Sunday, May 04, 2008

தசாவதாரம்: Kamal Haasan & his "Naked" Lies!!

தசாவதாரம் பத்திப் பல பேரு பல விதமா பலப்பல பதிவு போட்டிருக்காங்க! அதுலயும் இந்தக் "கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது" பாட்டு பிச்சிக்கிட்டுப் போகுது! ச்சே இந்த மீஜிக் ஆல்பம் வெளியிடற நேரம் பார்த்து நான் சென்னையில் இல்லாமப் போயிட்டேன்! இருந்திருந்தா இந்தப் பாட்டில் சொல்லி இருக்குற பல பொய்களுக்கு ஜாக்கிசானோடவும் கமலோடவும் சும்மாப் பறந்து பறந்து சண்டை போட்டிருப்பேன்! :-)

Naked Truth தெரியும்ங்க! அதென்ன Naked Lie? - ஹிஹி! எல்லாம் கமலுக்குப் புடிச்சமான இஷ்டைல் தாங்க!
நண்பர், பதிவர் அனந்த லோகநாதன், இந்தப் படத்தில் வரும் பெருமாளின் பக்திப் பாடல்களைக் கேட்கும் போது அடியேனை நினைத்துக் கொண்டாராம்! Haunting Effect-ஆ? மின்னஞ்சல் அனுப்பி இருந்தாரு! எல்லாம் மாதவிப் பந்தல் மயக்கம்! மாதவி இப்பிடி எல்லாம் கூட மயக்கி வச்சிருக்காளா? :-))

விசயத்துக்கு வருவோம்! பாடலின் வரிகள் அனைத்தும் அருமை! நடு நடுவில் பல்லாண்டு பாசுரம் எல்லாம் ஹை பிட்ச்சில் போட்டுக் கலக்கித் தான் இருக்கீங்க!
திருவரங்கத்துக் கவிஞராம்-ல வாலி?
//இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
//
அப்படியே கமலோட அம்மா அப்பா பேரையும் பாட்டுல கொண்டு வந்துட்டாரு பாருங்க! சும்மா கேட்டுக் கிட்டே படிங்க மக்கா!

ஆனா அதுக்கப்பறம் தான் கலந்துகட்டி ஒரே பொய்யா வெளயாடி இருக்காருப்பா வாலி! பாட்டை மேலோட்டமா பார்க்கும் போது அத்தனையும் தத்துவ வரிகள் தான்!
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது; கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது = இது ஓக்கே!
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது; தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது = இங்கிட்டு தான் லேசா இடிக்குது!

ஏன்?.......வைணவம் என்று பார்த்தால் மட்டும் தெய்வம் தெரியாது; தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது-ன்னு கூட மாற்றிப் பாடலாமே?

ஆனால் படத்தோட காட்சிக்கு ஏற்றாற் போலத் தான் பாட்டு எழுத முடியும் இல்லையா? படத்துல ஒரு சைவ அரசனும் (குலோத்துங்கன்), பல சைவர்களும் சேர்ந்து, தில்லை வைணவன் ஒருவனுக்குத் (ரங்கராஜ நம்பி) தண்டனையை நிறைவேற்றுவது போல் காட்சி! அதுனால காட்சிக்கு ஏத்தா மாதிரி வாலி எழுதிட்டாரு-னனு சொல்லி எஸ்கேப் ஆயிறலாம்! ஆனால் நம்ம கமல் எஸ்கேப்பு ஆக முடியுமா?



அது என்ன காட்சி-ன்னு பார்த்தா, பத்மஸ்ரீ கமலஹாசன், சொல்லியுள்ள-செய்துள்ள பொய்கள் அப்பட்டமாகத் தெரிய வரும்!
கவிதைக்குப் பொய் அழகு! - ஆனால் வரலாற்றைத் தொடர்பு படுத்திக் காட்டும் ஒரு திரைக் கதைக்குப் பொய் அழகல்ல!
வைணவ இலக்கியங்களை ஓரளவு அறிந்தவன் என்கிற முறையில், உங்களுடன் இந்தப் பின்னணியைப் பகிர்ந்து கொள்கிறேன்! மாற்றுக் கருத்துக்கள், தரவுகள் (ஆதாரங்கள்) இருந்தால் தட்டாமல் சொல்லவும்!


மொதல்ல கமலின் படக் காட்சியைப் பார்ப்போம்: (இன்னும் படம் வெளி வராததால், ஊடகங்களில் கிடைக்கும் கதையின் கருவை அடிப்படையாகக் கொண்டும், படத்தின் கலைஞர்கள் கொடுக்கும் நேர்காணலைக் கொண்டும் தான் எழுதுகிறேன். படத்தின் ஆர்ட் டைரக்டர் கூட, ரங்கராஜ நம்பி என்ற பாத்திரம் உண்மையானது என்று தான் பேட்டியில் குறிப்பிடுகிறார்! கேளுங்க :-)



***கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது - ஹரிஹரனின் கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறது தெறித்து விழும் வாலியின் தத்துவார்த்தமான வரிகள்.
இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா.
இந்தப் பாடல் காட்சியை படு பிரமாண்டமாக அமைத்திருகிறார்கள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் தில்லை கோவிந்தராஜப் பெருமாளை நடராசர் ஆலயத்தில் இருந்து பெயர்த்து எடுத்து கடலில் வீசி எறியும் காட்சி!

ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் (ரங்கராஜ நம்பி) கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள்.
அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது.

ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (அட! புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!!!!!) கதற...
கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது. உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக்கடலில் தூக்கி வீசப்படுகிறார்.

உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால்,
சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட...அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்! (*** வரிகளுக்கு நன்றி: tamilnadutalk.com)

ஆகக் கூடி...இது போன்ற ஒரு காட்சிக்கு வலு சேர்க்கும் பாடல் தான் அது! அதான் வீர வரிகள்!
வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது!
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது!


இப்போ உண்மையான கதை என்னன்னும் கொஞ்சம் பார்ப்போம், வாங்க!

இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்துல, அவனை மூளைச் சலவை செய்து சில சைவர்கள் போட்ட ஆட்டம்! அதுல பாவம், அப்பாவி சைவ-வைணவர்களிடையே சமயப் பூசலாய் போய் விட்டது!

தில்லையில் நடராசர் ஆலயத்துக்கு உள்ளேயே திருச்சித்ரகூடம் என்னும் கோவிந்தராசப் பெருமாள் கோயிலும் இருக்கு! அங்கு பெருமாள், ஈசனின் நடனத்தைப் பார்த்துக் களிக்கும் கோலத்தில் இருக்காரு! அவர் மீது திருமங்கை ஆழ்வார் 32 பாசுரம் பாடியுள்ளார். அதுவும் சிவபெருமானுக்குப் பிடிச்சமான சங்கராபரண ராகத்தைப், பெருமாள் மீது பாடி, சமய ஒற்றுமையை வளர்த்து இருக்காங்க!

ஆனால் மூளை கெட்டுப் போயி, சோழன் கோவிந்தராசர் சிலையை வேரோடு பிடுங்கி, தில்லைக்குப் பக்கத்தில் உள்ள பிச்சாவரம் கடற்கரையில் மூழ்கடிக்க வைத்தான். இதை ஒட்டக்கூத்தரும் அவர் பாட்டுல சொல்லி இருக்காரு! அதனால் கோயிலைச் சுற்றி இருந்த வைணவக் குடும்பங்களுக்குப் பல தொல்லைகள்! பல சங்கடங்கள்!
- இது வரைக்கும் சரி!
ஆனா ரங்கராஜ நம்பி என்ற ஒருவரைக் (கமலஹாசன்) கொக்கி மாட்டி, அம்பு எய்து, சிலையோடு கட்டி, கடல்-ல தூக்கிப் போடுறது எல்லாம் கொஞ்சம் ஓவர் கற்பனை தான்!

ஏதோ Passion of the Christ போல படம் பண்ணனும் நெனச்சா அதுக்கேத்த மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கணும்! அதை வுட்டுப்போட்டு இப்படி எல்லாம் டகால்டி பண்ணக் கூடாது!

சொல்லப் போனா கடலில் கட்டித் தூக்கிப் போடுவது ஒரு சைவருக்கு நடந்த கொடுமை! பழுத்த சிவனடியார் அப்பர் சுவாமிகளைச் சமண அரசன் தூணில் கட்டிக் கடலில் தூக்கிப் போடுவான்! ஆனால் அவரு தப்பிச்சி வருவாரு!
கல்தூணைப் பூட்டிஓர் கடலிடைப் பாய்ச்சினும்
நல்துணை ஆவது நமச் சிவாயவே
- என்பது நாவுக்கரசர் தேவாரம்!
இப்படி அப்பர் சுவாமிகளுக்கு முன்னெப்போதோ நடந்ததை, நைசா ஒரு வைணவருக்கு ரீமிக்ஸ் பண்ணிக் காட்டுறது எல்லாம் ஓவரோ ஓவர் கமல் சார்!

கடலில் போட்ட கோவிந்தராசர் மூலவர் சிலை மூழ்கிப் போனது! ஆனால் உற்சவரின் சிலையை மட்டும் எப்படியோ காப்பாற்றிய வைணவக் குடும்பங்கள், அந்தச் சிலையை இராமானுசரிடம் சேர்பிக்கிறார்கள். சிலையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதே இடத்தில் வைத்தால் மீண்டும் பிரச்சனை தான்!

பிரச்சனை சிலைக்கா? இல்லையே!...அதைச் சுற்றியுள்ள அப்பாவி மக்களுக்குத் தானே! இதை நன்கு உணர்ந்த "உண்மையான" சமயத் துறவி அவர்! ஈகோ பார்க்காமல் சிலையைக் கொண்டு போய், கீழ்த் திருப்பதியில் நிறுவுகிறார்! அங்கு புதிதாகக் கோவிந்தராசப் பெருமாள் ஆலயம் ஒன்றை எழுப்புகிறார்! இன்றளவும் கீழ்த் திருப்பதியில் இருப்பது தில்லை கோவிந்தராசரின் உற்சவரே!

ஆண்டுகள் உருண்டோட சோழன் மறைகிறான்! நல்லிணக்கம் நிலவும் போது, புதிதாக மூலவர்-உற்சவர் சிலைகளைச் செய்து மீண்டும் தில்லையில் இருந்த இடத்திலேயே,(சில தீட்சிதர்கள் எதிர்ப்பையும் மீறி) நிறுவுகிறார்கள்! இன்றும் தில்லை நடராசப் பெருமான் ஆலயத்துக்குள் கோவிந்தராசரும் பள்ளி கொண்டுள்ளார்! - கதை இம்புட்டு தான்!

நானும் பல நம்பிகளைப் பற்றிப் படிச்சிருக்கேன் கமல் சார்!
குருகூர் நம்பி, வடுக நம்பி, பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, உத்தம நம்பி, திருக்குறுங்குடி நம்பி-ன்னு இந்த நம்பி லிஸ்ட் நீளம் தானுங்கோ!
ஆனா நீங்க சொல்லுற ரங்கராஜ நம்பி எங்கேயும் வரலீங்கோ! சாமி படத்துல கோயில் பட்டாச்சாரியாரா வர்ற விவேக் டயலாக் ஞாபகம் வச்சிக்கோங்கோ :-)

(இரண்டாம் குலோத்துங்கன் தில்லையில் செய்தது இவ்வளவு தான்! சோழன் கொடுமைகள் எல்லாம் திருவரங்கத்தில் தான்! இராமானுசரை கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைக்கு ஓட ஓட விரட்டியது, அவருடைய வயதான குரு பெரிய நம்பிகள், மற்றும் இளையவரான சீடர் கூரத்தாழ்வான் - இருவரின் கண்களைப் பிடுங்கிய பயங்கரம், பின்னர் சோழனே கிருமி நோய் கண்டு "கிருமி கண்ட சோழனாய்" செத்தது எல்லாம் தனிக்கதை! அதற்கும் தசாவதாரம் கதைக்கும் தொடர்பில்லை!)


போதாக்குறைக்கு பொன்னுசாமின்னு, கடைசீல பார்த்தா இந்தப் பாட்டு விக்ரம் நடிச்ச மலையாளப் படத்தின் சினிமா-காரம்-காப்பியாம்! அட தேவுடா! இந்தாப் பாருங்க :-)


பத்மஸ்ரீ, உலக நாயகன், கமலஹாசன் அவர்களே!
கலைக்கு அழகு கற்பனை தான்! இல்லை-ன்னு சொல்லலை! பொன்னியின் செல்வன் நாவலில் கூட சுவைக்காகச் சில கற்பனைகளைச் செய்வார் கல்கி! ஆனால் கதையின் போக்கு வரலாற்றின் போக்கோடு முட்டிக் கொள்ளாது செய்வார். அதை முன்னுரையில் சொல்லியும் விடுவார்!

இன்றைய காலகட்டத்தில் சைவ வைணவச் சண்டைகள் எல்லாம் ஒன்னும் கிடையாது! இது போன்ற ஒரு சூழலில், நடக்காத ஒன்றை நடந்ததாகக் காட்டுவது என்பது சரியே அல்ல!
சும்மா கதை தானே என்று சொல்லாதீர்கள்! தில்லைக் கோவிந்தராசர் சிலையைக் கடலில் மூழ்கடித்தது உண்மை தானே! அதையும் தானே படத்தில் காட்டி உள்ளீர்கள்!
அதனுடன் ஆளையும் சேர்த்து படுபயங்கரமாகக் கொன்றார்கள் என்று பொய்யை உண்மையுடன் கலக்குவது எல்லாம் வரலாற்றைச் சிதைப்பதாகும்!

அதுவும் சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகத்தில் சொல்லப்படும் காட்சிகளுக்கு, வரலாற்றுப் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதை விட எஃபெக்ட்டு ஜாஸ்தி!
வேண்டாம் இந்த விபரீதப் போக்கு!
நீங்க தான் உங்களை ஒரு பகுத்தறியும் Agnostic என்று பேட்டிகளில் சொல்லிக் கொள்வீர்களே! அப்புறம் உள்ளூர மட்டும் ஏன் இந்த பொய்யான வைணவ பாசம்?

அப்படி மெய்யாலுமே நீங்கள் தொண்டு செய்ய ஆசைப்பட்டால் அதுக்கு உண்மையான பல நல்ல சம்பவங்கள் நடந்திருக்கு! மனித நேயத் தொண்டுகள் இருக்கு! உயிரையும் பொருட்படுத்தாது, தமிழை ஆலயத்துக்குள் முன்னிறுத்திக் காட்டிய வைணவக் கதைகள் இருக்கு!
தந்தை பெரியாருக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே, ஸோ கால்டு கீழ்க்குலத்தாரை, ஆலயத்துக்குள் அழைத்துச் சென்ற கதை இருக்கு! அதை எடுங்க!

அதை விடுத்து இப்படி எல்லாம் பொய் சொல்லிச் சைக்கிள் கேப்பில் வைணவம் வளர வேண்டிய அவசியம் இல்லவே இல்லை! :-)

படம் பிரம்மாண்டமா வருது-ன்னு நினைக்கிறேன்! பாடல் காட்சிகள், கதைக் களம் எல்லாரும் ஆகா ஓகோ என்று பேசுகிறார்கள்! உங்கள் காசெட் வெளியீட்டு விழாவில் முதல்வர் கலைஞர், உடையவர் இராமானுசரின் கொள்கைகளைப் புகழ்ந்து பேசுகிறார்!
இப்படி எல்லாமே நல்லா இருக்கும் போது, இந்த வரலாறு திரித்தல் என்னும் திருஷ்டி மட்டும் தேவையா?

படத்தின் துவக்கத்தில் அந்த ரங்கராஜ நம்பி பாத்திரப் படைப்பு கற்பனையே என்று போட்டு விடுங்கள்!
இல்லை...இல்லை ரங்கராஜ நம்பி என்பவர் உண்மை தான்; சைவர்கள் அவரைக் கொடுமைப் படுத்திக் கடலில் சாய்த்தார்கள் என்று நீங்கள் கருதினால், அதற்கான ஆதாரங்களைத் தமிழ் மக்கள் முன் வைக்க நீங்கள் கடமைப்பட்டு உள்ளீர்கள்!

மற்றபடி உங்க பிரம்மாண்டமான படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
(Pic Courtesy: http://dasavatharamthefilm.blogspot.com/)

113 comments:

  1. வரலாற்றுப் பின்னணியோட ஆராய்ந்து எழுதி இருக்கீங்க!

    நல்ல முயற்சி!

    மத்தபடி நமக்கு இந்த வரலாறு, பூகோளம்லாம் தெரியாது!

    ReplyDelete
  2. கண்ணபிரான்! What a coincidence! இன்றிலிருந்து (எனக்குத்தொடங்கிவிட்டது, தமிழ்மணத்திற்கு இன்னுமில்லை) தொடங்கும் வாரத்தின் நட்சத்திரமான என் பதிவில் இது போன்ற ஒரு பிரச்சனையை எடுத்தாள்கிறேன். அது போது வந்து கலந்து கொள்ள விண்ணப்பம்!

    கமல் அடிக்கும் டூப்பை நன்றாகக் காட்டியுள்ளீர்கள். ஏற்கனவே பிரச்சனையாயிருக்கும் திருச்சித்திரக்கூடம் இன்னும் பிரச்சனைக்குரியதாகும் போலுள்ளதே! அட ராமா!!

    ReplyDelete
  3. சூப்பர்...

    அப்படியே கமலுக்கும் அனுப்பிட்டீங்களா?

    ReplyDelete
  4. நட்சத்திர வாழ்த்துக்கள் கண்ணன் ஐயா!
    நான் தான் மொதல்ல சொன்னேன்! மீ த பர்ஷ்ட்டு! :-)

    ReplyDelete
  5. //வெட்டிப்பயல் said...
    சூப்பர்...
    அப்படியே கமலுக்கும் அனுப்பிட்டீங்களா?//

    மல்லிகா ஷெராவத்
    CC: ஜாக்கி சான்-னு வேணும்னா அனுப்பறேனே வெட்டி! :-)))

    ReplyDelete
  6. வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்..

    மிக்க நன்றி கே.ஆர். எஸ். படம் பார்க்கும் எத்துணை பேருக்கு இந்த உண்மைகள் தெரியும்?. அட்லிஸ்ட் இணையத்தில் இருப்பவர்கள்/படிப்பவர்களாவது உணரும்படியா தரவுகளுடன் தந்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  7. சரி. கதைதான் விடுங்க. இதுக்குப் போயி இம்மாம் ரென்சனாகிக்கிட்டு....

    ஆமா பதிவு போட மேட்டர் கிடைச்சா விட மாட்டீங்க போல!!

    ReplyDelete
  8. அண்ணே! தமிழகத்தில் மாலிக் பூர் படையெடுப்பில்(வெறியாட்டத்தில் என்று படிக்கவும்) எத்தனையோ கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் வரலாற்றில் பதியபடவில்லை. அதை போல இந்த ரங்கராஜ நம்பியும் இருக்கலாம் இல்லையா? :))

    //வைணவ இலக்கியங்களை ஓரளவு அறிந்தவன் என்கிற முறையில்//

    நீங்களே ஒத்துக் கொண்டு உள்ளீர்களே ஓரளவு தெரியும் என. உங்களுக்கு தெரியாத மீதியில் இது இருக்கலாம் இல்ல? :p

    ReplyDelete
  9. தரவு தந்தால் தான் ஒத்து கொள்வேன்!னு அடம் எல்லாம் புடிக்க கூடாது. :)))

    அத்திப்பட்டி - இது கதை அல்ல நிஜம்! அது!னு தல சொன்னதை ஒத்துக்கொண்டீர்கள் தானே? அது போல தான் இதுவும். :D

    ReplyDelete
  10. இந்த பதிவுக்காக தான் மேலகோட்டை பயணமா? நடக்கட்டும், நடக்கட்டும். :p

    ReplyDelete
  11. Enjoyed reading this stuff, mate.
    I always admire kamal for his intricative details in his movies than any other contemporary directors and obviously KSRavikumar is a rubber stamp as far as this movie goes.

    Good picks though am not interested in this saiva, vainava vedic schools.

    I(or anyone else)could bear it if kamal goes on taking Maruthanayagam with these sort of true lies :))

    But then, we have to wait for the movie to see how he narrates it.

    ReplyDelete
  12. நல்லா இருக்கு. இந்த மாதிரி வரலாறெல்லாம் எனக்கு தெரியாது. படம் பார்க்கிறதுக்கு முன்னே இந்த மாதிரி ஒரு அருமையான விளக்கம் என்னை போல மக்களுக்கு தேவைதான்.
    :-)

    ReplyDelete
  13. அந்த தெலுங்கு பாடல் ஏற்கனவே பார்த்ததுதான். பதிவு போடலாமான்னு நெனச்சு வேண்டாம்ன்னு விட்டாச்சு.. அப்படி போட்டிருந்தாலும் உங்களைப் போல இவ்வளவு அழகா என்னால எழுதியிருக்கமுடியாது. :-)

    ReplyDelete
  14. @அம்பி
    மாலிக் காபூர் வெறியாட்டத்தில் எத்தனையோ கோவில்கள் சிதைக்கப்பட்டன தான்! சிறு சிறு கோவில்கள் வரலாற்றில் பதியப்படாமல் போயி இருக்கலாம்!

    ஆனா இங்கிட்டு பேசப்படுவது தில்லை! பெரும் சைவ/வைணவத் தலம்! கட்டாயம் ஏதாச்சும் ஒரு வரலாற்றிலாவது பதியாமல் போகாது!

    //அதை போல இந்த ரங்கராஜ நம்பியும் இருக்கலாம் இல்லையா? :))//

    இருக்க சான்ஸ் இல்லை!
    ஏன் என்றால், சம்பிரதாயத்துக்கு உயிர் கொடுத்த உத்தமர்களை, அதுவும் இது போல் ஒத்தையாக் கடலில் கட்டித் தூக்கிப் போடும் போது, அவர் பெயரைக் குரு பரம்பரை கட்டாயம் சொல்லும்!


    எத்தனையோ சிறு சிறு தொண்டர்களை எல்லாம் வரிசைப்படுத்தும் போது, ரங்கராஜ நம்பி என்று ஒருத்தர் இருந்திருந்தா அப்படி யாரும் அவரை லேசில் விட்டு விட்டு, மறக்க மாட்டார்கள்! குரு பரம்பரைக் கதைகளில் கூட இப்படி எல்லாம் ஒரு நம்பி கிடையாது!
    So benefit of doubt CANNOT be granted!

    ReplyDelete
  15. //நீங்களே ஒத்துக் கொண்டு உள்ளீர்களே ஓரளவு தெரியும் என. உங்களுக்கு தெரியாத மீதியில் இது இருக்கலாம் இல்ல?//

    கற்றது கைம்மண்ணளவு!
    எனக்குத் தெரியாத மீதியைக் கமல் சொல்லி இருக்காரே! அதான் கமலைக் கேட்டேன்!

    அவர் சார்பா நீங்க சொல்லிக் கொடுத்தாலும் சரி!
    உங்களிடம் பாடம் கேட்க நான் ரெடி! எப்போ வரட்டும் ஆசார்யரே?


    //ambi said...
    இந்த பதிவுக்காக தான் மேலகோட்டை பயணமா? நடக்கட்டும், நடக்கட்டும். :p//

    இந்தப் பதிவுக்கும் மேலக்கோட்டைக்கும் என்னா சம்பந்தம் அம்பி?
    காலங்கார்த்தாலயே ஒனக்குத் தீர்த்தமா? :-))

    ReplyDelete
  16. //நாமக்கல் சிபி said...
    வரலாற்றுப் பின்னணியோட ஆராய்ந்து எழுதி இருக்கீங்க!
    நல்ல முயற்சி!//

    நன்றிங்கண்ணோவ்!

    //மத்தபடி நமக்கு இந்த வரலாறு, பூகோளம்லாம் தெரியாது!//

    நமக்கும் பூகோளம் மாக்கோலம் எல்லாம் ஒன்னும் தெரியாது அண்ணாச்சி! எல்லாம் பெரியவங்க சொல்லிக் கொடுக்கறது தான்! :-)

    ReplyDelete
  17. //நா.கண்ணன் said...
    என் பதிவில் இது போன்ற ஒரு பிரச்சனையை எடுத்தாள்கிறேன். அது போது வந்து கலந்து கொள்ள விண்ணப்பம்!//

    கண்டிப்பா! வந்து கும்மிருவோம்-ல!

    //கமல் அடிக்கும் டூப்பை நன்றாகக் காட்டியுள்ளீர்கள்//

    :-))

    //ஏற்கனவே பிரச்சனையாயிருக்கும் திருச்சித்திரக்கூடம் இன்னும் பிரச்சனைக்குரியதாகும் போலுள்ளதே! அட ராமா!!//

    தில்லைப் பிரச்சனை என்னையச் சுத்தி சுத்தி வருது! மொதல்ல தீட்சிதர்கள் வந்து பதிவு போட வச்சாங்க! இப்ப கமல் வந்து பதிவு போட வைக்கறாரு! :-)

    இதுக்கெல்லாம் தானைத் தலைவி கீதாம்மா தான் வந்து பதில் சொல்லோனும்! :-))

    ReplyDelete
  18. //ஆனா இங்கிட்டு பேசப்படுவது தில்லை! பெரும் சைவ/வைணவத் தலம்! கட்டாயம் ஏதாச்சும் ஒரு வரலாற்றிலாவது பதியாமல் போகாது!
    //

    சரி தான். ஆனால் எத்தனையோ ஓலை சுவடிகள், தமிழ் நூல்கள் எல்லாம் வரலாற்றில் சிதைந்து போயின.

    ஏதோ தமிழ் தாத்தா புண்யத்தில் மீச்ச சொச்சமாவது கிடைச்சது. அப்படி அழிந்த ஓலைகுறிப்புகளில் இந்த ரங்க ராஜ நம்பி இருக்கலாம் இல்லையா? (லேசுல விட மாட்டோம் இல்ல).


    தியாகபிரம்மம் ராமர் மீது தெலுங்கில்(வெட்டி, கவனிக்கவும்) எழுதிய பாடல்கள் மட்டுமே பல்லாயிரம். அவரு அண்ணனே அதில் பெரும்பகுதிகளை ராமர் விக்ரகத்தோடு காவிரியில் தூக்கி போடலையா? (உங்களுக்கு தெரியாததா?)

    So My lord, benefit of the doubt should be given to Kamal and the case should be suspended as செல்லாது செல்லாது!. :))

    ReplyDelete
  19. //இந்தப் பதிவுக்கும் மேலக்கோட்டைக்கும் என்னா சம்பந்தம் அம்பி?
    //

    அதை மேலகோட்டை சென்று வந்த தாங்கள் தான் சொல்லனும் அண்ணே!
    :p

    //காலங்கார்த்தாலயே ஒனக்குத் தீர்த்தமா? //

    நீங்க மட்டும் காலையிலேயே புளியோதரை கிண்டும் போது நாங்க தீர்த்தம் சாதிக்க கூடாதா? :))

    ReplyDelete
  20. /அண்ணே! தமிழகத்தில் மாலிக் பூர் படையெடுப்பில்(வெறியாட்டத்தில் என்று படிக்கவும்) எத்தனையோ கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் வரலாற்றில் பதியபடவில்லை. அதை போல இந்த ரங்கராஜ நம்பியும் இருக்கலாம் இல்லையா?//

    @அம்பி, அவையெல்லாம் வரலாற்றில் இல்லைன்னா எப்படிய்யா உனக்கு தெரிஞ்சது?. (ஸ்தலபுரணம் மூலமான்னெல்லாம் சொல்லக் கூடாது, சொல்லிப்புட்டேன்).

    ஊர்ல/நாட்ல கை-கால் உடைந்த கோவில் சிற்பங்களெல்லாம் மாலிகபூர் படை உடைச்சதா?, வேற யாரும் இந்தமாதிரி செய்யல்லையா?.

    நந்தனார், தானா ஜோதில கலந்தாரோ இல்லை தள்ளி விட்டாங்களோ, ஆனா ரெண்டு விதமாவும் கதை/கருத்து இருக்கும் போது, இதுமட்டும் எப்படி சுத்தமா ட்ரேஸ் ஏதும் இல்லாம அழிந்திருக்கும்?.

    கமல் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக நீங்க இப்படி வரிஞ்சு கட்டி சப்போர்ட் பண்றீங்க பாருங்க. போற போக்குல பாலபிஷேகம் எல்லாம் பண்ணுவீங்க போல?

    ReplyDelete
  21. //இதுக்கெல்லாம் தானைத் தலைவி கீதாம்மா தான் வந்து பதில் சொல்லோனும்! :-))//

    கண்டிப்பா வருவாங்க தலைவி...நீங்க கூப்புடறீங்கன்னு போன்ல சொல்லிடறேன்...:-)

    ReplyDelete
  22. //பின்னர் சோழனே கிருமி நோய் கண்டு "கிருமி கண்ட சோழனாய்" செத்தது எல்லாம் தனிக்கதை! //

    நீங்கள் பதிவில் எழுதியிருக்கும் விஷயம் எதைப்பற்றியும் உங்களிடம் பேச எனக்கு தேவையில்லை. EOD நாமிருவருமே மாறப்போவதில்லை என்பதால்.

    //இந்த வரலாறு திரித்தல் என்னும் திருஷ்டி மட்டும் தேவையா?//

    வரலாறு திரித்தல் பற்றி பேசும் நீங்கள் மேலே சொல்லியிருப்பதும் அஃதே!

    இரண்டாம் குலோத்துங்கன் பற்றி விக்கிபீடியாவில் இருந்து சில வரிகள்.(இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை, புத்தகம் கைவசம் இருக்கிறது. வேண்டுமானால் ரவிசங்கரால் இரண்டாம் குலோத்துங்க சோழன் முழுமையாக எழுதப்படலாம்.)

    KA நீலகண்ட சாஸ்திரி சொல்வது போல், இம்மன்னனின் காலம் மட்டுமல்ல பல மன்னர்களின் காலங்களிலும் எழுதப்பட்ட பாடல்களை வரலாற்று ஆதாரங்களாக பயன்படுத்த முடியாது.

    கிருமி கண்டு செத்துப்போனான் என்றெல்லாம் எதை வைத்து சொல்கிறீர்கள் நானறியேன்.

    போகிற போக்கில் சேறை அள்ளி இறைத்துச் செல்லாதீர்கள். முடிந்தால் இதைப்பற்றி விரிவாக எழுதிவிட்டு பின்னர் சேறிரைக்கலாம்.

    நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள் என்பதறியாமல் என்னால் பேசமுடியாது என்றாலும், "வரலாற்று" ஆதாரங்கள் படி இம்மன்னன் கிருமி கண்டு செத்ததெல்லாம் நீங்க சொல்ற அதே உடான்ஸ் தான்.

    ReplyDelete
  23. http://ta.wikipedia.org/wiki/குலோத்துங்க சோழன் II

    விட்டுப்போன உரல்.

    ReplyDelete
  24. வழக்கம் போல அழகா செயதிகளும் விளக்கங்களும்....
    கலக்குங்க....

    ReplyDelete
  25. ஹாய் கேஆரெஸ்,

    வாவ்.. ரொம்ப பொருமையா, அழகா புரியறா மாதிரி சொல்லியிருக்கீங்க, அதுக்கு ஒரு தேங்க்ஸ்.

    அப்பறம், கமலோட படம்னாலே இந்த அம்பி மாதிரி கதயோ இல்ல லாஜிக்கோ இதுல்லாம் பாக்க்க மாட்டாங்க. மொத்தத்துல அது கமலோட படம், லைக் சிவாஜி மாதிரி.
    அவ்ளோதான்.ஆனா நம்மள மாதிரி சில பேரு தான், ஏன் எப்படியும் மதன்ஸ் திரைப் பார்வையில் கூட கண்டிப்பா இது மாதிரி சில கேள்விகள் வரலாம், ஹாசினி ஷோலயும் சிலப்போ கேட்கப் படலாம்.
    அதில பாக்கலாம் என்னலாம் (சமாளிக்க) சொல்லப் போறார்னு.

    பட் நீங்க சும்மா நச்சுன்னு சரித்திரம் னுலாம் பிச்சு உதர்றீங்கலே, அது தான் ஒன்னுமே பிரிய மாட்டேங்குது.

    ReplyDelete
  26. //படத்தின் துவக்கத்தில் அந்த ரங்கராஜ நம்பி பாத்திரப் படைப்பு கற்பனையே என்று போட்டு விடுங்கள்!//
    Just "பரபரப்புக்கு எழுதப்பட்ட பதிவு" என்று ஒரு டிஸ்கி கொடுத்திருக்கலாம் ! மற்றபடி, சினிமாவை சினிமாவா பார்த்தா நல்லது.

    சிண்டு முடிய, பிணக்கை அதிகரிக்க இந்தப்பதிவு உபயோகப்படும் !!!

    கமலுக்கு "வைணவ","சைவ" பாசம் எதுவும் கிடையாது என்பதை கலைஞரே ஒப்புக் கொள்வார் !

    ReplyDelete
  27. Hereafter Kamal wll become Kamalhasan Azhwar and he wil lead his tirade against the Saivites and put all the Saivites in to the ocean. Vaali will be his warrior. Poonul will win the match and Periyar will bless the true Atheist Kamal Hasan.

    ReplyDelete
  28. நல்ல விமர்சனம்! தமிழர் வரலாறு அறிந்த எல்லாருக்கும் தோன்றுவதுதான் நீங்கள் பொறுமையாக, அழகாக, விளக்கமாக எழுதியதற்கு நன்றி!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  29. நல்ல ஆராய்சி செய்து எழுதியிருக்கீங்க. நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன். நன்றி.

    ஆனால்....

    //சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது; தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது = இங்கிட்டு தான் லேசா இடிக்குது!//

    இதில் இடிக்க என்ன இருக்கு? சைவம், வைணவம் என்றில்லை, பொதுவாக எடுத்துக்கொண்டு பாருங்கள் - 'சமயநோக்கில் சிந்திப்பது வேறு ஆன்மிகம் வேறு' communalக்கும் spiritualityக்கும் உள்ள வித்யாசம்! இதைத்தானே இந்த வரிகள் சொல்கிறது... என்றும் இருக்கலாம் இல்லையா?

    ReplyDelete
  30. //அவையெல்லாம் வரலாற்றில் இல்லைன்னா எப்படிய்யா உனக்கு தெரிஞ்சது?.//

    @மதுரையம்பதி அண்ணா, பல கோவில்கள் சிதைக்கப்பட்டன!னு தான் சொன்னேனே தவிர எவை எல்லாம்?னு சொல்லலை, ஏன்னா யாருக்கும் தெரியாது, அவ்ளோ அட்டகாசம் நடந்தேறி இருக்கு.

    //இதுமட்டும் எப்படி சுத்தமா ட்ரேஸ் ஏதும் இல்லாம அழிந்திருக்கும்?.
    //
    ஏன் அழிந்திருக்க கூடாது? அல்லது அழிந்திருக்க முடியாது? :p

    //கமல் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக நீங்க இப்படி வரிஞ்சு கட்டி சப்போர்ட் பண்றீங்க பாருங்க.//

    என் பின்னூட்டத்தில் அந்த கதாபாத்ரத்தை தான் குறிப்பிட்டேனே தவிர கமல்னு நான் எங்கே சொல்லி இருக்கேன்? :))

    ReplyDelete
  31. நல்ல பதிவு கேஆரெஸ்.

    கமல் ஏன் எல்லாப் படத்திலயும் கொஞ்சம் பிராமணீயத்தையும் (or) தெய்வ சம்பந்தப்பட்ட விஷயங்களை வேண்டுமென்றே நுழைக்கிறார்? தான் பிராமணன் அல்லன் என உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டே இன்னொருபுறம் தன்னுடைய படங்களில் இதைப்போல பிராமணீயம்/தெய்வ சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தொடுவது அல்லது கிண்டல் செய்வது, அவரைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டம் பெரும்பாலும் FC/OC எனப்படும் முன்னேறிய வகுப்பினர். அட்டென்ஷன் டு டீடெய்ல் என கோடிகளிகளில் செலவிடுவது ஆனால் இதைப்போல சிலரை புண்படுத்துவது (பெரும்பாலும் பார்ப்பணர்களை) என வழக்கமாகக் கொண்டுள்ளார். நிஜவாழ்க்கையில் தான் ஐயராய் (யங்காராய்) இருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை இதுமாதிர வேஷம் கட்டி ஆசைத் தீர்த்துக்கொள்கிறாரா ?

    இப்படிக்கு பல வருட கமல் ரசிகன்.

    ReplyDelete
  32. மறுபடியும் .' ஸ்ரீராமானுஜர் என்று சுவாமி ராமகிருஷ்ணானந்தா எழுதிய புத்தகத்தைப்புரட்டிப்பார்த்தேன். குமாரவாடிரானனுஜாசாரியார் அவர்கள்
    எழுதிய' பகவத் ராமானுஜர்' நூலையும் வாசித்தேன்..எங்காவது ஓரிடத்தில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றிருக்கிறதா என்று. நீங்கள் குறிப்பிட்டது தவிர சோழமன்னன் கிரிமிகண்டன் என்பவன் தீவிர சைவனாக இருந்து அவன் சபையில் கூரத்தாழ்வாருடன் ராமானுஜர் சென்றதும் அங்குநடந்த விவாதங்களும் மட்டுமே இடம் பெற்றுள்ளன.


    //சம்பிரதாயத்துக்கு உயிர் கொடுத்த உத்தமர்களை, அதுவும் இது போல் ஒத்தையாக் கடலில் கட்டித் தூக்கிப் போடும் போது, அவர் பெயரைக் குரு பரம்பரை கட்டாயம் சொல்லும்!//

    கண்டிப்பாக சொல்லும். ரங்கராஜன்(சுஜாதா) இப்போது இருந்திருந்தால்
    விளக்கம் தந்திருப்பார்.

    திருவரங்ககவிஞர் வாலியும் (இவரும் ரங்கராஜனே:))வாய்மூடிக்கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது!
    நம்பி படம் பார்க்க வருபவர்களுக்கு இந்தப் புது நம்பி விவரம் அதிர்ச்சியாகவே இருக்கும்.
    வைணவசான்றோர்கள் அலசப்போகிறார்கள் அது நிச்சயம்.

    ரவிநம்பி! கமலுக்கு நன்றாகவே மடலெழுதிக்கேட்டிருக்கிறீகள்!

    பதில் வராதுதான்..ஆனால் மற்றவர்க்ளை மடல் சிந்திக்கவைத்தால் அதுவே போதும்.

    உடையவர் சரித்திரம் தெரிந்தவர்களின் மனம் உடைந்துதான் போகிறது இதனால்.

    ReplyDelete
  33. க.ர.ச,

    இது தொடர்பான கொஞ்சம் நானும் எழுதினேன், இந்தப் பதிவின் பின்னுட்டத்தில்.. பார்க்க, படிக்க, திட்ட இங்க கொஞ்சம் வாங்க.... :))

    ReplyDelete
  34. Dear Sir,

    When there were no religions like Islam and Christianity, there must be some other religions to quarrel with. This is the fate that befalls all religions, as we see from world as well as local history. In ancient times such as that of alvaars, the achaariyaars like Ramanujar, and saints like Appar & others, there were quarrels between Hinduism and Jainism/Buddhism in TN; when both Jains and Buddhists were vanquished in TN, the vacuum left after, was filled by the quarrels between the sects within Hinduism. Due to radical reformation taken by Ramanujar, Vaishnavam overtook the other sect namely, Saivism by leaps and bounds. The Saivism was at that time in the tight hands of no-changers, whereas Vaisnavism extricated itself from the orthodox Brahmins, thanks to the bold efforts of Ramanujar and his followers. The quarrels turned into bitter and ferocious war between the two sects during the time of Ramanujar. He and his disciples paid the heavy price – of exile and extermination. Periyanambi and Kureesar, in particular. The gorging out of their eyes was the most horrendous and horrifying event.
    Assuming that the character Rangaraaja Nambi is a fiction, casting him off into the sea does not evoke such terror as that of gorging out of the eyes of the said two in broad day light before the public.
    It is, in my view, a fact that is not overstated by Kamal. He should show the gorging out of the eyes, instead of creating a fictitious character. No question would have been asked then, would it?
    Only flip side of the movie is in its timing. Is it necessary to recall such a past that shows such horror and will create divisions within Hinduism? Today, the religion faces stiff fight from other alien religions like Islam and Christianity; and the Hindu originations are calling for unity, aren’t they? Is Kamal helping those religions? VHP has rightly filed a case in HC of Madras questioning the motives of Kamal!


    From

    Karu Manickam

    ReplyDelete
  35. நன்றாக ஆராய்ந்து எழுதப்பட்ட பதிவு. அதிலும்,

    //தந்தை பெரியாருக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே, ஸோ கால்டு கீழ்க்குலத்தாரை, ஆலயத்துக்குள் அழைத்துச் சென்ற கதை இருக்கு! அதை எடுங்க!//
    என்ற வரிகள் அருமையிலும் அருமை! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. //enRenRum-anbudan.BALA said...
    Just "பரபரப்புக்கு எழுதப்பட்ட பதிவு" என்று ஒரு டிஸ்கி கொடுத்திருக்கலாம் !//

    ஏன்? எதற்கு கொடுக்க வேண்டும்?
    பரபரப்புக்கு எழுதும் பழக்கம் என் சுபாவத்தில் இல்லை பாலா!
    பரபரப்புக்கு எழுதனும்னா ஆன்மீகம் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன்!
    தி. ஊ.அனானி-ன்னு வேற விஷயம் எல்லாம் எழுதிக் கொண்டிருப்பேன்! :-))))

    //மற்றபடி, சினிமாவை சினிமாவா பார்த்தா நல்லது//

    அதைத் தான் கமலிடமும் சொல்கிறோம்! சினிமாவை சினிமாவாப் பாருங்க! வரலாற்றை வேறு மாதிரிக் காட்டிக் குழப்பாதீங்க, குழம்பிக்காதீங்க-ன்னு சொல்லுறோம்.

    //சிண்டு முடிய, பிணக்கை அதிகரிக்க இந்தப் பதிவு உபயோகப்படும் !!!//

    இரும்பை உருக்கத் தான் வேண்டும்! உருக்கினாப் பிறகு கத்தி செஞ்சிருவாங்களோ-ன்னு பயந்து இரும்பு செய்யாம இருக்க முடியாது!

    //கமலுக்கு "வைணவ","சைவ" பாசம் எதுவும் கிடையாது என்பதை கலைஞரே ஒப்புக் கொள்வார் ! //

    ஹிஹி! கமல் ஒப்புக் கொள்வாரா? (தன்னெஞ்சறிவது பொய்யற்க) :-)

    ReplyDelete
  37. @மோகன்தாஸ்
    மோகன் உங்க கருத்துச் செறிவான பின்னூட்டத்துக்கு நன்றி!

    //EOD நாமிருவருமே மாறப்போவதில்லை என்பதால்//
    உண்மை தெளிவாக அறியப்படும் போது என் கருத்தை மாற்றிக் கொள்ள நான் வெட்கப்படவே மாட்டேன்!

    1.நான் இங்கு வரலாறு திரிக்கவில்லை!
    2.விக்கி மட்டுமே தகுந்த ஆதாரம் ஆகி விடாது (அதுவும் அதில் நீங்க எழுதும் போது :-))
    3.KA நீலகண்ட சாஸ்திரி (KAN)-ஐ நீங்க காட்டினால் என்னால் Dr.நாகசாமியைக் காட்ட முடியும்
    4.பாடல்களை வரலாற்றுக்குப் பயன்படுத்த முடியாது என்று சொல்கிறீர்கள்! மன்னர்கள் தாங்களே வெட்டிக் கொள்ளும் கல்வெட்டு/மெய்கீர்த்தி மட்டும் எப்படி நம்புகிறீர்கள்?

    வரலாறு என்பது ஒருவரின் தொகுப்பு அல்ல மோகன்! பலரின் பார்வைகளின் படிமங்கள்!
    100% கண்ணாடியாக வரலாறு இருக்க முடியாது! ஒரு கட்சியினர், மறு கட்சியனர், பொதுவானவர்கள், யாத்ரீகர்கள் பயணக் குறிப்பு, கல்வெட்டுகள், புலவர் பாடல்கள் என்று ஒட்டு மொத்த படிமங்களில் இருந்து நுணுக்கி அறியப்படுவது!
    அதுவும் நம் நாட்டில் ஓவர் சென்டி/சார்பு நிலையில் இருந்து ரொம்பவே நுணக்க வேண்டும்!

    தொன்மையை எவ்வளவு தூரம் ஆராயப்பட வேண்டும் என்பதும் ஒரு கேள்வி! வரலாறில் பெரும் சம்பவங்களில் கவனம் செலுத்தி ஆராயும் அளவுக்குச் சிறு சம்பவங்களில் முடியாது!
    தொன்மம் வரும் தலைமுறைக்குப் பயன் உள்ளதாயும் இருக்கணும்! அதைப் பொறுத்து தான் ஆய்வின் Priority!

    தொன்மம் தேவை! ஆனால் தொன்மத்தில் மட்டுமே நிற்க முடியாது! தொடர்ச்சியும் தேவை!
    தொன்மமா? தொடர்ச்சியா??

    //புத்தகம் கைவசம் இருக்கிறது. வேண்டுமானால் ரவிசங்கரால் இரண்டாம் குலோத்துங்க சோழன் முழுமையாக எழுதப்படலாம்.)//

    அடியேனால் இப்படி ஒரு திருப்பணியா? சீக்கிரம் துவக்குங்க! உண்மை-ன்னா வந்து பாராட்டுறேன்! தரவுகள் சரியில்லீன்னா விக்கியில் வந்து disputable content-nnu மார்க் செய்கிறேன்!

    ReplyDelete
  38. கண்ணாளனைக் கல்லில் கட்டி கொக்கியில் ஏற்றி கடலில் கரைக்கும்போதும் அசின் எவ்வளவு எடுப்பா பளபளன்னு மின்னறாங்க? அந்த மாதிரி விஷயத்த சொல்லாம, எதப் பத்தியோ பேசிண்டு இருக்கீங்க :P

    ReplyDelete
  39. விக்கியை நானே உதாரணமாக வைக்க மாட்டேன். அதற்கு நீங்கள் சொன்னது தான் காரணம் நானும் எழுதுவதால்.

    Dr. நாகசாமியை பற்றி எழுதலாம், எழுதுங்க, எங்க 'கிருமி கண்ட சோழன்' வருதுன்னு ஆதாரத்தோட. அப்புறம் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்வோம் 'கிருமி வந்த சோழனுக்கு' என்ன விளக்கம் இருக்க முடியும்னு.

    கிருமி வந்து செத்துப்போனான்னு ஆதாரம் இல்லாம சொல்கிறீர்கள் என்றேன் இன்னும் பதில் சொல்லலை, முன்னமே சொன்னது போல் எனக்கு மற்ற விஷயங்களில் ஆர்வம் கிடையாது.

    கிருமி வந்து செத்துப் போன சோழன் கதை சொல்லுங்க. கேட்டுக்கிறேன்.

    ReplyDelete
  40. again @ Mohan
    நான் பதிவில் சொன்னதைச் சரியாகப் பாருங்க!
    //இரண்டாம் குலோத்துங்கன் தில்லையில் செய்தது இவ்வளவு தான்! சோழன் கொடுமைகள் எல்லாம் திருவரங்கத்தில் தான்!//

    குலோத்துங்கன் II தான் கிருமி கண்ட சோழன்-ன்னு நான் சொல்லலை! வெறும் "சோழன்" என்று தான் ஜாக்கிரதையாகச் சொன்னேன்! தில்லை கோவிந்தராசர் விஷயத்தில் அடாது செய்தது இரண்டாம் குலோத்துங்கன். இதை அவனைப் புகழ்ந்து பாடிய ஒட்டக் கூத்தரே குலோத்துங்கன் உலாவில் "பெருமையாச்" சொல்லி இருக்காரு!

    ஆனால் திருவரங்கம் கொடுமைகளைப் பொறுத்த வரை அதைச் செய்தது யார் என்பது இன்னும் வரலாற்று ஆய்வில் தான் இருக்கு!
    அதிராசேந்திர சோழன் என்பது ஒரு கருத்து!
    குலோத்துங்கன் I என்ற கருத்து KA நீலகண்ட சாஸ்திரியார் உட்பட பலரால் தள்ளப்பட்டு விட்டது.
    குலோத்துங்கன் II என்ற கருத்தும் நிலவுகிறது!

    இராமானுசர் மொத்தம் 7-8 சோழ மன்னர்களைப் பார்த்தவர்! குலோத்துங்கன் II - அவர் வாழ்நாள் இறுதி! அதனால் அதிராசேந்திர சோழன் தான் கொடுமைகளைச் செய்தான் என்ற கருத்து இப்போது தீவிரமாக நிலை கொள்கிறது!

    மேலும் வைணவ இலக்கியங்கள் மிகவும் மனம் நொந்து போய், கொடியவனின் பேரைக் கூட வாயால் சொல்லக் கூடாது என்ற ஓவர் சென்ட்டியால் கிருமி கண்ட சோழன் என்றே சொல்வதால், அவன் யார் என்பதை வரலாற்றில் அறிந்து கொள்ளவும் கொஞ்சம் கடினமாக இருக்கு!

    ஆனால் கொடுமைகள் நடந்தது நிஜம் தான் என்பதைக் திருவரங்கக் கோயில் ஒழுகும், கல்வெட்டுகளும், வைணவம் சாராத குறிப்பேடுகளும் சொல்லித் தான் சென்றுள்ளன! அதைத் தான் இன்னும் ஆய்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். அதனால் தான் இன்னான் தான் கிருமி கண்ட சோழன் என்று சொல்லாது, வெறும் "சோழன்" என்று மட்டும் குறிப்பிட்டேன்!

    நீங்கள் நினைப்பது போல் வரலாறே படிக்காமல், ஆன்மீக போதையில் மட்டும் ஊறுபவன் நான் அல்ல! எது எது எந்த அளவு என்று தெரி(ளி)ந்து தான் முடிவுக்கு வருவேன்!

    என் மனத்துக்கு இனிய பெருமாளுக்கு மட்டுமே குடை பிடிக்க எண்ணினால், இந்தப் பதிவே போட்டிருக்க மாட்டேன்!

    அது பெருமாள் ஆகட்டும் இல்லை முருகன் ஆகட்டும்! உண்மைக்குத் தான் முதலிடம்! ஏனெனில் இறைவன் "சத்திய" சொரூபன்!

    நல்லன சொல்லிட நடுக்கம் இல்லை! அல்லன அகற்றிடவும் எனக்குத் தயக்கம் இல்லை!

    ReplyDelete
  41. //Boston Bala said...
    அசின் எவ்வளவு எடுப்பா பளபளன்னு மின்னறாங்க? அந்த மாதிரி விஷயத்த சொல்லாம, எதப் பத்தியோ பேசிண்டு இருக்கீங்க :P//

    தோடா! பாபா-வா மாதவிப்பந்தலுக்கு வராரு? :-)))
    //(அட! புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!!!!!)//-ன்னு பதிவுல சொல்லி இருக்கேனே பாபா! கொஞ்சம் கற்பனை செஞ்சு சூடண்டி! ஆகா! ஓகோ! :-))

    சரி, நீங்க எப்போ பானுப்ரியாவிடம் இருந்து எங்க அசினுக்கு கட்சி மாறினீங்க?? :-)

    ReplyDelete
  42. @மோகன்

    பதிவின் கருப்பொருள் கிருமி கண்ட சோழன் இல்லை! ரங்கராஜ நம்பி-குலோத்துங்கன் II தான்!

    அதனால் தான் உங்க கேள்விக்குப் பதில் சொல்லல! ஆனா நீங்க சைட்லைனை மட்டும் பிடிச்சிக்கிட்டு நிக்கறீங்க! அதைத் தனி விவாதமாக வைத்துக் கொள்ளலாம்!

    //கிருமி வந்து செத்துப்போனான்னு//
    வுட்டா மெடிக்கல் ரிப்போர்ட், சர்ட்டிப்பிக்கேட், அவனோட டாக்டர் நர்ஸ் பேரு எல்லாம் கேப்பீங்க போல! :-)

    கிருமி கண்ட சோழன் பற்றிய பொதுவான தகவலை முந்தைய பின்னூட்டத்தில் பாருங்க!
    முன்பே சொன்னது போல் அவனுக்கு வழங்கப்பட்ட பேரு அது!
    அவன் கிருமி வந்து செத்தானா இல்லை உறுமி உறுமி செத்தானா என்பதை விட,
    அவன் கொடுமைகளால் நடந்த தீமைகள் தான் வரலாற்று ஆய்வில் priority!

    Vital Few! vs. Trivial Many!! is the need of historical explorations!

    ReplyDelete
  43. //(இரண்டாம் குலோத்துங்கன் தில்லையில் செய்தது இவ்வளவு தான்! சோழன் கொடுமைகள் எல்லாம் திருவரங்கத்தில் தான்! இராமானுசரை கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைக்கு ஓட ஓட விரட்டியது, அவருடைய வயதான குரு பெரிய நம்பிகள், மற்றும் இளையவரான சீடர் கூரத்தாழ்வான் - இருவரின் கண்களைப் பிடுங்கிய பயங்கரம், பின்னர் சோழனே கிருமி நோய் கண்டு "கிருமி கண்ட சோழனாய்" செத்தது எல்லாம் தனிக்கதை! அதற்கும் தசாவதாரம் கதைக்கும் தொடர்பில்லை!)//

    இரவிசங்கர், பல சமயம் இரண்டாம் இராஜேந்திரன் பற்றி எழுதும் பொழுது எல்லா சமயங்களிலும் இரண்டாம் இராஜேந்திரன், இரண்டாம் இராஜேந்திரன் என்று சொல்வது கிடையாது.

    கான்டெக்ஸ்டில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது புரிந்து கொள்வார்கள் என்று இராஜேந்திரன் என்றே சொல்லி விட்டுவிடுவதுண்டு.

    இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு அருகில் நீங்கள் சோழன் என்று பயன்படுத்தியது அவனைத்தான் என்றே நினைத்தேன்.

    நீங்கள் வரலாறு தெரியாமல் எழுதுகிறீர்கள் என்று சொல்லவில்லை, இன்னமும் கூட சொல்லப்போனால் நீங்க எந்த ஆதாரத்தை வைத்து பேசுகிறீர்கள் என்றே என் முதல் பின்னூட்டத்தில் கேட்டேன். வரலாற்று ஆதாரமாக இருந்தால் ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை; இல்லாவிட்டால் உங்கள் வழிதான் disputable contentன்னு போடுவது.

    நீங்கள் கடைசியில் எழுதியிருக்கும் பின்னூட்டத்தில் நீலகண்ட சாஸ்திரி "கிருமி கண்ட சோழன்" ஒப்புக் கொண்டதைப் போல் எழுதியிருக்கிறீர்கள், அவர் அந்தப் பாடல்கல் குறிப்பிடும் ஆள் யாராய் இருக்கலாம் என்பதைத்தான் சொல்கிறாரே தவிர்த்து, அவன் 'கிருமி கண்ட சோழனா' என்று சொல்லவில்லை.

    எனக்கு இன்னமும் தெளிவாய்க் கேட்டீர்கள் என்றால் "கிருமி கண்ட சோழன்" என்ற பதத்தில் பெரிய பிரச்சனையில்லை, வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலனை, பாண்டிய நாட்டில் மட்டம் தட்டி எழுதப்பட்ட நாட்டுப்புற பாடல்கள் உண்டு. சட்டென்று 'காண்ட்' ஆகி 'கிருமி கண்ட சோழன்' என்று புலம்பியிருக்கலாம்.

    ஆனால் நீங்கள் சொல்வது போல், அந்த சோழ அரசன் "கிருமி நோய்" கண்டு இறந்தவன் என்பதற்கான ஆதாரத்தை தான் கேட்டேன்.

    சைவர்களுக்கு சாதகமாய் வைணவர்களுக்கு ஆதரவாய், திருவரங்கத்தில் ராமானுஜருக்கு 'காண்டு' செய்தான் என்பதால் அவனுக்கு அந்நோய் வந்தது போன்றும் அதனால் அவன் இறந்தது போன்றும் நீங்கள் சொல்லவரும் மேற்குறிப்பிட்ட பத்தி சொல்வதாய் எனக்குப் பட்டது.

    அதனால் தான் அவன் 'கிருமி நோய் வந்து' செத்துப் போனான் என்பதற்கான ஆதாரத்தை தரமுடியுமா என்று கேட்டேன், அது KAN ஆகயிருந்தாலும் சரி நாகசாமியாக இருந்தாலும் சரி.

    ReplyDelete
  44. //இலவசக்கொத்தனார் said...
    சரி. கதைதான் விடுங்க. இதுக்குப் போயி இம்மாம் ரென்சனாகிக்கிட்டு....//

    ரென்சன் இல்லை கொத்ஸ்!
    கதையில ரொம்ப கத வுடாதே-ன்னு உலகநாயகனை மிரட்ட ஒரு சான்ஸ் தானே? :-))

    //ஆமா பதிவு போட மேட்டர் கிடைச்சா விட மாட்டீங்க போல!!//

    எல்லாம் கொத்தனார் கா(நா)ட்டிய வழி! :-)

    ReplyDelete
  45. //மதுரையம்பதி said...
    வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்..//

    என்னைய ஊர் ஊராச் சுத்தச் சொல்றீங்களா மெளலி அண்ணா?
    எல்லா நாட்டுலயும் போயி எப்படி வாழறதாம்? :-)

    //இருப்பவர்கள்/படிப்பவர்களாவது உணரும்படியா தரவுகளுடன் தந்தமைக்கு நன்றிகள் பல//

    தரவு! தரவு-ன்னு தாவு தான் தீருது! :-)

    ReplyDelete
  46. கே ஆர் எஸ்..

    ஹே ராம் படம் வெளிவருவதற்கு முன்னால் காந்தியை அவமானப்படுத்தும் படம் என்று ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டது - பின்னால் என்ன ஆனது என்பது எல்லாருக்கும் தெரியும்.

    நீங்கள் சொல்வது தவறு எனச் சொல்லவரவில்லை, அந்த அளவுக்கு எனக்கு விஷயம் தெரியாது. ஆனால் கமல் படம் என்பதால், வெயிட் பார் த ரிலீஸ் -- கல்லெறியும் முன் காத்திருப்போமே ;)

    ReplyDelete
  47. //அதனால் தான் உங்க கேள்விக்குப் பதில் சொல்லல! ஆனா நீங்க சைட்லைனை மட்டும் பிடிச்சிக்கிட்டு நிக்கறீங்க! அதைத் தனி விவாதமாக வைத்துக் கொள்ளலாம்!//

    இரவிசங்கர்,

    இதற்கான பதில் முந்தைய பின்னூட்டத்தில் சொல்லிட்டேன்.

    இதுதான் அது

    --சைவர்களுக்கு சாதகமாய் வைணவர்களுக்கு ஆதரவாய், திருவரங்கத்தில் ராமானுஜருக்கு 'காண்டு' செய்தான் என்பதால் அவனுக்கு அந்நோய் வந்தது போன்றும் அதனால் அவன் இறந்தது போன்றும் நீங்கள் சொல்லவரும் மேற்குறிப்பிட்ட பத்தி சொல்வதாய் எனக்குப் பட்டது.--

    பல சமயங்களில் இடைச்செறுகல்கள் தான் பிரச்சனை, நீங்கள் சொல்வதைப் போல சினிமா மூலம் வரலாறு தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என்கிறீர்கள், உங்களுக்கு பெருமாளோடு ராமானுஜ நம்பி கட்டி கடலுக்குள் போடப்பட்டானா என்பது பெரிய விஷயம்னா.

    எனக்கு நான் மேலே சொல்லியிருப்பது பெரிய விஷயம். நாளைக்கு, "கண்ணபிரான் ரவிஷங்கர்" சொல்லிட்டார் இரண்டாம் குலோத்துங்கன் கிருமி நோய் வந்து தான் இறந்து போனான்னு, வரலாறு திருப்பப்பட்டு விடக்கூடாதில்லையா.

    உங்களால் வரலாறு திருப்பப்படாதுன்னு சொன்னீங்கன்னு, கமலால மட்டும் எப்படி முடியும். உலகத்தில் கமலஹாசனையும், இராமனுஜரையும் இன்னும் ஏன் பெருமாளையுமே தெரியாத மக்கள் இருப்பார்கள் இல்லையா? வரலாறு எப்படியும் வரலாறு தானே!

    எனக்கென்னமோ உங்கள் மொத்தப் பதிவுமே தன்னுடைய "மையக் கருத்தா"க, கடவுளுக்கு எதிராக எதையும் செய்தால் கிருமி நோய் வந்து இறந்து போவார்கள் என்று சொல்ல வருவதைப் போல் ஒரு பிரமை. உண்மையில் அது அப்படி இல்லாமலும் இருக்கலாம் ஒரு பிரச்சனைக்கு இன்னொரு பக்கமும் இருக்கலாம் என்ற விதத்தில் அதை என்னால் ஒப்புக்கொள்ள முடியும் :)

    ReplyDelete
  48. //ambi said...
    தியாகபிரம்மம் ... அவரு அண்ணனே அதில் பெரும்பகுதிகளை ராமர் விக்ரகத்தோடு காவிரியில் தூக்கி போடலையா? (உங்களுக்கு தெரியாததா?)//

    அதுல தொலைந்து போன பாடல்கள் ஏராளம்!
    ஆனா அப்படி ஓலைகளைத் தூக்கிப் போட்டாருன்னு ஆச்சும் நமக்குத் தெரியுதே!

    ஆனா இங்க ரங்கராஜ நம்பி ஓலையும் இல்ல! அவரைத் தூக்கிப் போட்டாங்கன்னும் தெரியல!

    So Mr. Petitioner (Ambi)
    Your clemency appeal for benefit of doubt to the accused (Kamal)is summarily rejected to dispense justice!

    எப்படி நாங்களும் லேசுல விடமாட்டோம்-ல! :-)

    ReplyDelete
  49. //அதை மேலகோட்டை சென்று வந்த தாங்கள் தான் சொல்லனும் அண்ணே!
    :p//

    மேலக்கோட்டை போனது பர்சனல் விசயம்! அதை உனக்குச் சொல்ல முடியாது!
    ஆனா இந்தப் பதிவு சம்பந்தமாத் தான் போனேன் குற்றம் சாட்டுன நீ தான் chargesheet file பண்ணித் தரவு வைக்கணும்!
    தரவு! தரவு! :-))))

    //நீங்க மட்டும் காலையிலேயே புளியோதரை கிண்டும் போது//
    Me not puliyotharai kinding!
    Only Turkish Fallafel Kinding :-))

    ReplyDelete
  50. வரலாற்று ஆசிரியர்கள் சமர்பிக்கும் கட்டுரைகளில் விவாதம் செய்யலாம். ஆனால் வரலாறு துணைகொண்டு செய்யப்படும் புனைவிலக்கியங்கள் விவாதத்துக்கு உரியன அல்ல என்பது என் கருத்து. இது கல்கியோ சாண்டில்யனோ பாலகுமாரனோ கமல்ஹாசனோ எல்லோருக்கும் பொதுவானதுதான்.

    ஆவணப்படம் என்று கருதப்படுகிற 'பெரியார்' படத்தில் நேப்பியர் பூங்கா கூட்டத்தில் கலைஞரைக் காட்டியதற்கு எவ்வளவு எதிர்ப்பு வந்தது?

    ReplyDelete
  51. //ஆவணப்படம் என்று கருதப்படுகிற 'பெரியார்' படத்தில் நேப்பியர் பூங்கா கூட்டத்தில் கலைஞரைக் காட்டியதற்கு எவ்வளவு எதிர்ப்பு வந்தது?//

    பெரியார் 'ஆவணப்படம்' அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. ஆவண்பபடம் என்பது 'Documentary' வகையை சார்ந்தவை. 'பெரியார்' திரைப்படம் வணிகப் படமே.

    ReplyDelete
  52. ஸ்ரீதர்...உங்க முதல் மறுமொழி வரலையே!

    ReplyDelete
  53. முன்னே நான் அனுப்பிய பின்னூட்டம் காணவில்லை. எரிதத்தில் மாட்டி கொண்டிருக்கிறதோ அல்லது ப்ளாக்கரில் மாட்டி கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. நினைவிலிருந்து மீண்டும் -

    பதிவு பழையதாக போய்விட்டது போல :-). இல்லையென்றால் இன்னமும் நிறைய விவாதித்து இருக்கலாம்.

    வரலாறு, தமிழ் சினிமா, கமல்ஹாசன், புதிய முயற்சிகள் போன்ற பல புள்ளிகள் இணைவதால் இந்த விவாதம் பலருக்கும் உவப்பானதாக இருக்கிறது போல. :-)

    படத்தைப் பற்றிய பல்வேறு விசயங்களை படித்ததின் மூலம் என்னுடைய புரிதல்கள் சில:

    - பண்ணிரெண்டாம் நூற்றாண்டின் சைவ / வைணவ பிரச்சினையின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு வரலாறு கதைதான் இந்த படம் என்று தோன்றுகிறது. வேலு நாயக்கரின் கதையை படமாக சொன்னபோது 'இது கற்பனைதான்' என்று சான்றிதழ் எல்லாம் சொல்லப்படவில்லையே. இந்த இரங்கராஜன் நம்பிக்கு மட்டும் ஏன் இந்த சச்சரவு?

    - இராமானுஜரை உருவகப்படுத்தி அமைந்ததுதான் இந்த பாத்திர படைப்பு. தசாவதார இசை வெளியீட்டு விழாவில் கலைஞர் அதையே கூறுகிறார். கமக் இராமானுஜரின் கொள்கை பற்றை குறிப்பிடுவதாக சொன்னார். இருவர் படத்தில் பெரியார் மற்றும் அண்ணாதுரை பாத்திரங்களின் உருவகமாக நாசர் பாத்திர படைப்பு இருக்கும்.

    - அப்பரை கடலில் தூக்கி போட்டது போல் இந்த கதையில் குலோத்துங்கல் இரங்கராஜன் நம்பியை தூக்கி போடுகிறார். அவ்வளவே. மீண்டும் இருவர் படத்திலிருந்து ஒரு உதாரணம் - ஜெயலலிதாவை ஒட்டி படைத்த பாத்திரம் கார் விபத்தில் மாட்டி இறந்து போவது போல் காட்டியிருப்பார்கள். அதை எதிர்த்து அதிமுகவினர் மணிரத்னம் மேல் கேஸ் போட்டால்?

    - மலையாளப் பாடலை கேட்டேன். பல்லவி அப்படியே ஒத்திருக்கிறது. பின்னால் மெட்டு மாறுகிறது. தவிர்த்திருக்கலாம்தான். எஸ்பிபி சொன்னது போல் முன்னவர்கள் விட்டு விட்டுப் போன எச்சங்களைத்தான் இன்றைய இசையமைப்பாளர்கள் செய்கிறார்கள்? :-) Sour of Inspiration இன்னுமொரு இடத்திலிருந்து கூட வந்திருக்கலாம் :-)

    - உங்கள் பதிவுகளில் எப்பொழுதும் காணாத சில 'எல்லை மீறல்'கள். உங்கள் பதிவின் தலைப்பில் 'naked' lies என்று வைத்துவிட்டு, உள்ளே அது 'கமலிற்க்கு மிகவும் பிடித்தது' என்று குறிப்பிடுகிறீர்கள். புத்தருக்கே பிடித்த ஒரு விசயத்தை கமலுக்கும் பிடித்ததாக நீங்கள் சொல்வது சரி, ஆனால் அதற்கு இவ்வளவு ஏளனம் ஏனோ?

    - இறுதியாக, இது ஒரு ஆவணப்படம் அல்ல அப்படி ஆகவும் ஆகாது. கல்லை மட்டும் பார்க்காமல் கதையையும் பாருங்கள். அது சொல்லப்பட்ட விவாதத்தையும் பாருங்கள்.

    ReplyDelete
  54. //வேலு நாயக்கரின் கதையை படமாக சொன்னபோது 'இது கற்பனைதான்' என்று சான்றிதழ் எல்லாம் சொல்லப்படவில்லையே. இந்த இரங்கராஜன் நம்பிக்கு மட்டும் ஏன் இந்த சச்சரவு?//

    நல்ல கேள்வி ஸ்ரீதர்!
    வேலு நாயக்கர் வந்த போதும் வேறு மாதிரி சர்ச்சைகள் எழுந்தன! முதல்வன், இருவர் படங்களுக்கும் அப்படியே!

    இங்க ஏன் விவாதம் என்றால்:
    வேலு நாயக்கர் தான் dash dashன்னு வெளிப்படையாச் சொல்லலை!
    ஐஸ்வர்யா ராய் தான் dash dashன்னு வெளிப்படையாச் சொல்லலை!
    மக்களின் ஊகங்களுக்கு விட்டுட்டாங்க!

    ஆனா இங்கே தில்லை கோவிந்தராசர்-ன்னு வெளிப்படையாச் சொல்லுறாங்க! அதான் சிக்கல்!
    போதாக்குறைக்கு நேர்காணல்களில் ரங்கராஜ நம்பி என்பது உண்மைப் பாத்திரம் என்று சொல்வதால் மேலும் சிக்கல்!

    //இராமானுஜரை உருவகப்படுத்தி அமைந்ததுதான் இந்த பாத்திர படைப்பு//

    இல்லையே! கமலைத் துறவியாக எல்லாம் காட்டலையே! அசின் கூட ஜாலியா பாட்டு எல்லாம் பாடுறாரே:-)

    இராமானுசருக்கு நடந்த கொடுமைகளை இப்படி உருவகப்படுத்தறார்-ன்னு வேண்டுமானால் சொல்லலாம்!

    //புத்தருக்கே பிடித்த ஒரு விசயத்தை கமலுக்கும் பிடித்ததாக நீங்கள் சொல்வது சரி, ஆனால் அதற்கு இவ்வளவு ஏளனம் ஏனோ?//

    அச்சோ! அது சும்மா சீரியஸ் விவாதத்தின் போது கொஞ்சம் லைட்டாக்கத் தான் ஸ்ரீதர்!
    அந்நியன் படத்துல விவேக் சொல்லுவாரே ஒரு முத்தக் காட்சியில்...
    "இதுக்கெல்லாம் கமல் சாரையா கூப்பிட முடியும்-னு"; அந்த மாதிரி தான்! :-)
    எல்லை மீறல், தப்பு-ன்னு ஃபீல் பண்ணா சொல்லுங்க! மாத்திறலாம்!
    பதிவின் நோக்கம்: கமலை மட்டம் தட்ட அல்ல!

    ReplyDelete
  55. ---கமலைத் துறவியாக எல்லாம் காட்டலையே! அசின் கூட ஜாலியா பாட்டு எல்லாம் பாடுறாரே---

    இராமானுசருக்கு மணமாகவில்லையா?

    ReplyDelete
  56. தல

    நன்றாக ஆராய்ந்து அழகாக எழுதி இருக்கிங்க.

    உங்களை போலவே கமலும் ஆராயமால் இருந்திருக்க மாட்டார் என்பது என் கருத்து. அதுவும் வாலி போன்றவர்கள் உடன் இருக்கும் போது.

    படம் வெளிவரும் போது நீங்கள் சொல்வது போலவே இந்த கதாபத்திரம் கற்பனையே என்று கூட போடலாம்.

    மற்றபடி பதிவிலும், பின்னூட்டத்திலும் நிறைய வரலாற்று விஷயங்கள் தெரிஞ்சிக்க முடியது தல ;)

    மிக்க நன்றி ;)

    ReplyDelete
  57. //Boston Bala said...
    ---கமலைத் துறவியாக எல்லாம் காட்டலையே! அசின் கூட ஜாலியா பாட்டு எல்லாம் பாடுறாரே---
    இராமானுசருக்கு மணமாகவில்லையா?//

    இராமானுசரின் மணவாழ்க்கை சிறிது நாளே நீடித்த சோகமான ஒன்று!
    மனைவியின் உயர் சாதி ஆசார மமதை, தடித்த சொற்கள்!

    வீட்டுக்கு வந்த இராமானுசரின் குருவான திருக்கச்சி நம்பி மற்றும் அவர் மனைவியை (மூன்றாம் வருணம் என்பதால்) கேட்கவே அஞ்சும் நாக்கூசும் வார்த்தைகளால் பேசியது - இவை எல்லாம் பிரிவை உண்டாக்கி விட்டது!

    மனைவியின் செய்கை தாளாது காஞ்சிபுரம் கோயிலில் ஒதுங்கிய போது தான், அவர் வாழ்வின் திருப்பு முனை தொடங்குகிறது!

    ReplyDelete
  58. //இராமானுசரின் மணவாழ்க்கை சிறிது நாளே நீடித்த சோகமான ஒன்று!//

    புரிந்து கொண்ட மனைவி கிடைத்த இராமானுஜராக இரங்கராஜ நம்பி இருக்கலாமே :-)

    நிற்க! என்னமோ நான் ரொம்ப வக்காலத்து வாங்குகிற மாதிரி இருக்கு. இந்த மாதிரி சர்ச்சைகள் நிறைய பார்த்துவிட்டதால் உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவு வந்தவுடன் கொஞ்சம் வேகமாக (தாமதமாக) நிறைய எழுதிவிட்டேன். தேவர் மகன் என்றொரு படம் தென்மாவட்டங்களில் சாதிக் கலவரத்தை தூண்டியது என்று சொல்லி 'விருமாண்டி' படத்தை தடை செய்யக் கோரினார்கள்.

    மருதநாயகம் என்ற படம் எடுக்கப்படும் முன்னரே நாலாபக்கமிருந்தும் தயாராக இருக்கிறார்கள் அதைக் குத்தி குதறியெடுக்க :-)

    Free-ஆ விடுங்க மாமே! படம் ஓடுறதும் ஓடாததும் கதையிலா இருக்கு :-)

    ReplyDelete
  59. No Probs Sridhar!
    Etho spam filter thaan pola; not getting your recurring comments!
    Discussion nalla thaan poyi kittu irukku! Thanks for your views and insights too! :-)

    //Free-ஆ விடுங்க மாமே! படம் ஓடுறதும் ஓடாததும் கதையிலா இருக்கு :-)//

    அதானே! :-)

    ReplyDelete
  60. //Free-ஆ விடுங்க மாமே! //

    இது எங்கயோ கேள்விப்பட்டது மாதிரி இருக்கே!! :))

    ReplyDelete
  61. //இது எங்கயோ கேள்விப்பட்டது மாதிரி இருக்கே!! :)) //

    Source of Inspiration வேற இடமாக கூட இருக்கலாம் இல்லையா? :-)). நிச்சயமா கானா உலகநாதன் இல்லை.

    'Free-ஆ விடு, Free-ஆ விடு மாமே' அந்த பாட்டு நீங்க கேட்டது இல்லையா தல?

    ReplyDelete
  62. படமே வரலை அதுக்குள்ளேயேவா? ரங்கராஜன் நம்பி= நான் நம்பி பூசன்'னு கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  63. //இது எங்கயோ கேள்விப்பட்டது மாதிரி இருக்கே!! :)) //

    'Free-ஆ விடு, Free-ஆ விடு மாமே' அந்த பாட்டு நீங்க கேட்டது இல்லையா தல?//

    கொத்ஸ், ஸ்ரீதர்!
    ஃப்ரீயா விடு மாமே-ன்னு திருக்குறள் கூட ஒன்னு இருக்குல்ல? :-))
    நான் தெருக்குறளைச் சொல்லல! திருக்குறளைத் தான் சொல்லுறேன்!

    ReplyDelete
  64. please write about kurootahavazhan and cholan in your blog. VERT INTERESTING...MURALI

    ReplyDelete
  65. அண்ணாத்தே நல்ல பதிவு நம்ம domain இல்ல அப்படிங்கிற காரணத்தால் சரியா புரியலை.. ஆனா இதை நீங்க படத்தை பாத்துட்டு சொல்லி இருந்தா சரியா இருந்து இருக்கும் கொஞ்சம் அவசரப்பட்டுங்களோ?.. பின்னூட்ட விவாதத்தில் பல நல்ல விஷயங்கள் தெரிந்தது.. கலக்குற கே.ஆர்.எஸ்..:))

    ReplyDelete
  66. Nice Post !
    You should use a Tamil social bookmarking widget like PrachaarThis to let your users easily bookmark your blog posts.

    ReplyDelete
  67. KRS,

    I accidentally read through this post. First of all this is just a movie and its not even released, its a plain fact nothing is going to change (even if kamal did what you said, I think he did really good even in the teaser, because it triggered so many people ha ha...) and no one is holding the flag that its a true history. All they are saying story starts of 12 the century. Even if it was happenend or not happened, at EOD its a pure fiction, it is supposed to end after 3 hours, sometime it will stay for a week.


    Lets say even if its a lie, A movie is supposed to be a lie and if it can entertain the 2 or 3 hrs, thats all I personally care.

    You can argue with me saying no one should change the history or they should have read the history, how much are sure and credible the history itself was written as it was happened. History is not documented by a machines (which has no perception knowledge), they are documented by people with their perception of the events in their presence.

    Kaptian basaila sollanum na:

    Olagthula enakku pidikatha ore subject "History" ahaang..

    Anyone who attempts to create a wave over this now (VHP) are purely just an oppurtunist and nothing more. VHP irrukunu katturangalam vera onnum illa.

    Whatever happens, the fact is, the movie is getting 200% promoted easily, even the saints of the VHP and sadhus are gonna watch this movie.

    If you haven't watched the below:

    http://www.youtube.com/watch?v=C5uHxcSga5U&feature=related

    ;). I guess the above video answers it.

    ReplyDelete
  68. //அட! புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!!!!!) //

    namakku purinjathu ithu mattum thaan :-)

    ReplyDelete
  69. ***********************
    //enRenRum-anbudan.BALA said...
    Just "பரபரப்புக்கு எழுதப்பட்ட பதிவு" என்று ஒரு டிஸ்கி கொடுத்திருக்கலாம் !//

    ஏன்? எதற்கு கொடுக்க வேண்டும்?
    பரபரப்புக்கு எழுதும் பழக்கம் என் சுபாவத்தில் இல்லை பாலா!
    பரபரப்புக்கு எழுதனும்னா ஆன்மீகம் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன்!
    தி. ஊ.அனானி-ன்னு வேற விஷயம் எல்லாம் எழுதிக் கொண்டிருப்பேன்! :-))))

    //மற்றபடி, சினிமாவை சினிமாவா பார்த்தா நல்லது//

    அதைத் தான் கமலிடமும் சொல்கிறோம்! சினிமாவை சினிமாவாப் பாருங்க! வரலாற்றை வேறு மாதிரிக் காட்டிக் குழப்பாதீங்க, குழம்பிக்காதீங்க-ன்னு சொல்லுறோம்.

    //சிண்டு முடிய, பிணக்கை அதிகரிக்க இந்தப் பதிவு உபயோகப்படும் !!!//

    இரும்பை உருக்கத் தான் வேண்டும்! உருக்கினாப் பிறகு கத்தி செஞ்சிருவாங்களோ-ன்னு பயந்து இரும்பு செய்யாம இருக்க முடியாது!

    **********************
    I just gave my point of view about this posting ! Please do not bring 'தி. ஊ.அனானி' here, as தி. ஊ.அனானி postings are basically rejoinders to specific posts !!!

    But you have every right to believe that தி. ஊ.அனானி is for "பரபரப்பு" ONLY ! FYI, I also write on many topics (including ஆன்மீகம்) other than தி.ஊ.அனானி !!!!

    ReplyDelete
  70. கண்ணபிரான், நல்ல பதிவு.

    தில்லை கோவிந்தராஜர் திருமேனியைக் கடலில் எறிந்த சோழனும் சரி, கிருமிகண்ட சோழனும் சரி (இவர்கள் இருவரும் ஒருவராக இருக்கவும் நிறைய வரலாற்று சாத்தியம் உள்ளது) சோழவம்சத்திலும் சரி, சைவ வரலாற்றிலும் சரி, ஒரு விதிவிலக்கு. எந்த சைவ நூலும் அவனைப் புகழவில்லை.

    ஆனால் ஏராளமான சோழமன்னர்கள் வைணவர்களாகவும், வைணவத்தைப் போஷித்தவர்களாகவும் இருந்துள்ளார்கள், திருவரங்கம் கோவிலுக்கு சோழர்கள் கொடுத்த கொடைகள் பற்றிய விவரணங்கள் ஏராளம். நாயன்மார்களில் ஒருவராகிய கோச்செங்கட் சோழரை திருமங்கையாழ்வாரே தனது பாடல்களில் போற்றிக் கூறுகிறார் !

    இத்தகைய விதிவிலக்குகளை பிரம்மாண்ட காட்சிகள் மூலம் பொதுப்புத்த்தியில் உறையவைக்கும் முயற்சி தான் இது.

    நீங்கள் "Naked Lies" என்கிறீர்கள். அரவிந்தன் நீலகண்டன் ஆபாசப் பொய்யன் கமலஹாசன் என்று ஒரு நல்ல பதிவு எழுதியுள்ளார். இந்தப் பதிவில் மேலும் பல முக்கியமான வரலாற்றுச் செய்திகளையும் கூறுகிறார். கண்டிப்பாகப் படியுங்கள்.

    ReplyDelete
  71. KRS,
    பதிவுகளும் பின்னூட்டங்களும் படு சுவாரஸ்யம். வைணவர்களில் பலருக்குக் கூட ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு ஒழுங்காகத் தெரியாது. ஆகையால் படத்தில் காட்டியதை நம்பி விடும் சாத்தியம் இருக்கிறது. ( இதை படித்திரா விட்டால் நானும் அவ்வாறு தான் நம்பி இருப்பேன்! ) நீங்கள் சொன்னது போல் இதனுடம் ஒரு disclaimer போட்டு விட்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் disclaimer போட்டாலும் கூட இந்த உண்மையையும் பொய்யையும் கலந்து சொல்வது ஆபத்தானது தான். 'அஸ்வத்தாமன் இறந்தான்' என்பது போல. அதுவும் இந்த சாதி மத விஷயங்களில் நம் மக்கள் ஓவர் சென்சிடிவ் வேறு.

    தாங்கள் பார்ப்பதெல்லாம் உண்மை என்று நினைத்துக் கொண்டால் அதற்கு கலைஞன் பொறுப்பல்ல என்று பழியை படம் பார்பவர்கள் மேல் சுமத்தி விட வேண்டியது தான்!

    ReplyDelete
  72. ஒன்று மட்டும் உண்மை .படம் வெளிவருவதற்கு முன்னரே இப்படி ஆழமான விவாதத்தை தூண்டு விடும் சரக்கு கமல்ஹாசனிடம் மட்டுமே உண்டு.

    கமல்ஹாசனை குற்றம் கண்டுபிடித்து விட்டேன் பார் ..நார் நாராய் கிழைத்து விட்டேன் பார் -என்ற கருத்தாக்கமே பதிவில் தெரிகிறது .

    வெறும் ட்ரெயிலரை வைத்துக் கொண்டு நீட்டி முழக்குவதை வேறென்ன சொல்ல முடியும்?

    ReplyDelete
  73. //சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது; தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது = இங்கிட்டு தான் லேசா இடிக்குது!

    ஏன்?.......வைணவம் என்று பார்த்தால் மட்டும் தெய்வம் தெரியாது; தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது-ன்னு கூட மாற்றிப் பாடலாமே?//

    பாடலாமே ..நீங்க ஒரு படம் எடுத்து அதில ஒரு சைவப் பாத்திரம் இப்படி பாடுறது மாதிரி வைக்க வேண்டியது தானே ?

    இந்த படத்தில் சைவ ,வைணவ மோதலின் போது ஒரு வைணவரின் கருத்தாக வருகிறது ..அப்படித் தான் வரும் ..அது பாத்திரத்தின் கருத்தே தவிர கமல் அல்லது வாலியின் கருத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ..இந்த குறைந்த பட்ச புரிதல் கூட இல்லையா ?

    ReplyDelete
  74. ////அட! புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!!!!!) //

    namakku purinjathu ithu mattum thaan :-) //

    ரிப்பீட்டேய்....

    சீமாச்சு

    ReplyDelete
  75. @ ஜோ
    //அது பாத்திரத்தின் கருத்தே தவிர கமல் அல்லது வாலியின் கருத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ..இந்த குறைந்த பட்ச புரிதல் கூட இல்லையா ?//

    அட, நீங்களுமா பதிவைப் படிக்காம பின்னூட்டம் போடுற டைப்பு?
    பதிவுல அடுத்த லைனைப் படிங்க!
    //ஆனால் படத்தோட காட்சிக்கு ஏற்றாற் போலத் தான் பாட்டு எழுத முடியும் இல்லையா? படத்துல ஒரு சைவ அரசனும் (குலோத்துங்கன்......//

    பாத்திரம் உண்மைப் பாத்திரம்-னு பேட்டியில் சொல்லி இருக்கீங்க! இல்லை! படத்தின் துவக்கத்தில் கற்பனைப் பாதிரம்-னு போட்டுருங்கன்னு தான் சொல்லி இருக்கேன்!
    இந்தக் குறைந்த பட்ச புரிதல் கூட உங்களுக்கு இல்லையா ஜோ?

    ReplyDelete
  76. ஜோ / Joe said...
    //கமல்ஹாசனை குற்றம் கண்டுபிடித்து விட்டேன் பார் ..நார் நாராய் கிழைத்து விட்டேன் பார் -என்ற கருத்தாக்கமே பதிவில் தெரிகிறது//

    கிழிஞ்சுது!
    பாட்டைப் பாராட்டுனது கண்ணுக்குத் தெரியலை!
    பிரம்மாண்டமான படத்தின் வெற்றிக்கு வாழ்த்தினது கண்ணுக்குத் தெரியலை!

    //வெறும் ட்ரெயிலரை வைத்துக் கொண்டு நீட்டி முழக்குவதை வேறென்ன சொல்ல முடியும்?//

    மொதல்ல நேர்காணலைக் கேளுங்க அண்ணாச்சி!
    //இன்னும் படம் வெளி வராததால், ஊடகங்களில் கிடைக்கும் கதையின் கருவை அடிப்படையாகக் கொண்டும், படத்தின் கலைஞர்கள் கொடுக்கும் நேர்காணலைக் கொண்டும் தான் எழுதுகிறேன்// -ன்னு நானே சொல்லி இருக்கேனே! :-)

    மொதல்ல கொஞ்சம் சாதாரணக் கண்ணைத் தொறந்து பதிவைப் பாருங்க!
    அப்பாலிக்கா நெற்றிக் கண்ணைத் தொறக்கலாம்! :-)))))

    I am surprised Joe talks like this!

    ReplyDelete
  77. //Syam said...
    //அட! புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!!!!!) //
    namakku purinjathu ithu mattum thaan :-)//

    வாங்க நாட்டாமை!
    பதிவுல //புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்// என்பதை மட்டும் தான் முழிச்சிக்கிட்டே எழுதினேன்!
    மத்தது எல்லாம் தூக்கத்தில் எழுதியவை! :-))

    @சீமாச்சு அண்ணா!
    தெரியுமே! நீங்க இதை ரசியோ ரசின்னு ரசிப்பீங்கன்னு! :-))))

    ReplyDelete
  78. // enRenRum-anbudan.BALA said...
    But you have every right to believe that தி. ஊ.அனானி is for "பரபரப்பு" ONLY !//

    ஹிஹி கோச்சிக்காதீங்க பாலா!
    நீங்க பரபரப்பு-ன்னு சும்மா சொன்னீங்க-ல்ல! அதான் நானும் சும்மா சொல்லிப் பாக்கலாம்னு சொன்னேன்!

    //FYI, I also write on many topics (including ஆன்மீகம்)//
    தோடா! எங்களுக்குத் தெரியாது பாருங்க! :-)
    நீங்க தான் அனந்தாழ்வானின் செல்ல சிஷ்யரு-ன்னு எங்க எல்லாருக்கும் தெரியுமே! :-)

    ReplyDelete
  79. @ஷைலஜா

    சாரிக்கா! லேட் ரிப்ளை!
    உடனே போய் தேடிப் பார்த்தமைக்கு நன்றி!
    ஆமா ரங்கராஜ நம்பி பற்றி எங்கும் இருக்காது வைணவப் புத்தகங்களில்! :-)

    கமல் படம் வந்த பிறகு விளக்கம் கொடுப்பாரு! வெயிட்டீஸ்!

    இந்தப் பதிவின் நோக்கம்:
    கற்பனைப் பாத்திரத்தை உண்மைப் பத்திரத்தோடு கலக்கும் போது, கற்பனைப் பாத்திரத்தை கற்பனைப் பாத்திரம் என்று டிஸ்கி போட்டு விடுங்கள் என்று சொல்லத் தான்!

    படம் வர வரைக்கும் வெயிட் பண்ணி அப்பாலிக்கா சொன்னா, எப்படி டிஸ்கி போடுவாராம்? அதான் முன்னாடியே சொன்னது!

    அதுக்குள்ளாற கமல் விசிறிகள் விசிறு விசிறு-ன்னு விசிறுறாங்க! கோடை வெப்பத்துக்கு விசிறி தேவை தான்! யப்பா சாமீகளா :-)

    ReplyDelete
  80. //சந்தோஷ் = Santhosh said...
    அண்ணாத்தே நல்ல பதிவு நம்ம domain இல்ல அப்படிங்கிற காரணத்தால் சரியா புரியலை//

    யோவ் சந்தோசு!
    ஆன்மீகம் என்னா என்னோட domainஆ? :-)
    என்/உன் domain பொருளியல் தானே!

    //ஆனா இதை நீங்க படத்தை பாத்துட்டு சொல்லி இருந்தா சரியா இருந்து இருக்கும் கொஞ்சம் அவசரப்பட்டுங்களோ?//

    ஆமா...அவசரப் போலீஸ் 100ன்னு தான் கூப்பிடலை!:-)
    முந்தைய பின்னூட்டத்துல சொல்லி இருக்கேன் பாரு சந்தோஷ்!
    படத்துக்கு டிஸ்கி போடச் சொல்லுப்பா! மேட்டர் ஓவரு! :-)

    //கலக்குற கே.ஆர்.எஸ்..:))//

    ஹிஹி :-)

    ReplyDelete
  81. @ ஜடாயு சார்!

    //திருவரங்கம் கோவிலுக்கு சோழர்கள் கொடுத்த கொடைகள் பற்றிய விவரணங்கள் ஏராளம். நாயன்மார்களில் ஒருவராகிய கோச்செங்கட் சோழரை திருமங்கையாழ்வாரே தனது பாடல்களில் போற்றிக் கூறுகிறார் !//

    மிகவும் உண்மை!
    ஒரு சோழன் கொடுங்கோலன் என்பதற்காக சோழ குலமே கொடுங் குலம் என்று சொல்ல முடியுமா?
    சைவர்கள் சிலரின் தவறான தூண்டுதலைச் சைவத்தின் தூண்டுதல் என்றி கொள்வது அபத்தம்!

    இராமானுசருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அவரே மறந்து விட்டார்! அவருக்குப் பின்னால் வந்த ஆசார்யர்களும் மறந்து விட்டார்கள்! ஆக்கப் பணிகளில் தான் கவனம் செலுத்தினார்கள்!

    பேசாம டிஸ்கி போட்டுவிட்டு, அழகான படத்தைச் சூப்பரா ஓட்டலாம்! எப்படியோ நூறு நாள் நிச்சயம்! இருநூறு, முந்நூறு எல்லாம் போகப் போகத் தான் தெரியும்! :-)

    ReplyDelete
  82. //வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...
    வைணவர்களில் பலருக்குக் கூட ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு ஒழுங்காகத் தெரியாது. ஆகையால் படத்தில் காட்டியதை நம்பி விடும் சாத்தியம் இருக்கிறது.//

    ஹிஹி!
    கரெக்டாப் புரிஞ்சிக்கிட்டீங்க வந்தியத்தேவன்!

    //அதுவும் இந்த சாதி மத விஷயங்களில் நம் மக்கள் ஓவர் சென்சிடிவ் வேறு.//

    சொல்லனுமா? கடவுளை விட்டுவிட்டு மதத்தைக் கட்டிக்கிட்டு அழுவறதுல நாம தான் கில்லாடிகளாச்சே! :-)

    //தாங்கள் பார்ப்பதெல்லாம் உண்மை என்று நினைத்துக் கொண்டால் அதற்கு கலைஞன் பொறுப்பல்ல என்று பழியை படம் பார்பவர்கள் மேல் சுமத்தி விட வேண்டியது தான்!//

    அட! இந்த ஐடியாவும் நல்லாத் தான் இருக்கு! :-)))

    ReplyDelete
  83. //G said...
    KRS,
    I accidentally read through this post. First of all this is just a movie and its not even released,//

    வாங்க ஜி!
    சரி தான்! படம் தானே! ஆனா இது மாதிரி வரலாற்று படங்களுக்கு எல்லாம் பிரச்சனை கிளம்பும் தான்! அதுவும் படத்துக்கு ஒரு வகையில் வெளம்பரம் தான்! :-)
    அதுனால பிரச்சனையை ஆக்கப்பூர்வமான முறையில் எழுப்பறவங்க வாயைக் கமல் அடைக்க மாட்டாரு! அவரின் படிச்ச ரசிகர்களும் அவரையே பின்பிற்றலாமே? :-)

    கமல் ஒரு பொறுப்புள்ள சமூகக் கலைஞன்.
    He is a person different from the crowd...Thatz why I felt that he has the responsibility to let his viewers know that he is mingling some facts and fiction!

    //and no one is holding the flag that its a true history//

    the art director in the interview says that it is true history! thatz the trigger! :-)

    //History is not documented by a machines (which has no perception knowledge), they are documented by people with their perception of the events in their presence.//

    Egg-jactly! :-)
    Thatz why I am requesting an artiste like Kamal, not to add more & more perceptions to history bcoz it is already perceived many a time.

    //Anyone who attempts to create a wave over this now (VHP) are purely just an oppurtunist and nothing more//

    VHP may have an agenda!
    But I dont have one!
    It's just a friendly thought to Kamal.

    Thanks for the video link though!

    ReplyDelete
  84. @ Roshini
    Thanks for the widget

    @ Murali
    கூரத்தாழ்வான் பற்றித் தக்க சமயத்தில் எழுதுகிறேன்! ஆனா சும்மா சும்மா சோழன் கண்ணைப் புடுங்கனான்-ன்னு கதை பாடிக் கொண்டிராமல்...

    அவர் அறிவில் இராமானுசரைக் காட்டிலும் கூட சிறந்தாலும், அவர் பணிவும் குரு பக்தியும், மக்கள் மீது கருணையும்....
    எல்லாத்தை விட தமிழ் திருவரங்கத்தில் நுழைய அவர் முயற்சி தான் வெற்றி பெற்றது - அதைப் பற்றியும் சொல்கிறேன்!

    ReplyDelete
  85. //ILA said...
    படமே வரலை அதுக்குள்ளேயேவா?///

    ஹிஹி!
    கமல் தான் இப்பிடி போஸ்ட் போடச் சொன்னாரு இளா, கனவுல (அசினோடு) வந்து! :-)))

    //ரங்கராஜன் நம்பி= நான் நம்பி பூசன்//

    நம்பி பூஷண்?? - இது என்னா பத்ம பூஷண் கணக்கா இருக்கு?
    ஒரு வேளை இந்தி டப்பிங்குக்கு பேர மாத்தி இருப்பாங்க!
    தில்லையில் ஏது பூஷண்? பேஷன் எல்லாம்? :-))

    ReplyDelete
  86. //கோபிநாத் said...
    தல..நன்றாக ஆராய்ந்து அழகாக எழுதி இருக்கிங்க.//

    மாப்பி கோபி
    சாரிப்பா...லேட் ரிப்ளை!
    நன்றி...

    கமலும் ஆராய்ந்து தான் ஏதாச்சும் முடிவு எடுத்திருப்பாரு! அதை விளக்கிச் சொல்லட்டும்! ஆர்ட் டைரக்டர் சொல்வதை விட அவர் சொன்னா நல்லது!

    //மற்றபடி பதிவிலும், பின்னூட்டத்திலும் நிறைய வரலாற்று விஷயங்கள் தெரிஞ்சிக்க முடியது தல ;)//

    போச்சு! நான் historical blogger ஆயிட்டேனா? அடக் கொடுமையே! :-))

    ReplyDelete
  87. //ஓகை said...
    வரலாற்று ஆசிரியர்கள் சமர்பிக்கும் கட்டுரைகளில் விவாதம் செய்யலாம். ஆனால் வரலாறு துணைகொண்டு செய்யப்படும் புனைவிலக்கியங்கள் விவாதத்துக்கு உரியன அல்ல என்பது என் கருத்து//

    வாங்க ஓகை ஐயா! நலமா?

    அப்படிப் பார்த்தால் இந்திய விடுதலைப் போர் பத்தி படம் எடுத்து காந்தியைச் சுடும் போது, அவர் பக்கத்துல இருந்த அவர் செக்கரட்டரி ஒருத்தரும் அதே துப்பாக்கியால் குண்டு பட்டுச் செத்துப் போனாரு-ன்னு சொல்வாங்களா? புனைவிலக்கியம் தானே?

    வேணும்னா களேபரத்தில் கதை நாயகனின் நண்பன் சாகிறான் போராட்டத்தில் மிதிபட்டுச் சாகிறான்னு காட்டலாம்! தப்பே இல்ல!
    ஆனா கோட்சே மொதல்ல அவன் மேல குண்டைப் பாய்ச்சி, அப்பறம் காந்தி மேலப் பாய்ச்சினான் என்பது வரலாற்றுப் பிழை!

    ஹே ராமில் இதைக் கமல் மிகச் சாதுர்யமா கையாண்டாரு! பிழை செய்யலை!
    ஆனா இங்க கோவிந்தராசப் பெருமாள் கூடவே மூழ்கடிச்சு சாவடிக்கறாங்க என்பது தான் பிரச்சனையே!

    ReplyDelete
  88. //பினாத்தல் சுரேஷ் said...
    கே ஆர் எஸ்..
    நீங்கள் சொல்வது தவறு எனச் சொல்லவரவில்லை, அந்த அளவுக்கு எனக்கு விஷயம் தெரியாது. ஆனால் கமல் படம் என்பதால், வெயிட் பார் த ரிலீஸ் -- கல்லெறியும் முன் காத்திருப்போமே ;)//

    வாங்க பெனாத்தலாரே! காத்திருப்போம்! நான் கல் எறியலை! டிஸ்கி தான் எறியச் சொன்னேன்! :-)

    Rangarajan Nambi can be a fictitious character.
    But Rangaraja Nambi + Thillai Govindaraja tied together cannot be fictitious. Coz the latter is true! விசயம் அம்புட்டு தான்! :-)

    ReplyDelete
  89. @ExpatGuru

    பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சியே!

    @கரு. மாணிக்கம்
    விரிவாக கூரத்தாழ்வான்-சோழன் எபிசோடைச் சொன்னதற்கு நன்றி!

    //Only flip side of the movie is in its timing. Is it necessary to recall such a past that shows such horror and will create divisions within Hinduism?//

    Kamal, had he narrated the actual historical episode, then he has every right to do that!
    Whether it will create divisions within Hinduism is not his problem. He just has covered the facts!

    No one can throw stones at him for stating the truth. May be they can request him not to overplay sentiments, considering the unity in religion.

    Kamal has a freedom of expression too and that has to be respected as long as that freedom is within the boundaries of truth!
    ஓக்கேவா?

    ReplyDelete
  90. //Anonymous said...
    நிஜவாழ்க்கையில் தான் ஐயராய் (யங்காராய்) இருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை இதுமாதிர வேஷம் கட்டி ஆசைத் தீர்த்துக்கொள்கிறாரா ?
    இப்படிக்கு பல வருட கமல் ரசிகன்//

    பல்லாண்டு கமல் ரசிகரே
    இதுக்கு கமல் தான் பல்லாண்டு பாடனும்! :-)
    அவரைச் சொல்லும் உரிமை எனக்கு இல்லை!

    வேஷம் கட்டி ஆசை தீர்த்துக் கொள்வது ஒரு கலைஞனின் தனிப்பட்ட உரிமை!
    கட்டும் வேசம், வெறும் வேசமாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை! இல்லை உண்மையாக இருந்து விட்டாலும் பிரச்சனை இல்லை!

    உண்மையும்+வேசமும் கலப்படம் செஞ்சாத் தான் பிரச்சனை! :-)

    ReplyDelete
  91. //TBCD said...
    க.ர.ச,//

    இன்னாது? கரசா-வா?
    ஹிஹி! ரொம்ப தான் குசும்பு அண்ணாச்சி உங்களுக்கு!
    அப்போ டிபிசிடி-க்கு என்ன?

    //இது தொடர்பான கொஞ்சம் நானும் எழுதினேன், இந்தப் பதிவின் பின்னுட்டத்தில்.. பார்க்க, படிக்க, திட்ட இங்க கொஞ்சம் வாங்க.... :))//

    வந்தேன்...பார்த்தேன்....படித்தேன்...பின் ஊட்டினேன்!
    திட்டத் தான் வில்லை!
    திட்டறா மாதிரி நீங்களும் ஒன்னும் சொல்லலை!

    ஆனா பல பேரு அறிவு நூலைத் தொறந்து வுட்டீங்க என்பது மட்டும் நிஜம். :-)

    ReplyDelete
  92. //பாரதிய நவீன இளவரசன் said...
    நல்ல ஆராய்சி செய்து எழுதியிருக்கீங்க. நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன். நன்றி//

    நன்றி இளவரசன்!

    //இதில் இடிக்க என்ன இருக்கு? சைவம், வைணவம் என்றில்லை, பொதுவாக எடுத்துக்கொண்டு பாருங்கள் - 'சமயநோக்கில் சிந்திப்பது வேறு ஆன்மிகம் வேறு' communalக்கும் spiritualityக்கும் உள்ள வித்யாசம்! இதைத்தானே இந்த வரிகள் சொல்கிறது... என்றும் இருக்கலாம் இல்லையா?//

    நிச்சயமா!
    அதைத் தான் வாலியும் சொல்ல வராரு!
    சைவம்-னு மட்டுமே பாத்தா தெய்வம் தெரியாது!
    வைணவம்-னு மட்டுமே பாத்தா தெய்வம் தெரியாது!
    Spiritual not Religious!

    ஆனா அப்படிச் சொல்ல வரும் போது ஒன்றை மட்டும் தாழ்த்தாமப் பொதுவாச் சொல்லணும்!
    மதம் கொண்டு பாத்தா தெய்வம் தெரியாது-ன்னு சொல்லி இருக்கலாம்!
    சைவத்தை மட்டும் அப்படித் தனியாக் காட்டிச் சொல்வது வீண் சண்டைகளைத் தான் வளர்க்கும்!

    சண்டையைத் தீர்க்க வந்த பாட்டே சண்டையை உருவாக்கலாமா? சொல்லுங்க!

    ஆனா காட்சிக்கு அந்த மாதிரி வரிகள் வாலிக்குத் தேவைப்படுது போல! :-(

    ReplyDelete
  93. //குட்டிபிசாசு said...
    நல்ல விமர்சனம்! தமிழர் வரலாறு அறிந்த எல்லாருக்கும் தோன்றுவது தான் நீங்கள் பொறுமையாக, அழகாக, விளக்கமாக எழுதியதற்கு நன்றி!! வாழ்த்துக்கள்!!//

    நன்றி குட்டிப்பிசாசு!
    தமிழர் வரலாறு-ன்னு வந்தாலே கூடவே பிரச்சனையும் கெளம்புது! :-(

    ReplyDelete
  94. தசாவதாரம் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸை நார் நாராக் கிழிக்கப் போவுது அப்புறம் பாருங்க. உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு

    ReplyDelete
  95. //I am surprised Joe talks like this! //

    Nothing to be surprised. As far as I have noticed, Joe has consistently reacted like this whenever it is a matter related to Nadigar Thilakam, Kalanjar and Universal Hero.

    ReplyDelete
  96. //Joe has consistently reacted like this whenever it is a matter related to Nadigar Thilakam, Kalanjar and Universal Hero. //

    உண்மை .சரியாக புரிந்து கொண்ட அனானி நண்பருக்கு நன்றி! :)

    ReplyDelete
  97. @அறிவன்
    கலக்குறேனா? சரி சரி! நன்றிங்க அறிவன்! :-)

    @Sumathi அக்கா...
    //வாவ்.. ரொம்ப பொருமையா, அழகா புரியறா மாதிரி சொல்லியிருக்கீங்க, அதுக்கு ஒரு தேங்க்ஸ்//

    யக்கா..ஹிஸ்டரி புரியுதா? சூப்பரு! :-)

    //அப்பறம், கமலோட படம்னாலே இந்த அம்பி மாதிரி கதயோ இல்ல லாஜிக்கோ இதுல்லாம் பாக்க்க மாட்டாங்க.//

    அம்பிக்கும் லாஜிக்குக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? :-))

    //ஏன் எப்படியும் மதன்ஸ் திரைப் பார்வையில் கூட கண்டிப்பா இது மாதிரி சில கேள்விகள் வரலாம்//
    வரும்! வரும்!!

    //பட் நீங்க சும்மா நச்சுன்னு சரித்திரம் னுலாம் பிச்சு உதர்றீங்கலே, அது தான் ஒன்னுமே பிரிய மாட்டேங்குது//

    கடைசிலே எனக்கே ஆப்பா? :-))

    ReplyDelete
  98. //மை ஃபிரண்ட் ::. said...
    நல்லா இருக்கு...படம் பார்க்கிறதுக்கு முன்னே இந்த மாதிரி ஒரு அருமையான விளக்கம் என்னை போல மக்களுக்கு தேவைதான்.
    :-)//

    ஹிஹி! அது என்ன என்னைப் போல மக்கள்? நம்மைப் போல மக்கள்-னு என்னையும் சேர்த்துச் சொல்லுங்க மை ஃபிரண்ட் அக்கா!

    //அந்த தெலுங்கு பாடல் ஏற்கனவே பார்த்ததுதான். பதிவு போடலாமான்னு நெனச்சு வேண்டாம்ன்னு விட்டாச்சு..//

    நீங்க கமல் ரசிகை இல்லையே போட்டிருக்கலாமே! :-)))

    //அப்படி போட்டிருந்தாலும் உங்களைப் போல இவ்வளவு அழகா என்னால எழுதியிருக்கமுடியாது. :-)//

    சரியான உ.கு! நுண்ணரசியல்! :-)))
    யக்கா நீங்களுமா?

    ReplyDelete
  99. எனக்கு என்னமோ ஒரு முடிவோடதான் இருக்கீருன்னு தோணுது.

    ReplyDelete
  100. //இலவசக்கொத்தனார் said...
    எனக்கு என்னமோ ஒரு முடிவோடதான் இருக்கீருன்னு தோணுது//

    என்னடா கொத்தனார் வரலையேன்னு பார்த்தேன்!
    கருட சேவை மாதிரி கன் டயத்துக்கு வந்துட்டாரு! :-)

    ReplyDelete
  101. //மருதநாயகம் said...
    தசாவதாரம் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸை நார் நாராக் கிழிக்கப் போவுது அப்புறம் பாருங்க//

    மருத! எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு!
    சூப்பரு! அப்படிக் கிழிக்கணும்-னு தான் நானும் வாழ்த்திட்டேனே! கண்டிப்பா ஹிட் தான்!

    //உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு//

    படத்த்துக்கு டிக்கெட் கிடைக்காதுன்னா! அதெல்லாம் ஜோ எனக்குக் கொடுத்துருவாரு! :-)

    ReplyDelete
  102. // இலவசக்கொத்தனார் said...
    நாந்தான் 100?
    //

    வேற யாரு?
    :-)

    தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும்!
    இந்த முறை தருமம் வெல்லலை கொத்ஸ்! :-)

    I was talking with amma @ chennai abt u and this "dharumathin vazhvu thannai" comment in star week. vizhunthu vizhunthu chirichaanga! :-)

    ReplyDelete
  103. //படத்த்துக்கு டிக்கெட் கிடைக்காதுன்னா! அதெல்லாம் ஜோ எனக்குக் கொடுத்துருவாரு! :-) //
    :-) சிங்கப்பூர் வாங்க .கண்டிப்பா டிக்கெட் தர்றேன் .மத்தபடி தியேட்டரில் கைதட்டி விசிலடிக்காத சாதாரண ரசிகன் நான் .(அதனால விசில் சத்தம் கம்மியா இருக்கேன்ணு கமலுக்கு ரசிகர்கள் கம்மிண்ணு கணக்கு போடுறதெல்லாம் வேஸ்ட்) படம் ரிலீசுக்கு லீவு போட்டு இந்தியா போற அளவுக்கு கொலைவெறி ரசிகர்களும் இங்க இருக்காங்க. :-)

    ReplyDelete
  104. //ஒன்று மட்டும் உண்மை .படம் வெளிவருவதற்கு முன்னரே இப்படி ஆழமான விவாதத்தை தூண்டு விடும் சரக்கு கமல்ஹாசனிடம் மட்டுமே உண்டு.//

    Good Joke.

    Padam vandha appuram orutharumae adhai paththiyae pesa mattengirangalae. Joe madhiriyana aalunga mattum 'thamizh naattu makkalukku arivae kedyadhu'nnu dialogue viduvaanga.

    ReplyDelete
  105. அண்ணா,


    கொஞ்சம் இந்தப் பதிவு போய் பாருங்க.

    http://premkg.blogspot.com/2008/05/blog-post_10.html

    அங்க நான் போட்ட பின்னூட்டம்.


    ப்ரேம்ஜி, நீங்க கே ஆர் எஸ் கிட்ட அடி வாங்கப் போறது நிஜம்.

    http://madhavipanthal.blogspot.com/2008/05/kamal-haasan-his-naked-lies.html

    அவரு ரங்கராஜ நம்பின்னு சொன்னதுக்க்கே அந்த பட்டையைக் கிளப்பறாரு. நீங்க என்னடான்னா ராமனுஜர்ன்னே சொல்லிட்டீங்க. என்ன ஆகப் போகுதோ. தில்லை கோவிந்தராஜப் பெருமாளே நீதான் காப்பாத்தணும்.

    ReplyDelete
  106. "மாதவிப் பந்தல்" உங்க தமிழ் ப்ளாக், இந்த ஒரு பதிவு மூலம் உலகம் முழுக்க புகழ் பெற்று விட்டது.

    இங்கே சென்று பார்க்கவும்:

    http://www.allthingskamal.info/blog/2008/05/09/dasavathaaram-useless-religious-controversy/

    உங்க கருத்தையும் பதிவு செய்ங்க.

    ஆல் தி பெஸ்ட் !!!

    ReplyDelete
  107. ஆஹா கொத்ஸ் மாட்டி விட்டுட்டாரா? கே ஆர் எஸ் அதுக்கு அப்புறம் நான் இட்ட பின்னூட்டம்
    //வாங்க கொத்ஸ்! இப்படி ஒரு சிக்கல் இருக்குதா? இருங்க கே ஆர் எஸ் பதிவு பார்த்திட்டு வந்துர்றேன். அப்புறம் இது ஒரு வெட்டி ஒட்டிய வேலைன்னு சொல்லி அவரை எப்படியாவது சமாதானப்படுத்துறேன்//

    ReplyDelete
  108. கமலின் பத்து திருநாமங்கள் - தசாவதார கதாபத்திரங்கள்

    கே எஸ் ரவிக்குமாரின் தசாவதாரம் திரைப்படத்தில் கமலஹாஸன் தோன்றும் வேடங்களின் பெயர்கள்:


    1.இரங்கராஜ நம்பி
    2.கோவிந்த் இராமசாமி
    3.அவ்தார் சிங்
    4.பல்ராம் நாயுடு
    5.க்ரிஸ்டியன் ப்ளிட்சர்
    6.ஷிங்கென் நரஹாஜி
    7.ஜார்ஜ் புஷ்
    8.வின்சென்ட் பொவராகன்
    9.கிருஷ்ணவேணி பாட்டி
    10.கலிபுல்லா கான்

    ReplyDelete
  109. அண்ணே! தமிழகத்தில் மாலிக் பூர் படையெடுப்பில்(வெறியாட்டத்தில் என்று படிக்கவும்) எத்தனையோ கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அவை எல்லாம் வரலாற்றில் பதியபடவில்லை. அதை போல இந்த ரங்கராஜ நம்பியும் இருக்கலாம் இல்லையா? :))

    இந்த வரலாறு நிஜம் தான் ::::::

    http://ta.wikipedia.org/wiki/குலோத்துங்க_சோழன்_II



    அமைதியான ஆட்சி
    குலோத்துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத்துடனும் வளமாகவும் இருந்ததாகத் தெரிகிறது. எந்தவிதமான போரும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. ஆனால் சிதம்பரம் கோயிலில் கோவிந்தராஜப் பெருமானின் மூலவர் சிலை மற்றும் இதை தடுத்த வைஷ்ணவர் ரங்கராஜ நம்பியும் நடுக்கடலில் போட்டுது சமய வெறியை என்பது தகவல்கள் தெரிவிக்கின்றன.அமைதிக்குப் பங்கம் விளையும் நிகழ்ச்சியும் சோழரின் இந்த ஆட்சிக் காலத்தில் தலைகாட்டபட்டது . பேரரசின் நிலப்பரப்பு், விக்கிரம சோழனின் ஆட்சியின் இறுதியில் இருந்தவாரே நிலைநாட்டப்பட்டது.இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன

    "http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_II" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

    ReplyDelete
  110. ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல நகைச்சுவை படம் பார்த்த திருப்தி :D

    ReplyDelete
  111. கிழவனான நாகேஸ் வத வத பிள்ளைகள். ஜனத்தொகை பெருகி வரும் நிலையிலும் புத்திகெட்ட இனத்தின் செயல்பாடுகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளார்.

    காலி புல்லா நன்றியுள்ளவர் போல், நல்லவர் போல் காட்டப்பட்டாலும், அடிப்படையில் மடயன் மாதிரி காட்டிவிட்டார்.

    காலிபுல்லா பாத்திரமும், சீனாக்காரர் பாத்திரமும் அவசியமே இல்லாதவைகள்.

    அமெரிக்காவில் விஞ்ஞானி என்றாலும், அங்கேயும் திருட்டுக் கும்மளாக இந்தியர்களே இருப்பதை இப்படம் தெளிவாக்கியுள்ளது. பணத்திற்காக எதையும் செய்பவன் இந்தியன் என்பதை இப்படம் காட்டியுள்ளது. தீவிரவாதியுடன் என்றாலும் கைக்கோர்த்துக்கொள்ளும் இந்திய அடிப்படைக் கொள்கையையும் காட்டுகிறது.

    ஆனால் வெறுமனே இந்தியாவில் காண்போரையெல்லாம் தீவிரவாதி தீவிரவாதி எனும் பைத்தியக்காரத்தனத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.

    அது அமெரிக்க CIA என்றாலும் சரி, விஞ்ஞான கமல் என்றாலும் சரி, முஸ்லீம் கமல் என்றாலும் சரி, எல்லோரையும் நாயுடு தீவிரவாதி தீவிரவாதி என்று எந்த ஆய்வும் இன்றி மனம் போனபோக்கில் கூறும் இந்தியாவின் அடிப்பட்ட மடமையையும் இந்த படம் காட்டியுள்ளது.

    எப்படியோ கமல் சில இடங்களில் சில வற்றை மறைமுகமாக சொல்லியுள்ளார்.

    ReplyDelete
  112. சமயநோக்கில் சிந்திப்பது வேறு ஆன்மிகம் வேறு' communalக்கும் spiritualityக்கும் உள்ள வித்யாசம்! இதைத்தானே இந்த வரிகள் சொல்கிறது... என்றும் இருக்கலாம்

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP