Friday, January 11, 2008

பூம்பாவாய்! ஆம்பல் ஆம்பல்!! - 10

ஹலோ, லதாப் பொண்ணு இருக்கா அத்தை?

டேய் சுரேசு, என்னாது...அத்தையா???...நீ சரியான சொத்தைடா! போன்ல உன் கிட்ட பேசறது யாருன்னு கூடவா தெரியல்ல?

ஏய்ய்ய்ய்...கயலு! நீயாடி? எப்படி இருக்குற புள்ள?

என்னாது? டீ..யா? மொறை வைச்ச மாமனாட்டும் ரொம்பத் தான் மொறைப்பாப் பேசுதியளே! இதெல்லாம் கயலு கிட்ட செல்லாது! சாக்கிரதை!

அடிங்க! இவ "டேய் சுரேசு"-ன்னு கூவிக் கூவிக் கூப்பிடுவாளாம்! நாங்க மட்டும் என்ன பூப்பறிப்போம்-னு நெனச்சீயா? நீ டேய்ன்னே! நான் டீன்னேன்! போதுமா புள்ள?

உக்கும்...கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி அதிகாரம் எல்லாம் தூள் பறத்தரீயளே! இன்னும் என்னிய என்னவெல்லாம் பறத்தப் போறீயளோ?

அடிப் பாவி, மெட்றாஸ் தமிழ்-ல கண்டபடி வையப் போறீன்னு இல்ல இருந்தேன்? ஆனா நம்மூரு சிட்டு மாதிரில்ல சிலுசிலுத்தக்கறே நீயி? இதுக்கோசரமே உன்னிய பாக்கணும் போல இருக்கே, கயலு!

ஐய்ய! ஐயன் மருமானுக்கு ஆசையைப் பாரு! அதான் காலேஜ்-லயே பாத்துக்கிட்டே தானே இருந்த?
டேய் சுரேஷ் ராகவா, உனக்கும் எனக்கும் கண்ணாலமாமே! அப்பாரு சொன்னாரு! ஒங்க வீட்ல ஏதாச்சும் சொன்னாகளா?

சொன்னாக! சொன்னாக! நீ மெட்ராஸ்ல வேலை பாக்குற பொண்ணு! நானு பட்டிக்காட்டுப் போலீசு! இதெல்லாம் சரிப்படுமா புள்ள?

படாது டா! சரிப்படாது! நீ சரிப்பட மாட்டே! நான் வந்து-தேன் உன்னைய சரிபடுத்தணும்! இதுக்கு மேல நம்மூரு பாஷை வராம மெட்றாஸ் தண்ணி தடுக்குதுப்பா! ஹிஹி...
ஹேய்...அம்மா பக்கத்துல வந்து நிக்குது!
நான் வச்சிடறேன்டா! கேட்ச் யூ லேட்டர்!

ஏய்,ஏய்,ஏய்...போனை வைக்க முன்னாடி, எனக்கு என்ன கொடுக்கனுமோ அதைக் கொடுத்துட்டுப் போடி!
ஹிஹிஹி.......இச்..இச்....பட்....!


கண்ணாலத்துக்குப் பின்னாலும் கூட இந்த முத்த விஷயத்தில் மட்டும், ஏனோ சுரேஷூக்கு ஒரு குறை! அவளுக்கும் ஒரு குறை!
இன்னுமொரு முத்தம் இன்னுமொரு முத்தம்
என்றுஅவள் கெஞ்சியதை எண்ணிஎண்ணிப் பார்த்தே
சுரும்பாகக் களைத்துவிட்ட சுரேசுக்குப் பாவம்
நெருப்பாகக் காயும் நிலா!

சென்னைக்கு வந்த பின்னாலும் இன்னும் சுரேஷ் வீட்டுக்கே போகலை! அஞ்சலியை விமான நிலையத்தில் பாத்ததோட சரி! அவ கூட இருந்தாளே ஆம்பல்! ச்சே...அதை நினைக்கும் போதெல்லாம் சுரேஷ் வேர்த்து விறுவிறுத்துப் போகிறான்! நாக்குழறுது! கைகள் தானாத் தந்தி அடிக்குது!
அஞ்சலியிடம் போனிலும் சண்டை! யாராச்சும் வெளிநாட்டில் இருந்து வந்துட்டு வீட்டுக்குப் போவாம, ஓட்டலில் ரூம் போட்டுத் தங்குவாங்களா என்ன? என்னமோ போ சுரேஷ்! இப்பல்லாம் நீ செய்யறது எதுவும் நல்லதாவே படலை!

சார்...கொஞ்சம் லைட்டை ஆப் பண்றீங்களா? மணி ஒன்னாகப் போவுது!

சக பயணியின் குரல் கேட்டு புத்தகத்தை மூடி வைத்தான் சுரேஷ்! லைட்டை அணைத்தான்! திருநெல்வேலி பஸ்ஸில் பழைய நண்பனைப் பார்க்கப் போயிக்கிட்டு இருக்கும் அவன் கண்களில் மட்டும் அப்படி ஒரு வெறி! ஏன் இந்தக் கொலை வெறி?


டேய் ராகவா! உன்னைப் பாக்க வெளிநாட்டில் இருந்து ஒருத்தன் வந்திருக்கேன். நீ என்னடான்னா காலங்காத்தால காபியப் போட்டுக் கொடுத்துட்டு, லுங்கிய மடிச்சிக் கட்டிக்கினு, ஏதோ போலீஸ் ஃபைலைப் புரட்டிக்கிட்டு இருக்கே! இதான் உன் பழைய நண்பனை நீ பாத்துக்கற லட்சணமா?
இத்தனைக்கும் நம்ம ரெண்டு பேரும் அத்தினி க்ளோசு! ரெண்டு பேர் பேரும் வேற ஒரே பேரு! காலேஜ்-ல இதை வச்சே பொண்ணுங்க எப்படி எல்லாம் நமக்கு டிமிக்கி கொடுத்தாங்க?

ஆமாண்டா சுரேஷ்! அதை எல்லாம் மறக்க முடியுமா?
லேடீஸ் ஹாஸ்டல் வேப்ப மரத்துக்குக் கீழே வெயிட் பண்ணவும்-னு பிட்டு நோட்டீசு வருமே! எந்த சுரேஷுக்கு வந்ததுன்னு தெரியாம எப்படிக் குழம்பிப் போயிருக்கோம்? எத்தன சண்டை போட்டிருக்கோம்?

சரி அத வுடுறா மச்சான்! நீ ஏன்டா அஞ்சலி கிட்ட பேச மாட்டேங்கிற? சென்னைல ரெண்டு பேரும் மீட் பண்ணீங்களா இல்லையா?

டேய் ராகவா...இதப் பத்திப் பேசாதேன்னு எத்தனை வாட்டிச் சொல்லி இருக்கேன்? நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலைன்னு நான் உன்னைக் கேட்கறனா? விட்டுறுடா...ப்ளீஸ்!

(அப்போது அங்கு வருகிறார் ஒரு கானஸ்டபிள்...)
ராகவன் சார்...
கொலை நடந்த ஸ்பாட்டுக்குப் பக்கத்தில் இருக்குற ஒரு புதர்-ல இந்த சின்ன செயின் கிடைச்சுதாம்! ஏசி உங்க கிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னாரு! அப்படியே லேப் டெஸ்டுக்கு அனுப்பிடச் சொன்னாரு! நான் வரேன் சார்...

கண்ணாடிப் பேழையில் இருந்த அந்தச் சங்கிலியைத் தொடாமல், திறக்காமல், அப்படியே உற்றுப் பார்க்கிறான் ராகவன். மிகவும் பொடியான சின்னச் சங்கிலி! ஆனா அதைப் பார்த்த சுரேஷூக்குத் தலையில் பெரிய இடியே இறங்கியது!

டேய் ராகவா...இது அஞ்சலிது டா! இது எப்படிடா இங்க?

டேய் சுரேஷ்...உளராத! ஆர் யூ ஷ்யூர்?

டேய் எனக்கு நல்லாத் தெரியும்டா! இது அவளோடது தான்!

ஓ மை காட்! சரி சரி...கத்திப் பேசாத! இரு...இந்தப் போட்டோவைப் பாரு! இது அஞ்சலியா?

சீ சீ! இல்லடா! என்னடா இது? டெட் பாடி படத்தை எல்லாம் என் கிட்ட காட்டுற?

அய்யோ!! ஒரு நிமிஷத்துல வயித்தக் கலக்கிட்டியேடா பாவி!
இந்த டிசைன் இப்ப ரொம்பக் காமன்-டா! ரெண்டு அன்னப் பறவை காதல் பண்ணுறாப் போல! போன வேலன்டைன்ஸ் டேக்கு வந்த மாடல்-டா!

மண்ணாங்கட்டி! வயித்தெரிச்சலைக் கெளப்பாதே! நல்லாப் பாரு! அது அன்னப் பறவையா? இங்கிலீஷ் S டா அது! டபுள் S!!

அட, ஆமாம்! அப்படிக் கூட வச்சிக்கலாம்!

என்ன வச்சிக்கலாம் குச்சிக்கலாம்? அந்த S யாரு தெரியுமா?
- SURESH!
ஒரு சுரேஷ் இல்ல! டபுள் சுரேஷ்! இதத் தான் அவ எப்ப பார்த்தாலும் மாட்டிக்கிட்டுத் திரிவா!

டேய் சுரேஷ்...என்னடா சொல்லுற நீயி? காலங்காத்தால தண்ணி கிண்ணி போட்டுருக்கியா?

டேய் ராகவா, அந்த சுரேஷ் நீ இல்லை! உன்னைச் சொல்ல வரல! போதுமா? வேணாம், என் ஆத்திரத்தைக் கெளப்பாதே! அப்பறமா சொல்றேன்!
வா மொதல்ல, யாரோ ஒரு ப்ரொபசரைச் சொன்னியே, அவரைப் பாத்துட்டு வருவோம்! அவரு கிட்ட நான் சில விஷயம் கேக்கணும்டா!

என்னடா இப்பிடிக் குண்டைத் தூக்கிப் போடுற? சரி ஜீப்புல ஏறு! நானும் இந்தச் செயின் விஷயமா அவரு கிட்ட சில விஷயம் கேக்கணும்!


ப்ரொபசர் பிரபுவைக் கண்டதும் சுரேஷூக்கு இன்னும் அதிர்ச்சி!
சாஆஆஆஆர் நீங்களா?

தம்பி நீங்களா? எப்படி இருக்கீங்க? என்ன திடீர்னு இந்தியாவுக்குப் பயணம்? அதுவும் ராகவனோடு வந்திருக்கீங்க? தெரிஞ்சவரா?

சார்...சுரேஷை முன்னமே உங்களுக்குத் தெரியுமா?

தெரியும் ராகவன்! என் மகன் கார்த்திக்கின் நண்பன் தான் இந்த சுரேஷ்! அவன் அமெரிக்காவில் இருந்த போது, அவன் ரூம் மேட்டாவும் இருந்தாரு இந்தத் தம்பி! ஒரு செமினாருக்குப் போன போது பார்த்து இருக்கேன்!

ஆமாண்டா ராகவா!
டேய்...சாரு யாரு தெரியுமில்ல? நம்ம கெமிக்கல் கார்த்தியோட அப்பா டா!

வாட்? நம்ம கெமிக்கல் கார்த்தியா? காலேஜ்-ல மீனா கூட....
ஓ ஐ ஆம் சாரி சார்! கார்த்திக் எனக்கும் நண்பன் தான்! நான், சுரேஷ், கார்த்தி எல்லாம் ஒரே செட்!

ஆகா! என்னாப்பா சொல்றீங்க?...இன்னிக்கு என்ன திருநாளா? பழைய தொடர்புகள் எல்லாம் ஒன்னா சந்திக்கணும்-னு ஏதாச்சும் இருக்கா என்ன?

சார்...கார்த்தி இப்ப எங்க இருக்கான் சார்?
அமெரிக்காவை விட்டுட்டு இந்தியா வந்துட்டான் பையன்! அப்பறம் அப்படியே தொடர்பு விட்டுப் போச்சு!

அதோ அங்க தான் இருக்கான், நீங்களே போயி பாருங்க!

அங்கே...ஒதுக்குப்புறமாய் இருக்கும் ஒரு மாடத்தைக் காட்டுகிறார் ப்ரொபசர் பிரபு! அருகில் சென்று பார்க்கிறார்கள்!
மாலையிட்ட படத்தில் கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும் கார்த்தியின் அதே அரும்பு மீசை! குறும்பு முகம்!
படத்தின் கீழ்:
கார்த்திக் சுரேஷ்
மலர்ந்தது: 24/02/1975
உதிர்ந்தது: 03/01/2006


சுரேஷுக்கும்,
சுரேஷ் ராகவனுக்கும்,
கார்த்திக் சுரேஷின் படத்தைப் பார்த்தவுடன், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

இத்தனை சுரேஷும் ஒரே நாளில் சந்தித்தால் உலகம் தாங்குமா? அடுத்த பாகத்தையும் ஒரு சுரேஷே தொடர்வார்!
பினாத்தியது போதும்! வாங்க சுரேஷ்!

ஆம்பலில் இதுவரை...
சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்
ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்
தம்பி எழுதிய ஆறாவது ஆம்பல்
கப்பி எழுதிய ஏழாவது ஆம்பல்
தேவ் எழுதிய எட்டாவாது ஆம்பல்
வெட்டி எழுதிய ஒன்பதாம் ஆம்பல்
...
Indie Blogger, வலையுலக வந்தியத்தேவன், பதிவுலகக் கணவன்மார்களிலேயே wifeology பட்டம் பெற்ற ஒரே பதிவர், Dr. பெனாத்தல் சுரேஷ்...எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

17 comments:

  1. கலக்கலா கொண்டு போயிருக்கீங்க தல!! ஜூப்பர்!!

    ReplyDelete
  2. இப்பதான் ஒரு தொடர்கதை படிச்சு முடிச்சேன். இன்னோண்ணா??

    திருப்பாவைப் பதிவுனு நினைச்சு வந்துட்டேன் ரவி:))

    திருப்பிப் படிச்சுட்டு வரேன்.

    ReplyDelete
  3. நல்லா கொண்டு போயிருக்கீங்க... ஆனா இதை யார் முடிக்க போறாங்கனு நினைக்கும்போது பாவமா இருக்கு :-)

    ReplyDelete
  4. திகில் தொடர்கதை - Fiction - அருமையாகப் போய்கொண்டிருக்கிறது. பல பேர் எழுதுவதால் எப்படி கொண்டு செல்லப் போகிறார்கள் - எப்படி முடிக்கப் போகிறார்கள் - ஒரே குழப்பம். திகில் திகில் திகில்

    ReplyDelete
  5. கதையை சூப்பரா நகர்த்தியிருக்கிறீங்க!

    இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராகவன் & கயல் ஃபோன் டயலாக்ஸ் அசத்தல்!

    கவிதை, டபுள் 'S' படம் எல்லாம் போட்டு கலக்கல்ஸ்!!

    பாராட்டுக்கள் ரவி!!!

    ReplyDelete
  6. வாவ்... சூப்பரா கொண்டு போயிருக்கீங்க :-)

    எல்லா சுரேஷையும் மொத்தமா ஒரே சுரேஷ்கிட்ட கொடுத்திட்டிங்க போல. :-))

    ReplyDelete
  7. //கப்பி பய said...
    கலக்கலா கொண்டு போயிருக்கீங்க தல!! ஜூப்பர்!!//

    தேன் கிண்ணத்தில் பால் வார்க்கும் கப்பி நிலவரே! காஞ்சித் தலைவரே! danks!

    கண்ட இடத்தில் இறைஞ்சி கிடந்த எல்லா சுரேஷையும் எப்படியாச்சும் ஒரு இடத்துல சேர்த்துடணும்-னு முடிவு கட்டிட்டேன்! சேர்த்தாச்சே! :-))

    ReplyDelete
  8. //வல்லிசிம்ஹன் said...
    இப்பதான் ஒரு தொடர்கதை படிச்சு முடிச்சேன். இன்னோண்ணா??//

    ஹிஹி :-)

    //திருப்பாவைப் பதிவுனு நினைச்சு வந்துட்டேன் ரவி:))//

    அதுக்கென்ன? இதே தலைப்புல திருப்பாவையும் போட்டுட்டாப் போச்சி! :-)

    //திருப்பிப் படிச்சுட்டு வரேன//

    படிச்சிட்டு சொல்லுங்க வல்லியம்மா!

    ReplyDelete
  9. //வெட்டிப்பயல் said...
    நல்லா கொண்டு போயிருக்கீங்க...//

    நன்றிங்கண்ணோவ்!

    //ஆனா இதை யார் முடிக்க போறாங்கனு நினைக்கும்போது பாவமா இருக்கு :-)//

    சிறில்...பாத்தீங்களா, உங்க மேல வெட்டி எவ்ளோ பாவப்படறாரு-ன்னு! :-)

    யோவ் பாலாஜி...
    நீங்க பல இடத்துல பல சுரேஷ்களை சிதற வச்சதை, ஒன்னா ஓரிடத்தில் சேத்துருக்கேன்! அந்த S செயின், Lord of the Rings வர மோதிரம் மாதிரி! அடுத்து எழுதப் போறவங்க பாத்துக்கங்கப்பு! :-)

    ReplyDelete
  10. //cheena (சீனா) said...
    திகில் தொடர்கதை - Fiction - அருமையாகப் போய்கொண்டிருக்கிறது. பல பேர் எழுதுவதால் எப்படி கொண்டு செல்லப் போகிறார்கள் - எப்படி முடிக்கப் போகிறார்கள் - ஒரே குழப்பம். திகில் திகில் திகில்//

    சீனா சார்,
    நன்றி.
    உண்மையான திகில் யாருக்குத் தெரியுமா? அடுத்து எழுதப் போறவங்களுக்குத் தான்! :-)

    ReplyDelete
  11. /Divya said...
    கதையை சூப்பரா நகர்த்தியிருக்கிறீங்க!//

    Danks Divya :-)

    //இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராகவன் & கயல் ஃபோன் டயலாக்ஸ் அசத்தல்!//

    நான் ஃபோனை ஒட்டு கேக்கலீங்க! :-)

    //கவிதை, டபுள் 'S' படம் எல்லாம் போட்டு கலக்கல்ஸ்!!//

    டபுள் 'S' செயின் என்ன பாடு படப் போகுதுன்னு பார்க்க உங்களோடு சேர்ந்து நானும் ஆவலுடன் வெயிட்டிங்! :-)
    சினிமாவில் மோதிரம் வரலாம்! கதையில் செயின் வரக்கூடாதா என்ன?

    ReplyDelete
  12. நல்ல கதைனு எல்லாரும் சொல்லி இருக்காங்க, படிச்சுட்டு வரேன். :)

    ReplyDelete
  13. சரியாப் போச்சு போங்க, மற்ற ஒன்பதும் படிக்கணுமா? விஷயமே தெரியாதே! சரி, உங்களாலே முடிஞ்சவரை குழப்பி இருக்கீங்க! பெனாத்தலைக் கூப்பிடறதுக்குத் தோதா பேரைத் தேர்ந்தெடுத்தீங்களோனு நினைக்கிறேன்! ம்ம்ம்ம், மத்ததும் தேடிப் பிடிச்சுப் படிச்சுட்டு வரேன்!

    ReplyDelete
  14. அடுத்து நீங்களா... ம்ம்ம்ம்ம்... ஏற்கனவே கதை கதி கலங்குது. நீங்களும் சூப்பரா கதி கலக்கீட்டீங்க்க. பெனாத்தலார் பாடு திண்டாட்டந்தான்.

    ReplyDelete
  15. //Sridhar Narayanan said...
    எல்லா சுரேஷையும் மொத்தமா ஒரே சுரேஷ்கிட்ட கொடுத்திட்டிங்க போல. :-))//

    நன்றி ஸ்ரீதர்.
    ஆமா! எத்தனை நாள் தான் எல்லா சுரேஷும் வேற வேற இடத்தில் இருப்பாங்க! ஓரணியில் திரட்ட வேணாமா? :-)

    இனி, அத்தனை சுரேஷையும், நம்ம பினாத்தல் சுரேஷ் வெளுத்து வாங்கிடுவார்!

    ReplyDelete
  16. //கீதா சாம்பசிவம் said...
    நல்ல கதைனு எல்லாரும் சொல்லி இருக்காங்க, படிச்சுட்டு வரேன். :)
    //

    நல்ல கதைன்னு உங்களுக்குச் சொன்னவங்க பேரு என்ன கீதாம்மா? :-)


    //சரியாப் போச்சு போங்க, மற்ற ஒன்பதும் படிக்கணுமா? விஷயமே தெரியாதே!//

    பின்னே, சும்மாவா? பரமபதம் ஆடுற மாதிரி தான்! தாயம் போட்டுத் தான் ஏணி ஏறணும்! :-)

    //பெனாத்தலைக் கூப்பிடறதுக்குத் தோதா பேரைத் தேர்ந்தெடுத்தீங்களோனு நினைக்கிறேன்!//

    சுரேஷ்-னு பேரை முதல் பாகத்திலேயே வச்சிட்டாங்க கீதாம்மா! it's only coincidental! :-)

    ReplyDelete
  17. //G.Ragavan said...
    அடுத்து நீங்களா... ம்ம்ம்ம்ம்...//

    அது என்ன இவ்ளோ பெரிய ம்ம்ம்ம்ம் ஜிரா?

    //நீங்களும் சூப்பரா கதி கலக்கீட்டீங்க்க//

    நன்றி!

    //பெனாத்தலார் பாடு திண்டாட்டந்தான்//

    அப்படின்னு நெனச்சிக்கிட்டு இருக்கீங்க! கலங்கப் போவது யாரு-ன்னு பார்க்கத் தானே போறீங்க! :-)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP