Tuesday, May 06, 2008

விராலிமலை முருகப்பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி!

"அடங் கொக்க மக்கா! என்ன நடக்குது இங்க? முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி?

இவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன்?

அடப் பாவி! பார்த்தா பால் வடியும் பால முகம்! ஆணழகனை அள்ளிக் கட்டிக்கணும் போல இருக்கு!
முளைச்சி மூனு இலை விடல! அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா? OMG! I just can't believe this!..."

வாங்கப்பு வாங்க!
"யார் தமிழ்க் கடவுள்?"-ன்னு பதிவு போட்டு ஒரு மாசம் ஆச்சுல்ல? அதே போல தான் இந்தப் பதிவும்-ன்னு நினச்சிக்கிட்டு வர்றவங்க எல்லாருக்கும் ஆப்பு! :) இன்னிக்கி எங்க குல தெய்வம் முருகப்பெருமானைப் பார்க்க விராலிமலைக்குப் போகப் போறோம்...வாரீங்களா?

நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நியூயார்க் நகரில் எனக்கு ஒரு விபத்து.
சுரங்க ரயில் வண்டி ஏறும் போது, வண்டி இடுக்கில் கால் சிக்கிக் கொண்டு ஒரே களேபரம்!
NYPD போலீஸ் மாமாக்கள் வந்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயி அட்மிட் பண்ணாங்க. யாருக்காச்சும் சொல்லணுமா?-ன்னு கேட்டாங்க.

நன்றிங்க ஆபிசர், நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டேன். கையில் செல்பேசியும் பிளாக்பெரியும் இருந்திச்சி.
யார் கிட்டயும் சொல்லலை! வார இறுதி - அலுவலகம் இல்லை என்பதும் ஒரு வகையில் நல்லதாப் போச்சு!

பத்து மணி நேரக் காரோட்டும் தூரத்தில் இருக்கும் என் தம்பி-நண்பனுக்கு மட்டும் மருத்துவமனையில் இருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், தகவலுக்காக! :-)
அனுப்பிட்டு, நாமளே சமாளிச்சிக்கலாம்-ன்னு தனியா இருந்தேனா? ராத்திரி ஆக ஆக வலியும் பயமும் சேர்ந்து கூடிக்கிச்சு!
இது போன்ற நேரங்களில் தனிமை கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடங்களும் நட்புப் பாடங்களும் தான் எத்தனை எத்தனை? :-)

இதுக்கு மேல வேணாம்டா சாமீ-ன்னு, நியூயார்க்கிலேயே இருக்கும் என் ஈழத்து நண்பி ஒருத்தியை அழைத்தேன்!
அவளும் அவள் கணவரும் பதறியடிச்சிக்கிட்டு ஓடியாந்தாங்க! அன்றைய இரவு, வலியிலும் கண்ணீரிலும் நட்பிலும் அமைதியாய்க் கழிய....

கொஞ்ச நாள் கழிச்சி இந்தியாவுக்குத் தொலைபேசும் போது, அம்மா கிட்ட உளறி விட்டேன்!
அம்மாவிடம் அவ்வளவா எதையும் மறைச்சிப் பழக்கம் கிடையாது பாருங்க!

(உங்களில் பல பதிவர்களின் பேரு கூட எங்கம்மாவுக்குத் தெரியும்!
பொறுமையின் சிகரம்! என் பதிவு-பின்னூட்டம் பற்றிய மொக்கையைக் கூட பொறுமையாக் கேட்டுப்பாங்க! :-)

அம்மா பயந்தே போயிட்டாங்க!
"ஏண்டா இப்படி எல்லாம் பண்றே-ன்னு?" ஒரே அழுகை! உடனே அவங்களுக்கு நன்கு தெரிந்த என் அமெரிக்க நண்பர்கள் கிட்ட போனைப் போட்டு அங்கேயும் ஒரு சீனைப் போட்டாங்க!
போட்டதுமில்லாம என்னைப் போட்டும் கொடுத்தாங்க! பசங்க எல்லாரும் என்னைப் பிலுபிலுன்னு பிடிச்சிக்க...

இந்த விபத்தால் பயந்து போன அம்மா, விராலிமலைத் தெய்வம் முருகப் பெருமானுக்கு வேண்டிக் கொண்டாங்க போல!
இந்த முருகன் மருத்துவ முருகனாம்! பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும் அல்லவா?

விராலிமலையில் வேலும் உண்டு! எக்கச்சக்கமா மயூரமும் (மயில்) உண்டு!
அதனால் இந்த முறை இந்தியப் பயணத்தின் போது விராலிமலையில் தரிசனம்!

திருச்சி-திருவரங்கம் வரை ரயிலில் சென்று, பின்னர் விராலிமலைக்கு வாடகைக் காரில் செல்லலாம்! பேருந்தும் நிறைய உண்டு! சுமார் முப்பது கிலோ மீட்டர்!

திருச்சி-மதுரை சாலையில், புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் சிற்றூர் விராலிமலை!
சிறிய ஆனால் அழகிய ஊர்! அழகன் இருக்கும் ஊரல்லவா? அழகா இருக்காதா பின்ன?


அது என்ன விராலி மலை? விரலி மஞ்சள் தெரியும்! விரல் மாதிரி நீட்டு நீட்டா இருக்கும்! ஆனா அது என்னாங்க விராலி??

விறலி என்பது தான் விராலி என்று திரிந்து போனது-ன்னு சிலர் சொல்லுறாய்ங்க!
விறலி-ன்னா நாட்டியப் பெண்! கோயில்களில் நடனமாடும் தேவதாசிகள் நிறைய பேரு விராலிமலையைச் சுற்றி இருந்தாங்களாம்.
இங்கு இசை வேளாளர் குடும்பங்களில், வீட்டில் பிறக்கும் முதல் பெண்ணை, வேலக் கடவுளுக்குக் கட்டி வைக்கும் வழக்கமும் இருந்ததாம்!

இதுக்குன்னே முக்கோண வடிவில், விராலிமலை முருகன் தாலி-ன்னு வழக்கத்தில் இருந்திருக்கு போல!

இவர்கள் ஆடுவது பரதநாட்டியம் இல்லை; சதிர் என்ற ஒரு வகையான ஆட்டம்!
இவர்களுக்கு என்றே எழுதப்பட்ட விராலிமலைக் குறவஞ்சியை நடித்துக் காட்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது!

ஆனால் கால மாற்றத்தாலும் அரசின் சட்டத்தாலும் இப்போது விறலியர்கள் அவ்வளவாக இல்லை-ன்னு அங்கிருந்த சிவாச்சாரியார்(அர்ச்சகர்) சொன்னாரு!
விராலி மலையில் கால் வைத்ததுமே நாம் காண்பது சிறு குன்று! சுமார் 200 படி இருக்கும் போல! கொஞ்சம் விராலி மரங்கள்!
டிசம்பர் பூ மாதிரி ஒரு பூ... வில்வ இலை மாதிரி ஒரு இலை!
இது ஏதோ மருத்துவச் செடியாம்-ல! கடம்பனே ஒரு மாமருந்து! அவன் மலையில் வளரும் செடிகளுமா மருந்து?

இந்தச் செடியெல்லாம் Analgesic, Pain Killer-ன்னு நம்ம டாக்டரம்மா - தங்கச்சியம்மா சொல்லிப் போர் அடிச்சிக்கிட்டே வந்தாங்களா?
"உன் கூட வரேன்-ல? நெறைய Pain Killer தேவைப்படும்! கொஞ்சம் பறிச்சிப் போட்டுக்கவா"-ன்னு அவ புருசனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே நானும் அவளை ஓட்டிக்கிட்டு வந்தேன்!:-)

குன்றில் இந்தப் பக்கம் திரும்பினா நிறைய மயில்கள்! அட, எங்கிட்டு தான் இம்புட்டு மயிலு இருக்கும்னே தெரியலை! பறபறன்னு ஓடியாருதுங்க!

தோகை மயில்(ஆண்), தோகை இல்லாத மயில்(பெண்), வெள்ளை மயில்-ன்னு எக்கச்சக்கமான மயில்கள்!
நான் எந்த முருகன் கோயில்-லயும், ஏன் அறுபடை வீட்டுல கூட, இம்புட்டு மயிலைப் பார்த்தது கிடையாதுப்பா!
அதுங்க டொக்கு டொக்கு-ன்னு நடக்குற அழகே தனி! ஏதாச்சும் ஒரு மயிலு தோகையை விரிக்குமா-ன்னு நானும் கேமிராவை வச்சிக்கிட்டு அப்படியும் இப்பிடியும் குழந்தை மாதிரி திரும்பித் திரும்பிப் பார்த்தது தான் மிச்சம்!

"வெண்ணை, யார் தமிழ்க் கடவுள்???-ன்னா பதிவு போடுற? தோகையை விரிக்க மாட்டோம் போடா"-ன்னு சொல்லுதுங்க போல! :-)

மயில் போடுற சத்தம் தான் கொஞ்சம் கேட்க ஒரு மாதிரி இருக்கு!
மயில் கத்துது-ன்னு சொல்லக் கூடாதாமே? = என்னன்னு சொல்லணும் சொல்லுங்க பார்ப்போம்?

விராலி மலையின் கீழ் சரவணப் பொய்கை! குளத்தில் கால் நனைத்துக் கொண்டு மலைப்படி ஏறினோம்!
 கீழே கிராம தேவதையான மைக் கண்ணுடையாள் சன்னிதி-ல கும்பிட்டுத் தான் மலை ஏறணுமாம்!

அரோகரா-ன்னு சொல்லச் சொன்னாங்க அம்மா! நானும் சொன்னேன்!
அம்மா என் கையில் சிறிய திருக்கை வேல் ஒன்னு கொடுத்தாங்க! = நேர்த்திக் கடன் வேல்!

அட சக்தி வேல் வாங்கிட்டேனா? அப்ப நான் தேன் முருகன்! :-)
அப்படியே குழந்தை முகமா, பால் வடியும் பால முகமா, பழமா, அப்பாவியா வேற இருக்கேனா?
ஒரு முருக மிடுக்கோடு மலை ஏற ஆரம்பிச்சேன்! கெக்கெக்கே-ன்னு ஒரு சத்தம்!
அட நம்ம மயிலு தோகைய விரிக்கிறான்-டா!

படபட-ன்னு கீழே ஓடியாந்து காமிராவில் சுட்டேன்! ச்சே...ஒரே ஷேக்கு!
"ரவி செல்லம், மனக் கொறையோட ஏன் மலை ஏறுற நீயி?
யார் தமிழ்க் கடவுள்?-ன்னு பதிவுக்கு, ஒன்னும் புரியாத மனுசன் தான் கோச்சிப்பான்!
மால்-மருகன் ஒன்றே-ன்னு புரிந்த உன் காதல் முருகன் கோச்சிப்பானா?

மாமனும் மருகனும் - இருவருமே தமிழ்க் கடவுள்-ன்னு உண்மையைத் தானே சொன்னே? இந்தா தோகை!"
-ன்னு சொல்வது போல, நல்லா விரித்து விரித்து ஆடியது அந்த மயிலு!

எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! வாயெல்லாம் சிரிப்போட மீண்டும் படி ஏறினேன்!

படிகளுக்கு நடுவே அழகா மண்டபம் எல்லாம் இருக்கு! சின்ன மலைங்கிறதாலே சீக்கிரமாவே ஏறிடலாம்!
வழியில் இடும்பன், மீனாட்சி-சொக்கநாதர், வசிட்டர்-அருந்ததி, அகத்தியர், அருணகிரிநாதர் எல்லாருக்கும் சின்னச் சின்னச் சன்னிதிகள்!

இதோ மலை உச்சிக்கு வந்தாச்சு! அழகான ராஜகோபுரம்!

மகாமண்டபம் தாண்டினாக் கருவறை!
மகாமண்டபத்தில் மாணிக்க விநாயகருக்கு ஒரு சல்யூட் அடிச்சிட்டு உள்ளே முருகனைப் பார்க்கலாம்-ன்னு திரும்பிப் பாக்குறேன்.....
அடடா! அந்த அழகனைப் பாக்கலாம்-னு வந்தாக்கா, இந்த அழகர் எங்கேப்பா இங்க வந்தாரு?
இது என்ன இன்ப அதிர்ச்சி? = என் அப்பா!!
* என்னப்பன்,
* பொன்னப்பன்,
* முத்தப்பன்,
* மணியப்பன்,
* தன் ஒப்பார் இல் அப்பன்,
தாயார் உடனுறை திருமகள் கேள்வன் (ஸ்ரீநிவாசன்) = மருகனும் மாமனும் சைடு கேப்புல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருக்காங்க!

எனக்குச் சிரிப்பு தான் வந்தது! நான் பாட்டுக்குச் சிவனே-ன்னு முருகன் கோயிலுக்கு வந்தாக் கூட, இவரு என்னைய சும்மா வுட மாட்டாரு போல இருக்கே! இவரைப் பார்த்துட்டு தான் அவனைப் பார்க்க முடியும் போல இருக்கே! இது என்னடா கொடுமை? வேறு வழியில்லை!

கேஆரெஸ் என்னும் போவான் போகின்றாரை...
போகாமல் காத்து,
உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்!
- என்கிறானோ?

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால், ஆ! வா! என்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!
தீர்த்தம் பெற்றுத் துளசி மணக்க, முருகனைத் திரும்பிப் பார்க்கிறேன்! ஆகா...யார் சொன்னா அந்த சிக்கல் சிங்காரவேலன் தான் அழகு-ன்னு???


இதோ...அழ்கு விராலி மலையான்! சண்முக நாத சுவாமி என்னும் திருப்பெயர்!
மயில் மீது அமர்ந்த ஒய்யார வடிவம்! இடக்கால் மடித்து, வலக்கால் தொங்கவிட்டு,
மூவிரு முகங்கள், முகம் பொழி கருணை,
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள், மாவடி வைகும் செவ்வேள் மலரடி!

தோளில் ஓர் கூர் வேலலைத் தாங்கி நிற்கும் திருக்கோலம்!
சேவல் கொடியில் என் ஆவல் கொடி பறக்கும் திருக்கோலம்!

வலப்புறம் வள்ளியாள் - அவள் கரத்திலோ தாமரைப்பூ = அவன் வலக்கண் சூரியன் அல்லவா?
இடப்புறம் அத்தியாள் - அவள் கரத்திலோ அல்லிப்பூ = அவன் இடக்கண் சந்திரன் அல்லவா?
சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசையில் அடுக்கு விளக்குகள் எல்லாம் கருவறையில் ஜொலிக்கின்றன! ஆறுமுகத்தில் பின் மூன்று முகங்கள் கண்ணாடியில் பளிக்கின்றன!
கூட்டமே இல்லை! இனிது இனிது ஏகாந்தம் இனிது! என்னையும் அறியாமல் என் வாய் மெல்லிசா, மென் குரலில் கூவத் தொடங்குகிறது!

மயூ ராதி ரூடம், மகா வாக்ய கூடம்!
மனோ ஹாரி தேகம், மகா சித்த கேஹம்!
மகீ தேவ தேவம், மகா வேத பாவம்!
மகா தேவ பாலம், பஜே லோக பாலம்!

- என்று சரவணன் சதிராடுவது போலவே பாடலும் ஏற்ற இறக்கம் காட்ட.......

ஐயோ, இது என்ன? பாத்துக்கிட்டே இருக்கும் போதே இவங்க திரையைப் போடுறாங்க???


பொதுவா சன்னிதியில் எனக்கு வடமொழி சுலோகங்கள் வராது! தமிழ் அருளிச் செயல்கள் தான் பெரும்பாலும் வரும்!

ஆனா இன்னிக்கு என்னமோ தெரியலை, ஆதிசங்கரர் வாயில தானா வந்துட்டாரு! நான் என்னத்த சொல்ல!

"அப்பா தமிழ்க் கடவுளே! தமிழில் பாடாததற்கு எனக்குப் பாதியில் திரையா? இது என்ன கொடுமைன்னு" மனசு பரபரக்குது!
திரும்பிப் பாத்தா அம்மா என்னைப் பார்த்து ஒரு லுக்கு வுடறாங்க! வாயில் நுழையாத பாஷையை எல்லாம் இவன் எங்கிட்டுப் போயி படிச்சான்-ன்னு அவங்களுக்கு எப்பமே என் மேல ஒரு பயம் தான்! :-)

ஒரு வட்டத் தட்டு, துணி மூடிக் கொண்டு, உள்ளாற போறாங்க சில குருக்கள்! ஓ நைவேத்தியமா? அதான் திரை போட்டாங்களா?
அதானே பார்த்தேன்! என் காதல் முருகனுக்கு எம்மேல கோபமோ-ன்னு நினைச்சிட்டேன்! அப்படியே அவன் கோவப்பட்டாலும் நாங்களும் பதிலுக்குக் கம்புச் சண்டை, அன்புச் சண்டை எல்லாம் போடுவோம்-ல? :-)

கொஞ்ச நேரத்துக்குப் பின், உள்ளாற போன தட்டு தொறந்தபடி வெளியே வருது!
அதைப் பார்த்த உடனே நான் மயக்கம் போட்டு விழாத குறை தான்!!!!

ஆகா...இது என்ன தட்டில் சுருட்டு பீடி?

"அடங் கொக்க மக்கா! என்ன நடக்குது இங்க? முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி?
இவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன்?

அடப் பாவி! பார்த்தா பால் வடியும் பால முகம்! முளைச்சி மூனு இலை விடல! அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா? OMG! I just can't believe this!..."

என் வியப்பும் திகைப்பும் மூஞ்சிலயே எழுதி ஒட்டி இருக்கு போல! பக்கத்தில் இருந்த அர்ச்சகரே அதைப் பார்த்துவிட்டு விளக்கம் சொன்னாரு!

குமாரவாடி குறுநில மன்னனின் அமைச்சர் பேரு = கருப்பமுத்துப் பிள்ளை.
முருக பக்தர். அதே சமயம் சரியான சுகபோகி:)
தொடர் புகையாளர் (Chain Smoker). ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தரிசனத்துக்கு மலைக்கு வருவாராம்.

ஆனால் ஒரு முறை வெள்ளம் பெருக்கெடுத்து வர முடியாமல் போனது. கரையில் உணவு கூடக் கிடைக்காமல் தவித்தார் அமைச்சர்.
உணவை விட அவர் விரும்பிப் புகைக்கும் சுருட்டு தடைபட்டது தான் அவருக்குத் தவிப்பாகிப் போனது.

முருகன் அந்த நள்ளிரவிலும் அவர் முன் தோன்றி, சுருட்டு அளித்து, மலைக்கு அழைத்து வந்தான் = எதை நினைக்கிறாயோ அதாகவே ஆவாய்!:)
வேண்டியவர்க்கு வேண்டியதை "ஆராய்ந்து" பின்னரே அருளும் வழக்கமா என்ன கருணைக் கந்தனுக்கு? = சுருட்டு அளித்தான் சுப்ரமணியன்!!!

கருப்பமுத்துப் பிள்ளை அன்று முதல் பூசை வேளயில் சுருட்டும் சேர்த்து சண்முக நாதனுக்கு நிவேதனத்தில் தர வேண்டும் என்ற அரசாங்க உத்தரவு பிறப்பித்து விட்டார்!
இன்றும் அதுவே நடைமுறையில் உள்ளது! இந்த நாட்டு பீடிக்குச் = சுருட்டுக் களஞ்சி என்றே பெயர்!

இதோ திரை விலகி, மேளங்கள் முழங்க, ஆறுமுகனுக்கு ஆரத்தி!

முன்பு சங்கரர் பாடிய அதே புஜங்க நடையில் அழகு ஜொலிக்க நிற்கிறான் என் ஆணழகன்!
விராலிமலைத் திருப்புகழ் அடியேன் வாயில் சன்னமாய் ஒலிக்கிறது.

செய்ப் பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு...
செப்பு என எனக்கு அருள்கை மறவேனே! (பாடலை இங்கு கேட்கலாம்!)

சீரான கோல கால நவமணி
மால் அபிஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செய்யும் முக - மலர்ஆறும்

....
....
காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே!

(திருப்புகழ் வித்தகர் நம்ம SK ஐயாவை, இந்த அழகிய சந்தப் பாட்டுக்குப் பொருள் சொல்லுமாறு அன்போடு அழைக்கிறேன்!)


அனைவரும் தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம்.
அங்கிருந்த சிவாச்சாரியார்கள் அடியேன் பாடலை மிகவும் சிலாகித்து அன்புடன் பேசினார்கள்.
அம்மா என் கால் குணமானதற்கு வேண்டுதலை நிறைவேற்றினார்கள்!
திருக்கை வேலினைக் காணிக்கை அளித்தார்கள்! திருச்சி நகருக்குத் திரும்பி வந்தோம்.

எந்தை = திருமால்
எங்கள் மால் ஈசன் கிடந்ததோர் கிடக்கையாம், பச்சை மாமலை போல் அரங்கன் மேனியைக் காண மனசு துடிக்குது.

திருவரங்கம் செல்ல மெள்ளப் பேச்செடுத்தேன். அம்மாவோ "ஊருக்குப் போகலாம்-பா, ரொம்ப லேட்டாயிடிச்சி" என்று சொல்லி விட்டார்கள்!
பாவம் மிகவும் களைத்துப் போய் இருந்தார்கள்! என் பொருட்டு இவ்வளவு தூரம் வந்ததே பெருசு! சரிம்மா-ன்னு சொல்லிட்டேன்.

திருச்சியில் ரயிலேறிச் சென்னைக்குக் கிளம்பி விட்டோம். ஆற்றுப் பாலம் வரும் போது ரயிலின் கதவோரம் போய் நின்று கொண்டேன். அரங்கனின் நெடிதுயர்ந்த கோபுர மாமலை கண் சிமிட்டுகிறது!

"போய், பின்னொரு நாள் வருகிறேன் ரங்கா!" என்று சொன்னேன்!
கால் வலித் துடிப்பில் மருத்துவமனைத் தனிமையில் இருந்தது நினைவுக்கு வந்து...கண்கள் பனிக்க...

"பயந்த தனி வழிக்குத் துணை நான் அல்லவா? அதான் மருகன் வீட்டில் மாமனைக் கண்டாயே?
மை வண்ணம் இங்கு கண்டாய்! மால் வண்ணம் அங்கு கண்டாய்?"
என்று சொன்னான் போலும் அரங்கன்!
அகண்ட காவேரியின் மை வானத்து இருளில்...ஒரு மின்னல் பளிச்ச... 
அரங்கன் கோபுரம், பிரகாசமாய் ஒளிர்ந்தது, ஓரிரு விநாடிகள்!

கோபாலராயன் நேயம் உள திரு - மருகோனே
காவேரி ஆறு பாயும் வயலியில்,
கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே!

89 comments:

  1. ஏதோ பத்தவச்சிருக்கீங்கன்னு தெரியுது முழுக்க படிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்!!!
    மதுரையம்பதிக்கு முன்னாடி இன்னிக்கு நான் தான் ஃப்ஸ்ட்!

    ReplyDelete
  2. மயில் அகவுகிறது என்று சொல்ல வேண்டும்.
    திருச்சியில் படிக்கும்போது நண்பர்களோடு விராலி மலை போய் வந்தேன். அப்போது மயில் தோகை பிடுங்க மயில் கிட்ட போய், அது கொத்துவதற்குள் தப்பித்தது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  3. //நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நியூயார்க் நகரில் எனக்கு ஒரு விபத்து. சுரங்க ரயில் வண்டி ஏறும் போது, வண்டி இடுக்கில் கால் சிக்கிக் கொண்டு ஒரே களேபரம்!
    NYPD போலீஸ் மாமாக்கள் வந்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயி அட்மிட் பண்ணாங்க//

    என்ன இவ்ளோ நடந்திருக்கு சொல்லவே இல்ல? நற நற(பல்லைக்கடிகக்றேன் அவ்ளோ கோபம்)


    //அட சக்தி வேல் வாங்கிட்டேனா? அப்ப நான் தேன் முருகன்! :-)
    அப்படியே குழந்தை முகமா, பால் வடியும் பால முகமா, பழமா, அப்பாவியா வேற இருக்கேனா?..//

    அடப்பாவி! அடிபட்டதை போன்லகூட சொல்லவேஇல்ல அப்பாவியாமே அப்பாவி..இருக்கு அடுத்தவாட்டி பாக்றப்போ ஸ்கேல்ல நாலுஅடி!

    // சுருட்டு அளித்தான் சுப்ரமணியன்!!!
    கருப்பமுத்துப் பிள்ளை அன்று முதல் சண்முக நாதனுக்குப் பூசை வேளயில் சுருட்டும் சேர்த்து நிவேதனத்தில் தர வேண்டும் என்ற அரசாங்க உத்தரவு பிறப்பித்து விட்டார்! இன்றும் அது நடைமுறையில் உள்ளது! இந்த நாட்டு பீடிக்குச் சுருட்டுக் களஞ்சி என்றே பெயர்!//

    புதுக்கதை..தெரியாமலே திருவரங்கத்துல இருந்திருக்கேன்..அடுத்த வாட்டி எங்க ஊர் போறப்போ விராலிமலைக்கு விரைந்துடப்போறேன்.

    //அரங்கனின் நெடிதுயர்ந்த கோபுர மாமலை கண் சிமிட்டுகிறது! "போய் பின்னொரு நாள் வருகிறேன் ரங்கா!" என்று சொன்னேன்!//

    ம்ம்..உங்க ஆப்த நண்பர் ஜிரா இப்போ குளிர்ந்தேலோரெம்பாவாய்..ஆனால் எங்க ரங்கனைப்பார்க்காம வந்ததால்
    திருவரங்கப்ரியா, நெறிக்கிறாங்க புருவத்தை:):)(கிட்டிங்)..ம்ம்ம்..
    சுவையான பதிவு ரவி! மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. என்ன போட்டி பாருங்க ஷலஜக்காவுக்கு... :)

    யக்கோவ் நானிந்த போட்டிக்கு வரல்லை...ஆள விடுங்க... :)

    //மயில் கத்துது-ன்னு சொல்லக் கூடாதாமே? என்னன்னு சொல்லணும் சொல்லுங்க பார்ப்போம்?//

    மயில் அகவும்ன்னு நினைக்கிறேன்

    //விராலி மலையின் கீழ் சரவணப் பொய்கை! குளத்தில் கால் நனைத்துக் கொண்டு மலைப்படி ஏறினோம்! கீழே கிராம தேவதையான மைக் கண்ணுடையாள் சன்னிதி-ல கும்பிட்டுத் தான் மலை ஏறணுமாம்//

    அன்னை சொல்படி, அன்னையுடன் போனாலும் முன்னே என்னையும் பார்த்துச் செல்லுன்னு சொன்னாளா கண்ணாத்தா?...

    என்னாது பெருமாளா?, எனக்கு நினைவில்லையே?....சாதாரணமா திருப்பறங்குன்றத்தில் எல்லாம் அப்பாவும்-பிள்ளையுந்தானே இருப்பாங்க?.அதுசரி, ஏதாவது போட்டிக்கடை விரிச்சுருப்பாரு...:)

    ReplyDelete
  5. //வலப்புறம் வள்ளியாள் - அவள் கரத்திலோ தாமரைப்பூ - அவன் வலக்கண் சூரியன் அல்லவா?
    இடப்புறம் அத்தியாள் - அவள் கரத்திலோ அல்லிப்பூ - அவன் இடக்கண் சந்திரன் அல்லவா?//

    அட!

    //கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே//

    ம்ம்ம்ம் இங்கேயும் பெருமாள் தானா?

    ReplyDelete
  6. Excellent KRS.. I am Raghavan. New to blog world.. Just reading all of your posts... Its really excellent.. Your posts making me to learn Nalayira Divya Prabhandham. Your's giving more n more unknown information in a fentastic reading way...

    KRS Vahiya Vazhiya vey...

    ReplyDelete
  7. விராலிமலைக்கு போனீங்களா? கொடுத்துவெச்சவர். சின்னப்ப எப்பவோ போன ஞாபகம். மயில் ஆடும் அழகை ரசிச்சது தனி சுகம். கந்தன் மட்டுமல்ல கந்தன் இருக்கும் இடமும் அழகுதான்.

    ReplyDelete
  8. எப்படி?, எப்படி சுப்ரமண்ய புஜங்கம் சொன்னதால திரையா?....ஹல்லோ, ஒரு ஸ்லோகம் மட்டும் சொன்னதால திரை....ஆமாம்! :-)

    ReplyDelete
  9. //அரங்கனின் நெடிதுயர்ந்த கோபுர மாமலை கண் சிமிட்டுகிறது! "போய் பின்னொரு நாள் வருகிறேன் ரங்கா!" என்று சொன்னேன்!//

    ம்ம்..உங்க ஆப்த நண்பர் ஜிரா இப்போ குளிர்ந்தேலோ ரெம்பாவாய்..//

    ஹிஹி
    அப்படியா ஜிரா? ஷைலஜாக்கா என்னமோ சொல்லுறாங்க பாருங்க!

    எங்க ஜிராவுக்கு குளிர்ந்தேலோ...
    நான் விராலிமலை போனது இல்ல!
    நான் திருவரங்கம் போகாம வந்தது!
    ஹா ஹா ஹா! :-)

    ReplyDelete
  10. மயில் அகவுகிறது ...

    ReplyDelete
  11. //திவா said...
    //வலப்புறம் வள்ளியாள் - அவள் கரத்திலோ தாமரைப்பூ - அவன் வலக்கண் சூரியன் அல்லவா?
    இடப்புறம் அத்தியாள் - அவள் கரத்திலோ அல்லிப்பூ - அவன் இடக்கண் சந்திரன் அல்லவா?//

    அட!
    //

    வாங்க திவா சார்!
    ஆமாம்...
    வலக்கண் சூரியனால் வள்ளியின் தாமரை மலர்கிறது!
    இடக்கண் சந்திரனால் தேவானையின் அல்லிப்பூ மலர்கிறது!


    //கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே//
    ம்ம்ம்ம் இங்கேயும் பெருமாள் தானா?//

    ஹிஹி!
    இந்த ஒரு சொல்லுக்கு இம்புட்டுச் சக்தியா? இம்புட்டு மோகனமா?

    அருணகிரிநாதர் திருப்புகழ்-ல பாதிப் பாட்டைப் "பெருமாளே"-ன்னு சொல்லித் தான் முடிப்பாரு! தெரியும்-ல? :-)

    ReplyDelete
  12. முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. திருக்குமரா..

    உன் மாமன் பெருமாளின் ஆதித்ய சிஷ்ட சிரேர குமாரர் கே.ஆர்.எஸ்.. உன்னைப் பார்க்க படியேறி வந்திருக்கிறார்.

    அவராக வரவில்லை. நீதான் வரவழைத்திருக்கிறாய்.. இது எனக்குப் புரிகிறது.. அவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

    உன்னையன்றி யார் தமிழ்க்கடவுள்? நீ வேறு தமிழ் வேறா என்றெல்லாம் சண்டையிட்டு ஒரு மாதம்தான் ஆகிறது.. எழுதியதைப் பொறுத்துக் கொண்டாய்.. தாயகம் வருவதை அறிந்து கொண்டாய்.. உன்னை நாடி வருவதற்கான சூழலை நீயே ஏற்படுத்தி வைத்தாய்.. பார்.. பார்.. இவ்வளவு வியப்பிலும் அவர் அப்பனை பார்க்க முடியாமல் தவியாய் தவித்துவிட்டார். இது ஓரவஞ்சனைதானே..

    அங்கிருந்து உன்னிடத்திற்கு வரவழைத்தாயே.. அருகிலேயே இருக்கும் அவர் அப்பன், உன் மாமன் திருவரங்கனை தரிசிக்கும் பாக்கியத்தையும் ஏற்படுத்தியிருக்கலாமே..

    சரி.. எனக்குப் புரிகிறது.. மருமகனை பார்த்துவிட்டு கையோடு மாமனை பார்க்கச் சொல்லியனுப்ப உனக்கு மனமில்லை. அனுப்பிவிட்டாய்.. அந்தப் புள்ளை போகும் வழியில் கால் கடுக்க நின்று கோபுர தரிசனம் செய்து கை கூப்பி வணங்கி அரங்கனுக்குத் தூது விட்டுள்ளது..

    எத்தனையோ விளையாட்டையும், வினையையும் ஆற்றியிருக்கிறாய்.. இப்போது எனக்காக இதையும் செய்துவிடு..

    இந்த கே.ஆர்.எஸ்ஸின் முகமன் வணக்கத்தையும், வந்தனத்தையும், வேண்டுதலையும் உன் மாமனுக்குத் தப்பிதமில்லாமல், தாமதமில்லாமல் கொண்டு போய்ச் சேர்ப்பித்துவிடு..

    எல்லாம் நீதான்.. அனைத்தும் நீதான்.. தமிழும் நீதான்..

    கோடி நன்றிகள் அன்பர் கே.ஆர்.எஸ். சார்பாக நான் உனக்குச் சமர்ப்பிக்கிறேன்..

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

    விராலிமலை முருகனுக்கு அரோகரா..

    ReplyDelete
  13. ////கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே //
    //

    //Your posts making me to learn Nalayira Divya Prabhandham. //

    இதை படித்து விட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியலை அண்ணே! :))

    ReplyDelete
  14. ..ம்ம், மயில் அகவும்!னு சொல்ல வந்தேன், அதுக்குள்ள சுல்தான், மதுரையம்பதி எல்லாரும் முந்திகிட்டாங்க.
    யானை பிளிறும்,
    (அட்லாஸ்)சிங்கம் கர்ஜிக்கும்.

    போதுமா? :p

    ReplyDelete
  15. சரி நீங்க சொன்ன சுருட்டு கதை அந்த அர்ச்சகர் உங்களுக்கு சொன்னது தானே? ஏதேனும் வரலாற்று தரவு இருக்கா? :p

    தரவு? தரவு? (தகடு! தகடு! ஸ்டையிலில் படிக்கவும்)

    ஒரு தனிப்பட்ட மனிதருக்கு முருகனே காட்சி குடுத்து இருக்கார்னா ஏதேனும் ஒரு புராணத்தில் பதியபட்டு இருக்குமே? :p

    note: அர்ச்சகர் போன் நம்பர் எல்லாம் செல்லாது! செல்லாது! :))

    ReplyDelete
  16. அண்ணே! சும்மா உங்கள சீண்ட தான் இந்த பின்னூட்டம். உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.

    அந்த வேலும், மயிலும் என்றும் உங்களுக்கு துணை நிற்கட்டும்னு பெருமாளிடம் (ஆசைய பாரு! நான் முருகனை சொன்னேன்) வேண்டிக்கறேன். :))

    ReplyDelete
  17. //ambi said...
    யானை பிளிறும்,
    (அட்லாஸ்)சிங்கம் கர்ஜிக்கும்.
    போதுமா? :p //

    என்னது கர்ஜிக்குமா? வடை-மொழி! செல்லாது! செல்லாது! :-)
    தமிழ்-ல சொல்லுங்க அம்பி! தமிழ்-ல சொல்லுங்க!

    குயில் கூவும்
    மயில் அகவும்
    வண்டு முரலும்
    காகம் கரையும்
    யானை பிளிறும்
    புலி உறுமும்
    சிங்கம் ? என்ன அம்பி, சிங்கம் ?
    என்ன :-)

    ReplyDelete
  18. நான் விராலிமலை போனது இல்லை. அங்கே மயில் அதிகம்னு அப்பா நிறைய சொல்லி நினைவிருக்கு. இது படிச்சதும் போய்ப் பாக்கணும்னு ஆசையாயிருக்கு. முருகனருள் இருந்தா அடுத்த தடவை கட்டாயம்.

    காலில் அடி என்று படிக்க கஷ்டமாயிருந்தது. ட்ரெயின் கீழ வேல் (Whale?) இருந்துருக்குமோ? சரி சரி, ஜாக்கிரதை! Take Care!

    ReplyDelete
  19. சுல்தான் சார்! நல்வரவு!
    திருச்சியில் எங்க படிச்சீங்க?

    விராலிமலை நீங்களும் போனது மகிழ்ச்சி!
    மயில் கொத்த வந்துச்சா? அய்யோ! மயில் பறக்கும் (தாவும்) போது கொஞ்சம் பயமா இருக்கும்! பெரிய தோகையுடன் பறக்கச் சிரமப்படும்! அப்போ தான் கொஞ்சம் உர்-ன்னு இருக்கும்! மத்தபடி சாது தான்!

    கமலஹாசனை சிம்லா ஸ்பெஷல் படத்துல மயில் கொத்துச்சாம்!
    பின்ன ஸ்ரீதேவியைப் பாத்து மயிலி மயிலுன்னா ஒரிஜினல் மயிலுக்கு கோபம் வரும்-ல? :-)

    ReplyDelete
  20. @ஷைலு அக்கா
    மீ த பர்ஷ்ட்டு-ல போட்டியா? :-)

    //என்ன இவ்ளோ நடந்திருக்கு சொல்லவே இல்ல? நற நற(பல்லைக்கடிகக்றேன் அவ்ளோ கோபம்)//

    அப்போ ரொம்ப விரக்தியில் இருந்தேன் ஷைலஜா! :-)
    ஸ்கேல்ல தான? அடிச்சிருங்க!

    //ரங்கனைப்பார்க்காம வந்ததால்
    திருவரங்கப்ரியா, நெறிக்கிறாங்க புருவத்தை:):)//
    ஆகா...நல்லாப் பாடுவீங்க தெரியும்!
    புருவம் நெறிக்கறீங்க! பரத நாட்டியம் தெரியுமா? சொல்லவே இல்ல? :-)

    ReplyDelete
  21. //மதுரையம்பதி said...
    என்னையும் பார்த்துச் செல்லுன்னு சொன்னாளா கண்ணாத்தா?...//

    எப்பமே அப்படித் தானே மெளலி அண்ணா? க்ஷேத்திர தேவதையை வணங்கிட்டுத் தானே போகணும்!
    இப்பவும் திருமலைக்குக் கிளம்பும் முன்னாடி, வீட்டில் எங்கூரு பச்சையம்மன், பொன்னியம்மனைக் கும்பிட்டுத் தான் கெளம்புவோம்!

    //என்னாது பெருமாளா? அதுசரி, ஏதாவது போட்டிக்கடை விரிச்சுருப்பாரு...:)//

    போட்டிக்கடையா? போட்டிக்கு அடையா? போட்டிக்குள் அடையாத போத மூர்த்தி அல்லவா அவன்!
    விராலிமலைக் கோயிலில் ரொம்ப நாளா இருக்காரு திருமால் (ஸ்ரீநிவாசன்)!

    சந்தனக் கோட்டம்-சண்முக மூர்த்தி மண்டபம்-மகா மண்டபம்-கருவறை!
    மகா மண்டபத்தில் மாணிக்க விநாயகர், பெருமாள் சன்னிதிகள் தனியாக இருக்கு!

    ReplyDelete
  22. //Raghavan said...
    Excellent KRS.. I am Raghavan. New to blog world.. //

    வாங்க இராகவன்! நல்வரவு!

    //Your posts making me to learn Nalayira Divya Prabhandham//
    மிகவும் நல்லது இராகவன்!
    குமரன் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை ஒவ்வொன்னா சைட்பாரில் சொல்லத் துவங்கி இருக்காரு! பல்லாண்டில் தொடங்கி இருக்காரு! பாருங்க!
    இந்தாங்க சுட்டி!
    http://koodal1.blogspot.com/2008/02/blog-post_15.html

    //Your's giving more n more unknown information in a fentastic reading way...
    KRS Vahiya Vazhiya vey...//

    அன்புக்கு நன்றி!
    அனைவரும் வாழிய வாழியவே!
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம் பாவாய்!

    ReplyDelete
  23. @ சுல்தான், பொன்வண்டு, மெளலி, அம்பி...
    மயில் அகவும் தான்! சரி!
    அப்படியே சிங்கதுக்கும் சொல்லுங்க! (நோ கர்ஜிக்கும் ப்ளீஸ் :-)

    @ புதுகைத் தென்றல்
    மயிலாடும் அழகே அழகு! அதைப் போட்டா தான் சரியா எடுக்க முடியலை! கொஞ்ச நேரத்துல தோகையை மூடிடுதுங்க!
    Motion Capture தான் செய்யனும்! இல்லீனா tripod-ல செட் பண்ணி Scene Modeல தான் எடுக்க முடியும் போல!

    ReplyDelete
  24. //மதுரையம்பதி said...
    எப்படி?, எப்படி சுப்ரமண்ய புஜங்கம் சொன்னதால திரையா?....ஹல்லோ, ஒரு ஸ்லோகம் மட்டும் சொன்னதால திரை....ஆமாம்! :-)//

    என்னடா கெளப்பலையேன்னு பார்த்தேன்! முழு சுலோகமும் நமக்குத் தெரியாதுங்கண்ணா! ஆனா அதன் மெட்டு அப்படியே அருணகிரி சந்தம் மாதிரியே தொம் தொம்-னு கம்பீரமா வரும்!

    சரி நீங்களே கேட்டுட்டீங்க!
    வடமொழிப் பாட்டுக்குக் கதவடைச்சி, தமிழ்ப் பாட்டுக்குக் கதவைத் தொறந்து வுட்ட கதை தெரியுமா? (உங்களுக்கு சொ.செ.சூ :-)

    ReplyDelete
  25. //வடமொழிப் பாட்டுக்குக் கதவடைச்சி, தமிழ்ப் பாட்டுக்குக் கதவைத் தொறந்து வுட்ட கதை தெரியுமா? (உங்களுக்கு சொ.செ.சூ :-)//

    அதையும் நீங்களே சொல்லுங்க, அத சொல்றதுல உங்களுக்கு ஒரு சந்தோஷமுன்னா நான் ஏன் தடுக்கணும் :-)

    சொ.செ.சூ இல்ல, ஏங்கறதை அப்பறமா நான் ஜிரா கிட்ட சொல்லிக்கறேன்... :)

    ReplyDelete
  26. //ambi said...
    இதை படித்து விட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியலை அண்ணே! :))//

    என்னாது; திருப்புகழ் படிச்சிட்டு சிரிப்பை அடக்க முடியலையா? என்ன ஆணவம் அம்பி உனக்கு? :-)

    //தரவு? தரவு? (தகடு! தகடு! ஸ்டையிலில் படிக்கவும்)//

    நான் சொன்ன இஷ்டைல் எனக்கே-வா?

    இங்கே நான் பதித்தது, கண்ட காட்சிகளை மட்டுமே! Eye witness account! ஏன் அவ்வாறு செய்யறாங்க-ன்னு சொல்லி விளக்கவில்லை! So..No Tharavus! :-)

    தரவு கேக்குறது தப்பே இல்ல! ஆனா யார் கிட்ட கேக்கணும்-னு இருக்குல்ல? யாரு சுருட்டு படைக்கறாங்களோ அவிங்கள கேளுங்க!
    இல்லை முருகப் பெருமானைத் தங்களுக்கே சொந்தம்-னு ஏக போக உரிமை கொண்டாடுவாங்களே, அவிங்களைப் போய்க் கேளுங்க!
    ரா ரா தரவுக்கு ரா ரா! :-)))

    ReplyDelete
  27. //ambi said...
    அண்ணே! சும்மா உங்கள சீண்ட தான் இந்த பின்னூட்டம். உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.//

    ஹிஹி! இந்த டிஸ்கி வேறயா? முருகா முருகா! :-)

    //அந்த வேலும், மயிலும் என்றும் உங்களுக்கு துணை நிற்கட்டும்னு பெருமாளிடம் (ஆசைய பாரு! நான் முருகனை சொன்னேன்) வேண்டிக்கறேன். :))//

    அந்த சக்கரமும் சங்கும் என்றும் உனக்கு அருள் செய்யட்டும்னு நானும் முருகனிடம் (ஆசைய பாரு! நான் முருக,அழகா இருக்கும் பெருமாளைச் சொன்னேன்) வேண்டிக்கறேன்! :-))

    ReplyDelete
  28. ஏன்யா, இம்புட்டு நடந்திருக்கு. எவ்வளவு முறை தொலைபேசி இருக்கோம். சொல்லவே இல்லையே....

    உம்ம பேச்சு கா.

    ReplyDelete
  29. அன்புள்ள கேஆர்எஸ் அண்ணா, அருமையான பதிவு. பதிவில் எங்கள் தலை உச்சிபிள்ளையார் பற்றி எழுதாதை கண்டிக்கிறேன். அரங்கனின் கோபுரம் தெரிந்தது மலைகோட்டை தெரியவில்லையா? நண்பர்களோடு விராலிமலை சென்றதையும், மதுரையில் பணிபுரிந்தபோது பேருந்திலிருந்தபடியே இருந்தபடியே முருகப்பெருமானை தரிசித்ததையும் நினைவுபடுத்தியது. அருமையான பதிவு. அடுத்தமுறை திருச்சி வரும்முன் தெரிவிக்கவும். சிங்கம் கர்ஜிக்கும் என்பதும் சரிதான் ஆனால் கர்ச்சனை என்பது தான் சரியான தமிழ் வார்த்தை. மேலும் சில சொற்கள்: சிங்கநாதம், கொக்கரிப்பு, இடித்தல் இவையாவும் சிங்கத்தின் ஒலிகளாம்.
    - சிங்கையிலிருந்து கண்டன் மணி கண்டன்.

    ReplyDelete
  30. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    இது படிச்சதும் போய்ப் பாக்கணும்னு ஆசையாயிருக்கு. முருகனருள் இருந்தா அடுத்த தடவை கட்டாயம்//

    முருகனருள் கட்டாயம் முன்னிற்கும்! ஒரு முறை போய் வாங்க கெபி அக்கா! அப்படியே வயலூரும் பக்கம் தான்! ரொம்ப அழகான பசுமையான ஊரு வயலூர்! எங்க வாழைப்பந்தல் கிராமம் போலவே எங்கே பார்த்தாலும் வாழை மரம் தான் வயலூரில்!

    ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
    சோழ மண்டல மீதே மனோகர
    ராஜ கம்பீர நாடாளு நாயக "வயலூரா" - என்ற திருப்புகழ்ப் பாட்டில் வயலூர் வர்ணனை நேராவே காணலாம்!

    //காலில் அடி என்று படிக்க கஷ்டமாயிருந்தது.//

    எப்பவோ சரியாயிருச்சுக்கா! டேங்கீஸ்!:-)

    //ட்ரெயின் கீழ வேல் (Whale?) இருந்துருக்குமோ? சரி சரி, ஜாக்கிரதை! Take Care!//

    ட்ரெயின் கீழயோ, மேலயோ
    நமக்குத் தான் வேலும் மயிலும் துணை இருக்க கல்லோ முள்ளோ காலுக்கு மெத்தை தானே! :-)

    There is always a small gap between the edge of the train and the edge of the platform. Tripped and got stuck there as I was rushing to catch the train. Kinda scary, but gotto be careful next time :-))

    ReplyDelete
  31. நேர்த்திக்கடனில் ஒரு மொட்டை சேர்க்காததற்கு உங்க அம்மா மேல கோவம் கோவமா வருது. அடுத்த வாட்டி ஊருக்கு போகும்போது முடிச்சிருங்க அந்த குறையையும்.

    நல்ல படங்கள். நம்ம ஊர்ல மொட்டைமலைகளை பார்த்து பார்த்து சலித்து ஒரு பசுமையான மலையைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது.

    எங்க காலேஜ சுத்தி காக்காவவிட மயில்தான் ஜாஸ்தி தெரியுமா? ராத்திரில கத்த ஆரம்பிச்சா நாராசம்!

    ReplyDelete
  32. விராலி மலை முருகனைப் பார்க்கக் கூட இவ்வளவு கூட்டம் இருந்திருக்குமோ என்னவோ, உங்க பதிவு பக்கம் திருவிழாக் கூட்டமா இருக்கு :) மயில் மீது அமர்ந்த முருகன் வெகு அழகு!

    ReplyDelete
  33. //மதுரையம்பதி said...
    அதையும் நீங்களே சொல்லுங்க, அத சொல்றதுல உங்களுக்கு ஒரு சந்தோஷமுன்னா நான் ஏன் தடுக்கணும் :-)//

    எனக்கு என்னங்கண்ணா சந்தோசம்? அப்பிடி சந்தோசப்பட்டா நான் ஏன் மயூராதி ரூடம் மகாவாக்ய கூடம்-ன்னு பாடப் போறேன்?

    அதை அப்படியே தமிழ்-ல மாத்தி
    மயில் ஊர்தி நேசம் மறை வாக்கு ஈசம்-ன்னுல்ல பாடி இருப்பேன்? :-))

    //சொ.செ.சூ இல்ல, ஏங்கறதை அப்பறமா நான் ஜிரா கிட்ட சொல்லிக்கறேன்... :)//

    எங்க சொன்னாலும் எல்லாம் எம்மையும் அவனையும் வந்து சேரும்! ஹா ஹா ஹா!:-))

    ReplyDelete
  34. ஆகா...
    மெளலி அண்ணா சொன்ன பின்னால இப்ப தான் தோனுது!
    சுப்ரமணிய புஜங்கம் அதே கம்பீர மெட்டு குலையாமல் தமிழ்-ல செய்தா எப்படி இருக்கும்!

    மயில் ஊர்தி நேசம்! மறை வாக்கு ஈசம்!
    மனம் காணு ரூபம்! முனிச் சித்தர் பாடம்!
    இதுக்கு மேல, ஜிரா ஹெல்ப் ப்ளீஸ்!

    ReplyDelete
  35. //அருணகிரிநாதர் திருப்புகழ்-ல பாதிப் பாட்டைப் "பெருமாளே"-ன்னு சொல்லித் தான் முடிப்பாரு! தெரியும்-ல? :-)//
    கேஆரெஸ் அண்ணாத்தே கொஞ்சம் ரிசெர்ச் பண்ணி பாருங்க! அதெல்லாம் சீரங்கத்து பெருமாளைதான் நினைச்சு பாடி இருக்குன்னு சொல்லிடலாம்.
    :-)))))))))))))))))))))))

    ReplyDelete
  36. //இலவசக்கொத்தனார் said...
    ஏன்யா, இம்புட்டு நடந்திருக்கு. எவ்வளவு முறை தொலைபேசி இருக்கோம். சொல்லவே இல்லையே....உம்ம பேச்சு கா.
    //

    ஹிஹி! கோச்சிக்காதீங்க கொத்ஸ்!
    சும்மா அசால்ட்டா அப்படியே இருந்துட்டேன்! இளா கூடத் திட்டினாரு!
    ஆனா எதுக்கும் இருக்கட்டும்-னு தான் ஒருத்தர் கிட்டயாச்சும் சொல்லி வச்சிருந்தேன்!

    சரியா ஒரு வாரம் கழிச்சி, மிஸஸ் & மிஸ்டர் வெட்டி வந்து இறங்குறாங்க! :-)
    மலரும் நினைவுகள்! காலம் என்னமா பறக்குது அப்பு!

    ReplyDelete
  37. கால் குணமாயிடுச்சா? கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களே!

    மயில் அகவும்...

    சிங்கம் என்ன ஒலி எழுப்பும்???

    உறுமும், முழங்கும், சீறும், (கர்ஜிக்கும்) இவையெல்லாம் நான் தேடிய வரை கிடைத்த தகவல்கள். இவற்றில் கர்ஜிக்கும்தான் வடசொல்லாயிற்றே!!!

    ReplyDelete
  38. @ உண்மைத் தமிழன்!
    அண்ணாச்சி! அப்பாடா! உங்க பதிவைப் போலவே நீளமான நயமான பின்னூட்டம்! :-)

    //அவராக வரவில்லை. நீதான் வரவழைத்திருக்கிறாய்.. இது எனக்குப் புரிகிறது.. அவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.//

    யாருமே அவன் வரவழைக்காமல் போக முடியுமா அண்ணாச்சி? எனக்குச் சர்வ நிச்சயமாய் புரிகிறது! அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

    //உன்னையன்றி யார் தமிழ்க்கடவுள்? நீ வேறு தமிழ் வேறா என்றெல்லாம் சண்டையிட்டு ஒரு மாதம் தான் ஆகிறது..//

    ஹிஹி!
    சண்டை இட்டது நான் இல்லை அண்ணாச்சி! நான் முருகன் தமிழ்க் கடவுள் இல்லைன்னு சொல்லவே இல்லையே!

    முருகனும் தமிழ்க் கடவுள்; திருமாலும் சந்தேகத்துக்கு இடமின்றித் தமிழ்க் கடவுள் தான் என்று தமிழ் இலக்கியத் தரவுகளைத் தொல்காப்பியத்தில் இருந்து முறையாகத் தான் முன் வைத்தேன்!

    அது பொறுக்க மாட்டலை சில பேருக்கு! தகவும் இல்லாது தரவும் இல்லாது வந்து வீண் சண்டை போட்டவங்க அவிங்க!

    //எழுதியதைப் பொறுத்துக் கொண்டாய்...//

    அவிங்க சண்டையைத் தான் அப்பன் முருகன் பொறுத்துக் கொண்டான்! பொறுக்கவோ, வெறுக்கவோ, அடித்து ஒறுக்கவோ, பிடித்து நெருக்கவோ அவனும் அறியான்! அடியேனும் அறியேன்! :-)

    //உன்னை நாடி வருவதற்கான சூழலை நீயே ஏற்படுத்தி வைத்தாய்...//

    தமிழ்க் கடவுள் பதிவு போட அப்போ தோனக் கூட இல்லை! அதுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னரே முருகன் சூழலை ஏற்படுத்தி விட்டான் அண்ணாச்சி! :-))

    //அருகிலேயே இருக்கும் அவர் அப்பன், உன் மாமன் திருவரங்கனை தரிசிக்கும் பாக்கியத்தையும் ஏற்படுத்தியிருக்கலாமே...//

    ஹிஹி!
    காரணம் இன்றி ஒரு காரியம் செய்வானோ முருகன்?
    பதிவிலேயே அரங்கனை ஆராது எழுதி எழுதி தரிசித்துக் கொள் என்று சொல்லிவிட்டான் போலும்! :-)

    //இந்த கே.ஆர்.எஸ்ஸின் முகமன் வணக்கத்தையும், வந்தனத்தையும், வேண்டுதலையும் உன் மாமனுக்குத் தப்பிதமில்லாமல், தாமதமில்லாமல் கொண்டு போய்ச் சேர்ப்பித்துவிடு..//

    ஆகா! அற்புதம்! ஆனந்தம்!

    //வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
    விராலிமலை முருகனுக்கு அரோகரா..//

    அரோகரா! அரகரோகரா!

    உங்களைப் போல் மனத்திலும் வாக்கிலும் பண்பட்ட முருக பக்தர்களைக் காணவே நெஞ்சம் இனிக்கிறது! அதே போல் முரட்டு முருக பக்தர்களையும் திருத்தி உருக வைப்பான் அப்பன் முருகன்!

    மமதை எதுவாகிலும், முருக மமதை உட்பட, மமதை நீக்கி, நமதை ஆக்கி, தமதைத் தந்து நல்லருள் புரிவான் நல்லூர் கந்தன்!

    ReplyDelete
  39. //திவா said...
    கேஆரெஸ் அண்ணாத்தே கொஞ்சம் ரிசெர்ச் பண்ணி பாருங்க! அதெல்லாம் சீரங்கத்து பெருமாளைதான் நினைச்சு பாடி இருக்குன்னு சொல்லிடலாம்.
    :-)))))))))))))))))))))))//

    ஹிஹி! திவா சார்...
    ஆராய்ச்சியே பண்ணிக்கிட்டு இருந்தா அழகை எப்போது அனுபவிக்கறதாம்?
    When dissection stops divinity starts!

    அருணகிரிநாதர் நிச்சயமாய் சீரங்கத்துப் பெருமாளை நெனச்சி "பெருமாளே"-ன்னு முடிக்கலை! ஆனாப் பெருமானே-ன்னு முடிக்காம பெருமாளே-ன்னு முடிச்சதுக்கு சூட்சுமம் இருக்கு!

    ஒருத்தர் வந்து பதில் சொல்லுவாரு! அவருக்கு அப்புறம் அடியேன் அவன் அருளாலே அறிந்ததைச் சொல்கிறேன்! :-))

    ReplyDelete
  40. முதலில் தலைப்பிற்கு ஒரு கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன். அடுத்து நியூயார்க்கில் தொடர்வண்டியில் காலைக் கொடுத்துவிட்டு அதனைப் பற்றிச் சொல்லாமல் விட்டதற்கு ஒரு கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன்.

    இடுகையின் மற்ற பகுதிகளை இனி மேல் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன். ஆணி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

    ReplyDelete
  41. ஆஹா, என்ன அகந்தை! //தமிழ்க் கடவுள் பதிவு போட அப்போ தோனக் கூட இல்லை! அதுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னரே முருகன் சூழலை ஏற்படுத்தி விட்டான் அண்ணாச்சி! :‍))// யப்பா தம்பி! உமக்குத் தாம்பா தமிழ்க் கடவுள் பதிவு போட அப்போ தோணலை...

    திருவானைக்கா: கா! திருவரங்கம், சமயபுரம்: எல்லாம் கா! போலிருக்கு. பேசாம, ஷார்ட் ட்ரிப்ல பழம் வாங்கிப் போயிட்டு வந்திடுங்க.

    குமார வயலூர் சொல்றீங்களா? போயிருக்கேன்.

    ReplyDelete
  42. புகை உடலுக்கு பகைனு எங்க தளபதி சிபி சொல்லுவாரு ;)

    ReplyDelete
  43. //முளைச்சி மூனு இலை விடல! அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா? OMG! I just can't believe this!..."//

    முளைச்சி மூனு இலை விடல! ரெண்டு பொண்டாட்டி இருக்கு. அது பெருசா தெரியல. தம்மடிச்சா மட்டும் தப்பா?

    ReplyDelete
  44. மிக்க நன்றி தல விராலிமலை முருகன் தரிசனம் கிடைத்தது ;)

    அழகான பயணம்...கூடவே வந்தது போல இருக்கு..!;)

    ReplyDelete
  45. \\கொஞ்ச நாள் கழிச்சி இந்தியாவுக்குத் தொலைபேசும் போது, அம்மா கிட்ட உளறி விட்டேன்!\\

    சுத்தம்....நீங்களும் என்னை போல தானா..;))

    \\அம்மாவிடம் அவ்வளவா எதையும் மறைச்சிப் பழக்கம் கிடையாது பாருங்க!\\

    ஆமாம் தல.. எப்படியும் வாய திறக்க கூடாதுன்னு நினைச்ச கூட..என்னடா என்னடான்னு கேட்டே எல்லாத்தையும் தெரிஞ்சிப்பாங்க..;))

    ReplyDelete
  46. புகைப்பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று இருக்கையில் இது போலச் செய்வது மூடத்தனம். சுருட்டு குடிக்கச் சொல்லி நக்கீரர் சொன்னதா தரவு இல்லாதப்ப இது தொந்தரவு. மொதல்ல இத நிப்பாட்டனும். ஏன்னா.... நாளைக்கு எவனாச்சும் சொகுசுப் பேர்வழி முருகன் பக்தரா இருந்து... எதையாவது ஏடாகூடமா மறந்து தொலைச்சா வம்பாப் போயிரும். அதையெல்லாம் படையல்ல வைக்க வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  47. \\"செல்லம், மனக் கொறையோட ஏன் மலை ஏறுற நீயி? யார் தமிழ்க் கடவுள்-ன்னு பதிவுக்கு எல்லாம் ஒன்னும் புரியாத மனுசன் தான் கோச்சிப்பான்! ஒன்றே-ன்னு புரிந்த மருகன் கோச்சிப்பானா? மாமனும் மருகனும் - இருவருமே தமிழ்க் கடவுள்-ன்னு உண்மையைத் தானே சொன்னே! இந்தா தோகை!"-ன்னு சொல்வது போல, நல்லா விரித்து விரித்து ஆடியது அந்த மயிலு! எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! வாயெல்லாம் சிரிப்போட மீண்டும் படி ஏறினேன்!
    \\

    தல

    சைக்கிள் கேப்புல கோல் போடுறதுல உங்களை அடிச்சிக்க ஆளே இல்லை தல ;))

    ReplyDelete
  48. மதுரையிலிருந்து திருச்சிக்கோ திருச்சியைத் தாண்டி வடக்கிலோ செல்லும் போதெல்லம் விராலிமலையைத் தாண்டிச் சென்றிருக்கிறேன். ஓரிரு முறை திருச்சி செல்லும் போது விராலிமலையில் இறங்கி முருகனைத் தரிசித்துச் சென்றிருக்கிறேன். இரவுப் பயணமாக சென்னைக்குச் செல்லும் போது விராலிமலை, திருவரங்கம் தாண்டும் வரை விழித்திருந்து இரு கோவில் கோபுரங்களைத் தரிசித்து வணங்குவேன். சென்னையிலிருந்து திரும்பி வரும் போது காவிரியைக் கடக்கும் முன்பாக விழித்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டே தான் தூங்குவேன். பகல் நேரமென்றால் விராலிமலையில் திரியும் மயில்களைக் கண்கள் தேடும். அவையெல்லாம் நினைவிற்கு வந்துவிட்டது. :-)

    நான் இந்த இடுகையை எழுதியிருந்தால் திருச்சிக்கு முன்னர் விராலிமலை வரும் என்று எழுதியிருப்பேன். நீங்கள் 'திருச்சி - மதுரை' சாலையில் விராலிமலை இருக்கிறது என்று எழுதியிருக்கிறீர்கள். பார்க்கும் திசைகளே வேறுபடுகிறது ஊரைப் பொறுத்து. :-)

    விறலி என்றால் ஆடுபவள் தானே. பாடினி என்றால் தான் பாடுபவள். பாருங்கள் 'உடுக்கை இழந்தவன் கை' தொடர்கதையில் விறலி பாடுபவள் என்று எழுதியிருக்கிறேன். நீங்களும் சுட்டிக் காட்டவில்லை. அண்மையில் ஒரு அறிஞர் விறலி என்றால் ஆடுபவள்; பாடினி என்றால் தான் பாடுபவள் என்று எழுதியிருந்ததைப் பார்த்த போது கதையைத் திருத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

    இளையவளை வலப்பக்கம் வைப்பது தான் முறையா? முருகனும் வள்ளியை வலப்பக்கம் வைத்திருக்கிறார்; சொக்கனும் மீனாட்சியை வலப்பக்கம் வைத்திருக்கிறார். ஆனால் பெருமாளின் வலப்பக்கம் மூத்தவள் திருமகள். ஏன்?

    ReplyDelete
  49. மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து 'முழங்கி'ப் புறப்பட்டு...

    இதனையா எதிர்பார்க்கிறீர்கள் இரவிசங்கர்?

    ReplyDelete
  50. விராலிமுருகன் அருள் முன்னிற்கிறது - தலைப்பாகையோடு போனது நல்லது.
    மேலே படிக்க படிக்க சுவையாக இருந்தது ஆறுமுகன் அருள் சுரக்கும் பயணக்கட்டுரை. மலையில் மயிலும் - குறத்திசேனை சமேத ஆறுமுகமும், சுருட்டுக் கதையும் எல்லாமும் விசேஷமாக இருந்தன. யாமிருக்க பயமேன் என அருளிய அப்பன் முருகன் அருளிருக்க அண்டாது இடரேதும்.

    ReplyDelete
  51. அடப்பாவி............அம்மாகிட்டே மட்டுமா மறைத்தீர்? டீச்சருக்காவது சொல்லி இருக்கலாமே..... எப்படிய்யா சொல்லாமலே மட்டம் போட்டீர்?

    மயில் அகவும்.

    ரொம்பவே அழகாப் போஸ் கொடுத்துருக்கே.....


    நல்லாவே 'சுருட்டிட்டானா' முருகன்?

    ReplyDelete
  52. //திருச்சியில் எங்க படிச்சீங்க?//
    ஜமால் ஜமால் ஜாலி ஜமால்.
    இப்பல்லாம் பயங்கர ஸ்டிரிக்டாம் கண்ணபிரான், இரவி சங்கர்.

    ReplyDelete
  53. //நான் இந்த இடுகையை எழுதியிருந்தால் திருச்சிக்கு முன்னர் விராலிமலை வரும் என்று எழுதியிருப்பேன். நீங்கள் 'திருச்சி - மதுரை' சாலையில் விராலிமலை இருக்கிறது என்று எழுதியிருக்கிறீர்கள். பார்க்கும் திசைகளே வேறுபடுகிறது ஊரைப் பொறுத்து. :-) //

    ஆமாம் குமரன், இதை நானும் நினைத்தேன்....பின்னூட்டமா போட்டு கொஞ்சம் கலாய்க்கலாமான்னு யோசிச்சுட்டு கே.ஆர்.எஸ் மேல இருக்கும் பயபக்தி கலந்த மரியாதையால விட்டுட்டேன் :-)

    ReplyDelete
  54. //மதுரையம்பதி said...
    //நான் இந்த இடுகையை எழுதியிருந்தால் திருச்சிக்கு முன்னர் விராலிமலை வரும் என்று எழுதியிருப்பேன். நீங்கள் 'திருச்சி - மதுரை' சாலையில் விராலிமலை இருக்கிறது என்று எழுதியிருக்கிறீர்கள். பார்க்கும் திசைகளே வேறுபடுகிறது ஊரைப் பொறுத்து. :-) //

    ஆமாம் குமரன், இதை நானும் நினைத்தேன்//

    ஹிஹி
    @குமரன், மெளலி அண்ணா
    பார்க்கும் திசைகளே வேறுபடுகிறது ஊரைப் பொறுத்து - உண்மை தான்!

    ஆனா திசை வேறுபட்டாலும் விராலிமலை தமிழ்நாட்டுலயே இல்ல! அது தமிழ் ஊர்-னு ஒப்புக்க மாட்டோம்-னு எல்லாம் சொல்றோமா என்ன, சிலரைப் போல? :-)))

    எனக்கும் பயம் கலந்த சந்தோசம் தான் மெளலி அண்ணா கூட வெளையாடுவது! என்னங்கண்ணா? :-))

    ReplyDelete
  55. //ஆனா திசை வேறுபட்டாலும் விராலிமலை தமிழ்நாட்டுலயே இல்ல! அது தமிழ் ஊர்-னு ஒப்புக்க மாட்டோம்-னு எல்லாம் சொல்றோமா என்ன, சிலரைப் போல? :-)))

    எனக்கும் பயம் கலந்த சந்தோசம் தான் மெளலி அண்ணா கூட வெளையாடுவது! என்னங்கண்ணா? :-)) //

    தமிழ்நாடு, தமிழ்க்கோயில், தமிழ் தெய்வமுன்னெலாம் நான் ஏதாச்சும் சொன்னேனா?....இதுக்குனாலதான் எனக்கு பயம் கலந்த மரியாதை.. :)

    விளையாட்டு இருக்கட்டும், போய் படுத்து தூங்குய்யா....:)

    ReplyDelete
  56. //G.Ragavan said...
    புகைப்பிடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று இருக்கையில் இது போலச் செய்வது மூடத்தனம்//

    ஓரளவு சரி தான் ஜிரா! வெட்டியின் கருத்தும் இதே!
    ஆனா இங்கு சுருட்டு பத்த வைக்காமல் சும்மா ஒப்புக்குத் தான் படையல் வைக்கறாங்க!

    அப்படிப் பாத்தா மூடத்தனத்துக்கு பலரும் பலது சொல்லலாம்! அலகு குத்திக் கொள்வது உட்பட! எல்லாத்தையும் வரையறுக்க வேண்டியதாப் போயிடும்!

    //சுருட்டு குடிக்கச் சொல்லி நக்கீரர் சொன்னதா தரவு இல்லாதப்ப இது தொந்தரவு//

    நக்கீரர் சொல்லி இருந்தா அப்போ மட்டும் புகை உடலுக்கு உவகை-யா? :-)

    //மொதல்ல இத நிப்பாட்டனும்//

    நிப்பாட்டத் தேவை இல்லை என்பது என் கருத்து! கிராமங்களில் முனீஸ்வரனுக்கும் அய்யனாருக்கும் இவ்வாறே செய்வதைப் பார்த்திருக்கேன்!

    //ஏன்னா.... நாளைக்கு எவனாச்சும் சொகுசுப் பேர்வழி முருகன் பக்தரா இருந்து...//

    ஹிஹி...என்னைப் போல...

    //எதையாவது ஏடாகூடமா மறந்து தொலைச்சா வம்பாப் போயிரும். அதையெல்லாம் படையல்ல வைக்க வேண்டியிருக்கும்//

    உம்...அப்படிப் பாத்தா uncooked meat and blood கூட உடலுக்குத் தீங்கு தான்! ஆனா நக்கீரர் சொல்லுறாரு பழைய பழக்கம்-னு! அதைப் படையல் வச்சா என்ன தப்பு-ன்னு பேசுறோம்-ல? கொழுவிடைக்
    குருதியடு விரைஇய தூ வெள்ளரிசி-ன்னு தரவு காட்டறோம்-ல?

    Same (ill)logically applies here too! :-))))

    ReplyDelete
  57. @ தமிழரசன், குமரன்

    நீங்க இருவரும் தான் சரியான விடையைச் சொல்லி இருக்கீங்க!

    சிங்கம் முழங்கும் முழங்கும் முழங்கும்!!!


    குமரன் திருப்பாவையில் காட்டியது போல்,
    சீரிய சிங்கம்...முழங்கிப் புறப்பட்டு-ன்னு தான் பாடுகிறாள் ஒரு தமிழச்சி!

    கோதை மாரி போல் பெய்த தமிழ்ச் சொற்களை வைத்துக் கட்டினாலே, இன்னிக்கு தமிழ் அர்ச்சனை மந்திரங்கள், ஆயிரத்துக்கும் தேறும் என்பது அடியேன் பணிவான கருத்து!

    ReplyDelete
  58. @சுல்தான் ஐயா

    ஓ ஜமாலா நீங்க! காஜா நகரு! டிவிஎஸ் டோல் கேட் தாண்டி!

    என் நண்பன் பிஷப் ஹீபர்! அடிக்கடி திருச்சி வருவேன். அப்படியே ஊர் சுத்தல் தான்! கல்லணைக் கால்வாய் வழியா பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, பூண்டி மாதா-ன்னு! செம ஜாலி டைம் அப்போ! :-)

    ஜமால் நாலு வருசத்துக்கு முன்னாடி பொன் விழா கொண்டாடினாங்க போல! கேள்விப்பட்டேன்! கம்ப்யூட்டர்/MCA வந்தாப் பிறகு தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆயிருச்சி-ன்னு நண்பன் சொன்னான்! :-))

    ReplyDelete
  59. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    ஆஹா, என்ன அகந்தை! யப்பா தம்பி! உமக்குத் தாம்பா தமிழ்க் கடவுள் பதிவு போட அப்போ தோணலை...//

    ஹிஹி! யக்கா....அகந்தையுமில்ல! மொந்தையுமில்ல!
    //அதுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னரே முருகன் சூழலை ஏற்படுத்தி விட்டான்// - அதாச்சும் விராலிமலை வரவேண்டிய சூழலை முன்னரே ஏற்படுத்திட்டான்-ன்னு சொல்ல வந்தது!

    ஏதோ பதிவு போட்டதுக்குத் தண்டனையா விராலிமலை வரும் சூழலை ஏற்படுத்தினான்-னு அப்பன் முருகனின் கருணையை அபாண்டமா யாரும் பேசிறக் கூடாது பாருங்க! அதான் அப்படிச் சொன்னேன்!

    //திருவானைக்கா: கா! திருவரங்கம், சமயபுரம்: எல்லாம் கா!//

    ஆமாங்கக்கா...ஒன்லி வேண்டுதல் ட்ரிப்பா போயிறிச்சி...

    ஆனா பெங்களூரில் இருந்து மேலக்கோட்டை...பின்பு திருமலையில் அரை மணி நேரத்துக்கும் மேல் திருப்பாவாடை தரிசனம்...எல்லாம் ஒவ்வொன்னாச் சொல்லுறேன்! :-))

    //குமார வயலூர் சொல்றீங்களா? போயிருக்கேன்//

    அதே! அதே!
    சூப்பரு! :-)

    ReplyDelete
  60. //இளையவளை வலப்பக்கம் வைப்பது தான் முறையா? முருகனும் வள்ளியை வலப்பக்கம் வைத்திருக்கிறார்; சொக்கனும் மீனாட்சியை வலப்பக்கம் வைத்திருக்கிறார்.//

    ஆகா...
    மீனாள் இளையவளா? இல்லையே!

    //ஆனால் பெருமாளின் வலப்பக்கம் மூத்தவள் திருமகள். ஏன்?//

    ஜிரா, வெட்டி, திவா, மெளலி, ஜீவா
    - விளக்கம் ப்ளீஸ்!

    ReplyDelete
  61. மீனாட்சி அம்மன் இளையவள் என்று தான் கருதப்படுகிறாள் என்று நினைக்கிறேன். சொக்கேசனின் இடப்பக்கம் என்றும் பிரியாத பிரியாவிடை (பிரியாவுடை?) அம்மன் இருக்கிறார். அபிராமி அந்தாதி பதிவு பக்கம் நீங்கள் வந்தீர்கள் என்றால் மதுரைப் படங்களைப் பார்க்கலாம். மதுரையில் திருவுலாத் திருமேனி சோமாஸ்கந்த திருமேனி. அதில் இடப்பக்கம் பார்வதியும் இருவருக்கும் இடையில் குட்டிப்பையன் முருகனும் இருக்கிறார்கள். இடப்பக்கம் பார்வதி இருப்பதால் வலப்பக்கம் மீனாட்சியை வைத்துவிட்டார்கள் போலும்.

    ReplyDelete
  62. //ஆனால் பெருமாளின் வலப்பக்கம் மூத்தவள் திருமகள். ஏன்?//

    அப்போ இளையவள்ன்னு யாராச்சும் இருக்காங்களா?

    ஐயகோ.. பெருமாளுக்கும் ரெண்டா? எந்த ஊர்க் கதைல..?

    அவனவன் ஒண்ணுக்கே வழியில்லாம ஓரமா உக்காந்து ஒப்பாரி வைச்சுக்கிட்டிருக்கான். இதுல நீங்க என்னடான்னா ஒண்ணு, ரெண்டுன்னு 'டகுல்' விட்டுக்கிட்டிருக்கீங்க..

    ReplyDelete
  63. //மீனாட்சி அம்மன் இளையவள் என்று தான் கருதப்படுகிறாள் என்று நினைக்கிறேன். //

    இல்லீங்கண்ணா தனியா இருக்கிறதும், வலப்பக்கம் இருக்கிறதுக்கும் வேற காரணமிருக்கு...

    அரசிங்கறதால மீனாட்சிக்கு தனி இடம்.

    இந்து மதத்தில் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து பெரியவர்களை, அல்லது ஒரு சபையை அணுகும்போது மனைவி வலப்பக்கம் இருத்தல் வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கு...அதுவே மீனாட்சி வலப்பக்கம் இருக்க காரணம். மதுரைல பிரிய ஆவுடைக்கு எந்த அரசுரிமையும் கிடையாது அதனால இடதுபுறம்.....இது எல்லா சிவன் கோவிலுக்கும் பொருந்தும்....அந்தந்த கோவில் சார்ந்த அம்மனுக்குத்தான் சிறப்பாக இருக்கும் (விலக்கு தஞ்சைப் பக்கத்து கோவில்கள் சில)

    இன்னொரு கருத்து....சிவலிங்கத்தில் ஆவுடையாக இருக்கும் அன்னை சிலாரூபத்துக்கு வரும்போது பிரியாவிடையாக இருக்கிறார். ஆகமத்தின் படியும் ஆவுடையுடன் சேர்ந்த லிங்கமே வழிபட ஏற்றது. இந்த ஆவுடையாக இருக்கும் சக்தியே ஈசனை இயக்கும் சக்தி....இதில்லையேல் சிவனும் சவமாகிறான் என்று லலிதோபாக்யானம் சொல்கிறது. இந்த பிரியாவிடை ஈசனை மட்டும் இயக்குமுன்னா மத்த எல்லோரையும் (ப்ரம்மா, விஷ்ணு, முருகன், சரஸ்வதி, இலக்குமி, etc) எல்லாம் இயக்குவது பராசக்தியின் பகுதியான மீனாட்சி போன்ற சக்திகள் :) (நல்லா குழப்பிட்டேனா :))

    ReplyDelete
  64. anbudan KRS,

    Viralimalai Murugan padivai padithum arbhudha kaatchigalai dharisi-thu magischi...magischi...magischi...

    Engum-kanakidaikadha thiru-katchi Narada munivarum sevitha-kovil + Arunagirinadar-kku special Darshan & Ashta-Mahasiddi-kalai Murugan Aruliya oor.

    Munivargal kura marangalagu irundhu appanai vanangu-hindranar.

    Naan ungalukku katta virumbhuvadhu http://srirangapankajam.com/PesumArangan.aspx
    pl go throuh & relish.Neengal ippadi kaikettiya-dhuram irundum Ranganai-miss paniyadhu mannika mudiyadha kuttramaga padugiradhu.kuttram kaanbadhe engal vazhkai.

    anbhudan sundaram

    ReplyDelete
  65. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //இளையவளை வலப்பக்கம் வைப்பது தான் முறையா? முருகனும் வள்ளியை வலப்பக்கம் வைத்திருக்கிறார்; சொக்கனும் மீனாட்சியை வலப்பக்கம் வைத்திருக்கிறார்.//

    ஆகா...
    மீனாள் இளையவளா? இல்லையே!

    //ஆனால் பெருமாளின் வலப்பக்கம் மூத்தவள் திருமகள். ஏன்?//

    ஜிரா, வெட்டி, திவா, மெளலி, ஜீவா
    - விளக்கம் ப்ளீஸ்!//

    ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிறதே தப்பு. இதுல எந்த பொண்டாட்டிய எந்த பக்கம் வைக்கனும்னு ஒரு விவாதம் வேற...

    சரி இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச பதில சொல்றேன்.

    புதுசா வர பொண்டாட்டி கன்னத்தை கிள்ளி விளையாடறதுக்கு வசதியா வலது பக்கம் நிக்க வெச்சிருக்காங்கனு நினைக்கிறேன். இந்த சாமிங்க ரவுசு தாங்க முடியலப்பா...

    ReplyDelete
  66. @வெட்டி
    //புதுசா வர பொண்டாட்டி கன்னத்தை கிள்ளி விளையாடறதுக்கு வசதியா வலது பக்கம் நிக்க வெச்சிருக்காங்கனு நினைக்கிறேன். இந்த சாமிங்க ரவுசு தாங்க முடியலப்பா...//

    அன்னிக்கி நீங்க பாஸ்டன்-ல இடது பக்கம் கிள்ளினீங்களே? :-))
    இந்த பாலஜி பஜ்ஜி தாங்க முடியல சாமீ! :-))

    ReplyDelete
  67. //வசீகரா..Vaseegara said...
    பதிவில் எங்கள் தலை உச்சி பிள்ளையார் பற்றி எழுதாதை கண்டிக்கிறேன்//

    தலையில குட்டிக்கறேன் மணிகண்டன்! :-)

    //பேருந்திலிருந்தபடியே இருந்தபடியே முருகப்பெருமானை தரிசித்ததையும் நினைவுபடுத்தியது//

    பேருந்தில் இருந்தே உச்சிப் பிள்ளையாரைப் பாப்பீங்களா? ஆனா எங்க முருகனை மட்டும் அப்படிப் பார்த்து இருக்கீங்க! நானும் உங்களைக் கண்டிக்கறேன்! :-))

    //அடுத்தமுறை திருச்சி வரும்முன் தெரிவிக்கவும்.//

    எதுக்கு? ஆட்டோ அனுப்பவா? ஹிஹி!

    //- சிங்கையிலிருந்து கண்டன் மணி கண்டன்//

    இதுவும் சிங்கை சிங்கத்தின் முழக்கம் தான்! :-)

    ReplyDelete
  68. \\பொதுவா சன்னிதியில் எனக்கு வடமொழி சுலோகங்கள் வராது! தமிழ் அருளிச் செயல்கள் தான் பெரும்பாலும் வரும்! ஆனா இன்னிக்கு என்னமோ தெரியலை, ஆதிசங்கரர் வாயில தானா வந்துட்டாரு! நான் என்னத்த சொல்ல!
    \\

    கேஆரெஸ், உங்களுக்கு இது தமிழ்லதான வேணும். இங்க போங்க, உங்களுக்கு அதே மெட்டுல பாடவும் முடியும். வடமொழி சுலோகம் வந்துருச்சேன்னு கவலைப்பட வேணாம்
    http://chinnaammini.blogspot.com/2007/07/blog-post.html

    ReplyDelete
  69. பாம்பே சகோதரிகள் வடமொழியில பாடினது இருந்தா நான் குடுத்த சுட்டியையும் பிரிண்ட் பண்ணி பக்கத்துல வச்சி பாடிப்பாருங்க. சுலபமா இருக்கும்.

    ReplyDelete
  70. Good one... KRS.
    I'm a silent visitor of ur blog...
    am from trichy but haven't been to viralimalai yet.. after reading ur post 've decided to visit once.

    for srirangam pictures and news.. pls visit

    http://srirangapankajam.com


    http://picasaweb.google.com/muralibattar


    Keep posting :-)

    ReplyDelete
  71. அன்பு ரவி,
    மிக அருமையன ஸ்தலத்திற்கேற்ற அருமையான பாடல்! இப்பாடலுக்கான விளக்கம் இரு பதிவுகளாக சென்ற ஆண்டே போட்டிருக்கிறேன். படித்துவிட்டுச் சொல்லவும்!

    முருகனருள் முன்னிற்கும்!!

    http://aaththigam.blogspot.com/2007/03/17.html

    http://aaththigam.blogspot.com/2007/03/17.html

    ReplyDelete
  72. Very good article.Arunagirinathar stayed in Viralimalai.Like Thruvannamalai,I was told that 'siththars'were in the caves around the mountain.Still cigar is offered to our 'Kula theivam'near Vridhachalam.During my schooldays 40 years back,they used to offer arrack. Here in Malasiya cigar is offered in muneeswaran temples.Some times cigars on the lips of the deighty.

    ReplyDelete
  73. கம்பரைக் கேட்டேன் அவர் தான் சொன்னார் சிங்கம் சிரிக்கும்னு. எப்படியா ?

    நசை திறந்து இலங்கப் பொங்கி நன்றுநன்று என்ன நக்கு
    விசை திறந்துருமு வீழ்ந்த தென்ன ஓர் தூணின் வென்றி
    இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும்
    திசை திறந்து அண்ண்டம் கீறச் சிரித்தது அச் செங்கண் சீயம்.

    சரியா தாப்பான்னு சொல்லிடுங்கப்பா

    ReplyDelete
  74. சிங்கம் - ஆர்பரிக்கும் (ன்னு நினைக்கிறேன்)

    உடல்நிலையை பார்த்து கொள்ளுங்கள் ரவி.

    ReplyDelete
  75. //Jeeves said...
    கம்பரைக் கேட்டேன் அவர் தான் சொன்னார் சிங்கம் சிரிக்கும்னு. எப்படியா ?//

    ஜீவ்ஸ் அண்ணாச்சி வாங்க!
    அருமையான கம்ப விருத்தம் கொடுத்திருக்கீங்க! சிங்கம் சிரிக்கும் தான்! வ.வா.ச-வின் அட்லாஸ் சிங்கம் தானே? :-))

    அப்போ புலி சிரிக்காதான்னு கேள்வி எல்லாம் கேக்கக்கூடாது, ஆமா!
    ஹிஹி...நான் என்ன நினைக்கிறேன்னா பாதி சிங்கம் பாதி மனிதனான, நரசிம்மன் இடி இடி என்று சிரித்தான்-னு தான் கம்பர் சொல்ல வராரு!
    //சிங்கம் சிரித்தது அச் செங்கண் சீயம்//
    "அச்"செங்கண் என்பதன் மூலம் நரசிம்மனைச் சுட்டி விடுகிறார்!

    சிங்கம் முழங்கும், புலி உறுமும் என்பது பொதுவாச் சொல்லுறது!

    மத்தபடி கம்பரைக் கொடுத்த சிங்கம் ஜீவ்ஸுக்கு நன்றி! நன்றி! :-)

    ReplyDelete
  76. //உடல்நிலையை பார்த்து கொள்ளுங்கள் ரவி. //

    ????

    ReplyDelete
  77. //குமரன் (Kumaran) said...
    //உடல்நிலையை பார்த்து கொள்ளுங்கள் ரவி. //

    ????//

    ஆகா...
    ஸ்ரீதர்! விபத்து நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நடந்தது! இப்போ எல்லாம் சுகமே!

    குமரன்
    ஸ்ரீதர் முருகச் சுவையில் தேதியை மறந்துட்டாரு! ஒன்னுமில்ல! ரென்சன் ஆவாதீங்க! :-))

    ReplyDelete
  78. ரவி ரொம்ப உருக்கமா இருக்கு. இப்படி யாராவது கால் கொடுப்பாங்களா.

    செய்யாறு அம்மா எப்படி விராலி மலைக்கு நேர்ந்துகிட்டாங்க.
    உங்க பூர்வீகம் விராலி முருகனா.
    எப்படியோ!!! ஜிரா,
    முருகா முருகானு காவடி எடுத்து ஆடுவது மனக்கண்ணில் தெரிகிறது.
    கால்கள் நலமே இருக்க முருகனையும் அவன் மாமனையும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  79. //வல்லிசிம்ஹன் said...
    செய்யாறு அம்மா எப்படி விராலி மலைக்கு நேர்ந்துகிட்டாங்க.
    உங்க பூர்வீகம் விராலி முருகனா.
    எப்படியோ!!!//

    முருகப் பெருமான் தான் குடும்ப தெய்வம் வல்லியம்மா!
    அப்பா திருச்சி தஞ்சாவூர்-னு மாற்றலாகிப் போன போது விராலிமலையும், பூண்டி மாதாவும் அம்மாவுக்கு ஃப்ரெண்டு ஆயிட்டாங்க! அதான் போல! கஷ்டம்-னா ஃப்ரெண்டு கிட்ட தானே மொதல்ல சொல்லுறோம்? :-)

    //ஜிரா, முருகா முருகானு காவடி எடுத்து ஆடுவது மனக்கண்ணில் தெரிகிறது//

    ஹிஹி! ஜிரா எனக்கும் ஆடிக் காட்டுங்க!

    //கால்கள் நலமே இருக்க முருகனையும் அவன் மாமனையும் வேண்டுகிறேன்//

    இப்போ நலமே வல்லியம்மா! அதான் உங்க வீட்டுக்கு வந்த போது பார்த்தீங்களே! எல்லாம் சுகமே! :-)

    ReplyDelete
  80. Dear Sir,

    The saints who worshipped the presiding deity with their Tamil poetry, are always mentioned when a temple visit is detailed. You seem to have added a poem at the end, which, I presume, is from Arunagirinaathar. You mention, Thiruppugazh. So, maybe, my presumption gets confirmed.

    Arnunagiriyaar, I understand, sung on this Muruguan more than any other Murugan. Another Murugan, who was his favourite, is Vayaluur Murugan, also near Tiruchy.

    You may have traced out other saints also, who worshipped this Murugan.

    Talking about the saints connected with the deity, is equal to, some say, more than, worshipping the deity itself.

    Good post. The personality of your mom also comes out here. Her religioisity is all encompassing. Still, she need to pass on more percentage of her religious catholicity (broadmindedness) to her son - I mean, slightly more! She may teach her son that there are no Tamilkkadavuls or EnglishkadavuLs. There are only kadavuls. So, he should go to a temple to worship the deity there, with such humility which does not see any differences! She may also tell him that fulfilling a mom's vow, taken for the welfare of the son, is not the duty of mom only; the son should also particpate in fulfilling the vow wholeheartedly.

    Long live she! Long live her devotion to Viraali Malai Murugan!!

    Yours respectfully,

    Karu Maanickam.

    ReplyDelete
  81. \\தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
    இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
    மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
    முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. //

    முழை -குகை யிலிருக்கும் ... அரி - சிங்கம் .. குமிறும் - கர்ஜிக்கும் ..
    இது திருஞான சம்பந்தர் தேவாரத்தில் வருகிறது. காலம் 7 ம் நூற்றாண்டு. குமிறும் என்பது கர்ஜிப்பதற்கு தமிழ் வார்த்தையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    \\ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்
    நாற்றம் மேய நகை இல் முகத்தினான்
    சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்
    கூற்றம் அஞ்சக் குமிறும் குரலினான்.//

    இந்த கம்பராமாயணப்பாடலில் மனிதர்கள் சிங்கம் போல கர்ஜிப்பதை குறிப்பதற்கும் குமிறும் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (இடைக்காலம்)
    -----
    தகவல் தந்தையிடம் இருந்து பெற்றது

    ReplyDelete
  82. இதையும் பிரசுரிச்சிருங்க.. இமெயில் ஃபாலோ அப்புக்கு..

    ReplyDelete
  83. கயல்விழி யக்கா!
    வாங்க வாங்க!
    //முழைவாளரி குமிறும்//

    சும்மா கும்முன்னு குமிறி இருக்கீங்க! அசத்தல்! அக்கா உடையான் படைக்கு அஞ்சான்! :-)

    சிங்கம் குமிறும்!
    சிங்கம் முழங்கும்!

    சரி....குமிறும் வேற, குமுறும் வேறயா?
    சிலரு குமுறுறாங்கல்ல! அதான் கேட்டேன்! :-)

    ReplyDelete
  84. குமிறும் வேற குமுறும் வேற தாங்க.. குமுறும் உள்ள கொந்தளிப்புக்கான வார்த்தையைத்தானே சொல்றாங்க.. :-)

    ReplyDelete
  85. @கரு மாணிக்கம் ஐயா
    சார் எல்லாம் வேணாம்! நான் குட்டிப் பையன்! KRS இல்லீன்னா ரவி-ன்னே கூப்டுங்க!

    //You seem to have added a poem at the end, which, I presume, is from Arunagirinaathar.//

    அருணகிரியே தான்!

    //Arnunagiriyaar, I understand, sung on this Muruguan more than any other Murugan. Another Murugan, who was his favourite, is Vayaluur Murugan, also near Tiruchy//

    ஆமாங்க! வயலூரில் இருந்து விராலிமலைக்கு வரும் போது வழி தவறிடும். காட்டு விலங்கு கிட்ட இருந்து காப்பாத்தி, விராலிக்கு வழி காட்டுவான் வேடன்-முருகன்!

    விராலிமலை மேல் 13-14 திருப்புகழ் தான் ஐயா! செந்தூர், ஆவினன்குடி மேல் தான் நெறைய-ன்னு நெனைக்கிறேன்! சரி தானே SK, ஜிரா?

    //Talking about the saints connected with the deity, is equal to, some say, more than, worshipping the deity itself//

    சூப்பர்! அடியார் சுவை இருப்பதால் தான் ஆண்டவனையே சுவைக்க முடிகிறது என்பது இராமானுசர் கருத்து! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

    //Good post. The personality of your mom also comes out here. Her religioisity is all encompassing//

    அம்மாவுக்கு மிக மிக மென்மையான உள்ளம் ஐயா! சாதி, மதம்-ன்னு அவுங்க பாத்து நான் பாத்ததே இல்ல! இன்றும் பூண்டி மாதா பூசை மேடையில் நடுநாயகமா கொலுவிருப்பாங்க!

    //She may teach her son that there are no Tamilkkadavuls or EnglishkadavuLs. There are only kadavuls.//

    ஹிஹி!
    இதத் தான் நானே சொல்லிட்டேனே!
    யார் தமிழ்க்கடவுள் பதிவு, தமிழ்ச் சமுதாயத்தில் தெய்வ நிலை குறித்த தொன்மங்களை அடையாளம் காணத் தான்! வேர்களின் தேடல்! அவ்ளோ தான்! தமிழ்/இங்கிலீஷ்/இந்தி/ஸ்பானிஷ் கடவுள்-னு மேளம் கொட்ட அல்ல!

    //he son should also particpate in fulfilling the vow wholeheartedly//

    ஹிஹி! நான் எப்பமே ஆன்மீகப் பதிவுகளைச் சீரியசா எழுத மாட்டேன்! நகைச்சுவையாச் சொன்னத லிட்டரலா எடுத்துக்கிட்டீங்க போல! :-)
    வேண்டுதலை முழு மனதோட நிறைவேற்றியதால் தான் மயூராதி ரூடம்-னு கோயில்ல பாட்டு பாடி, இந்தப் பதிவும் போட்டேன்!

    //Long live she! Long live her devotion to Viraali Malai Murugan!!//

    அம்மாவை வாழ்த்தியமைக்கு அடியேன் நன்றியும் அன்பும்! என் நண்பர் நண்பிக்கெல்லாம் அவங்க அம்மாவும் கூட! அவங்கள மன நிறைவாப் பாத்துக்கிறதே எனக்கு ரொம்பப் பிடிக்கும்! :-)

    ReplyDelete
  86. //அடங் கொக்க மக்கா! என்ன நடக்குது இங்க? முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி? இவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன்? அடப் பாவி! பார்த்தா பால் வடியும் பால முகம்! முருகக் குழந்தையை அள்ளிக் கட்டிக்கணும் போல இருக்கு! முளைச்சி மூனு இலை விடல! அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா? OMG! I just can't believe this!..."//

    ஹா ஹா ஹா கலக்கல் KRS

    //இன்னிக்கி எங்க குல தெய்வம் முருகப்பெருமானைப் பார்க்க விராலிமலைக்குப் போகப் போறோம்...வாரீங்களா?//

    I am ready

    //நன்றிங்க ஆபிசர்//

    :-)))) குட் மார்னிங் ஆபீசர் மாதிரியா ;-)

    //கொஞ்ச நாள் கழிச்சி இந்தியாவுக்குத் தொலைபேசும் போது, அம்மா கிட்ட உளறி விட்டேன்!//

    ஓட்ட வாய் டா! KRS உனக்கு :-)))

    //குமாரவாடி குறுநில மன்னனின் அமைச்சர் பேரு கருப்பமுத்துப் பிள்ளை. முருக பக்தர். அதே சமயம் சரியான சுகபோகி. தொடர் புகையாளர் (Chain Smoker). ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தரிசனத்துக்கு மலைக்கு வருவாராம்.
    ஆனால் ஒரு முறை வெள்ளம் பெருக்கெடுத்து வர முடியாமல் போனது. கரையில் உணவு கூடக் கிடைக்காமல் தவித்தார் அமைச்சர். உணவை விட அவர் விரும்பிப் புகைக்கும் சுருட்டு தடைபட்டது தான் அவருக்குத் தவிப்பாகிப் போனது.//

    சுவாராசியமாக இருக்கிறது

    KRS அருமயான பதிவு உடன் நல்ல எழுத்து நடை.

    உங்களின் எந்த பதிவை படிக்கும் போதும் எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கும்..எப்படிடா இத்தனை மேட்டர் தெரிந்து வைத்து இருக்கிறார் என்று, புகழ்ச்சிக்காக கூறவில்லை, உண்மையாகவே.

    வாய்ப்பே இல்லை KRS, கடவுள் பற்றி எத்தனை விஷயங்களை ஆர்வமாக தெரிந்து வைத்து இருக்கிறீர்கள், அதோடு சுவாராசியமாகவும் கூறுகிறீர்கள்.

    அரசியல், எதிர் பதிவு, போட்டி, பொறாமை, அடுத்தவரை குறை சொல்லுதல், மனம் வருந்தும் படி கருத்துக்கள் தெரிவித்தல் (ஒரு சிலர் தவிர்த்து) என்று குப்பையாக இருக்கும் பதிவுலகத்திலே நீங்கள் நிச்சயம் வித்யாசமானவர் தான்.

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  87. viralimalai padi erumpothu arukil ulla solaipushpangalai kana kan kodi vendum

    ReplyDelete
  88. thank u ...enga oorai patri engaluku theriyadha visayangalai eduthuraithadharku

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP