Sunday, January 07, 2007

திருவையாத்துச் சாமீ ஆராதனைங்களா? - எந்தரோ மகானுபாவுலு!

சுந்தரத் தெலுங்கு என்று ஒரு காலத்தில் பாடி வைத்தான் பாரதி. தெலுங்கு தெரியுமோ தெரியாதோ, ஆனால் "எந்தரோ மகானுபாவுலு" என்ற சொற்றொடர் மட்டும் நம்மில் பல பேருக்குத் தெரியும்!
எந்தரோ மகானுபாவுலு - அப்படின்னா என்ன?

இசை உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரின் அஞ்சலி, ஆராதனை இன்று! (Jan 8 2007)
அவர் பாட்டுடன் ராகமாய், இறைவனுடன் கலந்த நாள்; புஷ்ய பகுள பஞ்சமி.

தமிழிசை, இந்துஸ்தானி, கர்நாடக இசை, மெல்லிசை என்று இப்படி எந்தத் துறையில் இருந்தாலும் எல்லாரும் மதித்துப் போற்றி வழிபடும் ஒருவர் ஸ்ரீ தியாகராஜர். அவருக்கும் முன்பாகவே பல கலைஞர்கள் இசையில் கொடி கட்டிப் பறந்துள்ளனர். ஆனால் யாருக்கும் இப்படி ஒரு உன்னத நிலை அமையவில்லை! ஏன்?

உள்ளார்ந்த பக்தியை இசைப்பாடல்களாக வெளிப்படுத்தியவர்.
அவர் இசையில் தான் எத்தனை எத்தனை புதுமைகள் செய்தார்!
எவ்வளவு கஷ்டமான ராகங்களையும், தன் இனிய மெட்டால் எத்தனை எளிமை ஆக்கினார்!

115858699_771cce968c

பணத்தின் மு்ன்னோ, அரசாங்க ஆணையின் முன்னோ, பெரிய மனிதர்களின் சிபாரிசின் முன்னோ, பளபள சரிகை வேட்டிகளின் முன்னோ, பணிந்து வளைந்தாரா இவர்? இல்லையே! மெல்லிய தேகத்தில் தான் எத்தனை வல்லிய மன உறுதி.

நாம் எல்லாம் இன்று தானே, தினம் ஒரு பதிவு போடுகிறோம்! ஆனால் தியாகராஜர் அன்றே தினம் ஒரு பாடல், கவிதை எழுதியவர்!
தேர்ந்த வித்வான்கள் எல்லாம் அவர் பாடல்களை அலசி அராய்ந்து சாரமாய்ப் பொழிய முடியும்.
இல்லை என்றாலும் அந்நியன் படக் காட்சிகள் போல் கிண்டல், நையாண்டி செய்தும் மகிழலாம்! :-)
ஆனால் கிராமத்தில் வாழும் சாதாரண மக்கள் அவர் பாடல்களைப் பாடி மகிழ்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கூட்டமில்லாத நாட்களில் திருவையாறு சென்று பாருங்கள், தெரியும்!
சுத்துப் பட்டு கிராமங்கள், சுந்தர பெருமாள் கோவில், கபித்தலம், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் இன்னும் பல இடங்களில் இருந்தும் கிராமத்து மக்கள் யாராச்சும் வருவார்கள்; வந்துக் காவிரிக் கரையோரமாக உட்காருவார்கள்.
"நீ தய ராதா", "சீதம்மா, மாயம்மா", "ரா ரா மா இண்டி", என்று ஏதாச்சும் ஒரு எளிமையான பாட்டை நீட்டி முழக்கிப் பாடிக் கொண்டிருப்பார்கள்!
அவர்களிடம் போய் இது என்ன ராகம் என்றெல்லாம் கேட்டு வைக்கக் கூடாது!:-)

கச்சேரிகளில் கூட இப்படி ரசித்துக் கேட்டிருக்க மாட்டீர்கள்! ஆனால் இங்கே சர்வ சாதாரணமாக, "Casual " என்று சொல்கிறோமே, அது போலப் பாடிக் கொண்டிருப்பார்கள்! அவர்கள் வீட்டு விசேடங்களுக்குச் சென்று பாருங்கள்.
நலங்கு, ஆரத்தி, அழைப்பு இப்படி எல்லாத்துக்கும் இவர் பாட்டு தான். "சீதா கல்யாண வைபோகமே" என்று பாடாவிட்டாலும், வாய்விட்டு சொல்லாதவர் தான் யார்!

இப்படி மக்கள் கலைஞராக இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் தியாகராஜர்!
காவிரிக்கரைச் சாமீங்களா, திருவையாத்துச் சாமீங்களா என்று தான் அவர்கள் எல்லாரும் பாசத்துடன் கேட்கிறார்கள்!

நம் அபிமானத்தால் இறைவனைப் பீடத்தில் ஏற்றினாலும் அவன் எங்கும் பரந்து விரிந்து இருக்கிறான் அல்லவா?
அதைப் போலேவே தியாகராஜரின் பக்தியும் இசையும், கச்சேரிகளையும் தாண்டி நிற்கும்;
எங்கும் பரந்து விரிந்து, எளிய மக்களின் மனங்களில் நிழலாடிக் கொண்டே இருக்கும்!


எந்தரோ மகானுபாவுலு! = அன்பால் உயர்ந்த பக்தர்கள் தான் எத்தனை பேர் இந்த உலகத்தில்? அவர்களுக்கு முன்னால் இந்த அடியேன் எங்கே? (எனக்கு மட்டும் ஏன் இந்த போலி அகங்காரம், திமிர் எல்லாம்?)
அந்தரிகி வந்தனமுலு! = அவர்கள் அத்தனை பேரையும் அடியேன் வணங்குகிறேன்!

இது மிகவும் முக்கியமான பாடல்! பணிவு ஒன்றையே பண்பாகக் கொண்ட தொண்டர்களின் பெருமையைப் பற்றிப் பாடும் பாடல் அல்லவா?
கீழே அவருடைய ஆராதனையில், "எந்தரோ மகானுபாவுலு" என்று பாடப்படும் காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

பழைய DD Recording என்று நினைக்கிறேன்.
அன்றைய பல முன்னணி இசைக் கலைஞர்கள், மற்றும் சினிமாக் கலைஞர்கள் தெரிகிறார்கள். யார் யார் என்று நீங்க தான் பார்த்துச் சொல்லணும்! :-)
ஒரு சிலர் என்ன பட்டுப்புடைவை, என்ன அட்டிகை, என்ன நகை, என்ன மோதிரம் தெரிகிறது என்றும் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்வதையும் பார்த்திருக்கிறேன்:-)

ஆனால் அந்தக் கூட்டத்திலும் முகம் தெரியாத ஒருவர் உட்கார்ந்து ஆழ்ந்து பாடிக் கொண்டிருக்கலாம்! அவருக்கும் நம் வந்தனங்கள்!!
கடைசியில் மிக முக்கியமான ஒரு பத்திக்கு மட்டும் விளக்கம் தந்துள்ளேன்; அதில் பலப்பல பக்தர்களையும் வரிசைப்படுத்திப் பாடி வணங்குகிறார் தியாகராஜர்! நாமும் வணங்குவோம்!!

பகுதி-1


பகுதி-2


வீடியோவிற்கு நன்றி: CoolCrave


7 ஆம் சரணம்:
பரம பாகவத மௌனி வர சசி
விபாகர சனக சனந்தன
திகீ்ச சுர கிம்புருஷ
கனகக சிபு சுத நாரத தும்புரு

பவன சுனு பால சந்திர தர சுக
சரோஜ பவபூ சுரவருலு

பரம பாவனுலு கனுலு சாச்வதுலு
கமல பவ சுகமு சதானு பவுலு காக

(எந்தரோ மகானுபாவுலு)

பரம பாகவத = பெரும் பக்தர்கள், அடியவர்கள்
மௌனி = முனிவர்கள்
வர சசி = அழகான் சந்திரன்
விபாகர = சூரியன்
சனக சனந்தன = சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் குழந்தை ரிஷிகள்

திகீ்ச = திக்+ஈச = அஷ்டதிக் பாலகர்கள்; எண் திசைக் காவலர்கள்
சுர = முப்பத்து முக்கோடி தேவர்கள்
கிம்புருஷ = கிம்புருட பிரதேசத்தில் வாழும் இசை ஞானிகள்
கனகக சிபு சுத = கசிபுவின் மகனான பிரகலாதன்
நாரத தும்புரு = நாரதர் மற்றும் தும்புரு ஆகிய ரிஷிகள்

பவன சுனு = பவன (வாயு) புத்திரன்; அன்பன் ஆஞ்சநேயன்
பாலச்சந்திர தர = பாலச் சந்திரனைப் பிறை சூடிய இறைவன், சிவபெருமான்
சுக = சுகப் பிரம்ம மகரிஷி
சரோஜ பவ = தாமரையில் தோன்றிய பிரம்ம தேவர்
பூ சுரவருலு = பூ உலகைக் காக்கும் தன்னலமில்லாத் தலைவர்கள்

பரம பாவனுலு = பரிசுத்தமான நல் இதயம் கொண்டவர்கள்
கனுலு சாச்வதுலு = நித்ய சிரஞ்சீவிகள்
கமல பவ சுகமு = இறைவன் திருவடித் தாமரைச் சுகத்தை
சதா அனுபவுலு காக = எப்போதும் அனுபவித்து, ஆழந்து கொண்டுள்ள
இன்னும் எத்தனையோ முகம் தெரியாத பக்தர்கள்!
இப்படி, எந்தரோ மகானுபாவுலு, அவர்கள் அந்தரிகி வந்தனமுலு!

61 comments:

  1. எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு.

    எத்தனையோ மகான்கள் இந்த ஞானபூமியில் அத்தனை பேருக்கும் வணக்கங்கள்.

    ஒரு முறை பாடலைப் பார்த்தேன் / கேட்டேன் இரவிசங்கர். இன்னொரு முறை கேட்கவேண்டும்.

    ReplyDelete
  2. "மெல்லிய தேகத்தில் தான் எத்தனை வல்லிய மன உறுதி"

    இழக்க ஒன்றும் இல்லை என்கிற போது மன வலிமை தன்னால் வரும்.
    கொடுக்க தான் நிறைய இருக்கிறதே அதான் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

    ReplyDelete
  3. இசை இன்பம் வலைப்பூவிற்கு ஒரு நல்ல முன்னோட்டம். பொருள் சொல்லிக் கொடுத்தால் தியாகப்பிரம்மத்தின் பாடல்களை நன்கு இரசிக்க முடியும் என்று எண்ணுகிறேன். நீங்கள் பொருள் சொல்லியிருக்கிற ஒரு சரணமே இவ்வளவு ஆழ்ந்த பொருள் கொண்டதாக இருக்கிறதே.

    யோகன் ஐயா பல நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் தொடங்குங்கள்.

    ReplyDelete
  4. இன்னுமொரு கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்.

    அதிலும், அந்த ஸ்வரங்கள் வரும் நேரம்....!
    ஆஹா! அத்தனையும் சுகானுபவம்!

    அனைவருக்கும் வந்தனங்கள்!

    ReplyDelete
  5. //அன்றைய பல முன்னணி இசைக் கலைஞர்கள், மற்றும் சினிமாக் கலைஞர்கள் தெரிகிறார்கள். யார் யார் என்று நீங்க தான் பார்த்துச் சொல்லணும்! :-) //

    எனக்குத் தெரிந்து: M.S. அம்மா, மகாராஜபுரம், எம்.டி.ராமநாதன், டி.கே.கோபாலகிருஷ்ணன், மதுரை கிருஷ்ணன் (இவர் அரியக்குடியின் சிஷ்யர்), செம்மங்குடி, குன்னக்குடி.

    நடிகை: பானுமதி

    ஜப்பானில் பீத்தோவனின் 9 சிம்பொனியை இப்படி 6000 கலைஞர்கள் சேர்த்து இசைக்கிறார்கள். தியாகராஜர் அதே காலக் கட்டத்தைச் சேர்ந்தவர்.

    திருவையாறு செல்லும் பாக்கியம் இதுவரை கிடைக்கவில்லை (உற்சவ சமயத்தில்).

    ReplyDelete
  6. எந்தரோ மாகானுபாவுலு: அந்தரிகி வந்தனமுலு!
    எத்தனையோ மகான்கள் இந்த ஞானபூமியில் அத்தனை பேருக்கும் வணக்கங்கள்.
    தியாகராஜ ஸ்வாமிகளின் தாய் மொழி தெலுங்கு எனக்கேள்விப் பட்டிருக்கிறேன்
    அதனால் எல்லாக் கீர்த்தனைகளையுமே தன் தாய் மொழியில் எழுதியுள்ளார்.
    ஒருவர் தன் தாய் மொழியில்தானே
    சிறப்பாக எழுதமுடியும்
    அதுவும் இல்லாமல் நமது பாரதியார் வேறு சுந்தரத்தெலுங்கு என்று அந்த மொழிக்குச் சான்றிதழ் வழங்கிவிட்டிப்போயிருக்கிறார்.
    தெலுங்கு மொழியில் எந்த ஒரு சொல்லுமே ன், ம் என்று அழுத்தத்துடன் முடியாது. ரா, ரி, லு என்று ராகத்துடன்தான் முடியும்
    "மீரு ஒஸ்தாரா லேவா, இப்புடே செப்பண்டி" (நீங்கள் வருகிறீர்களா இல்லையா இப்பொழுதே சொலலுங்கள்)
    என்று பேச்சுத் தெலுங்கு கூட ராகத்துடன்தான் இருக்கும்!

    ReplyDelete
  7. அருமையான பதிவுக்கு நன்றி. அதிலும் அந்த DD ஒளிப்பதிவை செய்தது அச்சமயத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் "இசை அரங்கம்" பகுதியின் தயாரிப்பாளராக இருந்த எனது சிறிய மைத்துனி (என் மனைவியின் தங்கை) என்பதில் எனக்கு போனஸ் சந்தோஷம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. காலை நேரத்தை ஸ்ரி ராகத்துடன் ஆரம்பித்துவிட்டேனய்யா.....நன்றி....

    ReplyDelete
  9. நாட்டை, கெளளை, வராளி, ஆரபி, ஸ்ரி....எல்லாமே அருமைதானய்யா...உடம்பில் ஒரு சிலிர்ப்பை வரவழைக்கும் பாடல்கள்....

    எதனாலோ தெரியவில்லை

    "பக்தியால் யான் உன்னை பலகாலம்" என்று மனதில் பாடத்தோன்றுகிறது....

    ReplyDelete
  10. தியாகராஜ ஆராதனை ஒரு திகட்டாத தெய்வீக அனுபவம். இன்று காலை டிடி புண்ணியத்தில் காணும் பாக்கியம் கிட்டியது. தீபாராதனை வரை இருந்து பார்த்து விட்டுத் தான் வேலைக்குக் கிளம்பினேன்.

    // நாம் எல்லாம் இன்று தானே, தினம் ஒரு பதிவு போடுகிறோம்! ஆனால் தியாகராஜர் அன்றே தினம் ஒரு பாடல், கவிதை எழுதியவர்! //

    இது என்ன ஒப்புமை ஐயா? மேரு மலை எங்கே, மண் துகள் எங்கே? இது சும்மா விளையாட்டுக்காகக் கூடச் சொல்லியதில்லை என்றே நினைக்கிறேன்! :))

    இதெல்லால் உட்கார்ந்து எழுதிய பாடல் இல்லை ! சங்கீதம் என்னும் ஜீவநதி அவர் நாபிக் கமலத்தில் பிறந்து, இதயத்தில் மலர்ந்து, கழுத்தில் செழித்து அவர் திருவாக்கினின்றும் பொங்கிப் பெருகிப் பிரவகித்தது ("நாபீ ஹ்ருத் கண்ட ரஸனா" என்று சோபில்லு சப்தஸ்வர பாடலில் வருவது போல) இப்பேற்பட்ட தெய்வ சங்கீதம் அமானுஷ்யமானது. தியாகய்யரின் ராமபக்தியுடன் இயல்பாகக் கலந்து விட்டது.
    "சங்கீத ஞானமு பக்தி வினா, சன்மார்க்கமு கலதே" என்று இன்னொரு பாடலில் கேட்பார்.

    அதனால் தான், அந்த நாத யோகியை இசைத் தெய்வமாக இன்றும் போற்றி வருகின்றோம்!

    அவரது நினைவு நாளில் அழகு தமிழில் அவரைப் பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி. அருமையான பதிவு கண்ணபிரான்.

    ReplyDelete
  11. காலையிலே ஆராதனையிலே கேட்டாலும், இந்த எந்தரோ மஹானுபாவுலு மட்டும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. ரொம்ப நன்றி போட்டதுக்கு. இன்னும் இதை நான் கத்துக்கலை. பாட்டுப் போடத் தான் சொல்றேன். படமே இப்போ இன்னும் சரியாப் போட வரலை. உங்களை மாதிரிப் படம் பாட்டு எல்லாம் போட இன்னும் கொஞ்ச நாள் ஆகும். பார்க்கலாம். நீங்க ஒரு ஆல்ரவுண்டர்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. ரவிசங்கர்!
    என் குடும்பத்தில் பலருக்கு நம் இசை நாட்டமுள்ளதால் ;எங்கள் வீட்டு வானொலியில் இசைகேட்டு வளர்ந்தவன் என்ற வகையில் , சங்கீதம் கேட்கத் திகட்டுவதே இல்லை. இந்தக் கீர்த்தனை நான் 10 ம் வகுப்புப் படிக்கும் போது பாடசாலைக்குச் செல்லும் வழியில் ஒரு தேனீர்க்கடையில் பாலமுரளி கிருஸ்ணா அவர்கள் குரலிலொலிக்க;;அதைக் கேட்டு சுமார் 14 நிமிடங்கள்;பேருந்தையும் தவற விட்டு பாடசாலைக்குப் பிந்திச் சென்று ஆசிரியர் கண்டித்தது. இன்றும் மறக்கமுடியாது. இப்போ இதை ஒலிப்பதிவாக எல்லா வடிவங்களிலும் சேர்த்து வைத்துள்ளேன். இங்கு கச்சேரிக்கு யார்? வந்தாலும் இதைப் பாடக் கேட்பதில் தனி லயிப்புண்டு.
    எஸ்கே அண்ணா சொன்னது போல் சுரக்கட்டு இந்தக் கீர்த்தனைக்கு அர்ப்புதமாக அமைந்துள்ளது. இது வயிறுப் பிழைப்புக்குப் பாடிய பாடலல்ல!!!. ஆத்மீகலகிப்புடன் பாடியவை. அதனால் இனிமையும்;ஈர்க்கும் தன்மையும் நிரம்பியுள்ளது.
    படத்தில் பல தெரிந்த மாமணிகள் முகம் கண்டேன்.மதுரை சோமு உள்ளாரா??
    மிக்க நன்றி!
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  13. பதம் பிரித்து சுந்தரதெலுங்கினிற்கு அழகு தமிழில் அர்த்தம் தந்து விளக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள்.
    தொலைக்காட்சியில் பாட்டை ரசித்தபடியே சுதா அனுராதா சௌம்யாவின் லேட்டஸ்ட் மாடல் பட்டுபுடவை நகைகளையும் நோட்டமிடுவது எங்களால் தவிர்க்க முடியாதுதான்! பொது அறிவை எல்லா விஷயங்களிலும் கண்டு கேட்டுத் தெரிஞ்சிக்கலாம் தானே?:)
    ஷைலஜா

    ReplyDelete
  14. http://www.musicindiaonline.com/p/x/34C2Yn-U7d.As1NMvHdW/

    யோகன் ஐயா. இன்னொரு முறை உங்கள் பள்ளி அனுபவத்தை அடைய பாலமுரளிகிருஷ்ணா பாடிய எந்தரோ மஹானுபாவுலு கேளுங்கள். :-) நீங்கள் ஏற்கனவே கேட்டிருப்பீர்கள்.

    ReplyDelete
  15. //பொருள் சொல்லிக் கொடுத்தால் தியாகப்பிரம்மத்தின் பாடல்களை நன்கு இரசிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.//

    இதை நானும் வழிமொழிகின்றேன். ரசிக்கத்தக்க பதிவு தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. // எத்தனையோ மகான்கள் இந்த ஞானபூமியில் அத்தனை பேருக்கும் வணக்கங்கள்.//

    இந்த வார்த்தைகளில்தான் எத்தனை பணிவு. இந்த வார்த்தைகள் தோன்றிய மனமும்தான் எவ்வளவு உயரமாக இருக்கவேண்டும். அதை நாமும் எட்டிப்பார்க்க முயல்வதும் எவ்வளவு பாக்கியம்.

    ReplyDelete
  17. //குமரன் (Kumaran) said...
    எத்தனையோ மகான்கள் இந்த ஞானபூமியில் அத்தனை பேருக்கும் வணக்கங்கள்
    ஒரு முறை பாடலைப் பார்த்தேன் / கேட்டேன் இரவிசங்கர். இன்னொரு முறை கேட்கவேண்டும்//

    குமரன்
    எனக்கும், குழுவாகப் பாடும் போதும், இசைக்கும் போதும், கேட்கத் தான் இன்னும் நன்றாக இருக்கும்! ஆனால் என் நண்பர்கள் சிலர் அவ்வாறு பாடும் போது பஜனையாகி விடுகிறது என்று சொல்வார்கள்! ஆனால் என்ன? அதுவும் இனிமை தானே!

    ReplyDelete
  18. //வடுவூர் குமார் said...
    "மெல்லிய தேகத்தில் தான் எத்தனை வல்லிய மன உறுதி"
    இழக்க ஒன்றும் இல்லை என்கிற போது மன வலிமை தன்னால் வரும்//

    சரியாச் சொன்னீங்க குமார் சார்!
    ராம நாமம் தவிர பெரும் சொத்து எதுவும் இல்லை என்ற பெருந்துணிவு தான் அவரை அவ்வளவு உறுதியாக்கியது போலும்!

    ReplyDelete
  19. //குமரன் (Kumaran) said...
    இசை இன்பம் வலைப்பூவிற்கு ஒரு நல்ல முன்னோட்டம்.
    பொருள் சொல்லிக் கொடுத்தால் தியாகப்பிரம்மத்தின் பாடல்களை நன்கு இரசிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.//

    உண்மை தான் குமரன்! பொருள் சொல்லிக் கொடுத்தால் தியாகராஜர் பாடல்களை இன்னும் ரசித்துக் கேட்கலாம். மிகப் பெரிய தெலுங்கு வடமொழி அறிவு எல்லாம் தேவையே இல்லை! மக்கள் வழக்காகத் தான் உள்ளது!

    அது சரி இசை இன்பம் என்பது கூட்டு வலைப்பூ ஆயிற்றே! எங்கே நம் தோழர்கள்?

    ReplyDelete
  20. /நீங்கள் பொருள் சொல்லியிருக்கிற ஒரு சரணமே இவ்வளவு ஆழ்ந்த பொருள் கொண்டதாக இருக்கிறதே.

    யோகன் ஐயா பல நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் தொடங்குங்கள்.//

    ஆகா, இது யோகன் அண்ணாவின் பல நாள் நேயர் விருப்பமா?

    எல்லாப் பாடல்களிலும் ஆழ் பொருள் ஒன்று இரண்டு மட்டும் வைத்து, மீதி எல்லாப் பத்திகளிலும் எளிய பக்தி தான் வைத்துப் பாடியிருப்பார், அடியேன் அறிந்த வரையில்!

    ReplyDelete
  21. // SK said...
    அதிலும், அந்த ஸ்வரங்கள் வரும் நேரம்....!
    ஆஹா! அத்தனையும் சுகானுபவம்!//

    உண்மை தான் SK ஐயா!
    சுகானுபவம் தான்!
    அதுவும் கூட்டமே இல்லாத நாளில் காவிரிக் கரையில் உட்கார்ந்து கொண்டு, இதே குழுப் பாடல்களை, வாக்மேனில் கேட்பது இன்னொரு அனுபவம்!

    அனைவருக்கும் வந்தனங்கள்!

    ReplyDelete
  22. //எனக்குத் தெரிந்து: M.S. அம்மா, மகாராஜபுரம், எம்.டி.ராமநாதன், டி.கே.கோபாலகிருஷ்ணன், மதுரை கிருஷ்ணன் (இவர் அரியக்குடியின் சிஷ்யர்), செம்மங்குடி, குன்னக்குடி.

    நடிகை: பானுமதி//

    ஆகா, கிட்டத்தட்ட எல்லாரையும் பட்டியல் இட்டு விட்டீர்களே! திருச்சூர் ராமச்சந்திரன், டிவிஜி, குருவாயூர் துரை, மணி கிருஷ்ணசாமி இன்னும் சிலர்...

    //ஜப்பானில் பீத்தோவனின் 9 சிம்பொனியை இப்படி 6000 கலைஞர்கள் சேர்த்து இசைக்கிறார்கள். தியாகராஜர் அதே காலக் கட்டத்தைச் சேர்ந்தவர்//

    புதிய தகவல் கண்ணன் சார்!
    பொது மக்கள் முன்பா? இல்லை அரங்கத்திலா?

    ReplyDelete
  23. //SP.VR.சுப்பையா said...
    தியாகராஜ ஸ்வாமிகளின் தாய் மொழி தெலுங்கு எனக்கேள்விப் பட்டிருக்கிறேன்
    அதனால் எல்லாக் கீர்த்தனைகளையுமே தன் தாய் மொழியில் எழுதியுள்ளார்//

    தமிழிலும் ஒரு சில பாடல்கள் எழுதியுள்ளார் போலும் வாத்தியார் ஐயா! நமக்குத் தான் கிட்ட வில்லை! முதல் வரிகளை மட்டும் சிலர் சொல்கிறார்கள்; அவர் திருவொற்றியூர் மற்றும் கோவூர் வந்த போது பாடியதாம்!

    //தெலுங்கு மொழியில் எந்த ஒரு சொல்லுமே ன், ம் என்று அழுத்தத்துடன் முடியாது. ரா, ரி, லு என்று ராகத்துடன்தான் முடியும்//

    அட, ஆமாம்! நீங்க சொன்னதற்குப் பிறகு தான் தெரிகிறது!

    ReplyDelete
  24. //dondu(#4800161) said...
    அருமையான பதிவுக்கு நன்றி. அதிலும் அந்த DD ஒளிப்பதிவை செய்தது அச்சமயத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் "இசை அரங்கம்" பகுதியின் தயாரிப்பாளராக இருந்த எனது சிறிய மைத்துனி (என் மனைவியின் தங்கை) என்பதில் எனக்கு போனஸ் சந்தோஷம்//

    நன்றி டோண்டு சார்!

    ReplyDelete
  25. //Mathuraiampathi said...
    நாட்டை, கெளளை, வராளி, ஆரபி, ஸ்ரி....எல்லாமே அருமைதானய்யா...உடம்பில் ஒரு சிலிர்ப்பை வரவழைக்கும் பாடல்கள்....//

    உண்மை தான் மெளலி சார்! பஞ்ச ரத்னம் என்று சும்மாவா சொன்னார்கள்?

    ReplyDelete
  26. //Mathuraiampathi said...
    காலை நேரத்தை ஸ்ரி ராகத்துடன் ஆரம்பித்துவிட்டேனய்யா.....நன்றி....//

    ஓ, ஆமாம்!
    எந்தரோ மகானுபாவுலு ஸ்ரீ ராகத்தில் அமைந்த பாடல்; பதிவில் சொல்ல வில்லை! எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி மெளலி சார்.

    ReplyDelete
  27. ரவி,

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு பெரிய நன்றியை தவிர.தியாகராஜ ஆராதனையை 5 வருடம் கேட்டுள்ளேன்.விளையாடுத்தனமான சிறு வயது ஆனால் அப்பாவுடைய முகம் இன்னும் நன்றாக நினைவில் உள்ளது.(அவர் இப்பொழுது இல்லை)கண்னீர் மல்க அவர் பாடும்'எந்தரோ" வை நினைவு படுத்திவிட்டீர்கள்.எவ்வளவுதான் வெளி நாட்டில் தியாகராஜ ஆராதனை நடத்தினாலும் அன்த" Ambience" கிடைப்பதில்லை இல்லையா?? என்த வருட recording இது? ஜாம்பவான்ஙள் எல்லோரும் இருக்கிறார்களே?

    anbudan

    Radha

    ReplyDelete
  28. // ஜடாயு said...
    தியாகராஜ ஆராதனை ஒரு திகட்டாத தெய்வீக அனுபவம். இன்று காலை டிடி புண்ணியத்தில் காணும் பாக்கியம் கிட்டியது. தீபாராதனை வரை இருந்து பார்த்து விட்டுத் தான் வேலைக்குக் கிளம்பினேன்//

    கல்லூரியில் இதற்காகவே மட்டம் போட்ட காலமும் உண்டு ஜடாயு சார்!

    //இது என்ன ஒப்புமை ஐயா? மேரு மலை எங்கே, மண் துகள் எங்கே?//

    :-))

    //இப்பேற்பட்ட தெய்வ சங்கீதம் அமானுஷ்யமானது. தியாகய்யரின் ராமபக்தியுடன் இயல்பாகக் கலந்து விட்டது//

    இயல்பாகக் கலந்ததால் அன்றோ, பாடல்களும் இயல்பான பேச்சு வழக்காகவும் அமைந்து விட்டது! அவரின் பேச்சே, இசைப் பாடல் தான்!

    //அவரது நினைவு நாளில் அழகு தமிழில் அவரைப் பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி. அருமையான பதிவு//

    நன்றி ஜடாயு ஐயா!

    ReplyDelete
  29. //கீதா சாம்பசிவம் said...
    இன்னும் இதை நான் கத்துக்கலை. பாட்டுப் போடத் தான் சொல்றேன். படமே இப்போ இன்னும் சரியாப் போட வரலை. உங்களை மாதிரிப் படம் பாட்டு எல்லாம் போட இன்னும் கொஞ்ச நாள் ஆகும். பார்க்கலாம்//

    மிக எளிது தான் கீதாம்மா.
    ஒரு முறை யாராச்சும் பக்கத்தில் இருக்க செய்து விடுங்கள்! அடுத்த முறை தூள் கிளப்பி விடுவீர்கள்!

    நீங்க தான் திருக்கயிலாய யாத்திரையில் அமர்க்களமாகப் படம் எல்லாம் போட்டு தரிசனம் செய்து வைத்தீர்களே!

    ReplyDelete
  30. //johan -paris said...
    இந்தக் கீர்த்தனை நான் 10 ம் வகுப்புப் படிக்கும் போது பாடசாலைக்குச் செல்லும் வழியில் ஒரு தேனீர்க்கடையில் பாலமுரளி கிருஸ்ணா அவர்கள் குரலிலொலிக்க;;அதைக் கேட்டு சுமார் 14 நிமிடங்கள்;பேருந்தையும் தவற விட்டு பாடசாலைக்குப் பிந்திச் சென்று ஆசிரியர் கண்டித்தது. இன்றும் மறக்கமுடியாது//

    நான் டிவியில் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக மட்டம் போட்டேன் கல்லூரிக்கு. வீட்டில் திட்டு! கல்லூரியில் யாரும் கண்டிக்கலை! :-)

    //இப்போ இதை ஒலிப்பதிவாக எல்லா வடிவங்களிலும் சேர்த்து வைத்துள்ளேன். இங்கு கச்சேரிக்கு யார்? வந்தாலும் இதைப் பாடக் கேட்பதில் தனி லயிப்புண்டு.//

    உண்மை தான் யோகன் அண்ணா!
    நானும் இந்தப் பாடலை, மற்றும் ஜகதா என்றி தொடங்கும் முதல் பாடலையும் பல கலைஞர்கள் பாடுவதைச் சேமித்து வைத்துள்ளேன்!
    இன்னும் இந்தப் பாடலை, வீணை, புல்லாங்குழல், வயலின். கிட்டார் என்று இசைக்கருவி வாசிப்பு்களிளும் சேமித்துக் கேட்பதில் சுகமே அலாதி!

    ReplyDelete
  31. //இது வயிறுப் பிழைப்புக்குப் பாடிய பாடலல்ல!!!. ஆத்மீகலகிப்புடன் பாடியவை. அதனால் இனிமையும்;ஈர்க்கும் தன்மையும் நிரம்பியுள்ளது.//

    சத்தியமான வார்த்தை, யோகன் அண்ணா!

    //படத்தில் பல தெரிந்த மாமணிகள் முகம் கண்டேன்.மதுரை சோமு உள்ளாரா??/

    இருந்தாரே! மதுரை சோமு அவர்கள், மற்றும் இன்ன பிற தமிழிசைக் கலைஞர்கள் பலர் தெரிகிறார்கள்!

    ReplyDelete
  32. // ஷைலஜா said...
    பதம் பிரித்து சுந்தரதெலுங்கினிற்கு அழகு தமிழில் அர்த்தம் தந்து விளக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள்//

    நன்றி ஷைலஜா.
    திருவரங்கத்தில் இருந்து திருவையாறு உற்சவம் சென்று வந்துள்ளீர்களா?

    //தொலைக்காட்சியில் பாட்டை ரசித்தபடியே சுதா அனுராதா சௌம்யாவின் லேட்டஸ்ட் மாடல் பட்டுபுடவை நகைகளையும் நோட்டமிடுவது எங்களால் தவிர்க்க முடியாதுதான்!
    பொது அறிவை எல்லா விஷயங்களிலும் கண்டு கேட்டுத் தெரிஞ்சிக்கலாம் தானே?:)//

    ஆகா!
    என்னது பொது அறிவா?
    விட்டா, வினாடி வினா வைத்து விடுவீர்கள் போல இருக்கே! :-))

    ReplyDelete
  33. //குமரன் (Kumaran) said...
    யோகன் ஐயா. இன்னொரு முறை உங்கள் பள்ளி அனுபவத்தை அடைய பாலமுரளிகிருஷ்ணா பாடிய எந்தரோ மஹானுபாவுலு கேளுங்கள். :-) //

    ஆகா குமரன்! என்ன இது, யோகன் அண்ணாவை நீங்க பள்ளி ஆசிரியரிடம் மாட்டி விடப் பார்க்கிறீர்களா? :-))

    ReplyDelete
  34. //மலைநாடான் said...
    //பொருள் சொல்லிக் கொடுத்தால் தியாகப்பிரம்மத்தின் பாடல்களை நன்கு இரசிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.//
    இதை நானும் வழிமொழிகின்றேன். ரசிக்கத்தக்க பதிவு தந்தமைக்கு நன்றி.//

    நன்றி மலைநாடான் ஐயா!
    கூட்டாகச் செய்ய வேண்டும் இந்த நற்பணியை!

    ReplyDelete
  35. //ஓகை said...
    //எத்தனையோ மகான்கள் இந்த ஞானபூமியில் அத்தனை பேருக்கும் வணக்கங்கள்.//
    இந்த வார்த்தைகளில்தான் எத்தனை பணிவு. இந்த வார்த்தைகள் தோன்றிய மனமும்தான் எவ்வளவு உயரமாக இருக்கவேண்டும். அதை நாமும் எட்டிப்பார்க்க முயல்வதும் எவ்வளவு பாக்கியம்//

    ஆமாம் ஓகை ஐயா!
    பணிவு ஒன்றையே பண்பாகக் கொண்டவர் திருவாயில் மட்டுமே இப்படி ஒரு வாக்கியம் வரமுடியும்!

    நாம் பாக்கியசாலிகள் தாம்!

    ReplyDelete
  36. //Radha Sriram said...
    ரவி,
    தியாகராஜ ஆராதனையை 5 வருடம் கேட்டுள்ளேன்.விளையாடுத்தனமான சிறு வயது ஆனால் அப்பாவுடைய முகம் இன்னும் நன்றாக நினைவில் உள்ளது.(அவர் இப்பொழுது இல்லை)கண்னீர் மல்க அவர் பாடும்'எந்தரோ" வை நினைவுபடுத்திவிட்டீர்கள்.
    எவ்வளவுதான் வெளி நாட்டில் தியாகராஜ ஆராதனை நடத்தினாலும் அன்த" Ambience" கிடைப்பதில்லை இல்லையா?? //

    மிகவும் உண்மைங்க ராதா ஸ்ரீராம்.
    இங்கு அந்த ambience கிடைப்பதற்குக் காரணமே காவிரியும், திறந்தவெளியும், தியாகராஜர் ஆலயமும், பொதுமக்களும் சேர்ந்து பாடுவது தான்!

    மேடை என்ற ஒன்றே கிடையாது!
    வெளிநாட்டு ஆராதனைகளில் மேடை போட்டுப் பாடுகிறார்கள்! ஒரு கச்சேரி effect வந்து விடுகிறது!

    //என்த வருட recording இது? ஜாம்பவான்ஙள் எல்லோரும் இருக்கிறார்களே?//

    சரியாகத் தெரியவில்லைங்க! நண்பர் கொடுத்த வீடியோ க்ளிப் இது!

    ReplyDelete
  37. You could have given the full song with meanings. Thanks for the good post.
    -Sowmya

    ReplyDelete
  38. ரவி மடல் அனுப்பவில்லையானால் தெரிந்து இருக்காது . நன்றி.
    அதுவும் பானுமதியம்மா முக பாவம். எம்.எஸ் அம்மாவின் பணிவு மஹராஜபுர சந்தானம் சாரின் கம்பீரம், செம்மங்குடி மாமாவின்குழைந்த குரல் எல்லாமே அமிர்தம்.

    ஊரில் இந்த நிகழ்ச்சியை வானொலிகாலத்திலிருந்தே கேட்பது வழக்கம்.
    தெய்வ உலகிற்குப் போய்விட்டு வந்த உணர்வு கிடைக்கும்

    ReplyDelete
  39. //Anonymous said...
    You could have given the full song with meanings. Thanks for the good post.
    -Sowmya//

    நன்றி செளம்யா, முழுப் பாடலையும் பொருளையும் சொல்ல ஒரு பதிவு போதாது அல்லவா? சிறிது சிறிதாக வேண்டுமானால் பாக்கலாம்!

    ReplyDelete
  40. //வல்லிசிம்ஹன் said...
    ரவி மடல் அனுப்பவில்லையானால் தெரிந்து இருக்காது . நன்றி.
    அதுவும் பானுமதியம்மா முக பாவம். எம்.எஸ் அம்மாவின் பணிவு மஹராஜபுர சந்தானம் சாரின் கம்பீரம்//,

    நன்றி வல்லியம்மா! வானொலி, மற்றும் DD இல் அப்பல்லாம் இது ஒரு கிரேஸ்!

    ReplyDelete
  41. நன்றி

    அன்புடன்
    ச.திருமலை

    ReplyDelete
  42. வழக்கம் போல் அருமையான பதிவு. மிக்க நன்றி ரவிசங்கர்.

    ReplyDelete
  43. வழக்கம் போல் அருமையான பதிவு. மிக்க நன்றி ரவிசங்கர் :)


    //ராம நாமம் தவிர பெரும் சொத்து எதுவும் இல்லை என்ற பெருந்துணிவு தான் அவரை அவ்வளவு உறுதியாக்கியது போலும்! //

    well said!

    ReplyDelete
  44. தியாகப் பிரம்மத்தின் நெருங்கிய சீடரும் அவருடைய கீர்த்தனைகள் பலவற்றை ஏட்டுச்சுவடிகளில் குறித்து வைத்தவரும் ஆன வேங்கடரமண பாகவதரைப் பற்றித் தெரியுமா இரவிசங்கர்?

    ReplyDelete
  45. //குமரன் (Kumaran) said...
    தியாகப் பிரம்மத்தின் நெருங்கிய சீடரும் அவருடைய கீர்த்தனைகள் பலவற்றை ஏட்டுச்சுவடிகளில் குறித்து வைத்தவரும் ஆன வேங்கடரமண பாகவதரைப் பற்றித் தெரியுமா இரவிசங்கர்?//

    கேள்விப்பட்டு இருக்கிறேன் குமரன்! வாலாஜாப்பேட்டை வேங்கடரமண பாகவதரைப் பற்றித் தானே குறிப்பிடுகிறீர்கள்? அவரும் அவர் மகனும் தியாகராஜரின் சீடர்களாய், அவர் ஓலைச்சுவடிகள் மட்டும் அல்லாது, அவர் பயன்படுத்திய பூஜைப் பொருட்கள் எல்லாம் சேகரித்து வைத்தனர் என்று சொல்லுவார்கள்!

    பெங்களூர் நாகரத்தினம்மாள் அவர் நேரடி சீடர் இல்லை என்றாலும், அவர் தான் தியாகராஜர் சமாதியில் ஆலயம் அமைக்கவும் பெரிதும் பாடுபட்டார்.

    இவர்களின் தன்னலமற்ற பணியால் தான் நாம் எல்லாம் இன்று தியாகராஜரை அனுபவித்து வாழ முடிகிறது அல்லவா?

    ReplyDelete
  46. //Anonymous said:
    நன்றி
    அன்புடன்
    ச.திருமலை//

    நன்றிங்க திருமலை! தாங்கள் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

    ReplyDelete
  47. //Sridhar Venkat said:
    வழக்கம் போல் அருமையான பதிவு. மிக்க நன்றி ரவிசங்கர்.//

    நன்றிங்க ஸ்ரீதர்! வீடியோ முழுக்கப் பார்த்தீர்களா? பிடித்திருக்கும் என்றே எண்ணுகிறேன்!
    அதென்ன வழக்கம் போல! :-)

    ReplyDelete
  48. //ambi said:
    வழக்கம் போல் அருமையான பதிவு. மிக்க நன்றி ரவிசங்கர் :)
    //ராம நாமம் தவிர பெரும் சொத்து எதுவும் இல்லை என்ற பெருந்துணிவு தான் அவரை அவ்வளவு உறுதியாக்கியது போலும்! //
    well said!//

    ஆகா, இன்னொரு "வழக்கம் போல்" என்று அம்பியும் சொல்கிறார்!

    நன்றிங்க அம்பி! ராம நாமம் தவிர பெரும் சொத்து எதுவும் இல்லை என்ற துணிவு, அவர் ராமன் பால் வைத்த பரிசுத்தமான அன்பால் வந்தது!

    ReplyDelete
  49. //வாலாஜாப்பேட்டை வேங்கடரமண பாகவதரைப் பற்றித் தானே குறிப்பிடுகிறீர்கள்? அவரும் அவர் மகனும் தியாகராஜரின் சீடர்களாய், அவர் ஓலைச்சுவடிகள் மட்டும் அல்லாது, அவர் பயன்படுத்திய பூஜைப் பொருட்கள் எல்லாம் சேகரித்து வைத்தனர் என்று சொல்லுவார்கள்!
    //

    ஆமாம் இரவிசங்கர். அவர்கள் சேகரித்து வைத்த தியாகையரின் பூஜைப் பொருட்கள், தம்பூராக்கள் இரண்டு, இவை எல்லாம் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் இருக்கின்றன. அவற்றை நான் மதுரையில் இருக்கும் போது தினமும் தரிசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  50. குமரன்,

    ஆகா, நீங்க கொடுத்து வைத்தவர் தான்! தஞ்சையில் இருந்து மதுரைக்கு வந்தன போலும்!

    தியாகராஜர் வணங்கிய ராம விக்ரகம் பார்த்துள்ளீர்களா? நின்ற கோலம் கிடையாது! சீதை, இளையாழ்வார், ஆஞ்சநேயர் எல்லாருமே வித்தியாசமான கோலத்தில் இருக்கும் விக்ரகம் அது! இன்றும் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ளது; படம் தேடினேன். கிடைக்கவில்லை!

    ReplyDelete
  51. வலாஜாபேட்டை வெங்கடரமண பாகவதர் தியாகராஜரின் பெண்ணின் கல்யாணத்திற்காக ராமரின் பட்டாபிஷேகப் படம் ஒன்று வரைந்து பரிசாகக் கொண்டு வந்தார். அதைக் கேள்விப்பட்ட தியாகராஜர் கல்யாணவீட்டில் வாசாலிலேயே நின்று கொண்டு படத்திலிருந்த ராமரைப் பார்த்து'நன்னு பாலிம்ப நடசி உச்சிதிவோ"(என்னை காப்பதற்காக நடந்து வந்தாயா ராமா) என்ற மோகனராகத்தில் ஒரு பாடலை இயற்றினார்.

    ReplyDelete
  52. //தி. ரா. ச.(T.R.C.) said...
    'நன்னு பாலிம்ப நடசி உச்சிதிவோ"(என்னை காப்பதற்காக நடந்து வந்தாயா ராமா) என்ற மோகனராகத்தில் ஒரு பாடலை இயற்றினார். //

    ஆகா, இந்தப் பாடலின் பின்னால் உள்ள கதை இது தானா? நன்றி திராச ஐயா!

    என்ன இன்னும் தியாகராஜர் பதிவில் திராச ஐயாவைக் காணோமே என்று பார்த்தேன். பாருங்கள், தியாகராஜரின் சிஷ்யர் அழைத்து வந்து விட்டார்!

    ReplyDelete
  53. கண்ணபிரான்
    தியகராஜர்தான் தஞ்சாவூர்க்காரர் ஆனால் வெங்கடரமண பாகவதரோ நம்ப வட ஆற்காடு வலஜாபேட்டையைச் சேர்ந்தவராயிற்றே விட முடியுமா என்ன.

    ReplyDelete
  54. பார்த்து, கேட்டு ரசித்தேன். பஞ்சரத்தின கீர்த்தனைகளில் இரண்டு தான் கற்றுக்கொண்டிருக்கிறேன் (வீணையில்) இதுவும், ஜகதானந்தகாரகாவும். இவையிரண்டுமே திரையிசையிலும் பிரபலப்படுத்தப்பட்டன.

    ReplyDelete
  55. //சேதுக்கரசி said...
    பார்த்து, கேட்டு ரசித்தேன். பஞ்சரத்தின கீர்த்தனைகளில் இரண்டு தான் கற்றுக்கொண்டிருக்கிறேன் (வீணையில்) இதுவும், ஜகதானந்தகாரகாவும். இவையிரண்டுமே திரையிசையிலும் பிரபலப்படுத்தப்பட்டன//

    ஆகா, சேதுக்கரசி நீங்க வீணை விதுஷியா? சூப்பர்!
    கீர்த்தனைகளில் ஐயம் ஏற்பட்டால் உங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்!

    ReplyDelete
  56. அவ்வளவுக்கெல்லாம் தெரியாது, நீங்க வேற :-)

    ReplyDelete
  57. sir,

    trying to open YT last two days.Today success.

    Divinly experience going thro Aradhanai.

    Reading ur post gave me the pleasure i had earlier:

    1.watching Thiagaraja the movie ,came in 80s.

    2.reading the magnum opus of T.Janakiraman's MOGAMUL.

    Thanks a lot and i feel that ur efforts will be equally lorded by the Great BRAHAMAM,having to do justice as a family man aswellas a divinly seeker of the TRUTH.

    sundaram.

    ReplyDelete
  58. //தி. ரா. ச.(T.R.C.) said...
    கண்ணபிரான்
    தியகராஜர்தான் தஞ்சாவூர்க்காரர் ஆனால் வெங்கடரமண பாகவதரோ நம்ப வட ஆற்காடு வலஜாபேட்டையைச் சேர்ந்தவராயிற்றே விட முடியுமா என்ன.//

    ஆகா அதானே!
    பாலாறு பாயும் வாலாஜா பேட்டை
    வாழ்க வாழ்க!
    எங்க வடார்க்காடு வாழ்க வாழ்க!!

    ReplyDelete
  59. //Anonymous said...
    sir,
    trying to open YT last two days.Today success.//

    ஹூம்; தளத்தில் ஏதாவது பிரச்சனையா தெரியவில்லையே! எங்களுக்கு இங்கு வலைப்பூவுக்குள் வர முடிந்ததே!

    //Divinly experience going thro Aradhanai.
    Reading ur post gave me the pleasure i had earlier://

    நன்றி சுந்தரம் சார்!
    தாங்கள் ரசித்துப் படிப்பதற்கு!

    ReplyDelete
  60. //rahini said...
    mika mika arumai//

    நன்றி ராஹிணி!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP