Saturday, February 28, 2009

தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்!

மக்களே! முதலில் நன்றி! - வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும், தமிழ்மணத்துக்கும்!
* ஆன்மீகம்-சுயதேடல் என்னும் பிரிவில் முதல் விருது தந்தமைக்கு!
** சமூக விமர்சனங்கள் என்னும் பிரிவில் இரண்டாம் விருது தந்தமைக்கு!!


உடனே நன்றி சொல்லிப் பதிவு போட்டாக்கா, ரெண்டே வரியில் முடிஞ்சிருமே! அது பந்தலுக்கு அழகா? அப்படி ஒரு சுருக்கமான பதிவு, பந்தலில் வந்ததா சரித்திரமே கிடையாதே! கொறைஞ்சது ஒரு பக்கமாச்சும் நீள வேணமா? :)

தனி மடலிலும், தொலைபேசியும் வாழ்த்து சொன்ன அன்பர்கள் எல்லாருக்கும் நன்றி!
இன்னும் இரண்டு பதிவுகளை, முதல் ஐந்தில் வைத்தமைக்கும் கூடுதல் நன்றி!
இந்த விருதுகளைப் பெற்றுத் தந்த "அந்த" இரண்டு இடுகைகள்! - அதைப் பற்றிச் சில உண்மைகளை உங்களோட பேசணும்-ன்னு நினைச்சேன்! அதான் இரண்டு நாள் கழிச்சி.....மெள்ளமா.....இந்த நன்றிப் பதிவு!

சரி, இந்த இரண்டு விருதுகளையும் யாருக்குக் காணிக்கை ஆக்கலாம்?
* ஈழத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக, ஈழத்தின் போர் முனையில் சிக்கித் தவிக்கும் பிஞ்சுக் குழந்தைகளுக்கும்,
** இன்னும் புலம் பெயராது, எதிர்காலம் என்றால் என்னவென்றே தெரியாது இருக்கும் ஈழத்து இளைஞர்களுக்கும் இதைக் காணிக்கை ஆக்குகிறேன்!

தமிழ்மணம் விருதுகள் 2008! இதில் வென்றவர்க்கும், உடன் நின்றவர்க்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
* நான்கு சதம் அடித்த டாக்டர் ப்ரூனோவுக்கும்
* என்னுடன் இரட்டைச் சதம் அடித்த தோழி. லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்!
உண்மைத் தமிழன் அண்ணாச்சி, ராயல் ராம் மற்றும் டுபுக்கு அண்ணன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

இப்போ மேட்டருக்கு வருவோம்!


*** ஆன்மீகம் பிரிவில் முதல் விருதைப் பெற்ற காரைக்கால் அம்மையார் பதிவு, பல எதிர்ப் பதிவுகளைச் சம்பாதித்துக் கொண்ட பதிவு!

பெரியவர்கள் கீதாம்மா, திவா சார், ஓகை ஐயா போன்ற சில மூத்தோர்களின் எதிர்ப்பையும், ஆன்மீகப் பதிவர்கள் வேறு சிலரின் கோபத்தையும் பெற்றுக் கொண்ட ஒரு "துரதிருஷ்டப்" பதிவு-ன்னே கூட அதைச் சொல்லலாம்! :(

*** சமூகம் பிரிவில் இரண்டாவது விருதைப் பெற்ற கோயில் உண்டியல் பதிவும், பல எதிர்ப் பதிவுகளைச் சம்பாதித்துக் கொண்ட பதிவு தான்! :)

ஆனால் இங்கு சுவாரஸ்யம்! வவ்வால் போன்ற நுட்பமான வாசக அறிஞர்கள், மற்றும் அன்புடன் பாலா போன்ற நண்பர்கள், எதிர்ப் பதிவுகள் போட்ட சுவையான பதிவுச் சங்கிலிகள்! :)

இதில் இருந்து மாரல் ஆஃப் தி ஸ்டோரி ஏதாச்சும் உங்களுக்குப் புரியுதா மக்களே? = விருது வாங்கணும்-ன்னா மொதல்ல எதிர்ப் பதிவு வாங்கோணும்! :))காரைக்கால் அம்மையார் பற்றிய பதிவு - ஞாபகம் இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! :)
இதோ: தேவாரம் பாடிய “ஒரே” பெண் - Icon Poetry!

இனி, உங்களிடம் மனம் விட்டுப் பேச நினைத்த சில உண்மைகள்!

பதிவின் மையக் கருத்து: பல துறைகளைப் போல ஆன்மிகமும் ஒரு துறை தான்! மற்றது புறத் துறை-ன்னா, ஆன்மீகம் அகத் துறை!
பிற துறைகளைப் போலவே, இதிலும் பெண்கள் வெகு "இயல்பாக" இருக்க முடியும்! அவர்களின் "பெண் தன்மை", அருள் தன்மையால் பாதிக்கப்படவே படாது! - இவ்ளோ தான் மையக் கருத்து!

வெள்ளைக்காரர்கள் D.H.Lawrence முதலானோர் "கண்டுபிடித்த" Icon Poetry என்னும் குறியீட்டுக் கவிதையை,
ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே செய்து காட்டிய "ஒரே ஆன்மீகப் பதிவர்-பெண் பதிவர்" = கவிஞர். புனிதவதி என்னும் பேதைப் பெண்!
பின்னாளில் காரைக்கால் அம்மையார் என்னும் நாயன்மார்-சாதனையாளர் ஆனார்!

இது போன்ற குறியீட்டுச் சிந்தனை, அப்போது எந்த ஒரு ஆன்மீகத் தலைவருக்கோ, இலக்கியக் கவிஞருக்கோ, மன்னருக்கோ கூட வரவில்லை!
இவளுக்கு மட்டுமே வந்தது!
ஆனால் புனிதவதி அதற்காக கொடுத்த விலை மிக மிகப் பெரிது!


சந்தோஷமான குடும்ப வாழ்க்கையைப் பறி கொடுத்ததோடு மட்டுமில்லாமல், "பெண் தன்மை" வாழ்க்கையையும் சேர்த்தே பறி கொடுத்து விட்டு, பேய்-மகளிர் என்று மாறினாள்!
அகோரி, ஆர்யா என்றெல்லாம் இன்னிக்கி "நான் கடவுள்" படத்தில் பேசுகிறோமே...இருபத்தியோரு வயசுப் பெண், சுடுகாட்டில் வாழ்வதை, சும்மா கற்பனை பண்ணிப் பாருங்கள்!

அவள் கணவன் மேல் வைத்த முழுமையான பேதை அன்பு, "ஆன்மீகம்" என்ற பெயரால் தூக்கி எறியப்பட்டது!
கணவன் அவள் பக்தியைப் "போற்றுவதாக"ச் சொல்லிக் கொண்டு, ஆனால் யாருக்கும் தெரியாமல் அகன்று கொண்டான்!
ஆள் வைத்துத் தேடிய போது, இன்னொருத்தியை மணம் முடித்துக் கூட்டி வந்தான்! ஊரும் அவன் செய்தது சரியே என்றது!
கணவனைப் பிரிந்த நிலையில், அவளுக்கு எந்த உதவியும் யாரும் செய்து தரவில்லை, கணவன் உட்பட! சுடுகாட்டில் வாய்க்கரிசி பொறுக்கித் தின்று, கடைசியில் (சிவபெருமான் அருளால்?) பேய் மகளிர் ஆனாள்! :(இன்றும் காரைக்கால் மாங்கனி விழாவில், அம்மையாருக்கு விழா எடுப்பதாகச் சொல்லி, சைவக் கொழுந்தான பரமதத்தன் என்னும் அந்தக் கணவனாருக்கு பல்லக்கு எடுத்து, கடற்கரை விழா எல்லாம் நடத்துகிறார்கள்!
இந்தக் காலத்திலும் இது தேவையா என்ற ஒரு கேள்வியும் பதிவில் கூடவே வைத்திருந்தேன்! அதுவும் சேர்ந்து குப்பென்று பிடித்துக் கொண்டது! :)

வழக்கமான ஆயுதங்கள்:
* சைவத்தைத் தாழ்த்துகிறாய், வைணவத்தை ஏற்றுகிறாய்!
* சமூக விடயங்களை ஆன்மீகத்தில் கலக்குகிறாய்!
* லோக்கலாக, ஜனரஞ்சகமாக எழுதிப் புனிதத் தன்மையைக் குறைக்கின்றாய்! - என்பது வழக்கம் தான்! :))

ஆனால் இப்போது புதிதாகச் சில ஆயுதங்களும் சேர்ந்து கொண்டன:
* நீலிக் கண்ணீர் வடிக்கிறாய்!
* அடியவர்கள் கதையைச் சினிமாத்தனமாக எழுதலாமா?
* போலியான தன்னடக்கம்! 'தத்தா நமர்'-இல் வருவது போல், சிவனடியார் வேடம் போட்டுக் கொண்டு பொய்யான தெளிவு! - இப்படியும் சில கணைகள்! :))))

ஆனால் அத்தனையும் மீறி, அடியேனைத் தனிப்பட்ட முறையில் பாதித்த பதிவு-ன்னா.......இது வரை..... இந்த ஒரு பதிவு மட்டும் தான்!
//அவளை" ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற அவனின் உண்மையான பயமும், தயக்கமுமே காரணம்// என்று பரமதத்தனுக்காக நம் நண்பர்கள் வலிந்து வலிந்து வாதிட்டதும் என்னை மிகவும் பாதித்தது!

இரண்டாம் பரிசு பெற்ற கோயில் உண்டியல் பதிவு கூட, வெறும் ஆலயச் சீர்திருத்தம் தான்! தம்பி வெட்டி பாலாஜி கூட, இது பற்றிப் பல முறை என்னிடம் தொலைபேசிக் காரசாரமா விவாதித்து இருக்கான்(ர்)! ஆலயத்து தன்னாட்சி நிர்வாகம் பற்றிய மாற்றுக் கருத்துக்களை எனக்கு நல்ல முறையில் எடுத்துக் காட்டி இருக்கான்(ர்)!
வவ்வால், செந்தழல் ரவி, அன்புடன் பாலா போன்றவர்களும் அவரவர் பார்வையாகத் தனித் தனிப் பதிவில் அருமையாகப் பேசி உள்ளனர்!

ஆனால், அவை எல்லாம் வெறும் புறச்சீர்-திருத்தம் தான்! காரைக்கால் அம்மையோ அகச்சீர்-திருத்தம்!

பல எதிர்ப் பதிவுகள் சம்பாதித்துக் கொண்ட அதே பதிவிற்கு, முதல் விருது என்னும் போது...
அது புனிதவதிக்குத் தரப்பட்ட விருது என்றே அடியேன் எடுத்துக் கொள்கிறேன்!


* அந்தக் காலத்தில் தான், ஊர் மொத்தமும் அவன் செய்தது சரியே, அவளுக்கு வேறு வழியில்லை என்றது!
* இன்றாவது, ஊர் மொத்தமும் புனிதவதி என்னும் காரைக்கால் அம்மை நாயன்மாருக்கு இரங்கியதாகவே எடுத்துக் கொள்கிறேன்!

புனிதா,
உன்னை சட்ட திட்டங்களுக்குள் அடக்காமல், வெறுமனே புனித ஆகம அந்தஸ்துக்குள் அடக்காமல்...
உன் உள்ளத்து உணர்ச்சிகளை, ஆன்மீக நியாயங்களை...
அன்று சிவபிரான் புரிந்து கொண்டான்! இன்று இதோ ஊரும் புரிந்து கொள்கிறது!
உன் உள்ளத்தை, இன்று இந்த ஊரும் "பாவிக்கிறது"! - "பாவனை" அதனைக் கூடில், "அவனையும்" கூடலாமே!

புனிதா, உனக்கான விருதை நீயே வந்து பெற்றுக் கொள்!
"அடியார்கள்" வாழ, அரங்க (தில்லை) நகர் வாழ...இன்னுமொரு நூற்றாண்டு இரு!


நண்பர்களே,
மனம் விட்டு சில சொற்களையும் உங்களிடம் இப்போது சொல்லிக் கொள்கிறேன்!

* இந்த மாதவிப் பந்தலில், இன்று போல் என்றும், ஆன்மீகம் அகத்து உணர்ச்சியாகவே "பாவிக்கப்படும்"!
* காய்தல் உவத்தல் இன்றி, உற்ற கருத்தோ-மற்ற கருத்தோ, எந்தக் கேள்வியும் கந்தக் கேள்வியாகவே "பாவிக்கப்படும்"!
* பாவிக்கும் போக்கு நல்லது! "பாவனை" அதனைக் கூடில், "அவனையும்" கூடலாமே!


* பதிவர் அல்லாத வாசகர்கள், சக பதிவர்கள், சக ஆன்மீகப் பதிவர்கள், என்னுடன் குழுப்பதிவு நண்பர்கள், பதிவுகளில் விவாதக் களம் கண்டவர்கள்...என்று அனைவருக்கும் இந்தச் சமயத்தில் அடியேன் நன்றி!
* நண்பர்கள், நண்பர் அல்லாதார், நண்பராய் இருந்து தற்சமயம் சினந்தார்கள், பிற்பாடு ஒரு வேளை சினம் தணிவார்கள்...அவர்களுக்கும் என் நன்றி! :)

இத்தனை பேரையும் சொல்லிட்டு, என் அன்புள்ள திருவேங்கடமுடையானைச் சொல்லலை-ன்னா எப்படி? உனக்கும் டேங்கீஸ்-ப்பா! :)

சக ஆன்மீகப் பதிவர்கள் ஒருவர் விடாது, அத்தனை பேருக்கும், இந்த இரண்டு விருதுகளையும் காணிக்கை ஆக்கி மகிழ்கிறேன்!

என்றும் வேண்டும் உங்கள் இன்ப அன்பு! அடியேனைச் சிறு வயதில் தூண்டிய அந்தப் பிரகலாதக் குழந்தை திருவடிகளே சரணம்!!!

62 comments:

 1. இது பி.க அல்ல! :)
  நண்பர் ஒருவரின் வளைகாப்பு விழாவுக்கு வேற ஊர் வந்திருக்கேன்! அதனால் உடனே உடனே பதில் இட முடியாதுங்கோவ்! நாளைக்குச் சாயந்திரம் வந்துருவேனுங்கோ! :)

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் KRS ஐயா, விருதுகளுக்கு, இன்னும் பல காலம் பல விருதுகள் பெற்று உயர வாழ்த்துகின்றேன்.

  ReplyDelete
 3. //நண்பர் ஒருவரின் வளைகாப்பு விழாவுக்கு வேற ஊர் வந்திருக்கேன்//

  நண்பர் எதுக்கு வளைகாப்பு போட்டுக்கனும். அவர் மனைவி தானே மாசமா இருக்காங்க?

  பெருத்த சந்தேகத்துடன்

  அபிஅப்பா

  வாழ்த்துக்கள் கேயாரெஸ்!எப்படித்தான் எல்லா விஷயத்தையும் பிரிச்சு மேஞ்சிடறீங்களோ? ஆச்சர்யமா இருக்கு!

  ReplyDelete
 4. ஆஹா..வாழ்த்துக்கள் கேயாரெஸ் அங்கிள் :)
  எனக்கு ட்ரீட் எப்போ? :)

  //இதில் இருந்து, மாரல் ஆஃப் தி ஸ்டோரி ஏதாச்சும் உங்களுக்குப் புரியுதா மக்களே? :)))//

  ம்ம்ம்ம்...கீழே இருக்கிற படத்துல த்ரிஷா தெரியுது :P

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் KRS ஐயா,

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் KRS

  ReplyDelete
 7. மேலும் கலக்க வாழ்த்துகள் கேஆர்எஸ். அது என்ன துரதிருஷடம் திருஷ்டி பொட்டு வச்ச மாதிரி :-(

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் KRS அங்கிள்... கள்ள ஓட்டு போட்ட எங்களுக்கெல்லாம் தனியா வாழ்த்து சொல்லலையே???? y? y? y? :)))

  ReplyDelete
 9. எனக்கும் ஆன்மிகத்தில் விருது கிடைச்சிருக்கு, இப்போதாவது ஏற்றுக்கொள்ளுங்கள் 'நான் ஆன்மிக பதிவர்தான்'

  :))))))))

  ReplyDelete
 10. கே.ஆர்.எஸ்,

  ஆன்மிக சூப்பர் ஸ்டாருக்கு ஆன்மிகத்தில் முதல் விருது கிடைப்பதுதானே முறை !

  இருவிருதுகளுக்கும் ஒருசேர வாழ்த்துகள் !

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் தல ;)

  ReplyDelete
 12. மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. மனமார்ந்த வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்!
  You deserve it!
  மாற்றுச் சிந்தனைகளுக்கு எப்போதுமே எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். என்றாலும், காலத்தின் ஒட்டத்தில் நிமர்ந்து நிற்பவையும் அவைதான்.
  நல்லவை நாட்டுதலும், அல்லவை ஓட்டுதலும் என்றும் தொடரட்டும்.
  மீண்டும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. அன்பின் கேயாரெஸ்

  தாமதமான வாழ்த்துகள்

  " துரதிருஷ்ட " என்ற சொல் தேவையா - சிந்திக்கலாமே

  ஆன்மீகப் பதிவுகள் இடுவதில் கொடி கட்டிப் பறக்கும் பதிவர்களில் முக்கியமானவர் நீங்கள். விமர்சனங்களும் விவாதங்களும் ஆக்க பூர்வமான முறையில் தான் தங்கள் பதிவுகளில் இருக்கும். மறுமொழிகளைப் படித்து விட்டுப் பதிவுகள் படிக்கும் பழக்கமும் உள்ளவன் நான்.

  தொடர்க ஆன்மீகப் பணியினை
  பெறுக மேன்மேலும் விருதுகள்
  வளர்க வாழ்க

  ReplyDelete
 16. அன்பு ரவி.மனம் நிறைந்த வாழ்த்துகள். எனக்கும் புனிதவதி அம்மையார் பட்ட துன்பம் வலிக்கும். உங்கள் எழுத்தில் எனக்கு தப்பு தோன்றவில்லை.
  சில காரணங்களுக்காக உடனே வாழ்த்த வர முடியவில்லை. இன்னும் நிறைய விருதுகள் உங்கள் வழி வர வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. அன்பு ரவி.மனம் நிறைந்த வாழ்த்துகள். எனக்கும் புனிதவதி அம்மையார் பட்ட துன்பம் வலிக்கும். உங்கள் எழுத்தில் எனக்கு தப்பு தோன்றவில்லை.
  சில காரணங்களுக்காக உடனே வாழ்த்த வர முடியவில்லை. இன்னும் நிறைய விருதுகள் உங்கள் வழி வர வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
  இப்போ தான் வீட்டுக்குள்ள வாரேன்! அபி அப்பா சூப்பர் கேள்வி கேட்டு இருக்காரு! :))

  // cheena (சீனா) said...
  அன்பின் கேயாரெஸ்
  தாமதமான வாழ்த்துகள்//

  நன்றி சீனா ஐயா!

  //"துரதிருஷ்ட " என்ற சொல் தேவையா - சிந்திக்கலாமே//

  சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சீனா ஐயா! சத்தியாவும் சொல்லி இருக்காரு!

  நம் வலையுலகப் ஆன்மீகப் பெரியவர்கள்/நண்பர்கள் பலர் எதிர்ப் பதிவிட்ட, சினந்த, வருத்தப்பட்ட ஒரு பதிவாய் அது போயிருச்சி! அதான் "துரதிருஷ்டவசமானது" என்ற பொருளில் அப்படிக் குறிப்பிட்டேன்!

  மாத்திறலாம்-ன்னா சொல்லுங்க! மாத்திறலாம்!

  ReplyDelete
 19. //சக ஆன்மீகப் பதிவர்கள் ஒருவர் விடாது, நம் அத்தனை பேருக்கும், இந்த இரு விருதுகளைக் காணிக்கை ஆக்கி மகிழ்கிறேன்//

  வெளியூரில் இருந்ததால் பெயர் குறிப்பிட்டுச் சொல்ல நேரமில்லாமல் போய் விட்டது...இதோ...

  குமரன்
  ஜீவா
  மெளலி அண்ணா
  ஷைலஜா அக்கா
  கவிநயா அக்கா

  கீதாம்மா
  திராச ஐயா
  VSK
  சுவாமி ஓம்கார்
  ஞானவெட்டியான் ஐயா

  முனைவர்.நா.கண்ணன்
  வாத்தியார் ஐயா-சுப்பையா சார்
  வல்லியம்மா
  திவா சார்
  ஜீவி ஐயா

  கைலாஷி ஐயா
  கபீரன்பன் ஐயா
  சின்ன அம்மிணி அக்கா
  கெ.பி. அக்கா
  அன்புடன் பாலா

  சுப்பு தாத்தா என்னும் சூரி சார்
  பட்டமுத்து ஐயா
  சீனா ஐயா
  தருமி சார்
  ஜோ

  பாசிடிவ் பதிவர், அண்ணன் அந்தோணி முத்து
  சுபாஷிதம் புகழ் மதுமிதா அக்கா
  முகவை மைந்தன்
  சண்முக வேலு

  நண்பர் தமிழரசன்
  கானா பிரபா என்னும் எங்க காபி அண்ணாச்சி
  சத்தியா
  அன்புத்தோழி
  நசரேயன்

  சுல்தான் ஐயா
  மடல்காரன் பாலு
  சிபி அண்ணாச்சி
  தேவ் அண்ணன்
  மலைநாடான் ஐயா

  அறிவன்
  ராகவ்
  பரவஸ்து சுந்தர் அண்ணா
  ருஷ்ய மருத்துவர் ராம்ஸ்
  அரை பிளேடு

  மத்தாப்புத் தோழி திவ்யா
  அபி அப்பா
  நண்பன் ஜி.ராகவன்
  தம்பி வெட்டிப்பயல் - பாலாஜி
  &....
  கோவி. கண்ணன்! :)

  ......என்று ஆன்மீகப் பதிவர்கள் அத்தனை பேருக்கும்,

  இந்த விருதுகளைக் காணிக்கை ஆக்கி மகிழ்கிறேன்!


  எந்தரோ மகானுபாவுலு!
  அந்தரிகி வந்தனமுலு!

  வீட்டுக்கு வந்தவுடன் அப்படியே நினைவில் இருந்து படபட-ன்னு தட்டச்சி விட்டேன்! யாராச்சும் விட்டுப் போயிருந்தா, இங்கே சொல்லுங்கப்பா! ஒரு தகவற்பேழை/Database போலவும் ஆகும்! :)

  அதுக்குள்ள சீமந்த வீட்டில் இருந்து கட்டிக் கொண்டு வந்த சாப்பாட்டைக் கொட்டிக் கொண்டு வந்துடறேன்! :)))

  ReplyDelete
 20. வாழ்த்துகள் கேஆரெஸ், இந்த விருது அறிவிப்பே வல்லி சொல்லித் தான் தெரியும், ஆனாலும் இன்னும் போய் என்னனு பார்க்க முடியலை, நேரமில்லை. மனமார்ந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையவும் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 21. இன்னும் இன்னும் பலப்பல விருதுகள் பெற்று ஒவ்வொரு விருதுக்கும் 3 விருந்து(விருந்தும்மருந்தும் மூன்றுநாளுக்குமேல் தாங்காது அல்லவா அதான் இலக்கம் 3 என்றேன்:)) எங்களுக்கு அளிக்கவேண்டுமென ஆர்டர் போடறேன்!!!!!!

  ReplyDelete
 22. அவ்வப்போது விருதுகள் 'உரியவர்களுக்கு'க் கூட அளிக்கப்படும் என்பது தங்களுக்கு அளிக்கப்பட்டதன் மூலம் தெரியவருகிறது. தமிழ்மணத்துக்கும் தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
  திவாகர்

  ReplyDelete
 23. நீவிர் வாழ்க! உங்கள் தொண்டு வாழ்க! என்றும் வெற்றித்திருமகள் உம்மையே பற்றியிருக்க மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. //Kailashi said...
  வாழ்த்துக்கள் KRS ஐயா, விருதுகளுக்கு//

  ஆசிக்கு நன்றி கைலாஷி ஐயா!

  //இன்னும் பல காலம் பல விருதுகள் பெற்று உயர வாழ்த்துகின்றேன்//

  ஈதே எம் தோழீ பரிசேலோ ரெம்பாவாய்! :)

  ReplyDelete
 25. //அபி அப்பா said...
  நண்பர் எதுக்கு வளைகாப்பு போட்டுக்கனும். அவர் மனைவி தானே மாசமா இருக்காங்க?
  பெருத்த சந்தேகத்துடன்
  அபிஅப்பா//

  ஹா ஹா ஹா
  நண்பரான அவளுக்குத் தான் அண்ணே வளைகாப்பு! அவங்க தானே வளைக்காப்பு போட்டுக்கணும்?
  நண்பரின் கணவர் வேணும்னா "வலை-காப்பு" போட்டுக்கலாம்! :))

  அளவிலா குறும்புடன்
  கேஆரெஸ்! :)

  //வாழ்த்துக்கள் கேயாரெஸ்!எப்படித்தான் எல்லா விஷயத்தையும் பிரிச்சு மேஞ்சிடறீங்களோ? ஆச்சர்யமா இருக்கு!//

  நன்றி-ண்ணா!
  அடியேன் பொடியேன்!

  ReplyDelete
 26. //எம்.ரிஷான் ஷெரீப் said...
  ஆஹா..வாழ்த்துக்கள் கேயாரெஸ் அங்கிள் :)
  எனக்கு ட்ரீட் எப்போ? :)//

  நன்றி + வாழ்த்துக்கள் ரிஷான் அங்கிள்! :)
  எனக்கு ட்ரீட் கொடுப்பீங்க-ல்ல உங்க ரெண்டாம் பரிசுக்கு...அப்போ உங்களுக்கும் ட்ரீட் கொடுத்துருவேன் கொடுத்துருவேன்! :)

  //ம்ம்ம்ம்...கீழே இருக்கிற படத்துல த்ரிஷா தெரியுது :P//

  இதுக்குத் தான் ரிஷான் போல "ஞானக் கண்ணு" வேணும்ங்கிறது! :)

  ReplyDelete
 27. //T.V.Radhakrishnan said...
  வாழ்த்துக்கள் KRS ஐயா//

  ஐயா-வா? :)
  நன்றி TVR ஐயா! :)

  TVR என்னும் போது, என் தம்பி CVR தான் நினைவுக்கு வாரான்! :)

  ReplyDelete
 28. // தி. ரா. ச.(T.R.C.) said...
  வாழ்த்துக்கள் KRS//

  நன்றி திராச ஐயா!
  என்றும் வேண்டும் தங்கள் முதல் ஆசி!

  ReplyDelete
 29. //கவிநயா said...
  வாழ்க! வளர்க!!//

  அக்கா சொன்னா அகிலமே சொன்ன மாதிரி! நன்றிக்கோவ்! :)

  ReplyDelete
 30. //Sathia said...
  மேலும் கலக்க வாழ்த்துகள் கேஆர்எஸ்.//

  நன்றி சத்தியா!

  //அது என்ன துரதிருஷடம் திருஷ்டி பொட்டு வச்ச மாதிரி :-(
  //

  ஹூம்...சாரி!
  சொல்லுங்க மாத்திறலாம்!
  சீனா ஐயாவுக்கான பதிலைப் பாருங்க!

  பெரியோர்கள்/மூத்தோர்கள் வருத்தப்பட்ட பதிவாய் அது போயிருச்சி!
  அதான் துரதிருஷ்ட-ன்னு சொன்னேன்! வேற ஒன்னும் இல்ல சத்தியா!

  ReplyDelete
 31. //இராம்/Raam said...
  வாழ்த்துக்கள் KRS அங்கிள்... கள்ள ஓட்டு போட்ட எங்களுக்கெல்லாம் தனியா வாழ்த்து சொல்லலையே???? y? y? y? :)))//

  ராமேய்...உனக்கு நன்றி + வாழ்த்து ரெண்டுமே சொல்லணும்-ல!
  சிறுகதைச் சித்தனான உன் வெற்றிக்கு ட்ரீட் எப்போ? :)

  ReplyDelete
 32. //கோவி.கண்ணன் said...
  எனக்கும் ஆன்மிகத்தில் விருது கிடைச்சிருக்கு, இப்போதாவது ஏற்றுக்கொள்ளுங்கள் 'நான் ஆன்மிக பதிவர்தான்'//

  ஹா ஹா ஹா
  நான் தான் எப்பவோ சொல்லிட்டேனே அண்ணா!
  அட, ஆன்மீகப் பயிருக்கு கோவி தண்ணி ஊத்துறாருப்பா!-ன்னு :)))

  நீங்க"ளும்" ஆன்மீகப் பதிவர் தான்! பின்னூட்டத்தில் போட்ட லிஸ்ட்டில் கடேசியாப் பாருங்க! :)

  ReplyDelete
 33. //கோவி.கண்ணன் said...
  கே.ஆர்.எஸ்,
  ஆன்மிக சூப்பர் ஸ்டாருக்கு ஆன்மிகத்தில் முதல் விருது கிடைப்பதுதானே முறை !//

  அடியேன் பொடியேன்! :)
  அ.உ.சூ.சா எங்கள் குமரன் தான்!

  //இருவிருதுகளுக்கும் ஒருசேர வாழ்த்துகள் !//

  நன்றி-ண்ணா!

  ReplyDelete
 34. //கோபிநாத் said...
  வாழ்த்துக்கள் தல ;)//

  நன்றி மாப்பி கோப்பி! :)

  ReplyDelete
 35. // G.Ragavan said...
  மனமார்ந்த வாழ்த்துகள்.//

  நன்றி ராகவா!
  நீங்க மட்டும், ட்ரீட் நீங்க தான் கொடுக்கணும்! :)

  ReplyDelete
 36. //ஜீவா (Jeeva Venkataraman) said...
  மனமார்ந்த வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்!
  You deserve it!//

  நன்றி ஜீவா!

  //மாற்றுச் சிந்தனைகளுக்கு எப்போதுமே எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். என்றாலும், காலத்தின் ஒட்டத்தில் நிமர்ந்து நிற்பவையும் அவைதான்//

  மாற்றுச் சிந்தனைக்கு எதிர்ப்பு இருப்பது நல்லது தான் ஜீவா!
  அப்போ தான் அது நன்மையில் முடியுமா, தீமையில் முடியுமா-ன்னு "மாற்று" பார்க்க முடியும் அல்லவா?

  எதிர்ப்பும் பகவத் பிரசாதம் தானே!

  //நல்லவை நாட்டுதலும், அல்லவை ஓட்டுதலும் என்றும் தொடரட்டும்.
  மீண்டும் வாழ்த்துக்கள்!//

  அடியேன் பொடியேன்!
  உங்கள் அன்புக்கு என்றும் நன்றி!

  ReplyDelete
 37. //குமரன் (Kumaran) said...
  மனமார்ந்த வாழ்த்துகள்.
  //

  நன்றி குமரன்! :)

  ReplyDelete
 38. //வல்லிசிம்ஹன் said...
  அன்பு ரவி.மனம் நிறைந்த வாழ்த்துகள்//

  நன்றி வல்லியம்மா

  //எனக்கும் புனிதவதி அம்மையார் பட்ட துன்பம் வலிக்கும். உங்கள் எழுத்தில் எனக்கு தப்பு தோன்றவில்லை//

  உங்கள் அன்பான புரிதல் எப்பமே ஊக்கப்படுத்துமே!

  //இன்னும் நிறைய விருதுகள் உங்கள் வழி வர வாழ்த்துகள்//

  ஆசிக்கு நன்றிம்மா!

  ReplyDelete
 39. //cheena (சீனா) said...
  விமர்சனங்களும் விவாதங்களும் ஆக்க பூர்வமான முறையில் தான் தங்கள் பதிவுகளில் இருக்கும். மறுமொழிகளைப் படித்து விட்டுப் பதிவுகள் படிக்கும் பழக்கமும் உள்ளவன் நான்//

  ஹா ஹா ஹா!
  இந்தப் பதிவில் அதற்குக் காரணம் வாசகர்கள் தான் சீனா ஐயா! அவர்கள் கற்சொல் இன்றி வைக்கும் ஆக்கப் பூர்வமான கருத்துக்கள்...அதான் பூவோடு நாரையும் மணக்கச் செய்கிறது!

  //தொடர்க ஆன்மீகப் பணியினை
  பெறுக மேன்மேலும் விருதுகள்
  வளர்க வாழ்க//

  ஆசிக்கு நன்றி சீனா ஐயா!

  ReplyDelete
 40. //கீதா சாம்பசிவம் said...
  வாழ்த்துகள் கேஆரெஸ்//

  வாங்க கீதாம்மா! நன்றி!
  நீங்களும் தானே இந்தச் சிறப்புக்கு உறுதுணையாக இருந்தீர்கள்!
  பல சமயங்களில் உங்கள் பண்பட்ட விவாதங்களும் அல்லவா சிறப்பு சேர்க்கிறது!

  கோயில் உண்டியல் பதிவிலும் நீங்கள் அள்ளித் தெளித்த தகவல்கள் தான் எத்தனை!

  உங்களுக்கு அடியேன் சிறப்பு நன்றிகளைச் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்!

  //மனமார்ந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையவும் வாழ்த்துகிறேன்//

  ஆசிக்கு நன்றி கீதாம்மா!
  பாடும் பணியே பரிசாய் அருள்வாய்! :)

  ReplyDelete
 41. //ஷைலஜா said...
  இன்னும் இன்னும் பலப்பல விருதுகள் பெற்று ஒவ்வொரு விருதுக்கும் 3 விருந்து//

  ஹா ஹா ஹா!
  உங்களுக்கு இல்லாத விருந்தாக்கா? பெங்களூருக்கு வந்து உங்க வீட்டிலேயே விருந்து கடை கட்டிருவோம்! மசால் வடை உண்டுல்ல? :))

  நன்றிக்கா!

  ReplyDelete
 42. //DHIVAKAR said...
  அவ்வப்போது விருதுகள் 'உரியவர்களுக்கு'க் கூட அளிக்கப்படும் என்பது தங்களுக்கு அளிக்கப்பட்டதன் மூலம் தெரியவருகிறது. தமிழ்மணத்துக்கும் தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்//

  நன்றி திவாகர் சார்!
  எம்டன் நாவல் புகழ் திவாகரின் வாழ்த்து அடியேனுக்கு என்றும் சிறப்பான பெருமை தான்!

  ReplyDelete
 43. //தமிழ் said...
  நீவிர் வாழ்க! உங்கள் தொண்டு வாழ்க! என்றும் வெற்றித்திருமகள் உம்மையே பற்றியிருக்க மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!//

  நன்றி தமிழண்ணே! நன்றி!
  இளமாறனுக்கு மட்டும் தான் ட்ரீட்! குட்டி எப்படி இருக்கான்? :)

  ReplyDelete
 44. @சீனா ஐயா, சத்தியா, மக்களே...

  "தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்"
  - என்று பதிவின் தலைப்பை மாற்றி விட்டேன்!

  பெரியோர்கள்/மூத்தோர்கள் வருத்தப்பட்ட பதிவாய் அது போயிருச்சி! அதான் "துரதிருஷ்ட"-ன்னு சொன்னேன்!
  எதுக்கு வெற்றி பெற்ற ஒன்றைப் போய் நீங்களே துரதிருஷ்டம்-ன்னு சொல்லணும்-ன்னு தனிமையிலும் பலரும் கேட்டதனால் மாற்றி விட்டேன்! நன்றி! :)

  ReplyDelete
 45. சொன்ன பேச்சு கேட்டதுக்கு ரெம்ப நன்னி கேயாரெஸ்

  ReplyDelete
 46. //cheena (சீனா) said...
  சொன்ன பேச்சு கேட்டதுக்கு ரெம்ப நன்னி கேயாரெஸ்//

  ஹிஹி! நான் சமத்துப் பையன் சீனா ஐயா! :)
  பெரியவங்க சொன்னா கேட்டுப்பேன்! :)

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள் KRS!
  Keep it up! :-)

  ReplyDelete
 48. //செல்லி said...
  வாழ்த்துக்கள் KRS!
  Keep it up! :-)//

  நன்றி செல்லி!
  நலமா? ரொம்ப நாள் ஆச்சு பார்த்து!

  ReplyDelete
 49. வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்.
  ஆனால் நீங்க ஆயிரம்தான் சொன்னாலும், காரைக்கால் அம்மையாருக்கு விதிப்படியே நடந்தது. மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க தான் அவருக்கு தெரிந்ததே தவிர கணவனிடம் உண்மை சொல்லத் தெரியல்லை அல்லவா அம்மையாருக்கு? அதான் தண்டனை. அவர் கர்மாவை, கர்ம பலனை அவர் அனுபவித்தார். நீங்க அதை வேற மாதிரி காட்டி வெற்றி பெற்று விட்டீர்கள். என்ன செய்ய, நம் நாட்டில் majority only wins?

  ReplyDelete
 50. //Anonymous said...
  வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்.//

  நன்றின்னு...நானும் உங்க பேர் சொல்ல வேணாங்களா? பேரைச் சொல்லுங்க! :)

  //ஆனால் நீங்க ஆயிரம்தான் சொன்னாலும், காரைக்கால் அம்மையாருக்கு விதிப்படியே நடந்தது.//

  எல்லாமே விதிப்படி தானே நடக்குது! அண்மையில் நடந்த திருவான்மியூர் கோயில் திருட்டு உட்பட! :))

  விதிப்படி நடக்குறது நடக்கட்டும்! அதை ஒன்னும் சொல்லலை! ஆனா நடக்கும் சம்பவங்களில், மனித மனசு-ன்னும் ஒன்னு இருக்குதே? கொஞ்சம் அம்மையாருக்கு மனசாட்சியா நடந்துக்கிட்டு, அப்புறம் விதிப்படி விட்டுரலாம் இல்லையா? என்ன சொல்றீங்க?

  //மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க தான் அவருக்கு தெரிந்ததே தவிர கணவனிடம் உண்மை சொல்லத் தெரியல்லை அல்லவா அம்மையாருக்கு? அதான் தண்டனை//

  அடடே! ஆமாம்-ல? கணவனே கண் கண்ட தெய்வம்! அந்த தெய்வத்து கிட்ட பொய் பேசினாங்க புனிதவதி! மாங்கனியை அடியவர் உண்டார்-ன்னு உண்மையைச் சொல்லாம, மேஜிக் பண்ணி உண்மையை மறைக்கலாம்-ன்னு பாத்தாங்க இல்லையா?
  சூப்பர்! அதான் தண்டனை போல! அடேங்கப்பா! எவ்ளோ பெரிய கொலைக் குற்றம் பண்ணிட்டா புனிதா? அதுக்கு நல்ல தண்டனை தான் அவ பேயாகப் போனது! கர்மா சும்மா விடுமா? சரி தானே அனானி ஐயா/அம்மா? :))

  //அவர் கர்மாவை, கர்ம பலனை அவர் அனுபவித்தார். நீங்க அதை வேற மாதிரி காட்டி வெற்றி பெற்று விட்டீர்கள். என்ன செய்ய, நம் நாட்டில் majority only wins?//

  ஹிஹி! என்ன ஒரு லாஜிக்! கரெக்டாக் கண்டுபுடிச்சிட்டீங்க! வாழ்த்துக்கள்!
  நான் தான் அடியவர்களைச் சரியாப் புரிஞ்சிக்காம, நைசாத் திசை திருப்பி விட்டுட்டேன்!
  வாக்களித்த அனைவரும் ஏமாந்து போய் வாக்களிச்சிட்டாங்க! மெஜாரிட்டி-ல சத்யம் மறைஞ்சு போயிரிச்சி! எல்லாம் கலி காலம்! :)))

  ReplyDelete
 51. புது கல்யாணப் பொண்ணு! ரொம்ப அன்பு ஜாஸ்தி அவளுக்கு! புருஷன் முகம் பாத்தே வாழறவ! திடீர்-ன்னு புருஷன் இன்னொரு கனி கேட்கவே...தடுமாறுகிறா! அச்சோ அவரை ஒரு வார்த்தை கேட்காம அடியாருக்குக் கொடுத்தது தப்போ?-ன்னு மனசு பேதலிக்குது! அவ்ளோ தான்! மத்தபடி அவரை ஏமாத்தும் எண்ணம் இல்லை!

  தனக்கு சக்தி இருக்குறதா நினைச்சி, அவள் மேஜிக் எல்லாம் பண்ணலை!
  சொல்லப் போனா, இன்னொரு மாங்கனி கொடு-ன்னு அவள் இறைவனிடமும் கேட்கவே இல்லை!
  செய்வதறியாமல், சமையல் அறையில் கையைத் தான் பிசைகிறாள்! கனியைக் கேட்காமலேயே கொடுத்தது இறைவன் தான்! இதில் நீங்க சொல்லும் குற்றம் எங்கே வந்துச்சி?

  சரி, நான் தான் இங்கு எல்லாரையும் "திசை திருப்பிட்டேன்"!
  பரவாயில்லை! சேக்கிழார் சுவாமிகள் எப்படி?

  அம் மருங்கு நின்று அயர்வார்! அரும் கனிக்கு அங்கு என்செய்வார்?
  மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து, உதவும் "விடையவர் தான்"

  தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்
  கைம் மருங்கு "வந்து இருந்தது" அதி மதுரக் கனி ஒன்று!

  அவள் கேட்கவே இல்ல! கையில் தானாக வந்து இருந்தது கனி!
  கணவனை ஒரு வார்த்தை கேட்காமல் கொடுத்தது தப்போ-ன்னு பேதலித்த பேதைப் பொண்னுங்க அவ!
  சாதாரண ஒரு ரூவா மாங்காய்க்குக் கூட புருஷனைக் கேட்கும் இது மாதிரி பொம்பளைங்களத் தான் எதிர்பாக்கறீங்க போல! சூப்பர்!

  பரமதத்தனுக்கும் உங்களைப் போலவே தான் புத்தி போல! சாதாரண ஒரு ரூவா மாங்காய்க்கு அவளைப் பத்து கேள்வி கேட்டு அலைக்கழிச்சான்!
  அவள் பொய் சொல்லலை! உடனே உண்மையைச் சொன்னாள்! ஆனால் அவன் தான் நிரூபிச்சிக் காட்டு-ன்னு ஆட்டம் ஆடினான்!

  எப்பமே அன்பு இருக்குற மனசு தானே தன்னை நிரூபிச்சாகணும்?
  அதட்டுற மனசு, அதட்டிக் கிட்டு கேள்வி கேட்டுக்கிட்டு தானே இருக்கும்?


  வேற வழியில்லாம அவளும் நிரூபித்தாள்! மொத்தத்தையும் தொலைத்தாள்!
  இதைப் போய் "புனிதா கட்டின கணவன் கிட்ட உண்மை சொல்லலை! அதான் தண்டனை! கர்மா சும்மா விடாது"-ன்னு சொல்ற உங்க "கர்ம யோகத்தை" என்னான்னு சொல்ல? ச்ச்ச்ச்சே....

  வாழ்த்துப் பதிவில் எதுவும் வேணாம்-ன்னு பெரியவங்க பின்னூட்டத்தில் சொல்லியிருக்காங்க! அதுனால சும்மா போறேன்! இல்லீன்னா....

  ReplyDelete
 52. வாழ்த்துக்கள் கண்ணபிரான்..

  நீடூழி வாழ்க..

  தொடரட்டும் உமது ஆன்மிகப் பணி..

  ReplyDelete
 53. I have a comment on your views on what happened to Karaikkal Ammaiyar.

  I am not saying what the husband was right, but I am saying what he did is understandable.

  You may not know yet since you are a bachelor, but -

  1. Marital relationship in the physical sense cannot happen without the husband looking at the wife as an 'object' of desire at least to a small degree.
  2. It cannot happen without the woman looking at herself as an object of desire.
  3. It is in a subtle way a sense of domination of the husband on the wife.

  Depending on the spiritual level of the couple, the above three points can vary in degree. But they are never absent if a physical relationship is to exist.

  Since the above three points were impossible in Ammaiyar's case, a normal physical relationship was ruled out.

  If at all the husband is to be blamed, he is to be blamed for not taking Ammaiyar as his guru and leading a spiritual life like the husband of Anandamayi Ma did.

  You need not publish this comment if you do not deem it fit. It does not fit in with your Thanksgiving post and may even be offensive to certain readers.

  Sriram.

  ReplyDelete
 54. Being male, I am not very sure about the second point. :-)

  Can you please delete it, in case you decide to publish my comments?

  -Sriram

  ReplyDelete
 55. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
  வாழ்த்துக்கள். :)
  //

  நன்றி முத்தக்கா! மு.க :)

  ReplyDelete
 56. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  வாழ்த்துக்கள் கண்ணபிரான்..//

  நன்றி + வாழ்த்துக்கள்-ண்ணே! :))

  //நீடூழி வாழ்க..
  தொடரட்டும் உமது ஆன்மிகப் பணி..//

  ஆசிக்கு மிகவும் நன்றி!

  ReplyDelete
 57. //Anonymous said...
  Being male, I am not very sure about the second point. :-)
  Can you please delete it, in case you decide to publish my comments?

  -Sriram//

  Sriram
  Sorry, comment moderation is disabled! Everyone has the right to express their respectful views :)
  So couldnt selectively delete the portion of your comments! :)

  ReplyDelete
 58. //Anonymous said...
  I have a comment on your views on what happened to Karaikkal Ammaiyar//

  Sure!

  //I am not saying what the husband was right, but I am saying what he did is understandable//

  All I am saying is, if he is understandable, pl understand her stand too! :)
  All I am saying is they should not celebrate him as a part of the urchavam, when he hasnt achieved anything on his own!

  //You may not know yet since you are a bachelor, but -//

  Ha ha ha! No comments :)

  //1. Marital relationship in the physical sense cannot happen without the husband looking at the wife as an 'object' of desire at least to a small degree//

  Well, having said that, please realize that it work both ways!

  //Since the above three points were impossible in Ammaiyar's case, a normal physical relationship was ruled out//

  Why was it impossible?
  Punithavathi didnt rule out! She was still desiring!
  Just bcoz in someone's life a miracle happened, that too without his/her involvement...doesnt mean that she is not fit for a "desireful" life.
  Ammaiyar wasnt spiritually evolving to be ignored from a "desire" perspective.
  Ammaiyar wasnt a spiritual sadhaka. The miracle just happened on its own for no fault of hers!

  //If at all the husband is to be blamed, he is to be blamed for not taking Ammaiyar as his guru and leading a spiritual life...//

  No No!
  He need not be like an ascetic.
  At the same time, he was supposed to have paid for his own "decision" and ensure that ammaiyar didnt go to despair, because of his "decision". He should have intimated his decision instead of secretly running away to a better selfish life.

  Whatever past is past and we get inspired from the past!
  So why shd he be a part of the urchavams without any merit?

  //You need not publish this comment if you do not deem it fit. It does not fit in with your Thanksgiving post and may even be offensive to certain readers//

  Thatz fine Sriram...We have a full democracy here in letter and spirit! So your comment definitely fits in!
  ...and Most of my readers are mature and can distinguish & decide for themselves! :)

  Thanks for your views!

  ReplyDelete
 59. ஒங்களுக்குப் பட்டாம்பூச்சி விருது குடுத்திருக்கேன். வந்து வாங்கி பெருமை பண்ணுங்க.

  http://gragavan.blogspot.com/2009/03/blog-post.html

  ReplyDelete
 60. //G.Ragavan said...
  ஒங்களுக்குப் பட்டாம்பூச்சி விருது குடுத்திருக்கேன். வந்து வாங்கி பெருமை பண்ணுங்க//

  என்ன ராகவா இது? விருது மேல விருது? :))

  மகரந்தம் வலைப்பூக்காரரு பட்டாம்பூச்சி கொடுக்கறாரா? ஜூப்பரு! நன்றி! வாங்கிக்கறேன்! ஆனா பதிவெல்லாம் போடச் சொல்லக் கூடாது! ஆமா! :)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP