Sunday, February 17, 2008

இரத்த தானம் செய்யலாம்! Bone Marrow Donation செய்யலாமா? - 1

அண்மையில் Help Gayathri - Leukemia-ன்னு ஒரு பதிவை நண்பர் கப்பி சுவரொட்டியில் போட்டிருந்தாரு!
அதுல காயத்ரி என்னும் இரண்டு குழந்தைகளுக்குத் தாய்-இருபத்து எட்டு வயதுப் பெண், எலும்பு மஜ்ஜை தானம் தேடி அலையும் செய்தி வந்துச்சி.

இரத்த தானம்-ங்கிறது இப்பெல்லாம் சர்வ சாதாரணமா ஆகிப் போச்சு!
ஆனா அது என்னாங்க எலும்பு மஜ்ஜை தானம்?
பேரைக் கேட்டாலே பயமா இருக்கே! = எலும்பு/ மஜ்ஜை
தானம் கொடுக்கறேன் பேர்வழி-ன்னு ஏதாச்சும் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டா?...

Okay; அதாச்சும் என்னான்னா...
பச்சைக் குழந்தைங்க ஒன்னுமே பண்ணாம, கஷ்டப்படுறத பாத்தா மட்டும் தாங்க முடியறதில்லீங்க!
கோவம் கோவமா வருது! வீட்டுக்கு வந்து "போய்யா...நீயும் உன் கருணையும்"-ன்னு சண்டை எல்லாம் கூட போட்டிருக்கேன் முருகன் கிட்ட!

சினிமாவிலும் கதைகளிலும் Blood Cancerஐப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டுப் போச்சு நமக்கு! அங்க காட்டுறதெல்லாம் வாழ்வே மாயம் கமலஹாசன் ஸ்டைல்ல மட்டுமே வரும்!
ஆனால், சிறு குழந்தைகள் இந்த நோயால் படும் அவஸ்தை?
இதுக்கு, இந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை ஒளிக் கீற்றாய் வந்திருப்பது தான் Bone Marrow என்னும் எலும்பு மஜ்ஜை சிகிச்சை!

நாங்கள் பங்கு கொள்ளும் சமூக நிலையத்தின் (Community Center) சார்பாக, விழிப்புணர்வு முகாம் ஒன்னு அண்மையில் நடந்துச்சு!
புது ஜெர்சி, நியூ பிரன்ஸ்விக் நகரத்து St. Peters மருத்துவமனையில் நடந்த இந்த முகாமில், ஒரு volunteerஆ (தன்னார்வலர்...தமிழ்-ல சரி தானே?) கலந்துகிட்டேன்!

அப்போது தான் இரத்த தானம் போல் இந்தத் தானம் பற்றியும் பல விசயங்கள் தெரிய வந்துச்சி!
சரி உங்க கிட்டு வந்து புலம்பாம வேறு யாரு கிட்டப் போயி புலம்பப் போறேன்?

அதான் வழக்கம் போல, உங்க கிட்ட கொஞ்சம் சொன்னா,
நீங்க இன்னொருத்தர் கிட்ட பேச்சுவாக்குல சொல்லி, அப்படியே கொஞ்சமாச்சும் பரவாதா என்ன?

தானம் தராமல் வேறு வழிகளில் கூட உதவ முடியும்!
இப்போதே தரணும் என்பது கூட இல்லை! பெயரைப் பதிந்து கொண்டால் கூடப் போதும்!
இரண்டு தொடராப் போடுறேன். படிச்சித் தான் பாருங்களேன்!


இரத்த தானம் - அதன் அருமை பெருமை இப்போ எல்லாருக்கும் தெரியும்! தூய்மையான முறைகளில் இரத்தம் கொடுக்க இப்போதெல்லாம் யாருக்கும் எந்தப் பயமும் இருக்குறதில்ல! 

வலியப் போயி இரத்தம் கொடுக்கும் நல்ல உள்ளங்கள் நாட்டில் இருப்பதை நினைச்சாப் பெருமையாத் தான் இருக்கு! இரத்த தானத்துக்குன்னே விதம் விதமா நெட்வொர்க் இருக்கு!
ஆனா இது போல ஒரு விழிப்புணர்வு எலும்பு மஜ்ஜை தானத்துக்கு இருக்கான்னு கேட்டா...இல்லைன்னு தான் சொல்லணும்! 

இரத்த தானம் வந்த புதிதில், மக்களுக்கு என்னவெல்லாம் பயம், தயக்கம் இருந்துச்சோ, 
அதே மாதிரி புதுசா வந்த இந்த எலும்பு மஜ்ஜை தானத்துக்கும் இருக்கு!

இந்த எலும்பு மஜ்ஜைத் தானம் எப்படின்னா,
இரத்த தானத்தில் இரத்த வகை (Blood Group) மாதிரி அவ்ளோ ஈசியா எல்லாம் இங்க செட் ஆகாதுங்க! 
ஒரே குடும்ப முறை, நெருங்கிய சொந்தம், ஒரே நாடு/இனம்-னு இப்படிச் செட் ஆவுற விஷயங்கள் ஏகப்பட்டது இருக்கு இதுல!

அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுக்குன்னே ஒரு பெரிய தகவற் களஞ்சியம் (Database) வச்சி நடத்துறாங்க! இந்தியாவில் இப்பத் தான் கொஞ்சம் கொஞ்சமா விழிப்புணர்ச்சி வரத் தொடங்கி இருக்கு!

இந்தத் தானத்தைத் தேடுற இந்தியர்கள் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லீங்க! அதுவும் இப்ப அண்மைக் காலங்களில் இந்தியக் குழந்தைகளும் இதனால் அதிகம் பாதிக்கப்படுதுங்க! 
இந்தச் சின்னக் குழந்தைகளுக்காகத் தேடித் தேடி அவங்க அம்மா-அப்பா நடக்கும் நடை இருக்கே! அப்பப்பா!!

இந்தக் காலத்துல ஒரே குழந்தையோட கூட நிறுத்திக்கறாங்க! 
அதுனால சகோதர சகோதரிகள் வழியாகவோ, இல்லை நெருங்கிய குடும்ப உறவு மூலமாகவோ தானம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டே வருது! 
அதுனால வெளியில் தேட வேண்டிய கட்டாயம்! சரி...எங்கே-ன்னு போய் தேடுவது?
டாக்டர்கள் பொதுவா சினிமாவில் வருவது போல், அமெரிக்கா-ன்னு கைகாட்டுவாங்க! 
ஆனா இங்கிட்டு அல்லாடித் திரிஞ்சி வந்து, நம்ம இனத்துக்கு ஒத்து வரா மாதிரி, மரபியல் (genetics) சார்ந்த ஒரு தானம் அளிப்பவரைத் தேடிக் கண்டு பிடிப்பதற்குள்...போதும் போதும் என்று ஆகி விடும்!

எத்தனை தான் பணம் வைத்திருக்கட்டுமே! 
சிகிச்சையும் முழுசாத் துவங்க முடியாமல், தானம் கிடைக்கும் இடம் எது-ன்னு கூட தெரியாமல், பிஞ்சு உயிர்கள் அல்லாடும் சிலவற்றைப் பார்த்த போது.....இறைவா!* இவிங்களுக்கு என்ன தான் தேவை?
நம் முதுகின் பின்னால் இருக்கும் பெல்விக் எலும்புகளில் இருந்து கொஞ்சூண்டு திரவங்கள். 
இந்தத் திரவம் தான் Liquid Marrow - எலும்பு மஜ்ஜை!
மட்டன் சாப்பிடும் போது சில பேர் உறிஞ்சுவார்களே! இல்லீன்னா முருங்கைக் காய் உறிஞ்சுவோம் இல்லியா! அது போலன்னு வச்சிக்குங்களேன்!

* எதுக்கு இதெல்லாம் இவிங்களுக்குத் தேவைப்படுது?உயிர் அச்சுறுத்தும் சில நோய்கள் - Leukemia, Lymphoma, குழந்தைகள் கேன்சர் போன்றவற்றிற்கு இந்த எலும்பு மஜ்ஜையோ இல்லை கொடி இரத்தமோ (Cord Blood) சிகிச்சைக்குத் (Transplant) தேவைப்படுகிறது!

* இது தவிர வேற சிகிச்சையே இல்லையா?
கீமோதெரப்பி, ரேடியேஷன்-ன்னு சில சிகிச்சைகள் இருந்தாலும்...பல ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த எலும்பு மஜ்ஜை சிகிச்சையை நிரந்தரத் தீர்வாக் கண்டு பிடிச்சிருக்காங்க!
அதுவும் சிறு குழந்தைகளை, ரேடியேஷன் போன்ற பழைய வலி நிறைந்த சிகிச்சைக்கு உட்படுத்திக் காலத்தை வீணடிப்பதை விட, இது இன்னும் நல்ல தீர்வாக உள்ளது!

* இதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்?
1. நம் எலும்பு மஜ்ஜையைத் தேவைப்பட்டால் கொடுக்கலாம்-ன்னு எண்ணம் வந்தா போதும்!
2. உடனே கொடுக்கணும்-னு இல்லை! பெயரைப் பதிஞ்சி வச்சிக்கிட்டா போதும்! எப்போது தேவையோ அப்போது அவர்களே கூப்பிடுவார்கள்!
3. அதுவும் அபூர்வ இரத்த வகை உள்ளவர்கள் (Rare blood group) செய்தால் இன்னும் புண்ணியமாப் போகும்!
4. தெரியாதவங்களுக்கு எடுத்துச் சொல்லலாம். உங்கள் நிறுவன மனிதவளத் துறையிடம் (HR) அறிமுகப்படுத்தலாம்!
5. முற்றிலும் நம் விருப்பம் தான்! பெயரைப் பதிந்த பின், நமக்குப் பிடிக்கலைன்னா முடிவை மாத்திக்கலாம்! எதுவும் கட்டாயம் இல்லை!

* யார் வேண்டுமானாலும் கொடுக்கலாமா?
1. 18-60 வயதுக்குள் யார் வேண்டுமானுலும் தரலாம்!
2. எச்.ஐ.வி மற்றும் 18 வயதுக்கு மேல் மஞ்சள் காமாலை வந்தவர்கள் தானம் தர முடியாது.
3. போதைப் பொருள் பழகியோர், வரம்பற்ற உடலுறவு கொண்டவர்கள் - இவர்கள் மட்டும் தானம் தர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

* எலும்பு, மஜ்ஜை...பேரே ரொம்ப பயமா இருக்கேப்பா!ஹிஹி...பயப்படாதீங்க! 
உங்க எலும்பை ஒடைச்சி இன்னொருத்தருக்குப் பொருத்த எல்லாம் மாட்டாங்க! 
முட்டிக்கி முட்டி தட்டறது எல்லாம் இங்கிட்டு கிடையாது! :-) பாருங்க எப்படிக் காபி குடிச்சிக் கிட்டே கொடுக்கறாரு மனுசன்!
1. இது பெரும்பாலும் outpatient முறை தான். 4-6 மணி நேரத்துக்கு மேல் ஆகாது!
2. இரத்த தானத்துக்கும் இதுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, இதுக்கு லோக்கல் மயக்க மருந்து (Local Anaesthesia) கொடுப்பது தான்! மத்தபடி ஒன்னும் பெருசா வித்தியாசம் இல்லை!

3. வலியோ, அபாயமோ கிடையாது! உங்களிடம் இருந்து பெறப்படும் 5% மஜ்ஜையே போதும் ஒரு உயிரைக் காப்பாற்ற!
4. தானம் கொடுத்த 4-6 வாரங்களில், உங்கள் உடம்பு, நீங்கள் கொடுத்த தானத்தை ஈடு கட்டி விடும்!

5. வெகு சிலருக்கு மட்டுமே தலைவலி, அசதி ஓரிரு நாள் இருக்கலாம்! ஆனால் இது மிகவும் கம்மி!
பிட்ஸ்பர்க் வேங்கடேஸ்வரர் ஆலயத்தில் Bone Marrow Drive செய்யும் சிறார்கள்

* சரி யோசிக்கிறேன்! ஆனா இதுக்கு எங்கிருந்து ஆரம்பிக்கறது? ஏதோ பெயரைப் பதிஞ்சி வச்சிக்கலாம்-னு சொன்னீங்களே! எங்கே?

முதலில் யோசிக்கறேன்-னு சொன்னீங்க பாருங்க! அதுக்கே நன்றி!

உலகில் மிகப் பெரிய - கொடையாளர்கள் தகவற் களஞ்சியம் - National Marrow Donor Program (NMDP) - Marrow.org
அமெரிக்காவை மையமாக வைத்துச் செயல்பட்டாலும், உலகெங்கும் மருத்துவர்கள் இதில் யாராச்சும் உதவுவோர் கிடைக்க மாட்டார்களா என்று முதலில் பார்க்கிறார்கள்.

ஆனால் அண்மையில் நம் இந்திய நாட்டவர்/வம்சா வளியினருக்கு என்றே ஒரு தனி தகவற் களஞ்சியம் தொடங்கப்பட்டுள்ளது!
என்னைக் கேட்டால், அதில் பதிந்து கொள்வது இன்னும் சிறப்பு! 
மரபியல் ஒப்பாக உள்ளவருக்குத் தானே உதவ முடியும்! இங்கு பதிந்தால் பெறுபவருக்கும் நன்மை! கொடுப்பவருக்கும் எளிது!
அந்தத் தளத்தின் பெயர் MatchPIA.org

***இங்கே நம் பெயரைப் பதிந்து கொள்ளலாம்! ***லட்சத்தில் ஒருவர் தான் தானத்துக்குத் தேறுகிறார்!
நீங்கள் அந்த உயிர் தரும் அபூர்வ கொடையாளியாகவும் இருக்கலாம்!
YOU could be that special life-giving person!
இவர்களின் திட்டம் இந்திய மரபியல் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும்!
//The goal of USADR, is to build a donor registry of educated and committed donors, who will represent a concentration of genetics by different regions of India, resulting in a greater number of matches for South Asian patients. Once completed, this project may be deemed the Largest Genetic Journey undertaken in India//

என்னைக் கேட்டால்,
அயல் நாட்டில் தற்காலிகமாக வாழும் நம் போன்ற இளைஞர்/இளைஞிகள், இதற்கு முதலில் காலடி எடுத்து வைக்க நினைக்க வேண்டும்! நாம் வளர்ந்த தாய்நாட்டில், இன்று வளரும் குழந்தைகளுக்குச் செய்யும் மிகப் பெரிய கைம்மாறாக இது இருக்கும்!

கணிணித் துறையில் எத்தனையோ பேர் databaseகளில் வேலை பார்க்கிறோம். சாதாரணமாய் ஒரு query போட்டு ஒன்னுமே வரலை என்றாலே எப்படி வெறுப்பாய் இருக்கு! 
ஒரு உயிர் காக்க இவர்கள் தேடும் bone marrow queryக்கு, ஒன்றுமே கிட்டவில்லை என்றால் இவர்களின் அப்போதைய மனநிலை எப்படி இருக்கும்-னு கற்பனை செய்து பாருங்கள்!

குறைந்தபட்சம் இந்த Database-ஐ ஆவது நாம் நிரப்பலாம்!
அடுத்த பதிவில்...
* பெயரைப் பதிந்து கொண்டால் எப்படிக் கூப்பிடுவாங்க?
* இன்னாருக்கு/இந்த நாட்டவருக்கு மட்டும் தானம் அளிக்கிறேன் என்று சொல்லலாமா?
* எப்படி எடுப்பாங்க? பக்க விளைவுகள் ஏதாச்சும் இருக்குமா?
* இப்படித் தானம் கொடுத்தால் வீட்டில் திட்டு விழுமா? :-)
என்பதை எல்லாம் பார்த்து விட்டு முடிப்போம்!

உங்களுக்கு இந்தத் தானம் சம்பந்தமான கேள்விகள் இருந்தாலும் தயங்காமல் கேளுங்க! அடியேன் அறிந்த வரை சொல்கிறேன். எங்கள் இயக்கத்தில் மருத்துவரைக் கேட்டும் சொல்கிறேன்.
நம் பதிவர்கள் இடையே இருக்கும் VSK ஐயா உட்பட மருத்துவர்கள் பலரையும் நாம் கலந்து ஆலோசிக்கலாம்!

(இன்று குலசேகராழ்வார் பிறந்த நாள். நேரம் இருந்தால் தனிப் பதிவு இடுகிறேன். இல்லீன்னா, இதையே அவர் பதிவாகக் கருதிக் கொள்ளவும்)

References (உசாத்துணை):தானம் கொடுத்த நாள் அன்று ஸ்டீவனின் அனுபவங்கள்= http://bookreviewsandmore.ca/2007/07/bone-marrow-part-3-donation.html
தானம் கொடுக்கும் போது நடப்பவை என்ன?

39 comments:

 1. Excellente!

  related post
  http://wikipasanga.blogspot.com/2007/07/blog-post_04.html

  ReplyDelete
 2. KRS
  சிங்கயிலும் இந்த போன் மேரோ இருக்கு இதுவரை செய்ததில்லை.இனிமேல் தான் யோசிக்கனும்.
  லீவு நாள் என்றால் பரவாயில்லை,4-6 மணி நேரம் யோசிக்க வைக்கிறது.
  நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

  ReplyDelete
 3. மயக்க மருந்து எல்லாம் இல்லாம சில நாள் எதோ மாத்திரை சாப்பிட்டுவிட்டு பின் சாதாரணமாக இரத்த தானம் செய்வது போல் கூட செய்யலாம் எனச் சொல்கிறார்களே...

  நான் பதிந்து தானம் செய்பவர் என்ற அட்டை வாங்கி சில காலம் ஆகிவிட்டது.

  ReplyDelete
 4. நான் எழுதலாம்னு யோசிச்சுட்டிருந்ததை நீங்க எழுதிட்டா எப்படி? :))))

  எளிமையாக அதே சமயம் விவரமாகவும் சொல்லியிருக்கீங்க..சூப்பர்!

  SAMAR samarinfo.org என்ற அமைப்பும் NMDPயுடன் இணைந்து செயல்படறாங்க..தன்னார்வலர்கள் இணைந்து முகாம்கள் நடத்தவும் உதவறாங்க.

  ReplyDelete
 5. நல்ல விழிப்புணர்வு பதிவு. என்னுடைய தந்தையாருக்கு அறுவை சிகிச்சை செய்த பொழுது ஐந்து யூனிட்டுகள் குருதி வேண்டும் என்று கேட்டார்கள். என்னையும் சேர்த்து ஐவர் சென்றோம்.என்னுடையது ஓ நெகட்டிவ் வகை. சற்று அபூர்வமானதாமே. ஏற்கனவே கல்லூரியில் தானம் செய்திருக்கிறேன். ஆனால் இந்த முறை மறுத்து விட்டார்கள். ஏனென்றால் சொரியாசிஸ் உள்ளவர்களின் குருதி எடுத்துக்கொள்ளப்பட மாட்டாதாம். அந்த வகையில் மஜ்ஜைக்கும் அப்படித்தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். ஆகா தேவை இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் இதில் ஊக்கத்தோடு செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  ReplyDelete
 6. //SurveySan said...
  Excellente!
  related post
  http://wikipasanga.blogspot.com/2007/07/blog-post_04.html//

  நன்றி சர்வேசன். விக்கிபசங்க சுட்டியைப் பதிவிலும் இணைக்கிறேன்!

  ReplyDelete
 7. //வடுவூர் குமார் said...
  KRS
  சிங்கயிலும் இந்த போன் மேரோ இருக்கு இதுவரை செய்ததில்லை. இனிமேல் தான் யோசிக்கனும்.//

  நன்றி குமார் அண்ணா!

  //லீவு நாள் என்றால் பரவாயில்லை,4-6 மணி நேரம் யோசிக்க வைக்கிறது.
  நன்றாக சொல்லியுள்ளீர்கள்//

  உடனே போயி கொடுக்கணும்னு இல்லையே! அப்படிக் கொடுக்கவும் முடியாது!

  உங்கள் வகையை மேட்ச் செய்து கூப்பிட்டால் தான் கொடுக்க முடியும்! மிகவும் தேவை ஏற்பட்டால் ஒழிய யாரும் கூப்பிட மாட்டார்கள்! பெயரைப் பதிந்தாவது வைத்துக் கொள்ளலாம் அல்லவா?

  ReplyDelete
 8. //இலவசக்கொத்தனார் said...
  மயக்க மருந்து எல்லாம் இல்லாம சில நாள் எதோ மாத்திரை சாப்பிட்டுவிட்டு பின் சாதாரணமாக இரத்த தானம் செய்வது போல் கூட செய்யலாம் எனச் சொல்கிறார்களே...//

  உம்...Marrow வாக இருக்காது. Stem Cell ஆக இருக்கலாம்! கேட்டுச் சொல்கிறேன்!

  //நான் பதிந்து தானம் செய்பவர் என்ற அட்டை வாங்கி சில காலம் ஆகிவிட்டது//

  தல!
  Hats off to you!
  Koths is Koths! Always Ahead!

  ReplyDelete
 9. //Dreamzz said...
  ubayogamaana pathivu. nice.
  //

  நன்றி காதல் சிங்கமே! :-)

  ReplyDelete
 10. //கப்பி பய said...
  நான் எழுதலாம்னு யோசிச்சுட்டிருந்ததை நீங்க எழுதிட்டா எப்படி? :))))//

  அட...கோச்சிக்காதே கப்பி!
  காப்பி (ரைட்டா) வாங்கி தரேன்! :-)

  //எளிமையாக அதே சமயம் விவரமாகவும் சொல்லியிருக்கீங்க..சூப்பர்!//

  Dankees :-)

  //SAMAR samarinfo.org என்ற அமைப்பும் NMDPயுடன் இணைந்து செயல்படறாங்க//

  இவர்கள் சுட்டியைப் பதிவில் சேர்த்து விடுகிறேன்! நியூயார்க் தான் இவிங்க தலைமையகம்!

  ரொம்பவும் ஆக்டிவா செயல்படற குழு! ஆனா அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மட்டும் தான் பெரும்பாலும்!

  ReplyDelete
 11. நம்ம சர்வேசன் கூட இதைப் பத்தி ஒரு பதிவு முன்பு போட்டிருக்கிறார் என நினைக்கிறேன். இருந்தாலும், இது அடிக்கடி வலியுறுத்தப்பட வேண்டிய ஒரு தகவல்.
  இது பெரும்பாலும் ஒரு நிரந்தரத் தீர்வே தவிர, "இதுவே" நிரந்தரத் தீர்வு எனச் சொல்லும் நிலையில் இன்றைய மருத்துவம் இன்னமும் இல்லை. இருக்கின்ற சிகிச்சை முறைகளிலேயே மிகவும் பயன் தரக் கூடியது எனச் சொல்லலாம். மற்றபடி, நீங்க சொல்லியிருக்கிற எல்லாத் தகவல்களுமே உபயோகமனவை, ரவி. நன்றி!

  ReplyDelete
 12. கலக்கல் போங்க! :-) நல்ல பதிவு...

  சரி, நான் சில ஆண்டுகளுக்கு முன்பே NMDP-ல் பதிவு செய்தேன், SAMAR மூலமாக. இது என்ன புதுசா USADR?

  ReplyDelete
 13. //G.Ragavan said...
  என்னுடையது ஓ நெகட்டிவ் வகை. சற்று அபூர்வமானதாமே//

  ஆமாம்! அபூர்வம் தான்!
  உங்களைப் போலவே! :-)

  //ஏனென்றால் சொரியாசிஸ் உள்ளவர்களின் குருதி எடுத்துக் கொள்ளப்பட மாட்டாதாம்.//

  ஹூம்! சொரியாசிஸ் தொற்று நோய் அல்ல! அப்புறம் ஏன் இந்தத் தடை-ன்னு தெரியலை!
  People who have taken Tegison for psoriasis cannot donate blood-ன்னு தான் போட்டிருக்கு! இங்கே பாருங்க!
  http://www.cbccts.org/donating/index.htm

  //அந்த வகையில் மஜ்ஜைக்கும் அப்படித்தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்//

  உங்களுக்கு இதைக் கேட்டுச் சொல்லி விடுகிறேன்!

  //ஆகா தேவை இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் இதில் ஊக்கத்தோடு செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்//

  உங்கள் ஆதரவான சொற்களுக்கு நன்றி ஜிரா.

  ReplyDelete
 14. //VSK said...
  இது பெரும்பாலும் ஒரு நிரந்தரத் தீர்வே தவிர, "இதுவே" நிரந்தரத் தீர்வு எனச் சொல்லும் நிலையில் இன்றைய மருத்துவம் இன்னமும் இல்லை//

  நானும் அப்படித் தான் கேள்விப்பட்டேன் SK ஐயா!
  இருக்கின்ற சிகிச்சை முறைகளிலேயே மிகவும் பயன் தரக் கூடியது இது!
  மேலும் அதிக வலி இல்லாத காரணத்தால் குழந்தைகளுக்கு ஏதுவானது!

  //நீங்க சொல்லியிருக்கிற எல்லாத் தகவல்களுமே உபயோகமனவை, ரவி. நன்றி!//

  நன்றியை நான் தான் சொல்லணும்!
  இங்கு மக்கள் கேட்கும் கேள்விக்கு எல்லாம் விடை சொல்லப் போகும் மருத்துவர் நீங்க தானே? :-)

  சரி ஜிரா-வின் சந்தேகத்தைக் கொஞ்சம் தீர்த்து வையுங்களேன்!
  சொரியாசிஸ் உள்ளவர்கள் தானம் செய்யலாகாதா என்ன?

  ReplyDelete
 15. //சேதுக்கரசி said...
  கலக்கல் போங்க! :-) நல்ல பதிவு...//

  ஹிஹி...அட நான் ரொம்ப colloquial-ஆத் தாங்க எழுதினேன்! சும்மா ஒரு awareness-kku தான்!
  மருத்துவ ரீதியாச் சொல்லணும்னா நிபுணர்கள் தான் பதிவு போடணும்!

  //சரி, நான் சில ஆண்டுகளுக்கு முன்பே NMDP-ல் பதிவு செய்தேன், SAMAR மூலமாக. இது என்ன புதுசா USADR?//

  கப்பி samarinfo.org சொல்லி இருக்காரு பாருங்க! ஆனா இது அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தான் பெரும்பாலும் பங்கு கொள்வது!

  USADR = United South Asian Donor Registry!
  USA என்று வருவதால் அமெரிக்கா இல்லை!

  இது இந்தியாவில் தானம் அளிப்பவரின் registry ஆக வளர்ந்துகிட்டு இருக்கு!

  இதற்கு அமெரிக்காவுக்குத் தான் வரவேண்டூம் என்ற நிலை மாறி...சென்னை, பெங்களூர், மும்மை, தில்லி என்று லோக்கல் கிளைகள் நிறைய!

  இந்த database வளர்ந்தா, இந்திய மரபியலுக்கு ஒரு பெரும் வளர்ச்சியா இருக்கும்!

  ReplyDelete
 16. //சேதுக்கரசி said...
  இதையும் பாருங்க:
  http://www.helprajesh.com//

  பார்த்தேன் சேதுக்கரசி!
  என் சிறு பங்கையும் தருகிறேன்!
  இன்னும் donor search பண்ணிக்கிட்டு இருக்காங்க போல!

  ReplyDelete
 17. உதிர கொடை செய்வதில் கும்பகோணத்திற்கு முதலிடம், அடுத்து சென்னை வாசிகள். சிங்கையில் வெகுசிலரே செய்கிறார்கள்.
  :)

  ReplyDelete
 18. முக்கிய விஷயம்...

  இரத்த மஜ்ஜை என்பது நமது இரத்ததை போல் வளரும் (?? ஊறும்) பொருள்.

  எனவே இரத்த மஜ்ஜை தானம் செய்யவோ, பெறவோ (சிறுநீரகம் போலன்றி) அரசு அனுமதி எதுவும் பெற தேவையில்லை.

  இரத்த மஜ்ஜை தானம் மற்றும் இரத்த தானம் ஆகியவை The Human Organs Transplant Act, 1994 கீழ் வராது

  அந்த சட்டத்தின் படி "human organ" means any part of a human body consisting of a structured arrangement of tissues which, if wholly removed, cannot be replicated by the body

  எனவே இரத்த மஜ்ஜை தானம் செய்ய / பெற சட்ட சிக்கல் எதுவும் கிடையாது

  ReplyDelete
 19. கேஆரெஸ்,
  நன்றாக சொல்லியுள்ளீர்கள், ஆனால் மக்களிடம் பெரிதாக விழிப்புணர்ச்சி இல்லை என்றே சொல்லலாம்.மெதுவாக தற்போது தான் பரவி வருகிறது.

  சென்னை அரசு மருத்துவமனையில் இந்தியாவின் முதல் எலும்பு வங்கி என்று ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள், இறந்த உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை சேமித்து வைத்து , கேன்சரால் பாதிக்கப்பட்ட எலும்புகளுக்கு பதிலாக பொறுத்துவார்கள், மேலும் போன் மாரோவ்க்கும் பயன்படும் என்று சொல்கிறார்கள்.

  ஸ்டெம் செல், தொப்புள் கொடி, போன் மாரோவுக்கு என்று சில தனியார் வங்கிகளும் இங்கே செயல்படுகிறது.

  ReplyDelete
 20. மிக்க நன்றிங்கண்ணா. உடனே ரெஜிஸ்டர் பண்ணிடறேன்.

  ReplyDelete
 21. என்னால் முடிந்த தானம் -
  இந்த பதிவை எனக்கு பரிச்சயமான ஒரு
  புகழ் வாய்ந்த மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளேன் - life line hospitals,Perungudi-Chennai
  அன்புடன்
  பி.ரா

  ReplyDelete
 22. //கோவி.கண்ணன் said...
  உதிர கொடை செய்வதில் கும்பகோணத்திற்கு முதலிடம், அடுத்து சென்னை வாசிகள்//

  Hurrah!!!
  Hats off Chennai! :-)

  //சிங்கையில் வெகுசிலரே செய்கிறார்கள்.:)//

  கோவி அண்ணா,
  சிங்கைப் பதிவர் சிறப்பு மாநாடு போடுங்க! டிபிசிடி-ம பதிவரா? சி-பதிவரா? :-)

  ReplyDelete
 23. //புருனோ said...
  முக்கிய விஷயம்...
  இரத்த மஜ்ஜை என்பது நமது இரத்ததை போல் வளரும் (?? ஊறும்) பொருள்//

  ஆமாங்க டாக்டர் ஐயா!
  4-6 வாரத்துல மறுபடியும் ஊறிடுமாம்!
  ஆனா அவங்க நம்ம கிட்ட இருந்து எடுக்கறதே 5% தான் போல!

  //எனவே இரத்த மஜ்ஜை தானம் செய்யவோ, பெறவோ (சிறுநீரகம் போலன்றி) அரசு அனுமதி எதுவும் பெற தேவையில்லை//

  //எனவே இரத்த மஜ்ஜை தானம் செய்ய / பெற சட்ட சிக்கல் எதுவும் கிடையாது//

  சூப்பர்...நான் சொல்ல விட்டுப் போனதைக் கரெக்டா எடுத்துக்காட்டிருக்கீங்க! மிக்க நன்றி!
  இதையும் பதிவுல சேத்துக்கறேன்!

  ReplyDelete
 24. //வவ்வால் said...
  கேஆரெஸ்,
  நன்றாக சொல்லியுள்ளீர்கள், ஆனால் மக்களிடம் பெரிதாக விழிப்புணர்ச்சி இல்லை என்றே சொல்லலாம்//

  ஆமாங்க வவ்ஸ்!
  குழந்தைங்க பாடு தான் இன்னும் கஷ்டம்! விழிப்புணர்ச்சி நமக்கே கம்மியாத் தானே இருக்கு! அதான்!

  //சென்னை அரசு மருத்துவமனையில் இந்தியாவின் முதல் எலும்பு வங்கி என்று ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்//

  தகவலுக்கு நன்றி!
  ஆனா போன் மாரோவ்க்கு இறந்த உடலில் இருந்து எடுக்கலாமான்னு தெரியலை! Good point! இதையும் மருத்துவர் கிட்ட கேட்டுக்கறேன்!

  //ஸ்டெம் செல், தொப்புள் கொடி, போன் மாரோவுக்கு என்று சில தனியார் வங்கிகளும் இங்கே செயல்படுகிறது//

  ரொம்ப நல்ல விசயம்! புஷ்பா ராகவனும் சொல்லி இருக்காங்க பாருங்க!

  ReplyDelete
 25. //மதுரையம்பதி said...
  மிக்க நன்றிங்கண்ணா. உடனே ரெஜிஸ்டர் பண்ணிடறேன்//

  டேங்கீஸ் மெளலி அண்ணா!
  I know can always count on you!

  ReplyDelete
 26. //Pushpa Raghavan said...
  என்னால் முடிந்த தானம் -
  இந்த பதிவை எனக்கு பரிச்சயமான ஒரு புகழ் வாய்ந்த மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளேன் - life line hospitals,Perungudi-Chennai
  //

  நன்றி புஷ்பா!
  வரப்புயர நீர் உயரும்!
  நீர் உயர நெல் உயரும்!
  அது போல விழிப்புணர்ச்சி உயர உயரத் தான் இது இரத்த தானம் அளவுக்குப் பெருகும்!

  அட்லீஸ்ட் முதல் படி, அந்த databaseஐ நிரப்புவது!

  ReplyDelete
 27. KRS - அருமையான பதிவு.

  காயத்ரியுடன் அதே CMC வேலூரில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்
  என் நண்பனுக்காக (http://www.helprajesh.com) சில bonemarrow donor drive செய்து கொண்டிருக்கிறோம். இதைப் படிக்கும் அனைவரும் பதிந்து கொண்டு தெரிந்தவர்களையும் பதிய வையுங்கள்.

  ஏப்ரல் மாதத்தில் வாஷிங்டனில் காயத்ரி, ராஜேஷ், ராஜி அவர்களுக்காக நிதி திரட்டவும், இது சம்பந்தமாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் ஒரு walkathon நடத்தவிருக்கிறோம். விவரங்கள் http://www.marrowdrives.org ல் தெரிவிப்போம்.

  ReplyDelete
 28. Bone Marrow Donation பத்தி சொன்னதற்கு நன்றி இரவிசங்கர். இதைப் பத்தி இதுவரைக்கும் எனக்குத் தெரியாது. அடுத்த பகுதியையும் படிக்கணும்.

  ReplyDelete
 29. // குமரன் (Kumaran) said...
  Bone Marrow Donation பத்தி சொன்னதற்கு நன்றி இரவிசங்கர். இதைப் பத்தி இதுவரைக்கும் எனக்குத் தெரியாது. அடுத்த பகுதியையும் படிக்கணும்//

  இந்த வாரத்துக்குள் அடுத்த பாகம் போட்டுடறேன் குமரன்!
  குழந்தைகள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் அறிய வேண்டிய ஒரு தானம் இது!

  ReplyDelete
 30. //நாகு (Nagu) said...
  KRS - அருமையான பதிவு.

  காயத்ரியுடன் அதே CMC வேலூரில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்
  என் நண்பனுக்காக (http://www.helprajesh.com) சில bonemarrow donor drive செய்து கொண்டிருக்கிறோம். இதைப் படிக்கும் அனைவரும் பதிந்து கொண்டு தெரிந்தவர்களையும் பதிய வையுங்கள்//

  நன்றி நாகு
  ராஜேஷ் பூரண நலம் பெற பிரார்த்தனைகள்.
  சேதுக்கரசி அக்காவும் ராஜேஷ் சுட்டியைக் கொடுத்திருக்கார் பாருங்க!

  //ஏப்ரல் மாதத்தில் வாஷிங்டனில் காயத்ரி, ராஜேஷ், ராஜி அவர்களுக்காக நிதி திரட்டவும், இது சம்பந்தமாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் ஒரு walkathon நடத்தவிருக்கிறோம். விவரங்கள் http://www.marrowdrives.org ல் தெரிவிப்போம்//

  அவசியம் பார்க்கிறோம்!

  ReplyDelete
 31. சிரு துளி பெருு வெள்ளம் என்பர்,
  உங்களின் பதிவு மகத்தான செவை.

  அன்புடன்

  ReplyDelete
 32. என்னது.. அக்காவா? அவ்வ்வ்வ்வ்!!

  ReplyDelete
 33. கேயாரெஸ்,

  இது பத்தி முன்னே நிறைய தனிப்பட்ட மடல்கள் வந்ததுண்டு. நான் , இரத்ததானம் செய்வதற்கு செஞ்சிலுவையில் பதிவு செய்து 3 தடவை கொடுத்து இருக்கிறேன். சில செய்திகள் காரணமாக, செஞ்சிலுவைக்கு இப்போது ரத்தம் கொடுப்பது இல்லை!

  மஞ்சை... ஹ்ம்ம்ம்... கொடுக்க ஆர்வம்தான். சோம்பல்தான் காரணம், பதிவு செய்யாமைக்கு! இப்பவே செய்றேன்...

  நல்ல பதிவுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 34. வீட்டில் இருந்தபடியே போன் மேரோ தானத்துக்கு பதிவு செய்ய ->
  http://www.aadp.org/pages/register.php

  உங்களுக்கு தகுதி இருந்தால் வீட்டுக்கே தேவையான கிட்'டை அனுப்பி வைப்பார்களாம். வாழ்க aadp-யின் நற்பணி!

  ReplyDelete
 35. simply super. indru oru thagaval.
  try to spread all my known peple/
  all the best.
  muthuraman.r

  ReplyDelete
 36. simply super. indru oru thagaval.
  try to spread all my known peple/
  all the best.
  muthuraman.r

  ReplyDelete
 37. An excellent post sir.
  but sir when I wanted to register myself in the link given ...its giving this message..

  "DataPage does not exist. (Caspio Bridge error) (50501) "

  please do check.
  with rgds,
  aruna

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP