Sunday, March 23, 2008

***இசை இன்பம்: தமிழில் ஊஞ்சலாடும் தியாகராஜர்!

நீங்க எத்தனை பேர், நடுக் கூடத்தில் மரப்பலகை ஊஞ்சலில் ஆடி இருக்கீங்க? இல்லை யாரையாச்சும் உட்கார வச்சி ஆட்டி இருக்கீங்களா?
ஊஞ்சலில் தூங்கும் சுகம் என்னன்னு தெரியுமா? அப்பப்பா...! அப்படி ஒரு சாய்வு! இப்படி ஒரு சாய்வு! - சங்கிலிகள் உரசும் சத்தம்! கூடவே ஒரு சுகமான பாட்டு!

இப்பல்லாம் மர ஊஞ்சல் இருக்கான்னு தெரியலை! தோட்டத்துல மூங்கில் கூடையில் ஊஞ்சல் கட்டுறாங்க. அதுல ஆடினா ஒரே குத்தும்! :-) சரி குத்துதேன்னு அதுல ஏதாச்சும் மெத்தை போட்டா, அது கட்டில் ஆயிடுமே தவிர, அந்த ஊஞ்சல் சுகம் போயிடும்! ப்ளாஸ்டிக் கம்பி, இரும்புக் கம்பி போட்டெல்லாம் ஊஞ்சல் புதுப்புது அவதாரங்களில் பட்டினத்தில் வந்தாலும், எங்க கிராமத்து மர ஊஞ்சலுக்கு இருக்கும் மவுசே தனி தான்!

அந்த ஊஞ்சல் சங்கிலிகள் ஒவ்வொன்னும் நல்ல கனமா இருக்கும்! இடம் அடைக்காதபடி அதை சுவர்-ல இருக்கும் ஆணியில் தொங்க விட்டுறலாம்! பலகையைக் கழட்டி வச்சிடலாம்! வேணும் போது மட்டும், எங்க பாட்டி ரெண்டே நிமிஷத்தில் அசெம்பிள் பண்ணிடுவாங்க! :-)

கிழக்குவாசல் படத்துல ரேவதி சாம்பிராணிப் புகையில் தலைவிரித்து, ஊஞ்சலில் ஒய்யாரமாய் தூங்க, கார்த்திக் ஆட்டி விட்டு ஒரு பாட்டு பாடுவாரே! என்னாங்க அது?

இன்னிக்கி நாம பாக்கப் போற ஊஞ்சல் பாட்டு, சும்மானாங்காட்டியும் பாட்டு இல்ல! ஊஞ்சலில் ஆடுவதற்கே என்று ஒரு பாட்டு இருக்கு!
கேட்டுப் பாருங்க! அப்படியே ஊஞ்சலில் போய் வராப் போலவே இருக்கும்! நீலாம்பரி ராகத்தில்...உய்யால லூகவய்யா என்று பாடுகிறார். ஊஞ்சலும் கூடவே ஆடுகிறது! கூடவே அந்தக் க்றீச் க்றீச் சத்தம்!

தமிழில், தியாகராஜரை அணைக்கும் முயற்சிகளின் தொடர்ச்சியாக....இதோ!

கிட்டத்தட்ட அதே மெட்டில் தமிழிலும் மொழியாக்கி உள்ளேன்.
அப்படியே தமிழில் ஹம் பண்ணிக்கிட்டே, அதே மெட்டு வருதான்னும் பாருங்க!

* தாலாட்டு - வேதவதி பிரபாகர் பாடுவது (nice)
** Saxophone-கத்ரி கோபால்நாத் (Must Hear!)
*** Clarinet - AKC Natarajanபாடல்: உய்யால லூகவய்யா
எழுதியவர்: தியாகராஜர்
ராகம்: நீலாம்பரி
தாளம்: கண்டசாபு


உய்யால லூகவய்யா - ஸ்ரீராம
உய்யால லூகவய்யா
ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா
ஊஞ்சலில் ஆடுமய்யா


சய்யாட பாடலனு
சத்சார்வ பெளம
உடனுறங்கு பாடலதில்
உலகாளும் உத்தமா
(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

கமலஜாத்ய அகில சுருலு நின்னுகொலுவ
விமலுலைன முனீந்த்ருலு
த்யானிம்ப கமனீய பாகவதலு குணகீர்த்தன-முலு
நலபம்புல செய்யக

தாமரையில் நான்முகனும் தேவரும் உனைத்துதிக்க
முனிவர்களும் தியானிக் கவே
காமரும் குணங்களைக் காதலால் அடியவரும்
கீர்த்தனைகள் வாசிக் கவே

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

நாரதா துலு மெரயசு நுதியிம்ப சாரமுலு, பாகா......வினுச்சு.....
நின்னு நம்முவாரல சதா ப்ரோசுசு, வேதசார சபலனு சூசுசு, ஸ்ரீ்ராம

நாரதாதி முனிவரும் போற்றி-உனைப் பாடிடும்
சாரமதை நன்கு கேட்டு
நம்பியவர் தமைக்காக்க நான்மறைகள் ஓதிடும்
சபையிலுன் காட்சி கண்டு

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

நவமோகன ஆங்குலைன சுரசடுலு விவரமுக, பாடக நா பாக்யமா
நவரத்ன மண்டபமுன த்யாகராஜ வினுத, க்ருதி பூணின ஸ்ரீராமா

இளமுருகு வடிவழகு தேவியர்கள் விரிவாகப்
பாடவும் என் பாக்கியமா
நவரத்ன மண்டபத்தில் தியாகராஜன் வேண்டவும்
உருக் கொண்ட ஸ்ரீராமா

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)


அடிக்குறிப்பு:
தியாகராஜர் கிட்டத்தட்ட 600 சாகித்யங்களைச் செய்துள்ளார். அவர் தமிழில் செய்த சில சாகித்யங்கள் நமக்குக் கிடைக்காமற் போனது, நம் (என்) நற்பேறின்மையே!
சமதர்மத்தில் சத்குரு தியாகராசருக்கு நாட்டம் இருந்ததில்லை போலும்!
அவர் செய்த 600 சாகித்யங்களில்,
ராமன் மேல் செய்த பாடல்கள் 560க்கும் மேல்.
சிவபெருமான் மேல்=4-5,
பர்வதவர்த்தினி அம்பாள் மேல்=6-8,
இதர சிவாலயங்கள் கோவூர் திருவொற்றியூர் முதலானவை=10-15,
இன்ன பிற=5,
முருகப்பெருமான் மேல் செய்தருளியவை=0 (all figures approx)

இனி அடியேனின் ஒவ்வொரு பதிவுகளிலும் இப்படியே கணக்கு வாசிக்கப்படும்! வைணவம் தாண்டி அனைத்தையும் எழுதி என் கணக்கை நானே நேர் செய்து கொள்ளும் வரை இது தொடரும்!
வலையுலக ஆன்மீகத் தணிக்கைப் பெருமக்கள் அனைவரும் கருணை கூர்ந்து என் பதிவுகளைத் தணிக்கை செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

30 comments:

 1. அவரைக்காய் பொரிச்ச கொழம்பு சாப்டுட்டு......"உய்யால லூக வைய்யா" வ கேட்டுகிட்டே ஊஞ்சல்ல சயனிச்சோம்னா......அஹா அதி அற்புதம்..அதுவும் பாலமுரளி பாடனும்...சரி எனிவே கம்மிங் டு தெ பாயிண்ட்....தமிழ் பாட்டு நல்லாவே வந்திருக்கு..:):)

  ReplyDelete
 2. //கிழக்குவாசல் படத்துல ரேவதி சாம்பிராணிப் புகையில் தலைவிரித்து, ஊஞ்சலில் ஒய்யாரமாய் தூங்க, கார்த்திக் ஆட்டி விட்டு ஒரு பாட்டு பாடுவாரே! என்னாங்க அது?//

  "பச்ச மல பூவு இது உச்சி மல தேனு"
  வருமே அதுவா??

  ReplyDelete
 3. //எங்க கிராமத்து மர ஊஞ்சலுக்கு இருக்கும் மவுசே தனி தான்!//

  எங்கப்பா எனக்காகவே ஊஞ்சல் வாங்கி போட்டார்......அது உக்காந்து ஆடி ஆடி வழ வழன்னு இருக்கும்...இப்ப யார்கிட்ட இருக்கோ தெரியல....!!

  ReplyDelete
 4. கொத்தனார் மட்டும்தான் அடுத்து அடுத்து பின்னூட்டம் போடுவாரா நானும்தான்......:):)

  ReplyDelete
 5. ராதாக்கா,

  இதுல போட்டியே கிடையாது. எல்லாரும் இப்படிச் செய்து நம்ம பதிவர்களை பின்சேல்ஸ் செய்ய வேண்டும். அதாங்க ஊக்கு விக்கிறது.

  தத்துவம் ஸ்பான்ஸேர்ட் பை

  இலவசக்கொத்தனார்

  ReplyDelete
 6. ஊரில் எங்க வீட்டிலும் ஒரு பெரிய ஊஞ்சல் உண்டு. இப்போ இருக்கும் இடத்தில் அதுக்கெல்லாம் வழியே இல்லை. ஆனா ரீச்சர் டிக்கெட் அனுப்பின உடனே அவங்க வீட்டுக்குப் போனா நிதமும் மதியத் தூக்கம் அவங்க வீட்டு ஊஞ்சலில்தான்.

  ஓவர் டு ரீச்சர்.

  ReplyDelete
 7. http://youtube.com/watch?v=_aMqUilfXH4

  நீங்க கேட்ட பாடலின் நகர்படச் சுட்டி. பார்த்து மகிழுங்கள்.

  நிகழ்ச்சியின் இந்த பகுதியை வழங்கியவர்கள் இலவசம் வலைப்பதிவு. தமிழில் பல்சுவை பதிவுகளைப் படிக்க பாருங்கள் இலவசம்.... இலவசம்.... இலவசம்.

  ReplyDelete
 8. நீலாம்பரி அருமையான ராகம். சும்மா அப்படியே நம்மளை ரிலாக்ஸ் பண்ணிடும். சினிமாவில் நிறையாப் பயன்படுத்தப்பட்டு இருக்கு. மனதில் உடனே வருவது சிப்பிக்குள் முத்து படத்தில் வரும் வரம்தந்த சாமிக்கு பாட்டுதான். கர்நாடக சங்கீதத்தில் அடிக்கடி கேட்பது மாதவ மாமவ தேவா கிருஷ்ணா என்ற பாடல்.

  ReplyDelete
 9. ராதாக்கா, நீங்க நாலு பின்னூட்டம் போட்டதுக்கு நான் ஐந்து போட்டாச்சு. இப்போ உங்க டெர்ண்! :))

  ReplyDelete
 10. //சிவபெருமான் மேல்=4-5,//


  இதுல "கட்டி கானு நன்னு" பேகடா ராகத்துல ஓண்ணு......வேற என்னல்லாம் இருக்கு??

  கொத்ஸ் தத்துவம் ஏற்றுகொள்ளப்பட்டது! "மாமவ மாதவ" எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு:):)

  ReplyDelete
 11. அஞ்சாவத ரிலீஸ் பண்ணிட்டேன்னு சொல்லர ஆறாவது பின்னூட்டம்.:)

  ReplyDelete
 12. //சிவபெருமான் மேல்=4-5,//

  சிவபெருமான் maleதானே அதில் என்ன சந்தேகம்?

  நான் மேல் அப்படின்னு சொன்னா மாலே மேல் அப்படின்னு வருவாங்க. அதனாலதான் ஆங்கிலமே மேல் அப்படின்னு எழுதிட்டேன் :)

  ReplyDelete
 13. //கொத்ஸ் தத்துவம் ஏற்றுகொள்ளப்பட்டது! "மாமவ மாதவ" எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு:):)//

  ஐயய்யோ, இதை எல்லாம் பப்ளிக்கில் சொல்லாதீங்க. அப்புறம் உங்க ஈய க்ரூபில் உங்களை கட்டம் கட்டி வெச்சுடப் போறாங்க.

  ReplyDelete
 14. இனிமே கவுண்டிங் நீங்க பார்த்துப்பீங்க இல்ல! :))

  இனிமே எண்ணிப்பீங்க இல்ல அப்படின்னு சொல்ல வந்தேன். ஆனா இது வரை எண்ணாமலா எழுதினேன் அப்படின்னு சொல்லி கோபப்பட்டீங்கன்னா. அதான் மீண்டும் ஆங்கிலம்! :))

  ReplyDelete
 15. /ஐயய்யோ, இதை எல்லாம் பப்ளிக்கில் சொல்லாதீங்க. அப்புறம் உங்க ஈய க்ரூபில் உங்களை கட்டம் கட்டி வெச்சுடப் போறாங்க.//

  எனக்கே தெரியாதே நான் எந்த ஈயம்னு??

  //மாலே மேல் அப்படின்னு வருவாங்க.//

  பாவம் ரவி ஏற்க்கனவே பங்கர டென்ஷன்ல இருக்காரு நீங்க வேர..... :):)

  ReplyDelete
 16. //பாவம் ரவி ஏற்க்கனவே பங்கர டென்ஷன்ல இருக்காரு நீங்க வேர..... :):)//

  எல்லாப் பதிவிலும் இந்த மேட்டர் இருக்கே. நட்சத்திர வாரப் பதிவுகளில் இது வரவேண்டும் எனப் பிரார்த்தனையோ என நினைத்தேன். இந்தப் பதிவில் நாம் போடலாமே என்றுதான். :))

  ReplyDelete
 17. //இனிமே எண்ணிப்பீங்க இல்ல அப்படின்னு சொல்ல வந்தேன். ஆனா இது வரை எண்ணாமலா எழுதினேன் அப்படின்னு சொல்லி கோபப்பட்டீங்கன்னா. அதான் மீண்டும் ஆங்கிலம்! :))//

  என்னே உங்கள் வார்த்தை விளையாட்டு??!! ரொம்பதான் "பன்ரீங்க" போங்க.......:):)

  ReplyDelete
 18. //என்னே உங்கள் வார்த்தை விளையாட்டு??!! ரொம்பதான் "பன்ரீங்க" போங்க.......:):)//

  போடாப் பன்னி அப்படின்னு திட்டாம வெரி Funny அப்படின்னு சொன்னாச் சரி!

  ReplyDelete
 19. /////நீங்க எத்தனை பேர், நடுக் கூடத்தில் மரப்பலகை ஊஞ்சலில் ஆடி இருக்கீங்க? இல்லை யாரையாச்சும் உட்கார வச்சி ஆட்டி இருக்கீங்களா?////

  ஆடியிருக்கேஞ்சாமி ஆடியிருக்கேன்.பத்து வானரங்களொடு சேர்ந்து போட்ட ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா?

  கடைசில ‘அட. பட்டுக்கிடப்பான்களா, விழுந்து தொலைச்சா நுட வைத்தியகிட்ட யார்டா அலையிறதுன்னு சொல்லி - வேறேன்ன? ஊஞ்சலைக் கழட்டி வச்சிருச்சுக சாமி வீட்டில இருந்த பெருசுக !

  ReplyDelete
 20. //சிவபெருமான் மேல்=4-5,//

  கூகிள்ட்ட கேட்டா கிட்டதட்ட பதினெட்டு பாட்டு வருதே

  dEvAdi dAva sadAshiva

  kOri sEvimparArE

  muccaTa brahmaadhulaku

  dEva shrI tapastIrthapura nivAsa

  sadaa madin

  ii vasuda

  dharshanamu sEya

  sundarEshvaruni jUsi

  shambhO shiva shankarA

  ilalO praNathaarthi hara

  rAga sadArasa

  shiva shiva shiva enaraadaa

  shambhO mahaadEva

  nammi vachchina

  Isha paahimaam

  Ehi thrijagadheesha

  naada tanumanisham

  !!!

  ஆனா நான் முன்னாடி எழுதின பாட்ட காணோம் இந்த லிஸ்ட்ல!!

  ReplyDelete
 21. எங்க பாட்டி ரெண்டே நிமிஷத்தில் அசெம்பிள் பண்ணிடுவாங்க

  எப்படி? படையப்பா ஸ்டைலிலா? :-)
  பாட்டி,கோபித்துக்கொள்ளாதீர்கள்.

  ReplyDelete
 22. பின்னோட்டமிடும் இடம் புறம்போக்கு இடமா? கொத்தனாரும் ராதாவும் பட்டா போட்டுக் கிட்டாங்களோ? நானும் கொஞ்சம் என்கரோச் பண்ணிக்கிறேன். நீலாம்பரி..ஹையோ! ரம்யா இல்லீங்க..ராகம் சுகமானது.
  'வரம்தந்த சாமிக்கு..'பாடல் என் பேரனுக்கு பிரியமானது.அதைப் பாடினால்தான் சுகமாகத் தூங்குவான்.

  ReplyDelete
 23. கொசுவர்த்தின்னா சும்மாவா. ஆடிடும் ஊஞ்சல். எங்க வீட்டுக்கும் ஒண்ணு வரப்போகுதே.:)

  ஆஹா இன்ப நிலாவினிலே
  ஓஹோ ஊஞ்சல் ஆடிடுமே ஆடிடுமே நல்லா ஆடிடுமே.
  ஆமா...ஊஞ்ஜ்சலைச் சும்மா ஆட்டினாத் தலைவலிக்கும்னு சொல்லி இருப்பாங்களே பாட்டி!!

  ஐந்தடிக்கு இரண்டடி நீள அகலத்தில், எண்ணை போடாத வழுக்கக் கம்பிகளப் பிடிச்சுகிட்டு
  இப்படி மேஏஎலேஏஎ போயி சர்ருனு கீழ வந்து ஸ் அப்பா.. பதிவு பாஷையில கண்ணை கட்டுது உங்க பதிவு. காதையும் கட்டிவிட்டது.
  நன்றி ரவி.

  ReplyDelete
 24. //இனி அடியேனின் ஒவ்வொரு பதிவுகளிலும் இப்படியே கணக்கு வாசிக்கப்படும்! வைணவம் தாண்டி அனைத்தையும் எழுதி என் கணக்கை நானே நேர் செய்து கொள்ளும் வரை இது தொடரும்!
  வலையுலக ஆன்மீகத் தணிக்கைப் பெருமக்கள் அனைவரும் கருணை கூர்ந்து என் பதிவுகளைத் தணிக்கை செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!//

  தியாகராஜர் கணக்குச் சரி, உங்க கணக்குச் சரி இல்லையே? வாங்க பார்த்துக்கலாம்! :)))))))

  ReplyDelete
 25. நீலாம்பரி ராகத்துல முடிக்கற ப்ளானா? இல்ல, ட்ரான்ஸ் அட்லான்டிக் ஃப்ளைட் ஸ்டாப் ஓவர்ல அடுத்த பதிவு இருக்குமா?

  //மர ஊஞ்சலுக்கு இருக்கும் மவுசே தனி தான்// என் அப்பா ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து ஆசையா செய்து வச்சிருந்த ஊஞ்சல் போட இடமில்லாம்ப் போயிருச்சு! மாமியார் வீட்டுல, பசங்க எல்லாம் சேர்ந்தா மட்டும் தான் ஊஞ்சல். (யாரும் இல்லாத சமயத்தில் அதில் நான் தான் இருப்பேன்!)

  ReplyDelete
 26. //இலவசக்கொத்தனார் said...
  //சிவபெருமான் மேல்=4-5,//
  சிவபெருமான் maleதானே அதில் என்ன சந்தேகம்?//

  koths...
  eppdyiya, eppdiya?
  paarkum idam ellam, aan iiyam pala palakkuthu? :-))

  aan allan, pen allan, allal aliyum allan! :-))

  ReplyDelete
 27. //Radha Sriram said...
  //சிவபெருமான் மேல்=4-5,//
  கூகிள்ட்ட கேட்டா கிட்டதட்ட பதினெட்டு பாட்டு வருதே//

  Radha
  Google ennai thittuvatharkaaga saiva anbargal koshtiyil sernthudichi-nnu Larry Page msg anuppi ullar :-))

  I have also told the same thing:
  sivaperuman mel prathyegama = 4-5
  ithara sivalayangal = 10-15
  kooti kazhichi paarunga! unga google kanakku vanthurucha? :-))

  Ethu eppadiyo = 18/600 = 3%
  Thyagarajar-ukku sama dharmam illai! seri thaanungale?

  ReplyDelete
 28. //கிழக்குவாசல் படத்துல ரேவதி சாம்பிராணிப் புகையில் தலைவிரித்து, ஊஞ்சலில் ஒய்யாரமாய் தூங்க, கார்த்திக் ஆட்டி விட்டு ஒரு பாட்டு பாடுவாரே! என்னாங்க அது?//

  "பச்ச மல பூவு இது உச்சி மல தேனு"
  வருமே அதுவா??//

  உச்சீ வகீடெடுத்து தானே?

  //ஆமா...ஊஞ்ஜ்சலைச் சும்மா ஆட்டினாத் தலைவலிக்கும்னு சொல்லி இருப்பாங்களே பாட்டி!!//
  கீச் கீச் சத்தம் கேட்டு பாட்டிக்குதானே தலைவலி, நமக்கு இல்லயே?

  19 வருஷம் முன்னாடி வீடு கட்டினப்போ வயசான மேஸ்த்ரி தாத்தா ஊஞ்சல் வளையம் வெச்ச இடம் சரி வரலை. அப்புறமா 6 வருஷம் முன்னால தொழில் நுட்பம் வந்து கான்க்ரீட் ல துளை போட்டு கொக்கி வெச்சு ஊஞ்சல் போட்டாச்சு. இப்பல்லாம் ரிலாக்ஸிங் அங்கதான்.

  ReplyDelete
 29. ஐயா கேஆர் எஸ்! இட ஒதுக்கீடா? வம்பா போச்சே! உங்க ப்ளாக் - என்ன போடறதுங்கிறது உங்க இஷ்டம். ஆனா "வலையுலக ஆன்மீகத் தணிக்கைப் பெருமக்கள்" ந்னு எங்களையும் இழுத்ததாலே {பின்னே இப்படியெல்லாம் நமக்கு நாமே திட்டத்துல நாமே ஆன்மீக பதிவர் ந்னு சொல்லிக்க வேண்டியதுதான். மத்தவங்களா சொல்லப்போறாங்க? ;-)}
  இழுத்ததாலே சொல்றேன். இந்த ஒதுக்கீடு எல்லாம் இன்னும் இன்னும் பிரச்சினைதான் உண்டு பண்ணும். சொல்லிப்புட்டேன்.

  ReplyDelete
 30. சங்கரா. இசை இன்பம் பதிவிற்கான அறிமுக இடுகையா இது? அந்தப் பதிவையும் கூகுள் ரீடரில் வைத்திருக்கிறேன். படம் பார்க்க வேண்டியிருப்பதால் பேருந்தில் செல்லும் போது படித்துப் பின்னூட்டம் இட முடிவதில்லை. எப்போதாவது வீட்டில் நேரம் கிடைக்கும் போது பாட்டைக் கேட்டு/பார்த்து பின்னர் பின்னூட்டம் இடுகிறேன். :-)

  கணக்கு எல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனா கட்டாயம் சொல்லணுமா? :-)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP