Thursday, February 21, 2008

எச்சரிக்கை!! ரிவர்ஸ் கியரில் - பூம்பாவாய்! ஆம்பல் ஆம்பல்!! - 10

ஆர்க்குட் தள நிர்வாகத்திடம் இருந்து ஒரு எச்சரிக்கை!
சுரேஷ் என்னும் பெயர் உள்ளவர்கள், தங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை, மறு தேதி குறிப்படப்படும் வரை, ஆர்க்குட் தளத்தில் இருந்து நீக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சில தொடர் விபத்துகள் காரணமாகத் தமிழகக் காவல் துறை ஆர்க்குட் தளத்தை அணுகி இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளது.

இது முற்றிலும் சுய விருப்பத்துக்கு உட்பட்டதே! இருப்பினும் சம்பந்தப்பட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் ஆர்க்குட் கோருகிறது!
அதுக்காக உங்கள் அக்கவுண்ட்டை தயவு செய்து disable எல்லாம் செய்து விடாதீர்கள்! நீங்கள் போடும் கடலையைத் தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

*Find Your Kind, Dont Kill Your Kind - Orkut Team!


பிரபல காவல் துறை DCP, தடய அறிவியல் நிபுணர், Dr. கப்பி நிலவன் ராஜ் அவர்களைத் தேடிச் சென்னைக்கு வருகிறார்கள் சுரேஷூம், சுரேஷ் ராகவனும். உலகத் தரம் வாய்ந்த பல சிக்கலான கிரிமினல் கேஸ்களில் முடிச்சு அவிழ்க்கும் அனுபவம் வாய்ந்தவர் Dr. கப்பி நிலவன் ராஜ்.

இது குறித்துப் பல புத்தகங்களையும் பதிவாக்கங்களையும் பதிப்பித்துள்ளார்.
அண்மையில் நடந்த பாரீஸ் ஹில்டன் வழக்கில், மைக்ரோ சிப் குற்றத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து, ஜீட்டா ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

"வாங்க சுரேஷ் ராகவன்! சென்னைக்கு எப்போ வந்தீங்க? தடய அறிவியல் துறைல ஏதோ பரிசோதனை பண்ணனும்-னு சொன்னீங்களாமே? இன்னிக்கு மைலாப்பூர் கோயில்ல சி.எம் வராங்க! எனக்கு அங்க ட்யூட்டி இருக்கு! வாங்க அப்படியே பேசிக்கிட்டே போவோம்! சரி யாரு இவரு உங்க கூட? டிப்பார்ட்மென்டா? மஃப்டியில் வந்துருக்காரா?"

"இல்ல சார்! இவன் என் நண்பன், பேரு சுரேஷ்! அமெரிக்காவுல இருந்து வந்திருக்கான்! அந்த ஆம்பல்-ங்கிற பொண்ணை இவன் ஏர்போர்ட்டில் பார்த்து இருக்கான் சார்!"

"ஏன்யா! கேஸ் பேசும் போது, இப்படிக் கண்டவங்களையும் கூட்டிகிட்டு வரியே! உனக்கு ஏதாச்சும்...."

"சார், இவன் உதவியும் கேஸ்-ல தேவைப்படலாம் சார்! அந்த ஆம்பல் பொண்ணை இவன் ஆர்க்குட்லயும் பாத்திருக்கான்! நேர்லயும் பாத்திருக்கான் சார்! அதான்..."

"சரி...அப்படியே ஏதாச்சும் கேட்கணும்னா தனியாக் கூப்பிட்டு விசாரிச்சிக்குவோம்! இனிமேல் இப்படிச் செய்யாதீங்க ராகவன்!"

"சாரி சார்!"

"பரவாயில்லை விடுங்க!
சார்.....அமெரிக்கா சுரேஷ் சார், பொண்ணுங்களை ஆர்க்குட்ல, நேர்ல-ன்னு பாத்துக்குட்டே இருக்குறது தான் உங்க ஹாபியா? ஹிஹி, கோச்சிக்காதீங்க! சும்மாச் சீண்டினேன்!
If you dont mind, நீங்க கொஞ்சம் கோயிலைச் சுத்திப் பாத்துக்கிட்டு இருங்களேன்!
சி.எம் வர டைம்ல கெடுபிடி ஜாஸ்தியா இருக்கும்! இந்தாங்க விஐபி பாஸ்!
உங்களை அரை மணி நேரத்தில் இதே இடத்தில் சந்திக்கிறோம்! தப்பா எடுத்துக்காதீங்க!

நீங்க சொல்லுங்க ராகவன். அந்த ப்ரொபசர் பத்தி ஏதோ சொல்ல வந்தீங்க இல்ல?"


"கப்பி சார், எனக்கு என்னமோ எங்க நண்பன் கார்த்திக் சுரேஷ் சாகவில்லை-ன்னு தான் தோணுது! அவங்க அப்பா அந்தத் தற்கொலையைப் போலீசில் கூடச் சொல்லலை! அவன் எழுதி வச்ச லெட்டரைப் பென்சில் தூள் போட்டுப் பார்த்த பிறகு எல்லாமே ஒரே மர்மமா இருக்கு சார்"

"ஸோ, உங்களுக்கு அந்தப் பையனோட அப்பா, ப்ரொபசர் பிரபு மேல சந்தேகம்-னு சொல்லறீங்க, இல்லையா?"

"இருக்கலாம் சார். ஆனா அது கூடவே இந்த ஆம்பல் என்கிற சிறுமி, யாரோ ஒரு பெண்ணின் கொலை, ஆட்டாப்ஸி ரிப்போர்ட்டில் ஆறு விரல், போதாக்குறைக்கு இந்த சுரேஷ் என்கிற மேஜிக்கல் நேம், பென்சில் தூள் போட்டுக் கண்டுபுடிச்ச கார்த்திக் சுரேஷ் நோட் - இப்படி ஒரே குழப்பமா இருக்கு சார்! அதான் இத்தனையும் கனெக்ட் பண்ண உங்களைத் தேடி வந்திருக்கேன்"

"ம்ம்ம்ம்ம்! சரி, நீங்களா வந்து மாட்டிக்கறீங்க! விதி வலியது! நான் என்னத்த சொல்ல? உங்க பேர் கூட சுரேஷ் தான் இல்ல?"

"சாஆஆஆர்"

"அட, சும்மா சொன்னேங்க! கேஸ் டென்சன்-ல இருக்கீங்க போல! கவலைப்படாதீங்க ராகவன்! ஒரு கை பாத்துறலாம்! நான் முன்பே சொன்னபடி ஆர்க்குட்-ல மெசேஜ் கொடுத்தாச்சு தானே?"

"கொடுத்தாச்சு சார்! அவிங்களும் போட்டுட்டாங்க"

"குட் ஜாப்! சுரேஷ்-ன்னு பேர் உள்ள பசங்க, யார் யார் எல்லாம் இப்ப ஆர்க்குட்-ல ஃபோட்டோக்களை மாத்துறாங்க, ஃப்ரொபைலை மாத்துறாங்க-ன்னு ஒரு கண்ணு வச்சிகிட்டே இருங்க!
அப்படியே அந்தப் பசங்களுக்கு அதிகமா ஸ்கிராப் செஞ்ச பொண்ணுங்களை எல்லாம் தனியா கட்டம் கட்டுங்க! விசாரணைக்கு உதவியா இருக்கும்! இது பற்றி எனக்கு ஒரு டெய்லி ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லுங்க!"


"ஓக்கே சார்! அப்பறம் ஒரு விஷயம்! என்ன கோயிலுக்கு எல்லாம் திடீர்னு போக ஆரம்பிச்சிட்டீங்க? இன்னிக்கி என்ன விசேசம்? சி.எம் எல்லாம் வராங்க?"

"அட அதை ஏன் கேக்கறீங்க ராகவன்!
நம்ம ஜனங்க அறுநூறு வருசத்துக்கு முன்னமே எப்படி ஹாரி பாட்டர் ரேஞ்சுக்கு ரவுசு வுட்டுருக்காங்க பாருங்க! யாரோ ஒரு சின்ன பொண்ணாம், பூம்பாவை-ன்னு பேரு! உங்க ஆம்பல் மாதிரி-ன்னு வச்சுகுங்களேன்!

பூம்பாவை சின்ன வயசுலயே செத்துப் போச்சு போல! அது சாம்பலைக் குடத்தில் போட்டு வச்சாராம் அவிங்க அப்பா!
யாரோ சம்பந்தராமே! தமிழ்ப் பாட்டு எல்லாம் பாடறவரு!
அவரு இங்கன மைலாப்பூர் வந்த போது, ஏதோ ஒரு தமிழ் மந்திரம் பாடினாராம்! சாம்பல்-ல இருந்து, பூம்பாவை டக்குன்னு உயிரோடு எழுந்துக்குச்சாம்!

அதை வருசா வருசம் கொண்டாடுறாங்க போல! இந்த வருசம் சி.எம் வந்துட்டாங்க! அதான் நானும் வந்துட்டேன்"

"நாத்திகர் ஆனாலும் இந்த மாதிரி சமாச்சாரத்தை எல்லாம் அல்வாத் துண்டு போல புட்டு புட்டு வைக்கறீங்களே சார்! செகுவேரா ரேஞ்சுக்கும் பேசறீங்க! செவ்வா தோஷம் ரேஞ்சுக்கும் பேசறீங்க! யூ ஆர் ரியலி கிரேட் கப்பி சார்!"

"ராகவன், என்னைக் காக்கா புடிக்கறதுக்குப் பதிலா, கேஸ்-ல துப்பைப் புடிங்க! சீக்கிரம் உருப்படுவீங்க"


கெடுபிடிகள் கோவிலுக்குள் அதிகமாக, சிகப்புச் சுழல் விளக்குகள் சுற்ற ஆரம்பிக்க, மக்கள் எல்லாரும் ஒரு ஓரமாக ஒதுக்கப்பட.....
அதோ சி.எம் வந்து விட்டார்.

அதிகாரிகள் எல்லாரும் அடுத்த கொஞ்ச நேரத்துக்குக் கட்சித் தலைகளாக மாறி விட்டனர். சி.எம் சகல மரியாதைகளுடன் சன்னிதிக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார். அவர் போகும் வழியில் சல்யூட் வைக்கும் DCPயைக் காணத் தவறவில்லை!

"ஹலோ மிஸ்டர் கப்பி நிலவன் ராஜ்! அது என்ன உங்க பேரே ஸ்டீபென் ராஜ் மாதிரி சினிமா ஸ்டைலில் இருக்குதே?
(கப்பி என்றுமில்லாத அதிசயமா அசடு வழிகிறார்...)

நானே உங்களை அழைத்து, வாழ்த்து சொல்லணும்-னு இருந்தேன் மிஸ்டர்! உங்கள் பாரீஸ் ஹில்டன் சாதனைக்கு வாழ்த்துக்கள்!
அடுத்த வாரம் என்னை கோட்டை அலுவலகத்தில் வந்து பாருங்க, ப்ரைவேட் அசென்மென்ட் ஒன்னு உங்களுக்கு வச்சிருக்கேன்!"

கப்பி, ஆமோதிப்பதற்கு அறிகுறியாக விறைப்பாக மீண்டும் ஒரு சல்யூட் வைக்க...அனைவரும் உள்ளே சென்று விட்டார்கள்.
வெளியில் ஹாரி பாட்டர் உற்சவம்!
கொஞ்சம் கொஞ்சமாக சாம்பல் குடத்தில் இருந்து, பூம்பாவை உயிர் பெற்றுக் கொண்டே இருந்தாள்! கதகத என்று மக்கள் கூட்டம்! ஒரே சத்தம்!

"மல்லாரி" என்னும் கம்பீரமான ஸ்டைலில் நாதசுர வாசிப்பு பிச்சிக்கிட்டுப் போகுது! நடனம் ஆடிக்கிட்டே தூக்கித் தூக்கி வருகிறார்கள்! தீப்பந்தங்கள் இரு பக்கமும் தகதகன்னு எரியுது! விசிறிகள் வீசி வீசி ஆடுகிறார்கள்!
இவ்வளவு களேபரத்திலும் DCPஇன் கண் அந்தச் சுரேஷை மட்டும், பருந்து போலப் பார்த்துக் கொண்டே இருந்தது!

திடீர் என்று சுரேஷ் அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான், DCP மற்றும் ராகவன் இருக்கும் இடத்தை நோக்கி!

"டேய் ராகவா! அவளே தான்! அவளே தான்!
அதோ நிக்குறா பாரு! பச்சைப் பட்டுப் பாவாடை! அவ தாண்டா ஆம்பல்!"

"வாட்? என்னடா சொல்லுற சுரேஷ்? ஆர் யூ ஷ்யூர்?"

"டேய், எனக்கு நல்லாத் தெரியும்-டா! சார் கிட்ட சொன்னியா ஆம்பல் பத்தி?
கப்பி சார், அந்தப் பொண்ணு தான் சார் ஆம்பல்!"

கப்பி: "கான்ஸ்டபிள், உடனே அங்க போங்க! அந்தப் பொண்ணு-கூட யாரோ இருக்காங்க பாருங்க! ரெண்டு பேரையும் இங்க கூட்டிக்கிட்டு வாங்க! சின்ன விசாரணை-ன்னு சொல்லுங்க!"

சுரேஷ்: "சார், என்ன இது? என்ன பண்றீங்க நீங்க?"

கப்பி: "இன்ஸ்பெக்டர், இவர் கையில் விலங்கு மாட்டுங்க!
மிஸ்டர் அமெரிக்கா சுரேஷ்! யூ ஆர் அண்டர் அரெஸ்ட்!"

ராகவன்: "சார்...அவன்......"

கப்பி (கள்ளச் சிரிப்புடன்):
"பூம்பாவை விழாவில் பூம்பாவை உயிர் பெற்றாள்!
பூம்பாவாய் - ஆம்பல்! ஆம்பல்!"

(தொடரும்...)


* சிங்கம் Single-ஆவும் வரும் , Married-ஆவும் வரும் என்ற நியூட்டன்ஸ் ஃபோர்த் லாவைக் கண்டுபிடித்த புரட்சிப் பதிவர்,
* காதல் கதைகளின் ஏகபோக சாகுபடியாளர்,
* "சாகு"படி செய்யும் போதே, ஹீரோயின்களை "சாகும்"படியும் செய்பவர்,
* சங்கத்தின் நிரந்தரச் சிங்கம்
- ஆசைத் தம்பி வெட்டிப்பயலை அடுத்த ரிவர்ஸ் கியர் போடுமாறு அன்புடன் அழைக்கிறேன்!

ஆம்பலில் இதுவரை...
சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்
ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்
தம்பி எழுதிய ஆறாவது ஆம்பல்
கப்பி எழுதிய ஏழாவது ஆம்பல்
தேவ் எழுதிய எட்டாவாது ஆம்பல்
வெட்டி எழுதிய ஒன்பதாம் ஆம்பல்
KRS எழுதிய பத்தாம் ஆம்பல்

பெனாத்தல் சுரேஷ் எழுதிய பதினோராம் ஆம்பல்

ரிவர்ஸ் கியரில்....
-10, KRS

8 comments:

  1. story is very confusing ravi sir. so again ten more people to go?

    ReplyDelete
  2. //Anonymous said...
    story is very confusing ravi sir. so again ten more people to go?//

    ஹிஹி
    கதையில் பலப்பல திருப்பங்கள் வந்தாலும் எல்லாப் பாத்திரங்களையும் இப்போ ஒரே இடத்துக்குக் கொண்டு வந்தாச்சுங்க! இனி மேல் முடிச்சுகள் ஈசியா அவிழ்ந்து விடும்! பயப்படாதீங்க! :-)

    ReplyDelete
  3. //Dreamzz said...
    naan onnume sollala.//

    அப்ப ரெண்டுமே சொல்லுங்க! :-)

    ReplyDelete
  4. இது தொடர்கதையா இல்ல தொடர்வதையா?? கப்பியாண்டவா இதுக்கு நீதான் பதில் சொல்லணும். :)
    ஏஜண்ட் கப்பிநிலவன்ராஜ் .007.2 என்ன கொடுமை இது பாவலரே!

    ReplyDelete
  5. Could you please tell the continuation link? I am not able to find it...

    ReplyDelete
  6. ஒரே கன்பூஸனாக் கீது. ஒரு சோடா குடச்சுட்டு வந்து ஒரு தபா மொதல்லேர்ந்து படிக்கிறேன் :)))

    இப்படிக்கு
    ஜாம்பஜார் ஜக்கு

    ReplyDelete
  7. it's interesting..story ended??? but i couldn't find any links after this part...
    didn't Thambi continue the part??

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP