Monday, January 14, 2008

பொங்கலோ பொங்கல்! - இந்தியாவுக்குத் தாருங்கள்! (giveindia.org)

நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் என்றாலே தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு தனி மகிழ்ச்சி தானே! தீபாவளிக்குக் கூட இவ்வளவு சிறப்பு தமிழகத்தில் இருக்குமா?
சாதி-மதம், இனம்-பேதம் எதுவும் இல்லாமல்,
இறை நம்பிக்கை இருப்பவரும் சரி, இல்லாதாரும் சரி,
எல்லாரும் கொண்டாடி மகிழும் விழா என்றால் அது பொங்கல் தானே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்

இப்படி வேளாண் மக்களைச் சிறப்பிக்கும் திருநாள் அல்லவா?
மக்களை மட்டுமா? மாக்களையும் அல்லவா சிறப்பிக்கும் நாள்!
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களுக்குக் கூட கொண்டாட்டம் தானே!

பட்டணத்துப் பொங்கல் என்றால் நடிகை ஷ்ரேயா வைக்கும் பொங்கலைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் கொண்டாடி மகிழலாம் :-)
ஆனாலும் கிராமமோ, நகரமோ, வீட்டுப் பொங்கல் என்பது சுவையான ஒன்று!
எங்க ஊர் வாழைப்பந்தலில், ஊரே கூடி, "பெருமா கோயில் வாசலில்" வைக்கும் பொங்கல், இந்தக் காலத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கு!

கரும்புகளை வைத்து நட்டே, பந்தல் போட்டு விடுவார்கள்!
முற்றத்தில் கோலமும், பூசணிப் பூக்களும் சிரிக்கும் சிரிப்பே தனி!
யப்பா, எவ்வளவு பெரிய பானை! அதில் வைக்கும் பொங்கல், ஊரே சேர்ந்து வைக்கும் கூட்டுப் பொங்கல்!
அதிலும் கல்யாணம் ஆகாத பெண்கள் எல்லாம் வந்து பொங்கலைக் கிண்ட வேண்டும்! அப்ப பறக்கும் பாருங்க விசிலு! :-)
கூடவே "பொங்கலோ பொங்கல்" கோஷம்!
சிலர் நைசாக "பெண்களோ பெண்கள்" என்றும் சத்தம் போடுவார்கள்! :-)

6AA7612AA62

பால் கொண்டு வடிச்ச பொங்கலை, காராமணி குழம்பு ஊத்தி, வள்ளிக்கிழங்கு கூட்டு தொட்டு, பூசணி இலையில் வைத்துக் கொடுப்பார்கள்!
ச்ச்ச்ச்ச்....! ஊரில் எந்தச் சாதி வித்தியாசமும் பார்க்காது எல்லாரும் சாப்பிடுவார்கள்! நாயக்கராவட்டும், பள்ளராவட்டும், அய்யராவட்டும்! எல்லாரும் சப்புக் கொட்டிச் சாப்பிடும் காட்சியே காட்சி!

அதக்கப்புறம் தான் அவரவர் வீட்டுக்குப் போய் அவங்கவங்க பொங்கல் வைக்கணும்! சின்னப் பசங்க நாங்க எல்லாம் எப்படா சாயந்திரம் வரும்னு காத்திருப்போம்! ஏன்? மூன்று காரணங்கள்:

1. பொங்கல் இனாம்! ஆனா அதை வாங்கும் முன் பெரியவங்க காலில் வி்ழுகோணும்! அட, இதெல்லாம் பாத்தா முடியுமா? அடுத்த ரெண்டு மாசத்துக்கு உண்டான பாக்கெட் காசை தேத்த இத விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
2. மாட்டுப் பூசை; மாட்டுடன் ஊர் முழுக்க ஜல் ஜல் ஒட்டம்.
3. பெண்கள் எல்லாம் காலையில் பொங்க வைச்ச இடத்தில் ஆடும் குரவைக் கூத்து! கும்மி, மற்றும் பள்ளுப் பாட்டு!


ஹூம்....இதை எல்லாம் அப்படியே நியூயார்க் நகரில் Manhattan நடுரோட்டுல கரும்பு நட்டு, பொங்கல் வச்சா எப்படி இருக்கும்? :-))
ஒவ்வொரு தீபாவாளி, பொங்கலின் போதும் ஊர் ஞாபகம் வருகிறது!
அப்போதெல்லாம், செய்ய நினைக்கும் ஒரே வேலை, அடுத்தவர் முகத்திலும் கொஞ்சம் சிரிப்பைப் பார்க்கலாமே என்பது தான்!

வெளிநாட்டுத் தனிமை தான் நமக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்திருக்கே! மனித உறவுகளும் நேயங்களும் இது போன்ற நல்ல நாட்களில் கண் முன்னே இன்னும் நன்றாக விரிந்து போகும்! சென்ற தீபாவளிக்கு முதியோர் இல்லம் சென்றது போல், பொங்கலுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது கண்ணில் பட்டது இந்த வலைத்தளம்!

giveindia.org (இந்தியாவுக்குத் தாருங்கள்)

நாம் பொதுவாக உதவ நினைக்கும் போதெல்லாம் நம் முன் வரும் கேள்விகள்:

1. நம் உதவி சரியான கரங்களுக்குப் போய்ச் சேருமா?
2. நாம் ஏன் எங்கோ ஒரு முகம் தெரியாத இடத்தில் உதவி செய்ய வேண்டும்? நம்மூருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தரலாமே?
3. நாம் நினைக்கும் நிறுவனம் உண்மையிலேயே நம்பத் தகுந்த ஒன்றா? - வலைப் பதிவு என்றால் செந்தழல் ரவி, பொன்ஸ், ஞான வெட்டியான் ஐயா, என்றென்றும் அன்புடன் பாலா, ரஜினி ராம்கி என்று யாராவது சரிபார்த்துச் சொல்வார்கள்! இந்த நிறுவனங்களை யார் சரி பார்ப்பது?

இந்த giveindia தளம், மேற்கண்ட கேள்விக்கு எல்லாம் நல்ல முறையில் விடையளிக்கிறது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால்:

1. நாம் எந்தத் துறைகளுக்குத் தரலாம் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். Category வைத்துள்ளார்கள்.
குழந்தைகள் நலம், ஊனமுற்றோர், கல்வி, சுற்றுச்சூழல், உடல்நலம், பெண்கள் நலம், இளைஞர் நலம், முதியோர் - இப்படிப் பல!

2. நாம் விரும்பும் இடத்தை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்; சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை - இப்படி! நம்ம ஊர் பட்டியலில் இல்லை என்றால் விருப்பத்தைப் பதிவு செய்யலாம். (advanced search optionஐ பயன்படுத்த வேண்டும்)

3. நாம் அளிக்கும் நிறுவனம் பற்றிய குறிப்புக்கள், பயன்பெறுவோர் விவரங்கள், தணிக்கை அறிக்கைகள், ஆண்டு வரவு செலவு, அங்கு பணிபுரிவோர் விவரங்கள், அவர்களின் சம்பளம், முகவரி, தொலைபேசி எண்கள் என்று அனைத்தும் தருகிறார்கள்! நாம் தனிப்பட்ட முறையிலும் சரி பார்த்துக் கொள்ளலாம்!

4. நாம் உதவி அளித்த பின், மூன்று நான்கு மாதங்கள் கழித்து, பயனாளி யார், அவர்கள் புகைப்படம், அவருக்கு எப்படி உதவியாய் அமைந்தது என்றும் ஒரு அறிக்கை அனுப்புகிறார்கள்! பயனாளியுடன் சில நேரங்களில் பேசவும் வழி செய்து கொடுக்கிறார்கள்!

diagram

சிறு வயதில் அம்மாவும் அப்பாவும், சாமியை வேண்டிக் கொண்டு ஒரு மஞ்சள் துணியில் பணம் முடிந்து கொள்வார்கள்! பின்னர் அதை ஆலயத்திலோ இல்லை தர்ம காரியங்களுக்கோ தந்து விடுவார்கள்!
இன்று தொலை தூரத்தில் இருக்கும் நமக்கு, இது போல் முடிந்து கொள்ள, இத்தளமும் பயன்படலாம்!

உதவுவது அப்புறம்! ஆனால் வலைத்தளத்தைப் போய் ஒரு எட்டு பார்த்து விட்டாவது வரலாமே!

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்!
இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள்!சென்ற ஆண்டு தைப்பொங்கல் போது இட்ட இடுகையின் மீள்பதிவு இது!
இந்த ஆண்டுப் பொங்கலுக்கும் ஊருக்குப் போயி வந்தேங்க! இந்த விளம்பரத்தின் வாயிலாக! :-)
கடைசியில் அந்த அம்மா, அவங்க பையனுக்குத் திருஷ்டி கழிக்க நெட்டி உடைப்பது.....எனக்கு வீட்டு ஞாபகம் ரொம்பவே வந்திரிச்சி! கண்ணோரம் ஆனந்த ஈரம்!

19 comments:

 1. ஏசியன் பெயிண்ட் ஏஜென்சி எடுத்து இருக்கிங்களா ?

  ReplyDelete
 2. படத்தில் வெற்றிலைக்கு பக்கத்தில் என்ன அவ்வளவு பெரிய இலை?பார்த்ததே இல்லை.
  நல்ல சுட்டியை காண்பித்து கொடுத்துள்ளீர்கள்,சமயம் வரும்போது கொடுத்திடுவோம்.

  ReplyDelete
 3. ஏசியன் பெயிண்ட்ஸ் உண்மையிலேயே அயல் நாட்டில் இருப்பவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் படம். தாய் தந்தையர் வாசலிலேயே காத்திருப்பது உண்மை. வலைத்தளம் செல்கிறேன்.

  ReplyDelete
 4. பொங்கலோ பொங்கல்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்.

  ReplyDelete
 7. //கடைசியில் அந்த அம்மா, அவங்க பையனுக்குத் திருஷ்டி கழிக்க நெட்டி உடைப்பது.....எனக்கு வீட்டு ஞாபகம் ரொம்பவே வந்திரிச்சி! கண்ணோரம் ஆனந்த ஈரம்!//

  எங்க கண்ணிலும் ஈரம், ஆனால் ஆனந்த ஈரம்னு சொல்ல முடியலை! :(
  நீங்க குறிப்பிடும் வலைத்தளம் சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 8. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும்!

  ReplyDelete
 9. //கோவி.கண்ணன் said...
  ஏசியன் பெயிண்ட் ஏஜென்சி எடுத்து இருக்கிங்களா ?//

  பொங்கல் வாழ்த்துக்கள் கோவி அண்ணா! நீங்க சொன்னீங்கன்னா எடுத்துறலாம்! :-)

  ReplyDelete
 10. //வடுவூர் குமார் said...
  படத்தில் வெற்றிலைக்கு பக்கத்தில் என்ன அவ்வளவு பெரிய இலை?பார்த்ததே இல்லை//

  பொங்கல் வாழ்த்துக்கள் குமாரண்ணா!
  அது மந்தாரை இலை!
  சொர சொர-ன்னு இருக்கும் மேலாக்க! ஒரு வகை பூசணி இலை!
  அதுல பொங்கல் வச்சி, காராமணி ஊத்திச் சூரியனுக்குக் காமிப்பாங்க!
  வழிஞ்சி ஓடாம அப்படியே நிக்கும்!

  //நல்ல சுட்டியை காண்பித்து கொடுத்துள்ளீர்கள்,சமயம் வரும்போது கொடுத்திடுவோம்//

  நன்றி!
  அதுல தேடிப் பாத்தா, உங்க ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் நிறுவனம் கூடத் தெரியலாம்!

  ReplyDelete
 11. //cheena (சீனா) said...
  அயல் நாட்டில் இருப்பவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் படம். தாய் தந்தையர் வாசலிலேயே காத்திருப்பது உண்மை//

  அதைப் பார்த்தவுடன் அம்மா ஞாபகம் ரொம்ப வந்திடுச்சி, சீனா சார்! அவங்க கிட்டத்தட்ட அப்படித் தான் வாசலில் நிப்பாங்க, மழை வந்தாக் கூட! அதுக்குத் தான் எங்க இருந்தாலும் எப்போ வருவேன்-னு ஒரு ஃபோன் போட்டுறது!

  இயற்கையான நெகிழும் விளம்பரம்!

  ReplyDelete
 12. //பாரதிய நவீன இளவரசன் said...
  பொங்கலோ பொங்கல்!//

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பாரதிய நவீன இளவரசன் !

  //திகழ்மிளிர் said...
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//

  உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் வாழ்த்து திகழ்மிளிர்!

  ReplyDelete
 13. //மதுரையம்பதி said...
  பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்//

  மெளலி அண்ணா! நன்றி! உங்கள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்து!

  ReplyDelete
 14. //கீதா சாம்பசிவம் said...
  எங்க கண்ணிலும் ஈரம், ஆனால் ஆனந்த ஈரம்னு சொல்ல முடியலை! :(//

  ஹூம்! என்ன விசயம் கீதாம்மா?
  விளம்பரத்தைத் தப்பா போட்டுட்டேனா என்ன?

  //நீங்க குறிப்பிடும் வலைத்தளம் சென்று பார்க்கிறேன்//

  நன்றி! அவசியம் பாருங்க!

  பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் இனிய குடும்பத்தார்க்கும்!

  ReplyDelete
 15. giveindia.org என்ற பொங்கல் இனாம்
  தந்ததிர்க்கு மிக்க நன்றி
  அன்புடன்
  பி.ரா

  ReplyDelete
 16. நல்லா எழுதி இருக்கீங்க

  ReplyDelete
 17. //பொங்கலோ பொங்கல்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!//
  ரிப்பீட்டு!

  ReplyDelete
 18. Belated Pongal Vazhthukkal Ravi.
  Nice ad. Naan indha pongalai Kaveri karayil thala yathirai seydhu kondadinen :)
  Pongal andru Ranganathar & Thiruvanaikaval darisanam.
  Shobha

  ReplyDelete
 19. Nice ad . music raheman?

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP