Monday, March 24, 2008

KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு!

புதுசா ஜொலிக்கும் விண்மீனுக்கு என் வாழ்த்துக்கள்! (இதை எழுதும் போது பேர் சொல்லி வாழ்த்த அவரு யாருன்னு தெரியலை)
விண்மீன் வாரத்தில் வேண்டாமே-ன்னு தான், முடிவுரையில் இதை எழுதாது, அது முடிஞ்சவுடன் எழுதுகிறேன்!

ஆன்மீகம் எழுதும் பதிவர்களுக்கும், பின்னூட்டாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், ஒரு சொல் சொல்லிக்க ஆசைப்படுகிறேன்.
மற்றவர்கள் இந்தப் பகுதியை மட்டும் ஸ்கிப் செஞ்சிடலாம்! (இப்படிச் சொல்வதாலயே நீங்கள் ஸ்கிப் செய்யப் போவதில்லை என்பது தனிக்கதை!:-)
நின் அருளே புரிந்து இருந்தேன்! இனி என்ன திருக்குறிப்பே?

பொதுவா நான் பதிவுலக அரசியல், பின்னூட்ட விளையாட்டுகளில் அதிகம் புழங்காதவன். ஆனால் இந்த வாரம், வரிசையாக இரண்டு மூன்று இடுகைகளில் அடியேன் பொங்கியது எனக்கே தெரியும்! பலருக்கு வியப்பும், சிலருக்கு நட்சத்திர வார ஆணவமோ என்றும் தோன்றி இருக்கலாம்! நெருங்கிப் பழகுபவர்களுக்கு அப்படி இல்லைன்னு நல்லாத் தெரியும்! ஆனால் எனக்குத் தோன்றியது என்னான்னா...

* எதிர்பார்ப்புகளை அடியேன் மேல் சில நல்லன்பர்கள் அதிகம் வளர்த்துக் கொள்கிறார்கள்! அவர்களுக்குப் பிடித்தமானதை எல்லாம் நானும் சுமக்க வேண்டும் என்ற அதீத ஆவல்!

* உங்கள் தமிழ் நடையில் முருகனைப் பாடுங்களேன், திருவண்ணாமலை பற்றி எழுதுங்களேன்-னு நேயர் விருப்பங்கள் தருவது தவறே இல்லை!
ஆனால் அப்படி விருப்பமாய்த் தாராமல், அதைப் பற்றியே எழுதுகிறாயே, ஏன் இதைப் பற்றி எழுதவில்லை, அவனுக்குக் குடை பிடிக்கிறாயே, ஏன் இவருக்குப் பிடித்தால் குறைந்து விடுவாயா என்னும் சட்டாம்பிள்ளை போக்கு நலம் பயக்காது!

* நான் இணையத்தில் படித்து விட்டு, அதைப் பதிவு போடும் சுபாவம் உள்ள பையன் இல்லை! ஆன்மீக விஷயத்தில் மட்டும் உள்-வாங்காமல் (Internalizing) அவ்வளவு சீக்கிரம் எழுதவே மாட்டேன்! இதனால் தான் சில சமயங்களில், வெட்டிப்பயல், "எப்பமே லயிச்சி எழுதுவது போல் இன்னிக்கி எழுதல போல இருக்கே"-ன்னு பின்னூட்டத்தில் சொல்லுவாரு!

வாரியாரைப் போய் பெருமாள் மீதும் காலட்சேபம் பண்ணுங்க! வேளுக்குடி சுவாமியிடம் போய் வள்ளித் திருமணம் விரிவுரை பண்ணுங்க-ன்னு எல்லாம் கேட்பது எவ்வளவு அபத்தம்? ஒரு படைப்பாளியின் கருப்பொருளைத் தீர்மானிக்கும் உரிமை யாருக்கு என்பதும் உங்களுக்கே தெரியும்!

முருகனருள் வலைப்பூவில், என் குலதெய்வம் முருகப்பெருமான் மேல் ஆறு நாளும் சஷ்டிப் பதிவு போடுறேன். ரத்னேஷ் ஐயா போன்றவர்கள் படிச்சிட்டு, திருச்செந்தூருக்கு நேராப் போனாக் கூட இப்படித் தரிசனம் கிடைக்குமாத் தெரியாது-ன்னு சிலாகித்துச் சொல்றாங்க!
அவங்க ஜிராவை இப்படிச் சொன்னாக் கூட அர்த்தம் இருக்கு! ஆனா அவிங்க என்னைத் தான் சொல்லுறாங்க! என் ஆதங்கம் என்னான்னா, எதிர் தரப்பில் இருப்பவருக்கும் தெரியும் போது, நம் தரப்பில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளாது சொல்லாடுவது தான் வேதனை தருகிறது!

முருகப்பெருமான், சிவபெருமான், அம்பாள், பிள்ளையார், சண்டேஸ்வரர், திருவாரூர், தில்லைக்களி, நாட்டார் தெய்வ மாரியம்மன், அவ்வளவு ஏன்,
கிறிஸ்துமஸ் அன்று இயேசு பிரான்
இப்படிப் பதிவிட்டது எல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லையா?
நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்! எத்துணை ஆன்மீக அன்பர்கள் இயேசுபிரான் மீது பதிவிட்டு உள்ளீர்கள்?

எண்ணிக்கையில் அவை உங்களுக்குப் போதவில்லையா? ஒவ்வொரு வலைப்பூவிலும், முருகனருளில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு, அம்மன் பாட்டில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு என்று கணக்கு சமர்பிக்க வேண்டுமா? சொல்லுங்கள், சமர்பிக்கிறேன்! இல்லை மற்ற தெய்வங்கள் மீது இடப்படும் உங்கள் பதிவுக்கு எல்லாம் அடியேன் பின்னூட்டியது இல்லையா? கீதாம்மாவைத் தில்லைக் கொடிக்கவி வரலாற்றை ஊருக்கே சொல்லுங்க-ன்னு வேண்டுகோள் வைக்கலையா? SK ஐயாவிடம் இந்தத் திருப்புகழ், அந்தத் திருப்புகழ்-ன்னு மாறி மாறி நேயர் விருப்பம் வைக்கலையா? நீங்க என்ன நேயர் விருப்பம் வைத்தீர்கள் அடியேனிடம்? ஏண்டா பெருமாளைப் பத்தி மட்டும் எழுதற-ன்னு அதிகாரமா மட்டும் கேக்கறீங்க!

ராமானுசரை எழுதும் நீ ரமணரை எழுதக் கூடாதா-ன்னு கேட்டா, அடியேன் விக்கியில் இருப்பதைப் பார்த்து எழுத முடியும்! ஆனால் பரிபூர்ணமாக உள்வாங்காமல் எழுதுதல் எனக்கு வராத ஒன்று! அதைத் தான் லயிப்பு-ன்னு சொல்றீங்க போல!
உங்களில் பல பேருக்கு அடியேனின் தமிழும் நடையும் பிடிச்சிருக்கு அப்படின்னா, அதுக்கு அதன் பின்னுள்ள இந்த நேர்மையும் ஒரு காரணமா இருக்கலாம்!

அதனால் தான் என்னைப் பிடித்து அழுத்தாதீர்கள் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!
Taare Zameen Par பாத்தீங்கன்னா இப்படிப் பண்ண மாட்டீங்க! பெரியவர்களின் இந்தத் திணித்தல் approach தான் இன்றைய தலைமுறையை நம் பண்பாட்டுப் பொக்கிஷங்களில் இருந்து தள்ளி வைக்கிறது!



* ஆன்மீகத்தில் பல நிலைகள் உள்ளன.
அதிகம் பேசாது, கேள்விகள் ஏதும் கேட்காது, தனக்குள் இறைவனைத் தேடி அறிவது என்பது ஒன்று!
அடியார்களுடன் அடியார்களாக, கூட்டு முயற்சியில் இறைவனின் குணானுபவங்களைப் பேசுவதும், பாடுவதும், கேள்வி கேட்பதும், விடை தேடுவதும் ஒன்று!

அப்படி எல்லாம் இல்லை! நம் சமயத்தை நாமே கேள்வி கேட்கலாமா? அப்படிக் கேட்டால் குழப்பத்தில் இருக்கிறாய்-ன்னு சொல்றீங்க!
அதுவும் நல்ல பூக்களை அறிமுகப்படுத்தும் ஒரு வலைச்சரத்தில், நல்ல பூக்களை மட்டும் அறிமுகப்படுத்தலாமே! குழப்பவாதப் பூக்களை அறிமுகப்படுத்த வலைச்சரம் தேவையில்லை! குழப்பத்தின் தலையில் குட்டத் தலைச்சரம் என்று தனியாகத் துவங்கி விடுவது நல்லது!

சமயக் குழப்பத்தில் இருக்கிறாய் என்று சொன்னால் அடியேன் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை! ஆனானப்பட்ட அருணகிரியாரும், மதுரகவி ஆழ்வாருமே சமயக் குழப்பத்தில் இருந்தவர்கள்! நம் சமயத்தை நாமே கேள்வி கேட்கலாமா? அதுக்கு தான் இன்னொருத்தன் இருக்கானே என்றால், இன்னொரு பெரியார் அவதரிக்க இப்போதே துண்டு போட்டு வைக்கிறீர்கள் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்! நம் வீட்டை நாமே துடைப்பதற்கும், சானிடரி இன்ஸ்பெக்டர் வந்து துடைப்பதற்கும் உள்ள வேறுபாடு நீங்கள் அறியாதது அல்ல! உங்களுக்கு அடுத்து ஆண்டவன் அவதாரம் வேண்டுமா இல்லை பெரியார் அவதாரம் வேண்டுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்!

* உண்மையாலுமே, KRS சைவ/வைணவம் பார்ப்பவன் இல்லைன்னு உங்களுக்கும் தெரியும்!
தில்லை=சைவம்! அதுனால நைசா சைக்கிள் கேப்புல வைணவத்தைக் கம்பேர் பண்ணி சைவத்தைத் தாழ்த்திறலாம் என்கிற மட்டமான எண்ணம் உடையவனா அடியேன்?
ராமர் பாலம் வைணவம் தானே? ராமானுசர் இருந்திருந்தால் பொது நலனுக்குப் அணையைக் (பாலம் மெய்யோ/பொய்யோ - அது வேற விஷயம்) கொடுத்து விடு-ன்னு சொல்லி இருப்பாரு-ன்னு பதிவு போட்டேனே! அப்போ அடியேனோட Hidden Vainava Agenda-வை யாரும் சுட்டிக் காட்டலையே?

எது உங்களை இப்படி எல்லாம் சொல்லத் தூண்டுது? சொல்லட்டுமா?
யார் சொன்னாலும், நான் சொல்லக் கூடாது என்ற உங்களின் அதீத அன்பு தான் இப்படி எல்லாம் பேச வைக்குது!
ஆன்மீக வலையுலகப் பெரியவர்களே, உங்கள் குழந்தை கேஆரெஸ் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்!
வெறும் அலங்காரங்கள், கோயில் விளக்கங்கள், ஸ்லோகங்களுக்குப் பொழிப்புரைகள், கதைகள்-ன்னு சொல்லிக்கிட்டு போவதால் மட்டும் ஆன்மீகம் வளர்ந்து விடாது!

தில்லை தீட்சிதருக்கு மடல் தீட்ட அடியேனுக்கு என்ன உரிமை இருக்கு-ன்னு சில அன்பர்கள் நினைக்கிறாங்க!
தில்லையை விட்டுடுவோம்! இதே விசயம் திருமலையில் நடந்திருந்தால் அதை விட இன்னும் சினந்தே எழுதி இருப்பேன். வலையுலகில் என் முதல் பதிவே திருமலை அர்ச்சகர்களுடன் பேசிய வாய்ச் சண்டையில் தான் துவங்கியது என்பது ஞாபகம் இருக்கா?

தமிழ் தில்லையில் நுழைய இன்னும் கூத்தாட வேண்டி இருக்கு-ன்னு ஒரு வரிக்கு - அதுவும் நான் சொல்லி விட்டதால் - உங்கள் மென்மையான மனம் தாங்கிக் கொள்ள முடியவில்லை போலும்!
KRS சொல்லிட்டாரே! KRS சொல்லிட்டாரே-ன்னா, என்னய்யா பெரிய இவனா இந்தக் கேஆரெஸ்ஸு? பச்சைப் பய புள்ள அவன்! அவன் சொன்னா எதுக்கு இம்புட்டு டென்சன் ஆவறீங்க?

அவன் திருவாரூர் சிவன் கோயில்-ல தமிழ் இல்லேன்னோ, குன்றக்குடி கோயில்ல தமிழ் இல்லேன்னோ சொல்லலையே? தில்லையை மட்டும் தானே சொன்னான்!
தில்லையில் தமிழை நீச பாஷை-ன்னு தீட்சிதர்கள் சொல்லிட்டாங்க-ன்னு சும்மா ஏதாச்சும் இட்டுக் கட்டினானா? //தீட்சிதர்களே, நீங்களே பெருமான் பாதம் பள்ளியறை எழும் போது, தமிழ்ப் பதிகம் பாடறீங்க-ன்னு// அவன் சொன்னதை நீங்க பாக்கலையா?
கருவறையில் தமிழில் பாடாததையும், அன்பர்களைக் கரடு முரடாக நடத்துவதையும் தானே அப்பதிவில் சுட்டிக் காட்டினான்?

ஆனா அதே சமயம் தீட்டு கழிச்சாங்க-ன்னு, பிரச்சனை முடிஞ்சாப் பிறகும் ஒரு பிரச்சனை பண்ண போது என்ன சொன்னான்? பாக்கலையா?
//ஆனா இதுல நான் பெரியாரைத் தான் ஃபாலோ பண்ணுவேன்!
டெய்லி பாடப் போற! ஆறு காலமும் பாடப் போற! எத்தனை வாட்டி கழுவித் தள்ளுவான்? பெண்டு கழண்டிடும்! சாப்பாடக் கூட நேரம் இருக்காது! பக்கெட்டும் கையுமா நிக்கவே டயம் சரியா இருக்கும்! வெங்காயம்! உன் வேலை ஆச்சா! உனக்குப் பிரச்சனை பண்ணலையே! போயிக்கிட்டே இரு! :-)//
தத்துவ வித்தகர் ஜீவா வந்து Hats Off KRS-ன்னு சொல்லிட்டுப் போனாரு!

ஒரு விசயம் கேக்குறேன்.
இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்தான் இறைவனின் பொன்னம்பலம். அந்த அம்பலத்தை எண்ணெய் அம்பலம் ஆக்கியது யார்? எண்ணெயை வீசி வீசி அசுத்தப்படுத்தியது யார்?
(கறி மாமிசம் உண்டு, ஒடம்பைக் கும்முன்னு வச்சிருக்கும்) போலீஸ் கூட, அவ்வளவு களேபரத்திலும், விதிகளை மதித்து, சட்டையைக் கழட்டிவிட்டுத் தான் அம்பலத்துக்குள் போகிறது! அமெரிக்கப் போலீஸ் இப்படிச் செய்யுமா?
எண்ணெய் வீசி அம்பலத்தை அசுத்தப்படுத்தியதை ஆன்மீகம் பதிபவர்கள் யாரேனும் இது வரை கண்டித்தார்களா?

நடனமாடும் இறைவன் எண்ணெயிலா நடனமாடுவான்? வீட்டில் கூட ஐயோ குழந்தைக்கு வழுக்கிறப் போகிறதே-ன்னு பதறுகிறோம்! ஆனால் சைவத்தின் தலைநகரில், அம்பலத்துக்குப் பொறுப்பானவர்களே, பொறுப்பா அம்பலத்துல எண்ணெய் ஊத்தி, ஆடுறா நடராசா-ன்னு சொல்லுவாங்க! அதை யாரும் கண்டுக்கிட மாட்டோம்! உங்களுக்கு நடராஜரின் மேல் பாசமா இல்லை வேறு எவரின் மீதாவது பாசமா??

தமிழ் தில்லைக் கருவறைக்குள் நுழையக் கட்டப்படுது-ன்னு கேஆரெஸ் மட்டுமா சொன்னான்? எத்தனை பேர் சொல்கிறார்கள்? சைவ மடங்கள் மறைமுகமாச் சொல்லலையா?
ஆனா அவன் சொன்னா மட்டும் உங்களுக்குக் கோவம் வருகிறது! உடனே வைணவத்தை தூக்கி நிறுத்த சைக்கிள் கேப்பில் சைவத்தைத் தாழ்த்தறான்-ன்னு, குழந்தைத்தனமா பேசலாமா? என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல?
பெரியவங்க நீங்க குழந்தையா? இல்லை பச்சப் புள்ள கேஆரெஸ் குழந்தையா? :-)))


நாத்திகம் பேசுவோர் கருத்தை விட்டுவிட்டு ஆட்களைப் பிடித்துக் கொள்கிறார்கள்-ன்னு சொல்லுறோம்! ஆனா நாம மட்டும் என்ன பெருசா செய்யறோம்? Are we walking our talk?

தமிழ்க் கடவுள்- இல்லன்னு யாரையும் பதவி இறக்கல! இவரும் தமிழ்க் கடவுள் தான் என்று தமிழ் இலக்கியத் தரவுகளை முன் வைக்கிறோம்!
தரவுக்கு எதிர் தரவு வைப்பது ஒரு வகை! தரவினை மறுப்பது ஒரு வகை!
ஆனால் ரெண்டும் செய்யாம "இவருக்கு ஏதோ ஆசைப்பா! சொல்லிக்கிராரு! சொல்லிட்டுப் போகட்டம்" என்று, இங்கும் ஆட்களுக்கு attributing motive தான் நடக்குதே தவிர, பயனுள்ள விவாதம் நடக்குதா?

இதே திருமலைத் தெய்வம் யார் என்ற விவாதத்தில், அடியேனோ இல்லை குமரனோ இப்படி attributing motive செய்தோமா? இப்போது தில்லைக்குப் பாய்ந்து வரும் ஆன்மீக அன்பர்கள், அப்போது எங்கு இருந்தீர்கள்?
என் இனிய நண்பன் ஜிரா, திருமால்-சிவன் அனைவரும் தங்கள் தலைகளை முருகப் பெருமான் காலடியில் ஒத்தி ஒத்தி எடுத்தாங்க-ன்னு எழுதின போது (அவர் மத மாச்சர்யம் கருதி எழுதவில்லை! அது வேறு விடயம்), அப்போது எங்கே இருந்தீர்கள்? நகைச்சுவை பதிவுகளை அதிகம் இட்டு விளையாடும் வெட்டிப்பயல் அல்லவா வந்து வழக்குரைத்தார்? ஆன்மீகப் பதிவர்களின் கடமை அன்று எங்கே இருந்தது?

வாதங்கள் செய்வதை விடுத்து பேதங்கள் செய்வது யாருக்குமே அழகல்ல! புகழும், பிரபந்தமும், அனுபூதியும் ஓதும் நமக்கு இன்னும் அழகல்ல!

விவாதங்கள் அவசியம் தேவை! கேள்வி தான் வேள்வி வளர்க்கும்! மூடி மூடி மறைக்காமல் நம் வீட்டை நாம் சுத்தம் செய்து கொள்வது போல் வரவே வராது! இந்த விஷயத்தில் ஆன்மீகப் பதிவராய் என்னை அதிகம் கவர்பவர் அரைபிளேடு!
எதையும் ஒளிக்காது விவாத களமாய் முன் வைப்பவர்! அரசியல் பெற அல்ல! தெளிவு பெற! தரவுக்கு தரவு தர முயற்சிப்பாரே அன்றி, ஆன்மீகக் குழப்பவாதிகள் மலிந்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்லவே மாட்டார்!
அவர் மட்டும் ஆன்மீகப் பதிவில் இன்னும் தீவிரமாக இறங்கினால்...அச்சோ...எனக்கு நினைத்துப் பார்க்கவே இனிக்கிறது! :-)


பெரியவர்களை எதிர்த்துப் பேசி இருக்கேன்! பிழை பொறுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும், எது ஒன்றுக்கு மட்டும் அடியேன் முக்கியத்துவம் தருவேன் என்று!

அடியார் பழித்தல் (பாகவத அபசாரம்) அறவே கூடாது என்ற கருத்துக்குத் தரப்படும் அளவில்லாத மதிப்பு ஒன்று தான்,
நாத்திகன் ஒருவனை ஆத்திகன் ஆக்கியது (உங்களைப் பொறுத்த வரை வைணவன் ஆக்கியது!:-)

பகவத் கீதையோ, சுப்ரபாதமோ, தொல்காப்பியமோ, தேவாரமோ, பிரபந்தமோ, கந்தர் அனுபூதியோ அந்த நாத்திகனை ஆத்திகன் ஆக்கவில்லை!
அந்த ஏட்டில் உள்ளதை எல்லாம்
இந்த நாட்டில் கொண்டு வந்த இயக்கம் - சாதி தாழ்த்தாமை, தமிழ் தாழ்த்தாமை, அடியார் பழியாமை - இவை தான் நாத்திகனை ஆத்திகன் ஆக்கியது! அதனால் தானோ என்னவோ இராமானுசரைப் பற்றிச் சொல்லப் புகும் போது, என் பதிவுகளில் வைணவ வாடை வீசுதுன்னு நினைச்சிக்கறீங்க போல!

அந்த அனுபவத்தில் ஐயா பெரியாரிடம் கடன் வாங்கி, ஆன்மீகப் பதிவுலகத்துக்கு அடியேன் ஒரு சொல் சொல்லிக் கொள்கிறேன்!
நாத்திகர்கள் உருவாவதில்லை! உருவாக்கப்படுகிறார்கள்!

இதை ஆன்மீகம் பேணுபவர்கள் சிந்தையில் இருத்தினால், மீண்டும் ஒரு பெரியார் தோன்ற மாட்டார்! மீண்டும் ராமர் சிலைகளும் பிள்ளையார் சிலைகளும் உடைக்கப்படமாட்டாது!
நான் இன்னும் உறுதியாக நம்புவது: பிள்ளையார் சிலைகளைப் பெரியார் உடைக்கவில்லை! நம் அருமைத் தெய்வங்கள் உடைய நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம்! நாம் தான் பெரியாரின் திருக்கரங்களில் தூக்கிக் கொடுத்து உடையுங்கள்-ன்னு சொல்லி இருக்கோம்!

(இது போன்ற தன்னிலை விளக்கப் பதிவுகளை அடியேன் ஜென்மத்துக்கும் இட்டதில்லை! இப்படி இட்டதற்கு நானே வெட்கப்படுகிறேன்! முதலில் இதை இட வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா இது ரொம்ப நாளா நீறு பூத்த நெருப்பா இருக்கு! அந்த நேரத்துக்கு அடியேன் அடியேன்-ன்னு சொல்லி, நானும் குமரனும் இன்ன சிலரும் அதை அணைக்கிறோம்! ஒற்றுமைப் பதிவுக்காகவே மெனக்கெட்டு முருகனருளில் எக்ஸ்ட்ரா ரெண்டு பதிவு போட்டு சூட்டைக் குறைக்கிறோம்!
ஆனாத் திருப்பி ரெண்டு மாசம் கழிச்சி வேற உருவத்தில் வரப் போகுது. அதான் ஒரு நிரந்தரத் தீர்வாக....நம் மனங்களை நாமே கேட்டுக் கொள்ளும் முகமாக...)

மேலே காணும் ஒரு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, உங்கள் எண்ணங்களை அடியேனுக்குச் சொல்லி உதவினால், எனக்கு நானே course correction செய்து கொள்ள ஏதுவா இருக்கும்! தயங்காமல் உங்கள் எண்ணங்களை வாக்காகச் சொல்லுங்கள்! திருத்திக் கொள்கிறேன்!

ஆன்மீகமே எழுதாதே!
சமூகப் பிரச்சனைகளை ஆன்மீகத்தில் கலக்கும் குழப்பவாதிகள் "தூய்மையான" ஆன்மீகத்துக்குத் தேவை இல்லை! சமூகம் வேறு, ஆன்மீகம் வேறு என்றால்...
அடியேன் புன்சிரிப்புடன் ஒதுங்கிக் கொள்கிறேன்! சிறு வயதில் நகைச்சுவை, டகால்ட்டி-ன்னு எழுதிக்கிட்டு ஜாலியா இருக்குறத வுட்டுப்போட்டு தேவையில்லாம எதுக்கு இதெல்லாம்? காதல் மில்லிமீட்டர்-ன்னு எழுதி வச்ச நாவல் வேற இன்னும் நாலு பாகம் முடிக்காம இருக்கு!:-)

கோவிந்த நாம சங்கீர்த்தனம் - அரகரோகரா!!!
அண்ணாமலைக்கு - கோவிந்தா கோவிந்தா!!!

ஆன்மிகப் பதிவு எழுதி அடியேன் பெருசா ஒன்னும் கிழிச்சிடலை! அடியார்களும் அன்பர்களும் வருத்தப்படும் அளவுக்கு எழுதுகிறேன் என்றால், வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-ன்னு பாடுறதல பொருளே இல்லை!
வேணும்னா விட்டுறலாம்! பிரச்சனையே இல்லை!
ஆனா நல்லபடியா ஊருக்குப் போய்வர ஆசி கூறி விடைகொடுத்து அனுப்புங்க! மறக்காம மேலே வாக்களித்து அடியேன் என்ன பண்ணனும்னும் சொல்லிருங்க! பண்ணிறலாம்!



Results of the Poll:

105 comments:

  1. அட KRS யை இப்படி பொங்கி எழ வெச்சுட்டீங்களேப்பா, இன்னைக்கு எத்தனை தல உருள போவுதோ!!!:)))

    ReplyDelete
  2. // ஒவ்வொரு வலைப்பூவிலும், முருகனருளில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு, அம்மன் பாட்டில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு என்று கணக்கு சமர்பிக்க வேண்டுமா? சொல்லுங்கள், சமர்பிக்கிறேன்! ///

    யாரிடம், எதுக்காக சமர்பித்து என்ன ஆகவேண்டும். அப்படியே சமர்பிப்பது என்றால் விஜயகாந் போல் கணக்கு சொன்னால் போதும்:))

    ReplyDelete
  3. குறை சொல்பவர்கள் எங்கும் உண்டு.
    உங்களைப் பற்றி அனைவரும் அறிவார்கள், பிறகு ஏன் இந்த தன்னிலை விளக்கம்.

    புரியல்ல, பெயரோடு வருபவர்களுக்கு மட்டும் பதில் சொல்லலாமே.

    ReplyDelete
  4. அன்பு ரவி,

    கருப்பன் பெரியாரைப் பத்தி எழுதறான், உடனே இவனும் நாத்திகனா இருப்பானோ என்று ஒரு கும்பல் எழுதியது. இன்னொரு கும்பலோ கருப்பன் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறான்யா என்று புறம் பேசிற்று.

    கருப்பன் தன் கொள்கையில் தெளிவாத்தான் இருந்தான். இருக்கிறான். அவனது கொள்கை பகுத்தறிவு ஒன்றே. கருப்பன் இதுவரை எதுவும் மறைக்கவில்லை. ஆன்மீகம் முதல் அவனுக்கு பிடித்த பகுத்தறிவு வரை. அதேபோல தமிழ்மேல் கொண்ட அளவற்ற காதலால் கருவறைக்கு ஏற்ற மொழியல்லாத மொழி தமிழ் என்று சிலர் கூக்குரலிட்டபோது தன் வன் கரங்களால் எழுதித் தள்ளினான். தமிழைப் பழிக்கும் மிருகங்களை கடுமையாக குறை சொன்னான். இறைவனுக்கு தமிழ் பயன்படவில்லை என்றால் அப்படி ஒரு இறைவனே எமக்குத் தேவையில்லை என கோபம் கொண்டான்.

    இப்படித்தான் இருந்தன கருப்பன் எழுத்துகள்.

    தாங்கள் இறைவனிடத்தில் அதிக காதல் கொண்டவர் என்றாலும் தாங்களும் வடமொழியை ஆதரிப்பீர்கள் என்று நினைத்திருக்கின்றனர் சிலர்.

    ஆக இவர்களின் பார்வையில் ஆன்மீகர்கள் அனைவரும் வடமொழியை ஆதரித்தாக வேண்டும். நாத்திகர்கள் அனைவரும் திராவிடராகவும் தமிழ்மொழியினை ஆதரிப்பவராகவும் இருத்தல் வேண்டும்!!!

    தமிழுக்கு ஆதரவாக(!) தாங்கள் பதிவிட்டதால் கோபம் கொண்டவர்கள் இப்படி தங்களை தூற்றுகின்றனர்.

    கவலை வேண்டாம் ரவி. எப்போதும்போல எழுதிக் கொண்டிருங்கள். பக்க பலமாக நாங்கள் என்றுமே இருப்போம்.

    ReplyDelete
  5. என்னய்யா இப்படிக் கொதிச்சுப் பொங்கிட்டீர்?

    அங்கே என் யானையைவேற தடவிப்பார்க்கிற சாக்கில் கொஞ்சம்பேர் இம்சிக்கிறாங்க போல இருக்கேய்யா!

    பாவம் இல்லை அது.

    ஆன்மீகமுன்ன என்னன்னு நிறையப்பேருக்கு புரிதல் இல்லைன்னு தெரியுது.

    கொஞ்சநாள் எல்லாரையும் மவுன விரதம் இருக்க சொல்லணுமோ:-))))

    ReplyDelete
  6. ரவி,

    இப்படி ஒரு பதிவினை சத்யமாக நான் எதிர் பார்க்கவில்லை. ஏதோ உணர்ச்சிப் பெருக்கில் 2-3 பின்னூட்டங்கள் எழுதினீர்கள் அத்துடன் முடிந்தது என்றே நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எவ்வளவு காயப்பட்டிருக்கிங்கன்னனு உங்களது இந்த பதிவின் மூலம் தெரிகிறது.

    உங்களது இந்த பதிவிற்கோ, இல்லை முந்தைய உங்களது பின்னூட்ட பொங்குதல்களுக்கோ நான் ஏதேனும் காரணமாக இருப்பின் மன்னியுங்கள்.
    (நீதானேடா பாவி எல்லாத்துக்கும் காரணமுன்னு மனதுக்குள் திட்டுவது கேட்கிறது, :-))

    எனக்கென்னமோ நீங்க இந்த அளவு இதற்காக மெனக்கிட வேண்டாம் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  7. நாம் எழுதுவது நம்முடைய திருப்திக்காகவே தவிர மற்றவரை திருப்தி படுத்த இல்லை.. ஆதலால் நீங்கள் மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று என் நினைக்கிறீர்கள்?? நாம் எழுதுவது நமக்கு மனநிறைவை தந்தால் போதுமானது.. ஆதலால் நீங்கள் அடுத்தவர்களை பற்றி கிஞ்சிதமும் நினைக்காமல் உங்கள் சேவையை தொடர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. பெரியாரின் கொள்கைகள் எல்லாராலும் ஏற்று கொள்ள முடியாதவை அதற்காக அவர் மீது கோபித்து கொள்ள முடியுமா? அது போல தான்.. என் கடை பணி செய்து கிடப்பதே அப்படின்னு நீங்க உங்க வேலைய பாருங்க.. போற்றுவர் போற்றலும் தூற்றுவர் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே..

    ReplyDelete
  8. இந்தப் பதிவின் தொனி எனக்குப் பிடிக்க வில்லை.

    இந்து மதம் என்று சொல்லுவதெல்லாம் நாடகம் என்பது மீண்டும் ஒரு முறை இங்கே அரங்கேறியிருப்பது தெரிகிறது.

    எல்லாரும் , இந்து என்று கணக்கிற்கு காட்டிவிட்டு, நீ முருகனைக் கும்பிடுறே, நீ வைனவம், நான் சைவம், என்று கும்மியடிப்பதை, உலகிற்கு எடுத்துச் சொன்ன இடுகை என்பதால் நான் மகிழ்கிறேன்.

    இது குறித்து என் பார்வையயை நான் என் பதிவில் எழுதுகிறேன் (முழு சுதந்திரத்தோட..)

    ReplyDelete
  9. டொக் .. டொக் .. (ஒண்ணுமில்லை; கதவைத் தட்டுகிறேன்) கொஞ்சம் தயக்கம் உள்ளே நுழைய .. அவ்வப்போது உங்கள் 'நடை'க்காக உள்ளே நுழைந்து ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போவதுண்டு. ஆனால் இன்று அப்படி போகமனமில்லை..ஏனெனில் சொல்லணும்னு நினச்ச ஒரு விசயம் - உங்களுக்கு மட்டுமல்ல - இந்தப் பதிவைப் படித்தது கட்டாயம் சொல்லிடவேண்டியதுதான் (என்ன ஆனாலும் சரி!) என்று தோன்றிவிட்டது.

    இப்பதிவில் அடியேன் மொத்தம் 18 இருக்கிறது. இந்த அளவு பவ்யம், தாழ்மை தேவையா?

    மூச்சுக்கு மூச்சு KRS ஐயா இப்படி சொல்றார் என்று உங்களை விட இளையவர்கள் உங்களைப் பற்றிச் சொல்வது உங்களுக்கு உவக்குமா என்றும் ஒரு கேள்வி.

    கோவமா இருக்கிற நேரம் பார்த்து அடியேன் (!)இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கின்றேன். :(

    -----------------
    அடுத்து -

    இன்னும் ரெண்டு விதயம்:

    நாத்திகர்கள் உருவாவதும் உண்டு என்று நினைக்கிறேன். அடியேன் அப்படி ஒரு கேசுன்னு நினைக்கிறேன்.

    நீங்கள் நாத்திகராக இருந்து ஆத்திகனாக மாறியதாகக் கூறியுள்ளீர்கள். எப்படி இது நடந்தது என்பதறிய ஆவல்.

    குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு (பேசாமல் எல்லாத்தையும் delete பண்ணிடுவோமான்னு இந்த வினாடிவரை நினைப்பு; அனுப்பி விடுவேன் என்றுதான் நம்புகி
    றேன்)...அனுப்பிட்டேனே....

    ReplyDelete
  10. Email follow-up comments to dharumi2@gmail.com
    -இதை க்ளிக் செய்ய மறந்து போனதால் இந்தப் பின்னூட்டம் ...

    வயசானாலே இப்படித்தான் மறதி... ஹி..ஹி..

    ReplyDelete
  11. நானும் மறந்துட்டேன்...மின்னஞ்சல் அனுப்பும் வசதியயை தேர்வு செய்ய...

    (தருமி ஐயாவிற்கு நன்றி..)

    ReplyDelete
  12. //Email follow-up comments to dharumi2@gmail.com
    -இதை க்ளிக் செய்ய மறந்து போனதால் இந்தப் பின்னூட்டம் ... //

    அட! ஆமாம்!!!

    ரீப்பீட்டே..

    ReplyDelete
  13. அன்புள்ள கேஆர்எஸ்,
    நான் இதுவரை தங்களுக்கு பின்னூட்டம் இடாத வாசகன். தங்களது பதிவுகளில் வைணவம் தூக்கலாக இருப்பதுதான் குற்றம் என்றால் அதை கண்டிப்பாக ஒத்துக்கொள்ள முடியாது. ஆயினும் ஒரு விவாததிற்காகவாவது அதை ஒத்துக்கொண்டாலும் அதில் தவறேதும் இல்லை என்பது என் அபிப்பராயம். தில்லை அந்தணருக்கு எழுதிய கடிதம் ஒரு விமர்சனம் அதுவும் நீங்கள் தவறாக ஏதும் எழுதிவிடவில்லை. இந்து மதம் என்று எந்த ஒரு பழங்கால நூலிலும் குறிப்பிடப்படவில்லை. சைவம், வைணவம், கௌமாரம், காணாபத்யம், சாக்தம், சௌமாரம் என்று தான் நாமும் அறிந்து வந்திருக்கிறோம். இவ்வாறாக இருக்கும் போது இறைவனை பெருமாளாக கண்டு, அவர்தம் இயல்புகளையும், பெருமைகளையும், புகழையும் பாடிச் சிலிர்த்த ஆழ்வார்களைப்பற்றி பற்றி நிறைய எழுவதும் எப்படித் தவறாகும்? அறியும் சிவனும் ஒன்று என்று புரியாதோர் கூறுவதை தாங்கள் பொருட்படுத்த வேண்டாம். சமூக பார்வையும் ஆன்மிகம் சார்ந்ததாகவே இருப்பது தான் மதங்களின் பலம். அம்மனுக்கு கூழ் ஊத்துவதிலிருந்து, புஷ்பப்பல்லக்கு வரை அதில் சமூக பார்வை இருந்திருக்கிறது. சமூக பார்வையை தவறவிட்ட ஆன்மிகம் மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்துவிடும். அவ்வாறாக இழந்து தவிக்கும் போது தான் மகாபுருஷர்களும், ஞானிகளும் அவற்றை உயிர்ப்பித்தனர். இவ்வாறாக இருக்கும் பொழுது இதில் ஆன்மிகம் நீர்த்து போவதில்லை மாறாக அது காலத்திற்கேற்ற இன்னொரு மறுவடிவம் கொள்கிறது. ஆகவே கேஆர்எஸ் ஒரு ஆன்மிக பதிவரா என்றால் இல்லை அல்லது சமூக விமர்சக பதிவரா இல்லை. ஆபாசம் இல்லாமல் சமூக பார்வையில் ஆன்மிகம் எழுதும் இலக்கிய பதிவரா - ஆமாம் என்று கூறலாம். தூற்றுவார் தூற்றட்டும் எங்களைபோல் போற்றுவார் போற்றட்டும் தங்களது பணியினை தொடர்ந்து செவ்வனே செய்து வர எல்லாம் வல்ல மகா பிரத்யங்கிராதேவியை வேண்டிக் கொள்கிறேன்.
    - கண்டன் மணி கண்டன்.

    ReplyDelete
  14. யானை, தான் யானை என நினைக்கும் வரை
    யானைதான்,இதில் ஐயமில்லை.
    யானைக்கும் ஒரு பொறுமை எல்லை உண்டு.
    ஐயமிருந்தால் இந்த இடம் பார்க்கவும் http://www.youtube.com/watch?v=hvDZEd9G-40
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  15. //TBCD said...
    //எல்லாரும் , இந்து என்று கணக்கிற்கு காட்டிவிட்டு, நீ முருகனைக் கும்பிடுறே, நீ வைனவம், நான் சைவம், என்று கும்மியடிப்பதை, உலகிற்கு எடுத்துச் சொன்ன இடுகை என்பதால் நான் மகிழ்கிறேன்//

    நீங்க தானா அந்தச் சைக்கிள் கேப்பில் சேன்ட்ரோ ஓட்டுறவரு? :-)
    உலகிற்கு எதை எடுத்துச் சொன்னாங்க அண்ணாச்சி? சமயத்தில் பிளவுகள் இருக்குன்னா? இல்லையே!

    பதிவுலகில் இது போன்ற எண்ணங்கள் கொஞ்சம் தூக்கலா இருந்துச்சின்னா, அது சமயத்தின் அடிப்படையிலேயே பிளவு தூக்கலா இருக்குன்னு நிரூபிக்க படாதபாடு படறீங்க! :-)

    இது போன்ற ஒரு பேச்சு வரும்னு தெரிஞ்சி தான் நானும் அமைதி காத்தேன்!
    இறைமறுப்பாளர்களுக்குத் தின்ன அவல் கொடுத்த கதை ஆகிவிடக்கூடாதேன்னு இருந்தேன்.

    ஒரு பொதுவான விசயத்தை மூடி மூடி வைக்காம, ஆரோக்யமான சூழலில் விவாதிப்பது நல்லது தானே? அது தானே பகுத்தறிவு! அதை நம்புறீங்கல்ல?
    அப்படி நம்பினால், //உலகிற்கு எடுத்துச் சொன்ன இடுகை என்பதால் நான் மகிழ்கிறேன்// என்று மகிழ மாட்டீங்க!

    பதிவில் ஒருத்தன் ஆதங்கப்படும் போது, முதலில் அதுக்கு ஒரு நாலு வார்த்தை கூடச் சொல்லத் தெரியாம மகிழ்கிறேன் என்று மகிழும் உங்களை உங்கள் பகுத்தறிவே காக்கட்டும்!

    ReplyDelete
  16. //மதுரையம்பதி said...
    ஆனால் நீங்கள் எவ்வளவு காயப்பட்டிருக்கிங்கன்னனு உங்களது இந்த பதிவின் மூலம் தெரிகிறது//

    ஆமாங்கண்ணா! பல நாள் பூனைக்கு மணி கட்ட வேண்டியது! அடியேனே கட்டிட்டேன்!

    //உங்களது பின்னூட்ட பொங்குதல்களுக்கோ நான் ஏதேனும் காரணமாக இருப்பின் மன்னியுங்கள்//

    ஐயோ! இது என்ன பேச்சு? நீங்க ஒரு காரணமும் இல்லை!
    நீங்க செஞ்சது விவாதம் தான்!
    அது தான் வேணும்! போய்த் தேடி நக்கீரர் கிட்ட இருந்து கொற்றவைக்கு ஒரு தரவு கொண்டு வந்தீங்க பாருங்க! அது! மிகவும் மகிழ்ந்தேன்!

    ஆன்மீகக் குழப்பவாதி, அது இதுன்னு எல்லாம் நீங்க ஒரு வார்த்தை பேசுனீங்களா? இல்லையே!
    அப்புறம் எதுக்கு இந்த மன்னிப்பு? வாபஸ் வாங்குங்க! :-)

    ReplyDelete
  17. உங்க அளவிற்கு திறமையாக சுவர் மேலே கண்டசா ஒட்ட முடியாட்டியும், ஏதோ சேண்ட்ரோ ஒட்டுறேன்...அதுக்கும் தடையா..? :)

    ///
    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    நீங்க தானா அந்தச் சைக்கிள் கேப்பில் சேன்ட்ரோ ஓட்டுறவரு? :-)
    உலகிற்கு எதை எடுத்துச்
    ///

    இல்லை சமயங்"கள்" இருக்குன்னு... :D

    ///
    சொன்னாங்க அண்ணாச்சி? சமயத்தில் பிளவுகள் இருக்குன்னா? இல்லையே!
    ///

    நான் யாருக்கும் நிருபிக்கத் தேவையில்லாதபடி தான் நீங்களே எழுதிட்டிங்களே... :)))))

    ///
    பதிவுலகில் இது போன்ற எண்ணங்கள் கொஞ்சம் தூக்கலா இருந்துச்சின்னா, அது சமயத்தின் அடிப்படையிலேயே பிளவு தூக்கலா இருக்குன்னு நிரூபிக்க படாதபாடு படறீங்க! :-)
    ///

    இது மற்றொரு ஒப்புதல் வாக்குமூலம்.. :P

    ///
    இது போன்ற ஒரு பேச்சு வரும்னு தெரிஞ்சி தான் நானும் அமைதி காத்தேன்!
    ///

    உங்கள் பகுத்தறிவு வாதத்தில் எனக்கு சில உண்மைகள் தெரிந்தது..அதில் ஏதும் தவறு இல்லையே...

    ///
    ஒரு பொதுவான விசயத்தை மூடி மூடி வைக்காம, ஆரோக்யமான சூழலில் விவாதிப்பது நல்லது தானே? அது தானே பகுத்தறிவு! அதை நம்புறீங்கல்ல?
    அப்படி நம்பினால், //உலகிற்கு எடுத்துச் சொன்ன இடுகை என்பதால் நான் மகிழ்கிறேன்// என்று மகிழ மாட்டீங்க!
    ///

    என் முதல் வரியே அதைத் தான் சொல்லுது...உங்கள் ஆதங்கம், கோவம் தேவையற்றது. :)))))))))

    ///
    பதிவில் ஒருத்தன் ஆதங்கப்படும் போது, முதலில் அதுக்கு ஒரு நாலு வார்த்தை கூடச் சொல்லத் தெரியாம மகிழ்கிறேன் என்று மகிழும் உங்களை உங்கள் பகுத்தறிவே காக்கட்டும்!
    ///

    ReplyDelete
  18. நண்பர்களே
    இது என்னை நான் அறிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி தான்! என் பதிவுகளும் படைப்புகளும் அடுத்து என்ன செய்யலாம் என்ற ஒரு சிறு course correction!

    ஊர் ரெண்டுப்பட்டா...கொண்டாட்டம் கதையாக
    இதை வேறு திசையில் திருப்பி சைவ/வைணவ பேதம் ஆக்கவோ...இல்லை அது போன்ற வேறு பேதப்படுத்தும் முயற்சிக்கோ, நான் ஒரு போதும் துணை போக மாட்டேன்! அதனால் அது போன்ற எண்ணங்கள் ஏதாச்சும் இருந்தால் தயவு செய்து விட்டுவிடுங்கள்!


    ஆடல்வல்லானின் தூக்கிய திருவடியாம் இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்தின் மேல் உள்ள மாறா அன்பினால் விளைந்ததே இப்பதிவும், தில்லை கடிதப் பதிவும்!
    இதில் பேதங்கள் இல்லை! பேதங்கள் உருவாக்குவோர்க்கு இடமும் இல்லை!

    ReplyDelete
  19. ரவி,
    ஒரு எழுத்தாளனுக்கு என்ன எழுத வேண்டும் என்ற முழு சுதந்திரம் இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீங்க உங்க பாணியில உங்களுக்கு மனநிறைவை குடுப்பதை எழுதுங்க... :)) டென்ஷனை ஆவாதிங்க.. free ah viduga..

    ReplyDelete
  20. //////ஆடல்வல்லானின் தூக்கிய திருவடியாம் இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்தின் மேல் உள்ள மாறா அன்பினால் விளைந்ததே இப்பதிவும், தில்லை கடிதப் பதிவும்!
    இதில் பேதங்கள் இல்லை! பேதங்கள் உருவாக்குவோர்க்கு இடமும் இல்லை! /////////

    This is the curtain raiser !!!!!!!!

    ReplyDelete
  21. ரெண்டே விஷயம் கேஆர் எஸ்,
    // போலீஸ் கூட, அவ்வளவு களேபரத்திலும், விதிகளை மதித்து, சட்டையைக் கழட்டிவிட்டுத் தான் அம்பலத்துக்குள் போகிறது!//
    அப்படி நடக்கவில்லை. வெளியான படங்களை பாத்துக்கொள்ளலாம். எஸ்பி தள்ளப்பட்டது, எண்ணை எறிந்தது எல்லாம் அதனால்தான். அந்த காட்சியை காண வெளிட்ட படங்களை பார்த்தால் புரியும். அப்புறம்தான் இதுதான் பிரச்சினை என்று போலிஸ் சட்டையை கழட்டினார்கள்.

    // விவாதங்கள் அவசியம் தேவை! //
    அவசியமே இல்லை. ஆன்மீகம் பெரிய கடல். அதில் நாம் ஒரு ஓரத்தில் இருக்கிறோம். விவாதங்கள் கவனத்தை திருப்பி இறை நாட்டத்தைதான் கெடுக்கும்.
    ஏதோ நிறைய off-screen சமாசரம் இருப்பது புரிகிறது. அதனால் நான் ஏதும் எழுத விரும்பவில்லை. எழுத வேண்டியது ஏற்கெனவே எழுதி ஆயிற்று.

    ReplyDelete
  22. ம்ம்ம்ம்ம்., பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் விளையாட்டாய் ஆரம்பித்தது, கொஞ்சம் வினையாய் முடிஞ்சிருக்குனு உங்க பதிவிலே இருந்து தெரிய வருது, அதுக்கு நானும் ஒரு காரணமோ? எப்படி இருந்தாலும், இதுவும் கடந்து போகும்! காத்திருக்கோம், நீங்க மீண்டு வந்து பதிவிட. அதானா இம்முறை வரப்போவதைக் கூடச் சொல்லவே இல்லை? :(((((((((((((((((((((((((((

    ReplyDelete
  23. ரவி, இந்தப் பதிவு சூடான பதிவுதான். சுடச்சுட இருக்கே. :)

    சரி. என்னோட கருத்துகளைச் சொல்லீர்ரேன். எல்லாக் கருத்துகளும் ஒன்னோட ஒன்னு தொடர்பு இல்லாமக் கூட இருக்கலாம். அங்கங்க பாயிண்டு பிடிச்சிருக்கேன். அவ்ளோதான்.

    // ஒரு படைப்பாளியின் கருப்பொருளைத் தீர்மானிக்கும் உரிமை யாருக்கு என்பதும் உங்களுக்கே தெரியும்! //

    உண்மைதான். படைப்பாளிக்கே உரியது. அதன் மீதான கருத்துச் சொல்லும் உரிமை படிப்பாளிக்கே உரியது அல்லவா.

    // வாரியாரைப் போய் பெருமாள் மீதும் காலட்சேபம் பண்ணுங்க! வேளுக்குடி சுவாமியிடம் போய் வள்ளித் திருமணம் விரிவுரை பண்ணுங்க-ன்னு எல்லாம் கேட்பது எவ்வளவு அபத்தம்? //

    வேளுக்குடிச் சாமி வள்ளி திருமணம் பேச்சு செஞ்சாரான்னு தெரியாது. ஆனா வாரியார் கண்ணன் மேலையும் பெருமாள் மேலையும் செஞ்சிருக்காரு. ராமாயணம் விரிவுரையும் கதை சொல்லீருக்காரே. குமரன் கூட வாரியாரே ராவணனைத் திருடன்னு சொல்லீருக்காருன்னு எழுதீருக்காரே.

    // எண்ணிக்கையில் அவை உங்களுக்குப் போதவில்லையா? ஒவ்வொரு வலைப்பூவிலும், முருகனருளில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு, அம்மன் பாட்டில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு என்று கணக்கு சமர்பிக்க வேண்டுமா? சொல்லுங்கள், சமர்பிக்கிறேன்! //

    தேவையில்லைன்னு நெனைக்கிறேன். பட்டியலை வெச்சு முடிவுக்கு வர்ரது ஸ்கேலால அளந்து பாத்து மதிப்பெண் போடுற மாதிரி. ஆகையால இதை நீங்க செய்ய வேண்டாம் என்பது என் கருத்து.

    // உண்மையாலுமே, KRS சைவ/வைணவம் பார்ப்பவன் இல்லைன்னு உங்களுக்கும் தெரியும்!
    தில்லை=சைவம்! அதுனால நைசா சைக்கிள் கேப்புல வைணவத்தைக் கம்பேர் பண்ணி சைவத்தைத் தாழ்த்திறலாம் என்கிற மட்டமான எண்ணம் உடையவனா அடியேன்?
    ராமர் பாலம் வைணவம் தானே? ராமானுசர் இருந்திருந்தால் பொது நலனுக்குப் அணையைக் (பாலம் மெய்யோ/பொய்யோ - அது வேற விஷயம்) கொடுத்து விடு-ன்னு சொல்லி இருப்பாரு-ன்னு பதிவு போட்டேனே! அப்போ அடியேனோட Hidden Vainava Agenda-வை யாரும் சுட்டிக் காட்டலையே? //

    ராமர் பாலம் குறித்தான உங்கள் பதிவு எவ்வளவு சரியானதோ அவ்வளவு சரியானதே தில்லைப் பதிவும். வைணவக் கோயில்களின் நிலை தெரியாது. ஆனால் பெரும்பாலான சைவக் கோயில்களில் தமிழுக்கு இன்னும் முதல்மரியாதை இல்லை என்பதே உண்மை. மூவிரு முகங்கள் போற்றீன்னு யாரு அருச்சனை பண்றாங்க? ஓம் ஸ்கந்தாய நம..குகாய நம..கார்த்திகேயாய நமதானே நமநமக்குது. அது பத்தி நாந்தான் சொல்லனும்னு இல்லை. நீங்களும் சொல்லலாம். வேற யாரும் சொல்லலாம். உங்களுக்கும் அந்த உரிமை உண்டு.

    // தமிழ்க் கடவுள்- இல்லன்னு யாரையும் பதவி இறக்கல! இவரும் தமிழ்க் கடவுள் தான் என்று தமிழ் இலக்கியத் தரவுகளை முன் வைக்கிறோம்!
    தரவுக்கு எதிர் தரவு வைப்பது ஒரு வகை! தரவினை மறுப்பது ஒரு வகை!
    ஆனால் ரெண்டும் செய்யாம "இவருக்கு ஏதோ ஆசைப்பா! சொல்லிக்கிராரு! சொல்லிட்டுப் போகட்டம்" என்று, இங்கும் ஆட்களுக்கு attributing motive தான் நடக்குதே தவிர, பயனுள்ள விவாதம் நடக்குதா? //

    நாம் ஒத்துப்போகாத விடயம் இதுதான். மாலனும் தமிழர்க்கடவுளேன்னு நிரூபிக்க நீங்க விரும்புறீங்க. அதைச் சொல்லிக் கோங்கன்னு விட்டுர்ரதுதான் என் எண்ணம். அவ்ளோதான். தரவு கொடுத்ததும் அதை அலட்சியப்படுத்துறதா நெனைக்கக் கூடாது. அதை வெச்சு வாதம் செய்ய விருப்பம் இல்லை. அவ்ளோதான். ஆகையால உங்க விருப்பப்படி செய்ங்கன்னு சொன்னேன். அதை நீங்க எந்த வகையில எடுத்தாலும் வருத்தமில்லை. நீங்க சொன்ன ரெண்டு வகைக்குள்ளதான் நாங்க வரனும்னு நீங்க எதிர்பார்க்கவும் கூடாது. இன்னும் கூட உங்க கருத்தை மறுக்க நிறைய கருத்துகள் இருக்கு. வீண் சண்டை தேவையில்லைங்குறதாலதான் ஒதுங்கி இருக்கிறேன். அதை அலட்சியபடுத்துதல்னோ அசிங்கப்படுத்துதல்னோ நீங்களோ வேற யாரோ நெனச்சாங்கன்னா.... மன்னிச்சிருங்கய்யா.

    // உண்மையாலுமே, KRS சைவ/வைணவம் பார்ப்பவன் இல்லைன்னு உங்களுக்கும் தெரியும்! //

    இது மிகவும் idealistic நிலை. அதாவது உன்னதமான நிலை. உன்னதம்னு சொல்றதே கற்பிதம். நானும் கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணேன்னு உருகுகின்றவந்தான். ஆனாலும் முருகனருள் முன்னிற்கும்னு மூழ்குறவன். நீங்களும் பதிவுகள் நெறைய போட்டாலும் வைணவம் முன்னிற்பது இயல்பே. அது தவறென்று சொல்ல முடியாது.

    கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பதிவுல நாங்க அந்தப் பக்கம் வர்ரோம். அவங்க இந்தப் பக்கம் வருவாங்களான்னு கேட்டீங்க. உள்ளபடிக்கு பாத்தா முருகன் இலக்கியங்கள்ள பெருமாளைப் போற்றி நெறைய எடுத்துக்காட்டலாம். ஆனா எந்தப் பெருமாள் இலக்கியத்துல முருகனை எடுத்தாண்டுருக்காங்கன்னு சொல்ல முடியும்னு எனக்குத் தெரியலை. பகழிக்கூத்தர்னு சொன்னாலும் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் எழுதி அதுல பெருமாளையும் புகழ்ந்தாரு. திருமாலிருஞ்சோலை பிள்ளைத்தமிழ் எழுதி முருகனைப் புகழ்ந்தாரான்னு தெரியாது. இப்பிடியெல்லாம் விவாதம் செஞ்சுக்கிட்டேயிருக்கலாம். ஆனா அதெல்லாம் எதுக்குன்னுதான் தோணுது. இதுதான் என்னுடைய நிலை.

    சுருக்கமாச் சொன்னா... நீங்க எழுதுறதும் எழுதாததும் உங்க விருப்பம்.

    ReplyDelete
  24. \\சந்தோஷ் = Santhosh said...
    ரவி,
    ஒரு எழுத்தாளனுக்கு என்ன எழுத வேண்டும் என்ற முழு சுதந்திரம் இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நீங்க உங்க பாணியில உங்களுக்கு மனநிறைவை குடுப்பதை எழுதுங்க... :)) டென்ஷனை ஆவாதிங்க.. free ah viduga..
    \\\

    ரீப்பிட்டு ;))

    ReplyDelete
  25. ப்ரீயா வுடு மாமே

    கேப்டன் ரேஞ்சுக்கு உங்களை நியாபடுத்திப் பொங்கிட்டீங்களே. அவரவர் சுதந்திரங்களில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. உங்களைப் போல ஒவ்வொரு பதிவருக்கும் இம்மாதிரி அச்சுறுத்தலோ அல்லது கண்டனங்களோ இருக்கும், மற்றவர்களுக்காக நம்மையெல்லாம் மாற்றமுடியாது.

    ReplyDelete
  26. //குமரன் கூட வாரியாரே ராவணனைத் திருடன்னு சொல்லீருக்காருன்னு எழுதீருக்காரே.
    //

    இராகவன்.

    எனக்கு மறதி அதிகம். இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறுன்னு ஒரு இடுகை இட்ட நினைவு இருக்கு. வாரியார் சுவாமிகள் இராவணனைத் திருடன் என்று சொன்னதா எழுதினதைப் பற்றி மறந்து போச்சு. எங்கே எழுதினேன்னு உங்களுக்கு நினைவு இருக்கா? சரியான தரவோட தான் சொல்லியிருக்கேனா இல்லை போற போக்கில சொல்லிட்டு விட்டிருக்கேனான்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு. :-)

    ReplyDelete
  27. இரவிசங்கர்,

    இந்த இடுகையில் சொன்னவை எல்லாம் ஏற்கனவே நீங்கள் பின்னூட்டங்களில் சொன்னவை தான். அப்போதே என் பதில் கருத்துகளையும் சொல்லிவிட்டேன்.

    கடவுள் மறுப்பாளர்கள் தவறான புரிதல்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையை நம்பிக்கையாளர்கள் கொள்ளும் போது வலையுலக நம்பிக்கையாளர்களில் பெயர் பெற்றவர்கள் ஓரிருவர் நம்பிக்கையாளர்களின் பொதுவான நிலையிலிருந்து மாறுபட்டு தங்களுக்கு நியாயம் என்று தோன்றுவதைப் பேசும் போதும், நிலைநாட்டப்பெற்ற ஒரு கருத்தை மறுத்து மாற்றுக் கருத்து சொல்லும் போதும் இப்படிப்பட்ட குழப்பங்கள் நிகழ்கின்றன என்று நினைக்கிறேன்.

    நம்பிக்கையாளர்களில் பெயர் பெற்ற நீங்கள் மூவருமே இப்படி பேசினால் எப்படி? நல்லவங்க தான் நீங்க ஆனா ஒரு குழப்பத்துல என்ன பண்றோம்ன்னு தெரியாம சிலது செஞ்சுடறீங்கன்னு மயிலை மன்னாரு வலைச்சரத்துல சொன்னாரு. அது என்னை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஏனென்றால் இந்தக் கருத்து முன்பு இல்லை; இப்போது இருக்கிறது; விரைவில் மாறிவிடும் என்று தெரியும். உங்களை அது நிறைய பாதித்திருக்கிறது. இப்படியே ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு நானே இன்னொரு இடுகை இட்டு ரிபிசிடியை மகிழ்விக்கலாம் (இந்த வரி மட்டும் அவரை கலாய்க்கச் சொல்லியது. :-) )

    வலையுலக நம்பிக்கையாளர்களில் தலைசிறந்தவராகவும் (?!!) பெயர் பெற்றவராகவும் (!!!) இருக்கும் இரவிசங்கர் இப்படி எல்லாம் பேசலாமா என்று நம்பிக்கையாளர்கள் எண்ணி சில வார்த்தைகளை விட, நான் மிகவும் மதிக்கும் எஸ்.கே ஐயா, ஓகை ஐயா, கீதாம்மா, நண்பன் ஜீரா போன்றவர்கள் என்னை இப்படி சொல்லலாமா என்று நீங்கள் பொங்கியிருக்கிறீர்கள். நீறு பூத்த நெருப்பாக இது இருக்கிறது என்பது உண்மை தான். எதில் தான் நீறு பூத்த நெருப்பு இல்லாமல் இருக்கிறது? எஸ்.கே. ஐயா எழுதும் ஒவ்வொரு எழுத்தும் எனக்குப் பிடித்திருக்கிறதா? கீதாம்மா எழுதும் ஒவ்வொரு எழுத்தும் எனக்குப் பிடித்திருக்கிறதா? நண்பர் இராகவன் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் எனக்குப் பிடித்திருக்கிறதா? நான் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் தான் உங்களுக்கும் இராகவனுக்கும் எஸ்.கே. ஐயாவிற்கும் கீதாம்மாவிற்கும் இன்னும் வலையுலகில் நம்பிக்கையைப் பற்றி பேசும் அன்பர்களுக்கும் பிடித்திருக்கிறதா என்ன? அவ்வப்போது விமர்சனங்கள் வரத் தான் செய்யும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரைப் பற்றி ஒவ்வொரு மனத் தோற்றம். 'நான் என்பது மூன்று வகை நான்கள். நான் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் நான். நான் என்று மற்றவர் நினைக்கும் நான். உண்மையிலேயே நான் எப்படி இருக்கிறேனோ அப்படிப்பட்ட நான்' இந்த மூன்று வகையும் இருக்கத் தானே செய்கிறது. இந்த மூன்று வகை நான்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா?

    நானும் சில நேரங்களில் மனத்தில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லியும் இடுகைகள் இட்டும் நண்பர்களை இழக்கிறேன். நீங்களும் அப்படி செய்யலாமா? செய்ய வேண்டுமா? நீறு பூத்த நெருப்பாக இருப்பதை அணைக்க என்ன வழி என்று நினைக்காமல் அதனைக் கிளரிவிட்டு கொழுந்து எரியச் செய்யும் வகையில் இப்படி தன்னிலை விளக்கம் சொல்கிறேன் என்று எழுதலாமா? நீறு பூத்த நெருப்பாக இருந்தது இனி மேலும் இருக்கும். அதில் எந்த வித மாற்றமும் நேராது. நீங்கள் இப்படிப் பொங்கியதால் எஸ்.கே. ஐயா, ஓகை ஐயா, கீதாம்மா, இராகவன் போன்றவர்கள் இனிமேல் விமர்சனம் செய்யாமல் போகலாம்; இனிமேல் விமர்சனம் செய்யலாம் என்று எண்ணிய மற்றவர்கள் இனி மேல் செய்யாமல் போகலாம். மற்றபடி நீறு பூத்த நெருப்பு இனிமேலும் அப்படியே தான் இருக்கும். இப்படிப் பொங்கியதால் விளைந்த நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  28. நீங்கள் எழுதுவதும் எழுதாததும் உங்கள் விருப்பம் என்று இராகவன் சொல்லியிருக்கிறார். நான் அதனை கடுமையாக மறுக்கிறேன். இராகவனும் இரவிசங்கரும் ஆன்மிகம் எழுதாவிட்டால் அது என்னைப் போன்றவர்களுக்குப் பெருத்த நட்டம். ஏற்கனவே இராகவன் 'நான் ஆன்மிகப் பதிவர் இல்லை. இனி மேல் ஆன்மிகம் எழுத மாட்டேன். ஆன்மிகம் பேச மாட்டேன்' என்று அளப்பரை விட்டுக் கொண்டிருக்கிறார். நீங்களும் அப்படி அளப்பரை விட்டால் அது அந்த இறைவனுக்கே அடுக்காது. சொல்லுவதைச் சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  29. //நான் என்பது மூன்று வகை நான்கள். நான் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் நான். நான் என்று மற்றவர் நினைக்கும் நான். உண்மையிலேயே நான் எப்படி இருக்கிறேனோ அப்படிப்பட்ட நான்'//
    பொருள் பொதிந்த பின்னூட்டம்!

    ReplyDelete
  30. பங்காளி சண்டையா ?

    ஏற்கனவே ஆறிய ஊசிப்போன என்ற சண்டைகள் நடக்கிறது. இதுல நாம வேற பங்காற்றனுமா ?

    இரவியின் உணர்வுகள் ஞாயமானதாக தெரிந்தாலும், இரவி உணர்ச்சி வசப்படுவதை நான் ஏற்கவில்லை :)

    வரம் கொடுக்கும் சாமிக்கே கோவம் வரலாமா ? உங்கள் சலனம் எனக்கு வியப்பளிக்கிறது :(

    எஸ்கே ஐயா எதாவது சொன்னா லூசில் விடுங்க, அவர் எதையும் மனசில வச்சிக்காம அதே போல் இங்கிதம் இல்லாமல் பேசிடுவார். மறுநாளே மறந்துட்டு எப்போதும் போல் அன்பாக பேசுவார். அவரெல்லாம் மேட்டரே இல்லை. நான் வேண்டுமானால் அவரை ஒரு தட்டு தட்டவா ? :)

    நம்ம இராகவன் எதையும் உள்னொக்கம் வச்சிப்பேசமாட்டார்.
    அவர் என்ன சொன்னார் என்று முழுவதுமாக படிக்கவில்லை. ஆனால் உறுதியாக நான் அறிந்தவரை ஒரு கருத்தாக சொல்லி இருப்பார், கிண்டலுக்கு சொல்லி இருப்பார்.
    அப்படியே இருந்தாலும் அவரோட மீன் குழம்பு, எறா தொக்கு பற்றி கலாச்சுட்டா போச்சு.

    மற்றவர்களிடம் நான் பழகியதில்லை.

    ReplyDelete
  31. என் பேரை இப்படிச் சொல்லுவதற்கு ஏதாச்சும் தரவு வைத்து இருக்கீங்களா குமரன் ஐயா. :P

    //
    அதற்கு நானே இன்னொரு இடுகை இட்டு ரிபிசிடியை மகிழ்விக்கலாம் (இந்த வரி மட்டும் அவரை கலாய்க்கச் சொல்லியது. :-) )
    //

    ReplyDelete
  32. KRS,
    எழுத்தாளன் - எழுத்து சுதந்திரம் - என்பதையெல்லாம் தாண்டி - ஆன்மீகம்/சமூகம் போன்றவற்றை எழுதுவதில் ஒரு பொறுப்பு இருக்கிறது. குமரனின் புல்லாகி பூண்டாகி பதிவில் திரு.ஜீவி சொல்லியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்...அது போல.
    நீங்கள் தவறுகிறீர்களா/விலகுகிறீர்களா என்றெல்லாம் கருத்துச் சொல்ல அனுபவமோ, அறிவோ எனக்கில்லை. அவை வாய்க்கப்பெற்ற சான்றோர் துணை நாடவும். அவை நிச்சயம் உதவும்.

    ReplyDelete
  33. இப்ப மெட்ராஸ்ல தானே இருக்கீங்க? எந்த ஏரியால?? எங்க இருந்தாலும் பரவாயில்ல...ரோட்டோரமா இளநீர் வித்துட்டிருப்பாங்க...உங்களைப் பார்த்தா ரொம்ப நல்லவனா தெரியுதுன்னு பொள்ளாச்சி இளநீன்னு பொய் சொல்லி பதினஞ்சு-இருபது ரூபா சொன்னாலும் சொல்வாங்க..உங்க தெறமைய உபயோகிச்சு பேரம் பேசி இளசா ஒன்னு வாங்கி ஏக் தம்ல குடிங்க...கூலாயிருவீங்க.

    ReplyDelete
  34. ரௌத்ரம் பழகு-----பாரதியார்

    ReplyDelete
  35. கேஆர்ஸ் தூண்டப்பட்ட விளக்குதான் நன்றாக நின்று பிரகாசமாக் எரியும்

    ReplyDelete
  36. தம்பி KRS, என்ன ஆச்சுன்னு எனக்குப் புரியவே இல்லை. நான் பாக்கிற வரைக்கும், உங்கள் பின்னூட்டங்களில் எத்துணை விழுக்காடு இப்படி சொல்லுகிறார்கள்? எதுக்கு இப்படி ஆற்றாமை ந்னு புரியல? (காபி/டீ சூடா?)

    //அந்தச் சைக்கிள் கேப்பில் சேன்ட்ரோ ஓட்டுறவரு? :‍)// இது தான் நடக்கும்:‍-(

    எதுக்கு இந்த மாதிரி பதிவு? யாரோ ஒரு ஆள் உங்க கருத்தை ஒத்துக்கவில்லை என்றா? எல்லாருக்கும் நல்ல பிள்ளையாய் இருக்க வேண்டும் என்று மற்றவர்களை விட நீங்கள் தான் எதிர்பார்க்கிறீர்களோ?

    "உங்க தமிழல்லாத கடவுள்" அரங்கன் அருள் வேணுமில்ல! இந்த வேலையை நிறுத்திட்டு, குடைபிடித்த கதை இரண்டாம் பகுதி போடுங்க. அப்புறம் மேலே வோட்டுப் பெட்டியில் கைவரிசையை காட்டிட மாட்டோம்!! நிசமாவே ஆப்பு வச்சிட மாட்டோம்!!

    கேஆரெஸ் "நண்பர்" படையே, திறனைக் காட்டு! குக்கி களைந்து திரும்பி வோட்டு!

    //ஏக் தம்ல குடிங்க...கூலாயிருவீங்க.//ரிபீட்டே!

    ReplyDelete
  37. சரவண பவன்ல எல்லாம் பொங்கலுக்கு காசு குடுத்தா பொங், மட்டும்தான் அவ்ளோதான் தருவாங்க. அவ்வளவுதான் இருக்கும் அவுங்க அளவு, ஆனாலும் பொங்கல் இல்லாமலயா இருக்கு சரவணபவன்?

    ReplyDelete
  38. //ரிபீட்டே//

    நாம அந்தக் காலத்துல (அதாவது இந்த ரிப்பீட்டே பாட்டு வர்றதுக்கு முன்னாடி) சொல்லிக்கிட்டு இருந்த 'வழிமொழிகிறே'னைச் சொல்லலாமே? :-)

    றிபிசிடி கூட இதைப் பரிந்துரை செஞ்சிருக்காரு.

    ***

    றிபிசிடி,

    றிபிசிடின்னு தான் எழுதியிருக்கணும். ரிபிசிடின்னு தப்பா எழுதிட்டேன். 'ஈழத்தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் வேறுபாடு ', 'றொரென்ரோ' என்று ஏதாவது ஒன்றை கூகிளிட்டுப் பாருங்கள். நீங்கள் கேட்ட தரவுகள் கிடைக்கும். நாம் (தமிழகத் தமிழர்) T என்பதற்கும் D என்பதற்கும் தமிழில் டி என்றே எழுதுகிறோம். ஈழத்தவர் T என்பதற்கு றி என்றும் D என்பதற்கு டி என்றும் எழுதுகிறார்கள். சில நேரம் T என்பதற்கு ரி என்றும் எழுதிப் பார்த்திருக்கிறேன். ஈழத்தவர் எழுதுவதை அவதானித்தால் இதனைப் பார்க்கலாம். இந்த அடிப்படையில் தான் உங்களை ரிபிசிடின்னோ றிபிசிடின்னோ அழைக்கிறேன். :-)

    ReplyDelete
  39. //இந்த அடிப்படையில் தான் உங்களை ரிபிசிடின்னோ றிபிசிடின்னோ அழைக்கிறேன்.//

    உடனே கேக்கக் கூடாது நீங்களோ நானோ ஈழத்தவர் இல்லையேன்னு. இது நல்ல முறையா இருந்ததால பயன்படுத்திக்கத் தொடங்கிட்டேன். குறிப்பா Tயும் Dயும் இருக்கும் உங்க பேருக்கு. உங்களுக்கு அதுல எந்த வருத்தமும் இருக்காதுன்னு நினைக்கிறேன். :-) சரி. இந்தப் பேச்சைத் தொடர்றதா இருந்தா நம்ம பதிவுகள்ல வச்சுக்கலாம். :-)

    ReplyDelete
  40. //ரௌத்ரம் பழகு-----பாரதியார்//

    திராச ஐயா, சரியாச் சொல்லிட்டாரு! ஒத்தை வரியில! சூப்பர்!

    ReplyDelete
  41. //குசும்பன் said...
    அட KRS யை இப்படி பொங்கி எழ வெச்சுட்டீங்களேப்பா, இன்னைக்கு எத்தனை தல உருள போவுதோ!!!:)))//

    நான் பொங்குவதால் தல எல்லாம் உருளாதுங்க மாப்பிள்ளை! தேர் சக்கரம் வேணும்னா உருளும்! :-)))

    //யாரிடம், எதுக்காக சமர்பித்து என்ன ஆகவேண்டும். அப்படியே சமர்பிப்பது என்றால் விஜயகாந் போல் கணக்கு சொன்னால் போதும்:))
    //

    ரமணா கணக்கா குசும்பரே? செஞ்சிரலாம்! :-)

    ReplyDelete
  42. //கோவி.கண்ணன் said...
    குறை சொல்பவர்கள் எங்கும் உண்டு.
    உங்களைப் பற்றி அனைவரும் அறிவார்கள், பிறகு ஏன் இந்த தன்னிலை விளக்கம்//

    அப்படி இல்லீங்கண்ணா...
    ஒவ்வொருத்தருக்கும் என்னிடம் ஒவ்வொரு "எதிர்"பார்ப்பு! தனித்தனியாச் சொன்னாலும் ஒருத்தர் விளக்கம் இன்னொருத்தருக்குத் தெரியப் போவதில்லை! அதான் பொதுவில் வைத்தேன். யாரையும் திட்டல! அவதூறு பரப்பல! நல்ல விசயம் தானே சொல்லுறோம்! அதான் துணிஞ்சி மணி கட்டிட்டேன்!

    ReplyDelete
  43. //விடாது கருப்பு said...
    தாங்கள் இறைவனிடத்தில் அதிக காதல் கொண்டவர் என்றாலும் தாங்களும் வடமொழியை ஆதரிப்பீர்கள் என்று நினைத்திருக்கின்றனர் சிலர்.//

    நான் வடமொழியைக் கண்மூடித்தனமாக வெறுப்பவன் இல்லீங்க சதீஷ்! அப்படின்னா எதுக்கு சுப்ரபாதப் பதிவு போடப் போறேன்!

    ஆனா தமிழுக்குரிய இடம் தமிழுக்கு இருந்தே தீர வேண்டும்! அதைக் கெஞ்சிக் கூத்தாடி நயம் சொல்லி எல்லாம் வாங்கத் தேவையில்லை! இராமானுசர் போல் சமயத்துக்குள் இருந்து கொண்டே செய்யும் அதிரடி தான் பல சமயம் சரியா வொர்க்-அவுட் ஆகுது.

    //கவலை வேண்டாம் ரவி. எப்போதும்போல எழுதிக் கொண்டிருங்கள். பக்க பலமாக நாங்கள் என்றுமே இருப்போம்//

    நன்றி சதீஷ்!

    ReplyDelete
  44. //துளசி கோபால் said...
    என்னய்யா இப்படிக் கொதிச்சுப் பொங்கிட்டீர்?//

    பொங்கலோ பொங்கல்! :-)

    //அங்கே என் யானையைவேற தடவிப்பார்க்கிற சாக்கில் கொஞ்சம்பேர் இம்சிக்கிறாங்க போல இருக்கேய்யா!//

    ஆமாங்க டீச்சர்! தங்கள் தேடும் முயற்சிக்கு, இன்னொரு ஜீவனைக் கண்டுபுடிச்சி அதுவும் தாங்கள் நினைத்தது போலவே இருக்கணும் என்ற எதிர்பார்ப்பு தான்! தப்பு தான் அது!

    //ஆன்மீகமுன்ன என்னன்னு நிறையப்பேருக்கு புரிதல் இல்லைன்னு தெரியுது//

    ஆன்மா லயிக்கும் இடம் = ஆ+லயம்
    ஆன்மீகம்

    //கொஞ்சநாள் எல்லாரையும் மவுன விரதம் இருக்க சொல்லணுமோ:-))))//

    மவுன விரதம் போது சாப்பிடலாம் இல்லீங்களா?

    ReplyDelete
  45. //dubukudisciple said...
    நாம் எழுதுவது நம்முடைய திருப்திக்காகவே தவிர மற்றவரை திருப்தி படுத்த இல்லை..//

    அக்கா
    இது ஓரளவு உண்மை தான் என்றாலும்...நாம மட்டும் திருப்தி அடைஞ்சாப் போதும் என்ற போக்கு ஆன்மீகப் பதிவுகளுக்குச் சரியா வராது...

    பலரும் இறையருளில் இன்புற வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருந்தாத் தான் ஆன்மீக ஈடுப்பாட்டில் வெற்றியடைய முடியும்!
    அது பதிவாகட்டும் சரி, காலட்சேபம் ஆகட்டும் சரி, ஆலயப் பூசை ஆகட்டும் சரி!

    இறைவனை அலங்கரிப்பதே எல்லாரும் கண்டு இன்புற வேண்டும் என்பதால் தானே!
    அர்ச்சகர் மட்டும் பாத்துக்கிட்டாப் போதும்-னா எதுவும் தேவை இல்லையே!

    அடியேன் பதிவுகளைச் சும்மா போட்டாலும் கூட, அதையும் ஒரு அலங்காரமாகத் தான் பாவிக்கின்றேன்!

    //பெரியாரின் கொள்கைகள் எல்லாராலும் ஏற்று கொள்ள முடியாதவை அதற்காக அவர் மீது கோபித்து கொள்ள முடியுமா? அது போல தான்..//

    உண்மை! அவரவர் கொள்கைகள் இன்னொருவரின் நியாயமான உரிமைகளைப் பறிக்காமல் இருக்கும் வரை, அனைத்தும் இயங்கும்!
    இல்லை இது ஒன்றே வழி! அதையே ஏன் செய்கிறாய்? நான் சொல்வதைச் செய் என்றெல்லாம் வரும் போது தான் இயக்கம் தடைபடுகிறது!

    ReplyDelete
  46. //தருமி said...
    டொக் .. டொக் ..//

    வாங்க தருமி ஐயா வாங்க! நல்வரவு! (ஒண்ணுமில்லை; கோபமாய் இருந்தாலும் வரவேற்பை அடியேன் மறக்க மாட்டேன்) :-)

    //இப்பதிவில் அடியேன் மொத்தம் 18 இருக்கிறது. இந்த அளவு பவ்யம், தாழ்மை தேவையா?//

    அடியேன் என்று சொல்வது தாழ்மை இல்லீங்க ஐயா!
    அடியேன் என்றால் அடிமை-ன்னு நினைச்சிக்கிறாங்க. இல்லை!
    அடியேன் என்றால் இறைவன் அடிகளைப் பற்றிக் கொண்டேன், பற்றிக் கொள்ள விழைகிறேன்னு தான் பொருள்!

    //நாத்திகர்கள் உருவாவதும் உண்டு என்று நினைக்கிறேன். அடியேன் அப்படி ஒரு கேசுன்னு நினைக்கிறேன்//

    உருவாவது உயிர் ஒன்று மட்டும் தான் ஐயா!
    அந்த உயிரின் பயணத்துக்கு உருவாக்கப்படுபவை தான் பலதும்!
    ஆத்திக/நாத்திகம் உட்பட!

    உருவாக்கப்படுவதில் தவறொன்றும் இல்லை! அப்படி உருவாக்கப்படுபவை நல்ல கருவாக்கவும் படவேண்டும்!

    //நீங்கள் நாத்திகராக இருந்து ஆத்திகனாக மாறியதாகக் கூறியுள்ளீர்கள். எப்படி இது நடந்தது என்பதறிய ஆவல்.//

    நாவல் போட்டுறட்டுமா? சுவாரசியம் குன்றாது! வீட்டு கலாட்டா, அம்மா அப்பா எமோஷன், வெளியில் கலாட்டா, ஆத்திக வேடதாரிகள், நாத்திக வேடதாரிகள்-ன்னு பல கேரக்ட்ரகள் வச்சி ஒரு சீரியலே போட்டுறலாம்... :-)

    உங்களுக்காகச் சுருக்கமாச் சொல்லணும்னா..பதிவில் சொல்லி இருக்கேன் பாருங்க!
    //ஏட்டில் உள்ளதை எல்லாம்
    இந்த நாட்டில் கொண்டு வந்த இயக்கம் - சாதி தாழ்த்தாமை, தமிழ் தாழ்த்தாமை, அடியார் பழியாமை - இவை தான் நாத்திகனை ஆத்திகன் ஆக்கியது! அதனால் தானோ என்னவோ இராமானுசரைப் பற்றிச் சொல்லப் புகும் போது, என் பதிவுகளில் வைணவ வாடை வீசுதுன்னு நினைச்சிக்கறீங்க போல//

    //குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு//

    சேச்சே...இதிலென்ன இருக்கு! கேள்வி தானே கேட்கறீங்க! டேய் அதை ஏண்டா பண்ற குழப்பக்காரா-ன்ன்னு சொல்லலையே! தாராளமாக் கலந்துரையாடலாம்!

    ReplyDelete
  47. //மதுரையம்பதி said...
    //Email follow-up comments to dharumi2@gmail.com
    அட! ஆமாம்!!!
    ரீப்பீட்டே..//

    வெளையாட்டு அண்ணனுங்கப்பா சாமீ! :-))

    ReplyDelete
  48. ரவி,

    நான் எல்லாம் ஒரே ஒரு பதிவு போட்டதுக்கே தமிழறிஞர் அப்படின்னு பட்டம் எல்லாம் வாங்கி இருக்கேன். அதனால எனக்கு இங்க பேச தகுதி இருக்குன்னு வெச்சுக்கலாம்.

    ஐயா, நாம நமக்குத் தெரிஞ்சதைத்தான் எழுதணும். இல்லை தெரியாததை எழுதி புதசெவின்னு போட்டு தெரிஞ்சுக்கப் பார்க்கலாம். ஆனா புதசெவி போட்டா போதாது. தெரிஞ்சுக்கணும் அது முக்கியம்.

    அதே மாதிரி நம்ம எழுதினதில் தப்பு இருந்தா அதைச் சுட்டிக்காட்டி சரியானது எதுன்னு சொல்லணும். அது இல்லாம இதை எழுதக் கூடாது அதை எழுதக் கூடாதுன்னு எல்லாம் சொல்லறது தப்பு.

    அடுத்தவங்க மனசு புண்படாம இருக்கா, தனி மனித தாக்குதல் இல்லாம இருக்கா, ஆபாசம் இல்லாம இருக்கா, அவ்வளவுதான். ஓக்கே ரைட்ஸ் அப்படின்னு டபுள் விசில் குடுத்துட்டுப் போய் கிட்டே இருக்கணும்.

    அதெல்லாம் இல்லாம மத்தவங்க எதாவது சொன்னாங்கன்னா அதில் நமக்குத் தேவையானதை, சரியானதை எடுத்துக்கிட்டு மத்ததை எல்லாம் விட்டுட்டுப் போயிடணும்.

    இவ்வளவு எல்லாம் உணர்ச்சிவசப்பட்டா ரத்தக் கொதிப்புதான் வரும். கானா பிரபா நம்ம ட்ரேட் மார்க் வசனத்தை ஏற்கனவே சொல்லிட்டாரு. இருந்தாலும் Freeயா விடு மாமே!!

    ReplyDelete
  49. //பொதுவா நான் பதிவுலக அரசியல், பின்னூட்ட விளையாட்டுகளில் அதிகம் புழங்காதவன்.//

    அதான் இந்த வாரம் பல பதிவுகளில் அரசியலும் செஞ்சாச்சு பின்னூட்ட விளையாட்டும் விளையாடியாச்சு. அதனால இனிமே இதெல்லாம் சொல்லக்கூடாது.

    ஆனா பின்னூட்ட விளையாட்டு மட்டும் தொடர்ந்து ஆடணும். ஓக்கேவா?

    ReplyDelete
  50. மீண்டும் ஒரு 50 அடித்து நன்றியுடன் விடைபெறுவது உங்கள் நண்பன் கொத்ஸ்!!

    ReplyDelete
  51. ஆனா ஒண்ணுய்யா, இம்புட்டு நாள் நீரும் எழுதிக்கிட்டு இருந்தீரு. ஆனா இந்தப் பதிவுக்கு வராதவங்க எம்புட்டு பேரு வந்திருக்காங்க. ஜூப்பரு!! :)))

    ReplyDelete
  52. கொத்ஸ். கலாய்க்கப்படுவதற்கு இப்ப உங்க முறை. :-)

    புதசெவியா? அப்படின்னா என்னங்க? ஞாயிறுசெவி, திங்கள்செவி, செவ்வாய்செவி, வியாழசெவி, வெள்ளிசெவி, சனிசெவின்னு எல்லாம் கூட இருக்கா?

    பு.த.செ.வி. :-)

    ReplyDelete
  53. //புதசெவியா? அப்படின்னா என்னங்க?//

    எனக்கு மட்டும் என்ன தெரியும். இந்த வலைப்பதிவுகளில் என்னென்னவோ சங்கேத வார்த்தைகள் எல்லாம் பாவிக்கறீங்க. அதுல இதுவும் ஒண்ணு. கேள்வி கேட்டா கடைசியில் கேள்விக்குறி மாதிரி புதசெவின்னு போடணும் அப்படின்னு சொல்லிக்குடுத்து இருக்காங்க. அம்புட்டுதேன் தெரியும்.

    உங்களுக்குத்தான் எல்லா பக்கத்திலும் ஆளுங்க இருக்காங்களே. கேட்டு ஒரு விளக்கப் பதிவு போடறது.

    ஓவர் டு குமரன்.

    ReplyDelete
  54. //உங்களுக்குத்தான் எல்லா பக்கத்திலும் ஆளுங்க இருக்காங்களே. கேட்டு ஒரு விளக்கப் பதிவு போடறது//

    ஒரு புத்தகத்தில் எல்லாப் பக்கத்திலும் உங்க ஆளு தானா குமரன்? :-)

    சரி சரி! புதசெவிக்கு பாம்புச்செவியா மீ த வெயிட்டிங்.
    பாம்புக்குச் செவி இருக்கான்னு நம்ம விக்கியார் கொத்ஸ் அடுத்து அடிச்சி ஆடிடுவாரோ?
    இந்த அறிவியல் அறிஞர்கள் கிட்ட பழமொழி பேசும் போது கூட சாக்கிரதையா இருக்கணும்-பா!

    ReplyDelete
  55. @சந்தோஷ்
    நன்றி நண்பா. டென்சன், ரென்சன் எல்லாம் ஒன்னும் இல்ல. இனி இது மாதிரி சமய பேதப் பார்வைகள் பதிவாளர்கள் வட்டத்தில் தலைதூக்கக் கூடாதுன்னு தான், என்னிக்கும் இல்லாத அதிசயமா, நான் எழுந்திரிச்சி நின்னுட்டேன்!

    ReplyDelete
  56. //
    //இதில் பேதங்கள் இல்லை! பேதங்கள் உருவாக்குவோர்க்கு இடமும் இல்லை! //

    This is the curtain raiser !!!!!!!!//

    ஆமாங்க அறிவன்! கரெக்டா மார்க் பண்ணீச் சொல்லி இருக்கீங்க!

    ReplyDelete
  57. //திவா said...
    அப்புறம்தான் இதுதான் பிரச்சினை என்று போலிஸ் சட்டையை கழட்டினார்கள்//

    சரி, அப்படியே கூட இருக்கட்டும் திவா. அதுக்காக பொன்னம்பலத்தை சேதப்படுத்தலாமா என்பது தான் கேள்வி. வீட்டுப் பொறுப்பாளர் வீட்டுக்குள் யாரோ நுழையறாங்க-ன்னு வாசக்காலை இடிப்பாரா?

    // விவாதங்கள் அவசியம் தேவை! //
    அவசியமே இல்லை. ஆன்மீகம் பெரிய கடல். அதில் நாம் ஒரு ஓரத்தில் இருக்கிறோம். விவாதங்கள் கவனத்தை திருப்பி இறை நாட்டத்தைதான் கெடுக்கும்//

    இதுவும் ஒரு கருத்து தான்! விவாதத்துக்குரியது :-)
    இங்கே விவாதம் என்பது சமயச் சொற்போர் என்ற பொருளில் சொல்ல வரலை! விவேகானந்தருக்கும் இராமகிருஷ்ணருக்கும் நடந்த விவாதம் கவனத்தைத் திருப்பவில்லை! கவனத்தைத் தூண்டியது!

    விவாதம் எதற்காக, யாருடன், எங்கே செய்கிறோம் என்பதைப் பொருத்துத் தான் எல்லாம்!

    //ஏதோ நிறைய off-screen சமாசரம் இருப்பது புரிகிறது.//

    ஆமாம்! கரெக்டாச் சொல்லிட்டீங்க!:-)
    நீங்க முன்பு பின்னூட்டங்களில் சொன்ன கருத்துக்கள் கூட நல்லது தான் திவா!

    ReplyDelete
  58. //கீதா சாம்பசிவம் said...
    ம்ம்ம்ம்ம்., பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் விளையாட்டாய் ஆரம்பித்தது, கொஞ்சம் வினையாய் முடிஞ்சிருக்குனு உங்க பதிவிலே இருந்து தெரிய வருது,//

    நாம் பல இடங்களிலும் சிதறி இருப்பதால்...அத்தனை பேரும் ஒருங்கே பேச முடியுமான்னு தெரியலை கீதாம்மா!
    அதான் உள்ளத்தில் ஓடியதை அப்படியே ஒளிவு மறைவின்றி பெரியவங்க முன் வைத்தேன்!
    எது செய்தாலும் பெரியவங்க கிட்ட சொல்லிட்டுச் செய்யறதே சின்ன வயசில் இருந்து எனக்கு வழக்கமாப் போச்சு! :-)

    //அதுக்கு நானும் ஒரு காரணமோ?//
    :-)

    //அதானா இம்முறை வரப்போவதைக் கூடச் சொல்லவே இல்லை? ://

    அப்படி எல்லாம் இல்லை கீதாம்மா! கெளம்பற நேரத்தில் ஆபிசும் நட்சத்திர வாரமுமாய் சேர்ந்து கொண்டு ரெண்டு பெண்டாட்...ஐயோ இந்த் எக்ஜாம்பிள் வேணாம்!

    தொலைபேசுகிறேன் இந்த வாரத்தில்!
    சென்னைக்கு மழையைக் (புயலை?) கொண்டாந்திருக்கேன் போல! :-)

    ReplyDelete
  59. //கோபிநாத் said...
    டென்ஷனை ஆவாதிங்க.. free ah viduga..
    \\\
    ரீப்பிட்டு ;))//

    நண்பா கோபி, நன்றியை நானும் ரிப்பீட்டிக்கறேன்!
    வழிமொழிகிறேன்-ன்னு நன்றியைச் சொல்ல முடியுமா? டிபிசிடி அண்ணாச்சி வெளக்கம் ப்ளீஸ்!

    குமரன், அண்ணாச்சி இன்னுமா சொல்-ஒர்-சொல் வலைப்பூவில் இல்லை? :-)

    ReplyDelete
  60. //கானா பிரபா said...
    ப்ரீயா வுடு மாமே//

    அப்படியே ஆகட்டும் மச்சி! :-)

    ஐயோ சாரிங்கண்ணாச்சி...உங்கள அப்படிக் கூப்பிட்டா எப்படி இருக்கும்-னு ரோசிச்சிப் பாத்தேன்! சிரிப்பு வந்துருச்சி!

    //கேப்டன் ரேஞ்சுக்கு உங்களை நியாபடுத்திப் பொங்கிட்டீங்களே.//

    என்ன அண்ணாச்சி, கேப்டன்-னு சொல்லி என்னைய திட்டறீங்க?:-)

    //ஒவ்வொரு பதிவருக்கும் இம்மாதிரி அச்சுறுத்தலோ அல்லது கண்டனங்களோ இருக்கும், மற்றவர்களுக்காக நம்மையெல்லாம் மாற்றமுடியாது.//

    ஹிஹி!
    அதானே! நாங்க யாருக்காகவும் மாற மாட்டோம்!
    மாறுகோ மாறுகோ மாறுகோறீ-ன்னு சங்கத் தமிழ்க் கவிஞர் சிபிலர், கலாய்த்தல் திணையில் பாட்டு எழுதிருக்காரு! :-)

    ReplyDelete
  61. //நம்பிக்கையாளர்களில் பெயர் பெற்ற நீங்கள் மூவருமே இப்படி பேசினால் எப்படி?//

    ஆகா இது என்ன புதுக்கதை குமரன்?
    மூவரா? யாருங்க அவிங்க?

    //நல்லவங்க தான் நீங்க ஆனா ஒரு குழப்பத்துல என்ன பண்றோம்ன்னு தெரியாம சிலது செஞ்சுடறீங்கன்னு மயிலை மன்னாரு வலைச்சரத்துல சொன்னாரு. அது என்னை அவ்வளவாகப் பாதிக்கவில்லை//

    ஆத்திகத்தில் சொல்லியிருந்தா விசயம் வேற!
    ஆனா வலைச்சரம் அறிமுகப்படுத்தும் இடம்!

    றை வெட்டி/நீங்களும் அங்கு ஒரு பின்னூட்டத்தில் இவிங்கள உங்க லிஸ்ட்டில் விட்டுட்டீங்களே-ன்னு சொன்னதுக்கு, வலைச்சரப் பொறுப்பாளர்கள், விதிகளைக் காட்டி, இப்படி பின்னூட்டக் கூடாது என்று சொல்லவில்லையா?
    அதே விதிகள் தானே இப்போதும்!
    அறிமுகப்பூவில் கரிமுகம் பூசினால் எப்படி?


    இருப்பினும் அதையும் வழக்கம் போல் சிரிப்பான் போட்டு, பின்னூட்டி விட்டேன்! ஆனால் தொடர்ந்து சென்ற வாரத்திலும் இது போன்ற நிகழ்வுகள் தான்....அதான் இப்படி ஒரு பதிவாயிடிச்சி :-(

    ReplyDelete
  62. //வசீகரா..Vaseegara said...
    அன்புள்ள கேஆர்எஸ்,
    அதில் தவறேதும் இல்லை என்பது என் அபிப்பராயம். தில்லை அந்தணருக்கு எழுதிய கடிதம் ஒரு விமர்சனம் அதுவும் நீங்கள் தவறாக ஏதும் எழுதிவிடவில்லை.//

    நன்றி மணிகண்டன்!
    பார்த்தீங்களா...மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?- பாட்டு ஸ்டைலில், படிச்சிக்கிட்டு மட்டும் இருந்த நீங்க இன்னிக்கி எனக்குப் பின்னூட்டி விட்டீர்கள்! இனி அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க!

    //சமூக பார்வையும் ஆன்மிகம் சார்ந்ததாகவே இருப்பது தான் மதங்களின் பலம்//

    நல்லதொரு வார்த்தை!
    இதைக் கொஞ்சம் மாற்றியும் போட்டுக்கறேன்!
    ஆன்மீகப் பார்வையும் சமூகம் சார்ந்ததாகவே இருப்பது தான் ஆன்மீகத்தின் பலம்!

    //அம்மனுக்கு கூழ் ஊத்துவதிலிருந்து, புஷ்பப்பல்லக்கு வரை அதில் சமூக பார்வை இருந்திருக்கிறது. சமூக பார்வையை தவறவிட்ட ஆன்மிகம் மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்துவிடும்//

    நச்!

    //ஆகவே கேஆர்எஸ் ஒரு ஆன்மிக பதிவரா என்றால் இல்லை அல்லது சமூக விமர்சக பதிவரா இல்லை. ஆபாசம் இல்லாமல் சமூக பார்வையில் ஆன்மிகம் எழுதும் இலக்கிய பதிவரா - ஆமாம்//

    ஐயா! என் மொத்த மனநிலையும் ரெண்டே வரியில அப்ரைசல் பண்ணீட்டீங்களே!
    வாழ்க நீ எம்மான்!

    //தங்களது பணியினை தொடர்ந்து செவ்வனே செய்து வர எல்லாம் வல்ல மகா பிரத்யங்கிராதேவியை வேண்டிக் கொள்கிறேன்.//

    யானும் அன்னை பிரத்யங்கிராதேவியை அவ்வண்ணமே வேண்டிக் கொள்கிறேன்!
    எண்ணிய முடிதல் வேண்டூம்!
    நல்லவே எண்ணல் வேண்டும்!
    திண்ணிய நெஞ்சம் வேண்டூம்!
    தெளிந்தநல் அறிவு வேண்டூம்!

    ReplyDelete
  63. //G.Ragavan said...
    ரவி, இந்தப் பதிவு சூடான பதிவுதான். சுடச்சுட இருக்கே. :)//

    ஆகா அப்படியா?
    சூடம் கொளுத்தாம எப்படிச் சூடாகும்? அதான் சூடானுக்கு ஓடிப் போறேன்-னு அப்பவே சொன்னேன்! :-))

    நாம தான் ஜாலியா நண்டு வறுவல் சாப்டுட்டோமே! அதுனால உங்க பின்னூட்டத்துக்கு மறுமொழி கட்ச்சீல வச்சிக்கிறேன்-பா! (சென்னை வந்தாச்சே!!!! :-))

    ReplyDelete
  64. //எதில் தான் நீறு பூத்த நெருப்பு இல்லாமல் இருக்கிறது? எஸ்.கே. ஐயா எழுதும் ஒவ்வொரு எழுத்தும் எனக்குப் பிடித்திருக்கிறதா? நான் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் தான் உங்களுக்கும் இராகவனுக்கும் எஸ்.கே. ஐயாவிற்கும் கீதாம்மாவிற்கும் இன்னும் வலையுலகில் நம்பிக்கையைப் பற்றி பேசும் அன்பர்களுக்கும் பிடித்திருக்கிறதா என்ன?//


    சரியாப் புடிச்சீங்க குமரன் பாயிண்ட்டை!
    எழுத்து பிடிக்கலைன்னா அது நிச்சயம் தனிமனித உரிமை! அவர்களுக்கு நம் எழுத்து பிடிக்கணும்-னு திணிப்பு செய்யவே கூடாது! திணிக்காதீர்கள் என்று அவர்களைச் சொல்லிட்டு அடியேன் திணிப்பு செய்வேனா?

    ஆனா எழுத்து/கருத்து பிடித்தமை வேறு! அப்படி அது பிடிக்காது போனால், அந்தக் கருத்து ஒத்து வராத கருத்து-ன்னு சொல்லலாமே ஒழிய, கருத்தைச் சொன்னவரை ஒத்து வராதவர் என்று தட்டிக் கொண்டே இருக்கக் கூடாது! அதைத் தான் இன்னிக்கி இந்த மாபெரும் சபையில் முன்வைக்கிறேன்!

    ReplyDelete
  65. நான் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் நான் = Blind Self
    நான் என்று மற்றவர் நினைக்கும் நான் = Hidden Self
    உண்மையிலேயே நான் எப்படி இருக்கிறேனோ அப்படிப்பட்ட நான்=True Self

    //இந்த மூன்று வகையும் இருக்கத் தானே செய்கிறது. இந்த மூன்று வகை நான்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா?//

    ஆனால் மூன்றும் ஒன்றோடொன்று இணைந்து பணியாற்ற வேண்டும் அல்லவா?

    //நானும் சில நேரங்களில் மனத்தில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லியும் இடுகைகள் இட்டும் நண்பர்களை இழக்கிறேன். நீங்களும் அப்படி செய்யலாமா?//

    இதனால் "நண்பர்கள்" இழந்துவிட மாட்டோம் குமரன்! நகுதற் பொருட்டன்று நட்டல் என்பது ஐயன் உணர்ந்து சொல்லியது!

    //நீங்கள் இப்படிப் பொங்கியதால் எஸ்.கே. ஐயா, ஓகை ஐயா, கீதாம்மா, இராகவன் போன்றவர்கள் இனிமேல் விமர்சனம் செய்யாமல் போகலாம்; இனிமேல் விமர்சனம் செய்யலாம் என்று எண்ணிய மற்றவர்கள் இனி மேல் செய்யாமல் போகலாம்.//

    விமர்சனங்களைக் கருத்துக்குச் செய்யுங்கள்! ஆட்களைச் செய்யாதீர்கள் என்பது மட்டும் தான் அடியேன் கேட்டுக் கொண்டது!

    விமர்சனமே செய்யாதீங்க! விமர்சனத்தை நான் தாங்கிக்கவே மாட்டேன்-ன்னு பதிவில் ஒரு சின்ன மூலையில் கூடச் சொல்லலையே! ஆப்புரைசலை அண்ணாவிடம் கேட்டு வாங்கலையா? :-))

    நகுதற் பொருட்டன்று நட்டல் என்பது எனக்கும் பொருந்தும்! அதை உணர்ந்தே இருக்கேன் குமரன்!


    நண்பர்கள் SK ஐயா, கீதாம்மா, ஓகை ஐயா, நம்ம ஜிரா எல்லாரும் அப்படி விமர்சனம் செய்யாமல் ஓடி ஓளியும் ஆட்கள் கிடையாது! நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை! அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை-ன்னு தான் சொல்லி இருக்காரு!

    அவர்கள் நட்பு நமக்கு ஒரு வரமும் கூட! அவர்கள் விமர்சனம் தொடர்ந்து செய்து நம்மை உணர்விப்பார்கள்!
    கருத்துக்களை விமர்சிப்பார்கள். கருத்து உரைத்தவர்களை அல்ல!


    //இப்படிப் பொங்கியதால் விளைந்த நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பது என் எண்ணம்//

    செயத்தக்க செய்யாமையானும் கெடும்! - இதுவும் அடியேன் எண்ணம்!

    ReplyDelete
  66. //ஏற்கனவே இராகவன் 'நான் ஆன்மிகப் பதிவர் இல்லை. இனி மேல் ஆன்மிகம் எழுத மாட்டேன். ஆன்மிகம் பேச மாட்டேன்' என்று அளப்பரை விட்டுக் கொண்டிருக்கிறார்.//

    அப்படியா? நேராப் பாக்குவேன் இன்னிக்கு! அப்ப பூசை போட்டுடறேன்! என்ன பூசை போடலாம் குமரன்? கெடா வெட்டி பொங்க வைக்கலாமா? :-))

    //நீங்களும் அப்படி அளப்பரை விட்டால் அது அந்த இறைவனுக்கே அடுக்காது. சொல்லுவதைச் சொல்லிவிட்டேன்//

    ஆகா...
    இறைவனுக்கு அடுக்காத ஒன்றை என் மனம் செய்யத் துணியுமோ?

    ReplyDelete
  67. //கோவி.கண்ணன் said...
    இரவியின் உணர்வுகள் ஞாயமானதாக தெரிந்தாலும், இரவி உணர்ச்சி வசப்படுவதை நான் ஏற்கவில்லை :)//

    :-))

    //உங்கள் சலனம் எனக்கு வியப்பளிக்கிறது :(//

    எனக்கும் கூட கோவி அண்ணா!

    //எஸ்கே ஐயா எதாவது சொன்னா லூசில் விடுங்க, அவர் எதையும் மனசில வச்சிக்காம அதே போல் இங்கிதம் இல்லாமல் பேசிடுவார்//

    சேச்சே! யாரைப் பாத்து என்ன சொல்லிட்டீங்க? இங்கிதம் அறிந்து பேசும் சொற்ப சில பதிவர்களில் SK முத்ன்மையானவர்.
    முத்திரை குத்தப்படுவோம்-னு தெரிஞ்சாலும் தான் நினைத்ததைத் தில்லைப் பதிவில் துணிந்து சொன்னவர் தானே! கருத்து ஏற்புடையது இல்லை என்றாலும் நண்பர்கள்/மனிதர்கள் என்றுமே ஏற்புடையவர்கள் தான் அடியேனுக்கு.

    //நான் வேண்டுமானால் அவரை ஒரு தட்டு தட்டவா ? :)//

    கைய வச்சிப் பாருங்க! சோடா பாட்டில் பறக்கும்! சென்னையில் ராயபுரம் ஏரியா பக்கம் போனேன்னு வையுங்க, அம்புட்டுத் தான்! :-))))

    //நம்ம இராகவன் எதையும் உள்னொக்கம் வச்சிப்பேசமாட்டார்.
    அவர் என்ன சொன்னார் என்று முழுவதுமாக படிக்கவில்லை.//

    அவர் ஏதும் சொல்லவில்லை!
    குறுகிய நோக்கம் அவர் இரத்தத்துல இல்லை! (நீ எப்ப ஜிரா இரத்தத்தைப் பார்த்த-ன்னு எல்லாம் கேக்கப்பிடாது, சொல்லிட்டேன் :-)
    என் இனிய தோழனைப் பற்றி எனக்குத் தெரியாதா?

    ReplyDelete
  68. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    KRS,
    எழுத்தாளன் - எழுத்து சுதந்திரம் - என்பதையெல்லாம் தாண்டி - ஆன்மீகம்/சமூகம் போன்றவற்றை எழுதுவதில் ஒரு பொறுப்பு இருக்கிறது.//

    உண்மை ஜீவா!
    அதான் பதிவுகளையே இறைவனுக்குச் செய்யும் அலங்காரம்-னு சொன்னேன்!

    //தவறுகிறீர்களா/விலகுகிறீர்களா என்றெல்லாம் கருத்துச் சொல்ல அனுபவமோ, அறிவோ எனக்கில்லை. அவை வாய்க்கப்பெற்ற சான்றோர் துணை நாடவும்//

    நிச்சயம் ஜீவா!
    குருவருள் துணை செய்யும்!
    குருர் தேவோ மகேஸ்வரஹ!

    ReplyDelete
  69. //கப்பி பய said...
    இப்ப மெட்ராஸ்ல தானே இருக்கீங்க? எந்த ஏரியால??//

    புரசைவாக்கம்! :-)

    //உங்களைப் பார்த்தா ரொம்ப நல்லவனா தெரியுதுன்னு பொள்ளாச்சி இளநீன்னு பொய் சொல்லி பதினஞ்சு-இருபது ரூபா சொன்னாலும் சொல்வாங்க..//

    அடப் பாவி கப்பி, வுட்டா நீயே இளநியை offshore பண்ணாப் போல பேசுற? :-))

    //உங்க தெறமைய உபயோகிச்சு பேரம் பேசி இளசா ஒன்னு வாங்கி ஏக் தம்ல குடிங்க...கூலாயிருவீங்க.//

    dankees for the tippees!
    கப்பி சொன்னா அப்பீலே கெடையாது! இளநியோடு நுங்கு சீசன் வந்திரிச்சி கப்பி!
    பனைஓலையில நுங்கைக் கொட்டி, சாறு தெறிக்க, வெள்ளுன்னு கடிச்சித் திங்கலாம் வறீயாஆஆஆ? :-)

    ReplyDelete
  70. //தி. ரா. ச.(T.R.C.) said...
    ரௌத்ரம் பழகு-----பாரதியார்//

    ஹிஹி! அதான் பழகிப் பாத்துக்கிட்டேன் திராச ஐயா!

    //கேஆர்ஸ் தூண்டப்பட்ட விளக்குதான் நன்றாக நின்று பிரகாசமாக் எரியும்//

    நிச்சயமா திராச!
    எதில் தூண்டுகிறோம் என்பதைப் பொறுத்து! குச்சியில் தூண்டலாம், விறகக் கட்டையில் தூண்டினா அம்புட்டு தேன்! :-))))))))))))

    ReplyDelete
  71. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    தம்பி KRS, என்ன ஆச்சுன்னு எனக்குப் புரியவே இல்லை//

    அக்கா! முன்பே சொன்னது தான்-க்கா! மணி கட்டறது யாருன்னு இருந்திச்சி! இப்போ கட்டியாச்சி!

    //எதுக்கு இந்த மாதிரி பதிவு? யாரோ ஒரு ஆள் உங்க கருத்தை ஒத்துக்கவில்லை என்றா?//

    இல்லக்கா, கருத்தை ஒத்துக்கிடணும்-னு அவசியமே இல்லை! சொல்லப்போனா ஒத்துக்கிடக் கூடாது! 100% ஒத்த கருத்து கூடவே கூடாது! கருத்தைச் சொல்லுங்க, ஆளை விட்டுருங்க-ன்னு தான் பதிவில் கேட்டூக் கொண்டேன்!

    //எல்லாருக்கும் நல்ல பிள்ளையாய் இருக்க வேண்டும் என்று மற்றவர்களை விட நீங்கள் தான் எதிர்பார்க்கிறீர்களோ?//

    சேச்சே...I know I am a bad boy! :-)

    //"உங்க தமிழல்லாத கடவுள்" அரங்கன் அருள் வேணுமில்ல! இந்த வேலையை நிறுத்திட்டு, குடைபிடித்த கதை இரண்டாம் பகுதி போடுங்க.//

    குடை பிடிச்ச கதைக்கு முன்னால இன்னொரு சூப்பர் கற்பனை ஃபிளைட்டில் உதயமாச்சி! கதவடைப்புக் கதை! அதை மாடர்-னா கொடுத்தாப் பிச்சிக்கிட்டுப் போகும்! (கத்வு தான்:-)))

    //கேஆரெஸ் "நண்பர்" படையே, திறனைக் காட்டு! குக்கி களைந்து திரும்பி வோட்டு!//

    அக்கா ஒரு அர"ணை"க் கைப்பற்றும் வெறியில தான் இருக்காங்க டோய்!
    பதிவுலக Joan Of Arc யாருங்க? :-)))

    ReplyDelete
  72. @குமரன், றிபிசிடி அண்ணாச்சி
    //குறிப்பா Tயும் Dயும் இருக்கும் உங்க பேருக்கு//

    Tயும் Dயும் பிறர் தர வாரா! :-))))

    ReplyDelete
  73. //ILA(a)இளா said...
    சரவண பவன்ல எல்லாம் பொங்கலுக்கு காசு குடுத்தா பொங், மட்டும்தான் அவ்ளோதான் தருவாங்க.//

    யோவ், என்னய்யா சொல்லுற நீயி?
    விருது கொடுத்தாலும் கொடுத்த, வரவர நீ பேசறது ஒன்னுமே புரிய மாட்டேங்குது!

    புரியல்ல-தயவு செய்து விளக்கவும்-ல போயி வேணும்னாக் கேட்டுப் பாக்குறேன்! :-))

    ReplyDelete
  74. //இலவசக்கொத்தனார் said...
    அதனால எனக்கு இங்க பேச தகுதி இருக்குன்னு வெச்சுக்கலாம்.//

    ஐயா, உமக்கு இல்லாத தகுதியா கொத்ஸ்! அப்படியே ஆன்மீகப் பதிவு போடறதை நிப்பாட்டின்னா, புதிரா புனிதமாவை யார் பேருக்கு உயில் எழுதி வைக்கலாம்-னு நினைச்சேனா! நீர் தான்-யா வந்தீரு! :-))

    //அதே மாதிரி நம்ம எழுதினதில் தப்பு இருந்தா அதைச் சுட்டிக்காட்டி சரியானது எதுன்னு சொல்லணும். அது இல்லாம இதை எழுதக் கூடாது அதை எழுதக் கூடாதுன்னு எல்லாம் சொல்லறது தப்பு.//

    ஜூப்பர்!
    எழுதக் கூடாது-ன்னு சொன்னாக் கூடப் பொங்கியிருக்க மாட்டேன்! ஆளைப் புடிச்சிக்கிட்டதால தான் சரவண பவன் பொங்கல் சாப்ட வேண்டியதாப் போச்சு!

    //தனி மனித தாக்குதல் இல்லாம இருக்கா, ஆபாசம் இல்லாம இருக்கா, அவ்வளவுதான்.//

    ஜூப்பரோ ஜூப்பர்!

    //இருந்தாலும் Freeயா விடு மாமே!!//

    விட்டாச்சு மாமே! :-))

    ReplyDelete
  75. //இலவசக்கொத்தனார் said...
    இந்த வாரம் பல பதிவுகளில் அரசியலும் செஞ்சாச்சு பின்னூட்ட விளையாட்டும் விளையாடியாச்சு. அதனால இனிமே இதெல்லாம் சொல்லக்கூடாது//

    :-))

    //ஆனா பின்னூட்ட விளையாட்டு மட்டும் தொடர்ந்து ஆடணும். ஓக்கேவா?//

    ஓக்கே! :-)

    //மீண்டும் ஒரு 50 அடித்து நன்றியுடன் விடைபெறுவது உங்கள் நண்பன் கொத்ஸ்!!//

    தெய்வமே!!!!

    ReplyDelete
  76. ஏம்ப்பா கேஆரெஸ்,

    ஒண்ணுமட்டும் சொல்லிக்கவா?

    இப்ப இந்தியாவில்தானே அதுவும் நம்ம சி.சென்னையில்தானே இருக்கிறீர்?

    பதிவுலகைக் கொஞ்சம் தலையில் இருந்து இறக்கி வச்சுட்டு, அங்கே இருக்கும் சூழல், சுற்றம் இன்னபிற அம்சங்களை அனுபவிச்சுட்டு வாரும். பிரசாந்த் கோல்ட் டவர் திறந்தாச்சாமே.... அங்கே இங்கேன்னு போய் வராம, பதிவுல பின்னூட்டங்களுக்கெல்லாம் ஒவ்வொண்ணுக்கும் பார்த்துப் பார்த்துப் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா வெளங்கிரும்.

    நாங்கெல்லாம் எங்கே போயிறப்போறோம்? கஞ்சி ஆறுச்சுன்னா, அதைப் பழங்கஞ்சியாக் குடிச்சுட்டுப்போறோம். இது ஒரு பெரிய விஷயமா?

    இந்தக் கணத்தை அனுபவிக்கக் கத்துக்கணும். அதுதான் முக்கியம்.

    மத்தவன் நம்மைப் பத்தி என்ன நினைக்கிறான்றது வாழ்க்கையில் எந்த அளவுக்கு முக்கியமுன்னு உணர்ந்துக்கிட்டாலே வெற்றிதான். எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்குல்லே? ஊருக்காக (மட்டுமே) வாழமுடியுமா?

    ReplyDelete
  77. இரவிசங்கர்.

    கருத்தை எதிர்க்கலாம்; ஆளை எதிர்க்காதீர். கருத்தைக் குறை கூறுங்கள்; ஆளைக் கூறாதீர்கள். இதெல்லாம் சொல்வது எளிது; செய்வது கடினம். இரண்டிற்கும் இடையில் நூலிழை தான் வேறுபாடு உண்டு. பல நேரங்களில் அது கூட இல்லை. இருக்கும் போது அதனைக் கண்டுபிடிப்பது பெரும் வேலை. ஒவ்வொருவருக்கும் அந்த எல்லை வேறு மாறுபடும். இப்படி எல்லாம் இருக்கும் போது இந்த கோஷத்தை முன் வைத்தால் என்ன செய்வது? இதனை இப்படியே இன்னும் நீட்டி 'கதையை பாராட்டுவோம்; கதையை எழுதியவனைப் பாராட்ட வேண்டாம்', 'குற்றத்தைத் தண்டிப்போம்; குற்றத்தைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டாம்' என்றெல்லாம் சொல்லப் புகுந்தால் எப்படி இருக்கும்? :-)

    கருத்தை எதிர்க்கும் போது ஒரு வார்த்தை கூடத் தான் செய்யும். கூடக் குறையச் செய்யும் அந்த வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு மணி கட்டக் கிளம்பினால் எப்படி?

    100% ஒற்றுமை என்பது தோற்றப்பிழை என்பது தெரியும். ஆனால் இந்த மாதிரி மணி கட்டக் கிளம்பினால் 50% ஒற்றுமை கூட மிஞ்சாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பற்றியத்திலும் வெவ்வேறு விதமாகக் கூறு கட்டி நிற்க வேண்டியது தான். வாத்தியார் ஐயா போட்ட கும்மிப் பதிவைப் பாருங்க. கவுண்டர் 'ஆன்மிகப் பதிவர்களின் கோஷ்டிகளை'ப் பத்தி கும்மியிருக்காரு.

    ReplyDelete
  78. அவரவர் தமதமது அறிவறிவகை வகை அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்ன்னு நம்மாழ்வார் சொன்ன மாதிரி அவரவர் தமதமது அறிவறி வகை வகை ஒரு நிலைப்பாடு எடுத்து நிற்கட்டும். Let us agree to disagree. Even with having opinions about others.

    குச்சி, விறகுக்கட்டை என்றெல்லாம் நீங்கள் பேசுவதைப் பார்த்தால் குச்சியின் ஒரு பக்கம் ஒரு குழந்தையும் மறு பக்கம் எறும்பும் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. :-))

    ReplyDelete
  79. இந்த பதிவு பத்தி பெருசா நான் எதுவும் சொல்லப்போவதில்லை, வழக்கமான ஒரு சமாச்சாரமா தான் நான் பார்க்கிறேன், இதை ஒரு வகையில் நான் எதிர்ப்பார்த்தேன் என்றே சொல்வேன்!
    (ஆன்மீகம் பேசுபவர்களிடம் அந்த பக்குவமே இருப்பதில்லை, உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பார்கள்)

    குமரன் சொன்ன திருவாசகம் கேட்டு புல்லரித்து போய் ஒரு வார்த்தை நாமும் சொல்லிப்போவோம்னு வந்தேன்!

    //கருத்தை எதிர்க்கும் போது ஒரு வார்த்தை கூடத் தான் செய்யும். கூடக் குறையச் செய்யும் அந்த வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு மணி கட்டக் கிளம்பினால் எப்படி?//

    அண்ணே குமரன் அண்ணே இத நீங்களா தான் சொன்னிங்களா?

    என்னை அடிக்கடி கனி இருக்க காய் கவர்வதில் வல்லவர்னு சொல்வீங்க ,அப்போ இப்படி ஒரு கருத்த சொல்லும் போது கூட குறையும்னு நான் கூட வேற மாதிரி சொல்வேனே நியாபகம் இருக்கா?

    என்னமோ போங்க நாங்கலாம் சொன்னா இப்படி கூட குறையப்போனதா கணக்கில வராது, ஏதோ காயை பறிக்க ஏணிப்போட்டு ஏறினதா ஆகிடுது :-))

    ஏதோ நானும் சந்துல சந்துப்பாடிக்கிட்டேன்.
    (100 அடிக்க ஒரு சின்ன எல்ப்)

    ReplyDelete
  80. //துளசி கோபால் said...
    பிரசாந்த் கோல்ட் டவர் திறந்தாச்சாமே.... /

    தொறந்தாச்சி! தொறந்தாச்சி!
    இன்னிக்கு மாலையில் அங்க தான் ஹால்ட்டு டீச்சர்!
    அப்பறம் நம்ம இனிய நண்பர் கச்சேரி வேற இன்னிக்கி! தங்க மரம் வாங்கிக் கொடுக்கறேன்னு சொல்லி இருக்காரு! :-))

    //அங்கே இங்கேன்னு போய் வராம, பதிவுல பின்னூட்டங்களுக்கெல்லாம் ஒவ்வொண்ணுக்கும் பார்த்துப் பார்த்துப் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா வெளங்கிரும்.//

    ஹிஹி
    பதிவா? அப்பிடின்னா? :-))

    நான் இஷ்டார் வீக்குல கூட எதுக்கும் பதில் போடலை டீச்சர்...இதுக்கு மட்டும் தான் கொஞ்சம் பொறுப்பு வந்திரிச்சி! அதான் விடிகாலை 5:00-6:00 பதில் எல்லாம் சொல்லி முடிச்சி அப்பீட் ஆகிக்கலாம்-னு!

    //மத்தவன் நம்மைப் பத்தி என்ன நினைக்கிறான்றது வாழ்க்கையில் எந்த அளவுக்கு முக்கியமுன்னு உணர்ந்துக்கிட்டாலே வெற்றிதான்//

    பின்னிப் பெடல் எடுக்குறீங்க டீச்சர்!
    அந்த யானை மோதிரம் எங்கனாச்சும் பார்த்தா வாங்கிறவா? உங்க பட்ஜெட் எவ்வளவு? :-))

    ReplyDelete
  81. //அந்த யானை மோதிரம் எங்கனாச்சும் பார்த்தா வாங்கிறவா? உங்க பட்ஜெட் எவ்வளவு? :-))//

    ப்ரப்போஸ் பண்ணும் மோதிரத்தைத் தவிர மத்த எந்த மோதிரத்தையும் அதைப் போட்டுக்கப் போறவங்ககூடத்தான் போய் வாங்கணும்.

    பட்ஜெட் எவ்வளவா?

    அது உங்க விருப்பம். பரிசு வாங்கிக்கும்போது பட்ஜெட் சொல்றது நல்லா இருக்காதே:-))))

    ஸ்கை ஈஸ் த லிமிட்:-))))

    ReplyDelete
  82. //கருத்தை எதிர்க்கலாம்; ஆளை எதிர்க்காதீர். கருத்தைக் குறை கூறுங்கள்; ஆளைக் கூறாதீர்கள். இதெல்லாம் சொல்வது எளிது; செய்வது கடினம். இரண்டிற்கும் இடையில் நூலிழை தான் வேறுபாடு உண்டு//
    //. Let us agree to disagree. Even with having opinions about others. ///

    இந்த மஹா வாக்கியத்துடன் இந்த போஸ்டின் பின்னூட்ட பொட்டிய மூடிட்டா நல்லது....

    ஐயா, நான் கருத்து போதுமுன்னுதான் சொன்னேன், கருத்து சொல்லறவங்களை ஒண்ணும் சொல்லல்ல. :-)

    ReplyDelete
  83. வவ்வால். நீங்கள் இங்கே கவர்ந்த கனிக்கு நன்றிகள். :-)

    திருவாசகம் சொல்றது தான் எனக்கு ரொம்ப பிடிக்குமே. அது நீங்க புல்லரிச்சுப் போற அளவுக்கு இருந்ததுன்னா இரட்டை மகிழ்ச்சி. :-)

    ReplyDelete
  84. என்னதிது, இன்னும் 100 வரல்லையா?... போட்டிய மூடின மாதிரியும் தெரியல்ல? சரி கொஞ்சநேரம் கழிச்சு வந்து பார்க்கலாம் ... :)

    ReplyDelete
  85. சொறிய சொறிய சுகமாகத் தான் இருக்கு... புல் அரிச்சதினாலே..சொறிஞ்சேன்.. :P

    ///
    குமரன் (Kumaran) said...

    றிபிசிடி கூட இதைப் பரிந்துரை செஞ்சிருக்காரு.
    ///

    ஆமாம், இது பெரிய தொடர்கதை நம் இடுகைகளில் தொடர..இங்கே எப்படியும் 100 தாண்டிரும் அதுலே..இன்னோன்னு சேர்ந்தால் கே.ஆர.எஸ் கோவிச்சிக்க மாட்டார்..

    றி..என்றுச் சொல்லுவது, நமக்கு புழக்கத்தில் இல்லாத வழக்கமா இருக்கே..

    வவ்வால் சொல்லுவதுக் கூட எனக்கு ஒத்துக்கிற மாதிரி இருக்கு..( திபிசிடி என்கிறார்..)

    பெரியப்பாவான நீங்க எப்படிக் கூப்பிட்டாலும் சின்ன பையனான நான் ஒத்துக்குவேன்..(சந்தடி சாக்குல நீங்க எல்லாம் என்னைய அண்ணாச்சின்னு சொல்லுறீங்களே...கொடுமை...)

    [குமரன் (Kumaran)
    Age: 1035 ]
    இது உங்க விவரம் பக்கத்தில் இருப்பது.

    ஆழ்வார்கள், நாயன்மார்கள் கதை புழங்கிய காலத்திலேயிருந்து இருக்கீங்க...அப்ப பெரியப்பா பத்தாதே..பெரிய பெரியப்பா...


    ///

    றிபிசிடி,

    றிபிசிடின்னு தான் எழுதியிருக்கணும். ரிபிசிடின்னு தப்பா எழுதிட்டேன். 'ஈழத்தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் வேறுபாடு ', 'றொரென்ரோ' என்று ஏதாவது ஒன்றை கூகிளிட்டுப் பாருங்கள். நீங்கள் கேட்ட தரவுகள் கிடைக்கும். நாம் (தமிழகத் தமிழர்) T என்பதற்கும் D என்பதற்கும் தமிழில் டி என்றே எழுதுகிறோம். ஈழத்தவர் T என்பதற்கு றி என்றும் D என்பதற்கு டி என்றும் எழுதுகிறார்கள். சில நேரம் T என்பதற்கு ரி என்றும் எழுதிப் பார்த்திருக்கிறேன். ஈழத்தவர் எழுதுவதை அவதானித்தால் இதனைப் பார்க்கலாம். இந்த அடிப்படையில் தான் உங்களை ரிபிசிடின்னோ றிபிசிடின்னோ அழைக்கிறேன். :-)

    உடனே கேக்கக் கூடாது நீங்களோ நானோ ஈழத்தவர் இல்லையேன்னு. இது நல்ல முறையா இருந்ததால பயன்படுத்திக்கத் தொடங்கிட்டேன். குறிப்பா Tயும் Dயும் இருக்கும் உங்க பேருக்கு. உங்களுக்கு அதுல எந்த வருத்தமும் இருக்காதுன்னு நினைக்கிறேன். :-) சரி. இந்தப் பேச்சைத் தொடர்றதா இருந்தா நம்ம பதிவுகள்ல வச்சுக்கலாம். :-)

    ///

    ReplyDelete
  86. //இரண்டிற்கும் இடையில் நூலிழை தான் வேறுபாடு உண்டு. பல நேரங்களில் அது கூட இல்லை.//

    நூலிழை வேறுபாடு தான் எனினும் பல நூல் கற்றார் இந்த நூலையும் கற்றிருப்பர். அதனால் மற்றெவரைக் காட்டிலும் ஆன்மீகம் பயில்வார்க்கு இந்த நூலிழை அறிதல் மிகவும் எளிது. அதை கைக்கொள்வது தான் ஆன்மீகம் பேசுவார்க்கும் அழகு!

    //இதனை இப்படியே இன்னும் நீட்டி 'கதையை பாராட்டுவோம்; கதையை எழுதியவனைப் பாராட்ட வேண்டாம்', 'குற்றத்தைத் தண்டிப்போம்; குற்றத்தைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டாம்' என்றெல்லாம் சொல்லப் புகுந்தால் எப்படி இருக்கும்? :-)//

    சுவையான கனியிருப்ப வாதம். ஆனால் பொருள் இல்லை.
    கதையில் ஆக்கியவன்-அதனால் பாராட்டு! குற்றத்தில் அழித்தவன்-அதனால் தண்டனை! ஆனால் இங்கு ஆக்கவும் இல்லை! அழிக்கவும் இல்லை! வெறும் கருத்துரைத்தல்! அதனால் இங்கு இந்த வாதம் செல்லாது.

    அப்படின்னா இது ஒன்றையே காரணம் காட்டி, இனி அனைவரும் ஆளாளுக்கு அவரவரை எதிர்த்தும் பழித்தும் சொல்லலாமே!
    நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று.

    //கருத்தை எதிர்க்கும் போது ஒரு வார்த்தை கூடத் தான் செய்யும். கூடக் குறையச் செய்யும் அந்த வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு மணி கட்டக் கிளம்பினால் எப்படி//

    ஒரிரு முறை என்றால் சரி தான்! அதுவும் அவை அறிந்து சொல்ல வேண்டும்! எந்த அவை என்பது உங்களுக்கும் தெரியும்!

    இதுவே தொடர்கதையாக போகும் போது அப்படியான "மாயக்" கருத்தும் கெட்டிப்பட்டு விடுகிறது!
    மாயத்தைக் கெட்டிப்பட நாமும் உதவலாமா? அதனால் தான் அவரவர் தமதம என்று சொன்ன அதே ஆழ்வாரின் சொற்களை வாங்கி, "சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன்"!

    ReplyDelete
  87. //நீறு பூத்த நெருப்பாக இருப்பதை அணைக்க என்ன வழி என்று நினைக்காமல் அதனைக் கிளரிவிட்டு கொழுந்து எரியச் செய்யும் வகையில் இப்படி தன்னிலை விளக்கம் சொல்கிறேன் என்று எழுதலாமா//

    நீறு பூத்த நெருப்பை அணைக்கும் வழிகளைத் தான் சொல்லி உள்ளேன்.
    ஒரு சிறு குழந்தை பெற்றோர்களைப் பார்த்துச் சொல்வது போல்!

    வேறு எங்காச்சும் சிறு சொல் சொல்லி உள்ளேனா என்று பாருங்கள்! இருக்காது!
    கருத்தை மட்டுமே வைத்தேன்! ஆளை வையேன்!

    கருத்தையும் வையாதே! பெரியோர் சொல்லிக் கொண்டே இருக்கட்டும்! இளையோர் வாங்கிக் கொண்டே இருக்கட்டும் என்றால்...ஒன்றும் சொல்வதற்கில்லை! முருகப்பெருமான் பிரணவம் உரைத்த போது ஈசருக்கு எடுத்து வைத்த வாதம் தான் நினைவுக்கு வருது!

    யாரையும் வையாது ஆதங்கப்படுதல் கூட நீறு பூத்த நெருப்பை இன்னும் பெரிதாக ஊதி விடும் என்று சொன்னால் எப்படி? நான் வார்த்தைப்படுவேன்! நீ ஆதங்கம் கூடப் படாதே என்பது சான்றாண்மை அல்லவே!

    நீறு பூத்த நெருப்பை அணைக்கும் போது, உஸ் என்னும் சத்தம் எழத் தான் செய்யும்! அது இன்னும் பற்றி எரிவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்! நெருப்பு ஒடுங்குவதற்கு அறிகுறியே அது!

    Let us agree to disagree, disagree with grace!

    ReplyDelete
  88. Enough said on this subject, time to self introspect and working towards collective responsibility
    I AM CLOSING THIS MATTER. PERIOD!

    புரிந்துணர்வுடன் அன்பு மொழிகளும் அறிவு மொழிகளும் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் அடியேன் நன்றி!

    ReplyDelete
  89. தாமதமாகவே இந்த பதிவைப் பார்த்தேன்.

    முதலில் தோன்றிய எண்ணம் இந்தப் பதிவு எழுதப்பெற்றிருக்க வேண்டுமா என்பதே.

    ஆனால் விவாதங்கள் எல்லாவற்றிலும் புரிதல் கொணரும் என்ற வகையில் இதையும் ஆக்கபூர்வமான விவாதமாகவே கொள்ளலாம்.

    என்னை ஆன்மீக பதிவர் என்று சொல்லியிருக்கிறீர்கள். எனது பதிவுகளில் எனது ஆன்மீக நம்பிக்கைகளை கேள்விப்படுத்தியே பதிவு எழுதியிருக்கிறேன். உங்கள் பதிவுகளே எனது ஆன்மீக நம்பிக்கைகளை மீட்டெடுக்க எனக்கு உதவுகின்றன. அதற்கு என் நன்றி.

    இறை நம்பிக்கை என்பது பொது.

    ஒவ்வொருவரும் தமக்கான இறைவனை தாம் விரும்பும் வண்ணமே காண்கிறார்கள்.

    நான் எனக்கான இறைவனை தமிழ்வடிவமாய் காணவிழைவதால் தமிழாய் நான் கருதும் முருகனாய் காணுகின்றேன். இயல்பாய் மனதும் பொருந்திப் போகின்றது. மாலவன் கோவிலில் கைகூப்பி தொழும் போதும் மனது முருகா என்று முணுமுணுக்கிறது. :)

    எங்கும் உள்ள இறைவன் ஒருவனே என்று உணர்ந்த மனது. :)


    எத்தனை மதங்கள். எத்தனை மார்க்கங்கள். எத்தனை இறைகள்.

    அத்தனையும் சொல்லும் செய்தி ஒன்றே.
    அனைவரும் தொழுதிடும் இறை ஒன்றே.
    அது ஒன்றே என்று அறிதல் நன்றே.


    வடிவங்கள் மாறலாம். உருவங்கள் மாறலாம். சோதிபிழம்பாய் இருக்கலாம். அருவமாய் இருக்கலாம்.

    "அன்பு" ஒன்றே இறை. அன்பு ஈவதே "ஆன்மீகம்.".

    அந்த அன்பை கற்பிக்கும் எந்த மார்க்கமும் இறையும் வணக்கத்திற்குரியதே.

    தங்களுடைய அடுத்த ஆன்மீக பதிவில் மீண்டும் விவாதிக்கலாம். நன்றி.

    ReplyDelete
  90. கே.ஆர்.எஸ்,

    பின்னூட்ட பெட்டிய எடுத்துட்டாதீங்க. இந்த பதிவுலயாவது நான் 100ஆவது பின்னூட்டத்த போடணும். :)

    ReplyDelete
  91. அப்பாடா. நீங்களாவது கவனித்தீர்களே திபிசிடி/ரிபிசிடி/றிபிசிடி/டிபிசிடி (எது பிடிக்குதோ அதை வச்சுக்கோங்க) என் வயசை. யாருமே அதைக் கண்டுக்கிறதே இல்லை. வயசுக்கு இங்கே மரியாதையே இல்லை. :-(

    பெரிய பெரியப்பாவான நான் உங்களை அண்ணாச்சின்னு கூப்புடுவேனா? நல்லா பாருங்க. உங்களை அண்ணாச்சின்னு கூப்புட்டவர் இப்ப தருமமிகு சென்னையில தலைமறைவா திரிஞ்சுக்கிட்டிருக்கார். :)

    ReplyDelete
  92. ரவி, இதையும் நட்சத்திர வாரத்தில் போட்டு இருந்தா இன்னும் ஒரு 100 அடிச்சு இருக்கலாமே!!

    (என் கவலை எனக்கு!) :))

    ReplyDelete
  93. மாதவிப் பந்தல் என்பதற்கு விளக்கம் தர முடியுமா? நானும் ரீச்சரும் இது பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம். ஆனா உங்களோட கருத்தையும் தெரிஞ்சுக்க ஆசை.

    ReplyDelete
  94. ஒரு ஜாலிக்கு நட்சத்திர வார நினைவுகள் அப்படின்னு அசை போட்டு ஒரு பதிவு போடுங்க.

    ReplyDelete
  95. இதுல நடக்கும் மெயின் மேட்டர் பத்தின கருத்தை ஏற்கனவே சொல்லிட்டதால குமரன் கிளப்பி இருக்கும் மேட்டருக்கு ஒரு சுட்டி.

    இங்க பாருங்க.

    அங்க 94 பின்னூட்டங்கள்தான் வந்திருப்பதால்.....ஹிஹி..

    ReplyDelete
  96. //Enough said on this subject, time to self introspect and working towards collective responsibility
    I AM CLOSING THIS MATTER. PERIOD!//

    இதுக்குப் பதில் ஒண்ணு எழுதிட்டேன். ஆனா போட்ட பித்தளை ரொம்பவே பல் இளிக்கும் எனத் தெரிந்ததால் அதை அப்படியே வெச்சுக்கறேன். திரும்பி வந்த உடனே கேளுங்க சொல்லறேன்! :))

    ReplyDelete
  97. ரவி,

    ஓட்டுப்போட்டாச்சு. டென்ஷன் ஆகாதே தம்பி. நல்லா எழுதறே. உள்ளுணர்வோட எழுதற ஆளு..கண்டினியு பண்ணு. உன்னாலே ஆன்மிகத்தைபத்தி எழுதாம இருக்கமுடியும்னு தோணலே. நாங்களும் விடர மாதிரி தெரியல்லே!
    தொடரட்டும் திருப்பணி, தம்பி..

    ReplyDelete
  98. //பெயரோடு வருபவர்களுக்கு மட்டும் பதில் சொல்லலாமே.//

    அது என்ன பேர் வெச்சா பதில் சொல்லறது? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

    கேட்கப்பட்ட கேள்வி சரியா இருந்தா பதில் சொல்ல வேண்டியதுதான். ஆனா சும்மா குசும்புக்குக் கேட்ட கேள்வியா இருந்தா பெயர் இருந்தாலும் இக்னோர்தான் இல்லையா.

    அப்புறம் நானே வெங்கடேஸ்வரம், மதியழகன் அப்படின்னு ஒரு பேரை வெச்சுக்கிட்டு எழுதினா நல்லவன் ஆவேனா?

    ReplyDelete
  99. போன அனானி கமெண்ட் என்னுதுதான்.

    99 ஆச்சு.

    100 போட ஆசைப்பட்ட மதுரையம்பதி எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்.

    அடுத்த முறை அப்படி ஆசை இருந்தா இப்படி மடமடவென பின்னூட்டங்களைப் போட்டுவிட்டு நினைத்த 100 அடித்து விட்டுச் செல்லவும். இது போல் இனியும் காத்திருக்க மாட்டோம்!

    ReplyDelete
  100. என் காட்டுல மழை பெய்யுது.... பின்னூட்ட மழை பெய்யுது.... ...அப்படினு கேஆரேஸ் பாடிக்கிட்டு இருப்பாரோ :-))

    ReplyDelete
  101. யப்பா சாமிகளா....இப்படி வெளையாடறீங்களேப்பா!

    //என் காட்டுல மழை பெய்யுது.... பின்னூட்ட மழை பெய்யுது.... ...அப்படினு கேஆரேஸ் பாடிக்கிட்டு இருப்பாரோ :-))//

    வவ்ஸ்!
    இங்கிட்டு சென்னையில் "அடியேன்" கால் வச்ச நேரம்...மழை அடியோ அடியோன்னு அடிக்குது! :-)

    நான் செம பிசி...அம்மா வச்ச அவரைக்கா பொரிச்சு கூட்டு சாப்புட்டுகிட்டே, இந்தப் பின்னூட்டத்தை டைப்புறேன்!
    Sorry my mouth is full :-)))

    ReplyDelete
  102. //நன்றி மணிகண்டன்!
    பார்த்தீங்களா...மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?- பாட்டு ஸ்டைலில், படிச்சிக்கிட்டு மட்டும் இருந்த நீங்க இன்னிக்கி எனக்குப் பின்னூட்டி விட்டீர்கள்! இனி அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க! //

    :) கண்டிப்பாக அண்ணா!!!

    //சமூக பார்வையும் ஆன்மிகம் சார்ந்ததாகவே இருப்பது தான் மதங்களின் பலம்//
    // நல்லதொரு வார்த்தை!
    இதைக் கொஞ்சம் மாற்றியும் போட்டுக்கறேன்!
    ஆன்மீகப் பார்வையும் சமூகம் சார்ந்ததாகவே இருப்பது தான் ஆன்மீகத்தின் பலம்!//

    நீங்க சொன்னா தப்பா ஆகுமா அண்ணா!!

    //ஐயா! என் மொத்த மனநிலையும் ரெண்டே வரியில அப்ரைசல் பண்ணீட்டீங்களே!
    வாழ்க நீ எம்மான்! //

    உங்க ஆப்புரைசல் நல்ல அப்ரைசல் ஆனதில் மகிழ்ச்சியே!!! ஐயாவா????!!***&&^^ நீங்க ஒரு குழந்தை என்றால் நான் ஒரு கைக்குழந்தைங்கநோவ்!!!!!

    //யானும் அன்னை பிரத்யங்கிராதேவியை அவ்வண்ணமே வேண்டிக் கொள்கிறேன்!
    எண்ணிய முடிதல் வேண்டூம்!
    நல்லவே எண்ணல் வேண்டும்!
    திண்ணிய நெஞ்சம் வேண்டூம்!
    தெளிந்தநல் அறிவு வேண்டூம்!//

    வேற்றுமை தீர வேண்டும்!
    வெற்றியை அருள வேண்டும்!
    அடியேன்...
    கண்டன் மணி கண்டன்.

    ReplyDelete
  103. நான் "ஆன்மிகப் பதிவர்" என்ற வரையறைக்குள் வருவதாக நான் கருதாவிட்டாலும், இப்பதிவில் பின்னூட்டம் இடுகிறேன்.

    நீங்கள் கேட்ட கேள்விக்கு, நீங்களே பதிலும் கொடுத்திருக்கிறீர்களே ! அதாவது

    //நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்! எத்துணை ஆன்மீக அன்பர்கள் இயேசுபிரான் மீது பதிவிட்டு உள்ளீர்கள்?
    //
    //
    வாரியாரைப் போய் பெருமாள் மீதும் காலட்சேபம் பண்ணுங்க! வேளுக்குடி சுவாமியிடம் போய் வள்ளித் திருமணம் விரிவுரை பண்ணுங்க-ன்னு எல்லாம் கேட்பது எவ்வளவு அபத்தம்? ஒரு படைப்பாளியின் கருப்பொருளைத் தீர்மானிக்கும் உரிமை யாருக்கு என்பதும் உங்களுக்கே தெரியும்!
    //

    //ஊர் ரெண்டுப்பட்டா...கொண்டாட்டம் கதையாக
    இதை வேறு திசையில் திருப்பி சைவ/வைணவ பேதம் ஆக்கவோ...இல்லை அது போன்ற வேறு பேதப்படுத்தும் முயற்சிக்கோ, நான் ஒரு போதும் துணை போக மாட்டேன்! அதனால் அது போன்ற எண்ணங்கள் ஏதாச்சும் இருந்தால் தயவு செய்து விட்டுவிடுங்கள்!
    //
    நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அந்த கோணத்தில் பின்னூட்டங்கள் நிச்சயம் வரும் !

    //வெறும் அலங்காரங்கள், கோயில் விளக்கங்கள், ஸ்லோகங்களுக்குப் பொழிப்புரைகள், கதைகள்-ன்னு சொல்லிக்கிட்டு போவதால் மட்டும் ஆன்மீகம் வளர்ந்து விடாது!
    //
    இங்க பதிவெழுதி ஆன்மீகத்தை வளர்க்க முடியும் என்ற விஷயமே மிகுந்த சந்தேகத்திற்கு உரியது எனும்போது, எதைப் பற்றி எழுதினால் என்ன ? ஏதோ அவரவர்க்கு நிறைவான (திருப்தி ஏற்படும்) வகையில், பிறர் வாசிப்பதற்கு எழுதுகிறார்கள், அவ்வளவு தான் !

    அதாவது "அவரவர் தமதமது அறிவறி வகை வகை" என்று குருகூர் பிரானே திருவாய் மலர்ந்தருளியபடி !!!

    ReplyDelete
  104. //கோவி.கண்ணன் said...

    வரம் கொடுக்கும் சாமிக்கே கோவம் வரலாமா ? உங்கள் சலனம் எனக்கு வியப்பளிக்கிறது :(
    //

    இப்பவே கண்ணக் கட்டுது !

    ReplyDelete
  105. எனக்கு ரொம்ப எல்லாம் தெரியாது... ஏன் கொஞ்சூண்டு கூட தெரியாது... இங்க வந்த அந்த பக்கமா போக வழி தெரியுது. so please continue, irrespective of these speculations - in your style.

    பாராட்டு சிலசமயம் விஷத்தை விட கொடியது... தள்ளி தான் இருக்கீங்க அதே மாதிரி இந்த politics in war of gods பத்தி அதிகம் கவலை படாம நல்ல எழுதுங்க...

    ஒரு கேள்வி - உங்களுக்கு என்ன வயசுங்க?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP