Sunday, January 14, 2007

பொங்கல் - இந்தியாவுக்குத் தாருங்கள்! (giveindia.org)

நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் என்றாலே தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு தனி மகிழ்ச்சி தானே! தீபாவளிக்குக் கூட இவ்வளவு சிறப்பு தமிழகத்தில் இருக்குமா?
சாதி-மதம், இனம்-பேதம் எதுவும் இல்லாமல், இறை நம்பிக்கை இருப்பவரும் சரி, இல்லாதாரும் சரி, எல்லாரும் கொண்டாடி மகிழும் விழா என்றால் அது பொங்கல் தானே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்

இப்படி வேளாண் மக்களைச் சிறப்பிக்கும் திருநாள் அல்லவா?
மக்களை மட்டுமா? மாக்களையும், சிறப்பிக்கும் நாள்!
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களுக்குக் கூட கொண்டாட்டம் தானே!

பட்டணத்துப் பொங்கல் என்றால் தொலைக்காட்சியிலும், நடிகை ஸ்ரேயா வைக்கும் பொங்கலைப் பத்திரிகைகளிலும் கொண்டாடி மகிழலாம் :-)
ஆனாலும் கிராமமோ, நகரமோ, வீட்டுப் பொங்கல் என்பது சுவையான ஒன்று!
எங்க ஊர் வாழைப்பந்தலில், ஊரே கூடி, "பெருமா கோயில் வாசலில்" வைக்கும் பொங்கல், இந்தக் காலத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கு!

கரும்புகளை வைத்து நட்டே, பந்தல் போட்டு விடுவார்கள்!
முற்றத்தில் கோலமும், பூசணிப் பூக்களும் சிரிக்கும் சிரிப்பே தனி!
யப்பா, எவ்வளவு பெரிய பானை! அதில் வைக்கும் பொங்கல், ஊரே சேர்ந்து வைக்கும் கூட்டுப் பொங்கல்!
அதிலும் கல்யாணம் ஆகாத பெண்கள் எல்லாம் வந்து பொங்கலைக் கிண்ட வேண்டும்! அப்ப பறக்கும் பாருங்க விசிலு! :-)
கூடவே "பொங்கலோ பொங்கல்" கோஷம்!
சிலர் நைசாக "பெண்களோ பெண்கள்" என்றும் சத்தம் போடுவார்கள்! :-)

6AA7612AA62


பால் கொண்டு வடிச்ச பொங்கலை, காராமணி குழம்பு ஊத்தி, வள்ளிக்கிழங்கு கூட்டு தொட்டு, பூசணி இலையில் வைத்துக் கொடுப்பார்கள்!
ச்ச்ச்ச்ச்....! ஊரில் எந்தச் சாதி வித்தியாசமும் பார்க்காது எல்லாரும் சாப்பிடுவார்கள்! நாயக்கராவட்டும், பள்ளராவட்டும், அய்யராவட்டும்! எல்லாரும் சப்புக் கொட்டிச் சாப்பிடும் காட்சியே காட்சி!

அதக்கப்புறம் தான் அவரவர் வீட்டுக்குப் போய் அவங்கவங்க பொங்கல் வைக்கணும்! சின்னப் பசங்க நாங்க எல்லாம் எப்படா சாயந்திரம் வரும்னு காத்திருப்போம்! ஏன்? மூன்று காரணங்கள்:

1. பொங்கல் இனாம்! ஆனா அதை வாங்கும் முன் பெரியவங்க காலில் வி்ழுகோணும்! அட, இதெல்லாம் பாத்தா முடியுமா? அடுத்த ரெண்டு மாசத்துக்கு உண்டான பாக்கெட் காசை தேத்த இத விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
2. மாட்டுப் பூசை; மாட்டுடன் ஊர் முழுக்க ஜல் ஜல் ஒட்டம்.
3. பெண்கள் எல்லாம் காலையில் பொங்க வைச்ச இடத்தில் ஆடும் குரவைக் கூத்து! கும்மி, மற்றும் பள்ளுப் பாட்டு!


ஹூம்....இதை எல்லாம் Manhattanஇல் நடுரோட்டுல பண்ணா எப்படி இருக்கும்? :-))
ஒவ்வொரு தீபாவாளி, பொங்கலின் போதும் ஊர் ஞாபகம் வருகிறது!
அப்போதெல்லாம், செய்ய நினைக்கும் ஒரே வேலை, அடுத்தவர் முகத்திலும் கொஞ்சம் சிரிப்பைப் பார்க்கலாமே என்பது தான்!

வெளிநாட்டுத் தனிமை தான் நமக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்திருக்கே! மனித உறவுகளும் நேயங்களும் இது போன்ற நல்ல நாட்களில் கண் முன்னே இன்னும் நன்றாக விரிந்து போகும்! சென்ற தீபாவளிக்கு முதியோர் இல்லம் சென்றது போல், பொங்கலுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது கண்ணில் பட்டது இந்த வலைத்தளம்!

giveindia.org (இந்தியாவுக்குத் தாருங்கள்)

நாம் பொதுவாக உதவ நினைக்கும் போதெல்லாம் நம் முன் வரும் கேள்விகள்:

1. நம் உதவி சரியான கரங்களுக்குப் போய்ச் சேருமா?
2. நாம் ஏன் எங்கோ ஒரு முகம் தெரியாத இடத்தில் உதவி செய்ய வேண்டும்? நம்மூருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தரலாமே?
3. நாம் நினைக்கும் நிறுவனம் உண்மையிலேயே நம்பத் தகுந்த ஒன்றா? - வலைப் பதிவு என்றால் செந்தழல் ரவி, பொன்ஸ், ஞான வெட்டியான் ஐயா, என்றென்றும் அன்புடன் பாலா, ரஜினி ராம்கி என்று யாராவது சரிபார்த்துச் சொல்வார்கள்! இந்த நிறுவனங்களை யார் சரி பார்ப்பது?

இந்த giveindia தளம், மேற்கண்ட கேள்விக்கு எல்லாம் நல்ல முறையில் விடையளிக்கிறது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால்:

1. நாம் எந்தத் துறைகளுக்குத் தரலாம் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். Category வைத்துள்ளார்கள்.
குழந்தைகள் நலம், ஊனமுற்றோர், கல்வி, சுற்றுச்சூழல், உடல்நலம், பெண்கள் நலம், இளைஞர் நலம், முதியோர் - இப்படிப் பல!

2. நாம் விரும்பும் இடத்தை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்; சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை - இப்படி! நம்ம ஊர் பட்டியலில் இல்லை என்றால் விருப்பத்தைப் பதிவு செய்யலாம். (advanced search optionஐ பயன்படுத்த வேண்டும்)

3. நாம் அளிக்கும் நிறுவனம் பற்றிய குறிப்புக்கள், பயன்பெறுவோர் விவரங்கள், தணிக்கை அறிக்கைகள், ஆண்டு வரவு செலவு, அங்கு பணிபுரிவோர் விவரங்கள், அவர்களின் சம்பளம், முகவரி, தொலைபேசி எண்கள் என்று அனைத்தும் தருகிறார்கள்! நாம் தனிப்பட்ட முறையிலும் சரி பார்த்துக் கொள்ளலாம்!

4. நாம் உதவி அளித்த பின், மூன்று நான்கு மாதங்கள் கழித்து, பயனாளி யார், அவர்கள் புகைப்படம், அவருக்கு எப்படி உதவியாய் அமைந்தது என்றும் ஒரு அறிக்கை அனுப்புகிறார்கள்! பயனாளியுடன் சில நேரங்களில் பேசவும் வழி செய்து கொடுக்கிறார்கள்!

diagram

சிறு வயதில் அம்மாவும் அப்பாவும், சாமியை வேண்டிக் கொண்டு ஒரு மஞ்சள் துணியில் பணம் முடிந்து கொள்வார்கள்! பின்னர் அதை ஆலயத்திலோ இல்லை தர்ம காரியங்களுக்கோ தந்து விடுவார்கள்!
இன்று தொலை தூரத்தில் இருக்கும் நமக்கு, இது போல் முடிந்து கொள்ள, இத்தளமும் பயன்படலாம்!

உதவுவது அப்புறம்! ஆனால் வலைத்தளத்தைப் போய் ஒரு எட்டு பார்த்து விட்டாவது வரலாமே!

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்!
இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள்!

19 comments:

  1. முதல்ல மேட்டருக்கு வருவோம்..
    முதலில் கொஞ்சம் BOLD போட்டிருப்பது, அது சூப்பர்.
    கொடுக்கும் போது நீங்க சொன்னதெல்லாம் என் மனதிலும் ஓடும்..தெரிந்தவர்கள் என்றால் முடிந்த அளவில் கொடுக்கலாம்.
    இங்கு ஒரு நிறுவனம் அடுத்த பல ஆண்டுகளுக்கு வேண்டிய பணத்தை சேமித்து வதைத்திருப்பதை நீதிமன்ற விசாராணை செய்துவருகிறது.இப்படி நடக்கும் போது கொஞ்சம் யோசிக்கவும் வேண்டியுள்ளது.

    ReplyDelete
  2. sir,

    ungaludiya aadangam mutrilum unmai.

    YEnekae aasai varum pozhuthu uurai sendru parpathu KUDHIRAIKOMBAga ullathu.

    Still,thro' ur blog u are virtually visiting ur place and also taking us with u.THANKS.

    HAPPY PONGAL.

    sundaram

    ReplyDelete
  3. நன்றி குமார் சார்!
    பொங்கல் வாழ்த்துக்கள்!

    //இங்கு ஒரு நிறுவனம் அடுத்த பல ஆண்டுகளுக்கு வேண்டிய பணத்தை சேமித்து வதைத்திருப்பதை நீதிமன்ற விசாராணை செய்துவருகிறது.இப்படி நடக்கும் போது கொஞ்சம் யோசிக்கவும் வேண்டியுள்ளது//

    ஆமாங்க! அதானால் தான் இவர்கள் மூன்று மாதங்களுக்குள் நேரடிப் பயனாளரிடம் இருந்து ரிப்போர்ட் அனுப்புகிறார்கள்!

    ReplyDelete
  4. //Anonymous said...
    Still,thro' ur blog u are virtually visiting ur place and also taking us with u.//

    நன்றி சுந்தரம் சார்!
    பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ஊர்ப்பக்கத்துல பொங்கல் மண்பானைல வெக்கிறவங்கள் உண்டு. இருந்தாலும் பாதுகாப்பா வெங்கலப் பானை ஏத்துறவங்களும் உண்டு. புதுசா பொங்கல் வைக்கிறங்க கிண்டுறேன் பேர்வழீன்னு மண்பானையை டொக்குன்னு ஒடச்சிறக்கூடாது. அதுதான் தெறமை. தண்ணி நொறைநொறையா பொங்கி வரும் போது அரிசியப் போட்டு பருப்பப் போட்டு.....நல்ல வெந்து வர்ரப்போ வெல்லத்த நுணுக்கிப் போட்டு கிண்டி பெரிய சட்டி வெச்சி மூடி வெச்சிருவாங்க.

    பொங்கலுக்குக் கண்டிப்பா இருக்க வேண்டிய இன்னொரு பக்குவம் மொச்சைக் குழம்பு. மொச்சை இல்லாப் பொங்கல் மேல் இச்சை இல்லை என்று சொல்லும் அளவிற்குப் பொங்கலுக்கு மொச்சை வேகும். அடடா! நாங்க படிக்கிறப்பல்லாம் அம்மா வீட்டு வாசல்ல பொங்கல் வெப்பாங்க. இப்ப அப்பார்ட்மெண்டு வாசல்ல பொங்க வெச்சா...அவ்வளவுதான். குக்கர் பொங்கல்தான்.

    அப்புறம் கரும்பு பனங்கெழங்கு..ம்ம்ம்ம்...ஐயா....ஊர்ப்பக்கம் யாராவது இருந்தீங்கன்னா ஒரு கட்டுப் பனங்கெழங்கு வாங்கி சென்னைக்காவது குடுத்து விடுங்க. அங்கிருந்து நான் வாங்கிக்கிறேன். :-)

    கரிநாளும் கறிநாளும் எங்களுக்கு. நேத்து என்னவோ அம்மா மாட்டுப் பொங்கலையே கறிநாளாக்கீட்டாங்க. :-)

    ReplyDelete
  6. giveindia.org பற்றிய தகவலுக்கு நன்றி கண்ணபிரான்.

    ஜிரா,

    //ஊர்ப்பக்கத்துல பொங்கல் மண்பானைல வெக்கிறவங்கள் உண்டு. இருந்தாலும் பாதுகாப்பா வெங்கலப் பானை ஏத்துறவங்களும் உண்டு//

    ஊர்ல எங்க வீட்டுலயெல்லாம் (பாதுகாப்பா) வெங்கலப் பானை தான் :-) ஆனா இப்பவும் கண்டிசனா விறகடுப்பு தான்.

    //இப்ப அப்பார்ட்மெண்டு வாசல்ல பொங்க வெச்சா...அவ்வளவுதான். குக்கர் பொங்கல்தான்.//

    எங்க ஊர்ப்பக்கம் எப்பவுமே வாசல்ல வைக்கிறதில்ல. நட்ட நடு ஹாலில் கோலம் போட்டு (அந்தக் கோலத்துக்குப் பேரே நடுவீட்டுக் கோலம் தான்!) அது மேல மண் போட்டு செங்கல் tile வச்சு விறகடுப்பு வச்சு பொங்கப்பானை வைப்பாங்க. வீடு பூரா ஜன்னலைத் திறந்துவிட்டு, புகை வெளியேற exhaust-க்கு மேசை விசிறியெல்லாம் வெளிப்புறமாத் திருப்பி வச்சு.. இப்படி ஏற்பாடெல்லாம் பலமா இருக்கும். ஒரே வீட்டில் எத்தனை குடும்பங்களோ அத்தனை பொங்கல்கள். உதாரணத்துக்கு, பெற்றோருடன் கூட்டுக் குடும்பத்தில் திருமணமான 2 பசங்க இருந்தா அவங்களுக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் 3 விறகடுப்பு, 3 பொங்கல்.

    //பனங்கெழங்கு..ம்ம்ம்ம்...//

    என்னோட favorite கூட :-)

    ReplyDelete
  7. //G.Ragavan said...
    புதுசா பொங்கல் வைக்கிறங்க கிண்டுறேன் பேர்வழீன்னு மண்பானையை டொக்குன்னு ஒடச்சிறக்கூடாது. அதுதான் தெறமை.//

    அப்படிப் போடுங்க ஜிரா!
    அதான் எங்கூருல, கூட்டுப் பொங்க வைக்கும் போது, கல்யாணமாகாத பெண்களைக் கிண்டச் சொல்லுறாங்க! பானையை ஒடைக்காம கிண்டற டெஸ்ட் :-))

    //பொங்கலுக்குக் கண்டிப்பா இருக்க வேண்டிய இன்னொரு பக்குவம் மொச்சைக் குழம்பு.//

    மொச்சையில் இச்சை கொண்ட பச்சை மயிலார் நண்பரே ஜிரா,
    காராமணி கிடையாதுங்களா? நல்லா பேருக்கேத்தா மாதிரி, பால் பொங்கலுக்குக் காரமா இருக்கும்!

    //ஒரு கட்டுப் பனங்கெழங்கு வாங்கி சென்னைக்காவது குடுத்து விடுங்க. அங்கிருந்து நான் வாங்கிக்கிறேன். :-)//

    ஓ, நியூயார்க் பனி வெளிகளில் பனங்கிழங்கு ரொம்ப சல்லீசா கிடைக்குது! அதுவும் கனமா, வெடிச்ச பனங்கிழங்கு! ஒரு கூடை அனுப்பி வைக்கிறேன்! :-)

    //நேத்து என்னவோ அம்மா மாட்டுப் பொங்கலையே கறிநாளாக்கீட்டாங்க.//

    மாடு வந்துச்சுங்களா? அதுக்கு பொங்கல் ஏதாச்சும் கொடுத்தீங்களா? இல்ல அம்மா செய்த கறியும் பொங்கலும் நீங்களே காலி பண்ணிட்டீங்களா? :-))

    ReplyDelete
  8. //சேதுக்கரசி said...
    giveindia.org பற்றிய தகவலுக்கு நன்றி கண்ணபிரான்.//

    நன்றி சேதுக்கரசி!

    //உதாரணத்துக்கு, பெற்றோருடன் கூட்டுக் குடும்பத்தில் திருமணமான 2 பசங்க இருந்தா அவங்களுக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் 3 விறகடுப்பு, 3 பொங்கல்.//

    எல்லார் கைவண்ணத்துப் பொங்கலும் கிடைக்கும்ன்னு சொல்லுங்க!

    ReplyDelete
  9. //நியூயார்க் பனி வெளிகளில் பனங்கிழங்கு ரொம்ப சல்லீசா கிடைக்குது!//

    அட! அப்படியா? அதோட (ஆங்கில) பேரைச் சொல்லுங்களேன், நானும் எங்கூரு குரோசரி(அதாங்க grocery :))யில் தேடிப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. //சேதுக்கரசி said:
    அட! அப்படியா? அதோட (ஆங்கில) பேரைச் சொல்லுங்களேன், நானும் எங்கூரு குரோசரி(அதாங்க grocery :))யில் தேடிப் பார்க்கிறேன்.//

    அச்சச்சோ, நீங்க வேற! தேடீ கீடீப் போயிடாதீங்க! ஒரு சிரிப்பான் போட்டேனே பாக்கலையா?
    பனங்கிழங்கா?
    பனிக்கிழங்கு தான் கிடைக்கும்! :-))

    ReplyDelete
  11. //அச்சச்சோ, நீங்க வேற! தேடீ கீடீப் போயிடாதீங்க! ஒரு சிரிப்பான் போட்டேனே பாக்கலையா?//

    அட ராமா (கண்ணா!) எப்ரல் முதல் தேதிக்கு இன்னும் ரெண்டரை மாசம் இருக்குதுங்க!! அதுக்குள்ள இப்படிப் பண்ணீட்டீங்களே :-)))

    ReplyDelete
  12. Ravi Shanker,

    Excellenet Post!!

    Very Nice!!

    Thanks

    ReplyDelete
  13. ரவி,
    லேட்டா வரேன்.
    பொங்கல் பதிவில் பொங்கலே போட்டுவிட்டீர்கள்.

    தைப்பதிவுகள் வேண்டாமா?

    ReplyDelete
  14. இன்னும்ம் பொங்கல் சாப்பிட்டுட்டு இருக்கீங்க போல் இருக்கு, ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு திறந்தது. வந்து பார்த்தா ஆளையே காணோமே? அதான் மெயிலும் வரலை, மயிலும் வரலையா?:D உடம்பு நல்லா இருக்கீங்களா?

    ReplyDelete
  15. //Sivabalan said...
    Ravi Shanker,
    Excellenet Post!!
    Very Nice!!
    Thanks//

    நன்றி சிபா.

    ReplyDelete
  16. //வல்லிசிம்ஹன் said...
    ரவி,
    லேட்டா வரேன்.//

    வல்லியம்மா; உங்கள் தனி மடல் இன்று தான் கண்டேன்!
    நானும் மாதவிப் பந்தலுக்கு லேட்டாத் தான் வரேன்! :-)

    //தைப்பதிவுகள் வேண்டாமா?//
    வேண்டும்; வேண்டும்!

    ReplyDelete
  17. //கீதா சாம்பசிவம் said...
    உடம்பு நல்லா இருக்கீங்களா?//

    நன்றி கீதாம்மா! நலமே!

    //இன்னும்ம் பொங்கல் சாப்பிட்டுட்டு இருக்கீங்க போல் இருக்கு//

    :-)
    அட நீங்க வேறேம்மா!
    அலவலகத்தில் நம்மள பொங்கினு இருக்காங்க! இரு வாரங்களாக மிகவும் பணி மிகுதி!
    அதனால் தான் தமிழ் மணம் பக்கம் தலை காட்ட முடியலை!

    சுப்ரபாதப் பதிவுகள் மீண்டும் தொடங்க வேண்டும்!

    அலுவல் நிமித்தமாகவும் இந்திய விஜயம் வேறு ஒன்று உள்ளது! தங்களையும் காண வரலாமா? :-))

    ReplyDelete
  18. அப்பாடா! ஒருபடியா திரும்பி வந்தச்சா? ரொம்ப சந்தோசம்.
    இனி, உங்க பதிவு மழை பொழியப் போகிறது. பதிவு கண்டதுமே சந்தோசம்.
    ம்......ம் வெள்த்துக் கட்டுங்க, நாங்க ரெடி படிக்க.
    நன்றி

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP