும். சித்தாந்தங்களை, தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திய மடாதிபதிகள் போலி வாதாங்களில் மயங்கிட வேண்டாம்!//

    சூப்பர்! அதே மடாதிபதிகள் காரியம் முடிஞ்சவுடன் வேறு ஒரு சித்தாந்தத்துக்குத் தாவுவதும் இருக்கு! :)

    //எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்று பொருள்//

    கட+உள்
    கடந்தும் இருக்கு! உள்ளும் இருக்கு!
    கடந்தும் உள்ளது! உள்ளும் கடப்பது!

    ReplyDelete
  30. //paravasthu said...
    தமிழ் பொழி பெயர்ப்பு நன்றாக இருக்கிறது//

    நன்றி சுந்தரண்ணா!

    //சிறந்த தமிழ்ச் சான்றோர்களிடம் காண்பித்து//

    அதான் உங்க கிட்டயும் ஜீவா கிட்டயும், குமரன் கிட்டயும் கேட்டேன்! :)

    //சந்தம் , யாப்பு, ஒலி இலக்கண மாத்திரைகளை சரி பார்த்து, புத்தக வெளியீடாகக் கொண்டு வரலாமே//

    ஆகா! அந்த அளவிலான தகுதியுடைய முயற்சி இல்லீங்கண்ணா இது! அடியேன் பால் உள்ள அன்பால் சொல்லும் நற்சொற்களுக்கு நன்றி-ன்னு மட்டும் சொல்லிக்கறேன்! :)

    ReplyDelete
  31. //கோவி.கண்ணன் said...
    உங்களுக்கோ, எனக்கோ என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமென்பதை நீங்களோ நானோ தீர்மாணிக்க முடியாது//

    அதாச்சும், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் தமிழ் மூதுரையை மீறுகிறீர்கள்! என்ன கொடுமை கோவி! :)

    //புத்தகங்களுக்கும் எனக்கும் தொலைவு மிகுதி//

    அது சரி, பதிவுக்கும் கோவிக்கும் தான் நெருக்கம்! :)

    //எந்த ஒரு மனிதனையும் இறைவனாக நான் நினைப்பதே இல்லை//

    அப்போ ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண மாட்டீங்க? என்ன கொடுமை கோவி? :)

    //ஏன் அனைத்து மனிதர்களும் ஆன்மாக்களே என்று பார்த்தால் அன்பு வராதா ? அனைத்தும் ஒன்றே என்று கருதினால் தான் அன்பு வருமோ ?//

    அட, நல்ல கேள்வி எல்லாம் கேக்கறீங்க! நெசமாலுமே நல்ல கேள்வி தான்!
    தனித்தனியான ஆத்மாக்களா பார்க்கும் போது அன்பு வராதா?
    எல்லாம் ஒரே பரமாத்மாவின் கூறுகளான ஆத்மாக்கள் என்று பார்க்கும் போது தான் அன்பு வருமா?

    உம்ம்ம்ம்! அன்பு என்பது குணம்!
    பரமாத்மா குணங்களைக் கடந்தது என்பது அத்வைத சித்தாந்தம்!
    அப்படியென்றால் பரமாத்வுக்கு அன்பு கிடையாதா? - இதை அன்பர்கள் யாராவது விளக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்!

    அத்வைத சித்தாந்தம் வெற்றிபெற்ற ஒன்று அல்ல, உலக அளவில் அதை பொதுவான ஒன்றாக கொண்டு செல்லவே முடியாது.

    //நீங்கள் சொல்லும் பிரம்மம் பிறவியை விட உயர்ந்ததாகத் தெரியவில்லை//

    ஜீவா அப்படிச் சொல்லவே இல்லையே!

    //அது பேரானந்தம் என்று சொல்வதும் அதை உணர்வதும் யார், எல்லாம் ஒன்றாக அமிழ்ந்துவிட்ட பிறகு பேரனந்தம் எப்படி சாத்தியம்//

    நீங்களே பதில் சொல்லிட்டீங்களே!
    அப்படியே ரிவர்ஸ்-ல படிங்க உங்க கேள்வியை!
    * பேரனந்தம் எப்படி சாத்தியம்?
    * சொல்வதும் அதை உணர்வதும் யார் - என்று இல்லாத போது, பேரானந்தம் என்ற பேர் கூட இல்லாதது தான் பேரானந்தம்! சரி தானே ஜீவா? :)

    ReplyDelete
  32. //பிரம்மம் என்ற ஒன்று எப்போதும் இருந்ததே இல்லை//

    Proof Please! :)
    அவிங்க இருக்கு-ன்னு சொன்னா சான்று கேட்பீங்க-ல்ல! அதே போல் நீங்க இல்லைன்னு சொன்னாலும் சான்று தரணும்! :)

    //முக்தி என்று சொல்லப்படுவதில்லாம் ஆன்மா இறப்பிற்கு பிறகு பிறப்பிற்கு முன் இருக்கும் உணர்வில்லா கால்கட்டம் மட்டுமே//

    முட்டிக்கிட்டு இருக்கீங்க!
    முக்திக்கிட்டு இல்லை! :)

    பிறப்பிறப்பின் சுழல் இல்லாமல் இருப்பதே முத்தி!
    பிறப்பிறப்பின் தன்மையைப் பூரணமாக "அறிந்து", பிறப்பிறப்பில்லாமல் இருப்பதே முத்தி!

    முத்தியடைந்தது மீண்டும் பிறக்குமா என்றால் அது தனி விவாதம்! இப்போதைக்கு:
    ஆம் பிறக்கலாம்! இறைவன் திருவுள்ளப்படி! அதனால் தான் சொன்னேன்,
    பிறப்பிறப்பின் தன்மையைப் பூரணமாக "அறிந்து" பிறப்பிறப்பில்லாமல் "இருப்பதே" முத்தி்!

    //அதாவது முக்திக்கு பிறகே ஜீவன் முக்தி, ஜீவன் முக்திக்கு பிறகு முக்தியல்ல//

    காமெடியும் அப்பப்ப பண்ணுறது ஒடம்புக்கு நல்லது தான்! ஆத்மாவுக்கு நல்லதா என்பதைக் குமரன் வந்து சொல்லட்டும்! :))

    //இதற்கெல்லாம் தரவுகள் காட்ட முடியாது//

    பயப்படாதீங்க-ண்ணோ! உங்களால் காட்ட முடியாது-ன்னு நல்லாவே தெரியும்! ஹா ஹா ஹா!

    சில பல சுவையான கேள்விகளை எல்லாம் சபையில் வைத்ததற்கு நன்றி-ண்ணா!

    //முன்பே கூட சொல்லி இருக்கிறேன், சங்கரர் காட்டிய வழி பொதுவானதாக இருந்திருந்தால் இராமனுஜருக்கொ வேறொரு வழி தேவைப்பட்டு இருக்காது//

    சங்கரர் தன் வழி தான் பொதுவழி-ன்னும் சொல்லலை!
    இராமானுசர் சங்கரர் வழி சுத்த பேத்தல்-ன்னும் சொல்லலை!
    இராமானுசர் சங்கரரைப் பாராட்டி, அவர் தத்துவங்களில் எங்கெல்லாம் தமக்கு உடன்பாடா இருக்கு-ன்னு சொன்னதைத் தனிப் பதிவா இடணும்-னு எனக்கு ரொம்ப நாளா ஆசை! :)

    நிலவில் எல்லாச் செயற்கைக் கோளும் இறங்குது! ஆனால் எல்லாமே ஒரே இடத்தில் இறங்குவதில்லை! ஆனாலும் நிலவில் தான் இறங்குது! :)

    சந்திராயன் அனுப்பும் படங்களுக்கும், அப்பல்லோ அனுப்பும் படங்களுக்கும் மாறுதல்கள் உண்டு! ஆனா அவை நிலவின் படங்கள் தான்! அதை விஞ்ஞானிகள் ஈசியாக் கண்டுபுடிச்சிருவாங்க!


    பத்திரிகையில் வந்த படத்தை மட்டுமே வச்சி, "அட, இது போய் நிலவா? இது எங்க கிராமம் வாழைப்பந்தல், தாமரைக்குளச் சேற்றில் எடுத்த மாதிரியே இருக்குப்பா"-ன்னும் சிலர் சொல்லிக்கலாம்! :)))

    ReplyDelete
  33. //"நான் இல்லை! நான் இல்லை!" என்று சங்கரர், குருவிடம் சொன்ன முதல் சுலோகம் இதுவே! ஆத்ம ஷட்கம்! நிர்வாண ஷட்கம் என்றும் பெயர்!//

    தச ஸ்லோகம் என்று சொல்லப்படும் 10 ஸ்லோகங்களையல்லவா பதிலாக சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கேன். இங்கே பாருங்கள்.

    இதை நிர்வான தசகம் என்றும் சொல்கிறார்கள். இங்கே பத்து ஸ்லோகங்களும் ஆங்கிலத்தில் இருக்கின்றன.

    ஆறு ஸ்லோகமா? பத்து ஸ்லோகமா?

    ReplyDelete
  34. //அதாச்சும், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் தமிழ் மூதுரையை மீறுகிறீர்கள்! என்ன கொடுமை கோவி! :) //

    விதண்டா வாதமா ? உங்களுக்கு கிடைப்பதை நான் தீர்மாணிக்க முடியாது என்ற பொருளில் தான் சொன்னேன். உங்களுக்கு கிடைப்பதை நீங்கள் தீர்மாணிக்க முடியாது என்ற பொருளில் அல்ல. எதையும் மறுக்க வேண்டும் என்ற பொருளிலேயே படித்தால் இப்படித்தான் ஆகும் போல :(

    //பரமாத்மா குணங்களைக் கடந்தது என்பது அத்வைத சித்தாந்தம்!
    //

    குணங்களைக் கடந்து ஏதுமற்ற நிலையாக சொல்லும் போது அதற்கு பரமாத்மா என்ற பெயர் கூட பொருத்தமற்றது தான். ஞானக் கடல், அன்புக் கடல் என குணங்களால் நிரம்பியவரே இறைவன் என்பார்கள்.


    //பயப்படாதீங்க-ண்ணோ! உங்களால் காட்ட முடியாது-ன்னு நல்லாவே தெரியும்! ஹா ஹா ஹா!//

    உங்களால் முடிவது அனைத்துமே எவரோ எழுதிவைத்த அவரது அனுபவம் மட்டும் தானே, அது வெறும் தரவு தான், உண்மை அல்ல.

    //சங்கரர் தன் வழி தான் பொதுவழி-ன்னும் சொல்லலை!
    இராமானுசர் சங்கரர் வழி சுத்த பேத்தல்-ன்னும் சொல்லலை!
    இராமானுசர் சங்கரரைப் பாராட்டி, அவர் தத்துவங்களில் எங்கெல்லாம் தமக்கு உடன்பாடா இருக்கு-ன்னு சன்னதைத் தனிப் பதிவா இடணும்-னு எனக்கு ரொம்ப நாளா ஆசை! :)//

    அப்படித்தான் கிறித்துவம், இஸ்லாம் கூட இங்கே பரவியது, வழிபாட்டு முறைகளில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம் அதுவும் இதுவும் ஒன்று தான் என்று காட்ட முடியும். ஆனால் அவை யாவும் வெளிப்பூச்சு தான். இராமானுஜர் சொன்னதை வலியுறுத்தி இருந்தாலோ, அதன் வழி நடந்திருந்தாலோ சைவ - வைணவ சண்டைகள் நடந்திருக்குமா ?

    சமணத்திற்கும் புத்தத்திற்கும் கூட பொதுக் கொள்கைகள் உண்டு, அதனால் இரு மதத்தினருக்குமே ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டதில்லை. மாறாக மதிப்பார்கள்.

    கடவுள் கொள்கைகள் எப்போதும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. 'புனிதம்' என்ற மயக்கத்தில் அனைத்தையும் சேர்த்துக் கொண்டே வந்ததால் இவை தீராத வழக்காகவே தொடரும்.

    துணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்கிறீர்களே, அவன் ஏன் ஹிரன்ய ஹசிபுவின் மனதில் இல்லை என்று கேட்டேன், அதற்கு அந்த கதையைத்தான் உங்களால் எழுத முடிந்தது,
    ஹிரன்ய கசிபுவை நாத்திகனாகச் சொல்ல முயன்றார்கள், ஆதாவது வைணவர்களைப் பொருத்து சிவ வழிபாடு நாத்திகம் ? - அது வேற அரசியல் :)

    அனைத்தும் ஒன்றானாலும் நீங்களும் நானும், நாயும் வேறுபடுவது எவ்வாறு என்று கேட்டால், தண்ணீரைச் சொல்கிறீர்கள், தண்ணீர் எதில் ஊற்றுகிறோமோ அதன் வடிவத்தைப் பெரும், எதில் கலக்குகிறோமோ அதன் நிறத்தை பெரும், இதுவும் உயிருள்ளவைகள் தங்களை தனித்தனியாக உணருவதும் ஒன்றா ?

    மாயாவதத்திற்கு (அத்வைதம்) சூனிய வாததிற்கும் என்ன வேறுபாடு என்று முதலில் சொல்லுங்கள். எனக்கு தெரிந்து ஒரே வேறுபாடு, உருவ வழிபாட்டை (அறு சமயங்கள்) முதல்படி என்று ஒட்டவைத்துக் கொண்டதைத் தவிர்த்து மாயாவாதத்திற்கு சூனியவாததிற்கும் யாதொரு வேறுபாடும் இல்லை, சூனியவாதத்தில் (புத்த சமயத்தில்) பின்னர் உருவ வழிபாடு நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    இறைவனின் திருவுள்ளத்தால் முக்தி பெற்றவர் பிறப்பெடுபவர் இருக்கலாம் என்கிறீர்கள், எந்த கர்மம் செய்யாதவரின் அதாவது முக்தி பெற்றவரின் பிறப்பை என்னவென்று சொல்வீர்கள். நான் முக்தி பெற்ற பிறப்பே ஜீவன் முக்தி என்று சொன்னால் அதில் என்ன முரண்பாடு உள்ளது ? கிருஷ்ணனின் பிறப்பு ஜீவன் முக்தி பெற்ற பிறப்பு இல்லையா ? அல்லது அவன் இறக்கும் முன்புதான் முக்தியே பெற்றானா ?

    முக்தி - ஜீவன் முக்தி பற்றி மேலும் பேச விரும்பவில்லை. யாரவது ஜீவன் முக்தராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவர் உண்டென்றால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

    //பிறப்பிறப்பின் சுழல் இல்லாமல் இருப்பதே முத்தி!
    பிறப்பிறப்பின் தன்மையைப் பூரணமாக "அறிந்து", பிறப்பிறப்பில்லாமல் இருப்பதே முத்தி! //

    செத்துப் போனவர் எவரும் எழுந்து வந்து பேசாதவரை இந்த கூற்று 'உண்மை' என வலியுறுத்தப்படும் :)

    //முத்தியடைந்தது மீண்டும் பிறக்குமா என்றால் அது தனி விவாதம்! இப்போதைக்கு:
    ஆம் பிறக்கலாம்!//

    கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே. ஒன்றை ஒன்று முரண்படும் பதில், பிறப்பற்ற தன்மையை உயர்வென்றென்னி அதற்கு முயற்சி செய்பவர்களுக்கு அல்வா கொடுப்பது போல் உள்ளது :)

    இந்த குழப்பமே வேண்டாமென்பதால் தானோ சிலர் 'பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்துவிட்டால் மறவாமை வேண்டும் என்கிறார்கள்'

    //பேரானந்தம் என்ற பேர் கூட இல்லாதது தான் பேரானந்தம்! சரி தானே ஜீவா? :)//

    பேரே இல்லாத ஆனந்தமா ?தன்னிலை மறந்து விழுந்து கிடக்கும் குடிகாரர்களுக்குக் கூட அது கிடைக்கிறது, அந்த ஆனந்தத்தில் முதலில் மிதந்து பின் மறக்கவே அவன் நாள் தோறும் குடிக்கிறான். என்ன ஒன்று குடிகாரனுக்கு சில மணித்துளிகள் மட்டுமே, அதுவா உயர்வு ?

    வரிக்கு வரி வாதம் செய்ய விரும்பவில்லை

    ReplyDelete
  35. //கோவி.கண்ணன் said...
    எதையும் மறுக்க வேண்டும் என்ற பொருளிலேயே படித்தால் இப்படித்தான் ஆகும் போல :(//

    கோவி அண்ணே,
    இதை அப்படியே வரிக்கு வரி, ஆத்மார்த்தமா, உங்களுக்குத் தானே சொல்லிக்கிட்டீங்க? :)

    அப்பாடா! இன்னிக்கு ராச்சாப்பாடு கூட வேணாம்! நல்லாத் தூக்கம் வரும்! உங்களுடன் வாதம் செய்ததற்கான பயனை அடைந்தேனே! அடைந்தேனே! :)

    ReplyDelete
  36. கண்டவர் விண்டிலர்

    விண்டவர் கண்டிலர்

    இதுதான் உண்மையா இருக்கணும்:-)

    ReplyDelete
  37. ந தர்ம நிஷ்டோஸ்மின்
    ந ஆத்மவேதி,
    அகிஞ்சன ஹ
    அனன்ய்ய கதிஹி//


    இதுதான் நினைவுக்கு வருகிறது.
    அபராத சக்கரவர்த்திகளுக்கு பிரம்மம் தான் வழி காட்ட வேண்டும்.
    வெகு நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ரவி. உங்களுக்கும் குமரனுக்கும் மனசார நன்றி சொல்லிக்கிறேன்

    ReplyDelete
  38. //Sridhar Narayanan said...
    தச ஸ்லோகம் என்று சொல்லப்படும் 10 ஸ்லோகங்களையல்லவா பதிலாக சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கேன். இங்கே பாருங்கள்//

    சங்கரன்-னாலே ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்வாங்களா அண்ணாச்சி? பேர் ராசியோ? :))

    //ஆறு ஸ்லோகமா? பத்து ஸ்லோகமா?//

    நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி:
    நமது மன்னர் ஸ்ரீதரப் பாண்டியனுக்கு ஆறா பத்தா என்பதில் பெருத்த ஜந்தேகம் ஏற்பட்டுள்ளது.
    அதை உடனடியாக, மண்டபத்திஒல் வேறு ஒருத்தர் எழுதிக் கொடுத்த பாட்டை வாங்கி வந்தாவது தீர்த்து வைப்போரை....


    தீர்ர்து வைப்போம்-ன்னு முரசு அறைஞ்சிடலாமா அண்ணாச்சி? :)

    ReplyDelete
  39. @ஸ்ரீதர் அண்ணாச்சி

    நிர்வாண தசகம் என்னும் பத்து சுலோகமும் சங்கரர் செய்தது தான்!
    நிர்வாண ஷட்கம் என்னும் ஆறு சுலோகமும் சங்கரர் செய்தது தான்!
    இரண்டுமே இந்த இல்லை-இல்லை கான்செப்ட்டைச் சொல்லுது!
    இது இல்லாம நிர்வாண மஞ்சரி-ன்னு வேற இருக்கு! அது 12

    ஸோ, எதை எதை, எப்போது செய்தார் என்பது தான் இப்போ பிரச்சனை! :)
    6, 10, 12 என்பதில் பிரச்சனையில்லை! :)
    ************************

    சங்கரர் வாழ்வியல் நிகழ்ச்சிக் குறிப்புகள் பற்றி, மற்றவர்கள் வேறு வேறு மாதிரி சொன்னால் பரவாயில்லை! ஆனால் அவர் மடங்களே மாறி மாறித் தான் சொல்கின்றன!

    நீங்க கொடுத்த சுட்டி, சிருங்கேரி மடம்! உதாரணத்துக்கு பாருங்க! அதில் சீடரான பின், ஒரு முறை நர்மதையில் வெள்ளத்தை அடக்கி, குகையில் குருவின் தவம் கலையாமல் பார்த்துக் கொண்டார் என்று சொல்கிறார்கள்!

    இது காஞ்சி மடம்:
    http://www.kamakoti.org/miscl/adi.html
    இதில் நர்மதையில் வெள்ளம் அடக்கியதைப் பார்த்த பின்னர் தான், சீடராகவே ஏற்றுக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள்!

    சிலர் இன்னும் மோசம். எட்டாம் நூற்றாண்டு சங்கரரை கி.மு என்று கூட வாதாடுவார்கள்! புத்த பகவானுக்கு முன்பே பிறந்திருந்தால் புத்த மத குருமார்களிடம் எப்படி வாதப் போர் செய்திருக்க முடியும்? :)

    ஓவராகப் புனிதப் பூச்சு செய்தால் இப்படித் தான் போய் முடியும்! காரைக்கால் அம்மையார் பதிவிலும் இதைத் தான் சொல்லியிருந்தேன்!
    ************************

    பதிவிலும் சொல்லி இருக்கேன் பாருங்கள். நர்மதைக் கரையில் (அ) பத்ரி மலையில் தான் முதல் சந்திப்பு என்று! அறுதியாகச் சொல்ல முடியவில்லை!

    சிலர் நிர்வாண ஷட்கத்தையே, தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், தன் உபதேசங்களின் தொகுப்பாய்த் தந்ததாகச் சொல்கிறார்கள்!
    இன்னும் சிலர் சிவோஹம் என்று வாயளவில் உச்சரித்த சீடனுக்கு, காய்ச்சிய இரும்பைக் குடித்துக் காட்டி, இல்லாத ஒன்றுக்கு ஒன்றுமே ஆகாது என்று சொன்னதாகவும் பேசுகிறார்கள்! :)

    டீச்சர் சொன்ன கருத்து, சங்கரர் வாழ்க்கை வரலாறுக்கு ரொம்பவே பொருந்தும் போல!
    நாம் ஷட்கத்தின் கருத்தை மட்டும் இப்போதைக்கு கொள்வோம்! :)

    ReplyDelete
  40. @ஸ்ரீதர் அண்ணாச்சி
    நான் ஏன் நிர்வாண ஷட்கத்தை அறிமுகப் பாடலாகக் கருதினேன்?

    சிம்பிள்! ஆறே பாட்டு என்பது தான் காரணம்!
    ஆரம்ப மாணவர் அல்லவா சங்கரர்! இது வரை மனதில் செய்து வைத்துள்ள ஞானத்தை முதன் முதலில் குருவிடம் சொல்கிறார். அதான் ஆறே ஆறு!


    பின்னர் குருவிடம் இன்னும் தெரிந்து கொண்ட பின் பத்து!
    அதன் பின்னர் பல்வேறு சமய வல்லுனர்களுடன் உரையாடல் - பன்னிரண்டு! இப்படிக் கருத்துக்கள் கூடிப் போகின்றன! பாட்டாகவும் எழுகின்றன! சரி தானே? என்ன நினைக்கறீங்க?

    மேலும் அதிகம் சார்பு இல்லாமல், வரலாற்றுப் பூர்வமாய், கொஞ்சம் அறிவியல் பூர்வமாய் எழுதப்பட்டவை இரண்டு!
    சுவாமி சிவானந்தர்:
    http://www.dlshq.org/saints/sankara.htm
    சுவாமி தப்ஸ்யானந்தர் - இவர் சங்கர விஜயத்தை விடப் பெரிதாக நுணுக்கி ஆய்ந்து நூல் செய்துள்ளார்!

    இவர்கள் இருவரும்,
    பத்ரிநாத்தில் முதல் சந்திப்பு! ஆறு சுலோகம் என்று தான் ஆராய்ச்சி உரையாகச் சொல்லியுள்ளார்கள்! அதான் அடியேனும் அப்படியே சொன்னேன்!
    **********************

    சங்கர விஜயங்கள் பலப்பல எழுதப்பட்டுள்ளன.
    மாதவீய சங்கர விஜயம் (மாதவிப் பந்தல் அல்ல :)
    அனந்த கிரீய, சித்விலாசீய, அனாந்தானந்த, கேரள சங்கர விஜயங்கள் என்று பலப்பல.

    இராமாயணமாச்சும் காவியம்! ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு மாதிரி எழுதலாம்!
    சங்கர விஜயம் வரலாறு! இதிலும் கூட இப்படி! இப்படி விதம் விதமான வரலாறு வேறு எந்த ஆசாரியருக்கும் இருக்குமா என்பது சந்தேகமே!

    இதில் இருந்தே சங்கரரின் பெருமை தெரிகிறது அல்லவா? அவரவர் சங்கரரைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளத் துடித்ததையும் ஒருவாறு யூகிக்கலாம்! :)

    ReplyDelete
  41. //துளசி கோபால் said...
    கண்டவர் விண்டிலர்
    விண்டவர் கண்டிலர்
    இதுதான் உண்மையா இருக்கணும்:-)//

    சூப்பராச் சொன்னீங்க டீச்சர்! :)
    நீங்க பயணக் கட்டுரைப் பதிவு போடுறா மாதிரி, சங்கரருக்கு அப்பவே யாராச்சும் எழுதி இருந்தாங்கன்னா, இந்தப் பிரச்சனையே வந்திருக்காது! :)

    ReplyDelete
  42. //வல்லிசிம்ஹன் said...
    அனன்ய்ய கதிஹி//

    சரணம் சரணம் ப்ரபத்யே-ன்னு சொல்லுறா மாதிரி இருக்கு வல்லீம்மா! :)

    //அபராத சக்கரவர்த்திகளுக்கு பிரம்மம் தான் வழி காட்ட வேண்டும்//

    பிரம்மனி மானச சஞ்சரரே!

    //வெகு நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ரவி. உங்களுக்கும் குமரனுக்கும் மனசார நன்றி சொல்லிக்கிறேன்//

    அடியேனும் குமரனும் தங்களிடம் ஆசி வேண்டி நிற்கிறோம்!

    ReplyDelete
  43. @கோவி
    //துணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்கிறீர்களே, அவன் ஏன் ஹிரன்ய ஹசிபுவின் மனதில் இல்லை என்று கேட்டேன்//

    பிரகலாதனும் தந்தையிடம் சொல்கிறான்:
    உங்கள் மனத்திலும் இருக்கிறான் தந்தையே! சர்வ அந்தர் ஆத்மனே! உள்ளத்தில் உள்ளான் என்று ஓர்!

    உங்களுக்கு இரணியனைச் சங்காரம் செய்ததால், உடனே மனத்தில் இல்லை-ன்னு தோன்றுகிறது!
    ஆனால் ஈஸ்வரனின் மனதில் இரணியன், புருவ மத்தியில்! :)

    பாலாஜிக்குப் பதில் சொல்லி இருந்தேனே சரணாகதிப் பதிவில்? பாலாஜியும் மிக மகிழ்ச்சியானாரே விளக்கத்தில்!

    முக்தியடைந்த ஜய விஜயனும் கூட, இறைவன் திருவுள்ளக் குறிப்பின் படி, மீண்டும் பிறந்தார்கள்!
    முன்பு செய்த சரணாகதி, இப்போது தீயவராய் இருந்த போதும் கைகொடுத்தது! அதனால் தான் பிரகலாதனை விட அதிகமாக அரி நாமத்தைச் சொன்னான் இரணியன்!

    அந்தப் பழைய சரணாகதி வாசனை மட்டும் அகலாமல், ஹரி நாம ஸ்மரணத்தை அவனுக்கு அளித்து, அவன் ஆழ்மனத்திலும் அது இருந்தது! ஆணவம் என்ற திரை மறைத்ததால் வெறுமனே வாதாடிக் கொண்டே இருந்தான்! :))
    தான் இருந்த மனத்தில், தானே திரை விலக்கி, அவனை மீண்டும் ஜய விஜயனாகவே ஆக்கிக் கொண்டார்!

    ஆக, ஹிரண்ய ஹசிபுவின் மனதிலும் பரம்பொருள் இருந்தது என்பதே உண்மை!
    ஆனால் மனம் சொன்னால் உடனே நாம் கேட்டு விடுகிறோமா என்ன? அதே போல இரணியன் சுதந்திரன்! மனம் சொன்னதைக் கேட்காமல், தான் வெறும் உடல் மட்டுமே என்று ஆடிக் கொண்டிருந்தான்!

    உடல் செய்த வினைக்கு, உடல் ஓய்ந்தது!
    இறை உள்ள மனத்தில், இறை புரிந்தது!
    -புரிந்ததா? உங்களுக்கு?? :)


    ஏன் கொன்றது-ன்னு, ஏன் கொன்றது? அதான் மனத்தில் இருக்கே! ஏன் கொன்றது-ன்னு திருப்பித் திருப்பிக் கேட்டுக்கிட்டு தான் இருக்கப் போறீங்க! :)

    நீங்க சொன்னதே தான்! எதையும் மறுக்க வேண்டும் என்ற பொருளிலேயே படித்தால் இப்படித்தான் ஆகும் போல :)

    நீங்க இப்பல்லாம் புதுசா சொல்ல ஆரம்பித்து இருக்குற சிவம், சிவம் என்ற கொள்கையிடமே கேட்டுப் பாருங்கள்! விடை கிடைக்கும்!

    ReplyDelete
  44. Okay, last one for govi, for this post :)
    பல மரமும் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான் :)

    //ஹிரன்ய கசிபுவை நாத்திகனாகச் சொல்ல முயன்றார்கள், ஆதாவது வைணவர்களைப் பொருத்து சிவ வழிபாடு நாத்திகம் ? - அது வேற அரசியல் :)//

    இரணியகசிபு சிவ பக்தனா? எந்த மாங்கா சொன்னான்? அவன் சிவனை வழிபட்டதால் அவனை நாத்திகன்-ன்னு சொல்லிட்டாங்களா?

    அப்பல்லாம் கோவி கண்ணன் இல்லை! அதுனால இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு அளந்து விட யாருக்கும் தெரியாது! :)

    இரணியன் சிவ பக்தன்! சிவ அன்பு பூண்டவன்-ன்னு ஒரு தரவு காட்டுங்க பார்ப்போம்! நீங்க நுனிப்புல் தான் மேஞ்சிக்கிட்டே இருக்கப் போறீங்க! அதான் கவலையா இருக்கு! ஆனால் அதே சமயம் தீதும் நன்றும் பிறர் தர வாரா!

    //தண்ணீர்...இதுவும் உயிருள்ளவைகள் தங்களை தனித்தனியாக உணருவதும் ஒன்றா ?//

    தண்ணீருக்கு அணுக்கள் இருக்கா?
    உயிர்களுக்கும் அணுக்கள் இருக்கா?
    அணுக்களுக்கு ஆற்றல் இருக்கா?
    அப்ப்புறம் ஏன் ஒப்புமை காட்டக் கூடாது?

    //மாயாவதத்திற்கு (அத்வைதம்) சூனிய வாததிற்கும் என்ன வேறுபாடு என்று முதலில் சொல்லுங்கள்//

    சொல்ல முடியாது!
    பதிவின் நோக்கம் அதுவல்ல!

    //இறைவனின் திருவுள்ளத்தால் முக்தி பெற்றவர் பிறப்பெடுபவர் இருக்கலாம் என்கிறீர்கள், எந்த கர்மம் செய்யாதவரின் அதாவது முக்தி பெற்றவரின் பிறப்பை என்னவென்று சொல்வீர்கள்//

    உங்களுக்குத் தமிழ் தெரியும் தானே?
    கேள்வியிலேயே பதில் சொல்லி இருக்கீங்க பாருங்க! :)

    //நான் முக்தி பெற்ற பிறப்பே ஜீவன் முக்தி என்று சொன்னால் அதில் என்ன முரண்பாடு உள்ளது ?//

    எட்டுக்கு அடுத்த பெரிய நம்பர் ஏழு!
    http://jeevagv.blogspot.com/2008/11/blog-post_17.html

    //கிருஷ்ணனின் பிறப்பு ஜீவன் முக்தி பெற்ற பிறப்பு இல்லையா ? அல்லது அவன் இறக்கும் முன்புதான் முக்தியே பெற்றானா ?
    முக்தி - ஜீவன் முக்தி பற்றி மேலும் பேச விரும்பவில்லை//

    http://jeevagv.blogspot.com/2008/11/blog-post_14.html

    //யாரவது ஜீவன் முக்தராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவர் உண்டென்றால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்//

    கோவி கண்ணன்!

    //செத்துப் போனவர் எவரும் எழுந்து வந்து பேசாதவரை இந்த கூற்று 'உண்மை' என வலியுறுத்தப்படும் :)//

    செத்துப் போனவர் எவரும் எழுந்து வந்து பேசாதவரை இந்த கூற்று 'பொய்' என்றும் சிலரால் ஜல்லி அடிக்கப்படும் :)

    //இந்த குழப்பமே வேண்டாமென்பதால் தானோ சிலர் 'பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்துவிட்டால் மறவாமை வேண்டும் என்கிறார்கள்'//

    பிறவாமை கேட்டவங்க, அப்பறம் எதுக்கு டவுட் பட்டு மறவாமை கேக்கணும்? அதான் காரணம்! :)

    //பேரே இல்லாத ஆனந்தமா ?//

    பேரே இல்லாத சிவம் ன்னு பேசத் தெரியும் போது, பேரே இல்லாத ஆனந்தமும் தெரியணும்! :)
    பேரே இல்லாத சிவம்-ன்னு பேருக்குப் பேசினால்? ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை! :)

    ReplyDelete
  45. இரணியன் சிவ பக்தன்! சிவ அன்பு பூண்டவன்-ன்னு ஒரு தரவு காட்டுங்க பார்ப்போம்!

    http://www.samasya.com/religion/vishnu/dasavatara/narasimhavataram.html

    இந்த படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்க இரணியின் நாமம் போட்டு இருக்கானான்னு எனக்கு தெரியனும், அவன் நாத்திகனாக இருந்தால் சமயச்சின்னம் எதுவுமே இல்லாமல் அல்லவா இருக்கனும் ? (அந்த படம் நான் வரையல)

    சரி உங்க வழிக்கே வருகிறேன், இரணியன், இராவணன் இருவரும் வேறு வேறு பிறவிகளில் வரும் ஒருவர் தானே, அவர்களை கொல்பவரும் கிருஷ்ணர் தானே. இராவணன் சிவ பக்தன் என்பதை மறுக்க மாட்டீர்கள். :)

    *****

    சில படங்களில் பிரம்மனுக்கு சிவச் சின்னம் தான் நெற்றியில் இருக்கு அதையும் நான் சொல்லவில்லை.

    http://www.brahminworld.com/brahma.jpg

    http://www.iloveulove.com/images/brahma-lg1.jpg

    http://lh4.ggpht.com/_VzyqniMCeAU/Ry5wDKWBCCI/AAAAAAAAAv8/MkVfSY45SuE/Brahma-0.jpg

    http://www.geocities.com/jaffor/articles/aa/ha1.JPG

    படம் வரைபவர்களுக்கு நெற்றியில் வரையும் போது மட்டும் குழப்பம் வந்துவிடுமா ?

    பலப்படங்களில் பிரம்மனுக்கு நாமம் இருக்கிறது, ஆனால் சில படங்களில் பட்டையும் இருப்பது ஏன் ?

    ReplyDelete
  46. பதிவை படிச்சிட்டேன்....பின்னூட்டம் பிறகு வருகிறேன் ;)

    ReplyDelete
  47. //கோவி.கண்ணன் said...
    இந்த படத்தைப் பார்த்துவிட்டு சொல்லுங்க இரணியின் நாமம் போட்டு இருக்கானான்னு எனக்கு தெரியனும், அவன் நாத்திகனாக இருந்தால் சமயச்சின்னம் எதுவுமே இல்லாமல் அல்லவா இருக்கனும் ?//

    கோவி அண்ணே, காலைக் காட்டுங்க!
    @குமரன், இப்போ தெரியுதுங்களா கோவி நாளொரு வெடியும் பொழுதொரு புஸ்வாணமுமா எப்படி வளைய வராரு-ன்னு? இப்படிப் பிட்டு பிட்டா படம் பாத்து தான்! :))

    @கோவி அண்ணே!
    வேணும்னே காமெடி பண்றீங்களா? இது மாதிரி ஆயிரம் படம் நான் காட்டட்டுமா? வள்ளுவருக்கு விபூதி போட்டு, புத்தருக்கு பூணூல் போட்டு?
    ஹா ஹா ஹா!

    //இரணியன், இராவணன் இருவரும் வேறு வேறு பிறவிகளில் வரும் ஒருவர் தானே, அவர்களை கொல்பவரும் கிருஷ்ணர் தானே//

    உங்களுக்கு கிருஷ்ண பித்து பிடிச்சிருக்கா என்ன? கம்சனைப் போல, பார்க்கும் இடமெல்லாம் கிருஷ்ணராவே தெரியராரே! :)

    கிருஷ்ணர் ஒரு அவதாரம்!
    இரணியாட்சன்-வராகர்
    இரணியகசிபு-நரசிம்மர்
    இராவண/கும்பகர்ணர்-இராமர்
    சிசுபாலன்/தந்தவக்ரன்-கிருஷ்ணர்

    போதுமா? இனிமேல் நாராயணன் (அ) விஷ்ணு-ன்னு தெளிவா பேசுங்க! கிருஷ்ணரைப் புடிச்சிக்கிட்டு தான், அவருக்கு இறப்பு உண்டே, அவர் ஜீவன் முக்தரா, அவர் பரம்பொருள் இல்லை - அப்படி இப்படி-ன்னு இம்புட்டு நேரம் ஜல்லி அடிச்சீங்களா? OMG!

    //இராவணன் சிவ பக்தன் என்பதை மறுக்க மாட்டீர்கள். :)//

    மறுப்பேன்! இராவணன் சிவ பக்தனா இருந்திருந்தா நாயன்மார் லிஸ்ட்டில் சேர்த்து இருப்பாங்களே!

    இராவணன் சிவ பக்தன் அல்லன்! சிவ பக்தன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைபவன்! ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு!

    சிவபக்தன், கையிலை மலையை வணங்குவானே அன்றி, எட்டு உதைத்து பெயர்த்து எடுக்க மாட்டான்! "சிவனா, அவன் யார் என்னை என் வழியில் தடுக்க?"-ன்னு கேக்க மாட்டான்!

    உண்மையான சிவபக்தன் சிவனடியார்களக் கெட்ட வார்த்தைகளால் நிந்திக்க மாட்டான்! நந்தியம்பெருமானைத் தகாத வார்த்தை சொல்ல மாட்டான்! இன்னும் எவ்ளோ இருக்கு!

    இராவணனைச் சிவபக்தன், ஆகா ஓகோ என்று கிளப்பி விட்டது, இருபதாம் நூற்றாண்டில் தான்! பகுத்தறிவுப் பாசறைக்கும் இதில் பங்குண்டு (இராவணன் பிராமண வகுப்பினன் என்று தெரிந்தும் :))

    ஸோ கால்டு சிவ-பக்த இராவணனைத் திட்டித் திட்டித் தான் சம்பந்தர் பாடுவார், ஒவ்வொரு எட்டாம் பதிகத்திலும்! இராவண கர்வ பங்க வாகனமாகத் தான் அவனைப் பயன்படுத்தி வருகின்றனர் சிவாலயங்களில்! அவன் ஆழம் அறியாமல் காலை விட்டு, மலியின் கீழ் மாட்டி முழித்த போது பாடியது தான் சிவ தாண்டவ ஸ்தோத்திரம்! அதில் கூட தற்பெருமைகள் ஜாஸ்தி! அந்தத் தோத்திரத்தை ஆலய வழிபாட்டிலோ, பக்தர்கள் வீட்டிலோ கூட யாரும் சொல்வதில்லை! :))

    ReplyDelete
  48. //பலப்படங்களில் பிரம்மனுக்கு நாமம் இருக்கிறது, ஆனால் சில படங்களில் பட்டையும் இருப்பது ஏன் ?//

    அண்ணே
    கெஞ்சிக் கேட்டுக்கறேன்! காமெடி போதும்-ண்ணே! :)

    ReplyDelete
  49. //கோபிநாத் said...
    பதிவை படிச்சிட்டேன்....பின்னூட்டம் பிறகு வருகிறேன் ;)//

    வா மாப்பி!
    பின்னூட்டம் படிச்சிட்டு தானே வழக்கமாப் பதிவைப் படிப்ப? :)

    ReplyDelete
  50. //@கோவி அண்ணே!
    வேணும்னே காமெடி பண்றீங்களா? இது மாதிரி ஆயிரம் படம் நான் காட்டட்டுமா? வள்ளுவருக்கு விபூதி போட்டு, புத்தருக்கு பூணூல் போட்டு?
    ஹா ஹா ஹா!//

    கடைசி அஸ்திரம் ! :)

    உங்களுக்கு தசவதாரக் கதைகளில் நம்பிக்கை இருக்கும், குறிப்பாக கிருஷ்ணனின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தில் நம்பிக்கை இருக்கும். கல்கி அவதாரத்தில் கல்கியின் கையில் இருக்கும் வாள் எப்படி, யார் கொடுக்கிறார் என்பதையும் தெரிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

    நாராயணா நாராயணா !

    ReplyDelete
  51. மொழிபெயர்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP